புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்ட வான்படை வீரர் ஒருவரை, கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் சீதுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். வான்படையிலிருந்து விலகி புலிகளுக்கு குறித்த உத்தியோகத்தர் உதவிகளை வழங்கியுள்ளார்.
;புலிகளின் சார்பில் கடமையாற்றியமைக்காக இவருக்கு மாதாந்தம் தலா 50,000 பணம் வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யபபட்ட குறித்த வான்படை வீரர் கடந்த காலங்களில் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பங்களுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து வெடிபொருட்களையும் விடுதலைப் புலி உறுப்பினர்களையும் தெற்கிற்கு கொண்டு வர குறித்த வான்படை வீரர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.
கிழக்கு வான்படை முகாம் ஒன்றில் குறித்த நபர் கடயைமாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏழு வருடங்களுக்கு முன்னர் வான் படையிலிருந்து விலகிய குறித்த உத்தியோகத்தர் கிளிநொச்சியில் பயிற்சிகளையும் நிறைவு செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக