தேர்தல் முறமைக்கான அரசியலமைப்பு திருத்தம்
அரசுக்கான ஆதரவு பாராளுமன்றத்தில் பெருகி வருகின்றது
ஐக்கிய தேசிய கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்துக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். இன்று காலை ஐக்கிய தேசியக்கட்சியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏர்ள் நாணயக்காரவும் ஐதேக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதி செயலாளர் லக்ஷ்மன் செனவிரத்னவும் அரசாங்கத்தின் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கட்சி அரசியலுக்கு அப்பால் இந்த முடிவை தாம் எடுத்துள்ளதாக தெரிவித்த அவர்கள் ஜனாதிபதிக்கும் தாம் ஆதரவளிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மேலும் சிலர் பகிரங்கமாகவும் சிலர் இரகசியமாகவும் அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிய முடிகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிகள் சிலரும் இரகசியமாக ஆதரவளிக்க தயாராகி வருவதாக அறிய முடிகின்றது.
இலங்கையின் அபிவிருத்திக்கு பாதகமாக இருந்த பயங்கரவாதம், ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், நாட்டின் அபிவிருத்திக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். நாட்டின் ஜனாதிபதி பதவிமுறை குறித்து, அரசியலமைப்பு திருத்தச் சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.
இலங்கையின் அபிவிருத்திக்கு பாதகமாக இருந்த பயங்கரவாதம், ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், நாட்டின் அபிவிருத்திக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். நாட்டின் ஜனாதிபதி பதவிமுறை குறித்து, அரசியலமைப்பு திருத்தச் சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.
அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிகப்போவதாக ஐதே கட்சி தீர்மானித்துள்ள நிலையில் ஐதே கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு முடிவெடுத்திருப்பது அரசைப் பலப்படுத்தும் அதே வேளை ஐதே கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் நிகழ்வாக அமைகின்றது என்று அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதே வேளை இலங்கையின் இடதுசாரிகள் அரசின் தற்போதைய அரசியல் திருத்தச் சட்டத்தில் அவ்வளவாக திருத்தியடையவில்லை என அறிய முடிகின்றது. சிறப்பாக 18 வது அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டத்தை வாசுதேவ நாணயக்கார பகிரங்கமாக எதிர்பதாக கருத்து தெரிவித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக ஐனாதிபதிக்கான பதவிக்காலம் இரண்டு தடவைக்கு மேல் அமைவதை இவர்கள் விரும்பவில்லை. ரஷ்யாவில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்சியாக இரண்டு தடவைக்கு மேல் அமைவதை அந் நாட்டுச்சட்டம் அனுமதிக்கவில்லை. ஆனால் தொடர்சியற்ற முறையில் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக ஒருவர் பதவி வகிக்கலாம். ஜனாதிபதியை தெரிவு செய்வது பொது மக்களே எனவே ஜனநாய மரபுப்படி மக்கள் தமது விருப்பின் அடிப்படையில் ஒருவரை எத்தனை தடவை ஜனாதிபதியாக்கலாம் என்பதற்கான பொறிமுறைகள் நியாயமாக தேர்தல் நடைமுறையில் இருக்கின்றன என்பதுவம் இங்கு கவனிக்கதக்கது. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் இவ் ஜனநாயக நடைமுறைகள் எவ்வளவு தூரம் சீரிய முறையில் கடைப்பிடிக்கப்படும் என்ற பயங்களுக்கு நியாயங்கள் இல்லாமலும் இல்லை.
தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வுக்கான அரசியமைப்பு திருத்தம் முதன்மையாக இருக்கும் போது அதனைப் புறம் தள்ளிவிட்டு தேர்தல் முறமையில் கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் மீது தமிழ் மக்களுக்கும் ஜனநாக சக்திகளுக்கும் நம்பிக்கையீனத்தை வலுப்படுத்தவே செய்கின்றது. சிங்கள கடும் கோட்பாளர்களை பரீட்சித்து பார்க்க முதலில் தேர்தல் முறமையில் மூன்றில் இரண்டை பரீட்சிப்பது பின்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் இதனை உபயோகித்தல் என்ற வகையில் மகிந்தாவின் தந்திரோபாயம் அமையுமாயின் இது வரவேற்கப்பட வேண்டியதே. எல்லாவற்றையும் பொறுத்திருந்து பார்க்கும் பலவீனமான நிலையில் தமிழ் மக்கள் தரப்பை புலிகள் கொண்டு வந்து நிறுத்தி விட்டு சென்று இருக்கின்றார்கள் என்பதே யதார்த்த நிலை.
(செய்திகளின் அடிப்படையில் ஆக்கம்: சாகரன்) (புரட்டாதி 04, 2010)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக