மதுரை அட்சயா காப்பகத்தில் தங்கியிருப்போரில் 221 பேரை உடனடியாக விடுவிக்க காப்பக நிர்வாகிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அட்சயா காப்பக முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மதுரை மாவட்டத் தலைவர் முத்துராணி உயர்
நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் வி.
ராமசுப்பிரமணியன், வி.எம். வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன்
வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் ஆணையர் டி. கீதா, தனது 4-வது
ஆய்வு அறிக்கை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், ‘ரயிலை விட்டு இறங்கியவர்கள், ரயில் நிலையம், பஸ்
நிலையத்தில் நின்றிருந்தவர்களை காப்பகத்துக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த
நடவடிக்கை ஆள் கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறைப்பிடித்தல் போன்றதாகும்.
இது தொடர்பாக காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று
குறிப்பிடப்பட்டிருந்தது.































.jpg)















