சனி, 21 செப்டம்பர், 2013

உ பி கலவரம் தொடர்பாக பாஜக MLA சுரேஷ் ரானா கைது !

கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராணா.
கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராணா.  உத்தரப் பிரதேசத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான கலவரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராணா கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகரிலும் அதன் அண்டை மாவட்டங்களிலும் சமீபத்தில் வகுப்புக் கலவரம் வெடித்தது. இதில், 47 பேர் உயிரிழந்தனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்கள் இப்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கலவரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. காதிர் ராணா, அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் நூர் சலீம், மெüலானா ஜமீல், பாஜக எம்.எல்.ஏ.க்கள் சங்கீத் சோம், பர்தேந்து சிங், காங்கிரஸ் தலைவர் சயீத் உஸ்மான், பாரத விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் மற்றும் சமூகத் தலைவர்கள் உள்பட 16 பேரைக் கைது செய்ய முசாஃபர்நகர் நீதிமன்றம் புதன்கிழமை வாரண்ட் பிறப்பித்தது.

திண்டுக்கல் சப் கலெக்டர் மதுசுதன் ரெட்டி குடிபோதையில் அட்டகாசம் !கல்லெறிந்தார் ! போலீசின் வாக்கி டாக்கியை பறித்தார் ! கணவனுடன் வந்த பெண்ணை ?

திண்டுக்கல்: போலீஸ்காரரிடம் வாக்கி டாக்கியை பறித்தும், குறைதீர்
கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் மீது கற்களை வீசியும் திண்டுக்கல் சப் கலெக்டர் செய்த நடவடிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்ட சப் கலெக்டராக மதுசூதன்ரெட்டி(28) கடந்த ஆக.19ல் நியமிக்கப்பட்டார். இவர் குடும்பத்துடன் திண்டுக்கல் சிறுமலை அருகே கடமான்குளம் கெஸ்ட் ஹவுசில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுமலை அடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை நோக்கி ஒரு தம்பதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அவர்களை வழிமறித்த சப்–கலெக்டர் இரவு நேரத்தில் சிறுமலையில் உங்களுக்கு என்ன வேலை? என அவர்களிடம் கேட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம், உனது மனைவியை நான் பத்திரமாக அழைத்து செல்கிறேன். என்னை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வா என கூறி விட்டு அந்த பெண்ணை தனது காரில் ஏற்றிக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இதனால் வனத்துறை ஊழியருக்கும், சப்கலெக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்ஸை நிறுத்தி டிரைவரிடம் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்தார். இதனால் டிரைவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் அவரின் செல்போனை பறித்து ரோட்டில் வீசி உடைத்ததாக தெரிகிறது.சப் கலெக்டரின் இந்த நடவடிக்கையால் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு வனத்துறையினர் தகவல் கொடுத்தனர்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

முலயம்சிங்கின் சொத்துகுவிப்புக்கு எதிரான ஆதாரங்கள் இல்லையாமே ? சிபி ஐ திடீர் கண்டு பிடிப்பு ! வெற்றி மீது வெற்றி வந்து முலாயமை சேரும் !

புதுடில்லி: சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கிற்கு எதிரான,
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கு விசாரணையில், போதிய ஆதாரங்கள் இல்லை என , சி.பி.ஐ., முடிவு விசாரணையில் இருந்து விலகியது இது தொடர்பாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்ததாவது: "முலாயம் சிங்கும், அவரின் குடும்பத்தினரும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர். அது பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, வழக்கறிஞர் விஸ்வநாதன் சதுர்வேதி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "முலாயம் சிங் குடும்பத்தினரின் சொத்து தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும்' என, சி.பி.ஐ.,க்கு, 2007, மார்ச், 1ல் உத்தரவிட்டது.

போதைவஸ்து வழக்கில் சுதாகாரன் விடுதலை ! வழக்கு போட தூண்டிய ஜெயலலிதா மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது ?

 தமிழகம் போதை வழக்கில் சுதாகாரன் விடுதலை… வழக்கு போடத்தூண்டியவர்கள் மீது என்ன நடவடிக்கை?: கருணாநிதி  போதை வழக்கில் சுதாகாரன் விடுதலை… வழக்கு போடத்தூண்டியவர்கள் மீது என்ன நடவடிக்கை?: கருணாநிதி சென்னை: ஹெராயின் போதை வழக்கில் சுதாகரன் விடுதலை குறித்து ஆளுவோரின் பதில் என்ன? வழக்குப் போடத்தூண்டியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஹெராயின் போதைப் பொருளை வீட்டிலே வைத்திருந்ததாக ஜெயலலிதாஆட்சி யில் 2001ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது பற்றி? ஜெயலலிதாவுடன் இருக்கும் சசிகலாவின் அக்காள் மகன்தான் சுதாகரன். இவரது திருமணத்தை ஜெயலலிதா தன்னுடைய வளர்ப்பு மகன் என்ற முறையில் பல கோடி ரூபாய் செலவு செய்து சென்னையில் ஆடம்பரமாக நடத்தினார் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள். இவர் யாரோ ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார் என்று புகார் வந்தது என்பதற்காக 2001ஆம் ஆண்டு இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 13.6.2001 அன்று இவர் வீட்டை போலீசார் சோதனை செய்த போது 16 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாகக் கூறி, போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். இவரையும், இவரது நண்பரையும் கைது செய்தார்கள். இந்த வழக்கு 2001ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக நடைபெற்றது. 18.4.2013 அன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராமமூர்த்திக்கு கொலைமிரட்டல் வந்ததால் வேறு நீதிபதி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தர விட்டது. இந்த வழக்கில்தான்சுதாகரனையும், நண்பர்களையும் கடந்த 16ஆம் தேதி நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. நீதிபதி சின்னப்பன் அவர்கள் தனது தீர்ப்பில், "வழக்கில் முக்கிய சாட்சியாகக் கருதப்படும் கோபு ஸ்ரீதரை அரசுத் தரப்பில் சாட்சியாக விசாரிக்கவில்லை.

சினிமாவிற்கு 10 கோடி – துப்புரவுத் தொழிலாளிக்கு வெறும் 330 ரூபாய்

இந்திய சினிமாதுப்புரவுத் தொழிலாளிகள்இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காக தமிழ் சினிமா முதலாளிகளுக்கு ஜெயா அரசு கொடுத்திருக்கும் தொகை பத்து கோடி ரூபாய். இது போக பல்வேறு இடங்கள், மண்டபங்கள், பூங்காக்கள், மின்சாரம், அரசு விளம்பரம் என்ற வகையில் அரசு கொடுத்திருக்கும் உதவி இன்னும் அதிகம். பதிலுக்கு இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களை ஜெயா டிவியில் காட்டுவத்தற்கு சினிமா முதலாளிகள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதன் வர்த்தகம், லாபம் தனி. ஆனால் தமிழக மக்கள் பணத்தில் இருந்து பத்து கோடி ரூபாயை கொடுக்கும் இந்த அரசு துப்புரவுத் தொழிலாளிகளை எப்படி நடத்துகிறது?
கையால் மலம் அள்ளுவது மற்றும் பாதாள சாக்கடைக்குள் இறங்கி அடைப்பெடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடும் தொழிலாளிகள் பலரும் நோய் தாக்குதல் மூலம் விரைவிலோ அல்லது நச்சு வாயு தாக்கும் விபத்திலோ இறந்து போகிறார்கள். கையால் மலம் அள்ளும் பெண் தொழிலாளிகளில் 96 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் என்கிறது ஐ.எல்.ஓ அமைப்பின் ஆய்வு ஒன்று.  இந்திய அளவில் 1,18,474 பேர் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 11,896 பேர்.
ஐ.நா சபையானது கையால் மலம் அள்ளுவதை மனிதத் தன்மையற்ற செயல் என அறிவித்த பின் 1993-ல் இத்தகைய உலர் கழிவறைகள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. இன்னமும் 7 லட்சம் உலர் கழிவறைகள் இந்தியாவில் மீந்துள்ளது. தமிழகத்தில் 53,000 வரை உள்ளது. ஏறக்குறைய இந்தியாவில் உள்ள 657 மாவட்டங்களில் 256-ல் உலர் கழிவறை முறை இன்னமும் நீடிக்கிறது. இந்தப் பெண் தொழிலாளிகளுக்கு முறையான ஊதியமோ, பணி வரைமுறையோ இதுவரை இல்லை. இளம் வயதிலேயே இப்பெண்கள் பெரும்பாலும் மரணத்தை தழுவுகின்றனர்.

ஆட மறுத்த த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, காஜல் மற்றும் முன்னணி நடிகைகள் 30 கோடி ஸ்வாஹா

சென்னை:சினிமா நூற்றாண்டு விழாவில் முன்னணி நடிகைகள் நடனம் ஆட
மறுப்பதாக தகவல் பரவியுள்ளது.சினிமா நூற்றாண்டு விழா நாளை மறுதினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது. இது பற்றி பிலிம்சேம்பர் தலைவர் கல்யாண் நேற்று கூறியதாவது:
வரும் 21ம் தேதி முதல் சினிமா நூற்றாண்டு விழா தொடங்குகிறது. 4 மொழி நட்சத்திரங்கள் தவிர, பாலிவுட் நட்சத்திரங்களும் பங்கேற்கின்றனர். இந்த விழாவுக்காக ரூ.30 கோடி செலவிடப்படுகிறது. ‘தெலங்கானா பிரச்னை காரணமாக டோலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கவில்லையா என்கிறார்கள். நிச்சயம் பங்கேற்கிறார்கள். அவர்கள் பங்கேற்கும் 4 மணி நேர நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.‘த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, காஜல் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் தமிழ் தவிர தெலுங்கு படங்களிலும் நடிக்கின்றனர். அவர்கள் கலைநிகழ்ச்சியில் பங்கேற்கிறார்களா? என்றதற்கு, ‘எல்லோரும் பங்கேற்க ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்‘ என்று கல்யாண் மேலும் கூறினார். ஆனால் அதே சமயம் அவர்கள் டான்ஸ் ஆட மறுத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. இதனால் டான்ஸ் ஆடும் நடிகைகள் பட்டியலை விழாக்குழு வெளியிடவில்லை.tamilmurasu.org

வெட்கம் ! ஒரு Mob குண்டா பிரதமர் வேட்பாளராக தேசியகட்சிக்கு?

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/jayram.jpg நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதால், நாட்டில் வன்முறை, கலவரங்கள் அதிகம் நடைபெறும் என்று மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
பிரதமருக்கான பந்தயம்
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:–
பாரதீய ஜனதா அடுத்த பாராளுமன்ற பொதுத் தேர்தலை பிரதமர் பதவிக்கான பந்தய சூதாட்டமாக மாற்ற நினைக்கிறது. ஆனால் காங்கிரசும் இதனையே செய்யாது. காங்கிரஸ் பிரதமர் பதவிக்காக யாரையும் முன்னிலைப்படுத்தாது.

B.லெனின் : இந்தியசினிமா நூற்றாண்டு பித்தலாட்டம் ! முன்னோடிகள் எல்லோரையும் இருட்டடிப்பு

இந்திய சினிமா நூற்றாண்டு விழா!! – B. லெனின். (தமிழ் சினிமா உலகில்
மனசாட்சி உள்ள ஒரு சிலரில் B. லெனினும் ஒருவர்.  சுமார் 25 ஆண்டுகளாக எனது நண்பர்.  நாங்கள் சந்தித்துக் கொண்டது வெகு அரிதாகவேதான்.  சில சமயங்களில் போனில் பேசுவோம்.  ஆனால் லயோலா கல்லூரி கருத்தரங்கு ஒன்றில் அவர் என்னை மேற்கோள் காட்டிப் பேசிய போது அவர் என் மீதும் என் எழுத்தின் மீதும் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்பதையும், எவ்வளவு உன்னிப்பாக என்னை வாசித்து வருகிறார் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.  அவரது மிக முக்கியமான இந்தக் கடிதத்தை வெளியிடுவதில் நான் பெருமை அடைகிறேன்.)
இந்திய சினிமா நூறு ஆண்டை கடந்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிற செய்தியாக இருந்தாலும், இந்த நூறு ஆண்டுகளில் இந்திய சமூகம், குறிப்பாக தமிழ் சமூகம் கொஞ்சம் கூட சினிமாவை புரிந்துக் கொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் இருக்கவே செய்கிறது. சினிமா எடுப்பவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? சினிமாவில் நடிப்பவர்கள், இயக்குபவர்கள் உள்ளிட்ட வெகு சில கலைஞர்கள் மட்டுமே பொருளாதார ரீதியில் வளர்ந்துக் கொண்டே இருக்கிறார்கள். போகட்டும். பிரச்சனை அதுவல்ல இப்போது. இந்த நூற்றாண்டு கால சினிமாவை நாம் ஏன் கொண்டாட வேண்டும். சமூகத்திற்கு இதுவரை கொஞ்சமும் பயன்படாத வகையில்தான் இந்தியாவில் சினிமா உருவாகி கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், சமூகத்தை சீரழிப்பதிலும் சினிமா முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கிறது.

பொது கழிப்பிடங்களை ஆக்கிரமித்து கட்டணம் வசூலிக்கும் கட்சி தொண்டர்கள்

கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 903 நவீன கழிப்பிடங்கள் உள்ளன.மெரினா கடற்கரை, பிராட்வே, தியாகராயநகர் உள்பட மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் இயற்கை உபாதையை கழிக்க இந்த கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகிறது.ஒரு காலத்தில் கழிவறைகள் டெண்டர் விடப்பட்டது. அதன் பிறகு இலவச கழிப்பிடங்களாக மாற்றப்பட்டது.ஆனாலும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் கழிவறைகளை தனியார் ஆக்கிரமித்து கட்டணம் வசூலித்து வருகிறார்கள். மாதம் தோறும் லட்சக்கணக்கில் தனி நபர் பணத்தை சுருட்டி வருகிறார்கள் மக்கள் அதிக அளவு பயன்படுத்தாத ஒதுக்குப்புறமாக இருக்கும் கழிவறைகளை யாரும் கண்டு கொள்வதில்லை. அவை உடைந்து, நொறுங்கி மக்கள் அவசரத்துக்கு உள்ளே செல்ல முடியாதபடி அலங் கோலமாக உள்ளன.கட்டணம் வசூலிப்பவர்களிடம் கேட்டால் நாங்கள் பராமரிப்பதற்காகத்தான் கட்டணம் வசூலிக்கிறோம் என்கிறார்கள்.ஆனால் ஒவ்வொரு கழிப்பறையையும் பராமரிக்க பிளிச்சீங் பவுடர், மோட்டார் வசதி, கட்டிட சீரமைப்பு போன்றவற்றை மாநகராட்சியே செய்து வருகிறது.

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு படும் பாடு : பவானி சிங்தான் வேண்டும் ? பாலகிருஷ்ணாவும் வேண்டும் ? என்வழக்கில் நான்தான் வசனம் எழுதுவேன் ?

இந்த விநோதம் இதுவரை எந்த வழக்கிலாவது நடந்தது உண்டா? : கலைஞர்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி :- ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு எதிராக வாதாட வேண்டிய வழக்கறிஞர் பவானி சிங்கே, அந்தப் பதவியில் நீடிக்க வேண்டுமென்று குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவே முயற்சிகளில் ஈடுபடுகிறாரே?
பதில் :- நீதிபதி பாலகிருஷ்ணா இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கு முன்பு திரு. மல்லிகார்ஜுனய்யாவும், வேறு சிலரும் நீதிபதிகளாக இருந்த போது, அவர்களே தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கேட்காத ஜெயலலிதா, தற்போது மட்டும் பாலகிருஷ்ணா தொடர்ந்து இந்த வழக்கினை விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பது ஏன்?
அதுபோலவே அரசு வழக்கறிஞரான ஆச்சார்யா பதவி விலகியபோது, அவர் பதவி விலக வேண்டா மென்றும், தொடர்ந்து அந்த வழக்கிலே அரசு வழக்கறிஞராக நீடிக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்காதது ஏன்? எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குற்றவாளியே தன்மீதான வழக்கை குறிப்பிட்ட நீதிபதிதான் தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்றும், தனக்கு எதிராக வாதாடக்கூடிய அரசு வழக்கறிஞராக குறிப்பிட்ட ஒருவரே இருக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கும் விநோதம் இதுவரை எந்த வழக்கிலாவது நடந்தது உண்டா

வியாழன், 19 செப்டம்பர், 2013

கொலை வெறி சூழ விநாயகர் பவனி – Mob mentality யோடு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

pillayarஅங்கிருந்து பெண் விழுந்ததை பார்த்து சிரித்தனர் பொறுக்கி பக்தர்கள். அதில் ஒருவன் சப்தமாக கத்த ஆரம்பித்தான் கணபதி பப்பா.. . மற்றவர்களும் அதையே சப்தமாக கத்தினர். ரிப்பன்களும் புன்னகைக்கும் பிள்ளையாரும்
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் அவர்கள் நிறைந்திருந்தனர். அவர்களை அடிக்கடி பார்க்க முடியாது. தலையில் காவி ரிப்பன். நெற்றியில் நீட்டித்து வைக்கப்பட்ட செந்தூர அல்லது குங்குமப் பொட்டு கழுத்தில் காவி துண்டு.. கண்கள் சிவக்க உடலெல்லாம் வேர்த்து கொட்டியபடி டெம்போவிலும் மினிலாரிகளிலும் பயணிக்கிற இவர்களை கடந்த சில ஆண்டுகளாக யானை முகத்து விநாயகரோடு தரிசிக்க முடிகிறது.
பிள்ளையாரோடு அமர்ந்திருக்கிற இவர்களுக்கு கடவுள் பக்தியெல்லாம் இருப்பதாக தெரியவில்லை. சிலர் அந்த ஆட்டோக்களிலேயே புகை பிடிப்பதும், ஒரு கட்டிங் போடுவதுமாக இருப்பதை கவனித்திருக்கிறேன். ஒரு MOB MENTALITY யோடு வெறித்தனமாக இயங்குகிற இளைஞர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள்.

சினிமா நூற்றாண்டு விழா: கலைஞரை மறந்துவிட்டு திரைக்கு விழா எடுக்கும் கூத்தாடிகள்

கலைஞருக்கு அழைப்பில்லாத சினிமா நூற்றாண்டு விழா ,தமிழ் திரையுலகத்திற்கு கலைஞர் ஆட்சியில் செய்த உதவிகள் சலுகைகள் போன்று வேறு எவருமே செய்யவில்லை , இதை யாருமே மறுக்க மாட்டார்கள். சரி அதுதான் போகட்டும் , தனது இருபதாவது வயதில் ராஜகுமாரிக்கு வசனம் எழுத தொடங்கி தமிழ்நாட்டை தனது புரட்சிகர வசனங்களால் புரட்டி போட்ட ஒரு உன்னத கலைஞர் யார் ?  நாதா சுவாமி பிரபோ  அடியேன் பாக்கியம் போன்று வெறும் புராண பிற்போக்கு குப்பைகளில் இருந்து தமிழ் திரையை மீட்டத்தில் கலைஞரின் பங்கு எவ்வளவு என்பது வரலாறு சொல்லி கொண்டிருக்கிறதே ? பராசக்தி அன்று முட்டிய நெருப்பு இன்றுவரை கொழுந்து விட்டு எரிகிறதே? தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல தமிழ் திரை உலகிற்கும் கலைஞர் கருணாநிதிதான் பிதாமகர் , கலைஞரை மறந்து விட்டு கலைவிழாவா ? ஜெயலலிதா மீது அவ்வளவு பயமா அல்லது அவரது சலுகைகளுக்கு சோரம் போய்விட்டீர்களா ? இதுதான் அன்றே தந்தை பெரியார் சொன்னார் சினிமாக்காரன் அயோக்கியன்
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்காக சென்னை விழாக்கோலம் பூண்டுள்ளது. தியேட்டர்களில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. பூங்காக்கள் தினமும் இலவச படங்கள் திரையிடப்படுவதால் களைகட்டி உள்ளன. வண்ண வண்ண போஸ்டர்கள் நகரமெங்கும் அலங்கரிக்கிறது. கட்-அவுட் பேனர்களும் வைக்கப்படுகின்றன. நாளை மறுநாள் (21–ந்தேதி) மாலை 5.30 மணிக்கு விழா துவங்குகிறது. முதல் அமைச்சர் ஜெயலலிதா இதில் பங்கேற்று துவக்கி வைக்கிறார்.

Mineral Sand வைகுண்ட ராஜன் ஜெயா டிவியில் பங்காளி ! தெற்கத்தி வீரப்பன் !

மணற்கொள்ளையன் வைகுண்டராஜன்தாது மணற்கொள்ளை மாஃபியா தலைவன் வைகுண்டராஜன் : ‘அம்மாவின்’ ஆதரவோடு தொழில் நடத்தும் ‘மண்ணாதி’ மன்னன் பொதுச்சொத்தை தனியாருக்கு ஏன் தர வேண்டும் என்ற முக்கிய கேள்வியை விட்டுவிட்டு மணற்கொள்ளையில் நடந்த ஊழல்-முறைகேடுகளை மட்டும் பேசுகின்றன ஊடகங்கள் குறிப்பு: தற்போது ஜெயா அரசு தூத்துக்குடியைத் தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தாது மணல் எடுக்க ‘தடை’ விதித்துள்ளது. எனினும் துத்துக்குடி தவிர இதர மாவட்டங்களில் சிறப்புக் குழு ஆய்வு எடுக்கும் வரை தடை இருக்குமாம். ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில சுற்றுச்சூழல் அமைச்சகம் போட்ட இடைக்காலத் தடை குறுகிய காலத்திலேயே நீர்த்துப் போய் அந்த ஆலை தற்போது சுமூகமாக இயங்கி வருவது தெரிந்ததே. மதுரை பிஆர்பி கிரானைட் ஊழலும் இத்தகைய தடை என்னும் நாடகத்தால் மறைக்கப்பட்டதை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். வைகுண்டராஜன் கொள்ளை முழுவதும் அம்பலப்பட்ட பிறகு அவர் மீது தடை என்பது வேறு வழியின்றி செய்யப்படும் நாடகம். முக்கியமாக அதிமுகவின் தேர்தல் செலவு, ஜெயா டிவியின் பங்குதாரர் என்ற அளவில் அவரது முக்கியத்துவம் எவ்வாறு இருக்கும் என்பதை வாசகர்கள் அறியலாம்.
- வினவு
ஜெயலலிதாவின் ஆட்சியில் அரசியல் குறுக்கீடுகள் அற்ற, திறமையான, நேர்மையான நிர்வாகம் நடப்பதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவதாகவும் பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கும் சித்திரம் எவ்வளவு மோசடியானது என்பதை கார்னெட் மணற்கொள்ளை விவகாரம் மீண்டும் நிரூபித்துக் காட்டி விட்டது.

சினிமா விழாவுக்கு 10 கோடியை ஜெயலலிதா வாரிவழங்கினார் ! மிகப்பெரிய ஜால்ரா கச்சேரிக்கு திரையுலகம் தயார்

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.10 கோடிக்கான
காசோலையை தலைமைச் செயலகத்தில் அரசின் சார்பில் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்படத் துறையினர் ஏவி.எம்.சரவணன், கேயார், அமீர், சரத்குமார், சிவகுமார், விக்ரமன், அபிராமி ராமநாதன், டி.ஏ.அருள்பதி, ஆர்.பன்னீர்செல்வம், கே.எஸ்.ராமாராவ், ராஜீவ், எல்.சுரேஷ், ரவி கொட்டாரக்கரா, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், தாமஸ் டிசோசா, காட்ரகட்ட பிரசாத், பொன்.தேவராஜன், ஏ.மோகன் உள்ளிட்டோர்." இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.10 கோடிக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் அரசின் சார்பில் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்படத் துறையினர் ஏவி.எம்.சரவணன், கேயார், அமீர், சரத்குமார், சிவகுமார், விக்ரமன், அபிராமி ராமநாதன், டி.ஏ.அருள்பதி, ஆர்.பன்னீர்செல்வம், கே.எஸ்.ராமாராவ், ராஜீவ், எல்.சுரேஷ், ரவி கொட்டாரக்கரா, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், தாமஸ் டிசோசா, காட்ரகட்ட பிரசாத், பொன்.தேவராஜன், ஏ.மோகன் உள்ளிட்டோர்.

Muzaffarpur Riots பாஜக மற்றும் மாயாவதி கட்சியினருக்கு பிடிவாரன்ட்


உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகர் மாவட்டத்தில்
அண்மையில் நடந்த கலவரம் தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 16 பேரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
முசாஃபர்நகர் மாவட்டத்திலும் அதன் அண்டை மாவட்டங்களிலும் ஏற்பட்ட வகுப்புக் கலவரத்தில் 47 பேர் உயிரிழந்தனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்கள் இப்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கலவரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. காதிர் ராணா, அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் நூர் சலீம், மெüலானா ஜமீல், பாஜக எம்.எல்.ஏ.க்கள் சங்கீத் சோம், பர்தேந்து சிங், காங்கிரஸ் தலைவர் சயீத் உஸ்மான் மற்றும் சமூகத் தலைவர்கள் உள்பட 16 பேரை கைது செய்ய முசாஃபர்நகர் நீதிமன்றம் புதன்கிழமை வாரண்ட் பிறப்பித்தது.

புதன், 18 செப்டம்பர், 2013

சுரேஷ் கிருஷ்ணாவின் சொந்த படத்தில் அறிமுகமாகும் Miss India வானியா மிஸ்ரா

மல்ஹாசன் நடித்த சத்யா, இந்திரன் சந்திரன், ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, வீரா, பாட்ஷா ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாமேலும் பிரபல நடிகர்களான சிரஞ்சீவி, மோகன்லால், தனுஷ், வெங்கடேஷ், நாகார்ஜூன், பிரபாஸ், சல்மான் கான் உட்பட இந்திய திரையுலகத்தின் அனைத்து ‘ஸ்டார்’களையும் வைத்து படம் இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. திரையுலகத்திற்கு வந்து 27 வருடங்களில் 50 படங்களுக்கு மேல் இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா சுரேஷ் கிருஷ்ணா புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியிருக்கிறார்.பிரின்ஸ் கதாநாயகனாக நடிக்க 2012 ’மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற வானியா மிஷ்ரா அறிமுகமாகும் ஒரு திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். காதல் நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த ஆக்‌ஷன் படமாக இத்திரைப்படம் உருவாகவிருக்கிறதாம்

மதிமாறன் :பக்தனாக இருந்து கோயில் சொத்துக்களை கொள்ளையடிக்கலாம்

bagat பக்தர்களுக்கு கோயில் உள்ளே நுழையவே தடை இருந்தது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ‘பள்ளன்-பறையன்-சாணான்-சக்கிலி நுழையத் தடை’ என்று 70 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வைத்திருந்தார்கள். அதை எழுதி வைத்தது நாத்திகர்கள் அல்ல; முருகனுக்கு நெருக்கமாக இருந்த பக்தர்கள்.
தமிழ்க் கடவுள் ‘பச்சைத் தமிழர்களை’ உள்ளேயே விடல.
பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த நாத்திகர்கள் தான் போராடி அதை அகற்றி, முருகனை வழிபடும் உரிமையை பெற்றுத் தந்தந்தார்கள்.
இதுல, நாத்திகர்கள் கோயில் சொத்துக்களைப் பயன்படுத்த தடையாமா… ‘சிவன் சொத்து குலநாசம்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது பக்தர்களிடம். ஆனாலும் பிரபல பக்தர்கள், ஆதினங்கள், சங்கராச்சாரியார்கள் – கொஞ்சம் கூட சிவனிடம் பயமில்லாமல் துணிச்சலா கொள்ளையடிக்கிறார்கள். முன்னாள் மந்திரியும் இப்போதும் தீவிர பக்தராக இருக்கிற கம்பன் மீது காதல் கொண்ட ஒருத்தர் திருச்செந்தூர் முருகன் வேலை தூக்கிட்டு போயிட்டாரு என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு.
பக்தனாக இருந்து கோயில் சொத்துக்களை கொள்ளையடிக்கலாம். மடத் துறவியா இருக்கிறவன் கோயில் பிரகாரத்திலேயே கொலை செய்யலாம். குருக்களாக இருக்கிறவன் கோயில் கருவறையையே கரு உண்டாக்கும் அறையாக பயன்படுத்தலாம்.

ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கு நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு வேண்டுமாம் ! ஜெயாவின் கோரிக்கை

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் பவானி சிங் நீக்கத்துக்கு தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட், இது குறித்து கர்நாடக அரசு அம்மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்துமாறும் உத்தரவிட்டது. அதன்படி கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய கர்நாடக அரசு, பவானி சிங்கை நீக்குவதாக முடிவெடுத்து அறிவித்தது. இதனால் 17-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, பவானி சிங் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணை 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சொத்துகுவிப்பு வழக்கில் திமுக கிடுக்கி பிடி போட்டு பவானி சிங்கை நீக்கியதை ஜெயலலிதா லேசில் மறக்க மாட்டார் !

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்குவது தொடர்பாக அரசு தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய கர்நாடகா அரசு, அவரை வழக்கில் இருந்து ஒரேயடியாக நீக்கியுள்ளது.
இவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சார்பாக நடந்து கொள்வார் என தி.மு.க. குற்றம் சாட்டியிருந்தது. அதே நேரத்தில், பவானி சிங்கை நீக்கக்கூடாது என முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
1991-96-ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கு பல்வேறு வாய்தாக்கள் மற்றும் இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டால், நிலைமை கவலைக்கிடம் ஆகும் என்பதே, முதல்வர் ஜெயலலிதா தரப்பின் நம்பிக்கை.

மோடி வித்தைகாரனுக்கு ஆணி அடிக்க நாடகம் ஆடும் பெருசு

அத்வானி, மோடி இருவருக்கிடையிலும் கருத்து வேறுபாடுகள் தொடர்கிறது: ராஜீவ் சுக்லா
நரேந்திர மோடியை அத்வானி பாராட்டியிருப்பது வெறும் நாடகம் என அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறினார்.
கான்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொருவரும் வேறுபாடான கருத்துகளை கூறி வருகின்றனர். அத்வானி ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தை புறக்கணித்தார். இவையனைத்துமே மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் அக்கட்சியினரிடையே ஒருமித்த கருத்து இல்லை என்பதையே காட்டுகின்றன என்றார்.
மேலும் பேசிய அவர், நரேந்திர மோடியை அத்வானி பாராட்டியிருப்பது வெறும் நாடகமே என்றும், அவர்கள் இருவருக்கிடையிலும் கருத்து வேறுபாடுகள் தொடர்வதாகவும் கூறினார்

விரைவில் புலன்விசாரணை ! ஊரான் நிலத்தையெல்லாம் வளைத்து செல்வம் சேர்த்த திரைப்பட இயக்குனர்

சென்னை: அந்த இயக்குநர் தொன்னூறுகளில் பிரபலமாக இருந்தவர். தான் அறிமுகப்படுத்திய நடிகையையே திருமணம் செய்தவர். இங்கே அவர்
தமிழ், தமிழர் உரிமை, தமிழ் தேசியம் என்றெல்லாம் முழங்கினாலும், மனைவி பக்கத்து மாநிலத்தில் இவர் கடுமையாக எதிர்க்கும் கட்சியில்தான் குப்பை கொட்டுகிறார். அறிமுகம் போதுமல்லவா... இந்த இயக்குநருக்கு நிலத்தை பட்டா போட்டுக் கொள்வதில் அப்படி ஒரு பேராசையாம். இதுவரை இவர் குவித்துள்ள நிலங்களின் மதிப்பு மட்டும் ரூ 200 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டுமே ரூ 100 கோடிக்கு மேல் பல நூறு ஏக்கர் நிலங்களை மடக்கி வைத்துள்ளாராம் இயக்குநர். இந்த நிலங்கள் ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் அமைந்துள்ளவானம். அரசுப் புறம்போக்கு, அவசரத்துக்கு காசு தேவைப்படும் ஏழைகள் நிலங்கள், வாரிசற்றவர்கள் நிலங்கள் என வகை தொகை இல்லாமல் வளைத்துப் போட்டுள்ளாராம் இயக்குநர். இதில் ஏற்படும் வில்லங்கங்களை சரிக்கட்ட ஒரு முக்கியமான அரசியல் தலைவரை கைக்குள் போட்டுக் கொண்டுள்ளாராம் இயக்குநர். இருவரும் கிட்டத்தட்ட தினசரி சந்தித்துக் கொள்வதோடு, அன்றாட நிலப் பஞ்சாயத்துக்களை தங்கள் ஆட்களை வைத்து சாமதானபேத தண்ட முறையில் சமாளிக்கிறார்களாம். கமிஷனர் அலுவலகத்தில் உள்ள நில மோசடி பிரிவு எப்போ வேணும்னாலும் புலன் விசாரணையில் குதிக்கும் என்கிறார்கள், அரசியல் தலைவரின் அடிப்பொடிகள்
tamil.oneindia.in

Delhi பலாத்கார வழக்கு: குற்றவாளிகளின் வக்கீல்களின் அங்கீகாரம் ரத்து?

டெல்லி: சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததால், டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான இரு வழக்கறிஞர்களின் மீது புகார்கள் குவிவதாகவும், அதனைத் தொடர்ந்து வர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து விரைவில் ஆலோசிக்க இருப்பதாகவும் டெல்லி பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார சம்பவ வழக்கில் கைதான குற்றவாளிகள் சார்பில் ஆஜரான இரண்டு வழக்கறிஞர்கள், பாதிக்கப்பட்ட அம்மாணவி குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். அதில், அம்மாணவி திருமணத்துக்கு முன்பே உடல் உறவு வைத்துக் கொண்டிருந்தார் என்றும் நள்ளிரவில் ஒரு ஆணுடன் சென்றார் என்றும் தெரிவித்திருந்தார் ஒரு வழக்கறிஞர். மேலும்,அந்தப்பெண் தனது மகளாக இருந்திருந்தால், இரவில் அவ்வாறு சுற்ற அனுமதித்திருக்க மாட்டேன் எனவும், இத்தகைய சம்பவங்கள் நடைபெறாவண்ணம் தடுத்திருப்பேன் எனவும் கூறியிருந்தார். அத்தோடு, அந்தப் பெண் தனது மகளாக இருந்திருந்தால், தான் அவளை உயிருடன் எரித்திருப்பேன் என்றும் மற்ற பெற்றோர்களும் அதைத்தான் செய்ய வேண்டும் என அதிர்ச்சி கருத்து தெரிவித்திருந்தார்.

சிறுமியை விடிய விடிய பலாத்காரம் செய்த 5 சிறார்கள் ! 3 வருட தண்டனை மட்டுமே கிடைக்கும் ! பேசாம தூக்கில போடுங்க

குவஹாத்தி: அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் மைனர் சிறுமி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது. இந்த ஐந்து பேரும் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. ஐந்து பேரும் அச்சிறுமியின் நண்பர்களாம். சிறுமி தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே அழைத்துச் சென்று நாசப்படுத்தியுள்ளனர். குற்றம் இழைத்த ஐந்து பேருக்கும் 15 முதல் 16 வயதுதான் ஆகிறதாம். ஐந்து பேரும் பிடிபட்டுள்ளனர். அவர்களுக்கு வயதை நிர்ணயிக்கும் எலும்பு மஜ்ஜை சோதனைக்கு போலீஸார் முடிவு செய்துள்ளனர். அந்த சிறுமிக்கு மயக்க ம ருந்து கொடுத்து அருகில் உள்ள மறைவான இடத்திற்குக் கூட்டிச் சென்று ஐந்து பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். மாலை தொடங்கி இரவு முழுவதும் அட்டூழியம் செய்துள்ளனர். அடுத்த நாள் காலையில்தான் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள். காயமடைந்த நிலையில் கிடந்த சிறுமியை பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இப்போது இந்த ஐந்து சிறார்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு அதிகபட்சம் 3 வருட கால சிறார் சீர்திருத்த முகாமில் அடைக்கப்படும் தண்டனைதான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. tamil.oneindia.in/

காரியகிறுக்கன் ரஜினி உள்ளுர BJP ஆதரவாளரா ? காசு ஒருபுறம் சாமிவேஷம் மறுபுறம் ம்ம்ம்

சென்னையில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு அளிப்பார் என்பது போன்ற செய்திகள் திடீரென்று பரவலாக வெளிவந்துள்ளதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,
ரஜினிகாந்த் நடிப்பு துறையில் சிறந்து விளங்கி இருந்தாலும் கூட, அதற்கு அப்பாற்பட்டு அவருடைய வார்த்தைகளை மதிக்கின்ற ஒரு பெரிய கூட்டம் தமிழகத்திலும், தென் மாநிலங்களிலும் இருக்கிறது என்பது உண்மை.
ரஜினிகாந்த் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். ஆனால் அவர் அப்பழுக்கற்ற தேசியவாதி. நாட்டின் நலன் குறித்து அக்கரைபடுபவர். யாரெல்லாம் நாட்டின் நலன் குறித்து அக்கரைப்படுகிறார்களோ? அவர்களெல்லாம் இன்றைய பாரதத்தின் நிலை குறித்து கவலைப்படுகிறார்கள். தனது  குடும்ப கல்லூரிகளின் லாபத்திற்கு சமசீர் கல்வி தடையாகிவிடும் என்ற காரணத்திற்காக சென்றதேர்தலில்  ஜெயலலிதாவுக்குசப்போர்ட்பண்ணியவியாபாரிதான் இந்த  ரசனி

மிஸ் அமெரிக்காவாக தேர்வான இந்திய வம்சாவளி பெண் நீனா !

நியூ ஜெர்சி::அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி
பெண் நீனா, அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பார்ப்பதற்கு தீவிரவாதி போல இருப்பதாகவும், அமெரிக்காவை விட்டு வெளியேறும்படியும் டுவிட்டரில் சிலர் கிண்டல் செய்துள்ளனர். இதனால் பரபரபரப்பு ஏற்பட்டுள்ளது.மிஸ் அமெரிக்கா 2014 அழகி போட்டி நியூ ஜெர்சி மாநிலத்தின் அட்லான்டிக் நகரில் நேற்று நடந்தது. இதில் அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களை சேர்ந்த 53 அழகிகள் கலந்து கொண்டனர். மிஸ் நியூயார்க் அழகியான நீனா தவுலூரியும் கலந்து கொண்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரது தந்தை அமெரிக்காவில் டாக்டராக உள்ளார். போட்டியின் முடிவில் மிஸ் அமெரிக்காவாக நீனா தேர்ந்தெடுக்கப்பட்டு கிரீடம் சூட்டப்பட்டார். இந்நிலையில், டுவிட்டரில் நீனா குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை சிலர் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு பெண்ணை எப்படி மிஸ் அமெரிக்காவாக தேர்ந்தெடுத்தார்கள் என்று ஒருவரும், நீனா ஒரு வழிப்போக்கர், அவரது முகத்தை பார்ப்பதற்கு தீவிரவாதி போல அச்சுறுத்தலாக உள்ளது என்று மற்றொருவரும் கூறியுள்ளனர். பயங்கரவாதி போல உள்ள நீனா, அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்று இன்னொருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நீனா கூறுகையில், என்னை பற்றி சமூக இணையதளத்தில் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்பி உள்ளனர். மிஸ் நியூயார்க் அழகியாகவும், மிஸ் அமெரிக்கா அழகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றார்.

திருச்சி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயர் ! வீரமணி கோரிக்கை !

சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தினை அதே வழித்தடத்தில்
செயல்படுத்தும் மத்திய அரசுக்கு பாராட்டு!
திருச்சி விமான நிலையத்திற்குத்  தந்தை பெரியார் பெயரைச் சூட்டவேண்டும்
தந்தை பெரியார் பிறந்த நாளில் மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்!

சென்னை, செப்.17- திருச்சி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டவேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோளையும், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தினை அதே வழித்தடத்தில் செயல்படுத்தும் மத்திய அரசுக்கு பாராட்டினையும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தினை உடனே செயல்படுத்த மாநில அரசிற்கு கோரிக்கையினையும் வைத்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

கற்பை விலையாக கேட்டாரா கருப்பசாமி பாண்டியன்? பாலியல் குற்றச்சாட்டு ~ ! கண்ணீருடன் தமிழரசி முறைப்பாடு

திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த தமிழரசி என்ற பெண், நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீது பாலியல் புகார் ஒன்றை நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித் சரணிடம் செவ்வாய்க்கிழமை காலை கொடுத்துள்ளார்.
அதில், நான் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். எனது தாத்தா மற்றும் தந்தை திமுக வழியில் வந்தவர்கள். கட்சியில் பொறுப்பு கேட்டு தந்தையுடன் சென்று மாவட்டச் செயலாளரை அணுகினேன். அவர் சில நாட்கள் கழித்து தனது உதவியாளர் மூலம் 28.08.2013 அன்று குற்றாலம் வரசொன்னார். நானும் எனது தந்தை நாலடியாரும் குற்றாலத்தில் உள்ள அவரது பங்களாவுக்கு சென்றோம். அங்கே அவரது உதவியாளர் எங்களை மாடியில் மாவட்டச் செயலாளர் இருப்பதாக சொன்னார். எனது தந்தையை கீழே இருக்கச் சொல்லிவிட்டு, என்னை மட்டும் மாடிக்கு அனுப்பினார்கள். அங்கு கருப்புசாமி பாண்டியன் என்னுடைய குடும்ப சூழலை தெரிந்துகொண்டு, என்னிடம் தவறாக நடக்க முயன்றார். நான் அழுதுகொண்டே திரும்பிவிட்டேன்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

கம்யுனிஸ்டு பாண்டியனின் ஜெயா பக்திக்கு அளவே இல்லை !

dinamalar.com

MP யாகிவிட்ட ரம்யா இனி நடிக்க மாட்டாராம் , அதாவது திரையில் !

அரசியலில் குதித்து எம்பி ஆகிவிட்ட ‘குத்து ரம்யா, விரைவில் நடிப்புக்கு அரசியல் மற்றும் சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் ரம்யா விரைவில் திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளாராம். இதனால் நடிப்புக்கு முழுக்கு போட உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நடித்து வரும் 3 படங்களின் படப்பிடிப்புகளையும் அரசியல் பணி காரணமாக தள்ளி வைத்திருக்கிறார். அப்படங்களை முடித்தபிறகு நடிப்புக்கு முழுக்கு போடப்போவதாக ரம்யாவே திரையுலகினரிடம் தெரிவித்திருக்கிறார். க்கு போட உள்ளார்.‘வாரணம் ஆயிரம், ‘குத்து உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் ரம்யா. இவர் கர்நாடகா இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.பி. ஆகிவிட்டார். கடந்த செவ்வாய்கிழமை ரம்யா பெங்களூரில் விதான் சவுதா அருகில் காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது டுவீலரில் சென்றுக்கொண்டிருந்த வக்கீல் ஒருவரை அடையாளம் தெரியாத வாகனம் இடித்துவிட்டு சென்றது. இதில் அந்த நபர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ரம்யா. உடனடியாக தனது காரை நிறுத்தி, அதில் காயம் அடைந்தவரை ஏற்றிச்சென்று மருத்துவமனையில் சேர்த்தார். 2 மணி நேரம் அங்கேயே காத்திருந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த ரம்யா, பிறகு வக்கீல் g மனைவியிடம் சிகிச்சைக்கான பணத்தையும் அளித்துவிட்டு tamilmurasu.org சென்றார்.

செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி முறைகேடு ! விசாரணை தொடக்கம் ! பவானி சிங்கை மாத்து மாத்துன்னா இதுதான் நடக்கும்

சென்னை: கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில், 200 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன், கனிமொழி மீதான புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., விசாரணையை துவக்கி உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.  அரசியல் காரணக்களுக்காக போடப்படும் வழக்குகள் இதெல்லாம். ஒழுங்காக கனக்கு வைத்துதான் செலவு செய்திருப்பார்கள். பாலிசி மேட்டர் களில் கோர்ட் தலையிடகூடது. அதுவும் தமிழ் வளர்ச்சிக்கு. இவ்வளவு கூட செய்யகூடாத. தைரியமிருந்தால் எல்லா அரசு விழா செலவுகளை அரசு வெளியிடுமா கடந்த 2 ஆண்டுகளில். இதைபோல் பல மடங்கு செய்திருப்பார்கள்

மோடி பிரதமராக அத்வானி ஆதரவு ! மறுப்பு வெறுப்பு விருப்பு ? உண்மைய சொல்லுங்க சார் என்ன பண்ணினாங்க ?

ராய்ப்பூர்: ""நாட்டின் நலனை கருத்தில் கொண்டே, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, மோடி நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு, பிரதமர் பதவி கிடைக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்,'' என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறியுள்ளார். முதலில் புறக்கணிப்பு: பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டார். அதற்கு, அக்கட்சியின் மூத்த தலைவர், அத்வானி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. மோடியை அந்த பொறுப்பிற்கு அறிவிப்பதற்காக கூடிய, பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டத்தில், அத்வானி பங்கேற்கவில்லை. அத்வானியின் விருப்பத்திற்கு மாறாக, மோடிக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது என, பேசப்பட்டது. அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் கூட, இதை ஒப்புக் கொண்டனர். "மோடிக்கு இப்போது இந்தப் பதவி வழங்க வேண்டாம்; நான்கு மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பின் அறிவித்துக் கொள்ளலாம் என்று தான் அத்வானி கூறி வந்தார்' என, அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அத்வானி, மோடியை பாராட்டி பேசினார். இது ஒருவேளை உயிருக்கு பயந்து கொடுத்த ஆதரவாக இருக்கலாம் அல்லது 5 மாநில தேர்தலில் பா ஜா கா தோற்றால் மோடியால் தோற்றது என்று அவரை கவிழ்க்கும் சதியாகவும் இருக்கலாம்

சிபிஎம்மின் கலைந்து போன கூட்டணி கனவுகள் ! அரசியல் அனாதை ஸ்தானம் ?

ஜெயலலிதாரு ஊரில் இருந்த டீக்கடைக்கு ஆளே வரா விட்டாலும், டீ ஆத்திக் கொண்டிருப்பது அந்த டீக்கடைக்காரரது பழக்கம். ஆட்கள் எல்லாம் பக்கத்தில் உள்ள டாஸ்மாக், சைட் டிஷ் என்று நகர்ந்து விட இவர் டீக்கடையில் ஆத்து ஆத்து என்று ஆத்திக் கொண்டிருக்கிறார்.
இந்திய ‘ஜனநாயகத்தில்’ அப்படி டீ ஆத்திக் கொண்டிருப்பது சிபிஎம் கட்சிதான். எங்க டீ நல்லா இருக்கும், மணம், குணம், நிறம் நிறைந்த டீ என்று எவ்வளவு கூவினாலும் யாரும் எட்டிப் பார்க்கவில்லை. வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பொருளாதாரப் பிரச்சனைகளின் அடிப்படையில் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று அந்தக் கட்சி விடுத்த அறைகூவலை சீண்டிப் பார்க்கக் கூட வேறு எந்த கட்சியும் முன் வரவில்லையாம்.
ஒரே ஒரு கட்சி மட்டும் பொருளாதார பிரச்சனைகளில் சிபிஎம்மை விட இடதுசாரியாக நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து கட்சியே பொறி கலங்கி போயிருக்கிறது. மேற்கு வங்காளத்தில் தாங்கள் முழு மூச்சாக எதிர்த்துக் கொண்டிருக்கும் மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வலது, இடதுகளை விட பொருளாதார பிரச்சனைகளில் மத்திய அரசை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தீவிரமாக செயல்படுவது சிபிஎம்மின் அரசியல் அடிப்படையையே அசைத்துப் போட்டிருக்கிறது.

ஹிந்து பத்திரிகை குடும்பத்தின் தமிழ் இந்து ! காலம்கடந்து ஏன் இந்த முடிவு? அல்லது அவசரம் ?

the-hindu-tamilஇந்து ராம், ஜெயலலிதாஜெயாவின் அவதூறு வழக்குகளால் விஜயகாந்தும், கருணாநிதியும் மட்டும் அரண்டு போயிருக்கவில்லை, பத்திரிகைகளும்தான். ஏற்கனவே தி இந்துவின் மாலினி பார்த்தசாரதியை கைது செய்தே ஆக வேண்டும் என்று ‘அம்மா’ ஓட, ஓட விரட்டியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இதையடுத்து இந்து ராம் தலைமைச் செயலகம் சென்று பூச்செண்டு கொடுத்து அம்மாவை குளிர வைத்து சமாதானம் செய்தார். அதன்பிறகு ஆங்கில இந்துவில் மறந்தும் கூட ஜெயலலிதாவைப் பற்றி விமரிசனங்கள், குறைகள் ஏதும் வருவதில்லை.
இந்து ராம், ஜெயலலிதா
இருப்பினும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஜெயாவை விமரிசித்தார்கள் என்ற செய்தியை போட்டதற்கே ஆங்கில இந்துவின் மேல் தமிழக அரசு அவதூறு வழக்கு போட்டது. அதன்பிறகு அத்தகைய செய்திகளும் இந்துவில் வெளிவருவதில்லை. இந்தப் பின்னணியில் தமிழில் வெளிவந்திருக்கும் ‘தி இந்து‘வைப் பார்க்க வேண்டும்.
ஆங்கில இந்து போல தமிழிலும் நாளிதழைக் கொண்டு வரவேண்டும் என்பது நூறு ஆண்டு காலக் கனவு என்று தலையங்கத்தில் குறிப்பிடுகிறார் அதன் ஆசிரியர் அசோகன். அரசுப் பேருந்துகளில் ரூ.10க்கு ஒரு லிட்டர் குடிநீர் கொடுக்கும் அம்மாவின் திட்டமே நூறாண்டு கடந்து வந்திருக்கும் கனவு இந்துவின் தலைப்புச் செய்தி. பொதுவில் செய்திகளில் கருத்தோ, கண்ணோட்டமோ தருவது தவறு என்ற கொள்கையை கொண்டிருக்கும் இந்து நாளிதழ் இதில் ஒரு மெல்லிய விமரிசனத்தை அல்லது கருத்தை தூவி விட்டிருக்கிறது.

நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டுக்கு ஏல நடைமுறைகளை புறந்தள்ளியது ஏன் ? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

புதுடில்லி:"மதிப்புமிக்க இயற்கை வளமான, நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், ஏல நடைமுறைகளை பின்பற்றாதது ஏன்?' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதி லோதா தலைமையிலான, "பெஞ்ச்' முன் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசுக்கு எதிராக, நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அவர்கள் கூறியதாவது:கடந்த, 1992ம் ஆண்டிலிருந்து, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிற்காக, என்னென்ன நடைமுறைகளை கடைபிடிக்கப்பட்டன என்பதை, மத்திய அரசு விவரிக்க வேண்டும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை முடிவு செய்ய, தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்தச் சட்ட விதியின் கீழ், இந்தக் குழு அமைக்கப்பட்டது.நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை முடிவு செய்யும் பணியை, முதலில், இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான, மத்திய சுரங்க திட்டம் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

அன்பர்களே தடங்கலுக்கு வருந்துகிறோம், தொழில் நுட்பம் சரியாக விளங்காத காரணத்தால் ஏற்பட்டது இந்த தடங்கல்

எம்மீது அபிமானம் வைத்து எமது செய்திகளையும்  கருத்துக்களையும்
வாசித்து சில சமயங்களில் உங்கள் கருத்துகளையும் அறியத்தந்து ஆதரவு நல்கிய உங்களுக்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தடங்கல்களால் சிலநாட்கள் புதிய தகவல் எதையும் என்னால் பதிவேற்றம் செய்ய முடியாமல் போய்விட்டது , இது முற்று முழுதாக தொழில்நுட்பம் தொடர்புடைய பிரச்சனைதான் ,
Social network எனப்படும் சமுக ஊடகத்தின் தேவை இன்றைய உலகில் முக்கியமான ஒன்று என்பதை இந்த தடங்கல் எனக்கு தெளிவாக காட்டி உள்ளது , இன்று அல்லது நாளை மீண்டும் வழமை போல் உங்களிடம் வருவேன் , நன்றி