சனி, 16 ஆகஸ்ட், 2014

மலையாள திரை உலகம் மோகன்லால் அண்ட் கோ மாபியாக்களிடம் சிக்கி சீரழிகிறது ! வினயன் படத்துக்கு தடை ?



எனது படத்துக்கு பணியாற்ற வந்தவர்களை நடிகர் மிரட்டி விலக வைத்தார் என்று இயக்குனர் வினயன் புகார் கூறி உள்ளார்.தமிழில், ‘காசி‘, ‘என் மன வானில்‘ போன்ற படங்களை இயக்கியதுடன் பல்வேறு மலையாள படங்களை இயக்கி இருப்பவர் வினயன். இவருக்கும் மல்லுவுட் திரையுலக கலைஞர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இவரது படங்களுக்கு பெரிய நடிகர்கள் கால்ஷீட் தருவதில்லை. இதனால் புதுமுகங்கள், பிரபலமில்லாத ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார். தற்போது ‘லிட்டில் சூப்பர்மேன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை இயக்கவிடாமல் தனக்கு இடைஞ்சல் செய்ததாக வினயன் கூறினார். அவர் கூறியதாவது:ஒரு வழியாக லிட்டில் சூப்பர் மேன் படத்தை எதிர்ப்புகளுக்கு இடையே முடித்திருக்கிறேன். ஷம்மி திலகன் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் வாங்கினார். ஆனால் அவரை மல்லுவுட் நடிகர் சங்க தலைவர் இன்னொசென்ட் மிரட்டி விலகச் சொன்னார். அவரும் படத்திலிருந்து விலகிக்கொண்டார். அதேபோல் இசை அமைப்பாளர் எம்.ஜெயசந்திரனை தொழிலாளர் சங்க நிர்வாகி பி.உன்னிகிருஷ்ணன் விலக வைத்தார். இதையெல்லாம் மீறி தற்போது படத்தை முடித்திருக்கிறேன்‘ என்றார். - See more at: tamilmurasu.org

கவர்ச்சியாக நடித்து அப்புறம் கண்ணீர் விட்ட ஹன்சிகா !

மீகாமன் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சியில் கவர்ச்சியான உடையில் ஆர்யாவுடன் நெருக்கமாக நடித்துவிட்டு கதறி அழுதிருக்கிறார் ஹன்சிகா. இதனை படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனியே தெரிவித்தார். மீகாமன் படத்தில், "காமம் என்பது ரொம்ப வலியானது, ஆனாலும் சுகமானது " என்று தொடங்கும் பாடல் இடம்பெறுகிறது. ஆர்யா, ஹன்சிகா நடித்த இந்தப் பாடல் காட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியான உடை ஹன்சிகாவுக்கு தரப்பட்டது. மேலும் ஆர்யாவுடன் மிக நெருக்கமாக இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. பாடல் காட்சி முடிந்ததும் ஹன்சிகா ஓரமாக அமர்ந்து அழுதிருக்கிறார்.

விஜய மல்லையாவின் வீட்டில் கொலை ! பாதுகாப்பு அதிகாரியை கொன்றது யார் ?

கோவாவில் உள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மால்யாவின் ‘கிங்ஃபிஷர் வில்லா’வில் பாதுகாவலர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்று அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், “பீகாரைச் சேர்ந்த சரஜ் குமார் சிங் என்பவர் விஜய் மால்யாவின் ‘கிங்ஃபிஷர் வில்லா’வில் பாதுகாப்பு அதிகாரியாக பணிப் புரிந்துவந்தார். அவர் வெள்ளிக்கிழமையன்று மர்மமான முறையில் மரணம் அடைந்ததையடுத்து, அது தொடர்பாக கலன்குட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது”, என்று தெரிவித்தனர்.
சரஜ் குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக கோவா மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.பணக்காரன் வீடுகளில் இதெல்லாம் சகஜமப்பா . ஏழைக்கு நீதி கிடைக்காது . அதுவும் ஒண்ணாந்தர கேடி சாராய பிளஸ் விமான செர்விஸ் பிளஸ் ராஜ்யசபா முதலையான மல்லைய இதுபோல எத்தனை பண்ணினானோ யாருக்கு தெரியும் ? 900 கோடி அரசு வங்கி கடனுக்கு டிமிக்கி கொடுத்தவனுக்கு இது ஜுஜுப்பீ ?

தமிழக பாஜக புதிய தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்! காங்கிரஸ் குமரி ஆனந்தனின் மகள் !

தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய செயலாளராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் இன்று பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக மாநில பொதுச்செயலர், துணைத் தலைவராக ஏற்கனவே பணியாற்றியவர் தமிழிசை சவுந்தரராஜன். பாஜக விதிகளின்படி மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் மாநிலத் தலைவராக இருக்க முடியாது. தமிழக பாஜக தலைவராக இருக்கும் பொன். ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சராகி விட்டதால் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்பட்டது. மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளதால் தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் பதவியைக் கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட்டது. ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. மாநிலத் தலைவர் பதவிக்காக பலரும் டெல்லியில் முகாமிட்டு மேலிடத் தலைவர்களுக்கு நெருக்குதல் கொடுத்தனர். ஹெச் .ராஜாதான் தமிழக பாஜக தலைவராக வருவார் ஏனென்றால் அவர்தான் ஒரு அசல் பச்சோந்தி அடிமை. அப்படியானவங்கதான் மோடி காங்குக்கு தேவைன்னு சிலர் செய்த நெகடிவ் பிரசாரம் ஒர்க்காகி  கூஜா காலி !

பொறியியல் படித்த பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது ! ஆணாதிக்கம் சினிமாவுக்கு அடுத்து இங்குதான் அதிகம் ?

சென்னை, ஆக.15- பொறியியல் பட்டம் பயிலக்கூடிய பெண்கள் குறித்த ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது. அந்த ஆய்வில் பொறியி யல் பட்டம் முடித்த பெண்கள் அந்தப்படிப் பிற்குரிய பணிவாய்ப்பு களுக்கு செல்லாமல் இருப்பதும், அதற்கான தொழிலிலும் ஈடுபடுவ தில்லை என்றும் தெரிய வந்துள்ளது. பொறியியல் பட்டம் படித்து முடித்த பெண்களில் 40 விழுக் காட்டினர் உரிய கல்வித் தகுதி இருந்தும், அவர்கள் முறையாக நடத்தப்படாத தாலும், குறைந்த அளவி லேயே பணிசெய்யுமிடம், சூழல்கள் இருப்பதாலும், உடன் பணியாற்றுபவர் களாலும், மேலாளர்களா லும் தவறாக நடத்தப் படுவதாலும் பொறியியல் பட்டம் பெற்ற பெண்கள் பணிக்கு செல்லமுடியாத சூழல்கள் உள்ளனவாக ஆய்வுத்தகவல்கள் கூறு கின்றன.

YSR தலைவரை ஓட ஓட விரட்டி செருப்பால் அடித்த மகளிரணி தலைவி ! BRAVO !

கரீம் நகரில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மாவட்ட தலைவரை செருப்பால் அடிக்கும் மகளிரணி தலைவி.
கரீம் நகரில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மாவட்ட தலைவரை செருப்பால் அடிக்கும் மகளிரணி தலைவி.
தெலங்கானா மாநிலத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மாவட்ட தலைவரை மகளிரணி தலைவி செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தெலங்கானாவின் கரீம்நரில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். கட்சியின் உள்ளூர் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அங்கு கூடியிருந்தனர்.அரசியல்வாதிகள் யாரை யார் செருப்பால அடிச்சாலும் மக்கள் மகிழ்வார்களே ?

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

காதலிக்க நேரமில்லைக்கு பொன்விழா ! புரட்சி டைரெக்டர் ஸ்ரீதரின் பிரமாண்ட வெற்றி திரை !

ஐம்பது ஆண்டுகளுக்கு
முன்பு எடுக்கப்பட்ட படங்கள் இன்று மீண்டும் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. 1960-களில் வெளிவந்த பல படங்கள் காலத்தால் வெல்ல முடியாத காவியங்களாக இன்றும் மிளிர்கின்றன. அப்படிப்பட்ட ஒரு படம்தான் ‘காதலிக்க நேரமில்லை’. இயக்குநர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் 1964-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி வெளிவந்த இப்படம் முழு நீள நகைச்சுவை கலந்த காதல் படம். இந்தப் படத்துக்கு இன்று வயது 50.
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த படம். முக்கோணக் காதல் கதைக்குப் பெயர் போன இயக்குநர் ஸ்ரீதர் இந்தப் படத்தில் காமெடியைக் கையில் எடுத்து விலா எலும்பு நோக சிரிக்க வைத்தார்.ஸ்ரீதர் ஒருவர்தான் காமம் வெளியே தெரியாமல் மென்மையான காதல் மட்டுமே அழகாக தெரியுமாறு படம் எடுத்தவர். ஸ்ரீதரின் பாதையில் பயணிக்கும் திறமை நேர்மை இன்றைய பிரபல இயக்குனர்களுக்கு இல்லை .அவர் அடிதடியை நம்பவில்லை அருவாளை நம்பவில்லை காமத்தை நம்பவில்லை கலையை மட்டுமே நம்பினார்

அயோத்தி, காசி, மதுரா ! பார்ப்பன பாசிசம் அதிகாரத்துக்கு ? மோடி ஒரு ஸ்ட்ராங் ஆர்.எஸ்.எஸ் ?

சுதர்சன் ராவ்முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மை பெற முடியும் என்பதை கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நிரூபித்திருக்கிறது. முஸ்லிம்கள் இந்துக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவேண்டும். தொடர்ந்து அவர்கள் இந்துக்களை எதிர்த்துக் கொண்டே எத்தனை நாள் வாழ்ந்து விட முடியும்?
இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பார்ப்பனக் கோமாளி சுதர்சன் ராவ்.
அயோத்தி, காசி, மதுரா ஆகிய மூன்று இடங்களிலும் மசூதியை அவர்கள் விட்டுக் கொடுத்துவிட வேண்டும். பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், தற்போது மத்தியில் நடந்திருப்பதைப் போல மாநிலம் தோறும் இந்துக்களின் ஒருங்கிணைவை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மோடி ஒரு முன்மாதிரியான ஆர்.எஸ்.எஸ். ஊழியர். முந்தைய (வாஜ்பாயி தலைமையிலான) தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் போல அல்லாமல், இந்த முறை இந்துத்துவ திட்டங்களை மோடி நிறைவேற்றிக் காட்டுவார். எங்களிடம் பெரும்பான்மை இருக்கிறது. நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோமோ அதனைச் சட்டப்படியே செய்து முடிப்போம்”

3 வயது குழந்தையை 11–வது நாளில் மீட்க உதவிய நாய் !




A four-year-old girl has been rescued after wandering alone in a forest for 12 days.
சைபீரியா, ஆக.15 ரஷியாவின் சைபீரியாவில் வசித்து வரும் ஒரு தம்பதியின் 3 வயது மகள் கரினா சிகிட்டோவா. இவள், வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென மாயமானாள். கரினா வீட்டில் இருப்பதாக அவரது தந்தையும், தந்தையுடன் சுற்றுலா சென்றிருக்கலாம் என அவரது தாயும் நினைத்ததால், குழந்தையை யாரும் தேடவில்லை. 7 நாட்கள் கடந்த பிறகு தான் குழந்தை மாயமானது தெரியவந்தது.> இதனால் அதிர்ச்சியடைந்த அவளது பெற்றோர் மீட்புக்குழுவினருடன் பல்வேறு இடங்களிலும் கரினாவை தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லாததால், குழந்தை இனி கிடைக்கமாட்டாள் என்ற முடிவுக்கு வந்தனர். 11–வது நாளில் குழந்தையின் செல்ல நாய் காட்டுப்பகுதியில் இருந்து வந்தது. பின்னர் அது காட்டுப்பகுதிக்கு மீண்டும் சென்றது. உடனே அதை மீட்புக்குழுவினர் பின்தொடர்ந்தனர். அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்ற போது, அங்கே நீண்ட புற்களின் மேல் குழந்தை கரினா படுத்திருந்தாள். உடனே குழந்தையை மீட்புக்குழுவினர் மீட்டு வந்தனர். காட்டில் இருந்த நாட்களில் சிறுமி கரினா, பழங்களை தின்றும், ஆற்று நீரை குடித்தும் உயிர் வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சூரத் வழக்கு: நிரபராதிகளின் கொலைக் களமாக குஜராத்!

அத்வானி - மோடிபாபர் மசூதி இடிப்பு : சூரத் உள்ளிட்டு நாடெங்கும் முஸ்லீம் எதிர்ப்பு கலவரத்தைத் தூண்டிய அத்வானிக்கு மோடி அன்று அல்லக்கை.
சூரத் காங்கிரசு அமைச்சர்20 ஆண்டுகளுக்கு பின் 78 வயதில் நிரபராதி என்று விடுதலை – முன்னாள் காங்கிரசு அமைச்சர் முகமது சுர்தி.
1993-ம் ஆண்டு சூரத்தில் நடந்த இரு குண்டு வெடிப்புகள் தொடர்பான வழக்குகளில், தடா சட்டத்தின் கீழ் பத்து முதல் இருபது ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 11 முஸ்லிம்களை நிரபராதிகள் என்று கூறி ஜூலை 17-ம் தேதியன்று விடுதலை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். விடுதலை செய்யப்பட்ட 11 பேரில் ஒருவர் 78 வயதான முன்னாள் காங்கிரசு அமைச்சர் முகமது சுர்தி. மற்ற பலர் காங்கிரசு தொண்டர்கள்.< இதேபோல, 2002 அக்சர்தாம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் உள்ளிட்ட அனைவரையும் மே-16, 2014 அன்று நிரபராதிகள் என்று கூறி உச்ச நீதிமன்றம் விடுவித்ததும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்தத் தீர்ப்பு மோடியின் வெற்றிக் கொண்டாட்டக் கூச்சலில் அமிழ்ந்து போனது.
தற்போது சூரத் வழக்கில் 11 பேரை விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றம், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவது உள்ளிட்டு குற்றங்கள் ஏதும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், தடா சட்டத்தின் கீழ் (சித்திரவதை செய்து) பெறப்பட்ட வாக்குமூலங்களைத் தவிர வேறு சாட்சியங்கள் எதுவுமே இல்லை என்றும் கூறியிருக்கிறது.

ஜெட் ஏர்வேஸ் விமானியின் தூக்கம் ! 5000 அடி கீழ்நோக்கி பறந்தது! 280 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக..

நடுவானில் விமானி தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த ஜெட் ஏர்வேஸ் விமானம், திடீரென 5 ஆயிரம் அடி அளவுக்கு கீழ்நோக்கி பறந்தது. இந்தச் சம்பவத்தில் விமானத்தில் இருந்த 280 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியநிலையில், பொறுப்பற்று நடந்துகொண்டதாகக் கூறி விமானியும், துணை விமானியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையிலிருந்து பிரஸ்ஸல்ஸ் நாட்டுக்கு ஜெட் ஏர்வேஸ் போயிங் ரக விமானம் கடந்த வாரம் கிளம்பிச் சென்றது. துருக்கி நாட்டு வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் விமானி தூங்கி விட்டார். துணை விமானி தனது "ஐ-பாட்' சாதனத்தில் விமானம் குறித்த விவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கோட்டை கொத்தளத்தில் இன்று கொடியேற்றுகிறார் ஜெயலலிதா

நாட்டின் 68-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.
கொடியேற்றுவதற்கு முன்னதாக, சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
அவரது சுதந்திர தின உரையில், மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.
அதன்பிறகு, துணிச்சலான செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல்-ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த சேவை விருது உள்ளிட்ட விருதுகளை அவர் வழங்குகிறார்.கூடவே  வாய்தா வாங்கிய சாதனைக்கும் ஏதாவது விருது வழங்கினால்  தேவல ?

ரஜினிகாந்த் : அரசியலில் நுழைவது தெய்வச் செயல் ! லிங்கா ஓடணுமே ?

நடிகர் ரஜினிகாந்த், சிமோகா மாவட்டத்தில் நடந்து வரும் ‘லிங்கா’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார்.ரஜினிகாந்த் வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர் மங்களூர் விமான நிலையத்தில் திரண்ட னர். பின்னர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,  “சிமோகாவில் நடக்கும் லிங்கா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மங்களூர் வந்துள்ளேன். நான் இங்கு (மங்களூர்) 22 ஆண்டுகள் கழித்து வந்துள்ளேன். ஆனாலும் எனக்கு விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.லிங்கா படம் ஏற்கனவே கர்நாடக மாநிலம் மைசூரில் தொடங்கி மண்டியா, மலவள்ளி, மத்தூர் ஆகிய பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.  பாபா குசேலன்  கொச்சடயான்னு ரொம்பவும் குடைச்சல் பாருங்க .என்ன பண்றது உடம்பு வேற சரியில்ல .எதோ மக்சிமும் பணம் பணம்னு குடும்பம் வேற குடைச்சல் . நம்ப ரசிக கூமுட்டைகளுக்கு அரசியல் ஆசை பிடிச்சி ஆட்டுது, அதை கொஞ்சம் வேப்பிலை அடிச்சாதான் லிங்கா ஓடும்னு புதுசா ஒரு மந்த்ரவாதி சொன்னான்  அதாய்ன்

கலைஞர் கடும் கண்டனம் : ஆட்சியாளர்களுக்கு சேவகம் செய்ய ஒரு சட்டம் !

சென்னை:''ஒருமுறை தவறு செய்தாலும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய வழிவகை செய்யும், சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால், ஜனநாயக ரீதியாக எதிர்வினைகளில் ஈடுபடுவர்களையும், தவறு செய்ததாக இட்டுக்கட்டி, இந்த ஆட்சியினர் கைது செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:சட்டசபை கூட்டத்தொடர் இறுதி நாளில், 19 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அந்த மசோதாக்களில் ஒன்று, கள்ளச் சாராயம் விற்பவர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், பாலியல் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்துபவர்கள், காணொலித் திருடர்கள் முதல் முறையாக, குற்றம் புரியும் போதே, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, வழிவகை செய்து இயற்றப்பட்ட மசோதாவாகும்.  விதைத்தவர்களே வினையை அறுக்கும் காலம் விரைவில் வரும். அப்போது அவர்களாகவே இச்சட்டத்துக்கு எதிராக போராடுவார்கள். ஒரு ட்ராபிக் மீறலுக்கே குண்டர் சட்டம் என்றால் 18 வருடங்களாக செய்த குற்றத்திலிருந்து எஸ்கேப்பாக முயல்பவர்களுக்கு எத்தனை குண்டாஸ் போட வேண்டும்.

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

போலீசுக்கு மாமுலை அள்ளித்தர வருகிறது சைபர் குண்டாஸ் அம்மா சட்டம் !

“தமிழ்நாடு கள்ளச் சாராயக்காரர்கள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபசாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள், திருட்டு வீடியோ தயாரிப்பவர்கள் ஆகியோரின் பயங்கர நடவடிக்கைகளை தடுப்பதற்கான சட்டம 1982”…..
மூச்சை இழுத்துப் பிடித்து ஒரே மூச்சில் படித்து விடுங்கள். இதுதான் குண்டர் சட்டம் அல்லது குண்டாஸ் என்று அழைக்கப்படும் சட்டத்தின் முழுப் பெயர்.
1982-ல் முதன்முதலாக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் கடந்த 32 ஆண்டுகளில் திருட்டு வீடியோ, நில அபகரிப்பு, மணல் கொள்ளை என ஒவ்வொன்றாக சேர்க்கப்பட்டு ஊதிப் பெருத்திருக்கிறது.
இந்நிலையில் கடந்த 12-ம் தேதி மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விசுவநாதனால் இந்த சட்டத்தில் இரண்டு திருத்தங்கள் தமிழ்நாடு சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த திருத்தங்களின்படி முதல்முறை குற்றம் செய்தவர்கள் மீதும் இந்த சட்டம் பிரயோகிக்கப்படலாம். இரண்டாவதாக, இணையம் மற்றும் பாலியல் குற்றங்கள் செய்பவர்களும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம். ஜெயாவுக்கும் போலீசுக்கும் என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம் மாமுலென்னும் நாடகத்தில் .....

உழைத்து முன்னேறிய இன்ஃபோசிஸ் சிபுலாலுக்கு 700 வீடுகள் சொந்தம் ! உண்மை ஊக்கம் தாய்ப்பாசம் போன்ற MGR டயலாக்குகளை சேத்துக்கோங்க !

சிபுலால்.டி துறையில் வேலை பார்க்கும் பெரும்பான்மையினர் ஒரு வீட்டை வாங்கி அதற்கு தவணை கட்டுவதற்குள் விழி பிதுங்கி போகிறார்கள். வீட்டு லோனை நினைத்து, மேலாளர் மனம் கோணாமல் ராப்பகலாக உழைத்து கொட்டுகிறார்கள். எப்படியாவது, கடனை கட்டி, வீடு சொந்தமாக்கி, ஓரளவு பணத்தை சேமித்து விட்டு ஓய்வு பெற முடியுமா என்பது நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.
கடந்த ஜூலை 31-ம் தேதி இன்ஃபோசிஸ் முதன்மை செயல் அதிகாரியாக ஓய்வு பெற்ற சிபுலாலின் கதையே வேறு. அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அவருக்கு சொந்தமாக 700 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. அவற்றை மைக்ரோசாப்ட், ஸ்டார்பக்ஸ், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவன ஊழியர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். ஒரே பையில் எல்லா முட்டைகளையும் போட வேண்டாம் என்று அடுத்து ஜெர்மனியின் பெர்லினிலும், ஃபிராங்க்ஃபர்ட்டிலும் வீடுகளை வாங்கியிருக்கிறது சிபுலாலின் சொத்துக்களை நிர்வகிக்கும் குடும்ப அலுவலகம்.  சிபுலால்: சியாட்டில், பிராங்க்பர்ட், பெர்லின்..அடுத்து எங்க வாங்கலாம், அண்டார்டிகாவிலா?

தமிழக்தில் மட்டுமே பெயருக்கு பின்னால் ஜாதி இல்லை ! தந்தை பெரியாரின் உலக சாதனை !

Mannargudi_News_11-08-2014_Ph_1[1]எளிய மக்களுக்கான எதிர்ப்பு அரசியலின் குறியீடு

மன்னார்குடி ஆக. 10
சிந்தனை முற்றம் இலக்கிய அமைப்பின் சார்பில் சமூக வாழ்வியலுக்கான கவியரங்கம், கருத்தரங்கம் மன்னார்குடி அம்பேத்கர் அறிவாலயத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் வே.மதிமாறன் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
ஆதலினால் காதல் செய்வீர் என்ற தலைப்பில் கவிஞர் பரிதி பாண்டியன்
தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. கருக்கல் விடியும் ஆசிரியர் அம்ராபாண்டியன் தலைமையில் அண்ணலும் அய்யாவும் என்ற தலைப்பில் நடைபெற்ற
கருத்தரங்கத்தில் எழுத்தாளர் வே.மதிமாறன் பேசியது:
இங்கர்சால், பெட்ரண்ட்ரஸ்சல் போன்றவர்களைப்போல் வெறும் நாத்திகரல்ல பெரியார். அவர்களை விட பலமடங்கு உயர்ந்தவர். அவர்கள் இருவரும் கடவுள் இல்லை என்று சொன்னவர்கள்.
மற்றபடி மக்களின் வாழ்க்கையில் ஆதிக்கத்திறகு எதிராக அவர்கள் போராடியவர்கள் அல்ல. ஆனால் பெரியார், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழக்கையை மேம்படு­­த்தியவர்.
தந்தை பெரியார் கடவுள் மறுப்பாளர் மட்டுமல்ல, ஜாதி எதிர்ப்புப்போராளியும் கூட. அதனால் தான் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பாக தமிழகத்தில் மட்டும் தன் பெயருக்கு பின் ஜாதி பெயர் போட்டுக்கொள்வதை ஒழித்தவர்.

தமிழக பாஜக தலைவர் ஹெச். ராஜா ? தமிழிசைக்கு நோ ? நமக்கு வாய்த்த அடிமைகளில் அவனே அசல் கூஜா ?

சென்னை: தமிழகத்தின் புதிய பாஜக தலைவராக ஹெச்.ராஜா அல்லது தமிழிசை சவுந்திரராஜன் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஆகிவிட்டார். இதனால் தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவிக்கு பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.  இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவராக ஹெச். ராஜா அல்லது தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர் தான் தலைவராகப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. பாஜகவின் தேசிய மற்றும் மாநில தலைவர்கள் குறித்த அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் அமிஷ் ஷா இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என்று இன்று தெரிய
tamil.oneindia.in

யுவன் ஷங்கர் மூன்றாவது திருமணம் ! இஸ்லாத்தை தழுவியதால் பலதார சட்ட சிக்கல் கிளியர் !

தமிழ் திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளையமகனான இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் இசையமைத்துவிட்டார். இவருடைய திரையுலக வாழ்க்கை பிரகாசமாக அமைந்ததுபோல், இவருடைய குடும்ப வாழ்க்கை அமையவில்லை. < கடந்த 2005-ம் ஆண்டு சுஜாயா சந்திரன் என்பவரை திருமணம் செய்த யுவன், அடுத்த மூன்று மாதங்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு லண்டனைச் சேர்ந்த ஷில்பா என்பவரை 2011-ம் ஆண்டு திருமணம் செய்தார். தற்போது, இவரிடமும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, ஷில்பா இவரை பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. < தனது அம்மாவின் மரணம், இரண்டாவது மனைவியுடன் சலசலப்பு என மிகுந்த மனக்கஷ்டத்தில் இருந்த யுவன், திடீரென இஸ்லாம் மதத்துக்கு மாறினார். சமீபத்தில்கூட ரம்ஜான் பண்டிகையன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்திவிட்டு வந்தார். ராசா நீ எத்தனை தடவை வேணுமின்னாலும்  திருமணம் செய்யு ராசா ! ஆனா என்ன பேசாமா  Co Habitation பண்ணலாம் வெட்டி செலவு மிச்சம் , அடுத்தவாட்டி திருமணம் செய்யும் போது நான் சொல்றதை கொஞ்சம் கென்சிடர் பண்ணு , கோ ஹபிதேசன் என்றால் திருமணம் செய்யாமலே  ஆணும் பெண்ணும் கூடி வாழ்வது , சமயம் மாறி திருமணம் செய்வதை விட அது எவ்வளவோ மேல் ,

ஷங்கரின் ஐ படத்துக்கான கப்சா பில்டப்புக்கள் வழக்கம்போல வாந்தி வரும் அளவு !

இந்திய திரையுலகில் தயாரிக்கப்பட்டு வரும் மெகா பட்ஜெட் தமிழ் திரைப்படம் என வெளிநாடுகளில் குறிப்பிடப்படும் வண்ணம் தயாராகிறது 'ஐ'.
ஜூலை 2012ல் தொடங்கப்பட்ட நாள் முதலே இப்படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இப்படத்தின் இசை வெளியீடு, பிரம்மாண்டமான ரிலீஸ் திட்டம் என பல்வேறு செய்திகள் இணையத்தில் வலம் வருகிறது.
உண்மையில் நடப்பது என்ன? இது குறித்து 'ஐ' படத்திற்கு நெருக்கமானவரைச் சந்தித்தோம். முதலில் இந்தப் படத்தை பற்றி பேசுவதற்கு முன்னால் ஐ' டீஸரை பாருங்கள். அப்புறமா பேசலாம் என்றார். பார்த்தோம்.
'ஐ' படத்தின் டீஸர் ஒன்றே போதும், இந்தப் படத்தில் ஷங்கர் - விக்ரம் என்ன செய்திருக்கிறார்கள், படம் ரிலீஸ் ஆவதில் ஏன் தாமதம் போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறது டீஸர். ஷங்கரின் மேக்கப் ஐடியா, விக்ரமின் உழைப்பு, பி.சி.ஸ்ரீராம் கேமிரா, ஏ.ஆர். ரகுமானின் இசையமைப்பு என சரியான கூட்டணியில், மிரட்சி அடைய வைக்கும் வண்ணம் இருந்தது. 45 நொடிகள் 150 கோடி பிரம்மாண்டத்தை சுருக்கிக் காட்டியிருக்கிறார்கள்.
' ஐ' குறித்து அவரிடம் சேகரித்த தகவல்கள் இதோ!  
பாருங்கடா ஏதோ   இந்த  ஐ படதாலதான் உலக மகா   பிரளயமே  நடக்க  போற மாதிரி  கவர் வாங்கிய  நிருபர்கூட்டம்    உச்ச தாயி   பஜனைகளை தொடங்கிட்டாய்ங்க . ஐ பட ஷூடிங்கில யார் யார் பீடா சாப்பிட்டாக  எவன் எவன்  வீட்டையே போகாம இந்த படம் பிரமாதமா வரணும், வராட்டி இந்த  உலகமே  அழிஞ்சிடும்  என்கின்ற  ரேஞ்சுக்கு  பீலா விடுவாய்ன் , ரசிக மகா ஜனங்கள்  ராத்திரியெல்லாம் தூக்கமே  இல்லாம  அவா கூட சரியா படுத்துகாம  ஐ  ஐ ன்னு அலைவாய்ன்க  , அப்புறம் என்ன சங்கரு காங்  செமையா  அள்ளி டுவாய்ங்க

BJP : மாற்றுப் பாதையில் சேது சமுத்திரம் திட்டம் !

பாராளுமன்றத்தில் சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலம் இடிக்கப்படுமா என்று அதிமுக எம்.பி.கேள்வியெழுப்ப அதற்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி மறுப்பு தெரிவித்தார். ஒருபோதும் ராமர் பாலம் இடிக்கப்படாது என்று தெரிவித்த கட்காரி, பா.ஜ.க. ராமர் பாலத்தை இடிக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததையும் சுட்டிக்காட்டினார். எனினும் இத்திட்டத்தை நிறைவேற்ற நான்கு மாற்று வழி தொடர்பான திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் கட்காரி தெரிவித்தார்.
மேலும் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் மாற்றுப் பாதையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கட்காரி கூறினார். nakkheeran.in பேசாம இலங்கையை சுத்தி அமையுங்க ! நீங்க செஞ்சாலும் செய்வீங்க நீங்கதாய்ன்  தேன் குடிச்ச  நரி  சாராயமும் குடிச்ச மாதிரி  பம்முரீக 

மியான்மார் தமிழர் திருமணங்களில் அய்யர் இல்லை ! சுயமரியாதை திருமணம்? மியன்மார் தமிழர்களை மறந்ததேன் ?



மியன்மார் தமிழர்களை மறப்பதா?கோ.வேணுகோபாலன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: உலகமே திரும்பிப் பார்க்குமளவில், அண்மையில் கோவையில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டின் கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் உரை வீச்சு போன்ற அரங்குகள் எதிலுமே, மியன்மார் நாட்டில் வாழும் தமிழர்களைப் பற்றி யாருமே பேசவில்லை.மாநாட்டில் பேசிய, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உட்பட அனைவருமே, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மட்டுமே தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதாகவும், தமிழ்மொழியை வளர்த்து வருவதாகவும் பேசினர்.தமிழக முதல்வர் பேசும் போது மட்டும், "காழகம்' என்பது தான் பர்மா என்று கூறி விளக்கினார். பலர், "கடாரம்' என்பது தான் பர்மா என்று நம்பியிருந்ததற்கு, அவர் கூறியது சரியான பதிலாக அமைந்திருந்தது. முதல்வரின் அந்த விளக்கம், மியன்மார் தமிழர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.இலங்கைப் பேராசிரியர் சிவத்தம்பிக்குக் கூட, "மியன்மார்' என்ற நாடு ஒன்று இருப்பது பற்றிய நினைவு இல்லாமல் போய்விட்டது. மியன்மார் தமிழர்கள், முற்றிலுமாக மறக்கப்பட்டுவிட்டனர்.

நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா எதிர்ப்பின்றி நிறைவேறியது !

புதுடெல்லிt;நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
நீதிபதிகள் நியமன ஆணையம் நமது நாட்டில் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் 1993–ம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகளைக் கொண்ட ‘கொலிஜியம்’ முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த முறையிலான நீதிபதிகள் நியமனத்தில் சமீப காலமாக பெருத்த சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் ‘கொலிஜியம் முறை’யினை ஒழித்து விட்டு, நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படையான தன்மையைக் கொண்டு வரவும், நியாயமான நடைமுறைகளை பின்பற்றச் செய்யவும் ஏற்ற வகையில் நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

ஆயுத கொள்வனவில் ரஷ்யாவுக்கு டாட்டா ! அமெரிக்காவுக்கு செங்கம்பளம் ! இதுதாண்டா மோடி !

ஒபாமா, மோடி
லகின் ஒற்றைத் துருவ அமெரிக்க வல்லரசு, நாளைய ‘வல்லரசு’ கனவில் மிதக்கும் மோடியின் இந்திய அரசை துரத்தி துரத்தி தனது காதல் வலையை வீசிக் கொண்டிருக்கிறது. மோடி அரசு பதவியேற்ற பிறகான கடந்த இரண்டரை மாதங்களில் அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் 13 பேர் புது தில்லிக்கு வந்து புதிய அரசை சீராட்டி விட்டு சென்றிருக்கின்றனர். கடந்த இரண்டரை மாதங்களில் அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் 13 பேர் புது தில்லிக்கு வந்து புதிய அரசை சீராட்டி விட்டு சென்றிருக்கின்றனர்.
அதுவும் ஜூலை 31 முதலான 8 நாட்களில் பாதுகாப்பு, வர்த்தகம், வெளியுறவு என ஒபாமாவின் மூன்று மூத்த அமைச்சர்கள் இந்தியாவுக்கு அணி வகுத்து வந்திருக்கின்றனர். இவர்களில் கடைசியாக வந்தவர் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் தலைமையிலான அதிகாரிகள் குழு என்பது தற்செயலானது இல்லை.

மோடி ஆட்சியில் கலவரங்கள் அதிகரிப்பு– சோனியா காந்தி குற்றச்சாட்டு!

டெல்லி: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் கலவரங்கள் அதிகரித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு நேற்று முதல் முறையாக காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், மத்தியில் உள்ள பாஜக அரசை கடுமையாக தாக்கினார்.
 சோனியா காந்தி, "காங்கிரஸ் கட்சிக்கு இது சவாலான காலகட்டம். காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலுப்படுத்தி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதற்கான பணிகளை நாம் தொடங்கி இருக்கிறோம். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டங்களில் உள்ள அம்சங்களைத்தான் நரேந்திர மோடி அரசு தனது திட்டங்களில் சேர்த்து நிறைவேற்றி வருகிறது.

இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட சதி! கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் !

சென்னை:இந்து முன்னணி மாவட்ட தலைவர், சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்போர், இந்து தலைவர்களின் உயிருக்கு குறிவைத்து, தமிழகத்தில் பலர் பதுங்கி இருப்பதாக, வாக்குமூலம் அளித்து இருப்பதால், அவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு, பா.ஜ., மாநில நிர்வாகிகள் அரவிந்த ரெட்டி, ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன், மதுரையில் சுரேஷ் உள்ளிட்ட பலர், அடுத்தடுத்து கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இந்து முன்னணி தலைவர்கள் தங்கள் நாவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நாட்டுப்பற்று இல்லாத இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு விரட்டுவோம் என்று கொக்கரிக்க கூடாது. இந்தியாவில் பல கட்சிகள் இருக்கும்போது, இந்து முன்னணி தலைவர்கள் மட்டும் கொல்லபடுவது ஏன்? ஏனெனில், துடுக்குத்தனமாக நாவை கட்டுபடுத்தாமல் கண்டபடி பேசுவது தான். அதனால் தான் சிலருக்கு கோவம் ஏற்படுகிறது. அதனால் விபரீதம் ஏற்படுகிறது. இந்தியாவில் பிறந்த கிருத்துவர் மற்றும் முஸ்லிம்களுக்கு இந்தியாதான் சொர்க்கம். இதுதான் தாய்நாடு. இதை நிருபிக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. அதை தட்டிகேட்க இந்து முன்னணி தலைவர்களுக்கும் எந்தவித உரிமையும் இல்லை. மேலும் இந்து முன்னணி தலைவர்களை கண்டு, முஸ்லிம்கள் கோபம் கொள்ள தேவை இல்லை. அவர்களின் பேச்சிற்கு இந்தியாவில் எந்த செல்வாக்கும் இல்லை. அப்படியே கோபம் கொண்டாலும், அதை தேர்தல் சமயத்தில் வாக்கு போடும்போது காட்ட வேண்டும். அது தான் சாமர்த்தியம். சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒருவரின் உயிரை எடுக்க ஆண்டவனை தவிர வேறு எந்தவொரு மனிதனுக்கும் அந்த உரிமை இல்லை. அதனால் பயங்கரவாதம் என்பது மிகவும் கண்டிக்கத்தக்க தவறான முடிவு. அது எப்போதும் எதிர்மறையான விளைவை மட்டுமே ஏற்படுத்தும்.

வாய்தா ராணியின் அடுத்த மூவ் ! சமுக வலைத்தளங்களை முடக்க சட்டம் ! fear of opinions?

அம்மம்மா ...உங்களின் அடிமையாக்கும் தனத்தை உங்க கட்சிகாரங்க, அமைச்சர்கள் கிட்ட மட்டும் வச்சுக்கோங்க...அவிங்க மேஜையை தட்டுவாங்க ! மக்கள் மீதோ கருத்து சொல்றவங்க மீதோ காட்டாதீங்க... ஆட தெரியாதவ தான் தெரு கோணலா இருக்குன்னு சொல்லுவா.. அத்து மீராதீங்க.....
தகவல் தொழில் நுட்பக் குற்றங்களைத் தடுப்பதற்காக, சிறப்பு சட்டம் ஒன்றை, நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வந்திருக்கிறது, தமிழக அரசு.அதாவது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது, இந்த சட்டத்தின் மீது வழக்குப் பதிந்து, அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், ஓராண்டு சிறையில் தள்ள, இந்த சட்டம் வகை செய்கிறது.சமூக வலைதளங்களில், சமூகம் குறித்த தங்கள் ஆதங்கங்களை பதிவு செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில், இது பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.குறிப்பாக, அரசுக்கு எதிரான கருத்துக்களை, சமூக வலைதளங்களில் இனி, தைரியமாக பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என, அவர்கள் புலம்புகின்றனர். அரசியல் வட்டாரங்களிலும் இது மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வலைப் பதிவர் ஜேம்ஸ் பிரபாகர் கூறியதாவது: உள்ளங்கையில், உலகை சுருக்கி இருப்பது சமூக வலைதளங்கள் தான்.சாதாரண குக்கிராமத்தில், அடி பம்பில் தண்ணீர் வராத பிரச்னையில் ஆரம்பித்து, நாசாவில் நடக்கும் ஆராய்ச்சி வரை, நொடிக்குள் உலகம் முழுவதற்கும் தகவல்களை கொண்டு சேர்க்கும் பிரதான காரணிகளாக இருப்பது, சமூக வலைதளங்கள். அவற்றில் சுதந்திரமாக இயங்க வகை செய்யாமல், சட்டம் போட்டு தடை செய்தால், அவைகளில் கருத்துகளை சொல்ல யாரும் முன் வரமாட்டார்கள். அரசியல்வாதிகளின் தவறுகள், இனி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவது, குறைந்து விடும்.கடந்த ஐக்கிய முன்னணி ஆட்சியில் நடந்த முறைகேடுகளை, இந்தியா முழுவதற்கும் வெளிச்சம் போட்டு காட்டியதில், சமூக வலைதளங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.இந்த சட்டத் திருத்தத்தால், அப்பாவிகள் பாதிக்கப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.  எதிர்கட்சிகளை சட்டசபையில் இருந்து துரத்தி அடிச்சாங்க... அடுத்து பத்திரிகை களின் மீது தாக்குதல். ... இப்போ கருத்து சொல்றவங்க மேல நடவடிக்கை... ஆடாதடா ஆடாதடா மனிதா... ஆடிபுட்ட அடங்கிடுவ மனிதா....

தேர்தல் கமிழனுடன் கூட்டணி அமைத்தே அதிமுக வெற்றி பெற்றது ! ஸ்டாலின் குற்றச்சாட்டு !

தி.மு.க.வின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வரும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களை தொடர்ந்து, மூன்றாவது மாவட்டமாக தூத்துக்குடியில், அம்மாவட்ட மாணவரணி, இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகளிடம் அணி வாரியாக ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளை சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தார். மாலையில் கட்சியின் பொதுஉறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்து அதிமுக சதிவேலையில் ஈடுபட்டதே திமுகவின் தோல்விக்கு காரணம். தமிழகத்தில் தேர்தலுக்கு முதல் நாள் திடீரென்று 144 தடை உத்தரவு போட வேண்டிய அவசியம் என்ன. புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் கட்சியோடு நாம் கூட்டணி அமைத்தோம். ஆனால் அதிமுக எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று சொன்னார்கள். நான் சொல்கிறேன் நீங்கள் தேர்தல் கமிஷனோடு கூட்டணி அமைத்தீர்கள். அதனால் தான் தேர்தல் கமிஷனர் பயந்துவிட்டார். விலக போகிறேன். விலக போகிறேன் என்கிறார்.

புதன், 13 ஆகஸ்ட், 2014

உச்ச நீதிமன்ற நீதிபதியாக முதல் தமிழ் பெண் நீதிபதி பானுமதி இன்று பதவியேற்பு

தமிழகத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக, முதல் பெண் நீதிபதி பானுமதி இன்று பதவியேற்கிறார். உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 31. தற்போது 27 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் ஒரு நீதிபதி மட்டும் பெண் நீதிபதியாவார். தற்போது, உச்ச நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கியுள்ளார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மூத்த வக்கீல் உதய் உமேஷ் லலித், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரபுல்ல சந்த் பாண்டே, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் மனோகர் சபேரே, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.பானுமதி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.

பெண்களுக்கு கடும் தட்டுப்பாடு ? இந்தியாவில் பெண்கள் பிறப்பு வீதம் கடும் வீழ்ச்சி !

புதுடெல்லி இந்தியாவில் குழந்தை பாலின  விகிதத்தில் பெண்கள் விகிதம் மிகவும் வீழ்ச்சி அடைந்து இருப்பது குறித்து டெல்லி மேல் சபையில் இன்று கவலை தெரிவிக்கபட்டது.
டெல்லி மேல் சபையில்  பெண்கள் மற்றும்  குழந்தைகள் நல துறை சார்பில் விவாதம் தொடங்குவதற்கு முன்  பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்  சதீஷ் சந்திர மிஸ்ரா  பேசும் போது ஆய்வுகளின் படி இந்தியாவில் பாலின விகிதம் மிகவும் சரிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தற்போதைய விகிதத்தின் படி 1000  ஆண் குழந்தைகளூக்கு 914 பெண் குழந்தைகள் உள்ளனர். நான் இந்த சபைக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். பஞ்சாபில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 832 பெண் குழந்தைகள் உள்ளனர். என குறிப்பிட்டார். இதற்கு துணை தலைவர் பி.ஜே. குரியன்,  இது  ஒரு ஆபாத்தான நிலை என கூறினார்.
மிஸ்ராவின் கூற்றை ஒப்பு கொண்ட சபை உறுப்பினர்கள்  இது மிகம் வெட்ககேடானது என  கூறினர்.
தொடர்ந்து பேசிய மிஸ்ரா,  பெற்றோர்கள்  பெண்குழந்தை  பிறப்பது குறித்து கவலையடையக் கூடாது.   முதல்  சுதந்திர போராட்டத்தில் முன்னணி  வீராங்கனையாக திழந்த  ராணி லட்சுமி பாயை  நினைவு கூறுங்கள்.

காருக்குள் விளையாடிய 4 குழந்தைகள் பலி: மூச்சு திணறல் ! தூத்துக்குடி அருகே சோகம்

 Four children died of suffocation after they accidently got stuck in an abandoned car at Vedanatham in the Tuticorin district  ...தூத்துக்குடி மாவட்டம் குறுக்குசாலை அருகே உள்ள குளத்தூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது வேடநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் முரளி என்பவர் வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். பிணைத் தொகை கட்டாத 4 வாகனங்களை தனது வீட்டின் முன்பு வைத்திருந்தார். இதில் ஒரு காரின் உள்ளே இன்று (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் இசக்கியம்மாள் (4), ஆதி (4), முத்தழகு (10), மோசஸ் (4) ஆகிய 4 குழந்தைகளும் விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென்று காரின் கதவை திறக்க முடியாமல் போகவே, மூச்சுத்திணறி 4 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.சுமார் மதியம் 1 மணி அளவில் இதனை பார்த்த கிராமத்தினர், குளத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் தந்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் மீனாட்சி நாதன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். 4 குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து, அவர்களின் உடல்களை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.இந்த குழந்தைகள் இங்கே வந்தார்கள். சம்பவம் எப்படி நடந்தது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ம்பவ இடத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை விசாரணை மேற்கொண்டார்.குழந்தைகள் உயிரிழந்த கார் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த 4 குழந்தைகளும் ராஜபாண்டி நகர், எம்.ஜி.ஆர். நகரைச் சேர்நதவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது>பரமசிவம்

சமுக வலைத்தளங்கள் மீது ஜெயலலிதா அரசு கடுமையான அடக்கு முறை சட்டம் ! வாபஸ் பெற வைகோ கோரிக்கை !

சமூக வலைத்தளங்களில் அரசை விமர்சித்து கருத்துப் பகிர்ந்தால், உடனடியாக சிறையில் தள்ள வகை செய்யக் கூடிய குண்டர் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க மதுக்கடைகளை நிரந்தரமாக இழுத்து மூடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றத்தில் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், ஆகஸ்டு 11-ஆம் தேதி ஒரு சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார்.
தமிழ்நாடு அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (Tamilnadu Prevention of Dangerous Activities Act (TPDA) சில திருத்தங்கள் செய்வதற்கு இம்மசோதா வகை செய்கிறது. 'குண்டர் சட்டம்' என்று அழைக்கப்படும் இச்சட்டத்தின் கீழ் கள்ளச்சாராயக்காரர்கள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது இவற்றோடு தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவோர், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாரதி ஒரு வேஷதாரி ! கவிநயமில்லாத இசையில் சரணடைந்த பார்ப்பனியத்தின் தியாக பிரமம் !

பாரதி திரைப்படம் பல உண்மைகளை மறைத்து பார்ப்பனீய பிரசாரம்தான் செய்தது !
பாரதியின் சுய முரண்பாடுகள் குறித்து இயக்குநரின் மனதில் ஐயமிருந்திருப்பினும், திரைப்படத்தில் அவற்றைச் சித்தரிக்கும் துணிவு அவருக்கில்லை. எனவே, ஆளும் வர்க்கங்களாலும், பாரதி அபிமானிகளாலும் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் பாரதியின் தோற்றத்திற்கு  பக்க வாத்தியம் வாசிக்கிறது திரைப்படம்.
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை செய்வோரென்றும், வாய்ச் சொல் வீரரென்றும் காங்கிரசு மிதவாதிகளைச் சாடிய பாரதி,
ஜாலியன் வாலாபாக் படுகொலை கண்டு நாடே கிளர்ந்தெழுந்த தருணத்தில் “அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்ட” கோழையாக ஆனது எப்படி என்ற கேள்விக்கு விடையில்லை.
உண்மையான எதிரியாகிய வெள்ளையனிடம் சரணடைந்த கோழைத்தனத்தை மறைத்து, “காலா… உனைக் காலால் உதைப்பேன் வாடா” என்று கற்பனை எதிரியை எட்டி உதைக்கும் இறுதிக் காட்சி பாரதியின் அவலமாக ரசிகர்களால் புரிந்து கொள்ளப்பட்டாலும், சினிமாத்தனமான மோசடியின் சிகரமாக அது அமைகிறது.

MBBS:17 வயது பூர்த்தியாக ஒரு நாள் குறைவாக இருந்ததால் விண்ணப்பம் நிராகரிப்பு

2014-15-ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கு, வயது குறைவு காரணமாக 46 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என தேர்வுக் குழுச் செயலர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 வயது பூர்த்தி அடைய ஒரு நாள் இருந்த மாணவர்களின் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவைச் சேர்ந்த டி.தங்கராசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது மகன் பெயர் டி.ராமானுஜம். கடந்த பிளஸ் 2 தேர்வில் எனது மகன் 1101 மதிப்பெண் பெற்றார்.

ராபின் வில்லியம்ஸ் க்கு Mrs.Doubtfire கமலஹாசன் அஞ்சலி !

கடந்த சில நாள்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
நகைச்சுவை கலைஞர்கள் அனைவரும் சமூக விமர்சகர்கள்தான். தங்களுடைய கோபத்தை நகைச்சுவை என்ற முகமூடியை வைத்து மறைத்துக் கொள்கின்றனர். அப்படியான வேடிக்கை முகத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்தால் அது மன அழுத்தத்தில் முடியும். நடிகர் ராபின் வில்லியம்ஸின் உண்மையான இயல்பு எளிதாக அழுவது.
திரையில் கூச்சலிடுவதையும் பீதியில் அழுவதையும் செய்த முதல் ஹீரோ ராம்போ. ஆனால் ராபின் வில்லியம்ஸ் திரையில் ஆண்கள் அழுவதற்கான ஒரு கண்ணியத்தை ஏற்படுத்தினார். அப்ப நம்ம சிவாஜிகணேசன் என்னங்கபண்ணினார் ?அங்க  ஒரு  பேச்சு இங்க ஒரு  பேச்சு ?  இப்பவாவது திருட்டு  சிடி பத்தி பேசமுதல்  ராபின்  வில்லியம்ஸ் போன்றாரின்  அற்புத படைப்புக்களை  திருடிய  குற்றத்தை ஒப்புக்கொள்ளுங்க, அதுதான் உண்மையான அஞ்சலி

தம்பிதுரை மக்களவைத் துணைத் தலைவராகிறார் !

மக்களவைத் துணைத் தலைவராக அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம். தம்பிதுரை (67) புதன்கிழமை முறைப்படி தேர்வு செய்யப்படவுள்ளார்.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மக்களவைத் தலைவராக சுமித்ரா மகாஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் பதவியை 44 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸýக்கே வழங்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அதை ஏற்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் மறுத்தனர். இதையடுத்து, 37 உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக குழுத் தலைவரான தம்பிதுரையை மக்களவை துணைத் தலைவர் பதவிக்கு முன்மொழிய பாஜக திட்டமிட்டது.

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

பாலியல் வன்முறை: BJP யின் பாரதப் பண்பாடு!

அமித் ஷாவின் தலைமையில் பெண்ணை உளவு பார்க்க ஒட்டு மொத்த போலீசு கட்டமைப்பையும் பயன்படுத்தும் திறமையும் வல்லமையும் கொண்ட மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள் நிகால் சந்துக்கு சிர்ஸா மாவட்ட போலீசாரை மிரட்டிப் பணிய வைப்பது அப்படியொன்றும் சிரமமான காரியமல்லவே?
நாங்கள் பிஷ்னோய்கள். நாங்கள் நன்மை செய்பவர்களுக்கு நன்மை செய்வோம். தீமை செய்தவர்களை மறக்க மாட்டோம்.  எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் விவசாயம் மட்டும் தான். நாங்கள் ஏன் அமைச்சரைப் பார்த்து அஞ்ச வேண்டும்? அவர் தான் எங்களைக் குறித்து கவலை கொள்ள வேண்டும். ஒருவேளை சட்டம் அவரை தண்டிக்கவில்லை என்றாலும், நாங்கள் அவரை மன்னிக்கப் போவதில்லை”
நிகால் சந்த்
ஹரியானாவின் சிர்ஸா மாவட்டத்தைச் சேர்ந்த பிரிஜ்லால் பிஷ்னோய் 86 வயதான ஒரு ஏழை விவசாயி. அரசியலில் சக்தி வாய்ந்த இடத்தில் இருக்கும் பாலியல் வெறி பிடித்த மிருகம் ஒன்று தனது பேத்தியை கிழித்து சீரழித்துப் போட்டதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவரது அரற்றல்களில் ஆத்திரமும் ஆற்றாமையும் பொங்குகிறது.
பிரிஜ்லால் பிஷ்னோயின் பேத்தி 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது 20.12. 2010 அன்று ஓம் பிரகாஷ் என்பவனோடு திருமணம் முடிகிறது.

தெலங்கானாவில் சடுதியாக குடும்ப உறுப்பினர்கள் கணக்கெடுப்பு ? மக்கள் திகைப்பு ! ஊருக்கு படையெடுப்பு !


மும்பை : தெலங்கானாவில் நடைபெறவுள்ள “தீவிர குடும்ப உறுப்பினர்கள் கணக்கெடுப்பு“ பணி வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பின்போது பெயர் பதிவு செய்தால் மட்டுமே அரசின் பல்வேறு சலுகைகளை பெற முடியும் என்பதால், வெவ்வேறு மாநிலங்களில் உள்ள தெலங்கானா மக்கள், சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.சமீபத்தில் உருவான தெலங்கானா மாநிலத்தில் “தீவிர குடும்ப உறுப்பினர்கள் கணக்கெடுப்பு“ வரும் 19¢ தேதி நடைபெறும் என்று முதல்வர் கே. சந்திரசேகர ராவ் அறிவித்தார்.“வரும் 19ம் தேதி வீடு வாரியாக, கணக்கெடுப்பு நடைபெறும். இதில், தங்களை பதிவு செய்து கொள்பவர்கள் மட்டுமே, அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெற முடியும். அவர்களுக்கு மட்டுமே, எதிர்காலத்தில் மாநில அரசு செயல்படுத்தவுள்ள மானியங்கள், ரேஷன், மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம், கட்டண சலுகைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படும்“ என்று சந்திரசேகர ராவ் அறிவித்தார்.

இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களே: ஆர்.எஸ்.எஸ் ! அப்படி போடு கோயிந்து !

இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களே என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
இந்துத்துவா ஒரு வாழ்க்கை முறை, இந்துக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம், எந்தக் கடவுளை வழிபடுபவராகவும் இருக்கலாம், அல்லது கடவுள் வழிபாடு செய்யாதவர்களாகக் கூட இருக்கலாம், ஆனால் இவர்கள் அனைவரும் இந்துக்களே என்று கூறியுள்ளார்.
"இங்கிலாந்தில் வாழ்பவர்கள் ஆங்கிலேயர்கள் என்றால், ஜெர்மனியில் உள்ளவர்கள் ஜெர்மானியர்கள் என்றால், யு.எஸ்.ஏ.-வில் வசிப்பவர்கள் அமெரிக்கர்கள் என்றால் இந்துஸ்தானில் வசிக்கும் அனைவரும் ஏன் இந்துக்களாக இருக்கக் கூடாது?” என்று கேட்டுள்ளார் மோகன் பகவத்.
கட்டாக்கில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மோகன் பகவத் விவேகானந்தரை மேற்கோள் காட்டி, எந்தக் கடவுளையும் வழிபாடு செய்யாதவர் நாத்திகவாதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் சுயம் என்பதன் மீது நம்பிக்கையில்லாதவர்கள் நிச்சயம் நாத்திகவாதிகளே. 
 அடடா என்னேஅரிய தத்துவம் ? பாஜக வெறும் பஞ்சு டயலக் மாதிரி பேசியே ஆட்சியை பிடிச்சது ,இனி  ஆர் எஸ் எஸ் பாஜகவை பிடிக்கும் , எந்த திருநள்ளாருக்கு போவதோ தெரியல ?

வெளிநாடுகளில் சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லை! பஞ்சாப் எம்.பி.க்கள் கவலை !

அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், சீக்கியர்கள் மீதான தொடர் தாக்குதல் குறித்து பஞ்சாபை சேர்ந்த எம்.பி.க்கள் கவலைத் தெரிவித்தனர். அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானில் சீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கு பஞ்சாப் மாநில எம்.பி.க்கள் மாநிலங்களவையில் வேதனை தெரிவித்தனர்.
இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு அந்தந்த நாடுகளை சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ள வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தினர். பஞ்சாபியர்கள் கனடாவிலும்  லண்டனிலும் கடந்த காலங்களில் நடந்து கொண்ட பல காட்டு மிராண்டி சம்பவங்களை கொஞ்சம்  ஞாபக படுத்தி பார்க்க வேண்டும் ! பிற இனங்களின் வெறுப்பை  சம்பாதித்தால் அதன் பலாபலன்கள் கசப்பாகவே இருக்கும்

vinavu: ஐ.டி துறை நண்பர்களை சந்திக்க சிறுசேரி வருகிறோம்

ஐ.டி துறை நண்பா, நமக்கான அப்ரைசல் எது? 8 மணி நேர வேலையென்று ஆஃபர் லெட்டர் வாங்கினாலும், 14 மணி நேரத்திற்கு குறையாதது நமது வேலை. என்ஜினியரிங் படிக்க வாங்கிய கடன் தீர்க்க, வெள்ளைக்காரனுக்கு முதுகெலும்பு தேய வேலை பார்த்து வீட்டுக்குப் போனால் காத்திருக்கிறது கிரெடிட் கார்டு பில். அட, கடனுக்கு மேல் கடன் தான் வாழ்க்கையா?
உசேன் போல்ட்டை விட வேகமாக ஓடியும் நம்மால் அப்ரைசல் ரேட்டிங்கை ஜெயிக்க முடியவில்லை. ஓடிக் களைத்து மூச்சு வாங்கும் நேரத்தில் வந்து சேருது பிங்க் ஸ்லிப், ரிசஷனாம்! சரி பாஸ், அமெரிக்காவுக்கு தேள் கொட்டினால் சிறுசேரிக்கு நெறி கட்டுவது ஏன்?
கள்ளச் சாராயத்திலிருந்து கல்வி வள்ளல்களான ஜேப்பியாரும், உடையாரும் இன்ஜினியர்களை தயாரிக்க வந்து விட்டார்கள். வருசத்துக்கு லட்சக்கணக்கில் இளமையான இன்ஜினியர்கள் வந்து சேர, நமது காதோர நரையை டீம் லீடர் உற்றுப் பார்ப்பது, ‘நாள்’ குறிக்கவா? காஸ்ட் கட்டிங்கும், சர்வீஸ் கட்டிங்கும் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிள்ளைகள் என்பது நமக்கு புரியாதா என்ன?

Robin Williams ராபின் வில்லியம்ஸ் தற்கொலை ! அவ்வை ஷண்முகியின் அசல் வேஷ கதாநாயகன் ! Mrs doubtfire !

ஹாலிவூட்டின் மிக பிரபலமான கதாநாயகன் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை விழுங்கி மரணமடைந்தார், இவர் சில காலமாக மன உளைச்சலால் மதுவின் அடிமையாக இருந்தார். குடும்பத்தினரின் வற்புறுத்தலால் அதிலிருந்து விடுபட சிகிச்சை பெற்று கொண்டார் . ஆனாலும் மனசோர்வு காரணமாக இந்த முடிவை எடுத்தார் என்று நம்ப படுகிறார். இவர் நடித்த பல படங்கள் வசூல் சாதனை புரிந்து உள்ளது இவர் ஒரு ஆஸ்கார் விருது  Good Will Hunting பெற்ற நடிகருமாவார்
The storied comedian and actor Robin Williams had spent time at a rehab facility this summer to maintain his sobriety, his publicist said.“This morning, I lost my husband and my best friend, while the world lost one of its most beloved artists and beautiful human beings,” Williams’ wife, Susan Schneider, said in a written statementon Monday afternoon. According to the local sheriff’s office, coroners believe Williams may have committed suicide by asphyxia, and the actor’s representative said he had been “battling severe depression of late.”

தாக்குதல் தொடுத்தால் மார்க்கண்டேய கட்ஜூ மீது சட்டரீதியான நடவடிக்கை

தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது, மீண்டும் மீண்டும் தனிநபர் விமர்சனத்தை முன்வைத்தால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மார்கண்டேய கட்ஜூவுக்கு தி.மு.க. சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க.வும், அதன் தலைமையும் தங்கள் (மார்க்கண்டேய கட்ஜூ) குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த பின்பும், திரும்பத் திரும்ப கட்சியின் தலைவர் கருணாநிதி குறித்த தனிநபர் தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தலைவர் கருணாநிதி குறித்து தாங்கள் கூறியவற்றை வன்மையாக கண்டிக்கிறேன். அதற்காக நீங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். திரும்பத் திரும்ப தலைவர் கருணாநிதியின் மீது தனிநபர் தாக்குதல் தொடுத்தும், அவதூறு கருத்துகள் பேசியும் வந்தால் உங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.dailythanthi.com

கட்ஜூ வெளியிடும் அடுத்தடுத்த தகவல்கள்: தலைமை நீதிபதி கோபம்

புதுடில்லி: பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேயே கட்ஜூ அடுத்தடுத்து தகவல்களை வெளியிட்டு வருகிறார். சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி கபாடியா, தான் பரிந்துரை செய்த வழக்கை நியாபகத்தில் கொண்டிருக்கவில்லை என கூறி அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு முன்னர், ஊழல் நீதிபதி மீது கபாடியா நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் கோபமடைந்துள்ள தலைமை நீதிபதி, நீதித்துறை மீதான மரியாதையை சீர்குலைக்க முயற்சி நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.     இவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் நேரடியாக வர வேண்டியதுதானே? எதற்கு இந்த விளம்பரத் தந்திரம்? அரசியல்வாதிகளை கேள்வி கேட்பதென்றால் அனைத்து அரசியல்வாதிகளையும் வெளிப்படையாகக் கேட்கவேண்டியதுதானே? ஒரு கட்சித் தலைவரை மட்டும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தினால் எங்கோ இடிப்பதாகத்தானே அர்த்தம். வழக்குகளைச் சந்திக்கத் திராணியற்றவர்கள் செய்யும் வேலை இது என்பது அரசியலை நோக்குபவர்களுக்கு நன்றாகவே தெரியும். இவரும் நீதித்துறையில் இருந்தவர் எனும்போது என்னத்தைச் சொல்வது? காலம் பதில் சொல்லும்...

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

அரசு கேபிள் மூலம் குறைந்த கட்டணத்தில் பிராட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் சேவை !

கோப்புப் படம்: எம்.மூர்த்திஅரசு கேபிள் டிவி மூலமாக, வீடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் பிராட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் அவர் வெளியிட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவிப்புகளின் விவரம்:
" "யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்ற புறநானூற்று வரிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், அறிவியல் யுகத்தில் அளப்பரிய வளர்ச்சியினை பெற்று இருக்கின்ற தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்களுக்கான சேவைகளை விரைந்து வழங்கி வருகின்ற எனது தலைமையிலான அரசு, அதனை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முனைப்புடன் எடுத்து வருகிறது. 

20 ஆண்டுக்கு பின் லாலு ... நிதீஷ் நட்பு !லாலுவின் வீட்டிற்கு அருகில் குடியேற நிதிஷ்குமார் முடிவு -

பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் புதிய வீட்டிற்கு குடிபோகிறார். தற்போது, புதிய கூட்டணியின் மூலமாக நெருங்கியுள்ள லாலுவின் வீட்டிற்கு
அருகிலேயே உள்ள புதிய வீட்டிற்கு நிதிஷ் குடிபுகுகிறார்.பீகார் அரசியலில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரும் புதிருமாக இருந்த ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவும், கடந்த லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு நெருக்கம் காட்டத் தொடங்கினர். ராஜ்யசபா இடைத்தேர்தல் மற்றும் முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜியின் ஆட்சிக்கு ஆதரவு என படிப்படியாக லாலுவின் உதவியை நிதிஷ் நாடியதன் மூலம் இருவருக்கும் இடையிலான அரசியல் நெருக்கம் அதிகரித்தது. இதனையடுத்து, பீகாரில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் லாலு, நிதிஷ் மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து களம் காண முடிவு செய்துள்ளனர்.

Ex மத்திய மந்திரி செல்ஜா வீட்டில் பணியாளர் அடித்து கொலை ?

புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான குமாரி செல்ஜா வீட்டில் பணி புரியும் நபர் மர்மமாக இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இன்று காலை 42 வயதுடைய பணியாளர் மர்மமாக இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் உடனடியாக வந்து சடலத்தை மீட்பு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். "இறப்பு இயற்கைக்கு மாறானது. இது குறித்து விசாரித்து வருகிறோம்" என்று மாநில போலீஸ் அதிகாரி எஸ்.பி.எஸ். தியாகி கூறியுள்ளார். இதற்கிடையே அவரது உடலில் காயங்கள் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே பணியாளர் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. dailythanthi.com

திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சி

திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம், பேரம்பாக்கம் அரிமா சங்கம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளின் கூட்டமைப்பு அறக்கட்டளை உள்ளிட்ட 8 தொண்டு நிறுவனங்கள் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம் வரம் நிகழ்ச்சியை நடத்தியது.
ஐ.ஆர்.சி.டி.எஸ். நிறுவனர் டைட்டஸ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சையத் ரவூப், பூந்தமல்லி எம்.எல்.ஏ. மணிமாறன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பட்ஜெட் : கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடியின் காணிக்கை

“இது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான பட்ஜெட்” எனத் தனது முதல் பட்ஜெட்டை வருணித்திருக்கிறார், நிதியமைச்சர் அருண் ஜெட்லி. அம்பானி, அதானி தொடங்கி ஒட்டுமொத்த இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கமும் மோடி அரசின் முதல் பட்ஜெட்டை ஆரவாரமாக வரவேற்றிருப்பதால், இது அவர்களுக்கான பட்ஜெட்தான் என்பதை நம்மால் சந்தேகத்திற்கு இடமின்றிப் புரிந்துகொள்ள முடிகிறது. எனினும், அருண் ஜெட்லி குறிப்பிடும் ஏழை யார் என்பதுதான் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய விடயம். அதற்கும் பட்ஜெட்டிலேயே விடை இருக்கிறது.

பெண்கள் போகப்பொருள் அல்ல ரம்யா நம்பீசன் திடீர் ஆவேசம்

பெண்கள் சுகம்தரும் போகப்பொருள் அல்ல என்றார் ரம்யா நம்பீசன்.‘பீட்சா, ‘குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். அவர் கூறியதாவது:தற்போது தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறேன். பொதுவாக இளம் பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகும்போது அதுபற்றி விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அதை படித்தவர்கள் மட்டுமே கவனிக்கிறார்கள். கிராமப்பகுதியில் உள்ளவர்களுக்கு அது சென்று சேர்வதில்லை. இதனை நான் ஷூட்டிங் சென்ற இடங்களில் நேரில் கேட்டறிந்தேன். கிராம புற மக்களுக்கும் இதுபற்றி விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும். அது மிகவும் முக்கியம்.பெண்களும் ஆண்களுக்கு இணையானவர்கள் என்பதை தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும். பெண்கள் சுகம் தரும் போகப்பொருள் அல்ல. அடுத்த தலைமுறையாவது பெண்களை மதிக்க வேண்டும் என்று கோருகிறேன். இதை அனைத்து பெற்றோர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார் - See more at: .tamilmurasu.org

திமுகவின் கொ ப செ ஆகிறார் கனிமொழி ? ஆ.ராசா துணை பொது செயலாளர் ஆகிறார் ?

தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, அந்தகட்சியின் கொள்கை பரப்பு செயலராக விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.
தி.மு.க.,விலிருந்து, 'சஸ்பெண்ட் செய்யப்பட்ட அமைப்பு செயலர் கல்யாணசுந்தரம் கனிமொழி மீதும் ராசா மீதும் அரங்கேற்றிய வசை நாடகத்தால் திமுகவை சீர்திருத்த வேண்டிய தேவை அவசர தேவையாகி விட்டது , ஸ்டாலினின் வழியை கிளியர் பண்ணவே  கனிமொழி, தயாநிதி, ராஜா ஆகியோர் கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்' என, கூறியிருந்தார். இதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவர்களுக்கு பதவி கொடுத்து சரிகட்ட முயற்சித்து வருகிறது, தி.மு.க., மேலிடம்.அதன்படி, கனிமொழிக்கு கொள்கை பரப்பு செயலர் பதவியையும், ராஜாவுக்கு, துணை பொதுச் செயலர் பதவியையும் வழங்க, கலைஞர் கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரிடம், அவர் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும், கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க., சார்பில், கடந்த, 7ம் தேதி காட்டாங்கொளத்துாரில் தொண்டர்கள் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின் ஆதரவாளர்கள் பலரும்  கனிமொழியை கடுமையாக விமர்சித்தனர். அதற்கு பதிலடி கொடுக்க, கனிமொழி ஆதரவாளர்களும் தயாராகி வருகின்றனர்.

தெரு தெருவாக பொருட்கள் விற்றவள் ! அமைச்சர் ஸ்மிருதி இரானி உருக்கம் : எல்லாம் மோடிதாய்ன் !

புதுடில்லி:''டில்லி நகர வீதிகளில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்த நான், இப்போது, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஆகியுள்ளேன். இந்த பெருமை, பிரதமர் மோடி எனக்கு தந்தது,'' என, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானி கூறினார்.
டிலலியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:என் வாழ்க்கையில் முக்கியமான தருணம், பிரதமர் மோடி என்னை, 'இளைய சகோதரி' என அழைத்தது தான். அதை நினைத்தால், இப்போதும் எனக்கு கண்ணில் நீர் வழியும்; தொண்டை அடைத்துக் கொள்ளும்.நான் சிறு வயதில், டில்லி நகர வீதிகளில், வீடுவீடாக அழகு சாதன பொருட்களை விற்பனை செய்துள்ளேன். என் தாய், டில்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில், 'ஹவுஸ் கீப்பிங்' எனப்படும், சுத்தமாக வைத்துக் கொள்ளும் பொறுப்பை வகித்து உள்ளார்.

என்ன செய்வது? தெரு தெருவாக விற்றீகள் சரி....ஆனாலும் அதே சாதாரண வாழ்க்கை வாழ்ந்து ஒழுக்கமாக இருந்து படித்து தன் உழைப்பின் மூலம் முன்னேறிய எவ்வளவோ பேர் இன்று இந்தியாவில் இருந்து வெளியேறி போக வேண்டிய நிலையில் உள்ளார்கள்....இதற்கு எல்லாம் காரணம் உழைப்பிற்கும் திறமைக்கும் மக்கள் ஒட்டு போட்டதே கிடையாது....உணர்ச்சிக்கு அடிமையாகி ரசிகர்களாகவும் தொண்டர்களாகவும் சாமியாரின் பக்தர்களாகவும் உள்ளார்கள். MGR காலத்தில் கழுதை நின்றால் கூட ஜெயிக்கும் என்பார்கள்...அந்த அளவு மூடநம்பிக்கை நம் நாட்டில் உள்ளது. இதில் நீங்கள் பாரத ரத்னா பெற்றால் கூட வியப்பில்லை.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

Kingfisher 900 கோடி கடன் ; சி.பி.ஐ., விசாரணை ஆரம்பம் ! மல்லையாவுக்கு நீதித்துறையும் பொதுத்துறை வங்கிகளும் சேவகம் செய்யுமா ?

புதுடில்லி: ஏற்கனவே பல்வேறு நஷ்டத்தில் இயங்கிய கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.900 கோடி கடன் கொடுத்தது எப்படி ? இதற்கான காரணம் என்ன ? யார் பொறுப்பு என்பது குறித்து சி.பி.ஐ.,அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர். உலகில் கொடி கட்டி பறந்த விஜய்மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனம் ஏராளமான கடன் சுமை தாங்க முடியாமல் தவித்தது. இதனால் கடந்த 2012 அக்டோபர் மாதம் தனது விமான சேவையை நிறுத்தியது. இந்த நிறுவனத்திற்கு ஏற்கனவே பல வங்கிகள் கடன் கொடுத்திருந்த நிலையில் அபாய கட்டத்தில் இருந்த போது, கடந்த 2009ல் ஐ,டி.பி.ஐ வங்கி ரூ.900 கோடி கடனை வழங்கியிருக்கியது. என்னிடம் விசாரணையை கொடுத்தால் ஒரே நாளில் தியாகி ( தாதா) மாமா மல்லையாவையும் , IDBI பேங்க் செர்மான்னையும் தூக்கு கயிற்றிற்கு அனுப்பியிருப்பேன் . சிபிஐ எல்லாம் சுத்த வேஸ்ட்டு .மாமா மல்லையா மறுபடியும் அழகான பாலிவூட் நடிகையை சிபிஐ ஆட்களுக்கு கொடுத்து கேசை ஜெயித்து விடுவார் . நான் சொன்னது நடக்கிறதா இல்லையா என்று பாருங்கள்   இந்த  பார்பன விமான .பிளஸ்  சாராய  முதலாளி மீண்டும் மீண்டும் கொள்ளை அடித்துக்கொண்டே இருப்பார் எந்த சட்டமும் ஒன்னும் செய்யாது ?

விளையாடி கொண்டிருந்த 11 வயது சிறுவனை சுட்டு கொன்ற இஸ்ரேலி ராணுவம்

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் 11 வயது சிறுவனை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அந்தச் சிறுவனின் உறவினர்களும், மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.; கலீல் மொகமது அல்-அனாதி என்ற பெயரையுடைய அந்தச் சிறுவன் வெஸ்ட் பேங்க்கில் தென் மேற்குப் பகுதியில் உள்ள ஹீப்ரான் நகரில் அல்-ஃபவார் அகதிகள் முகாம் அருகே, தனது வீட்டினருகே விளையாடிக்கொண்டிருந்தான்.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது ஏன்?

தமிழகத்தில் பிளஸ் 2விற்குப் பின்னர் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கல்வி கற்கவே அதிக ஆர்வம் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் இளம் இன்ஜினியர்களை உருவாக்குவதில் தமிழகம் முதலிடம் வகிக்கும் அளவிற்கு இன்ஜினியரிங் கல்லூரிகள் உருவாகியுள்ளன.தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்வி முடித்த பல்லாயிரம் பேர் இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் வேலை வாய்ப்பு பெற்று பணியாற்றி வருகின்றனர். இக்கல்விக்கு கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த நிலை தலைகீழாக மாறிவருகிறது.குறிப்பாக அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அடுத்தபடியாக கல்வித்தரம், ரிசல்ட், ரேங்க் போன்றவற்றில் சிறந்த சாதனை படைக்கும் தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு மட்டுமே கடும் கிராக்கி நீடிக்கிறது. ரிசல்ட் குறையும் கல்லூரிகளில் அடுத்த ஆண்டு மாணவர்கள் சேர்வது குறையத்தொடங்கி உள்ளது.

பாரத ரத்னா வேண்டாம் ! நேதாஜி குடும்பத்தினர் தீர்மானம் !

பாரத ரத்னா' வேண்டாம்: நேதாஜி குடும்பத்தினர் சுதந்திரபோராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கப்படலாம் என ஊகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விருதை ஏற்க மறுத்துள்ள நேதாஜி குடும்பத்தினர், முதலில் அவர் காணாமல் போனதற்கான மர்மத்துக்கு தீர்வு காண வலியுறுத்தியுள்ளனர்.;nakkheeran.in

அழகிரி அர்ச்சனை : சகுனி கல்யாணசுந்தரத்தின் பின்னணியில் ஸ்டாலின் டிராமா !

மதுரை: அறிவாலயத்தில் அமர்ந்து கொண்டு, சகுனி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் 'சிலந்தி'யை, அங்கிருந்து அப்புறப்படுத்தினால் தான், கட்சி உருப்படும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். அந்த சகுனியான சிலந்தி யார் என்பதை, இப்போது, கட்சித் தலைமை உணர்ந்து கொண்டு விட்டது. அதனால் தான், கல்யாணசுந்தரம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும்,திமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.
கல்யாண சுந்தரம் நீக்கம் தி.மு.க., அமைப்புச் செயலர் பொறுப்பில் இருந்த, பெ.வீ.கல்யாண சுந்தரம், கழகக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், கழக அடிப்படை உறுப்பினர் உட்பட, கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். அந்த பொறுப்பில், வழக்கறிஞர் ஆலந்துார் ஆர்.எஸ்.பாரதி நியமிக்கப்படுகிறார்' என, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்

பிரவீன் குமார் ராஜினாமா ! அதிமுகவுக்கு ஆதரவாக 144 தடை உத்தரவு போட்டமை நிருபணமாகிறது ?

சென்னை: தமிழக எதிர் கட்சிகளின் தொடர் புகாரை அடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய பிரவீன்குமார் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பிரவீன்குமார், கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். இவர் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த காலத்தில்தான், தமிழகத்தில் 2011ம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தல், இடைத் தேர்தல்கள் மற்றும் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தல் நடந்தது. அப்போது மக்களை தேர்தலின் போது, பொதுமக்கள் யாரும் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்து செல்லக் கூடாது என கட்டுப்பாடு விதித்தார். இதனால் வியாபரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைத்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினார். மேலும், தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை பிரவீன்குமார் பிறப்பித்தார். இதை பயன்படுத்தி ஆளுங்கட்சியினர், சில போலீஸ் அதிகாரிகளின் உதவியோடு வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக திமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர் கட்சி தரப்பில் பகிரங்க புகார் கூறப்பட்டது. இனி என்னத்தை செஞ்சு என்னாவாக போகிறது ? கொடுத்த காசு கொடுத்ததுதான் போட்ட ஒட்டு போட்டதுதான் எல்லாம் தலையெழுத்து .

பாடிகொண்டிருந்த மைக்கில் மின்சார பாய்ந்து பாடகர் மரணம் ! திருவிழாவில் அசமபாவிதம்

கோயில் திருவிழாவில் நடந்த கச்சேரியில் பாடிக் கொண்டிருந்த போது மைக் ஷாக் அடித்து பாடகர் பலியானார்.
ஆலந்தூரை அடுத்த மடுவின் கரை பெரிய பாளையத்தம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடித் திருவிழா தொடங்கியது. அன்றைய தினம் இரவு கோயில் வளாகத்தில் ராம் ரிதம்ஸ் குழுவினரின் இன்னிசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கச்சேரிக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி தொடங்கியது. கச்சேரிக்கு முன்னதாக மழை பெய்திருந்ததால் மேடையும் மின்சார ஒயர்களும் ஈரமாக இருந்துள்ளன. அத்துடன் மின்சாரமும் வந்து போய்க் கொண்டு இருந்துள்ளது.
இந்நிலையில் கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ரகுகுமார் திடீரென்று அலறியவாறு மேடையில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது ரகுகுமார் மூச்சு பேச்சில்லாமல் கிடந்தார். மேடையில் விளக்குகளுக்காக இணைக்கப்பட்டிருந்த ஒயரில் இருந்து ரகு குமார் பிடித்தி ருந்த மைக்கில் மின்சாரம் பாய்ந்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. மயங்கிக்கிடந்த ரகுகுமாரை டாக்டர் பரிசோதித்தபோது, அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

புதுச்சேரி ரவுடிகளுக்கு மரண அடி ! புதுச்சேரி வரலாற்றில் திருப்பம்

புதுச்சேரியில் நடப்பது யாருடைய அரசாங்கமாக இருந்தாலும், ஆட்சி ரவுடிகளின் கையில்தான் இருக்கிறது. ரவுடிகளின் முக்கியமானதொரு தொழில் லேபர் கான்டிராக்ட். எந்த வித உரிமைகளும் இல்லாமல் கொத்தடிமைத் தொழிலாளர்களாக நடத்தப்படும் கான்டிராக்ட் தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்த 5-ம் தேதி புதுச்சேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய பேரணி, ரவுடிகளால் தாக்கப்பட்டது. தாக்கியவர்களுக்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது.8 ரவுடிகளும் சில தொழிலாளர்களும் மருத்துவமனையில். தொழிலாளர்கள் மட்டும் 20 பேர் சிறையில். நடந்த நிகழ்வுகளை கீழே விவரிக்கிறோம். மானேசரில் தொடங்கி புதுச்சேரி வரையில் தொழிலாளி வர்க்கத்தின் மீது இழைக்கப்படும் அநீதி ஒன்றுதான். அதற்கு விடையும் ஒன்றுதான் என்பதை இந்த அறிக்கையைப் படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியுமெனக் கருதுகிறோம்.

தினமலர் :கல்யாணசுந்தரம் கொளுத்தி போட்டது வெடியா? காமெடியா? அழகிரி - ஸ்டாலின் வட்டாரத்தில் புது சர்ச்சை?

தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளராக, ஸ்டாலினை வரும் 2016 சட்டசபை தேர்தலுக்கு, உடனடியாக அறிவிக்க வேண்டும்' என, கட்சியில் இருந்து விலக்கப்படுவதற்கு முன், கட்சியின் அமைப்புச் செயலர் கல்யாண சுந்தரம் கொளுத்திப் போட்டு உள்ள வெடி, விரைவில் எல்லா இடங்களிலும் வெடிக்கும் என, ஸ்டாலின் ஆதரவு வட்டாரம் கூறுகிறது.
கலந்துரையாடல்:அதற்கு உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்டாலின் நடத்திய முதல் கலந்துரையாடல் கூட்டத்திலேயே, இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளதாக, அவரது ஆதரவு வட்டாரம் கூறுகிறது.அதேநேரத்தில், அழகிரி வட்டாரமோ, 'கல்யாணசுந்தரம் கொளுத்தி போட்டது வெடி அல்ல; வெறும் காமெடி' என்று கிண்டலடிக்கிறது.

ஊழல்புகாரில் சிக்கியுள்ள ஜெயலலிதா எப்படி அமைச்சர்களின் ஊழல் புகாரை விசாரிக்கமுடியம் ?

ஜெயலலிதாவால், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை எப்படி விசாரிக்க முடியும்? உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கேள்வி ;சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள முதல் அமைச்சர் ஜெயலலிதாவால், தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை எப்படி விசாரிக்க முடியும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரி பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையரிடம் அவர்கள் மனு கொடுத்துள்ளனர்.