ஒரே மாதிரியான டான்ஸ், வசனம், கேரக்டர் என நடிக்காமல் விதம் விதமான கேரக்டர்களில் நடிக்க விஜய் முயல வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு விஜய் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனராம்.
தமிழ் நாட்டில் ஒரு டிவி உள்ளது. அதன் பெயர் விஜய் டிவி. வெறும் சினிமா, மூக்கைச் சிந்தி சிந்தி அழும் மெகா சீரியல்கள், அரைவேக்காட்டுத்தனமான ஷோக்கள் என அறிவுக்கு வேலையே தர வாய்ப்பு கொடுக்காத, கிரியேட்டிவிட்டி சற்றும் இல்லாத நிகழ்ச்சிகளை மட்டுமே வழங்கும் பல தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில், வித்தியாசமான பல நிகழ்ச்சிகளுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்த புண்ணியம் இந்த டிவிக்கு உண்டு.வெறுமனே பார்த்து ரசித்து விட்டுப் போகும்படியாக இல்லாமல், பல்வேறு திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தி வைத்த புண்ணியமும் இதற்கு உண்டு. இந்த நிகழ்ச்சிகளைக் காப்பி அடித்து இன்று அனைத்து டிவிகளும் கல்லா கட்டிக் கொண்டுள்ளன.
விஜய் டிவியில் வரும் நீயா நானா என்ற ஷோ பெரும் பிரபலமானது. சிந்திக்க வைக்கக் கூடிய வகையிலான நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் நடிகர் விஜய் குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுஜனங்களில் ஒருவர் கூறுகையில் விஜய் வித்தியாசமாக நடிக்க வேண்டும். ஒரே மாதிரியான டான்ஸ், ஒரே மாதிரியான நடிப்பு, ஒரே மாதிரியான காட்சிகள் என இருப்பதை தவிர்க்க வேண்டும் என்று நல்லெண்ணத்துடன் அட்வைஸ் கொடுப்பது போல பேசினார்.
ஆனால் விஜய் ரசிகர்கள் இதைக் கேட்டதும் பொங்கி விட்டனர். நிகழ்ச்சித் தயாரிப்பு நிர்வாகியான காமராஜுக்கு கண்டனம் தெரிவித்தும், மிரட்டல் விடுத்து் ஆபாசமாக திட்டியும் தொலைபேசி அழைப்புகள் குவிகிறதாம். அவரது இமெயில் முகவரிக்கும் ஆபாசமான வார்த்தைகளால் அர்ச்சித்து மெயில் அனுப்புகிறார்களாம்.
இதுகுறித்து காமராஜ் வேதனை தெரிவித்துள்ளார். நல்ல விஷயத்தை ரசிகர்கள் ஏற்க மறுத்து இதுபோல நடந்து கொள்வது வருத்தம் தருகிறது என்றார் காமராஜ்.நல்லா நடிங்கன்னு சொன்னா கூட குற்றமாப்பா...?
பதிவு செய்தது: 02 Sep 2010 4:18 am
நடிப்பே வராத ஒருத்தனிடம் போய் நடி நடி என்றால் எப்படிடா வரும் நடிக்கதெரிந்த நிறைய நடிகர்கள் இங்கே இருக்கிறார்கள் அவர்கள் நடிப்பை ரசிக்க கத்துக்கொங்கடா...கைய கால ஆட்டிகிட்டு கொமாளிமதிரி ஆட்ரவன்கிட்ட எப்படி நடிப்பு வரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக