சனி, 20 ஜூலை, 2019

ஊடகங்களால் மறைக்கப்படும் உண்மைகள் .. நாடு எங்கே போகிறது? அதிர்ச்சி புள்ளிவிபரங்கள்!

Saravanaperumal Perumal : நம் நாடு மிகுந்த ஆபத்தான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான உதாரணங்கள் சில:
1- ஜெட் ஏர்வேஸ் இழுத்து மூடப்பட்டது.
2- ஏர் இந்தியா மோசமான இழப்புகளை சந்தித்து வருகிறது.
3- BSNL ஊழியர்கள் 54,000 பேர் வேலை இழக்கும் ஆபத்தில் உள்ளனர்.
4- HAL நிறுவனத்தில் சம்பளம் கொடுக்க பணம் இல்லை.
5- தபால் போக்குவரத்து நிறுவனம் 15 ஆயிரம் கோடி நஷ்டம்.
6- வீடியோகான் நிறுவனம் திவால்.
7- டாடா டொகோமோ அழிந்துபோனது.
8- ஏர்செல் கதை முடிந்து போனது.
9- ஜேபி (Jaypee) குழுமம் உயிர் ஊசலாடுகிறது.
10 - ஓஎன்ஜிசி (ONGC) யின் நிலமை மோசமாகிக் கொண்டே போகிறது.
11- வங்கிகளில் இருந்து பெரிய அளவில் கடன் வாங்கிய 36 கோடீஸ்வரர்கள் (பெரிய கடனாளிகள்) நாட்டில் இருந்து தப்பியோடியுள்ளனர் (தப்பி ஓடவைக்கப் பட்டுள்ளனர்)
12- பெரிய கோடீஸ்வரர்களின் தள்ளுபடி செய்யப்பட்ட வங்கி வாராக்கடன் தொகை, 35 மில்லியன் கோடி
13 பி.என்.பி தள்ளாடுகிறது.
14- மற்ற வங்கிகளும் பெரும் இழப்புக்களை சந்தித்து வருகின்றன.
15- நம் நாட்டின் மீது உள்ள கடன் 131100 மில்லியன் டாலர்கள்.
16- ரயில்வே தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப் படுகிறது.

டோல் கேட் கொள்ளையை தடுக்கு தமிழக எம்.பி.க்கல நெடுஞ்சாலை துறை அமைச்சர் கத்காரி சந்திப்பு .

டோல் கேட்:  தமிழக எம்.பி.க்களை ‘கூல்’ செய்த கட்கரிமின்னம்பலம் : தமிழகத்தில் டோல் கேட்டுகளுக்கு எதிரான போராட்டங்கள் பல பகுதிகளிலும் நடந்த நிலையில், ‘இதுபற்றி தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பேசினார்.
தமிழக எம்.பி.க்களும் இதுபற்றி நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பினர். இந்த நிலையில் ஜூலை 16 ஆம் தேதி மக்களவையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மீதான மானிய கோரிக்கைகளுக்கு பதிலளித்த துறை அமைச்சர் நிதின் கட்கரி,
“சுங்கச் சாவடிகளில் அதிகளவு பணம் வசூலிக்கப்படுவதாக சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். சுங்கச் சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் பணமானது, கிராமப்புற மற்றும் மலைப் பகுதிகளில் சாலை அமைக்கப் பயன்படுத்தப்படுகிறது. சுங்கக் கட்டண விகிதங்கள் அவ்வப்போது மாறுபடும். ஆனால் அவற்றை நிறுத்த முடியாது. உங்களுக்கு தரமான சாலைகள் வேண்டுமானால், அதற்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும். அரசாங்கத்திடம் பணம் இல்லை, என்பதால் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்தமுடியாது” என்று அழுத்தம் திருத்தமாகவே கூறிவிட்டார்.

ஸ்மார்ட்டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் அந்தரங்க காட்சிகள் .. ராஜேஸ்குமார் அனுபவம் ..

 tamil.gizbot.com -  Rajivganth Gurusamy  : ஆபாச வலைத்தளங்கள் மூலம்  செல்போன், டேப்லெட்களை ஹேக் செய்து அதில் உள்ள பைல்கள் மற்றும் தனிப்பட்ட வீடியோ, ஆடியோக்களையும் திருடி ஆபாச வலைதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் ஹேக்கர்கள் இதற்கும் மேலே சென்று தனிப்பட்ட முறையில் தற்போது நம் வீட்டில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் டிவிகளை ஹேக் செய்து வருகின்றனர். மற்றவைகளை காட்டிலும் ஸ்மார்ட் டிவியை ஹேக் செய்வது என்பது எளிதாக இருக்கின்றது. 
இந்நிலையில், வீட்டு படுக்கையறையில், வைத்திருந்த ஸ்மார்ட் டிவி முன் தம்பதி ஒருவர் பாலியல் உறவு கொண்டுள்ளனர். இதை ஹேக்கர் ஒருவர் தனது கணினி மூலம் ஹேக் செய்து அந்த வீடியோவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

டி.ராஜா இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்

tamil.oneindia.com - Sherlin Sekar :  டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தமிழகத்தை சேர்ந்த டி ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக இருக்கும் சுதாகர் ரெட்டி. கடந்த இரண்டு முறையாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஓராண்டாக சுதாகர் ரெட்டி தனக்கு சளித் தொந்தரவு அதிகம் இருப்பதால் ஓய்வு கொடுக்க வேண்டும் என கட்சியின் செயற்குழுவில் கேட்டுக்கொண்டார். 
 இந்த நிலையில் அக்கட்சியின் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் புதுடெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுச்செயலாளராக யாரை நியமிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. இதில் தற்போதைய தேசிய செயலாளரான டி.ராஜா, கேரளத்தை சேர்ந்த பினோய் விஸ்வம், மூத்த தலைவர் அமர்ஜெத் கவுர், அதுல்குமார் அஞ்சன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

சூர்யா: : நுழைவுத்தேர்வுகள் உயர்கல்வியிலிருந்து கிராமப்புற மாணவர்களை துடைத்தெறிந்துவிடும்

BBC : ல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று
சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது என்றும், ஏழை பணக்காரர் பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான, தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் நடிகர் சூர்யா அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது, ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விபரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது. அப்படிப்பட்ட மனசாட்சிதான், ஏழை பணக்காரர் பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான, தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று வலியுறுத்துகிறது." என்று
குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அகரம் அமைப்பு மூலமாக, சுமார் 3,000 மாணவர்கள் உயர்கல்வி பயில்கிற வாய்ப்பை பெற்று இருப்பதாக தெரிவித்துள்ள சூர்யா, மாணவர்களின் குடும்பச் சூழலையும், கல்விச் சூழலையும் ஆய்வு செய்து அகரம் தன்னார்வலர்கள் பகிரும் அனுபவங்களைக் கேட்டு கண்கள் கலங்கும் என்று கூறியுள்ளார்.

துரைமுருகனுக்கு திமுக தந்த அதிர்ச்சி - வேலூர் திருப்பம்!

டிஜிட்டல் திண்ணை:  துரைமுருகனுக்கு திமுக தந்த அதிர்ச்சி - வேலூர் திருப்பம்!மின்னம்பலம் :
மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை இன்றிலிருந்து எல்லா சாலைகளும் வேலூரை நோக்கியே செல்கின்றன. பொதுத் தேர்தலின் போது ரத்து செய்யப்பட்டு, ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடக்க இருக்கும் வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக நேரடியாகக் களம் காண்கின்றன. திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் நிற்கிறார். அதிமுக சார்பில் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறார்.
இன்று (ஜூலை 20) சட்டமன்றத்தின் கடைசி நாள். அதிமுக, திமுக இரு கழக எம்.எல்.ஏ.க்களும் மதியத்தில் இருந்தே வேலூருக்குப் புறப்படத் தொடங்கிவிட்டார்கள். துரைமுருகன் இன்று மதியமே கிளம்பிவிட்டார். கிளம்பும் வரைக்கும் கண்ணில் தென்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களிடமெல்லாம், எப்பய்யா தொகுதிக்கு வர்றே? உன்னைதான்யா நம்பியிருக்கேன் என்றுதான் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

பிரியங்கா காந்தி : பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்காமல் நான் திரும்ப மாட்டேன்:

div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்காமல் நான் திரும்ப மாட்டேன்: பிரியங்கா காந்தி திட்டவட்டம்தினத்தந்தி :பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்காமல் நான் திரும்ப மாட்டேன் என பிரியங்கா காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மிர்சாபூர், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேச மாநிலம், சோன்பத்ரா கிராமத்தில், தாங்கள் பயிர் செய்து வந்த நிலத்தை பழங்குடி விவசாயிகள் விட்டுக் கொடுக்க மறுத்தனர் இதன் காரணமாக கடந்த புதன்கிழமை அவர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, வாரணாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அரங்கேற்றியதில் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுகிற ஊர் தலைவர் யக்யா தத், அவரது சகோதரர் உள்பட 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆடை பட விமர்சனம் ....சொல்ல வந்த கருத்தும் ... .. கதையும் .

Kathir RS : மேயாத மான் இயக்குனர் என்றார்கள். நம்பிபபோய் உட்கார்ந்தேன்.
திருவாங்கூர் தோல் சீலை போராட்டம் பற்றி படக்காட்சியுடன் தொடங்கியது படம்.
நாம் என்னதான் பங்கு மாங்கென்று எழுதினாலும் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவே முடியாது என்று பக்கத்திலிருந்த நண்பரிடம் சொன்னேன்.
முதல் பாதியில் ஏமாற்றவில்லை.
தொடர்ந்த காட்சிகளில் நிமிர்ந்து உட்கார்வைத்தார் இயக்குநர்.
அமலாபாலுக்கு இது ஒரு மிக முக்கியமான படம் பட்டையை கிளப்பியிருக்கிறார். வாழ்த்துகள்.
அருவி திரைப்படத்தின் பாதிப்பு இருந்தது முதல் பாதியில்.
காட்சிகள் கேமிரா நடிப்பு என எல்லாவற்றிலும் அசத்தியிருக்கிறார்கள்..
முதல் பாதி போனதே தெரியவில்லை அத்தனை வேகம்.
இக்கட்டான சூழலில் சிக்கிக் கொள்ளும் இந்த பாத்திரம் இந்த கதையில் என்ன செய்யப்போகிறது என்ற பெரிய எதிர்பார்ப்புடன் இடைவேளை.
இடைவேளைக்குபின்..அமலாபால் அம்மணக்காட்சிகளில் எப்படியெல்லாம் மறைத்து மறைத்து கேமரா வைக்கலாம் என்ற யோசனையிலேயே மூழ்கிவிட்டார் இயக்குநர்.
கதையைப் பற்றியோ அவர் அறிமுகப்படுத்திய அற்புதமான பாத்திரங்களைப்பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை.

வெள்ளி, 19 ஜூலை, 2019

இன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு

tamil.samayam.com: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் இருந்த ‘பக்' ஒன்றை கண்டுபிடித்த சென்னையைச் சேர்ந்த லக்‌ஷ்மண் முத்தையாவுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 30,000 டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 20.64 லட்சத்தை பரிசாக கொடுத்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமான இன்ஸ்டாகிராம் தற்போது இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. சினிமா கலைஞர்களும் தங்களது புகைப்படங்களை தினமும் பதிவிட்டு வருகின்றனர். கடந்த 2010ல் துவங்கப்பட்ட இன்ஸ்டாகிராமுக்கு 2019 மே மாதத்தில், ஒரு பில்லியன் பயனீட்டாளர்கள் இருந்தனர்.

NIA தேசிய புலனாய்வு திருத்த மசோதா ! .. ஒரு அறிமுகம் ..

Devi Somasundaram : NIA ஒரு அறிமுகம். 2008 மும்பை ப்ளாஸ்ட்ல 166 உயிர்கள் பலி ஆன பிறகு ஒரு தேசிய விசாரணை கமிஷன் தேவை என்று அரசு முடிவு செய்தது
...
2008 டிசம்பர் 30 ந்தேதி இந்த பில் அப்பொழுதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டில் ஒப்புதலோடு சட்டமானது .
FBI மாதிரி ஒரு உள்ளாட்டு விசாரணை அமைப்பு தான் , NIA .,அதோட கிளைகள் ஜம்மு, ஹைதராபாத் , குவாஹத்தி, கொச்சி, மும்பை, கொல்கத்தா, ராய்பூர் என்று 8 இடத்தில் இருக்கிறது .
649 எம்ப்ளாயிகளுடன் ஒவ்வொரு ஆண்டும் 16 மில்லியன் ரூபாய் பட்ஜெட் ஒதுக்கபடுகிறது ..
http://164.100.24.219/…/PassedBothHous…/NIA%20-%20Houses.pdf
சரி இது இஸ்லாமியர்க்கு எதிரானதா ? .NIA வால் தேட படும் குற்றவாளிகள் அல்லது குற்றம் செய்ததாக நம்பபடுவோர் லிஸ்ட்ல ( Nambala Keshava RaoBasavraj, Gaganna, Prakash, Krishna, Vijay, Keshav, B R, Prakash, Darapu Narasimha Reddy, NarasimhaNIA has announced reward of Rs. 1 million for any information leading to his arrest.Brahamchari Mayum Angobi SharmaNarengbam LokenChabkungbam ThanilNabachandraRed Corner Notice issued.Thippiri TirupatiDeoji, Devuji, Sanjeev, Chetan, Ramesh, Sudharshan, Shankar, Sheshu, Jagan, DevannaNIA has announced reward of Rs. 1 million for any information leading to his arrest.Mupalla Lakshman )
14 இந்துகள் உட்பட 32 பேர் சென்ற வருடம் வரை உள்ளனர் . ( ஒவ்வொரு வருடமும் மாறுதலுகுட்பட்டது )
இந்த அமைப்பில் 43 இஸ்லாமிய அதிகாரிகள் பதவியில் உள்ளனர் .

கார்த்திகேய சிவசேனாதிபதி :8000 வருடங்களாக பேணப்பட்டு வந்த மாட்டு இனங்களை அழிக்கும் .. .TAMILNADU BOVINE BREEDING ACT 2019".

Karthikeya Sivasenapathy : தமிழக அரசாங்கம், குறிப்பாகக் கால்நடைத் துறை அமைச்சகம், மாண்புமிகு கால்நடைத் துறை அமைச்சர் திரு.
உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன் அவர்கள் ஒரு புதிய சட்டத்தினை கொண்டு வருவதாக, இன்று ஆங்கில பத்திரிகை "THE HINDU " தெரிவித்து உள்ளார்.
அந்த சட்டத்தின் பெயர் "TAMILNADU BOVINE BREEDING ACT 2019".
BOVINE - மாடு, எருமை, போன்றவற்றைக் குறிக்கக் கூடிய ஆங்கில சொல்.
1 . எதற்காக இப்படி ஒரு சட்டத்தை அரசு கொண்டு வருகின்றது ?
2 . அந்த சட்டத்தில் குறிப்பாக "ARTIFICIAL INSEMINATION " குறித்து நிறையச் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்காக தனியே ஒரு அமைப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. எதற்காகப் புதிதாக ஒரு அமைப்பு ??
ஏற்கனவே தமிழகத்தில் கால்நடைத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. அந்த கால்நடைத் துறை கீழ் இந்த சட்டம் அமல்படுத்தப்படலாம் அல்லவா ? .
இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள்,
1 . வெளிநாட்டு மாட்டு இனங்கள் (Holstein-Friesian Jersey போன்ற மாடுகள்) வைத்து இருப்பவர் யாரும் காளைகள் வைத்து இருக்கக் கூடாது.
விவசாயிகள் பூச்சி காளை வைத்து இருக்கத் தடை செய்யப்பட்டு மாடுகளுக்குச் சினை ஊசி தான் செலுத்தப்பட வேண்டும், என்னும் நிலை உருவாக்கப்படும்.

இந்தியில் விஞ்ஞானம் எதையும் கற்க முடியாது.. இந்தியில் விஞ்ஞான அறிவியல் நூல்கள் ? ...

Satva T : ஏன் இந்தி தேவையில்லை?
1. இந்தியை கற்க தேவையில்லை என்பதற்கு பல பல காரணங்களை அடுக்க தேவையில்லை. ஒரே ஒரு கீழ்கண்ட காரணம் போதுமானது
இந்தியில் விஞ்ஞானம் எதையும் கற்க முடியாது. ஏனெனில் இந்தியில் எந்த விஞ்ஞானமும் கற்பிக்கபடுவதில்லை. அதற்குரிய புத்தகங்கள், தரவுகள், ஜர்னல்கள் ஏதும் இந்தியில் இதுவரை இல்லை. இருக்கவும் போவதில்லை.
இந்தி பேசும் மாநிலங்களில் கூட விஞ்ஞானத்தை ஆங்கிலத்திலேயே கற்கின்றனர்.
எடுத்துக்காட்டாக இந்தி பேசும் மாநிலத்தை சார்ந்த ஒருவர் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) அல்லது தானியங்கி அறிவியல் (Automation) பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர் அதனை ஆங்கிலத்தில் மட்டுமே செய்ய முடியும். இந்தியில் எந்த காலத்திலும் சாத்தியமில்லை.
ஆக இவ்வாறு அவர்களுக்கே ஒரு உபயோகமற்ற மொழியாக உள்ளது தான் இந்தி.
2. தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்வோரை விட
தமிழகத்துக்கு வரும் வெளிமாநிலத்தோர் மிக மிக மிக மிக அதிகம்
கடந்த பத்து வருடங்களில் 70 லட்சம் வெளிமாநிலத்தோர் தமிழகத்துக்குள் வந்து இருப்பதாக செய்தி வந்துள்ளது. இவ்வாறு வருவோர் சாதாரண உடலுழைப்பு தொழிலாளிகள் மட்டுமல்ல. 'அறிவு துறையை' சார்ந்தோரும் பெருமளவு வருகின்றனர்.

வேலூர் போட்டியிடும் கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்கள் ஏற்பு

தினகரன் :  வேலூர்: வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்களை பரிசீலித்த தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முகசுந்தரம் வேட்புமனுக்களை ஏற்பதாக அறிவித்துள்ளார்.

ஜீவஜோதி : எனக்கு இது ஆறாத வடு.. சரவண பவன் ராஜகோபால் மரணம் அடைந்த பின்பு...பேட்டி


tamil.oneindia.com/authors/VelmuruganP. : : சரவணபவன் ராஜகோபாலின் கடைசி ஆசையை வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்! சென்னை: என் கணவரை கொலை செய்த வழக்கில் சரவண பவன் ராஜகோபால் ஒரு நாள் கூட சிறைக்கு செல்லாமல் உயிரிழந்து இருப்பது ஆறாத வடுவாக உள்ளது என ஜீவஜோதி தெரிவித்துள்ளார்.
சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் நேற்று உடல்நலக்குறைவால் சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். முன்னதாக ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து சரண் அடைய உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இதன்படி நீதிமனறத்தில் மருத்துவ ஆம்புலன்சில் சரண் அடைந்த ராஜகோபால் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கர்நாடகா சபாநாயகர் : வாக்கெடுப்புக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை

ஓட்டெடுப்புக்கு உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை -  கர்நாடக சபாநாயகர் அறிவிப்புமாலைமலர் : நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் கூறியுள்ளார். பெங்களூர்: கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டசபையில் காங்கிரஸ் 79 இடங்களையும், மதசார் பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் பெற்றுள்ளன. ஒரு பகுஜன் சமாஜ் உறுப்பினரும், 2 சுயேட்சைகளும் குமாரசாமி அரசுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கொடுத்தனர். 2 சுயேட்சைகளும் ஆதரவை வாபஸ் பெற்று பா.ஜனதா பக்கம் சாய்ந்தனர்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவால் குமாரசாமி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

என்.ஐ.ஏ. சட்டத்துக்கு ஆதரவு: திமுக விளக்கம்!

என்.ஐ.ஏ. சட்டத்துக்கு ஆதரவு: திமுக விளக்கம்!மின்னம்பலம் : உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஜூலை 14 ஆம் தேதி மக்களவையில் தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்புக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதன் மீது நடந்த விவாதத்துக்குப் பின் 15 ஆம் தேதி இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
278 ஓட்டுகள் ஆதரவாகவும், 6 ஓட்டுகள் எதிராகவும் விழுந்தன. எதிராக விழுந்த ஆறு ஓட்டுகளில் 4 ஓட்டுகள் கம்யூனிஸ்டு கட்சியினுடையவை. இந்த மசோதாவின் போது பேசிய திமுக மக்களவை கொறடாவான ஆ.ராசா, “இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப் படுவதைத் தடுக்க வேண்டும். மேலும் குறிப்பாக வலது சாரி தீவிரவாதம் பற்றிய வழக்குகளையும் என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்” என்று வற்புறுத்தினார். ஓட்டெடுப்பில் என்.ஐ.ஏ. திருத்த மசோதாவுக்கு ஆதரவாக திமுக வாக்களித்தது. இதையடுத்து, திமுக சிறுபான்மையினருக்கு எதிரான என்.ஐ.ஏ.வை ஆதரித்து வாக்களித்துவிட்டது என்று சமூக தளங்களில் பலரும் விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர்.
இந்த சூழலில் இந்த விவகாரம் பற்றி திமுக சார்பில் அதன் கொள்கைப் பரப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா விளக்கம் அளித்திருக்கிறார். நேற்று இரவு அவர் அளித்த விளக்கத்தில்,

கர்நாடகத்தில் உச்சகட்ட . குழப்பத்தின் பின்னணியில் சித்தராமையா ?

Veerakumar .. பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசு, ஒருவேளை கலைந்தால், அதற்கு பாஜக தலைவர் எடியூரப்பாவைவிட, கர்நாடக காங்கிரஸ் கட்சி சட்டசபை குழு தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாதான் காரணமாக இருக்கப்போகிறார். ஆச்சரியமாக இருந்தாலும், அதுதான் கள யதார்த்தம். கர்நாடக அரசியலில் சுவாரசிய மற்றும் எதிர்பாராத திருப்பமும் சித்தராமையாவை சுற்றிதான் சுழன்று வருகிறது. 2013ம் ஆண்டு நடந்த, கர்நாடக, சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றது காங்கிரஸ். மல்லிகார்ஜுன கார்கே உட்பட, அந்த கட்சியை சேர்ந்த, எத்தனையோ மூத்த தலைவர்கள் இருந்தபோதிலும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியிலிருந்து பிரிந்து வந்து, காங்கிரசில் சேர்ந்து, 10 வருடங்கள் கூட ஆகாத நிலையிலும், சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியை வழங்கினார் சோனியா காந்தி. .. முதல்வர் பதவிக்காகத்தான், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார், சித்தராமையா. இப்போது அது நிறைவேறிவிட்டது என்ற பேச்சுக்கள், முனுமுனுப்புகள் அப்போதே காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்தன. 
ஆனால், அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்ததால் 5 ஆண்டுகளும் சிக்கல் இன்றி காங்கிரஸ் ஆட்சி காலம் நிறைவடைந்தது.

சரவணபவன் ஹோட்டல் இன்றும் திறந்தே இருக்க வேண்டும்... நிறைவேற்றிய தொழிலாளர்கள்

  /tamil.samayam.com :சென்னையில் சிகிச்சை பலனின்றி காலமான சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் கடைசி ஆசையை மிகவும் வேதனையுடன் நிறைவேற்றி வைத்துள்ளனர் உணவகத்தின் ஊழியர்கள். சரவணபவன் அண்ணாச்சியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ஊழியர்கள் கடந்த 9ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவில், பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கனவே உடல்நலக் கோளாறால் அவதிப்பட்ட வந்த ராஜகோபால் சரணடைய வரும்போதே ஆம்புலன்சில் தான் வந்தார். அவரோட கடைசி ஆசைய நல்லா கேடீங்களா 16 வயது பெண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்க ஆசப்பட்டாரோ என்னவோ...... பாவம் பண்ணி வச்சிருக்கலாம்..... அவர் ஆத்மா சாந்தி அடையுமா.....< பிறகு நீதிமன்ற வளாகத்திலேயே அவருக்கு உடம்பு முடியாமல் போனது. இதனால் சிறைக்கு அவரை அனுப்பாமல் , ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிட சிரமமாக இருந்தால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு அங்கு சிகிச்சை தரப்பட்டு வந்தது.

கர்நாடகா சட்டசபை ..நேரலை Karnataka Assembly Session 2019 | Karnataka Floor Test | TV5 Kannada

தமிழக அரசுப் பள்ளிகளில் வருகை பதிவு தமிழில் நிறுத்தம் .. இந்தியில் ஆரம்பம்

தமிழக அரசுப் பள்ளிகளில் இந்தித் திணிப்பு!.மின்னம்பலம : தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையைப் பதிவு செய்யும் கணினிகளிலிருந்த தமிழ் மொழியிலான அறிவிப்பு மற்றும் கட்டளைகள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக இந்தி மொழியில் கட்டளைகள் வரத்தொடங்கியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் தங்களது வருகையைப் பதிவு செய்ய விரல் ரேகை பதிவு செய்யும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கணினிகள் மூலமும், நடுநிலை மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் இயந்திரம் மூலமும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்ததும் தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பட்டிருக்கும் கணினியில் தங்களது ஆதார் எண்ணை டைப் செய்து அது இணைப்பிற்கு வந்ததும், ஆசிரியர் தங்களது பெருவிரல் ரேகையைப் பதிவு செய்வார்கள்.

தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தினமணி : தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு  இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். 22 ஆண்டுகளுக்கு முன்புவரை மாவட்டத் தலைநகர் என்ற பெருமையைப் பெற்றிருந்த செங்கல்பட்டு இப்போது மீண்டும் அந்தப் பெருமையை தக்க வைத்துக் கொண்டுள்ளது புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்:-
திருநெல்வேலி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிய மாவட்டங்களாக உள்ளன. இந்த மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து, நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.
இதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கவர்னர் ‘கெடு’

பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கவர்னர் ‘கெடு’
மாலைமலர் :ர்நாடக அரசியலில் தொடரும் பரபரப்பாக, இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடித்து பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமிக்கு, கவர்னர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளார். பெங்களூரு கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அரசு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஷ், சங்கர் திரும்ப பெற்றுள்ளனர். இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இந்த நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது நம்பிக்கை வாக்கெடுப்பை 18-ந் தேதி(அதாவது நேற்று) நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

ஓராண்டாக ஒரே பெண்ணைச் சீரழித்த நால்வர்! -முகநூல் பிளாக்-மெயில்

aaSexual harassment from her Facebook friends Pawan, Chieti Mallikarjuna and Farooq, along with Mahesh,
nakkheeran.in - cnramki : ஆந்திர மாநிலம் – அனந்தப்புரம் மாவட்டம் – ராயதுர்கத்தைச் சேர்ந்த பகவத்தும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஹனிதாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் மகனுக்கு 3 வயது ஆகிறது. கணவன், ஆண் குழந்தை என நன்றாகப் போய்க்கொண்டிருந்த ஹனிதாவின் வாழ்க்கையில், மகேஷ் என்பவன் புகுந்தான். வீட்டை அடுத்துள்ள கடையில் பால் வாங்கச் செல்லும்போது, அவன் பழக்கமானான். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு இவ்விருவரும் நெருக்கமானார்கள்.
 மகேஷ் சும்மா இருக்கவில்லை. ஹனிதாவுடனான தவறான உறவு குறித்து, தன்னுடைய நண்பர்கள் பவன், மல்லிகார்ஜுனா, ஷாருக் ஆகியோரிடம் பெருமையடித்தான். அந்த மூவரும், மகேஷுடன் பழகும் ஹனிதா தங்களுடனும் பழக வேண்டும் என்று போட்டி போட்டனர். அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தது பேஸ்புக். ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் என, மூவரும் ஹனிதாவின் பேஸ்புக் நண்பர்கள் ஆனார்கள். ஹனிதாவின் முகநூல் பக்கத்தில் மேய்ந்து பல விபரங்களைச் சேகரித்தனர். பிறகென்ன? சாட்டிங்தான்!

வியாழன், 18 ஜூலை, 2019

ஈழத்தமிழ் தலைவர்கள் .. தமிழக பாஜக தலைவர்கள் .. கமலாலயத்தில் சந்திப்பு

Elam Tamils delegation met TN BJP leaders tamil.oneindia.com - mathivanan-maran : சென்னை: இலங்கை தமிழரசு கட்சி பிரதிநிதிகள், வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்கள் அடங்கிய குழு சென்னையில் தமிழக பாஜக தலைவர்களுடன் நேற்று திடீரென சந்தித்து பேசியுள்ளது. சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ஈழத் தமிழர் தலைவர்கள் தமிழகத்துக்கு தொடர்ந்து வருகை தருகின்றன. இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி, தமிழ் எம்.பிக்கலை சந்தித்து டெல்லிக்கு வரவேண்டும் என அழைப்பும் விடுத்திருந்தார்.
இந்நிலையில் ஈழத் தமிழர் குழு ஒன்று நேற்று சென்னை வருகை தந்தது. பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் தலைவர்களை ஈழத் தமிழர்கள் குழு சந்தித்து பேசியது.

தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத்திருத்தத்தில் தி.மு.க வின் நிலைப்பாடு.. ஆ.ராசா.. வீடியோ


டான் அசோக் : நாடாளுமன்ற கொறடா ஆ.இராசா, எம்.பி விளக்கம்.
15.7.2019 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத்திருத்தத்தை தி.மு.க ஆதரித்தது குறித்து சிலர் சமூக வலைதளங்களிலும் வெளியிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை அரசியலுக்காக திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.
தி.மு.கழகம் சிறுபான்மை மக்களின் நலனிலும் உரிமைகளை பாதுகாப்பதிலும் எப்போதும் அக்கறை கொண்ட இயக்கமாகும். மத்தியில் ஆட்சியிலிருக்கும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் மதவாத அரசியலை தொடர்ந்து எதிர்ப்பதிலும் தோலுரித்து காட்டுவதிலும் இந்தியாவிற்கே முன்னோடியாக தி.மு.கழகமும் அதன் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் திகழ்வதை நாடறியும். இந்நிலையில் 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற மும்பை தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள போதுமான புலனாய்வு அமைப்பு இல்லை என்று அரசு கருதியதை அடுத்து, 2009ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.

போக்கிரி கணவனை அடித்து கொன்று காரோடு எரித்த மனைவி ... நெய்வேலி ...

Hemavandhana tamil.oneindia.com   : நெய்வேலி: ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம்.. வீட்டுக்கு 10 பைசா தருவது இல்லை.. சின்ன வயசு பொண்ணுங்களை காரில் ஏற்றிக் கொண்டு ஜாலியாக ஊர் சுற்றி வந்த கணவனை, அடித்து கொலை செய்து சாக்கு பைக்குள் கட்டி விட்டார் மஞ்சுளா! 
கள்ளக்குறிச்சி அருகே செம்பாகுறிச்சி வனப்பகுதி சாலையில், கடந்த கிழமை ராத்திரி ஒரு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த ரோந்து போலீசார் ஓடிச்சென்றனர். ஆனால் அங்கிருந்த 3 பேரும் இவர்களை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். 
உடனடியாக கீழ்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ந்தனர் அதிர்ந்தனர் விரைந்து வந்த பெருமளவு தீயை எரிய விடாமல் தடுத்து, காருக்குள் சோதனை நடத்தினர். காரின் பின் சீட்டில் ஒரு சாக்கு மூட்டை அந்த மூட்டையை அவிழ்த்து பார்த்தால், போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ந்தனர். 

மாசெக்களுக்கு தெரியாமல் உதயநிதி நடத்தும் புது ஆபரேஷன்!

மின்னம்பலம் : திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் ஜூலை 6ஆம் தேதி நடத்திய, முதல் கூட்டத்திலேயே
மாவட்ட செயலாளர்கள் மீது இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் சார்பில் புகார்கள் வைக்கப்பட்டன.
உதயநிதிக்கு இந்த திடீர் ஏற்றம் கொடுக்கப்பட்டது இன்னமும் சில மாவட்ட செயலாளர்களை உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது ஆனால் அவர் தலைவரின் மகன் என்பதால் எதுவும் பேச முடியாமல் தங்கள் வட்டாரத்துக்குள் புலம்பியபடியே இருக்கிறார்கள் சில மாவட்ட செயலாளர்கள். மாவட்ட செயலாளர்களுக்கும் இளைஞர் அணிக்கு மான இந்த நிலையில் இப்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
அதாவது திமுகவில் மாற்றுக் கட்சியினரோ, எந்த கட்சியும் சாராதவர்களோ யாராக இருந்தாலும் புதிதாக இணையும் போது அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலமாகவே தலைமைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் பிறகு இணைப்பு நிகழ்வு நடைபெறும்.
தலைமைக்கு நேரடி அறிமுகம் பெற்றவராக இருந்தால் கூட அந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டு இணைப்பு நிகழ்வில் மாவட்டச் செயலாளர்களும் பங்கு கொள்வார்கள் இதுதான் கலைஞர் காலத்திலிருந்து நடைமுறை.
ஆனால் இந்த விஷயத்தில் உதயநிதி இப்போது புதியதொரு அணுகுமுறையை ஆரம்பித்துள்ளார்.

மாயாவதியின் சகோதரர் பெயரில் இருந்த 400 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல்


வெப்துனியா :நம் தமிழ்நாட்டில் அதிமுக - திமுக போன்று, உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ்  - சமாஜ்வாதி ஆகிய இரு கட்சிகளும் எப்போதும் எதிரெதிர் துருவங்களாகவே இருந்தன.
ஆனால் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்றக்கடிக்க வேண்டும் என்பதற்க்காக பகுஜன் சமாஜ்  - சமாஜ்வாதி கட்சிகள் பகையை கூட்டணி வைத்தன. இதையும் தாண்டி பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து தற்போது இவ்விரு கட்சிகளின் கூட்டணி முடிவுக்கு வந்து பாதியிலேயே பிரிந்தது.
இந்நிலையில் தற்போது பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மயாவதியின் சகோதரருக்கு சொந்தமானது எனப்படும் ரூ. 400 கோடி மதிப்புள்ள வீட்டுமனையை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பினாமி பரிவர்த்தனைகள் தடுப்புச்சட்டத்தி கீழ், பினாமி சொத்துக்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்குமாறு வருமானவரித்துறையினருக்கு மத்திய அரசு ஒப்படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தமிழச்சி தங்கபாண்டியன் ... முதல் பேச்சில் முழக்கம்... நாடாளுமன்றத்தில் வீசிய திராவிட காற்று .. வீடியோ


devisomasundaram : தமிழச்சியோட நாடளுமன்ற முதல் உரையை  பார்த்தப்போ சட்டுன்னு தோணினது கண்ணகி வழக்குரை காதை தான் .
தான் எங்கேர்ந்து வரேன்னு மொதல்ல சொல்லி அதுலயே நீதி தந்தே ஆகனும்ன்ற அழுத்த்தை தரா
ஆரம்பிக்கும் போதே டேய் நீ எனக்கு சமம்  இல்லடா என் ஊரு பாத்து இமையவர் அசந்து போறாங்கன்னு ஆரம்பிப்பான் இளங்கோ ..எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்ப...
அடுத்த வரில புள்ளுறு புன்கண்...புறாவுக்கே நீதி தந்த ஊர் என் ஊர் .ஆவின் கடைமணி உகுநீர் .வாசல்ல நீதி கேட்டு வந்த பசுவுக்கு நீதி வழங்கியவன் என் மன்னன்னு முன்னாடியே எதிரிய சிக்க வைக்கிறா ... ஏன்னா அவ நீதி கேட்டு தான் வந்துருக்கா ...சாதாரண பெண்ணுக்கு நீதி கிடைக்காம போகலம்... அப்டிலாம்  தப்பி ஓடிவிட  கூடாதுன்னு பாண்டியனுக்கு   தடை  வைக்கிறா . விலங்குக்கே நீதி தந்த ஊர் டா என் ஊர் ...எனக்கு நீதி தந்தே ஆவனும்னு இழுத்து கோக்றா

தமிழச்சி அதே வேகத்துல ஆரம்பிக்கிறாஙக ...யாதும் ஊரே யாவரும் கேளிர்ன்னு அன்ப போதிக்கும் மண் என் மண் நீ தமிழன நேசிச்சே ஆகனும்ன்ற நிர்பந்தத்தை உருவாக்ற தொனி...
வள்ளுவன அடுத்து ஆயுதமா எடுக்கறாங்க .. பிறப்பொக்கும் எல்லா உயிர்கும்னு வர்ணாசிரமத்தை உடைச்ச ஊர் என் ஊர் ...நீ இன்னும் பிடிச்சுட்டு தொங்கிறியே வெக்கமா இல்லியான்ற தொனி .

வைகோ சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம்

மின்னம்பலம் : தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு வழங்கப்பட்ட ஒராண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 18) உத்தரவிட்டுள்ளது.
வைகோவுக்கு எதிராக தொடரப்பட்ட தேசதுரோக வழக்கில், ஜூலை 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், வைகோவுக்கு ஒருவருடம் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் ஒரு மாதத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டது.
தண்டனையை எதிர்த்து ஜூலை 13ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், “எனக்கு எதிராக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டவிரோதமானது. சட்டப்படி தீர்ப்பினை வழங்காமல் சிறப்பு நீதிமன்றம் தனக்கு தெரிந்த விஷயங்களை மட்டும் வைத்து வழங்கியுள்ளது. எனவே சிறப்பு நீதிமன்றம் அளித்த ஓராண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

ரஜினி Vs ஸ்டாலின் - வைரல் ஜோதிடர் பாலாஜி ஹாசன் மூட்டிய கலகம்!

டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின்  -ஜோதிடர் மூட்டிய கலகம்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“வைரல் ஜோதிடர் என்ற பட்டப் பெயரோடு இப்போது பிரபலமாகியிருக்கும் பாலாஜி ஹாசனால் ரஜினி மக்கள் மன்றத்தினர் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால் பெரிய அளவில் அவர் சாதிக்கமாட்டார் என்று பாலாஜி ஹாசன் சொன்னதுதான் இதற்குக் காரணம்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், நடிகர் ரஜினிகாந்துக்கும்தான் போட்டி இருக்கும் என்று ரஜினியின் ஆதரவாளர்கள் பல நாட்களாக சொல்லி வருகிறார்கள். அண்மையில் காங்கிரஸ் கட்சியில் சர்ச்சைக்கு உள்ளான கராத்தே தியாகராஜன் கூட பேட்டிகளில் இதைத்தான் அழுத்தம் திருத்தமாக சொன்னார். எடப்பாடி ஆட்சி முடிந்த அடுத்த நிமிடமே ரஜினி கட்சியை அறிவிப்பார் என்று தமிழருவி மணியனும் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவில்லை .. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்

நாளை ஒத்திவைப்பு சித்தராமையா ஆட்சேபனை நம்பிக்கை வாக்கெடுப்பு tamil.oneindia.com - veerakumaran. கர்நாடகத்தில் உச்சகட்ட பரபரப்பு..நம்பிக்கை வாக்கெடுப்பு.. பெங்களூர்: குமாரசாமி அரசு தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே நாள் முழுக்க இழுத்தடித்ததாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது.
இதையடுத்து, இன்று இரவு சட்டசபையிலேயே படுத்து தூங்குவது என பாஜக எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததாக பாஜக குற்றம்சாட்டியது.
இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாராக இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் குமாரசாமி சட்டசபையில் திடீரென அறிவித்தார். இதையடுத்து, வியாழக்கிழமையான இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் அனுமதித்தார்.

அத்திவரதர் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரழப்பு .. வீடியோ


மாலைமலர் :காஞ்சீபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் உற்சவத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் உள்பட 3 பேர் பலியாகினர். அத்திவரதர் உற்சவம்- கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி அத்திவரதர் உற்சவத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காஞ்சீபுரம்: காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அத்திவரதர் கடந்த 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
அத்திவரதர் தினமும் ஒரு பட்டாடையில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். அத்திவரதரை தரிசிக்க அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, இன்று காலை முதல் அத்திவரதரை தரிசிக்க அதிகளவில் பக்தர்கள் திரண்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

சரவணபவன் ராஜகோபால் காலமானார் . .. தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று ...


மாலைமலர் : சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வந்த சரவண பவன் ராஜகோபால் இன்று காலமானார். சென்னை: ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால். உடல் நிலை மோசமாக இருந்ததால் கோர்ட்டு உத்தரவின்படி சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ராஜகோபாலின் உடல்நிலை கவலைக்கிடமானது.
இதனை தொடர்ந்து அவரது மகன் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது தந்தை ராஜகோபாலை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க சிறைத்துறை தலைவருக்கு மனு அளித்தேன். ஆனால் அது பரிசீலிக்கப்படவில்லை. எனவே எனது மனுவை பரிசீலனை செய்து எனது தந்தையை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

கர்நாடகா: திடீரென மனம் மாறும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்... தப்புகிறது குமாரசாமி அரசு?

Mathivanan Maran/tamil.oneindia.com  பெங்களூரு: காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் திடீரென மனம் மாறுவதால் கர்நாடகா முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 
காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சிகளின் 16 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ததால் கர்நாடகாவில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. ஆனால் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்காமல் இருந்தார்.  இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் எப்போது வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம் என கூறியது. அதேநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அதிருப்தி எம்.எல்.ஏக்களை கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட்டாக நாங்கள் சட்டசபைக்கு வரமாட்டோம் என அறிவித்தனர்.

கல்விக் கொள்கை: ரகசிய கருத்துக் கேட்பு கூட்டங்கள்..

கல்விக் கொள்கை:  ரகசிய கருத்துக் கேட்பு கூட்டங்கள்!மின்னம்பலம : தடுத்து நிறுத்திய தபெதிக
புதிய கல்விக் கொள்கை பற்றி தமிழகத்தில் மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் விவாதங்கள் நடைபெறத் தொடங்கியிருக்கும் நிலையில், நேற்று (ஜூலை 17) கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுவதாக தகவல்கள் கசிந்தன.
பள்ளி,கல்லூரி ஆசிரியர்களுக்கோ,பெற்றோர்களுக்கோ,மாணவர்களுக்கோ எந்தவித பொது அறிவிப்பும் கொடுக்காமல், தமிழக அரசின் சார்பில் கருத்துக்கேட்பு என்ற பெயரில் கூட்டம் நடைபெறுவது ஏன் என்பது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் சிலருக்கு சந்தேகம் ஏற்பட, உடனே அதன் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் புறப்பட்டனர். பிஎஸ்ஜி சென்று கடும் முயற்சிக்குப் பின் அந்த வளாகத்தில் ஒரு அறையில் நடந்துகொண்டிருந்த கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டத்துக்குள் ராமகிருஷணன் பத்திரிகையாளர்களோடும் கேமராக்களோடும் செல்ல அதிகாரிகளுக்கு அதிர்ச்சி.

வேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்!

dmkநக்கீரன் :வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு திமுக தனது பணிகளை தொடங்கிவிட்டது. இதேபோல் அதிமுக கூட்டணி வேட்பாளர் நேற்று தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அ.தி.மு.க சார்பில் வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். மேலும் இன்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின்போது, திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடனிருந்தனர்.

நீலகிரி: இறந்துகிடந்த புலியின் வயிற்றில் பிளேடு துண்டு - வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

BBC : நீலகிரி மாவட்டம் பார்சன் பள்ளத்தாக்கில் இறந்து கிடந்த ஆண்
புலியினை உடற் கூராய்வு செய்த பொழுது அதன் வயிற்றில் ஒரு துண்டு பிளேடு இருந்தது தெரிய வந்துள்ளது. பார்சன் பள்ளத்தாக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்குருத்தி தேசிய பூங்காவின் ஒரு பகுதி ஆகும். ஊட்டிக்கு தேவையான தண்ணீர் பெரும்பான்மையாக பார்சன் பள்ளத்தாக்கின் அணைக்கட்டில் இருந்துதான் எடுக்கப்படுகின்றது. பார்சன் பள்ளத்தாக்கின் மறுபுறம் கேரளாவின் அமைதி பள்ளத்தாக்கு உள்ளது. மனித இடையூறுகள் குறைவான பகுதி என்பதால் பல வனவிலங்குகள் இங்கே வாழ்கின்றன. குறிப்பாக வரையாடுகள், கடமான்கள் போன்ற உயிரினங்கள் இப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. இரை விலங்குகள் இருப்பதால் புலிகளின் வாழ்விடமாகவும் இது உள்ளது.
இந்த பார்சன் பள்ளத்தாக்கில் சுமார் இரண்டரை வயதுள்ள ஆண்புலி ஒன்று இறந்து கிடப்பது வனத்துறையினர் கவனத்திற்கு வந்ததை அடுத்து அவர்கள் அங்கே விரைந்தனர்.

கர்நாடகா .. சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. ராஜினாமாவை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ காலகெடு விதிக்க முடியாது. .. உச்ச நீதிமன்றம்

பெங்களூரு: தினமலர் : கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனை கர்நாடக சபாநாயகரும், காங்., கட்சியும் வரவேற்றுள்ளனர். அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் 15 பேர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று (ஜூலை 17) தீர்ப்பு வழங்கியது.
இதில், சபாநாயகருக்கு தாங்கள் உத்தரவிட முடியாது. ராஜினாமாவை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ சபாநாயகருக்கு காலகெடு விதிக்க முடியாது. நாளை நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள அதிருப்தி எம்எல்ஏ.,க்களை கட்டாயப்படுத்த முடியாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேசிய புலனாய்வு அமைப்பு திருத்த மசோதா .. காவல் படை ஆட்சி நாடாக மாறுகிறதா?


Adv Manoj Liyonzon : "வீழ்வது மக்களாக இருந்தாலும்
வாழ்வது அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும்"
தேசிய புலனாய்வு அமைப்பு (திருத்த) மசோதா, 2019ன் சில ஷரத்துகளால் இந்தியா காவல்படை ஆட்சி நாடாக மாறும் அபாயம் உள்ளதாலும், சட்டத்தை அரசுகள் தவறாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளதாலும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு இது சனநாயக விரோத ஷரத்துகள் கொண்ட மசோதா என்கிற அடிப்படையில் இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக வாக்களித்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல்:
1). ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் காஷ்மீர் அனந்த்நாக் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஹஸ்னைன் மசூதி.
2). சிபிஐயின் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கே. சுப்பராயண்
3). சிபிஐயின் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நாதராஜன்
4). கேரள ஆலப்புழா நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அப்துல் மஜீத் ஆரிப் சிபிஐ
5). AIMIMன் மகாராஷ்டிர அவுரங்காபாத் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சையத் இம்தியாஸ் ஜலீல்
6). AIMIMன் தெலுங்கானா ஹைதராபாத் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி

புதன், 17 ஜூலை, 2019

விழுப்புரத்தில் திருநங்கை அபிராமி கொலை .. தலையில் அடிபட்டு வீதியில் ...

பண பிரச்சனை tamil.oneindia.com - /hemavandhana : ரோட்டில் காயங்களுடன் பிணமாக கிடந்த திருநங்கை.. உறைய வைக்கும் சம்பவம்! -வீடியோ விழுப்புரம்: கூட் ரோட்டில் ரத்த காயங்களுடன் திருநங்கை அபிராமி பிணமாக விழுந்து கிடந்த சம்பவம் விழுப்புரத்தை உறைய வைத்துள்ளது. அபிராமியை இவ்வளவு கொடூரமாக கொன்றவர்கள் யார் என்று போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
விருத்தாசலம் கீரப்பாளையம் பகுதியை பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவர்தான் பின்னாளில் அபிராமியாக உருமாறினார். திருநங்கை அபிராமிக்கு 35 வயசு. விழுப்புரம் அய்யன்கோவில்பட்டு பகுதியில் சக திருநங்கைகளுடன் வசித்து வந்துள்ளார்
இந்நிலையில், விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அதாவது விழுப்புரம் - செஞ்சி கூட்டுரோடு அருகே உடம்பெல்லாம் ரத்தம் வழிந்த நிலையில், பல காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இன்று காலை இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

திராவிட இயக்கங்கள் மீது பார்ப்பன பத்திரிகைகளின் தொடர் பொய்கள் ....

Chozha Rajan ; அண்ணா வாரிசு அரசியலை எதிர்த்தாரா? இன்றிலிருந்து சோழன் என்ற எனது பெயரை சோமாஸ் என்று மாற்றிக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். அப்போதுதான் நான் கிறுக்குத்தனமாக ஏதேனும் எழுதினாலும் விவாதத்துக்கு உட்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். ஏன் திமுக தலைமையே கூட என்னை அழைத்து சிறப்புப் பேட்டி கொடுத்தாலும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
பெரியார் வாரிசு அரசியலுக்கு ஆதரவாக போனதால்தான் அண்ணாவே திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து போனார் என்று லூசுத்தனமான ஒரு கண்டுபிடிப்பை ஒருத்தர் வெளியிட்டிருக்கிறார். நிஜம் அதுவா? அதைப்பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். மேலெழுந்தவாரியாக எதையாவது திமுகவுக்கு எதிராக சொல்ல வேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் இட்டுக்கட்டலாம்.
நாடு விடுதலை பெற்றுவிட்டது. இனி நம்மை நாமே ஆள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். நமது இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்றபடி இயக்கம் தயாராக வேண்டும் என்று ஒரு பிரிவினர் கருதத் தொடங்குகின்றனர். பெரியாருக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. அவரைக் கவனித்துக் கொள்ளும் மணியம்மையாருக்கு இயக்கத்தினர் மரியாதை கொடுக்கவில்லை.
பெரியாரின் அண்ணன் மகன் சம்பத்தை பெரியாருக்கு வாரிசாக ஒரு குழுவினர் கருதியிருக்கின்றனர். தனக்குப் பிறகு மணியம்மைக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடக்கூடாது என்றுதான் பெரியார் மணியம்மையை திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்.

ஜோதிடர்களின் ஆலோசனைப்படி அரசியல் ? இந்திரா காந்தி ஜெயலலிதா பாணியில் துர்க்கா ஸ்டாலின்?

LRJ : கிளிஜோசியக்காரங்களுக்கு தமிழக அரசியல்ல பொற்காலம் பொறந்திருக்கு போல. அவங்க காலார நடந்து ஸ்டாலின் வீட்டு பக்கம் போனா போதும். அந்தம்மா அவங்களையும் கூப்பிட்டு ஜோசியம் கேட்கலாம். யார் கண்டது?
நகைச்சுவையை தாண்டி அந்தம்மா ஜோதிடத்தை நம்பறது அவங்க தனிப்பட்ட பிரச்சனை. ஆனா ஜோதிடர்களின் ஆலோசனைப்படி அண்ணா உருவாக்கின திமுகவின் கட்சிப்பதவிகளை முடிவு செய்வதும் ஜோதிடர்கள் குறித்துக்கொடுத்த நாட்களில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தறதும் தான் மோசமான பொதுப்பிரச்சனை.
இப்படித்தான் இந்திரா காந்தியும் ஜெயலலிதாவும் ஜோதிடர்கள், பில்லிசூனியக்காரர்களின் பேச்சைக்கேட்டு மூர்க்கமான அரசியல் பண்ணி அவங்களும் கெட்டு நாட்டையும் கெடுத்து நாசம் பண்ணினாங்க.
அரண்மனை ஜோதிடர்களால் விளையும் அரசியல் விபரீதங்களை தெரிந்துகொள்ள வேற எங்கயும் போய் இந்தம்மா தேடவேணாம். அண்ணாவும் கலைஞரும் அதை கதை கதையா எழுதி வெச்சிருக்காங்க. அந்த புத்தகங்கள் எல்லாம் இவங்க வீட்ல வெச்சிருக்க வாய்ப்பு குறைவு. அறிவாலயம் நூலகத்துல எல்லாம் இருக்கும். கட்சிக்காரங்களை அனுப்பி அதையெல்லாம் வீட்டுக்கு கொண்டுவந்து ஒரு தரம் படிச்சி பார்த்தாலே அந்தம்மாவும் விளங்கும். அந்தம்மா ஆட்டிவைக்க முயலும் அந்த கட்சியும் உருப்படும்.

கர்நாடக அதிருப்தி எம் எல் ஏக்களை தகுதி நீக்க காங்கிரஸ் முனைப்பு?

Congress seeks rebel MLAs disqualification tamil.oneindia.com veerakumaran  : கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை இடங்கள் தேவை?- வீடியோ பெங்களூர்: அதிருப்தி எம்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது பற்றி, கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரிடம், காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.
குமாரசாமி அரசு நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ள நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களை இன்றே தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகரிடம் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது குமாரசாமியும் உடனிருந்தார். எடியூரப்பாவின் உதவியாளர், அதிருப்தி எம்எல்ஏக்களை சிறப்பு விமானத்தில் பெங்களூரிலிருந்து மும்பைக்கு அனுப்பியது, பாஜக தலைவர் அசோக்குடன், காங்கிரஸ் எம்எல்ஏ நாகராஜ் சேர்ந்து திரிந்த சம்பவம் உள்ளிட்ட பல விஷயங்களை சபாநாயகரிடம் அளித்த தங்கள் புகாரில் சித்தராமையாவும், குமாரசாமியும் குறிப்பிட்டுள்ளனர்.
விப் உத்தரவு மூலமாக, எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்தி வாக்களிக்க வர வைக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியதால் மகிழ்ச்சியில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள், நாளை சட்டசபைக்கு வரப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

அமித் ஷா : சட்ட விரோத குடியேற்றவாசிகள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள்

வெப்துனியா : சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது பேசிய அமித்ஷா “சரியான குடிமக்களின் பெயர் மட்டுமே பட்டியலில் இடம்பெற வேண்டும் என நினைக்கிறோம். ஆகவே அத்துமீறி இந்தியாவில் வசித்து வருபவர்கள் குறித்த கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும். அதில் சட்டவிரோதமாக மற்றும் ஊடுருவி இந்தியாவில் வசித்து வருபவர்கள் சர்வதேச குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார்கள்.

கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா...அதிமுக + பாஜகவின் தாக்குதலுக்கு அதுதான் காரணம்?

டிஜிட்டல் திண்ணை:  கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யாமின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“நேற்றைய டிஜிட்டல் திண்ணையில், புதிய கல்விக் கொள்கைக் குளத்தில் கல் எறிந்த சூர்யா அதையடுத்து எழுந்த சலசலப்புகளுக்கு பதில் சொல்லாமல் மௌனம் காப்பது பற்றி தெரிவித்திருந்தோம். அந்த மௌனத்துக்குப் பின்னால் முக்கியமான செயல் திட்டங்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் சூர்யா. இது அகரம் வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த தகவல்.
புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் அதுபற்றி அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தும் பொதுமக்கள் விவாதத்துக்கு போதிய அளவில் வரவில்லை. அதேநேரம் சூர்யா இதுபற்றிப் பேசியதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் புதிய கல்விக் கொள்கை பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

என்.ஐ.ஏ.க்கு கூடுதல் அதிகாரம்- "மாநிலங்களவை ஒப்புதல்"!

national investigation agency bill passed rajya sabhanakkheeran.in/author/santhoshb : தேசிய புலனாய்வு அமைப்புக்கு (NATIONAL INVESTIGATION AGENCY) கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மசோதா தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டதால், குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதா சட்ட திருத்தத்தின் மூலமாக ஆயுதங்களை கடத்துவது, வெடி மருந்துகளை தயாரிப்பது, ஆள்கடத்தல், கள்ள நோட்டுகளை தயாரித்தல் மற்றும் விநியோகம் செய்தல், இணையதளம் மூலமாக நடத்தப்படும் தீவிரவாதம் போன்ற பல்வேறு விதமான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்கான அதிகாரம் என்ஐஏ அமைப்பிற்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது

குல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை நிறைவேற்ற தடை - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு


குல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை நிறைவேற்ற தடை - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
தீர்ப்பு வழங்கிய சர்வதேச நீதிமன்றம்மாலைமலர் : இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தி ஹேக் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் (48), இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’விற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், மோதல்கள் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை அவசரமாக விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுக்கிறது. ஜாதவ், கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஈரானில் தனது சொந்த வியாபார நிமித்தமாக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டார் என்று இந்தியா தெரிவித்தது. அத்துடன் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்ததை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டில் தி ஹேக் நகரில் செயல்பட்டு வருகிற சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாடியது.

குஜராத் ..திருமணமாகாத பெண்கள் தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடை – அதிரடி உத்தரவு

sathiyam.tv :இந்தியா குஜராத்தில் உள்ள ஒரு முக்கிய சமூகத்தில் உள்ள திருமணமாகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவை அந்த சமூகத்தின் தலைவர்கள் பிறப்பித்துள்ளனர்.இந்த சமூகத்தின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தபோது திருமணமாகாத பெண்கள் செல்போன் வைத்திருக்கக் கூடாது என்றும் அதேபோல் கலப்பு திருமணம் செய்தால் பெண்ணின் பெற்றோர்களுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் இரண்டு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
திருமணமாகாத பெண்கள் மொபைல்போன் பயன்படுத்துவதால் பாதுகாப்பின்மை ஏற்படுவதாகவும், மேலும் அவர்கள் படிப்பு உட்பட மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியாது என்றும் அந்த சமூகத்தின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணமாகாத பெண்கள் போன்களில் வீடியோ எடுப்பது அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதால் பல பிரச்சினைகள் ஏற்படுவதால் அதனை தவிர்ப்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த சமூகத்தின் தலைவர்கள் கூறினார்கள். இந்த சமூகத்தின் இந்த முடிவை அந்த பகுதியில் எம்எல்ஏ அம்பேத்கர் வரவேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் இந்த சமூகத்தின் முடிவுக்கு பெரும்பாலான பெண்கள் இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிப்பது தவறு என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவராக பிரியங்காவுக்கு அழைப்பு!

மின்னம்பலம் : காங்கிரஸ் தலைவராக பிரியங்காவுக்கு அழைப்பு!கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்வியை அடுத்து மே 25ஆம் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் ராகுல் காந்தி. ஆனால், காரியக் கமிட்டி உறுப்பினர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள்.
ஆனால், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவது உறுதியான முடிவு என்றும் அடுத்த தலைவரைத் தீவிரமாகத் தேட முயற்சி செய்யுமாறும், ஜூலை 3ஆம் தேதி ஒரு விரிவான அறிக்கை மூலம் மீண்டும் ராகுல் காந்தி வலியுறுத்தினார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் புதிய நபரைத் தேடும் படலம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் நான்கு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி!

தமிழகத்தில் நான்கு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி!மின்னம்பலம் : தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் மொத்தம் 32 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் நாகை மாவட்டத்துக்கு உட்பட்ட மாதானம், தஞ்சை மாவட்டத்துக்கு உட்பட்ட பந்தநல்லூர், திருவாரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட நன்னிலம், கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட புவனகிரி ஆகிய நான்கு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனமும் இந்தியன் ஆயில் நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஜூலை 1ஆம் தேதியன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின்போது திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாகக் கேள்வியெழுப்பினார். அவருக்குப் பதிலளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “ஹைட்ரோகார்பன் விவகாரம் குறித்து ஆலோசிக்க தமிழகத்தின் அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். வலுக்கட்டாயமாக தமிழகத்தில் நாங்கள் எதுவும் செய்யப் போவதில்லை” என்று உறுதியளித்தார். இந்த நிலையில், அவர் முன்னிலையிலேயே ஹைட்ரோகார்பன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக வெளிவந்துள்ளது.

செவ்வாய், 16 ஜூலை, 2019

தலித் கிறிஸ்தவ பெண்ணைக் காதலித்த தலித் இளைஞர் சதீஷ்குமார் படுகொலை!

அதிகரிக்கும் சாதி ஆணவப் படுகொலை: தலித் கிறிஸ்தவ பெண்ணைக் காதலித்த இளைஞர் படுகொலை!LRJ : தலித்திய தூய்மைவாதிகள் மற்றும் அவர்களின் ஆஸ்தான நிலைய வித்வானான என்ஜிஓ போராளிகளின் பிரத்யேக தலித்திய அளவுகோலின் கீழ் இதெல்லாம் ஜாதி ஆணவப்படுகொலைகளாக பொங்க முடியாத சங்கதிகள். அதனால் அவர்கள் கவனமாக அமைதியாக கடந்து செல்வார்கள். சந்தேகம் இருப்பவர்கள் திருமாவின் சொந்த மாவட்டத்தில் அருந்ததிய இளைஞரை காதலித்து திருமணம் செய்த தலித் பெண்ணை அவர் குடும்பமே கொன்று எதிர்த்ததாக அருந்ததிய இளைஞன் சார்பில் கரடியாக கத்திய புகாரின் கதியென்ன என்று ஒரு எட்டு தேடிப்பாருங்கள். இந்திய அரசியல் சட்டத்தின்படியே கூட இதில் தீண்டாமை வன்கொடுமை சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி வழக்கு பதிய முடியுமா என்பது சந்தேகமே ! 
kalaignarseithigal.com :; அதிகரிக்கும் சாதி ஆணவப் படுகொலை: தலித் கிறிஸ்தவ பெண்ணைக் காதலித்த இளைஞர் படுகொலை! இராமநாதபுரம் மாவட்டத்தில் தலித் கிறிஸ்தவ பெண்ணைக் காதலித்தனால் தலித் இளைஞர் சதீஷ்குமார் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாயில் உள்ள முகிழ்த்தகம் கிராமத்தைச் சேர்ந்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அஜீத்குமார். தண்ணீர் லாரியில் ஓட்டுநராகப் பணியாற்றியுள்ளார். இவர், திருப்பாலைக்குடியைச் சேர்ந்த தலித் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ரஞ்சனியை காதலித்துள்ளார்.

மனக் குழப்பத்தில் ஏ.சி.சண்முகம். இனியும் இவங்களை நம்பணுமா?

பிரசாரத்தில் ஏ.சி.சண்முகம்ஏ.சி.சண்முகம்vikatan.com - ந.பொன்குமரகுருபரன் : வேலூர் தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் கடும் மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடுமையான பணப்புழக்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தேர்தல், வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. கூட்டணியின் சார்பில் தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் போட்டியிடுகின்றனர். தேர்தல் சின்னத்தைக் காரணம் காட்டி போட்டியிலிருந்து அ.ம.மு.க. விலகிவிட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சில காரணங்களால் மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர், ``கடந்த முறை தேர்தல் ரத்தானபோதே, ஏ.சி.எஸ் கடுமையாக மனம் உடைந்துவிட்டார். கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்த நிலையில், தேர்தல் ரத்தானதை அவர் எதிர்பார்க்கவில்லை. ஜெயித்தால் மத்திய அமைச்சர் ஆகவும் சில பி.ஜே.பி தலைவர்கள் மூலமாக ஏற்பாடு செய்திருந்தார். அத்தனையும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் தவிடுபொடியானது.