கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் மகளிர் அணித் தலைவி தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி புலிகள் கடந்த காலங்களில் வடக்கில் மேற்கொண்ட கொலைகள் தொடர்பான பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் ரஷ்மி சிங்கப்புலிக்கு அறிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்ட தமிழினி பாதுகாப்புச் செயலாளரின் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப் பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக சட்டமா அதிபரிடம் விரைவில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு புலனாய்வுப் பிரி வினருக்கு உத்தரவிட்ட நீதவான் சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கு மாறு உத்தரவிட்டுள்ளார்.
வைத்திய அதிகாரி என்.சத்தியமூர்த்தி தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளனர் வன்னியில் இடம் பெற்ற இறுதிக்கட்ட போரின் போது வெளிநாட்டு ஊடகங்களுக்கு தவறான செய்திகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப் பட்ட கிளிநொச்சி மாவட்ட வைத்திய அதிகாரி என்.சத்தியமூர்த்தி சம்பந்தமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து புலனாய்வுப் பிரிவினர், சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமான விசா ரணைகள் முடிபடைந்துவிட்டதாகவும் விசா ரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரி வினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன் றத்தில் தெரிவித்துள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி மருத்துவர் சத்தியமூர்த்திக்கு எதிராக எடுக்கப் படவேண்டிய சட்டநடவடிக்கை குறித்து தீர் மானிக்கப்படும் எனவும் புலனாய்வுப் பிரி வினர் கூறியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் அழுத்தங்கள் காரணமாகவேதான் சர்வதேச ஊடகங்களுக்கு பொய்யான தகவல்களை வழங்கியதாக சத்திய மூர்த்தி விசாரணைகளின் போது புலனாய்வுப் பிரிவினரிடம் கூறியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக