சனி, 15 அக்டோபர், 2016

அப்பல்லோடா ...!!! சிங்கப்பூர் டாக்டர்கள் வருகை .. முதல்வருக்கு உடல்பயிற்சிகளை (பிசியோதெரபி)..

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர்
ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் பிசியோதெரபி பயிற்சி நிபுணர்கள் நாளை சென்னை வர உள்ளனர். சென்னை: முதல்-அமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மாதம் 22-ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்று (சனிக்கிழமை) டாக்டர்கள் 24-வது நாளாக சிகிச்சை அளித்தனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களும் ஒருங்கிணைந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணரான டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே ஆலோசனை வழங்கி வருகிறார்.

திருமாவளவன்: ஸ்டாலின் பன்னீர்செல்வம் சந்திப்பை வரவேற்கிறேன்

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மக்கள் நலன்களுக்காக சந்தித்து கொள்வது
சிறந்த அரசியல் நாகரீகமாகும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மாலை மலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- நீங்கள் திடீர் என்று டெல்லி சென்றது ஏன்?
பதில்:- மத்திய மந்திரிகள் ராம்விலாஸ் பஸ்வான், ராம தாஸ் அத்வாலே ஆகியோரை சந்திப்பதற்காக டெல்லிக்கு சென்றேன்.
தேசிய தலித் முன்னணி என்னும் அமைப்பின் சிறப்பு கூட்டத்தை தமிழ்நாட்டில் நடத்துவது குறித்து பேசுவதற்காக சென்றேன். நான் அந்த அமைப்பின் துணை தலைவராக உள்ளேன்.
இந்த அமைப்பு கட்சிகளை கடந்து தேசிய அளவில் தலித் மக்களின் பிரச்சினைகளை கவனிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

பன்னீர்செல்வம் மத்தியரசின் தேர்வா? ராஜாத்தி , திருமாவை அழைத்த கார்டன்.. பாஜகவின் உளவாளிகள் 27 பேர் அப்போலோவில்?

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து
தொடக்கத்தில் அமைதி காத்தது மோடி தலைமையிலான மத்திய அரசு. ஆனால் எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட 27 பேர் டீமை அனுப்பி இப்போது ஜெயலலிதா உடல்நிலை விவகாரத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது மத்திய அரசு. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தொடக்கத்தில் அப்பல்லோ மருத்துவமனை சம்பிராதய அறிக்கைகளையே வெளியிட்டு வந்தது. ஒருகட்டத்தில் டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்திருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியது. VIDEO : முதலமைச்சருக்கு அடுத்தக்கட்ட சிகிச்சை : அப்பல்லோ வருகிறார் லண்டன் மருத்துவர்  எய்ம்ஸ் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைக்கு வந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர் என்ற செய்தியே அந்த அறிக்கை மூலமாகத்தான் அனைவரும் அறிய முடிந்தது.

வதந்தி என்ற பெயரில் கைதா? - கண்டிக்கும் ராமதாஸ்!

மின்னம்பலம்.காம் : தமிழக முதல்வர் தொடர்பாக வதந்தி பரப்பியதாக இதுவரை பலர் பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பேசியதற்காக கோவையைச் சேர்ந்த வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் இத்தகைய கைதுகள் எதையோ திசை திருப்பவும், யாரையோ அச்சுறுத்தவும் செய்யப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுகிறது.

பா.ரஞ்சித்தின் ஆவணப்படம் இன்று வெளியீடு!

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி என அடித்தட்டு மக்களின் கதைகளை களமாகக் கொண்டு தனக்கென தனி இடத்தை பெற்றவர் இயக்குநர் பா.ரஞ்சித். இந்த நிலையில் தற்போது ‘நீலம்’ என்ற தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை’ மற்றும் ‘டாக்டர் ஷூ மேக்கர்’ என்னும் இரண்டு ஆவணப்படங்களை தயாரித்துள்ளார். இதில் ஜாதிகளிடம் ஜாக்கிரதை ஆவணப்படத்தை ஜெயக்குமார் என்பவர் இயக்கியுள்ளார். டாக்டர் ஷூ மேக்கர் ஆவணப்படத்தை பாண்டிராஜ் மற்றும் வினோத் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

மர்மக்காய்ச்சலால் அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் உயிரிழப்பு!

சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மூன்று குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். சென்னை பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது பகிமா, ஆறு வயது முகம்மது ஆகிய இரண்டு குழந்தைகள் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை இரண்டு குழந்தைகளும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சவுதி கனவு கலைகிறதா? பெட்ரோலிய விலைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு..

minnambalam.com ஜெ.ஜெயரஞ்சன்:
1970களிலும் 1980களிலும் இந்தியாவில் வேலை கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக இருந்தது. அரசுதான் பெரிய வேலை கொடுக்கும் நிறுவனம். மற்ற தொழில்கள் அவ்வளவு வேலையை உருவாக்க இயலாமல், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் இருந்தது. அப்படி ஒரு சூழல் இருந்தது என்பதையே இப்போதுள்ள இளைஞர்கள் புரிந்துகொள்வது கடினம். கல்லூரிப் படிப்பு முடியும்முன்னர் எல்லோரிடமும் நிலவிய அச்சம், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதே. சிறப்பாகப் படிக்கும் மாணவர்கள் அரசு மற்றும் வங்கி நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்வாகி வேலை கிடைத்துச் சென்றுவிடுவார்கள்.

நலம் பெற்று வாருங்கள் முதல்வரே..வாழ்த்துக்கள்.!

மிகப்பெரிய குடும்பம், தாத்தா, அரச குடும்பத்தில் ஒரு நீதிமன்ற மருத்துவர்,
மேல்கோட்டே "ஆர்த்தடாக்ஸ்" அய்யங்கார் குடும்பத்தில் செழிப்போடும், செல்லமாகவும் தான் வாழ்க்கையைத் துவக்கியவர் "கோமளவல்லி" என்கிற ஜெயலலிதா. கோமளவல்லி என்பது குடும்ப வழக்கமாக அவருக்கு சூட்டப்பட்ட இன்னொரு பெயர். அம்மு என்று தாயாரால் அன்போடு அழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் தந்தையார் ஜெயராமன் இரண்டு வயதிலேயே இறந்து போக வேதவள்ளி அம்மாவின<அரவணைப்பில், செல்லப் பிள்ளையாக பெங்களூரில் இருக்கும் தாத்தாவின் வீட்டுக்கே திரும்பினார். சிறப்புக் கல்வி, கலை, இசை என்று இளம் வயதில் ஆகச் சிறந்த மாணவி, பிஷப் காட்டன், சர்ச் பார்க் என்று அவர் படித்த பள்ளிகளில் எல்லாம் அவரது அறிவுக் கூர்மையும், சிறப்பிடங்களும் இன்னும் நிலைத்திருக்கிறது. பள்ளிக் கல்வியை முடித்த பிறகு ஒரு வழக்குரைஞர் ஆக வேண்டும் என்பது அவரது கனவு. ஸ்டெல்லா மேரீசில் இன்னமும் அவருக்கான இருக்கை நிரப்பப்படாமலேயே இருக்கிறது.

காவிரி தண்ணீர் கேட்டு தமிழக காங்கிரஸ், பாஜக உண்ணாவிரதம் ... தண்ணீர் கொடுக்க கூடாதென்று கர்நாடக காங்கிரஸ், பாஜக உண்ணாவிரதம்

நீர் திறப்பு குறைப்பு அசராத கர்நாடகா அரசு காவிரி வழக்கு, வரும், 18ல்,
விசாரணைக்கு வர உள்ள நிலையில், அதை பற்றி கவலைப் படாமல், நீர் திறப்பை, கர்நாடகா திடீரென குறைத்து உள்ளது. தமிழக தேவைக்காக, கர்நாடக அணைகளில் இருந்து, ஆண்டுதோறும், 192 டி.எம்.சி., காவிரி நீரை வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், முறைப்படி நீரை வழங்காமல், கர்நாடகா முரண்டு பிடித்து வருகிறது. இது தொடர் பான வழக்கு, வரும், 18ல், மீண்டும் விசாரணைக்கு வரஉள்ளது. இந்நிலையில், நான்கு அணைகளில் இருந்து, நீர் திறப்பை கர்நாடக அரசு திடீரென குறைத்துள்ளது.

மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு மூன்றாண்டு சிறை தண்டனை

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பாக மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாகக் கூறி பிரபலமான ராமர் பிள்ளைக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 90 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மூலிகைப் பொருட்களில் இருந்து பெட்ரோல் தயாரிக்க முடியும் என ராமர் பிள்ளை என்பவர் கூறினார். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த மூலிகை பெட்ரோலை விற்பனை செய்வதற்கு ஏஜென்சிகளை வழங்குவதற்காக பல்வேறு நபர்களிடமிருந்து ராமர் பிள்ளை பணத்தை வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ. ராமர்பிள்ளை மீது தொடர்ந்த வழக்கு சென்னை கூடுதல் முதன்மை பெருநகர நீதிபதி முன்பாக நடந்து வந்தது.
இந்த வழக்கில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராமர் பிள்ளை உள்ளிட்ட ஐந்து பேருக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும் தலா ஆறாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஊராட்சி ஒன்றிய தலைவர் வெட்டி கொலை ! திருவள்ளூர் மேல்மனம்பேடு ஊராட்சி ...

திருவள்ளூர், திருவள்ளூர் அருகே நடைபயிற்சி சென்ற மேல்மணம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊராட்சி தலைவர் திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள மேல்மணம்பேடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பி.எஸ்.கோல்டு என்கிற பி.எஸ்.தங்கராஜ்(வயது 50). இவர் மேல்மணம்பேடு ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவருக்கு நிறைமதி(45) என்ற மனைவி உள்ளார், குழந்தைகள் இல்லை. தங்கராஜ் இதே ஊராட்சியில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்று ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மேல்மணம்பேடு ஊராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அவரது மனைவி நிறைமதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஒரு ரகசியம் உடைந்து விட்டது : கேன்சர் என்பது வியாதி அல்ல, அது ஒரு வியாபாரம் No Bra day...

thetimestamil.com : நோ பிரா டே தினத்தில் எதற்காக பிரா இல்லாமல் இருக்க வேண்டும்?
ஷாஜஹான்:  ;ஒரு ரகசியம் உடைந்து விட்டது : கேன்சர் என்பது வியாதி அல்ல, அது ஒரு வியாபாரம் இப்படியொரு தலைப்புடன் ஒரு கட்டுரை சுற்றிக்கொண்டிருக்கிறது. ஹெரால்ட் மேன்னர் என்பவர் எழுதிய நூலின் அடிப்படையில், அவருடைய ஆதரவாளர்கள் அல்லது அந்தக் கட்டுரையின் வாதத்தில் மயங்கியவர்கள் எழுதியது அது. மெடபாலிக் தெரபி என்பது ஹெரால்ட் முன்வைத்த கருத்து. சில நாட்களுக்கு முன்னால் நண்பர் ஒருவர் மேற்கண்ட கட்டுரையின் இணைப்பை அனுப்பினார். வழக்கம்போலவே, கூகுளிட்டு, விஷயத்தை தெளிவுபடுத்திக் கொண்டேன். இது ஆதாரமற்ற கட்டுரை என்று நிறுவும் இன்னொரு இணைப்பை அந்த நண்பருக்கு நான் அனுப்பி வைத்தேன்.

சசிகலா (நடராஜன்) திமுகவுக்கு தூது விட்டுள்ளது, மிக முக்கிய அரசியல் நகர்வு

சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க, திமுக தலைவர் மு. கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் சென்று வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து ‘சவுக்கு’ சங்கர் தனது முகநூலில் எழுதியுள்ள பதிவில் ரசாத்தி அம்மாளிடம் சசிகலா கதறி அழுததாகச் சொல்கிறார். மேலும் அந்தப் பதிவில்,
நேற்று இரவு ராசாத்தி அம்மாள் அப்போல்லோ மருத்துவமனையில் சசிகலாவை சந்தித்ததாக செய்திகள் வந்துள்ளன. அந்த சந்திப்பு நடந்தது உண்மையே. ,இரவு 9.40 மணியளவில் சசிகலாவை ராசாத்தி அம்மாள் சந்தித்துள்ளார்.
சுமார் 1.30 மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்துள்ளது.  இந்த சந்திப்பின்போது, தன் மீதோ, தன் உறவினர்கள் மீதோ, எவ்விதமான வழக்கும் பதிவு செய்ய வேண்டாம் என்று சசிகலா ராசாத்தி அம்மாளிடம் கதறி அழுதுள்ளார். இருக்கும் சொத்துக்களை காப்பாற்ற உதவுங்கள் என்றும் கேட்டுள்ளார். தான் உள்ளிட்ட உறவினர்கள் மீது எவ்விதமான சட்டபூர்வமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுள்ளார். மத்திய பிஜேபி அரசு, ஓ பன்னீர் செல்வத்தை முதன்மை அமைச்சராக நியமித்துள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தன் கையை விட்டு அகல்வதை நன்றாக புரிந்துள்ள சசிகலா, இறுதிக் கட்டமாக சொத்துக்களையும் உறவினர்களையும் காப்பாற்றுவதற்காக, ராசாத்தி அம்மாளிடம் தூது விட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், சசிகலா புஷ்பாவை அமைதிப்படுத்துமாறும் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளார் சசிகலா.
பிஜேபி கவனமாக காய் நகர்த்தி, பின்புற வாசல் வழியாக அதிகாரத்தை கைப்பற்ற உத்தேசித்து வரும் நிலையில், சசிகலா திமுகவுக்கு தூது விட்டுள்ளது, மிக முக்கிய அரசியல் நகர்வுகளை காட்டுகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.   thetimestamil.com

virtual war ..? பாக் மீது தாக்குதல் : சண்டையா சண்டைக் காட்சியா ?

எல்லை தாண்டிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் உரி தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியச் சிப்பாய்களின் சடலங்களைக் காட்டித் தேசிய வெறியைத் தூண்டும் முயற்சி.vinavu.com :  பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு நடத்திக் கொண்டிருப்பது, சண்டையா, அல்லது இது வெறும் சண்டைக் காட்சியா? இந்தக் கேள்விக்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. மோடி அரசைப் பொருத்தவரை இது சண்டைக் காட்சி. உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்தர்கண்ட் சட்டமன்றத் தேர்தல்களைக் குறிவைத்து நடத்தப்படும் நாடகம். “நல்ல காலம் பொறக்குது” என்று கூவிப் பார்த்துக் காசு கிடைக்கவில்லையென்றால், “நாச காலம் வருது” என்று மிரட்டிக் காசு பறிக்கும் குடுகுடுப்பைக்காரனைப் போல, வாக்களித்த மக்களுக்கு ‘அச்சே தின்’ எதையும் காட்ட முடியாத மோடி, ‘சண்டைக் காட்சி’யைக் காட்டி ஓட்டு அறுவடைக்கு முயற்சிக்கிறார்.

கோவை இந்து முன்னணி ரவுடித்தனம்: அம்மா போலீசு – ஆர்.எஸ்.எஸ் கூட்டணி!

செத்த பிறகு தியாகி பட்டம் பெற விரும்பும் ரியல் எஸ்டேட் ரவுடிகள், காமவெறிக் கயவர்கள், கந்துவட்டிக்காரர்களே! உங்கள் அனைவரையும் இந்து முன்னணி அறைகூவி அழைக்கிறது. (கிறித்தவ, முஸ்லீம் ரவுடிகளுக்கு அனுமதி இல்லை
kovai-hindu-munnani-riots-1கோவையில் கடந்த செப்டம்பர் 22 அன்று இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டதை முகாந்திரமாகக் கொண்டு, கோவையின் பல பகுதிகளில் வீடுகளை விட்டு மக்கள் வெளியேவர முடியாத அளவுக்குப் போலீசின் ஆசியுடன் பகிரங்கமாகவே வெறியாட்டம் போட்டிருக்கிறது, இந்து முன்னணி. கோவை மட்டுமின்றி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களிலும் கடைகளையும் பேருந்துகளையும் தாக்கி வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறது.

ஐ நா: உலகிலேயே அதிக மக்கள் பட்டினியால் வாடும் நாடு இந்தியாதான்

poverty in india 3வினவு.காம் : எதுகை மோனை எஃபெக்டில் பேச்சுப் போட்டி வைத்தால், மோடியை வெல்லும் திறன் டி.ராஜேந்தருக்கு கூட கிடையாது. கோழிக்கோட்டில் பேசும் போது பாக்குடன் போருக்குத் தயார், ஆனால் அந்தப் போர் வறுமை, வேலையின்மை, சத்துக் குறைவு ஆகியவற்றில் நடக்கும் என்று சவால் விட்டார் மோடி. பரவாயில்லையே ஆரோக்கியமான போட்டிதானே என்று இது பாகிஸ்தான் ஊடகங்களிலும் ஒலித்தது.
ஆனாலும் உண்மை வலியது அல்லவா! மோடியின் கெட்ட நேரம் பார்த்து ஒரு புள்ளிவிவரம் வெளியே வந்திருக்கிறது – இது புதிதல்ல என்றாலும். அமெரிக்காவின் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டிருக்கும் உலக பட்டினி அட்டவணையில் இந்தியா, பாக் இரு நாடுகளுமே ஆசியக் கண்டத்தின் கடைசி இடங்களில் தள்ளப்பட்டுள்ளன.
இந்த அட்டவணையில் 2016-ம் ஆண்டு நிலவரப்படி 118 நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 97-ம் இடத்தையும், பாகிஸ்தான் 107-ம் இடத்தையும் பெற்றிருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் தேஷபக்தர்கள் கரித்துக் கொட்டும் சீன தேசம் 27-ம் இடத்திலும், நேபாளம் 72, மியன்மார் 75, இலங்கை 84, வங்கதேசம் 90 என்றும் இருக்கின்றன.

வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஒரு பெண் கான்ஸ்டபிளுக்கு இத்தனை டார்ச்சர்களா? திடுக் வாக்குமூலம்

vikatan.com : காதலித்து ஏமாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் அருமைநாயகத்தின் மீது நடவடிக்கை எடுக்காததால் மனம் உடைந்த பெண் போலீஸ் ராமு தற்கொலை செய்தார். காவல்துறை உயர் அதிகாரிகளின் மிரட்டல் காரணம் ராமு இந்த முடிவை எடுத்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ராமு தற்கொலைக்கு சப்-இன்ஸ்பெக்டர் அருமைநாயகத்துக்கு ஆதரவாக சில போலீஸ் அதிகாரிகளும் செயல்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர், அழகப்பபுரத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் ராமு, அம்பாசமுத்திரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார். இவர், கடந்த 9ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு சப்-இன்ஸ்பெக்டர் அருமைநாயகம் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர் ராமுவின் குடும்பத்தினர். அருமைநாயகத்தை கைது செய்யும்வரை ராமுவின் உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள்  தெரிவித்துள்ளார் ராமுவின் அம்மா பார்வதி. இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் எரிமலையாக வெடித்துள்ளது.
இதுகுறித்து  மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், "ராமுவின் அப்பா சண்முகம் இறந்து விட்டார். இதனால் குடும்ப பொறுப்பு ராமுவின் அம்மா பார்வதி மற்றும் ராமு ஆகியோர் மீது விழுந்தது. பார்வதி, விவசாய வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றினார்.

வதந்திகளை பரப்பிய அப்போலோவும் தந்தி டிவியும் .. எது வதந்தி ? மோருக்குள் விஷம் கலந்ததா?

1- எம்ஜியார் மறைந்த போது ஒரு பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் நேரிடையாக அப்பொழுதைய முதல்வர் ஜானகி ராமச்சந்திரன்தான் மோரில் விஷம் கலந்து எம்ஜியாரை கொன்றார் என்று ஒரு வதந்தியை பரப்பினார் இதே ஜெயலலிதா, அவர் மேல் கூட இப்படி வதந்தி பரப்பிய வழக்கு போடப்படுமா என்பதை காவல்துறை தலைவர் விளக்கம் அளிக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமும் எம்ஜியாரின் உண்மை தொண்டனின் விருப்பமும்... அதற்க்கு த்ராணியுண்டா காவல்துறைக்கு...
  2- முதலில் அவை வதந்தியா இல்லையா என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்தாக வேண்டும்.... வதந்தியாக இல்லாவிடில் இருக்கும் மெய்யான நிலைமை வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்... அதுவும் உச்சநீதிமன்றத்தின் மூலம்தான் நடைபெறமுடியும்...
3 - இது என்ன கொடுமையா இருக்கு.. ?? என்னத்தான் நடக்குது தமிழ் நாட்டுல?? கலைஞர் குடும்பம் & திமுகவை பற்றியெல்லாம் இங்கே பேசாத பொய்களா???? பரப்பபடாத வதந்திகளா?? ஆனால், இப்போதோ, வாயை திறந்தாலே போலீஸ் நடவடிகையா??? இதுயென்ன சர்வாதிகார நாடா???
4- இவங்களுக்கெல்லாம் இதைவிட முக்கியமான வேற வேலையே இல்லியா? இந்தக்குழு, சங்கிலி பறிக்கிறவன், ரோட்டை குளத்தை ஆக்கிரமிப்பு பண்றவனுவோலை போயி கவனிக்கலாமே.   அம்மாவுக்கு வந்திருப்பது சாதாரண காய்ச்சல்தான்  இரண்டு நாளில் வீடு திரும்பலாம் என்று முதல் வதந்தியை பரப்பியது அப்போலோ +  அதிமுக ..

ஸ்டாலின் பன்னீர்செல்வம் சந்திப்பு காவிரி விவசாயிகள் சங்க தீர்மான நகலை வழங்கினார்

சென்னை: எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து காவிரி விவசாய சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வழங்கினர்.தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது ஓ.பி.எஸ்., உடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். இந்த சந்திப்பிற்கு பின் நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின் விவசாய சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மான நகலை அமைச்சர் மற்றும் தலைமை செயலரிடம் கொடுத்துள்ளோம், காவிரி தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். சிறப்பு சட்டசபையை கூட்ட வேண்டும். அனைத்து கட்சி மற்றும் விவசாய பிரமுகர்களை அழைத்து சென்று பிரதமரை சந்தித்து காவிரி தொடர்பாக தமிழக நிலை குறித்து அழுத்தம் தர வேண்டும் . இவ்வாறு ஸ்டாலின் கூறினார்  தினமலர்.காம்
நல்ல நேர்த்தியான செயல், இரெண்டு பேருமே சரியாகத்தான் பணி செய்கிறார்கள்.இனியாவது ஒரு நல்ல அரசியல் நாகரீகம் வளரவேண்டும் .

ஜெ. உடல்நலம் குறித்து சசிகலாவிடம் நேரில் விசாரித்த ராஜாத்தி அம்மாள்!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, ராஜாத்தி அம்மாள் வியாழக்கிழமை இரவு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். சசிகலாவிடம் ஜெ. உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். கலைஞர் அறிவுரைப்படி ராஜாத்தி அம்மாள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வந்துள்ளார். நக்கீரன்,இன்

முழுப் பூசணிக்காயை ஊடகங்களில் மறைத்துவிட்டு வதந்தி வதந்தி என்று கைது பண்ணுவது அராஜகம்!

சமீபத்தில் தமிழக முதல்வரைப்பற்றி செய்திகள் வெளியி்ட்டதினால் சிலரை
கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்..இந்நிலையில் நேற்றுகூட இருவரை தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது...
இப்படி உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிடுகின்றவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக காவல்துறையினர் இதோ பாருங்கள் தமிழக முதல்வர் நலமாக உள்ளார் படம் இதோ பாருங்கள் என கைது செய்வதற்கு முன்பாக விளக்கம் அளித்துவி்ட்டாவது கைது செய்திருக்கலாம்
அல்லது தமிழக முதல்வர் என்பதால் நாங்கள் எல்லோரும் என்ன ஆயிற்று என கேட்ககூடாதா அல்லது விபரம்தெரியகூடாதா என்பதையாவது விளக்கம் அளிக்கலாம் அல்லது சாதாரண காய்ச்சல் என அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்துள்ள தமிழக முதல்வருக்கு லண்டனிலிருந்து மருத்துவர் வரவேண்டிய அவிசயம் ஏன் என நாங்கள் யாவரும் தெரிந்துகாெள்ளகூடாதா அல்லது அப்போலோ மருத்துவ அதிகாரிகள் முதல்வர் செயலலிதா அவர்கள் சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளது பிசியோ தெரபி மருத்துவம் நடைபெறுகிறது என சொல்கிறார்கள் .ஆ னால் அமைச்சர்கள் எம், எல் , ஏக்கள் பலரும் தொலைக்காட்சி ஊடகத்திற்கு அம்மா இட்லி சாப்பிடுகிறார் அம்மா பேப்பர் பார்க்கிறார் அம்மா டீ, வி பார்க்கிறார் என தகவல்தருகிறார்கள் இதெல்லாம் செய்ய முடிகின்ற முதல்வருக்கு ஏன் எனக்கு உடல்நிலை நன்றாக தான் இருக்கு நான் நலமுடன் இருக்கின்றேன் என தகவல் தரமுடியாதா என நாங்கள் கேட்ககூடாதா?

சோனியாவை அந்தோனியோ மரியானோ என்று ஜெயலலிதா திட்டியது பாஸ்ட் இஸ் பாஸ்ட்!’’

விகடன்.காம்  : மருத்துவமனையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவைப் பார்ப்பதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வந்து சென்றது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பலவிதமான விவாதங்களை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.“முன்கூட்டியே யாருக்கும் தெரிவிக்காமல் ஜெயலலிதாவைப் பார்க்க திடீரென ராகுல் காந்தியை அழைத்து வந்தது காங்கிரஸின் ராஜதந்திரம் என்கிறார்களே?”
“இதிலே என்ன ராஜதந்திரம் இருக்கிறது? ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை என்கிற தகவல், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் பேரணியில் இருந்த எங்கள் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியிடம் சொல்லப்​பட்டது. அப்போது அவர், ‘இதை ஒரு அரசியல் நிகழ்வாக ஆக்கவேண்டாம். பிரத்யேகமான தனிப்பட்ட விசிட் ஆக இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

மிஸ்டர் கழுகு : பன்னீரை ஓகே செய்தாரா ஜெ? - ‘கப்சா’ கவர்னர்

பன்னீர்செல்வம் பழைய பன்னீர்​செல்வமாக வந்துவிட்டார். இப்போதைக்கு ஜெயலலிதா இலாகா இல்லாத முதலமைச்சர். ஓ.பி.எஸ். முதலமைச்சரின் இலாக்காக்​களை வைத்திருக்கும் மூத்த அமைச்சர்!” என்று பராக் பாணியில் சொல்லியபடியே  ஆஜரானார் கழுகார் ‘‘தமிழகத்தின் அதிர்ஷ்டசாலி அரசியல்வாதி என்று ஒரு பட்டத்தை ஓ.பி.எஸ்-க்குக் கொடுக்கலாம். இரண்டுமுறை தமிழகத்துக்கு முதலமைச்சரான அவர்,  இந்த முறை முதலமைச்சரின் இலாக்காக்களைப் பெற்றுள்ளார்” என்று தொடங்கினார் கழுகார். ‘‘எப்படி நடந்தது இது?”
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் மற்றும் தமிழக அமைச்சர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் எழுந்து வரும் அரசியல் சர்ச்சை குறித்துப் பேசப்பட்டது. ‘அரசாங்கம் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. முதல்வர் மருத்துவமனையில் இருந்து திரும்பும் வரை மூத்த அமைச்சர் யாராவது முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாக்காக்களை எடுத்துக்​கொள்ளுங்கள். அப்படி எடுத்துக் கொண்டால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்’ என்று வலியுறுத்தினார்.

பஞ்சாப் கருத்து கணிப்பு :காங்கிரஸ் வெற்றி முகம் , ஆம் ஆத்மி இரண்டாவது இடம் , பாஜக படுதோல்வி ...

புதுடில்லி : அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் பஞ்சாப் சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்தியா டுடே - ஆக்சிஸ் நிறுவனங்கள் இணைந்து கருத்துகணிப்பு ஒன்றை நடத்தினர். இதில், காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.
இந்த தேர்தலில் காங்.,க்கு 49 முதல் 55 இடங்கள் கிடைக்கும் எனவும், 42 முதல் 46 இடங்களை கைப்பற்றி ஆம்ஆத்மி 2வது இடத்தை பிடிக்கும் எனவும் கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபையில் தனிப்பெரும்பான்மை பெருவதற்காக காங்., சித்துவின் ஆவாஸ் இ பஞ்சாப் கட்சியின் உதவியை நாட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஊழல், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சர்ச்சைகளால் பா.ஜ., மற்றும் அகாலி தளம் கட்சிக்கு 17 முதல் 21 இடங்களே கிடைக்கும் எனவும், சிறிய கட்சிகளுக்கு 3 முதல் 7 இடங்கள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

Flashback ஜெயலலிதா :இன்றைக்கு மாலையே ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள், ஆ.. க... போ.. என்று சொல்லிக்கொண்டே வந்தார்

 திருநாவுக்கரசர் அவர்களும் அ.தி.மு.க.விலே உண்மையாக உழைத்து ிலே ஜெயலலிதாவிற்கு ஆதரவாக இருந்த திருநாவுக்கரசு #thirunavukarasu அவர்கள் அந்தச் சம்பவம் நடைபெற்ற ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு அதே சட்டப்பேரவையில் #tnassembly பேசியதை அப்படியே குறிப்பிடுகிறேன். இதோ நண்பர் திருநாவுக்கரசு பேசுகிறார் : 
"இதே சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் பட்ஜெட்டைப் படித்தபோது சட்ட மன்றத்திலே ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது அனை வருக்கும் தெரியும். இப்போது நான் சொல்வது; என்னுடைய தாய் மீது ஆணையாக நான் தெய்வமாக வணங்குகிற எம்.ஜி.ஆர்.அவர்கள் மீது சத்தியமாகச் சொல்வதாகும். முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்தபோது எதிர்க் கட்சித் தலைவராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அவரது வீட்டில் உட்கார வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து "நான் பிரதான எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் பட்ஜெட் படிக்கும் போது நான் பிடித்து இழுத்தால் நன்றாக இருக்காது. எனவே என் பக்கத்திலே இருக்கிற நீங்கள் முதலமைச்சர் கருணாநிதியின் கையிலே இருக்கிற பட்ஜெட் காப்பியை பிடித்திழுத்து அடிக்க வேண்டும்"" என்று சொன்னார். நான் உடனே மிகுந்த வேதனை யோடு சொன்னேன். "தெரிந்தோ தெரியாமலோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களைப் பத்தாண்டுக் காலம் கௌரவம் மிக்க பதவிகளில் வைத்துவிட்டுப் போயிருக்கிறார். தயவுசெய்து அடியாட்களாக எங்களை மாற்றாதீர்கள். அதற்கு என்னுடைய மனச்சாட்சி இடம் தரவில்லை.

கேரளா CM பினராய் விஜயன் : RSS இன் கொலை அரசியலால் நாடே நாசமாகிறது

மின்னம்பலம்,காம் :பாஜக தொண்டர் படுகொலை செய்யப்படதை கண்டித்து நேற்று கேரளாவில் நடத்தபட்ட ‘பந்த்’ கேரளாவில் பெரும் பதட்டத்தை உருவாக்கிய நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை கடுமையாக சாடியுள்ளார்.கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.அம்மாநில முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராயியில் பாஜக தொடர் ரெமித் படுகொலை செய்யப் பட்டார். இதற்கு பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது எனக் கூறிய ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக வினர் அக்கட்சியின் கொலைகார அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறினார். இதனைத் தொடர்ந்து ரெமித் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று கேரளாவில் பந்த் நடத்த ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டது.

ரஷ்யா திட்டவட்டம் :ஸ்னோ டென்னை நாடுகடத்த முடியாது

மின்னம்பலம்,காம்  ஸ்னோடெனை அமெரிக்காவிடம் ஒப்படைக்கவோ அல்லது எங்கள் நாட்டில் இருந்து நாடு கடத்தவோ ஒரு நியாமான காரணமும் இல்லை என்று கூறியிருக்கிறது ரஷ்யா. அமெரிக்க வரலாற்றிலேயே இருவரைக் கண்டுதான் அமெரிக்கா அஞ்சியது. ஒருவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, இன்னொருவர் எட்வர்ட் ஸ்னோடென். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் தற்காலிக ஊழியராக இருந்த ஸ்னோடென் அமெரிக்க பல்வேறு நாடுகளின் தூதரகங்களில் உளவு பார்த்த விஷயங்களை ஆதாரங்களோடு போட்டு உடைத்து அதிர வைத்தவர். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஸ்னோடென் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார்.

நேபாளம், இலங்கை, பங்களாதேஷை விட இந்தியா ,பாகிஸ்தானில் அதிக வறுமை?

In the 2016 rankings of 118 countries, India is ranked 97 and Pakistan 107. All other Asian neighbours are doing relatively better -- China (29), Nepal (72), Myanmar (75), Sri Lanka (84) and Bangladesh (90), the report showed, adding India’s GHI score of 28.5 is worse than the developing country average score of 21.3.
மினனம்பலம்,காம்  : சீனா - 29 வியட்நாம் - 64 கம்போடியா - 71 நேபாள் - 72 இந்தோனேஷியா - 73 மியான்மர் - 75 இலங்கை - 84 பங்களாதேஷ் - 90 இந்தியா - 97 வட கொரியா - 98 பாகிஸ்தான் - 107 தைமூர் - 110 ஆப்கானிஸ்தான் - 111இந்திய அரசு, கடந்த 15 வருடங்களாக ஊட்டசத்துள்ள உணவுகளை மக்களுக்கு அளிக்க முயற்சி செய்து வந்தது. ஊட்டச்சத்து விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும்கூட நாட்டில் 15% மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என்பதுதான் உண்மை.
ஆசியாவின் பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால், பசியால் வாடும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் 97ஆவது இடம் பெற்றுள்ளது.
2016ஆம் ஆண்டுக்கான சர்வதேசப் பட்டினிப் பட்டியலை, சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்காக ஆசியாவிலுள்ள 118 நாடுகளில் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதில் இந்தியா 97ஆவது இடம் பிடித்துள்ளது.

‘பேலியோ டயட்’ ஆரோக்கியமானதா? இன்னும் சந்தேகம் இருக்கிறது?

உலகில் உடல் எடை குறைக்க பல்வேறு டயட் முறைகள் இருக்கும்போது சமீபகாலமாக பரபரப்பாக பிரபலமாகிக் கொண்டிருக்கும் டயட் முறை ‘பேலியோ’. உடல் எடையைக் குறைக்க முயல்பவர்களிடமும், சர்க்கரை நோயுள்ளவர்களிடமும் பிரபலமாகி வருகிறது இந்த பேலியோ டயட். இதைப்பற்றி நம்மிடம் விரிவாகப் பேசுகிறார் பேலியோ டயட் நிபுணர் ஷங்கர் ஜி.
பேலியோ டயட்டில் என்ன இருக்கிறது?
மருத்துவ உலகில் எதைச் சாப்பிடக்கூடாது என்று சொல்லி பயமுறுத்துகிறார்களோ, அந்த உணவை எல்லாம் குறிப்பாக இறைச்சி, மஞ்சள் கரு சேர்த்த முட்டை, நெய், வெண்ணெய், தேங்காய், சீஸ் என்று கொழுப்பு உணவுகளை சாப்பிட்டு உடல் எடையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் டைப்-2 டயபடிஸ், பி.பி, மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றையும் வெகுவாகக் கட்டுப்படுத்தவும், குணமாக்கவும் உதவுகிறது

ஆறுமுக நாவலரின் வெள்ளாள வாரிசுகள் “சிவ சேனை”யை துவங்கியதில் திடுக்கிட ஒன்றுமில்லை

thetimestamil.com  : எல்.ஆர். ஜெகதீசன் : ஆறுமுக நாவலரின் வாரிசுகள் “சிவ
சேனை”யை துவங்கியதில் திடுக்கிட ஒன்றுமில்லை. அது வரலாற்றின் நீட்சி. இயல்பான பரிணாம வளர்ச்சி. பெரியாரின் வாரிசுகள் முப்பதாண்டு காலம் முட்டாள்களாக இருந்ததற்கு நாவலரோ அவர் தம் கொள்கை வழுவா வாரிசுகளோ எப்படி பொறுப்பாவார்கள்? அனானப்பட்ட வள்ளலாரின் அருட்பாவையே மருட்பா என்று மறுதலித்த பாரம்பரியம், இந்தியாவுக்குள் இருக்கும் இன்னொரு மாநிலமான மஹாராஷ்ட்ரத்தில் பிழைக்கப்போன தமிழ்நாட்டுத்தமிழனை விரட்டியடிக்கவே உருவான சிவசேனையை அரசியல் ஆதர்ஷமாக கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பல லட்சம் மலையகத்தமிழனின் பிரஜா உரிமையை பறித்து இலங்கையைவிட்டு தமிழ்நாட்டுக்கு கப்பலேற்றுவதை ஆதரித்து வாக்களித்தது முதல் யாழ்ப்பாண முஸ்லிம்களை துப்பாக்கி முனையில் விரட்டியடித்தது வரை சிவ சேனைக்கும் சிவ சேனாவுக்கும் வரலாறு நெடுக இயல்பான ஒற்றுமைகள் ஏராளம் உண்டு.

முதல்வரை பார்க்க மோடி வருகிறார்.. ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டதாக ஈஸ்வரன் தெரிவிப்பு

சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் காண அரசியல் தலைவர்கள் இந்தியா முழுக்க இருந்து வந்தாலும் இதுவரை அவரை யாரும் பார்க்கவில்லை. ராகுல், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம், தமிழக கவர்னர் என யாராலும் ஜெயலலிதாவைக் காண முடியவில்லை. அதற்கு அப்பல்லோ நிர்வாகம் சொன்ன காரணம் நோய்த்தொற்று இருப்பதால் நேரில் பார்க்க முடியாது என்று சொன்னது. இந்நிலையில்தான், நேற்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் நேற்று அப்பல்லோ வந்தார்கள். மருத்துவர்களிடம் நிலைமையைக் கேட்டறிந்தவர்கள், ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கைகள், பரிசோதனைகள், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் என சுமார் 20 நிமிடங்கள் அதுபற்றி விரிவாக விஷயங்களைத் தெரிந்துகொண்டார்கள்.

முதல்வரை பார்க்க நீதா அம்பானி அப்பல்லோ வருகை

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையை குறித்து விசாரிக்க பிரபல
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை குறித்து விசாரிக்க  பிரமுகர்கள் தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து செல் கின்றனர். இதனால் அப்பல்லோ முன்பு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  dailythanthi.com

Kerala's RSS-CPM clashes claim 7 lives கேரளா RSS - CPM தொண்டரகள் பரஸ்பரம் மாறி மாறி கொலை... வேதங்களோட நாடு ...

திருவனந்தபுரம்: தொண்டர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, கேரளாவில், பா.ஜ., நேற்று நடத்திய கடையடைப்பு போராட்டத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கேரளாவில், பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், கண்ணுார் மாவட்டத்தில், சில நாட்களுக்கு முன், மார்க்சிஸ்ட் தொண்டர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அதற்கு பழி வாங்கும் வகையில், பா.ஜ.,வைச் சேர்ந்த ரமீத், 29, என்பவர், நேற்று முன்தினம், படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை கண்டித்து, பா.ஜ., சார்பில், மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்த, அழைப்பு விடுக்கப்பட்டது.இதையடுத்து, மாநிலம் முழுவதும் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம், பாலக்காடு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன; பல பகுதிகளில், பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை.

ஆந்திராவில் 10000 கோடி கறுப்புபணம் வெள்ளையாக்கியது சந்திரபாபு நாயுடுவா அல்லது ஜெகன் மோகன் ரெட்டியா?

அமராவதி: கறுப்புப் பணத்தை தாமாக முன் வந்து தெரிவிக்கும் திட்டத்தில், ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கணக்கு காண்பித்துள்ளது தொடர்பாக, ஆந்திர முதல்வருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டில் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை தாமாக முன்வந்து தெரிவித்து, அபராதம் செலுத்தி, உரிமையாக்கிக் கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தில், 65 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெளிவந்துள்ளதாக தெரிவிக் கப்பட்டது.இதில், ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர்

வியாழன், 13 அக்டோபர், 2016

பா.ஜ.க.வின் பாகிஸ்தானா தமிழ்நாடு ?

காவிரியைச் சார்ந்திருக்கும் 25 இலட்சம் ஏக்கர் விவசாயத்தை, 40 இலட்சம் தஞ்சை விவசாயிகளை, குடிநீருக்குச் சார்ந்திருக்கும் 19 மாவட்ட மக்களை மரணத்துக்குத் தள்ளும் பாரதிய ஜனதா, தமிழகத்தை பாகிஸ்தானைவிடக் கொடிய பகைநாடாக நடத்ததுகிறதென நீங்கள் கருதவில்லையா?
பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தொடரப் போவதில்லை” என்று சொன்ன மோடி அரசுக்கு உடனே பதிலடி கொடுத்தார், பாக். அரசின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஸ் அஜீஸ். “ஒருதலைப்பட்சமாக நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவதாகச் சொல்வதே போர்ப் பிரகடனம் ஆகும். கார்கில், சியாச்சின் போர்களின்போதுகூட சிந்து தடுக்கப்பட்டதில்லை. எனவே, இது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும், சர்வதேச நீதிமன்றத்திலும் பாக். முறையிடும்” என்றார்.

எல்லா மானியங்களையும் உறிஞ்ச வருகிறது ஆதார் அட்டை !

சாலவன்பேட்டை என்ற ஊரில் ரேஷன் கார்டோடு ஆதார் எண்ணை இணைக்கக் காத்திருக்கும் பொதுமக்கள்மானிய விலையில் பொருளைக் கொடுத்தால் என்ன, மானியத்தை வங்கியில் போட்டால் என்ன – இரண்டும் ஒன்றுதானே எனச் சமப்படுத்துவதென்பது, போத்திகிட்டு படுத்தால் என்ன, படுத்துகிட்டு போத்திக்கிட்டால் என்ன என்பது போல சாதாரணமானது அல்ல.
வினவு: மானியங்கள், கல்வி, முதியோர் உதவித் தொகைகள் உள்ளிட்ட அரசின் சேவைகளைப் பெறுவதற்கு, ஆதார் எண் வைத்திருக்க வேண்டும்; இல்லையென்றால், இந்த உதவிகள்/சேவைகள் மறுக்கப்படும் என்ற இடியை, மைய, மாநில அரசுகள் அதிரடியாகப் பொதுமக்கள் மீது இறக்கி வருகின்றன. மானிய உதவிகள் பெறுவதற்கு மட்டுமல்ல; வேலையில் சேருவதற்கு, வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு, ஓய்வூதியம் பெறுவதற்கு, புதிய தொலைபேசி இணைப்பிற்கு, ஏன் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்குக்கூட ஆதார் எண் கேட்கப்படுகிறது. சுடுகாட்டில் அடக்கம் செய்ய பிணத்தின் ஆதார் எண் என்ன எனக் கேட்காதிருப்பது மட்டும்தான் பாக்கி. அந்த அளவிற்கு அரசின் அனைத்து மட்டங்களிலும் ஆதார் எண் இந்தியக் குடிமகனின் அடையாளமாகிவிட்டது.

பொது சிவில் சட்டம் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எதிர்ப்பு... ஒரு சமூகத்துக்கு எதிரான...

டெல்லி: பொது சிவில் சட்டம் குறித்த ஆலோசனைகள் பெறும் மத்திய சட்ட ஆணையத்தின் முயற்சிகளை அனைத்திந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. மத்திய அரசு ஒரு சமூகத்துக்கு எதிராக தொடுக்கும் போர் இது என்றும் அது எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து புதுடெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய பொதுச்செயலாளர் வாலி ரெஹ்மானி கூறியதாவது:
மக்களை ஒரே விதமாக மாற்ற முயலும் இந்தப் பொது சிவில் சட்டம், நாட்டின் பன்முகத்துவம் மற்றும் கலாச்சார தனித்துவங்களுக்கு அச்சுறுத்த உள்ளது. பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அது அனைவரைக்கும் எதிரான ஒரு செயலாக மாறும். எல்லோரையும் ஒரே மாதிரியானவர்களாக காட்ட எடுக்கப்படும் முயற்சி தோல்வியையே தழுவும்.

கட்சியினரை தக்க வைக்க விஜயகாந்த் கடைசி முயற்சி

கரைந்து வரும் கட்சியை காப்பாற்ற, கடைசி முயற்சியாக, மாநிலம்
முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் முடிவெடுத்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்டு, படுதோல்வி அடைந்ததும், அதில் இருந்து தே.மு.தி.க., விலகியது; ஆனாலும், அக்கட்சியினரின் வெளியேற்றம் நிற்க வில்லை. உள்ளாட்சி தேர்தலில், தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, வேட்பாளர்களை நிறுத்தியது; பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். அதிலும் அதிருப்தி ஏற்பட்டு, பலர் வெளியேறினர். தக்க வைக்க முயற்சி இந்நிலையில்,கட்சியினரை தக்க வைக்க, விஜய காந்த், பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார். முதல் கட்டமாக, காலியாக உள்ள, 18 மாவட்டங் களுக்கும் செயலர்களை நியமித்திருக்கிறார். அடுத்த கட்டமாக, உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர் களை கூட்டி பேச உள்ளார்.
வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது; யாரெல் லாம் வேட்பாளர்களாக விரும்பு கின்றனர்; தேர்தல் அறிவிப்பு வரும்போது, அதே ஆர்வத்துடன் போட்டி யிடத் தயாராக இருக்கின்ற னரா என்ற தகவல்களை தெரிந்து கொள்ள இருக்கிறார்.

கலைஞர் : காவிரி ... ரயில் மறியல் போராட்டத்துக்கு திமுக ஆதவரவு!

சென்னை : காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் விவசாயிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று வலியுறுத்துவதற்காக, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில், வரும் அக்டோபர் மாதம் 17, 18 ஆகிய நாட்களில் 48 மணி நேரம் தொடர் ரயில் பாதை மறியல் போராட்டம் நடத்துவதாகவும், அதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவும், பங்கேற்பும் கேட்டு கொடுத்துள்ள கடிதத்தினை ஏற்று, அவர்கள் நடத்தும் ரெயில் பாதை மறியல் போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்து கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி தோழர்களும், மாவட்ட செயலாளர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். தினமலர்.காம்

தஞ்சாவூரில் சசிகலா! அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி

மின்னம்பலம்.காம் : ‘அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபிறகு வேட்புமனு புதிதாகத்தான் தாக்கல் செய்ய வேண்டும். அதனால், வேட்பாளர்களை மாற்றுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜியை மீண்டும் வேட்பாளராக அறிவித்துவிடக் கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டது அவரது எதிரணி. தற்போதைய அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி தொகுதியில் அதிகம் கவனம்செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அங்கேயிருக்கும் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் என்று எல்லோருக்கும் தொடர்ந்து போனிலும் பேசுகிறாராம். ‘உங்களை மாதிரி நானும் சாதாரண ஒன்றியச் செயலாளரா இருந்துதான் இங்கே வந்திருக்கேன். உங்க கஷ்டம் எனக்குப் புரியும். எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க...’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டாராம்.

காவிரி நதி நீர்ப் பிரச்சினை - திமுக கலந்துரையாடல் கூட்டத்தின் தீர்மானங்கள்

நக்கீரன்.இன்  :காவிரி நதி நீர்ப் பிரச்சினை குறித்து "விவசாய அமைப்புகளுடன் கலந்துரையாடல் கூட்டம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் 13-10-2016 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எம்.பி., தலைமைக் கழக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி., பவுன்குமார் (காங்கிரஸ்), உ. பலராமன் (காங்கிரஸ்), சண்முகம் (சி.பி.எம்.), துரை மாணிக்கம் (சி.பி.ஐ), குணசேகரன் (சி.பி.ஐ), கு.செல்லமுத்து (உழவர் உழைப்பாளர் கட்சி), பி.ஆர். பாண்டியன் (அனைத்து விவசாய சங்கம்),தெய்வசிகாமணி (விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கங்கள்),அய்யாக்கண்ணு (விவசாய கூட்டு இயக்கம்),பாலு தீட்சிதர் (காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்),ஹேமநாதன் (ஐக்கிய ஜனதாதள விவசாயிகள் பிரிவு), தி.மு.க. விவசாய அணிச் செயலாளர்கள் கே.பி.இராமலிங்கம், ஏ.கே.எஸ்.விஜயன், கரூர் சின்னசாமி, தி.மு.க. விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் உ.மதிவாணன், எம்.எல்.ஏ., ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

பிளாஸ்டிக்கை ஒழிக்க (மனநிலை சரியில்லாதவர்) சமூக ஆர்வலர் தற்கொலை


தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரைச் சேர்ந்த குமரன் மகன் ஜவகர் (20). இவர், பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று தனி நபராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இதற்காக கடந்த ஆண்டு சாலையில் அமர்ந்து போராடியவர், டவரில் ஏறியும் போராடினார். ஆனால் அரசாங்கம் பிளாஸ்டிக் ஆபத்தானது என்று வாய்மொழியாக சொன்னதோடு சரி ஒழிக்கும் நடவடிக்கையில்லை. இதனால் மனம் வெதும்பிய ஜவகர், கடந்த 10 ந் தேதி ஒரு வீடியோவில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. 127 கோடி மக்கள் நல்லா வாழ பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் யானை பசிக்கு சோளப்பொறி போல நடந்து கொள்கிறது. சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்க வேண்டும். அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று வீடியோ பதிவை வெளிட்டு, புது ஆற்றுப்பா லத்தில் இருந்து குதித்துள்ளார். அவரது உடல் கண்டிதம்பட்டு பொட்டவாச்சாவடி அருகே கரை ஒதுங்கியுள்ளது. இதனால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீடியோ, செய்தி :இரா.பகத்சிங்  நக்கீரன்.இன்

சென்னை கிண்டியில் தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் பலி (படங்கள் )

சென்னை கிண்டி மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்ற சென்னை செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் 3 பேர் மீது எதிரே வந்த தண்ணீர் லாரி மோதியதில் மூன்று மாணவிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்தில் பலியான மாணவிகளின் பெயர் சித்ரா, ஆயிஷா மற்றும் காயத்திரி என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

திமுகவுடனான கூட்டணிக்கு ஒரே ஒரு வாக்கு: காங்கிரஸில் வாக்கெடுப்பு!

உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மாவட்டத்
தலைவர்களிடம் அந்தக் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் நடத்திய வாக்கெடுப்பில், திமுகவுக்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றே அனைத்து மாவட்டத் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்டத் தலைவர்கள் கூட்டம்: காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தைத் தொடக்கி வைத்து திருநாவுக்கரசர் பேசும்போது, உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக மாவட்டத் தலைவர் யாரும் பேச வேண்டாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக திருச்சியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற உள்ள உண்ணாவிரதம் தொடர்பாக மட்டும் பேச வேண்டும் என்று கூறினார்.

சீனாவில் 2000 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு... களிமண் உறைக்குள் மம்மிகள்

சீனாவில் 2000 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையான கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 113 முன்னோர்களின் உடல்கள் களிமண் தொட்டிகளுக்குள் அடக்கம் செய்து பதப்படுத்தப்பட்டுள்ளன.
இதை கண்டுபிடித்த சீன தொல்பொருள் ஆய்வாளர்கள் தங்கள் முன்னோர்களின் செயலை வியந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பே மட்பாண்டங்களில் வைத்து புதைக்கும் சடங்கு சீனாவில் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்திருப்பதால் முக்கியத்துவமாக நினைக்கின்றனர்.
அந்த கல்லறையில் குழந்தைகள் உடல்கள் மட்டுமே இந்த முறையில் புதைக்கப்பட்டுள்ளது. அதில் 6 பேர்களுடைய உடல் மட்டுமே பருவ வயதுடையதாக இருந்தன.

ராமர் உருவ பொம்மைகளை எரித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கைது!

இராவண லீலா நடத்திய தோழர்களை கைது செய்ததை கண்டிக்கிறோம் ! தோழர்களை உடனே விடுதலை செய் ! வழக்குகளை வாபஸ் வாங்கு ! இராம லீலா நடத்தி ராவணனை கொளுத்துபவனுக்கு ராணுவ பாதுகாப்பு, அயோக்கியன், குடிகாரன், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தற்கொலை செய்ய காரணமானவன்,ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து செத்து போன ராமனை கொளுத்தினால் சிறையா?
​ராமர் உருவ பொம்மைகளை எரித்தவர்கள் கைது! சென்னை ராயப்பேட்டையில் ராமர், சீதை உருவ பொம்மைகளை எரித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 11 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வட இந்தியாவில் தசரா கொண்டாட்டத்தின்போது ராம லீலா எனும் பெயரில் திராவிட மன்னர் ராவணனின் உருவ பொம்மையை எரிப்பது திராவிடர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக கூறி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.< அப்போது ராமர், சீதை மற்றும் லட்சுமணன் உருவ பொம்மைகளை எரித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலமுருகன், ஜெயகுமார், கணேஷ், தீபன் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

அறை எண் 2008 : பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள் பட்டியல் !

PP Logoபத்திரிக்கைச் செய்திஅப்போலா மருத்துவர்களா, ஆளுநரா, அமைச்சர்களா, ஆளும்கட்சிக்காரகளா, மருத்துவர்கள் சொன்னார்கள் எனப் பேட்டி கொடுக்கும் சர்வ கட்சித் தலைவர்கள் ;
நாள் : 11.10.2016
பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள் யார்?
  • செப்டம்பர் 22 –ந்தேதி : ஜெயலலிதா அப்போலாவில் அனுமதிக்கப்பட்டார்.
  • செப்டம்பர் 23 –ந்தேதி : காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு.
  • செப்டம்பர் 24 –ந்தேதி : வழக்கமான உணவையே எடுத்துகொள்கிறார்.
  • செப்டம்பர் 25 –ந்தேதி : உடல்நிலை சீராக இருக்கிறது.
  • செப்டம்பர் 26 –ந்தேதி : விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார்.
  • செப்டம்பர் 27 –ந்தேதி : இன்னும் சில தினங்கள் இருந்துவிட்டு
    தன் பணிகளுக்குத் திரும்புவார்.
  • செப்டம்பர் 28 –ந்தேதி : உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
  • செப்டம்பர் 29 –ந்தேதி : மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார் சசிகலா.
  • செப்டம்பர் 30 –ந்தேதி : லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் சென்னை வருகை.
  • அக்டோபர் 01 –ந்தேதி : அப்போலாவில் ஆளுநர் வித்யாசாகர்ராவ்.
  • அக்டோபர் 02 -ந்தேதி தொற்று நோய்க்கு சிகிச்சை
  • அக்டோபர் 03 –ந்தேதி : சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன – அப்போலாஅறிக்கை
  • அக்டோபர் 04 –ந்தேதி : லண்டன் சிறப்பு மருத்துவர் வருகை.
  • அக்டோபர் 05 –ந்தேதி : எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகை
  • அக்டோபர் 06 -ந்தேதி: உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்.
  •  – இவையெல்லாம் அப்போலா அறிக்கைகள் அடிப்படையிலானவை.
    (ஆதாரம் : ஜூனியர்விகடன் )

    பிள்ளைய பெத்துட்டு வாழ்க்கைய வெறுத்து ஓட முடியுமா ?

    மாதிரிப் படம் சென்னை வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் நடந்து வந்தேன். நிழலுக்காக தேடியதில் கிடைத்த ஒரு சர்ச் வளாகத்தில் ஒதுங்கினேன். என் களைப்பறிந்து தண்ணி தந்தது மட்டுமல்லாமல் மின் விசிறியை போட்டவரைப்  பார்த்தேன். உழைப்பறிந்த ஒருவருக்கு மற்றவரின் களைப்பை புரிந்து கொள்வது மிகவும் எளிது என்பதை சொல்லாமல் உணர்த்தியது அந்தோணியின் செய்கை.
    திருத்தணியை அடுத்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி. 36 வயதாகும் இவருக்கு 28 வயதுடைய மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். விவசாயத்தை பின்னணியாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த அந்தோணி சென்னையில் உள்ள இந்த தேவாலயத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்கிறார்.

    அமித்ஷா ,அருண் ஜெட்லி முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வந்தார்கள்.. 570 கோடி காண்டேயினர்கள் ஞாபகத்தில் இருக்கான்னு செக் பண்றாய்ங்க?

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க
    வந்த அமித்ஷா, அருண்ஜெட்லி பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் சென்றனர். முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 20 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அதிக நாட்கள் ,மருத்துவமனியில் இருக்க வேண்டும் என்பதால் அவரது இலாகாக்கள் ஓ.பன்னீர்செலவம் வசம் ஒப்படைக்கப்பட்டது. இலாகா இல்லாத முதல்வர் ஆனார் ஜெயலலிதா முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி ருந்தபோது அவரது உடல்நிலை பற்றி பல்வேறு வதந்திகள் கிளப்பி விடப்பட்டன. அப்போது முதன்முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் நேரில் மருத்துவமனைக்கு வந்து பார்த்து பேட்டி அளித்தார்.

    தாம்பரத்தில் அ.தி.மு.க. தொண்டர் (மனநிலை சரியில்லாதவர்) நடுரோட்டில் தீக்குளித்தார் .. மருத்துவமனையில்

    தாம்பரத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாததால்
    மனமுடைந்த அ.தி.மு.க. தொண்டர் நடுரோட்டில் திடீரென தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நடுரோட்டில் தீக்குளிப்பு தாம்பரம் கடப்பேரி மவுலானா நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் சற்குணம் (வயது 31). அ.தி.மு.க. தொண்டரான இவர், காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஷீலா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், கடந்த சில தினங்களாக சற்குணம் மனவருத்தத்தில் இருந்ததாக கூறப் படுகிறது. இந்த நிலையில் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள ஏற்றுமதி வளாகத்தின் எதிரில் உள்ள சிக்னல் பகுதிக்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சற்குணம் வந்தார். அப்போது திடீரென நடுரோட்டில் தனது உடலில் பெட்ரோலை உடலில் ஊற்றிய அவர், முதல்- அமைச்சர் குணமடைய வேண்டும் என்று கத்தியபடி தீக்குளித்தார்.

    திருநாவுக்கரசு : தி.மு.கவுக்கு எதிராக காங்கிரஸில் இருந்தே போட்டி வேட்பாளர்கள் களமிறங்குவதை எங்களால் தடுக்க முடியாது

    உள்ளாட்சித் தேர்தல் ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது மாநில தேர்தல் ஆணையம். ' தேர்தல் தேதி அறிவித்தவுடன், தி.மு.கவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவோம்' என அதிர வைக்கிறது காங்கிரஸ். சட்டமன்றத் தேர்தலில் பெற்ற இடங்களைவிடவும், உள்ளாட்சித் தேர்தலில் மிகக் குறைவான இடங்களையே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது தி.மு.க. மாநகராட்சிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படவில்லை. இதனால், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. தி.மு.க பொருளாளர் ஸ்டாலினும், ' மாவட்ட செயலாளர்களிடம்< பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்' என உறுதியாகக் கூறிவிட்டார். இதையடுத்து, தங்களுக்கான வார்டுகளை போராடியே பெற வேண்டிய நிலைக்கு, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தள்ளப்பட்டனர். ஒருகட்டத்தில், உயர் நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்துவிட்டதால், உற்சாகத்தில் இருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

    நாட்டுப்புறபாடல்களின் மீட்டுருவாக்கத்தின் அவசியம்; ஜோக்கர் படப் பாடல்களை முன்வைத்து

    thetimestamil.com :ஜீவா பொன்னுசாமி : கலையும்
    இலக்கியமும் சமூகத்திற்கு ஆகப்பெரும் கொடை என்பதில் சந்தேகமில்லை.  நவீனப்படுத்தப்பட்ட மறு வடிவங்களாக கலைகளுக்கு புகலிடமாக ஆக்கப்பட்டு விட்ட சினிமாவும், அச்சில் ஏறி வாசகனை சென்றடைவதை விட வலைத்தளம் மூலம் இலக்கிய படைப்பு பெருவீச்சில் சென்றடைவதும் மீட்டுருவாக்கத்தின் ஒரு மறுவடிவமே!
    ஜீவா பொன்னுசாமிஅவ்வகையில் பாடல்கள் என்பது, நாட்டுப்புறப்பாடல் முதல் சங்க இலக்கியம் தொட்டு நவீன கவிதைகள் வரை உலகளாவி பறந்து வேற்றுமொழி கலாச்சாரத்துடன் வார்த்தைகளோடு உறவாடி ரசிகனுக்கு கிடைக்கும் பேரானந்தமே அளப்பெரியதாக கொண்டாடப்படுகிறது.
    அப்படி ஜோக்கர் எனும் திரைப்படத்தின் யுகபாரதி மற்றும் ரமேஷ் வைத்தியா அவர்களால் எழுதப்பட்ட பாடல் வரிகளுக்குள் ஒரு குறுக்கு வெட்டு தோற்றம் கிடைத்தது அது வெறும் பாடலாக நில்லாமல் நாட்டுப்புற பாடலுக்கான உள்ளடக்கத்தை கொண்டிருப்பதாக தோன்றியது.

    கர்நாடகா ,வாகனங்களை கழுவ 10 கோடி லி., காவிரி நதிநீர்.. ஆயுத பூஜையில் அடாவடி

    பெங்களூரு: ஆயுத பூஜைக்கு வாகனங்களை கழுவ மட்டும், 10 கோடி லி., தண்ணீர் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதில், காவிரி நதி நீர் தான் அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது ஆயுத பூஜையை முன்னிட்டு, வாகனங்களை தண்ணீரால் கழுவுவது வழக்கம். பெங்களூரில், 59.57 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதில்,இரு சக்கரம் ,கார்கள் எண்ணிக்கை மட்டும், 53.66 லட்சமாகும். கடந்த திங்கட்கிழமை ஆயுதபூஜையன்று, பெங்களூரில் மட்டும், 45 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் சுத்தப்படுத்தப்பட்டன. இதற்கு, 10 கோடி லி., தண்ணீர்பயன்படுத்தப்பட்டுள்ளது.

    புதன், 12 அக்டோபர், 2016

    ஓ.பி.எஸ் நியமனம்:சந்தேகம் கிளப்பும் தலைவர்கள்!

    மின்னம்பலம்,காம் :இதுவரை பொறுப்பு முதல்வர் வேண்டும் அல்லது வேண்டாம் என்றளவில் அரசியல் தளத்தில் விவாதங்கள் நடந்துவந்தநிலையில் நேற்று முதல்வர் கவனித்து வந்த துறைகளை இனி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று ஆளுநர் அறிவித்தார். முதல்வர் ஜெயலலிதா ஒப்புதலுடன் இந்த இலாகா மாற்றம் நடந்திருப்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்திருக்கும்நிலையில், தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.
    ஆளுநர் அறிவிப்பு வியப்பைத் தருகிறது : கலைஞர்
    முதலமைச்சர் தனது இலாக்காக்களை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா?

    நடராஜனின் தங்கையின் இறுதிசடங்கில் சசிகலா கலந்து கொள்ளவில்லை.. சசிகலா புஷ்பாவின் பேட்டி Effect..

    மின்னம்பலம்,காம் : “சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரி வனரோஜா, நேற்று இரவு உடல்நிலைக்குறைவால் தஞ்சாவூரில் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சசிகலா தஞ்சாவூர் போகிறார் என்ற செய்தி பரவியது. நேற்று இரவு இந்தத் தகவல் தெரிந்ததும், சசிகலாவின் உறவினர்கள் சிலர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். ‘நாத்தனார் இறந்துபோனதற்கு போகாமல் இருக்கக்கூடாது’ என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு சசிகலா நீண்டநேரம் யோசித்துவிட்டு, ‘இப்போ இருக்கும் சூழ்நிலையில நான் அங்கே போனா அது சரியாக இருக்காது. அதுவும் என்னைப் பற்றித்தான் எல்லோரும் பேசிட்டு இருக்காங்க. இந்த நேரத்துல, அங்கே நான் போனால் அவரோட (நடராஜன்) பேச வேண்டியிருக்கும். அது இன்னும் சர்ச்சைகளை உண்டாக்கிடும். அதனால நான் போகலை’ என்று சொல்லியிருக்கிறார். ‘சொல்றவங்க ஆயிரம் சொல்லிட்டுப் போகட்டும். உங்களைப்பற்றி அம்மாவுக்குத் தெரியும். அதனால நீங்க போயிட்டு வாங்க…’ என்று டாக்டர்.சிவகுமார் சொல்லியிருக்கிறார்.

    திருநாவுகரசு: கருணாநிதிக்கு நாதசுரம் வாசிக்க முடியாது!.... தமிழக காங்கிரஸ் டமால்!


    மின்னம்பலம்.காம் : தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திருநாவுக்கரசர் தலைமையில் இன்று மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அக்கூட்டத்தில், திருநாவுக்கரசரை தலைவர் ஆக்கிய தேசிய தலைமைக்கு நன்றி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி, மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்குக்கு கண்டனம், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம், கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தின் இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். இக்கூட்டத்தின் தொடக்கத்தில் உள்ளே நடந்த தகவல்கள்தான் முக்கியமானவை.

    சு.சாமி: எனது குடியரசுத் தலைவர் ஆட்சி கோரிக்கையால்தான் பன்னீர்செல்வம் ஆட்சி பொறுப்பு ஏற்றார்.

    சுப்பிரமணிய சுவாமி : அமைச்சரவையின் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டதற்கு, ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த நான் விடுத்த கோரிக்கையே காரணம். அதன்பின்புதான், ஆளுநர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்”  
    மருத்துவமனையில் இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த அனைத்து துறைகளும், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டதற்கு நானே காரணம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ஜெயலலிதாவின் சிகிச்சை அறைக்கு நேரில் சென்ற காங்கிரஸ் கிருஷ்ணசாமி !

    முதல்வர் ஜெயலலிதா, அவர்கள் சிகிச்சை பெறும் அறைக்கே சென்று நலம் விசாரித்ததாக எம். கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, “அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் அறைக்குச் சென்றேன். அங்கு மருத்துவர்கள் இருந்தார்கள். முதல்வர் நலமாக இருக்கிறார். நன்றாக தேறி வருகிறார். அவருக்கு எந்தக் குறையும் இல்லை. வீண் வதந்திகள் பரவி வருகிறது. அதையெல்லாம்நம்ப வேண்டாம் என மருத்துவர்கள் என்னிடம் கூறினர். முதல்வர் ஜெயலலிதாவால் பேச முடிந்தாலும் தங்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் பேசாமல் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்” என்று தெரிவித்துள்ளார்
    கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 20 நாட்களாக அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் உலா வருகின்றன. ஆனால், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து முதல்வரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

    BBC :ஜெயலலிதா இலாகா மாற்றத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை குறித்து கலைஞர் கருணாநிதி கேள்வி

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இதுவரை அமைச்சரவையில் வகித்துவந்த இலாகாக்கள் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டதற்கு முதல்வர் கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா என தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று தமிழக ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இலாகா மாற்றம் முதல் அமைச்சரின் அறிவுரையின் பேரில் செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது வியப்பைத் தருவதாக கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.
    முதலமைச்சர் தனது இலாகாக்களை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா என்ற கேள்வி ஒரு சிலரிடையே எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
    ஆளுநர் செய்துள்ள அறிவிப்பு நிர்வாக வசதிக்கான ஏற்பாடு என்ற வகையில் ஏற்றுக் கொள்ளலாமே தவிர, அரசியல் சட்டத்தின் பரிமாணங்கள் அனைத்தையும் ஆளுநர் முழுமையாகப் பரிசீலித்து இந்த முடிவை எடுத்திருக்கிறாரா என்ற சந்தேகத்தை புறக்கணித்துவிட முடியாது என்றும் கலைஞர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

    அதிமுக அதிகார பத்திரிகையில் சசிகலா புஷ்பா மீது சேறு வீச்சு !

    அரசியலில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரும் உயரத்துக்குச் சென்றவர் சசிகலா புஷ்பா. இவர் சில மாதங்களுக்கு முன் திருச்சி சிவாவை விமானநிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்தார், இதனால் தனக்கு அ.தி.மு.க-வில் நல்ல பெயர் கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால் கிடைத்ததோ கட்சிப் பதவி பறிப்பு.
    ஜெயலலிதா, தன்னை அறைந்ததாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் நாடாளுமன்றக் கூட்டத்திலேயே, அனைவர் முன்னிலையிலும் கூறினார். சசிகலா புஷ்பாவுக்கு அ.தி.மு.க-வால் போதாத காலம் ஆரம்பித்தது. சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை செய்த இளம்பெண் பானுமதி மற்றும் அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகிய 2 பேரும் சசிகலா புஷ்பா குடும்பத்தினரால் தங்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தது, பண மோசடி வழக்கு போன்ற பல்வேறு வழக்குகள் சசிகலா புஷ்பா மீது பாய்ந்தன. அதேசமயம் சசிகலா புஷ்பாவும், 'ஜெயலலிதாவால் எனக்கு பெரிய ஆபத்து இருக்கிறது' என்று போலீஸில் பதிலுக்கு புகார் செய்தார். இவையெல்லாம் அனைவரும் அறிந்ததே.

    சாத்தூர்... ஓடும் பேருந்தில் இளைஞர் சுட்டுக் கொலை!

    சாத்தூர் அருகே ஓடும் பேருந்தில் இளைஞர் சுட்டுக் கொலை! கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி இரவு கோவில்பட்டியைச் சேர்ந்த அப்துல்லா என்ற கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கருப்பசாமியின் சகோதரர்கள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், கருப்பசாமி துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதால், முன்விரோதம் காரணமாக இந்த கொடூரம் நடந்திருக்கலாம் என கருப்பசாமி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த கருப்பசாமிக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், ஸ்ரிதரணிப் பிரியா என்ற மகளும் உள்ளனர்  ns7.com

    காவல்துறை விசாரணைக்கு பயந்து தீக்குளித்த இந்துமுன்னணி பிரமுகர் பலி

    கோவை, அக். 8 – சசிக்குமார் படுகொலையை தொடர்ந்து கொலையாளிகளை  காவல்துறையினர் கைது செய்ய காவல்துறையினர் தீவிரமான தேடுதல் வேட்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் தன்னையும் விசாரணை செய்வார்கள் என்கிற அச்சத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இந்து முன்னணியை சேர்ந்த ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று உயிரிழந்தார்.
    இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 22 ஆம்தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து சங்பரிவார அமைப்புகள் கோவை மாவட்டம் முழுவதும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். திட்டமிட்டு நடைபெற்ற வன்முறையில் சுமார் ஐந்து கோடிக்கும் அதிகமான பொதுமக்களின் சொத்துக்கள் சேதமடைந்தது. மேலும், இரண்டு நாட்கள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு நிலையை ஸ்தம்பிக்கவைத்து பெரும் அச்சத்திற்கு ஆளாக்கினர். இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகள் இந்த வன்முறைக்கு கடும் கண்டனத்தை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்தனர்.

    செவ்வாய், 11 அக்டோபர், 2016

    மன்னார்குடியால் ஓரம் கட்டப்பட்ட எம் எல் ஏக்களை வேவு பார்க்கும் படலம் ஆரம்பம் ..

    சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க சில முக்கியக் கட்சிகள் களம் இறங்கியுள்ளதாக அதிமுக தலைமைக்கு சந்தேகம் வந்துள்ளதாம். இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப் படுகின்றனராம். ஒவ்வொரு எம்.எல்.ஏவின் நடமாட்டமும் கண்காணிக்கப்படுகிறதாம். தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இல்லை என்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என அதிமுக தலைமை சந்தேகப்படுகிறதாம். குறிப்பாக 2 முக்கியக் கட்சிகள் மீது அதற்கு சந்தேகம் உள்ளதாம். சில முக்கியத் தொழிலதிபர்களைப் பயன்படுத்தி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த அவை முயல்வதாக அதிமுக தலைமை சந்தேகப்படுகிறதாம்.  இதனால் தனது கட்சி எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாம்

    வைகோதான் அடுத்த முதலமைச்சர்?

    சசிகலா மற்றும் நடராஜன் ஆகியோர் மீது வழக்கு உள்ளதால் வைகோவை அடுத்த முதலமைச்சராக நியமிக்க சேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன ஆனால் அதிமுக கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் அதற்கு அவசியமில்லை முதல்வர் நல்ல உடல்நிலையுடன் தான் இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.இன்னொரு பக்கம் சசிகலா துணை முதலமைச்சர் பதவி வகிக்கப்போவதாகவும், நடராஜன் அதிமுக கட்சியை கைப்பற்றபோவதாகவும் செய்திகள் இணையதளங்களில் பரவி வருகிறது.இந்நிலையில் வைகோவை அடுத்த முதலமைச்சராக நியமிக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வதந்தி பரவி வருகிறது. சசிகலா மற்றும் நடராஜன் மீது வழக்கு உள்ளதாலும், முதலமைச்சருக்கான அனைத்து தகுதிகளும் வைகோவிடம் உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவரது உடல்நலம் குறித்த செய்தி மற்றும் கட்சி தொடர்பான செய்திகள் ஆகியவை அனைத்தும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளாகவே பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெப்துனியா.காம்