சனி, 4 செப்டம்பர், 2010

பெருமளவு பணத்தை வாங்கிய இயக்குனர்,புலிகள் தொகையை திருப்பி

தேர்தலில் அ.தி.மு.கழகத்தின் தலமையிலான கூட்டு தமிழகத்தில் 40 ஆசனங்களை வெற்றெடுக்கும் என்றும், அதன் பின்னர் மத்தியில் தமது சொல்லினை கேட்பதற்க்கு தயாராக இருப்பார்கள் என்றும் வை.கோ அவர்கள் நடேசனுக்கு தெரிவித்தமையினால் , இதனை நம்பிய பிரபாகரன் ப.சிதம்பரத்தின் முயற்சிக்கு மறுப்பு தெரிவித்து இந்திய தேர்தல் முடிவுவரும் வரையில் காத்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் மே மாதம் 16ஆம் திகதி முற்றாக வெளிவந்த நிலையில் மத்தியில் காங்கிரங்கட்சியே மீண்டும் ஆட்சி கைப்பற்றியதோடு, தமிழகத்தில் வை. கோ உட்பட அ.தி,மு.க படு தோல்வியை தழுவிய செய்தி பிரபாகரனுக்கு பெரும் ஏமாற்றத்தினை கொடுத்தது. இந்திய தேர்தல் முடிவுகள் 16 ஆம் திகதி வெளிவந்த பின்னர் 17 ஆம் திகதி நள்ளிரவிற்கு பின்னர், 18 ஆம் திகதி அதிகாலை புலிகளின் தலைவர்கள் படையினரிடம் சரண் அடைவது என்ற முடிவினை மேற்கொண்டு இருந்தார்கள். இவர்கள் சரண் அடைந்தபோது சிலர் உடனேயே கொல்லப்பட்டார்கள். சிலர் கொழும்பு எடுத்து செல்லப்பட்டு , மீண்டும் வன்னிக்கு கொண்டுவரப்பட்டு கோரமாக கொல்லப்பட்டார்கள். அந்த காட்சிகளை எல்லோரும் ஒளிநாடாக்களில் பாத்திருந்தார்கள்.
வை.கோ மட்டும் தனது அரசியலை கருத்தில் கொள்ளாது பிரபாகரனை காப்பாற்றுவதினை கருத்தில் கொண்டு செயற்பட்டு இருப்பாரே ஆயின், சில வேளைகளில் பிரபாகரன் தனது உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். தேர்தல் முடிவுகள் எப்படியும் வரலாம் அதற்காக காத்திராது உங்கள் உயிரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் என்று வை.கோ அவர்கள் நடேசனுக்கு அறிவுரை வளங்கியிருந்தால்! பிரபாகரன் இந்திய தேர்தல் முடிவுகள் வரும் வரையில் 16 ஆம் திகதி வரையில் காத்திருந்திருப்பதினை தவிர்த்திருப்பார். வை.கோ ஒரு வாயாடி என்பது இறுதிநேரத்திலேயே பிரபாகரனுக்கு தெரியவந்தது. இவர் தனக்கே ஒரு ஆசனத்தினை பெறமுடியாது போயுள்ளாரே, 40 ஆசங்களை வெல்லுவோம் என்று எப்படி இவர் எங்களுக்கு உறுதியாக கூறினார் என்று பிரபாகரன் இறுதிவேளையில் நினைத்திருக்க கூடும். தனது சுயநலத்திற்காக ப.சிதம்பரம் மெற்கொண்ட முயற்சியை வை.கோ தடுத்திருந்தார் என்று பிரபாகரன் கொல்லப்பட்டு அடுத்த முன்று தினங்களில் நான் எழுதியிருந்தேன். இதனை கே.பி அவர்கள் இப்போதே கூறியுள்ளார்.
தமிழக தலைவர்கள் சிலர் ஈழத்தமிழர்களுக்காக உதவுவதாக நினைத்து செய்யும் செயல்கள் பல ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பான முடிவுகளை கொடுத்து வந்துள்ளது. இலங்கை படையினரால் சுற்றி வழைக்கப்பட்டு இருந்த பிரபாகரன் அவரது குடும்பம், மற்றும் ஏனைய புலிதலைவர்களை எப்பாடு பட்டாவது காப்பாற்றும் வோம் என்று கூறி பெருமளவு நிதிகளை பெற்றுக்கொண்ட தமிழ் தலைவர்கள் பலர் , இந்திய மத்திய அரசை ஆத்திரப்படுத்தினார்களே தவிர ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை. தற்பொழுது சிறையில் இருக்கும் இயக்குனரே அதிக பணம் பெற்றுக் கொண்டதாக அறியப்பட்டது. அரசியல் கட்சியை ஒன்றினை வைத்திருக்கும் உடல் கட்டுமஸ்தான குமார் நடிகரை இவர் அணுகி இலங்கை தமிழர்கள் என்ற போர்வையில் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்குமாறு கேட்டிருந்தார். தனது கட்சி புதியது என்றும் அதனை வளர்ப்பதற்கு மாதம் 12 லட்சம் தேவை என்றும் அதனை கொடுத்தால் நானும் உங்களுடன் சேர்ந்து குரல் கொடுப்பேன் என்று அவர் கேட்டிருந்தார். முழுப்பணத்தையும் தனது பைக்குள் போட்ட இயக்குனர் இதற்கு மறுத்ததினால் கட்டுமஸ்தான குமார் நடிகர் ஒதுங்கி கொண்டார்.
பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் பெருமளவு பணத்தை வாங்கிய இயக்குனர் செயறபட்ட அளவு போதாது என்று நோர்வே புலிகள் ஒரு தொகையை திருப்பி தருமாறு கேட்டாவாறு இருந்தனர்.இதனாலேயே பிரபாகரனின் உருவம் பொறித்த சட்டையை அணிந்வாறு , தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கினால் தமிழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களை கொல்வேன் என்று சபதமிட்டு அதிகப்பிரசங்கியாக நடந்து கொண்டு சிறை சென்றார். இவ்வாறு பேசினால் தனக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பது அந்த இயக்குனருக்கு தெரியாது இருக்க முடியாது. அப்படி தெரிந்தும் ஏன் இப்படியாக நடந்து கொண்டார் என்றால்! நோர்வே புலிகளின் தொந்தரவு இல்லாது பாதுகாப்பாக இருப்பதற்கான இடம் சிறைச்சாலை என்பதினால் அவர் புத்திசாலித்தனமாக புகலிடம் தேடிக்கொண்டார்.
புலி உறுப்பினர்களை காட்டிலும் சில தமிழக தலைவர்கள் தாமே தீவிர புலி ஆதரவாளர்களாக காட்டிக்கொள்வார்கள். கரும்புலி உறுப்பினர்களை காட்டிலும் தமக்கே பிரபாகரன் மீது அளவிடமுடியாத பிரியம் இருப்பதாக காட்டிக்கொள்வார்கள். ஆகையினாலேயே பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று புலிகளே ஒப்புக்கொண்டு தமது தலைவரின் படத்தினை சாமி அறைக்குள் மாற்றிய பின்னர் , இல்லை அவர் இறக்கவில்லை என்று சீமானும், வை.கோ அவர்களும் அடம் பிடிக்கின்றார்கள். பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி வெளிவந்தவுடன் அவர் கொல்லப்படவில்லை என்று கே.பி அறிவித்து இருந்தார். பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று விடுதலை புலிகளின் சர்வதேச தொடர்பாளர் தம்பி கே.பி கூறியதை கேட்டு நான் உள்ளம் குளிர்ந்தேன்,துள்ளிகுதித்தேன் என்று வை.கோ அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
please visit for details
www.neruppu.com

கருத்துகள் இல்லை: