சனி, 28 ஜூன், 2025
“ராமதாஸ் மீது விசிக, காங். திடீர் பாசம் காட்டுவது திமுகவின் சூழ்ச்சி” - அன்புமணி ஆவேசம்
பாமக தலைவர் அன்புமணி தலைமையில் கட்சியின் பாட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டம் இன்று (ஜூன் 28) சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அன்புமணி பேசியது: “திமுக தான் பாமகவுக்கு எதிரி. திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். விசிகவுக்கும், காங்கிரஸுக்கும் ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன் வந்தது? ராமதாஸ் மீது திருமாவளவனுக்கு ஏன் திடீர் அன்பு?
புலிகளின் துணுக்காய் வதைமுகாம்! சுமார் 4000 இற்கும் அதிகமான தமிழர்களை வேட்டையாடிய புலிகளின் கொடூரம்!
![]() |
![]() |
Thangathurai Thayani : கடந்த 23.06.2025 காலை 9.30 மணியளவில் நானும் எனது நண்பியுமாக யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு சென்று துணுக்காய் செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டோம்.
என் குடும்ப உறுப்பினர்களுக்கு கூட நான் எங்கே போகிறேன் என்று சொல்லவில்லை
ஏனெனில் எல்லோரும் போலவே "உதை விட்டுட்டு பேசாமல் இரு";என்ற ஆணாதிக்கத்திற்கு வளிசமைக்கும் பதிலையே கூறி என் பயணத்தை, இலக்குகளை அடைய இடையூறாய் இருப்பார்கள்
அத்தோடு நாம் அனைவரும் துப்பாக்கி முனையில் எமது கருத்துச் சுதந்திரம் முடக்கி வைக்கப்பட்ட சமுகத்தில் வாழ்ந்தமையுமே காரணம்.
எந்த ஒரு அரசியல் நோக்கமோ பணம் திரட்டவோ இல்லை
என் பயணம்..இது என் உள்ளக்குமுறல் என் வலிகளும் வேதனைகளும் கலந்த பயணம்...பஸ் பயணிக்க ஆரம்பமாகியது
அன்று தான் நான் முதல் தடவையாக வன்னி பிரதேசத்துக்கு செல்கிறேன்.
புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாம்
Arun Siddharth - அருண் சித்தார்த் i : புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாம் தொடர்பாக UTHR-J (University Teachers For Human Rights- Jaffna ) மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் - யாழ்ப்பாணம் எனும் அமைப்பு வெளியிட்ட அறிக்கை இது.
இந்த அமைப்பு யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்களான தயா சோமசுந்தரம், ராஜன் ஹூல் , கோபாலசிங்கம் சிறிதரன் மற்றும் ராஜனி திரணகம ஆகியோரால் உருவாக்கப்பட்டு இலங்கையின் பல பாகத்திலும் உள்ள பல்கலைக்கழக பேராசிரியர்களின் பங்களிப்புடன் இலங்கையில் யுத்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தி வெளியுலகுக்கு கொண்டு வந்த சர்வதேசி ரீதியில் கீர்த்தி மிக்க நம்பகமான அமைப்பென ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சுயாதீன அமைப்பாகும்.
டெல்லி 10 ஆண்டு பழமையான டீசல் - 15 பழமையான பெற்றோல் கார்களும் தடை No petrol - diesel for 10-year-old diesel! 15-year-old petrol!
![]() |
கார் உற்பத்தியாளர்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு ஆட்சி செய்யும் டெல்லி பாஜக அரசின் பகல்கொள்ளை!
நன்றாக இன்னும் பலவருடங்கள் ஓடக்கூடிய கார்களை சட்டத்தின் மூலம் அப்புறப்படுத்தி விட்டு புதிய கார்களை வாங்கவேண்டிய நெருக்கடிக்கு தள்ளி உள்ளது டெல்லி பாஜக அரசு.
எப்படி எல்லாம் மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கலாம் என்ற ஒற்றை சிந்தனையில் டெல்லி அரசு.
உலகில் அதிக பிச்சைக்காரர்கள் உள்ள நாடு என்ற பெயரை ஏற்கனவே பெற்றாயிற்று.
இன்னும் என்னென்ன பெருமையெல்லாம் தேவையோ?
Jose Kissinger : To drive a car or ride a bike, owners to spend on new car / bike when their present one is perfectly roadworthy. One has to wonder how much bribe the auto-industry has paid #BJPigs for this to happen.
Delhi Government Bans Refuelling of Old Vehicles from July 1 to Curb Pollution
திமுகவின் முதுகில் குத்தப் போகிறதா காங்கிரஸ்? Is Congress going to stab DMK in the back
![]() |
என்ற கேள்வியை அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.
பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அதிமுக இப்போதைக்கு இடம் பெற்றுள்ளது. ஆனால், அதிமுகவை பந்தாடிப் பார்த்துவிடுவது என்ற முடிவுடன் பாஜக ரொம்பவே சீண்டிக் கொண்டிருக்கிறது. Is Congress going to stab DMK in the back
வெள்ளி, 27 ஜூன், 2025
இஸ்ரேலின் போர் சேத விபரங்கள் .. இரண்டு மில்லியன் மக்கள் வெளியேற்றம்
Showketh Hussain : இரண்டு மில்லியன் மக்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியதாக தகவல். இஸ்ரேலின் இராணுவ உள்கட்டமைப்பு சிதைக்கப்பட்டன.
6 மூத்த இராணுவ ஜெனரல்கள்
32 மொசாட் அதிகாரிகள்
78 ஷின் பெட் அதிகாரிகள்
27 கடற்படை அதிகாரிகள்
198 விமானப்படை அதிகாரிகள்
462 வீரர்கள்
423 பொதுமக்கள் உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இஸ்ரேல் தனது முழுமையான அழிவை இன்னும் குறிப்பிடவில்லை. காரணம், அது எதிர்பாராத பேரழிவை சந்தித்திருக்கிறது.
துறைமுகம், சர்வதேச விமான நிலையம், எரிவாயு மற்றும் மின்சார நிலையங்கள், பல்வேறு சேவை மையங்கள் சேதமடைந்து கடுமையான பேரழிவை இஸ்ரேல் சந்தித்து இருக்கிறது. இதை மீண்டும் கட்டியெழுப்ப பல ஆண்டுகள் ஆகும். அதே சமயம் ஈரான் மிகவும் வலிமையான நாடாக மாறும்.
ஈரான் மீதான நெதன்யாகுவின் தாக்குதல் எதையும் சாதிக்கவில்லை. ஈரானிய அணு உலைகள் பாதிக்கப்படவில்லை. ஆட்சி வீழ்ச்சியடையவில்லை.
ஓகம் (யோகம்) ஆரியர்களால் களவாடப்பட்ட மெய்யியல்
![]() |
Siva Ilango : ஓகம் (யோகம்) - தமிழ் மண்ணின் மெய்யியல்
தமிழின் மிகப் பழமையானதும், ஆகச் சிறந்த மெய்யியலுமான ஓகம், ஆரியர்களால் களவாடப்பட்டுத் தற்போது யோகம் என்ற பெயரில் பரப்பப்பட்டு வருகிறது.
இத்தனைப் பழமையுடையதும், தமிழ்ச் சித்தர்களின் உடைமையும் ஆன யோகக் கலைக்குப் பதஞ்சலியை மூலவராக்கி, அதன் வழி யோகத் தத்துவங்களைப் "பாதஞ்சலியம்" என்று சமற்கிருத நூல்கள் யோகத்தைத் தமதாக்கும் வேலையைச் செவ்வனே செய்திருக்கின்றன; செய்தும் வருகின்றன. பல தமிழ் இலக்கியங்களிலும், திருமந்திரத்திலும் சொல்லப்பட்ட யோக சூத்திரங்கள், பதஞ்சலி முனிவரின் யோக சூத்திர நூலில் இல்லை என்பதே தமிழ் ஓகத்தின் பழமையையும், அடிப்படைத் தன்மையையும் காட்டுவதாக அமைகிறது.
புலிகளின் துணுக்காய் ரகசிய வதை முகாம்! காணொளி
Thangathurai Thayani : இன்று என் தந்தை புலிகள் இயக்கத்தினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்ட துணுக்காய் வதை முகாமிலிருந்து ஒரு பதிவு....
வியாழன், 26 ஜூன், 2025
பெங்களூரு: 'ஜெய் ஸ்ரீ ராம்' சொல்ல மறுத்த இஸ்லாமிய ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய கும்பல்

மாலை மலர் : கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட மறுத்ததற்காக ஒரு முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டார்.
ஜூன் 22 அன்று, சம்பிகேஹள்ளிக்கு அருகிலுள்ள ஹெக்டே நகரில் தனது நண்பரும் மெக்கானிக்குமான சமீருடன் தனது ஆட்டோவில் வசீம் (35) சென்றுகொண்டிருந்தார். அவர்கள் ஓய்வெடுக்க ஒரு காலியான இடத்தில் வாகனத்தை நிறுத்தினர்.
அருகில் மது அருந்திக் கொண்டிருந்த சுமார் எட்டு பேர் எங்களிடம் வந்து அவர்களின் பெயர்களைக் கேட்டார்கள்.
ஈரானின் 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே போனது? அமேரிக்கா இஸ்ரேல் அதிர்ச்சி
தினமலர் : ஈரான் சேமித்து வைத்து இருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே போனது என தெரியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தியது.
அதாவது, அணு ஆயுதத்தைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி ஈரான் மீது ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
உண்மையான திமுக அபிமானிகள் மீது கொலைவெறியுடன் திமுக தம்பிகள்?
![]() |
Vimalaadhithan Mani : நடுநிலையாளர்கள் மீதும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் அதிகாரத்துக்கு சொம்பு தூக்காத
உண்மையான திமுக அபிமானிகள் மீதும் கொலைவெறியுடன் இணையத்தில் உலாவரும் பொறுப்பில் இருக்கும் திமுக தம்பிகளா !!!
சகட்டுமேனிக்கு பேசி எதிர்கருத்து வைப்பவர் மீது இணையத்தில் பொங்கும் முன் தென்னிந்திய பிராமணர் அல்லாதோர் நல சங்கமாக ஆரம்பித்து நீதி கட்சியாக மாறி பின் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து திராவிடர் கழகமாக மாறி பின் அண்ணாவின் தேர்தல் அரசியல் கனவுக்கு செயல் வடிவம் கொடுக்க திமுக உருவானது என்ற நீண்ட நெடிய கழக வரலாற்றை படியுங்கப்பா.
தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்களின் அனைவரையும் அரவணைத்து செல்லும் அரசியலே அரசியல் சக்ர வியூகங்களை தகர்க்கும் வழி.
கலைஞர் உங்களை போன்று கண்மூடித்தனமாக தன் சித்தாந்த எதிரிகள் மீது பாயவில்லை. தன் அறிவால், புத்தி சாதுர்யத்தால் மட்டுமே தன் அரசியல் எதிரிகளை வென்றார். கலைஞரின் அரசியல் ராஜதந்திரங்களை பற்றி ஆழ படியுங்கள். பிடி தியாகராசர், நடேச முதலியார், DM நாயர், அயோத்திதாச பண்டிதர், ரெட்டை மலை ஸ்ரீனிவாசன், பெரியார், அண்ணா, மொழிபோர் தியாகிகள் போன்ற கழக முன்னோடிகள் மற்றும் வழிகாட்டிகளின் வரலாற்றை படியுங்கள். திராவிட மாடல்னா என்னன்னு புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க தம்பிகளா !!!
புதன், 25 ஜூன், 2025
‘மத்திய அமைச்சர் அமித்ஷா முட்டாள்’- ஆ.ராசா பேச்சு- பாஜக கண்டனம்!
மின்னம்பலம் : தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றுவோம் என பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘முட்டாள்’ என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி பேசியது சர்ச்சையாகி உள்ளது.
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆ.ராசா பேசியதாவது:
சாதனைகளுக்காக மட்டுமே ஒரு அரசு 50 ஆண்டுகள் நீடிக்கும் என சொல்லவும் முடியாது. மத்திய அமைச்சர் அமித்ஷா அண்மையில் மதுரைக்கு வந்தார். அங்கு பேசிய அமித்ஷா, டெல்லியைப் பிடித்துவிட்டோம்; ஹரியானாவைப் பிடித்துவிட்டோம்; மகாராஷ்டிராவைப் பிடித்துவிட்டோம்; அடுத்து தமிழ்நாடுதான் என்கிறார். முட்டாள்.. முட்டாள்..
செவ்வாய், 24 ஜூன், 2025
அதிமுக கூட்டணியில் விஜய்?
மின்னம்பலம் : விஜய் பிறந்த நாளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து சொல்லாத நிலையில், “விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென அழைப்பு விடுத்துள்ளாரே?
நடிகர் விஜய் பிறந்த நாள் ஜூன் 22-ந் தேதி கொண்டாடப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த முறை விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதனால் கடந்த ஆண்டு விஜய் பிறந்த நாளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த முறை, எடப்பாடி பழனிசாமிக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை; இதனால் எடப்பாடி பழனிசாமியும் விஜய் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
மதிமுக பொதுக்குழுவில் வைகோ ஆவேசம்
![]() |
மின்னம்பலம் : பொதுக்குழுவில் சீறிய வைகோ! . மதிமுக பொதுக்குழுவில் வைகோ ரொம்பவே ஆவேசப்பட்டு விட்டாராமே? என்ன நடந்ததாம்?
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் என்று தொடர்ந்து பேசிவருகிறார் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ. அவரது பேட்டிக்குப் பின்னரே சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் என பேசி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் அக்கட்சியின் தலைவர் ‘ஆடிட்டர்’ அர்ஜூன் ராஜ் தலைமையில் ஜூன் 22-ந் தேதி நடைபெற்றது.
தயாநிதி மாறன் பின்னணியில் 'டெல்லி'?
![]() |
![]() |
மின்னம்பலம் - vanangamudi : அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே’ என்ற கண்ணதாசனின் பாடலை பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
பாடலைப் பாடும்போதே புரிந்தது.. அண்ணன் கலாநிதி மாறனுக்கு தம்பி தயாநிதி மாறன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்தான் என்பது.
காலாநிதி- தயாநிதி விவகாரத்தில் என்னதான் நடக்கிறதாம்?
கலாநிதி மாறனுக்கு எதிரான தயாநிதி மாறனின் திடீர் லீகல் நோட்டீஸ், அதில் குறிப்பிட்டிருந்த கடுமையான குற்றச்சாட்டுகள் அனைத்துமே திமுகவின் மூத்த தலைவர்களையும் சக எம்.பி.க்களையுமே கடும் அதிர்ச்சி அடையவைத்துள்ளதாம். தயாநிதி மாறன் இவ்வளவு வேகமாக, காட்டமாக செயல்பட்டிருப்பது முரசொலி மாறன் குடும்பதையுமே ரொம்ப அதிர்ச்சி அடைய வைத்துவிட்டதாம். Digital Thinnai Delhi in the background
திருமணமான ஒரே மாதத்தில் கணவனை போட்டு தள்ளிய ஆந்திரப்பெண்
தினத்தந்தி : “திருப்பதி,தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜஸ்வர் (வயது 32) தனியார் நில சர்வேயராக வேலை செய்து வந்தார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கல்லூரை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி திருமண நிச்சியதார்த்தம் நடந்தது.
திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா திடீரென காணாமல் போனார்.
கண்ணூரில் உள்ள பிரபல வங்கியில் கேஷியராக உள்ள ஒருவரை காதலித்ததால் அவருடன் சென்று விட்டதாக கருதினர்.
இதனால் திருமண ஏற்பாடுகளை நிறுத்திவிட்டனர். இதனை அறிந்த ஐஸ்வர்யா திடீரென வீட்டிற்கு வந்தார்.
SWRD பண்டாரநாயக்கவின் இனவாத அரசியலுகே SJV செல்வநாயகம்தான் வழிகாட்டி
Ganeshwaran Veerakathy : வித்தியோதய, வித்தியலங்கார பிரிவேனாக்களை கலாச்சாரப்பல்கலைக் கழகங்களாக மாற்றும் அரசாங்கத்தினுடைய திட்டத்தின்போதே,
யாழ்ப்பணத்திலும் கலாச்சாரப் பல்கலைக் கழகம் ஒன்றுக்கான ஏற்பாடாகவே இந்துப் பல்கலைக் கழகம் நிறுவப்படவேண்டும் என்ற கோரிக்கை ஜீ.ஜீ யினால் வைக்கப்பட்டது..
தமிழ்ப் பல்கலைக்க்கழகம் என்பது கல்லச்சாரப்பல்கலைக்கழகம் ஆக முடியாது என்று தெரிந்திருந்தாலும் ”ஜி ஜி பொன்னம்பலம் எதை செய்தாலும் அதை தகர்த்து தவிடு பொடியாக்குவதையே தனது அரசியல் கொள்கையாக வரித்திருந்த செல்வநாயகமும் அவரது தமிழரசு கட்சியினரும் யாழ்ப்பாண பல்கலை கழக நிர்மாணத்திற்கு எதிராக திருகோணமலையில் தமிழ் பல்கலை கழகம் அமைக்கவேண்டும் .ஏனெனில் அதுதான் தமிழர் தலைநகரம் என்று உணர்ச்சி கூச்சல் எழுப்பினர் ”
இதன் காரணமாக வித்தியோதய, வித்தியலங்கார பிரிவேனாக்கள் கலாச்சாரப்பல்கலைக் கழகங்களாக மாற்றம் பெற்றபோதே யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டிருக்க வேண்டிய பல்கலைக்கழகத்தை தொடங்க விடாமற் செய்த பெருமை தமிழரசுக் கட்சிக்கே உரியது..
திங்கள், 23 ஜூன், 2025
நடிகர் ஸ்ரீ காந்த் போதை பொருள் குற்றச்சாட்டில் கைது?
மாலை மலர் : ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதை தொடர்ந்து ஏப்ரல் மாதம், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் தினசரி மற்றும் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்படங்கள் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அதிமுக எக்ஸ் எம்.எலே பிரசாத் வாக்குமூலம் கொடுக்க அதன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய வான்வெளியை பயன்படுத்தி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்? Did the U.S. Use Indian Airspace
மின்னம்பலம் : இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி அமெரிக்காவின் பி-2 பாம்பர்ஸ் விமானங்கள், ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகள் உண்மை அல்ல என்று மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. U.S. India Iran?
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்காவின் பி-2 பாம்பர்ஸ் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஆனால் அமெரிக்காவின் இந்த தாக்குதலால் தங்களது அணுசக்தி நிலையங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஈரான் விளக்கம் அளித்தது.
யாழ்ப்பாணத்தில் Zee tamil sarigam இசை நிகழ்ச்சி திடீர் மழை புயல் காரணமாக நிறுத்தப்பட்டது
tamil miror: யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த sarigama இசை நிகழ்வு திடீரென காற்றுடன் பெய்த மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை தென்னிந்திய இசை கலைஞர்களின் பங்கேற்புடன் இசை நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தனியார் நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் 5000 , 3000 மற்றும் 2000 ரூபாய் பெறுமதியான நுழைவு சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு , நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஞாயிறு, 22 ஜூன், 2025
பாலஸ்தீனர்கள் “திரும்பி எழாதபடிக்கு அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். Netanyahu, a fascist warmonger
![]() |
Rajasangeethan : நெதன்யாகு informal ஆக பேசும் ஒரு காணொளி சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது. ஹிட்லர், கோயபல்ஸ், முசோலினி போன்றோருக்கு போர் மீது இருந்த வெறியையும் அதற்கு கட்டமைக்கப்பட வேண்டிய அரசியல் காய்நகர்த்தல்களையும் வெளிப்படுத்தும் காணொளி!
பாலஸ்தீனத்தை பற்றி பேசுகையில், “திரும்பி எழாதபடிக்கு அவர்களை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களுக்குள் எப்போதும் அச்சத்தை தக்க வைத்துக் கொண்டிருக்க வேண்டும்!” என பேசியிருப்பார் நெதன்யாகு.
இந்தியாவில் ஆர்எஸ்எஸ் சிறுபான்மையினரின்பால் இந்த நுட்பத்தை பயன்படுத்துவதை காண முடியும். பாசிச அணுகுமுறையின் நுட்பம் இது.
B-2 SPIRIT SERIES – “நிழலில் பறக்கும் இராணுவ சக்தி” – அறிமுகமும் வரலாறும்
பொன். கரிகாலன் : B-2 SPIRIT SERIES – “நிழலில் பறக்கும் இராணுவ சக்தி” – B-2 Spirit அறிமுகமும் வரலாறும் உலகத்தில் பல நாடுகள் தங்கள் பாதுகாப்பைக் கட்டுப்படுத்த பலவிதமான போர்விமானங்களை உருவாக்கியுள்ளன.
ஆனால் B-2 Spirit என்பது… சாதாரண விமானம் அல்ல.
இது ஒரு நிழலாக பறக்கும் ராட்சதம். காண முடியாத ஒலி. கண்டுபிடிக்க முடியாத உருவம்.
இவை அனைத்தும் அதை உலகின் அதிவிலை உயர்ந்த, அதிநவீன stealth bomber ஆக மாற்றியுள்ளது.
1980களில் அமெரிக்கா ஆரம்பித்த “Advanced Technology Bomber (ATB)” திட்டத்தின் கீழ், Northrop Grumman நிறுவனத்தால் B-2 உருவாக்கப்பட்டது.
இதன் நோக்கம்:“Radar-இல் தெரியாமல் நுழைந்து, உலகின் எங்கும் தாக்கிவிட்டு வெளியேறும் சக்தி. இது! பரிமாணங்களிலும் ஆபத்திலும் மிகப் பெரியது:
வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி காலமானார்
மின்னம்பலம் - Selvam : உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 21) காலமானார். அவருக்கு வயது 60.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் அமுல் கந்தசாமி. இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக கேன்சர் உள்ளிட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இரானில் ஃபோர்டோ உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு - என்ன நடக்கிறது? நேரலை
"ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இரானின் 3 அணுசக்தி தளங்கள் மீதான எங்களது வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் முடித்துவிட்டோம். அனைத்து விமானங்களும் இப்போது இரான் வான்வெளிக்கு வெளியே உள்ளன," என்று அவர் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து விமானங்களும் அமெரிக்காவிற்குத் திரும்பி வந்தன என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.










