சனி, 1 அக்டோபர், 2016

கி.பி. 3016 ம் ஆண்டு கண்டுபிடிப்பு : ஒரு நோயாளியின் நண்பரிடம் இருந்துதான் ஆட்சி நிர்வாக ஆணைகள் பெறப்பட்டன

Columinist Mani's Timeline Story on TNஆர்.மணி
இந்த கட்டுரையை படிக்க வாசகர்கள் கால இயத்திரத்தில் (டைம் மெஷின்) ஏறி முன்னோக்கி பயணிக்க வேண்டும்.
ஆம். கி.பி. 3016 ம் ஆண்டில் இந்த கட்டுரை தமிழ் கூறும் நல்லுலகிற்கு படிக்க கிடைக்கிறது. அப்போது (ம்) தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு தலை காய்ந்த பத்திரிகையாளன் இந்த கட்டுரையை எழுதுகிறான்.
அவனுடைய வேலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தய சுவாரஸ்யமான உலக செய்திகளை ஆராய்ச்சி செய்து வெளியில் கொண்டு வருவதுதான். அப்படி ஒரு நாள் அவன் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கையில்தான் இந்தியாவின் கடலோர மாநிலம் ஒன்றில் நிகழ்ந்த ஒரு முக்கியமான நிகழ்வு அவனுடைய பார்வையில் படுகிறது. அதனுடைய பல பரிமாணங்கள் அவனை ஆச்சரியத்தில் உறைய வைக்கின்றன. ஏனெனில் அந்த சம்பவம் நிகழ்ந்த குறிப்பிட்ட காலகட்டம் தனி மனித கருத்துச் சுதந்திரமும், நாகரீக அரசு நிருவாகமும், அனைத்து விதமான அரசியல் கருத்துக்களுக்கும் இடங் கொடுத்த ஒரு காலகட்டம் என்று கருதப்பட்டதோர் காலகட்டம்.. அந்தக் காலகட்டத்திலா இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்தது என்பது, அதாவது குறிப்பிட்ட அந்த சம்பவத்திற்கு எதிரான அன்றைய, ஊடகங்களின் எதிர்வினை அவனை அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது. இனி அந்தக் கட்டுரையை பார்க்கலாம் ....
முன்போர் காலத்தில் ஒரு முதலமைச்சர் இருந்தார்.

காவிரி.. கர்நாடக நீதிமன்ற அவமதிப்பு ... பின்வாங்கிய பால் நாரிமன்

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக வாதிடுவதிலிருந்து திடீரென ஃபாலி நாரிமன் பின்வாங்கியது அம்மாநிலத்திற்கு பின்னடைவாகிவிட்டது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனுவை, கடந்த 20ம் தேதி,விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு 21 முதல் 27ம் தேதி வரை 6 ஆயிரம் கன அடி காவிரி நீரை கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் 30ம் தேதி (இன்று) வரை தமிழகத்துக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுமாறு கடந்த 27ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற இரு மாநில பிரதிநிதி களின் கூட்டத்திலும் கர்நாடகா இதே கருத்தில் பிடிவாதமாக இருந்தது.

ஈஸ்வரனின் கொ.ம.தே கட்சிக்கு திமுக சில வார்டுகள் ஒதுக்கியுள்ளது

திமுக தலைவர்  கலைஞர் கருணாநிதியை கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஈஸ்வரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். இதில் உடன்பாடு எட்டப்பட்டு, ஒரு சில வார்டுகளும் அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருணாநிதியை ஈஸ்வரன் சந்தித்து பேசினார்.தினமணி,காம்

ராம்குமார் உடல் தந்தையிடம் ஒப்படைப்பு!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் கடந்த 18ஆம் தேதி
உடல் நலக்குறைவால் புழல் சிறையிலிருந்து ராயப்போட்டை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்ததாக சிறைத்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. ராம்குமாரின் பிரேத பரிசோதனையில் தாங்கள் சொல்லும் மருத்துவரை நியமிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்கள். கீழ்பாக்கம் மருத்துவர்களுடன் ஸ்டோன்லி மருத்துவர் பாலசுப்பிரமணியத்தையும்,ஏம்ஸ் மருத்துவர் ஒருவரை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு 27ஆம் தேதிக்குள் பிரேத பரிசோதனையை முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர் வேறு அமர்வில் மேல்முறையீடு செய்த பின்னர் 30ஆம் தேதிக்குள் பிரேதபரிசோதனை முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதயைடுத்து உச்சநீதிமன்றத்தை நாடிய ராம்குமாரின் தந்தை தரப்பு தனியார் மருத்துவரை நியமிக்க கோரியிருந்தது பின்னர் மனுவை திரும்ப பெற்றதால் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இதையடுத்து 13 நாட்களுக்கு பின்னர் இன்று காலை 10.30 மணி அளவில் பிரேத பரிசோதனை தொடங்கியது. மூன்றரை மணி நேரம் பரிசோதனை நடைபெற்றது. இதையடுத்து ராம்குமாரின் உடல் அவரது தந்தை பரமசிவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. படங்கள்: அசோக்,  நக்கீரன,இன்

வதந்திகளை உருவாக்கி உள்ளாட்சி தேர்தலில் பலனடையப் பார்க்கிறதா அதிமுக?

ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக
காவல்துறை தினமும் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சி மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே இந்த வதந்திகள் மிகப்பெரிய அளவில் தொடர்ந்து பரவிக்கொண்டே இருக்கின்றன. இதை யார் பரப்புகிறார்கள்? இவை வைரலாக எப்படி தொடர்ந்து மக்களிடம் சென்று சேர்கின்றன? வதந்திகளை பரப்புவோரின் நோக்கம் என்ன?
வதந்திகள் என்பவை தானாக உருவாகின்றவை அல்ல. அவற்றிற்குப் பின்னே திட்டவட்டமான நோக்கங்கள் இருக்கின்றன. இந்தியாவில் நடந்த பல மதக் கலவரங்கள், சாதிக்கலவரங்களுக்குப் பின்னே திட்டமிட்டு உருவாக்கி பரப்பப்பட்ட வதந்திகளே பெரும் பங்காற்றியிருக்கின்றன. வதந்திகள் பரவ வேண்டும் என்றால் அதற்குப் பின்னே ஒரு செல்வாக்கு மிக்க குழு இருக்க வேண்டும்.

ஜெயலலிதா சொன்ன வசந்தத்தில் வெறும் ரூ.1,000க்கு ஒரு தாய் தன் மகளை விற்றுவிட நேர்கிறது. மாலெ தீப்பொறி

அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கக் பயப்படுகிறார் ஜெயலலிதா”
ஜெயலலிதா ‘பூரண குணம்’ பெற வாழ்த்துக்கள் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஏடான மாலெ தீப்பொறி வெளியிட்டுள்ள பதிவு:
ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் வந்து கருணாநிதி முதல் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் அவர் நலம் பெற்று பணிக்குத் திரும்ப வாழ்த்துச் சொன்னார்கள். மாபெரும் அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்திவிட்டதாக அனைவரும் தமக்குத் தாமே முதுகுத் தட்டிக் கொண்டிருந்தபோது அந்த அறிவிப்பு வந்தது. அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் தமிழ்நாட்டின் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும்! யாருக்கும் எந்த கால அவகாசமும் இன்றி, உடனடியாக மனுத்தாக்கல்!! திருமாவளவன் உண்மையிலேயே தான் உணர்ந்ததை வெளிப்படுத்தினார். அறிவிப்பு அதிர்ச்சி தருகிறது என்றார். தமிழ்நாட்டின் மூத்த, இளைய, சாணக்கிய, மெக்கியவில்லிய அரசியல்வாதிகள் அனைவரையும், யாரும் எதிர்பாராத இந்த அறிவிப்பை வெளியிட்டு ஜெயலலிதா ஒரே வீச்சில் வீழ்த்தினார். படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று காமராஜர் சொன்னதாகச் சொல்வார்கள். எம்.ஜி.ராமசந்திரன் ஜெயித்தார். ஜெயலலிதா அப்படி ஒன்றை முயற்சி செய்து பார்ப்பதாகத் தெரிகிறது.

தமிழக அரசு நிர்வாகம் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில....

முதல்வர் ஜெயலலிதா அட்மிட்டாகி புதன்கிழமையோடு 6 நாட்கள் கடந்தன. காய்ச்சலும் நீர்ச்சத்து குறைபாடும்தான் காரணம் என்றும், வழக்கமான உணவு உட்கொள்கிறார் என்றும் அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்த நிலையிலும், புதன் இரவு வரை போயஸ்கார்டனுக்கு ஜெய லலிதா திரும்பாமல் இருந்தது அ.தி.மு.க தொண்டர்களுக்கு வருத்தத்தை அளித்தது என்றால், அரசுத் திட்டங்களையும் கட்சி வேட்பாளர் பட்டியலையும் ஜெ. தொடர்ச்சியாக அறிவித்தது அவர் களுக்கு ஆச்சரியத்தை அளித்தது./>அப்பல்லோவில் அட்மிட் ஆன அடுத்த நாளே இந்து அற நிலையத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறை சார்ந்த திட்ட அறிவிப்புகளை ஜெ வெளியிடு கிறார். உடல் நலம் குறித்து கவர்னர் உள்ளிட்டவர்கள் அனுப்பிய வாழ்த்துக்கடிதங்களுக்கு நன்றியும், ஜெயங்கொண்டம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானவர் களுக்கு நிதி உதவி அறிவிப்பையும் செய்த முதல்வர், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்ததுமே கட்சியின் வேட்பாளர்கள் பட்டிய லையும் ரிலீஸ் செய்தார்..

கழகத்தை கைப்பற்ற நினைக்காதே ! அம்மாவை உடனே காட்டு ! தற்கொலை செய்வோம் !பரபரப்பு போஸ்டர்

ADMK cadres poster for Jayalalithaaசென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டனில் இருந்து வந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் சிகிச்சை அளித்து வருகிறார். >இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவை அனைவரும் பார்க்க வேண்டும். அவரை யாரோ சிலர் ரகசியமாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்று சசிகலா தரப்பு மீது பாய்ந்திருந்தார்.
தற்போது தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக என்ற பெயரில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள வாசகம்:
எச்சரிக்கை! எச்சரிக்கை!
புரட்சித் தலைவரின் இறப்பில்
ஒரு கும்பல் கொள்ளையடித்தது!

சி.யூ. வார்டில் இருந்து மாற்றப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா..! அப்போலோ அப்டேட்ஸ்

விகடன்.காம்  : அளித்த சிகிச்சையின் விளைவாக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்கின்றது மருத்துவமனை வட்டாரம். தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 9 நாட்கள் கடந்துவிட்டன.‘லண்டனிலிருந்து மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க வந்திருக்கிறார்கள்’ என்று நேற்று விகடன் வலைதளத்தில் ‘எக்ஸ்க்ளுசிவ்’ ஆக செய்தி வெளியானது.
 இந்நிலையில் நேற்று அப்போலோ மருத்துவர்களின் துணையோடு லண்டன் மருத்துவக் குழுவினர் அளித்த சிகிச்சையின் விளைவாக முதல்வரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. போயஸ் கார்டனில் இருந்து காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக, மூச்சுத் திணறல் உள்பட பல சிரமங்களுக்கு ஆளானார். இதையடுத்து, நுரையீரல் தொற்று நோய்க்கு சிறப்பு மருத்துவர்களை தேடி வெளிநாடுகளுக்குப் பறந்தனர் சசிகலாவின் உறவுகள். இதையடுத்து, நேற்று மதியம் ஒருமணி அளவில் லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்டு வரவழைக்கப்பட்டார். முதல்வருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டன. இது குறித்து நம்மிடம் பேசிய கார்டன் ஊழியர் ஒருவர், "தொடக்கத்தில் முதல்வர் உடல்நிலையில் இருந்த பலவித சிரமங்களை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் குணப்படுத்தினர். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை குறைபாடு உள்ளிட்டவை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. நுரையீரலில் நோய் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் இரவில் சரியான உறக்கம் இல்லாமல் தவித்தார். தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட மருந்துகளின் விளைவால் முதல்வர் பல சிரமங்களை எதிர்கொண்டார்.  இதையடுத்து,>அப்போலோ மருத்துவர்கள்
 தீவிர சிகிச்சையை தொடர்ந்தனர்.

கவர்னர் வித்யாசாகர் ராவ் அப்போலோ சென்றார் .. முதல்வரை பார்ப்பார் என்று வதந்தி?

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 22--ந் தேதி ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிய தினமும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர். அதே போல் இன்றும் ஏராளமான பிரமுகர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றனர். இந்நிலையில்  முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய அப்பல்லோ மருத்துவமனைக்கு வித்யாசாகர் ராவ் சென்றார். அங்கு ஜெயலலிதாவின் உடல் நலம் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிகிறார். கவர்னர் வருகையை தொடர்ந்து கமிஷ்னர் ஜார்ஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி.காம்

பீகார் மதுவிலக்கு உயர் நீதிமன்றம் ரத்து செய்தது .. நிதிஷ் அரசுக்கு பின்னடைவு ?

பாட்னா,; பீகாரில் மதுவிலக்கு அரசாணையை ரத்து செய்து, ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது. இது நிதிஷ் குமார் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மது விலக்கு< பீகார் மாநிலத்தில் 2015 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, முழுமையான மதுவிலக்கை கொண்டுவருவோம் என வாக்குறுதி அளித்து நிதிஷ் குமார் தலைமையிலான மதசார்பற்ற மகா கூட்டணி ஆட்சியை பிடித்தது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நிதிஷ் குமார் அரசு, கடந்த ஏப்ரல் மாதம் மதுவிலக்கு சட்டம் கொண்டு வந்தது. இதன்படி உள்நாட்டு மதுபானங்கள் தயாரிப்பு, விற்பனை, மதுபானங்கள் குடித்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. வழக்கு

காவிரி... சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து தேவகவுடா உண்ணாவிரதம்

பெங்களூரு : காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக சுப்ரீம்
கோர்ட் பிறப்பித்த உத்தவை எதிர்த்து முன்னாள் பிரதமர் தேவகவுடா உண்ணாவிரத போராட்டம் போராட்டத்தை துவக்கி உள்ளார்.காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உத்தரவை திருத்தம் செய்ய வேண்டும் என கர்நாடக அரசும், அதற்கு எதிராக தமிழக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுக்களையும், இரு மாநில அரசுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையையும் சுப்ரீம் கோர்ட் நேற்று விசாரித்தது. பின்னர், தமிழகத்திற்கு அக்டோபர் 6ம் தேதி வரை தினமும் 6000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் எனவும், மீண்டும் மீண்டும் கோர்ட்டிற்கு வருவது சரியானதல்ல எனவும் கர்நாடக அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தது.

தூய்மைப் பணியிலிருந்து முழுமையாக விடுபடுவதே அருந்ததியர் விடுதலை”: அதியமான்

thetimestamil.com  :சென்னை லயோலா கல்லூரி பி.எட் பயிற்சி வளாகத்தில்
டாக்டர் பேரா.ஜெபமாலைராஜா “caste victimization” – A Study on the Dalits (Arunthathiyar’s) of Dalits, ஆய்வு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் கலந்து கொண்டு ஆய்வு நூலை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அருந்ததியர்களின் நிலை பற்றியும், அவர்கள் விடுதலைக்கான வழிமுறைகள் பற்றியும், சமூநீதியின் புரிதல்கள் பற்றியும் விரிவாக உரையாற்றினார்.
“பல பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே இதே வளாகத்தில் இதைப்போன்ற ஆய்வு நூல்கள் பறையர் சமூகத்தினருக்கு கிடைத்துவிட்டது, அதன் பயனாக அவர்கள் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்து விட்டனர், அரசியல் ரீதியாகவும் பெரும் வளர்ச்சியை தொடர்ந்து வருகின்றனர்,

France தமிழச்சி மீது முதல்வர் வதந்தி வழக்கு.. ராம்குமார் , சுவாதி கொலையில் பல உண்மைகளை வெளிகொணர்ந்தவர்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தது முகநூலில்
தவறான கருத்துகளைப் பதிவு செய்த பிரான்ஸைச் சேர்ந்த தமிழச்சி என்ற பெண் மீது தமிழக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஒருவாரத்திற்கு முன்பாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு  மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா குணம் பெற்று வருவதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள தொடர் செய்திக்குறிப்புகளில்  தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை   பிரான்சில் வாழும் தமிழச்சி என்ற பெண் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவர் ஏற்கனவே சுவாதி, ராம்குமார் விவகாரத்தில் தொடர்ந்து பல்வேறு பரபரப்பு கருத்துக்களை பதிவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

நீட் (NEET) தேர்வு : நரியின் சாயம் வெளுத்தது !

தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) தேர்வு தகுதியும் திறமையும் கொண்ட மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று உச்சநீதி மன்றம் உருவாக்கிய தோற்றம், வெறும் வார்த்தை ஜாலமென்றும் மோசடியென்றும் அம்பலமாகிவிட்டது.
neet-2“மருத்துவராக விரும்பும் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டியிருக்கிறது; அப்படியே எழுதினாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஒளிவுமறைவின்றி நடைபெறுவதில்லை; அவை பல்வேறு தில்லுமுல்லுகளும் மோசடிகளும் செய்வதோடு, அக்கல்லூரிகளில் காணப்படும் நன்கொடை, கட்டணக் கொள்ளை மாணவர்களை அச்சுறுத்தும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. நாடு முழுவதும் நடக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை” என்றெல்லாம் காரணங்களை அடுக்கி, இவற்றையெல்லாம் ஒழித்துக்கட்டி, தகுதியும் திறமையும் மிக்க மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றால், அதற்குத் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு ) மட்டும்தான் ஒரே வழி எனச் சாமியாடிய உச்சநீதி மன்றம், இத்தேர்வை இந்தக் கல்வியாண்டு தொடங்கியே நடத்த வேண்டும் என்ற கட்டப் பஞ்சாயத்து உத்தரவை கடந்த ஏப்ரல் மாதம் அளித்தது. ஆனால், மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடப்பதோ உச்சநீதி மன்றம் உதார் விட்டதற்கு நேர் எதிராக இருக்கிறது.

கார்ப்பரேட் சாமியார்கள் : இந்துத்துவத்தின் புரோக்கர்கள் !

jaggi-vasudev-3ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர், ராம்தேவ் உள்ளிட்ட கார்ப்பரேட் சாமியார்களின் சட்ட விதிமீறல்களை விட ஆபத்தானது அக்கும்பலின் இந்துத்துவ விஷம் கலந்த உபதேசங்கள்
கார்ப்பரேட் சாமியார்கள் இந்துத்துவ பாசிசத்தின் நவீன ஏஜெண்டுகள்!
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் காமராஜ் – சத்யஜோதி தம்பதியினர், தனது மகள்கள் இருவரும் ஈஷா யோகா மையத்தில் சேர்ந்த பின்னர், அவர்களை மூளைச்சலவை செய்து, மொட்டையடித்து, சாமியாராக்கி ஜக்கி வாசுதேவ் அடைத்து வைத்துள்ளார் என்றும், அவர்களை மீட்டுத் தரும்படியும் அண்மையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து ஈஷா யோகா மையத்தின் கிரிமினல் மோசடிகள் மீண்டும் சந்தி சிரிக்கத் தொடங்கியுள்ளன. மகள்கள் இருவரையும் மூளைச்சலவை செய்து, மொட்டையடித்து, சாமியாராக்கி ஜக்கி வாசுதேவ் அடைத்து வைத்துள்ளார் என்று புலம்பும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் காமராஜ்.
முனைவர் காமராஜ் மட்டுமின்றி, ஈஷா சமஸ்கிருத குருகுலப்பள்ளியில் இலட்சக்கணக்கில் பணம்கட்டி சேர்க்கப்பட்ட தனது இருமகன்களை மீட்டு தன்னிடம் ஒப்படைக்குமாறு மதுரையை சேர்ந்த போலீஸ் ஏட்டுமகேந்திரன், பொறியாளராக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த தனது மகன் ரமேஷை மூளைச்சலவை செய்து ஈஷாயோகா மையத்தில் அடைத்து வைத்துள்ளதாக தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். ஈஷா யோகா மையத்தில் இதுவரை எல்லாம் சரியாக நடந்து வந்ததாகக் கருதியவர்களோ, துணுக்குற்று திரும்பிப் பார்க்கிறார்கள்.

அமைச்சர் ஓ.பி.எஸ்., டிஜிபி ராஜேந்திரன் அப்போலோ வருகை !

சென்னை: முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு தமிழக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் சென்றுள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22-ம் தேதி இரவு உடல்நலக் குறைவு காரணமாக கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது என்றும், தற்போது அவர் சீராக உள்ளதாகவும் மருத்துவனை சார்பில் அவ்வப்போது வெளியிடப்படும் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. O. Panneerselvam went in Apollo Hospital முதல்வர் ஜெயலலிதா இன்னும் சில நாட்கள் ஓய்வு எடுத்த பின்பு வீடு திரும்புவார் என்றும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் Read more at: tamil.oneindia.com/

பெருவாழ்வு வாழ்ந்த பெரியார் .. உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் எல்லாமே அவரிடம் இருந்தது !

பெரியாரை சிறு வயதில் இருந்து படித்திருந்தாலும் இந்த வரிகளை படித்த
போது தொண்டை கட்டிக் கொண்டது எழுதிய தோழருக்கு வணக்கங்கள்.  ...... 1879ஆம் ஆண்டு பிறந்த பெரியார்
1973ஆம் ஆண்டுவரை
நீண்டநெடிய பெருவாழ்வு
வாழ்ந்தார்!
கடவுள் உண்டு என்று
உறுதியாக நம்பியவர்கள்,
கடவுளின் பாதாரவிந்தங்களை பற்றியவர்கள்,
கடவுளுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்,
கடவுளின் தூதுவர்கள்,
கடவுளின் நேரடி முகவர்கள்
இவர்களின் வாழ்நாட்களை விட
தந்தைபெரியாரின் வாழ்நாள் அதிகமாகவும்
அர்த்தமுள்ளதாகவும் இருந்தது.
இதில், பல நடமாடும் தெய்வங்களை அவ்வப்போது மருத்துவர்கள் பரிசோதித்து உயிரோடிருப்பதை உறுதி செய்யவேண்டியிருந்தது.
ஆனால்,
பெரியார் இறுதிவரை இயங்கிகொண்டேயிருந்தார்

எல்லோயோர மக்கள் வெளியேறுகிறார்கள் ... பாக்கிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள உகந்த நாடு தரம் நீக்கப்படும்?

தினமலர்.காம் : புதுடில்லி: பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள, எம்.எப்.என்., எனப்படும்
வர்த்தகத்துக்கு உகந்த நாடு என்ற அந்தஸ்தை, மறுபரிசீலனை செய்வதற்காக நடக்க இருந்த கூட்டம், திடீரென ஒத்திவைக்கப்பட்டுஉள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரியில், ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் உறவு மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு, 1996ல், நல்லெண்ண அடிப்படையில், எம்.எப்.என்., அந்தஸ்தை, இந்தியா வழங்கியது. இந்த அந்தஸ்தை மறுபரிசீலனை செய்ய, இந்தியா திட்ட மிட்டுஉள்ளது.

லண்டன் மருத்துவர்கள் அப்போலோவில் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்!

சென்னை : உடல் நல சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா வெளிநாடு செல்லப் போவதாக தகவல் பரவிய நிலையில் தற்போது வெளிநாடுகளில் இருந்து மருத்துவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 22ம் தேதி இரவில் இருந்து அப்பல்லோ மருத்துவமனையின் இரண்டாம் மாடியில் உள்ள கிரிட்டிகல் கேர் யூனிட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. அவ்வப்போது அவரது உடல்நலம் பற்றிய தகவல் வெளியானாலும் தற்போது லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர், அடுத்தடுத்த பாதிப்புகளால் அப்போலோ மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ' தற்போது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மிஸ்டர் கழுகு : அப்போலோ நிமிடங்கள்! - மன்னார்குடி மருத்துவர்கள்

விகடன்,காம் ;அப்போலோவில் முதலமைச்சர் ஜெயலலிதா அட்மிட் ஆகி ஒரு வாரத்துக்கு மேல் ஓடிவிட்டது. அரசாங்கம், அப்போலோ நிர்வாகம், ஜெயலலிதாவைச் சுற்றியிருப்பவர்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் வதந்திகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன. முதல்வர் எப்போது மருத்துவ மனையைவிட்டு வருவார் என்பது இன்றுவரை முடிவாகவில்லை’’ என்றபடியே உள்ளே நுழைந்த கழுகார், குறிப்பு நோட்டில் ஆழ்ந்தார்.‘முதலமைச்சரின் உடல்நிலை பற்றி மத்திய அரசு அறிக்கை வாங்கியதாமே?’’/>‘‘மத்திய உளவுத்துறை அதிகாரிகள் நாள்தோறும் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிக்கொண்டு​தான் இருக்கின்றனர். ஆனால், அந்த அறிக்கைகள் மத்திய ஆட்சியாளர்களுக்குத் திருப்தி தரவில்லை. அந்த அறிக்கைகளில் கூடுதல் விவரங்கள் என எதுவுமில்லை. ‘அமைச்சர்​களுக்கே அப்போலோவில் 144 தடை. யாரும் ஜெயலலிதாவை போய்ப்  நேரடியாக பார்க்கவே முடிய​வில்லையே? பிறகு, எப்படி உண்மை​யான அறிக்கையை கொடுக்க முடியும்?’ என இங்குள்ள, அதிகாரிகள் சொன்னார்கள். இதனால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்தையே தொடர்பு கொண்டுப் பேசி, அறிக்கை கேட்டார்களாம்”

முதல்வரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்!” - சசிகலா புஷ்பா பேட்டி

விகடன்,காம் : ஒரு சசிகலா, ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் பாதுகாப்பாக இருக்க... இன்னொரு சசிகலா, ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையாக வாள் சுழற்றத் தொடங்கிவிட்டார். ‘அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் சசிகலா புஷ்பா அமைதியாகிவிடுவார்’ என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னமும் மாறாமல் இருக்கிறார் சசிகலா புஷ்பா.< அ.தி.மு.க-வில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்ய சபா எம்.பி-யான சசிகலா புஷ்பா, இப்போது நாடார் சமூக விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். தூத்துக்குடியில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாளில், அவரது நினை விடத்துக்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர், ‘ஜெயலலிதா சொன்னால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யத் தயார்’ என்று சொல்லி இருந்தார். அவரை சென்னையில் சந்தித்தோம்.
‘எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போகிறீர்களா?” ‘‘அ.தி.மு.க தலைமை இட்ட கட்டளையை ஏற்று நான் செய்த பணிகளைப் பாராட்டித்தான் எம்.பி. பதவியை முதல்வர் அம்மா எனக்குத் தந்தார். கட்சியில் நாடார் சமூகத்துக்கு அங்கீகாரம் தரவேண்டும் என்றுதான் கட்சிப் பதவிகளையும் கொடுத்தார். அவர்களுக்கு முழு விசுவாசமாகச் செயல்பட்டேன். கட்சியில் எனக்கு எதிராகப் பிரச்னை கிளம்பியபோது, அம்மாவைப் பார்த்து மனுக் கொடுக்கக் கண்ணீரோடு பல நாட்கள் போயஸ் கார்டன் வாசலில் நின்றேன். ஆனால், எனக்கு வாய்ப்புத் தரப்படவில்லை. இப்போதும் சொல்கிறேன், அம்மா என்னை அழைத்து ‘எம்.பி. பதவியை ராஜினாமா செய்’ என்று சொன்னால், கண்டிப்பாக அவரது உத்தரவுக்குக் கட்டுப்படுவேன். வேறு யாரும் என்னை மிரட்டிப் பணியவைக்க முடியாது.’’

தமிழக கர்நாடக நதிநீர் பங்கீடு .. உமா பாரதி தலைமை பேச்சு வார்த்தை தோல்வி !

காவிரி பிரச்னையில் மத்திய அரசு நடத்திய பேச்சு அரசியல் சட்டத்தை கர்நாடகா மீறுவதாக புகார்< காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, கர்நாடகா, தமிழக அரசு பிரதிநிதிகளுக்கு இடையே, மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த கூட்டம், தோல்வியில் முடிந்தது. அரசியல் சட்டத்தை கர்நாடகா அரசு மீறுவதாக, தமிழக அரசு புகார் கூறியுள்ளது. காவிரி விவகாரத்தில் சுமுக தீர்வை எட்டும் முயற்சியாக, தமிழக, கர்நாடக மாநில முதல்வர்க ளின் கூட்டத்தை கூட்டி, பேச்சு நடத்தும்படி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி இருந்தது.இதையடுத்து டில்லியில் நேற்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான உமா பாரதி தலைமை யில் கூட்டம் நடந்தது. தமிழக முதல்வருக்கு பதிலாக, பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். தமிழக தலைமைச் செயலர் ராமமோகன ராவ்,பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.
அண்ணன் - தம்பி< கர்நாடக அரசு சார்பில், முதல்வர் சித்த ராமையா மற்றும் சட்ட அமைச்சர், நீர்ப்பாசன அமைச்சர், அம்மாநில தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

எதுதான் உண்மை? ஒரு போட்டோ அல்லது ஒரு விடியோ போதுமே? வதந்தி என்று வெறுமனே தட்டி கழிப்பது சரியல்ல

இது ஜனநாயக நாடு - எதிர்க்கட்சிகள் ஒரு வாரமாக private hospital #apollo hospital
statements மட்டுமே சரி என்று நடப்பவைகளை வேடிக்கை பார்ப்பது அழகா .. இந்தியாவின் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலன் பாதிக்கப்பட்டு டெல்லி ராணுவ மருத்துவமனையில் (Govt Hospital) அனுமதிக்கப்பட்டார். அவரை Narendra Modi சென்று பார்த்த புகைப்படம் உடனடியாக வெளியிடப்பட்டது.
Sonia Gandhi மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கூட அவரது உடல் நிலை குறித்து மற்றும் சிகிச்சை குறித்து உடனுக்குடன் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் முன்னாள் சாராய அதிபர் #CHO RAmasamy மட்டுமே இரண்டு முறை சந்தித்து வந்து வழக்கம் போல வாய் முடி backdoor politics பேசி கொண்டு இருக்கிறார் ..

POSSIBILITY of India-Pakistan war : USA News .. அரசின் பொருளாதார தோல்வியை மறைக்க போர் முழக்கம்?


thetimestamil.com :கோழிக்கோட்டில் பேசிய மோடி, யூரி தொடர்பான அவரது சகாக்களின் போர்வெறிக் கூச்சல்கள் சிலவற்றை மீண்டும் முன்வைத்ததுடன், அப்பட்டமான பாகிஸ்தான் எதிர்ப்பு தேசவெறிவாதக் கூச்சலையும் தீவிரப்படுத்தினார். பாஜக தலைவர் ராம் மாதவ், ‘யூரி தாக்குதலுக்கு பழிக்குப் பழி தீர்க்க’ வேண்டும் என்று சமீபத்தில் பேசினார். பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியம் சுவாமி, 10 கோடி இந்தியர்கள் மடிந்தால் கூட பாகிஸ்தானை முழுவதுமாக அழிக்க அணுஆயுதப் போர் நடத்த இந்தியா தயாராக வேண்டும் என்றார். பாகிஸ்தான் மீது உடனடியாக போர் என்ற விசயத்தை மோடி தவிர்த்தாலும் வறுமை, குறை வளர்ச்சி ஆகியவற்றின் மீதான போரில் இந்தியா பாகிஸ்தானை வென்றுவிட்டது என்றார். அதைத் தொடர்ந்து ‘ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது’ என்று சொல்லி, பாகிஸ்தானுக்கு நதிநீர் தருவதைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது பற்றி அறிவித்தார்.

முதல்வர் உடல்நிலை வதந்திகளால் அல்லோல கல்லோலம்... போலீஸ் எச்சரிக்கை, அப்பல்லோ விளக்கம்!

முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலை
அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். இன்றோடு அவர் அனுமதிக்கப்பட்டு எட்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அதிமுகவினரிடம் சலிப்பும், ஏனையோரிடம் ‘என்ன நடக்கிறது? அப்பல்லோவில் இருந்து எப்போது போயஸ் இல்லம் திரும்புவார் முதல்வர்?’ என்ற எதிர்பார்ப்பும் கூடுகிறது. நிலவும் இந்த சூழலே பல வதந்திகளுக்கு அடிகோலுகிறது. நேற்று மதியம் தொடங்கி முதல்வர் பற்றிய பல்வேறு வதந்திகள் செவி வழிச் செய்திகளாக பரவின. சமூக வலைதளங்களில் சிலர் இப்படி எழுதினாலும்கூட, செவி வழியில் பரவிய செய்திகளே அதிகம். இப்படியான வதந்திகள் பரவியதும் பல இடங்களில் அலுவலகங்களை விட்டு பெண்கள் அவசர அவசரமாக வீடுகளுக்குக் கிளம்பினார்கள். பல இடங்களில் கடைகள் அடைக்கப்படும் சூழல் உருவானது. கடந்த திங்கட்கிழமை பரப்பப்பட்ட வதந்திகளால் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பத்திரமாகச் செல்லுமாறு அறிவுறுத்தி, முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பினர்.

இந்தியாவும் பாகிஸ்தானும் அணுஆயுத போர் புரிந்தால்... 21 மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள்?

மின்னம்பலம்.காம் : ஒவ்வொன்றும் 15 கிலோ டன் ஹீரோஷிமா
வெடிகுண்டுக்கு சமமான நூறு அணு ஆயுதங்களை வெடிக்கச் செய்து இந்தியாவும் பாகிஸ்தானும் போர் புரிந்தால் இருபத்தியோரு மில்லியன் மக்களுக்கு மேலானோர் நேரடியாக கொல்லப்படுவர். உலகின் பாதி ஒசோன் பாதுகாப்பு படலம் அழிக்கப்படும். ‘ந்யூக்ளியர் விண்டர்’ காரணமாக உலகம் முழுவதும் விவசாயமும், பருவமழையும் பாதிக்கப்படும். இந்திய ராணுவம் ஆயுதப்போரை கருத்தில் வைத்திருக்கிறது. ஆட்சியில் இருக்கும் பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அணு ஆயுதப்போர் நடத்த வேண்டும் என அவசரப்படுத்துகிறார். பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதிலுக்கு இந்தியாவை ‘அழித்துவிடுவதாக’ அச்சுறுத்துகிறார். இந்நிலையில் 2007ஆம் ஆண்டு மூன்று அமெரிக்க பல்கலைக்கழகங்களால் நடத்தப்பட்ட இந்த கணிப்புகள், அணு ஆயுதப்போருக்கு நாம் கொடுக்கவிருக்கும் விலையை அழுத்தமாக நினைவூட்டுகிறது.

சென்னையில் RSS பேரணிக்கு அனுமதி கேட்ட வழக்கு ஒத்திவைப்பு .

மின்னம்பலம், காம்:  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆண்டு விழாவில், பேரணி நடத்துவது தொடர்பான வழக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சீருடை அணிந்து, கையில் கம்பு ஏந்திச் செல்வார்கள் என்பதால், பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை' என, நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று, மற்றொரு வழக்கிலும், ''ஆர்.எஸ்.எஸ். பேரணி, பிற மத வழிபாட்டுத் தலங்கள் வழியாகச் செல்ல திட்டமிட்டுள்ளதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் பொது அமைதியை நிலைநாட்டவும் பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டது என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி, விஜயதசமியை கடைப்பிடிக்கும்விதமாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தங்கள் சீருடைகளை அணிந்து அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தஞ்சையில் சோழர் கால துறைமுகம் கண்டுபிடிப்பு!

minnambalam.com : தஞ்சை மந்திரிப்பட்டினத்தில் சோழர் கால துறைமுகம் இருந்ததற்கான ஆதாரங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தொல்லியல் துறை இணைந்து கடல்சார் அகழாய்வினை மேற்கொண்டன. கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்டு வந்த ஆய்வில், சோழர் காலத்தில் பயன்படுத்தபட்ட நாணயங்கள் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் அருகில் உள்ள ஊர்களின் பெயர்கள் அரசுடன் தொடர்புடையதாக இருந்ததால், அந்த கிராமத்தை ஆய்வுக்கு தேர்வு செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர். சோழர் மன்னர் வெளியிட்ட செப்பு நாணயங்கள், வீட்டின் தரைப்பகுதி, சுடுமண் குழாய்கள், சுடுமண் பொம்மைகள், முத்திரைகள், அரிய வகை மணிகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

7 நாள் கழித்து அப்பல்லோவிலிருந்து வெளியே வந்த சசிகலா

முதல்வர் ஜெயலலிதா கடந்த வியாழக்கிழமை அன்று சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.  அன்று முதல் அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியிருந்த சசிகலா 7 நாட்களுக்கு பிறகு இன்று இரவு மருத்துவமனையில் இருந்து வெளியே காரில் புறப்பட்டுச்சென்றார். என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது ஒண்ணுமே புரியல்ல .படங்கள் : ஸ்டாலின்நக்கீரன்,இன்

அப்போலோவில் பயங்கர கெடுபிடி .... வதந்திகளை விட உண்மைகள் சீரியசானவை!

முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து கலங்கிய சசிகலா! - பணியில் இருந்தே நீக்கப்பட்ட அப்போலோ நர்சுகள்
vikatan.com அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 7 நாட்கள் கடந்துவிட்டன. 'மருத்துவர் சிவக்குமார் தலைமையில் நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் அவருடைய  ஹெல்த் ரிப்போர்ட்டைப் பார்த்ததற்காக மூன்று பேரை வேலையில் இருந்து நீக்கிவிட்டது அப்போலோ நிர்வாகம்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். 
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22-ம் தேதி இரவு உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ' நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக முதல்வர் சிகிச்சை எடுத்து வருகிறார்' என மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்பின்னர், சமூக வலைத்தளங்களில் முதல்வரின் உடல்நலம் குறித்து வதந்திகள் பரவின. ' இவ்வாறு வதந்திகள் பரப்புவோர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என காவல்துறை எச்சரித்தது. நேற்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் முதல்வரை சந்தித்துவிட்டுத் திரும்பினர். ஆனால், இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை அரசு நிர்வாகம் வெளியிடவில்லை.

BBC : சிவகங்கை அகழாய்வு பொருட்களை பெங்களூருக்கு எடுத்துசெல்ல உயர்நீதிமன்றம் தடை

மதுரைக்கு அருகில் உள்ள கீழடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில்
எடுக்கப்பட்ட பொருட்களை, சிவகங்கை மாவட்டத்தை விட்டு எடுத்துச் செல்லவும், ஆய்வுக் குழிகளை மூடவும் உயர்நீதிமன்றத்தின் உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.<மதுரை நகரத்திற்கு தென் கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி என்ற கிராமத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து இந்தியத் தொல்லியல் துறையால் மேற்கொண்டு வரும் அகழ்வாராய்ச்சியின் இரண்டாம் கட்ட ஆய்வு செப்டம்பர் மாத இறுதியோடு முடிவுக்கு வருகின்றது.
இதுவரை, இங்கு கிடைத்திருக்கும் கட்டடத் தொகுதிகளும், பொருட்களும் இங்கு ஒரு சங்ககால நகரம் இருந்ததற்கான சான்றுகளைத் தந்திருப்பதால், மேலும் ஆய்வுகளைத் தொடர இந்தியத் தொல்லியல் துறை ஆலோசித்து வருகிறது.

வியாழன், 29 செப்டம்பர், 2016

பலுசிஸ்தான் மீதும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த வேண்டும்: மஸ்தக் தில்ஷாத் பலோச்

டெல்லி: பலுசிஸ்தான் மீதும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானதே'' என்று பலுசிஸ்தான் போராளி மஸ்தக் தில்ஷாத் பலோச் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யூரி ராணுவ முகாமை பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இயங்கி வரும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி இந்திய தரப்பு அதிரடியாக செயல்பட்டுள்ளது. இந்திய விமான படை நடத்திய தாக்குதலில் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

சசிகலா நடராஜன் கையில் அதிமுக ரிமூட் கண்ட்ரோல் ! முதல்வர் கூறுவதாக சசிகலா கூறுவதைதான் அமைச்சர்கள் கூறுகிறார்கள்?


மின்னம்பலம்.காம்  :நெட் ஆன் செய்தபோது, வாட்ஸ் அப் ஏதோ டைப்பிங் செய்தபடி இருந்தது. சற்றுநேரத்தில் வந்து விழுந்தது அந்த மெசேஜ்.

“இன்று மதியம் மின்னம்பலத்தில் பதிவிட்டிருந்த ‘158 மணி நேரம்…. அப்பல்லோவில் நடப்பது என்ன?’ - கட்டுரையை வாசித்தேன். நியாயமான சந்தேகங்கள்தான்! சரியாக ஒரு வாரம் ஆகிறது. ஆனால், முதல்வருக்கு காய்ச்சல்… வழக்கமான உணவைச் சாப்பிடுகிறார்.. கோப்புகளைப் பார்க்கிறார்… ஆலோசனை நடத்துகிறார்… என்றெல்லாம் சொல்லி வருவது அப்பட்டமான பொய் என்பதை அதிமுக-வினரே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். மருத்துவமனைக்குப் போய்விட்டுவந்த மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரபலத்திடம் பேசினேன். ‘தரைத்தளத்தில் உள்ள ரிசப்சன் வரைதான் சென்றேன். அங்கிருந்த அமைச்சர் ஒருவர்தான் என்னிடம் பேசினார். ‘அம்மா நல்லா இருக்கிறதா சொன்னாங்க சார்… நாங்களே இன்னும் அவரைப் பார்க்கலை. இப்போதைக்கு பார்க்க முடியாதுன்னு சொல்றாங்க. வழக்கமாக போற டாக்டர்களையே இப்போ அனுமதிக்கிறது இல்லை. இரண்டு டாக்டர்களுக்கு மட்டும்தான் உள்ளே சென்றுவர அனுமதி கொடுத்திருக்கிறதா சொல்றாங்க. ரெகுலராக அம்மாவை செக் பண்ண போய்ட்டுவந்த டீம் இப்போ போறது இல்லையாம். அதேமாதிரி டாக்டர்களே யாரும் பேசுறது இல்லை. வாட்ஸ் அப் உட்பட டாக்டர்களின் எல்லா தொடர்புகளும் உளவுத்துறை கண்காணிப்பில் இருக்கு. அதனால எல்லோரும் பயப்படுறாங்க.
அதிகாரிகள்கூட யாரும் அம்மாவைப் பார்க்கலை. சின்னம்மா மட்டும்தான் உள்ளே இருக்காங்க. அவங்க வந்து எதுவும் தகவல் சொன்னா மட்டும்தான் தெரியும்…’னு அவரு சொன்னாரு. நான் வெளியே வரும்போது மீடியா ஆட்கள் மைக்கை தூக்கிட்டு வந்தாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. அதனாலதான் பேசமாலேயே வந்துட்டேன். முதல்வரின் உடல்நிலை எப்படி இருக்கு என்பது வெளிப்படையாகத் தெரிவிக்காமல் இன்னும் மௌனமாக இருப்பது நல்லது இல்லை. இதை சசிகலாவிடம் யார் சொல்வது?’ என்று வருத்தப்பட்டுப் பேசினார். அதிமுக-வில் எல்லோருடைய மனநிலையும் இதுவாகத்தான் இருக்கிறது.

கட்டண சிறைவாசம்: ஐ.டி., ஊழியர்கள் மகிழ்ச்சி.. ஐ டி ஊழியர்கள் அனுபவிக்காதது இது ஒண்ணு தான் பாக்கி?

ஐதராபாத்: தெலுங்கானா மாநில சிறையில், கட்டணம் செலுத்தி தங்கி பின், மூன்று பேரும் சிறையில் அடைக்கப் பட்டனர். ஒரு நாள் சிறைவாசத்துக்கு பின், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். சிறை அனுபவம் குறித்து, அவர்கள் கூறுகையில், 'இந்த அனுபவம், எங்களுக்கு புதுமையாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது; இங்கு அளிக்கப்பட்ட கதராடை, தட்டு போன்ற பொருட்களும், உணவும் வித்தியாசமான அனுபவத்தை தந்தன. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது' என்றனர். சிறை அருங்காட்சியக பொறுப்பாளர் லக் ஷமி நரசிம்மா கூறியதாவது: கடந்த, 20 நாட்களில், எட்டு பேர், சிறைக்கு வந்து சென்றுள்ளனர். இவர்களில், மூன்று பேர், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோர். லாரி டிரைவர் ஒருவரும், சிறைக்கு வந்தார். நள்ளிரவில், அவர் பயந்து அலறியதால், பாதியிலேயே அவரை விடுவித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
செல்லும் வசதி துவங்கப்பட்ட பின், ஐ.டி., எனப்படும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த மூன்று ஊழியர்கள் தங்கியுள்ளனர்.

சசிகுமார் மனைவி தற்கொலை முயற்சி ! சசிகுமார் கொலை .......

கோவை : கடந்த வாரம் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் வெட்டி கொல்லப்பட்டார். இந்த நிலையில் அவருடைய மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஷம் குடித்த சசிகுமாரின் மனைவி யமுனா கோவை துடியலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்.தினகர்,காம்

பாக் அதிபர் நவாஸ் ஷெரிப் : பதிலடிக்கு நாங்களும் தயார்..பலவீனமாக கருத வேண்டாம்

இஸ்லாமாபாத்: இந்திய ராணுவம் பாக்.,எல்லையில் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியிருப்பதாவது:பாக்., எல்லை பகுதியில் இந்தியா அத்து மீறல் நிகழ்த்தியுள்ளது. 2 பாக்., படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 9 பேர் காயமுற்றுள்ளனர். இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். இதனை ஏற்க முடியாது. இந்திய ராணுவம் கூறுவது போல் பெரும் கொடூர தாக்குதல் ஏதும் இல்லை என எங்களின் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அமைதியாக இருப்பதை எங்களின் பலவீனமாக கருத வேண்டாம். எதையும் சந்திக்க தயார். பாகிஸ்தான் மக்களை காத்திட பதில் தாக்குதல் நடத்த நாங்களும் தயார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பாக்., ராணுவம் இது தொடர்பாக கூறுகையில்; இந்தியா தாக்குதல் என்பது பொய். எல்லை தாண்டி இந்திய துருப்புகள் எதுவும் வரவில்லை. எல்லையில் இந்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது என கூறியுள்ளது. இதற்கிடையில் பாக்., பாதுகாப்பு துறை அமைச்சகத்துடன் பிரதமர் நவாஸ் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.தினமலர்.காம்

எல்லை கிராம மக்கள் வெளியேற்றம் .எல்லையில் இருந்து 10 கி.மீ தூரம்வரை

சண்டிகர்: இந்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். யூரி தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் ஊடுருவி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து முப்படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பஞ்சாப், காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான் எல்லையை ஒட்டி 10 கி.மீ., தூரத்தில் உள்ள கிராமத்தை வசிக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்தை நோக்கி அகற்றப்பட்டு வருகின்றனர். அங்கு எல்லை பாதுகாப்பு படையினர் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். வாகா எல்லையில், வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.தினமலர்.காம்

ராணுவ தாக்குதலுக்கு அனைத்துக்கட்சி ஆதரவு!



minnambalam,com :பாகிஸ்தான் மீதான தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அவசரமாக ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார் இந்திய பிரதமர் மோடி. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவும் மத்திய அரசிற்கு கிட்டியிருக்கிறது. காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் கடந்த 18–ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி அதற்கான தகுந்த ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா அளித்தது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாகிஸ்தானில் 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது, 38 பயங்கரவாதிகள் பலி.. இந்திய ராணுவ நடவடிக்கையில்

புதுடெல்லி, இந்திய ராணுவம் நள்ளிரவு நடத்திய பயங்கரவாதிகள் அழித்தொழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானில் 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன. உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் நுழைந்து தாக்குதல்கள் நடத்தி 18 வீரர்களை கொன்று குவித்ததை அடுத்து, இனியும் பொறுமை காத்து பலன் இல்லை என்ற நிலையில், எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி எல்லைப் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து விமானப்படை, தரைப்படையை இணைத்து நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் பாகிஸ்தான் பகுதியில், 2 கி.மீ., தொலைவுக்குள் அமைந்துள்ள பிம்பர், ஹாட்ஸ்பிரிங், கெல் மற்றும் லிபா செக்டார்களில் இந்த துல்லிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவை நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கின. அதிகாலை 4.30 மணிக்கு முடிவுக்கு வந்தன. இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்த பாகிஸ்தான் படையினர் 2 பேரும் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்து உள்ளன.  dailythanthi.com

தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்: சென்செக்ஸ் மதிப்பு மதியம் 573 புள்ளிகள் சரிவு

மும்பை, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்துள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்றிரவு தாக்குதல் நடத்தியது பற்றிய அறிவிப்பினை தொடர்ந்து இன்று மதியம் பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் மதிப்பு 573 புள்ளிகள் அளவில் சரிவை சந்தித்துள்ளது. இன்றைய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் மதிப்பு மதியத்தில் 572.89 புள்ளிகள் அல்லது 2.02 சதவீதம் என்ற அளவில் சரிந்து 27,719.92 புள்ளிகளாக உள்ளன.  ரியல் எஸ்டேட், சுகாதாரநலம், மின்சாரம் மற்றும் உலோகம் என்ற வரிசையில் அனைத்து துறைகளிலும் சென்செக்ஸ் மதிப்பு 5.05 சதவீதம் அளவிற்கு சரிவினை சந்தித்துள்ளன. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 186.90 புள்ளிகள் அல்லது 2.13 சதவீதம் அளவிற்கு சரிந்து 8,558.25 புள்ளிகளாக உள்ளன. இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் பல்வேறு நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர் என மிக குறிப்பிடத்தக்க மற்றும் நம்ப தகுந்த தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது நேற்றிரவு இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியது.  இது பங்கு வர்த்தகத்தின் அனைத்து விற்பனை நிலைகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தியது. சென்செக்சில் முன்னிலை வகிக்கும் 30 நிறுவனங்களான அதானி போர்ட்ஸ், ஐ.சி.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி, லூபின், டாடா மோட்டார்ஸ், சன் ஃபார்மா, டாடா ஸ்டீல், கெயில், எஸ்.பி.ஐ., என்.டி.பி.சி., டாக்டர் ரெட்டீஸ், லார்சன் மற்றும் டூப்ரோ மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்டவை 4.75 சதவீதம் அளவிற்கு வர்த்தகத்தில் சரிவை சந்தித்துள்ளன.  dailythanthi.com

பெங்களூரு மேயராக தமிழ் பெண் தெரிவு

பெங்களூரு மாநகராட்சியின் மேயர் பதவிக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில், நகரின் மதிப்புமிக்க 50வது மேயராக தமிழ் பெண்மணியான பத்மாவதி நேற்று தேர்வு செய்யப்பட்டார். காவிரி பிரச்சினையால் பெங்களூர் பற்றி எரிந்து கொண்டுள்ள சூழ்நிலையில், மற்றொருபக்கம் சத்தமின்றி தமிழ் பெண்மணி மேயராகி அசத்தியுள்ளார்.
2015-16ம் பருவம் மேயராக இருந்த மஞ்சுநாத்ரெட்டி பதவிக்காலம் செப்டம்பர் 10ம் தேதியுடன் முடிவடைந்தது. மேயர் தேர்தல் வாக்காளர் பட்டியல் தாமதம் ஆனதை தொடர்ந்து செப்.28ம் தேதிக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று தேர்தல் நடைபெற்றது.
காங்கிரஸ்-தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் இணைந்து தேர்தலை சந்தித்ததால் பாஜகவால் மேயர் பதவியை பிடிக்க முடியவில்லை. காங்கிரஸ் சார்பில் பத்மாவதியும், பாஜக சார்பில் லட்சுமியும் மேயர் போட்டியில் குதித்தனர்.

காமத்திபுராவில் நான் வன்புணரப்படவில்லை... பள்ளியில்தான்...!" அதிரவைக்கும் ஃபேஸ்புக் பதிவு

vikatan.com :மும்பையின் காமத்திபுரா ஆசியாவின் மிகப் பெரிய ரெட்லைட் ஏரியா. இங்கேயே பிறந்து வளர்ந்த பெண் ஒருவர் தான் இந்த சமூகத்தில் தான் சந்தித்த, சந்திக்கும் பிரச்னைகளை 'ஹியூமன்ஸ் ஆப் பாம்பே' என்ற  ஃபேஸ்புக்' பக்கத்தில் ஆதங்கமாக கொட்டியுள்ளார். அவரது பதிவு வைரல் ஆகியிருக்கிறது. இந்த பெண் சாதாரண ஆள் இல்லை. காமத்திபுராவில் பிறந்து சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற 'கேர்ள் ஆன் தி ரன்' என்ற மாநாடு வரை சென்று பெண்கள் உரிமை குறித்து பேசியவர். பெயர் குறிப்பிடப்படாத அவரது பதிவு நம்மை அதிரவும் வைக்கிறது. அதே வேளையில் சிந்திக்கவும் சொல்கிறது.

அன்புநாதன் + பன்னீரு.... துபாய் டய்ரா சிட்டியில் 1,900 கோடியில் அடுக்குமாடி வணிக வளாகம்

விகடன்.காம் : அன்புநாதன் விவகாரத்தில் அடுத்த அஸ்திரத்தை எடுத்துள்ளது அமலாக்கத் துறை. சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் கரூர் அன்புநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.4.77 கோடி ரூபாய் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அது, இப்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வீட்டில் ரெய்டு நடக்கும் அளவுக்குப் போனது. அந்தப் பணம் நத்தம் விசுவநாதனுக்குச் சொந்தமானது. விசுவநாதனின் மகன் அமர்நாத் மூலம் அன்புநாதனுக்கு வந்ததாக வருமானவரித் துறை வட்டாரம் அறிவித்து அதிர்வலைகளை உண்டாக்கியது. சோதனை, விசாரணை எனப் போய்க்கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில், வெளிநாடுகளில் பணம் பதுக்கியதாக அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறது மத்திய அமலாக்கத் துறை. அடுத்து, கைது படலம் நடக்கும் என்பதுதான் ஹாட் டாபிக்.">கன்சல்டன்ஸி டு தாய்லாந்து தீவு /> கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தில் உள்ள அன்புநாதனுக்குச் சொந்தமான குடோன் மற்றும் வீட்டில் சோதனை நடத்தியது தேர்தல் பறக்கும் படை. அப்போது, பணம் கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு வருமானவரித் துறையினர் நுழைந்து சோதனை போட்டதில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. முக்கியப் புள்ளிகள் வாங்கிக் குவித்த சொத்துக்களின் ஆவணங்கள், வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட கோடிக்கணக்கான பணப் பரிமாற்றங்கள், அந்த வீடுகளில்  பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதிவுகள் என அனைத்தையும் கைப்பற்றினார்கள். அதை ஆய்வு செய்ததில், நத்தம் விசுவநாதன், அவரது மகன் அமர்நாத், ஓ.பி.எஸ்., அவரது மகன் ரவீந்திரநாத்குமார், வைத்திலிங்கம் உள்ளிட்ட அமைச்சர்கள் அன்புநாதனுக்கு நெருக்கமாக இருந்தது அம்பலமானது.

ஜெயலலிதாவின் மெடிக்கல் ரிப்போர்ட்!

விகடன்.காம் : அப்போலோ மருத்துவமனையின் 2-வது தளத்தில் உள்ள அறை எண் 2008. ‘எமர்ஜென்சி வார்டு’. அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெய​லலிதாவுக்கு, இதயநோய் நிபுணர் டாக்டர் ஒய்.வி.சி.ரெட்டி, டாக்டர் சத்யமூர்த்தி தலைமையிலான டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. 22-ம் தேதி இரவு அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்​பட்டார். 23-ம் தேதி பகல் 1.50 மணி அளவில், அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டியும், அவரது மகள் ப்ரீத்தா ரெட்டியும் ஜெயலலிதா சிகிச்சைபெற்று வரும் அறைக்குச் சென்று, அவரது மருத்துவ அறிக்கையைப் படித்துப் பார்த்து நோய்த் தீவிரம் பற்றி சிறப்பு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினர். ஏற்கெனவே முதல்வருக்கு சிறுநீரகப் பிரச்னையுடன் மூட்டுவலிப் பிரச்னை மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்னையும் இருப்பதால், அவற்றுக்காகக் கடந்த காலங்களில் முதல்வர் எடுத்துக்​கொண்ட மருந்துகள் பற்றிய விவரங்களை கேட்டறிந்து, சிகிச்சைக்கான ஆலோசனைகளை வழங்கினர்

மாதவிடாய் நாட்களில் விடுமுறை வேண்டும்! போத்தீஸ் ,சரவணாஸ் , ஜெயச்சந்திரனில் பணிபுரியும் பெண்கள் பாவம் .....

நிலவுமொழி செந்தாமரை :  /thetimestamil.com : மாதவிடாயின் அதீத உதிரப்போக்கு ஒரு பெருங்கொடுமை மட்டுமின்றி அருவருப்பான விஷயமும் கூட. வெளியில் செல்லவும் முடியாது. திடீர் திடீரென கட்டி கட்டிய இரத்தம் வெளியேறி, உடைகளில் கறைபடிந்து எல்லோர் முன்னிலையும் நிற்க வேண்டி வரும். காலத்திற்குமான அவமானமாய் பெண்கள் இதனை கருதுகின்றனர்.
சாதரண உதிரப்போக்கு வயிற்றுவலி, கைகால் வலி என சோர்வில் துவண்டு போவார்கள். அதீத உதிரப்போக்கிற்கு வலிகளும் சோர்வும் பின்னி எடுத்துவிடும். இப்பெண்கள் மாதவிடாயின் பொழுது முடிந்த அளவு விடுமுறை எடுத்து வீட்டிலேயே இருந்துவிடுவார்கள். பயணம் செய்வதோ அல்லது பணி செய்வது மிகச் சிரமம். தொடர்ச்சியாக பேட் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். உயர்தர அலுவலங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஓரளவு சாத்தியமென்றாலும், உடல் உழைப்பினை செலுத்துபவர்களுக்கு இது மிகக் கொடுமையான விஷயமும் கூட. (உ.ம்: சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளில் பணிபுரியும் பெண்கள்).
ஒருமுறை, மூன்றாவது நாள் தானே என்னும் அலட்சியத்துடன், விஷ்பர் எக்ஸ்ட்ரா லாங் புது பேட் உதவியுடன் செங்கல்பட்டிலிருந்து திருவள்ளூர் இரயிலில் கிளம்பினேன்.

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? ஜெயமோகனுக்கு சூரிய ரத்தினாவின் சாட்டை அடி

Suriya Rethnna :  எழுத்தாளர் ஜெயமோகன்,
1.அண்மையில், ‘பொய்யெழுத்தின் திரை’ என்ற தலைப்பில் என் ‘நான்’ சிறுகதைத் தொகுப்பு குறித்த விமர்சனத்தைப் படிக்க நேர்ந்தது. எனக்கு முதலில் தோன்றிய எண்ணம்,“Is this guy worth my time?”ஆனால் என் கவனத்தை ஈர்த்து, என்னை எழுதத் தூண்டிய விஷயம் - 1.மூவரும் சிங்கப்பூர் வளர்த்தெடுத்த பெண் எழுத்தாளர்கள். அண்மைய கால நிரந்தரவாசிகள் அல்ல. ஏன்? 2.எழுத்துலகில் தடம் பதிப்பதற்கு ஏற்கனவே பெண்கள் தடுமாறும்போது, அவர்களின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் ஏன் இந்த கதகளி?
2. முதல் விஷயம் - உங்களுடைய விமர்சனம் ‘நான்’ நூலின் பெயரையும் என் பெயரையும் சேதப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. அதில் என்னுடைய அனுமதியின்றி என்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்த உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது? அதில் விமர்சிக்கப்பட்ட இன்னொரு பெண் எழுத்தாளரின் புகைப்படம் போடப்படவில்லை. இதிலிருந்து உங்களின் வக்கிர நோக்கம் என் புகைப்படத்தோடு என் பெயரைச் சேதப்படுத்துவதே ஆகும் என்பது தெளிவாகிறது.

விழுப்புரம் . மருந்து தெளித்த வெண்டைக்காய்: இரு மாணவர்கள் பலி!

மின்னம்பலம்,காம் ; பயிர்களுக்கு இடப்படும் ரசாயன உரங்களும் பூச்சி கொல்லி மருந்துகளும் விஷத்தன்மை கொண்டன. இந்த பூச்சி கொல்லிகள் பயிர்களில் சிறு அளவில் இருந்தாலே நமக்கு புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகள் வர வாய்ப்புகள் அதிகம். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் தனியார் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. அந்த பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த குறிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவருடைய மகன் அய்யனார் (8), அம்மன்கொல்லைமேட்டை சேர்ந்த அய்யனார் என்பவரின் மகன் ராஜதுரை (11) ஆகிய இரண்டு பேரும் கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.
அதை தொடர்ந்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது. பிரேத பரிசோதனையில் இருவரும் வி‌ஷம் காரணமாக இறந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் பிச்சையெடுக்கும் ஆந்திர விவசாயிகள் ! புலுடா நாயுடுவின் பொருளாதார வளர்ச்சி பாரீர்



மின்னம்பலம்.காம் : தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாதங்கள் பிழைப்புக்காக தமிழ்நாட்டுக்குப் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஆந்திரக் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுபோன்றுவரும் மக்கள் வாழும் இடங்களைப் பார்த்தால்… நெஞ்சம் பதறும். ஆம்… அவர்களுடைய கூடாரங்கள் ஒரு பழைய புடவையாலோ அல்லது பிளாஸ்டிக் ஷீட்டுகளாலோ மட்டுமே மூடப்பட்டிருக்கும். அவர்களுடைய சைக்கிள் ரிக்‌ஷாவில் இருக்கும் உலோக பெட்டியில், 19ஆம் நூற்றாண்டில் இந்துக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த, இப்போதும் இருக்கிற ஷீரடி சாய்பாபாவின் படங்கள் ஒட்டப்பட்டிருக்கும்.

விற்பனையை நிறுத்திய ஆடி நிறுவனம்!



மின்னம்பலம்.காம் : ஜெர்மனியை சேர்ந்த பிரபல கார் தரியாரிப்பு நிறுவனமான வோல்க்ஸ்வாகன், ஆடி, பென்ட்லீ, புகாட்டி, ஃபோர்ஸ், லம்போர்கினி என பல பிராண்டுகளில் கார்களை தயாரித்து வருகிறது.
இந்தியாவில் Q5 மாடல் கார்களின் விற்பனையை ஆடி நிறுவனம் நிறுத்தியுள்ளது. ஆடி Q5 கார்களில் புகை அளவு அதிகளவில் இருப்பதை ’இந்திய ஆட்டோமேட்டிவ் ஆராய்ச்சி கூட்டமைப்பு’ (ARAI) கண்டறிந்ததையடுத்து ஆடி நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
Q5 கார்களுக்குக்கான சோதனையை ARAI மேற்கொண்ட போது, இந்த கார்களில் நைட்ரோஜென் ஆக்ஸைடின் அளவு அதிகளவில் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆடி, இந்தியாவில் தனது Q5 கார்களின் விற்பனையை நிறுத்தியுள்ளது.

தமிழிசை, ராஜாவை நோக்கி பெற்றோல் குண்டு வீச முயற்சி ? எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் ....


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.  இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே பாஜகவினரும், இந்து முன்னணி அமைப்பினர் ஏராளமானோர் திரண்டனர். தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். அகில இந்திய பாரதிய ஜனதா செயலாளர் எச்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, உள்பட 700 பேரை கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் வேப்பேரி, நுங்கம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபம், சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

நக்கீரன்டா .... ஜனநாயகத்தின் உண்மையான நாலாம் தூண் நக்கீரன் மட்டும்தான்! வாழ்த்துக்கள்

Image may contain: 1 person , text
புழலில் வழக்கமாக மாலை 5 மணியிலிருந்து 5:45 மணிக்குள்ளாகத்தான் கைதிகளை அறைக்குள் வைத்து பூட்டுவார்கள். ஆனால், வழக்கத்துக்கு மாறாக ராம்குமார் படுகொலை செய்யப்பட்ட அன்று மாலை 3: 45 மணிக்குள்ளேயே சிறைக்கைதிகளை அவரவர்களின் அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு ராம்குமாரின் படுகொலையை நிகழ்த்தியிருக்கிறது காவல்துறை. உண்மையில் ராம்குமார் சிறையிலேயே மரணமடைந்துவிட்டார். ஆனால், அவரது உயிரைக்காப்பாற்றுவதுபோல் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் கொண்டுவந்து நாடகமாடியிருக்கிறார்கள், சிறைமருத்துவர்களும் போலீஸும் என்ற பல்வேறு தகவல்களுடன், “எங்களை பூட்டிட்டு ராம்குமாரை முடிச்சுட்டாங்க” புழல் சிறை கைதியின் வாக்குமூலத்தை துணிச்சலோடு நேற்று வெளியான நக்கீரனில் அம்பலப்படுத்திய மனோவுக்கு Mano Soundar Mano வாழ்த்துகள் <3 span=""> ஏற்கனவே அப்படித்தான், ‘தண்ணீர் குடிக்க கிச்சனுக்குப்போன ராம்குமார் சிறையில் தற்கொலை!’ என்றே பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்தபோது, ராம்குமார் கிச்சனுக்குப் போகவேண்டுமென்றால் எதையெல்லாம் கடந்து செல்லவேண்டும் என்று புழல் சிறையையே கண்முன் நிறுத்தி, ‘சிறைக்கொலை! முடிக்கப்பட்ட ராம்குமார்! மூடப்பட்ட ஸ்வாதி ஃபைல்’ என்று தில்லாக அட்டைப்பட செய்தி வெளியிட்டது நக்கீரன்தான்.

புதன், 28 செப்டம்பர், 2016

ராஜேஷ் லக்கானி : பொதுமக்களுக்கு வீடு வீடாக 5–ந்தேதி முதல் பூத் சிலிப் வழங்கப்படும்.. வீடு வீடாக ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டீங்களா?

rajesh lakhoni(N)சென்னை, பொதுமக்களுக்கு வீடுவீடாக 5–ந்தேதி முதல் பூத் சிலிப் வழங்கப்படும் என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,< தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்காக 300 கம்பெனி துணை ராணுவத்தினர் வருகிறார்கள். 16 ரெயில்களில் இவர்கள் சென்னை வருவார்கள்.தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி 7-ந் தேதிக்கு பிறகு தமிழகம் வர உள்ளார். சட்டசபை தேர்தலுக்காக மொத்தம் 66,001 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. வாக்குப்பதிவுக்காக ஒரு லட்சத்து 52 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தற்போது கைவசம் உள்ளன.மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர் பெயர்கள் புகைப்படத்துடன் அகர வரிசைப்படி இடம் பெறும்.

என்ஜின் செயலிழந்ததால் எத்திஹாட் விமானம் அவசர தரையிறக்கம்

அபுதாபியில் இருந்து நேற்று சிட்னி நோக்கி எத்திஹாட் ஏர்லைன்ஸ்
நிறுவனத்தின் போயிங் 777 விமானம் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் உள்ள இரண்டு என்ஜின்களில் ஒன்று செயலிழந்துவிட்டது. இதனை கண்டறிந்த விமானி, உடனடியாக அபுதாபியை நோக்கி விமானத்தை திருப்பினார் மேலும் அபுதாபி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது. தரையிறங்க அனுமதி கிடைத்ததும், குறிப்பிட்ட ஓடுபாதையில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். இத்தகவலை எத்திஹாட் நிறுவன செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.

திமுகவில் கம்யுனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் 300 க்கு மேற்பட்டோர் இணைந்தனர்

இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து விலகிய 300 –க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து விலகிய ஏராளமான நிர்வாகிகள் இன்று (28-09-2016) திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். சென்னை, அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. எஸ்.ஆர். சிவலிங்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். தினமணி.காம்

தமிழகத்தில் ஹிந்தி ஆசிரியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை.

தமிழகத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தமிழ் கட்டாய பாடம் ஆனதால், ஹிந்தி ஆசிரியர்களுக்கான பணி, பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.<>பிறமொழி பள்ளிகள் தமிழகத்தில், உள்ள பள்ளிகள் அனைத்திலும், தமிழை முதல் மொழிப்பாடமாக கற்பிக்க, தமிழ்நாடு தமிழ் கற்பிக்கும் சட்டம், 2006ல் கொண்டு வரப்பட்டது.
இதன்படி, பிறமொழி பள்ளிகளிலும், தமிழ் கட்டாயமானது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தமிழ் கற்பிக்கும் சட்டம், 2015ல், அமலானது.கடந்த கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கு, தமிழ் பாடம் கட்டாயம் ஆனது. நடப்பு கல்வி ஆண்டில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு, தமிழ் பாடம் கட்டாயம் ஆகியுள்ளது.  தமிழகத்தில் உள்ள வடநாட்டு தொழிலாளர்களுக்கு ஹிந்தி மொழியில் கல்வி சேவை வழங்கலாமே?

திமுக வேட்பாளர் முதல் பட்டியல்.. காங்கிரஸ் அதிருப்தி .. வாசன் பூச்சாண்டி காட்டி காங்கிரசை ...

திருச்சி, சேலம், தூத்துக்குடி மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. குறைந்த இடங்களே ஒதுக்கப்பட்டதால் காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 17, 19 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. மாநகராட்சி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக கடந்த 26-ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து, முதல் கட்டமாக திருச்சி. சேலம், தூத்துக்குடி மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. திருச்சி மாநகராட்சியில் திமுக 62 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன.

வெள்ளிக்கு 50 கோடி டீல்… தங்கத்துக்கு தகரடப்பா!



vikatan,com : ரியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றது 6 வீரர்கள். அவர்களால் எந்த பதக்கமும் வெல்ல முடியவில்லை. ஆனால், பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன். ஆங்கில ஊடகங்கள் முதற் கொண்டு அந்த நேரத்தில் மாரியப்பன் மாரியப்பன் என ஓயாமல் நீட்டி முழங்கிக் கொண்டிருந்தன. ரியோ ஒலிம்பிக்கில் குட்டி குட்டி நாடுகள் கூட பீல்டு அண்டு டிராக் ஈவன்ட்டுகளில் அதாவது உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம் போன்றவற்றில் தங்கப் பதக்கம் வெல்வதை காண முடிந்தது. குட்டி நாடு பிஜீ, காலம் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த பிரிட்டனைச் சாத்து சாத்தென்று சாத்தி ரக்பி செவன்சில் தங்கத்தைக் கைப்பற்றி ஆர்ப்பரித்தது.

அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதம்... டொனால்ட் ட்ரம் Vs ஹிலாரி கிளிண்டன் ..

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களான
டொனால்டு ட்ரம்ப், ஹிலரி கிளிண்டன் ஆகியோர் பங்கேற்ற முதல் விவாதம் நியூயார்க் நகரில் நடைபெற்றது. அமெரிக்க பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சட்டம்-ஒழுங்கு, ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் விவகாரம், டிரம்ப்பின் வருமான வரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவேட்பாளர்களும் காரசாரமான கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். விவாதத்தின் முடிவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 67 சதவீத வாக்குகள் பெற்று ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

திருச்சி சிவாவின் மகன் மைத்துனரின் காரை எரிக்க முயன்றாரா? புகார் பதிவு.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனுக்கும், மருமகனுக்கு இடையே உள்ள குடும்ப சண்டை தற்போது காவல் நிலையம் வரை சென்றுள்ளது. சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் கண்ணத்தில் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி சிவாவும், சசிகலா புஷ்பாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பல்வேறு சங்கடங்களை கொடுத்தது அவருக்கு. இந்நிலையில் அவருடைய குடும்ப சண்டையும் வீதிக்கு வந்துள்ளது. திருச்சி சிவாவின் மகன் சூரியா தனது காரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதாக அவரது மருமகன் முத்துக்குமார் சூரியா மீது தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வெப்துனியா.காம்

கோவை பேராசிரியை கொலை... குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

கோவை:>பேராசிரியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், காரமடை அடுத்த ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ரம்யா, 24; கிணத்துக்கடவு தனியார் கல்லுாரியில், உதவி பேராசிரியையாக பணிபுரிந்தார். 2014, நவ., 3ல், கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய போது, பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி ஒருவன், வீடு புகுந்து, ரம்யா, தாய் மாலதி ஆகியோரை கட்டையால் தாக்கியதில், இருவரும் மயங்கினர். நகைகளை பறித்து, ரம்யாவை பாலியல் பலாத்காரம் செய்ததில் அவர் இறந்தார். போலீசார் விசாரித்து, பாப்பநாயக்கன் பாளையத்தில், கட்டட வேலை பார்த்து வந்த, திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ஆயிரத்தேரியை சேர்ந்த மகேஷ், 30, என்பவனை, 2015 ஜனவரி மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.. இவன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி என, கோவை மகளிர் கோர்ட் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார் 

காவிரியில் 3 நாட்களுக்கு 6,000 கன அடிநீரை திறக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு


SC orders Karnataka to release 6,000 cusecs of Cauvery river water
காவிரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது. காவிரியில் தமிழகத்துக்கான நீரை கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 20-ந் தேதியன்று செப். 27-ந் தேதி வரை 6,000 கன அடிநீரை திறந்துவிட உத்தரவிட்டது.
ஆனால் கர்நாடக அரசு இந்த உத்தரவை மதிக்கவில்லை. கர்நாடகா சட்டசபையை கூட்டி காவிரி நீர் குடிநீருக்குத்தான் என தீர்மானம் போட்டது. மேலும் உச்சநீதிமன்றத்திலும் காவிரியில் தற்போது தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது; டிசம்பரில் சேர்த்து தருகிறோம் என ஒரு மனுவை கர்நாடகா தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரிக்க கூடாது தமிழக அரசு தரப்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே இன்று காவிரி நீர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடகா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பாடலாசிரியர் அண்ணாமலை மாரடைப்பால் மரணம்

பிரபல திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை(வயது 50) மாரடைப்பால் நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், வேலாயுதம், சகுனி, படங்களில் பனாரஸ் பட்டுகட்டி, என் உச்சி மண்டையில சுர்ருங்குது, மஞ்சனத்தி நாட்டுக்கட்ட மைய வச்சி மயக்கிபுட்ட, போட்டது பத்தல மாப்ள என்று நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார்.  ஹரிதாஸ் படத்தில் இவர் எழுதிய, அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே என்று பாடல் இவருக்கு நல்ல பெயரை தந்தது.  நிறைய பக்திப்பாடல்களையும் எழுதியுள்ளார்.  காப்பிராயன் என்ற பெயரிலும் கவிதைகள் எழுதி வந்தார்.
மரணம் அடைந்தார்.

உலகிலேயே கருணை மிக்கவர்கள் பாகிஸ்தானிகள் என நான் நம்புவதேன்? ஹர்ஷ் மந்தேர்

Harsh-Mander-1வினவு.காம் : பிரிவினையின் போது நிலவிய கொந்தளிப்பான சூழலின் விளைவாக எனது தாய், அவளது பிறந்த ஊரான ராவல்பிண்டியை விட்டு வெளியேற நேர்ந்தது. அதன் பின் அவள் அங்கே திரும்பவே இல்லை. அவளுக்கு 75 வயதான போது – ஒரு வேளை சாத்தியப்பட்டால் – அவளது பிறந்த ஊருக்கும் அங்குள்ள வீட்டுக்கும் அழைத்துச் செல்வதே மிகச் சிறந்த பரிசாக இருக்கும் எனக் கருதினேன்.
எனது உத்தேசமான திட்டத்தை பாகிஸ்தானில் உள்ள நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன்.  அவர்கள் உடனே அந்த யோசனையை உற்சாகமாக வரவேற்றனர். “அவரது கடவுச் சீட்டை மட்டும் வாங்கி விடுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றனர். எனது பெற்றோர் மற்றும் மற்ற குடும்பத்தினருக்காக கடவுச் சீட்டு கோரி விண்ணப்பித்தேன்.  இந்த நடைமுறைகளெல்லாம் சுலபமாக முடிந்தது ஆச்சரியம்தான்.  முன்பதிவு செய்து எங்களது விமான பயணத்தைத் துவங்கினோம்.
அன்பான வரவேற்பு

சார்க் மாநாட்டை புறக்கணிக்கும் இந்தியா, ஆப்கான்ச்தான் , பங்காளதேசம், பூட்டான் ...

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டை இந்தியா, பங்களாதேஷ், ஆப்கான், பூட்டான் ஆகிய நாடுகள் புறக்கணிக்க இருக்கின்றன. பாகிஸ்தானுடன் செய்துகொண்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க முடிவெடுத்திருக்கும் இந்தியா, சார்க் மாநாட்டைப் புறக்கணிப்பதன்மூலம் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு தன் எதிர்ப்பை பதிவுசெய்ய முடிவு செய்துள்ளது. காஷ்மீரின் எல்லைப் பகுதி மாவட்டமான பாரமுல்லாவில் அமைந்திருக்கும் பரந்து விரிந்த ராணுவ முகாமில் சில நட்களுக்குமுன் அதிகாலை 4 மணியளவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.

ராம்குமார் ! போலீசின் பக்கா பிளான் மர்டர் ... புழல் கைதிகள் வாக்குமூலம்

நக்கீரன,இன்  ; இது தற்கொலை அல்ல என்று ஸ்வாதி கொலை வழக்கு சிறைக்கைதி
ராம்குமாரின் மர்ம மரணம் குறித்து சட்ட வல்லுநர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அடுக்கும் காரணங்களை நக்கீரன் தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ""சிறையி லிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுவரும் வழியில் ராம்குமார் இறந்தார் என்பது பொய். சிறையிலேயே இறந்துவிட்டார்''’என்று நம்மிடம் பகீர் வாக்குமூலம் கொடுக்கிறார் புழல் சிறைக் கைதி ஒருவர்.
ஸ்வாதி கொலையின் போது கிட்டத்தட்ட 2000-க்கும் மேற்பட்டோர் கைது செய் யப்பட்டதால் புழல் சிறை நிரம்பி வழிந்தது. ராம் குமாரால்தானே கைது செய்யப்பட்டோம் என்று கோபத்தில் இருந்த கைதி கள்கூட அவனை சிறையில் பார்த்ததும் மனசை மாற் றிக்கொண்டார்கள். அதிர்ந்து கூட பேசாத ராம்குமார் மீது எங்களுக்கு பரிதாபம்தான் ஏற்பட்டது.

சர்கரையின் அளவு 804? இருக்கையில் மயங்கிச் சாய்ந்திருந்த அவரைப் பார்த்து சசிகலா அலறிவிட்டார்.

தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவரது ஆட்சியின்கீழ் வாழும் சராசரி மக்களுக்கும் தெரிய வேண்டும் என்பதால் போயஸ் கார்டன் முதல் அப்பல்லோ மருத்துவமனை வரை நடந்தவற்றை அறிந்த முக்கிய பிரமுகர்களிடம் பேசினோம். பெயர் வெளியிட வேண்டாம் என வலியுறுத்திச் சொன்னவர்கள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு இது.;22-ந்தேதி வியாழன் மாலை ஏழுமணிக்கு தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் அவசர அவசரமாக போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டார். அரசு ஆலோசகர் ஷீலாபாலகிருஷ்ணன் முன்னிலையில் காவிரி பிரச்சினை தொடர்பாகவும் சசிகலா புஷ்பா விவகாரத்தையும் ஜெ. பேசிக் கொண்டிருக்கும் போதே, நெஞ்சு எரிவதாகவும் வயிறு வலிப்ப தாகவும் சசிகலாவை கூப்பிட்டு சொன்னார். " தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவரது ஆட்சியின்கீழ் வாழும் சராசரி மக்களுக்கும் தெரிய வேண்டும் என்பதால் போயஸ் கார்டன் முதல் அப்பல்லோ மருத்துவமனை வரை நடந்தவற்றை அறிந்த முக்கிய பிரமுகர்களிடம் பேசினோம். பெயர் வெளியிட வேண்டாம் என வலியுறுத்திச் சொன்னவர்கள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு இது. 22-ந்தேதி வியாழன் மாலை ஏழுமணிக்கு தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் அவசர அவசரமாக போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டார். அரசு ஆலோசகர் ஷீலாபாலகிருஷ்ணன் முன்னிலையில் காவிரி பிரச்சினை தொடர்பாகவும் சசிகலா புஷ்பா விவகாரத்தையும் ஜெ. பேசிக் கொண்டிருக்கும் போதே, நெஞ்சு எரிவதாகவும் வயிறு வலிப்ப தாகவும் சசிகலாவை கூப்பிட்டு சொன்னார். ""அக்கா நீங்க இரண்டு நாளாக வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளை வேண்டாம் என விட்டு விட்டீர்கள்'' என சசிகலா சொல்லிவிட்டு தண்ணீரை எடுத்து கொண்டு வந்து கொடுத்தார். உடனடியாக கார்டனில் இருக்கும் சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமாருக்கு தகவல் பறந்தது.

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

BBC :அப்போலோவில் காவேரி விவகாரம் பற்றி முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை!

உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்
அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்திற்கு வினாடிக்கு 6,000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டுமென கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் உத்தரவு குறித்தும், இந்த விவகாரத்தில் நீடிக்கும் சிக்கலைப் போக்க கர்நாடகா மற்றும் தமிழக அரசின் முதல்வர்கள், மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் கூட்டம் நடத்த வேண்டுமெனக் கூறப்பட்டிருப்பது குறித்தும் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டதாக செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, அங்கிருந்தபடியே காவிரி விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ( கோப்புப் படம்) இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காவிரி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள உத்தரவு குறித்து, மாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணிவரை, அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள தனது அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்று கூறப்பட்டுள்ளது.