சனி, 12 அக்டோபர், 2019

தாமிரபரணிக் கரையில் பழைமையான கட்டுமானம்! - இன்னொரு கீழடியா?

ஆற்றங்கரையிலிருக்கும் பழைமையான கட்டடம்ஆற்றங்கரையிலிருக்கும் பழைமையான கட்டடம்vikatan.com - மு.செல்வம் : தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கட்டடங்கள் சிதிலமடைந்த நிலையில், கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆற்றங்கரையிலிருக்கும் பழைமையான கட்டடம் . தாமிரபரணி ஆறுதான் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் நீராதாரம். ஆத்தூர் அருகே, தாமிரபரணி ஆற்றங்கரையில் பழங்கால கட்டட அமைப்பு ஒன்று சிதிலமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டட அமைப்பானது சதுர வடிவ சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. அதில் யாழி, அன்னப்பறவை, பெண் தெய்வங்கள் போன்ற சிற்பங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ளன. கல்லால் செய்யப்பட்ட நங்கூரம் ஒன்றும் அங்கு காணப்படுகிறது. இதை அறிந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் ஆற்றங்கரையில் கூடினர்.

நாட்டை ஏமாற்ற.... பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜாஜா திட்டத்தின் பித்தலாட்டங்கள்


Muralidharan Pb : கீழ்க்கண்ட வகை மக்கள் இந்த காப்பீடு திட்டத்தை அனுபவிக்க இயலாது.
1. 2,3,4 சக்கர வாகனமோ, மீனவர்கள் மோட்டர் படகு வைத்திருப்போர்,
2. 3 அல்லது 4 சக்கர வேளாண் ஊர்தி வைத்திருப்போர்,
3. கிஸான் கடன் அட்டை 50000 ரூபாய்க்கு மேல் கடன் பெரும் தகுதி,
4.அரசு ஊழியர் எவரேனும் உள்ள வீடுகள்,
5. விவசாயம் சம்பந்தம் இல்லாத வருமானம் பெறும் வீடுகள்,
6. 10000 ரூபாய்க்கு மேல் வருமான ஈட்டும் குடும்பம்,
7.வருமான வரி செலுத்துபவர்கள்,
8. தொழில் வரி செலுத்துபவர்கள்,
9.3 அறைக்களுக்கு மேல் இருக்கும் நல்ல திடமான சுவர் உள்ள வீடுகள்,
10. ஃபிரிட்ஜ் வைத்திருப்பவர்கள்,
11. தொலைபேசி வைத்திருப்போர்,
12. 2.5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள்,
13. 5 ஏக்கருக்கு மேல் பாசனத்தோடு, பருவ காலங்களில் 2 அல்லது 3 பயிர் வைத்து இருப்பவர்கள்,
14. 7.5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் அல்லது ஒன்றுக்கு மேல் பாசனத்திற்கான கருவி வைத்து இருப்பவர்கள்

பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜாஜா திட்டத்தின் படி மேற் கூறப்பட்ட நபர்கள் இருந்தால் அவர்கள் காப்பீடு பெற முடியாது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன வணிகர்கள் தமிழகம் .. ஆதாரங்கள் உள்ளன!


Kathiravan Mayavan : யுவான்_சுவாங் ! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன வணிகர்கள் தமிழகம் வந்து சென்றதை தொல் பொருள் சான்றுகள் உறுதி
செய்கின்றன. யுவான்சுவாங் இங்கு வருகை தந்ததுதான் முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது.
சீனாவில் கிபி 602 இல் பிறந்த யுவான் சுவாங் இளம்வயதிலேயே புத்த துறவியானார். புத்தர் பிறந்த பூமியை தரிசிப்பதற்கும் புத்த மதம் தொடர்பான பல்வேறு தகவல்களை சேகரிப்பதற்கும் இந்தியா வந்தார்.
தன் 27 வயதில் அவர் பயணத்தை தொடங்கிய போதிலும் பல்வேறு மலைகளையும், அடர்ந்த காடுகளையும், கொதிக்கும் பாலைவனங்களையும் ஆழமான ஆறுகளையும் தாண்டி பல ஆயிரம் மைல் கடந்து இந்தியா வந்து இந்தியா வருவதற்கு நான்கு வருடங்கள் ஆனது.
சுமார் பதினைந்து வருடங்கள் இந்தியாவில் அவர் இருந்தபோது வட இந்தியாவில் பேரரசர் ஹர்சரும் தமிழகத்தில் மாமன்னன் முதலாம் நரசிம்மவர்மரும் ஆட்சிபுரிந்தனர். இருவருடைய அவையிலும் அவர் தங்கியிருந்துள்ளார்.காஞ்சிபுரம் பல்கலைக்கழகத்தில் அவர் இருந்தபோது ஏராளமான நூல்களைக் கற்றார். இளம் மாணவர்களுக்கு பயிற்றுவித்தார்.தான் கண்டதை தன்னுடைய 'சியூக்கி' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

9 வகுப்பு தலித் மாணவனை ஆதிக்க ஜாதி மாணவன் பிளேட்டால் கீறி... ... மதுரை .அலங்காநல்லூர்

ஏன்டா சக்கிலிய கூதி மகனே நீயெல்லாம் என்னை எதிர்த்து பேசுவியா ?"
இப்படி பேசியது ஏதோ 30, 60 வயது ஆள் இல்லை, வெறும் 14 வயதே நிரம்பிய 9ஆம் வகுப்பு மாணவன்!
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், பாலமேடு அருகே மறவப்பட்டி காலனி சேர்ந்த தலித் மாணவன் சரவணகுமார், பாலமேடு அரசு மேல் நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
11.10.2019 இன்று மாலை சரவணகுமார் உடன் படிக்கும் மாணவன் மோகன்ராஜ் பள்ளி பையை மகா ஈஸ்வரன் என்ற மாணவன் எடுத்து மறைத்து வைத்துக்கொண்டு தேட வைத்துள்ளான்.
இதை சரவணகுமார் மற்றும் மோகன்ராஜ் மேற்படி மகேஸ்வரனிடம் கேட்டுள்ளனர், இதனால் ஆத்திரமடைந்த மகா ஈஸ்வரன் சரவணகுமாரை பார்த்து
"ஏண்டா சக்கிலிய கூதி மகனே நீயெல்லாம் என்னை எதிர்த்து பேசுவியா ?" என்று கூறி டப்பாவில் வைத்திருந்தா பிளேடால் சரவணகுமாரின் முதுகில் கிழித்துள்ளான்.
தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் என்று பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் எழுதியிருந்தும் பள்ளிக்கூடத்தில் இது போன்ற சாதிய வன்முறைகள் நடந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

தமிழ் சினிமா ஐந்து விஷமிகளிடம் சிக்கித் தவிக்கிறது: சுரேஷ் காமாட்சி காட்டம்

suresh-kamatch-tweet-about-tamil-cinema-industry.hindutamil.in :தமிழ் சினிமா ஐந்து விஷமிகளிடம் சிக்கித் தவிக்கிறது என்று 'மிக மிக அவசரம்' படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
சுரேஷ் காமாட்சி இயக்கி, தயாரித்துள்ள படம் 'மிக மிக அவசரம்'. பிரதான கதாபாத்திரத்தில் ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 11-ம் தேதி வெளியீடு என விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், வெறும் 17 திரையரங்குகள் மட்டுமே கிடைத்ததால் படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளது படக்குழு.
இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள ரவீந்திரன் சந்திரசேகரன், 'மிக மிக அவசரம்' வெளியீடு தொடர்பான தன் வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.
படத்தின் இயக்குநர் சுரேஷ் காமாட்சி திரையரங்கு உரிமையாளர்களைக் கடுமையாகச் சாடிப் பேட்டியளித்தார்.

தமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்  மாலைமலர் :பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்
சென்னை:
கோவளத்தில் தாஜ் ஓட்டலில் நடந்த இந்தியா- சீனா அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபர் ஜின்பிங் பேசும் போது கூறியதாவது:-
மோடி பீச்சில் குப்பை பொறுக்கும் போட்டோ சூட்
இந்தியா வந்ததில் நான் மிகுந்த மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் எங்களுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு கொடுத்தீர்கள். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் உண்மையான அன்பை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
இந்தியா-சீனா இடையே நல்லுறவு மேம்பட்டு வருகிறது. இரு நாடுகளும் இதுபோன்று தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
மாமல்லபுரத்தை என் வாழ்க்கையில் இனி ஒரு நாளும் மறக்க முடியாது. பல இனிமையான நினைவுகளை மாமல்லபுரம் பயணம் எனக்கு தந்துள்ளது. என்னை போன்றே சீன அதிகாரிகளுக்கும் மாமல்லபுரம் மறக்க முடியாதபடி இருக்கும் என்று கருதுகிறேன்.

கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவின் உதவியாளர் தற்கொலை ..ஐடி ரெய்டு: அன்று காபி டே சித்தார்த், இன்று ரமேஷ்

Karnataka Congress ✔ @INCKarnataka IT dept claims second victim in State after Siddharth Harassment from @BJP4India controlled IT dept has claimed life of Ramesh In its rush to pester opposition, they have surpassed all levels of Humanity & has repeatedly exceeded its mandate
ஐடி ரெய்டு: அன்று காபி டே சித்தார்த், இன்று ரமேஷ்மின்னம்பலம் : கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவின் உதவியாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக மாநிலத்தில் துணை முதல்வராக இருந்தவருமான பரமேஸ்வராவுக்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 10ஆம் தேதி வருமான வரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். பரமேஸ்வராவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் முறைகேடு நடப்பதாகவும், அட்மிஷன்களுக்கு பெரிய அளவில் தொகைகள் பெறப்படுவதாகவும் வந்த தகவலையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெங்களூரு, தும்கூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த இந்த சோதனையின் முடிவில், ரூ.4.25 கோடி கைப்பற்றப்பட்டது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்த சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், இதுபோன்ற ரெய்டுகள் மூலம் ஒருபோதும் தங்களை அடக்கிவிட முடியாது எனவும் எச்சரித்தனர். இந்த நிலையில் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவின் தனி உதவியாளர் ரமேஷ் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைகைக் கரையில் சங்ககால நகரம் கண்டுபிடிப்பு!


 The discovery of the Sangam city on the Vaigai coast
 The discovery of the Sangam city on the Vaigai coastnakkheeran.in - bagathsingh" ராமநாதபுரம் அருகே சோழந்தூரில் வைகையின் கிளையாறான நாயாற்றின் கரையில் சிதறிக் கிடக்கும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மூலம் புதைந்த நிலையில் ஒரு சங்க கால நகரம் இருந்த தடயத்தை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
சோழந்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள குளங்களை தூர்வாரும் போது உடைந்த ஓடுகள் வெளிப்பட்டுள்ளன. அவ்வூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மூலம் இதை அறிந்த ஆங்கில ஆசிரியர் சுல்தான் ஜமீர் அலி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவிடம் தகவல் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் மேற்பரப்பாய்வு செய்த பின் தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,

சென்னை யாழ்ப்பாணம் விமான சேவை வாரத்தில் 7 flights a week from Chennai to Palaly and Battical

Alliance Air has 800 flight departures per week and 114 flight departures per day.சென்னையில் இருந்து பலாலி விமான நிலையத்துக்கு வாரத்துக்கு ஏழு விமான சேவைகளை நடத்துவதற்கு, எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு, இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ளது.
இந்த நிலையிலேயே, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்துவதற்கு, இந்திய அரசாங்கம் அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது. அலையன்ஸ் எயர் நிறுவனம் வெளிநாட்டுக்கான (சிறிலங்கா) சேவைகளை நடத்துவதற்கு, இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, அனுமதி அளித்துள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனமொழியில் டிரெண்ட் செய்த தமிழர்கள். மோடி #泰米尔纳德邦欢迎习近平 #TN_welcomes_XiJinping #回到莫迪 #Gobackmodi

டிரெண்ட்
மோடி சீன அதிபர் ஆங்கிலம் மட்டுமல்ல.. சீனத்திலும் டிரெண்ட் செய்த தமிழர்கள்.. மோடிக்கு எதிராக வைரலான 3 ஹேஷ்டேக் tamil.oneindia.com-shyamsundar. : மோடிக்கு எதிராக வைரலாகும் 3 ஹேஷ்டேக்
சென்னை: பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக கோ பேக் மோடி டேக் தேசிய அளவில் வைரலாக டிரெண்டாகி வருகிறது. அதேபோல் சீன மொழியிலும் #回到莫迪 என்ற டேக் பிரதமர் மோடிக்கு எதிராக டிரெண்டாகி வருகிறது.
டிவிட்டரில் #GoBackModi டேக் டிரெண்டானால் போதும். கண்ணை மூடிக்கொண்டு பிரதமர் மோடி எங்கே இருக்கிறார் என்று உலகமே சொல்லிவிடும்.
ஆம், பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் #GoBackModi டிரெண்டாவது வழக்கம். இன்றும் அதற்கு குறைவில்லாமல் #GoBackModi தேசிய அளவில் நம்பர் 1 இடத்தில் டிரெண்டாகி வருகிறது.

இந்திய பிரதமர்கள் தமிழகத்தில் எப்படி மதிக்கப்படுகிறார்கள்?

A Sivakumar : தமிழ்நாடு தமிழருக்கே சொந்தம்.
இந்திய ஒன்றியத்தின் ஒரு அங்கம் என்று ஆகிவிட்டபடியால்
திறந்த வீட்டிற்குள் நாய் நுழைவது போல யார் வேண்டுமானாலும் நுழையவும் முடியாது,
நுழைந்துவிட்டு மரியாதையையும் எதிர்பார்க்க முடியாது
அமெரிக்காவிற்கே அதிபராக இருந்தாலும் எங்கள் மனதிற்கு பிடித்தால் மட்டுமே மதிப்போம்
இல்லையேல் மிதிக்கவே செய்வோம்.

முழுக்க முழுக்க மாநில கட்சிகளின் ஆதிக்கத்திலிருக்கும் ஒரு மாநிலத்தில், இன்றளவும் ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும், வி.பி.சிங்கும், மன்மோகன் சிங்கும் எப்படி மதிக்கப்படுகிறார்கள்?
ஏன் அவர்கள் மீதெல்லாம் அரசியல் அக்கப்போர்களை தாண்டி எங்களுக்கு வெறுப்புணர்ச்சி எழவில்லை?
இன்றளவும் வாஜ்பாய் அவர்களை யாரும் இங்கு வெறுக்கவில்லையே, மதிக்க தவறுவதில்லையே ஏன்?
இதற்கெல்லாம் விடைகளை கண்டுபிடித்தால் மட்டுமே, இங்கு ஆல் போல பரந்து, விரிந்து, கிளை பரப்பியிருக்கும் மோடி மீதான எதிர்ப்பையும், வெறுப்பையும் புரிந்துகொள்ள முடியும்.
இந்தியா, இந்து மதம், சனாதனம், இறையாண்மை, அரசியல் நாகரீகம் என்று எங்களுக்கு பாடம் எடுப்பதை விட்டுவிட்டு மேலே இருக்கும் கேள்விகளுக்கு நீங்க விடை தேடி படிங்க.

மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: சிவகங்கை நர்சிங் கல்லூரி முதல்வர் சிவகுரு துரைராஜ் கைது

intimidate-the-college-student-and-rape-sivaganga-nursing-college-principal-arrested.hindutamil.in/ :சிவகங்கை. அதிக மதிப்பெண் போடுவதாகக் கூறி நர்சிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மாணவி அளித்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை பச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் 16-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின் மணமக்கள் சென்னையில் குடியேறினர். சில நாட்களுக்கு முன் புதுமணப்பெண் அடிக்கடி தலைச் சுற்றுவதாகவும் வாந்தி வருவதாகவும் கூறியதன் அடிப்படையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அபேய் அகமது அலிக்கு வழங்கப்படுகிறது

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற எத்தியோப்பியா பிரதமர்!மின்னம்பலம் : 2019 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அபேய் அகமது அலிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படும் உலகின் உயரிய விருதான நோபல் பரிசிற்கான 2019 ஆம் ஆண்டின் வெற்றியாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (அக்டோபர் 11) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு : 3 பெண்கள் உள்பட 11 திபெத்தியர்கள் கைது வீடியோ


சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு :  3 பெண்கள் உள்பட 11 திபெத்தியர்கள் கைது  தினத்தந்தி :  சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தில் போராட்டம் நடத்த முயன்ற 3 பெண்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர் சென்னை.
 சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று வர இருப்பதையொட்டி, சென்னை நகரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அவரும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச இருக்கும் மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வர சில மணி நேரமே உள்ள நிலையில்  சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக கிண்டி ஐ.டி.சி கிராண்ட் சோழா ஓட்டல் அருகே முழக்கமிட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 5  திபெத்தியர்களை போலீசார்  கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பலத்த பாதுகாப்பையும் மீறி சீன அதிபர் தங்க உள்ள ஓட்டல் அருகே வந்து போராட்டம் நடத்திய போது போலீசாரிடம் சிக்கினர். சீன அதிபருக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி அவர்கள் சென்றனர்.
> சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டி ஐ.டி.சி கிராண்ட் சோழா  ஓட்டல் முன்பு 5 திபெத்தியர்கள் கோஷமிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

வெள்ளி, 11 அக்டோபர், 2019

இந்தியாவின் வர்த்தகம் சீனாவுக்கு உதவும். ...

Muralidharan Pb : · டிவி சேனல்களில் பேசும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் சிலர் என்னவோ சீன இந்திய வர்த்தகம் 1962க்கு போருக்கு பிறகு முடங்கி இருந்ததாகவும் அதைப் பெருக்கிட இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பதாக பீடிகை கொடுப்பது கொஞ்சம் அதிகம்.
இந்திய சாப்ட்வேர் பிஸ்து என்றால், பெரும்பாலான ஹார்ட்வேர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சீனா தான் முதலிடம்.
அமெரிக்கா கொழுத்து போய் சீனப் பொருட்களுக்கு தடை விதிக்க, அதே நேரத்தில் அமெரிக்கா இந்தியா மீதும் நிறைய தடைகளை விதித்துள்ளது. அந்த தடையிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள சீனாவிற்கு இந்தியாவும் இந்தியாவுக்கு சீனாவும் பரஸ்பரம் தேவை.
இவ்வளவு தான் விஷயம். இந்திய சீன வர்த்தகம் சென்ற ஆண்டில் (2017-18) சுமார் 90 பில்லியன் அமெரிக்க டாலர். அதாவது கிட்டத்தட்ட 6.25 லட்சம் கோடி ரூபாய். அதை 100 பில்லியனாக ஆக்கிட இரு நாடுகளும் முயல்கிறது. இவ்வளவுதான் தான் செய்தி. எது எப்படியோ, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கென தரமான பொருட்கள் அமெரிக்க தடையால் இனி இந்தியாவிலும் கிடைக்கும். விலை கொஞ்ச கூடலாம்.
'தேச பக்தர்கள்' சில வாரங்களுக்கு முன்பு பொருளாதார மந்த நிலையில் இருக்கும் இந்தியாவை பற்றி பேசாமல் இருக்க, சீனப் பொருளாதாரத்தை நக்கலடித்து கொடுத்த செய்திகளை எல்லாம் அவசர அவரசமாக மறைக்கும் நோக்கில் பேசி வருகின்றனர்.

ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கள் துறை மனு .

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை மனுமாலைமலர் : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை மனு ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்துள்ளது. புதுடெல்லி : ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதில்  சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர்.

கொழும்பை அதிரவைத்த UNP ரணில் கட்சி பொதுக்கூட்டம் .. வெற்றியை உறுதிசெய்த மக்கள் கூட்டம்?


hindutamil.in/ : மக்கள் வெள்ளத்தில் கொழும்பை அதிர வைத்த ஐக்கிய தேசிய கட்சியின் பொதுக்கூட்டம்: சஜித் பிரேமதாசாவுக்கு வலுக்கும் ஆதரவு ராமேசுவரம் . இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுமார் ஐந்து லட்சம் கலந்து கொண்டதால் கொழும்பு நகரமே வியாழக்கிழமையன்று ஸ்தம்பித்தது.
இலங்கையில் அதிபர் தேர்தல் நவ. 16-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜ பக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சஜித் பிரேமதாச ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கோத்தபய ராஜபக்சவுக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவை தெரிவித்துள்ளன.

சீனாவின் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஜி ஜின் பிங்கிடம் கேளுங்கள்: பிரதமர் மோடிக்கு கபில் சிபில்

சீனாவின் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஜி ஜின் பிங்கிடம் கேளுங்கள்: பிரதமர் மோடிக்கு கபில் சிபில் வலியுறுத்தல்தினத்தந்தி : சீனாவின் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திருப்பிக் கொடுக்க வேண்டும் என ஜி ஜின்பிங்கிடம் கேளுங்கள், 56 இஞ்ச் மார்பை காட்டுங்கள் பிரதமர் மோடி என மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.
  புதுடெல்லி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பையொட்டி சென்னை மாநகரமே புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேலும் சந்திப்பு நடைபெறவுள்ள மாமல்லபுரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என தமிழில் பதிவிட்டுள்ளார்.
 இந்நிலையில், ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி சந்திப்பு பற்றி மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் குவிந்த சீன பத்திரிகையாளர்கள்!

மாமல்லபுரத்தில் குவிந்த சீன பத்திரிகையாளர்கள்!மாலைமலர்   பிரதமர் நரேந்திரமோடி-சீன அதிபர் ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் சீன பத்திரிகையாளர்கள் குவிந்துள்ளனர்.  மாமல்லபுரம், பிரதமர் நரேந்திரமோடி-சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்று மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிப்பதற்காக சீன நாட்டை சேர்ந்த ஏராளமான பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் மாமல்லபுரத்தில் குவிந்துள்ளனர். இதுதவிர சீன நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியை சேர்ந்தவர்களும் அதிநவீன கேமராக்களுடன் வந்துள்ளனர். இவர்கள் மாமல்லபுரத்தில் சீன அதிபர் பார்வையிட உள்ள இடங்களை படம் பிடித்தனர். இதுதவிர டெல்லியில் இருந்தும் ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்துள்ளன
செய்திகv>

கத்ரி கோபால்நாத் காலமானார்.. சாக்ஸபோன் இசை மேதை

Mathivanan Maran /tamil.oneindia.com :   மங்களூரு: சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) உடல்நலக் குறைவால் மங்களூரு தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார். கர்நாடகா மாநிலம் பந்த்வால் தாலுகாவில் மிட்டகெரே கிராமத்தில் 1950-ம் ஆண்டு பிறந்தவர் கத்ரி கோபால்நாத். சாக்சபோன் இசைக் கலையில் உன்னதத்தைத் தொட்டவர் கத்ரி கோபால்நாத். 
 தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஶ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். கே. பாலசந்தரின் டூயட் படத்தில் கத்ரி கோபால்நாத்தின் சாக்சபோன் இசை முழுமையாக பயன்படுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களாக கத்ரி கோபால்நாத் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார். 

மலேசியா 2 எம்பிக்கள் கைது ...இலங்கை தூதரகத்தை தாக்க திட்டம்? – புலிகளுடன் தொடர்பா?

வீரகேசரி : விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழு பேரை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் தடை நீடித்து வருவதாகவும் மலேசிய காவல்துறை சுட்டிக்காட்டி உள்ளது.
இந்தக் கைது நடவடிக்கை தொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைமை துணை ஆணையர் டத்தோ அயோப் கான், கைதான ஏழு பேரும் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, நிதி திரட்டியதாக காவல்துறை நம்புவதாகத் தெரிவித்தார். மேலும், கைதானவர்களில் ஒருவர் கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகத்தை தாக்க திட்டமிட்டிருந்ததாகவும் அவர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டார். கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இலங்கை துணைத்தூதர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களும் தற்போது கைதாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.> “கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் சந்தேக நபர்களைக் கண்காணித்து வந்தோம். அதன் தொடர்ச்சியாகவே சம்பந்தப்பட்டவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சகோதரிகள் நகரம்: மோடி - ஜி ஜின்பிங்குக்கு சென்னையின் நினைவூட்டல்!

சகோதரிகள் நகரம்: மோடி - ஜி ஜின்பிங்குக்கு சென்னையின் நினைவூட்டல்!பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களையும் வரவேற்க அவசர அவசரமாக இந்தச் சென்னையான என்னை தடபுடலாகத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். எங்கெங்கு காணினும் ஓவியங்கள், நீதிபதிகள் சொன்ன மாதிரி சுத்தமான சென்னை, நீதிமன்ற ஆணைக்கேற்ப பேனர்கள், போக்குவரத்து மாற்றம் என்ற பெயரில் கொஞ்சம் புழுக்கத்தைச் சூடிக்கொண்டாலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் இரு முக்கியமான நாட்கள் என்னை நோக்கி குவிக்கப்படுகின்றன என்ற திருப்தியோடும் சின்ன கர்வத்தோடும் இரு பெரும் தலைவர்களையும் வரவேற்கிறேன்.
நீங்கள் இந்தச் சென்னையில் தங்கிப்பேசுவதற்கு ஆயிரம் விஷயங்கள் உள்ளன. ஆயிரமாயிரம் விவகாரங்கள் உள்ளன. அதேநேரம் இந்தச் சென்னை உங்களிடம் பேசுவதற்கு ஒரே ஒரு முக்கியமான விவகாரத்தை ஞாபகம் வைத்திருக்கிறேன்.< 2015ஆம் ஆண்டு மோடி அவர்கள் பிரதமரான ஓராண்டுக்குள் தனது முதல் சீனப் பயணத்தை நிகழ்த்தினார். அவரது சீனப் பயணத்துக்கு முன்பே மத்திய அரசின் சார்பில் ஒரு குழு, பாஜக சார்பில் ஒரு குழு என இரு குழுக்கள் சீனாவுக்குச் சென்று இந்தச் சந்திப்பின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்த ஆலோசனைகளிலும் ஆயத்தங்களிலும் ஈடுபட்டன.

குர்திஸ்தான் மீது துருக்கி ஏன் தாக்குதல் நடத்துகிறது? குர்திஸ்தான் .. போராட்டம்


யார் இந்த குர்திஷ்கள்? துருக்கி ஏன் அவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது?மாலைமலர் : போராளிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான் வழியாகவும் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால், பதற்றம் நிலவுகிறது. துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்திஷ்கள். குர்து மொழி பேசும் இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது. இவர்கள் வாழும் நிலப்பரப்பை குர்திஷ்தான் என்று அவர்கள் அழைக்கின்றனர்.
இவர்கள் ஒரு இன சிறுபான்மை குழு, சுமார் இரண்டரை கோடியில் இருந்து 3 கோடி வரை  இருப்பார்கள்  பெரும்பாலானவர்கள் சன்னி முஸ்லிம்கள். அவர்கள் ஒரு தனித்துவமான இனம், கலாச்சாரம் மற்றும் மொழியால் ஒன்றுபட்டுள்ளனர். குர்திஷ்தான் என்று அழைக்கப்படும் தனி நாடு உருவாக்குவதற்கு அவர்கள் பாடுபட்டு வருகிறார்கள்.

சீன ஊடகங்கள் கூறுவது என்ன.. மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ..

modi xi meeting, PM Modi China president Xi Jinping meet, narendra modi xi jinping meeting, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பு, மாமல்லபுரம், சென்னை, xi meeting at mahabalipuram, mahabalipuram, india china relations, india china on kashmir/tamil.indianexpress.com  :  Modi-Xi meeting tomorrow: சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது முறைசாரா சந்திப்பு அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில்...
Modi-Xi meeting tomorrow: சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது முறைசாரா சந்திப்பு அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மகாபலிபுரத்தில் நடக்க உள்ளதாக சீன ஊடகங்களில் பரவலாகப் செய்தி வெளியாகி உள்ளது. இந்த முறைசாரா உச்சிமாநாட்டிற்கு முன்னர் இருதரப்பையும் மோசமாக பாதித்த சீனாவின் தொடர்ச்சியான வலுவான அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு இடையே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இது முதல் சாதகமான அறிகுறியாக உள்ளது.
காஷ்மீர் தொடர்பாக சனிக்கிழமை பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் கூறிய கருத்துக்கள் தொடர்பாக இந்தியா இராஜதந்திர வழிகளில் சீனாவுக்கு வலுவான எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் குறித்து பெய்ஜிங் கருது நிலைப்பாடு வெளியாவது குறித்து இந்தியா தெளிவுபடுத்த முயன்றது. மேலும், இந்தியா தனது உள் விவகாரங்கள் குறித்து “மற்ற நாடுகளுக்கு கருத்து தெரிவிக்க முடியாது” என்றது.

வியாழன், 10 அக்டோபர், 2019

ராஜீவ் கொலை விசாரணையில் நெடுமாறன் தப்பியது எப்படி?.. காசி ஆனந்தன்? சம்பவத்தில் நளினி எப்படி உயிர் தப்பினார்?

வளன்பிச்சைவளன்'; பதிவு - 145
ஈழப்போரும் தமிழக #ஈழத் தமிழர்களின் பொறுப்பும் கடமையும்!
சாத்தானின் படைகள் புலிகளின் நூல்!
ராஜீவிற்கு எதிரி நான் பிரபாகரன்!
புலிகள் கொலை செய்யவில்லை!
இம்மி பிசகாத திட்டம்! கிட்டு தொடர்ந்து மறுப்பு!
ராஜீவ்கொலை சதியில் விசாரிக்கப்படாத புலிகளின் PRO நெடுமாறன்!
ராவின் கூட்டாளி நெடுமாறனின்
வஞ்சக புளுகுக்கு மறுப்பு
சாத்தானின் படைகள்
இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலத்தில் நடந்த அட்டூழியங்களை விவரிக்கும் மிகப் பிரம்மாண்டமான ஆவணம் ஒன்று (ஏற்கெனவே இது குறித்துக் குறிப்பிட்டிருக்கிறேன் சாத்தானின் படைகள் என்ற புத்தகம்.) புலிகள் இயக்கத்தால் தயாரிக்கப்பட்டது.
இரண்டு வால்யூம்களாக வெளியிடப்பட்ட அந்தப் புத்தகம், சென்னையில் அண்ணா சாலையில் உள்ள ஓர் அச்சகத்தில்தான் அச்சிடப்பட்டது. சி.பி.ஐ. அதனைக் கைப்பற்றியதற்கு முன்னால், அது குறித்த அடிப்படைத் தகவல்கள் கூட ராவுக்கோ ஐபிக்கோ தெரிந்திருக்கவில்லை!
அந்தப் புத்தகம், வெறும் பிரசாரப் புத்தகமல்ல. ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகள் ஏன் கொன்றார்கள் என்பதற்கான காரணங்களை மிகத் துல்லியமாக நாம் அந்தப் புத்தகத்தின் பக்கங்களிலிருந்து பெற முடியும்.
ஏப்ரல் 1, 1990 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் வெளியிட்ட ஓர் அறிக்கையில், I am not against people, I am not against the Indian Government, I am against the former leadership’ ‘நான் இந்திய மக்களுக்கு எதிரானவனோ, நான் இந்திய அரசின் எதிரானவனோ இல்லை, நான் முன்னாள் தலைமைக்கு எதிராக இருக்கிறேன் ‘ என்றுபிரபாகரன் மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

நில மீட்புப் போரின் கால் நூற்றாண்டு நினைவுத் தடங்கள்!


மின்னம்பலம் : நில மீட்புப் போரின் கால் நூற்றாண்டு நினைவுத் தடங்கள்! டி.எஸ்.எஸ்.மணி . அக்டோபர் 10, பஞ்சமி நில மீட்பு இயக்கத் தியாகிகள் நாள்
1994ஆம் ஆண்டு (ஜெயலலிதா ஆட்சி) இதே நாளில், தோழர்கள் ஜான் தாமஸ், ஏழுமலை இருவரும் செங்கல்பட்டில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். செங்கல்பட்டு முக்கியச் சாலையில், மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகம் முன்பு அது நடந்தது.
திருக்கழுக்குன்றம் அருகே காரணை கிராமத்தில் ஆங்கிலேயரால் ஆதி திராவிட நிலமற்ற விவசாயிகளுக்கு இனாமாக நிபந்தனை அடிப்படையில் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் நிபந்தனைகளை மீறி மாற்றாரால் வாங்கப்பட்டும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் கிடந்ததை காரணை கிராமத்தைச் சேர்ந்த வணிகவரித் துறை அலுவலகத்தில் வேலைசெய்து வெளியே வந்த தீபன் சக்கரவர்த்தி கையிலெடுத்தார்.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஐ தமிழகம் வரவேற்கிறது!

Chozha Rajan எச்சரிக்கை தோழர்களே... #回到莫迪 என்ற சீன வார்த்தைகள்
மோடிக்கு ஆதரவு என்ற அர்த்தத்தையே கொடுக்கின்றன...
சீன அதிபருக்கும் சீன ஊடகங்களுக்கும் ஆங்கிலம் தெரியும் .. சீன அதிபருக்கு வாழ்த்தும் வரவேற்பும் ஆங்கிலத்திலேயே அளியுங்கள்!
சீன அதிபருக்கு வாழ்த்துக்கள்..
 மோடிக்கு அல்ல என்பது தெளிவாக புரியும் படி உரக்க ஒலிக்கட்டும் . சமுக வலையிலும் அது .உலாவட்டும் .. அது உரிய கவனத்தை பெறும்!

சட்டக்கல்லூரி ரவுடி மாணவன் கார்த்திக் புதிய மாணவனை அருவாளால் துரத்தி துரத்தி .. வீடியோ ... வணக்கம் வைக்கல்லியாம் ..பல்லாவரம்


tamil.oneindia.com - hemavandhana : பல்லாவரத்தில் பயங்கரம்.. பட்டாக் கத்தியுடன் சட்ட மாணவர்கள் மோதல்.. ஒருவர் படுகாயம்!-சென்னை: வணக்கம் வெக்கலையாம்.. இதுதான் பிரச்சனை.. அதனால் காலேஜ் கேட் வாசலிலேயே நிற்க வைத்து, மாணவனை அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார் சட்டம் படிக்கும் சக மாணவன்!
ரூட் தல விவகாரத்தில் போலீசார் செய்த கெடுபிடியால் இப்போதுதான் மாணவர்கள் அடங்கி உள்ளதாக நினைத்தால், திரும்பவும் ஆரம்பித்து விட்டார்கள்.
கல்லூரி மாணவர்கள் பஸ் தவிர, ரயில்களிலும் காலேஜிக்கு வந்து போவார்கள். அப்படி வரும்போது, கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடனே ரயிலில் பயணம் செய்வார்கள்.
அந்த சமயங்களில் ஆயுதங்களை தரையில் தேய்த்து சத்தம் எழுப்பியும், கூச்சலிட்டும் பயணிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதையும் வழக்கமாக கொண்டிருப்பர். இது சம்பந்தமான வீடியோக்கள் வெளியாகியதுடன், போலீசாரும் இவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தனர்.

சீன அதிபர் சென்னை மகாபலிபுரம் கோவளம் ..காரிலேயே சுற்றி பார்க்க திட்டம் ! ஹெலிகாப்டர் தவிர்ப்பு..

tamil.oneindia.com - s/VelmuruganP. : சென்னை: நாளை காரிலேயே சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சீன அதிபர்.. மீண்டும் காரிலேயே சென்னை வந்து ..மீண்டும் காரிலேயே கோவளம் போகிறார்.. மீண்டும் காரிலேயே சென்னை திரும்புகிறார். அப்படி சென்னையை முழுமையாக சுற்றிப்பார்த்தபடி சீன அதிபர் இரண்டு நாள் காரில் பயணம் மேற்கொள்வதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதன் காரணமாவே நாளை மற்றும் நாளை மறு நாள் சென்னையில் முக்கிய சாலைகளான ஜிஎஸ்டி சாலை, ஒஎம்ஆர் சாலை, ஈசிஆர் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடியை சந்தித்த இன்று நாள் பயணமாக நாளை மதியம் சென்னை வருகிறார். இதேபோல பிரதமர் மோடியும் இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி ஆகியோர் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் இரு நாட்டு விவகாரங்கள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இது தொடர்பான விவரங்களை இப்போது முழுமையாக பார்க்கலாம்.

அன்புமணிக்கு அமைச்சர் பதவி.. மோடியுடன் ராமதாஸ்!

மோடியுடன் ராமதாஸ்: அன்புமணிக்கு அமைச்சர் பதவி?மின்னம்பலம் : பிரதமர் நரேந்திர மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று (அக்டோபர் 10) காலை 11.30 மணியளவில் சந்தித்துப் பேசினர். 20 நிமிடங்களுக்கு மேலாக நடந்த இந்த சந்திப்பின்போது, இந்தியா-சீனா இடையே மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை சுட்டிக்காட்டிய ராமதாஸ், இதனால் தமிழக மக்கள் பெருமையடைவதாகவும், இதற்காக தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமரிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதமரிடம் ராமதாஸ் அளித்த மனுவில், “29 ஆண்டுகளாக சிறைகளில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். கோதாவரி - காவிரி ஆறுகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

லலிதா ஜுவல்லரி கொள்ளை .. சுரேஷ் நீதிமன்றத்தில் சரண் !

THIRUCHIRAPALLI, LALITHAA, JEWELLERY, ROBBERY, திருச்சி, லலிதா, ஜூவல்லரி, கொள்ளைdinamalar.com : திருச்சி: லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் திருச்சி கிளையில், கடந்த அக்., 02ல் மர்ம நபர்கள், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், அதில் முகமூடி அணிந்த இரு நபர்கள் கொள்ளையடித்தது தெரிந்தது. இதன் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வாகன சோதனையின் போது, இரு நபர்கள் எடுத்து வந்த அட்டை பெட்டியில் லலிதா நகைக்கடையின் சில நகைகள் இருந்ததை கண்டறிந்தனர்.

ஒரிஜினல் சுப்பர் ஸ்டார் வடிவேலுவுக்கு இன்று பிறந்த நாள்- (அக்டோபர் 10, 1960)

வடிவேலுவுக்கு இன்று பிறந்த நாள் .. 
தமிழ் திரையில் இன்றுள்ள  ஒரே ஒரு சுப்பர்sஸ்டார் வைகை புயல் வடிவேலுதான்!
திரைப்படம் தொலைக்காட்சி எல்லாம் தாண்டி சமுக வலையிலும் கொடி நாட்டிய மாபெரும் தமிழ் கலைஞன் வடிவேலு.
இன்று சுப்பர் ஸ்டார் அல்டிமேட் ஸ்டார் உலகநாயகன் தளபதி சிங்கம் தங்கம் என்றெல்லாம் ஓவர் பில்டப் கொடுக்கப்படும் நடிகர்கள் எல்லோரையும் ஓரங்கட்டி ரசிகர்களின் மனதில் மறக்கவே முடியாதவாறு வடிவேலு அமர்ந்திருக்கிறார். .
ரசிகர்களின் அன்றாட வாழ்வில் ஏதோ ஒரு வழியில் மக்களை தினசரி சிரிக்க வைக்கிறாரே?
இதுவரை எந்த கலைஞன் ரசிகர்களை இப்படி கட்டி போட்டிருக்கிறார்?
அதுவும் பல ஆண்டுகளாக  படங்களில் நடிக்கவே இல்லை .
சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் நடிக்காமல் இருந்தாலே நடிகர்களை ரசிகர்கள்  மறந்து விடுவார்கள் என்று கூறப்படுவதுண்டு. .
அதையெல்லாம் தூக்கி அடித்துவிட்டு வடிவேலு மக்கள் மனதில் அசைக்க முடியாதவாறு  ஒரு சிங்காசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.
ரஜினி கமல் போன்ற நட்சத்திர நடிகர்களுக்கு கொடுக்கப்படும் ஓவர் பில்டப் விளம்பரத்தில் பத்தில் ஒருபங்கு  விளம்பரம் கொடுத்தாலே வடிவேலுவின் உயரம் எல்லோரையும் பிரமிக்க வைத்துவிடும் .

சிம்புவால் நொந்து நூடில்ஸ் ஆன தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ..

வெப்துனியா : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சிம்புவால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான சிவராஜ் குமாரின் மப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகினர். இந்த படத்தை தயாரிக்க ஸ்டுடியோ க்ரீன் முன்வந்தது. அதன் பின்னர் இந்த படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது.இந்நிலையில், மப்டி படம் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றும் அளித்துள்ளார். அந்த புகாரில், மப்டி படத்தின் ஷூட்டிங்கிற்கு சிம்பு சரியாக வரவில்லை.

நீதிமன்றத்தில் மயங்கி விழுத்த நிர்மலா தேவி .... ஸ்ரீ வில்லிபுத்தூர்


 மாலைமலர் : கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வந்த நிர்மலாதேவி கோர்ட்டில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் மதுரையைச் சேர்ந்த உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனசில மாதங்களுக்கு பின்னர் 3 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இவர்கள் வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜராகி வருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் கோர்ட்டில் ஆஜராக வரும் நிர்மலாதேவி தனிமையில் பேசுவதும், வினோதமாக நடந்து கொள்வதும் என பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதற்காக அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது.
நிர்மலாதேவி உள்பட 3 பேரும் வழக்கு விசாரணைக்காக இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு வந்தனர்.

ரூ1 கோடி இழப்பீடு கேட்டு சுபஶ்ரீ தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அதிகாரிகளிடமே இழப்பீடு ஹைகோர்ட் அதிரடி /tamil.oneindia.com - mathivanan-maran : சென்னை: அதிமுக பிரமுகர் ஜெயபால் வைத்த பேனர் விழுந்ததில் மகளை இழந்த தங்களது குடும்பத்துக்கு ரூ1 கோடி இழப்பீடு தர கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளம்பெண் சுபஶ்ரீயின் தந்தை ரவி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதிமுகவை சேர்ந்த ஜெயபால் இல்ல திருமணத்துக்கு சென்னை புறநகரில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்களில் ஒன்று இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சுபஶ்ரீ மீது விழுந்தது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சுபஶ்ரீ மீது தண்ணீர் லாரி மோதியது. இச்சம்பவ இடத்திலேயே சுபஶ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்த சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையை கடுமையாக்க சுழற்றியது. உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கட்சி நிகழ்ச்சிகளில் பேனர்களை வைக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர்.

நடிகை ரேவதி மணிரத்தினம் உட்பட . 49 பேரின் தேசத்துரோக வழக்கு கைவிடப்பட்டது

tamil.news18.com : திரைப்பட இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து செய்யப்படுவதாக, பீகார் போலீஸ் அறிவித்துள்ளது. 
கும்பல் வன்முறையை தடுக்கக்கோரி, பிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், திரைப்பட இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, அனுரக் கஷ்யாப் உள்ளிட்டோர் மீது, பீகார் போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிகழ்வானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் புதன்கிழமை மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய முசாஃபர்பூர் காவல் கண்காணிப்பாளர் மனோஜ்குமார் சின்ஹா, நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் தொடரப்பட்ட இந்த தேசத்துரோக வழக்கில், மனுதாரரான சுதிர்குமார் ஓஜா, போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறியதாக கூறினார்.மேலும் அவரின் புகார் ஆதாரமற்றதாகவும், முழுக்க முழுக்க சமூக அமைதியை குலைக்கும் நோக்கத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ராம்லீலாவில் பங்கேற்று பிரதமர் இராவணன் உருவத்திற்குத் தீ மூட்டலாமா?,, ஆசிரியர் வீரமணி


Asiriyar K Veeramani : ராம்லீலாவில் பங்கேற்று பிரதமர் இராவணன் உருவத்திற்குத் தீ மூட்டலாமா?
ரஃபேல் விமானத்தைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ‘ஓம்‘ என்று விமானத்தின்மீது எழுதலாமா?
மதச்சார்பற்ற தன்மைக்கு விரோதமான நடவடிக்கைகளை இடதுசாரிகளும், மதச்சார்பற்ற சக்திகளும் கண்டிக்கவேண்டும்
நேற்றைய தினம் (8.10.2019) இரு நிகழ்ச்சிகள், ஒன்று டில்லியில் விஜயதசமி கொண்டாட்டம் என்ற பெயரில் பிரதமர், துணைக் குடியரசுத் தலைவர் முன்னிலையில் ‘ராம் லீலா’ என்று கூறி திராவிட வீரனான இராவணன் உருவம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.
மோடி அம்பு எய்தி கொளுத்தும் காட்சி

புதன், 9 அக்டோபர், 2019

கீழடியில் ஒரு சாமி சிலையும் இல்லை... சங்கிகளின் வயிற்றில் புளியை கரைத்த வரலாறு

Kandasamy Mariyappan : கீழடிக்கு எனது
நண்பர்கள் பார்த்தசாரதி மற்றும்
சுந்தரேசனுடன் சென்று சுற்றிப் பார்த்தோம்.
இராமாயண, மகாபாரத புகழ் சமஸ்கிருத சங்கிகள், ஏன் பயப்புடுகின்றனர் என்று இப்பொழுது புரிகிறது.
2000 ஆண்டுகளாக அவர்கள் கூறிவந்த பொய்களை, நமது கீழடி ஹீரோ ஒரே நாளில் சிதைத்து விட்டது.
2600 ஆண்டுகளுக்கு முன்பே சுடு செங்கலை வைத்து அழகிய வேலைப்பாடுடன் வீடுகள் கட்டியுள்ளனர் நமது தமிழ் முன்னோர்கள். சுடு செங்கலை வைத்து வாய்க்கால் அமைத்து, தண்ணீர் தொட்டி கட்டி, உறை கிணறு கட்டி வைத்து நீரை சேமித்துள்ளனர்.
ஆனால் பாருங்கள், பாவம், ஒரு கடவுள் கற்சிலைகளும் இல்லை. இதுதான் சங்கிகளின் வயிற்றில் புளியை கரைத்து விட்டது.
எனவே எப்படியாவது அடுத்த கட்ட அகழாய்வுகளை நிறுத்த எல்லா
திட்டங்களையும் தீட்டுகின்றனர். அதற்கு நமது அடிமைகளும் உடந்தையாக இருக்கின்றன.

தமிழ் மரபு அறக்கட்டளையை முடக்க சதி ?.. பின்னணியில் எந்த சக்திகள்?


Subashini Thf : பேராசிரியர் டாக்டர்.கண்ணன் மற்றும் இந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் குழுவினருக்கு எனது நன்றி.
-டாக்டர் க. சுபாஷினி
அனைவருக்கும் வணக்கம்
தற்போது இணைய வெளியில் தமிழ் மரபு அறக்கட்டளையை முடக்கும் நோக்கில் பல்வேறு வகையான அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது மிகவும் கண்டனத்திற்கு உரியதாகும்.
ஓலைச்சுவடிகள் தொடர்பாக என் மீதும், டாக்டர் சுபாஷிணி மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை அறிஞர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் எமது அமைப்பின் மீது வழக்கு தொடரப் போவதாக சில பேர் இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வழக்குகளை நாங்கள் வரவேற்கின்றோம்.
இத்தனை ஆண்டுகாலம் எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி தமிழ் வளர்ச்சிக்கு மட்டுமே உழைத்து வருகின்ற எங்களுக்கு இந்த போலி நபர்கள் எழுதி இருக்கின்ற அநீதிக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்த வழக்கை எதிர்கொள்வோம்.
மேலும் இத்தனை ஆண்டு காலம் எங்களது ஆய்வுகள் பரந்துபட்ட வெளியில் கவனிக்கப்பட்டு வந்தாலும், கடந்த சில நாட்களாக பெரும் வெளிச்சத்தை பெற்றிருக்கிறது என்பதற்கு இந்த பரபரப்பான அவதூறுகளை சாட்சி. இந்த அவதூறுகள் தமிழ் மரபு அறக்கட்டளை பணிகளை மக்கள் மத்தியில் கொண்டு போய் தமிழ் மரபு செல்வங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொள்ள பயன்படுத்திக்கொள்வோம்.

தொழில் அதிபர் சிவ நாடார் நாக்பூர் ஆர் எஸ் எஸ் விஜயதசமி விழாவில் கலந்துகொண்டார்

உத்தர பிரதேச நிலைமை tamil.oneindia.com - veerakumaran : Shiv Nadar at RSS Dussehra : எனது மகள் பள்ளி குழந்தைகளுக்கு சிக்கன் கொடுத்து வருகின்றார்-ஷிவ் நாடார் நாக்பூர்:
எனது மகள் உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செய்து கொண்டு இருக்கிறார் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திய விஜயதசமி விழாவில் தெரிவித்துள்ளார் ஹெச்சிஎல் நிறுவன, தலைவரான ஷிவ் நாடார்.
விஜயதசமி நாளில், ஆர்எஸ்எஸ் சார்பில் நாக்பூரில் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த வருடம் இந்த விழா வழக்கத்தைவிட கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நாக்பூர் ரேஷிம்பாக் மைதானத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பங்கேற்று ஷிவ் நாடார் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதை பாருங்கள்:
அரசு மட்டுமே நமது நாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்று நினைத்துக்கொண்டு இருக்கக்கூடாது. தனியார் நிறுவனங்கள், நாட்டின் குடிமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புமே நாட்டின் உயர்வுக்காக இணைந்து செயல்பட வேண்டும். அனைவரிடமும் இருந்து சமமான பங்களிப்பு வரவேண்டும்.

ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குக்கு அழைக்க இனி கட்டணம்

ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குக்கு அழைக்க இனி கட்டணம்News18 Tamil : ஜியோ நம்பரிலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்க கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.
இந்த கட்டணத்திற்கு ஈடாக கூடுதல் டேட்டா வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது.
ஜியோ நம்பரிலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கு 6 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.
இந்த கட்டணத்திற்கு ஈடாக கூடுதல் டேட்டா வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளத. ஜியோ சிம் வரும் வரை, ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட நெட்வொர்க்கில் அவுட்கோயிங் கால்கள் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து அவுட்கோயிங் கால்களும் இலவசம் என்ற அறிவிப்போடு ஜியோ களமிறங்கியது. இண்டெர்நெட் டேட்டாவுக்கும் எதிர்பார்த்திடாத சலுகைகளும் வழங்கப்பட்டது.

சீன அதிபருக்காக விமானத்தில் பறந்துவந்த அதிநவீன கார்கள்

sophisticated-cars-flown-for-chinese-president-what-are-the-astonishing-featureshindutamil.in : சீன அதிபருக்காக  விமானத்தில் பறந்துவந்த அதிநவீன கார்கள்: பிரமிக்க வைக்கும் சிறப்பு அம்சங்கள் என்ன? சென்ன... மாமல்லபுரத்தில் வரும் 11-ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் சந்தித்து 3 நாட்கள் நடத்தும் பேச்சுவார்த்தை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகின் ஒட்டுமொத்த கவனமும் 11-ம்தேதி முதல் 12-ம் தேதிவரை மாமல்லபுரத்தில்தான் குவிந்திருக்கும். இதுவரை சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் சர்வதேச அளவில் மாநாடுகளில் பலமுறை சந்தித்துள்ளனர்.
இருப்பினும், அதிகாரபூர்வமற்ற முறையில் நட்புரீதியாக இருவரும் சந்திப்பது இது 2-வதுமுறை. இதற்கு முன் கடந்த ஆண்டு சீனாவின் ஹூபி மாகாணத்தில் உள்ள உஹான் நகரில் முதல் சந்திப்பு நடந்தது.

தமிழ்நாடு: இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை?-

தமிழ்நாடு: இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை?- பாஜக திட்டம்! மின்னம்பலம் :  அண்மையில் தேசிய குடிமக்கள் பதிவேடு அஸ்ஸாம் மாநிலத்தை மையமாக வைத்து உச்ச நீதிமன்ற உத்தரவை ஒட்டி கணக்கிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுமையும் அதிர்வுகளைக் கிளப்பியது. அஸ்ஸாம் மாநிலத்திலேயே 19 லட்சம் பேர் இந்த பட்டியலில் இருந்து விடுபட்டிருந்தனர். அவர்களை மீண்டும் இந்திய குடிமகன்களாக கணக்கில் கொள்ள மத்திய அரசு சில ஆவணங்களைக் கோரியிருக்கிறது.
இந்நிலையில் அஸ்ஸாமில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டைத் தயாரிக்க வேண்டும் என்று அண்மையில் உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா தெரிவித்திருந்தார். “யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம் செட்டிலாகிவிடலாம் என்று உலகில் எந்த நாடுமே இல்லை. எனவே தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்க வேண்டியது அஸ்ஸாமில் மட்டுமல்ல நாடு முழுமைக்குமே இப்போதைய காலத்தின் கட்டாயம்” என்று கூறியிருந்தார் அமித்ஷா. இதே கருத்தை பாஜகவின் பல்வேறு தலைவர்களும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டால் பல்வேறு ஆண்டுகலாக தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலைமை என்னாகும் என்ற கேள்வியும் சமூக ஆர்வலர்களிடைய எழுந்துள்ளது.

கீழடி 3500 ஆண்டு எழுத்து பானைகள் வருவாய் துறையிடம் ஒப்படைப்பு.

archeological sites foundnakkheeran.in - பகத்சிங் : கீழடி அகழாய்வில் தமிழர்களின் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் அறிந்து கொள்வதுடன் 2600 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பதற்கு பானைகளில் தமிழ் எழுத்துகளும் இருப்பதை கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள  மங்களநாடு - மாத்தூர் ராமசாமிபுரம் - தஞ்சை மாவட்டம் மணக்காடு ஆகிய கிராமங்களுக்கு மத்தியில் வில்வன்னி ஆற்றங்கரையில்  173 ஏக்கர் பரப்பளவுள்ள அம்பலத்திடலில் என்னும் இடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் முதுமக்கள் தாழிகள், புதைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து கிராம மக்களிடம் சொல்ல அதில் சிலர் விளையாட்டாக தோண்டி கருப்பு சிவப்பு பானைகள், குடுவைகள், கின்னங்கள் கண்டெடுக்கப்பட்டது.
அவற்றை பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் சித்த மருத்துவர் மதியழகன் பாதுகாத்து வந்தார். அப்போதே தொல்லியல் துறை உள்ளிட்ட அரசு துறைகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டும் செய்தி தாள்களில் செய்திகள் வெளியாகி அகழாய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.