நெல்லை அருகே இலங்கை அகதிகள் 54 பேர் கைது ; கொல்லம் வழியாக தப்பிக்க முயற்சியா ?
திருநெல்வேலி: சென்னை சுற்றுப்பகுதியில் உள்ள முகாமில் வாழும் இலங்கை அகதிகள் 54 பேர் நெல்லை அருகே தென்காசியில் ஒரு விடுதியில் தங்கி இருந்தபோது கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இலங்கையை சேர்ந்த பல சிங்களவர்கள் ஒட்டுமொத்தமாக தங்கி இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அனைவரும் சென்னையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்கள் என்றும், தாங்கள் ஊர் சுற்றிப்பார்க்க வந்ததாகவும் கூறினர். இதில் 9 பெண்கள் , 5 குழந்தைகள் அடங்குவர். மொத்தம் 54 பேர். பொதுவாக முகாமில் வாழும் அகதிகள் வேறு முகாமில் வசிக்கும் தங்கள் உறவினர்களை சந்திக்க அதிகாரிகள் அனுமதி வழங்குவர். அதுவும் ஒரு குறிப்பிட்ட கி.மீட்டர் தூரம் வரை தான் செல்ல முடியும். இரவோடு, இரவாக முகாமுக்கு திரும்பி விட வேண்டும். இது போன்ற நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன. இவர்கள் நேற்று இரவு முகாமில் இருந்து கிளம்பியிருக்கின்றனர். திருநெல்வேலிக்கு வருவதற்கான சிறப்பு அனுமதி கடிதம் ஏதும் இல்லை. பாஸ்போர்ட் எதுவும் இல்லை. உண்மையிலேய ஊர் சுற்றி பார்க்க வந்தார்களா அல்லது தென்காசியில் இருந்து கொல்லம் வழியாக இலங்கைகக்கு தப்பி செல்ல திட்டமிட்டருப்பார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக ஒரு போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது விசாரித்து கொண்டிருக்கின்றோம் உடனே முழு விவரத்தை தெரிவிக்க முடியாது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக