""தமிழகத்தில் இலவச கலர் "டிவி' வழங்கும் பணி 99 சதவீதம் முடிவடைந்துள்ளது. இன்னும் 1 சதவீதம் பேருக்கும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும்,'' என்று துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூரில் நடந்த திருமண விழாவில் அவர் பேசியதாவது:முதல்வர் கருணாநிதி தேர்தல் நேர வாக்குறுதியுடன், கூறாதவற்றையும் செயல்படுத்தியுள்ளார். தமிழகத்தில் இலவச கலர் "டிவி' 99 சதவீத மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. 1 சதவீதம் வரும் டிசம்பருக்குள் வழங்கப்பட்டு விடும்.இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம். மொத்தம் 21 லட்சம் வீடுகள் ஆறு ஆண்டிற்குள் கட்டித் தரப்படும். அதிகளவாக மூன்று லட்சம் வீடுகள் விழுப்புரம் மாவட்டத்தில் கட்டித்தரப்பட உள்ளது.
இந்த திட்டத்தை , கடலூர் மாவட்டத்தில் துவக்கி வைத்தேன். மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வருவார். கலைஞர் வீட்டு வசதி திட்ட வீடுகள் அனைத்தும் கட்டித் தரப்படும். ஜெயலலிதாவுக்கு நாடு என்றால் கோடநாடு. கருணாநிதிக்கு நாடு என்றால் தமிழ்நாடு. நாட்டையும், நாட்டு மக்களையும் நினைப்பவர் கருணாநிதி. மணமக்கள் அளவோடு பெற்று, குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை வைக்க வேண்டும்.இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக