சனி, 28 செப்டம்பர், 2013

வாய்ப்பில்லாமல் வீட்டில் இருக்கும் ஹீரோகூட 40 லட்சம் கேட்கிறான் ! டைரக்டர் புலம்பல்

சென்னை:பட வாய்ப்பில்லாமல் வீட்டில் சும்மா இருக்கும் ஹீரோ கூட ரூ. 40
சம்பளம் கேட்டு பயமுறுத்துகிறார் என்றார் இயக்குனர் பாபு தூயவன்.ரஜினி நடித்த ‘தாய் மீது சத்தியம், ‘அன்புக்கு நான் அடிமை, ‘பொல்லாதவன் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் தூயவன். இவரது மகன் பாபு தூயவன் தற்போது ‘கதம் கதம்‘ என்ற படம் இயக்குகிறார். அவர் கூறியதாவது:தமிழ்நாடு திரைப்பட கல்லூரியில் படித்தேன். என் தந்தை பெயரை சொன்னால் ஹீரோக்கள் கதை கேட்பார்கள். ஆனால் அவர் பெயரை பயன்படுத்தாமல் ஹீரோக்களுக்கு கதை சொல்ல முயன்றேன். சிலர் கேட்டனர். சிலர் கேட்கவில்லை. நடுத்தர மார்க்கெட் உள்ள ஹீரோக்களிடம் கதை சொல்லச் சென்றபோது அவர்கள் ஸ்கிரிப்ட் பற்றி கேள்வி எழுப்பியதுடன் அதிக பட்ஜெட்டில்  படம் எடுக்க வேண்டும் என்றனர். அதைக்கேட்டு ஷாக் ஆனேன். ஒரு சில ஹீரோக்கள் படமே இல்லாமல் வீட்டில் சும்மாவே இருக்கிறார்கள். அவர்களிடம் கதை சொல்லச் சென்றபோது ரூ. 40 லட்சம் சம்பளம் கேட்டார்கள். இது இன்னும் ஷாக்காக இருந்தது. இறுதியில் இப்படத்தில் நடிக்க நந்தா கால்ஷீட் தந்தார் - tamilmurasu.org

ராகுல்: முட்டாள் தனமானது ! பிரதமரை ராகுல் விமர்சனம் ! எதிர்கட்சிகள் கூட இப்படி பிரதமரை அவமான படுத்தியதில்லை

அவசர சட்டம் குறித்து ராகுல் விமர்சனம்: பிரதமர் பதவி விலக பா.ஜனதா வலியுறுத்தல்" குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதில் இருந்து பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக இந்த சட்டம் காத்திருக்கு நிலையில், இந்த சட்டம் முட்டாள்தனமானது என்றும், உடனே கிழித்து எறிய வேண்டும் என்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக விமர்சனம் செய்தார். பிரதமர் தலைமையிலான அமைச்சரவை முடிவினை எதிர்த்து ராகுல் காந்தி இவ்வாறு கூறியது, பிரதமரை அவமானப்படுத்தும் செயலாகும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமரின் முடிவு முட்டாள்தனம் என்று ராகுல் காந்தி தைரியமாக கூறியிருக்கிறார். இவ்வாறு ராகுல் விமர்சித்தது படு மோசமானது. எதிர்க்கட்சிகள் கூட இப்படி விமர்சித்தது இல்லை.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரழந்தார்

10 மணி நேரமாக போராடி மீட்கப்பட்ட சிறுமி தேவி
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

10 மணி நேர போராட்டத்திற்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே  புலவன்பாடி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர்,  தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளார்.  அதில் தண்ணீர் கிடைக்காததால், சாக்குப் பை கொண்டு அந்த கிணற்றை மூடி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவரது நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தேவி, ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதையடுத்து சிறுமி தேவியை மீட்கும் பணி தீவிரமாக  நடைபெற்றுவந்தது.  இந்த நிலையில் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமி தேவி பத்திரமாக மீட்கப்பட்டார்.

இளையராஜா கமல் ரஜினி போன்றோர் சத்தியமாக ஜெயலலிதா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவில்லை நம்புங்க சார் !

சினிமா நூற்றாண்டு விழாவில், ரஜினி, கமல், இளையராஜா, எஸ்.எஸ்.ஆர்.
போன்ற மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கவில்லை. அவர்கள் முன்வரிசையில் சென்று அமர்ந்த பின், அவர்களை இருந்த இடத்திலிருந்து எழுப்பி, பின் வரிசையில் அமரச் செய்த அதிமுக அரசு ! நல்ல காலம் இளையராஜா கமல் ரஜினி போன்றவர்கள் எல்லாம் அம்மாவின் காலடியில் விழுந்து வணங்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டார்கள்

தமிழ்நாட்டை சேர்ந்த சீனிவாசன் அமெரிக்காவின் 2வது உயரிய கோர்ட்டில் நீதிபதியாக பொறுப்பேற்றார்

 Born Padmanabhan Srikanth Srinivasan[3] in Chandigarh, India, Srinivasan's father hailed from Mela Thiruvenkatanathapuram, an Indian village near Tirunelveli-Tamil Nadu. His family, including two younger sisters, migrated in the late 1960s to Lawrence, Kansas.[
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீதிபதி சீனிவாசன், அமெரிக்காவின் 2வது உயரிய நீதிமன்றமான கொலம்பியா சர்க்யூட் அப்பீல் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இந்திய அமெரிக்கர் ஒருவர், அதிலும் தெற்காசிய அமெரிக்கர் ஒருவர் இந்தப் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.  தமிழ்நாட்டில் திருவேங்கட நாதபுரம், திருநெல்வேலியில் இந்த ஊர் உள்ளது ,  இந்தியர் சீனிவாசன் அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அடுத்து 2வது உயரிய நீதிமன்றம் கொலம்பியா சர்க்யூட் அப்பீல் நீதிமன்றம் என்பதால் சீனிவாசன் இந்தப் பதவிக்கு வந்திருப்பது இந்தியர்களைப் பெருமைப்படுத்துவதாக அமைந்துள்ளது.  46 வயதாகும் இவரது பெற்றோர் 70களில் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தனர். சீனீவாசனுக்கு நீதிபதி சான்ட்ரா டே ஓ கானர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவரிடம் முன்பு கிளர்க் ஆக பணிபுரிந்தவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது. சீனிவாசன் பதவியேற்பில் பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர் சரண் கெளரும் கலந்து கொண்டார். கடந்த மே மாதம்தான் சீனிவாசன் நியமனத்தை அமெரிக்க செனட் சபை 97-0 என்ற அபரிமிதமான ஆதரவுடன் அங்கீகரித்தது என்பது நினைவிருக்கலாம். முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 11ம் தேதியே சீனிவாசனை இப்பதவிக்கு அதிபர் ஒபாமா நியமித்தார். ஆனால் கடந்த ஜனவரி 2ம் தேதி அமெரிக்க செனட் சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதால் நியமனம் குறித்த வரைவு அதிபருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து ஜனவரி 3ம் தேதி மீண்டும்இந்த வரைவை ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார் ஒபாமா
tamil.oneindia.in/

தமிழ்த்திரையின் முழுமையான முதல் ஹீரோ- பி.யூ.சின்னப்பா

பாட்டு, சண்டை எனப் பல திறமைகள் கொண்டு நாயகனாகத் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்தவர் பி.யூ.சின்னப்பா. எம்.ஜி.ஆர்-சிவாஜியில் தொடங்கி இன்று விஜய்-அஜீத் வரை தொடரும் ரசிகர்களின் போட்டி மனப்பான்மை அப்போதே எம்.கே.தியாகராஜபாகவதர்-பி.யூ.சின்னப்பா ரசிகர்களுக்கிடையே உருவாகி, நேரடி மோதல் வரை நீண்டது. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பி.யூ.சின்னப்பா. உலக நாதப்பிள்ளை, மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக சின்னப்பா 1916 மே 5ந் தேதி பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பாவின் தந்தை நாடக நடிகராக இருந்ததால் சின்னப்பாவும் 5-ம் வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார். தனது அப்பா பாடிய பாடல்களை அவரும் பாடுவது வழக்கம். ஊரில் பஜனைப்பாடல்கள் பாடுவதற்கும் சின்னப்பாவைத்தான் அழைப்பார்கள். பள்ளிப்படிப்பு என்பது 4ஆம் வகுப்பு வரைதான்.

வைக்கோலால் மூடபட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் சிறுமி ! மீட்பு பணி நடக்கிறதாம் ! மரணதண்டனையை இவங்களுக்கும் கொடுக்க வேண்டும்

300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது சிறுமி: மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தில் சங்கர் என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்டு இருந்தது. ஆழ்துளைக் கிணறு தெரியாமல் இருக்க வைக்கோல், செடிகளை போட்டு மூடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் வீட்டின் அருகே வயலில் வேலைபார்த்த தாயை பார்க்க 4 வயதான சிறுமி தேவி நடந்து சென்றுள்ளார். ஆழ்துளைக் கிணறை அறியாத சிறுமி செடிகளை மிதித்ததும் அதில் தவறி விழுந்து விட்டாள்.
இதனை அறிந்த ஊர் கிராம மக்கள் சிறுமியை ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சுமார் 1 அடி விட்டம் உள்ள போரில் சிக்கியுள்ள சிறுமியை மீட்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
சிறுமி விழுந்த கிணறு அருகே பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மற்றொரு பள்ளம் தோண்டி சிறுமியை மீட்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

JPC சாக்கோ மீது கலைஞர் அதிருப்தி ! அவசரமாக அறிக்கையை ஏன் வெளியிடவேண்டும் ?

சென்னை: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் (ஜேபிசி) கூட்டத்தை அவசரமாக கூட்டி வரைவு அறிக்கையை வெளியிட்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கையின் முடிவுகளுக்கும், துறையிலே உள்ள ஆவணங்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. அதுமட்டுமல்லாது கூட்டுக்குழு தலைவர் உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதார் என்றார். மேலும் இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் சாக்கோவுக்கு திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளா
tamil.oneindia.in

ஆயத்த ஆடை தொழிலாளர்கள் – இளமையில் முதுமை, மரணம் ஏன்?

தொழிலாளர் பற்றாக்குறைஆயத்த ஆடைகள் – ஒப்பந்தப் பணிகளும் தொழிலாளர் பற்றாக்குறையும் – 3 மன்மோகன் மற்றும் சிதம்பரம் கோஷ்டியின் தாசானு தாசர்கள் முந்தைய கட்டுரைக்கு பின்வரும் தொனியில் பின்னூட்டத்தை தயாரித்திருப்பார்கள்.
//இந்த முதலாளித்துவத்தால்தான் மக்கள் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிருக்கிறது. ஆகவேதான் இப்போது எல்லா தொழிலிலும் கடும் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. //
எனவே தொழிலாளர் பற்றாக்குறை பற்றியும் பேசுவது இங்கே அவசியமாகிறது. தொழிலாளர் பற்றாக்குறை பல காரணங்களை உள்ளடக்கியது, அதற்கான காரணங்களில் இப்போதிருக்கும் உற்பத்தி முறையும் ஒன்று.
திருப்பூர் பொருளாதாரம் ஆட்டம் காணத்துவங்கிய 2010-ம் ஆண்டில் வெளியான ஃபிரண்ட்லைன் இதழின் கட்டுரையொன்றில் இந்தியாவில் அதிகம் தற்கொலைகள் நிகழும் நகரமாக திருப்பூர் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. அந்த தகவல் எனக்கு தெரிந்த பல நிறுவன அதிபர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ஒரேயொருவர் மட்டும் அந்த கட்டுரையின் நகலை கையில் வைத்துக்கொண்டு பழைய தினமலர் நாளிதழ்களில் இருந்த தற்கொலைச் செய்திகளை திரட்டிக் கொண்டிருந்தார் (உதவிக்கு ஒரு மேலாளரும்). என் கண்களை என்னாலேயே நம்ப இயலவில்லை. நான்கு ஆண்டுகால பழக்கத்தில் அவர் நூல் விலை தவிர்த்த எந்த செய்தியையும் படித்து பார்த்ததில்லை.
அவரது நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள எஸ். ஆலிவர் எனும் ஜெர்மானிய இறக்குமதியாளர், அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைகள் உங்கள் தொழிற்சாலையில் இருக்கிறதா எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள். அவர் அதற்கான பதிலை தனது நிறுவனத்தில் இருக்கும் தரவுகள் வாயிலாக தேடுவதற்கு பதிலாக தினமலரில் தேடிக் கொண்டிருந்தார்.

குஜராத் பின் தங்கிய மாநிலம்தான் ! ரகுராம் குழு அறிவிப்பு ! அடடே அதான் மோடி அபிவிருத்தியை விட்டு பயங்கரவாதத்துக்கு தாவிட்டார் ! சரியான டுபாக்கூர்

குஜராத் பின் தங்கிய மாநிலம் – ரகுராம் ராஜன் குழு அறிவிப்பு !
மாநிலங்கள் பட்டியல்
2013 மே மாதத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவரும், தற்போதய ரிசர்வ் வங்கியின் கவர்னருமான  ரகுராம் ராஜனை தலைவராக கொண்ட 6 பேர் குழுவினது ஆய்வின் படி பொருளாதார வளர்ச்சியில் கோவா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்கள் முதல் இடங்களிலும், ஒடிசா, பீகார், மத்திய பிரதேச மாநிலங்கள் கடைசி இடங்களிலும் உள்ளன.
ரகுராம் ராஜன் (படம் : நன்றி தி இந்து)
சரி, அப்படியானால் மோடியின் குஜராத்? இந்த ஆய்வு “குஜராத் மாடலையும்”, “வைபரண்ட் குஜராத்தையும்” உலகமே தரிசிக்கும்படி செய்துள்ளது. குஜராத்தின் ஓட்டைகளை மறைத்து வளர்ச்சியை நிலைநாட்டி விடலாம் என்று ஊடகங்களும் பேஸ்புக் போராளிகளும் எவ்வளவு முயன்றாலும் சில சமயம் இது போன்ற ஆய்வுகள் அவர்களை சந்தி சிரிக்க வைத்து விடுகின்றன. பீகார் முதல்வர் நித்திஷ்குமார் தனது மாநிலம் பின் தங்கிய நிலையில் இருப்பதாகவும் அதற்கு  சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களும் இந்த கோரிக்கையை எழுப்பின. கடந்த மே மாதத்தில் பின் தங்கிய மாநிலங்களை கண்டறிவதற்கான அளவீட்டு முறையை பரிந்துரை செய்ய மத்திய அரசு ரகுராம் ராஜன் தலைமையிலான குழுவை அமைத்தது.

திமுக BJP யுடன் கூட்டணியா ? நடக்கும் என்பார் நடக்காது ! நடக்காது என்பார் ?

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான திமுக நிலைப்பாட்டைத் தற்போது தெரிவிக்கப் போவதில்லை என்று கருணாநிதி கூறினார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
கேள்வி: காங்கிரஸ் அரசு மொழி ரீதியாகச் செயல்படுவதாக திருச்சியில் நரேந்திர மோடி கூறியுள்ளாரே?
பதில்: மாநிலங்கள் மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டிருப்பதைச் அவர் சுட்டிக் காட்டியிருக்கலாம்.
கே: திருச்சியில் மத சார்பான பாஜகவின் கூட்டம் நடைபெற்றதற்கு திமுக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
ப: இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு கூட்டம் நடத்தும் உரிமை, பேசும் உரிமை போன்றவை தடுக்கப்படவில்லை. அதனால் அவரவர் கருத்துகளைத் தெரிவிப்பதில் எந்தத் தடையும் இல்லை.
கே: திமுகவையோ, அதிமுகவையோ மோடி குற்றம்சாட்டிப் பேசவில்லை. அதைக் கொண்டு திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக விரும்புவதாகக் கூறப்படுகிறதே?
ப: இந்தக் கருத்தைப் பொருத்தவரை நாங்கள் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. எடுத்தாலும் இப்போது அதை வெளியிட விரும்பவில்லை.என்று கூறினார்.
 என்னா பண்றது தலீவா   திமுகவை சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் அழிக்க முயற்சிப்பது தான் இந்திரா காந்தி  மொரார்ஜி  தொடக்கம் அத்வானி ராகுல் வரை நடக்கிறதே?  தினமணி.com

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

காதல் படங்களாக நடிக்க விஜய் முயற்சி ! மாஸ் பில்டப் அம்மாவுக்கு பிடிக்காதே ? தலைவா மறக்க முடியுமா ?

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா திரைபப்டத்திற்குப் பிறகு விஜய் நடித்துவரும் திரைப்படம் ஜில்லா. நேசன் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் ஜில்லா திரைப்படத்தில் நடித்துவரும் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். ஒருபுறம் துப்பாக்கி திரைப்படம் இந்தியில் ‘Holiday' என்ற பெயரில் வேகமாக உருவாகிக்கொண்டிருக்க, மறுபுறம் விஜய்யுடன் இணையும் திரைப்படத்தில் சமந்தாவை ஹீரோயினாக செலக்ட் செய்வது என இரு படங்களிலும் ஒருசேர பணியாற்றிவருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். நேசன் இயக்கும் ஜில்லா திரைப்படத்தை விஜய்யும்,  Holiday திரைப்படத்தை முருகதாஸும் இந்த வருட இறுதிக்குள் முடித்துவிட்டு ஜனவரியிலிருந்து தாங்கள் இணையும் திரைப்படத்தை துவங்கவிருக்கிறார்களாம்

கென்யாவில் வணிக வளாகம் தாக்குதல்: பெண் தீவிரவாதி

கென்யாவில் வணிக வளாகம் தாக்குதல்: பெண் தீவிரவாதியை பிடிக்க சர்வதேச போலீஸ் வேட்டைகென்யாவில் வணிக வளாகம் தாக்குதல்: பெண் தீவிரவாதியை பிடிக்க சர்வதேச போலீஸ் வேட்டை லண்டன், செப். 27– கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அல்– ஷபாப் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அதில் 130 பேர் உயிரிழந்தனர். 100–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
கடந்த 2011–ம் ஆண்டு டிசம்பரில் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தியது போன்று இங்கு தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதல் இங்கிலாந்தை சேர்ந்த வெள்ளைக்கார பெண் சமந்தா லெவ்த் வெயிட் (29) என்பவர் தலைமையில் நடந்தது தெரிய வந்துள்ளது.
எனவே, தலைமறைவாக இருக்கும் இவரை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவியை (இண்டர்போல்) கென்யா அரசு நாடியுள்ளது. அதைத் தொடர்ந்து இண்டர்போல் நிறுவனம் தனது 190 உறுப்பு நாடுகளுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.
அதில் சமந்தாவை பிடிக்க தகவல் தந்து உதவும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விதவை பெண்ணான சமந்தா இங்கிலாந்து முன்னாள் ராணுவ வீரரின் மகள் ஆவார். அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்.
இவரது கணவர் பெயர் ஜெர்மைன் லிண்ட்சே. கடந்த 2005–ம் ஆண்டு லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் 52 பேர் பலியாகினர். அதில் ஜெர்மைன் லிண்ட்சே சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதுmaalaimalar.com

அரவிந்தர் ஆஷ்ரம பாலியல், மனித உரிமை மீறல் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாட் டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள். அரவிந்தர் ஆசிரமம் மீது பாலியல் புகார், நிதி மோசடி உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.இதையொட்டி புதுவை சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார். அவர் விசாரணை நடத்த கூடாது என்று ஐகோர்ட்டில் ஆசிரம நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து சப்-கலெக்டர் விசாரிக்க ஐகோர்ட்டு தடை விதித்தது.
இதை எதிர்த்து ஐகோர்ட்டில் புதுவை அரசு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து அரவிந்தர் ஆசிரமம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ராமன் தலைமையிலான குழுவினர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்று நீதிபதி அறிவித்தார். இதன்படி அரவிந்தர் ஆசிரமம் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

டென்மார்க்கில் ஒரு பித்தலாட்ட சாமியாரிணி ! அகதியாக வந்தவர் அபிராமி அம்மனாக பதவி உயர்வு பெற்றார் !

அன்று ஈழ அகதி, இன்று டென்மார்க்கில் - பிறாண்டா அம்மன் இவர் 9 வயது சிறுமியாக இருந்தபோது அபிராமி அம்மனால் ஆட்கொள்ளப்பட்டார். மனித உருவில் அவதரித்த அபிராமி அம்பாள் தான் மாதாஜி அபிராமி உபாசகி என்பதில் ஐயமேதுமில்லை. இப்படி இவர் வளர்ந்து வருகையில் ஒன்பதாவது வயதில் இந்த மாதாஜி அவர்களுக்கு கனவில் அபிராமி அம்மன் தோன்றி 'நான் உன்னிடம் வருவேன்' என்றும் 'என்னை ஆதரிக்க வேண்டும்' என்றும் கூறினார். பின்பு திருமண காலத்தில் இவருக்கேற்ற ஒரு வாழ்க்கைத் துணையை அபிராமி அம்மாள் தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்தார். இவர்களுக்கு பாலமுருகன் போல ஒரு ஆண் குழந்தையையும் அந்த அபிராமி அம்மாள் கொடுத்தார். அம்மா டென்மார்க் நாட்டில் (1994) இருக்கும் போது, அபிராமி அம்மன் அம்மாவின் கனவில் வந்து தன்னை நீ ஆதரிக்கவேண்டும் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டார். ஆகா, மற்ற ஆசாமிகளெல்லாம் தாங்கள் கடவுளின் அவதாரம் என்றும், ஆண்டவன் சொல்கிறான் ஆசாமிகள் புடுங்குகிறோம் என்றும் சொல்வார்கள். ஆனால் டென்மார்க் வளநாட்டிலே பிறாண்டா என்னும் திருப்பதியிலே திருவருள் பாலிக்கும் லலிதாம்பிகை என்னும் அபிராமி அம்மனின் அவதாரம் சொல்கிறது.., அம்மனே தன்னை ஆதரிக்க வேண்டும் என்று இவரை கேட்டுக் கொண்டாளாம். இதை நான் சொல்லவில்லை, லலிதாம்பிகை அம்மனின் இணையத்தளம் தான் சொல்கிறது. (WWW.Abiramiamman.dk). அப்ப இவ அம்மனிற்கெல்லாம் அம்மன். ஆனா.., இங்க தான் கொஞ்சம் இடிக்குது. ஏனென்றால் ஒன்பது வயதிலேயே அபிராமி அம்மனால் ஆட்கொள்ளப்பட்ட அருள்மிகு லலிதாம்பிகை அம்மன், இலங்கையின் இனப்பிரச்சினை காரணமாக அகதியாகி டென்மார்க் வளநாட்டிற்கு தப்பி வந்திருக்கிறார். அம்மாவையே அகதியாக ஓட வைத்திருக்கிறார்கள் சிங்கள இனவெறியர்கள். அப்ப அம்மாவின் சக்தி பெரிதா,  இனவெறியர்கள் பெரிதா? நல்லகாலம் இதை தமிழின விடுதலைத் துரோகிகள் பட்டத்தை வாரி வழங்கும் வாரியத்தினர் கவனிக்கவில்லைப்போல. கவனித்திருந்தால் சிங்களவர்களிற்கு பயந்து ஓடி, சிங்களவர்களை பெரியவர்கள் ஆக்கிய துரோகி அம்மன் என்ற பட்டம் கிடைத்திருக்கும்.

சினிமாக்காரர்களை கேவலப்படுத்திய ஜெயலலிதாவுக்கு சாமரம் வீசிய சினிமா வியாபாரிகள்

விழாவுக்கு வந்த பிரபலங்களைவிட, வராத பிரபலங்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது. பாலுமகேந்திரா, பாரதிராஜா, கவுண்டமணி, செந்தில், எம்.எஸ்.விஸ்வநாதன், வடிவேலு, எஸ்.பி.பி , ஷங்கர், மணிரத்னம், பி.சுசீலா, எஸ்.ஜானகி என தமிழ் சினிமாவுக்குப் பெரும்பங்காற்றிய பெரும்பாலானவர்கள் வரவில்லை. சரித்திரத்தில் எழுதிக் கொண்டாடி இருக்க வேண்டிய 'சினிமா-100’ விழா அ.தி.மு.க. கட்சி விழா போல நடந்து முடிந்திருக்கிறது. இப்பத்தான் என் ஞாபகம் வந்துச்சா! சினிமா விழாவுக்கு கருணாநிதிக்கு அழைப்பு இல்லை என்ற சர்ச்சைகள் அதிகமானதால் விழா தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன் கருணாநிதிக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. என்னய்யா இப்பத்தான் என் ஞாபகம் வந்துச்சா? என்று அழைப்பிதழ் கொடுத்த எடிட்டர் மோகனிடமும், தென்இந்திய திரைப்பட வர்த்தக சபை துணைத் தலைவர் தேவராஜிடமும் கேட்டாராம். அவர்கள் இருவரும் பதில் சொல்லாமல் அமைதியாகத் திரும்பி இருக்கிறார்கள். சினிமா விழா காரணமாக சென்னைத் திரையரங்குகளில் திரையிடப்பட்ட படங்கள் அத்தனையையும் முதல்வர்தான் தேர்வு செய்தாராம்.
பருத்தி வீரன், அரவான் போன்றவைகூட முக்கிய திரைப்படங்கள் வரிசையில் திரையிடப்பட தமிழ் சினிமாவில் வசனப் புரட்சியை ஏற்படுத்திய பராசக்தி, மந்திரி குமாரி, வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட படங்கள் எதுவுமே அந்த வரிசையில் இடம் பிடிக்கவில்லை

மும்பையில் 5 மாடி குடியிருப்பு இடிந்து வீழ்ந்தது

மும்பை டாக்யார்டு ரயில்நிலையம் அருகில் உள்ள பிஎம்.சி என்ற 5 மாடி
கட்டிடம் இன்று காலையில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார், நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து காலை சரியாக 6.15 மணிக்கு நடந்துள்ளது. இதனால் தூக்கத்தில் இருந்த குடும்பங்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் பொதுமக்களுடன் சேர்ந்து இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.12 தீயணிப்பு துறை வாகணங்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளன. இடிபாடுகள் மோசமாக உள்ளதால் உள்ளே v>

அடுத்த படத்திற்காக கடுமையாக உழைக்கும் மணிரத்னம் ! அதாவது நிறைய ஆங்கில பிரெஞ்சு இத்தாலிய ஈரானிய ரஷ்ய மற்றும் சகல மொழி படங்களையும் பாக்கிராருங்கோ ?

சென்னை:அடுத்த படம¢ இயக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்
மணிரத்னம்.கடல் படத்துக்கு எழுந்த விமர்சனங்கள் அவரை சூடாக்கி உள்ளதாம். இதனால் அடுத்தது ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற தீவிரத்துடன் அவர் பணியாற்றி வருகிறார். அதே நேரம் பைனான்ஸ் பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். காரணம், கடைசியாக இவர் இயக்கிய கடல், அதற்கு முன் எடுத்த ராவணன், இந்தியில் ராவண் ஆகிய படங்கள் கையை சுட்டன. இதையடுத்து அடுத்த படத்துக்கு பைனான்ஸ் பிடிப்பது மணிரத்னத்துக்கு சிக்கலாகி இருக்கிறது. அதுவும் பெரிய பட்ஜெட் படம் பண்ண அவர் பிளான் போட்டுள்ளாராம். இதுவும் சிக்கலுக்கு ஒரு காரணம். இந்தியா&பாகிஸ்தான் பிரிவினை தொடர்பான அந்த கதையை தமிழ், இந்தியில் இயக்க அவர் ஸ்கிரிப்ட் எழுதி வருகிறார்.tamilmurasu.org

இந்திய சினிமா நூற்றாண்டு விழா முழுக்க முழுக்க ஜெயலலிதா பஜனை மண்டலியாகியது

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவிற்கு சென்று வரும் கலைஞர்கள் அனைவருமே, இது இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவா? இல்லை தமிழக அரசின் விழாவா? என்று தான் கேட்கிறார்களாம்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு பதில் இசை நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருப்பதோடு, முக்கிய கலைஞர்களும் அவமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொருமுகிறது தெலுங்கு திரையுலகம். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தெலுங்கு சினிமா சார்பில் பலவித நிகழ்ச்சிகளும் நடந்தேறின.

நிலக்கரி சுரங்க வழக்கு: காங்கிரஸ் MP ஜிண்டாலுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் CBI questions Naveen Jindal for 7 hours, Dasari Narayan Rao also grilled

CBI questions Naveen Jindal for 7 hours, Dasari Narayan Rao also grilled காங்கிரஸ் எம்.பி.யும்,
தொழிலதிபருமான நவீன் ஜிண்டாலுக்கு சொந்தமான நிறுவனங்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளன. இந்த நிறுவனங்கள் முன்னாள் மத்திய நிலக்கரி சுரங்கத்துறை இணை மந்திரி தாசரி நாராயண ராவிடம் இருந்து நிலக்கரி சுரங்கங்களை முறைகேடாக பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் நவீன் ஜிண்டால் மற்றும் தாசரி நாராயண ராவ் மீது வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., விசாரணைக்கு ஆஜராகுமாறு நவீன் ஜிண்டாலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் இதுவரை ஆஜராகாத நிலையில் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  அதன்பேரில் நவீன் ஜிண்டால் வெள்ளிக்கிழமை சி.பி.ஐ. முன் ஆஜராவார் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.> இதற்கிடையே இந்த வழக்கில் தங்களின் பங்களிப்பு குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு ஜார்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம், மராட்டியம், சத்தீஷ்கார், மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது

இந்தியருக்கு சொந்தமான ரூ.2 கோடி புதையல் ஆல்ப்ஸ் மலை சிகரத்தில் கிடைத்தது

A French mountain climber scaling a Mont Blanc glacier was left astonished when he discovered a chest in the ice containing tens of thousands of euros worth of precious gems. The buried jewels are believed to be linked to two mysterious Indian plane crash  பாரீஸ், செப். 27- ஆல்ப்ஸ் மலையில், பிரான்ஸ்–இத்தாலி நாட்டு எல்லையில் அமைந்துள்ள சிகரத்தில் ஏறிய பிரான்சு நாட்டு வாலிபர் ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்தது. பனிக்கட்டியால் ஆன அந்த சிகரத்தில் சிரமத்துடன் ஏறிய அவருக்கு பழங்கால பெட்டியில் விலை உயர்ந்த ஆபரண கற்கள் அடங்கிய புதையில் கிடைத்தது. அந்த பெட்டியில் இருந்த மரகதம், மாணிக்கம் மற்றும் நீல நிற கற்களின் மதிப்பு ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. யாருக்கும் தெரியாத நிலையில், அந்த அபூர்வ புதையலை அவர் தனது வீட்டிற்கு எடுத்துச்சென்று இருக்கலாம். ஆனால், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அந்த புதையலை அந்த வாலிபர் ஒப்படைத்துவிட்டார். அந்த கற்களில் அவை இந்தியாவில் செய்யப்பட்டவை என்று பொறிக்கப்பட்டு இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1950 மற்றும் 1966–ம் ஆண்டுகளில் இரு ஏர் இந்தியா விமானங்கள் அந்த மலைச்சிகரத்தில் மோதி சிதறின. அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உயிர் இழந்து பனிப்பாறைக்குள் சமாதி ஆனார்கள்.

வியாழன், 26 செப்டம்பர், 2013

மோடி அலை வீசதொடங்கி உள்ளதாமே ? அடுத்து சங்கராச்சாரி அல்லது இடி அமின் அலை வீசினாலும் ஆச்சரியமில்லை !

மோடி என்ன பேசுவார்.. எப்படிப் பேசுவார் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, திருச்சிக்கு மோடி வருகிறார்.   தமிழகமே காத்திருக்கிறது.  திருச்சியை இந்தியாவே திரும்பிப் பார்க்க இருக்கிறது.
இப்படியெல்லாம் பிஜேபி மற்றும் சங் பரிவாரங்கள் கொடுக்கும் பில்டப்புக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது இந்தியாவில் மோடி அலை வீசுகிறது. இன்று தேர்தல் வைத்தால் கூட, 545 சீட்டுகளில் 544 சீட்டுகளை மோடி கவ்விப் பிடிப்பார் என்று பிஜேபியினர் கூறி வருகிறார்கள். மோடி பிரதமரானால், ஓபாமா மோடியின் காலடியில் விழுவார் என்ற அளவுக்கு பேசுகிறார்கள். மோடி ஒரு சர்வரோக நிவாரணி. இந்தியாவை பீடித்திருக்கும் அத்தனை பிணிகளுக்கும் மோடி ஒருவர்தான் தீர்வு என்ற ரீதியில் பேசி வருகிறார்கள். இது உண்மையா ? மோடி இந்தியாவின் சர்வரோக நிவாரணியா ? இடது சாரிகள் ஆதரித்தாலும் மக்களுக்கு எதிரான டாடா நானோ கார் ஆலையை மேற்கு வங்கத்திலிருந்து விரட்டியடித்தார் மம்தா பானர்ஜி. அங்கிருந்து பெட்டியைத் தூக்கிக் கொண்டு நேராக ரத்தன் டாடா சென்ற இடம் குஜராத். குஜராத்தில் கட்டப்படும் நானோ கார் ஆலைக்காக, 1100 ஏக்கர்கள் நிலம் ஒதுக்கப்பட்டன. மோடியின் ராஜதந்திரம் வென்று விட்டது. குஜராத்தை தொழில் வளர்ச்சியடைந்த முன்னோடி மாநிலமாக்க மோடி விரைந்து நடவடிக்கை எடுக்கிறார் என்று மோடியின் அடிப்பொடிகள் புகழ்ந்தனர். ஆனால், அந்த 1100 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்கான முத்திரைத்தாள் கட்டணம் கூட ரத்தன் டாடா நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்படாமல் விலக்களிக்கப்பட்டது தெரியுமா ? மோடி அரசில் ஊழலே இல்லை என்று கூறப்படுகிறது. ஒரு மிகப்பெரிய முதலாளி. பல கோடி ரூபாய்களுக்கு அதிபதி. அந்த முதலாளியிடம் நிலம் வழங்கி, அதற்கு முத்திரைத் தாள் கட்டணம் கூட வசூலிக்காமல் தொழில் தொடங்கச் சொல்வது ராஜதந்திரமா ? அது மட்டுமல்ல.... ஒரு நிலத்தை விவசாய நிலத்திலிருந்து வேறு பயன்பாட்டுக்காக மாற்றினால், ஒரு சதுர மீட்டருக்கு குஜராத் விதிகளின்படி ரூபாய் 6 செலுத்த வேண்டும். இந்த 6 ரூபாய் செலுத்துவதிலிருந்தும் ரத்தன் டாடா நிறுவனத்துக்கு விலக்களிக்கப் பட்டுள்ளது.

அடிமைகள் கூட்டணி ! அங்கும் நமக்கு வாய்த்த அடிமைகள் வழிபாடு !



மோடி. நீரா ராடியா. tata கனெக்ஷன் பற்றி மூச்சு விடாத சோ ! ராசாவை ஏன் ரவுண்டு கட்டி அடித்தான் ?

அலைக்கற்றை ஊழலை
டாடா - மோடி - ராடியா
ஒட்டி, ராஜாவின் ராடியா கனெக்சன் பற்றி ரவுண்டு கட்டிய சோ ராமஸ்வாமி அய்யர், டாடாவின் ராடியா கனெக்சன், மோடியின் ராடியா கனெக்சன் பற்றி மூச்சு விடவில்ல மோடியின் சந்நிதியில் கலெக்டரே மண்டியிட்டு வணங்கும் மாநிலத்தில், ரொம்ப தெனாவெட்டாக கால் மேல் கால் போட்டு உக்காந்திருக்காகளே ஒரு பொம்பிளை -
அது யாருன்னு தெரியுதா?
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ் நீரா ராடியாதான்.
இது 25 நவம்பர் 2010-ல் எடுத்த படம்.
  • அலைக்கற்றை ஊழல் பற்றிய சி.ஏ.ஜி அறிக்கை வெளியான தேதி – நவம்பர் 10, 2010.
  • “ராடியா டேப்புகளை” ஓபன் மாகசீன் வெளியிட்ட தேதி – நவம்பர் 20, 2010
  • இந்த செய்தியும் புகைப்படமும் வெளியிடப்பட்டிருக்கும் தேதி நவம்பர் 25, 2010
இந்த படத்தை வெளியிட்டுள்ள “தேஷ் குஜராத்” இணைய தளம், அம்மையாரை குஜராத்தின் மருமகள்” என்று கொட்டேசனில் போட்டுள்ளது. எதுக்காக குசும்பா கொட்டேசன்ல போட்ருக்குன்னு விவரம் சொல்லணுமில்ல? சொல்லலியே!
நல்லாத் தர்றாங்கய்யா டீட்டெய்லு!
NaMo (நமோ) கறை படியாத கரமாச்சே! புரோக்கர், ஊழல், கமிசன்னு யாராவது பேசினா சுட்டுத்தள்ளிடுவாருன்னு அர டவுசர் அம்பிக சொல்றாங்களே! ஒரு வேளை அம்மா ஒரு புரோக்கர்னு அய்யாவுக்கு தெரிஞ்சிருக்காதோ!
“அட போய்யா, அம்மாவோட அய்யாவுக்கு பிசினஸ் கனைக்சன் 2004 இலேயே உண்டு”ன்னு சொல்லியிருக்கிறார் கிங் சுக் நாக் என்ற டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையாளர்.
அவருடைய டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை வெளிவந்திருக்கும் தேதி நவம்பர் 22, 2010.
இனி, கிங் சுக் நாக் எழுதியுள்ளதிலிருந்து சில பகுதிகள்:
“2003 இல் நான் டைம்ஸ் ஆப் இந்தியா அகமதாபாத்தின் ஆசிரியராக இருந்தேன். நீரா ராடியா என்னைப் பார்க்க விரும்புவதாக என்னிடம் ஒரு நண்பர் சொன்னார்…
அடுத்த முறை நான் டெல்லி வந்தபோது, ராடியாவின் அலுவலகத்தில் அவரை சந்தித்தேன். போன, வந்த கதையையெல்லாம் கொஞ்சம் பேசி விட்டு, நைசாக விசயத்துக்கு வந்தார் ராடியா. “நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எல்லாம் மோடியை சித்திரவதை செய்து வருகிறீர்கள். அவரையும் அவருடைய கொள்கையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கங்களேன்” என்றார்.
“டாடாவுக்கு அடுத்தபடி, மோடியும் உங்கள் வாடிக்கையாளர் பட்டியலில் சேர்ந்து விட்டாரோ” என்று நான் ராடியாவிடம் கேட்டேன்.
“சே சே குஜராத்தின் மருமகள் என்ற முறையில் என் கடமையை செய்கிறேன்” என்றார் ராடியா.
“குஜராத் அரசைப் பற்றி (இனப்படுகொலையைப் பற்றி) நாங்கள் எழுதுவது எல்லாம் உண்மை விவரங்களின் அடிப்படையிலானது. அதை எப்படி நாங்கள் திரிக்க முடியும்?” என்று நான் கேட்டேன்…
சில மாதங்களுக்குப் பின் 2004 இல் குஜராத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் “வைப்ரன்ட் குஜராத்” என்ற நிகழ்ச்சியை அகமதாபாத்தில் நடத்தினார் மோடி. அன்றைக்கு மோடியின் இமேஜ் பெரும் அடி வாங்கியிருந்தது…
பொதுவாகவே, தொழிலதிபர்களுக்கு மிகவும் சாதகமான சூழல் குஜராத்தில் நிலவிய போதிலும், குஜராத்துக்கு வருவதையே முதலாளிகள் அன்று விரும்பவில்லை. மோடியுடன் அவர்கள் ஒரே மேடையில் தோன்றுவது என்பதோ கற்பனைக்கு எட்டாததாக இருந்தது. அன்று மோடியின் கொள்கைகளை விமரிசித்தவர்களில் முக்கியமானவராக டாடா இருந்தார். அப்படியிருக்க, வைப்ரன்ட் குஜராத் நிகழ்ச்சியில் ராடியாவுடன் டாடாவை பார்த்தபோது எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை…

கடலூரில் கல்லூரி வாயிலில் மாணவி படுகொலை !

கடலூர் புனித ஜோசப் கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்பு படித்து வந்தவர்
மகாலட்சுமி. இவர் வழக்கம்போல் கல்லூரி வகுப்பு முடிந்து வியாழக்கிழமை மதியம் வெளியே வந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் மாணவியை நெருங்கி, அவரின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் மாணவி துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்து அந்த மர்ம நபர் தப்பித்துள்ளார். மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தவர், மாணவிக்கு தூரத்து சொந்தரக்காரர் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் கல்லூரி முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாணையில் ஈடுபட்டனர். கொலையாளியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரிவாள் கலாச்சாரத்தையும் இதர வன்முறையையும் தமிழ் சினிமாதான் விதைக்கிறது , அதிலும் உச்ச நடிகர்களின் படங்கள் வன்முறை பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றை  Glamorize மனதை ஈர்க்கும் வண்ணம் காட்டி ரசிகர்களை மன நோயாளர்கள் ஆக்குகிறது , இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் அதிகம் நடந்தால் ஆச்சரியம் ஏதுமில்லை

அறிவியல் உண்மைகளுக்கு கூட நம்பிக்கை முலாம் பூசவேண்டிய பரிதாபம் ! நம்புவது ஒரு புண்ணிய காரியம் அல்ல !

நாம் யார் ? கடவுள் உண்டா? எம்மை சுற்றி நடப்பது என்ன?  இதில் எந்த கேள்வி  உதித்தாலும் உடனடியாக கெட்டித்தனமான பதில்களை தர சகல சமயங்களும் வழிகாட்டிகளும் குருமார்களும் காத்திருக்கிறார்கள். எமது இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வது மிகவும் தித்திப்பான ஒரு காரியமாக அவர்கள் எதிர்கொள்கின்றனர் . எமது கேள்விகளில் அவர்கள் உயிர் வாழ்கின்றனர். அவர்களை பின்பற்றுபவர்களுக்கு  சொர்க்கம் காத்திருப்பதாக நம்பிக்கை அளிக்கின்றனர் நாம் அவர்களின் பதில்களில் இருந்து தற்காலிகமான போதை உணர்வுகளை பெறுகிறோம்   ஆனால் அறிவை பெறுகிறோமா என்றால் அனேகமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்களிடமே இல்லாத அறிவை அவர்கள் எப்படி எமக்கு தரமுடியும் ?

நம்மை தங்கள் கோட்பாடுகளில் நம்பிக்கை கொள்ளப்பண்ணியே எம்மை ஆட்டு மந்தைகளாக்கி விட்டார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அப்படியே நம்பி நம்பி பின்னால் சென்றததனால் எதையுமே சுயமாக சிந்திக்க முடியாதவர்களாகி விட்டோம் . சதா நம்புவதற்கு ஏதாவது ஒரு தூண்  நமக்கு தேவை படுகிறது. சாமி சமயம் அல்லது கலாசாரம் மேலும்  அரசியல் தலைவர் அல்லது சினிமா நடிகர் போன்று ஏதாவது ஒன்று நம்பிக்கை கொள்வதற்கு தேவை படுகிறது.
இந்த நம்பிக்கை என்பது மருந்து மாதிரி தவிர்க்க முடியாததாகிவிட்டது.

தேவை ஏற்படும்போது ஏதோ ஒரு தெரபி என்று கண்டுக்காமல் இருந்து விடலாம் ஆனால்  இங்கே நடப்பது என்ன?
மருந்தையே சாப்பாடாக எண்ணி சாப்பிட்டு சாப்பிட்டு எல்லோரும் விசித்திர நோயாளிகளாக மாறிவிட்டனர் அல்லவா?

ரஜினி மோடியை சந்திக்கிறார் ! சோவின் BJPக்கு ஆதரவு தெரிவிப்பார் ! காரியகிறுக்ஸ் இம்முறை BJP

திருச்சியில் நரேந்திர மோடியை சந்திக்கிறார் ரஜினி? திருச்சி: பாரதிய ஜனதா
கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை இன்று நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இன்று மாலை திருச்சியில் நடைபெறும் 'இளந்தாமரை' மாநாட்டில் உரையாற்றுகிறார். இம்மாநாட்டுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாஜகவின் இந்த இளைஞரணி மாநாட்டில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நரேந்திர மோடியின் நண்பரான நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவை அண்மைக்காலமாக வெளிப்படையாக பாஜக கோரி வருகிறது. இந்த நிலையில் திருச்சி வரும் நரேந்திர மோடியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. திருச்சியில் நரேந்திர மோடி இன்று இரவு 7 மணிக்கு பாஜக பிரமுகர்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இது ரத்து செய்யப்பட்டுள்ளது. அனேகமாக ரஜினிகாந்த் சந்திப்புக்காகத்தான் பாஜக பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே திருச்சியில் ரஜினி ரசிகர்கள், நரேந்திர மோடியை வரவேற்று பேனர்கள் வைத்திருக்கின்றனர். இதற்கு முன்பு ஹைதராபாத்தில் ரஜினிகாந்த் நண்பரான மோகன்பாபு, நரேந்திர மோடியை சந்தித்திருந்தார். அதேபோல் ரஜினியின் மற்றொரு நண்பரான நடிகரும் பத்திரிகையாளருமான சோவும் லோக்சபா தேர்தலில் பாஜகவை ரஜினிகாந்த் ஆதரிக்க வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் நரேந்திர மோடியை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகம் tamil.oneindia.in

சென்னை: வன்முறை 4 மாணவர்கள் டிஸ்மிஸ்… 49 பேருக்கு ஜெயில்!

சென்னையில் வன்முறையில் ஈடுபட்ட 49 மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேரை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவது, கண்டக்டரை தாக்குவது, காரணங்கள் இல்லாமல், சாலையில் செல்லும் வாகனங்களின் கண்ணாடியை உடைத்து நொறுக்குவது என சென்னை, மாணவர்களின் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.பிரசிடென்சி கல்லூரி, நந்தனம் அரசு கலைக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் பச்சையப்பா கல்லூரி, ராயப்பேட்டை புதுக்கல்லூரி போன்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி மோதிக்கொள்வதோடு வன்முறை சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இதனால் பேருந்துகள் சேதமடைவதோடு பொதுமக்களும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.

மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கர்நாடகத்திலும் அமுலாகிறது ! நரபலி அளவுக்கு அட்டகாசம் எகிறுகிறது

பெங்களூரு, செப். 25- கருநாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந் திரா  அளித்த பேட்டி வருமாறு:
மகாராஷ்டிரா மாநி லத்தில் அமலில் உள்ள மூடநம்பிக்கைக ளுக்கு எதிரான சட் டத்தைப் போல் ஒரு சட் டத்தை கருநாடகாவி லும் கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது. அறியாமை மற்றும் கஷ் டத்தில் இருப்பவர் களைக் குறிவைத்து மாய மந்திரங்கள் பெயரில் ஏமாற்று வேலை நடக் கிறது.
மந்திரவாதிகள் ஒரு கட்டத்தில் நரபலி கொடுக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறார்கள்.

பெண்ணை நிர்வாணமாக பார்க்க விரும்பிய போலீஸ் ! கற்பழிப்பு புகார் கொடுக்க போலீசுக்கு போன பெண் பட்ட பாடு ! விளங்கிடும் !

உத்தர பிரேதேச மாநிலத்தில் கற்பழிப்பு புகார் அளிக்கவந்த பெண் ஒருவரை
காவல் துறையை சேர்ந்த ஒருவர் ஆடைகளை கழற்றுமாறு வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரை சேர்ந்த ஒரு பெண்ணை அதே பகுதியில் வசிக்கும் நபர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.இது தொடர்பாக புகார் அளிக்க அவர் பெற்றோரோடு காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார். நடந்தவற்றை கேட்டறிந்த காவல் துறை அதிகாரி ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு அறைக்குள் பூட்டி அவரிடம், புகாரில் தெரிவித்துள்ள படி, நீ பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதை நான் உறுதி செய்ய வேண்டும். எனவே உனது ஆடையை கழற்று என வற்புறுத்தியுள்ளார்.

கடவுள் துகள்களை கண்டு பிடித்தவருக்கு நோபல் வழங்க ஆயத்தம்

அணுவில் எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய மூன்று துகள்கள்
உண்டு என்பது விஞ்ஞானி ரூதர் போர்டின் கண்டுபிடிப்பு. ஆனால் அந்த அணுவுக்கு அடிப்படை 16 துகள்கள் என்று கண்டறியப்பட்டது. இந்த 16 துகள்களும்தான் கல், மண், பேனா, பென்சில், விமானம், கார், ரெயில் என அனைத்துப் பொருட்களின் இயக்கத்துக்கும் அடிப்படை எனவும் தெரிய வந்தது.
 ஆனால் 17–வது அடிப்படை துகள் என்று ஒன்று உண்டு என கூறி கண்டுபிடித்து அதை உலகுக்கு அறிவித்தவர் இங்கிலாந்து விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் (வயது 84). அவர் தான் கண்டறிந்த துகளுக்கு ‘போஸான் துகள்’ என பெயரிட்டார். இதை ‘கடவுள் துகள்’ என்றும் ‘கடவுள் இல்லாத துகள்கள்’ என்றும் கூறுவோர் உண்டு. அணுவின் அடிப்படையான 16 துகள்களுக்கும் நிறை இருப்பதற்கு ஹிக்ஸ் போஸான் தான் காரணம் என்பது பீட்டர் ஹிக்ஸின் வாதம்.இந்த ஆராய்ச்சியில் பீட்டர் ஹிக்சுக்கு உதவியவர் சக விஞ்ஞானியான பிராங்கோயிஸ் இங்கிலெர்ட் (80) ஆவார்.இந்த இருவருக்கும் இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உ dinamalar.com

புதன், 25 செப்டம்பர், 2013

பாகிஸ்தான் பூமி அதிர்ச்சியினால் கடலில் தீவு தோன்றியுள்ளது

பாகிஸ்தானின் பலொசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (24) ஏற்பட்ட பாரிய
பூமியதிர்ச்சியின் பின்னர் க்வதார் கடற்கரையில் அதிசயமாக திடீரென தீவொன்று தோன்றியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 7.8 ரிச்சடர் அளவிலான பூமியதிர்ச்சி ஏற்பட்டதன் பின்னர் திடீரென இத்தீவு அதிசயமாக தோன்றியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சித் திணைக்களத்தின் பொதுப்பணிப்பாளர் ஆரிப் மஹ்மூத் கூறுகையில்,'பூமிதிர்ச்சியின் பின்னர் க்வதார் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையிலிந்து சுமார் 600 மீற்றர் தூரத்தில் அரேபியக் கடலில் ஒரு சிறிய தீவொன்று தோன்றியுள்ளது' எனத் தெரிவித்துள்ளார். சுமார் 9 மீற்றர் உயரமும் 100 மீற்றர் உயரமானதுமான இத்தீவினை பார்ப்பதற்கு அப்பகுதியில் ஏராளமான மக்கள் ஒன்றுகூடுவதாக க்வதார் உயர் பொலிஸ் அதிகாரி உம்ரானி கூறியுள்ளார். நேற்று பாகிஸ்தானில் ஏற்பட்ட பூமிதிர்ச்சியானது 1200 கி.மீ தூரத்தினைக் கடந்து இந்தியாவின் டெல்லி வரையில் உணரப்பட்டது. இதில் இதுவரையில் 238 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயாவின் கோரிக்கைக்கு நீதிமன்றம் ஆப்பு ! நீதிபதி பாலகிருஷ்ணா தொடர முடியாது

கர்நாடகாவில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கக்கூடிய நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணாவுக்கு பதில் புதிய நீதிபதியாக முடிகவுடர் என்கிற நீதிபதியை கர்நாடகா உயர்நீதிமன்றம் நியமித்து, உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா வருகிற 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அத்துடன், அரசு வழக்கறிஞரான பவானிசிங்கை மறுபடியும் நியமிக்க வேண்டும் எனவும், அந்த வழக்கில் கேட்டுக்கொண்டுள்ளார். அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்துகொண்டிருக்கும் நிலையில்,  கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி கே.எல்.மஞ்சுநாத், எம்.எஸ். பாலகிருஷ்ணாவுக்கு பதிலாக தமிழகத்தைச்சார்ந்த முத்திரைத்தாள் மோசடி மன்னன் முகமது அலி ஐபிஎஸ் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் முடிகவுடர் என்பவரை வருகிற 1ம் தேதி முதல் ஜெ.,வின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக நியமித்துள்ளார்.  இதன் மூலம்  கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடியாக நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணாவுக்கு பதவி நீட்டிப்பு இல்லை என ஜெ.,வின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.- தாமோத பிரகாஷ்  nakkheeran.in/

ஸ்பெக்ட்ரம் ஜே பி சியின் தலைவர் சாக்கோவுக்கு எதிராக பாலு உரிமை மீறல் தீர்மானம் !

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசாரித்த, பார்லிமென்ட் கூட்டு குழுவான - ஜே.பி.சி.,யின் தலைவர், பி.சி.சாக்கோவுக்கு எதிராக, லோக்சபாவில், உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர, தி.மு.க.வும், பா.ஜ.,வும் நோட்டீஸ் அளித்துள்ளதால், புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.லோக்சபா அலுவல் ஆய்வுக்குழு, நேற்று மதியம், 3:00 மணிக்கு கூடி ஆலோசித்தது. சபாநாயகர் மீரா குமார் தலைமையில், நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், இன்று ரயில்வே மானிய கோரிக்கைககள் மீது விவாதம் நடத்த ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, நிலக்கரி, விவசாயம், ஜவுளி, மரபுசாரா எரிசக்தி துறைகளின், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை எடுத்துக் கொள்வது என்றும், மே, 2 மற்றும், 3ம் தேதிகளில், நிதி மசோதா மீதான விவாதத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.மே, 8ம் தேதி, நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை, லோக்சபாவில் நிறைவேற்றவும், உணவு பாதுகாப்பு மசோதாவையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. சாக்கோ சேட்டன் திமுகவை ஒழித்து கட்ட எதோ தன்னால் ஆனா முயற்சி ? சேட்டா கொஞ்சம் பதுக்க வாசி

தமிழ்நாட்டில் குடும்ப கொலைகள் ! பாட்டி கொலை ! ஆனால் அந்த பாட்டி பேத்தியையும் மருமகனையும் கொலைசெய்தது கண்டு பிடிப்பு !

பாட்டி கொலையில் துப்பு துலக்கிய போது, மருமகன், பேத்தியை பாட்டியே கொலை செய்தது தெரிய வந்தது.
சேலம் மாவட்டம், வீராணம், காவல் நிலைய எல்லையில் உள்ளது மன்னார்பாளையம். இந்த ஊரைச்சேர்ந்த பச்சியம்மன் நகர் பகுதியில் வசிப்பவர் சரஸ்வதி, வயது-70, விதவையான இவரது அண்ணன் பெயர் சுப்ரமணி,வயது-75. இருவரும்,  தங்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டில், தனியாக வசித்து வந்தனர்.
கடந்த, 22-ம் தேதி காலையில், நாற்காலியில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்,  படுகாயங்களுடன் சரஸ்வதி பிணமாகி கிடந்தார். இன்னொரு நாற்காலியில் கயிறுகளால் கட்டப்பட்டிருந்த சுப்ரமணி, பலமான காயங்களுடன் உயிருக்கு போராடிகொண்டிருந்தார்.

அரசியல்வாதிகளை காப்பாற்றும் சட்டம் Express வேகத்தில் வருகிறது ! எல்லகட்சிகளும் OK வாம்

புதுடெல்லி : குற்ற வழக்கில் சிறை தண்டனை பெறும் எம்பி, எம்எல்ஏக்களின் இதனால், உச்ச நீதிமன்ற உத்தரவை செல்லாததாக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திருத்த மசோதா, சமீபத்தில் முடிந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் தாக் கல் செய்யப்பட்டது. ஆனால், பல தடைகள் காரணமாக இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இன்னும் அமலில் உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ரசீத் மசூத் மீதான ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அடுத்த மாதம் தண்டனை அறிவிக்கும் என தெரிகிறது. அப்படி தண்டனை அறிவிக்கப்பட்டால் முதலாவதாக பதவி விலகும் எம்பியாக ரசீத் மசூத் இருப்பார். இதேபோல் மாட்டுத்தீவன ஊழல் குறித்த சிபிஐ வழக்கில் லாலு பிரசாத்துக்கு தண்டனை அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதற்கு முன்பாக அவசர சட்டம் கொண்டு வந்து இதை தடுக்க மத்திய அரசு முடிவு செய்தது.

மோடியின் திருச்சி வருகை ! ஊடகங்களின் பில்டப் ! அத்தனையும் கப்சா !

பொன்மலை ரயில்வே திடல்ரும் 26.9.2013 திருச்சியில் நடைபெற இருக்கும் கிரிமினல் மோடியின் தலைமையிலான இளந்தாமரை மாநாட்டிற்காக பாஜக எல்லா சதி வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் ஏகோபித்த ஜால்ராவையும் போட்டு வருகிறார்கள். மகஇக பொதுக்கூட்டத்தை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்த ஊடகங்கள் மோடியின் கூட்டச் செய்திகளை அவற்றில் செய்தி என்று எதுவும் இல்லையென்றாலும் அடித்து விடுகிறார்கள்.
தினமலர் உள்ளிட்ட பார்ப்பனிய ஊடகங்கள் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள 1 இலட்சம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள், நேரடியாக வருபவர்கள் ஒரு இலட்சம் ஆக இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் அணி திரள்கிறார்கள் என்று பில்டப் கொடுத்து வருகிறார்கள்.
சென்னையில் இருந்து மகஇக கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது பேருந்திலிருந்து பொன்மலை இரயில்வே திடலைப் பார்த்தோம். இதில்தான் மோடி பேசுகிறார். என்னடா இவ்வளவு சின்ன இடமாக இருக்கிறதே, இதில் எப்படி லட்சம் பேர் இருக்க முடியும் என்று யோசித்தோம். இடையில் எமது தோழர்கள் ரயில்வே துறையில் விசாரித்து விட்டு சேகரித்த தகவல்கள் மற்றும் கள ஆய்வு மூலம் அதன் உண்மை நிலையை அறியத் தந்த போது நமது சந்தேகம் சரிதான் என்பதோடு இவர்களது புள்ளி விவரம் இங்கேயும் பெரிய மோசடி என்பதை உங்களுக்கு அறியத் தருகிறோம்.

கலைஞர் : புகழ் பெற்ற வக்கீல் மோகன் பராசரன் தீவிர மதவாதி போல கருத்து தெரிவிப்பது அழகல்ல !

'சேதுசமுத்திர திட்டத்தை நிறை வேற்ற, மத்திய அரசு முன் வந்துள்ள நிலையில், மோகன் பராசரன் போன்ற மூத்த வழக்கறிஞர்கள், மத்திய அரசின் கருத்துக்கு மாறாக, ஒரு மதவாதியைப் போல கருத்து தெரிவித்திருப்பது சரியானதாக எனக்கு தெரியவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதிகூறியுள்ளார் அவரது பேட்டி:தமிழகத்தில், பார்வையற்றவர்கள் கடந்த, ஒன்பது நாட்களாக அரசை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். என்னை பொறுத்தவரையில், இந்தச் செயலைக் கண்டிக்கத் தான் முடியும்.பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை இந்த அரசு ஆரம்பம் முதல்அலட்சிய கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறது.இந்திய சினிமா நூற்றாண்டு விழாவிற்கு, மூத்த கலைஞர்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டிருப்பதைப் குறித்து எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை. மத்திய அரசில், சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்த மோகன் பராசரன் சேது சமுத்திரத் திட்ட வழக்கில் ஆஜராகப் போவதில்லை என திடீரென விலகிஇருக்கிறார்.இந்த வழக்கில் அவரின் தந்தை, மனுதாரர்களில் ஒருவர் சார்பில் ஆஜராகிறார். இதனால், முக்கிய மான இந்த வழக்கின் நலன் கருதியும், எவ்வித முரண்பாடும் ஏற்படாமல் இருப்பதற்காக ஆஜராவதில் இருந்து விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். வேறு ஒருவரை நியமிக்கும்படி கேட்டுக் கொண்டேன். எனக்குப் பதிலாக இனிமேல் மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் ஆஜராவார் என்று கூறியதாக செய்தி வந்துள்ளது.வேறொரு இதழில், இலங்கை மன்னன் ராவணனால் சிறை பிடிக்கப்பட்ட தன் மனைவி சீதாவை மீட்பதற்காக ராமன், ராமர் பாலத்தைக் கட்டினார் என்பதை அவர் நம்புவதாகவும், மேலும் இந்த வழக்கில் ஒரு மனுதாரருக்காக, அவரின் தந்தை பராசரன் ஆஜராவதால், இந்த வழக்கில் தான் தொடர்ந்து, வாதாடுவது முரண்பட்டதாக இருக்கும் என, கூறியதாக செய்தி வந்துள்ளது.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

பலுசிஸ்தானில் 7.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம்: டெல்லி வரை அதிர்வு

டெல்லி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் அதிர்வுகள் உணரப்பட்டது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. பலுசிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மாலை 5.05 மணிக்கு
டெல்லியில் அதிர்வுகள் ஏற்பட்டது. இதனால் டெல்லியில் உள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இந்த அதிர்வால் மக்கள் பீதி அடைந்தனர். மேலும் பலுசிஸ்தானில் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. மிகப் பெரிய நிலநடுக்கமாக இருப்பதால் பெருமளவில் சேதம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலத்துக்கடியில் 22 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
tamil.oneindia.in

ரஜினி இந்துதத்வா கொள்கையுடையவர் என்பதால் மோடியுடன் கூட்டு ?

திருச்சியில் வரும் 26.09.2013 வியாழக்கிழமை நடக்கும் பாஜக மாநாட்டிற்கு அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி வருகை தருகிறார். இதனையொட்டி ஒவ்வொரு ஊரிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வரும் பாஜக தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் பாஜகவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தர வேண்டும் என்றும், அவரது ரசிகர்கள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றும் பகிரங்கமாக அழைப்பு விடுத்தனர்.
ஆனால், ரஜினி மவுனமாகவே இருந்து வந்தார்.
இந்தநிலையில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ரஜினி தளம் மற்றும் ரஜினிகாந்த் தலைமையகம் என்ற பெயரில் ரஜினிகாந்திற்கு நரேந்திர மோடி பூங்கொத்து கொடுப்பது போலவும், அதில் 'உங்களத்தான் நம்புது இந்த பூமி, இனி இந்தியாவுக்கு நல்ல வழிகாமி', 'மக்களின் எதிர்பார்ப்பே ஒளிரட்டும் பாரதம்', 'பாரத தாயை மீட்க, தர்மம் காக்க வந்தவரே' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் திருச்சி மாநகரம் முழுவதும் ஒட்டி உள்ளனர்.
இந்த போஸ்டர்  nakkheeran.in

VR கிருஷ்ணய்யர் மோடிக்கு ஆதரவு ! சோஷலிசம் கம்யுனிசம் எல்லாம் பார்பன தளங்கள் ஆகிவிட்டன

வி ஆர் கிருஷ்ணய்யர்மோடிக்கு ஜே போடும் கிருஷ்ணய்யரின் இடதுசாரி பார்ப்பனியம் ராமராஜ்யம் தான் மோடியின் சுவராஜ்யம் என்பது 2002-ல் நடந்த குஜராத் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்ட வி.ஆர். கிருஷ்ணய்யருக்கு தெரியாததல்ல.! இடதுசாரி பார்ப்பனியம் !
மோடி இப்படியொரு திடீர் ஆதரவை அவரே எதிர்பார்த்திராத ஒரு நபரிடமிருந்து வருமென்று நினைத்திருக்க மாட்டார். சமீபத்தில் 63-வது பிறந்த நாளை கொண்டாடிய மோடிக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், பல முற்போக்காளர்களால் வியந்தோதப்படும் மனித உரிமைப் போராளியுமான வி.ஆர். கிருஷ்ணய்யரிடமிருந்து வாழ்த்து கடிதம் வந்திருந்தது. அதில் வரும் 2014 மக்களவைத் தேர்தலுக்கு மிகச்சரியான பிரதமர் வேட்பாளர் மோடி தான் என கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். அதற்கு மூன்று காரணங்களை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஒன்று சூரிய மின்சக்தி, இரண்டு மது ஒழிப்பு, மூன்று மோடியும தன்னைப் போலவே ஒரு சோசலிஸ்டு! வி ஆர் கிருஷ்ணய்யர்
ஏற்கெனவே கடந்த ஜூன் மாத துவக்கத்தில் மோடி பாஜகவின் தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து கிருஷ்ண அய்யர் அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் மது ஒழிப்பையும், ஊழலற்ற நிர்வாகத்தையும் குஜராத்தில் கொண்டு வரும் பட்சத்தில் நல்ல தலைவராக மோடி உருவெடுக்க முடியும் என்று வழிகாட்டியிருந்தார்.
கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்து பல முக்கிய வழக்குகளில் குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை வழங்கியவர்களில் ஒருவர் வி.ஆர்.கிருஷ்ண அய்யர் என்பதை மறுக்க முடியாது. பல வழக்குகளில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மக்கள் தரப்பில் நின்று விளக்கம் சொல்ல முயற்சித்தவர் தான்.

6 மெழுகுவர்த்திகள் படு சீரியசான பிரச்சனையை கையாண்டிருக்கும் படம்

படம் பார்க்கிற பெற்றோர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியாக 6 இருக்கும். படம் பார்த்துக்கொண்டிருக்கையில் பேச்சுலர் பசங்களோட மனசு பதறுதுன்னா பாருங்களேன்!தன் மகன் காணாமல் போக அவனையே தன் உயிராக நினைத்து வாழ்ந்த தந்தை அவனைத் தேடிப் போக, அவனைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படம். வாரம் ஒரு காமெடி என்று வரிசைக்கட்டி வரும் திரைப்படங்களில் மூழ்கி கிடக்கும் ரசிகர்களை கொஞ்சம் சீரியஸ்சாக யோசிக்க வைக்கிறார் ஷாம். கிட்டத்தட்ட பாலாவின் நான் கடவுளை நினைவு படுத்துகிற படம். அலுங்காமல் குலுங்காமல் தமிழ் திரையுலகின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் ஷாம். ஆனால் அதெல்லாம் முதல் மூன்று நான்கு படங்களோடு முடிந்துவிட்டது. இந்த சாக்லேட் ரொம்ப நாள் தாங்காது என்கிற உண்மையை அறிந்து தனக்கான உணவை தானே தயாரித்திருப்பதின் மூலம் ஆச்சயரிப்படுத்தவும் அதே சமயத்தில் அதிரவும் வைக்கிறார் ஷாம். ஷாமின் முயற்சிக்கு முதலில் சல்யூட்!மனைவி, மகன் என்று சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார் ஷாம். தன் மகனை உலகமாக நினைக்கும் ஷாம் ஓரளவிற்கு வசதியான குடும்பம் தான். ஒரு நாள் கடற்கரையில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க... கூட்டத்தில் தன் மகன் காணாமல் போகிறான். இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. போலிசில் புகார் கொடுக்கிறார்கள்.

ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்தது !

சொத்துக் குவிப்பு வழக்கில் ராஜசேகர ரெட்டி மகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனையடுத்து 16 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜெகன் ஜாமீனில் வெளியே வருகிறார வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக கைது செய்யப்பட்டு கடந்த 16 மாதங்களாக ஐதராபாத் சஞ்சல்கூடா சிறையில் ஜெகன் அடைக்கப்பட்டார். சிபிஐ நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு இவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: ப. சிதம்பரம்

து குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 78.48 சதவீத வாக்குகளைப் பெற்று, போட்டியிட்ட 38 இடங்களில் 30-ல் தமிழ்த் தேசியக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 13-வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கருதுகிறேன். மாகாணங்களில் முழு சுயாட்சி, மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு, தமிழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் சமஉரிமை, தமிழர்களின் தொன்மையான உரிமைகளை நிலைநாட்டுதல், இலங்கை அரசியலிலும், நிர்வாகத்திலும் உரிய பங்கு ஆகிய லட்சியங்களை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்று நம்புகிறேன். இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் கொண்டுள்ள கொள்கை சரியானது என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளது. சம்பந்தன், விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும் என ப. சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்

சுப்ரமணியம் சுவாமி : காந்திஜி வழியைதான் பின்பற்றுகிறார் மோடி! இன்றைய JOKE

மும்பை:பா.ஜ.க., குஜராத் முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு கட்டணம் முறையை நடைமுறைப்படுத்தியது.இம் முறைக்கு பா.ஜ.க., தலைவர் சுப்ரமணிய சுவாமி ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.கட்டாயப்படுத்தவில்லை:இதில் தவறு என்ன இருக்கிறது? மக்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்க தயாராக இருக்கிறார்கள். யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. மகாத்மா காந்தியே இந்த முறையை தான் பின்பற்றினார். அவர் கையெழுத்திடுவதிற்கு ரூ.5 கட்டணம் விதித்தார். காங்கிரஸ் கட்சியினர் கட்டணங்கள் விதித்து அதனை தங்கள் பாக்கெட்டுக்களில் திணித்து கொள்கிறார்கள். ஆனால் மற்ற கட்சியினர் கட்டண தொகையை கட்சியின் வளர்ச்சி பணிக்காக வழங்குகிறார்கள்.இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி கூறினார்.மும்பையில் போட்டியிடுவாரா

திங்கள், 23 செப்டம்பர், 2013

ஹிந்தி படங்களை தவிர்க்கும் அனுஷ்கா

பாலிவுட்டில் என்ட்ரி
அனுஷ்கா பிடிவாதம் தளருமா? பாலிவுட் படங்களில்
நடிக்காமல் ஒதுங்கும் அனுஷ்கா, பிடிவாதத்தை கைவிட முடிவு செய்துள் ளார். அதற்கு முன்னோட் டம் பார்ப்பதற்காக அவர் நடித்த படம் இந்தியில் டப்பிங் செய்து ரிலீஸ் ஆகிறது. அசின் முதல் தமன்னாவரை தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் கால்பதித்துவிட்டனர். ஆனால் வாய்ப்புகள் வந்தும் அதை ஏற்காமல் கோலிவுட், டோலி வுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் அனுஷ்கா. அவரது பிடிவாதத்தை தளர்த்த சில தயாரிப்பாளர்கள் பாலிவுட் படத்துக்கு கால்ஷீட் கேட்டு அவரை சுற்றி வருகின்றனர். அதற்கு முன்னோட்டமாக அவர் 2 வருடத்துக்கு முன் நடித்த ‘அருந்ததி படத்தை இந்தியில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்கின்றனர். தமிழில் ‘அருந்ததி டப்பிங் ஆகி ரிலீஸ் ஆனபோது வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பாலிவுட் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டதுடன் அனுஷ்கா நடித்த வேடத்தில் கரீனா கபூர் அல்லது ஐஸ்வர்ய£ ராய் இருவரில் ஒருவரை நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டனர். பிறகு அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது அப்படத்தை அதேபெயரில் இந்தியில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்கின்றனர். இந்த படத்தால் பாலிவுட் வாய்ப்பு கிடைத்தால் அதை ஏற்க அனுஷ்கா முடிவு செய்துள்ளாராம். tamilmurasu.org

Pakistan கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 83 பலி

பாகிஸ்தானின் பெஷாவர் நகர், கீசா கவானி பஜாரில் உள்ள கிறிஸ்தவ
தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் 600 பேர் பங்கேற்றனர். பின்னர் பிரார்த்தனை முடிந்து மக்கள் தேவாலயத்தை விட்டு வெளியே வந்தபோது அவர்களை குறிவைத்து இரு இடங்களில் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் தூக்கி வீசப்பட்ட மக்கள் துடித்துடித்து இறந்தனர். அந்த பகுதி முழுவதும் சடலங்களாக காட்சியளித்தது. பலர் ரத்தம் சொட்டச் சொட்ட துடித்துக்கொண்டிருந்தனர். இன்று காலை நிலவரப்படி 78 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. பலர் உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் கொல்லப்பட்டனர். தேவாலயத்திற்கு வாரம் தோறும் வந்து இசைக் கருவிகள் வாசிக்கும் ரியாஷ் மாசிஹ் அவரது மகன்கள் இம்தியாஸ், பிலால் ஆகியோரும் தப்பவில்லை.

நபிகள் நாயகத்தின் தாய் பெயர் தெரியாததால் சுட்டு கொலை ! கென்யா வணிக வளாகத்தில் தமிழர் படுகொலை

Kenya  தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட் கோஸ்ட் வணிக வளாக
கட்டிடத்திற்குள் அல்கொய்தாவுடன் தொடர்புடைய சோமாலியாவை சேர்ந்த அல் ஷபாப் இஸ்லாமிய தீவிரவாதிகள் சனிக்கிழமை அன்று புகுந்தனர். கையெறிக்குண்டுகளை வீசிய அவர்கள் பிறகு கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் நடராஜன் உள்பட இரு இந்தியர்கள் கொல்லப்பட்டனர். ஸ்ரீதரின் மனைவியும் படுகாயமடைந்தார். மொத்தம் 68 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்தவர்களை மனித கேடயமாக பிடித்து வைத்துக்கொண்டு பாதுகாப்பு படையினரிடம் தொடர்ந்து அவர்கள் சண்டையிட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஜோஷூவா ஹக்கீம் வெளியில் வந்து லண்டன் செய்தி நிறுவனம் ஒன்றிக்கு பேட்டியளித்தார். அப்போது இந்த தாக்குதல் குறித்து ஹக்கீம் கூறியதாவது:- முதுகில் ஆயுதங்களை சுமந்து கையில் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளுடன் இளம் தீவிரவாதிகள் வணிக வளாகத்திற்குள் வந்ததை
கண்டேன். பிறகு அவர்கள் மாலில் இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இடையே, அவர்கள் முஸ்லிம்களை
அடையாளம் தெரிந்து கொள்வதற்காக அழைத்தனர்.

வாடகை தாய் வியாபாரத்தில் குஜராத் உலகிலேயே முதலிடம் ! மோடியின் முன்னேற்றம்(?) பாரீர் !

வாடகைத் தாய்மார்கள்
ருபத்து நான்கு மணி நேரமும், தடையில்லா மின்சாரம், மாநிலம் முழுவதும் தண்ணீர் விநியோகம், அபரிமிதமான விவசாய வளர்ச்சி, வந்து குவியும் அந்நிய முதலீடுகள், அவை உருவாக்கும் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் என மோடியின் குஜராத் குறித்து பொய்யானதொரு பிம்பம் உருவாக்கப்படுகின்றது. இவற்றுக்கு மத்தியில் குஜராத் குறித்த உண்மைச் செய்திகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அம்மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படியே கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் குஜராத்தில் வறுமைக் கோட்டுக்குக்  கீழ்  உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 39.06% அதிகரித்துள்ளது.  கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியில் தமிழ்நாடு, ஆந்திராவிற்குப் பின்னால் இந்தியாவிலேயே 11வது இடத்தில் குஜராத் இருக்கிறது.
ஆனால் வேறொரு விசயத்தில் உலகிலேயே முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கிறது குஜராத். பணத்திற்காகத் தாய்மையை விற்கும் பரிதாபத்துக்குரிய வாடகைத் தாய்களின் எண்ணிக்கையில் உலகளவில் குஜராத்துக்குத்தான் முதலிடம்.

கற்பழிப்பு போன்ற குற்றச்செயல்களில் மைனர்கள் தப்ப முடியாது ! அவர்களும் மேஜர்களாக கருதப்படுவர்! வருகிறது சட்டம்

புதுடெல்லி:கொலை, பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடும் 16
வயதுக்கு மேற்பட்ட மைனர்களை வயது வந்தவர்களாக கருதி கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பதினெட்டு வயதுக்கு குறைவானர்கள் கொலை, பலாத்காரம் போன்ற கொடூரமான குற்றங்கள் புரிந்தாலும் அதிகபட்சம் அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே வழங்க முடியும். அண்மைக்காலமாக பலாத்கார குற்றங்களில் மைனர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் மிகவும் கொடூரமாக நடந்து கொண்ட இளம் குற்றவாளிக்கு சிறார் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே வழங்கியது. அதே சமயம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதே போல் மும்பை பெண் பத்திரிகையாளர் பலாத்கார வழக்கிலும் இளம் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதிகபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே கிடைக்கும். மைனர்களின் வயது வரம்பை 18 லிருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என பல்வேறு பெண்கள் மற்றும் சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்தன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. வயது வரம்பை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட தள்ளுபடி செய்து விட்டது

நரேந்திரமோடி, ராகுல் காந்திக்கு வாய்ப்பு இல்லை! 3–வது அணி ஆட்சி அமைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நம்பிக்கை

டெல்லி,மத்தியில் நரரேந்திரமோடி அல்லது ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்றும், 3–வது அணிக்குத்தான் வாய்ப்பு இருப்பதாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சீதாராம் யச்சூரி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து கூறியதாவது–
‘நமோ – ராகா’
‘‘அடுத்த பிரதமர் ‘நமோ’தான் (நரேந்திர மோடி) என்று பா.ஜனதாவினரும், ‘ராகா’தான் (ராகுல் காந்தி) என்று காங்கிரசாரும் கூறி வருகிறார்கள். ஆனால், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில், இந்த இரு கட்சிகளுமே இடம் பெறாத 3–வது மாற்று அணிதான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.
இரு பிரதான கட்சிகளும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் தங்கள் தேர்தல் கணக்குகளைப் போட்டு வருகிறார்கள். ஆனால், ஆட்சி அமைக்கும் தலைவர் யார்? என்பதை விட, மாற்று அரசியலே தற்போது மக்களுக்கு தேவையாகும்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ராஜீவ் காந்தியின் ஆத்மாவிடம் தமிழ் தலைவர்கள் பாவ மன்னிப்பு கேட்கவேண்டும்

சரியாக இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்து
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்
மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை அரசு வடக்கில் இன்று உருவாக்கி உள்ளது ,இதற்காக  உயிர்கொடுத்தவர்கள் பலர் ,ராஜீவ் காந்தி முதல் கொண்டு பத்மநாபா என்று இந்த பட்டியல் நீளும் ,  இந்த மாகாண சபைக்கு உண்மையில் சிங்கள மக்கள் பெரிதாக எதிர்ப்பு காட்டவில்லை ,  ஆனால் இந்த பொன்னான வாய்ப்பை தட்டி கொட்டி வெறியாட்டம் போடவேண்டும் என்று திட்டம் போட்டு  சகல அநியாயங்களையும் கட்டவிழ்த்து விட்டது பிரபாகரன் என்ற பயங்கரவாதிதான் . அந்த பயங்கரவாதியை  அன்று பலர் ஆதரித்தனர், பயத்தினாலோ அல்லது அறிவின்மையாலோ அல்லாது உண்மையில் தங்கள் சுயநலங்களை தக்க வைக்கவே அவ்வாறு நடந்து கொண்டனர்,
அமரர் ராஜீவ் காந்தி அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் அன்று இணைந்த வடகிழக்கு மாகாண அரசு அமைந்தது , அதில் அளிக்கப்பட்ட உரிமைகள் போதாது போன்ற கோஷங்களை எழுப்பி புலிகள் அதை இல்லாமல் செய்துவிட்டனர், அது மட்டுமல்ல அதில் பங்கு பற்றிய பலரையும் கொலையும் செய்து விட்டனர், அதன் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தப்பி இந்தியாவுக்கு சென்று விட்டார் . அங்கு சென்ற இதர பிரமுகர்களையும் புலிகள் தேடி தேடி கொன்றனர் , அவர்களின் கொலையில் இருந்து மயிரிழையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தப்பினார் , பின்பு அவரே புலி விசுவாசியாக மாறினார், அவர் மட்டுமல்ல அடைக்கலநாதன் சிவாஜிலிங்கம் சேனாதிராஜா சம்பந்தர் போன்ற எல்லோரது கதையும் அதுதான் , புலிக்கு பயந்து பின் புலியையே ஆதரித்து அதன் பின் அவர்கள் அழிந்ததும் அப்பாடா என்று ஒருமாதிரியாக இன்று தேர்தல்களின் நின்று வெற்றிகளும் பெற்று ஆசான்களில் அமர்ந்து விட்டனர்,
இவர்களுக்கு இன்று பயங்கரவாத பயம் இல்லாத  வாழ்வை  கொடுத்தது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சதான் ,