கடந்த ஆகஸ்டு 24 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தபோது சோனியாவுக்கு எதிராக கடிதம் எழுதிய 23 தலைவர்கள் பாஜகவோடு கூட்டு வைத்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுவதாக ராகுல் காந்தி பேசினார் என்று தகவல்கள் வந்தன. அதற்கு குலாம் நபி ஆசாத், நான் பாஜகவோடு கூட்டு சேர்ந்துள்ளதை நிரூபித்தால் கட்சியை விட்டே விலகிவிடுவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆகஸ்டு 28 ஆம் தேதி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் பொதுச் செயலாளரான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நியமிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவருக்கு கட்சியில் ஒரு சதவிகிதம் ஆதரவு கூட இருக்காது. மாநிலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் தொகுதித் தலைவர்கள் பதவிகளுக்கு கட்சித் தேர்தலை எதிர்ப்பவர்கள் தங்கள் பதவிகளை இழக்க நேரிடும் என்று அஞ்சுபவர்களாகத்தான் இருப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு கட்சியை வழிநடத்தினால் கட்சியின் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும், இல்லையெனில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சியில்தான் அமரும்" என்று ஆசாத் கூறினார்.
உயிரிழந்த எச்.வசந்தகுமார் எம்.பி.க்கு
கொரோனா தொற்று இல்லை என்று நேற்று காலை எடுத்த பரிசோதனை முடிவில் தெரிய
வந்தது. 






.dailythanthi.com: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23
மூத்த தலைவர்கள் கடந்த 5 மாதமாக ரகசியமாக திட்டமிட்டு ஆலோசனை நடத்தில்
கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 





.dailythanthi.com/ :எதிர்க்கட்சி முதல்-மந்திரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய
சோனியா காந்தி, ‘நீட்’ தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று மத்திய அரசை
கேட்டுக்கொண்டார். அத்துடன் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தொடரவும் முதல்-மந்திரிகள் முடிவு செய்து உள்ளனர். 









தினத்தந்தி : “விஜயகாந்த் இனி ‘கிங்’ ஆகத்தான் இருக்க வேண்டும் என்பது
தே.மு.தி.க. நிர்வாகிகளின் விருப்பம்” என்று பிரேமலதா விஜயகாந்த் அதிரடியாக
தெரிவித்து உள்ளார்.
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று தனது 68-வது வயதில் அடியெடுத்து
வைத்தார். இதையொட்டி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில்
பிறந்தநாள் விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. இதில் விஜயகாந்த், அவரது மனைவி
பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும்
உறவினர்கள்-நண்பர்கள் கலந்துகொண்டனர்.
;விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தமிழகம் முழுவதும்
தே.மு.தி.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர். பல்வேறு இடங்களில் அன்னதானம்
வழங்கியும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மாணவர்களுக்கு
எழுதுபொருட்கள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கியும் உற்சாகமாக
கொண்டாடினார்கள்.







nakkheeran.in - nakkheeran :அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு
கூட்டம் சோனியா காந்தி தலைமையில் இன்று (24/08/2020) காணொளி காட்சி மூலம்
தொடங்கியது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பிரியங்கா காந்தி,
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட
தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து காங்கிரஸ்
எம்.பி.செல்லக்குமார் காணொளி மூலம் கலந்து கொண்டார். ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின்
தலைவர் ஆவாரா? என்ற எதிர்ப்பார்ப்பு கட்சியினரிடையே எழுந்துள்ள நிலையில்,
சோனியா காந்தியே தொடர வேண்டும் என கபில் சிபல், சசிதரூர், குலாம் நபி
ஆசாத், பிருத்விராஜ் சவான், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 தலைவர்கள் சோனியா
காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். மேலும் நேரு குடும்பத்தை அல்லாத ஒருவர்
தலைவராக நியமிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்தினர்.
ணியில் மத்திய பா.ஜ.க. அரசின் மெகா ப்ளான் இருப்பதாக டெல்லியிலிருந்து
தகவல்கள் கசிகின்றன. தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம்
உள்ளிட்ட மாநிலங்களுக்கு மே மாதம் இரண்டாம் வாரத்திற்குள் தேர்தலை நடத்தி
முடிக்க வேண்டும். இதற்கான பணிகளில் வேகம் காட்டி வருகிறது இந்திய தேர்தல்
ஆணையம். மேற்கண்ட மாநிலங்களில் இறுதி வாக்காளர் பட்டியலை ஜனவரியில் வெளியிட
வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடந்த வாரம்
அறிவுறுத்தியுள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கரோனா நெருக்கடிகள்
சூழ்ந்துள்ள நிலையில் தேர்தலை நடத்துவது குறித்த கருத்துருக்களை அனுப்பி
வைக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டிருக்கிறார்.