ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

ஒரு கோடி சூதாட்டம்; வீடியோ ஆதாரம் வெளியீடு: போலீஸ் பிடியில் பாகிஸ்தான் வீரர்கள்

லண்டன்: ஏற்கனவே கிரிக்கெட் சூதாட்டத்தில் ( மேட்ச் பிக்சிங்) கைதேர்ந்தவர்களான பாகிஸ்தான் வீரர்கள் லண்டனில் தங்களுடைய கைவரிசையை காட்டியுள்ளனர். ஆனால் உலகிலேயே தலை சிறந்த ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார் சும்மா விடுவார்களா என்ன ? ., தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இந்த சூதாட்டம் நடந்திருக்கிறது.

74 ரன்களுக்கு சுருண்டு பாலோ ஆன் : இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் பங்கேற்கின்றனர்.ஏற்கனவே 3 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இங்கிலாந்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் 4 வது போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 446 ரன்கள் குவித்தது. டிராட் 184 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதனையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 74 ரன்களுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது. 2 வது இன்னிங்சிலும் 4 விக்கெட் இழந்து 41 ரன்கள் எடுத்துள்ளது. இதுதான் ஆட்டத்தின் சுருக்கமான விவரம்.

பாகிஸ்தான் அணி வீரர்கள் நோ பால் மற்றும் ஒய்டு மூலம் இங்கிலாந்து வெற்றிக்கு உதவியதாக கூறப்படுகிறது.

நியூஸ் ஆப் தி வேர்ல்டு : லண்டனில் இருந்து வெளியாகும் நியூஸ் ஆப் தி வேர்ல்டு என்ற பத்திரிகையில் செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த செய்தியின் விவரத்தின்படி , ஸ்காட் லாõந்து யார்டு போலீசார் கிரிக்கெட் வீரர்கள் தங்கி இருக்கும் பிரபல ஓட்டலுக்கு சென்று விசாரித்தனர். கேப்டன் சல்மான்பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகம்மது ஆசீப், முகம்மது அமீர், விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், மற்றும் அணியின் மேலாளர் யாவர்சயீது ஆகியோரிடம் போலீசார் துளைத்து முக்கிய வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.

வீரர்கள் அறையில் முக்கிய ஆதாரங்கள் :  இந்த சூதாட்டத்தில் 4 வீரர்கள் மற்றும் வெளி புரோக்கர்கள் 3 பேரும் ஈடுபட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதில் ஒரு புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் எங்களிடம் நடத்திய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம் என அணி மேலாளர் சயீது கூறியிருப்பதாகவும் இந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது. அதே நேரத்தில் வீரர்கள் தங்கி இருந்த அறைகளில் ரெய்டு எதுவும் நடத்தப்பட்டதா என்பதை, அப்படி எதுவும் இல்லை என மறுத்துள்ளார். வீரர்கள் அறையில் இருந்து முக்கிய ஆதாரங்கள் போலீசார் எடுத்து சென்றிருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது. பாகிஸ்தான் டி.வி.,யும் இதனை உறுதிசெய்துள்ளது.

வீடியோ ஆதாரம்: இது தொடர்பான சூதாட்டத்தில் அணி கேப்டன் சல்மான்பட் பணம் பெறும் நிகழ்வு வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பேரத்தில் யார் , யார் எந்த ஓவரில் பால் போடுவது எப்படி போடுவது என்றும் கூறி விளக்குகிறார். அது போல ஆட்டமும் நடக்கிறது. இந்த வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள் ;

www.newsoftheworld.co.uk/

வீரர்கள் கைது பரபரப்பு :  இங்கிலாந்து பவுண்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை ( இந்திய மதிப்பு ஒரு கோடியே 27 லட்சத்து 29 ஆயிரம் ) மேட்ச பிக்சிங் நடந்திருக்கும் என தெரிகிறது. பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுடனான போட்டியிலும் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது. இதில் கம்ரான் அக்மால் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லண்டனில் டெஸ்ட் போட்டி இதனால் நிற்காது என்றும் தொடர்ந்து ஆடி முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டம் எப்படி இருந்தாலும் வீரர்கள் யாரும் கைது செய்யப்படுவார்களா என்ற பரபரப்பு பாக்., ரசிகர்கள் இடையே நிலவுகிறது தற்போது.

இந்தியர்களுக்கும் தொடர்பு? இதனிடையே இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள புரோக்கர் மசார் மஜீத் சூதாட்ட விவகாரத்தில் இந்தியாவை சேர்ந்த புரோக்கர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்களுடன் தொடர்பு கொண்டதாகவும், விபரங்களை தருவதற்கு இந்தியாவை சேர்ந்த புரோக்கர்கள் தனக்கு பணம் தந்ததாகவும்  போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளக்கம் : இந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ்   இந்த குற்றச்சாட்டுக்களால் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும், இந்த குற்றச்சாட்டுக்கள் கடுமையானது என்றும், இது  போன்றவை கிரிக்கெட்டை பாதிக்கும் என்று கூறினார்.  பாகிஸ்தான் அணி மேலாளர் கூறுகையில், தங்கள் அணி காலையில் பயிற்சி மேற்கொள்ளவில்லை. குற்றச்சாட்டுக்கள் தங்களை கவலையடையச்செய்தள்ளது. இது குறித்து மட்டுமே வீரர்கள் விவாதித்ததாகவும் கூறினார். பாகிஸ்தான்  கேப்டன் சல்மான் பட் கூறுகையில், இந்த குற்றச்சாட்டுக்களால் கவலையடைந்துள்ளதாகவும், இதனால் டிரஸ்சிங் ரூம் இருளடைந்து போல் உள்ளதாகவும் கூறினார். மேலும் பாகிஸ்தான் அணியின் ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய முழுத்திறனையும் வெளிப்படுத்தியதாகவும் கூறினார். இதனிடையே பாகிஸ்தான் கேப்டன் பதவியில்இருந்து விலக சல்மான் பட் மறுத்து விட்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
vinoth - புனே,இந்தியா
2010-08-29 18:13:02 IST
பாகிஸ்தான் நாட்டில் சூதாட்டமோ , terrorism , பொய்யோ புதிது அல்ல . எப்போதும் நடப்பது தான்.இதில் devloped country பாகிஸ்தான் ....
பிரபாகரன்.G - Chennai,இந்தியா
2010-08-29 17:07:16 IST
This match fixing is nothing but cricket Terrrorism. Nobody will believe hereafter Pakistanis fraudulent cheating cricket game. ...
சாமி - MUSCAT,ஓமன்
2010-08-29 17:01:58 IST
பாகிஸ்தான் அணி மேலும் மேலும் சூதாட்டத்தில் வென்று வெற்றி வாகை சூட என் வாழ்த்துக்கள் ...
v.christopher - sanaa,ஏமன்
2010-08-29 16:23:49 IST
Now a days everything based on money, very sad ! No team sprit, No patriotism, No honesty & etc.... Except Idiot Followers/Fans !!!...
Gnanavel - Kampala,உகான்டா
2010-08-29 15:51:57 IST
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் எப்போதும் திருடர்கள். ...
ராமசந்திரன் - சென்னை,இந்தியா
2010-08-29 15:04:08 IST
ஒரு வேளை பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளதுகாக மேட்ச் பிக்ஸ் செய்திருப்பார்கள் என்ற செய்தி பாகிஸ்தானில் இருந்து வரலாம். உன்னத நாடு உன்னத விளையாட்டு வீரர்கள். வாழ்க porikistan. This country is top full of liars....
க.ஆறுமுகம் - புதுக்கோட்டை.VENNAVALKUDI,இந்தியா
2010-08-29 14:15:51 IST
கிரிக்கெட் ஒரு புனிதமான ஒரு விஷயம்..... உன்கல மாதிரி ஒரு நாடு இருந்த கிரிக்கெட் அளிச்சுரும்......பாவி பசங்களா.............
பவுண்ட் அண்ட் ருபீஸ் - Auckland,நியூ சிலாந்து
2010-08-29 13:20:51 IST
ஆண்டவா .....இவ்ளவு பணம் சம்பாதித்தும் ஏன் இந்த பேராசை...
karu - serangoon,சிங்கப்பூர்
2010-08-29 13:08:09 IST
இதை பற்றி நீங்கள் என்ன நெனைகிர்ர்கள் பாகிஸ்தான் ஒரு மட்டமான நாடு என்று மட்டும் எனக்கு பிரிக்கிறது நண்பா நன்றி வணக்கம்...
அம்முஸ் - தமிழ்நாடு,இந்தியா
2010-08-29 12:49:38 IST
ஹிஹிஹி பாகிஸ்தான் கிரிக்கெட்ல இதெல்லாம் சாதரணமப்பா?????????? வேற நல்ல நியூஸ் இருந்தா போடுங்கப்பா,...

கருத்துகள் இல்லை: