சனி, 18 நவம்பர், 2017

மருத்துவர் ராமதாஸ் :எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களை ரத்து செய்க!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களை ரத்து செய்க!
மின்னம்பலம் :அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தஞ்சாவூரில் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான வாகன நிறுத்தம் அமைப்பதற்காக அங்குள்ள மன்னர் சரபோஜி கல்லூரியின் விளையாட்டுத் திடல் சீரழிக்கப்படுகிறது. ஆட்சியாளர்களின் புகழ்பாடுவதற்காக நடத்தப்படவிருக்கும் அரைக்காசுக்குக் கூடப் பயனற்ற விழாவுக்காக அரசுக்கல்லூரியின் விளையாட்டுத் திடலை சீரழிப்பதா எனக் கண்டித்துள்ளார்.
விளையாட்டுத்திடலில் குறுக்கும் நெடுக்குமாக சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், அதன் பெரும்பகுதி கான்கிரீட் தளமாக மாற்றப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முடிந்த பின்னர், லட்சக்கணக்கில் செலவு செய்தாலும் கூட மன்னர் சரபோஜி கல்லூரியின் விளையாட்டுத் திடலை அதன் பழைய பொலிவுக்குக் கொண்டு வருவது சாத்திய மற்றது என வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்கள் ... தேர்தல் ஆணையம் தூங்குகிறதா?

மின்னம்பலம் :ஆர்.கே.நகரைப் போல தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் போலி வாக்காளர்களை நீக்கத் தமிழக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், " ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவைப் பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று போலி வாக்காளர்களை இணைத்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 45,000 போலி வாக்காளர்களை நீக்கம் செய்ய வேண்டுமென்று திமுக சார்பில் புகார் மனு அளித்து தமிழக தலைமைத் தேர்தல் ஆணையத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதன் விளைவாக நேற்று (நவம்பர் 17) தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகரில் முதல்கட்டமாக 30,000 போலி வாக்காளர்களை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. 15,000 பேரின் வாக்காளர் அடையாள அட்டைக் குறித்த பரிசீலனை நடந்து வருவதாகவும் கூறியுள்ளது.
இதேநிலைதான் தமிழகத்தின் மற்ற 233 தொகுதிகளிலும் உள்ளது. இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் தேர்தல் ஆணையத்திடம் நேரிலும், கடிதம் வழியாகவும் திமுக மாவட்ட செயலாளர்கள் அளித்துள்ளனர். தற்போது வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2018 புதிய வாக்காளர் பட்டியல் வெளியாகும்போது, போலி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு தூய்மையான பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

கமல் ஹாசன் கட்சிக்காக குவிந்த பணத்தை திருப்பி கொடுக்கிறார்

Siva  Oneindia Tamil : கட்சிக்காக கோடிக் கணக்கில் வந்து குவிந்த பணம்: திருப்பிக் கொடுக்கும் கமல் ஹாஸன்- வீடியோ சென்னை: கட்சிக்காக வந்துள்ள பணத்தை திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் உலக நாயகன் கமல் ஹாஸன். உலக நாயகன் கமல் ஹாஸன் தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார். கட்சி நடத்த மக்கள் பணம் தருவார்கள் என்றார். இதையடுத்து கமல் நற்பணி மன்றத்தினர் ரூ. 30 கோடி வசூலித்துள்ளனராம். இது போக மக்களும் கமலுக்கு பணம் அனுப்பி வருகிறார்கள். அதை எல்லாம் கமல் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது, Buy Tickets மக்கள் மக்கள் கட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள் என்று நான் சொன்னதை "ரசிகர்கள் கொடுப்பார்கள்" என்று ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. எனவே எனது நற்பணி மன்ற நிர்வாகிகளும், மக்களும் குழம்பி விடக்கூடாது என்பதற்காக இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன். பணம் பணம் எனக்கு கடிதங்கள், பணம் வரத் தொடங்கி விட்டது. ஆனால் நான் இப்போது பணம் வாங்கினால், அது சட்ட விரோதமாகிவிடும். அதை நான் விரும்பவில்லை. 

நடராஜன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. இந்தவாட்டி 2 ஆண்டுகள் மருத்துவ மனையில்?

தினகரன் :சென்னை : சசிகலாவின் கணவர் நடராஜன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சொகுசுக்கார் வழக்கில் 2 ஆண்டு சிறை உறுதி செய்யப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டார். தண்டனை உறுதியானதால் நடராஜன் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்பது குறிப்பித்தக்கது.

இரட்டை இலை கிடைக்கும்! பன்னீர் எடப்பாடி உற்சாகம்!... கிடைச்சுட்டாலும்

தினமலர் :அ.தி.மு.க., அணிகள் இணைந்த பின், இரட்டை இலை சின்னம் எளிதாக கிடைத்துவிடும் என, முதல்வர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நம்பினர். சின்னம் கிடைத்த பின், கட்சியில் தினகரன் ஆதரவாளர்களை  களையெடுப்பது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது போன்ற பணிகளை துவக்க, முடிவு செய்திருந்தனர். ஆனால், தினகரன் அணியினரும், இரட்டை இலைக்கு உரிமை கோரி, தேர்தல் கமிஷன் சென்றதால், சிக்கல் ஏற்பட்டது.
தேர்தல் கமிஷன் இரு தரப்பினரையும், விசாரணைக்கு அழைத்தது. இரு தரப்பிலும், பிரபல வழக்கறிஞர்களை வாதாட நியமித்தனர். தினகரன் அணியினர், 'இரட்டை இலை தங்களுக்கு கிடைக்காவிட்டால், அது முடக்கப் பட வேண்டும்' என்பதில், ஆர்வம் காட்டினர்; அதற்கேற்ப விவாதங்களை எடுத்து வைத்தனர்.

ஜெ.,அறையில் சோதனை இல்லை போயசில் 4 மணி நேர சோதனை நிறைவு

தினமலர்: சென்னை: ஜெ., இல்லத்தில் 4 மணி நேரம் நீடித்த சோதனை அதிகாலை 2 மணியளவில் நிறைவு பெற்றது. ஜெ., அறையில் சோதனை நடத்த, சசிகலா தரப்பினர் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. போயஸ் கார்டனில் ஜெ., வாழ்ந்த வேதா இல்லத்தில் நேற்றிரவு(நவ.,17), வருமான வரித்துறையினர், அதிரடியாக சோதனை நடத்தினர். ஜெ., வீட்டில் சோதனை நடக்கும் தகவல் தெரிந்ததும், இரவு, 10:30 மணிக்கு, விவேக், அலறியடித்து அங்கு ஓடி வந்தார். நான்கு மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. அதிகாலை சுமார் 2 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது. இந்நிலையில், ஜெ., அறையில் சோதனை நடத்த அனுமதிக்கவில்லை என ஜெயா டிவி சி.இ.ஓ., விவேக் தெரிவித்தார். சோதனைக்கு பின் அவர் தெரிவித்ததாவது: ஜெயலலலிதா வாழ்ந்த வீடு கோவில் போன்றது. இங்கு சோதனை நடத்தியது வேதனை அளிக்கிறது. ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த நாங்கள் அனுமதிக்கவில்லை. சோதனைகள் சில கடிதங்கள், 2 பென் டிரைவ், ஒரு லேப்டாப்பை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அழகிரி அரசியல் ... இன்னும் இருக்கிறது?



போயஸ் கார்டன் வருமானவரித்துறை நான்கு மணி நேர சோதனை ,, தொண்டர்கள் குவிந்தனர் !


விகடன் :தினேஷ் ராமையா. ர.பரத் ராஜ். கே.பாலசுப்பிரமணி. தே.அசோக்குமார்;:
Chennai: ஜெயலலிதாவின் அறையை சோதனையிட அனுமதிக்கவில்லை: விவேக் தகவல்!
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வருமானவரித்துறை கடந்த நான்கு மணி நேரங்களாக சோதனை நடத்தியது. ரெய்டு, தற்
போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஜெயா டிவியின் சி.இ.ஓ விவேக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், `ஒரு லேப்டாப் மற்றும் இரண்டு பென்ட்ரைவை சோதனையிட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். ஜெயலலிதாவின் அறையை சோதனையிட நாங்கள் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர் அதிகாரிகள்' என்று விவேக் தெரிவித்துள்ளார்.
ரெய்டுக்கு முழுக்காரணம் மாநில அரசுதான்: வி.பி.கலைராஜன்
போயஸ் கார்டனில் நடந்த வருமான வரி சோதனைக்கு மாநில அரசே முழுக்காரணம். சோதனையைக் கண்டு அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டார்கள் கொதித்து போயுள்ளனர் என்று தினகரன் ஆதரவாளர் கலைராஜன் போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்துள்ளார்.

போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு!


நக்கீரன் : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.   போயஸ்கார்டனில் குறிப்பாக பூங்குன்றன் பயன் படுத்திய அறையில் சோதனை நடைபெற்று வருகிறது.வேதா இல்லம் ஜெயலலிதாவின் நினைவிடம் ஆக்கப்பட்டு, அது அரசுடமை ஆக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், ;நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று இந்த சோதனை நடைபெற்று வருகிறது.சசிகலாவினர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இடங்களில் நடந்த வருமான வரி சோதனையைத்தொடர்ந்து இன்று இரவு போயஸ்கார்டனில் சோதனை நடைபெற்று வருகிறது.

குஜராத் தேர்தல் 2017: குஜராத்தில் காங்கிரஸ் அலை? இந்து பத்திரிகை

ஒரு வாரம் என்பதே தேர்தல் அரசியலில் ‘நீண்டகாலம்’ எனும்போது, இரண்டரை மாதங்கள் என்பதை ‘ஒரு யுகம்’ என்றே சொல்லிவிடலாம்: குஜராத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ‘லோக்நீதி-சிஎஸ்டிஎஸ்’ அமைப்பு நடத்திய கருத்தறியும் வாக்கெடுப்பில் பாஜக மீண்டும் வெற்றிபெறுவது உறுதி என்றே தெரிந்தது. பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் 30% வாக்கு வித்தியாசம் இருந்தது. 2014 மக்களவை பொதுத் தேர்தலின்போது இருந்ததைப் போன்றது அது. தீபாவளிக்குப் பிறகு, அக்டோபரில் நடத்திய அடுத்த வாக்கெடுப்பில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்குமான ஆதரவு வேறுபாடு வெறும் 6% ஆகச் சுருங்கிவிட்டது. இம்மாத இறுதியில் இரு அணிகளுக்கும் ஆதரவு சம அளவு என்றாகிவிடுமோ என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 18-ல் வாக்குகள் எண்ணும் போது விடை கிடைத்துவிடும். இப்போதும்கூட பாஜக முன்னிலையில் இருந்தாலும், வாக்காளர்களின் ஆதரவு காங்கிரஸை நோக்கி வலுவாகத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இதே நிலையை காங்கிரஸ் பராமரித்தால் இன்னும் மூன்று அல்லது நான்கு வாரத்தில் பிரதமர் மோடி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் சொந்த மாநிலத்திலேயே பாஜகவுக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டுவிடும்.

ஷாலின் : நாச்சியார் வாயிலிருந்து 'தேவிடியா பயல்கள்' ... சமூகநீதியை விலைபேசுவது....


Shalin maria lawrence : ஜோதிகா அந்த வார்த்தையை உபயோக படுத்தியது சரியா தவறா என்கிற விவாதம் அவசியமற்றது .
இங்கு விவாதிக்கப்பட வேண்டியது வேறு ஒரு முக்கிய விஷயம் .
ஆயிரம்தான் 'தேவரடியால் ' 'தேவருக்கு அடியாள் ' 'கோயில் நடன மங்கைகள் ' என்று நாம் சப்பை கட்டு கட்டினாலும் 'தேவடியா பயல்கள் ' என்கிற வார்த்தை ஒடுக்கப்பட்ட மக்களை குறிப்பிட ஆதிக்க சாதியினரால் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தபட்டு வரும் ஒரு சமூக இழிவுச்சொல் .
வர்ணாசிரமதின்படி சூத்திரர்கள் என்ற பாகுபாடிற்கு அர்த்தமாக விளங்கிய அந்த வார்த்தையை சூத்திரர்களே மற்ற ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக உபயோகப்படுத்த ஆரம்பித்தனர் .
பற தே......பயலுகளா என்கிற வார்த்தையைதான் திரு பாலா அவர்கள் இந்த படத்தில் கத்தரித்து சாதுரியமாக புகுத்தி இருக்கிறார் .

வெள்ளி, 17 நவம்பர், 2017

10 லட்சம் அதிமுக போலி வாக்காளர்கள்!

10 லட்சம் போலி வாக்காளர்கள்!
மின்னம்பலம் :திமுக புகாரின் அடிப்படையில் சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் போலி வாக்காளர்களை நீக்கித் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பத்து லட்சத்துக்கும் அதிகமான போலி வாக்களர்களை நீக்கம் செய்யவும் முடிவெடுத்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பணப் பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இத்தொகுதியில் போலி வாக்காளர்கள் ஏராளமாக உள்ளனர், அவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மன்னிப்புக் கேட்டும் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!

மன்னிப்புக் கேட்டும் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!மின்னம்பலம் : சமூக வலைதளங்களில் நீதிபதி குறித்துக் கருத்து பதிவிட்டதற்கு மன்னிப்புக் கோரியும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜாக்டோ ஜியோ நிர்வாகி இளங்கோவன் மின்னம்பலத்திடம் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், ஆசிரியர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்துக் கருத்து தெரிவித்ததுடன், சில கேள்விகளையும் எழுப்பினார்.
இதையடுத்து ஆசிரியர்கள் சிலர் நீதிபதி கிருபாகரன் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தனர். அவ்வாறு விமர்சனம் செய்த ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து நேற்று (நவம்பர் 16) பள்ளிக் கல்வி துறை நடவடிக்கை எடுத்தது.

தினகரன், திவாகரன் ,விவேக்..... இந்தப் பஞ்சாயத்து எங்கே போய் முடியுமோ?’



டிஜிட்டல் திண்ணை!
மின்னம்பலம் :“வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னைக்கு வந்திருந்தார் சசிகலாவின் சகோதரர் திவாகரன். வருமான வரித் துறை அலுவலகத்தில் விசாரணை தொடர்பான அலுவல்களை முடித்த பிறகு நேராக மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக் வீட்டுக்குப் போயிருக்கிறார் திவாகரன். அங்கே விவேக் அவரது மாமனார் பாஸ்கர் உள்ளிட்ட குடும்ப உறவுகள் இருந்தார்களாம். விவேக்கிடம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசி இருக்கிறார் திவாகரன்.
‘இதெல்லாம் எதுக்காக பண்றாங்க என்று உனக்கு தெரியும். இப்போ இருக்கிற சூழ்நிலையில் நாம ஆளுக்கொரு பக்கம் பிரிஞ்சு இருந்தா அது எடப்பாடிக்கும் அவரை சார்ந்தவங்களுக்கும் கொண்டாட்டமாக போயிடும். டிடிவி கூட உனக்கு எந்த வருத்தமும் வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேசிக்கலாம். நீயும் அடிக்கடி அவரோடு பேசு. என்ன செய்யலாம்னு கலந்துகிட்டு முடிவுகளை எடு... நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டீங்கன்னு ஊரெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாங்க.

சாம் பித்ரோடா : 'குஜராத் மாதிரி' வளர்ச்சித் திட்டமே போலியானது

tamilthehindu : குஜராத் மாதிரி' வளர்ச்சித் திட்டமே போலியானது, அர்த்தமற்றது என காங்கிரஸ் கட்சிக்கும் இந்திரா காந்தி குடும்பத்துக்கும் நெருக்கமானவருமான சாம் பித்ரோடா கூறுகிறார்.
"வளர்ச்சி யாருக்கு? மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று ஏமாறாதீர்கள். சலுகைகள் கொடுத்து ஐந்து பெரிய தொழில்களை தொடங்கி விட்டால் அது வளர்ச்சியாகாது. அனைத்து தரப்பு மக்களையும் வந்தடையாத வளர்ச்சியால் என்ன பயன்?" என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அவரது பேட்டியில் இருந்து சில கேள்வி பதில்கள்..
குஜராத் மக்களுடனான சந்திப்பின்போது நீங்கள் அறிந்துகொண்ட பிரதான பிரச்சினை என்ன?
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், குஜராத்தில் நான் நிறைய அதிர்ச்சியான கதைகளைக் கேட்க நேர்ந்தது. அங்கு முறைசாரா தொழில்கள் முற்றிலுமாகவே புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது எவ்வித கவனமும் இல்லை. அவர்களுக்காக எந்த வளர்ச்சித் திட்டமும் இல்லை. அங்குள்ளவர்கள் ஏதாவது தகவல் வேண்டி தகவலறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தாலே போதும் உடனடியாக அடக்குமுறைகள் ஆரம்பித்துவிடும். 30, 40 ஆண்டுகளுக்கு முன் அரசு தானமாக வழங்கிய நிலங்களை தற்போது அரசாங்கமே ஆக்கிரமிக்கிறது என மக்கள் குமுறுகின்றனர். கேட்டால், தொழில் வளர்ச்சி என்கின்றனராம். இத்தகைய பிரச்சினைகளைத்தான் நாங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்யவுள்ளோம்.

கேரளா 516 கி.மீ தூரத்தை 6.45 மணி நேரத்தில் கடந்து மருத்துவமனையில் குழந்தயை சேர்த்த ஆம்புலன்ஸ்

Advaid @Advaidism
Replying to @Advaidism
Malayalam Social media and Traffic Police also played a huge role from 9pm yesterday night to 03:15am today morning.http://www.metrolive.net/kochi/ambulance-driver-thameem-549473 
Advaid @Advaidism
Traffic Police controlling the vehicles and the crowd at a Junction in Thrissur as the Ambulance and Police Jeep passes through.

கேரளாவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் 500 கிமீ தூரத்தை 6 மணி 45 நிமிடத்தில் கடந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு செல்ல சுமார் 14 மணி நேரங்கள் பிடிக்கும். ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர் ஹமீம் வெறும் 6 மணி 45 நிமிடத்தில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தை அடைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.< இதில் ஆம்புலன்ஸ் செல்லும் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க ஹமீக்கும் கேரள அரசும், கேரள போக்குவரத்து காவல்துறையும் பெரும் உதவி புரிந்துள்ளது.
கேரளாவின் கடற்கரை நகரமான காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த தமீம், கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

Breaking News சுப்பிரமணியன் சாமி சசிகலா தினகரனின் முழுநேர அடியாள் ...நிச்சயம் பெரும்தொகை ...?

வெப்துனியா :தமிழகத்தில் வருமான வரித்துறையினர் சசிகலா குடும்பத்தை குறிவைத்து மெகா ரெய்டை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சசிகலாவை விட மிகப்பெரிய ஊழல்வாதி கருணாநிதி என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக தாக்கி பேசியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் பாஜக சசிகலாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தாலும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆரம்பம் முதலே சசிகலா ஆதரவு நிலைப்பாடிலேயே உள்ளார். பல சந்தர்ப்பங்களில் அவர் அதை வெளிக்காட்டியுள்ளார். இரட்டை இலை தொடர்பாக, கட்சியின் அடுத்த தலைமை குறித்த கேள்வி எழும்போது என பல நேரங்களில் சசிகலாவுக்கு ஆதரவாகவே சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்து வந்திருக்கிறார்.  சுப்பிரமணியன் சாமிக்கு மன்னார்குடி மாபியாவின் அடியாள் பதவி கிடைத்துள்ளது .. இனி எஞ்சிய வாழ்நாளை அவர்களுக்கு சேவகம் செய்து பணமும் பதவியும் சம்பாதிப்பார், சசிகலாவை விட நேர்மையான அரசியல்வாதி இந்தியாவிலேயே  இல்லை என்றும் கூறுவார் பொறுத்து இருந்து பாருங்கள்

17 வயது மாணவி; 10 நாட்கள்; நான்கு பேர்: பெங்களூரில் மீட்ட போலீசார்! 17-year-old kidnapped, raped by 4 men over 10 days in Whitefield lodge


வெப்துனியா :கர்நாடக மாநிலம் பெங்களூரில் 17 வயது மாணவியை இரண்டு பேர் கடத்தி சென்று 10 நாட்களாக ஹோட்டலில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.குறித்த 17 வயது மாணவி நண்பார்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொள்ள ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது இருவர் அந்த மாணவியை ஏமாற்றி அவர்களோடு அழைத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் மாணவியை ஹோட்டல் அறை ஒன்றில் அடைத்து வைத்து 10 நாட்களாக மாறி மாறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
இந்த சம்பவம் ஹோட்டல் உரிமையாளருக்கு தெரியவர, போலீஸுக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய அவரும் சேர்ந்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் மாணவியை காணவில்லை என போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சவுக்கு : ஆட்சிக்கு வந்த ஆட்டு தாடி... அடிமை அமைச்சர்களும், ஒரு ஆளுனரும்

savukkuonline.com  : ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னர் பதவியும் அவசியமில்லாதவை என்றார் அறிஞர் அண்ணா.    அவரின் வாக்கை மீண்டும் விவாதத்துக்கு கொண்டு வரும் பணியை தமிழக ஆளுனர் பன்வாரிலால் செய்துள்ளார்.
தமிழகத்திற்கு நியமிக்கப்பட்ட முழுநேர ஆளுனர் பன்வாரிலால் புரோகித் செவ்வாயன்று, பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று அமைச்சர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் நேரடியாக அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தினார்.   ஆளுனரின் இந்த நடவடிக்கையை பாகுபாடு இல்லாமல் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே குரலில் கண்டித்துள்ளன.
புதன் கிழமை கோவையில் நடந்த ஒரு விழாவில் பேசிய பன்வாரிலால் புரோகித், ஆய்வு நடத்தினால்தான் அரசை பாராட்ட முடியும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு நடத்த உள்ளதாகவும் பேசினார்.    ஆளுனர் கோவையில் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தபோதே, அவசர அவசரமாக ஆய்வு நடக்கும் இடத்துக்கு விரைந்து சென்ற உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி, அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியே வந்த பிறகு, ஆளுனர் ஆய்வு செய்வதற்கு கோவை மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பெருமையாக உள்ளது என்றும், இது மிக மிக ஆரோக்கியமான ஒரு நடவடிக்கை என்றும் கூறினார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், ஆளுநர் ஆய்வு செய்வதால், மாநில சுயாட்சி பாதிக்கப்படாது என்றார்.   செல்லூர் ராஜு, ஆளுனர் ஆய்வு செய்ததில் எவ்வித தவறும் இல்லை என்றார்.  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், டேக் இட் ஈசி என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

சென்னையில் 50 பெண்களை பலாத்காரம் செய்த அறிவழகன் கைது .. வீடு புகுந்து கத்தி முனையில் ...

Veera Kumar  Oneindia Tamil : சென்னையில் பரபரப்பு... கத்திமுனையில் 50 பெண்களை பலாத்காரம் செய்த காமுகன் கைது- 
சென்னை: கத்தி முனையில் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து நகைகளையும் கொள்ளையடித்த, காமுகனை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த வில்லியம்ஸ் நேற்று தனியாக நடந்து சென்றபோது, டூவீலரில் வந்த வாலிபன் ஒருவன் திடீரென கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.8,500 பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பியோடியுள்ளான். 
இதுகுறித்து வில்லியம்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து, கிண்டி, வேளச்சேரி, குமரன் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், போலீசார் வாகன சோதனையை கடுமையாக்கினர். 
  மடக்கிப்பிடித்த போலீசார் இந்த நிலையில், குமரன் நகர் பகுதியில் போலீசாரை கண்டதும், திடீரென பைக்கின் வேகத்தை கூட்டி தப்பிக்க முயன்றார் ஒரு வாலிபர். சந்தேகத்தின்பேரில் போலீசார் அந்த பைக்கை மடக்கிப் பிடித்தனர்.

நடராஜனுக்கு 2 ஆண்டு சிறையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம் .. லெக்சஸ் கார் இறக்குமதி வழக்கு

tamilthehindu :சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் 2010-ம் ஆண்டு நடராஜன் உள்ளிட்டோர் மீது விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக (அம்மா) அணியின் பொதுச் செயலாளர்  சசிகலாவின் கணவர் நடராஜன் லண்டனில் இருந்து, 'லெக் சஸ்' என்ற சொகுசு காரை, 1994ல் இறக்குமதி செய்தார். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பழைய கார் எனக்கூறி, இறக்குமதி செய்ததில், வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில், 1994ல் வெளியான புதிய ரக கார் என தெரிய வந்தது. வரி ஏய்ப்பு மூலம், 1.06 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, நடராஜன், அவரது உறவினர் வி.என். பாஸ்கரன், உள்ளிட்ட மேலும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை, சிபிஐ விசாரித்தது. இதில் நடராஜன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும், சென்னை, எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

கேரளா தலித் அர்ச்சகரை பதவி நீக்கம் செய்யவேண்டுமாம் அவாள் கோரிக்கை .. 10 நிமிடம் தாமதாக வந்தாராம்

10 நிமிசம் லேட்டா வந்தாராம். அதனால பணிநீக்கம் பண்ணனுமாம். இந்தியாவின் முதல் தலித் அர்ச்சகர் யது கிருஷ்ணனுக்கு எதிராக, கேரளாவில் அவாள்கள் போராட்டம் அறிவிப்பு< Indian Express :  Brahmin priests demand expulsion of Dalit recently appointed to temple post in Kerala, suspend protest amid criticism
By Online Desk  |   Published: 30th October 2017 08:32 PM  |  
Last Updated: 30th October 2017 08:32 PM  |   A+A-   |  

Yedu Krishnan was the first among the six Dalit priests appointed by the Kerala government to take charge (Photo | Facebook/Rahul Easwar)
A hunger strike that was announced yesterday by All Kerala Santhi Kshema Union (AKSKU), an organisation of Brahmin priests in Kerala, demanding the expulsion of a recently appointed Dalit priest, has been called off, amid criticism.

இனி வீடுகளுக்கு விலாசம் இல்லை ... 6 இலக்கங்கள் மட்டுமே ... அடுத்த கூத்து ஆரம்பம்

Prasanna VK 
GoodReturns Tamil  : இந்தியாவை முழுவதையும் டிஜிட்டல்
மயமாக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ள மத்திய அரசு மனிதர்களுக்கு ஆதார் எண்ணை வழங்கியதைப் போல் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு டிஜிட்டல் டே கொடுக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இனி ஒவ்வொருவரின் வீட்டின் விசாலமும் அகற்றப்பட்டு டிஜிட்டல் டேங் பயன்படுத்தப்படும் அளவிற்கு இப்புதிய திட்டம் செயல்படுத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு துறையின் கீழ் இருக்கும் தபால் துறை, இந்தியாவில் இருக்கும் அனைத்து வீடு, அலுவலகங்கள், நிலம்
ஆகியவற்றுக்கு 3 இலக்க பின்கோடை அடிப்படையாகக் கொண்டு 6 இலக்க ஆல்பாநியூமரிக் (ஆங்கில எழுத்துகள் உடன் எண்கள்) டிஜிட்டல் டேக் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கூகிள் மேப் வழங்குவதைப் போலத் தபால் துறை நாட்டில் இருக்கும் அசையா சொத்துக்களான அனைத்து வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்குத் தனித்தனியாக ஈ-லொகேஷன், ஆதாவது மின்னணு முறையிலான இருப்பிட விலாசம் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

வே.ஆனைமுத்து :வணிகப் பெருமக்களே! செல்வந்தர்களே! தமிழ்ப்பெருமக்களே! அறிஞர்களே!


சிந்தனையாளன்” சாதனைகளைச் சீர்தூக்குங்கள்! 
2018 பொங்கல் மலருக்கு விளம்பரம் தாருங்கள்! 
கூட்டாட்சி மாநாட்டுக்கு நன்கொடை தாருங்கள்!
கீற்று : “சிந்தனையாளன்” கிழமை இதழ் 17.8.1974இல் திருச்சியில் என் சொந்தப் பொறுப்பில் தொடங்கப்பட்டது.
“சிந்தனையாளன்” இதழ்தான், முதன்முதலாக 1975இல், “பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய மத்திய அரசில் கல்வியிலும் வேலையிலும் தனி இடஒதுக்கீடு வேண்டும்” எனக் கோரியது. அக்கோரிக்கை பற்றி அன்றையப் பிரதமர் இந்திராகாந்திக்கும், அவரால் சுவரண்சிங் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவுக்கும் நான் எழுதியதைத் தமிழர்களுக்கு அறி வித்தது. அதன் இன்றியமையாமையை உணர்த்தியது.
1977 தேர்தலில் காங்கிரசுக் கட்சி படுதோல்வி அடைந்தது. லோகியா சோசலிஸ்டுகளின் சனதாக் கட்சி கூட்டணி ஆட்சி அமைந்தது.
நம் கட்சி 8.8.1976இலேயே தொடங்கப்பட்டது. 1977 தேர்தலை நாம் புறக்கணித்தோம்.
ஆனால் தந்தை பெரியாரின் உயிர் மூச்சுக் கொள் கையான வகுப்வுhரிப் பிரதிநிதித்துவம் ஒன்றையாவது இந்திய அளவில் வென்றெடுக்க, 1978 மார்ச்சில் நாம் முடிவெடுத்தோம்.
அதற்கான கோரிக்கை விண்ணப்பத்தை “சிந்தனை யாளன்” இதழில் வெளியிட்டோம்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கைப்பற்ற நினைத்தால் யாராலும் தடுக்க முடியாது: உள்துறை இணை மந்திரி

தினத்தந்தி :புதுடெல்லி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா நினைத்தாலும் கைப்பற்ற முடியாது என்று  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா கடந்த சில தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்தார். பரூக் அப்துல்லா  கூறும் போது, “ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகும். மறுபக்கம்  இருக்கும் பகுதி இந்தியாவுக்குச்சொந்தமானதாகும். இந்தியாவும் பாகிஸ்தானும் எத்தனை ஆண்டுகள் போரிட்டாலும் இந்த நிலைமை மாறாது” என்று தெரிவித்து இருந்தார் இந்த நிலையில்,  மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹீர் கூறியிருப்பதாவது:-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. முந்தைய அரசுகள் செய்த தவறுகளால் அப்பகுதி இப்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்பகுதியைக் கைப்பற்ற வேண்டுமென்று நாம் (இந்தியா) நினைத்துவிட்டால், அதனை எவராலும் தடுக்க முடியாது. பாகிஸ்தானிடம் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தா

ஜல்லிக்கட்டில் பேசிய காவலருக்கு பத்து மாதங்கள் கழித்து தண்டனை:



tamilthehindu :சென்னை மெரினா ஜல்லிக்கட்டின் போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திடீரென மைக் பிடித்து பேசி பரபரப்பூட்டிய ஆயுதப்படை காவலர் மாயழகு மீது 10 மாதங்கள் கழித்து போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் வரலாற்று சிறப்பு மிக்கது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் போலீஸாரும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும் அன்பாக இருந்தனர். குடிநீர், உணவை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

சமுக ஊடக .. அவா இவா புரிஞ்சிண்டேளா... சாதிவெறி பிடித்த மூடர்கூட்டம் இது

Don Ashok : மோடியை மாய்ஞ்சு மாய்ஞ்சு ப்ரொமொட் பண்ணது சோ, சுனா ஸ்வாமி, குருமூர்த்தி மாமாக்கள். சோ செத்துப் போயிட்டாரு. விட்ருவோம்.
இப்ப சு.சுவாமியும், குருமூர்த்தியுமே கூட இந்திய பொருளாதாரம் மூழ்குவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதைபோலத்தான் ஒவ்வொரு தேர்தல் முடிந்தபின்னும், "நான் தவறு செய்துவிட்டேன்,”னு வைகோ மூக்கு சிந்துவாரு. அந்தாளை நம்ம காமடி பீசாக்கி ஓட்டுவோம். ஆனா இந்தியாவின் பொருளாதாரத்தையே நாசமாக்கிய ஒரு மகா மூடர் பிரதமர் ஆவதற்காக, மீடியா மீடியாவாக புழுகிவிட்டு, இன்று ஒன்றுமே நடக்காததைப் போல பேட்டி தரும் இந்த மாமாக்களை சுலபமாக கடந்து போய்விடுகிறோம். இனியாவது புரிந்துகொள்ளுங்கள். வெள்ளைத்தோலோடு, அவா இவா எனப் பேசுவதும், ஆங்கிலத்தில் பேசுவதும் அறிவாளி என்பதற்கான அடையாளங்கள் அல்ல. சாதி/மத வெறிக்காக நாட்டையே பலிகொடுக்கும் முரட்டு முட்டாப்பீசுகளே இதுகள்.

பார்ப்பனர்களுக்குதான் இயல் இசை நாடகம் எல்லாம் இருக்கும் .. அப்படீன்னு ஒரு காலம் இருந்துச்சி ?

மார்ட்டின் சந்தர் கிங் : பார்ப்பனர்களுக்குதான் அறிவு இருக்கும் என்றொரு பொதுபுத்தி நீண்டகாலமாகவே தமிழகத்தில் நிலவி வருகிறது. நடிகர் விவேக் புத்திசாலி என்பதால் (!) அவர் பார்ப்பனராகதான் இருக்க வேண்டும் என்று தான் கருதியதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தேகூட ஒருமுறை மேடையில் பேசியிருக்கிறார்.
பார்ப்பனர்களுக்கு அறிவு இருக்கும் என்கிற அந்த பிம்பம் சமீபவருடங்களாக - குறிப்பாக பிஜேபி ஆட்சிக்கு வந்தபிறகு - உடையத் தொடங்கி இருப்பது ஒரு நல்ல சமூக முன்னேற்ற நிகழ்வு. Demonetisation மற்றும் GST தொடர்பான மத்திய அரசின் முட்டாள்தனமான நடவடிக்கைகளில் முட்டுக் கொடுத்து தங்களுக்கு சராசரி அறிவு கூட இல்லை என்பதை ஐயமற நிரூபித்திருக்கிறார்கள்.
‘அய்யிரு சொன்னா சரியாதானிருக்கும்’ என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தவர்கள் கூட ஏடிஎம் க்யூக்களில் மணிக்கணக்காக நின்றது, வங்கி வங்கியாக போய் பிச்சையெடுத்தது, நூறு ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு நூற்றி முப்பது ரூபாய் பில் செலுத்துவது என்று நாய்படாத பாடு பட்ட அனுபவங்களால் தங்கள் மனப்பதிவை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக ரங்கராஜ் பாண்டேவை ப.சிதம்பரம் வறுத்தெடுத்த பிற்பாடு ‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ என்று அலைகிறார்கள் பார்ப்பனர்கள். வெறும் வாய் உதார் வைத்தே இதுவரை ஏரோப்ளேன் ஓட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு வருங்காலம் போதாத காலமாக இருக்கப் போவது உறுதி. இதை செய்வதற்காகதான் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக திராவிட இயக்கமே தோன்றியது. அந்த இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிற ஆசுவாசம் ஏற்படுகிறது.

வியாழன், 16 நவம்பர், 2017

காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே சிலை திறப்பு

Special Correspondent FB Wing :
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே சிலையை தனது அலுவலகத்தில் நிறுவி அகில இந்திய ஹிந்து மகாசபை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்து பிராமண குடும்பத்தில் ராம்நாத் விநாயக் கோட்ஸே பிறந்த தீவிர ஆர் எஸ் எஸ் ஆதரவாளர் அவர் முஸ்லீம் பெயரை தந்து கையில் பச்சை குத்தி மற்றும் முஸ்லீமமுறைப்படி சுன்னத்து செய்தும் காந்தியை சுற்று கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது . குவாலியரில் உள்ள ஹிந்து மகா சபை அலுவலகத்தில் நாதுராம் கோட்சேயின் மார்பளவு சிலையை ஹிந்து மக சபையின் தேசிய துணை தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ் திறந்து வைத்துள்ளார். கோட்சேவுக்கு ஆலயம் கட்டுவது இந்து மகா சபையின் நீண்ட நாள் கனவாகும் என்றும் கூறியுள்ளார் மேலும் விரைவில் கோட்சே கோயில் கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். சிலை திறப்பு அன்று கோட்சேயின் நினைவு தினத்தையும் ஹிந்து மகாசபையினர் அனுசரித்துள்ளனர். காந்தியை கொன்ற கோட்சேவிற்கு சிலை வைத்துள்ளதை கண்டித்து போபாலில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநர் ஆய்வு: டேக் இட் ஈஸி! அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

மின்னம்பலம் :கோவையில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்ட விவகாரத்தை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவைக்கு, இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசு வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வு, தமிழகத்தில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. ஆளுநரின் செயல் மாநில உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளதாக பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும், ஆளுநரின் ஆய்வு ஆரோக்கியமானதுதான் என பாஜகவினரும் அதிமுக அமைச்சர்களும் தெரிவித்துவருகின்றனர்.
டிசம்பர் 3ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இன்று( நவ.16) கோவை வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இதுபற்றிப் பேசினார். “கோவை ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

திவாகரன் :தமிழிசையை முதல்வராக்க ஒத்திகை!

மின்னம்பலம் :கோவையில் தமிழக ஆளுநர் ஆய்வு செய்ததையும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதையும், அமைச்சர்கள் வரவேற்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.
மயிலாடுதுறைக்குச் சென்ற திவாகரன் அங்கே பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது வருமான வரித் துறையினரின் சோதனை, ஆளுநர் பன்வாரிலாலின் கோவை ஆய்வு முதலானவை பற்றிப் பேசினார். ஆளுநர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதை அமைச்சர்கள் வரவேற்றிருக்கின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதைப் பார்க்கும்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழிசையை நிறுத்தி முதல்வராக்க ஒத்திகை நடப்பது போலத் தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் விட்டுக்கொடுத்துவிடுவது போலத் தெரிகிறது” என்றார்.

சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு நியுட் , எஸ்,துர்கா படங்கள் மறுக்கப்பட்ட அநீதி!


minnambalam :சர்வதேச இந்திய திரைப்பட விழாவிற்கு தேர்வாகியிருந்த நியூட், எஸ்.துர்கா ஆகிய படங்கள் இறுதி நேரத்தில் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக வேறு இரு படங்கள் கலந்துகொள்கின்றன.
சர்வதேச இந்திய திரைப்படவிழா கோவாவில் வரும் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வுக்குழுவால் தேர்வுசெய்யப்பட்ட இந்த படங்கள் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தேசிய விருதுபெற்ற இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கியுள்ள மராத்தி திரைப்படம் நியூட். மும்பையில் உள்ள கவின்கலை கல்லூரியில் ஓவியர்கள் வரைவதற்காக நிர்வாண மாடலாக செல்லும் ஒரு பெண்ணை பற்றியும் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியும் இப்படம் பேசுகிறது. கல்யாணி முலே, சையா கடம் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் நஸ்ருதின் ஷாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

துரை தயாநிதி மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் ... அழகிரி மகன் தயாநிதி ,,,,

துரை தயாநிதி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!மின்னம்பலம் : முறைகேடாக கிரானைட் வெட்டி எடுத்தது தொடர்பான வழக்கு ஒன்றில் முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்ஸ் கிரானைட் பங்குதாரராக இருந்த முக.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீது சட்டத்திற்குப் புறம்பாக மதுரை கீழவளவுப் பகுதியில் கிரானைட் வெட்டி எடுத்ததாகக் கூறி கடந்த 2012ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முறைகேடாக கிரானைட் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.254 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை!

மின்னம்பலம் :புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவும் வகையில் இலவசமாக மருத்துவ சிகிச்சை (கீமோதெரபி) அளிக்க ‘ஆற்றல்’ என்ற புதிய அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை!சென்னை சவிதா மருத்துவ கல்லூரி, சென்னை நைட்ஸ் ரவுண்டு டேபிள் போன்ற 181 அமைப்பை சேர்ந்தவர்கள் இணைந்து ஏற்படுத்தியுள்ள இந்த அமைப்பின் தொடக்க விழா நேற்று (நவம்பர் 15) நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் மற்றும் அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா கலந்துகொண்டு ‘ஆற்றல்’ அமைப்பைத் தொடங்கிவைத்தார்.
“வாழ்வியல் மாற்றம், உணவுப் பழக்கவழக்கம், மரபணு ஆகியவற்றால் புற்றுநோய் ஏற்படுகிறது. பெண்கள் அதிக அளவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

ரேஷன் உணவு கிடைக்காததால் பசியில் பெண் மரணம்! உபியில் ... பயோ மெற்றிக் பிரச்சனையாம் .

ஆதார்: பசியில் பெண் மரணம்!
மின்னம்பலம் :உத்தரப் பிரதேசத்தில் ரேஷன் கடையில் உணவுப் பொருட்கள் வழங்க மறுத்ததால் பெண் ஒருவர் பசியில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சகினா (50). இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ரேஷன் கடைக்கு கணவர் இஷாக் அகமதுவுடன் சென்று பயோமெட்ரிக்கில் கைரேகை வைக்க முடியவில்லை. ரேஷன் கார்டில் குடும்ப தலைவியாக சகினாவின் பெயர் உள்ளதால், சகினா வந்தால் மட்டுமே உணவுப் பொருட்களை வழங்க முடியும் என ரேஷன் கடை அதிகாரிகள் இஷாக் அகமதுவிடம் கூறியுள்ளனர். வறுமை சூழலில் இருந்த சகினா பசியால் மரணமடைந்துள்ளார்.
துணை மண்டல நீதிபதி ராம் அக்‌ஷய் நேற்று தன் டிவிட்டர் பக்கத்தில், “இஷாக் அகமதுவின் குடும்பம் மிக ஏழ்மையான நிலையில் உள்ளது. மத்திய அரசின் அன்யோதயா திட்டத்தின் கீழ் இவர்களின் குடும்பத்துக்கு மாதம் 35 கிலோ கோதுமையுடன் அரிசி சக்கரை உள்ளிட்டவை வழங்க வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா வருமானம் குறித்து மோடியிடம் கேளுங்கள்: ராகுல் காட்டம்

tamilthehindu : பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவின் வருமானம் குறித்து பிரதமர் மோடியிடம் கேளுங்கள் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை அன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி.
அப்போது பேசிய அவர், ''என்னிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்கிறீர்கள். நானும் எப்போதும் பதில் சொல்கிறேன். ஆனால் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவின் வருமானம் குறித்து ஏன் நீங்கள் பிரதமரிடம் கேட்பதில்லை?'' என்று கேள்வி எழுப்பினார்.
பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா நிர்வகிக்கும் நிறுவனம் ஒன்றின் வருவாய் பல மடங்கு அதிகரித்துள்ளதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அதில் உண்மையில்லை என்றுகூறி அவர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி, அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி காற்றில் 60 சிகரெட் அளவு புகை மாசு ... மக்கள் மூச்சு திணறல்

tamilthehindu :டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகர அளவுக்குச் சென்றுள்ள நிலையில் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைநகரில் நேற்று முகக்கவசம் அணிந்து பேரணி சென்ற பள்ளி மாணவிகள்.   -  (படம்: ஷிவ்குமார்  புஷ்பகர்) எஸ்.ரவீந்திரன் கடந்த ஆண்டு வெளியான ‘எக்ஸோடஸ் - காட்ஸ் அண்ட் கிங்ஸ்’ என்ற ஆங்கிலப் படத்தில் ஒரு காட்சி வரும். இயற்கை சீற்றங்களால் எகிப்து நாட்டு மக்கள் அழிவதைக் காட்டியிருப்பார்கள். முதலில் நைல் நதி சிவப்பு நிறத்துக்கு மாறும். மீன்கள் செத்து மிதக்கும். குடிக்க தண்ணீர் இல்லாமல் போகும். அடுத்து, கால்நடைகள் நோய் வந்து செத்து மடியும். லட்சக்கணக்கில் எங்கிருந்தோ வரும் வெட்டுக்கிளிகள் பயிர்களை சேதப்படுத்தும். அதையடுத்து தொடர்ந்து 3 நாட்கள் இருள் சூழ்ந்திருக்கும். யாருமே வீட்டை விட்டு வெளியே வர முடியாது. தொற்று நோய் பரவி மக்கள் கொத்து கொத்தாய் செத்து மடிவார்கள். இதே போன்ற நிலைமைதான் டெல்லியிலும். காரணம் பனிப்புகை. இந்தப் புகை மண்டலத்தால் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தினகரனின் தங்கை சீதளாதேவிக்கும் , அவரது கணவருக்கும் சிறை தண்டனை ... உயர் நீதிமன்றம்

tamilthehindu : சசிகலா சகோதரி வனிதாமணியின் மகளும் டிடிவி தினகரனின் தங்கை மற்றும் அவரது கணவருக்கு 3 மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகள் சீதளா தேவி, இவர் டிடிவி தினகரனின் சகோதரி ஆவார். அவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியர். பாஸ்கரனும், அவரது மனைவியும் 1988 முதல் 1997 வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. 1998 ல் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 1999-ல் சிபிஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
2001-ல் சாட்சிகள் விசாரணை நடத்தப்பட்ட இந்த வழக்கில் 2008-ல் எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் மற்றும் 20 லட்சம் ரூபாய் அபராதம், சீதளாதேவிக்கு 3 ஆண்டு கடுங்காவல் மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி நாகநாதன் தீர்ப்பு வழங்கினார். இதனை எதிர்த்து, 2008-ம் ஆண்டே, இருவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

தினகரன் ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை ...

மாலைமலர் :அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் அடையாறில் உள்ள தனது இல்லத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை: அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் அடையாறில் உள்ள தனது இல்லத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரை சந்தித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன், பார்த்திபன் உள்ளிட்ட 18 பேர் தகுதி நீக்கம் செய்யபட்டனர்.
இதை எதிர்த்து அனைவரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் சென்னைக்கு வரவழைத்து திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கலைஞருடன் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி சந்திப்பு!

நக்கீரன் :சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கலைஞரை எம்.எல்.ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு,  கருணாஸ் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.தி.மு.க. தலைவர் கலைஞர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஒய்வெடுத்த வருகிறார். அவரை பல்வேறு அரசி்யல் கட்சி தலைவர்களும் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் இன்று இரவு 8 மணி அளவில் கோபாலபுரம் சென்று கலைஞரை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

காதலை ஏற்க மறுத்தாள்... எரித்துக்கொன்றேன்- இந்துஜாவை கொன்ற ஆகாஷ்

Mayura Akilan - Oneindia Tamil  : சென்னை: தனது காதலை ஏற்க மறுத்ததோடு குடும்பத்துடன் கேவலமாக பேசியதால் எரித்து கொன்று விட்டதாக இந்துஜாவை கொலை செய்த ஆகாஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆதம்பாக்கம் சரஸ்வதி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ரேணுகா. இவர்களது மகள்கள் இந்துஜா, நிவேதா, மகன் மனோஜ். இந்துஜா பட்டதாரி பெண். இவரை வேளச்சேரியை சேர்ந்த ஆகாஷ் என்ற வாலிபர் காதலித்தார். இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். இந்த காதலை இந்துஜாவின் பெற்றோர் ஏற்கவில்லை. காதலை கைவிடும் படி அறிவுறுத்தினார்கள். இதனால் மனம் மாறிய இந்துஜா ஆகாஷ் உடன் பேசுவதை நிறுத்தி விட்டாராம். ஆகாஷ் தொடர் தொந்தரவு ஆகாஷ் தொடர் தொந்தரவு ஆகாஷ் விடுவதாக இல்லை. தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். வேலைக்கு செல்லும் போதும் ஆகாஷ் தொந்தரவு செய்யவே, எரிச்சல் அடைந்த இந்துஜா ஆகாஷை கண்டித்தார். 

உயிரினங்கள் வாழும் சூழல் கொண்ட புதிய கிரகம் மிக அருகில் கண்டுபிடிப்பு !

தினத்தந்தி :கிரெனோபிள்,நமது பால்வெளி மண்டலத்தின் மூலையில் சிறிய சிவப்பு நட்சத்திரம் ஒன்று உள்ளது.பூமியின் அளவையொத்த கிரகம் ஒன்று அதனருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இதனை வானியியலாளர்கள் இன்று அறிவித்துள்ளனர்.இந்த கிரகத்தில் திரவ வடிவிலான நீர் இருக்க கூடும்.அதனால் வாழ்வதற்கான சூழல் உள்ளது.அந்த சிவப்பு நட்சத்திரத்தின் பெயர் ராஸ் 128.  இந்த நட்சத்திரத்தினை ஒரே ஒரு கிரகம் சுற்றி வருகிறது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.இதற்கு முன் டிரேப்பிஸ்ட் 1 என்ற சிவப்பு நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.அது பூமியில் இருந்து 40 ஒளி வருடங்கள் தொலைவு கொண்டது.பூமியின் அளவு கொண்ட 7 கிரகங்கள் அதனை சுற்றி வருகின்றன.ஆனால் மற்ற நட்சத்திரங்களை போன்று இல்லாமல் ராஸ் 128 மிக அமைதியான, கதிரியக்க சிதறல்கள் எதுவும் இல்லாத ஒன்றாக இருக்கிறது.கதிரியக்க சிதறலானது உயிரினங்கள் கிரகத்தில் வாழ்வதற்கான சூழலை தொடங்குவதற்கு முன்பே முற்றிலும் அழித்து விடும்.இது பூமியில் இருந்து 11 ஒளி வருடங்கள் தொலைவில் உள்ளது.

ஜிம்பாப்வே ராணுவ புரட்சி ! அதிபர் ராபர்ட் முகாபே கைது?

தினத்தந்தி :ஜிம்பாப்வே நாட்டில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் ராபர்ட் முகாபே கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. ஹராரே, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஜிம்பாப்வே. ஏழை நாடான அங்கு 1980–ம் ஆண்டுமுதல் 1987–ம் ஆண்டு வரை பிரதமராகவும், 1987 முதல் 2017 வரை அதிபராகவும் இருந்து ஆட்சி நடத்தி வந்தவர் ராபர்ட் முகாபே (வயது 93).
அங்கு அடுத்த அதிபர் ஆவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தவர் துணை அதிபர் எமர்சன் மனன்காக்வா. ஆனால் தனது மனைவி கிரேஸ் முகாபேவுக்கு (52) அதிகார போட்டியாக அமைந்து விடுவார் என்று கருதி, மனன்காக்வாவை அதிபர் ராபர்ட் முகாபே கடந்த வாரம் திடீரென பதவியில் இருந்து நீக்கி விட்டார்.

கோமாளி ஆட்சி நடக்கிறது! பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா விளாசல்

Chinniah Kasi :புதுதில்லி, நவ. 15 - இந்திய நாட்டில் தற்போது கோமாளித்தனமான ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக பாஜக மூத்த தலைவரும், வாஜ்பாய் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார்.கறுப்புப் பணத்தை கைப்பற்றப் போவதாக கூறி, பணமதிப்பு நீக்கத்தை அமல்படுத்திய மோடி - அருண் ஜெட்லி கூட்டணியால் நாட்டுக்கு ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி இழப்புதான் ஏற்பட்டுள்ளது என்றும், இதைப் பார்த்தால், 700 ஆண்டுகளுக்கு முன்பு, பழைய நாணயத்தை தடை செய்து, சுல்தான் முகமது- பின்- துக்ளக் ஆட்சியில் அரங்கேறிய கோமாளித்தனம்தான் நினைவுக்கு வருவதாகவும் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது;பண மதிப்பு நீக்க நடவடிக்கை யால் 1 லட்சத்து 28 ஆயிரம் கோடி நேரடி செலவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது; பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவிகிதம் குறைந்துள் ளதாக கூறப்பட்டு இருந்தாலும், உண்மையில் இதைவிட பாதிப்பு அதிகம் என்பதே எனது கணிப்பு; இந்திய பொருளாதாரத்தில் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி அளவுக்கு பாதிப்பை இந்தநடவடிக்கை ஏற்படுத்தி யிருக்கும் என்று மதிப் பிடுகிறேன்.