சிந்து சமவெளி படத்தைப் பார்த்த சென்னை மண்டல சென்சார் சிறிய தணிக்கைக்குப் பிறகு ஏ சான்றிதழ் அளித்தனர். ஆனால் படத்தை வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.
தமிழ் பட உலகில், சர்ச்சைக்குரிய கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குபவர் என்ற பெயரை குறுகிய காலத்தில் சம்பாதித்து விட்டவர் சாமி. பாலீஷ் வார்த்தைகளால் பேசத் தெரியாத படைப்பாளியான இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கினாலும், சரக்கிருப்பதால் இன்னமும் கோடம்பாக்கத்தில் மதிக்கப்படுகிறார்.
இவர் இயக்கிய முதல் படம் , 'உயிர்.' கொழுந்தன் மீது ஆசைப்படும் (கணவன் கையாலாகாதவன் என்பதால்) அண்ணியை பற்றிய கதை. அடுத்து இவர் இயக்கிய 'மிருகம்', ஊருக்கு அடங்காத ஒருவன், உயிர் கொல்லி நோய் வந்து சாகிற கதை. இந்தப் படம் வன்முறையை சற்று அதிகமாக தூக்கிப் பிடிப்பது போலத் தெரிந்தாலும், எய்ட்ஸை மையப்படுத்தி வந்த ஒரே படம் என்ற பெருமையைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து சாமி இயக்கியுள்ள புதிய படம் சிந்து சமவெளி.
இது, கள்ள உறவால் ஏற்படும் விபரீத விளைவுகளை சித்தரிக்கும் படம். ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாகவும், அனகா கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படம், தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், 3 காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு, படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கினார்கள்.
அதே நேரம், தினசரி செய்தித்தாள்களைத் திறந்தால் வரும் கள்ளக் காதல் செய்திகல் இந்தப் படத்தால் கொஞ்சமாவது குறையும் என்று நம்புவதாக பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

பதிவு செய்தது: 31 Aug 2010 11:05 pm
கேவலமா இருக்கு நீங்க எழுதிற கருத்துக்கள் எல்லாம். சினிமா என்பது ஒரு பொழுது போக்கு கருவி மட்டும் அல்லாமல் அது ஒரு சமுதாயத்தை சீர்திருத்தும் ஆயுதம். நீ உன் வீட்டை விட்டு எழுந்து பொய் வெளி உலகை பார். அப்போது தெரியும் இந்த சமுதாயம் எப்படி பட்ட சாக்கடை என்று. மக்களை மிருக தனத்தில் இருந்து மனித தன்மைக்கு கொண்டு வருவதில் சினிமா ஒரு மிகபெரிய சேவை செய்து கொண்டு இருக்கிறது. வாழ்க சினிமா.
பதிவு செய்தது: 31 Aug 2010 8:30 pm
sami director family eppadi?? epaddi thanna?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக