சுக்ராமினை பார்க்கிறார். சுக்ராம், அப்போது இந்திய ஒன்றியத்தின் தொலை தொடர்பு துறை அமைச்சர். 9 வட்டங்களுக்கான தொலைத் தொடர்பு ஒப்பந்தம் அவருக்கு போகிறது, ஆனாலும் அந்த ஒப்பந்தத்தினை நிறைவேற்ற முடியவில்லை. திரும்பவும் சுக்ராம் உள்ளே நுழைந்து, குழப்பி, கட்டிங் வாங்கி, பின்னாளில் சுக்ராம் ஊழல் என்கிற பெயரோடும் நிறைய சுகரோடும் செத்து போனார். 2010
அந்த நிறுவனம் தொலை தொடர்பு துறை ஏலம் எடுக்க வருகிறது. அது குறிப்பிடும் தொகை பழம் தின்று கொட்டை போட்ட நிறுவனங்களுக்கே அதிர்ச்சியை தருகிறது. 12,848 கோடிகள். யாரும் அவ்வளவு விலை கொடுத்து அந்த அலைக்கற்றையை எடுக்க மாட்டார்கள். ஏலத்தின் முடிவில் இந்தியா முழுமைக்குமான BWA (Broadband Wireless Access) தொலை தொடர்பு அந்த நிறுவனத்துக்கு போகிறது. இந்திய ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுத்த அதே நாள் மாலையில் அந்த நிறுவனத்தின் 95% பங்கினை ஒருவர் வாங்குகிறார். அதற்கு அவர் கொடுக்கும் விலை 4,800 கோடிகள்.







nakkeeran :சிவகங்கை மாவட்டம் கோமாளிப் பட்டியில்,
உள்ளூர் படையைப் பற்றிய குறிப்புகளுடன் கூடிய இரண்டு ஆசிரியம்
கல்வெட்டுகளை, சக்கந்தியைச் சேர்ந்த மலைராஜன் அவர்களின் உதவியுடன்
கானப்பேரெயில் தொல்லியல் குழுமத்தைச் சேர்ந்த இலந்தகரை ரமேஷ், கருங்காலி
விக்னேஷ்வரன் மற்றும் காளையார் கோவில் சரவண மணியன் ஆகியோர்
கண்டறிந்துள்ளனர்.கல்வெட்டுகளின் செய்தி குறித்து அவர்கள்
கூறியதாவது, ஆசிரியம் என்றால் அடைக்கலம் தருதல், பாதுகாப்பு தருதல் என்று
பொருள். ஆசிரியம் சொல்லுடன் பயின்று வரும் கல்வெட்டுகள் தமிழகத்தில்
மொத்தம் எழுபதிற்கும் மிகாமலே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள்
பெரும்பாலானவை புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ளவை. ஆசிரியம் கல்வெட்டுகள் பெரும்பாலும்
தனிப்பலகைக் கற்களில் பொறிக்கப்பட்டு நடப்பட்ட கல்வெட்டுகளாகவே உள்ளன.
சோழர், பாண்டியர்களின் ஆட்சியிலே ஆரம்பிக்கப்பட்டு அந்தந்தப் பகுதிகளில்
படைகளை உருவாக்கி அவர்களுள் ஒருவருக்கு அதிகாரத்தை அளித்து தனது
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்துள்ளனர்.










minnambalam : ராமநாதபுரம்
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் நேற்று (செப்டம்பர் 3) மாலை
திடீரென காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் பாஜக இருப்பதாக சலசலப்புகள் கிளம்பியுள்ளன.
பொறுப்பேற்ற வருண் குமார்,
கடந்த ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் பயிற்சிக்காக ஹைதராபாத் சென்றார். அது
முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தார். இந்நிலையில்தான் கடந்த ஆகஸ்டு 31
ஆம் தேதி மாலை ராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த சுவாமிநாதன் மகன் 23
வயதான அருண்பிரகாஷ் என்ற இளைஞரை, ஒரு கும்பல் துரத்தித் துரத்தி வெட்டிக்
கொலை செய்தது. ராமநாதபுரத்தில் மதக்கலவரத்துக்கு ஏற்பாடு செய்த பாஜகாவின் திட்டத்தை முறியடித்ததால் 








minnamblam :கள்ளக்குறிச்சி
மாணவி நித்யஸ்ரீ எரிக்கப்பட்ட இடத்தில் செல்போன் உதிரிபாகங்கள் மற்றும்
கைக்கடிகாரம் கருகிய நிலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி
மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மேட்டு நன்னாவரம் கிராமத்தைச்
சேர்ந்தவர் நித்யஸ்ரீ. கல்லூரி மாணவி. இவருக்கு இரு சசோதரிகள் உள்ளனர்.
இவர்கள் 12, 10ஆம் வகுப்புகள் பயின்று வருகின்றனர். ஆன்லைன் பாடங்கள்
நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒரு செல்போனை வைத்து பாடம் கற்பதில்
சகோதரிகளுக்குள் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்
நித்யஸ்ரீ இரு தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். உடல்
அவரது கிராமத்தில் உள்ள இடுகாட்டில் எரிக்கப்பட்டது. ஆன்லைன் வகுப்பில்
கலந்துகொள்வதால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக உயிரிழந்தார் என்று
தெரிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் நித்யஸ்ரீ
குடும்பத்துக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.>இந்நிலையில்
வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நித்யஸ்ரீ எரிக்கப்பட்ட
இடத்தில் செல்போனின் உதிரிபாகங்கள், கூடுதல் மனித எலும்புகள், மற்றும்
கைக்கடிகாரம் ஆகியவை கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து
தகவலறிந்து வந்த போலீசார் எலும்புகளை தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்காக
அனுப்பியுள்ளனர்.



தினத்தந்தி :புதுடெல்லி,
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா ராணுவ
வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம்
அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை
தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. 






>
dailythanthi.com: தமிழகத்தில் இன்று மேலும் 5,990 பேருக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, தமிழகத்தில் கொரோனா தொற்று
தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த
பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. எனினும் தொற்று பரவல்
கட்டுக்குள் வந்த பாடில்லை. 





