சனி, 1 ஆகஸ்ட், 2020

தாய்மொழியில் கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது - பிரதமர் மோடி

மாலைமலர் :   புதுடெல்லி: புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் நரேந்திர மோடி
இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பெற்றோர், உறவினர், நண்பர்கள் அனைவருக்குமாக வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட பாடங்களைப் படித்து வருகிறோம்.
எதைப் படித்தார்களோ அது வேலைக்கு உதவவில்லை.
இந்தியாவின் கனவையும், வருங்கால சந்ததியினரின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது.
கடந்த நூற்றாண்டுகளில் சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை உலகிற்கு வழங்கியுள்ளோம்.
புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றிற்கு முக்கியத்துவம் தரவேண்டும். 21-ம் நூற்றாண்டின் புதுமைக்கேற்ப கல்வியை பயன்படுத்த வேண்டும். அந்தந்த மாணவர்கள் தாய்மொழியில் கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. மனப்பாட முறையில் இருந்து சிந்தனை முறைக்கு வழிவகுத்துள்ளது என தெரிவித்துள்ளார்

தஞ்சாவூர் பலரது வங்கி கணக்கிலிருந்து ரூ.5 கோடி மோசடி

hindutamil.in: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர் களின் கணக்கிலிருந்து தொடர்ந்து பணம் எடுத்து மோசடி நடைபெற்று வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வங்கிக்கு சென்று கேட்டபோது, வங்கி அதிகாரிகள் இதுதொடர்பாக எங்களுக்கு தெரியாது என பதில் அளித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சிலர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.இதேபோல, கடந்த வாரத்தில் மட்டும் அதிராம்பட்டினத்தில் உள்ள 2 வங்கிகளின் கிளைகளிலிருந்து சில வாடிக்கையாளர்களின் சேமிப் புக் கணக்கில் இருந்து ரூ.3 கோடி வரை மோசடியாக பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, பல வாடிக்கையாளர்களின் கணக்கு கள் ஹேக் செய்யப்பட்டு பணம் மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்தது. இதுதொடர்பான வழக்கு களை, சென்னையில் உள்ள எஸ்ஐடி எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் மாற்றி விட்டதாக தெரிவித்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் பலரது வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.5 கோடிக்கு மேல் பணம் எடுக்கப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட வாடிக்கை யாளர் பாலசுப்பிரமணியன் கூறிய தாவது: என்னுடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத் துக்கும் மேல் பணம் எடுக்கப்பட்டு மோசடி நடந்துள்ளது.

பிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு ! இந்த உசுரு எப்ப போவுதுன்னு தெரியல !

வினவு புகைப்படச் செய்தியாளர்: கொரோனா நோய்த்தொற்று, குறிப்பாக உழைக்கும் பெண்களை உயிரோடு வதைக்கிறது. குடும்பத்தின் மொத்த பாரத்தையும் தனியொருவராக தன்மீது சுமக்கிறார்கள். எப்போது இந்தப் பாரம் இறங்கும் என்று திசை தெரியாமல் கலங்கி நிற்கிறார்கள்.
சத்தியவாணி என்ற அமுலு, இளநீர் விற்பவர்.வாங்க இளநீர் வேணுமா? என்று கத்தியை லாவகாமக பிடித்தார். நாம் வந்த விசயத்தை அவரிடம் சொன்னோம்.ஏற்கெனவே சங்கத்துக்காரங்க வெவரமா கேட்டு எழுதிட்டுப் போனாங்க. ஆதார், ரேஷன், சங்கக் கார்டுன்னு எல்லாத்தயும் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தேன்.
ஒன்னும் காணல. நீங்க எழுதி என்ன பண்ணப் போறீங்க? என்றார்.கொரோனா நோய்த்தொற்றுனால சாவுறவுங்க கம்மியா போச்சு என்கிறாரே நம்ம முதலமைச்சர் எடப்பாடி…! உண்மையா? என்றோம். ஒரு நாளைக்கு 4, 6 காய்தான் விக்குது. இப்ப பகல் 2 மணியாகுது. இதுவரைக்கும் 2 காய்தான் வியாபாரம் செஞ்சிருக்கேன் என்கிறார், சத்தியவாணி என்ற அமுலு, இளநீர் விற்பவர். தொழிலும் பண்ண முடியல, ஒன்னும் செய்ய முடியல.
என்னையே எடுத்துக்குங்க. 15 ஆயிரம் ரூபாய்க்கு சரக்கு போட்டு உட்கார்ந்திருக்கேன். ஒரு நாளைக்கு 4, 6 காய்தான் விக்குது. இப்ப பகல் 2 மணியாகுது. இதுவரைக்கும் 2 காய்தான் வியாபாரம் செஞ்சிருக்கேன்.

நோயாளியிடம் ரூ.12 லட்சம் வசூல்: தனியார் மருத்துவமனைக்கு அனுமதி ரத்து!

>மின்னம்பலம் : சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்காக வழங்கப்பட்ட சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை மீது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.கொரோனா என்ற உயிர்க்கொல்லி மக்களை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அதற்குச் சிகிச்சை என்ற போர்வையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் கொள்ளை கட்டணம் வசூலித்து வருகின்றன. இந்த சூழலில் தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளுக்கான கொரோனா சிகிச்சை  கட்டணத்தை நிர்ணயித்தது.அதன்படி பொது வார்டில் அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு a1 மற்றும் a2 கிரேடுக்கு ரூ.7,500 மற்றும் a3 மற்றும் a4 கிரேடுக்கு ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு a1 ,a2, a3, a4 கிரேடுக்கு ரூ.15,000 நிர்ணயித்து, இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்கக் கூடாது என்றும் அரசு எச்சரித்தது.

கனிமொழிக்கு எதிராக கலகம்!... ராஜினாமா மூடில் கனிமொழி!

nakkheeran.in - இரா. இளையசெல்வ : கனிமொழியின் செல்வாக்கை
குறைப்பதற்காக இளம் மகளிர் அணியை திமுகவில் உருவாக்க உதயநிதி தீவிரம் காட்டி வருவது கனிமொழி ஆதரவாளர்களை கொந்தளிக்க வைக்கிறது.கரோனா நெருக்கடிகளையும் மீறி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் முகமாக அரசியல் பணிகள் திமுகவில் நடந்து வருகின்றன. ஷூம் மீட்டிங் மூலம் திமுக மா.செ.க்களிடமும், நிர்வாகிகளிடமும் அடிக்கடி விவாதித்து வருகிறார்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.இந்த நிலையில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, திமுகவில் இளம் பெண்கள் அணி ஒன்றை தனியாக உருவாக்க திட்டமிட்டு அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகிறார் என்கிறார்கள் திமுக மகளிர் அணியினர்.
இது குறித்து விரிவாக நம்மிடம் பேசிய மகளிர் அணியினர், ‘’உதயநிதியை இளைஞரணிக்கு செயலாளராக நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, இளம் பெண்கள் அணி உருவாக்க வேண்டும் என திட்டமிட்டனர்.
ஆனால், கட்சியில் உள்ள மகளிர் அணியின் வலிமையை பலகீனமாக்கவும், மகளிர் அணியின் செயலாளராக உள்ள கனிமொழியின் செல்வாக்கை குறைக்கவுமே இந்த இளம் மகளிர் அணி உருவாக்கப்படுவதாக சர்ச்சைகள் வெடிக்கும் என யோசித்து, உதயநிதியின் அந்த முயற்சிக்கு ஸ்டாலின் தடை போட்டார்.

ஆப்கான் பெண்கள் உருவாக்கிய மலிவு விலை வென்டிலேட்டர்கள் .. சாதனை வீடியோ

    பி பி சி: இவ்வளவு குறைந்த விலையில் வென்டிலேட்டரா? அசரவைக்கும் ஆப்கன் பெண்கள்
ஒரு காலத்தில் அமெரிக்காவுக்குள் நுழையவே அனுமதி மறுக்கப்பட்ட இந்த ஆஃப்கன் பெண்கள்தான், இன்று கொரோனா நோயாளிகளுக்கு உதவ மிகக்குறைந்த விலையிலான வென்டிலேட்டர் கருவிகளை வடிவமைத்துள்ளனர்.

குஷ்பூ கே எஸ் அழகிரி டுவிட்டர் மோதல் .. குஷ்பூ வெளியேற போகிறார்?

தினகரன் : சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை வரவேற்றதால் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்புவுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கும் இடையே டிவிட்டரில் வார்த்தை மோதல் ஏற்பட்டிருப்பது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழக காங்கிரஸில் தீவிரமாக இயங்காமல் ஒதுங்கியே இருந்தார் குஷ்பு. இந்நிலையில்  காங்கிரஸ் பேச்சாளர் சஞ்சய் ஜா, ‘‘ராகுலுக்கு பதிலாக சச்சின் பைலட் அல்லது பாஜவுக்கு சென்ற ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோரில் ஒருவருக்கு தலைவர் பதவி வழங்கியிருக்கலாம்’’ என்று தனது டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்துக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

புதிய கல்விக் கொள்கை .. இறுதிவரை எதிர்ப்போம் பொன்முடி .. வீடியோ

மின்னம்பலம் : புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து இரண்டு நாட்களாகிவிட்ட நிலையில் தமிழக அரசின் நிலைப்பாடு இதில் என்ன என்று திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஜூலை 31 ட்விட்டரில், “வட இந்திய மாணவர்களைவிடத் தமிழக மாணவர்கள் பெற்றுள்ள அந்த வளர்ச்சியின் உயரத்தைச் சிதைத்திடும் நோக்கத்தில், இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க முற்படும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து, அண்ணாவின் திருப்பெயரைக் கட்சியின் பெயரில் இணைத்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசின் நிலைப்பாடு என்ன? தாய்மொழி வளரவும், ஆங்கிலம் கற்று உலகளவில் தமிழகம் சாதிக்கவும் காரணமான பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையைப் பலி கொடுத்து, தங்களுக்கு மிச்சமிருக்கும் ஆட்சிக்காலத்தை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறதா இந்த அரச?
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தங்கள் ஆட்சிக்காலத்தில் இந்தி ஆதிக்கத்திற்கு இடம்தராமல் இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்துவந்த நிலையில், அவர்களுக்கும் சேர்த்தே துரோகம் செய்யத் துணிந்து விட்டதா இன்றைய அதிமுக அரசு?” என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்

வெள்ளி, 31 ஜூலை, 2020

அமரர் ராஜீவ் காந்தி 02-08-1987 சென்னை மெரினாவில் ஆற்றிய உரை : இந்த ஒப்பந்தத்தை முனை முறிக்க கூடும் ...

இந்த ஒப்பந்தத்தை சீர் குலைக்க பல சக்திகள் முயலக் கூடும். எந்தெந்த சக்திகளின் நடமாட்டங்கள் இந்த ஒப்பந்தத்தால் அகற்றப்படுகின்றனவோ அவை அனைத்தும் இந்த ஒப்பந்தத்தை முனை முறிக்க முயலக்கூடும். வன்முறை மூலமும் கொடுஞ்செயல்கள் மூலமும் பயன் பெற நினைப்போர் இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதை விரும்ப மாட்டார்கள்
சென்னையில் பிரதமர் உரை வணக்கம்!
இலங்கையில் அமைதிச் சூழ்நிலை ஒன்று ஏற் பட்டிருப்பதற்காக நாம் இன்று கூடியுள்ளோம்......
ஒப்பந்தத்தில் கையெழுத்திட நான் இலங்கைக்குப் போகும் முன்னர் எல்லாத் தமிழ் போராளிகளிடமும், அதிகளவு மிதவாத உணர்வு கொண்ட இலங்கை தமிழர்களிடமும் நான் பேசினேன். நீதி மற்றும் சமத்தவத்தைப் பெற போராடும் இவர்களிடம் நான் ஆலோசனை மேற்கொண்டேன், நாங்கள் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தை தமிழ் போராளிகள் அனைவரும் புரிந்து கொண்டனர்.. இலங்கையின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்காமல், இலங்கை தமிழர்கள் கோரிய அனைத்தையும் தர இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது..... .....
இலங்கையின் மூன்றில் ஒரு பகுதி தனி மாகாணமாக் கப்பட்டு, தமிழர்கள் அதில் பெரும்பான்மையினராக வசிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்திய அரசின் கீழ் இருக்கும் மாநிலங்கள் போன்றே மாநில சுயாட்சி உரிமையும் அவர்களுக்கு உண்டு... ...
நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவு செய்யப் பட்டுள்ளன. கருத்து வேறுபாட்டையும் வன்முறையையும் போரையும் நிறுத்த வேண்டிய நேரம் இது. இது புனரமைக்க வேண்டிய நேரம். தேசிய இணக்க உணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டம் உருவாகி இருக்கிறது.

இளையராஜா பிரசாத் லேப் சாயி பிரசாத் மீது போலீசில் திருட்டுப் புகார்!

மின்னம்பலம் : சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவின் உரிமையாளர் சாய் பிரசாத் மீது இசையமைப்பாளர் இளையராஜா காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
40 வருடங்களுக்கு முன்னால், இளையராஜா தமிழ் திரைத்துறையில் ராஜாவாக கோலோச்சிக் கொண்டிருந்தபோது பிரசாத் ஸ்டியோவில் ஒரு ஸ்டுடியோ அறையில் அமர்ந்துதான் இசையமைப்பார். அந்த அறை தார்மீகமாக அவருக்கு பிடித்துவிட பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளரான எல்.வி. பிரசாத் தனது நண்பரான இளையராஜாவுக்காகவே அந்த அறையைக் கொடுத்துவிட்டார். பற்பல வருடங்களாக அந்த அறையும் ராஜாவின் இசையும் பிரிக்க முடியாத பந்தத்துக்கு உதாரணமாகியது.
எல்.வி. பிரசாத் காலத்துக்குப் பிறகு அவரது மகன் காலத்திலும் இது தொடர, இப்போது அவரது பேரன் சாய் பிரசாத் இளையராஜாவின் ஸ்டுடியோவை காலி செய்யச் சொன்னார். வருமானம் இல்லாதால் பிரசாத் ஸ்டுடியோவின் உள் கட்டமைப்பை மாற்றியமைக்க முடிவு செய்து இளையராஜாவை காலி செய்யச் சொன்னார் சாய் பிரசாத்.

நடிகர் சுஷாந்த் இறப்பு மர்மம் ..பல கோடி.. அந்த 6 நாட்கள்....திருப்பம்.. காதலியை வளைக்கும் போலீஸ்!

tamil.oneindia.com/ - siyamsundar: பாட்னா: பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையில் புதிய திருப்பமாக தற்போது அவரின் காதலியை பீகார் போலீஸ் குறி வைத்து உள்ளது. இதில் பல கோடி முறைகேடு நடந்து இருப்பதாக பீகார் போலீஸ் தெரிவித்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ம் தேதி தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
முதல் நாள் நண்பர்களுடன் பார்டி கொண்டாடியவர், மறுநாளே இரவோடு இரவாக தற்கொலை செய்து கொண்டார்.
இவரின் தற்கொலைக்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டது.   மன அழுத்தத்தில் இவர் கஷ்டப்பட்டதாக கூறப்பட்டது. இவர் தற்கொலைக்கு மன அழுத்தம்தான் காரணம் என்றுகூறப்பட்டது.
எனக்கு 24 டவுட் இருக்கு.. சுஷாந்த் சிங் நிச்சயம் தற்கொலை செய்யலை.. கொலைதான்.. அடித்துக் கூறும் சாமி
 அதுமட்டுமின்றி பாலிவுட் திரை உலகம் இவரை ஒதுக்கி வைத்ததும், இவரின் தற்கொலைக்கு காரணம் என்று கூறப்பட்டது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் இவரை வளர விடாமல் தடுத்தார் என்றும் புகார் வைக்கப்பட்டது. அதேபோல் சல்மான் மற்றும் கரண் ஜோகர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் புகார் வைக்கப்பட்டது.
நடிகை கங்கனா ரனாவத் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து நாளுக்கொரு சந்தேகங்களை எழுப்பி வந்தார் .

ஸ்வப்னா வழக்கில் பா.ஜ.க-வைச் சுற்றும் சர்ச்சைகள்!

ஸ்வப்னா வழக்கில் பா.ஜ.க-வைச் சுற்றும் சர்ச்சைகள்!
 நக்கீரன் - சிந்து ஆர் - :  ஸ்வப்னா வழக்கு : திருவனந்தபுரத்திலிருந்து தப்பிச் செல்லும்போது பா.ஜ.க ஆதரவு செய்தி நிறுவனமான `ஜனம்’ டி.வி செய்திப் பிரிவின் தலைவர் அனில் நம்பியாருக்கு போன் செய்தார்.திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரகத்துக்கு பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டுவருகின்றன.இதுநாள் வரை முதல்வரைக் குறிவைத்து சுற்றிவந்த சர்ச்சைகள் தற்போது பா.ஜ.க-வினரைக் குறிவைத்தும் சுழலத் தொடங்கியிருக்கின்றன.முதல்வரின் செயலாளராக இருந்த சிவசங்கரனிடம் ஏற்கெனவே சுங்கத்துறையினர் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இதேபோல என்.ஐ.ஏ அதிகாரிகளும் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். என்.ஐ.ஏ-யின் அடுத்தகட்ட விசாரணைக்காக ஜூலை 27-ம் தேதி அதிகாலை திருவனந்த புரத்திலிருந்து கொச்சிக்குக் கிளம்பிச் சென்றார் சிவசங்கரன். ஏற்கெனவே என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில், ‘ஸ்வப்னாவின் கணவரும், தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸரித்தும் எனது நண்பர்கள். அவர்கள் தங்கம் கடத்துவது தெரிந்திருந்தால் நான் அவர்களிடமிருந்து விலகியிருப்பேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

குணா மு.குணசேகரன் நியூஸ்18 நிறுவனத்தில் இருந்து விலகினார்

நியூஸ்18 - மு.குணசேகரன் ராஜினாமா.. விடைபெறுகிறேன், நன்றி!

அன்பு நிறைந்த நண்பர்களுக்கு,  வணக்கம்!
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின்  தொடக்க நாள் முதல், இன்று வரையிலும் நாம் இணைந்து பயணித்திருக்கிறோம். கடந்த நான்காண்டு காலத்துக்கும் மேலான கூட்டு உழைப்பின் காரணமாக, தமிழ்நாட்டின் தனித்துவம் மிகுந்த தொலைக்காட்சியாக, தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக, மக்கள் நலனை முன்னிறுத்தும் நம்பிக்கைக்குரிய ஊடக நிறுவனமாக இன்று பரிணமித்திருக்கிறோம். இதில் உங்கள் ஒவ்வொருவரின் அயராத உழைப்பும் பங்களிப்பும் போற்றுதலுக்குரியது.

BIG BREAKING : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ்! அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ!. EXCLUSIVE VIDEO

BIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ்! அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ! நக்கீரன் கோபால் ...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்ததையடுத்து தமிழக அரசு இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என தெரிவித்தது.
ஆனால் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவினால் உடனடியாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில் விசாரணையில் இறங்கிய நிலையில் பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். விசாரணை நடந்து வரும் நிலையில், இந்தக் கொடூர கொலை சம்பவத்தில் நியாயத்தை நோக்கிய நக்கீரனின் முயற்சியில், காண்போரை அதிர வைக்கும் வீடியோ கிடைத்துள்ளது.
உடல்களை மேஜிஸ்ட்ரேட் ஆய்வு செய்கையில் எடுக்கப்பட்ட BLUR செய்யப்படாத வீடியோ இங்கே... அந்த வீடியோ குறித்தும் வெளிவராத பல உண்மைகள் குறித்தும் நக்கீரன் ஆசிரியர் விளக்குகிறார்... :

இயக்குனர் வேலு பிரபாகரன் கைது .. இந்து மதத்தை அவமதித்தாராம் வீடியோ

வெப்துனியா : இந்து மதத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்டதாக திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இந்து மதம் குறித்து விமர்சிப்போர் மீதான நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதுடன், அதிலிருந்த வீடியோக்களும் நீக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது அடுத்த இந்து மத சர்ச்சையில் சிக்கியுள்ளார் திரைப்பட இயக்குனர் வேலுபிரபாகரன். இந்து மதம் குறித்து இயக்குனர் வேலுபிரபாகரன் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்டதற்காக அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து பாரத் என்ற அமைப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த சென்னை போலீஸார் இயக்குனர் வேலுபிரபாகரனை கைது செய்துள்ளதுடன் 6 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்

வனிதா : லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சும்மாவிட மாட்டேன், இனி பஞ்சாயத்து ஷோவை நடத்தக் கூடாது

லட்சுமி ராமகிருஷ்ணன் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுகிறார் - வனிதா பரபரப்பு புகார்
வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன்
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் வனிதா பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்தார். இதனால் இருவரும் யூடியூப் சேனல் ஒன்றில் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றி வனிதா தரக்குறைவாக பேசினார். இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதாவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அந்த நோட்டீசை தனது டுவிட்டரில் வெளியிட்டு வனிதா கூறியிருப்பதாவது: நல்ல மனசுள்ள சமூக ஆர்வலர் (லட்சுமி ராமகிருஷ்ணன்) தன் வழக்கறிஞர் மூலம் ரூ. 1.25 கோடி கேட்டு என்னை மிரட்டுவதை பாருங்கள். ஒரு குடும்பத்திற்கு உதவி செய்வது போன்று, தேவையில்லாமல் என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு, போலி நீதிபதியாக இருக்கவும் முயற்சி செய்கிறார். அப்பாவிகளின் ரத்தத்தை குடிக்கிறார்.

நடிகர் அனில் முராரி உயிரிழப்பு..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

சத்தியம் டிவி : சின்னத்திரை மூலம் நடிப்புலகில் அறிமுகமானவர் நடிகர் அனில் முர
ளி. கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், கன்னியாகுமரியில் ஒரு கவிதா என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தனது பயணத்தை தொடங்கினார். இதையடுத்து, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என்று பல்வேறு படங்களில் நடித்த அனில்  முரளி, மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் நடித்திருக்கிறார்.
தமிழில் கடைசியாக வால்டர் படத்தில் நடித்த இவர், கடந்த சில தினங்களாக கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பிற்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

ரஃபேல் விமான ஊழல் .. இந்த நூற்றாண்டின் மிக மோசமான பட்டவர்த்தனமான ஊழல்!

Karthikeyan Fastura : · ஐரோப்பிய யூனியனின் விண்வெளி நிறு
வனத்தை விட சிறந்த விண்வெளி நிறுவனம் இஸ்ரோ..
கண்டம் விட்டு கண்டம் பாயும் ballistic missile செய்யும் தொழில்நுட்பம் கொண்ட DRDO. பல போர் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் உருவாக்கும் திறன் வாய்ந்த HAL.
கணினி தொழில்நுட்பத்திற்கு கேட்கவேண்டியதே இல்லை.
இப்படி எல்லாத் திறன்களும், வசதிகளும், வாய்ப்பும் இருந்தும் நாம் ஏன் ரஃபேல் ஜெட் விமானம் வாங்க வேண்டும்?
ரஃபேல்லை விட சிறந்த போர்விமானத்தை கூட நாம் நினைத்தால் கட்டமைக்க முடியும். எல்லாமே எஞ்சினியரிங் வித்தை தான். நாம் தயாரித்து உற்பத்தி செய்வதற்கு நமக்கு தேவையான காலம் இல்லையா..?
போர் அந்த அளவிற்கு உச்சகட்டத்தில் இருக்கிறதா என்ன?
அல்லது போர் பதட்டமாவது உச்சத்தில் இருக்கிறதா..?
அப்படி என்றால் இதன் தேவை என்ன? ஆட்சியாளர்களின் கமிஷன் தொகை. வேறு என்ன இருக்க முடியும். இப்படி யோசிக்கும் போது இதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் கட்சியின் மீதும் கேள்வி எழுகிறது.
ஆனால் அவர்களாவது மார்க்கெட் ரேட்டிற்கு ஒப்பந்தம் போட்டார்கள். பிஜேபி அரசு மார்க்கெட் ரேட்டை விட பல மடங்கு ரேட்டிற்கு வாங்குகிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய பட்டவர்த்தனமான ஊழல்.

உயிரை பணயம் வைத்து ஒப்பந்தம் செய்த பிரதமர் ராஜீவ் காந்தி .. ஜூலை 29 1987 . .. இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு 13

திரு . அ.அமிர்தலிங்கம் : 
1 . கிழக்கு மாகாணத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதை நாம் முற்றாக எதிர்க்கிறோம்.   ஏற்படுத்தப்படும் அமைதியை அது குலைத்துவிடும். மீண்டும் கலவரம் ஏற்படும். அன்றியும் சிதறிப்போய் இருக்கும் தமிழ் மக்கள் ஒரு வருடத்திற்குள் திரும்பி வரமுடியாது.
2   .1987 மே மாதத்திற்கு பின் நிறுவப்பட்ட ராணுவ முகாம்கள் மாத்திரமின்றி 1983 இன் பின் நிறுவப்பட்ட முகாம்கள எல்லாம் அகற்றப்பட வேண்டும்.
3    . வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்களின்  பாதுகாப்புக்கு இந்திய நேரடி தலையீடு அவசியம் .  சிங்கள போலீசையோ இராணுவத்தையோ அங்கு சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தும் வேலையில் ஈடு படுத்த கூடாது.
4 .. மாகாணங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் பற்றி மாத்திரம்  மத்திய ஆட்சியில் தமிழ் மக்களின் உரிமை பற்றியும் பேசி தீர்க்கப்பட வேண்டும். 
 இந்திய அரசின் சட்ட நிபுணர்களும் இப்பேச்சு வார்த்தைகளில் பங்கு கொள்ள  வேண்டும் ..
5 .  பங்கரவாத தடை சட்டம் , அவசர கால தடை சட்டம் இவற்றின் கீழ் கைது செய்ப்பட்டவர்கள் மாத்திரம் அல்ல . நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் , தண்டிக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் மன்னிப்பு வழங்க படவேண்டும்.
பயகரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் .

சேலத்தில் வடஇந்திய அடாவடி ... வீர சவர்க்கார் சாலை .. ஹரே ராமா சாலை .. விழித்து கொள்ளுங்கள் ..

 Maha luxmi -: சேலத்தில் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகம்
ஆகிட்டு இருக்குன்னு முன்னவே போஸ்ட் போட்டிருந்தேன்.
சில கண்டனங்களும் வந்தது.  .ஆதிக்கம் என்று நான் சொல்வது அவர்கள் இங்கு வாழ்வது அல்ல! நம் அடையாளத்தை பறித்துவிட்டு அவர்களுடைய அடையாளத்தை நிறுவுவது.  .
வெளிப்பார்வைக்கு சாதாரணமாக தெரிந்தாலும் உள் இருக்கும் அரசியல் சற்று ஆபத்தானது.
சேலம் ஷங்கர் நகர் சாலையின் பெயரை ஹரே ராமா சாலை என்று மாற்றி விட்டார்கள்.
பின் நம்மாட்கள் அதை தீவிரமாக எதிர்த்து இப்போது அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து கிருபா மருத்துவமனைக்கு எதிர் சாலை. அங்கு போர்டே வைத்துவிட்டார்கள்.
பெயர் "சேட் எக்ஸ்டென்சன்" ! இன்று புதிதாக ஒரு மேட்டர் கண்ணில் பட்டது. அது க்ளூனி ஸ்கூல் பக்கத்து சாலைக்கு கூகுளில் "வீர சாவர்க்கர் சாலை" என்று பெயரிட்டுள்ளனர்!

வியாழன், 30 ஜூலை, 2020

ராமர ஜென்ம பூமி தீட்சிதர், பணியிலிருக்கும் 16 காவலர்களுக்கு கொரோனா!

tamil.indianexpress.com : ஆகஸ்ட் 5ம் தேதி அன்று நரேந்திர மோடி,
உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை புரிய உள்ளார். அங்கு புதிதாக கோவில் கட்டப்பட இருக்கும் நிலையில் அதற்கான பூஜைகள் 5ம் தேதி நடைபெற உள்ளது.
அன்று காலை 11:30 மணிக்கு ஆரம்பித்து 12:30 மணி வரைக்கும் பூஜைகள் நடைபெறும்.  இந்நிலையில் அங்கு பூஜை நடத்த இருக்கும் தீட்சிதர் குழுவில் ஒரு நபருக்கும் காவல் பணியில் ஈடுபட்டிருந்த 16 நபர்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 
5ம் தேதி நடைபெற இருக்கும் பூமி பூஜையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இருக்கும் தடைகளை கணக்கில் கொண்டு, 200 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரூ. 300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மடங்களிலும், கோவில்களிலும் அன்று சிறப்பு பூஜைகள் நடத்தவும் ராமர் கோவில் அறக்கட்டளை கேட்டுக் கொண்டது.

ராணுவத்தின் பலம் கூடுகிறது! வந்தன ரபேல் விமானங்கள்.. தினமலர் ..

தினமலர் : புதுடில்லி: ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து புறப்பட்ட,
ஐந்து ரபேல் போர் விமானங்கள், ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள, விமானப்படை தளத்துக்கு, நேற்று வந்தடைந்தன.
'இதன் வாயிலாக, நம் ராணுவத்தின் பலம் கூடியுள்ளதுடன், விமானப்படை வரலாற்றில், புதிய சகாப்தம் துவங்கி உள்ளது' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, 'டசால்ட்' நிறுவனத்திடம் இருந்து, 59 ஆயிரம் கோடி ரூபாயில், 36 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் வாங்க, 2016, செப்., 23ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த ஆண்டு அக்டோபரில், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் சென்றார். அவரிடம், முதல் ரபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின், மெரிக்னாக் விமானப்படை தளத்தில் இருந்து, ஐந்து ரபேல் போர் விமானங்கள், 27ம் தேதி இந்தியா புறப்பட்டன. ஏழு மணி நேரப் பயணத்துக்குப் பின், ஐக்கிய அரபு எமிரேட்சின், அல் தப்ரா விமானப்படை தளத்தில் தரை இறக்கப்பட்டன. பின், அங்கிருந்து புறப்பட்டு, ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள, நம் விமானப்படை தளத்தை, நேற்று மதியம் வந்தடைந்தன.
பிரான்சில் இருந்து, 7,000 கி.மீ., துாரத்தை கடந்து வந்த போர் விமானங்களுக்கு, வானில், 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் போதே, எரிபொருள் நிரப்பப்பட்டன. ரபேல் விமானங்கள், இந்திய வான்வெளியை வந்தடைந்ததும், இரண்டு 'சுகோய் 30 எம்.கே.ஐ. எஸ்' போர் விமானங்கள், அவற்றை வரவேற்று அழைத்து வந்தன.

மும்மொழிக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கிறோம்" -தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்!

 நக்கீரன் :  தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல் தமிழக அரசு அறிவித்திருந்த பொதுமுடக்கம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (30/07/2020) மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உடன் காணொளி மூலம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்  ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் என அ.தி.மு.க. தீர்மானமாக அறிவிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் எனவும் அ.தி.மு.க. அரசு தீர்மானமாக அறிவிக்க வேண்டும். மும்மொழிக் கொள்கையை ஆணித்தரமாகவும், கடுமையாகவும் எதிர்த்து நிராகரிக்கின்றோம். மழலையர் கல்வியைக் கூட மத்திய அரசு முடிவு செய்யும் என்பது தி.மு.க.வின் பரிந்துரைகளுக்கு எதிராக உள்ளது. பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொலை

BBC : சுட்டுக்கொன்றவரின் பெயர் காலித் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி அவர் துப்பாக்கியை கொண்டுவந்தார் என்பது தெரியவில்லை.பாகிஸ்தானில் தெய்வநிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆண் ஒருவர், அது தொடர்பான வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது நீதிமன்ற அறையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.  தான் முகமது நபி என்று கூறி வந்த அந்த நபர் மீது தெய்வ நிந்தனை வழக்கு தொடரப்பட்டு, அதன் விசாரணை பெஷாவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.    சுட்டுத்தள்ளப்பட்ட தஹிர் அஹ்மத் நசீமுக்கு எதிராக 2018ஆம் ஆண்டு பதின்வயது நபர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.    புதன்கிழமை காலை நடந்து கொண்டிருந்த விசாரணையின்போது அவர் சுட்டுத் தள்ளப்பட்டார். இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது.  தஹிரை சுட்ட நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். சுட்டுத்தள்ளப்பட்டவர் “இஸ்லாத்தின் எதிரி” என்று அந்த நபர் கோபமாக கத்தும் காட்சிகள் மற்றொரு காணொளியில் பதிவாகி இருக்கிறது.

கொங்கு சர்வே: அதிர்ச்சியில் ஸ்டாலின்

மின்னம்பலம் : இந்த ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வோடு தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம் தமிழகத்தில் 89 ஆம் ஆண்டில் இருந்தே திமுக, அதிமுக என மாறி மாறிதான் மக்கள் ஆட்சிகளை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
2016 இல் அது மிஸ் ஆகிவிட்டது. எனவே மீண்டும் எதிரக்கட்சியான திமுகவையே மக்கள் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று கணக்கு போட்டு திமுக தலைவர் ஸ்டாலின் சுழன்றுகொண்டிருக்கிறார்.இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவுக்கு உத்திவகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் விரிவான ஆழமான சர்வேக்களை தமிழகம் எங்கும் மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐபேக் டீமின் உறுப்பினர்கள் 2000 பேரை கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் அந்த இரண்டாயிரம் பேரையும் இரண்டு முறை அவர்கள் சந்தித்துள்ளார்கள். அந்தந்த சமயத்து மக்கள் பிரச்சினைகள் குறித்த கேள்விகளுடன் நடத்தப்பட்ட ஆய்வில் திமுக 180 இடங்கள் வரை வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக ரிப்போர்ட் கொடுத்தது ஐபேக். அந்த சர்வே முடிவுகளைப் பார்த்து ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

மாணவர்களுக்கு முட்டை, நாப்கின் : அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

மாணவர்களுக்கு முட்டை, நாப்கின் : அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

மின்னம்பலம : ஊரடங்கு காரணமாக வீட்டில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாப்கின் மற்றும் முட்டை வழங்குவது குறித்து ஏன் பரிசீலிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கொரோனா பரவல் காரணமாக வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாது என்று தமிழக அரசு இன்று அறிவித்தது. இதனிடையே அரசு பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். 

குஷ்பூ புதிய கல்விகொள்கைக்கு ஆதரவு .. பாஜகவில் சேர போகிறாரா?

பாஜகவில் இணைகிறேனா? குஷ்பு பதில்!

மின்னம்பலம் :புதிய கல்விக் கொள்கைக்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனினும் மும்மொழிக் கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, “புதிய கல்வி கொள்கை 2020 வரவேற்கத்தக்க நடவடிக்கை. தம்ஸ் அப்” என்று கூறி வரவேற்பு தெரிவித்திருந்தார். புதிய தேசிய கல்வி கொள்கை தொடர்பாக காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கு மாறாக, குஷ்பு இவ்வாறு தெரிவித்தது விவாதத்தை ஏற்படுத்தியது.இதனைக் குறிப்பிட்டு பலரும் குஷ்பு விரைவில் பாஜகவில் இணைய இருக்கிறார் என சமூக வலைதளங்களில் கருத்து கூற ஆரம்பித்தனர்.

இந்த கேள்வியை எழுப்பிய மதுரை என்பவரின் ட்விட்டுக்கு பதிலளித்த குஷ்பு, “பாவம்...லூசா நீங்க” என்று சாடியிருந்தார்

புலிகளின் அழிவுக்கும், தமிழ் மக்களின் அழிவுக்கும் யார் ....? சமுகவெளியில் அனல் பறக்கும் .....

Jeevan Prasad புலிகளின் அழிவுக்கும், தமிழ் மக்களின் அழிவுக்கும் யார்
காரணம்?
ராஜீவ் காந்தி , ஜேஆரோடு சேர்ந்து 13வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். வடக்கு - கிழக்குக்கு சுயநிர்ணய உரிமை வரையிலான மாகாண ஆட்சியை பெற்றுக் கொடுத்தார்கள் .
அதை புலிகள் எதிர்த்து இல்லாமலாக்கிக் கொண்டார்கள். ராஜீவ் காந்தியையும் படுகொலை செய்தார்கள்.
பிரேமதாச , இது அண்ணன் - தம்பி சண்டை என இந்திய படைகளுக்கு எதிராக போராட புலிகளுக்கு பணமும் ஆயுதமும் வழங்கினார். இந்தியா வெளியேறியதும் தனிநாட்டைத் தவிர பிரபாகரன் எதைக் கேட்டாலும் தருகிறேன் என்றார். அதையும் எதிர்த்தார்கள். பிரபாகரனுக்கு இலங்கை இராணுவத்தில் பெரிய பதவி ஒன்றைக் கூட தான் தயாராக இருப்பதாக ஒருமுறை சொன்னார். அதையும் கண்டு கொள்ளவில்லை. இறுதியில் பிரேமதாசவையும் படுகொலை செய்தார்கள்.
சந்திரிகா ஒரு நல்ல தீர்வை கொண்டு வர முயன்றார். அதுவே சிறந்த தீர்வு என பலர் இப்போதும் பேசுகிறார்கள். சந்திரிகாவை கொல்ல முயற்சி செய்தார்கள். கண் போனது. உயிர் போகவில்லை. அந்த தீர்வை வரைந்த நீலன் திருச் செல்வத்தை கரும்புலிகள் மூலம் படுகொலை செய்து அதையும் இல்லாமல் செய்து கொண்டார்கள்...

எடியூரப்பா நீக்கப்படுகிறார்: லட்சுமண் சவதிக்கு முதல்-மந்திரி பதவி?

மாலைமலர் : கர்நாடக அரசில் தலைமை மாற்றம் ஏற்படப்போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் லட்சுமண் சவதிக்கு முதல்-மந்திரி பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு 78 வயதாகிறது. அவர் பா.ஜனதாவில் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக உள்ளார். மேலும் அவர் பெரும்பான்மை சமூகமான லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவராக உள்ளார். அந்த சமூகம் தான் பா.ஜனதாவின் பலமாக உள்ளது. குறிப்பாக வட கர்நாடகத்தில் அந்த சமூக மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள்.
அந்த வட கர்நாடகத்தில் பா.ஜனதா அசுர பலத்துடன் திகழ்கிறது. பா.ஜனதாவில் 75 வயதானவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அப்படி தான் பெரும் தலைவர்களாக இருந்த அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்டோர் ஓரங்கட்டப்பட்டனர்.
அவர்கள் அரசியலில் இருந்தே ஒதுங்கியுள்ளனர். ஆனால் 75 வயதை கடந்தாலும் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் நீடிக்கிறார். அதற்கு அவருக்கு உள்ள மக்கள் செல்வாக்கு மற்றும் சாதி பலம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
எடியூரப்பாவுக்கு மாற்றாக வேறு ஒரு தலைவரை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் பா.ஜனதா மேலிடம் உள்ளது.

இந்திய போர் விமானங்கள் யாழ்ப்பானத்தில் உணவு பொட்டலங்களை போட்டன .. இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு -13

 திரு . அ. அமிர்தலிங்கம்   :  டிசம்பர் 19  ஆம் திகதி தி


ட்டம்
இந்திய அமைச்சர்களுக்கும்  இலங்கை அரசுக்கும் நடந்த பேச்சு வார்த்தைகளின் இறுதியில் வடக்கு கிழக்கு மாகாணம் பற்றிய புதிய திட்டம் உருவானது.  கிழக்கு மாகாணத்தில் இருந்து அம்பாறை தேர்தல்  மாவட்டத்தை பிரித்து எஞ்சிய பகுதியை கிழக்கு மாகாணமாக்கி ,  அதற்கு ஒரு மாகாணசபையையும் . வடக்கு மாகாணத்துக்கு ஒரு மாகாணசபையையும் அமைத்து இரு மாகாணசபைகளையும் சில விடயங்களில் ஒன்று பட்டு செயல்பட கூடியவாறு ஒரு அமைப்பை ஏற்படுதுவதென்றும் .
ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் இவை இணைவதற்கு அனுமதிப்பது என்றும் இலங்கை அரசு ஏற்று கொண்டது.
ஆனால் இந்திய அமைச்சர்கள் டெல்லி திரும்பிய இரண்டு நாட்களுக்குள் இடையில் முஸ்லிம் பிரதிநிதிகள் இதை எதிர்ப்பதாக இலங்கை  தூதுவர் மூலம் டெல்லி அரசுக்கு அறிவிக்க பட்டது.
ஏற்று கொண்ட திட்டத்தில் இருந்து இலங்கை பின்வாங்க தொடங்கியது.
இலங்கை அரசின் நிலையை தெளிவு படுத்த தூதுவர் மட்டத்தில் முயற்சிகள மேற்கொள்ள பட்டன்.
ஆனால் இந்திய அரசுக்கு ஓர் உறுதியான பதில் கிடைக்கவில்லை.
இதனால் இத்திட்டம் உத்தியோக பூர்வமாக  தமிழ் இயக்கங்களுக்கு அறிவிக்க படவோ அவர்களின் கருத்துக்கள கோரப்படவோ இல்லை. .  
கிழக்கு மாகாணத்தில் பயங்கர இராணுவ நடவடிக்கை.
மார்கழி மாத பிற்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் கொக் கட்டிச் சோலைப் பகுதியில் இலங்கை இராணுவம் விமானங் களிலிருந்து குண்டு வீசித்தாக்கியும், ஹெலிக் கெப்டர்களி லிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தும், கனரகபீரங்கி களால் தாக்கியும் ஆயிரக்கணக்கான படைவீரர்களோடு மிகப் பெரிய தாக்குதலை ஆரம்பித்தது. படுவான்கரை முழுவதுமே இப்பயங்கரத் தாக்குதல் நடைபெற்றது.

ஜல் ஜீவன் திட்டம்... குடிநீர் கொள்ளை! பாஜகவின் தொடரும் வழிப்பறி கொள்ளை

சிவசங்கர் எஸ்எஸ் : ஜல் ஜீவன் திட்டம்' என்ற பெயரில் மத்திய அரசும், மாநில அரசும் மக்களின் ஜீவனை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
'ஜல் ஜீவன்' என்ற பிரதமர் மோடி அறிவிப்பை பார்த்து, 'மேக் இன் இண்டியா', 'ஸ்விட்ச் பாரத்' போல ஒரு வாயால் சுடும் வடை என கடந்து போய் விட்டோம் பலரும். ஒரு வாரமாக கிராமங்களில் இருந்து வரும் செய்தி, "இது மக்களை வதைக்கும் இம்சை' என புரிய வருகிறது .
2024 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக குடிநீர் குழாய் இணைப்பு அளிப்பதன் மூலம் பாதுகாக்கப்பட்ட, போதுமான குடிநீர் வழங்குவது தான் இலட்சியம் என்று வழக்கம் போல் முழங்கினார் பிரதமர் மோடி.
அதில் என்ன தவறு, நியாயம் தானே இது என மேம்போக்காக பார்க்கும் போது தோன்றும். ஆனால் அந்தப் பேச்சின் உண்மை அர்த்தம், ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் நடவடிக்கை மூலம் கிராமங்களில் வெளிப்படுகிறது .\
இப்போது. கடந்த மாதம் கிராம ஊராட்சிகளில் தீவிரமான ஒரு பணி நடைபெற்றது. ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க கணக்கெடுப்பு நடத்தப்பட்டது..
அடுத்து ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதிதாக இணைப்பு வழங்கவும், ஏற்கனவே குடிநீர் இணைப்பு உள்ளவர்கள் அல்லது வீட்டின் அருகில் குடிநீர் இணைப்பு உள்ளவர்களும் வைப்பு தொகையாக ரூ 1,000 செலுத்த வேண்டும். அத்துடன் மாதம் ரூ 50 கட்டணமாக ஒரு வருடத்திற்கு ரூ 300 செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஷாம் கைது .. சிக்க வைத்த முன்னணி நடிகர்..!

<p>இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இவருக்கு சொந்தமாக உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சூதாட்டம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, நடிகர் ஷாம் வீட்டை சோதனை நடத்தியதில், அங்கிருந்து சூதாட்ட விடுதிகளில் பயன்படுத்தப்படும் டோக்கன், சீட்டுக்கட்டு, பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.</p>
asianetnews.com ; சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் பின்னணியில் பிரபல நடிகர் உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
<p>தமிழை தொடர்ந்து, தெலுங்கிலும் சில படங்களில் செகண்ட் ஹீரோவாக தலை காட்டி வருகிறார். மேலும் தமிழில் ஹீரோவாக நடிப்பது மட்டும் இன்றி, செகண்ட் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.</p>
;தமிழ் சினிமாவில், முன்னணி இடத்தை பிடிக்க போராடி கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவரான ஷாம், நேற்று முன் தினம் இரவு, நுங்கம்பாக்கம் போலீசாரால், சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் பின்னணியில் பிரபல நடிகர் உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில், முன்னணி இடத்தை பிடிக்க போராடி கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவரான ஷாம், நேற்று முன் தினம் இரவு, நுங்கம்பாக்கம் போலீசாரால், சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் பின்னணியில் பிரபல நடிகர் உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் நடித்த குஷி படத்தில் சிறு வேடத்தில் நடித்த ஷாம், தன்னுடைய முதல் படத்திலேயே... குஷி படத்தில் தளபதிக்கு ஹீரோயினாக நடித்த ஜோதிகாவுக்கு ஹீரோவாக மாறியவர். 12 பி திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்டதால், முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் பதித்தார்.

ஜெயலலிதா வீட்டின் அசையும் சொத்துக்களின் விபரங்கள் வெளியீடு

tamil.news18.com:   4.372 கிலோ தங்கம், 38 ஏ.சி, 1712 பர்னிச்சர்கள் - ஜெயலலிதா வீட்டில் உள்ள அசையும் சொத்துக்களின் விபரங்கள் வெளியீடு
ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீடு அரசுடைமை ஆக்கப்பட்ட நிலையில், வீட்டில் உள்ள அசையும் சொத்துக்களின் விபரங்களை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீடு அரசுடைமை ஆக்கப்பட்ட நிலையில், வீட்டில் உள்ள அசையும்
சொத்துக்களின் விபரங்களை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தில் அவர் பயன்படுத்திய அசையும் சொத்துக்களின் விவரங்களை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

தமிழர்களின் கோவில்களை எப்படி ஆரியம் விழுங்கியது...

Anthony Fernando: கள்ளர், மறவர், அகமுடையார், முதலியார் படையாச்சிகள் போன்ற சாதிகளின் கோவில் பூசாரிகளாக இருந்தவர்கள் பாராயணம் செய்தவர்கள் வள்ளுவப் பறையர்கள் என்கிறது வரலாறு...
பார்ப்பானுங்க பாராயணம் என்ற சொல்லை பறையன் என்று இழிவாக்கியதற்கான காரணமும் அதில் தான் ஒழிந்து கிடக்கிறது..
சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் ஒரு துளுவ வெள்ளாள முதலியார் சமூகத்தைச் சேர்ந்த மூதாட்டி பேசிய போது " மழை பொய்த்தாலும் வள்ளுவன் வாக்கு பொய்க்காது" என்று கூறினார்.
வள்ளுவன் என்று திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரையா சொல்லுறீங்க என்று கேட்டதற்கு , "கிட்டத்தட்ட அதே தான் ... நான் சொல்வது எங்க தாத்தா பாட்டு காலத்தில் எங்க வீட்டு நல்லது கெட்டதுகளுக்கு நாள் குறித்து குடுக்கிற வள்ளுவர்கள் என்றார்.
அவர்கள் குறித்து கொடுத்தால் அந்தக் காரியம் தப்பாது" என்றார் .
.அப்படி மறவர்களின் குலக் கோவிலில் கோவில் குருக்களாக பணியாற்றிய வள்ளுவ சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைத் தான் பார்ப்பனிய அடிமையான ஓப்பீசின் தம்பி கோவிலுக்குள் நுழைய விடாமல் அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டினான்..
தமிழர்களின் கோவில்களை எப்படி ஆரியம் விழுங்கியது என்பதற்கு அந்தத் தேனி படுகொலை மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
அந்த தமிழின படுகொலைக்கு கண்டித்து எத்தனை தமிழ்ச் சாதி தூம்பிகள் களம் கண்டார்கள்

நீங்கள் ( வடக்கு) மட்டக்களப்பு அம்பாரை மக்களுக்கு செய்த துரோகத்தை விடவா? பட்டியல் போடும் கிழக்கு போராளிகள்

Reginold Rgi : மட்டு/அம்பாரை போராளிகள் இலங்கை அரசுடன் கைகோர்க்க காரணம் புலிகள்தான் வன்னியில் இருந்து எதற்காக படை எடுத்து வந்து எங்கள் போராளிகளை கொலை செய்ய வேண்டும் ?கிழக்கு பிளவின் போது புலிகளால் கொல்லபட்ட போராளிகளின் விபரங்களை தருகிறேன் இவர்களுக்கான நதியை யாரிடம் கேட்பது ?
2004 ஆண்டு பிரிவு ஏற்பட்ட உடன் கருணா அம்மான் தனது குடும்பத்தை அழைத்து கொண்டு இங்கிலாந்து நாட்டுக்கு சென்றார் அவரை நிம்மதியாக வாழ விட்டிர்களா ? >எத்தனை முறை அவரை கொலை செய்ய முயற்சி செய்திர்கள்?
இறுதியாக இங்கிலாந்து அரசிடம் காட்டிக் கொடுத்திர்கள்?
செய்யிற நாசகார வேலை செய்து விட்டு கருணா அம்மான் துரோகியாம். அம்மான் துரோகி அல்ல நாம் அனைவரும் ஒரு விதத்தில் துரோகிதான்.. வெருகல் ஆற்றங்கரைல் வைத்து ஒரே நாளில் 210 போராளிகள் கொலை செய்யபட்டார்கள் .
இவர்களின் கொலை உங்கள் கண்களுக்கு அநீதியாக தெரியவில்லையா ? வெளிநாடு செல்வதற்காக கொழும்பு கொட்டவா பகுதியில் தங்கி இருந்த குகணேசன் உற்பட 9 போராளிகளுக்கு உணவில் சயனைட் கலந்து கொடுத்து சொந்த போராளிகளை கொலை செய்தது துரோகம் இல்லையா ?
கருணாவின் சகோதரன் றெஜி துமிலன் உற்பட 3 பேரை நித்திரையில் வைத்து சுட்டு கொலை செய்திர்கள் இது துரோகம் இல்லையா ?
முக்கிய கிழக்கு தளபதிகள் பொறுப்பாளர்கள் 63 பேரை குறிப்பாக ராபேட் ,தாத்தா ,விசு , துரை , வரிசையாக நிற்க வைத்து சுட்டு கொன்றிர்களே இது துரோகம் இல்லையா ?

தென்னிந்திய கல்வி கொள்கையை டெல்லிதான் முடிவு செய்யும் என்றால் .. பச்சை காலனி ஆதிக்கம்!

Don Ashok -Ashok.R இலங்கையில் இரண்டு மொழிகள்தான் அதிகம் பேசப்படுபவை. ஆனால் உள்நாட்டுப் போர், பிரிவினை என நாடும் மக்களும் நிம்மதியிழந்து நாசமாய்ப் போனார்கள்.
ஆனால் தமிழ், வங்கம், தெலுகு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 20க்கும் மேலான மொழிகள் இருந்தும், ஆயிரம் வேறுபாடுகள் இருந்தும் இந்தியா உள்நாட்டுப்போரை சந்திக்காமல், உடையாமல் இருக்கக் காரணம் நேரு போன்ற சோஷியலிஸ்ட்டுகளிடம் வெள்ளைக்காரன் இந்தியாவைக் கொடுத்துவிட்டுப் போனதுதான். 1947ல் மோடி போல ஒரு பிரதமர் இருந்திருந்தால் இந்தியா இன்னொரு சோமாலியா+இ லங்கை ஆகியிருக்கும். இந்தியா என்பது ஒரு மண்பானை. அதை ஓரளவுக்கு டெல்லி ஓங்கித் தட்டலாம், அதுவும் தாங்கும். மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு வந்தால் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள்.
வாஜ்பாய் காலத்தில் கூட அப்படித்தான். ஆனால் மோடி அரசு முழு வலதுசாரி சாடிச அரசு. மிருக பலத்துடன் இருக்கிறோம் என்கிற திமிரில் மிருகத்தனமாக அந்த மண்பானையை தட்டிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்ப்பெல்லாம் அவர்கள் காதில் விழுவதாகவே இல்லை. வலதுசாரிகளால் எதையுமே பத்திரமாக வைத்துக்கொள்ள முடியாது. ஜனநாயகத்தன்மை இல்லாமல் இந்தியா போன்ற ஒரு நாட்டை ஆள்வது தற்கொலைக்குச் சமம். அதைத்தான் GST, நீட், CAA, 370 நீக்கம், புதிய கல்விக்கொள்கை என அடுத்தடுத்து செய்துகொண்டிருக்கிறது பாஜக அரசு..
வரலாற்று ரீதியாக, இன ரீதியாக தென்னிந்தியாவிற்குச் சம்பந்தமே இல்லாத டெல்லி, தென் மாநிலங்களின் கல்விக் கொள்கையை முடிவு செய்யும் என்றால் இது பச்சையான காலனி ஆதிக்கமில்லையா?

புதன், 29 ஜூலை, 2020

அம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கின ரபேல் போர் விமானங்கள்

 மாலைமலர் :  பிரான்சிடம் இருந்து
வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்களில் முதல்கட்டமாக 5 போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன.
சண்டிகர்:பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும். முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன 5 ரபேல் போர் விமானங்கள், நேற்றுமுன்தினம் இந்தியாவுக்கு புறப்பட்டன..
பயணத்தில் நேற்றுமுன்தினம் இரவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இதையடுத்து தனது பயணத்தை மீண்டும் தொடங்கிய ரபேல் விமானங்கள் தொடர்ந்து இந்தியா நோக்கி புறப்பட்டன. ரபேல் போர் விமானங்களின் பயணத்தின்போது உரிய உதவிகளை வழங்குவதற்காக பிரான்ஸ் நாட்டின் விமானப்படை விமானங்களும் இந்த பயணத்தில் உடன் வந்தன.
பயண தூரம் அதிகம் என்பதால் ரபேல் போர் விமானங்களுக்கு நடு வானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டது. 30 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை இந்திய விமானப்படை தனது டுவிட்டரில் பகிர்ந்தது. ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்திற்குப் பிறகு இன்று மதியம் 1.30 மணி அளவில் இந்திய எல்லைக்குள் ரபேல் போர் விமானங்கள் நுழைந்தன. அப்போது மேற்கு அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பலுடன் ரபேல் போர் விமானத்தை இயக்கிவரும் குழு தொடர்பு கொண்டது.

வனிதா விஜயகுமாரும் அண்ணாமலை ஐ பி எஸும் ! சுயமரியாதை பெண்ணும் ஆரிய அடிமைத்தன ஆணும் !

Devi Somasundaram   :  அண்ணாமலை ஐ பி எஸும் வனிதா விஜயகுமாரும்.
ஏன் இந்த இரண்டு பேரையும் ஒப்பீடுன்னு கேட்கிறீர்களா ? .பெரிசா ரீஸன் எதும் இல்லை .கடந்த பத்து நாட்களா இவர்கள் இருவரின் வீடியோ தான் மாறி மாறி கண்ல பட்டது .
இருவரும் ஓ பி சி , well brought up( வசதியான எஜுகேஷன் , கவனிப்பு ) பின் புலத்தில் இருந்து வந்தவர்கள் . ஒருவர் பெண் ,சினிமா நடிகை என்ற அடையாளம் கொண்டவர். இன்னொருவர் இந்திய அரசின் தகுதித் தேர்வில் பாஸ் செய்து அதிகாரத்தில் இருந்தவர்.
இருவர் வீடியோவும் மாறி மாறி பார்த்தப் போது என் கண்ல பட்ட விஷயங்களை வைத்து சகோதரர் அண்ணாமலை நிறைய இன்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ளவரோ என்று தோன்றியது .
சரி அவர் அரசியல பார்த்து பய்ந்து இந்த கம்பேரிசனானு கேள்வி வரும் ..வரலாறு அறியாதவர்களுக்கு வேணா அவர் அரசியல் செய்வார்ன்னு தோணலாம் ..தமிழ் நாட்ல அரசியல் செய்ய அவர் தினம் மக்களோடு பழகுகிறவரா இருக்கனும்..மக்கள் பிரச்சனை பேசனும்...வலுவான அமைப்பும், கொள்கையும் இருக்கனும் . ஓரளவு இதுல எல்லாம் ஒத்து வர சீமானே 1% ஓட்டு தான் வாங்குறார் . இன்னும் வலுவான சித்தாந்தம் கொண்ட இயக்கம்லாம் தனித்து ஜெயிக்க முடியல ...

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்து ஆகஸ்ட் 1 முதல் மீண்டும்..?

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்து ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்க வாய்ப்பு? மாலைமலர் :  தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: மார்ச் 25-ந்தேதிக்குப்பின் ஜூன் மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்ததால் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை 31-ந்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. அதன்பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்திற்கு தளர்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. ஜூன் மாதத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது போல் பிரித்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஜூன்மாதம் பிரிக்கபட்ட மண்டலங்கள் விவரம் வருமாறு

மண்டலம் 1  : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்

EIA 2020. பெரிய தொழில், சுரங்கத் திட்டங்களைத் தொடங்குவதற்கு அப்பகுதி மக்களின் கருத்துக்கள் தேவை இல்லை

கவுத்தி மலை Kavuthi Hill Vediyappan Hill EIA 2020 Tamilஅ.தா.பாலசுப்ரமணியன் - பிபிசி தமிழ்::
  EIA 2020 தமிழ் நாட்டில் மக்கள் சக்தி காப்பாற்றிய இரு மலைகள்: சுற்றுச்சூழல் கருத்து கேட்பின் தாக்கம்  பெரிய தொழில், சுரங்கத் திட்டங்களைத் தொடங்குவதற்கு அப்பகுதி மக்களிடையே கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவது கட்டாயம் என்று தற்போது இருக்கும் விதியை திருத்தி கருத்துக் கேட்புக் கூட்டம் கட்டாயமில்லை என்று ஆக்கும் வகையில் வரைவு அறிவிக்கை வெளியிட்டுள்ளது இந்திய அரசு. வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை - 2020 (Draft EIA 2020) என்ற அந்த ஆவணம் தொடர்பான தங்கள் கருத்துகளை மக்கள் ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வரைவு அறிவிக்கையின் 19-ம் பக்கத்தில் சுதந்திரமான முறையில் மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க முடியாத நிலை இருந்தால் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ரத்து செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பிஃல் படிப்புகள் நிறுத்தம்: புதிய கல்விக் கொள்கை.. மும்மொழி திட்டம் (இந்தி திணிப்பு மீண்டும்)

மின்னம்பலம் : "எம்.பிஃல் படிப்புகள் நிறுத்தம்: புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல்!" யிலான மத்திய அமைச்சரவை 21 ஆம் நூற்றாண்டிற்கான புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இது முழு சமூகம் மற்றும் உலக கல்வியாளர்களால் வரவேற்கப்படும் என்று நான் நம்புகிறேன். புதிய கல்விக் கொள்கையில் இருக்கக் கூடிய முழுமையான அம்சங்கள் விரைவில் வெளியிடப்படும் அதன்பிறகு பத்திரிக்கையாளர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்கிறோம்” என்று கூறினார்.
மத்திய உயர் கல்வித் துறைச் செயலாளர் அமித் கரே, “2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்துவதே புதிய கல்வி கொள்கையின் நோக்கம். அதன்படி, நாட்டில் எம்.ஃபில் (M.Phil) படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி முறை நிறுத்தப்படும். இளங்கலை - முதுகலை சேர்ந்து ஒருங்கிணைந்த படிப்பாக 5 ஆண்டுகளுக்கு படிக்கலாம்.

உதயநிதி ஸ்டாலின் : தி.மு.க பற்றி அவதூறான தகவல்களைப் பரப்பும் மதன் ரவிச்சந்திரன் மீது வழக்கு -

கலைஞர் செய்திகள .காம் :சேனல் விஷன் யூடியூப் சேனலில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட மதன் ரவிச்சந்திரனுக்கு எதிராக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் காலுன்றுவதற்காக பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் பல குறுக்கு வழியை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்களை வெளியிடுவதிலும், பார்வையாளர்களை தவறான பாதை நோக்கி வழி நடத்துவதிலும் சில மோசடியாளர்களை களம் இறக்கியுள்ளது. அப்படி இறக்கப்பட்ட மாரிதாஸ் வரிசையில் மதன் ரவிச்சந்திரனும் ஒருவர்.
பல சேனலில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி துரத்தியடிக்கப்பட்ட மதன் ரவிச்சந்திரன் சேனல் விஷன் என்ற யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளார். அந்த சேனலின் நோக்கமே தமிழகத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைப் பற்றி பொய் தகவலை தருவதுதான்.

தங்கம் தென்னரசு : ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மனிதாபிமானமற்ற செயல்


 தினகரன் : சென்னை: கல்வித்துறை ஒருபோதும் கருணையற்ற துறையாக மாறிவிடக்கூடாது என்று Cதெரிவித்துள்ளார். இது குறித்து விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை: முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்துவிட்டதாகக் கூறி, ஏறத்தாழ 5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.

தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக சுதா நியமனம்:

தினகரன் :  சென்னை: தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக வக்கீல் சுதாவை நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக ஜான்சி ராணி நியமிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அந்த இடத்திற்கு புதிய நபர் ஒருவரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டது. அதற்கான நடைமுறைகளை தொடங்கியதால் மகிளா காங்கிரசில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடையே தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி எழுந்தது.
இந்த போட்டியில் ஜான்சி ராணி மீண்டும் வாய்ப்பு கேட்டு மேலிடத்தை அணுகினார். அதேபோன்று வக்கீல் சுதா, ஹசீனா சையத், சுமதி அன்பரசு, மானசா, கோவை கவிதா, மைதிலி தேவி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

பள்ளி மாணவி பாலியல் புகார்- முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தலைமறைவு

பள்ளி மாணவி பாலியல் புகார்- முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தலைமறைவு  வெப்துனியா :  பள்ளி மாணவி கொடுத்த பாலியல் புகாரை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி  வருகின்றனர். 
முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்நாகர்கோவில்: நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க 10-ம் வகுப்பு மாணவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் சென்று விட்டார். இதுகுறித்து மாணவியின் தாயார் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவி மற்றும் அவரை அழைத்துச் சென்ற வாலிபர் ஆகிய இருவரையும் போலீசார் மீட்டனர். அதன் பிறகு மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு பலர் தனக்கு பாலியல் தொல்லை செய்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். எனவே இது குறித்து குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்


புதுவை என் ஆர் காங்கிரஸ் பொதுசெயலாளர் வி பாலன் காலமானார்

தூண் சரிந்தது: கண்கலங்கிய ரங்கசாமி மின்னம்பலம் : கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் வி பாலன், இன்று (ஜூலை 28) மரணம் அடைந்தார். இதனால் கட்சியின் நிறுவனர் ரங்கசாமி கலங்கிப் போயிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் துவக்க முக்கிய காரணமாகவிருந்தவர், கட்சியை வழி நடத்தியவர், கூட்டணி விஷயமாக மாற்றுக்கட்சியின் தலைவர்களைச் சந்திப்பவர் என ஒட்டு மொத்த வேலைகளையும் கவனித்து வந்தவர் வி.பாலன்தான். அதேநேரம், ரங்கசாமியை தொண்டர்கள், நிர்வாகிகள் என யாரும் நெருங்காத அளவுக்கு வளையமாக இருந்தவரும் பாலன்தான் என்றும் பரவலாகப் பேசப்பட்டுவந்தது. இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியுடன் அறிமுகம் மிக்க பாலன் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட சிறை தண்டனை

சதீஷ் பார்த்திபன் - பிபிசி தமிழுக்காக, மலேசியாவிலிருந்து : மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட சிறைதண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.முன்னதாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீதான பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருந்தது.
நஜிப் மீது அரசுத்தரப்பு நம்பிக்கை மோசடி, பணமோசடி, அதிகார அத்துமீறல் உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
எம்டிபி (1MDB) எனப்படும் மலேசிய மேம்பாட்டு நிதியத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றாக இருந்த எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் நிதியில் இருந்து சுமார் 42 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான தொகையை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்பதே நஜிப் துன் ரசாக் மீதான அடிப்படைக் குற்றச்சாட்டு ஆகும்.
நஜிப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இத்தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.இந்த தீர்ப்பின் காரணமாக மலேசிய அரசியல் களத்தில் அதிரடித் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

பிரகாஷ் போர்செழியன் காலமானார் .. திமுக களப்பணியாளர் ... கொரோனாவால் தொடரும் இழப்புக்கள்

Suriya Krishnamoorthy : நேற்று இரவு மூன்று முறை அழைத்திருந்தார், கவனிக்கவில்லை. நேரமாகிவிட்டது காலையில் திரும்ப அழைக்கலாம் என்று நினைத்தேன்.
ஏதோ நினைப்பில் இரவே அழைத்தேன். ஓபிசி இடஒதுக்கீடு குறித்து சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
பேசிவிட்டேன் என்று மகிழ்வதா, கடைசியாக பேசியிருக்கிறேனே என்று அழுவதா என்று தெரியவில்லை.
இன்றைக்கு காலையில் அண்ணன் பிரகாஷ் இல்லை என்று செய்தி வந்ததிலிருந்து, எதுவுமே ஒடவில்லை.
தென் தமிழகத்தின் கீழ்மத்திய தர வர்க்கத்திலிருந்து புறப்பட்டு, படிப்பின் துணை கொண்டு மட்டுமே சொந்த வாழ்வில் உயரங்களை தொட்டவர். 80களின் இலட்சியவாத தலைமுறை, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி எப்படி மேலெழுந்தது வந்தது என்பதை அவர் வாழ்வின் கதைகளை கொண்டே அனுமானித்து வைத்திருந்தேன்.
அரசு வேலைகளில் நம்மவர்கள் அமர வேண்டிய அவசியத்தை அவர் பேசாத நாளில்லை.

விஜயலட்சுமியை மறந்த ME TOO பெண்கள் ..

 A Sivakumar : Metoo என்பது. . - ஆண்களால் பாதிக்கப்பட்ட   பெண்கள் குரல் எழுப்புவதற்கும், தவறு செய்த ஆண்களை பொதுவில் குற்றம் சொல்லி அப்படியான ஆண்களின் உண்மை முகத்தை உலகிற்கு உணர்த்துவதற்கும், - பாதிக்கப்பட்டு உள்ளுக்குளேயே குமுறிக்கொண்டிருக்கும் பெண்கள் தைரியமாக வெளியே வந்து சொல்வதற்கும், அது ஒரு ஆரம்ப முயற்சி என்று தான் சொல்லப்பட்டது
கடைசியில் அது சாட்டையடி பதிவு தோழி கூட்டத்திற்கு பயன்பட்ட அளவுக்கு கூட பெண்களுக்கு பயன்படவில்லை என்பது தான் சோகம். பாருங்களேன்...
அந்த நேரத்தில் யார் யார் மீதோ யார் யாரோ குற்றம் சொன்னாலும், சுமார் ஒரு வருடம் கழிந்த நிலையில் அதில் சிக்கிய வைரமுத்துவை அடிப்பதற்கு இன்றும் தயாராக இருப்பவர்கள் எவருமே நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் இருக்கும் நடிகை விஜயலட்சுமி குறித்து மறந்தும் வாயை திறக்க மறுக்கிறார்கள்.
வைரமுத்து - சின்மயி - சீமான் - விஜயலட்சுமி நால்வரில் யார் பக்கம் உண்மை இருக்கிறது என்று நமக்கு தெரியாது.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண வரை படங்களை ராஜீவ் காந்திக்கு கொடுத்தோம் ... இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு 12

  திரு. அ . அமிர்தலிங்கம் : இலங்கை அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை !



திம்பு பேச்சு வார்த்தையில்போராளி இயக்கங்கள் எல்லாம் கலந்துகொண்டன. ஆனால் 1986 ஜூலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள அவை மறுத்துவிட்டன. ஆனாலும் தமிழர் விடுதலை கூட்டணி கலந்து கொள்வதை அவை எதிர்க்கவில்லை என கூறினர்
சிதம்பரம் திட்டத்தில் பல குறைபாடுகள் இருப்பினும் அதை ஒரு ஆரம்ப பத்திரமாகவே அதை கைக்கொண்டோம். அதே நேரத்தில் நாம் 1985 . முன் வைத்த திட்டத்தையும் எடுத்து கொண்டு  அத்திட்டத்தை அடையும் நோக்கத்தோடு நாம் முயற்சி செய்தோம். இந்தியாவில் ஒரு மாநிலத்துக்கு உரிய அதிகாரத்தை பூரணமாக பெறுவதற்கான அரசியல் அமைப்பு திருத்த சட்ட மூலம்   மாகாண சபை  சட்ட மூலம்  ஆகிய இரண்டையும் பரிசோதனை செய்தோம் .
விரிவான விவாதத்தின் பலனாக ஒன்றை திருத்தி ஒன்றாக  ஏழு சட்ட வரைவுகள் தயாரிக்க பட்டன.  ஜூலை ஆகஸ்டு இரண்டு மாதங்களிலும் இருபது நாட்களுக்கு மேலாக பேசினோம்.
முதல் சுற்று பேச்சு முடிந்தவுடன் விடுதலை புலிகள் உட்பட தமிழகத்தில் பலருடனும் டெல்லையில் அமைச்சர்கள்  சிவசங்கர் , சிதம்பரம்  ஆகியோர் மற்றும் திரு. ஜி பார்த்தசாரதி  திரு வெங்கடேஸ்வரன் சட்ட நிபுணர் பாலகிருஷ்ணன்  ஆகியோரிடம் கலந்து ஆலோசித்தோம்.
இரண்டாவது சுற்று பேச்சு  ஆகஸ்ட் 29 ஆம் திகதி முடிவடைந்தது..
அன்று முக்கியமாக  வடக்கு கிழக்கு இணைப்பு பற்றியே விவாதித்தோம் .
இணைப்பு உட்பட சில முக்கிய விடயங்களில் உடன்பாடு எதுவும்  ஏற்படாத  நிலையில் பேச்சு வார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.
மூன்றாவது சுற்று பேச்சு வார்த்தைக்கு போராளிகளும் கலந்து கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினோம்.

தியேட்டர்கள் திறப்பு: பாமரர்கள் முதல் பங்குச் சந்தை வரை!

 மின்னம்பலம் :  கொரோனா ஊரடங்கு உத்தரவால் சினிமா தியேட்டர்கள் மார்ச் 22 ஆம் தேதி முதல் மூடப்பட்டிருக்கின்றன. முழுதாக நான்கு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்டு 1 முதலான அடுத்த ஊரடங்குத் தளர்விலாவது தியேட்டர்கள் திறக்கப்படுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
என்னதான் அமேசான், ஓடிடி என்று செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் சினிமா பார்த்தாலும் குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று பார்த்து வரும் அனுபவத்தை இந்தத் தொழில் நுட்பங்கள் ஈடுகட்டப் போவதில்லை.இந்த நிலையில் மக்கள் மத்தியில் பொழுதுபோக்கு என்றால் சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்களுக்கு தியேட்டர்கள் திறப்பு என்பது முக்கியமான வர்த்தகப் பிரச்சினையாகிவிட்டது. நான்கு மாதங்களாக தியேட்டர் ஊழியர்களுக்கு சம்பளம், பராமரிப்பு செலவுகளை செய்ய வேண்டும். ஆனால் தியேட்டரை திறக்க இயலாத நிலையில் பற்பல தியேட்டர்களை வைத்திருக்கும் பெரு நிறுவனங்களே திணறி வருகின்றனர். பங்குச் சந்தை வரைக்கும் இவர்களது சரிவு எதிரொலிக்கிறது.

செவ்வாய், 28 ஜூலை, 2020

அப்துல் கலாம் ... ஒரு போலி புனித பிம்பம்

Fazil Freeman Ali
: இந்தியாவில் ஒரு முஸ்லீம் எப்படி இருக்கவேண்டும் என இந்திய இறையாண்மை வகுத்த வரையறைக்கு சரியான உதாரணம் அப்துல் கலாம்..
ஒரு அரசாங்க அலுவலகத்தில் ஒரு சராசரியான மத்தியவர்க்க குமாஸ்தா வின் மனநிலைதான் கலாமுடையதும். இந்திய இறையாண்மை கோடிட்ட இடத்தில் மறு பேச்சில்லாமல் கையெழுத்திட்டு ஊதியம் வாங்கியவர்.
கிண்டி குதிரை ரேஸ் கிளப் காலரியில் உட்கார்ந்துகொண்டு 'கமான், கமான்' என கத்துவார்கள். இதைத்தான் மாணவர்களிடம் இறுதிவரையில் சொல்லிக்கொண்டு சுயமுன்னேற்ற அறிவுரைகளை அள்ளி வீசினார்.வாழ்நாள் முழுவதும் மானுட குலத்திற்கு எதிரான தொழிற்நுட்பங்களை கண் மூடித்தனமாக ஆதரித்தவர். ஏவுகணை கள், அணு உலை போன்ற ஆபத்தான தொழிற்நுட்பங்களை உச்சி முகர்ந்து கொண்டாடி இந்தியாவை ''ஆயுத‌ வல்லரசு'' பாதையில் செலுத்தியவர்.ஆக அவர் வாழ்நாள் முழுவதும் செய்தது ஆயுத பூஜை. இந்த அசட்டு ஆயுத பூசைக்கு விசுவாசமாக இருந்தார். இந்த விசுவாசத்திற்கு சன்மானமாக அதிபர் பதவியும் வந்தது. இன்னும் இறையாண் மைக்கு நெருக்கமாகவும், பல நேரங்க ளில் பூசையோடு, மவுன விரதத்தை கடைபிடித்தார்.  ..இந்தியாவின் ஜனாதிபதியாக 2002 முதல் 2007 வரை பதவி வகித்தார். கொந்தளிப்பான காலக்கட்டம். இந்துத்துவா எழுச்சிப்பெற்ற நேரம்...

விஜயலட்சுமி : ஏன் எல்லோரும் சீமானை காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை .. வீடியோ

Actress Vijayaludchumi : I want to know . Whe they are saving Seemaan?

நடிகை வனிதா மீது 3 பிரிவுகளில் ( பழிவாங்கும் வழக்குகள்) வழக்குப் பதிவு!

வெப்துனியா : நடிகை வனிதா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரோனா காலத்தில் தடையை மீறி நிகழ்ச்சி நடத்திய புகாரில் நடிகை வனிதா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பன்தாங்கல் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை வனிதா அனுமதியின்றி நிகழ்ச்சி நடந்தியாக அந்தக் குடியிருப்பின் பொதுச் செயலாளர் நிஷா கோட்டா என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் 3 பிரிவுகளில் நடிகை வனிதா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முத்தையா முரளிதரன் மகிந்தா கட்சியில் தேர்தல் பிரசாரம் வீடியோ


இலங்கைநெட் : முரளீதரனுக்கு எதிராகக் குற்றஞ்சுமத்துகிறார் சம்பிக்க ரணவக்க!
முத்தையா முரளீதரன் பொதுஜன பெரமுனவின் அரசியல் மேடையில் ஏறியிருப்பது தனது சுயலாபத்திற்காகவே அதாவது கிரிக்கட்டுக்காக அல்ல வியாபார நோக்கத்திற்காவே என குற்றஞ்சாட்டுகிறார் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க. டோல் நிறுவனத்தின் இந்நாட்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வது முத்தையா முரளீதரனும் அவரது சகோதரனுமே.
இலங்கை மக்களின் காணிகள் சிலவற்றையும் வௌிநாட்டுக் கம்பனிகளுக்கு வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தற்போது கண்ணுங்கருத்துமாக இருந்துவருகின்றது எனவும் அவர் மக்கள் கூட்டமொன்றின்போது தெரிவித்தார். By Kalaimahan

அமெரிக்கா தடுப்பூசி பரிசோதனை - 30 ஆயிரம் தன்னார்வலர்கள்.. வீடியோ


மாலைமலர் : கொரோனாவுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கிய தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. நேற்று தொடங்கிய இந்த பரிசோதனையில் 30 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
அமெரிக்கா உருவாக்கிய தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனை - 30 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்பு கொரோனா வைரஸ் பரிசோதனை வாஷிங்டன்: சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 8 மாதங்களாகியும் எந்தவித மந்தமும் இல்லாமல் வேகமாக உலக நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது.
இதில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியும், ஆயிரக்கணக்கானோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியும் வருகின்றனர். எனவே இந்த ஆட்கொல்லி வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கும் பணிகளில் அனைத்து நாடுகளும் இறங்கி உள்ளன. இதில் பல நாடுகள் தொடக்ககட்ட வெற்றியை ஈட்டியுள்ளன. இதனால் இந்த தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளன.

நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்.. கோடிக்கணக்கில் நிலம் வாங்கி ஏமாந்துள்ளனர் ...


கோடிக்கணக்கில் நிலம் வாங்கி ஏமாந்த நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்? மாலைமலர் : நடிகைகள் நயன்தாராவும், ரம்யா கிருஷ்ணனும், கோடிக்கணக்கில் நிலம் வாங்கி ஏமாந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னணி நில வணிக நிறுவனம் ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான ஏரி நீர் ஆதாரம் கொண்ட புறம்போக்கு நிலத்தை நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது. விவசாயிகளிடமிருந்த புறம்போக்கு நிலங்களை ஏக்கர் ஒன்றுக்கு 5 லட்ச ரூபாய்க்கு மட்டுமே வாங்கி, அதனை ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு பிரபலங்களிடம் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிகை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்டோர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏக்கர் கணக்கில் இந்த நிலத்தை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திரா ரம்யா 4 பேரை திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணம் மோசடி


மாலைமலர் : வெவ்வேறு பெயர்களில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருப்பதி: ஆந்திரப் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவர் டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் என்ஜினீயராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், திருமண தகவல் மேட்ரிமோனி இணைய
தளத்தின் வாயிலாகத் திருப்பதியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சொப்னா எனும் பெண்ணைச் சந்தித்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துகொண்டார்திருமணத்துக்குப் பிறகு ஆஞ்சநேயலுவும் சொப்னாவும் ஐதராபாத்தில் மூன்று மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். விடுமுறை முடிந்ததும், சொப்னாவை, ஆஞ்சநேயலு டென்மார்க்கிற்கு அழைத்துள்ளார். ஆனால் சொப்னாவோ, எனக்கு வேலை தான் முக்கியம் என்று கூறி, டென்மார்க் செல்ல மறுத்து, ஹைதராபாத்திலே தங்கியுள்ளார்.

ஓபிசி இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல் !

மின்னம்பலம் :ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஓபிசி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது எனவும், இதுதொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும் தீர்ப்பளித்தது.இதுதொடர்பாக குழு அமைத்து 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு வரவேற்பு தெரிவித்த தமிழக அரசியல் கட்சிகள், தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செல்லக்கூடாது என வலியுறுத்தினர். இந்த நிலையில் ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் இன்று (ஜூலை 28) கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகை விஜயலட்சுமி மருத்துவ மனையில் இருந்து வெளியேற்ற பட்டார் .. பின்னணியில் சீமான்?

  மின்னம்பலம் : சிகிச்சை கூட முடியாமல் தன்னை மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டதாக நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றம்சாட்டி, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் ஜூலை 26 ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்தில் உயர் ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். முன்னதாக தனது முகநூலில் வீடியோ வெளியிட்ட அவர், சீமானும் அவரது கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக நான் இந்த முடிவை எடுக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல் துறையினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எழும்பூர் நீதிமன்ற குற்றவியல் நடுவர் வெங்கடேசன், விஜயலட்சுமியிடம் நேரில் சென்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார்.