ஞாயிறு, 7 ஜூன், 2026

மு.க.ஸ்டாலின் : மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் இந்த ஆட்சி.

 hindutamil.in -தமிழினி  : சென்னை: மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் இன்றைக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற, செய்யூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பனையூர் பாபு தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றும் போது, '' திமுகவைப் பொறுத்தவரைக்கும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் வேலை அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் உழைப்பதற்குத் தயாராக நாங்கள் இருக்கிறோம், "நாங்கள் உங்களுக்குத் துணை நிற்கிறோம்" என்று நமக்கு இன்றைக்குத் துணையாக வந்து சேர்ந்திருக்கும் பாபுவை வரவேற்கிறேன்.

டெல்லியை கதறவிடும் கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி - சவால் விடும் CJP- பின்னண

கரப்பான் பூச்சி - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு லண்டனில் சாத்துப்படி

 தினமலர் : புதுடில்லி: பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பிர்க்பெக் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, நம் உச்ச நீதிமன்ற த லைமை நீதிபதியிடம், அவரது கரப்பான்பூச்சி கருத்து குறித்து சிலர் கேள்வி கேட்டதால் சர்ச்சை வெடித்தது.
கடும் கண்டனம் இந்த சம்பவத்திற்கு லண்டனில் உள்ள இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி, ஒரு வழக்கில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் வாய்மொழியாக சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.
அப்போது அவர், 'வேலையில்லாத இளைஞர்கள் சிலர், சமூக வலைதளங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். கரப்பான்பூச்சிகள் போல சமூகத்தை சீரழிக்கின்றனர்' என, விமர்சித்து இருந்தார்.

சிங்கள மொழி திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்ததுதான் விரிவான ஆய்வறிக்கை

சிங்களரும் தமிழரும் ஒன்றே இலங்கை சிங்கள மக்களின் மரபணு கூறுகள்  வரலாறு
May be a doodle of text that says "சிங்கள மக்களின் மரபணு வரலாறு GENE GENETICHISTORYOFTHESINHIALESE GENETICHISTORYOF TIC HISTORY OF SINHALESE का Z ጣ த ர ma 斗 ಇ यी 99 தாம் கி எ"
 Rajasekar Pandurangan :  சிங்களரும் தமிழரும் ஒன்றே
இலங்கை சிங்கள மக்களின் மரபணு வரலாறு: புதிய ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் என்ன?
இலங்கைத் தீவானது பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் இனங்களின் சங்கமமாகத்  திகழ்ந்து வருகிறது.
 இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இந்த அழகிய தீவு, 
வரலாற்றின் பக்கங்களில் எப்போதும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 
இலங்கையின் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் சிங்கள மக்கள் ஆவர். இவர்களின் தோற்றம், வரலாறு மற்றும் இவர்களுக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து பல நூற்றாண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் சிங்களவர்களின் தோற்றத்தை வட இந்தியாவுடன் இணைக்கின்றன. அதேவேளையில், புவியியல் ரீதியாக அவர்கள் தென் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இந்த இரண்டு கருத்துக்களில் எது சரியானது? 
அல்லது இரண்டுமே உண்மையானதா?