நக்கீரன் :ஜெயலலிதாவின்
மருத்துவராக பணியாற்றிய டாக்டர் சிவகுமார், ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனில் தெரி வித்த தகவல்கள், ஜெ.வின் மரண மர்மம் குறித்த சந்தே கங்கள் சொந்தக் கட்சியினரிடமே அதிகரித்துள்ளன. சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனத்திற்கு மூன்று வாரிசுகள். டாக்டர் வெங்கடேஷ், அனுராதா, பிரபா ஆகிய சுந்தரவதனத்தின் வாரிசுகளில் பிரபாவை திருமணம் செய்தவர்தான் டாக்டர் சிவகுமார்.
அவர் கடந்த வாரம் தொலைக்காட்சியில் பேசினார். ""என் னோட திருமணம் 1991-ல் நடந்தது. எங்கள் குடும்பத் தில் அவர்கள் தலைமையில் நடந்த முதல் திருமணம் எனக்கும் பிரபாவுக்கும் நடந்த திருமணம்தான். ஜெ. மதுரையில் தங்கியிருந்தபோது ஜெ.வுக்கு கையில் சின்ன காயம் ஏற்பட்டது. நான் போய் பார்த்து ட்ரீட்மெண்ட் கொடுத்தவுடன் அந்த காயம் ஆறிவிட்டது. 2000ஆம் ஆண்டு முதல் அவர் மறைந்த 2016 வரை நான்தான் ஜெ.வின் டாக்டர்'' என்கிறார் டாக்டர் சிவகுமார். ஜெயலலிதா ஏதாவது புரொசிஜரில் இருந்தாங்கன்னா அவங்க கையை நான் பிடிச்சுக்குவேன். என் கையின் ஸ்பரிசம் அவங்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். கடைசியில போயஸ் கார்டனிலிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு போகும் வரை என் கையை இறுக்க பிடிச்சிக்கிட்டிருந்தாங்க. அவங்களுக்கு சுயநினைவு வரும் வரை என் கையை விடவில்லை'' என்கிறார்.











































