வெள்ளி, 3 அக்டோபர், 2025

நடிகர் விஜய் கட்சிக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்! இது கட்சியா? அரசு அமைதியாக இருப்பதா?

மின்னம்பலம் =Pandeeswari Gurusamy  : சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.. அரசு அமைதியாக இருப்பதா – நீதிமன்றம் சரமாரி கேள்வி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.. அரசு அமைதியாக இருப்பதா என நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.ஹெச்.தினேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் ‘தவெக தலைவர் விஜய் கரூரில் கலந்து கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என 41 பேர் வரை பலியாகி உள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ள கரூர் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயரை சேர்க்கவில்லை.

கரூர் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை தேவை : தமிழக அரசுக்கு ’முக்கிய’ வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்!

 கலைஞர் செய்திகள்  Pandeeswari Gurusamy   "  கரூரில் நடந்த பெருந்துயர சம்பவத்தில் விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை இன்று (அக்டோபர் 2) வெளியிட்டுள்ளனர்.
கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
இந்த நிலையில் மூன்னாள் நீதியரசர் சந்துரு, ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், எம்.ஜி.தேவசகாயம் ஐஏஎஸ், எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, ஊடகவியலாளர் ‘தி இந்து’ என்.ராம், வழக்குரைஞர் ஹென்றி டிபேன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட கலை இலக்கிய வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

வியாழன், 2 அக்டோபர், 2025

நடிகன் விஜய்க்கு மட்டுமல்ல இன்னும் பல குரூர கல்ட்டு போண்டாக்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும்

May be an image of 1 person
May be an image of 1 person and text that says 'alamy ny ala alamy a alamy al Image Image1D:CR9K7H ID: CR9K7H www. lamy www.alamy. www.alamy.com com'
May be an image of 1 person and text that says 'THE THEUFO UFO CULT LEADERS TELL THEIR STORY IN THEIR OWN WORDS INSIDE HEAVEN'S GATE BRAD STEIGER AND HAYDEN HEWES'

 ராதா மனோகர் : நடிகர் விஜயின் பின்னால் தன்னை மறந்து ஒரு கூட்டம் உருவாகி இருப்பது வெறும் தற்செயலான நிகழ்வல்ல.
மக்களை அரசியல் பொதுவெளியில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையை பலரும் திட்டமிட்டு செய்ததன் விளைவுதான் இது என்று தோன்றுகிறது.
ஒரு நூற்றாண்டாக எத்தனையோ சமூக அரசியல் பொருளாதார சிக்கல்களை தமிழகம் சந்தித்திருக்கிறது.
அவற்றில் ஏராளமான விமர்சனங்கள் உண்டு. 
அவை நேற்றும் உண்டு இன்றும் உண்டு நாளையும் உண்டு.
எல்லா பிரச்சனைகளுக்கும் ஏதோவொரு அடிப்படை காரணம் இருக்கும் . 
அவை பல வேளைகளில்  நியாயமாக கூட இருக்கும்.
நாம் என்னதான் கருத்துவேறுபாடுகள் கொண்டிருந்தாலும்,
எவ்வளவுதான் முரண்பாடுகள் கோபங்கள் வேதனைகள் சண்டைகள் இருந்தாலும்,
ஏதோவொரு கட்டத்தில் கருத்துக்களின் அடிப்படையில் தீர்வுகளை தமிழகம் கண்டிருக்கிறது.

நடிகன் விஜயின் தவெக அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்! அந்த 41 உயிர்களுக்கும் நீதி கிடைக்காது?

மின்னம்பலம் -Kavi : கரூர் சோகம் இன்னும் நீங்காத நிலையில், பனையூர் தவெக அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயரம் மக்கள் மனதில் நீங்கா வடுவாக உள்ளது. கரூரில் குழந்தைகள், உறவினர்களை இழந்து மக்கள் தவிக்கின்றனர்.
கரூர் பெருந்துயரம் அரசியல் அரங்கில் விவாத பொருளாக மாறி பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

5 தென் மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.16,053 கோடி நிதி விடுவிப்பு- உ.பி.க்கு மட்டும் ரூ. 18,227 கோடி

 மின்னம்பலம் -Mathi  : தமிழ்நாட்டுக்கு வரிப் பகிர்வாக மத்திய அரசு ரூ. 4,144 கோடியை விடுத்துள்ளது. ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மிக அதிகபட்சமாக ரூ ரூ.18,227 கோடியும், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பீகாருக்கு ரூ.10,219 கோடியும் மத்திய அரசு விடுவித்துள்ளது.
மத்திய அரசு, பண்டிகை காலங்களை முன்னிட்டும் மாநில மூலதனச் செலவுகளை விரைவுபடுத்தவும் திட்டங்களுக்கு நிதி அளிக்கவும் மொத்தம் ரூ.1,01,603 கோடி நிதியை விடுவித்துள்ளது.
இதில் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.4,144 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மிக அதிகமாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு தமிழ்நாட்டைப் போல 4 மடங்குக்கும் அதிகமாக ரூ.18,227 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
2-வதாக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் பீகார் மாநிலத்துக்கு ரூ.10, 219 கோடியை விடுவித்துள்ளது.
தென்னிந்திய மாநிலங்களான
ஆந்திரா- ரூ. 4,112 கோடி
தெலுங்கானா- ரூ. 2,136 கோடி
கேரளா – ரூ.1,956 கோடி
கர்நாடகா- ரூ.3,705 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.
தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.16,053 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் எனும் ஒரு மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி கூட ஒட்டுமொத்த தென்னிந்திய மாநிலங்களுக்கு ஒதுக்கப்படவில்லை.

புதன், 1 அக்டோபர், 2025

பெரியார் அம்பேத்கரின் சாயலை எங்கும் காணமுடியாத கும்பல்!

May be an illustration of 1 person and text

Loganayaki Lona :  கரூர் துயர சம்பவத்துக்கு பின் கடந்த சிலநாட்களில் தமிழ்நாட்டில்  அறமென்பதே புரியாத  ,எதற்கும் கட்டுப்படாத புதுவித இளைஞர்களை,பெண்களைக் கண்டு அதிர்ச்சியாக உள்ளது.பரிதாபமாக உள்ளது
*பள்ளிச்சிறுவர்கள் மஞ்சள் சிவப்பு துண்டுகளை கழுத்தில் தலையில் கட்டிக்கொண்டு விஜய்ய சி.எம் ஆக்குவோம் என்கின்றனர்.
*இளைஞர்கள் விஜய் வாகனத்தினிடையே சாலை விதிக்கு புறம்பாக போய் அவர் முன்பாகவே விபத்தில் , ரசிக போதையில் சரிந்து விழுகின்றனர் 
*இஸ்லாமிய பெண் ஒருவர்  ஸ்டாலின்களை ஒழித்து விடுவார் எங்க தளபதி என்கிறார்.
அவர்க்கு முதல்ல ஒரிஜினல் ஸ்டாலினை  தெரியவில்லை .ஸ்டாலின்கள் ஒழிந்தால் பாசிசத்திடம் சிக்கப்போவதில் முதல்வரிசையில் இந்திய இஸ்லாமிய மக்கள் உள்ளனர் எனும் பேராபத்தும் தெரியவில்லை.
*5 நிமிசத்துல செருப்பு எறிஞ்சு 5 பேர் மேல  விழுந்தது ஒரு கேடு கெட்ட நிலை ,அதை தளபதின்னா அப்டித்தான்னு சொல்லும் இளைஞன்.
*பெண்கள் விஜய்யின்  தரிசனம் கிடைத்தது என்கின்றனர்.
*நெருக்கடியான கூட்டத்தில் குத்து நடனமாடும் பெண்கள் அந்தகுழுவில் abuse செய்யப்பட்டு ,திரும்ப அதே போல் நடனமாட வரும் காட்சியில் நான் அதிர்ச்சியில் உறையும் போதே இன்னொரு பெண் விஜய்ணா பார்த்தா போதும் .women safety தருவார் என்கிறார்.

மக்கள் உதவி கேட்டே விஜய் மீது செருப்பை வீசினார்கள்! ஆதாரத்துடன் வந்த செந்தில் பாலாஜி

 tamil.oneindia.com  -Vigneshkumar  : கரூர்: கரூரில் கடந்த வாரம் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். செந்தில் பாலாஜி குறித்துப் பேச ஆரம்பித்தவுடன் தான் செருப்பு வீசப்பட்டதாகவும்,
 அதன் பிறகே குழப்பம் ஏற்பட்டதாகவும் தவெகவினர் கூறி வரும் நிலையில், அதை செந்தில் பாலாஜி ஆதாரத்தோடு மறுத்துள்ளார். 
தன்னை பற்றி கடைசி சில நிமிடங்கள் மட்டுமே விஜய் பேசியதாகவும் அதற்கு முன்பு விஜய் பேச ஆரம்பித்த 3வது நிமிடத்திலேயே செருப்பு வீசப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

2 சாக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 1/2 மாத குழந்தையும் விளக்கமறியலில்! பிணை வழங்கவும் மறுப்பு! இலங்கை

May be an image of 1 person, chocolate bar and text that says 'THE LEADER WELEADTHENATION WE WELEAD THE NATION Woman remanded with two and a half month old baby over theft of two chocolates w www.lankaleader.Ik w'

 Mathdusha  : மாத்தறையில் 2 சொக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 1/2 மாத குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
26 வயதுடைய பெண்ணும் 2 1/2 மாதக் குழந்தையும் நேற்று கந்தர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாத்தறை தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் சமீர மீகந்தவத்த, நீண்ட வாதங்களை முன்வைத்தார். இளம் தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டால், அது குழந்தைக்கு அநீதியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

காஸா போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச திட்டங்கள்!

 பி பி சி தமிழ் : காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், ஹமாஸ் இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வ பதிலை வெளியிடவில்லை.
அமெரிக்காவால் வழங்கப்பட்ட இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
1. அமைதியான, அண்டை பகுதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத, பயங்கரவாதத்திலிருந்து விடுபட்ட பகுதியாக காஸா இருக்கும்.
2. அதிகளவிலான துன்பங்களால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு பயனளிக்கும் வகையில் காஸா மீட்டுருவாக்கம் செய்யப்படும்.

இந்தியா சர்க்கரை நோயின் தலைநகரம்?

May be a graphic of map and text that says 'EAST, NE MORE AT RISK % OF 5-9 YR OLDS WITH HIGH TRIGLYCERIDES 67.1 57.1 50.2 46.4 40.9 37.1 35.8 35.1 34.1 33.8 West Bengal Assam Jammu & Kashmir Tripura Bihar Uttar Pradesh Madhya Pradesh Uttarakhand Himachal Pradesh Delhi Jharkhand Gujarat Odisha Andhra Pradesh Chhattisgarh Punjab Rajasthan Haryana Karnataka Telangana Tamil Nadu Maharashtra Kerala INDIA 28.4 27.6 27.5 25.5 25.3 24.4 23.3 23.3 22.1 21.9 20.4 19.1 16.6 RECL 34'

Vadivu TJ :  எகனாமிக் டைம்ஸ் வழியாக TOI இல் வெளியிடப்பட்ட இந்தத் தரவுக்கான அசல் ஆய்வறிக்கை!
இந்தியாவில்  அதிக ட்ரைகிளிசரைடு அளவுகளைக் கொண்ட 05 முதல் 09 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொகை குறிப்பாக அசாம் மேற்கு வங்கம் போன்ற கிழக்கு இந்தியாவில் மிக மிக அதிகமாக இருக்கிறது 
ஆக குறைந்த அளவில் உள்ள கேரளாவின் புள்ளி விபரம் கூட  அதிர்ச்சியளிக்கிறது.
தெளிவுபடுத்துவதற்காக: ட்ரைகிளிசரைடு அளவுகள் இறைச்சி/மீன்/நெய்/எண்ணெய்கள் போன்ற ஆரோக்கியமான உணவு முறைகளை கைவிட்  :  டு அதிகமான கார்போஹைட்ரேட் (சர்க்கரை) உண்ணுதல்,
போதியளவு உடல் பயிற்சி இன்மை, அதிக நேரம் உட்க்கார்ந்து இருத்தல் போன்ற காரணங்களால் 
இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது 
மேலும்  சீரான உணவுக்கு அளவான  கொழுப்பு முக்கியம்.
ஆனால் சர்க்கரையுடன் கூடிய கொழுப்பை உட்கொள்வது, சிவப்பு இறைச்சி, விலங்கு கொழுப்புகளை அதிகமாக உட்கொள்வது, எண்ணெய்களில் எந்த உணவையும் ஆழமாக வறுப்பது மற்றும் எண்ணெய்களை மீண்டும் சூடாக்குவது ஆகியவையும் தவறான பழக்கமாகும்.

செவ்வாய், 30 செப்டம்பர், 2025

நடிகர் விஜய் சவால்? முடிந்தால் கைது செய்யுங்கள் பார்க்கலாம்!

May be an image of 2 people and child

 ராதா மனோகர் : மனிதர்களே மனிதர்களே உங்கள் உயிரை விடவா  அந்த நடிகன் உங்களுக்கு பெரிதாகி விட்டான்?
மனித வாழ்வின் அருமை உங்களுக்கு தெரியாதா?
எவ்வளவோ அதிசயங்களை நிகழ்த்த வேண்டிய பெரிய எதிர்காலம் உங்கள் கண் முன்னே இருக்கையில் 
பதர்களுக்கு நிகரான நடிகன் பின்னால் சென்று உயிரை கொடுக்க வேண்டிய தேவை என்ன?



அவனுக்கு உயிரை கொடுத்தீர்களே . அவன் உங்கள் பெயரை கூட இதுவரை உச்சரிக்க வில்லையே .
இதை கூடவா  உணர மாட்டீர்கள்?
உயிரை பறி கொடுத்த அன்புள்ளங்களே  மன்னித்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு மனித வாழ்வியலை கற்று கொடுக்காமல் விட்டதற்கு நாங்களும் ஒருவகையில் பொறுப்பேற்க வேண்டியதுதான்.
மனிதர்களை  வெறும் கும்பல்களாக்கிய பாசிட்டுகள் வெறும் ஒரு நடிகன் உருவத்தில் கூட வரக்கூடும் என்ற பாடத்தை நாமும் கூட இப்போதுதான் படித்திருக்கிறோம் 

கரூர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி-சீனா வெளியுறவு அமைச்சகம் இரங்கல்

u Feihong  : Deeply saddened by the tragic incident in Karur, Tamil Nadu.
Our heartfelt condolences to the families who have lost their loved ones.
Wishing strength and healing to all those affected.    மின்னம்பலம் ;தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்துக்கு சீனா வெளியுறவு அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியா குன் கூறுகையில், “இச்சம்பவத்தை நாங்கள் கவனித்துள்ளோம். உயிரிழந்தோருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கின்றோம். , உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்து கொள்கின்றோம் என்றார்.
முன்னதாக இந்தியாவுக்கான சீனத தூதரகம் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தது.

தண்ணீரில் எரியும் அடுப்பு நடைமுறையில் சாத்தியமா? - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம்

 hindutamil.in  : சென்னை: தண்ணீரை மட்டும் பயன்படுத்தி அடுப்பு எரிவது சாத்தியமா என்பது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. 
தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்டு எரியும் அடுப்பை திருப்பூர் தனியார் நிறுவனம் கண்டு பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 தண்ணீரை மட்டும் மூலப்பொருளாகக் கொண்டு அடுப்பு எரிவது சாத்தியமா என்பது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முதுநிலை விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெட்ரோலுக்குப் பதிலாக ஹைட்ரஜனில் இயங்கும் கார், ரயில்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

திங்கள், 29 செப்டம்பர், 2025

விஜய்யின் பின்னால் "ரசிகர்கள்" அல்ல! அது ஒரு கட்டுப்பாடற்ற கும்பல்! Bouncers and Bomblast!

May be an image of 6 people and text that says 'Bouncers and bombast: How Vijay ruins himself STORYBOARD groundin that imadehimar instants kept ARUN RAM urnoutisa IGRwenttnt literally TVK'3Madu- security vilay leading politician gathering, however when cellledm nota ខ workplace. Ve knaw iay Te public peaker chiel minister Stalin repeatedh was ON TVK president Vijay flanked by bouncers Madurai event following like political, does could wasa rthwhile podiums masses. convert decade. films oromise someof which later, he cyc dter election. -arun.ramilimesofindia.com easuner found ADMK That probably gave hlm political toi_arunram POKER FACE which era? mages. Ideology guides politics" KSTALIN, CHIEF MINISTER'

 Vasu Sumathi  இதை Times of India அரசியல் பிரிவு ஆசிரியர் திரு. அருண் ராம் அவர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதியன்று எழுதியது. சுருக்கமாக அதன் சாராம்சம் தமிழில்...
அருண் ராம்: "ஒருமுறை, விஜய் என்னை பேட்டிக்கு அழைத்தபோது, நான் அவரை எங்கள் அலுவலகத்திற்கு அழைத்தேன். 
எனக்கு  அவரது நெருங்கிய வட்டத்திலிருந்த ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. "அவர் உங்கள் பணியிடத்திற்கு வந்தால், 
போலீஸ் தடியடி வரை போகும், அதெல்லாம் தேவையா" என்று கேட்டார். 
அப்போது அவரிடம் பேசியதில், விஜய் அணியினர் பின்வரும் கருத்தை எனக்கு ஆணி அடித்தார் போல் பதிவு செய்தார்கள்.  
விஜய்யின் பின்னால் உள்ள கூட்டம் "ரசிகர்கள்" அல்ல. 
அது ஒரு கட்டுப்பாடற்ற கும்பல்.
 ஆனாலும், பல மணி நேரம் கூட்டத்தை திரட்டுவதன் மூலமும், கேலரிக்காக விளையாடுவதன் மூலமும், கும்பல் வெறியை (mob frenzy) அரசியல் மூலதனமாக கருதுவதன் மூலமும் விஜய் அதை தெரிந்தேதான் செயல்படுத்துகிறார்..

அமித்ஷாவிடம் பேச மறுத்த விஜய்.. ராகுல் கேட்ட ‘சந்தேக’ கேள்வியால் ஷாக்!

Digital Thinnai : அப்செட்டில் விஜய் டீம் ...CBI க்கு போகும் கரூர் கேஸ் ? | TVK Vijay KarurStampade

 மின்னம்பலம் : கரூர் துயரத்தில் இருந்து எழுவதற்குள் பரபரன்னு அரசியல் நிகழ்வுகள் நடக்குதே..
ஆமாய்யா.. கரூர் முழுவதும் மரண ஓலம் கேட்டப்ப அங்க தங்காமல், அந்த மக்களை பார்க்காமல் சென்னைக்கு விஜய் வந்தது ரொம்பவே விமர்சிக்கப்படுது..
இன்னொரு பக்கம், கரூர் சம்பவத்தால ரொம்பவே அப்செட் ஆகியிருப்பது விஜய் மட்டுமல்ல அவரோட அட்வைசர் ஜான் ஆரோக்கியசாமியும்தானாம்.. சனிக்கிழமை நைட் போனை ஸ்விட்ச் ஆப் செஞ்சவரு நேற்று காலையிலதான் ஆன் செஞ்சாரு.. இப்ப பலரிடமும் ஜான் பேசினாலும், அவரால அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல்தான் இருக்கிறாராம்..

Flamingo பிளமிங்கோ பறைவைகளும் மன்னார் காற்றாலையும்!

May be an image of windmill

 Praveen Naguleshwaran  :   இலங்கையின் காற்றாலைத்திட்டம்
காற்றாலை அமைப்பு தொடர்பாக தற்காலத்தில் பலரும் பலதை பேசுகின்றனர் . 
காற்றாலைமூலம் மின்உற்பத்தி உண்மையில் ஒரு நல்ல திட்டம்தான்.
 தொளிநுட்ப வழர்ச்சி நாட்டின் வழர்ச்சி பற்றி மாத்திரம் நினைக்கும் ஒருவனாக நான் இருந்தால் அதனை 100% நல்ல விடையம் என்பேன் .
ஆனால் மன்னார் என்பது பறவைகளின் கூடாரம் என கூறக்கூடிய தனித்துவமான ஒரு பிரதேசம். 
குறிப்பாக வெளிநாட்டு பறவை இனமான Flamingo (பிளமிங்கோ) மன்னாரில்தான் குறிப்பிட்ட காலத்திற்கு வந்துசெல்லும் ஒன்றாக உள்ளது.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

HCL சிவ் நாடார் வீட்டுக்காவலில் உள்ளாரா? பாலசுப்பிரமணிய ஆதித்தன் கட்டுரை

May be an image of 3 people and people smiling

 Balasubramania Adityan T  :  குல தெய்வ வழிபாட்டை நிறுத்தினால் எப்பேர்பட்ட கொம்பனாலும் தப்பிக்க இயலாது.
குல தெய்வ காயாமொழி முப்பிடாரி அம்மனின் கிடா வெட்டை நிறுத்திய எங்கள் முன்னோர்களின் 90 வருட பிளாஷ்பேக் ஸ்டோரி.
குல தெய்வத்திற்கு கிடா வெட்டக் கூடாது என்று யார் சொல்வதையாவது கேட்டு ஆகமத்தை மீறி நிறுத்தினால் அதன்  விளைவு என்ன ஆகும் என்பதை அறிவீர்களா?
காயாமொழி ஆதித்த நாடன் - 1500 ஆண்டு
தையல்பாக ஆதித்த நாடன் - 1782 ஆண்டு
அறுபத்து மூவர் ஆதித்த நாடன் மகன்
சுப்ரமணிய ஆதித்த நாடன்.
சுப்ரமணிய ஆதித்தனது மகன் சிவந்தி ஆதித்தன் நாடார் B.A,B.L.
நாடார் சமுதாயத்தின் முதல் வழக்குரைஞர்.
இவர்களின் மகன் எனது அப்பா S.தையல்பாக ஆதித்தன் என்கிற S.T.ஆதித்தன் B.A,B.L - 1904 ஆண்டு 

மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் இல்லாத தலைவர்கள் ரசிகர்களையும் குண்டர்களையுமே உருவாக்குவார்கள்

Rajasangeethan  : நடிகர் விஜய் கட்சியைத் தொடங்கி காலத்தில் அவரும் உத்தி வகுக்கும் ஜான் ஆரோக்கியசாமியும் புஸ்ஸி ஆனந்தும் பல ஊடகவியலாளர்களை சந்தித்துக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது.
சந்திப்புகளில் கலந்துகொள்ளும் ஊடகவியலாளர்களிடம், கட்சியில் இருக்கும் அனைவரும் ரசிக மனப்பான்மையிலும் விசிலடிச்சான் குஞ்சுகளாகவும் இருப்பதாகவும் அவர்களை அரசியல்படுத்தி அமைப்பாக்குவதற்கான யோசனைகளும் உதவிகளும் கேட்கப்பட்டது. 
தமிழ்நாடு அரசியலுக்குள் ஒரு Untested Crowd-ஐ நடிகர் விஜய் கொண்டு வந்தார். தேர்தலோ அரசியலோ பேசாமல் 'ஓடுகிற பாம்பையும் மிதிக்கும்' சாகச வயதுகளில் இருந்தவர்கள்தான் அதில் 95 சதவிகித பேர். அரசியலையே பேச விரும்பாத அவர்கள், அரசியல் களத்துக்குள் விஜய் மூலம் வந்தது நல்ல விஷயம்தான். அரசியலே அறியாமல் ஒரு சமூகத்தின் பெருங்கூட்டம் இருப்பது ஆபத்து. 

விஜய் கைது? ஸ்டாலின் 'ஸ்டிராங்' முடிவு! சாவில் 'டெல்லி சதி'- கைதுக்கு உரிய எல்லா காரணங்களுக்கும் உள்ளன

 மின்னம்பலம் - Mathi..: கரூரில் நேற்று 40 பேரை பலி கொண்ட நடிகர் விஜய்யின் தவெக பிரசார கூட்டத்தின் கொடுந்துயரம்தான் இன்னைக்கு எல்லா இடத்திலும் பேசப்பட்டு வருது.
டெல்லியில் இருந்து தொடங்குறேன்.. கரூர் சம்பவம் தெரிஞ்ச உடனே ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மோடி, அமித்ஷா, ராகுல், கார்கே என எல்லோரும் வேதனைப்பட்டு அறிக்கை விட்டாங்க..
அதேநேரத்தில் டெல்லி இரண்டு விஷயத்தை செஞ்சுருக்கு..
அதென்னப்பா ரெண்டு விஷயம்?
டெல்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டு பேசி நிலவரத்தை கேட்டிருக்காங்க.. சிஎம்-ன் நடவடிக்கைகளை பற்றி விசாரிச்சிருக்காங்க.. அதுக்கு அப்புறமா, கரூர் சம்பவம் பற்றி ரிப்போர்ட் அனுப்புங்கன்னு ஆர்டர் போட்டிருக்காங்க..
இதே மாதிரி ஆளுநர் மாளிகைக்கும் டெல்லி போனடிச்சிருக்கு.. ஆளுநர் ரவியிடமும் கரூர் சம்பவம் பற்றி ஒரு அறிக்கை அனுப்புங்கன்னு டெல்லி கேட்க, அவரும் தமிழக அரசிடம் இப்ப அறிக்கை கேட்டிருக்கார்.

நடிகர் விஜய் தரப்பை காப்பாற்ற துடிக்கும் பலர் - Details

 Kathiravan Rathinavel : தந்த டீவி - News templates with time
Date: 27.09.2025
07.45 PM - மாஸ் entry கொடுத்த விஜய்
07.49 PM - தொண்டர்கள் அடுத்தடுத்து மயக்கம், பேச்சை நிறுத்திய விஜய்
07.58 PM - யாரும் எதிர்பாராத பேரதர்ச்சி, குவியும் ஆம்புலன்ஸ்கள்
08.13 PM - கைமீறிய நிலை? துடிக்கும் உயிர்கள்?
08.15 PM - மூச்சுத்திணறலால் 30 க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
08.20 PM - முதல்வர் போட்ட உத்தரவு
08.24 PM - துடிக்கும் உயிர்கள்.. நிலவரம் சொல்லும்போதே நடுங்கிய ரிப்போர்ட்டர்
08.30 PM - விஜய் பிரசாரத்தில் நெரிசல் - 10 பேர் உயிரிழப்பு - “3 குழந்தைகள் உட்பட 10 பேர்  உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்''
08.35 PM - குழந்தைகள் உயிரை காக்க தூக்கி ஓடும் போலீசார் - மொத்த தமிழகமும் பதற்றத்தில்...
08.37 PM - கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விவகாரம் மருத்துவமனை விரைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 
08.47 PM - சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கரூருக்கு விரைய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
கரூர் அரசு மருத்துவமனையை தயார் நிலையில் வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு