வியாழன், 2 செப்டம்பர், 2010

தண்ணீர்,இந்தியா - பாக்., மோதல் : பஞ்‌சாபில் பயிர்கள் நாசம்

சண்டிகார் : எல்லை பிரச்னை போன்ற விஷயங்களைக் கடந்து, தற்போது தண்ணீர் பிரச்னையிலும் இந்தியாவும், பாகிஸ்தானும் கடுமையாக மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

வெள்ளப் பெருக்கை, இந்தியாவை நோக்கி திருப்பிவிடும் செயலில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதால், பஞ்சாப் மாநிலத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள், கடுமையாக சேதம் அடைந்துள்ளன. கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. பாகிஸ்தானில் ஐந்தில் ஒரு பகுதி நிலப்பரப்பு வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். பலத்த மழை காரணமாக சட்லெஜ், பியாஸ், ராவி ஆகிய நதிகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ள நீர், பாகிஸ்தானை வெள்ளக் காடாக்கியுள்ளது. இதனால், சிறு, சிறு தடைகளை ஏற்படுத்தி, இந்த நதிகளில் இருந்து வெளியேறும் வெள்ள நீரை, இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் அதிகாரிகள் திருப்பி விட்டுள்ளனர்.

இந்த வெள்ள நீர் இந்தியா - பாக்., எல்லை பகுதியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டத்தை சூழ்ந்துள்ளது. இங்கிருந்த ஏராளமான பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டன. விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சம்ரியாவாலா, நிஜாம்வாலா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஐந்து அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சன்மேஜா சிங் கூறுகையில்,"ஒவ்வொரு முறையும் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போதும், பாகிஸ்தான் இதுபோன்ற நடவடிக்கைகளில் தான் ஈடுபடுகிறது. பஞ்சாப் மாநிலத்தின் விவசாயம் இதனால் அடியோடு பாதிக்கப்படுகிறது. விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்'என்றார். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

இந்தியா -பாக்., எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கூறுகையில்,"பஞ்சாப் மாநிலத்தில், பாகிஸ்தானின் எல்லையையொட்டி 553 கி.மீ., தூரத்துக்கு முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை, இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் திருப்பி விட்டுள்ளதால், இந்த முள்வேலியும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது'என்றார்.

இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: இந்தியாவின் இமாச்சல், பஞ்சாப் மாநிலங்கள் வழியாக பாகிஸ்தானுக்குள் ஓடும் சட்லெஜ் ஆற்றில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர், பஞ்சாபில் உள்ள பாக்ரா அணையில் சேமித்து வைக்கப்படுகிறது. தற்போது பலத்த மழை காரணமாக, இந்த அணையிலிருந்து பெருமளவு தண்ணீரை, பாகிஸ்தானுக்குள் ஓடும்படி இந்திய அதிகாரிகள் திறந்து விட்டுள்ளனர். ஏற்கனவே பலத்த மழை காரணமாக, இங்குள்ள பகுதிகள் வெள்ளக் காடாகியுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து வரும் பெருமளவு தண்ணீரால் மேலும் கடுமையான பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன்காரணமாக, அந்த தண்ணீரை திருப்பி விடுவதைத் தவிர, வேறு வழி இல்லை. இவ்வாறு பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சப்பாணி - london,இந்தியா
2010-09-02 10:02:05 IST
இது யூத + அமெரிக்க + இந்திய சதிதானே . ஹா ஹா ஹா...
கண்ணன் - மும்பை,இந்தியா
2010-09-02 09:37:18 IST
3 வது உலக போர் தண்ணிர் காக தான் வரும் னு இப்ப நல்லவே தெரியுது ......
ராம் - குவைத்,குவைத்
2010-09-02 09:01:37 IST
பாகிஸ்தானில் ஏற்கெனவே 90 ஆயிரம் மக்கள் இந்த வெள்ளத்தால் வியாதியில் படுத்துகிடக்கும் நிலையில், இது ஒரு Biological போரை மறைமுகமாக நடத்துகிறது. எச்சரிக்கையாக இருக்கவும்....
கங்கை கொண்டான் - காவிரிப்பூம்பட்டினம்,இந்தியா
2010-09-02 07:01:33 IST
பாகிஸ்தானுக்கு கொடுத்த வெள்ள நிவாரண நிதியை வைத்து கங்கையை காவிரியோட இணைத்தாலாவது இந்தியர்களாகிய நாம் பயனடைவோம்.. இதையெல்லாம் என்னன்னு சொல்ல.....
NRN - சென்னை,இந்தியா
2010-09-02 06:38:08 IST
ஏன்பா தகறாரு. அந்த தண்ணிய தமிழ்நாடு நோக்கி திருப்பி விடுங்கப்பா. அதுக்கு வழி பண்ணுங்கப்பா. உங்களுக்கு புண்ணியமா போகும்...
palani - delhi,இந்தியா
2010-09-02 05:14:24 IST
அட, எங்க ஊரு(vellore ) பக்கம் கொஞ்சம் திருப்பி விடுங்க. இங்க நாங்க தண்ணி இல்லாம காயிறோம்....
பார்த்திபன். - சென்னை,இந்தியா
2010-09-02 02:37:40 IST
வெள்ளம் ஓர் இயற்கை சீற்றம். யாரையுமே குறை சொல்ல முடியாது. அவரவர்களுக்கு எது வசதியோ அதை செய்கிறார்கள்....
இம்ரான் - சென்னை.,இந்தியா
2010-09-02 00:52:48 IST
இது ஒன்னும் பெரிய செய்தி இல்லை, மாநிலங்களுக்குள் நாம் அடித்துகொள்ளும் பொழுது, பாகிஸ்தானை குறை கூற நமக்கு தார்மிக உரிமை கிடையாது. காங்கிரஸ் ஒழியும் நாள் இந்தியாவின் விடிவு மற்றும் உண்மையான சுதந்திர நாள்....

கருத்துகள் இல்லை: