வெள்ளி, 3 செப்டம்பர், 2010

ரஜினி மகள் திருமணம்: கட்சித் தலைவர்கள், திரையுலகம் வாழ்த்து


நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராம்குமார்  ஹேமாராம் குமார் தம்பதிகளின் மகன் அஸ்வினுக்கும் எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் 03.09.2010 அன்று காலை திருமணம் நடைபெற்றது.

சவுந்தர்யா அரக்கு கலரில் பட்டு புடவையும், மணமகன் அஸ்வின் வேட்டி அங்கவஸ்திரம்
அணிந்து இருந்தார். மண மேடையில் அக்னி வளர்த்து புரோகிதர்கள் வேதமந்திரங்கள் ஓதினர். அதன் அருகில் உள்ள இருக்கையில் ரஜினி அமர்ந்து இருந்தார். தனது மடியில் சவுந்தர்யாவை உட்கார வைத்து இருந்தார். சரியாக 8 மணிக்கு மணமகள் சவுந்தர்யா கழுத்தில் அஸ்வின் தாலி கட்டினார். அப்போது மங்கள வாத்தியங்கள் முழங்கின. திருமணத்துக்கு வந்தவர்கள் அட்சதை தூவினார்கள்.

தாலி கட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் முகூர்த்த மந்திரம் ஓதப்பட்டது. ரஜினி  லதா காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர். அக்னியை சுற்றியும் வலம் வந்தனர். பின்னர் மணமக்களை ரஜினி மேடையில் இருந்து இறக்கி பார்வையாளர் வரிசைக்கு அழைத்து வந்தார்.

அங்கு உட்கார்ந்திருந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், டைரக்டர் பாலசந்தர், தெலுங்கு டைரக்டர் ராகவேந்திரராவ் ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெற செய்தார்.

திருமணத்தில் சம்பிரதாய முறைப்படி ரஜினி சிறிது நேரம் தலைப்பாகை அணிந்து இருந்தார். அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், மெட்டி அணிவித்தல் நிகழ்ச்சிகளும் நடந்தன.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு தா.பாண்டியன், நல்லகண்ணு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கார்த்தி சிதம்பரம், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், திருநாவுக்கரசர் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர்கள் சிவகுமார், பிரபு, பாக்கியராஜ், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூருடனும், நடிகை மீனா கணவர் வித்யா சாகருடனும் வந்து வாழ்த்தினார்கள்.

டைரக்டர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர்கள் புஷ்பா கந்தசாமி, சத்யஜோதி தியாகராஜன், கலைப்புலி தாணு, ராம்குமார், நடிகர்கள் சுமன், சின்னிஜெயந்த், எழுத்தாளர் லேனா தமிழ் வாளான், நடிகை சுகாசினி, டைரக்டர் பி.வாசு, ரஜினி ரசிகர் மன்ற பிரமுகர்கள் சத்ய நாராயணா, பினோரா அசோக் மற்றும் ஏராளமா னோர் வாழ்த்தினார்கள்.

கருத்துகள் இல்லை: