சனி, 26 மார்ச், 2016

வீரமணி : மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் பாலத்தை முடக்கியது ஏன்?

சென்னை, மார்ச் 26- முன்னணி கப்பல் நிறுவனங்கள் மட்டுமின்றி, பெரும்பாலான வர்த்தகர்களையும் அதானி குழுமம், காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு இழுத்துள்ளதால், சென்னை துறைமுகம் மேலும் நலிவடைந்து, மூடுவிழாவை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை, எண்ணூர் அருகே உள் ளது காட்டுப்பள்ளி துறைமுகம். இதை, `எல் அண்டு டி’நிறுவனத்தின் துணை நிறுவனமான, `எல் அண்டு டி -ஷிப் பில்டிங்’ நிர்வகித்து வந்தது. 2015ல்,அதானி குழுமம் இந்த துறை முகத்தை கையகப்படுத்தியது. அத்துடன், வர்த்தகத்தை மேம்படுத்தபல முயற்சிகளை எடுத்து வருகிறது.

வைகோ : 2ஜி ஸ்பெக்ட்ரம் பின்னணியில் இருந்தது திமுக பொருளாளர் ஸ்டாலின்தான் .

2ஜி ஸ்பெக்ட்ரம் பின்னணியில் இருந்தது திமுக பொருளாளர் ஸ்டாலின்தான் . வேண்டுமானால் இதற்காக என் மீது வழக்குப் போடட்டும். அதை சந்திக்கத் தயாராக உள்ளசதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  திமுக சார்பில் நேற்று இரவு எனக்கு தாக்கீது கொடுக்கப்பட்டிருக்கிறது. கூறிய வார்த்தையை திரும்பப் பெறவில்லை எனில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தொடரப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. என் மீது வழக்குத் தொடர்ந்ததற்கு மகிழ்ச்சி.
ஏற்கெனவே 2006 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தேன்.

உடுமலை சாதி ஆணவ கொலை.....தமிழக முதல்வரின் மோசமான மௌனம்!

விகடன்.com திருப்பூர்:உடுமலையில் நடந்த சாதி ஆணவக் கொலை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இதுவரை வாய் திறக்காதது ஏன்? என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி கேள்வி எழுப்பினார். 'சாதி ஆணவக் கொலைகளை ஒழித்து மானுடம் காத்திட வேண்டும்' என்ற முழக்கத்தோடு திருப்பூர் மாநகராட்சி அலுவகம் அருகில்,  மாதர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய உ.வாசுகி, "உடுமலையில் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் குடும்பத்தாருக்கும், இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கௌசல்யாவிற்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

கோகுல இந்திரா... தனி அறையில் நடந்த 'பகீர்' பஞ்சாயத்து! சகாயத்தைப் பழிவாங்கிய ஓ.பி.எஸ்...அடிவாங்கிய கோ-ஆப்டெக்ஸ் மேலாளர்...

விகடன்.com : ஆப்டெக்ஸ் என்றால் வேட்டி, சேலை நினைவுக்கு வருகிறதோ இல்லையோ, சகாயம் ஐ.ஏ.எஸ்ஸை நினைக்காமல் கடந்துவிட முடியாது. கடனில் தத்தளித்த கைத்தறித் துறையை சர்வதேச அளவில் புகழ்பெற வைத்தவர். வேட்டி தினம், தாவணி தினம், தேசிய விருதுகள் என கோ-ஆப்டெக்ஸ் துறையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டவர். ஆனால் அவரையே புரட்டிப் போடும் அளவுக்கு ஓ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆடிய ஆட்டம் வெளி உலகிற்கு தெரியாத ரகசியம். <br /> <br /> கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து,  அறிவியல் துணை நகரத்தின் இயக்குநர் எனும் 'டம்மி' பதவிக்கு சகாயம் மாற்றப்படுவதற்குக் காரணமே, அமைச்சர் கோகுல இந்திராவுடன் ஏற்பட்ட மோதல்தான் காரணம் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், 'கிரானைட் விவகாரத்தில் சகாயத்தின் அதிரடிகளால் அதிர்ந்து போன ஓ.பி.எஸ்தான்,  சகாயத்தின் மாற்றலுக்கு தொடக்கப்புள்ளி வைத்தவர்' என்கிறார் கோ-ஆப்டெக்ஸ் அதிகாரி ஒருவர். இதுபற்றி அவர் நம்மிடம் விவரித்த தகவல்கள் அதிர்ச்சியின் உச்சம்.;அடிவாங்கிய கோ-ஆப்டெக்ஸ் மேலாளர்...

தே.மு.தி.க...டெபாசிட் பணத்தை திருப்பி கொடுக்க தொடங்கியது...சீட் கேட்டவர்கள் ஓட்டம்!

சட்டசபை தேர்தலில் தி.மு.க – தே.மு.தி.க. இடையே கூட்டணி ஏற்படும் என்று முதலில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இதனால் தி.மு.க. – தே.மு.தி.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணைந்தால் ஆட்சி மாற்றம் உறுதி என்று நம்பிய இரு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு மனு கொடுத்தனர்.
தே.மு.தி.க. 234 தொகுதிக்கும் நேர்காணல் நடத்தியது. மாவட்ட செயலாளர்கள், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள், ஆர்வத்துடன் சீட் கேட்டனர். இதற்காக கட்சி தலைமையிடம் சீட் கேட்ட நிர்வாகிகள் 234 தொகுதிக்கும் பணம் செலுத்தி இருந்தார்கள்.

ஜி.கே.வாசனுக்கு அ.தி.மு.க.வில் அழைப்பு இல்லை! இனி விஜயகாந்த், சீமான், அன்புமணி.....?

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை வைகோ, திருமாவளவன் ஆகியோர் சந்தித்து மக்கள் நலக்கூட்டணிக்கு வருமாறு ஏற்கனவே அழைப்பு விடுத்து இருந்தனர்.
ஆனால் ஜி.கே.வாசன் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான அழைப்பு வரும் என்று காத்திருந்தார்.
அ.தி.மு.க. தலைமையுடன் இருந்து நேற்று அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அழைப்பு வரவில்லை.
இந்த நிலையில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் ஜி.கே.வாசன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்கு வைகோ, திருமாவளவன் இருவரும் வந்திருந்தனர். முன்னதாக வந்த இவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு ஒன்றாக உணவு அருந்திக் கொண்டு இருந்தனர்.
பின்னர் வந்த ஜி.கே.வாசனுக்கு வைகோ – திருமாவளவன் ஆகிய இருவரும் மணவிழாவில் இருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 3 பேரும் சந்தித்து பேசினார்கள். 15 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது வைகோவும் திருமாவளவனும் ஜி.கே.வாசனை தே.மு.தி.க. – மக்கள் நலக் கூட்டணிக்கு அவசியம் வருமாறு அழுத்தம் கொடுத்தனர்.

ஜெயா டிவிதான் விஜயகாந்த் + வைகோ கூட்டணி செய்தியை முதலில் வெளியிட்டது.....

திடீர் திடீரென மாற்றங்களை சந்தித்து வரும் சட்டமன்றத் தேர்தல் களத்தில் எந்த மாற்றம் நடந்தாலும் அதைப் பற்றி தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என கருத்துக் கணிப்புகள் நடத்தி வருகிறது நக்கீரன். அந்த வரிசையில் மக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு.தி.க. இணைந்து கேப்டன் விஜயகாந்த் கூட்டணி என பெயர் மாற்றம் செய்து வைகோ அறிவித்த சில மணி நேரங்களில் அதைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என கண்டறிய ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் நக்கீரன் சர்வே படை களமிறங்கியது. "ஓ... அதுவா... இந்தக் கூட்டணி பற்றி மற்ற டி.வி.க்களில் வருவதற்கு முன்பே ஜெயா டி.வி.யில் செய்தி வந்துவிட்டது. பொதுவாக மற்ற கட்சி நியூஸை ஜெயா டி.வி.யில் காட்ட மாட்டாங்க. "விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் சேருகிறார்.. முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்' என உடனே ப்ளாஷ் நியூஸ், லைவ் கவரேஜ்னு ஜெயா டி.வி. அ.தி.மு.க. நியூஸ் மாதிரி வெளியிட்டாங்க.

தினத்தந்தி அதிபர் கலைஞரை சந்தித்தார்......பல ஊகங்கள்

Daily Thanthi Chief S.Balasubramanian  meets Karunanidhiசென்னை: தினத்தந்தி அதிபர் பாலசுப்ரமணியன் ஆதித்தன் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளது ஊடக வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தி டிவியின் விவாத நிகழ்ச்சிகள் பிரபலமானவை. அனைத்துக் கட்சி பிரமுகர்களும் இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கு தங்களின் கருத்தை முன் வைத்து வருகின்றனர்.

இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கும் திமுகவினரை பேச விடுவதில்லை, அதிமுகவுக்கு எதிராக பேச முயன்றாலும் பேசவிடாமல் நெறியாளர் ஆதிக்கம் செலுத்துகிறார் எனக் கூறி திமுகவினர் யாரும் தந்தி டிவி விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது என அக்கட்சி தலைமை கடந்த ஆண்டு நவம்பரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

வைகோ வாங்கிக் குவித்த சொத்துக்கள் எப்படி வந்தது?விவாதிக்க தயாரா? : C.P.ராதாகிருஷ்ணன்

தி.மு.க.வுடன் மட்டும் தான் கூட்டணி என்றார். அதன் பிறகு 3 நாட்கள் கழித்து பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக தி.மு.க. எனது கட்சியை அழிக்கப் பார்க்கிறது என கூறினார். இந்த 3 நாட்களுக்குள் வைகோவின் நிலை மாறியது எப்படி? அவரது இந்த சிந்தனை வளர்ச்சிக்கு காரணம் என்ன?
சி.பி.ராதாகிருஷ்ணன் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுக்க பேரம் பேசியதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளதற்கு, பாஜக முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், ’’வைகோவை போல சுய நலமிக்க தலைவர் தமிழகத்தில் யாரும் கிடையாது. தனது நலனுக்காக எந்த நிலைப்பாட்டையும் மாற்றிக் கொள்ளும் ஒரு தலைவர்தான் வைகோ.

அதிமுகவின் பி டீமுக்கு 1,500 கோடி பேரமா? டிவி பேட்டியில் பாதியில் எழுந்துபோன வைகோ...WHY?


Did AIADMK gave 1500 crores for your team?' Vaiko walks out in a TV interview
சமூக வலைதளங்களில் வெளியான செய்தி பற்றி வைகோவிடம் கேள்வி கேட்கப்பட்டது. ;அதற்கு வைகோ நேர்காணலை பாதியில் ரத்து செய்துவிட்டு வெளியேறிச்சென்றார்.தே.மு.தி.க.வுக்கு தி.மு.க ரூ.500 கோடியும் 80 தொகுதிகளும் கொடுப்பதாக பேரம் பேசியது என மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியிருந்தார்.  இது தொடர்பாக வைகோவுக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதை நான் சட்டப்படி சந்திப்பேன் என வைகோவும் கூறியிருக்கிறார். நாங்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் திமுக இதை திரும்ப பெற்றுவிடவேண்டும் என்று ஆவேசப்பட்டிருந்தார்.

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை: தருண் விஜய் உறுதி

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.
 சென்னையில் அவரை கும்மிடிப்பூண்டி, புழல் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் 12 பேர் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  சுதந்திரம் பெற்றது முதல் பல ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ், இலங்கை அகதிகள் விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் நல்லுறவு இருந்து வருகிறது. ;இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளை உணர்ச்சிப்பூர்வமாக கருதி, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
 இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நயன்தாரா மீண்டும் பிரேக் அப் .... விக்னேஷ் சிவன் டா டா .....

அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஆகி இருக்கும் நயன்தாரா, அதிக சர்ச்சையிலும் சிக்கிக்கொண்டிருக்கிறார். சிம்பு, பிரபுதேவாவுடன் பிரேக் செய்துகொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி வந்தவர் ‘நானும் ரவுடிதான்’ பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நட்பு வளர்த்தார். இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்ய உள்ளதாகவும் கோலிவுட்டில் வேகமாக தகவல் பரவியது. இருவருமே நண்பர்களாக பழகுவதாக இயக்குனர் தரப்பில் கூறப்பட்டது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் நயன்தாரா.இந்நிலையில் நயன்தாராவுக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

மலேசியாவில் 3 தமிழர்கள் தூக்கிலடப்பட்டனர்.Malaysia hangs three men for murder in 'secretive' execution

இன்று காலை  மணி  5.30க்கு,   குணசேகர்  பிச்சைமுத்துவும்  அவரின்  சகோதரர்கள்  ராமேஷ்  ஜெயகுமார்,  சசிவர்ணம்  ஜெயகுமார்  ஆகியோரும்  தைப்பிங்  சிறையில்   தூக்கிலிடப்பட்டனர்.
இன்று  காலை  மூவர்  தூக்கிலிடப்பட்டதை,  அதுவும்  அரசாங்கம்  கட்டாய  மரண  தண்டனையை  ஒழிப்பது  பற்றி   விவாதித்துக்கொண்டிருக்கும்போது  அவர்களைத்  தூக்கிலிட்ட  செயலை  அம்னெஸ்டி  இண்டர்நேசனல்   கண்டித்துள்ளது.
“மூவர்  தூக்கிலிடப்பட்டது  ஒரு  கொடூரச்  செயல்.  அதற்காக  மலேசியா  வெட்கப்பட  வேண்டும்.
“அதுவும்  மலேசிய  அரசாங்கம்  மரண   தண்டனை  ஒழிப்புப்  பற்றித்  தீவிரமாக  விவாதித்துக்  கொண்டிருக்கும்போது  அரசு  அனுமதிபெற்ற  அக்கொலைகள்  நிகழ்ந்திருப்பது  அதிர்ச்சியளிக்கிறது,  வருத்தமளிக்கிறது”, என  அம்னெஸ்டி  இண்டர்நேசனலின்   தென்கிழக்காசியா,  பசிபிக்  வட்டார  பரப்புரை  இயக்குனர்  ஜோசப்  பெனடிக்ட்   இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

ஒரே இந்தியத்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்...உலக தலைவர்கள் பட்டியலில் உள்ள

NEW YORK: Arvind Kejriwal has been named among the world's 50 greatest leaders by Fortune magazine with the Delhi Chief Minister being the sole Indian leader
புதுடில்லி;'பார்ச்சூன்' பத்திரிகை வெளியிட்டுள்ள, உலகின் தலைசிறந்த, 50 தலைவர்கள் பட்டியலில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்இடம்பெற்றுள்ளார். மூன்றாவது ஆண்டாக, பார்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், 42வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர், இவர் தான். உலகிலேயே, மிகவும் மாசுள்ள நகரமாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள டில்லி யில், வாகனங்களின் பதிவு எண்கள் அடிப்படையில், போக்குவரத்தில் மாற்றம் செய்ததன்மூலம், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார் கெஜ்ரிவால்,'' என, அவரை தேர்ந்தெடுத்ததற்கான காரணமாக, பார்ச்சூன் பத்திரிகை கூறியுள்ளது.

ஓ.பி.எஸ், நத்தத்திடம் ரூ. 30,000 கோடி பறிமுதல்'- அரசு கஜானாவில் செலுத்துமா கார்டன்? காலாண்டு பட்ஜெட்டுக்கு போதும்...

விகடன்.com :தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் வீடுகளில் கார்டன் ஸ்பெஷல் டீம் அதிரடியாக ரெய்டு நடத்தியதாகவும், இதில் முப்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ எந்த விளக்கத்தையும் மக்களுக்கு அளிக்கவில்லை. வீட்டுச் சிறையில் தமிழக அமைச்சர்கள் அடைபட்டிருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்தபோது, இதுபற்றிப் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "அ.தி.மு.க.வைச் சேர்ந்த சில மூத்த அமைச்சர்கள் ஊழல் செய்து குவித்த பணத்தில் ஒரு பகுதியை தலைமைக்கு தெரியாமல் பதுக்கி வைத்தது குறித்தும், அப்பணத்தை மீட்க ஆளுங்கட்சியின் தலைமை மேற்கொண்டு வரும் சாம, பேத, தான, தண்ட முறைகள் குறித்தும் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

வெள்ளி, 25 மார்ச், 2016

வைகோ சகாக்களுக்கும் தெரியாமல் ரகசியமாக....விலை பேசினார் / போனார்?


வைகோ பதில் தரட்டும். மநகூ பெயரை விஜயகாந்த் அணி என்று அழைக்க ரகசியமாக எண்ணியிருந்தார் வைகோ என்று குற்றம் சாட்டுகிறேன். மநகூ பிரசாரங்களில் இதுவரை காணப்படாமல் இருந்து இப்போது திடீர் உதயம் ஆகி முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை ஆக்கியிருப்பது ஒரு ரகசிய திட்டம். அதை தனது சகாக்களுக்கும் தெரியாமல் ரகசியமாக மனதில் எண்ணியிருந்தார் வைகோ என்று குற்றம் சாட்டுகிறேன். 124 தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுப்பது தனது சகாக்களுக்கு குறைத்து கொள்வது என்பது ஒரு ரகசிய திட்டம். அதை ரகசியமாக எண்ணி இருந்தவர் வைகோ என்று குற்றம் சாட்டுகிறேன். தொடையில் பிறந்த பீமன் முக்கியமானவன். அந்த பீமன் திருமாவளவன் என்று வருணித்து சூத்திரப்பட்டத்தை சாதூர்யமாக திருமாவுக்கு சூட்டியிருக்கிறார்கள்.

திருமாவளவன்: புதிய தமிழகம் கட்சியோடு பேச்சுவார்த்தை நடக்கிறது

புதிய தமிழகம் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
 சென்னையில் வியாழக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-;தேமுதிகவும், மக்கள் நலக் கூட்டணியும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, தொகுதிகளைப் பகிர்ந்துகொள்வோம். கூட்டணியில் சேர தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் பதில் சொல்வதாகக் கூறியுள்ளார். தேமுதிக தலைமையுடன் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியும், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்

கலைஞர் : 2015 இல் தமிழகத்தில் 8068 மாணவர்கள் தற்கொலை....மகராஷ்டிராவுக்கு அடுத்த நிலை.

newindianexpress.com : Tamil Nadu once again ranks second in the number of suicides in the country with 16,122 cases reported in 2014, according to the Accidental Deaths and Suicides in India report that was released by the National Crime Records Bureau (NCRB) on Friday. Maharashtra tops the list with 16,307 incidents.
திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கையில், ’’கடந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியில் மற்றுமோர் சாதனையாக தமிழகத்தில் தற்கொலை எண்ணிக்கை பெருகியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றால்; மாணவர்கள் தற்கொலைப் பட்டியலில் மகாராஷ்ட்ரா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளன என்று மத்திய அமைச்சர் ஒருவரே தெரிவித்து உள்ளார்.

அதிமுக கவுன்சிலர் முத்துராஜா தற்கொலை....வேட்புமனுவுக்கு கொடுத்த பணம் யார் ஏமாற்றினார்கள்?


நேற்றையதினம் மதுரையில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் மதுரையில் அமைச்சர் ஒருவர் அலுவலகத்திலே வெடி குண்டு வீசப்பட்ட செய்தி வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே மதுரையில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் கொலை செய்யப்பட்ட செய்தியும் வந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் மதுரை மாநகரில் பரவி வரும் வன்முறைக் கலாச்சாரத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், நேற்றையதினம் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துராஜா என்பவர் மதுரை மாநகராட்சியில் 7வது வார்டு அதிமுக கவுன்சிலராகவும், வட்டச் செயலாளராகவும் இருந்தவர், தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்.

2030 பெட்ரோல் வாகனங்களே இருக்காது...மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்


புதுடெல்லி, இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் வரும் 2030-ம் ஆண்டிற்குள் பெட்ரோல் வாகனங்களே இல்லாத நாடாக மாறும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதற்காக, எல்க்ட்ரிக் கார்களை முன்பணம் இன்றி வழங்கும் திட்டம் ஒன்றையும் மத்திய அரசு உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்தார். இதற்கு நமக்கு அரசாங்கத்திடம் இருந்து ஒரு பைசா கூட உதவி தேவையில்லை. பொதுமக்களிடம் இருந்தும் ஒரு ரூபாய் கூட முதலீடு தேவையில்லை. பொதுமக்களுக்கு எலக்ட்ரிக் கார்களை ஜீரோ டவுண் பேமண்ட்டில் வழங்க இயலும். மிகக்குறைந்த செலவில் உங்கள் கார்களை சார்ஜ் செய்ய முடிந்தால் பெட்ரோல் செலவு மிச்சமாகும். அந்த சேமிப்புத் தொகையை பொதுமக்கள் எலக்ட்ரிக் காரை வாங்க பயன்படுத்தலாம்.

Internet வேகம் இந்தியாவில் மிகவும் குறைவு....116 இடத்தில உள்ளது

டெல்லி,மார்ச் 25 (டி.என்.எஸ்) அகமை டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆண்டுதோறும் இண்டர்நெட் வேகம் குறித்த புள்ளிவிபர அறிக்கையை வெளியிடுவது வழக்கம். சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இண்டர்நெட் வேகம் எவ்வாறு உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள இந்த புள்ளிவிபரம் முக்கியான ஒன்றாக கருதப்படுகிறது. உலக அளவில் இண்டர்நெட்டின் சராசரி வேகம் 23 சதவீதம் அதாவது 5.6 எம்.பி.பி.எஸ். அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தென் கொரியா அதிகபட்சமாக 26.7 எம்.பி.பி.எஸ் வரை இண்டர்நெட் சேவையை வழங்கியிருக்கிறது.

சிதம்பரம் பிரஷர்....இளங்கோவன் டாப் கியர்.....ஜாலி டைம் ஸ்டார்ட்!

விகடன்.com :2016 சட்டமன்றத் தேர்தலை முன்னெடுக்கப்போவது இளங்கோவன் மட்டும்தான். அவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். நீங்களும் அவருக்கு ஆதரவாக இருங்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை' என்ற; ராகுல்காந்தியின் அதிரடிப்பேச்சால் ஆடிப் போயிருக்கிறார் ப.சிதம்பரம். இதையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார் சிதம்பரம் என தகவல்கள் கசிகின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், தேர்தல் தொகுதி பங்கீடு பற்றிப் பேசுவதற்காக தலைவர் இளங்கோவன் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு, கடந்த திங்கள் கிழமை நியமிக்கப்பட்டது. இதில், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, யசோதா உள்ளிட்ட எட்டு பேர் இடம்பெற்றனர். இளங்கோவனின் தலைமையை ஏற்காத சிதம்பரம், ' மல்லிகார்ஜுன கார்கே, குலாம்நபி ஆசாத் போன்ற சீனியர் தலைவர்கள் தலைமை ஏற்றால், அந்தக் குழுவில் நான் இடம்பெறுவேன். இளங்கோவனை ஏற்றுக் கொள்ள முடியாது' எனத் திட்டவட்டமாக பேசியதற்குப் பதில்தான், மேற்குறிப்பிட்ட ராகுல் காந்தியின் பேச்சு. 

வைகோ சொல்கிறார்: திமுக 80 தொகுதிகளும் 500 கோடி ரூபாயும்....பாஜக எவ்வளவாம்? அதிமுக எவ்வளவாம்? வைகோ எல்லாவற்றையும் சொல்லவேண்டும்?

விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.கவை தங்கள் அணிக்கு இழுக்க தி.மு.க. 500 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பது குறித்து கலைஞர் கருணாநிதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.கவும் முன்பு இடம்பெற்றிருந்தது என்பதை தனது நோட்டீஸில் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக, இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தே.மு.தி.கவிற்கு 80 தொகுதிகளும் 500 கோடி ரூபாயும் தர முன்வந்ததாக கூறினார்.   திமுகவோடு விஜயகாந்த் சேராமல் இருப்பதற்காக அம்மாவிடம் எவ்வளவு  சூட்கேஸ்? .... புரோக்கர் எந்த பார்பன பரிவாரம்?  உலகத்திலே பயங்கரமான ஆயுதம்   நிலை கெட்டுப் போன வைகோ போன்றவர்களின் நாக்குதான். பேரம் பேசப்பட்டது என்றால் இது ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அல்லவா? விஜயகாந்த் எல்லாருடனும் ஏரியா பேரம் பேசி உள்ளார்.தற்போதும் அதுதான் நடந்திருக்கிறது   

நல்லகண்ணுவுக்கு பிரேமலதா:..விஜயகாந்த் அணின்னா ஒண்ணும் குறைஞ்சுடாது!.....இது தேவையா?

முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவை பிரேமலதாவிடம் அவமானப்பட வைத்த இடதுசாரிகள்!! சென்னை: தேமுதிக+ மக்கள் நலக் கூட்டணியை விஜயகாந்த் அணி என கூப்பிட்டால் எந்த பாதிப்பும் இல்லை- குறைந்து போய்விடாது என்று முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவுக்கு விஜயகாந்த் மனைவி பிரேமலதா காட்டமான பதிலைக் கூறியுள்ளார். மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நல்லகண்ணுவை அறிவிக்கலாம் என ஒருதரப்பு கூறிக் கொண்டிருக்கும் போதே விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துவிட்டது அந்த அணி. அத்துடன் தேமுதிக+ மக்கள் நல கூட்டணி இனி "கேப்டன் விஜயகாந்த் அணி" என அறிவிக்கப்படும் என்று வைகோ அறிவித்தார்

கேட்டது 63..அப்புறம் 40....ஆனா...30 தான் கட்டுபடியாகும்...காங்கிரஸ் திமுக தொகுதி பேச்சுவார்த்தை இழுபறி..

சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக., கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதி ஒதுக்குவது என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்., கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் இன்று சென்னை வந்தார். கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு ஆசாத் சென்றார். இவருடன் காங்., தலைவர் இளங்கோவன், முகுல் வாஸ்னிக், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடன் சென்றனர். கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்ற பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த சட்டசபை தேர்தலில் ஒதுக்கியது போல் 63 தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த முறை 30 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக., தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதன் பிறகு 40 தொகுதிகளாவது வேண்டும் என காங்., கேட்பதாக தகவல்கள் வந்தன.

நம்ம கட்சிக்கு எது நடந்தாலும் பாரவாயிலை.....எல்லாருக்கும் பாடம் படிப்பிக்க வேண்டும்....இவரு மட்டும்தான் இவ்வளவு தெளிவா டிராமா போடுவாரு


ஒவ்வொரு தடவை தேர்தல் வரும்போதும், ‘பந்தக்கால் நட்டார்; பந்தியில் அவமானப்பட்டார்’னு வைகோவைப் பத்திச் சேதி வரும். போன 2011லகூட அதுதாம் நடந்துச்சி.
2006ல இருந்து அதிமுக கூட்டணியில இருந்த வைகோ, 2011 வரைக்கும் பாசமலர் சிவாஜி மாரியே ஜெயலலிதா மேல சகோதரப் பாசத்தைக் கொட்டுனாரு. ஆனா, 2011 தேர்தல் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்த ‘கந்தசாமி’ படத்துல தேங்காய் யாவாரியான வடிவேலுகிட்ட ஒரு மொட்டைத்தல ஆசாமி 10 ரூவா தேங்காய 4 ரூபாய்க்கிக் கேட்பாரு பாருங்க... அப்படியிருந்துச்சி.

JNU கண்ணையா குமார் மீது செருப்பு வீச்சு....ஹைதராபாத் பல்கலை கழக


ஹைதராபாத் பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மாணவர் ரோஹித் வெமூலா தற்கொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று, மாணவர் தலைவர் கண்ணையா குமார் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிர்வாகத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய காரணத்தினால் ரோஹித் பல்கலையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனம் வெதும்பிய ரோஹித் வெமூலா தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதற்கு காரணம் மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி ராணிதான் என்று, பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்மிரிதி ராணி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

சீமான் :தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள்...திருச்சி,சென்னை,கோவை,மதுரை, கன்னியாகுமரி ஆகியன முறையே....

சென்னை,மார்ச் 24 (டி.என்.எஸ்) தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஆட்சி செயற்பாட்டு வரைவு' என்ற பெயரில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தேர்தல் அறிக்கையை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு பேசியதாவது:
தமிழகத்தின் தலைநகரமானது செயல்பாட்டு வசதிக்காக திருச்சிக்கு மாற்றப்படும்; சென்னையானது திரைக்கலை, துறைமுகம், கணினிநுட்பத் தலைநகராக இருக்கும்; தொழில், வர்த்தகத் தலைநகராக கோவை விளங்கும்; மொழி, கலை, பண்பாட்டுக்கான தலைநகராக மதுரையும் தமிழர் மெய்யியலுக்கான தலைநகராக கன்னியாகுமரியும் இருக்கும்.

ம.ந. கூட்டணி விஜயகாந்த் கூட்டணியா? நல்லக்கண்ணு மறுப்பு...

கோவை,மார்ச் 24 (டி.என்.எஸ்) தேமுதிக-வுடன் மக்கள் நலக் கூட்டணி இணைந்துள்ளதால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட, தற்போது ம.ந.கூ மற்றும் தேமுதிக இடையே உறசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நல கூட்டணி, இனி விஜயகாந்த் கூட்டணி, என்று வைகோ, திருமாவளவன் ஆகியோர் கூறிய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, அப்படி ஏதும் இல்லை, என்று மறுத்துள்ளார்.
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் உடுமலையில் சங்கர் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இவரது மனைவி கெளசல்யாவை சந்திப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவருமான ஆர்.நல்லக்கண்ணு இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

சூரியன் உதிக்கும் கை உதவும் இலை உதிரும்...குஷ்புவின் அசத்தல் அடுக்குமொழி

சூரியன் உதிக்கும். கை உதவும்: குஷ்பு பேச்சு காங்கிரஸ் நாகர்கோவில் நகர சார்பில் மாற்றம் தேவை மாற்றத்தை நோக்கி என்ற அடிப்படையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு பங்கேற்றுப்பேசினார். அப்போது அவர், ’’இந்த தேர்தலில் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஏற்றபடி பணத்தை செலவு செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளது. ஆனால் அதை தடுக்க வேண்டிய வேலைகளில் காங்கிரஸ் முழு நேரமும் ஈடுபட வேண்டும்.

டி.எம்.சௌந்தரராஜனுக்கு இன்று (24-3-2016) 94-ஆவதுபிறந்தநாள்.இவரின் டாகுமெண்டரியை புறக்கணித்த தொலைகாட்சிகள்

மறைந்த பின்னணி பாடகரான டி.எம்.சௌந்தரராஜனுக்கு இன்று (24-3-2016) 94-ஆவதுபிறந்தநாள். மிகப்பெரிய ஜாம்பவானான டி.எம்.சௌந்தரராஜனுக்கு தமிழ் சேனல்களால் ஏற்பட்ட அவமரியாதை பற்றிய தகவல் ஒன்று அவரது பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ளது. இது டி.எம்.எஸ். ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
என்ன நடந்தது? திரைப்படக் கல்லூரி மாணவரான விஜயராஜ் என்பவர், பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் டாகுமெண்டரியை உருவாக்கி இருக்கிறார். 2002 ஆம் ஆண்டு தொடங்கி 2013 ஆம் ஆண்டு வரையில் சுமார் 12 வருடங்கள் டி.எம்.எஸ். உடன் பயணித்து, தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பும்வகையில் 150 எபிசோட் எடுத்து முடித்துள்ளார்.

அதிமுகவில் வாசன் கட்சிக்கு 15 தொகுதிகள்.....25 தான் கேட்டாய்ங்க...ஆனா இதே டூ மச் கம்முனு இருங்கன்னு சொன்னாங்க

காங்கிரஸ் கட்சியில் இருந்து தமாகா-வை மீண்டும் துவங்கியதில் இருந்து, ஜி.கே.வாசன், அதிமுக ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்து வருகிறார். ஆளும் அரசுக்கு எதிரான பிரச்னைகள் அனைத்திலும மிகவும் அமைதியாகவே காட்சிகளை நகர்த்தினார்.அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும், ஜி.கே. வசானை  முன்னின்று பேசுவதால், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுக்கு எந்த தகவல் தெரியவில்லை. இதனால், கூட்டணி குறித்து, ஜி.கே.வாசன் கூறும் தகவலே மூத்த தலைவர்களுக்கு தெரிய வருகிறது ;இந்த நிலையில், அதிமுகவிடம் இருந்து, கூட்டணிக்கான அழைப்பு வரும் என, ஜி.கே.வாசன் எதிர்பார்த்து காத்துள்ளார். அதற்கு முன்பு, அவரிடம் இருந்து தமாகா விரும்பும் தொகுதிகள் பட்டியல் கேட்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 62,500 குழந்தைத் திருமணங்கள்


கோயம்புத்தூர், மார்ச்24_ 2011ஆம ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் வெளியான தகவல்களின்படி,  தமிழ்நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் 5,480, கோயம்புத்தூரில் 3,025, மதுரையில் 2,841, திருச்சியில் 1,966, சேலத்தில் 2,414, திருநெல்வேலியில் 2,360, திருப்பூரில் 2,239, தேனியில் 1,253 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் விவரங்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் 15 வய துக்கு உட்பட்ட 5,480 பெண் குழந்தைகளுக்கு திரு மணம் நடைபெற்றுள்ளது.

ஸ்டாலின் தனியாகவே தேர்தலை சந்திக்க ஆசைப்பட்டாரா? (சீமான்,அன்புமணி போலவா?)

 மு.க.அழகிரி நேற்று காலை, 11:00 மணி அளவில், தந்தையை, கோபாலபுரத்தில் சந்தித்தார். 'உடல் நலம் விசாரிக்க வந்தேன்' என, அழகிரி குறிப்பிட்ட அந்த சந்திப்பின் போது, உருக்கமான காட்சிகள் அரங்கேறின. அழகிரி பெயருக்கு ஏற்ப கொஞ்சம் சுயமரியாதைகாரர் .அதன் காரணமாகவே தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி சச்சரவுகள் ஏற்படுகிறது. எனினும்  அதுதான் அழகிரியிடம் கலைஞர் அடிக்கடி வியந்து போகும் காட்சியுமாகும். அந்த காட்சிகளை பற்றி பேசும் தி.மு.க.,வினர், 'அனேகமாக அழகிரி வந்துடுவார்' என்றே நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அழகிரிக்கு மீண்டும் கட்சி பதவியும், அதிகாரமும் தருவதாகவும், ஆனால் அது தேர்தலுக்கு பின் தான் நடக்கும் என்றும், கருணாநிதி, அழகிரியிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. அதனால், தேர்தல் முடியும் வரை அமைதியாக இருக்கும் படியும், தன்னால் ஆனவரை கட்சியின் வெற்றிக்கு பின்னணியில் இருந்து பாடுபட வேண்டும் என்றும் கருணாநிதி உத்தரவிட்டு உள்ளார்.  

திமுகவின் உள்வீட்டு சமாச்சாரங்கள்....நாமறியோம் எல்லாம் வதந்திகள்தான்

ஸ்டாலின் மனதில் என்னதான் நினைத்துகொண்டு இப்படிஎல்லாம் நடக்கிறார்?  என்ன தம்பி இப்படி பண்றீங்களே என்று உள்வீட்டில்  பலரும் கொஞ்சம் உரக்கவே விவாதிக்கிறார்கள். இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை பல இடங்களில் மூன்றாவது இடத்து அழைத்து சென்றார். குஷ்பூவை கலைத்து விட்டு காங்கிரசுக்கு வைட்டமின் கொடுத்தார். இப்போ காதர் முஹிதீனையும் ஒரு வழிபண்ண பார்த்தார். ஆனால் கலைஞர் அந்த ஆபத்தில் இருந்து திமுகவை காப்பாற்றி விட்டார் என்று சில குருவிகள் கூவுகின்றன.   கலைஞரின்  நீண்ட நாள் நண்பரான, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காதர் மொய்தீனிடம், 'ஒரு சீட் தான் கிடைக்கும். வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் தாராளமாக போகலாம்' என, ஸ்டாலின் தரப்பினர் கறாராக பேசியதாக கூறப்படுகிறது. கருணாநிதிக்கு இந்த தகவல் கிடைக்கவே, துக்கமடைந்த அவர், காதர் மொய்தீனை அழைத்து, 'உங்களுக்கு எவ்வளவு சீட் வேண்டும் சொல்லுங்கள்' என்றாராம். 'ஐந்து சீட் போதும்' என்று சொன்ன காதர் மொய்தீனிடம், உடனடியாக ஒரு தாளில், 'ஐந்து சீட் ஒதுக்கப்பட்டது' என்று எழுதிக் கொடுத்தார்.ஏற்கனவே, கே.ந.கூ.,வால் எரிச்சலில் இருந்த கருணாநிதியை, ஸ்டாலினுக்கு செக் வைக்க, காதர் மொய்தீன் சம்பவம் துாண்டியது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

162 ஐ.எஸ். தீவிரவாதிகள் மலேசியாவில் கைது

Malaysian police have arrested 162 individuals suspected of having links with the Islamic State militant group, the Home Ministry said on Thursday. கோலாலம்பூர்: மலேசியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 162 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மலேசியா முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. 162 individuals with links to ISIS arrested in Malaysia

வியாழன், 24 மார்ச், 2016

பெல்ஜியத்தில் காணமல் போன இந்தியர் இறுதியாக மெட்ரோ ரயில் இருந்து பேசியுள்ளார்

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் குண்டுவெடிப்பு தாக்குதலின் போது காணாமல் போன இன்போசிஸ் ஊழியர், கடைசியாக மெட்ரோ ரயிலில் இருந்து செல்போனில் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். பிரஸெல்ஸில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்த அன்று முதல் காணாமல் போன பெங்களுருவைச் சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேஷைத் தேடும் பணிகள் இந்திய தூதரகம் மூலம்  நடந்து வருகின்றன.

இனி விஜயகாந்த் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார்....ஹவுஸ் அரெஸ்ட்?....வைகோதான் சொன்னார்

விகடன்,com :தி.மு.க. உடன்தான் அணி சேருவார்... இல்லை பா.ஜ.க.வுடன்தான் விஜயகாந்த் போவார் என கடந்த சில மாதங்களாகவே விஜயகாந்தை மையப்படுத்தி ஏராளமான யூகங்கள் செய்திகளாக வலம் வந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், கட்சியின் மகளிர் தின பொதுக்கூட்டத்தில் தனித்து போட்டி என அறிவித்தார் விஜயகாந்த்.
விஜயகாந்த் பேச்சை முடித்த உடன், எங்களோடு வந்து இணையும் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திப்போம் என அறிவித்தார் பிரேமலதா. இந்நிலையில் மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. இணைய காரணமாக இருந்த பிரேமலதாவுக்கு நன்றி தெரிவித்து அதை நேற்று உறுதி செய்தார் வைகோ. வைகோவின் சொல்லை கேட்டு அரசியல் நடத்தி முதலுக்கு மோசமானவங்க லட்சகணக்கா இருக்காங்க....கொஞ்சம் தெற்கு  நோக்கி பாருங்க கதை கதையா சொல்லுவாங்க....திட்டுவாங்க சாபம் கொடுப்பாங்க....  

ரூ.100 கோடியை விழுங்கிய கல்வி அதிகாரிகள்..(சபீதா ஐ.ஏ.எஸ்).! -பள்ளிக் கல்வித் துறை 'மெகா' மோசடி

விகடன்.com: பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபலமான தனியார் பள்ளி அது. தனது மகன் சுரேந்திரனை எல்.கே.ஜியில் சேர்ப்பதற்காகச் சென்றார் விவசாயி தியாகராஜன். பத்தாயிரம் கட்டணம், ட்யூஷன் பீஸ் தனி என பள்ளி நிர்வாகம் சொன்னதற்கெல்லாம் தலையை ஆட்டினார். அவர் கொடுத்த பணத்திற்கு எந்த ரசீதும் கொடுக்கவில்லை. ஒருநாள் கல்வி அதிகாரிகள் ஆய்வுக்கு வருகிறார்கள் என்று சொல்லி, பள்ளி நிர்வாகம் கையெழுத்து கேட்டபோதுதான் தெரிந்துகொண்டார், தனது மகனைக் கல்வி உரிமைச் சட்டக் (RTE) கணக்கின்கீழ் கொண்டு வந்துவிட்டார்கள் என்று. எவ்வளவோ போராடியும் பலனில்லை. இதேபோல், வித்யா மந்திர் பள்ளி நிர்வாகம் ஒன்று, மாணவர் ஒருவரின் பெற்றோரை பள்ளிக்கு வருமாறு அழைத்தது. 'எதற்கோ கூப்பிடுகிறார்கள்' என நம்பிச் சென்ற அவரிடம், ஒரு தாளில் கையெழுத்துப் போடச் சொல்லியுள்ளது நிர்வாகம். எதற்கு என விசாரித்தபோதுதான், கல்வி உரிமைச் சட்டக் கதை வெளியே வந்திருக்கிறது. மாணவரைச் சேர்ப்பதற்காக இருபதாயிரம் ரூபாய் கட்டணத்தை கட்டியிருந்தார் மாணவரின் தந்தை.

"சூப்பர் சிங்கர்" எந்த ரூல்சும் கிடையாது விஜய் டிவியின் விருப்பம் ஒன்றே ரூல்ஸ்

விகடன்.com :விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரச்னை , அட இன்னுமா முடியவில்லை என்றால் முதலும் முக்கியஸ்தருமான வெற்றிக்குச் சொந்தக்காரர் ஆனந்த் இப்போதுதானே மனம் திறந்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் தனது வெற்றி மற்றும் அதற்காகப் பட்ட கஷ்டங்கள் என அனைத்தையும் பதிவிட்டுள்ளார்,
அவர் கூறியுள்ளதாவது, கடந்து இரண்டு நாட்களாக நான் கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். இப்போதும் கனவு போல் இருக்கிறது. எனக்கு ஆதரவாக இருந்த சேனல் மற்றும் மக்களுக்கு நன்றி.
பத்து வருடங்கள் காத்திருந்து பத்து மாதங்கள் போட்டி, இசைப் பயிற்சி, என அனைத்தையும் கடந்து இந்த வெற்றியை அடைந்துள்ளேன்.

குரங்கு(BJP) வாலில் கட்டப்பட்ட பூமாலை...உயிர்காக்கும் மருந்துகளுக்கு தடை போடும் மோடி அரசு

bharath mathaki jeiமோடி அரசு சத்தமேயில்லாமல் மலிவு விலையில் உயிர்காக்கும் மருந்துகளை தயாரிக்கும் கட்டாய உரிமத்தை இனி பயன்படுத்தமாட்டோம் என அமெரிக்காவிற்கு ரகசியமாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது.குரங்கு கையில் சிக்கிய பூமாலை கேள்விப்பட்டிருப்பீர்கள்! குரங்கு வாலில் கட்டப்பட்ட நாட்டை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
கார்ட்டூன் நன்றி: Tanmaya Tyagi
 ந்திய மக்களின் உயிரோடு விளையாடும் பொருட்டு ‘இனி மேல் உயிர் காக்கும் மலிவுவிலை பதிலீட்டு (Generic Versions) மருந்துகளைத் தயாரிக்கும் உள்நாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கு கட்டாய உரிமம் வழங்கமாட்டோம்’ என மோடியின் பாஜக அரசு  அமெரிக்காவுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அமெரிக்க-இந்திய வர்த்தக கூட்டமைப்பு (USIBC-United States Indian Business Council), அமெரிக்க வணிக பிரதிநிதியத்திடம் (USTR-Unites States Trade Representative) சென்ற பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த அறிக்கையில் இந்தியா மலிவு விலையில் மருந்துகளை உள்நாட்டில் தயாரிப்பதற்கு கட்டாய உரிமம் இனி வழங்காது என அமெரிக்காவிற்கு தனிப்பட்ட முறையில் உறுதியளித்திருப்பதாக தெரிவிக்கிறது.

அழகிரி கலைஞர் சந்திப்பு......யார் என்ன சொன்னாலும் அழகிரி சாதாரணமானவர் அல்ல...

விகடன்.com :அழகிரி- கருணாநிதி சந்திப்பு கட்சியினர் மத்தியிலும் உற்சாகமாக பேசப்படுகிறது. அழகிரி இத்தனை நாள் வெளியில் இருந்ததாலோ என்னவோ கட்சி பலவீனமாக இருக்கும் நிலையில்,  அவரது வரவு திமுகவினர் மத்தியில் கொஞ்சம் பலம் பெற்ற உற்சாகத்தை தந்திருக்கிறது. 'எல்லாம் எங்க செல்வி அக்கா சாதனை' என செல்வி மீது உச்சிமோந்து பேசுகிறார்கள் உடன்பிறப்புகள்.
உலகிலேயே தந்தை மகனை சந்தித்து பேசுவதே பரபரப்புக்குள்ளாகிறது என்றால் அதுதான் தமிழக அரசியல்.திமுகவின் முன்னாள் தென்மண்டல பொறுப்பாளரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான அழகிரி,  இன்று தன் தந்தையை சந்தித்துப்பேசி திரும்பியிருப்பது அரசியல் களத்தை அதகளப்படுத்தியுள்ளது. மீண்டும் திமுகவில் அழகிரிக்கு கட்சியில் மகுடம் சூட்டப்படப்படலாம் என்கிறது திமுக வட்டாரம். திமுக தலைவரின் மகனான அழகிரி,  ஆரம்ப காலங்களில் அரசியல் ஆர்வம் அற்று,  தனிப்பட்ட தொழில்  என தனிப்பாதையில் சென்றவர். பின்னாளில் திமுகவில் ஸ்டாலின் எழுச்சி பெற்ற ஒரு தருணத்தில், அழகிரிக்கும் அரசியல் ஆர்வம் துளிர்விட,   தாய் மூலம் தந்தையிடம் அதை கொண்டு சென்றார். யார் என்னதான் சொன்னாலும்  அழகிரி ஒரு சுய மரியாதைகாரர்தான்...அவரின் குரல் பலரின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது.   

ரோஹித் பெயரில் சட்டம் வரும் வரை போராட்டம்... எச்சரிக்கும் கன்ஹையா குமார் ஹைதராபாத்தில் பல்கலை கழக வாசலில்....


ஹைதராபாத்: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வேமூலாவின் பெயரில் சட்டம் இயற்றப்படும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையா குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா, ரோகித்தின் சகோதரர் ராஜா ஆகியோரை சில மாதங்களுக்கு முன் நேரில் சந்தித்து தேச துரோக வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையான டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்ஹையா குமார் ஆறுதல் கூறினார்.

காங்கிரஸ் கேட்கும் 63 தொகுதிகள் பட்டியல் விவரம்...தி.மு.க. கூட்டணியில்...

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கேட்கும் 63 தொகுதிகள் பட்டியல் விவரம் 1. திருத்தணி, 2. பூந்தமல்லி, 3. ஆவடி, 4. திரு.வி.க.நகர், 5. ராயபுரம், 6. அண்ணாநகர், 7. தியாகராயநகர், 8. மயிலாப்பூர், 9. ஆலந்தூர், 10. ஸ்ரீபெரும்புதூர், 11. மதுராந்தகம், 12. வேலூர், 13. ஆம்பூர், 14. சோழிங்கர், 15. அரியலூர், 16. அறந்தாங்கி, 17. அவினாசி, 18. ஆத்தூர், 19. ராமநாதபுரம், 20. ரிஷிவந்தியம், 21. ஈரோடு மேற்கு, 22. உதக மண்டலம், 23. ஒசூர், 24. கடையநல்லூர், 25. கரூர், 26, காங்கேயம், 27. காரைக்குடி, 28. கிருஷ்ணகிரி, 29. கிள்ளியூர், 30. குளச்சல், 31. சிங்காநல்லூர், 32. சிவகங்கை, 33. செங்கம், 34. செய்யாறு, 35. சேலம் வடக்கு, 36. தஞ்சாவூர், 37. தாம்பரம், 38. திருசெங்கோடு, 39. திருத்துறைப்பூண்டி, 40. திருப்பரங்குன்றம், 41. திருப்பூர் மேற்கு, 42. திருமயம்,

தே மு தி க, திமுக சேராமல் தடுத்த ராஜதந்திரம்.....அலுங்காமல் குலுங்காமல் ஒரே அமுக்கு....சூட்கேஸ்......

தமிழகத்தில் திமுக - தேமுதிக கூட்டணியை அதிமுக வெற்றிகரமாக முறியடித்துள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு வலுமான அணியும் அமைக்கும் பணிகள் வேகம் எடுத்தன. இந்த நிலையில், வைகோ தலைமையில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவைகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கியது. இந்த தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டி என அறிவித்த நிலையில், அக்கட்சி திமுக கூட்டணிக்கு செல்லக்கூடும் என்ற தகவல் வெளியானது. அவ்வாறு தேமுதிக திமுக கூட்டணிக்கு சென்றால் ஒரு தொகுதிக்கு குறைந்த பட்சம் சுமார் 10, 000 வாக்குகள் திமுக கூட்டணி பக்கம் செல்லக்கூடும்.  அம்மாவின் வழக்கமான சூட்கேஸ் டிப்ளோமசி விஜயகாந்திடம் நன்றாகவே வேலை செய்திருக்கிறது . ஆனால் உண்மையில் ஒரு வரலாற்று தவறில் இருந்து திமுகவை ஜெயலலிதாவே காப்பாற்றி உள்ளார்....சரித்திரத்தில் ஒரு விசித்திரம் 

அ.தி.மு.க., நேர்காணல்: வசூல் வேட்டை, குற்றப் பின்னணி கிரிமினல்கள் தான் அதிகம் செலவு செய்ய ரெடி.....

அ.தி.மு.க.,வில், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் தகுதி இல்லாதவர்களும், வசூல் வேட்டையாடியுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளையும், குற்றப் பின்னணி சிக்கியவர்களையும் அழைத்துள்ளதால், தி.மு.க., தலைமை உற்சாகமடைந்து உள்ளது புது முகங்கள்: வலுவான கூட்டணி அமைக்கவில்லை என்றால், ஆளுங்கட்சியை சுலபமாக வீழ்த்த முடியாது என, தி.மு.க., தலைமை கருதுகிறது. இதனால், ஆளுங்கட்சியின் பலவீனத்தை
மையமாக வைத்து, அக்கட்சியை தோல்வி அடைய வைக்கும் வியூகங்கள், தி.மு.க.,வில் வகுக்கப்பட்டு வருகின்றன. குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத, புது முகங்களை கொண்ட வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என, தி.மு.க., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தக்கூடிய, 'ஒன்மேன் குரூப்' மூலமாக, வேட்பாளர்களை தேர்வு செய்ய, மாவட்ட வாரியாக அனுப்பி, தேர்வு செய்யும் பணி நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், ஆளுங்கட்சியில் நடத்தப்பட்ட நேர்காணலில் இடம் பெற்றவர்களில் சிலர், தகுதி இல்லாதவர்கள் உள்ளனர்.

அமித் ஷா : அரசியல் காழ்ப்புணர்ச்சியால் காஞ்சி ஜெயேந்திரர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது ......அண்டப்புழுகன் ஆகாசப்புழுகன்கிறது இதானா ?

சென்னை: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியான நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற ஜெயேந்திரரின் 84வது ஜெயந்தி நிறைவு விழா நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘' காஞ்சி மடம், 2,500 ஆண்டுகள் பாரம்பரியமிக்கது. குஜராத்தில் இரு சமூகத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட்ட போது, ஜெயந்திரர் வந்து சமரசம் செய்து வைத்ததார். Case Against Kanchi Shankaracharya Was For Political Reasons: Amit shah   அய்யோ அய்யோ இந்த பிரேமானந்தா  அவசரப்பட்டு செத்துபூட்டாரே.....அவர் மேல உள்ள கேசும் அரசியல்  காழ்புணர்ச்சியால் போட்டதுன்னு  அமித்ஷா சொல்லியிருப்பர் ஏலே......அதாய்ன் முடியாதுல பிரேமானந்தாதான் பார்ப்பான் இல்லையே ...... 

புதன், 23 மார்ச், 2016

விஜயகாந்த் முதல்வர் ஆவாரா? - சமூக நோக்கர்கள் கருத்து..tamil.thehindu.com

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விஜயகாந்த் தமிழக முதல்வராவது உறுதி என மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணி இனி 'விஜயகாந்த் அணி' என அழைக்கப்படும் என்று வைகோ கூறியுள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் இது மிகப் பெரிய திருப்பம்தான். அதேசமயம் விஜயகாந்த் முதல்வர் ஆவாரா? என்பதுதான் தற்போதைய கேள்வி.
அந்த கேள்வியை சில சமூக நோக்கர்களிடம் முன்வைத்தோம்.
ஆழி செந்தில்நாதன் (அரசியல் விமர்சகர்): விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட ஆக முடியாது. தேமுதிகவின் வாக்கு வங்கியை ஊடகங்கள் மிகை மதிப்பீடு செய்து வெளியிடுகின்றன.

பாடி பொற்கிழி பெறும் ஊடகங்கள் ஒருபுறம்...அம்பானி, பச்சமுத்து, வைகுண்டராஜன்களின் ...சுப்பர் ஊடகங்கள் மறுபுறம்...

அரசியும், அரசியைப் போற்றிப் பிழைக்கும் புலவர்களும் (மீடியா) எவ்வழியோ அவ்வழிதான் குடிமக்களும் என்பதற்கிணங்க ஆன்மீகம் கொடிகட்டிப் பறக்கிறது. ஜெயா-சசி கும்பல் பிரபலப்படுத்திய யாகங்கள், யாருமறியாத கோவில்கள், நேர்த்திக் கடன்கள், கஜமுக யாகங்கள் என்பதிலிருந்து அம்மாவைப் பார்க்க, மனு கொடுக்க, வேட்பாளர் தெரிவுக்கு என அ.தி.மு.க கூடராமே நல்ல நாள், முகூர்த்தம், எம கண்டம் பார்த்து தனது அடிமைத்தனத்தை காட்ட வேண்டியிருக்கும் போது தினசரிகளும் இந்த அசட்டுத்தனத்தை கடைவிரிப்பது கல்லா கட்டுவதற்கு உதவுகிறது. அதே நேரம் ஆன்மீகத்தை படிப்பதில்லை என்று ஐந்தில் ஒரு பங்கினர் சொல்லியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வினவு.com தேர்தல் பரபரப்பை அறுவடை செய்யும் ஊடகங்கள் அடிக்கடி கருத்துக் கணிப்புகள் நடத்துகின்றன. அவற்றின் நம்பகத்தன்மை என்ன? பொதுவில் ஊடகங்கள் உருவாக்கும் அல்லது ஆதரிக்கும் கருத்துக்களை மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?

நிஜமான போட்டி என்னவோ அய்யாவுக்கும் அம்மாவுக்கும்தான்...மிச்சம் மீதியெல்லாம் சென்சேஷன் மட்டும்தான்

nisaptham.com :ஓபிஎஸ், நத்தம், பழனியப்பன் தலையில் தூக்கிப் போட்டுவிட்டு ‘எல்லாம் இந்த கேடிகள் செஞ்ச தப்பு..அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியாதாம்..பாவம்
கலைஞருக்கு தேமுதிகவை உள்ளே இழுத்துவிட வேண்டும் என்று ஆசை. ஆனால் ஸ்டாலினுக்கு விருப்பமில்லை. ‘திமுகக் கூட்டணிக்கு தேமுதிக வருகிற வாய்ப்பு இருக்கிறது’ என்று ஒரு பக்கம் கலைஞர் நெக்குருகிக் கொண்டிருக்க, ‘கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை’ ‘அவங்க கூட பேச்சுவார்த்தையே நடக்கலை’ என்று பெருங்கற்களைச் சுமந்து ஸ்டாலின் ஒவ்வொன்றாகப் போட்டார். ஆட்சியில் பங்கு உள்ளிட்ட தேமுதிகவின் கடுமையான நிபந்தனைகள் ஸ்டாலினை எரிச்சலூட்டியிருந்தாலும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்களிடம் இப்படி வெளிப்படையாகப் பேசியதை விஜயகாந்த்துக்கான ஸ்டாலினின் எதிர்ப்புணர்வு என்றுதான் புரிந்து கொள்ள முடிந்தது. அப்பா எதிர்பார்ப்பதை மகன் எதிர்ப்பதை எப்படி புரிந்து கொள்வது?

அதிமுகவின் துதிபாடும் அரசியல் திமுகவின் குடும்ப அரசியல் இரண்டுமே தேமுதிகவிடம் இருக்கிறது.....தமிழருவி மணியன்

விஜயகாந்தின் முதுகுக்கு பின்னால் போன வைகோ, வீழ்ச்சியடையப் போகிறார், என்று மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தது, அவருக்கு முதல்வர் வேட்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது, குறித்து தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
திமுக எப்படியாவது விஜயகாந்த்தை தன் பக்கம் வரவழைத்து அவர் வைத்திருக்க கூடிய 5 சதவீத வாக்குகளை தன்னோடு சேர்த்து ஆட்சி நாற்காலியைக் கைப்பற்றி விடலாம் என்று கனவு கலைந்திருக்கிறது.

ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கப் போகும் விஜயகாந்த்!

 ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கப் போகும் விஜயகாந்த்!tamil.chennaionline.com: சென்னை,மார்ச் 23 (டி.என்.எஸ்) தமிழக சட்டசபைக்கான தேர்தல் நாள் அறிவிக்காத முன்பே, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வந்தன. முதலில்  திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியானதும். விஜயகாந்தை எப்படியாவது தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணி முடிவு செய்தது. ஆனால், மறுபுறம் பா.ஜ.க விஜயகாந்துக்கு வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில், திமுக-வும் விஜயகாந்தின் மீது ஆர்வத்தைக் காட்ட, தேமுதிக-திமுக கூட்டணி உறுதி என்ற சூழல் உருவானது.

தேர்தல் செலவுகளுக்கு பாஜக அல்லது காங்கிரசை உள்ளே கொண்டுவரவேண்டும் என்றார் விஜயகாந்த்....

விகடன்.com :தேர்தல் காலங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை பாடாய்ப்படுத்தும் சென்டிமெண்ட்டுக்கு மக்கள் நலக் கூட்டணியும் தப்பவில்லை. பங்குனி உத்திரத்தின் நல்லநேரத்தில் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார் விஜயகாந்த். இதனால், தி.மு.கவின் கடைசி நிமிட நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. 'மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் சேருவார்' என வைகோ பகிரங்கமாக மேடையில் பேசினாலும், தே.மு.தி.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வராததால் தி.மு.க, பா.ஜ.க தரப்பில் கொஞ்சம் நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். ' நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்' என கருணாநிதி அழுத்தமாக தனது வார்த்தைகளை முன்வைத்தார். பா.ஜ.கவின் கடைசிநிமிட முயற்சிகள் பலனிக்காமல் போன கோபத்தில், " தனித்துப் போட்டியிட்டு தனித்துவமான அணியாக நாங்கள் இருப்போம்" என பேட்டியளித்தார் பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை.

சரத்குமார் மீண்டும் அதிமுக கூட்டணியில்....அப்பாயின்ட் மென்ட் கிடைத்தது!

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை இன்று போயஸ்கார்டனில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நடைபெற உள்ள தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். அப்போது ஏற்கனவே அந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சரத்குமார். கட்சியின் வளர்ச்சிக்காக அவ்வாறு யோசித்தோம்.

344 மருந்து பொருட்கள் உற்பத்தி, மத்திய அரசு தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

344 மருந்துப் பொருட்களை இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய மத்திய அரசு அண்மையில் விதித்த தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தென்னிந்திய மருந்து உற்பத்தி யாளர் சங்கங்களின் கூட்ட மைப்பு தலைவர் சேதுராமன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் சுகாதாரத் துறை செயலாளர் கடந்த 10-ம் தேதி வெளியிட்ட ஒரு அறிவிப்பாணையில் வலி நிவா ரணி, சளி, இருமலுக்கான மருந்துகள், நோய் எதிர்ப்புக் கான மருந்துகள், குறிப்பிட்ட சில சர்க்கரை நோய் மருந்து கள், ஒன்றுக்கு மேற்பட்ட மூலக்கூறுகளை கொண்ட மருந்துகள் என 344 மருந்துப் பொருட்களை இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தடை விதித்து உத்தர விட்டார்.

விஜயகாந்த்-தர்மர், நான்-அர்ஜூனன், திருமா-பீமர், ஜி.ரா-நகுலன், முத்தரசன்-சகாதேவன்... வைகோ ஒப்புதல் வாக்கு!

சென்னை: நாங்கள் பஞ்சபாண்டவர்கள். விஜயகாந்த் - தர்மர், நான் அர்ஜூனன், திருமாவளவன் - பீமர், ஜி.ராமகிருஷ்ணன் - நகுலன், முத்தரசன் - சகாதேவன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். நானும் திருமாவளவனும் யாரையும் விஜயகாந்திடம் நெருங்க விடமாட்டோம். ( என்னங்க வீட்டுக்காவலில் வச்சுடுவீங்களோ? இப்படிதான் அம்மாவின் அல்லக்கைகளும் பண்ணிச்சு)  அரண் போல காப்போம் என்றும் வைகோ கூறியுள்ளார்.  சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விஜயகாந்த் தமிழக முதல்வாராவது உறுதி என மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டணி, தொகுதி உடன்பாடு ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் தேர்தலில் ம.ந.கூ - தேமுதிக மகத்தான வெற்றி பெறும்; விஜயகாந்த் முதல்வராவார் என நம்பிக்கை தெரிவித்தனர்.

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தேர்தல் உடன்பாடு...விஜய்காந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றது ம. ந. கூட்டணி

விஜய்காந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றது மக்கள் நலக் கூட்டணி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பகிர்க தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் , தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடுகிறது.  கூட்டணி ஒப்பந்தத்திற்குப் பின் விஜய்காந்த்துடன், மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் இந்த அணியின் முதல்வர் வேட்பாளராக, தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக மக்கள் நல கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்யும் தேமுதிகவின் அதிகாரபூர்வ செய்தி அறிக்கையில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தேமுதிக மொத்தமாக 124 தொகுதிகளிலும், மக்கள் நல கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் 110 தொகுதிகளிலும் போட்டியிட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்+பிரேமலதா : அது இது எது? இன்று கூட்டணி விபரம் (பேரம்?) அறிவிப்பு.

சென்னை: யாரோடும் கூட்டணி இல்லை... தனித்துதான் போட்டி என்று முன்பே திட்டவட்டமாக விஜயகாந்த் அறிவித்தாலும், மீண்டும் அவருடன் கூட்டணி பற்றிப் பேசி வருகின்றன முன்னணி கட்சிகள். இந்தக் கட்சிகளுடன் அவர் இணையப் போகிறாரா? எடுத்த முடிவில் உறுதியாகப் பயணிக்கப் போகிறாரா? என்பது இன்று புதன்கிழமை தெரிந்துவிடும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.பழம் கனிந்திருக்கிறது... பாலில் விழும் என நம்புகிறேன் என்று விஜயகாந்துடனான கூட்டணி எதிர்ப்பார்ப்பு குறித்து முன்பு திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். ஆனால் அவரது நினைப்பில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு, தனி ரூட்டை அறிவித்தார் விஜயகாந்த்.

8 மாதங்களில் 20 லாரி, 25 டிரைவர்கள் மாயம் / கொலை ? வடமாநில கும்பல் கைவரிசையா?


திண்டுக்கல்: தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 20 லாரிகள், 25 டிரைவர்கள் மாயமாகியுள்ளனர். இது குறித்துசெம்பு கம்பி கடத்தல் வழக்கில் சிக்கிய ஹரியானா வாலிபரிடம் விசாரிக்க நாமக்கல் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
துாத்துக்குடி 'ஸ்டெரிலைட்' நிறுவனத்தில் இருந்து மத்திய பிரதேசம் இந்துாருக்கு ரூ.ஒரு கோடி மதிப்புள்ள ரூ.24.50 டன் செம்பு கம்பிகளை ஏற்றி ஒரு லாரி சென்றது. நாமக்கல்லலை சேர்ந்த ரவிச்சந்திரன், 39, லாரியை ஓட்டினார்.கொடைரோடு அடுத்துள்ள காமலாபுரம் அருகில் மற்றொரு லாரியில் வந்த மர்ம நபர்கள் நள்ளிரவில் வழிமறித்தனர். டிரைவர் ரவிச்சந்திரனை தாக்கி கை, கால்களை கயிற்றால் கட்டி தாங்கள் வந்த லாரியில் போட்டனர்.செம்பு கம்பி ஏற்றிவந்த லாரியை வேறொரு டிரைவர் மூலம் ஓட்டிச் சென்றனர்.