சனி, 10 மே, 2014

ஜெயலலிதா ஆதரவுடன் ஆட்சி அமைக்க பா.ஜ., முயற்சி ! அடுத்து வைகோ, விஜயகாந்த், தமிழருவி, அன்புமணி


புதுடில்லி : லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, எதிர்பார்த்தப்படி தனிபெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஜெயலலிதா, நவீன் பட்நாயக் உள்ளிட்ட மாநில தலைவர்களின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ., முயற்சி செய்து வருகிறது. இதற்காக அவர்களிடம் ஆதரவு கேட்கவும் பா.ஜ., திட்டமிட்டுள்ளது.பா.ஜ., அழைப்பு : லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருக்கும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக பா.ஜ., தனது எண்ணத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளது. தேர்தலில் பா.ஜ., 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும் என பா.ஜ., தலைவர்கள் பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இருப்பினும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மாநில கட்சி தலைவர்களிடம் ஆதரவு கேட்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது.  பி.ஜே.பி.கடைசியில் ஜெயா காலில் விழவேண்டியதுதான் .ம்ம்ம் விதி ? வாஜ்பாய் பட்ட சோகம் மறக்க கூடியதா என்ன ? முதல்ல வாய்தாராணி ஒத்தை டிஜிட்டை தாண்டட்டும் !  

பிளஸ் 2 தேர்வில் சாதனை ! 8ம் வகுப்புடன் வேலைக்குச் சென்ற மாணவன் 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பள்ளி

வெல்டிங் பட்டறையில் பணிபுரியும் ஈ.மணிமாறன். (படம்: ஆர்.அசோக்.)
8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி வேலைக்குச் சென்ற மாணவன் 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பள்ளி சென்று பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்திருக்கிறார்.
தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி வசப்படும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த ஏழை மாணவன் மணிமாறன். குடும்ப வறுமையினால் 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, வெல்டிங் பட்டறையில் வேலைக்குச் சென்ற மணிமாறன், 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பள்ளி சென்று படித்து பிளஸ் 2 தேர்வில் 1129 மதிப்பெண் எடுத்து, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 184, ஆங்கிலம்- 172, கணிதம்- 193, இயற்பியல்- 188, வேதியியல்- 197, கணினி அறிவியல்- 195.
இது எப்படி சாத்தியமாயிற்று என்பதை மணிமாறனே விளக்குகிறார்.

சுப்பிரமணியசுவாமி : மோடிக்கு பிராமணருக்குரிய குணநலன்கள் இருப்பதால் மோடி இனி பிராமணர் !

பா ஜ க என்றால் பார்பன ஜனதா கட்சி என்பதற்கு சரியான  ஒப்புதல் வாக்குமூலம் இதுவாகும் , பார்பான்  பார்பாந்தாண்டா !
சென்னை: பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடியை பிராமணராக 'நியமிக்கிறேன்' என்று அக்கட்சியில் சமீபத்தில் இணைந்த சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர். அதையே அவர் பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஜனதா கட்சியை கலைத்துவிட்டு சமீபத்தில் பாஜகவில் இணைந்த சுப்பிரமணியசுவாமி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:' 'நமோ' இனிமேல் 'பிராமணர்'.. சு. சுவாமி 'அப்பாயிண்ட்மென்ட்'! "எனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி நான் 'நமோ'வை (நரேந்திரமோடி) பிராமணராக நியமிக்கிறேன். அவருக்கு பிராமணருக்குறிய குணநலன்கள் இருப்பதால் இதைச் செய்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அவரை பாலோ செய்பவர்கள் சிலர் பாராட்டியும், சிலர் விமர்சனம் செய்து கீச்சுக்களை வெளியிட்டுள்ளனர். டுவிட்டர் மோதல் உச்சகட்டமாகிய நிலையில், மோசமான வார்த்தைகளில் சிலர் டுவிட் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர சுப்பிரமணியசுவாமி முடிவு செய்துள்ளார். இதுகுறித்தும் இன்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்க உள்ளதாக அவர் அதில் கூறியுள்ளார்.
tamil.oneindia.in

பக்தி வந்தால் புத்தி போகும் ! சிவனுக்கு நாக்கை அறுத்து காணிக்கையாம்!

ராஞ்சி, மே 8- நாக்கை பிளேடால் அறுத்து சிவ பெருமானுக்கு காணிக்கை செலுத்திய அதிர்ச்சியான   நிகழ்வு ஜார்கண்ட் மாநிலத் தில் நடந்துள்ளது. ஜார் கண்ட் மாநிலம், தூகடா வில் உள்ள  மகாதேவ் கர்ஹா என்ற சிவபெரு மான்  கோவிலிலுக்கு லால் மோகன் சோரன் (வயது 17) வந்தார்.  பின்னர் திடீர் என அந்த  கோவிலில் உள்ள சிவபெருமான் சந்நிதியில் முன்னால் பிளேடு ஒன்றை எடுத்து திடீரென தனது நாக்கை அறுத்து  ஒரு பாத்திரத்தில் பிடித்து காணிக்கை செலுத்தினார்.
அவர் எழுதி வைத்து இருந்த ஒரு குறிப்பில் நான் எனது நாக்கை அறுத்து சிவ பெருமானுக்கு காணிக்கை செலுத்துகிறேன்.தயவு செய்து என்னை கோவிலை விட்டு வெளியே அனுப்பி விடாதீர்கள். நான் சிவபெரு மானின் காலடியில் இருக்க வேண்டும் என கூறி இருந் தார்.
உடனடியாக கோவில் நிர்வாகி  லால்மோகன் சோரனை மருத்துவம னைக்கு அழைத்து சென் றார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், மருத் துவர்கள் எவ்வளவோ முயன்றும் மீண்டும் அந்த இளைஞனுக்கு நாக்கை ஒட்ட  வைக்க முடியவில்லை.
தற்போது வெறும் திரவ உணவு மட்டும் சாப் பிட்டு வரும் லால்மோகன் சோரன் வாய்பேச முடியாத நிலைக்கு ஆளானார். லால் மோகன் சோரன் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்தாலும், தன்னு டைய மகன் கடவுளுக்கு கொடுத்த காணிக்கையை எண்ணி பெருமைப்படுவ தாக கூறினர்.
viduthalai.in

ராமச்சந்திர பல்கலைக்கழகத்தில் எம்.டி ரேடியாலஜி சீட்டுக்கு ஏலத்தில் வெற்றி பெற்றவர் செலுத்திய தொகை நாலேமுக்கால் கோடி ?


IMG_2197வெங்கடாச்சலம். இந்தப் பெயரைக் கேட்டாலே
தமிழகத்தில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அனைவரும் நடுங்குவார்களோ இல்லையோ, பம்முவார்கள். அப்படியொரு சக்திவாய்ந்த பெயர் இந்த வெங்கடாச்சலம்.
நீதி நாயகன் கர்ணன்
ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் வேந்தர்தான் இந்த வெங்கடாச்சலம். இவரைக் கிட்டத்தட்ட கடவுள் என்றே சொல்லலாம். பார்ப்பவர் அனைவரும் காலில் விழாத குறையாக வணங்குபவர் கடவுள்தானே…. ?
அப்படிப்பட்ட வெங்கடாச்சலத்தை சிபிஐ கைது செய்தது என்று அறிந்ததும் அதிர்ச்சி, ஆனந்தம், மகிழ்ச்சி எல்லாமுமே. ஆனால், நம் நாட்டில் சட்டத்தின் முன் எல்லோரும் சமமா என்ன ?
அப்படி என்ன குற்றம் செய்து விட்டார் வெங்கடாச்சலம் ? ஒரு ஏழெட்டு வெளிநாட்டுக் கார்களை வாங்கி விட்டார். இது ஒரு குற்றமா ? ஒரு எம்பிபிஎஸ் சீட்டுக்கு 75 லட்சம் வாங்கும் ஒரு கல்லூரியின் வேந்தருக்கு சொகுசுக்கார்கள் வாங்கக் கூட உரிமையில்லையா ? சமீபத்தில் ராமச்சந்திர பல்கலைக்கழகத்தில் எம்.டி ரேடியாலஜி சீட்டுக்கு ஏகத்துக்கும் டிமான்ட். கடைசியில் என்ன ஆனது தெரியுமா ? பெங்களுரில் சீட்டை ஏலம் விட்டார்கள். ஏலத்தில் வெற்றி பெற்றவர் செலுத்திய தொகை என்ன தெரியுமா ? நாலேமுக்கால் கோடி. இது போல பல்வேறு சீட்களை வைத்து வியாபாரம் செய்யும் ஒரு நபர், ஒரு எட்டு வெளிநாட்டுக் கார்களை வாங்கி வைத்திருந்தார். இதற்குப் போய் சிபிஐ கைது செய்து விட்டார்கள்.

பிளஸ் 2 தேர்வில் 90.6% சாதனை தேர்ச்சி: மாணவிகள் 93.4 சதவீதம் . மாணவர்கள் 87.4 சதவீதம்

பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு சாதனை அளவாக 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.4 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சுஷாந்தி 1,200-க்கு 1,193 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். இவர் தமிழ் பாடத்தில் 200-க்கு 198 மதிப்பெண் எடுத்து அந்தப் பாடத்திலும் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

உங்கள் வங்கிப் பணம் முதலாளிகளால் திருடப்படுகிறது

கடன் கொடுக்காமல் மோசடி செய்திருக்கும் முதலாளிகள் சொந்த வாழ்க்கையில் ஆடம்பரத்தையும் ஊதாரித்தனத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
  • கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் – ரூ 2,673 கோடி
  • வின்சம் டயமண்ட் & ஜூவல்லரி கோ – ரூ 2,660 கோடி
  • எலக்ட்ரோதெர்ம் இந்தியா -  ரூ 2,211 கோடி
  • ஜூம் டெவலப்பர்ஸ் – ரூ 1,810 கோடி
  • ஸ்டெர்லிங் பயோடெக் – ரூ 1,732 கோடி
  • எஸ். குமார்ஸ் – ரூ 1,692 கோடி
  • சூர்ய வினாயக் இண்டஸ்ட்ரீஸ் – ரூ 1,446 கோடி
  • இஸ்பாட் அலாய்ஸ் – ரூ 1,360 கோடி
  • ஃபார்எவர் பிரிசியஸ் ஜூவல்லரி & டயமண்ட்ஸ் ரூ 1,254 கோடி
  • ஸ்டெர்லிங் ஆயில் ரிசோர்சஸ் ரூ 1,197 கோடி
  • வருண் இண்டஸ்ட்ரீஸ் ரூ 1,129 கோடி

இந்திய வங்கிகள் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுத்த 406 வாராக் கடன் கணக்குகளின் பட்டியலை, அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கிறது.
24 வங்கிகளில் உள்ள இந்த 406 வாராக் கடன் கணக்குகளின் மதிப்பு ரூ 70,300 கோடி. இந்த கணக்குகளோடு வெளியிடப்படாத பிற வாராக்கடன் கணக்குகளையும் சேர்த்தால் இந்திய பொதுத்துறை வங்கிகளில் மொத்த வாராக்கடன்களின் மதிப்பு செப்டம்பர் 2013-ல் ரூ 2.36 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இது மார்ச் 2008-ல் ரூ 39,030 கோடியாக இருந்தது.

பணம் பதுக்கலால் அ.தி.மு.க., நிர்வாகிகள், அமைச்சர்கள், விசாரணைக்காக கோடநாடு ?

லோக்சபா தேர்தலில், முறையாக பணி செய்யாதவர்கள், கட்சி சார்பில்
வழங்கப்பட்ட பணத்தை, முறையாக நிர்வாகிகளுக்கு வழங்காதவர்கள், ஆகியோரிடம் விசாரணை நடத்த, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, அமைச்சர்களை அழைத்து, முதல்வர் விசாரித்து வருவதாக, வெளியான தகவல், கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகம், புதுவை உட்பட, 40 லோக்சபா தொகுதிகளிலும், முதன்முறையாக அ.தி.மு.க., தனித்து களம் இறங்கியது. மற்ற கட்சிகளுக்கு முன்பாக, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் அறிக்கை வெளியிட்டு, தேர்தல் பிரசாரத்தை துவக்கியது. இதனால், பிரசாரத்தில் அ.தி.மு.க., முன்னணியில் இருந்தது. அப்போது, அக்கட்சிக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக கட்சியினர் நினைத்தனர்.

வெள்ளி, 9 மே, 2014

கலைஞர்: நீதிமன்ற வரலாற்றில் இதுவரை கண்டும் கேட்டுமிராத வெட்கக்கேடான உண்மை!

உடன்பிறப்பே,

ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் திட்ட மிட்டு, விசாரணை
தாமதப்படுத்தப்பட்ட இன்றைய நிலையிலும் இந்த வழக்கினை தொடர்ந்து மேலும் தாமதப்படுத்த பல்வேறு தந்திரங்களும் உத்திகளும் கையாளப்படுகின்றன. அதிலே ஒன்றுதான் அரசு வழக்கறிஞரே ஒரு மனுவினைத் தாக்கல் செய்தது. அதாவது சென்னையில் உள்ள பாஸ்கரன் என்பவரிடம் கொடுக்கப்பட்ட ஜெயலலிதாவுக்குச் சொந்தமான - 1,116 கிலோ வெள்ளிப் பொருள்களை, பெங்களூர் நீதிமன்றத் துக்குக் கொண்டுவர வேண்டுமென்று ஒரு மனுவினை அரசு வழக்கறிஞர் நீதிபதியிடம் தாக்கல் செய்தார்.வழக்கு முடிகின்ற நேரத்தில், அரசு வழக்கறிஞரே முன்வந்து இவ்வாறு ஒரு மனுவினைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? வழக்கினைத் தொடர்ந்து தாமதப்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு அந்த மனு, அரசு வழக்கறிஞரால் தாக்கல் செய்யப் பட்டது. ஆனால், பேராசிரியர் சார்பில் ஒரு மனு மூலமாக, குறிப்பிட்ட அந்தப் பாஸ்கரன் என்பவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்ற விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே அரசு வழக்கறிஞர் பவானி சிங் தாக்கல் செய்த இந்த மனுவினைத் தள்ளுபடி செய்து, சிறப்பு நீதிபதி 28-2-2014 அன்று தீர்ப்பு அளித்திருக்கிறார்.

144 பிரவீண்குமார் வாரணாசி தொகுதிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக நியமனம் !

தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் பிரவீண் குமார்.
இவரது தலைமையில் தமிழ கத்தில் உள்ள 39 தொகுதிக்கும் அமைதியாக ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா போன்றவற்றை தடுப்பதற்காக தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக 144 தடை உத்தரவு பிறப்பித்தார் இந்நிலையில் வாரணாசி தொகுதிக்கு சிறப்பு பார்வையாளராக பிரவீண் குமார் நியமிக்கப் பட்டுள்ளார். வாரணாசியில் பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான மோடி களம் இறங்கியுள்ளார். இவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் களம் இறக்கப்பட் டுள்ளனர். இதனால் வாரணாசி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், மூன்று கட்சிகளின் தொண்டர்கள் ஆக்கிரமிப்பு மற்றும் தலைவர்கள் பிரச்சாரத்தால் வாரணாசி ஸ்தம்பித்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணிகளை திறமையாக செய்வதற்கு சிரமமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட பிரவீண்குமாரை தலைமை தேர்தல் ஆணையம் நியமித் துள்ளது. nakkheeran.in

மோடி பிரதமராவதை தடுப்பேன்: லாலு !

"பிகார் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியதுபோல், அக்கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளரான நரேந்திர மோடி பிரதமராவதையும் தடுத்து நிறுத்துவேன்' என்று ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, லாலு பிரசாத் வியாழக்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில், "முன்னதாக குருவை தடுத்து நிறுத்தினேன்.
தற்போது அவருடைய சீடரைத் தடுத்து நிறுத்துவேன்' என்று பாஜக தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் பதிவு செய்துள்ளார். dinamani.com

ப.சிதம்பரம் பிரதமர் பதவிக்கு ? தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சூசகத் தகவல் !

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியைக் கைப்பற்ற காய் நகர்த்துவதாகச் சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான ப.சிதம்பரம், ‘இந்தத் தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது’ என்று தேர்தலுக்கு முன்பே திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பினாலும், ‘அதுதானே யதார்த்தம்’ என்று தனது கருத்தில் திடமாக இருந்தார் சிதம்பரம்.
இந்தச் சூழலில் அண்மையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்த சிதம்பரம், ’’தேர்தல் முடிவுகள் வந்த பிறகு காங்கிரஸ் ஆட்சியமைக்கும் சூழல் நிச்சயம் உருவாகும்’’ என்று சொன்னார். ’’தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்ட நீங்கள், மே 16-க்குப் பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்?’’ என்று நிருபர் கேட்ட கேள்விக்கு, ’’அதை எப்படி இப்போதே சொல்லமுடியும்? தேர்தல் முடிவு வந்த பிறகு எனது பேட்டிக்காக நீங்களே கூட அப்பாயின்மெண்ட் கேட்டுக் காத்திருக்கலாம்’’ என்று சொன்னார் சிதம்பரம்.

கலைஞர் டிவி சரத்குமார்: மாறன் சகோதரர்கள் தாக்கி எனது காலில் முறிவு ஏற்பட்டது.

கலைஞர் டிவிக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் நடைபெற்ற ரூ. 200 கோடி மதிப்பிலான நிதிப் பரிவர்த்தனை அந் நிறுவனத்தின் 60 சதவீத பங்குதாரரான தயாளு அம்மாளுக்கு தெரிந்தே நடைபெற்றது என்று கலைஞர் டிவி முன்னாள் மேலாண் இயக்குநர் சரத்குமார் சிபிஐ நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்தார்.
அதன் விவரம்: "2007-ஆம் ஆண்டு டிசம்பரில் மாறன் சகோதரர்களுக்கும் கருணாநிதி குடும்பத்தாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது கலைஞர் டிவி தொடங்கப்பட்டபோது, அதன் நிர்வாக இயக்குநராகச் சேர்ந்தேன். இந் நிலையில், 2008-ஆம் ஆண்டில் மீண்டும் மாறன் சகோதரர்கள், கருணாநிதி குடும்பத்தாருடன் சேர்ந்தனர். அப்போது, என்னை மாறன் சகோதரர்கள் உடல் ரீதியாகத் தாக்கினர். அதில் எனது காலில் முறிவு ஏற்பட்டது.
தயாளு அம்மாள்தான் கலைஞர் டிவியின் 60 சதவீத பங்குதாரர். அவரது அறிவுரையின்படியே நான் முக்கிய முடிவுகளைச் செயல்படுத்தினேன். தயாளு அம்மாள் சார்பில் அவரது கருத்துகளைத்தான் கலைஞர் டிவி நிர்வாக குழு கூட்டங்களில் முன்மொழிந்தேன். நான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.

நியூயார்க்: மேலாடை அணியாமல் பார்க்கில் அமர்ந்து படிக்கும் பெண்கள்


நியூயார்க்: புத்தம் படிப்பதை ஊக்குவிப்பதற்காக பெண்கள் மேலாடை அணியாமல் மக்கள் கூடும் இடங்களில் புத்தகமும் கையுமாக அலைந்ததால் நியூயார்க் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டு வருகிறது. இதை ஊக்கப்படுத்துவதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எழுத்தறிவு கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இவர்கள் நோக்கமே வாசிப்பை செக்சியாக மாற்றுவதுதான். இதற்காக கிளப்பை சேர்ந்த இளம் பெண்கள் மேலாடை அணியாமல் உடலை காண்பித்தபடி நியூயார்க் பூங்காவில் புத்தகமும் கையுமாக அலைந்தனர்.

10 மணிக்கு ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்.. மறு கூட்டலுக்கு இன்றே விண்ணப்பிக்கலாம்!


இன்று காலை 10 மணிக்கு ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்.. மறு கூட்டலுக்கு இன்றே விண்ணப்பிக்கலாம்! சென்னை: ப்ளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. முடிவை அரசு இணையதளங்களிலும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும், படித்த பள்ளிகளிலும் பார்க்கலாம். பிளஸ்-2 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ - மாணவிகள் எழுதினார்கள். அந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் இணையதளம் வழியாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் அவர்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் இன்றே (வெள்ளிக்கிழமை) மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்றே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.

ஜல்லிக்கட்டு தடை வரவேற்போம்; யானைகளை பாதுகாப்போம்!

ஜல்லிக்கட்டு தடை’ முதன்மையாக வரவேற்பதற்குக் காரணம், இதில் ஜாதிய பின்னணி. பிறகு மனிதர்கள் மீது குடல் சரிந்து விழும் அளவிற்கு கொடூர தாக்குதலும் மூன்றாவதாக ஈவு இரக்கமில்லாமல் மாடுகள் துன்புறுத்தலும்.>ஆனால், பார்ப்பன அறிவாளிகள் ஜல்லிக்கட்டை எதிர்ப்பதற்குக் காரணம் ‘மாடுகள்’ துன்புறுத்தப்படுகிறது என்கிற அவர்களின் வழக்கமான ‘மனிதாபிமானம்’ மட்டுமே. சரிதான். மாடுகள் இதில் துன்புறத்தப்படுகிறது. அதை நியாயப்படுத்த ‘பண்பாடு’ என்று காரணம் சொல்லப்படுகிறது. புளுகிராஸை விட உயர்ந்த ‘விலங்காபிமானம்’ கொண்டவர்கள் மாடுகளை ஜல்லிக்கட்டிலிருந்து பாதுகாத்தார்கள். அதனால் மனிதர்களும் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி. இதே பண்பாட்டு ரீதியாக அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாவது இந்தியாவில் யானைகள். கோயில் யானைகள்.
துன்புறுத்தலில் முதன்மையானது, அவை அதன் இயல்புக்கு மாறாக காடுகளிலிருந்து மனிதர்கள் கூட்டமாக வசிக்கும் பகுதிக்கு கொண்டு வந்தது தனிமை படுத்தியது. பிறகு கோயிலில் கால்களில் சங்கிலியிட்டும் ‘பய’பக்தியோடும் துன்புறுத்தல் நடக்கிறது. நெரிசல் மிகுந்த கோயில் தெருக்களில் நடக்க முடியாமல் தவிக்கும் யானை யை பக்தி என்கிற பெயரில் கும்பலமாக மனிதர்கள் சூழ்ந்து கொண்டு ஈவ்டீசிங் செய்வதைப் போன்று, யானையை ஊர்வலமாக அழைத்துச் செல்வதும், தெருக்களில் பிச்சை எடுக்க வைப்பதும், 1 ரூபாயக்கு ஆசிர்வாதம் வாங்குவதும் பேரவலம்.
வான வேடிக்கைகள் வெடிகள் என்று கோயில் விழாக்களின் போது பேரோசையால் யானைகள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை.

வியாழன், 8 மே, 2014

இலவச மடிக்கணினித்திட்டத்தில் கொள்ளை லாபம் பெற்றது மைக்ரோசாப்ட்! Linux is free !

லினக்ஸ் - சுதந்திர மென்பொருள்அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்னணு கழகம் (ELCOT) சுமார் 9.12 இலட்சம் மடிக்கணிகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரியது. ஒரு மடிக்கணினியின் விலை 15,000 ரூபாய் என்று நிர்ணயித்து ஐந்து ஆண்டுகளில் வினியோகிக்கப்பட வேண்டிய 68 இலட்சம் மடிக்கணினிகளுக்கு சுமார் 10,200 கோடி ரூபாய்களை திட்டமதிப்பீடாக அறிவித்தது எல்காட் (ஒரு மடிக்கணினியின் விலை பின்னர் 18,000 ரூபாயாக தொழில்நுட்ப ஏலத்தில் உயர்த்தப்பட்டது தனிக்கதை.)
மடிக்கணினியின் இயங்குதளத்தை பொறுத்தவரை விண்டோஸ் ஸ்டார்ட்டரும் லினக்ஸ் இயங்குதளமும் சேர்த்தே நிறுவப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. உண்மையில் லினக்ஸ் இயங்குதளத்தில் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அனேக சுதந்திர மென்பொருள்கள் உண்டு. அவற்றுள் தமிழ் தட்டச்சு, அறிவியல் பயன்பாடுகள் இருக்கிறது என்பது போக வருடா வருடம் மென்பொருள்களையும் இயங்குதளத்தையும் காசு கொடுத்து புதுப்பிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதில் பாரத் ஆபரேட்டிங் சிஸ்டம் சொல்யூசன்ஸ் (Bharat Operating System Solutions – BOSS)  தமிழ் வழியான லினக்ஸ் தளத்தை மாணவர்களுக்கு எளிமைப்படுத்தி வழங்கும் முயற்சியிலும் ஈடுபட்டது.
இது அரசுத் திட்டம் என்கிற பொழுது எதற்கு தேவையேயில்லாமல் மைக்ரோசாப்ட் இயங்குதளம் நிறுவப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு சுதந்திர மென்பொருள் இயக்கத்திற்கான கூட்டமைப்பு தனது ஆட்சேபனையை பதிவு செய்தது. எத்தனையோ வகையான சுதந்திர மென்பொருட்கள் இருக்கும் பொழுது விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுவது முழுக்க முழுக்க மைக்ரோசாப்டிற்கு சேவை செய்கிற வேலையேயன்றி இது எந்த வகையிலும் இலவச மடிக்கணினித் திட்டமாக இருக்க முடியாது என்பதைத் தெரிவித்திருந்தது.

பாகிஸ்தான்:மனித உரிமையாளர் சிந்தனையாளர் வக்கீல் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் உள்ள முல்தான் என்ற இடத்தை சேர்ந்தவர் ரஷீத் ரகுமான். இவர் வக்கீலாக பணியாற்றி வந்தார். வக்கீல் பணியுடன் கல்லூரியில் சொற்பொழிவாற்றும் செயலிலும் ஈடுபட்டு வந்தார். அவர் மதத்துக்கு எதிராக அடிக்கடி கருத்துக்களை கூறி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் அவர் தனது அலுவலகத்தில் உதவியாளர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த 2 பேர் அவரை சரமாரியாக சுட்டனர். தடுக்க முயன்ற உதவியாளர்களையும் சுட்டார்கள்.
3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அதில் ரஷீத்ரகுமான் உயிரிழந்தார்.   

ஒரு மெக்கானிக் தொழிலாளி பார்வையில் அரசு பேருந்துகள்


பேருந்து டெப்போஎந்த பத்திரிகை?”
”வினவு அப்படின்னு ஒரு இணைய பத்திரிகை இருக்கு. அது சார்பா வந்திருக்கோம்”
“ஓ… இன்னாத்துக்கு ரிப்போர்டு எடுக்கறே?”
பேருந்து டெப்போ
“போக்குவரத்து துறை ஊழியர்களோட வேலை நிலைமை, அந்த துறையோட நிலவரம் பற்றி எங்க வாசகர்களுக்கு ஒரு அறிமுகம் மாதிரி….”
“போட்டோ எடுக்க கூடாது சரியா?”
”சரி, உங்க பேரு?”
“ஹ, பாத்தியா… போட்டோவே வோணாம்னு சொல்றேன், நீ பேரு இன்னான்னு கேட்கிறியே.. சரி, சீனிவாசன்னு வச்சிக்கயேன்”
“நீங்க இங்கே என்ன வேலை செய்யறீங்க?”
“உள்ற பணிமனைன்னு ஒன்னு இருக்கே… அதாம்பா வொர்க் சாப்பு. அதுல மெக்கானிக்கா கீறேன். பேரு போட மாட்டேன்னு சொல்லு, மேல பேசலாம்”
“ஏன் பேரு போட்டா என்ன பிரச்சினையா?”
”உனுக்கு இன்னா தெரியும். இங்கெ அதிகாரிங்க எதுக்குடா மெமோ குடுக்கலாம்னு அலையறானுங்க. இன்னாத்துக்கு வம்பு வச்சிக்கினு?”
“ஏன் உங்களுக்கு யூனியன் எல்லாம் தான் இருக்கே. தொழிலாளர்களுக்கு பிரச்சினைன்னா வரமாட்டாங்களா?”
“த்தூத்தெரிக்க… தப்பா நென்சிக்காத சார். பொறுக்கிங்க சார்.

பிரவீண் குமாரின் 144 தடை உத்தரவு பணம் கொடுப்பதற்கு மிகவும் வசதியாக இருந்தது


தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நாளுக்கு நாள் கேலிக் கூத்தாகி வருகிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த தேர்தல் ஆணையம் தற்போது எதிர்க்கட்சிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பது வெட்டவெளிச்சமாகி வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா முதல் அ.தி.மு.க.வின் கடைசித் தொண்டன் வரை தேர்தல் விதிமீறிலில் ஈடுபட்டது மக்கள் அனைவருக்கும் தெரியும். அதேபோல, வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததும் மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமாருக்கும் தெரியும்.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். ஆனால், எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டோ 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டதே அ.தி.மு.க.வினருக்காகவேதான்.
ஏனென்றால் அவர்களுக்குப் பணம் கொடுப்பதற்கு மிகவும் வசதியாக இருந்தது என்று கூறுகின்றனர்.  கண்ணுக்குள் நூறு களவு இது ஒரு சதியா ? கைக்குள்ளே காசு வழங்க புதுவித தடையா ?

2ஜி வழக்கு: சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார் கனிமொழி!


டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி மகளும், ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி, டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 17 பேரும் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்று அண்மையில் சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, கடந்த திங்கட்கிழமை தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். நீதிபதி அளித்திருந்த 1,718 கேள்விகளுக்கான பதிலை ராசா எழுத்துப்பூர்வமாகவும் வாய்மொழியாகவும் அளித்தார்.  இதை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்தியத் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா, ஆ.ராசாவின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் தங்கள் வாக்குமூலங்களை செவ்வாய், புதன் ஆகிய தினங்களில் பதிவு செய்தனர். இதனிடையே குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பால்வா, நீதிபதி எழுப்பும் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க அனுமதிக்குமாறு கோரினார். அதை தொடர்ந்து, எழுத்துப்பூர்வமாக பால்வா வாக்குமூலம் பதிவு செய்ய நீதிபதி சைனி கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தார். இந்நிலையில், தி.மு.க. ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் தனது வாக்குமூலத்தை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று எழுத்துப்பூர்வமாக பதிவு செய்தனர்.
tamil.oneindia.in/

முன்னாள் பிரதமர்களுக்கு இலவச மின்சாரம் ! மறுவாழ்வு அளிக்கவும் தீர்மானம் ?

பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் வேறு வீட்டுக்கு செல்ல
திட்டமிட்டுள்ளார். பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியேறும் அவர் மோதிலால் நேரு மார்க்கில் உள்ள ஷீலாதீட்சித் வீட்டில் தங்க உள்ளார். தற்போது அந்த வீடு சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் தனது வீட்டின் மின்சாரம் மற்றும் தண்ணீருக்கு கட்டணம் செலுத்த வேண்டியது வராது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னாள் பிரதமர்களுக்கு இந்த கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இதற்காக அரசின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் மன்மோகன்சிங் இலவச மின்சாரம் சலுகையை பெறுகிறார்

சென்னை குண்டுவெடிப்பு தீவிரவாதி என சந்தேகம் ? ரயிலுக்கு அடியில் படுத்து பயணம் செய்தவர் ?

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் திருவனந்தபுரம்
இடையிலான வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல திருவனந்தபுரம் ரயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர், பராமரிப்பு பணிகளுக்காக யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊழியர்கள் ரயிலின் அடிப்பகுதியில் சுத்தம் செய்த போது, சக்கரங்களுக்கு மேல் ஒரு மனித கால் தெரிந்தது.அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், ரயிலுக்கு அடியில் நுழைந்து பார்த்த போது ஒரு வாலிபர் சக்கரங்களுக்கு மேல் உள்ள சிறிய இடைவெளியில் படுத்திருந்தார். அவரை பிடித்து வெளியே கொண்டு வந்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, அவருடைய பெயர் டியோல் பசமட்டாரி (23) என்பதும் அசாம் மாநிலம் சலபாரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. டிக்கெட் பரிசோதகருக்கு பயந்து எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை 225 கிமீ தூரம் ரயிலுக்கு அடியில் படுத்து கொண்டு பயணம் செய்ததாக கூறினார்.

2ஜி வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி இன்று வாக்குமூலம்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய உள்ளார். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 17 பேரும் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்று அண்மையில் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கடந்த திங்கள்கிழமை தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அவரிடம் நீதிபதி அளித்திருந்த 1,718 கேள்விகளுக்கான பதிலை ராசா எழுத்துப்பூர்வமாகவும் வாய்மொழியாகவும் அளித்தார்.

சதீஷ்கார் பெண்கள் தமிழகத்தில் கொத்தடிமைகளாக விற்பனை அதிர்ச்சி


ஜெம்ஸ் அக்ரோ கொத்தடிமைகள்திகாலையில் பரபரப்பாக இயங்கும் தமிழகத்தின் பேருந்து, ரயில் நிலையங்களில் சரிவரத் தூங்காத சிவந்த கண்களோடு அவசரஅவசரமாகத் தாங்கள் வேலை செயுமிடத்திற்குப் பயணிக்கும் அவர்களின் முகங்கள் நம் அனைவருக்கும் பரிச்சயமானவைதான். கிழக்கு, வடகிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பெரிய, சிறிய நகரங்களில் சாலைகள், பாதாளச் சாக்கடைகள், வானுயர் கட்டிடங்கள், ஐந்து நட்சத்திர விடுதிகள், பிரம்மாண்ட மெட்ரோ ரயில், விமான நிலையம் போன்ற கட்டுமானப் பணிகளில் அற்பக்கூலிக்குப் பணியாற்றி வருவதும், இந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் எந்தவிதமான தொழிற்சங்க உரிமையும் இன்றி மிகக் கொடூரமான முறையில் சுரண்டப்பட்டு வருவதும் பார்த்துபார்த்துப் பழகிப் போவிட்ட விசயமாகிவிட்டது. இந்நிலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் புலம்பெயர்ந்த ஆண் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவும், பெண்கள் அதையும் தாண்டி விபச்சாரத்தில் தள்ளப்படும் கொடுமையும் நடந்திருப்பது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Chennai ரயில் குண்டுவெடிப்பு விசாரணையில் போலீசார், துப்பு துலக்க முடியாமல், திணறல்

ரயில் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ள முன் அனுபவம் இல்லாத, சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு போலீசார், துப்பு துலக்க முடியாமல், திணறி வருகின்றனர். அதற்கு மாற்றாக, கோவை உள்ளிட்ட, குண்டுவெடிப்பு வழக்குகளில் சாதித்த போலீஸ் அதிகாரிகளை கொண்டு, தனிப்படை அமைக்க எவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பெங்களூரு - கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், இரட்டை குண்டுகள் வெடித்து, ஏழு நாட்கள் உருண்டோடி விட்டன. இந்த குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வரும், சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு போலீசார், குண்டுவெடிப்பு நடப்பதற்கு, எட்டு நிமிடங்களுக்கு முன், எஸ் 3 பெட்டியில் இருந்து இறங்கி, ஓட்டம் பிடித்த வழுக்கை தலை ஆசாமி, குண்டு வைத்தவராக இருக்கலாம் என சந்தேகப்பட்டு, அவர் தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவு காட்சியை வெளியிட்டனர்.பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை, ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், இந்த வழுக்கை தலை ஆசாமி பற்றிய தடயங்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால், அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்; உறவினரை காண, ரயில் நிலையத்தில், ஓட்டம் பிடித்தார் என தெரிய வந்துள்ளது. இதனால், 'உள்ளதும் போச்சே...' என்ற அசூயையில், சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு போலீசார், விசாரணையை வேறொரு கோணத்திற்கு மாற்றியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு' விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை: காளைகள் துன்புறுத்தலை ஏற்க முடியாது என தீர்ப்பு

புதுடில்லி : தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான, 'ஜல்லிக்கட்டு' போட்டிகளை நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. 'மனிதர்களைப் போலவே, விலங்குகளுக்கும் சில அடிப்படை உரிமைகள் உள்ளன. அவை மீறப்படுவதை ஏற்க முடியாது' என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பாரம்பரிய விளையாட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில், காளைகளை அடக்கும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிரதான இடம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையின் போது, தமிழகத்தின் பல பகுதிகளில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். முடிஞ்சா மாடுகளோடு ஒண்டிக்கு ஒண்டி மோதுங்க, இதுதான் தமிழர்களின் பாரம்பரியம். ஏறு தழுவும் வீர இளைஞனுக்கு இதுதான் சங்க இலக்கியங்கள் தந்த இலக்கணம். ஒரு மாட்டை இருபது முப்பது பேர் துரத்துறது கோழைத்தனம், காட்டுமிறாண்டித்தனங்கள். வீரமாக கலாசார அடையாளங்களாகப் போற்றப்படுவது புதிதல்ல. காலத்துக்கேற்றவாறு நம்மைத்தான் நாம் மாற்றிக் கொள்ளவேண்டும்

முல்லைப் பெரியாறு உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு- கேரளா

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இத்தீர்ப்புக்கு தமிழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது
ஆனால் கேரளாவில் தீர்ப்புக்கு எதிராக முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து கேரள நீர்வளத் துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் கூறியதாவது: உச்சநீதிமன்றம், கேரள மக்களின் பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொள்ளாமல் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்ய உள்ளோம். மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வதற்கு குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். இவ்வாறு பி.ஜே. ஜோசப் தெரிவித்துள்ளார். அமைச்சரவை ஆலோசனை- முதல்வர் உம்மன் சாண்டி இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் உம்மன்சாண்டி, அணையைச் சுற்றி வாழும் பகுதி மக்களின் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் பரிசிலீக்காதது துரதிருஷ்டவசமானது. இதில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் என்றார். /tamil.oneindia.in

ஜெ.,வுடன் ரகசிய உடன்பாடு இல்லையாமே? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Praveen Kumar விளக்கம்

திருச்சி: “முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் எந்தவித ரகசிய உடன்பாடும் இல்லை,” என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள, எட்டு மாவட்ட அதிகாரிகள், அலுவலருக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.  தேர்தல் கமிஷனரின் விளக்கம் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போன்று உள்ளது.

புதன், 7 மே, 2014

கற்பழிப்பு குற்றத்தில் சிக்கிய 848 பாதிரியார்கள் (?) பதவி நீக்கம்: வாடிகன் தகவல்

ஐ.நா. சபைக் கூட்டம் ஜெனீவாவில் நடந்தது. அப்போது சர்வதேச
நாடுகளில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வாடிகன் நகரின் சார்பில் அதன் ஐ.நா. தூதர் ஆர்ச்பிஷப் சில்வானோ தொமாசி கலந்து கொண்டார். அப்போது, கற்பழிப்பு மற்றும் குழந்தைகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்பித்தார்.
அதில், ‘‘கடந்த 10 ஆண்டுகளில் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2572 பேருக்கு சிறிய அளவிலான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன’’ என கூறப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையில் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருடம் வாரியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

முல்லைப்பெரியாறு வழக்கில் கேரள அரசின் சட்டம் செல்லாது : உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.  தலைமை நீதிபதி உள்பட 5 நீதிபதிகள்கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.  உச்சநீதிமன்ற அணையை செயல்படுத்துவதை தவிர்க்க தனி சட்டம் இயற்றியது கேரள அரசு. உத்தரவை செயல்படுத் தக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தது.; கேரள அரசு கொண்டு வந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு புறம்பானது.  நீதிமன்ற தீர்ப்புகளை சட்டம் மூலம் தடுக்க முடியாது.  முல்லை பெரியாறு அணை தொடர்பான கேரள அரசின் சட்டம் செல்லாது என்று அதிரடி தீர்ப்பை வழங்கப்பட்டது.nakkheeran.in

இலங்கையில் பெய்த மீன் மழை: மக்கள் ஆச்சரியம்


கொழும்பு: இலங்கையின் மேற்கு பகுதியில் மீன் மழை பெய்துள்ளது. இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ளது சிலா மாவட்டம். இங்குள்ள சில கிராமங்களில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்போது தொப் என்ற சத்தத்துடன் வீட்டின் கூரைகள் மீது ஏதோவிழுவதை அம்மக்கள் உணர்ந்துள்ளனர். இதையடுத்து வெளியே சென்று பார்த்தபோது வானத்தில் இருந்து மீன்கள் சாரை சாரையாக வந்து விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஆச்சரியத்துடன் மீன்களை சேகரிக்க தொடங்கினர். 50 கிராம் எடையுள்ள ஐந்து முதல் 8 செ.மீ. நீளமுள்ள சிறிய வகை நன்னீர் மீன்கள் என்று தெரியவந்தது. பலத்த காற்றடித்தபோது ஏரிகளில் இருந்த மீனை காற்று எடுத்து வந்து கிராமத்தின் மீது வீசியிருக்கலாம். அதுதான் இந்த மீன் மழைக்கு காரணம் என்று கிராம மக்கள் கருதுகிறார்கள். இலங்கையில் மீன் மழை பொழிவது இது புதிது கிடையாது. 2012ம் ஆண்டில், அந்த நாட்டின் தெற்கு பகுதியில், இரால் மீன்கள் வந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், காற்று சுழன்று அடிக்கும்போது குளங்களில் உள்ள மீன்கள் மட்டுமல்ல சில நேரங்களில் தவளையும் கூட அதனால் கவர்ந்து வரப்படும். மேக கூட்டங்களில் சிக்கி சில நே
tamil.oneindia.in/

கோவா போலீஸுக்கு ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ பதில் ! Tehelka தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கு தொடர்பாக, கோவா போலீஸார் அனுப்பிய கேள்விகளுக்கு ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ தனது பதில்களை அனுப்பியுள்ளார்.
தருண் தேஜ்பால் மீதான் பாலியல் வழக்கு பனாஜியில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம், பெண் பத்திரிக்கையாளரை, ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் லிஃப்டில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது கோவா கிரைம் பிராஞ்ச் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
அந்த ஹோட்டலில் தங்கியிருந்த ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நிரோ மற்றும் அவரது மகளை சந்தித்து விட்டுத் திரும்பும்போது இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, ராபர்ட் டி நீரோவுக்கு கோவா போலீஸ் சில கேள்விகளை அனுப்பியது.
இந்த நிலையில், "கோவா குற்றப் பிரிவு போலீஸார் அனுப்பிய கேள்விகளுக்கான பதில்களை ராபர்ட் டி நீரோ அனுப்பிவிட்டார்.

ஒளிரும் குஜராத் என்ற இந்தப் புதுக்கடவுள், ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர்ஜி போன்ற கார்ப்பேரட் சாமியார்களை ஒத்தது


ன்றைய “இராம ஜென்மபூமி”யும் இன்றைய “ஒளிரும் குஜராத்”தும் வேறு வேறானவையா? இல்லை. இரண்டும் புனைவுகள்தான். முன்னது ஆர்.எஸ்.எஸ்-ன் சொந்த சரக்கு; பின்னது இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் தந்த சரக்கு என்பதுதான் வேறுபாடு. இராமாயணம் என்ற புனைகதையை, ஒரு நம்பிக்கையாக மக்கள் மனதில் நிலைநாட்ட பார்ப்பனர்களுக்கு சில நூறு ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால், ஒளிரும் குஜராத் என்ற புனைசுருட்டை, மிகக் குறுகிய காலத்தில் ஒரு ‘தேசிய’ மூடநம்பிக்கையாக நிலைநிறுத்தி விட்டது, இந்தியத் தரகு முதலாளி வர்க்கம்.
“ஒளிரும் குஜராத்” என்பது ஒரு குறியீடு. மறுகாலனியாக்கத்தின் மூலம் முன்னேற்றம், வளர்ச்சி, சொர்க்கம் என்று ஆளும் வர்க்கம் உருவாக்கும் கருத்தாக்கம்தான் அதன் உள்ளடக்கம். தீவிரமான வர்க்கச் சுரண்டலையும் ஏற்றத் தாழ்வையும் நியாயப்படுத்தும் இந்தக் கருத்தாக்கத்தின் இதயமாக இந்துத்துவம் மறைந்திருக்கிறது.

தமிழக நதிகளை இணைத்தால் ஆண்டுக்கு ரூ.5,000 கோடி வருமானம்!

இந்தியாவில் நீர் ஒதுக்கீடு மற்றும் பெறுதல் ஆகியவற்றில் உள்ள வேற்றுமைகளை, தனிநபர் நீர் கிடைப்பு கணக்கீடுகள் உள்ளடக்குவதில்லை என்பதால், நீர் ஆதாரங்களை அளவிட, புதிய அளவுகோல்களை பயன்படுத்த வேண்டும் என, 'யூனிசெப்' மற்றும், 'புட் அண்டு அக்ரிகல்ச்சர் ஆர்கனைசேஷன்' ஆகியவை குறிப்பிடுகின்றன. இந்த வித்தியாசமே நீர் பெறுவது, பயன்படுத்துவது தொடர்பை தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது.மோசமான நீர் பற்றாக்குறை பிரச்னைகள், விவசாயம், தொழில்துறைகளில் துவங்கி, வீடுகள் வரை பூசல்களை அதிகரிக்கிறது. நீர் வசதியில்லாத போது, சுகாதார வசதிகளை அமைப்பதிலும் பயன்படுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சில குழுக்களுக்கிடையில் பாதுகாப்பான குடிநீர், சுத்தம் ஆகியவற்றுக்கு வழி இல்லாதபோது, அது பொருளாதார, அரசியல், சமூக சமன்பாட்டு சீர் குலைவுகளையும், பாரபட்சங்களையும் உருவாக்குகிறது.   5000 கோடி வருமானம் என்று சொல்லுவதை விட, தினம் அரசு இவ்வளவு நஷ்டப்பட வேண்டும் இந்த திட்டத்தால் என்று சொல்லிப் பாருங்கள். உடனே இந்த திட்டத்தை அரசியல்வாதிகள் கையில் எடுத்துக்கொள்வார்கள். லாபத்தை விட அரசுக்கு நஷ்டம் அடைய வாய்ப்புகள் என்றால் அந்த திட்டத்திற்கு மௌசு அதிகமாகி விடும் இந்தியாவில். 

நைஜீரியாவில் மேலும் 8 பெண்களைக் கடத்திச் சென்ற இஸ்லாமிய தீவிரவாதிகள்

நைஜீரியாவில் தீவிர இஸ்லாமிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று போகோஹரம் என்ற தீவிரவாத அமைப்பு போராடி வருகின்றது. மேற்கத்திய கல்வி தடை என்ற பொருள்படும் அந்த இயக்கத்தின் பெயருக்கு ஏற்ப அங்குள்ள பள்ளிகளைத் தாக்கி ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று வருகின்றனர். கடந்த மாதம் 15-ம் தேதியன்று போர்னோ மாகாணத்தில் உள்ள உறைவிடப் பள்ளியில் இருந்து 276 மாணவிகளை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இவர்களில் 53 மாணவிகள் தப்பிவிட்டனர். மீதமுள்ள 223 பேரை செக்ஸ் அடிமைகளாக ஏலத்தில் விற்கப்போவதாக இந்த இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் செகாவு பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.
இந்தப் பெண்களைக் கண்டுபிடிக்க இயலாத ராணுவத்தினரின் இயலாமை நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள அபுஜா, லாகோஸ் நகரங்களில் எதிர்ப்புகளுக்கு வழி வகுத்துள்ளது. அபுஜாவில் நாளை உலக பொருளாதார கருத்தரங்கம் நடைபெற உள்ள நிலையில் இன்றும் அங்கு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

தாய்மொழியில் துவக்கப்பள்ளி படிப்பு கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடில்லி: 'துவக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு, தாய்மொழி அல்லது வட்டார மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என, மாநில அரசுகள் கட்டாயப்படுத்த முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் நேற்று உத்தரவிட்டுள்ளது.தடை உத்தரவு:
கர்நாடக மாநிலத்தில், நீண்ட காலமாகவே, துவக்கப் பள்ளிகளில், கன்னட மொழியில் தான் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பித்து கொடுக்க வேண்டும் என்ற பிரச்னை நீடித்து வருகிறது. இது தொடர்பாக, மாநில அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு, அந்த மாநில உயர்நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெற்று வரப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த 1994ல், கர்நாடக மாநில அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 'ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கன்னட மொழியில் தான் பாடம் கற்பித்துக் கொடுக்கப்படும். ஆங்கிலம் இரண்டாம் மொழியாக இருக்கும்' என, சில ஆண்டுகளுக்கு முன், கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது.இதை எதிர்த்து, ஆங்கில பள்ளிகள் சங்கத்தினர் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, சில மாதங்களுக்கு முன், இரண்டு நீதிபதிகளை கொண்ட, 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரிக்கப்பட்ட போது, 'இந்த விவகாரத்தில், அடிப்படை சுதந்திரம் தொடர்பான அம்சங்கள் உள்ளதால், இந்த வழக்கை, ஐந்து நீதிபதிகள் கொண்ட, அரசியல் சாசன பெஞ்ச் விசாரிப்பது தான் சரியாக இருக்கும்' என தெரிவித்து, அந்த பெஞ்சிற்கு வழக்கு மாற்றப்பட்டது.அரசியல் சாசன பெஞ்சில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நல்ல தீர்ப்பு. மக்களுக்கு எது தேவையோ அதை தான் அரசுகள் கல்வி சேவையில் அளிக்க வேண்டும்.இதைத்தான் படிக்க வேண்டும் என கட்டாய படுத்த கூடாது.

ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் அனுமதி தேவையில்லை: சி.பி.ஐ.,க்கு ' பூஸ்ட் '

புதுடில்லி:'ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும், உயர் அதிகாரிகளை விசாரிக்க, மத்திய அரசிடம், சி.பி.ஐ., முன் அனுமதி பெற தேவையில்லை. ஊழல் செய்த அதிகாரிகளை விசாரிப்பதில், உயர் அதிகாரி, கீழ்நிலை அதிகாரி என, பாகுபாடு காட்ட வேண்டிய அவசியமில்லை' என்ற, முக்கியமான தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட், பிறப்பித்துள்ளது.
'ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் உயர் அதிகாரிகளை விசாரிப்பதற்கு, அரசின் அனுமதி தேவை என்ற நடைமுறை, வேடிக்கையாக உள்ளது. எனவே, இந்த நடைமுறையை ரத்த செய்ய வேண்டும்' எனக் கோரி, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி மற்றும் பொதுநல அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

செவ்வாய், 6 மே, 2014

BJP : ஆ.ராசா வாக்குமூலத்தின்படி மன்மோகன் சிங்கையும் விசாரிக்க வேண்டும்

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தன்னுடைய அறிக்கையில் கூறியது. இவ்வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தொலை தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா நேற்று நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குமூலப்பதிவு மாலை 4 மணி வரை நீடித்தது.  வாக்குமூலம் பதிவுக்குப்பின், ‘‘ஊடகங்கள், அரசு ஊழியர்கள், நீதிமன்றம் ஆகிய அனைத்தும் தனக்கு எதிராக செயல்பட்டதாக ஆ.ராசா கூறினார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த நீதிபதி, எந்த சூழ்நிலையிலும் நீதிமன்றத்தை ஒருவர் குறைகூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். பின்னர், ‘‘அரசுக்கு நான் எந்த விதமான இழப்பையும் ஏற்படுத்தவில்லை. மத்திய மந்திரிசபை குழு, பிரதமர் ஆகியோரின் ஒப்புதல்கள் பெற்றே 2ஜி உரிமங்கள் வழங்குவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன’’ என்றும் ஆ.ராசா கூறினார்.

கலைஞரை யார் திட்டினாலும் ஊடகங்களின் சலுகை உடனடியாகக் கிடைக்கும்.

தி.மு.க. உடைய வேண்டும், அழிய வேண்டும் என்று ஏன் இத்தனை
பேர் ஆசைப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. தி.மு.க.விற்கு எப்போதெல்லாம் பிரச்சினை வருகிறதோ அப்போதெல்லாம் அந்தக் கட்சி இத்தோடு அழிந்துவிடும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுப்பார்கள். தி.மு.க. எப்போதெல்லாம் பிரச்சினைகளைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் அதை அழிப்பதற்கான சக்திகளை ஒருங்கிணைப்பார்கள்.பிரச்சினைகளே இல்லாதபோது, கலைஞருக்கு வயதாகி விட்டது, அவர் பொறுப்புகளை உதறிவிட்டு ஓய்வெடுக்கலாமே? என்று அக்கறையைப் பொழிவார்கள். “வயோதிகத்தின் காரணமாக கலைஞரின் எந்த அரசியல் செயல்பாடு தடைபட்டது?” என்று கேட்டால் அவர்களிடம் பதில் இருக்காது. அதே நேரம் ஜெயலலிதா ஆண்டின் பெரும்பகுதி கொடநாட்டில் ஓய்வெடுத்தால்கூட ‘ஏன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நிம்மதியாக ஓய்வெடுக்கலாமே’ என்று நமது மதிப்பிற்குரிய விமர்சகர்கள் யாரும் இதுவரை எழுதியதாக சரித்திரம் இல்லை. கலைஞர் ஓய்வெடுக்க வேண்டும் என்பதன் அர்த்தம்; அவர் அரசியலில் இருந்து இல்லாமல் போனால் தி.மு.க. இல்லாமல் போய்விடும் என்கிற அற்பக் கனவைத் தவிர அந்தக் கோரிக்கையில் எந்த நியாயமும் இருந்ததில்லை. மாடுகள் முட்டி கோபுரங்கள் சாய்வதில்லை !

எல்லாக் குறும்படங்களையும் பெரிய படமாக எடுக்க முடியும்’

குறும்படங்கள் பெரிய படங்களாக உருமாறி வெள்ளித்திரையில்
ஹிட்டடிக்கும் காலம் இது. அந்த வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கும் படம் ‘முண்டாசுப்பட்டி’. தனியார் சேனல் ஒன்றில் குறும்படமாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் பலரின் ஆதரவைப் பெற்ற இந்த குறும்படம் இப்போது பெரிய திரைக்கு வருகிறது. போஸ்டர் வடிவமைப்பு, டீஸர், டிரெய்லர் என அனைத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கும் இப்படத்தின் இயக்குநர் ராம் குமாரை சந்தித்தோம்.
'முண்டாசுப்பட்டி' குறும்படத்தினை எப்படி வெள்ளித்திரை படமாக வடிவமைத்தீர்கள்?
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற குறும்பட போட்டிக்காகத் தான் முதலில் இதை இயக்கினேன். அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் நாம் ஏன் இதை பெரிய படமாக எடுக்கக் கூடாது என்று நினைத்தேன். அந்த சமயத்தில் தான் ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் குறும்படத்தில் இருந்து வெள்ளித்திரை படமாக வந்து வெற்றியும் பெற்றது.

இந்திய பொதுத்தேர்தலுக்கு புதிய அடையாளம் கொடுத்த சமூக வலைதளங்கள்

பேஸ்புக், ட்விட்டர், கூகுள் அமெரிக்காவின் சமூக வலைதள
ஜாம்பவான்களான இவை மூன்றும் இந்திய பொதுத்தேர்தலில் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன என்றால் அது மிகையாகாது.
வழக்கமான பிரச்சார முறைகளோடு, சமூக வலைதளங்களில் செய்திகளை வெளியிடுவதிலும், தங்கள் கருத்துகளை பகிர்வதிலும் அரசியல் கட்சிகளும், தேர்தல் களம் காணும் வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் விஞ்சி நிற்கின்றனர்.
சமூக வலைதளங்கள் இந்திய தேர்தலில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மே 16 மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே தெரிய வரும் என்றாலும் இந்தியாவில் இந்த மூன்று தளங்களையும் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
உதாரணத்திற்கு, பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் இந்தியாவில் தற்போது 100 மில்லியன் பேர், ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை கடந்த ஜனவரிக்குப் பிறகு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

அடுத்த குறி ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு? கார் இறக்குமதி: ராமச்சந்திரா பல்கலை. அதிபர் கைது-


சென்னை: வெளிநாட்டு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக தமிழகத்தின் முக்கியப் புள்ளியும் ராமசந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தருமான வெங்கடாசலம் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இது திமுக பொருளாளர் ஸ்டாலின் மகன் உதயநிதியைக் குறி வைத்து மத்திய அரசு நடத்தும் தாக்குதலாகவே கருதப்படுகிறது. காங்கிரசுடன் கூட்டணிக்கு திமுக தலைவர் கருணாநிதி தயாராக இருந்தாலும் அதைத் தீவிரமாக எதிர்த்து கூட்டணி ஏற்பட்டுவிடாமல் தடுத்தவர் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஸ்டாலினின் நெருக்கடியால் மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. வெளியேறிய மறுநாளே ஸ்டாலின், அவர் நண்பர் ராஜா சங்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந் நிலையில் மீண்டும் திமுகவுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் முயன்றது. ஆனால், ஸ்டாலின், காங்கிரசின் மிரட்டலுக்குப் பணிய மாட்டோம் என்று அறிவித்ததோடு கூட்டணியே கிடையாது என்பதில் தீவிரமானார்.

வேலூர் பெல் வணிக வளாகத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு

வேலூரில் உள்ள பெல் நிறுவன வணிக வளாகத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் பெல் நிறுவன வணிக வளாகம் ஒன்று உள்ளது. பள்ளிகள், ரயில் நிலையம் அருகே உள்ள இந்த வளாகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று காலை பணிக்கு வந்தனர். அப்போது அவர்கள் வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதை பார்த்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்து செல்போன் பொருத்தப்பட்ட அந்த வெடிகுண்டை வணிக வளாகத்தில் இருந்து அகற்றினர். வெடிகுண்டை அருகில் உள்ள மைதானத்திற்கு எடுத்துச் சென்று அதை செயல் இழக்கும் பணியில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். இதற்கிடையே 300 மீட்டர் அளவுக்கு தடுப்பு அமைக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த 1ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்த நிலையில் இன்று வேலூர் வணிக வளாகத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை பார்த்து மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
tamil.oneindia.in

சென்னை குண்டுவெடிப்பு சதிகாரனை அஸ்ஸாமில் பார்த்தோம்: குவிந்த போன் அழைப்புகள்

சென்னை குண்டுவெடிப்பு வழக்கில் தமிழக போலீசார் சதிகாரன் ஒருவனின் வீடியோவை வெளியிட்டனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் எண் 9ல் உள்ள சிசிடிவி கேமராவில் அந்த நபரின் உருவம் பதிவானது. குண்டு வெடிப்பதற்கு முன்பு அந்த நபர் கவுதாத்தி எக்ஸ்பிரஸின் எஸ் 3 பெட்டியில் இருந்து இறங்கி பதட்டத்துடன் அவசரமாக செல்வது வீடியோவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோவில் உள்ள நபர் வழுக்கைத் தலையுடன் சுமார் 35 வயது மதிக்கத்தக்கவனாக உள்ளான். அந்த வீடியோவை பார்த்த அஸ்ஸாமைச் சேர்ந்த பலரும் அவனை தங்கள் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் பார்த்துள்ளதாக போன் செய்து தமிழக சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து எஸ்.பி. விஜயகுமாரி தலைமையில் தனிப்படை போலீசார் கவுகாத்தி விரைந்தனர். அங்கு அவர்கள் சதிகாரன் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
tamil.oneindia.in

திமுக தயவில் 10 ஆண்டு பதவி சுகம் அனுபவித்தநன்றி மறந்த காங்கிரஸ்…டி.ஆர்.பாலு பதிலடி


டெல்லி: மத்தியில் பத்து ஆண்டுகள் திமுக தயவில்தான் காங்கிரஸ் ஆட்சி நடத்தியது என்று திமுகவின் மூத்த தலைவரும் தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளருமான டி.ஆர்.பாலு கூறியுள்ளார். திமுக ஒரு நன்றி மறந்த கட்சி என்றும், ஐந்தாண்டுகள் காங்கிரஸ் தயவில்தான் தமிழகத்தில் ஆட்சி நடத்தியது என்றும் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.  திமுக அமைச்சர் டி.ஆர்.பாலு பற்றியும், ஆ.ராஜா பற்றியும் அவர் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்திருந்தார் அதற்கு பதிலடி தரும் விதமாக டி.ஆர்.பாலு கருத்து கூறியுள்ளார். ஜெய்ராம் ரமேஷ், இப்போது என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்? அவரது கருத்துக்கள் தேவையற்றது, அடிப்படை ஆதாரமற்றது. 2009 ம் ஆண்டு திமுக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்த காரணத்தினால்தான் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரமுடிந்தது.

தேவ தாசியாக்கப்பட்ட பெண் : தேவதாசி முறையை எதிர்த்துப் போராடி அறவே ஒழிப்பேன் ! இன்னும் தேவதாசி முறை ஒழியவில்லை

துணிவுடன் திருமணம் செய்து கொண்ட பெண் சூளுரை
ஹூப்ளி.மே5- கர்நாடகா மாநிலத்தில் ஹூப்ளி வட்டத்தில் தேவ தாசியாக்கப்பட்ட பெண் கடும் எதிர்ப்புகளுக்கிடையே துணிச்சலாக திருமணம் செய்து கொண்ட தோடு, தேவதாசி முறையை எதிர்த் துப் போராடி அறவே ஒழிப்பேன் என்று சூளூ ரையை ஏற்றுள்ளார். எச்.சுமங்களா (வயது 35) எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக அவருடைய தாயாராலாயே வற்புறுத்தப் பட்டு தேவதாசியாக ஆக் கப்பட்டார்.
இருப்பினும் ஏழு ஆண்டுகளாக வேணு என்பவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். வேணுவின் தொடர்பால் சுமங்களாவுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

பிரச்சார மேடையில் ராமர் படம்: மீண்டும் சர்ச்சையில் மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத்தில் தேர்தல் பிரச்சாரம்
மேற்கொண்டார் நரேந்திர மோடி. மோடி பிரச்சாரம் செய்த மேடையின் பின்னணியில் ராமர் படம் இருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரச்சாரத்தின் போது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காங்கிரஸ் கட்சிக்கு ராமர் பிறந்த பூமியில் வசிக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்தார்.
ராமர் கோயிலை மீண்டும் கட்டுவது குறித்து நேரடியாக ஏதும் பேசாவில்லை. தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகளை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என மோடி வலியுறுத்தியதோடு ராமர் பிறந்த பூமியில் பிறந்த மக்கள் வாழ்க்கையை இழந்தாலும் வார்த்தை தவற மாட்டார்கள் என மறைமுகமாக ராமரை மேற்கோள்காட்டி பேசினார்.

முன்னாள் அமைச்சர் ராஜாவின் வாக்குமூலம் : பிரதமரின் ஒப்புதல் பெற்றே 2ஜி உரிமங்கள் !

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ! பிரதமரின் ஒப்புதல் பெற்றே 2ஜி உரிமங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டதாக ஆ.ராசா பரபரப்பு வாக்குமூலம்
2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களை, பதிவு செய்யும் பணி துவங்கியுள்ளது. முதல் நபராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் ராஜா, மூன்று மணி நேரத்திற்குள், 1,200 கேள்விகளுக்கு பதில் அளித்தார். '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கின் விசாரணை, டில்லியில் பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது. இந்த வழக்கில், ஏற்கனவே, சி.பி.ஐ., தரப்பில், இரண்டு குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சி.பி.ஐ., அதிகாரிகள் சார்பிலான வாக்குமூலங்களும், பதிவு செய்யப்பட்டு விட்டன. 153 பேர்சி.பி.ஐ., தரப்பு : சாட்சியங்களாக, 153 பேரின் வாக்குமூலங்களும், பதிவு செய்யப்பட்டு விட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், வாக்குமூலம் பதிவு செய்ய துவங்கியபோது, தங்களுக்கு, இன்னும் கால அவகாசம் வேண்டுமென, நீதிபதி ஓ.பி.சைனியிடம், குற்றம் சாட்டப்பட்ட சிலர், கோரிக்கை வைத்தனர்.  ஆக, நேற்று கனிமொழியும் நீதிமன்றத்தில் ஆஜர்.... ஜெயலலிதா, சசிகலாவுக்கு மட்டும் தனி சட்டங்கள்..நமது நாட்டில் நீதி பரிபாலனமும் அசிங்கமாகி விட்டது.

எல்லாவற்றையும் நாங்கள் வெளிப்படையாகச் சொன்னால் ஜெய்ராம் ரமேஷ் தாங்கிக் கொள்ள முடியாது: டி.ஆர்.பாலு

மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், திமுக நன்றி மறந்து செயல் படுகிறது என்று குற்றம்சாட்டினார். மேலும், மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் திமுகவினர் மோசமான நிர்வாகத்தையே அளித்தனர். மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு பேரழிவு சக்தி என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார். இதற்கு திமுகவின் நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்துள்ளார்.  அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ‘’ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் திமுகவுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த கூட்டணி உருவாகியபோது, ஜெய்ராம் ரமேஷ் முக்கிய பங்கு வகிக்கவில்லை. அவர் முக்கியத்துவம் இல்லாமல்தான் இருந்தார். இப்போது திமுகவை அநாவசியமாக விமர்சித்துள்ளார். என்னையும் கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரசுக்கு திமுக செய்ததையும்,  திமுகவுக்கு காங்கிரஸ் செய்ததையும் சீர் தூக்கிப் பார்த்தால் நன்றி மறந்தது திமுக அல்ல. காங்கிரஸ்தான் என்பது புலனாகும். மத்திய அமைச்சரவை பதவியில் நான் ஆக்கப்பூர்வமாகத்தான் செயல்பட்டுள்ளேன். அழிவுப்பூர்வமாகச் செயல்படவில்லை. ஜெய்ராம் ரமேஷ் வாய்க்கு வந்தபடி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் நாங்கள் வெளிப்படையாகச் சொன்னால் அதை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது’’ என்றார் அவர். nakkheeran.in

மோடி: ராகுலை தொந்தரவு செய்ய வரவில்லை ! அவரு பாவங்க ?

ராகுலை தொந்தரவு செய்ய வரவில்லை. அவர் ஏற்கனவே குழப்பம் நிறைந்த மனதுடனேயே உள்ளார்: மோடி பிரசாரம் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று அங்கு இறுதிகட்ட பிரசாரம் நடைபெற்றது. அமேதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பா.ஜனதா வேட்பாளர் ஸ்மிரிதி இரானியை ஆதரித்து நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்த தொகுதியில் போட்டியிடும், ஸ்மிரிதி இரானி யார்? என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் (பிரியங்கா) கேட்டுள்ளார். ஜனநாயகத்தில் இதைப் போன்ற கேள்வியை கேட்க அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு உரிமை இல்லை. இது அகந்தையின் அடையாளம். எப்போது அகந்தை அதிகரிக்கிறதோ, அப்போது மக்கள் தங்கள் புத்தியை இழந்து இதைப் போன்ற கேள்வியை கேட்பார்கள்.

அ.தி.மு.க.,வினரை மிஞ்சிய அதிகாரிகள்

சென்னை: அ.தி.மு.க.,வினரை தொடர்ந்து, செய்தித் துறை அதிகாரிகளும் முதல்வரை, 'அம்மா' என, அழைக்க துவங்கி உள்ளனர்.தலைமைச் செயலக, செய்திப் பிரிவில் இருந்து வெளியிடப்படும் செய்திக் குறிப்பில், முதல்வர் பெயரை குறிப்பிடும்போது, 'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா' என, குறிப்பிடுவர்.நேற்று, தமிழ் அறிஞர், கார்டுவெல் 200ம் ஆண்டு நிறைவு விழாவை, அரசு
விழாவாக கொண்டாட, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளது தொடர்பாக வெளியிடப்பட்ட, செய்திக் குறிப்பில், 'தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா' என்ற வாசகம், மூன்று இடத்தில் இடம் பெற்றுள்ளது. ஜெயலலிதா என்ற பெயரே இடம்பெறவில்லை. அ.தி.மு.க., தொண்டர்கள் போல், செய்திக்குறிப்பு தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது, அதிகாரிகள் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.dinamalar.com முதல்வரே இந்த அரசை குறிப்பிடும்போது எனது அரசு நான் உத்தரவிட்டேன் என் ஆட்சி என நான் எனது என என்னமோ தமிழ்நாட்டையே இவர் விலைக்கு வாங்கிய கொடநாடு போல நினைத்து பேசுகிறார் ஃஅவரை மகிழ்விக்க மாவட்ட ஆட்சியர்களும் பிஆர்ஓக்களும் ஆயிஅதி்முக நிர்வாகிகளாக மாறி நாங்களும் உங்கள் ஆயுட்கால அடிமை கும்புடுகுருமட்டைகளில் ஒருவர்தான் என நிரூபித்துகொண்டு வருகிறார்கள்

திங்கள், 5 மே, 2014

ஷரியா சட்டம் எதிரொலி: புரூனே சுல்தானின் ஓட்டல்களைப் புறக்கணிக்கும் பிரபலங்கள்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான புரூனேயின் தலைவராக விளங்கும் சுல்தான் ஹஸ்ஸனால் பொல்கியா வெளியுலக தாக்கங்களில் இருந்து தங்கள் நாட்டைக் காப்பதாகக் கூறி அங்கு கடுமையான ஷரியா சட்டத்தினை அமலுக்கு கொண்டு வந்துள்ளார். இதில் கல்லெறிந்து கொல்லும் மரணதண்டனை போன்ற கடுமையான சட்டங்களும் உண்டு. சுல்தானின் இந்த நடவடிக்கை இஸ்லாமியப் பெரும்பான்மையினைக் கொண்ட அந்த நாட்டிலேயே சமூக ஊடகங்களில் விமர்சனங்களைத் தோற்றுவித்தது. ஐ.நாவின் மனித உரிமைக் கழகம் உட்பட பல பிரிவுகளில் இருந்து சர்வதேசக் கண்டனங்களையும் இந்த முடிவு பெற்றது.
இதன் தொடர்ச்சியான நடவடிக்கையாக சுல்தானுக்கு சொந்தமான சங்கிலித் தொடர் ஹோட்டல்களான டோர்செஸ்டர் கலெக்சனுடனான தொடர்புகளைப் புறக்கணிக்க பல உலகப் பிரபலங்கள் முடிவு செய்துள்ளனர். இந்த ஹோட்டல் நிறுவனங்கள் எண்ணெய்வளம் மிக்க புரூனே நாட்டின் நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் புரூனே முதலீட்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆடம்பர ஹோட்டல்களின் கிளைகள் லண்டனிலும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவெர்லி ஹில்ஸ் உட்பட உலகின் பல பகுதிகளிலும் செயல்பட்டு வருகின்றன.

vinavu: எல்லா கேஸையும் ஊத்தி மூடணும், செய்வீர்களா ! செய்வீர்களா !


Kerala பாதிரியார் கைது ! சிறுமியை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்தார்

கேரள மாநிலம் திரிசூர் அருகே உள்ள கிராமத்தில் கத்தோலிக்க திருச்சபை பாதிரியாராக பணியாற்றி வருபவர் ராஜூ கொக்கன்(40). இவர் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக அச்சிறுமியின் பெற்றோர் கடந்த மாதம் 25ம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரில் பாதிரியார் தன்னிடம் 3 முறை அலுவலகத்தில் வைத்து தவறாக நடந்து கொண்டதாகவும் மேலும் தன்னை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி தனது போனில் படம் பிடித்து வைத்து மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தலைமறைவாக இருந்த ராஜூவை இன்று நாகர்கோவில் அருகே உள்ள பூதப்பாடி பகுதியில் தமிழக காவல்துறை உதவியுடன் கேரள காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆ.ராசா திட்டவட்டம் : 2ஜியில் பிரதமர் ஒப்புதலுடனே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன !

2ஜி விவகாரத்தில் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை.
தொலைத்தொடர்பு துறையின் ஆலோசனைகள் குறித்து சக அமைச்சர்களுடன் ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டது என்று ஆ.ராசா திட்டவட்டமாக கூறினார். பிரதமர் ஒப்புதலுடனே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன என்றும் விளக்கம் அளித்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், சரத்குமார் ரெட்டி உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 17 பேருக்கும் பல்வேறு விதமான பொது கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மொத்தம் 1718 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்கள் இன்று கோர்ட்டில் பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று நீதிபதி சைனி முன்பு விசாரணை நடந்தது. ராசா உள்ளிட்ட 17 பேரின் எழுத்து மூலமான சாட்சியம் இன்று முதல் கோர்ட்டில் பதிவு செய்யப்படுகிறது. முதல் குற்றவாளியாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஆ.ராசா இன்று கோர்ட்டில் ஆஜர் ஆனார். அவரது எழுத்துப் பூர்வமான சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.  இதுபோல் 17 பேரிடமும் எழுத்துப் பூர்வமான சாட்சியம் பதிவு செய்யப்படுகிறது. கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் இவர்களிடம் கோர்ட்டு விசாரணை நடத்தும். ஆ.ராசா வாக்குமூலம்: ’’2ஜி விவகாரத்தில் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை. தொலைத்தொடர்பு துறையின் ஆலோசனைகள் குறித்து சக அமைச்சர்களுடன் ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டது என்று ஆ.ராசா திட்டவட்டமாக கூறினார். பிரதமர் ஒப்புதலுடனே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன என்றும் விளக்கம் அளித்தார்’’.

Son Epouse பிரெஞ்சு படத்தில் நடித்துள்ள நடிகை ஜானகி


பிரெஞ்சில் வெளிவந்து இப்போது ஐரோப்பா முழுவதுமே கவனம்பெற்று வரும் படம் சோன் ஈபூஸ் (Son Epouse). குறிப்பாக இதில் முக்கியப் பாத்திரம் ஏற்றிருக்கும் ஜானகி என்னும் தமிழ்ப் பெண்ணின் நடிப்பு திரை விமர்சகர்கள் பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது. ‘தமிழ்ப் புதுமுக நடிகை ஜானகியின் நடிப்பாற்றால் வலுவானதாகவும் உணர்ச்சிபூர்வமானதாகவும் வெளிப்பட்டுள்ளது’ என ஹாலிவுட் ரிப்போர்ட்டர் பத்திரிகை பாராட்டியுள்ளது. பிரெஞ்சு ரசிகர்களும் வரவேற்புகளைத் தந்துள்ளனர். கலைகளின் தலைநகரான பாரீசில் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்து விமர்சகர்களின் கவனம் பெற்ற ‘மாலினி 22 பாளையங்கோட்டை” படத்திலும் ஜானகியின் நடிப்பு, பாராட்டை வாங்கிக் குவித்தது. மட்டுமல்ல, இவர் தில்லி தேசிய நாடகப் பள்ளியில் பயின்ற அனுபவம் உள்ளவர். பிரளயன், மங்கை போன்ற நவீன நாடக ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றிவருபவர்.

நடிகர் ஆமீர் வாக்கை காப்பாற்றாததால் மலை மனிதரின் மருமகள் மரணம் ! தனி ஆளாக மலையை குடைந்து பாதை அமைத்தவரின் குடும்பம்


பாட்னா: பீகாரின் மலை மனிதர் என்று அழைக்கப்படும் தசரத் மான்ஜியின் மருமகள் பசந்தி பாலிவுட் நடிகர் ஆமீர் கான் வாக்குறுதி அளித்தது போன்று பணம் கொடுக்காததால் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் இறந்தார். மலையில் பாதை அமைக்க தனி ஆளாக மலையை குடைந்தவர் பீகாரைச் சேர்ந்த தசரத் மான்ஜி. அதனால் அவர் மலை மனிதர் என்று அழைக்கப்படுகிறார். அவரது மகன் பகிரதின் மனைவி பசந்தி தேவி போதிய மருத்துவ வசதி இன்றி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார்.  இது குறித்து பகிரத் கூறுகையில், ஹீரோ ஆமீர் கான் அவர் வாக்குறுதி அளித்தது போன்று பணம் கொடுத்திருந்தால் என் மனைவி இறந்திருக்க மாட்டார். என் மனைவி எங்களின் ஏழ்மையால் இறந்தார். அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குறுதி அளிப்பதோடு நிறுத்திக் கொள்வது போன்று ஆமீரும் செய்துள்ளார். புத்தகயாவைச் சேர்ந்த பீபிள் பர்ஸ்ட் கல்வி அறக்கட்டளை அளித்த பணத்தை வைத்து என் மனைவியின் இறுதிச் சடங்குகளை செய்தோம். அதை செய்யக் கூட என்னிடம் பணம் இல்லை என்றார். கடந்த பிப்ரவரி மாதம் ஆமீர் தான் நடத்தும் டிவி நிகழ்ச்சியான சத்யமேவ ஜெயதேவுக்காக தசரத்தின் கிராமத்திற்கு சென்றவர் பசந்தி மற்றும் பகிரதுக்கு நிதி உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in 

200 பள்ளி மாணவிகளை கடத்தி 12 டாலர் பணத்திற்கு விற்ற தீவிரவாத கும்பல்!

நைஜீரியாவில் கடத்தபட்ட 200 பள்ளி மாணவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பரவியுள்ள அதிர்ச்சி தகவலால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போகோகரம் தீவிரவாத இயக்கத்தினர் கடந்த 2 வாரங்களுக்கு முன் வடகிழக்கு நைஜீரியாவில் குவும்புரா பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் இருந்து 230 மாணவிகளை அதிரடியாக கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட மாணவிகளை தேடும் பணியில் நைஜீரிய போலீஸார் ஈடுபட்டிருந்தும் இரண்டு வாரங்களாக அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.