சனி, 27 அக்டோபர், 2012

பாலினங்கள் இரண்டல்ல, இருபதுக்கும் மேல்


பாலினம் என்று சொன்னால் உடனடியாக ஆண், பெண் ஆகிய இரண்டும்தான் நம் நினைவுக்கு வரும். இன்னும் கொஞ்சம் யோசித்தால் திருநங்கைகள் நினைவுக்கு வரலாம். உண்மையில், ஆண், பெண், திருநர் தவிர்த்து இருபதுக்கும் மேற்பட்ட பாலினங்கள் உலகில் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. பாலினம் (Gender) என்பது வேறு,  பாலியல் -ஒருங்கினைவு (Sexual Orientation) என்பது வேறு. பொதுவாக, மக்களிடம் ஆண், பெண் பற்றிய விழிப்புணர்வே மேலோங்கி நிற்கிறது. சமீபகாலமாகத்தான் திருநங்கைகளமீது  வெளிச்சம் பரவத் தொடங்கியிருக்கிறது.
என்னென்ன பாலினங்கள் இருக்கின்றன என்று சுருக்கமாகப் பார்ப்போம்.

குடிகாரக் கட்சியை உடைக்க புரட்சித்தலைவி முயற்சி

கருணைப் பெருங்கடலான காவியத்தாய்
முதல்வர் என்கிற பதவிக்கே பெருமை சேர்க்கும் முதல்வராக மாண்புமிகு தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விளங்குகிறார்கள். அவரது கருணைப்பார்வையில் தமிழகம் உலகின் நெ.1 மாநிலமாக விளங்குகிறது. அதனால்தான் லக்கிலுக் என்கிற பதிவர்கூட “புரட்சித்தலைவி தாயுள்ளம் கொண்டவர் என்பதிலோ, கருணைக்கடல் என்பதிலோ ஐயம் இருந்தால்கழுவில் ஏற்றப்பட தகுதியானவர்கள் ஆவோம்” என்று ஒபாமாவுக்கே அரசியல் பாடம் எடுக்கும் தங்கத்தாரகை டாக்டர் அம்மாவைப் பற்றி புகழ்ந்து எழுதியிருக்கிறார்.
கடந்த தேர்தலில் திருவாரூர் திம்மியான தீயசக்தியை ஓட ஓட விரட்டி, எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு கூட வக்கில்லாதவாறு அம்மா முடக்கினார் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. மக்கள் மீது கருணை கொண்டே கருணைப் பெருங்கடலான காவியத்தாய் இத்தகைய இரும்புக்கர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் வேறுவழியில்லாமல் குடிகார கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தையும், போனால் போகிறதென்கிற கருணைப்பார்வையோடு தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வரும், புரட்சித்தலைவியும், கழகப் பொதுச்செயலாளருமான காவிரி தந்த கலைச்செல்வி வழங்கியிருந்தார்.

விஜயகாந்த: நாய்..நாய்..மைக்கைத் தூக்கிட்டு வந்துறீங்க.. அடிச்சுருவேன் பத்திரிகையாளர்களை கேவலமாக

 Vijayakanth Slam Media சென்னை: தேமுதிக எம்.எல்.ஏக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது பற்றி கேள்வி எழுப்பியதற்கு பத்திரிகையாளர்களை சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்துவிட்டார் அக்கட்சி தலைவர் விஜயகாந்த். விஜயகாந்த் உடன் வந்த தேமுதிக எம்.எல்.ஏ. தாக்கியதில் மூத்த பத்திரிகையாளர் பாலு காயமடைந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தேமுதிக எம்.எல்.ஏக்கள் சுந்தரராஜனும் தமிழ் அழகனும் சந்தித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து தேமுதிகவில் பிளவு வெளிப்படையாக வெடித்தது.
இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் மதுரை செல்வதற்காக வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் மூத்த பத்திரிகையாளர் பாலு கேள்வி எழுப்ப சட்டென கோபமடைந்து ‘போய்யா..போய்.ய்யா' என்று கடுப்பாக மிரட்டினார்.
ஜெயலலிதாவிடம் கேளுங்க...

ஜெயலலிதாவுக்கு துக்கையாண்டி DGP மீது பழிவாங்கும் வெறி. ? முன்பு ஜெயாவை கைது செய்தாய்ங்க

IMG_0002இன்று வெளிவந்த நக்கீரன் இதழில் கூடுதல் டிஜிபி துக்கையாண்டி பணி இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து ஒரு கட்டுரை வந்துள்ளது. அந்தக் கட்டுரையை பார்ப்போம்.

IMG_0001‘இவருக்கே இந்த நிலைமைன்னா, நம்முடைய நிலைமையும் எப்படி வேணும்னாலும் ஆகலாம். இதுக்கா இந்த வேலைக்கு வந்தோம்’ – தமிழக போலீஸ் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் சந்தித்துக்கொள்ளும்போது வெளிப்படும் வார்த்தைகள் இப்படித்தான் இருக்கிறது. இவர் என்று இவர்கள் சொல்வது கூடுதல் டிஜிபி துக்கையாண்டியைத்தான்.
1986ல் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நேரடி டிஎஸ்பியாக பணிக்கு வந்தவர் துக்கையாண்டி.   2012 ஜுன் 30ந் தேதி அவருடைய ரிடையர்மென்ட் நாள்.  டிஜிபி அந்தஸ்தில் இருக்கிறவங்களுக்கு கன்மேன் அணிவகுப்போடு ரிடையர்மென்ட் கொடுப்பாங்க. அதுதான் சர்வீசுக்கு கிடைக்கிற கௌரவம். அந்த கௌரவம் பெறக்கூடிய முழுத்தகுதியும் உள்ளவர்தான் துக்கையாண்டி.  ஆனா, அந்த கௌரவம் கிடைக்கக் கூடாதுங்கிறதுக்காக, இப்படியா ரிடையர்மெண்டுக்கு முதல் நாள் சஸ்பெண்ட் பண்ணுவாங்க ?“ என அதிர்ச்சி விலகாமல் பேசிக்கொள்கிறார்கள். , இந்த ஆட்சியில் பவர்புல்லான போஸ்டிங்கில் இருக்கும் காக்கி அதிகாரிகள்.  துக்கையாண்டி மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைகளால் உறைந்து போயிருக்கும் உயர்அதிகாரிகள் பலரும், இந்த அரசாங்கம் செய்த பெரிய தவறு இது என்று சொல்வது ஆச்சரியமான உண்மை

America கடத்தப்பட்ட 10 மாத இந்திய குழந்தை மரணம் கடத்தி கொன்றவரும் இந்தியர்


ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகளின் குழந்தை சான்வி வென்னா, கடந்த திங்களன்று அவர்களது குடியிருப்பில் இருந்து கடத்திச் செல்லப்பட்டது. குழந்தையைக் கடத்தியவர்கள், குழந்தையை கவனித்து வந்த அதன் பாட்டியைக் கொலை செய்துவிட்டு குழந்தையைச் கடத்திச் சென்றனர்.
இந்த நிலையில், பணம் கேட்டு மிரட்டுவதற்காக குழந்தையைக் கடத்திச் சென்றது பெற்றோரின் குடும்ப நண்பர் ரகுநந்தன் யந்தாமுரி என்பதும், அவர் குழந்தையை சூட்கேசில் அடைத்து வைத்திருந்ததால், குழந்தை மூச்சு விட முடியாமல் இறந்துவிட்டதும் தெரிய வந்துள்ளது.
பெற்றோருடன் சேர்ந்து, குழந்தையை கடத்தியவரும், குழந்தையைத் தேடுவது போல நாடகமாடியிருப்பது அம்பலமாகியுள்ளது.
குழந்தையை கடத்தியவர் மீது கொலை, கடத்தல், கொள்ளை, மோசடி, திருட்டு ஆகிய வழக்குகளை பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரை கைது செய்துள்ளனர் http://tamil.oneindia.in/

மேலும் இரு தேமுதிக MLA க்களுடன் ஜெயா வளர்ச்சிப்பணி பற்றி ஆய்வு

 2 Dmdk Mlas Meets Jayalalitha தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் முதல்வரை சந்தித்து பேச்சு விஜயகாந்த் கட்சி சீக்கிரம் டமால் 

சென்னை : முதல்வர் ஜெயலலிதாவை மேலும் இரு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியுள்ளனர். அருண்பாண்டியன் மற்றும் மைக்கேல் ராயப்பன் ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேசியுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏவான அருண்பாண்டியன், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் ஆகியோர் சினிமாத்துறையை சேர்ந்தவர்கள். தேமுதிக கட்சித்தலைவர் விஜயகாந்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்கள் இருவரும் இன்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தொகுதியின் வளர்ச்சி குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமையன்று மதுரை மத்திய தொகுதி சுந்தரராஜன் மற்றும் திட்டக்குடி தமிழழகன் ஆகிய இரு தேமுதிக எம்.எல்.ஏக்களும் முதல்வர் ஜெயலலிதாவை திடீரென நேரில் சந்தித்துப் பேசினர். முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.

SSJ முதல் பரிசு பெறும் தகுதி பிரகதிக்கே உள்ளது

Super Singer Junior 3. ஏ. ஆர். ரகுமான் அவர்கள் முன்னிலையில், தம்பி அஜீத்  வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றே கருதியிருந்தேன். ஏனெனில் டாப் ஐந்தில் வராதவர் பைனலில் வெற்றி பெற்றால் தானே ஒரு கிக்.
என்னதான் குரல்களின் மயக்கம் நம்மை யோசிக்க விடாமல் செய்தாலும் நம்மால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை... விஜய் தொலைக் காட்சி தனது சில்மிஷங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. கடந்த முறை அதிக எஸ் எம் எஸ்கள் பெற்று சாய் வெற்றி பெற்றார் என்று மட்டும்தான் சொன்னது. இந்த முறையும் அதே போல அதிக வாக்கு என்னிக்கையில் இவர் வெற்றி பெற்றார் என்றுதான்  சொன்னார்கள். இந்த முறை வைல்ட் கார்டில் எண்ணிக்கை சொன்னவர்கள் பைனலில் எண்ணிக்கைகளைச் சொல்ல வில்லை.  இருந்தாலும் கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை ரிசல்ட் சரியாக இருந்தது போலவே தோன்றியது - இருந்தாலும் சில கேள்விகள் இல்லாமல் இல்லை. ஒரு SMS க்கு ஆறு ரூபாய் வருமானம் பார்த்த vijay tv அதில் மட்டுமே குறியாக இருப்பது வர்த்தக தர்மமே 
ஏற்கனவே மூன்று இந்து தம்பி தங்கைகள் பைனலில் சேர்ந்து விட்ட பிறகு வைல்ட் கார்டில் இருந்து பைனலில் வர வேண்டியது ஒரு இஸ்லாமிய மற்றும் கிறித்தவ குழந்தை.... அது அப்படியே நடந்தது.  இப்படித்தான் நடக்கும் என்பதை நான் எதிர் பார்த்திருந்தேன். என் நண்பர் ஒருவரிடம் அதைப் பற்றி முண்பே சொல்லியிருந்தேன். அது அப்படியே நடந்ததைப் பார்த்த பிறகு ஒன்று  ஜோசியம் சொல்லலாம்

மதுரை ஆதீன நித்தி டிஸ்மிஸ்! ஒரு செட்டப் விளையாட்டு

அருணகிரிநாதரின் ‘நித்தி டிஸ்மிஸ்’: எல்லாமே ஒரு செட்டப் விளையாட்டு அல்லவா? அருணகிரிநாதரின் டிஸ்மிஸ் ஆர்டரை எடுத்துக்கொண்டு கோர்ட்டுக்கு போனால், நித்திக்கு 100 சதவீத வெற்றி நிச்சயம். அது அவருக்கும் தெரிந்த நிலையிலும், பதுங்குகிறார்.

Viruvirupu
மதுரை ஆதீனத்தில் இருந்து நித்தி வெளியேற்றப்பட்டது, “சிவபெருமான கனவில் வந்து சொன்னார், ஆளை டிஸ்மிஸ் பண்ணி அனுப்பி விட்டேன்” என்று அருணகிரிநாதர் சொல்வதுபோல சுலபமான விவகாரம் கிடையாது. சட்டப்படி, நித்தியை அவ்வளவு சுலபமாக நீக்கவும் முடியாது.
வயலில் வேலை செய்யும் ஆளை வரப்பில் நின்றுகொண்டு, “போதும், நீ கிளம்புப்பா” என்று சொல்லக்கூடிய அளவில் சுலபமல்ல இது. இது நித்திக்கும் நன்றாகவே தெரியும்.
இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்ட ஒருவரை நீக்க வேண்டுமானால், அதற்கென நடைமுறைகள் உள்ளன. நீக்கப்படும் நபருக்கு நோட்டீஸ் அனுப்பி, 15 நாட்கள் அவகாசம் கொடுத்து விளக்கம் கேட்க வேண்டும். அதன்பின், “உங்கள் பதிலில் திருப்தி இல்லை” என்று எழுத்து மூலம் காரணம் கூறித்தான், அவரை நீக்க முடியும்.

SunTV ஐ.பி.எல் அணியை அன்டர்-த-டேபிள் அன்பளிப்பாக பெற்றது” திடீர் குற்றச்சாட்டு!

Viruvirupu
சன் டிவி குழுமம், ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட புதிய ஐ.பி.எல் அணியை வாங்கியுள்ளதில் அன்டர்-த-டேபிள் டீல் ஒன்று உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார், முன்னாள் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி.
பி.சி.சி.ஐ. (BCCI – Board of Control for Cricket in India) தலைவர் சீனிவாசனுக்கும், கலாநிதி மாறனின் சன் குழுமத்துக்கும் இடையே உள்ளது இந்த ரகசிய டீல் என்பது, அவரது குற்றச்சாட்டு. “இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் நட்பு நிறுவனமான சன் டிவி குழுமத்திற்கு, புதிய ஐ.பி.எல். அணியின் உரிமம் அன்பளிப்பாக அளிக்கப்பட்டுள்ளது” என்கிறார், இந்த முன்னாள் தலைவர்.

சொத்து பரிமாற்றம்?? விஜயகாந்த் குடும்பத்தாருடன் சுந்தர்ராஜன் MLA

மக்களையும், தெய்வத்தையும் நம்பும் விஜயகாந்தை நம்பி;மோசம் போனேன் : சுந்தர்ராஜன் புலம்பல்மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தர்ராஜன், திட்டக்குடி எம்எல்ஏ தமிழழகன் ஆகியோர் கடந்த 6 மாதமாக விஜயகாந்த் குடும்பத்தாருடன் கருத்து மோதல் ஏற்பட்டு கட்சியில் இருந்து விலகியே காணப்பட்டனர்.இந்த நிலையில் இருவரும் தமிழக முதல் அமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை நேற்று (26/10/2012) காலை சந்தித்தனர்.இச்சந்திப்பு குறித்து சுந்தர்ராஜன்,’என் தொகுதியில், கால்வாய், பாலங்கள் கட்டுவது தொடர்பாக முதல்வரை சந்தித்து, 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தேன்.முதல்வரை முதல் முறை சந்தித்தாலும், நல்ல மரியாதையுடன் நடத்தினார். ஆனால், 50 ஆண்டுகாலம் நண்பராக இருந்தவர், என்னை அவமானப்படுத்துகிறார். குடும்ப ஆட்சி என்று கோஷம் போடும், அவரது கட்சியில் மட்டும் என்ன நடக்கிறது. இதை கட்சியில் உள்ள அனைவரும் நினைத்து பார்க்க வேண்டும்.மக்களையும், தெய்வத்தையும் மட்டுமே நம்புவதாக விஜயகாந்த் கூறுகிறார். ஆனால், 50 ஆண்டுகள் அவரை மட்டுமே நம்பியதற்கு இப்போது நான் பாடம் கற்று விட்டேன்.& நான் விஜயகாந்திடம் சொத்தை எதிர்பார்க்கவில்லை; நல்ல நட்பைத்தான் எதிர்பார்த்தேன். நண்பர்களாக இருந்தவர்களுக்கே, கட்சியில் இந்த நிலைமை என்றால் மற்றவர்களுக்கு, என்ன நிலை ஏற்படும் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஸ்டாலின் சொல்றது பொய்- அழகிரி

 Alagiri Has Only Endorsed My Stand Stalin ரெக்கமண்டேச’னுக்கு இடமில்லை- ஸ்டாலின்!; 'ரெக்கமண்டேசனை ஏற்றதே இல்லையா?' - அழகிரி

மதுரை: திமுகவில் டி.ஆர்.பாலு மற்றும் பழனி மாணிக்கம் இடையேயான மோதல் குறித்து இரவெல்லாம் தூங்கவில்லை என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி புலம்பி சில நாட்கள் கூட ஆகிவிடவில்லை. தற்போது கருணாநிதியின் மகன்களான மு.க. அழகிரியும் மு.க. ஸ்டாலினும் பகிரங்கமாக கருத்து மோதலை வெளிப்படுத்தியுள்ளனர்.
பரிந்துரைக்கு இடமில்லை- ஸ்டாலின்
மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி நிர்வாகிள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதில் பரிந்துரைக்கு இடமில்லை என ஏற்கெனவே நான் கயித்ட்ருக்கிறேன். எனது இக்கருத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கருத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் உண்மை புரியும். ஆகவே, திமுக இளைஞரணி நிர்வாகிகள் நேர்முகத் தேர்வு நடத்தி தகுதி அடிப்படையிலே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.http://tamil.oneindia.in/news/2012/10/27/tamilnadu-alagiri-has-only-endorsed-my-stand-stalin-163729.html

படப்பிடிப்பில் அழுத அனுஷ்கா! கோடம்பாக்கம் மாபியா சங்கங்கள்


அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில் அழுத அனுஷ்கா
தனக்கென்று சொந்தமாக மேக் அப் பெண் வைத்துள்ளார் அனுஷ்கா. கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில்தான் இதற்கான சிக்கல் உருவானது. யூனியனில் மெம்பராக இல்லாதவரை மேக் அப் போட அனுமதிக்க முடியாது என்று கண்டபடி திட்டி அனுஷ்காவை அழவைத்தனர் சங்க உறுப்பினர்கள்.

இதனை மனதில் வைத்துக்கொண்டிருந்த அனுஷ்கா ஜார்ஜியாவில் நடந்த ‘இரண்டாம் உலகம்' படப்பிடிப்பில் யூனிட்டை சேர்ந்தவர்களுக்கு எந்த பரிசும் வழங்காமல் வெறும் விருந்துடன் நிறுத்திக் கொண்டாராம்
ஜார்ஜியாவில் தனக்கு கார் ஓட்டிய டிரைவருக்கு மட்டும் கார் வாங்கிக் கொடுத்துள்ளார் அனுஷ்கா. இதை பெருமையுடன் அந்த டிரைவர் சொன்னபோது இது தங்களை சீண்டிப்பார்க்கும் செயல் என்று பொருமியுள்ளனர் யூனிட்டை சேர்ந்தவர்கள்.
நான் நடிக்கவேண்டும் என்றால் என்னுடைய மேக் அப் பெண்தான் என்முகத்தை தொட்டு மேக் அப் போடவேண்டும் என்பது அனுஷ்காவின் வாதம்

சிபாரிசுக்கே இடமில்லேண்ணே...!': ஸ்டாலின் திட்டவட்டம்

மதுரை:""தி.மு.க., நிர்வாகிகள் தேர்வில், சிபாரிசுகளுக்கு இடமில்லை; நிர்வாகிகள் நேர்மையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.மதுரையில் நேற்று முன்தினம், "இளைஞரணி நிர்வாகிகள் தேர்வில், என் சிபாரிசுகள் ஏற்கப்படவில்லை' என, மத்திய அமைச்சர் அழகிரி, குற்றம் சாட்டியிருந்த நிலையில், அவருக்கு ஸ்டாலின் இவ்வாறு பதில் அளித்துள்ளார். திரும்ப திரும்ப சொன்னாலும் உண்மை உண்மை தான் , பொய் பொய் தான்
தூத்துக்குடி தி.மு.க., செயலர் பெரியசாமி, நில அபகரிப்பு வழக்கில் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்டாலின் நேற்று அவரை சந்தித்தார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:பெரியசாமி மீது, அ.தி.மு.க., அரசு பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளது. அவரது உடல் நலம் குறித்து விசாரித்தேன். தெம்புடனும், துணிச்சலுடனும் உள்ளார். வழக்கை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளார்.  dinamalar,com

MGR: ரமணி என் படப்பாடல்களைப் பாடி மன அமைதியை இழந்த என்னை ச்ந்தோசப்படுத்தி விட்டார்!

உயிர் என்று ஒரு படம் 1971ல் வெளிவந்தது. முத்துராமன்,சரோஜாதேவி,லட்சுமி,நாகேஷ் நடித்த படம்.
பி.ஆர்.சோமு இயக்கத்த்தில்.அந்தப்படம் ரொம்ப சொற்ப நாளில் தயாரிக்கப்பட்டது.படத்தின் துவக்கத்தில் டைரக்டர் சோமு ஃபுல்சூட்டில் வந்து ஒரு குளோபை உருட்டியவாறு ”இறைவன் படைக்கும்போது மனிதனுக்கு கையை கொடுக்க மறக்கலாம்.காலைக்கொடுக்க மறக்கலாம்.கண்ணைக்கொடுக்ககூட மறக்கலாம்.ஆனால் எதைக்கொடுக்க மறந்தாலுமஆண்டவன்  ஒன்றை மட்டும் கொடுக்க மறப்பதே இல்லை. அது உயிர்!உயிர்!உயிர்!” (டைட்டில் ஆரம்பம்!)

பி.ஆர் சோமு அதற்கு முன் தெய்வசங்கல்பம்(1969) ஏ.வி.எம்.ராஜன் ,விஜயகுமாரி, முத்துராமன் நடிப்பில் இயக்கியவர்.
உயிர் படத்திற்குப்பிறகு எங்கள் குலதெய்வம், அழைத்தால் வருவேன், ராஜா யுவராஜா, சர்வம் சக்தி மையம் தாயே நீயே துணைபோன்ற படங்கள் இயக்கியவர்   . http://rprajanayahem.blogspot.com/2012/10/blog-post_26.html

கேப்டன்' கப்பலில் ஓட்டை விழுந்தது எப்படி? :பரபரப்பான பின்னணி

சொத்துக்கள் பராமரிப்பில் தகராறு ஏற்பட்டதால் ”ந்தர்ராஜனும், தன் மீதான வழக்குகள் குறித்து கட்சி தலைமை கண்டு கொள்ளாததால் தமிழழகனும்,தே.மு.தி.க., தலைமை மீது, அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் காரணமாக@வ, இவர்கள், முதல்வருடன் அதிரடி சந்திப்பு நடந்துள்ளதாக,தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 61; விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்; தே.மு.தி.க., துவங்கியதில் இருந்தே, அக்கட்சி பொருளாளராக இருந்து வருகிறார். விஜயகாந்தின் சினிமா, அரசியல், சொந்த விஷயங்கள், முழுவதையும் அறிந்த, வெளி நபர்களில் இவர் முக்கியமானவர்.
கேட்டு பெற்ற தொகுதி:
கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, மதுரை மத்திய தொகுதியில் ராஜன் செல்லப்பா போட்டியிடுவார் என, அ.தி.மு.க., அறிவித்தது.

பாடகி சின்மயி விவகாரத்தில் திருப்பம்! சின்மயி மீது போலீஸில் புகார்!!


இவர் மீதும் புகார்
ஏற்கனவே மீடியாவிலும், சமூக இணையதளங்களிலும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டுள்ள பாடகி சின்மயி விவகாரத்தில், அடுத்த திருப்பம். பாடகி சின்மயி மீது, சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூகங்களுக்கு இடையே பகையுணர்வை ஏற்படுத்துகிறார் என்பது புகார்.
“என்னை ஆபாசமாக அர்ச்சனை செய்கிறார்கள்” என்று பாடகி சின்மயி முதலில் காவல்துறையின் கதவுகளை தட்டினார். இருவரை கைது செய்தது காவல்துறை. அதன்பின், சின்மயியால் குற்றம்சாட்டப்பட்ட எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம், குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், “புகாரை வாபஸ் வாங்காவிட்டால், சின்மயி மீது மானநஷ்ட வழக்கு போடுவேன்” என்றார்.
இப்போது, அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறைத் தலைவர் நீலமேகம் என்பவர், சின்மயி மீது புகார் கூறியுள்ளார். பாடகி சின்மயி சமூக வலைத்தளத்தில் தாழ்த்தப்பட்ட மீனவர் சமுதாயம் பற்றி அவதூறு கருத்து வெளியிட்டதாகவும், மேலும் இடஒதுக்கீடு தேவையில்லை என்று சின்மயி வலைத்தளத்தில் எழுதியுள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. viruviruppu.com

Super Singer Junior 3 ஆஜித் முதல் பரிசை வென்றார்

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன்-3 கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் போட்டியாளர்களை தேர்வு செய்தனர். இறுதியில் 25 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல சுற்றுகள் மூலம் இறுதிப்போட்டிக்கு 5 பேர் தகுதிப்பெற்றனர். தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன்-3 இறுதி போட்டி நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரகுமான், மனோ, சித்ரா, மால்குடி சுபா மற்றும் பலர் முன்னிலையில் போட்டியாளர்களான யாழினி, ஆஜித், சுகன்யா, பிரகதி, கௌதம் ஆகியோர் தனது திறமைகளை வெளிப்படுத்தினர். எஸ்.எம்.எஸ். மூலம் முதல் இடத்தைப் பிடிதவரை ஏ.ஆர். ரகுமான் அறிவித்தார். பேர்களில் ஆஜித்யை ஏ.ஆர். ரகுமான் வெற்றி பெற்றவராக அறிவித்தார். இவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு பெற்ற பிரகதிக்கு 5 லட்சம் மதிப்புள்ள பரிசும், 3-வது பரிசுப்பெற்ற யாழினிக்கு 3 லட்சம் மதிப்புள்ள பரிசும், 4-வது பரிசுகள் பெற்ற சுகன்யா மற்றும் கௌதமுக்கு 2 லட்சம் மதிப்புள்ள பரிசும் வழங்கப்பட்டது.
 இந்த தெரிவு முறையானது பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளது தெரிந்ததே 

தமிழகத்தை இருண்ட நாடாக ஆக்கிய ஜெயலலிதாவுக்கு மின்சாரம் பற்றி பேச தகுதியில்லை: கலைஞர் பதிலடி


தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் மின்தட்டுப்பாடு குறித்து முதல்வர் ஜெயலலிதா 26,10,2012 அன்று விளக்கம் அளித்தார். அப்போது கடந்த கால தி.மு.க. ஆட்சிதான் மின்தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து தி.மு.க. தலைவர் கலைஞர் நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- தமிழகத்திலே உள்ள மின்சாரப் பற்றாக்குறைக்கெல்லாம் கடந்த கால அரசுதான் காரணம் என்றும், அப்போது மின் உற்பத்திக்காக தொடர் முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்றும் திடீரென்று முதலமைச்சர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
பதில்:- மின்சாரத்தைப் பற்றி பேசுவதற்கோ, அறிக்கை விடுவதற்கோ - இன்றைக்கு தமிழ்நாட்டையே இருண்ட நாடாக
ஆக்கியிருக்கின்ற முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
கேள்வி :- தொழில்நுட்ப ரீதியாக மத்திய அரசிடமிருந்தும், மற்ற மாநிலங்களிலிருந்தும் மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கான வழி வகைகளை உங்கள் காலத்தில் காணவில்லை என்றும், தி.மு.க.வும் காங்கிரசும் இதில் எந்தவிதமான அக்கறையும் காட்டவில்லை என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
பதில்:- இப்போது ஆட்சியில் அவர்தானே இருக்கிறார். அவர் முதலில் அக்கறை காட்டட்டும். மூன்று மாதங்களில் மின் தட்டுப்பாடே இல்லாமல் செய்கிறோம் என்று சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்.

வெள்ளி, 26 அக்டோபர், 2012

பழைய' மயிலு ரிலீசாகிறது

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படம் மயிலு. பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வெளியாவதே சந்தேகம் என்றாகிவிட்ட இந்தப் படம், இப்போதுதான் வெளியாகிறது. மோசர் பேயரின் கடைசி படமாக இருக்குமோ என்று கிசுகிசுக்க வைக்கும் அளவு ரொம்ப டல்லடித்துப்போய் ரிலீசாகிறது படம். இளையராஜா இசையில் பாடல்கள் ஏற்கெனவே பிரபலமாகிவிட்டது மட்டுமே ப்ளஸ்.இது ஒரு பிரகாஷ் ராஜின் தயாரிப்பு 

போலீசிடமிருந்து பொதுமக்களை எப்படிபாதுகாப்பது

‘‘போலீசாரைச் சுதந்திரமாகச் செயல்படவிட்டால்தான் குற்றங்களைத் தடுக்க முடியும்; சமூக விரோதிகளை ஒடுக்க முடியும்” என்ற பொய் பார்ப்பனக் கும்பலால் மட்டுமின்றி, பத்திரிகைகள், நடுத்தர வர்க்க அறிவுத்துறையினராலும் திட்டமிட்ட முறையில் பொதுமக்கள் மத்தியில் திரும்பத்திரும்ப பரப்பப்படுகிறது.  இது மட்டுமின்றி, “தி.மு.க. ஆட்சியைவிட, அம்மாவின் ஆட்சியில்தான் தமிழக போலீசு, எவ்விதமான அரசியல் தலையீடும் இன்றி, அப்படிச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது” என்றும் இவர்கள் ஜெயாவைக் குற்றங்களைச் சகித்துக் கொள்ளாத இரும்பு மனுஷியாகப் புகழ்ந்து தள்ளிவருகிறார்கள்.
ஆனால், உண்மையோ இவர்கள் சொல்லி வருவதற்கு நேரெதிராகவே உள்ளது.  பார்ப்பன ஜெயா பதவியேற்ற பிறகும் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், அவர்களே கூறிக்கொள்ளும் சட்டம்  ஒழுங்கைக் காப்பதில் ஜெயா ஆட்சி படுதோல்வியடைந்துவிட்டதையே எடுத்துக்காட்டுகின்றன.  இன்னொருபுறம் ஜெயாவின் ஆட்சியில் சுதந்திரமாகச் செயல்பட்டு வரும் தமிழக போலீசு, இக்குற்றங்களைக் கட்டுப்படுத்தாத அதேசமயம், பொதுமக்கள் தமது நியாயமான கோரிக்கைகளுக்காக நடத்தும் சட்டபூர்வமான போராட்டங்களைக்கூடப் பொறுத்துக் கொள்ளமுடியாமல், வெறிபிடித்த நாயைப் போலப் போராடும் மக்கள் மீது பாய்ந்து குதறிவருகிறது; கொட்டடிக் கொலை  சித்திரவதை, கும்பல் பாலியல் வன்புணர்ச்சி என அனைத்துவிதமான வக்கிரமான அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறது.

நடிகைகள் பற்றாக்குறையால் அல்லாடும் தமிழ் சினிமா!!

'நண்பா... அடுத்த படம் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்... டாப் 5 ஹீரோயின்கள் பெயர் சொல்லேன்.... '
"அது வந்து... ம்ம்... டாப்பா... அப்படி யாரும் இல்லியே... அமலாபால், ஹன்ஸிகா, காஜல்... இவ்ளோதான் தேறுவாங்க போலிருக்கு. இதுல அஞ்சு பேரை எங்கே தேடறது...?"
"ஏன்.. மத்தவங்கள்லாம் ஹீரோயினா தெரியலையா..."
"அவங்க நடிகைகள் என்ற அளவில்தான் இருக்காங்க... இரண்டு பேர்ல ஒருத்தரா நடிக்கிற நடிகைகள் அவ்வளவுதான்..."
"சரி, முன்னணி ஹீரோக்களோட நடிக்கிற மாதிரி யாரும் தேறுவாங்களா..."
"ம்ஹூம்.. மிஞ்சிப் போனா... அனுஷ்கா ஒருத்தர்தான். த்ரிஷா, நயன்தாரால்லாம் ரிடையர்மெண்ட் ஸ்டேஜ். ஏதோ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ மாதிரி..."
"சரி.. புதுசா ரெண்டு மூணு பேர் வந்தாங்களே... சுந்தர பாண்டியன் லட்சுமி மாதிரி.. அவங்கள்லாம் எப்படி?"
"அட சும்மாருங்க... அந்த லட்சுமி முதல் படத்துல 3 லட்சம் வாங்குச்சு. இப்போ அப்படியே ஜம்ப் பண்ணி 40 லட்சம் வரைக்கும் கேக்குது!"
தமன்னா, இலியானா?
'அட போங்கண்ணா... மெட்ராசிலிருந்து போன் கால் வருதுன்னா அவங்க டேமேஜருங்க.. ஸாரி மேனேஜருங்க கூட போனை அட்டன்ட் பண்றதில்லை!!'
இந்த நீத்து சந்திரா, சமீரா ரெட்டி?
என்ன விளையாடறீங்களா.. அவங்கள இப்போ யாரு ஞாபகத்துல வச்சிருக்காங்க!!
"என்னப்பா இப்படி சொல்லிட்டே... இந்த ரிச்சான்னு ஒரு பொண்ணு நல்லா ப்ரஷ்ஷா வந்துச்சே... இனியான்னு நடிக்கத் தெரிஞ்ச பொண்ணு... அப்புறம் ராதா மகள்கள்... இவங்களையெல்லாம் விட்டுட்டியே!"
நண்பா.. நிலைமையே தெரியாம கோடம்பாக்கத்துல சுத்திக்கிட்டிருக்க நீயெல்லாம்... அவங்கள்லாம் சம்பளத்தொகை சொல்லும்போது தெறிச்சு ஓடணும் போலிருக்கும்... அதுவும் ராதாவோட பொண்ணுங்க இருக்காங்களே... அவங்க ரெண்டு பேத்தையும் வச்சு கோடம்பாக்கத்தையே மொத்தமா சுருட்ட முடியுமா பாக்கறாங்கப்பா... அந்தக் காலத்துல அம்பிகா - ராதா மாதிரி, இப்போ கார்த்திகா - துளசிய கொண்டு வரணும்ங்கிறதுதான் திட்டமாம்!

நித்யானந்தாவின் தங்க சொகுசுக் கட்டில் கர்நாடகா பயணம்

நித்தியானந்தாவின் பஜனை இனி மதுரையில் இல்லை! ஆடம்பர கட்டில் லாரியில் கிளம்பியது!!

Viruvirupu
மதுரை ஆதீன மடத்தில் இருந்து நித்யானந்தாவை டிஸ்மிஸ் செய்து, அவரும் சிஷ்யர்களும் காலி செய்துவிட்டு போன நிலையிலும், நித்தி பஜனை செய்யும் தளவாடங்கள் மடத்திலேயே இருந்தன. அவற்றை எடுத்துவர சிஷ்யர்களையும், மூன்று லாரிகளையும் மதுரைக்கு அனுப்பி வைத்தார் சுவாமிகள்.
நித்தியை பதவியை விட்டுத் துரத்தியபோதே, அவரது பொருட்களை மடத்திலிருந்து தூக்கிச் சென்று விடும்படியும், தனது பொருட்களை கொடுத்து விடும்படியும் அருணகிரிநாதர் கூறியிருந்தார். தமிழகத்தில் நிலைமை சுமுகமாக இல்லையென கண்ட நித்தி, கர்நாடகாவுக்கு புறப்பட்டு சென்ற அவசரத்தில், ஆதீன மடத்தில் உள்ள தனது சொகுசு கட்டில், பஞ்சு மெத்தை உள்ளிட்ட பஜனை பொருட்களை எடுத்துச் செல்ல முடியவில்லை.
நித்தியானந்தா கர்நாடகா சென்று இரண்டு நாட்கள் ரிலாக்ஸ்டாக இருந்தபின், தமது பஜனைப் பொருட்களை அள்ளிக் கொண்டு வருமாறு தனது சீடர்களைப் பணித்தார். அவர்களும் 3 லாரிகளைப் பிடித்துக் கொண்டு ஆதீன மடத்திற்கு புறப்பட்டு வந்தனர். 

அம்மாவை சந்தித்த கேப்டனின் எம்.எல்.ஏ.க்கள்!

ஜெயலலிதாவை சந்தித்த கேப்டனின் எம்.எல்.ஏ.க்கள்! “சும்மாச்சும்” ஜோக் அடிக்காதிங்க!

Viruvirupu,

தே.மு.தி.க., எம்.எல்.ஏ. ஒருவர், சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்தது, “சும்மாச்சும்” என்று சொல்லப்பட்டதால், பரபரப்பு சர்ரென்று இயங்கிய நிலையில், கேப்டனின் எம்.எல்.ஏ.க்கள் இருவர் இன்று காலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தே.மு.தி.க.வின் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.சுந்தரராஜன், திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழ் அழகன் ஆகிய இருவரும் இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்பு முடிந்து வெளியே வந்த இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, தங்களது தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்ததாக தெரிவித்தனர்.     அப்படி எல்லாம் கூட அரசியலில் உண்டா ?

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ராஜினாமா

 Sm Krishna Resigns From Cabinet
டெல்லி: மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தமது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
நீண்டகாலமாக சொல்லப்பட்டு வரும் மத்திய அமைச்சரவை மாற்றம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு கட்சிப் பணிக்காக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அனுப்பப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது. இதை உறுதிப்படுத்தும்விதமாக எஸ்.எம். கிருஷ்ணா இன்று தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
இதேபோல் அறக்கட்டளை மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ள சட்ட அமைசுசர் சல்மான் குர்ஷித்தின் பதவிக்கும் வேட்டு காத்திருப்பதாகக் கூறப்படுகிறது http://tamil.oneindia.in/news/2012/10/26/india-sm-krishna-resigns-from-cabinet-163719.html

கனடா: இளையராஜா நிகழ்ச்சியும் கவுண்டமணி பாணி தமிழ்த் தேசிய விமர்சனமும்

http://mathimaran.wordpress.com/
கனடாவில் நடைபெறும் இளையராஜா இசைநிகழ்ச்சிக்கு ஏன்தமிழ்த்தேசியவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்?
-ஸ்ரீதர்.
தமிழ்த் தேசியவாதிகளாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற சினமாக்காரர்கள்தான் தீவிரமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இளையராஜா போன்ற உலக பிரபலங்கள், உலகத் தமிழர்களின் அழைப்பை ஏற்று சென்றால், அதன்பிறகு திரைப்படத்தில் வாய்ப்புகள் இல்லாத சினிமாக்காரர்களுக்கு வெளிநாட்டிலிருந்து அழைப்பு வராது.
‘இப்படிவெளிநாடு வாழ் தமிழர்கள் இளையராஜா போன்ற ஆளுமைகளை அழைத்தால் அதன் பிறகு நம்மை அழைக்க மாட்டார்கள்’ என்ற கவலையே இதில் பிரதான பாத்திரம் வகிக்கிறது.

வதேரா நிலம் வாங்கியதில் முறைகேடு நடக்கவில்லை.

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சண்டிகர்: அரியானா மாநிலத்தில் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா, நிலங்கள் வாங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று விசாரணை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நம்பிட்டோம் நம்பிட்டோம் நல்லாவே நம்பிட்டோம்  சோனியா மருமகன் ராபர்ட் வதேரா அரியானா மாநிலத்தில் குர்கான், பரிதாபாத், பல்பால் மற்றும் மேவாத் நகரில் ஏக்கர் கணக்கில் நிலங்கள் வாங்கி குவித்திருப்பதாகவும், சந்தை மதிப்பை விட குறைந்த மதிப்பில் இவற்றை பதிவு செய்திருப்பதாகவும் சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவைக் காண வேண்டுமா? சென்னை அரசு மருத்துவமனைக்கு வாருங்கள்!!

அரசு பொது மருத்துவமனை, சென்னை
ந்தியா எப்பொழுது வல்லரசு ஆகும்? இந்த கேள்விக்கு பதில்  தெரிந்து கொள்ள வேண்டுமா? அவசியம் சென்னை சென்டரல் அருகில் இருக்கும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாருங்கள். நிச்சயம் விடை கிடைக்கும்.
நாமும் அந்தக் கேள்விக்கு விடை தேடித்தான் மருத்துவமனைக்கு போனோம்.  வளாகத்தில் நுழைந்தவுடன் செட்டிநாடு மருத்துவமனை விளம்பரத்தில் வருவது போல் யாரும் நம்மை கை கூப்பி வரவேற்கவில்லை. அப்போலோ மருத்துவமனையின் ரிசப்ஷன் போன்று பளபள தரையில் பளிங்கு விநாயகர் சிலை, மணக்கும் பூக்கள் இல்லை.
வளாகத்தைச் சுற்றியும் மக்கள், ஏதோ ஒரு நோய், ஏதோ ஒரு கதையுடன், எதிர்காலம் என்னெவென்ற ஒரு கேள்விக் குறியுடன் மக்கள். முதலில் வெளி நோயாளிகளுக்கான பிரிவில் நுழைந்தோம். மக்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். அழுக்குப் படிந்த கட்டிடம், மக்கள் கூட்டம். அவர்களுக்கு சத்தமாக பதில் சொல்லியபடி இருக்கும் ஊழியர்கள்.

என் முகத்திலேயே முழிக்காதே.. விஜயகாந்த் போட்ட 'தடா'வால் தடம் மாறிய சுந்தரராஜன்!

 மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. சுந்தரராஜனுக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் போட்ட கடுமையான தடை காரணமாகவே அவர் அதிரடியாக முதல்வர் ஜெயலலிதாவைப் போய்ப் பார்த்து விட்டதாக கூறுகிறார்கள்.
சுந்தரராஜன் ஆரம்ப காலத்திலிருந்தே விஜயகாந்த்துக்கு நெருக்கமான நண்பர் என்பதால் அவரது இந்த திடீர் தாவல் தேமுதிகவினரை மட்டுமல்லாமல், விஜயகாந்த் குடும்பத்தினரையும் கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
சுந்தரராஜன் இப்படிச் செய்வார் என்று தேமுதிகவினரும், விஜயகாந்த் குடும்பத்தினரும் எதிர்பார்க்கவில்லையாம். அவர் அப்செட்டாக இருப்பது விஜயகாந்த்துக்கு ஏற்கனவே தெரிந்தபோதிலும் அவரை சமாதானப்படுத்தி வைத்திருந்தாராம். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு விஜயகாந்த்தைக் கொந்தளிக்க வைத்து விட்டதாம்.

வன்கொடுமை சட்டத்தின் கீழ் சின்மயி மீது நடவடிக்கை எடுங்கள்! - அம்பேத்கர் பாசறை கமிஷனரிடம் புகார்

ambedkar pasarai complaints against chinmayi சென்னை: பொதுவெளியில் சாதித் துவேஷ கருத்துக்களைப் பரப்பிய பாடகி சின்மயி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளது புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் விழிப்புணர்வு பேரவை எனும் அமைப்பு.
சின்மயி தனது ப்ளாக், ட்விட்டர் போன்றவற்றில் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு குறித்து கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் பெரும்பான்மையோர் சின்மயிக்கு எதிராக அணி திரள ஆரம்பித்துள்ளனர்.
எழுத்தாளரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் தனது கட்டுரையொன்றில், "நான் சின்மயிக்கு ஆதரவாக தெருவில் நின்று போராட தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு அவர் தமிழர்களிடமும் தலித்துகளிடமும் தனக்கு மாறான வாழ்க்கைமுறையும் உணவுப் பழக்கமும் கொண்டவர்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மல்லையாவின் நரிதந்திரம்! கார் பந்தயத்தில் தலை உருளாமல் தப்பித்தார்!


Viruvirupu
கிங்பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையா, ட்ரிக்கியாக ஒரு காரியம் செய்திருக்கிறார். அதையடுத்து, கிங்பிஷர் விமான நிறுவன ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று முடிவுக்கு வந்தது. நிர்வாகத்திற்கும் ஊழியர் தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வேலைநிறுத்தத்தை கைவிட ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
டெல்லியில் கிராண்ட் ப்ரீ கார் பந்தயம் நடைபெற உள்ள நிலையில், சஹாரா ஃபோர்ஸ் கார் பந்தய டீம் உரிமையாளர் விஜய் மல்லையாவின், மற்றொரு உரிமை நிறுவனம் கிங்பிஷர் விமான நிறுவன ஊழியர்கள் நரி வேலைநிறுத்தத்தை கைவிட முடிவு செய்திருப்பது, (அல்லது முடிவு செய்ய வைத்திருப்பது) விஜய் மல்லையாவுக்கு, சந்தேகத்துக்கு இடமில்லாத வெற்றி.

மறுபடியும் மாளவிகா! மஞ்சள் புடவைக்கு ரெடி!

வாளமீனுக்கும் வெளாங்குமீனுக்கும் பாடலை விட மாளவிகாவின் மஞ்சள் புடவை தான் பெரிய ஹிட்டானது. மஞ்சள் புடவை கட்டி ஆடிய மாளவிகாவிற்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வந்தன.  ‘திருட்டுப் பயலே’படத்தில் மாளவிகாவின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்தன. 
வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடாததால், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் குத்து பாடல்களுக்கு நடனமாடிய மாளவிகா திருமணமானதும் மும்பையில் செட்டில் ஆனார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்ட மாளவிகா இப்போது மறுபடியும் தமிழ் படங்களின் மூலம் திரைக்கு வரும் ஐடியாவில் இருக்கிறார்.

ஜெயம் ரவி கண்ணீர்! கார்த்தி: அமீர் இயக்கத்தில் இனி நடிக்க மாட்டேன்

அமீர் அண்ணனின் கழுத்தை நெரித்து... ஜெயம் ரவி கண்ணீர்!

       ஆதிபகவன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. இந்த படத்தை அமீர் இயக்க ஜெயம் ரவி நடிக்கிறார் என்பதும், இந்தப்படத்தை ஜெ.அன்பழகன் தயாரிக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஜெயம் ரவி கண்கலங்கியது அனைவரையும் அதிரவைத்தது. மிகவும் சோர்வுடனும் உணர்வுபூர்வமாக பேசிய ஜெயம் ரவி, இந்தப் படத்துக்காக நான் ரொம்ப கஷ்டப்பட்டுடேன். இரண்டு வருடங்களாக வேதனையை அனுபவித்தேன். எங்க ஷூட்டிங், எப்போ ஷூட்டிங், எந்த சீன் எடுக்கப்போறாங்க, எதுவுமே தெரியாது. ஷூட்டிங் ஸ்பாடுக்கு போன பிறகு தான் என்ன நடக்கப்போகுதுன்னு தெரியவரும். 
மிகவும் சிரமப்பட்டு பல சண்டைகாட்சிகளில் நடித்திருக்கிறேன். என் உடம்பெல்லாம் அடிபட்டது. வீட்டிற்கு போனால், என்னடா டைரக்டர் அவர் என்று அமீர் அண்ணனை திட்டுவார்கள். அமீர் அண்ணனின் கழுத்தை நெரித்து கொன்றுவிட எனக்கு பல நேரங்களில் தோன்றி இருக்கிறது. இரண்டு வருடங்களாக இந்தப் படத்தையும் முடிக்கமுடியாமல், அடுத்தப் படத்திற்கும் போக முடியாமல் அவஸ்தைப்பட்டேன். 

மாணவர்களே இல்லாத பள்ளிகளில் ஆசிரியர்கள் ஜாலியாக ...வேலை ?

கிருஷ்நகர்:மேற்கு வங்கத்தில், ஒரு மாணவர் கூட படிக்காத, இரண்டு பள்ளிகளில், 12 ஆசிரியர்களும், இரண்டு ஊழியர்களும், மாதம்தோறும் தவறாமல் சம்பளம் வாங்கி வருகின்றனர்.கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் இருந்த, மேற்கு வங்கத்தில், அடிப்படை வசதிகள் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது, தற்போது தெரிய வந்துள்ளது.
நாதியா மாவட்டத்தில், இரண்டு பள்ளிகள் உள்ளன. உமா ஷாஷி நிம்னதரோ உச்சா பாலிகே வித்யாலயா என்ற பெண்கள் பள்ளியும், தாரக் தாஸ் சிக்ஷா சதன் என்ற உயர்நிலைப் பள்ளியும், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன.நல்ல கட்டடம், மின் வசதி, கழிவறை வசதி, காம்பவுண்ட் சுவர், ஆசிரியர்கள், அவர்களுக்கு, ஆயிரக்கணக்கில் மாதச் சம்பளம் என, அனைத்தும் இருக்கிறது. ஆனால், மாணவர்கள் தான், ஒருவர் கூட கிடையாது. பெண்கள் பள்ளியில், ஏழு ஆசிரியைகளும், இரண்டு உதவியாளர்களும் உள்ளனர்.அதுபோல, உயர்நிலைப் பள்ளியில், ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர்.

எனது பரிந்துரைகளை ஏற்கவில்லை:அமைச்சர் அழகிரி குற்றச்சாட்டு

மதுரை:""இளைஞரணி நிர்வாகிகள் தேர்வில், நான் அளித்த பரிந்துரைகளை ஏற்கவில்லை,'' என, மத்திய அமைச்சர் அழகிரி, நேரடியாக குற்றம்சாட்டினார்.மதுரையில், அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
தி.மு.க., தென் மாவட்ட அமைப்பு செயலர் என்ற முறையில், இளைஞரணியில் தேர்வு செய்யப்பட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், என்னை சந்தித்தனர். இத்தேர்வில், மதுரை நகர் மற்றும் மாவட்டத்துக்கு, நான் அளித்த பரிந்துரைகள், ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. மாணவரணி உட்பட, பதவிகளுக்கு, நான் பரிந்துரைத்தவர்களுக்கு, பதவி கிடைக்கவில்லை. பிற மாவட்டங்களிலும், என் பரிந்துரைகள், ஏற்றுக் கொள்ளப்பட வில்லை.தி.மு.க., கட்சி நிலவரம் குறித்து, எனக்கு எதுவும் தெரியாது. தி.மு.க., நிர்வாகிகள் மீது, தொடர்ந்து பொய் வழக்குகளை பதிவு செய்வதை தவிர, அ.தி.மு.க., வேறு எதுவும் செய்யவில்லை.

மீண்டும் குமுதம் தன் கைவரிசையை காட்டிவிட்டது!


குமுதம் தொடரும் அநாகரீகம் ;என்னுடைய டி.எஸ்.பாலையா பதிவிலிருந்து முதல் பாராவை சுனில் கேள்வி பதிலில் எடுத்துப்போடப்பட்டுள்ளது. இதோ என் செப்டம்பர் 17ந்தேதி பதிவில் முதல் பாரா!;டி.எஸ்.பாலையாசதி லீலாவதி’(1936) எம்.ஜி.ஆருக்கு மட்டும் முதல் படம் என்று நினைத்துவிடாதீர்கள் அந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் கூட முதல் படம் ’சதிலீலாவதி’ தான்.;இன்று கடைக்கு வந்திருக்கும் 31-10-2012 தேதியிட்ட குமுதத்தில் சுனில் கேள்வி  பதிலில் கீழ்கண்டவாறு டி.எஸ் பாலையா நடித்த முதல் படம் எது?

சதி லீலாவதி தான் அவர் நடித்த முதல் படம்.டி.எஸ்.பாலையாவிற்கு மட்டுமல்ல.எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஏ.தங்கவேலு, எம்.கே.ராதா ஆகியோருக்கும் சதிலீலாவதி தான் முதல் படம்.

சுந்தர ராமசாமி சொல்வார்.
காண்டாமிருகத்தை ஈர்க்குச்சியால் காயப்படுத்த முடியாது.
இந்த வார்த்தைகள் தான் இங்கே நானும் வேதனையோடு குறிப்பிட வேண்டியிருக்கிறது.முரட்டுத்தோல்!என்ன ஒரு சுரணையற்ற தன்மை.
காண்டாமிருகம் சைவம் தான்.ஆனா ஆளக்கொன்னுடும்!

ஏழை சொல் அம்பலம் ஏறாது என்ற தைரியம் தான் குமுதம் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளக்காரணம்.

என்ன ஒரு பூர்ஷ்வாத்தனம். என்ன ஒரு பேட்டை ரௌடித்தனம்.

நிதின் கட்கரி.. பாஜகவின் அகில இந்தியத் தலைவர்

 இந்த பால்வடியும் குழந்தை முகத்தை பாருங்கள் இது ஏதாவது தப்பு செய்திருக்குமா?  இதுதாண்டா பா ஜா கா !  
( நீதாண்டா லூசு )
நிதின் கட்கரி, கடந்த சில நாட்களில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்குப் போட்டியாக மீடியாவில் அடிபடும் பெயர், பாஜகவின் அகில இந்தியத் தலைவர். பாஜகவின் தலைவராக இவரை அறிந்தவர்களை விட, இப்போது சமூக ஆர்வலர் (?) அர்விந்த் கெஜரிவால் இவர் மீது அடுக்கியிருக்கும் குற்றச்சாட்டுகளால் இவரை அறிந்து கொண்டிருப்பவர்கள் அநேகம். இவர் மீது கேஜரிவால் வைத்திருக்கும் பிரதானக் குற்றச்சாட்டு, இவர் நிர்வாகத் தலைவராக இருக்கும் பூர்த்தி பவர் & ஷுகர் நிறுவனத்திற்கு முறைகேடாக வந்துள்ள முதலீடுகள் பற்றியது. 2001 இல் துவங்கப்பட்ட பூர்த்தி க்ரூப் நிறுவனங்களில் சுமார் பத்தாயிரம் பங்கு முதலீட்டாளர்கள். இவற்றில் 19 நிறுவன்ங்கள் பூர்த்தி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்திருப்பதன் மூலம் இயக்குனர்களாக இருக்கின்றன (Share Directors). சிக்கல் துவங்குவது இங்கிருந்துதான்; இந்த பத்தொன்பது கம்பெனிகளில் சுமார் 16 கம்பெனிகள் “ஷெல் கம்பெனிகள்” என்பது கெஜரிவாலின் குற்றச்சாட்டு; அதாவது அந்நிறுவனங்களுக்கு வேறு எவ்விதமான வர்த்தகப் பரிவர்த்தனைகளோ, நடவடிக்கைகளோ கிடையாது, பெயருக்கு ஒரு நிறுவனம், அதன் பெயரில் முதலீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த 16 நிறுவன்ங்களில் பெரும்பான்மையானவை கல்கத்தாவிலும், பம்பாயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்டுள்ள முகவரியில் அம்மாதிரியான நிறுவன்ங்கள் செயல்படுவதற்கான சுவடே தெரியாத வகையில், பம்பாயின் சேரிகளிலும், கல்கத்தாவின் பின்தங்கிய பகுதிகளிலும் அம்முகவரிகள் இருக்கின்றன. அம்முகவரியில் பல்லாண்டுகளாக வசிப்பவர்களுக்கு அது போன்ற ஒரு நிறுவனம் அம்முகவரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதே புதிய தகவலாக இருக்கிறது (இவ்விவரங்கள் NDTV மற்றும் Times Of India போன்றவற்றில் வெளியாயின). தவிர இந்நிறுவன இயக்குனர்களில் கட்கரியின் கார் ஓட்டுனர் மற்றும் தனிச் செயலர் ஆகியோரும் அடங்குவர். 

வியாழன், 25 அக்டோபர், 2012

JayaTV நூற்றுக்கணக்கான நாயகிகளை ஒரே நிகழ்ச்சியில்

தென்னிந்திய திரை தேவதைகள் நிகழ்ச்சியில் ரேவதி, சுகாசினி, பானுப்பிரியா உள்ளிட்ட நூற்றுக்கான திரைப்பட நடிகைகள் பங்கேற்று தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நடிகர்கள் ஆர்யாவும், மாதவனும் இந்த தேவதைகள் ஒவ்வொருவரையும் அழகாய் வரவேற்று அவர்களின் அனுபவங்களை கேட்டது சுவாரஸ்யமாக அமைந்திருந்தது.
ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் எல்லோரும் சினிமாவில் மூழ்கியிருக்க ஜெயாடிவியில் தென்னிந்திய திரை தேவதைகள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பெயருக்கு ஏற்றார்போல திரைப்பட நட்சத்திரங்கள் குவிந்திருந்த இந்த நிகழ்ச்சியை நடிகர்கள் ஆர்யா, மாதவன் தொகுத்து வழங்கினர்.
ரேவதி, சுகாசினி, பானுப்பிரியா, ராதா, உள்ளிட்ட 1980,1990களில் நடித்த நூற்றுக்கணக்கான திரைநட்சத்திரங்களுடன் தற்போதைய நடிகைகளும் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்
இயக்குநர் கே.பாலசந்தர் நடிகை ரேவதிக்கு பரிசுகளை வழங்கி பாரட்டினார். பின்னர் வழக்கம் போல மாதவன், ஆர்யாவின் கேள்விக்கணை தொடங்கியது. இப்போதைய சூழ்நிலையில் நீங்கள் ஹீரோயினாக நடித்தால் யாரை ஹீரோவாக தேர்வு செய்வீர்கள் என்று இருவரும் கேட்டனர்.
அதற்கு சிரித்த ரேவதி, இந்தப்பக்கம் மாதவன், இந்தப்பக்கம் ஆர்யா என்று கூறி இருவரையும் ஹீரோவாகத் தேர்ந்தெடுப்பேன் என்று கூறி கலகலப்பூட்டினார். பானுப்பிரியாவைப் பற்றிய நினைவுகளை ரேவதி மேடையில் பகிர்ந்து கொண்டபோது கீழே அமர்ந்திருந்த பானுப்பிரியாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் எட்டிப்பார்த்தது.

ஒரே குடும்பத்தில் 6 பேர் விஷம் குடித்து தற்கொலை


பாளையில் இன்று ஒரே குடும்பத்தில் 6 பேர் விஷம் குடித்து தற்கொலை பாளை கிருஷ்ணன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 42). தச்சு தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 37). இவர்களுக்கு மணிகண்டன் (10), மகாலட்சுமி (8), மகாராஜன்(6), மகாதேவன்(4), மலர்வனம் (2)ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர்.
மணிகண்டன் பாளையில் உள்ள பள்ளியில் 5-ம்வகுப்பும், மகாலட்சுமி 3-ம்வகுப்பும், மகாராஜன் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். இன்று காலை ரவிசங்கரின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு சென்று கதவை தட்டி ரவி சங்கரை அழைத்தனர். ஆனால் வீட்டில் இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை. இதனால் பொதுமக்கள் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது வீட்டிற்குள் ரவிசங்கர், அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் 5 குழந்தைகள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த நிலையில் கிடந்தனர். 

“பாடகி சின்மயி மீது மானநஷ்ட வழக்கு போடுவேன்!” லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் ஆவேசம்!

 Viruvirupu இணையத்தளத்தில் பாடகி சின்மயி செக்ஸ் அர்ச்சனை புகாரில், தமது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து கோபம் கொண்டுள்ளார், நகைச்சுவை எழுத்தாளர். “பாடகி சின்மயி என்மீது கொடுத்துள்ள புகார் தவறானது; அதை வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும், இல்லாவிடில் மான நஷ்ட வழக்கு தொடுக்க வேண்டிவரும்” என்று என்று எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் தெரிவித்துள்ளார்.
“பாடகி சின்மயி கொடுத்துள்ள போலீஸ் புகாரில் என்னுடைய ட்விட்டர் ஐடியும் சேர்த்து அளிக்கப்பட்டிருப்பதாக அறிந்து மிகுந்த மனவேதனையும் பெரும் மன உளைச்சலும் அடைகிறேன்.
கடந்த இரண்டு நாட்களாக என்னை ட்விட்டர், தனி மெயில், தொலைபேசி என்று பல விதங்களிலும் ரசிகர்களும், நல்லிதயங்களும் தொடர்பு கொண்டு தங்கள் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்து வருகின்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக எழுத்து, நாடகம், சினிமா என்று பல்வேறு மீடியா தளங்களிலும், சமீப காலங்களில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வர்ச்சுவல் தளங்களிலும் நான் பிரபலமாக இருந்து வருகிறேன். கலக்கல் கபாலி, பாத்ரூம் பாகவதர், ரிக்சா முன்சாமி, தமிழ்ப் புலவர் ஆதிமந்தி போன்ற நான் உருவாக்கிய கதாபாத்திரங்களும் புகழ்பெற்றவையே.  இதில் குறிப்பிட்ட விபரங்கள் http://365ttt.blogspot.com/2012/10/tnfishermen-tamil-twitter-conversation.html

ரெயில்களில் இனி நவீன தொழில்நுட்ப கழிவறை

ரெயில்களில் தற்போது உள்ள கழிவறைகளும் அவற்றை பராமரிக்கும் முறைகளில் ஏற்படும் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. சாக்கடை, கழிவு நீர் கால்வாய்களில் இறங்கி தொழிலாளர்கள் கழிவுகளை சுத்தம் செய்யக்கூடாது என்பதால் எந்திரம் மூலம் அடைப்புகள் சரி செய்யப்படுகின்றன. ரெயில்வே துறையில் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ரெயில் பெட்டிகளில் கழிவறை முறையாக சுத்தம் செய்வது இல்லை. அதனால் பெட்டிக்குள் துர்நாற்றம் வீசும்.

ஹைதராபாத் ஐபிஎல் அணியை சன் டிவி குழுமம் வாங்கியுள்ளது.

மும்பை: ஐபிஎல் குழுவில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட புதிய அணியை சன் டிவி குழுமம் வாங்கியுள்ளது.
ஐபிஎல் குழுவில் இருந்து ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணி செயல்பட்டு வந்தது. ஆனால் வீரர்களுக்கு சம்பள பாக்கி வைத்தது தொடர்பான பிரச்சனையில், விதிமுறைகளை மீறியதாக அந்த அணி ஐபிஎல் குழுவில் இருந்து நீக்கப்பட்டது.
இதையடுத்து புதிய ஐபிஎல் அணிக்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் பல முன்னணி தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். இதில் சன் டிவி குழுமமும் கலந்து கொண்டது. பல்வேறு நகரங்களை கொண்ட அணிகள் ஏலம் விடப்பட்டன. அதில், ஹைதராபாத்தை அடிப்படையாக கொண்ட புதிய ஐபிஎல் அணியை, சன் டிவி குழுமம் ரூ.85.05 கோடிக்கு வாங்கியது.

ஏ.ஆர்.முருகதாஸ்: உதவி இயக்குனராக பல சிரமங்களை அனுபவித்திருக்கிறேன்,

ரொம்ப சிரமப்பட்டோம்! துப்பாக்கி பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ;துப்பாக்கி படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க பம்பாய் நகரில் நடந்தது. இது குறித்து சில சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துகொண்டார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
துப்பாக்கி படத்தின் கதையை இந்தியில் அக்‌ஷய் குமார் நடிப்பில் இயக்குவதாக இருந்தேன். கஜினி ரீமேக்கிற்கு பிறகு எந்த படத்தையும் ரீமேக் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. அதனால் இந்தியில் நேரடி படமாக இது இருக்கும் என்றும் நான் நினைத்தேன். 
அந்த சமயத்தில் தான் விஜய்யின் அப்பா இயக்குனர் சந்திரசேகர் என்னை அழைத்து, விஜய்க்கு ஒரு படம் இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனால் தான் விஜய்யை வைத்து தமிழில் இயக்கிவிட்டு அதன் பிறகு இந்தியில் இயக்கலாம் என்று முடிவெடுத்தேன். 

டெல்லியில் அரசு மருத்துவமனையில் 5 ஆண்டுகளில் 10,000 குழந்தைகள் பலி

டெல்லியில் அரசு சார்பில் கலாவதி சரண் மருத்துவமனை நடத்தப்படுகிறது. இந்த மருத்துவமனையில் குழந்தைகள் சாவு குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு ராஜ்ஹன்ஸ் பன்சால் என்பவர் மருத்துவமனை நிர்வாகத்துக்கு மனு தாக்கல் செய்தார். மனுவுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பியுள்ள பதிலில், ‘கலாவதி சரண் மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் 10.081 குழந்தைகள் இறந்துள்ளன. இந்த ஆண்டு இதுவரை 943 குழந்தைகள் இறந்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.இதுபற்றி மருத்துவமனை நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘பெரும்பாலான குழந்தைகள், உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில்தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. மேலும், இயற்கை சுவாச கருவி சரியாக செயல்படாததால் எந்த குழந்தையும் இறக்கவில்லை’ என்றனர். இது தொடர்பாக தேசிய மனித உரிமை கமிஷனிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி அமைச்சர் ஆகிறார் 28ம் தேதி அமைச்சரவை மாற்றம்


 வரும் 28ம் தேதி ஞாயிறு அன்று மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து திருணாமுல் காங்கிரஸ் விலகியதால் அக்கட்சியின் பிரதிநிதிகளாக இருந்த 6 பேர் விலகினார்கள். திமுக அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்தனர். தேசியவாத காங்கிரஸ் பிரதிநிதியாக இருந்த அகதா சங்மா, அவரது தந்தை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதால் விலக நேர்ந்தது. ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்த மேற்கு வங்கத்தின் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

புதிய சட்ட திருத்தம்! முறைகேடு செய்யும் ஊராட்சித் தலைவர்களின் பதவிகளுக்கும் சிக்கல்

பெண்கள் தலைவர்களாக உள்ள ஊராட்சிகளில், அவர்களின் கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் நிழல் தலைவர்களாக செயல்படுகின்றனர். இவர்களின் முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை தடுக்க, உள்ளாட்சி துறையில் அரசு புதிய சட்ட திருத்தம் கொண்டு வருகிறது.

கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில், உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில், கடந்த ஆண்டு, அக்டோபர், 17,19ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் நீங்கலாக, 12 ஆயிரத்து 534 ஊராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகளின் தலைவர்கள், 99 ஆயிரத்து, 333 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட, ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 399 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால், 4,289 ஊராட்சிகளில் தலைவர்களாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு பெண்கள் தலைவர்களாக உள்ள ஊராட்சிகளில், அவர்களின் கணவர் அல்லது உறவினர்களின் சாம்ராஜ்யம்தான் நடக்கிறது.

Unlucky சோழ மன்னன் ராஜராஜன் விழாவில் பங்கேற்றால் பதவி பறிபோய் விடும்! வி.ஐ.பி.க்கள் புறக்கணிப்பு

தஞ்சாவூர் : சோழ மன்னன் ராஜராஜன், 1,027வது சதய விழா அழைப்பிதழில் பெயர் போடப்பட்டும், தி.மு.க., மத்திய நிதித் துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மேலும், அ.தி.மு.க., வி.ஐ.பி.,க்களும், நகர மக்களும் பங்கேற்காததால், சதய விழா களையிழந்தது.
தஞ்சை பெரிய கோவிலை, சோழ மன்னன் ராஜராஜன், 1,000 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணித்தார். இந்த கோவில், ஆட்சித் துறை மட்டுமின்றி கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், கல்வெட்டியல் என, பல துறைகளில் அம்மன்னன் சிறந்து விளங்கியதுக்கு சான்றாக விளங்குகிறது.ராஜராஜன், ஐப்பசி சதய நட்சத்திரத்தில் பிறந்ததையொட்டி, அம்மன்னன் ஆட்சிக்காலம் முதல், இன்று வரை, ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா, தஞ்சை பெரிய கோவிலில் நேற்று காலை, 10 மணிக்கு துவங்கியது. சதய விழா குழு தலைவர் தங்கமுத்து வரவேற்றார். கலெக்டர் பாஸ்கரன் தலைமை வகித்தார். kalaignar piriyan பார் போற்றும் வகையில் ஆட்சி புரியும் புரட்சி தலைவி, தங்க தாரகை, காவேரி தாய், அம்மா அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு இந்த வீணா போன நம்பிக்கையை உடைத்தெறிய வேண்டும், தனி பெரும்பான்மையுடன் ஆட்சி புரியும் அம்மா இதை செய்வாரா?

ஊழல் புகாரில் சிக்கியுள்ள கட்காரிக்கு அத்வானி வக்காலத்து

புதுடில்லி :""காங்கிரஸ் கட்சியினர், தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்புவதற்காகவே, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரிக்கு எதிராக புகார் கூறுகின்றனர். இது திட்டமிட்ட சதி,'' என, பா.ஜ., தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
ஆனால், பா.ஜ., - எம்.பி.,யும் பிரபல சட்ட நிபுணருமான, ராம் ஜெத்மலானியோ, "ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கட்காரி, உடனடியாக, தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, கோரியுள்ளார்.பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு எதிராக, சமூக ஆர்வலரும், புதிதாக அரசியல் கட்சியை துவக்கியுள்ளவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், ஏற்கனவே ஒரு புகாரை கூறியிருந்தார். தேசியவாத காங்., தலைவர் அஜீத் பவார் உதவியுடன், பல ஏக்கர் விவசாய நிலத்தை, கட்காரி அபகரித்ததாக, அவர் கூறியிருந்தார்.இந்நிலையில், கட்காரிக்கு எதிராக, மேலும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு, மீடியாக்களில் நேற்று முன்தினம் வெளியானது. அத்வானி தான் பிரதமாராக வரவேண்டும் என்பதற்காக விட்டால் கத்காரி காலில் விழுந்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.

புதன், 24 அக்டோபர், 2012

உலக அளவில் பிசினெஸ் இலங்கை 81. பாகிஸ்தான் 107. பங்களாதேஷ் 129,இந்தியா 132

உலக அளவில், பிசினெஸ் செய்வதற்கு இந்தியா 132-வது இடத்தில்! இலங்கை 81, பாகிஸ்தான் 107,  பங்களாதேஷ் 129

Viruvirupu
இன்னும் சீக்கிரம் பண்ண முடியாதுங்களா?
வணிகம் செய்வதற்கு உகந்த சூழ்நிலை உள்ள 185 நாடுகள் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா 132-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சிங்கப்பூர் உள்ளது.
ஒருகாலத்தில் வணிகம் செய்வதற்கு மிகவும் சிரமமான நாடாக இந்தியா இருந்த நிலைமை, 7 ஆண்டுகளுக்கு முன்புதான் மாறியது. 2005-ம் ஆண்டு முதல் வணிகம் செய்வதற்கு தேவையான ஒப்புதல் முறைகளை இந்தியா எளிமையாக்கியுள்ளது. அத்துடன், வணிகம் செய்வதற்கான செலவையும் இந்தியா குறைத்துள்ளது என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
BRIC எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா (BRAZIL, RUSSIA, INDIA, CHINA) நாடுகளை பொறுத்தவரை, 2005-ம் ஆண்டு முதல் வணிகத்துக்கு ஏதுவான சூழ்நிலை உருவாக்குவதில் முதல் 50 இடங்களில், இந்தியாவும், சீனாவும் இடம் பெற்றுள்ளன. கவனிக்கவும், இங்கு குறிப்பிடப்படுவது, புதிய பிசினெஸ் ஒன்றை தொடங்குவதற்கு எடுக்கப்படும் அவகாசம்.
ஒரு புதிய பிசினெஸ் தொடங்குவதற்கு, இந்தியாவில் 27 நாட்களாவது தேவை. சீனாவில் 33 நாட்கள் ஆகின்றன என உலக வங்கி அறிக்கை கூறுகிறது. மேலும் புதிய பிசினெஸூக்கு மின்சார வசதி பெறுவதற்கு இந்தியாவில் 67 நாட்கள் ஆகிறது என்றும், இந்த பிரிவில், இந்தியா 105-வது இடத்தை பிடிக்கிறது என்றும் இந்த உலக வங்கி அறிக்கை கூறுகிறது.

ஜெயாவின் இருட்டாட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்


கோவில்களில் அன்னதானம், ஆடு மாடுகள் மீது அக்கறை, யானைகளை சுற்றுலாவுக்கு அனுப்புவது என்று ஜீவராசிகள் மீது பாசம் காட்டும் பாசிச  ஜெயாவின் ஆட்சி என்றாலே தமிழகம் எப்போதும் பின்னோக்கி இருண்டகாலத்திற்கு சென்று விடும். தமிழகம் முழுவதும் தற்போது 16, 17 மணி நேரத்திற்கு விட்டு விட்டு மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
கல்வி, மருத்துவம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதிலிருந்து அரசு விலகிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற மறுகாலனியக்க கொள்கைகளை அமல்படுத்தத்துவங்கிய பிறகு நாடு முழுவதும் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் எதுவும் பெரிய அளவுக்கு துவக்கப்படவில்லை.  மின்சாரம் வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக்கொண்டு தனியார் கொள்ளையர்களை மின் உற்பத்தி துறைக்குள் நுழைப்பது அரசின் திட்டம். அற்கான பல சதி வேலைகளும். சதி ஆலோசனைகளும் நடக்கின்றன.

ஜெயலலிதாவுக்கும் பி.ஆர்.பி அன் கோ வுக்கும் இடையே ரகசிய பேரம் ?

பல லட்சம் கோடி கிரானைட் ஊழல் !
மலைகளை விழுங்கிய மகாதேவர்களுக்கு 50 ஆயிரம் ஏக்கர் சொத்துக்கள் !
ஆமை வேகத்தில் நகரும் அரசின் கண் துடைப்பு நடவடிக்கை !
ந்தாண்டு மே மாதத்தில் சந்தி சிரிக்கத் தொடங்கிய கிரானைட் ஊழல் கடந்த 5 மாதங்களாக ஊடகங்களுக்குத் தீனியாகவும், வாசகர்களுக்குப் பசியாற்றிக் கொண்டும் ஓடிக் கொண்டிருக்கிறது. ராணித் தேனீயைப் பிடித்துக் கொண்டு போய் கூண்டில் அடைத்து தேன் கூடு கட்டுவது போல் மலை விழுங்கி மகாதேவன் பி.ஆர்.பி.ஐப் பிடித்து உள்ளே வைத்துக் கொண்டு, சிலரைப் பட்டியிலடைத்து விட்டுப் பலரைத் தேடிக் கொண்டிருக்கிறது அரசு.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இதைக் கண்டு கொள்ளாத அரசுகள், அதிகாரிகள் இப்போது அவர்களாகவே அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டே கிரானைட் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களை அரசு-காவல்துறை-மாவட்ட நிர்வாகம் அடங்கிய கூட்டணி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தாங்கள் விரும்புகிற அளவுக்குச் செய்திகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். தங்களுக்கு வேண்டிய செய்தியாளர்களுக்கு புள்ளி விப‌ரங்களைக் கொடுத்து விலாவாரியாக வெளியிடச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

உருக்கமான கடிதம்! 7 வயது மகனை கொன்ற காதல் தம்பதி தற்கொலை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
பெ.நா.பாளையம்: கோவையில் விஷ பிஸ்கட் கொடுத்து 7 வயது மகனை கொன்ற காதல் தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். கோவை கவுண்டம்பாளையம் வைகோ நகரை சேர்ந்தவர் பரமசிவம்(36). கால்டாக்சி டிரைவர். மனைவி கோமளவல்லி(26). தனியார் நிறுவன ஊழியர். மகன் நவீன்குமார்(7) அருகில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன். ஊட்டி அடுத்த புலிசேரியை சேர்ந்த இந்த தம்பதி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வேலை தேடி கோவை வந்த இவர்களுக்குள் குடும்பத் தகராறு இருந்து வந்தது. கடன் தொல்லையும் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு தம்பதிக்குள் மீண்டும் சண்டை ஏற்படவே அருகே வசித்து வரும் கோமளவல்லியின் அண்ணன் குமார் இருவரையும் சமாதானப்படுத்தி சென்றுள்ளார்.

அமெரிக்காவில் ஆந்திர பெண்ணை கொன்று 10 மாத குழந்தை கடத்தல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperவாஷிங்டன்: அமெரிக்காவில் ஆந்திர பெண்ணை சுட்டுக் கொன்று விட்டு அவரது 10 மாத பேத்தியை மர்ம நபர்கள் கடத்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாயமான குழந்தையை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் குடுமுலகுண்ட்லா கிராமத்தை சேர்ந்தவர் வேலுகொண்டா ரெட்டி. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி சத்யவதி (61). இந்த தம்பதிக்கு சிவபிரசாத் ரெட்டி, கிருஷ்ணா ரெட்டி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக உள்ளனர். பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள கிங் ஆப் பிரஷ்யா பகுதியில் சிவபிரசாத் ரெட்டி வசித்து வருகிறார்.


இவரது மனைவி லதா. இவரும் சாப்ட்வேர் இன்ஜினியர். இவர்களது 10 மாத பெண் குழந்தை சாவ்னி. சிவபிரசாத், லதா இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை கவனித்து கொள்ள 6 மாதங்களுக்கு முன்பு சத்யவதி மகன் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார். நேற்று மகனும் மருமகளும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் பேத்தியுடன் இருந்தார் சத்யவதி. அப்போது வீட்டுக்குள் மர்ம நபர்கள் 3 பேர் திடீரென நுழைந்தனர். குழந்தையை தூக்கினர்.

15 புதிய முகங்கள்? பிரதமர் மன்மோகன் சிங் முடிவு

வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 6 அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியதை அடுத்து பல்வேறு முக்கியத் துறைகளுக்கு அமைச்சர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மரணம் அடைந்ததால் மேலும் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது.இதற்கிடையே, கூட்டணிக் கட்சிகள் முக்கிய அமைச்சர்கள் பதவியைக் கேட்டு நிர்பந்திப்பதால், எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாமல் மத்திய அரசு குழம்பியுள்ளது.இதற்கிடையே, சரியாக செயல்படாத அமைச்சர்களை கட்சிப் பணியாற்ற அனுப்பிவிட்டு புதிய நபர்களை அமைச்சரவையில் சேர்க்க சோனியா தரப்பு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.<

சூர்யா-கௌதம் லடாய்: இமிடியட் ரிலீஃப் கேட்டால், இடியாப்பத்தில் பங்கு கேட்கிறார்!


Viruvirupu
மாற்றான், “மாட்டேன்.. போ” என்று சொல்லிவிட்டதில் அப்செட்டாகியிருக்கும் சூர்யா, அவசரகதியில் ஒரு வெற்றிப்படம் கொடுக்கும் ஆவலில் இருக்க வேண்டும். அதையடுத்து, சுற்றும் முற்றும் பார்த்ததில், சறுக்க விடாத வேட்பாளராக தெரிந்திருக்கிறார் கௌதம் மேனன்.
இதையடுத்து, மற்றொரு ‘காக்க காக்க’ உருவாக்கலாமா என்று ஒரு ரவுண்ட் பேச்சுக்கள் நடந்தன.
கௌதம், எதற்கும் தயாரான ஆள். சூர்யாவுக்கு என்ன, சூர்யா அப்பா சிவகுமாருக்கே கதை வைத்திருக்கிறார். உற்சாகமாக பேச்சுக்கள் தொடங்கின.
ஆச்சரியமாக, தனது சம்பளத்தில் சில ‘சி’களை தள்ளுபடி செய்யவும் சூர்யா தயாராக இருந்திருக்கிறார். அந்தளவுக்கு மாற்றான் புரட்டி எடுத்துவிட்டது. சூர்யாவுக்கு தேவை இமிடியட் ரிலீஃப்!
எல்லாம் சுமுகமாக போய்க்கொண்டிருந்த இந்த ப்ராஜெக்ட் இப்போது, ட்ராப்பாம்! காரணம், ஒரு படத்தை முடிக்க கௌதம் கேட்ட கால்ஷீட் நாட்களின் எண்ணிக்கையில், சூர்யா இரண்டு படமும் முடித்து, இடியாப்ப விளம்பரங்கள் இரண்டிலும் நடித்து முடித்து, மூக்குப்பொடி டப்பா விளம்பரத்துக்கும் மூன்று நாள் மீதமிருக்குமாம்!
“என்னங்க இவர், இமிடியட் ரிலீஃப் தேடிப் போனால், இடியாடிக்காக டேட்ஸ் கேட்கிறார்?” என்ற காமெண்டோடு சூர்யா கதையை முடித்துக் கொண்டார் என்கிறார்கள்!