சனி, 27 ஜூன், 2015

பார்ப்பன இந்து எதிர்ப்பின் வெளிப்பாடாகவே அம்பேத்கர் பௌத்த மதத்தை ஏற்றார்.மதிமாறன்

சங்பரிவார்களின் அம்பேத்கர் பாசம் குறித்தும் அவர்களின் இதழில் வெளிவந்த சில கருத்துகள் குறித்தும் எழுத்தாளர் வே. மதிமாறனிடம் சில கருத்துக்களைப் பரிமாறினோம். புதிய விடியல் இதழுக்கு அவர் வழங்கிய பேட்டி: விடியல்:
1939 புனேயில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் அம்பேத்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டதாகவும் அங்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் இருப்பதையும் அவர்கள் மற்றவர்களுடன் ஒன்றாகத் தங்கி, பயிற்சி பெற்று, உணவருந்தி வருவதைக் கண்டு அம்பேத்கர் ஆச்சர்யம் அடைந்ததாகவும் விஜயபாரதத்தின் ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்தளவிற்கு உண்மை?
மதிமாறன்: இது முற்றிலும் தவறான செய்தி. ஒரு மிகப்பெரும் தலைவர் குறித்துப் பரப்பப்படும் அவதூறு. ஆர்.எஸ்.எஸ். முகாமிற்கு அம்பேத்கர் செல்லவும் இல்லை, அவர்களைப் புகழவும் இல்லை. அதேப்போன்றுதான் சமஸ்கிருத மொழியை ஆதரித்து அம்பேத்கர் பேசியது இல்லை. அதற்கான அவசியமும் அவருக்கு இல்லை.

டிராபிக் ராமசாமி: ஆர்.கே.நகரில் யார் வெற்றி பெற்றாலும் செல்லாது என அறிவிக்க கோரி வழக்கு தொடரவுள்ளேன்

ஆர்.கே.நகர் தொகுதியில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வந்தது. தண்டையார் பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, தண்டையாளர் பேட்டையில் 156, 157 பூத்துக்கள் புதிதாக போட்டார்களாம். எந்த அறிவிப்பும் இல்லை. 100 மீட்டருக்குள் அதிமுகவினர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். பூத்துக்கு எதிரிலேயே ஒரு வேன் நிற்கிறது. அதனை போட்டோ எடுத்திருக்கிறேன். நான் இன்ஸ்பெக்டரிடம் சொன்னேன். அவர் அந்த வண்டியை எடுக்க முடியாது என்றார். நான் சட்டம் தெரியுமா. 100 மீட்டருக்குள் எதுவும் இருக்கக் கூடாது என்றேன். அதற்கு அவர் ஆமாம் என கூறிவிட்டு சென்றார்

ஜூலை 1ல் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்? முடக்கி வைத்த சாதனைக்கு வெற்றி விழா!

சென்னை மெட்ரோ ரயில் சேவை துவக்க விழா, ஜூலை, 1ம் தேதி நடைபெற வாய்ப்பு உள்ளது' என, தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:மெட்ரோ ரயில் முதற்கட்ட சேவை துவக்க விழாவிற்கு, தேதியை முடிவு செய்யும்படி, மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிமுகவின் எதிர்ப்பையும் மீறி திமுகவால் நிறைவேற்றப்பட்ட திட்டம் இது. ஜெயலலிதாவின் கையால் திறக்கப்படவேண்டும் என்று மாதக்கணக்காக முடக்கிவைத்து மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி இப்போதாவது திறக்க உள்ளமைக்கு நன்றி. சீக்கிரம் ஒப்பின் பண்ணுங்க மீண்டும் உள்ள போயிட்டா பிறகு எப்பதாய்ன் தொடங்கிறது? 

இந்திரா காந்தியை 6 முறை அறைந்தார் சஞ்சே காந்தி ? அப்ப சஞ்ஜெயின் விபத்து மரணம்? சந்தேகமாமே?

indira_sanjay_20111121  இந்திராகாந்தியை 6 முறை அறைந்தாரா சஞ்சய்காந்தி? வாஷிங்டன் போஸ்ட் நிருபர் தகவல் indira sanjay 20111121
வாஷிங்டன்: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, அவரது மகன் சஞ்சய் காந்தி 6 முறை அறைந்தார் என்ற தகவலை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபரும், புலிட்சர் விருது பெற்றவருமான லீவிஸ் எம். சிமோன்ஸ் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1975ம் ஆண்டு அவசரநிலையை பிரகடனப் படுத்திய காலகட்டத்தில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் டெல்லி நிருபராக பணியாற்றியவர் லீவிஸ் எம்.சிமோன்ஸ்.
அப்போது அவரது பத்திரிகையில் வெளியான ஒரு தகவல் உலகை உலுக்கியது. அதாவது, இந்திராகாந்தியின் மகன் சஞ்சய்காந்தி, அவரை ஆறுமுறை கன்னத்தில் அறைந்தார் என்பதுதான் அந்த செய்தி.
இதுகுறித்து இந்திய செய்தி ஊடகம் ஒன்று இ-மெயில் மூலம் தற்போது சில தகவல்களை அந்த நிருபரிடமிருந்து பெற்றுள்ளது.

தலைகீழாக மாறும் கல்யாண சந்தை ! ஆண்களின் அதிகாரம் பறிபோகிறது? தாய் வழிச்சமுகம் ஆகிறது?

இனி ஆண்கள்தான் வரதட்சணை தர வேண்டும்! ரேவதி, க.நாகப்பன் : திருமணங்களை முடிவு செய்வதற்கான சம்பிரதாயங்கள், முன்பெல்லாம் சுருக்கமானவை. கல்யாணத் தரகர்களிடம் ஒப்படைக்கப்படும் ஜாதகங்கள், 'நல்ல வேலையில் இருக்கிற பையனா இருந்தா போதும்...’ என்று காத்திருக்கும் பெண் வீட்டார், 'பொண்ணு அழகா இருக் கணும்...’ என எதிர்பார்க்கும் பையன் வீட்டார், பஜ்ஜி, காபியுடன் பெண் பார்க்கும் படலம், முகூர்த்தம்... இப்படி!
இன்றோ, கல்யாண சந்தையில் பற்பல மாற்றங்கள். குறிப்பாக, பையன் வீட்டார் 'டிமாண்ட்’ செய்வது போலவே, பெண் வீட்டாரின் 'டிமாண்ட்’களும் இப்போது பெருகியுள்ளன. 'பொண்ணு, பையனை விடப் படிச்சிருந்தா என்ன... நல்லதுதானே..?’ என்று மாப்பிள்ளை வீட்டார் மாறியிருக்க, 'தனிக் குடித்தனம் வெச்சாதான் பொண்ணு கொடுப் போம்...’ என்று வெளிப்படையாகவே நிபந்தனை விதிக்கும் பெண் வீட்டார்கள், நவீன கல்யாண புரோக்கர்களாக உருவெடுத்து இருக்கும் மேட்!ரிமோனியல் வெப்சைட்டுகள், மணக் கயிறின் மஞ்சள் தேயும் முன் பிரியும் தம்பதிகள்... என ரொம்பவே மாறி இருக்கின்றன கல்யாண காட்சிகள்.

வெள்ளி, 26 ஜூன், 2015

கடனில் ‘தத்தளிக்கும்’ டாஸ்மாக்! savukkunews

_MG_1681
MLA JAமார்ச் 2013ல் பத்திரிக்கைகளை சந்தித்த நிதித்துறை செயலர் கே.சண்முகம் ஐஏஎஸ், 2014-2015ல் டாஸ்மாக்கின் வருமானம் ரூபாய் 26,188 கோடி என்றும், 2015-2016ல் இந்த விற்பனை 29,672 கோடியாக வளரும் என்றும், அதன் மூலமாக வணிக வரியாக 19,081 கோடி என்றும், கலால் வரியாக 7296 கோடிகள் என்றும் தெரிவித்தார்.
இப்படி கோடிக்கணக்கில் விற்பனை செய்து வருமானம் ஈட்டும் டாஸ்மாக் நிறுவனம், 1000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறது என்றால் வியப்பாக இருக்கிறதா ?   வியப்படையாதீர்கள்.  அதுதான் உண்மை.
1983ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதுதான் டாஸ்மாக் நிறுவனம்.  29 நவம்பர் 2003 முதல், தமிழகத்தில் உள்ள அனைத்து சில்லரை விற்பனையையும், தன்வசமாக்கியது டாஸ்மாக் நிறுவனம். 

பாடப் புத்தகத்தில் திமுக, அதிமுக 'அரசியல் ! ராமதாஸ் தாக்கு

பாடப் புத்தகங்களின் முகவுரையில், கலைஞர் மற்றும் தங்கம் தென்னரசின் பெயர்கள் வலிந்து திணிக்கப்படுவதை ஆதரிக்கவில்லை என்றாலும், அரசியல் வெறுப்புக்காக அந்தப் புத்தகங்களை மீண்டும் அச்சடிப்பது என்பது வீண் செலவு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், பாடநூல் முகவுரையில் அரசியல் ரீதியாக பிடிக்காதவர்களின் பெயர்கள் இருப்பதற்காக அந்த பாடநூல்களை மாணவர்கள் படிக்கக்கூடாது என தடை விதித்து கல்வியை பிணைக்கைதியாக்கும் அதிமுக அரசின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

இலங்கை நடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபாலசிறிசேன உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நாடாளுமன்ற கலைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Migrants? உலகமயமாக்கலின் மனித சந்தை! காபறேட்டுக்களுக்கு எல்லை இல்லை! மனிதர்களுக்கு?


சீனத் தொழிலாளிமூலதனம் சந்தையைக் கைப்பற்றக் கள்ளத்தோணி ஏறினால் அதன் பெயர் ராஜதந்திரம் அல்லது போர். உழைப்பு தன்னை சந்தையில் விற்றுக் கொள்ளக் கள்ளத் தோணி ஏறினால் அது குற்றம்!  உன்னுடைய மாத வருமானம் ஆயிரம் ரூபாயா? அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அன்றாடம் பார்க்கிறாயா? அப்படியானால் நீ வலையில் சிக்குவதைத் தடுக்க முடியாது. ஒரு ஹாங்காங் கப்பல் முதலாளி கள்ளத் தோணிதான் தன்னைச் சொர்க்கத்தில் சேர்க்க முடியும் என்று முடிவு.சென் கான் திங் 20 வயது இளைஞன். அவனது மாத வருமானம் ஆயிரமல்ல, ஆறாயிரம் ரூபாய். சீனாவின் பியூஜியான் மாநிலத்திலுள்ள ஒரு சிற்றூரில் உணவு விடுதி நடத்தி வந்தான். மீன் மொத்த வியாபாரம் செய்து பணக்காரனாகி விடலாம் என்று முயன்று சேமித்த பணத்தைத் தோற்றான்.
எனினும் சோற்றுக்கே வழியில்லாமல் போய்விடவி்ல்லை. சொந்த வீடு, தொலைபேசியுடன் தொலைக்காட்சிப் பெட்டியும் இருந்தது. எனவே அந்தக் கப்பல் முதலாளி சொன்னதைப் போல ”வலையில்” விழுந்தான். எப்படியாவது அமெரிக்கா சென்று முன்னேறிவிட வேண்டும் என்ற வெறி அவனைப் பிடித்துக் கொண்டது.

காக்கா முட்டையின் மறுபக்கம் ! திடீர் நகர் – நிழலும் நிஜமும் !


காக்கா முட்டை காட்டிய படங்கள்அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக, சுதந்திரமாக, அன்பாக, நெகிழ்ச்சியாக, வாழ்கிறார்கள்’ என்று அவர் மட்டுமல்ல பல்வேறு அப்பாவிகளும் உண்மையிலேயே ஃபீல் பண்ணி பேசுவதைப் பார்த்த போது ஒன்று தோன்றியது.
நாமே திடீர் நகருக்கு நேரில் சென்று படம் குறித்த படைப்பாளிகள், மற்றும் ரசிகர்களின் கருத்தை சொல்லி அப்பகுதி மக்களின் பதிலை பதிவு செய்வோம் என முடிவு செய்தோம். எறும்புகள் புற்றுக்குள் செல்வதுபோல் சாரைசாரையான சந்துகளில் நெரிசலாக உழைக்கும் மக்கள்
சென்னை-அண்ணாசாலையை ஒட்டிய சைதாப்பேட்டை மறைமறையடிகள் பாலம் அருகே கீழே உள்ள திடீர் நகர், கோதாமேடு-அண்ணாநகர் பகுதிகளுக்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் சென்றோம்.
எறும்புகள் புற்றுக்குள் செல்வதுபோல் சாரைசாரையான சந்துகளில் நெரிசலாக உழைக்கும் மக்கள். மூன்றடி இடைவெளிச்சந்தில் இருபுறமும் தகரக் கொட்டகைகள்.
சிரிப்பு, கும்மாளம், அவலம், வெறுமை, சுறுசுறுப்பு, சோம்பிக்கிடத்தல் என விதவிதமான உணர்ச்சிகளுடன் தென்பட்ட சிறுவர் பெரியவர் அனைவரையும் சந்தித்தோம்.
“காக்கா முட்டை படம் சூட்டிங் நடந்த இடம் இதுதானே”

சமசீர்கல்வி தேசியமயம் or காவிமயம் ? அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டம்! பாஜக புதிய கொள்கை ஆய்வு?

உயர்கல்வியில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதற்கான, புதிய கல்விக் கொள்கை குறித்து, ஜூலை, 24ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில், நாடு முழுவதும் பல வகை பாடத்திட்டங்கள் உள்ளன. இதில், உயர்கல்வி படிப்புகள் மட்டும், மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகக் கட்டுப்பாட்டில் அமலாகின்றன. ஆனால், பாடத்திட்டங்களைப் பொறுத்தவரை, மாநிலங்கள் மற்றும் ஒவ்வொரு பல்கலைக் கழகங்களிலும் தனித்தனியே இருக்கின்றன.
இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, புதிய கல்விக் கொள்கை வரைவு விதிகளை, மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. 

40வது ஆண்டு காணும் இந்திராவின் எமெர்ஜென்சி! எதிர்த்த ஒரே முதல்வர் கலைஞர் ! ஒரே மாநிலம் தமிழ்நாடு !

எமர்ஜென்சி காலமும் கலைஞரின் சாதுர்யமும்இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்ட 40வது ஆண்டு இது. அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அதை மீறி பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள்  எமர்ஜென்சி எனும் நெருக்கடி நிலையை நாடு முழுவதும் அவர் நடைமுறைக்குக் கொண்டுவந்தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெருந்தலைவர் காமராஜர் போன்ற மூத்த தலைவர்கள் இத்தகைய நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
அதே ஆண்டு அக்டோபர் 2ல் பெருந்தலைவர் மரணமடைந்தார். இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக எமர்ஜென்சி காலத்தைக் கூறலாம். அப்போது தமிழகத்தில் ஆட்சியிலிருந்த கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு, இந்த நெருக்கடி நிலையை எதிர்த்தது. 

வியாழன், 25 ஜூன், 2015

பா.ஜ.,வை புரட்டி எடுக்கும் பெண் தலைவர்கள்! அடுத்தடுத்து அம்மாமிகள் சொத்திலேயே குறி !

பலம் வாய்ந்த பெண் உறுப்பினர்கள் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்குவதால் பா.ஜ., என்ன செய்வதென்று தெரியாமல் தலையை பிய்த்துக் கொண்டுள்ளது. இவைகள் யதார்த்தமாக நடக்கிறதா அல்லது உள்கட்சி விவகாரத்தால் யாராவது திட்டமிட்டு சிக்க வைக்கிறார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
பா.ஜ.,வை பொறுத்த வரை சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே சிந்தியா, ஸ்மிருதி இரானி, பங்கஜ முண்டே ஆகிய நால்வருமே ஒவ்வொரு வழியில் செல்வாக்குள்ள உறுப்பினர்கள். சுஷ்மா சுவராஜ், 25 வருடங்கள் சிவசேனை - பா.ஜா.க கூட்டணி ஆட்சி கொண்ட உலகிலேயே செல்வம் அதிகம் கொழிக்கும் மும்பை மாநகராட்சியின் கணக்கு வழக்குகளை தோண்டினால் கோடி கோடிகள் ஊழல் வெளியில் வரும். ஒரு மாநிலதிற்கே பட்ஜெட் போடுமாம் இந்த மாநகராட்சியின் ஒரு வருட வருமானம்

Yoga யோகா திராவிடர்களின் கலைதான்! ஆரியர்களுடையது அல்ல! பெங்களூரு மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல அதிரடி!

யோகா திராவிடர் கலையே! ஆரியர்களுடையது அல்ல! சூழ்ச்சியால், தங்கள் கலையாக்கிக் கொண்டனர் பெங்களூரு மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல அதிரடி!
பெங்களூரு ஜூன் 23_ யோகக்கலை திராவிடக் கலாச்சாரம் கொடுத்த கொடையாகும், அதை ஆரியர்கள் சூழ்ச்சி செய்து தனதாக்கிக் கொண் டார்கள்  என்று, நிடுமா முடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தெரிவித்தார்.
பெங்களூரு நகரில் திங்களன்று நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் நிடுமாமுடி மடத் தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது யோகா குறித்து அவர் கூறியதாவது:  யோகா கலை என்பது வாழ்வியல் தொடர்பான ஒன்று இது சிந்துவெளி நாகரிகத்தில் இருந்து தொடர்ச்சியாக திராவிட நாகரிகம் உள்ள இடங்கள் அனைத்திலும் வியாபித் திருந்தது. இது ஒரு தனிப் பட்ட இந்து மதத் துற வியோ அல்லது முனிவர் களோ வழங்கியது அல்ல, யோகாவிற்கும் ஆரிய வேத கலாச்சாரத்திற்கும் எள்ளளவும் தொடர் பில்லை. ஆரியர்கள் திரா விடர்களின் இந்த வாழ் வியல் கலையை தங்கள தாக்கிக் கொண்டனர். பிறகு அதனுடன் வேத ஸ்லோகங்களை இணைத்து அதை வேதகால கலையைப் போல் மாற்றிவிட்டனர்.  

சிறுமியை பலாத்காரம் செய்தவரோடு சமரசம் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு! லஞ்சம் லஞ்சம் ?

நான் எப்படி அந்த நபருடன் வாழ முடியும்?- சிறுவயதில் பலாத்கார பாதிப்புக்குள்ளான பெண் ஆதங்கம் 
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், வழக்கை சமரச மையத்துக்கு பரிந்துரை செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு பிற்போக்குத்தனமானது என சமூக ஆர்வலர்களும், பெண்ணியவாதிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறும்போது, "ஜாமீன் மனு மீது அது சாரா வேறு தீர்ப்பை வழங்கமுடியாது. குற்றவாளியே வழக்கில் இருந்து ஜாமீன் மட்டுமே கோரியிருக்கும் நிலையில் வழக்கை சமரச மையத்துக்கு எப்படி பரிந்துரைக்க முடியும்? இரண்டாவதாக, பாதிக்கப்பட்ட நபரின் சம்மதம் இல்லாமல் வழக்கை சமரச மையத்துக்கு பரிந்துரைக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

கட்சிப்பணி ஆற்றி வரும் தமிழக போலீஸ் / மக்கள் போலீஸ் !

Savukku · June 25, 2015ஓய்வு பெற்ற டிஜிபிக்களான நட்ராஜ் மற்றும் அலெக்சாண்டர் அதிமுகவில் சேர்ந்தபோது, அவர்கள் இருவரையும் எள்ளி நகையாடினார் ராமானுஜம். ஆனால், அவர்களாவது அதிமுகவில் சேர்ந்து கட்சிப்பணி ஆற்றுகின்றனர். ஆனால் இவர் அரசு அதிகாரியாக இருந்துகொண்டு, அவர்களைவிட விசுவாசமாக அதிமுக தொண்டர் போல பணியாற்றுகிறார். ராமானுஜத்துக்கு, அவர்கள் இருவருமே பரவாயில்லை
aaaராமானுஜம் 2012ல் டிஜிபியாக பதவி ஏற்றபோதே அதிகாரிகள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்தது. 60 வயதான ஒருவரை எப்படி டிஜிபியாக நியமிக்கலாம் என்று. ஆனால், டிஜிபியாக ஓய்வு பெற்ற பின்னும் அவரை டிஜிபிக்கு மேலாக ஒரு சூப்பர் டிஜிபியாக ஆலோசகர் பதவியில் நியமித்து இருப்பது சர்ச்சையையும் காவல் துறை அதிகாரிகள் மத்தியில் சுணக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. நவம்பர் 2014ல் ராமானுஜம் ஓய்வுபெற்றதும், அஷோக்குமார் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.   ஒரே வாரத்தில் ராமானுஜமும் ’ஆலோசகர்’ அந்தஸ்தில் வந்து விட்டார். அவருக்கு டிஜிபி அலுகலகத்தில் தனி அறை தரப்பட்டது.

கிராமங்களில் மூன்றில் ஒரு பங்கு வீடுகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் ....தேசிய சமூக பொருளாதார சாதி சர்வே!


30poverty5முதன்முறையாக எடுக்கப்பட்ட தேசிய சமூக பொருளாதார சாதி சர்வேயின் படி இந்தியவின் கிராமங்களில் மூன்றில் ஒரு பங்கு வீடுகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வதாக தெரிய வந்திருக்கிறது.
1931-ம் ஆண்டிற்கு பிறகு சமூகவியல் அடிப்படையில் இத்தலைப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த சர்வே பணி நாடெங்கும் உள்ள கிராமங்களின் 24.39 கோடி வீடுகளின் நிலையை நமக்கு அறியத் தருகிறது.
இந்த சர்வே மொத்தம் 17.9 கோடி ஊரக வீடுகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 31.26% வறுமையாக வாழ்கிறார்கள். 13.25% வீடுகள் ஓரறை கொண்ட குடிசை வீடுகளாக இருக்கின்றன. 3.64% வீடுகளில் 16 – 59 வயதுக்குட்பட்ட வயதில் குடும்ப உறுப்பினர்கள் இல்லை.
3.85 வீடுகளில் பெண்கள் தலைமை தாங்கினாலும் அங்கேயும் மேற்கண்ட வயதில் குடும்ப உறுப்பினர்கள் இல்லை. 21.53% வீடுகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு சொந்தமானவை. 23.52% வீடுகளில் கல்வியறிவு கொண்ட குடும்ப உறுப்பினர்கள் இல்லை. 29.97% வீடுகளில் நிலமற்றவர்களே வாழ்கின்றனர்.

காக்காமுட்டை பாட்டி: கைதட்டலுக்காக 76 ஆண்டுகள் காத்திருந்தேன்

காக்காமுட்டை' படத்துல பசங்களுக்கு பாட்டியாக நடித்து சிரிக்கவும், நெகிழவும் வைத்த பாட்டியை தேடிச் சென்றோம்...
''50 வருஷத்துக்கும் அதிகமாவே சினிமாவுல இருக்கேன். இப்போதான் எனக்கு பெரிய அங்கீகாரம் கிடைச்சுருக்கு'' -வெற்றிலை போட்டபடி பேச்சை தொடர்கிறார் சாந்திமணி பாட்டி.

''என் உண்மையான பேரு சரோமி தைரியம். பிறந்து வளர்ந்தது எல்லாமே சேலம். என் கூட பிறந்தவங்க ஆறு பேர். எல்லாரும் படிச்சு நல்ல நிலையில, பெரிய பெரிய வேலைல இருக்காங்க. எனக்கு மட்டும் அப்போயிருந்தே சினிமா மேல கொள்ள ஆசை. சினிமாவுல எப்டியாவது பெரிய நடிகையா ஆகிடணும்ன்னு ஒரு வெறி. அப்போ எங்க தெருல தெருக்கூத்து நடக்கும் அதப் பாத்து பாத்து எனக்கு சினிமாவுல நடிக்கணும்ன்னு ரொம்ப ஆசையாப்போச்சு. சுத்தி இருக்குறவங்க எல்லாம் சென்னைக்கு போனாதான் சினிமாவுல நடிக்கமுடியும்ன்னு பேசுறது கேட்டுட்டு, எங்க அக்கா வேலைக்கு போய்  வாங்கி வச்சிருந்த  சம்பளம் 400 ரூபாய எடுத்துட்டு ரயில் ஏறி சென்னை வந்துட்டேன்.

Zee tv சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் ஏன் விலகிவிட்டார்?

சென்னை: ஒரு சிலர் சொல்லும் வார்த்தைகள் பேசும் பேச்சுக்கள் பிரபலமாகிவிடும் அப்படித்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி சொல்லும் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' என்ற வார்த்தையும், ‘போலீசை கூப்பிடுவேன்' என்ற வார்த்தையும் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்து விட்டது. டப்மாஸ் முதல் சினிமா வசனம் வரை பட்டையை கிளப்புகிறது. சிவகார்த்திக்கேயன் படத்தில் இந்த வசனத்தை ஒரு பாட்டாகவே பாடி விட்டனர். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது விலகிவிட்டார் அவருக்கு பதிலாக நடிகை சுதாசந்திரன் நடத்தி வருகிறார். நிகழ்ச்சியில் இருந்து தான் விலகியது ஏன் என்பது பற்றியும் எந்த சூழ்நிலையில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வார்த்தையை உபயோகித்தேன் என்றும் கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
கொலை மிரட்டல் வந்தது நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட ஒரு மோசமான பையன், போன்ல எனக்கு கொலை மிரட்டல் விடுத்தான்.

ஏவிஎம் சரவணன் பற்றி எஸ்பி.முத்துராமன்: எல்லா நிகழ்ச்சிகளிலும் கையைக் கட்டிக்கொண்டு நிற்கும் இவரது ‘பணிவு’

‘வீரத்திருமகன்’ படத்தில் ‘விஜயபுரி’ ஆனந்தன், ‘குமாரி’ சச்சு.  ஏவி.எம்.சரவணன் அறிமுகப்படுத்திய அந்த இயக்குநர் யார் என்று சொல்வதற்கு முன்பு, சரவணன் சாரைப் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். முதலாளி என்பதைவிட என் வாழ்க்கையின் உதாரண மனிதர் அவர்தான்! மனிதநேயமிக்க மாமனித ராகத்தான் அவரைப் பார்க்கிறேன். வெள்ளை உடை,
நெற்றியில் குங்குமம், எப்போதும் மனம்திறந்த புன்னகை, இன்முகம்.
தொழிலபதிபர், ஸ்டுடியோ அதிபர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவராக இருந்தாலும் ஸ்டுடியோவில் வேலை பார்த்த எல்லோருடனும் தானும் ஒரு தொழிலாளி என்கிற நினைவோடுதான் பணிபுரிவார். எங்களை ஒரு சகோதரராகத்தான் நினைத்து அனைத்து உதவிகளையும் செய்வார்.
திருமண நிகழ்ச்சி முதல் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அழைப்பு வந்துவிட்டால் தவறாமல் போய் வாழ்த்துவார். அப்படி வாழ்த்துவதுதான் அழைப்பு கொடுப்பவர்களுக்கு காட்டும் மரியாதை என்பார். ஒருநாளில் பல விசேஷங்கள் என்றாலும் அதில் பெரிய ஆட்கள் வீட்டுக்குப் போவதை விட, ஏழைத் தொழிலாளியின் வீட்டு நிகழ்ச்சிக்குப் போவதை விரும்புவார்.

அச்சுறுத்தலில் பாஜக அல்லாத மாநில அரசுகள்: திருமாவளவன்

பாஜக அல்லாத மாநில அரசுகள் ஓரவஞ்சனைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியிருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நாட்டில் சர்வாதிகாரம் தலைதூக்காமல் தடுக்க, ஒரு கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்திய வரலாற்றில் இருண்ட காலம் எனக் குறிக்கப்படும் அவசரநிலை 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் நாள் அறிவிக்கப்பட்டது. அதன் நாற்பதாவது ஆண்டு இது. மீண்டும் அப்படி அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கான ஆபத்து இருக்கிறது என பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியிருக்கிறார். அவரது கருத்தை ஆளும் கூட்டணியில் இருக்கும் சிவசேனாவும் ஆதரித்துள்ளது.
அவசரநிலைக் காலத்தின் அத்துமீறல்களை எவரும் எளிதில் மறந்துவிடமுடியாது. மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன;

206 கோடி ஊழல் !Maharashtra BJP அமைச்சர் பங்கஜ முண்டே மீது குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிரா பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் பங்கஜ முண்டே 206 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.மாநிலம் முழுவதும் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் நொறுக்குத் தீனி, புத்தகம் உட்பட பல்வேறு பொருட்களை வாங்கியதில் அவர் முறைகேடு செய்துள்ளதாக, காங்., முன்னாள் முதல்வர் பிரித்வி ராஜ் சவான் குற்றம்சாட்டியுள்ளார்.சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.மகாராஷ்டிர அரசு 3 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட ஒப்பந்தங்களை, மின்னணு முறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.  இவர் மறைந்த பிரமோத் மகாஜனின் மருமகள்.அகில இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் எல்லாவிதமான ஊழல்களையும் செய்துவிட்டனர். இனி நோட்டு அடிக்கவேண்டியது தான் பாக்கி ....

நீதித்துறையை நிர்வாணமாக்கிய புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் சாகச வரலாறு!

2001-ம் ஆண்டில் ஜெயா மீண்டும் தமிழக முதல்வராக அமர்ந்தவுடன், அவருக்கு எதிராக நடந்துவந்த ஊழல் குற்ற வழக்குகள் அனைத்தையும் சட்டமன்றத் தீர்மானம் ஒன்றின் மூலம் மூட்டை கட்டிவிடலாம் என அப்பொழுது ராதாபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக (சுயேட்சை) இருந்த அப்பாவு கோரிக்கை வைத்திருக்கிறார். இதனை நிராகரித்த ஜெயா, “தான் இந்த வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதியாக வெளியே வருவேன்” எனத் தன்னடக்கதோடு கூறியிருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில் இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து, அம்மாவைச் சட்டத்திற்கும் நீதிக்கும் தலைவணங்கும் கண்ணியமிக்கவராகக் காட்டுகிறார்கள், அ.தி.மு.க.வினர். இது மட்டுமல்லாமல், உச்சநீதி மன்றம் எந்தவிதமான நிபந்தனையின்றிப் பிணை வழங்கியபோதும், தனக்குத் தானே நிபந்தனை விதித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த பெருந்தகையாக ஜெயாவிற்கு மகுடம் சூட்டி வருகிறார்கள்.
சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்டு நாற்பதுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஜெயா மீது சுமத்தப்பட்டன. “வாடா, வா, உன்னைக் கவனிச்சுக்கிறேன்” என்ற விதத்தில்தான் இந்த வழக்குகளை அவர் நீதிமன்றத்தில் சந்தித்தாரேயொழிய, சட்டப்படியெல்லாம் அவர் நடந்து கொள்ளவில்லை. “சொத்துக் குவிப்பு வழக்கை ஜெயா நீதிமன்றத்தில் எதிர்கொண்ட விதத்தை முழுவதுமாக விளக்கினால், அது கிரிமினல்களுக்குச் சாதகமாகப் போய்விடும் என்பதனால், அதனை நான் அதிகம் விளக்கவில்லை” என சொத்துக் குவிப்பு வழக்கின் அரசு வழக்குரைஞர் ஆச்சார்யா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்று மிகையானதல்ல. ஜெயா, தன் மீது தொடரப்பட்ட வழக்குகளில் சிலவற்றைச் சந்தித்த விதத்தை கீழே தொகுத்துக் கொடுத்துள்ளோம். கிரிமினல் கும்பலுக்குத் தலைவியாக இருக்கும் தகுதியை மட்டுமே கொண்டவர் ஜெயா என்ற உண்மையை அவை உங்களுக்குப் புரிய வைக்கும்.
ஜெயாவின் முதல் தவணை ஆட்சியின் பொழுது (1991-96) தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வெளிநாடுகளிலிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில், 100 கோடி ரூபாய்க்கு மேல் ஜெயா – சசி கும்பல் இலஞ்சம் வாங்கியது, ஜெயா பதவியில் இருந்த பொழுதே அம்பலமாகியது.

புதன், 24 ஜூன், 2015

ஜெயலலிதாவின் விடுதலை ரத்துசெய்யுமாறு கர்நாடகா அப்பீல் !ஒரு அலசல் !

இந்த வழக்கில் பவானிக்கு கொடுத்தது எத்தனை கோடியோ, அவர் அதற்கான வேலையை கச்சிதமாக செய்து விட்டார். அடுத்தது அந்த குமாரசாமிக்கு கொடுத்தது எத்தனை கோடியோ, அவரும் நன்றியுடன் அவர் வேலையை செய்து முடித்து விட்டார். இப்போது உச்ச நீதி மன்றத்தில் என்ன செய்ய போகிறார்கள். அங்கும் ஒரு தத்து இருக்கிறார். ஆனால் தற்போது உள்ள ஆச்சார்யாவின் ஆதாரங்கள் படி. எத்தனை தத்து வந்தாலும் பப்பு வேகாது என்பது ஜெயாவுக்கே தெரியும். ஏனென்றால் அந்த கணக்கு குளறுபடி சிறு பள்ளி மாணவர்களுக்கே தெரியும். மேலும் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வாதாட பவானிக்கு எப்போது குமாரசாமி அனுமதி கொடுத்தாரோ, அப்போதே கொமாரசாமியின் சாயம் வெளுத்துவிட்டது. இதில் உள்குத்து இருக்கிறது. இவர்கள் மேல் விசாரணை கமிஷன் வைக்கவேண்டும். மேலும் கர்நாடகாவோடு காரியத்தை முடித்து விடலாம் என்று ஜெயா தப்பு கணக்கு போட்டுவிட்டார். அவர்கள் அப்பீல் செய்வார்கள் என்று நினைக்கவில்லை. ஜூலை 7 இல் குரு பெயர்ச்சி. அதில் நல்லதுமுண்டு கேட்டதுமுண்டு. மற்றவர்களை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் இந்த கெதி தான். தமிழ் நாட்டில் அதிக படியான தலைவர்கள் யாரும் ஜெயாவுக்கு ஆதரவாக பேசவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

வேகமாக அருகிவரும் வீணை வாத்தியம் ! அருங்காட்சியகத்தில் மட்டுமே இனி?

ஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை இசையை பற்றி எந்த ஞானமும்
கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும்,
அவ்வளவுதான் !. இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு ஊருக்கும் போகும்போதும் அங்கு பிரபலமாக இருக்கும் பொருட்களை பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த முறை தஞ்சை செல்வதற்கு முன் ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து சென்று இங்கு வீணை பிரபலம் என்று தெரிந்தது கொண்டேன், அதை செய்யும் இடம் சென்று பார்க்க வேண்டும் எனும்போது அதற்க்கு இவ்வளவு தூரம் கஷ்டப்பட வேண்டும் என்று அப்போது தெரியாமல் போனது. இன்று இசை என்பது கீ போர்டு, டிரம்ஸ் என்று ஆகிவிட்ட பிறகு இந்த வீணையின் மவுசு குறைந்து விட்டது. இன்று தஞ்சாவூரில் இப்படி வீணை செய்பவர்கள் என்பது மிகவும் குறைவு, இதனால் வீணை எங்கு கிடைக்கும் என்று கேட்டதற்கு ஆள் ஆளுக்கு
எங்களை அலையவிட்டனர் ! ஒரு கட்டத்தில் வெறுத்து போய் தஞ்சாவூரில் யார் வீணை பேமஸ் என்று சொன்னது என்று காண்டாகி இருந்தேன்...... முடிவில் ஒரு பெரியவரின் மூலம் ஒரு முகவரி கிடைத்தது ! (இந்த பதிவை நீங்கள் முழுமையாக படிப்பீர்களா என்பது சந்தேகமே, அவ்வளவு ஆராய்ச்சி செய்து, கேட்டு இருக்கிறேன்.....

5 Star சாமியார்களிடம் இருந்து Yoga வை கைப்பற்ற மோடி குருப் கடும் முயற்சி! மாபியாகளிடம் சிக்கி யோகா படும் பாடு!

modi yogamodi ramdev
எங்க பார்த்தாலும் ஒரே கொள்ளை, கொலை, கற்பழிப்பு, திருட்டு, இவன் பொண்டாட்டிய அவன் கூட்டிட்டுப் போய்ட்டான், அவன் பொண்டாட்டிய எவனோ கூட்டிட்டுப் போய்ட்டான், என்ன சார் உலகம் இது, கம்முனு சாமியாராப் போயிரலாம் போல இருக்குது சார் என்று நம்மிடம் புலம்பும் மனிதர்களை நீங்கள் தினம் சந்திக்கலாம், அது போன்ற மனிதர்களுக்கு பாஜகவின் ஆல் இன் ஆல் அழகுராஜா மருந்துக்கடையில் இருந்து புதிதாக பரிந்துரைக்கப்படும் மருந்து யோகா, இது ஒரு சர்வலோக நிவாரணி. இது மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு மட்டும் அல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களிடம் நிலத்தை இழந்தவன், பங்குச் சந்தையில் கண்ட நாய்களின் பேச்சைக் கேட்டு பணத்தை போட்டு போண்டியானவன், தொழிலை நடத்த முடியாமல் தொழிற்சாலையை பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்றுவிட்டு ஆண்டியானவன், லட்சக்கணக்கில் பணம்கொட்டி படித்தும் வேலையில்லாமல் லோ லோ என்று நாடு முழுவதும் சுற்றும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் இன்னும் இத்தியாதி இத்தியாதி பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இது மிகச் சிறந்த மருந்து.

இந்திய பாராளுமன்ற கேன்டீன்ட்தான் இந்தியாவிலேயே மலிவான உணவகம் !

டெல்லி : ஆட்டுக்கறி வறுவல் - ரூ.20, கோழிக்கறி ரோஸ்ட்-ரூ.29, அவிச்ச முட்டை, மசாலா தோசை - ரூ.6.. இதெல்லாம் எந்த ஹோட்டலில் கிடைக்கிறது என்று கேட்கும் அப்பாவி ஏழை மக்களுக்கு, நாடாளுமன்றத்தில் பல கோடி ரூபாய் மானியத் தொகையுடன் இயங்கும் கேன்டீனில் தான் இவ்வளவு "சீப்" என்பது தான் பதில். இவ்வளவு விலை குறைவா? எந்த நாடுகளுக்குப் போய் பார்த்தாலும், இவ்வளவு விலை குறைவான உணவுப் பொருட்கள் வேறு எங்காவது கிடைக்கிறதா என்று கேட்டால் ம்ஹூம்ம்ம்.. என்பதுதான் பதிலாக இருக்க முடியும். மானியத்தை குறைக்க பாடுபடும் எம்.பி.க்கள் எரிவாயு மானியம், ரேஷன் பொருள் மானியம், மின்சார மானியங்களைக் குறைக்க சட்டம் இயற்ற பாடுபடும் எம்.பி.க்களுக்காக இயக்கப்படும் இந்த கேன்டீனுக்கு மட்டும் 2013-2014ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட மானியம் எவ்வளவு தெரியுமா? .14 கோடி ரூபாய்..

செவ்வாய், 23 ஜூன், 2015

வடிவேலு :மக்கள் ரசிப்பதை பார்த்து அழுதுவிட்டேன்.சிலர் தீய எண்ணத்தில் தப்பு தப்பாக எழுதுகிறார்கள்

எலி' படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள் என்று விமர்சகர்களுக்கு நடிகர் வடிவேலு காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், மனநலம் பாதித்தவர்கள்தான் எலி படத்தைப் பற்றி தவறாக விமர்சிக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு, சதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'எலி'. சிட்டி சினி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.
இப்படம் விமர்சகர்கள் மத்தியில் மிக மோசமான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இதற்கு நடிகர் வடிவேலு வீடியோ பதிவின் மூலம் காட்டமாக பதிலளித்திருக்கிறார்கள்.
அந்த வீடியோ பதிவில் வடிவேலு கூறியிருப்பது:
"'எலி' படத்தை அமோக வெற்றிப் பெற செய்த என்னுடைய ரசிகர்களுக்கும், தாய்மார்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிறைய படங்களில் காமெடி செய்து உங்களை ரசிக்க, சிரிக்க வைத்திருக்கிறேன். சின்ன இடைவெளி விழுந்தவுடன் "ஏன்பா நடித்தா தான் என்ன?"என்று எல்லோரும் கேட்பார்கள்.

2,400 பக்க மனு ! ஜெ. விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா

டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. சுமார் 2,377 பக்கங்கள் கொண்ட அப்பீல் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது. இது மொத்தம் 9 தொகுதிகளைக் கொண்டுள்ளது. 1991-96ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.  18 ஆண்டுகாலம் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் எஞ்சிய 3 பேருக்கு தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. பதவியும் முதல்வர் பதவியும் பறிபோனது. இத்தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தனர்.

ஒரு வேளை நான் தான் பிழையோ ? ஒரு ஈழத்து சிறுகதை


இது அறுபதுகளில் நடந்த சம்பவம். வெறும் புழுதி படிந்த தலையும் தூசி படிந்த கோட்டுமாக நிறை வெறியில் மணிக்கூட்டு கோபுர வீதியில் சுகமாக  அசந்து தூங்கி கொண்டிருந்தார் ஒரு படித்த பெரிய மனிதர்.
 சகல விதமான வழிப்போக்கர்களுக்கும் இது ஒரு புதிய காட்சி அல்ல.அவரின் கதையும் ஓரளவு எல்லோரும் அறிந்ததுதான்.
அந்த படித்த பெரிய மனிதன் சிவசுப்ரமணியம் இந்த இடத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு பெரிய காரணம் இருப்பது என்னவோ உணமைதான்.
இவரை பற்றி மக்கள் பேசிக்கொள்வது இதுதான்,
இவர்  இளமையில் சாதியில் குறைந்த பெண்ணை காதலித்தார். இதை கண்டு பிடித்த பெற்றோர் தந்திரமாக இங்கிலாந்துக்கு அனுப்பி விட்டார்கள். இவரும் படிப்பு முடித்து வந்து இந்த பெண்ணை சத்தம் போடாமல் கூட்டிக்கொண்டு ஓடி விடலாம் என எண்ணிக்கொண்டே நாட்டை விட்டு புறப்பட்டார்.
சாதி தடிப்புடன் குள்ளநரித்தனமும் கொண்ட இவரது குடும்பத்தினர் இவர் நம்பும்படி இவரது நண்பர் மூலம் இவரது காதலிக்கு வேறு கல்யாணம் ஆகிவிட்டதாகவும் இரண்டு குழந்தைகள் வேறு உள்ளதாகவும் கதை அளந்தார்கள்.இந்த அப்பாவி மனிதன் அதை நம்பி மனம் உடைந்து குடிக்க தொடங்கினார். பின்பு என்ன நிறுத்த முடியாமல் அல்ல அல்ல நிறுத்தத்த விருப்பம் இல்லாமல் குடியே கதியானர்,

அருந்ததி ராய்:இந்துஅமைப்புக்கள் அம்பேத்காரை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது

சமீபத்தில் சென்னையில் அருந்ததிராய், டாக்டர் அம்பேத்கரை இந்து அமைப்புகள் பயன்படுத்துவதைக் கண்டித்தும், அண்ணல் அம்பேத்கரை இந்து எதிர்ப்புக் குறியீடாகப் பயனபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் – காந்தியை டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தியதையும் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இததான் நான் 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன். அப்போதெல்லாம் என்னை ஒரு மாதிரி பார்த்தவர்களும், ஒரு மாதிரி பார்க்கக்கூட விரும்பாதவர்களும், அப்படி இயங்கியதற்காகவே என்னை ஓரங்கட்டியவர்களும், அண்ணலை மோசமாக விமர்சித்தவர்களும்கூட, அருந்ததிராய் பேச்சைக் கொண்டாடுகிறார்கள். மகிழ்ச்சி.
(டாக்டர் அம்பேத்கரை புறக்கணிக்கிற முற்போக்காளர்களைக் கண்டித்து எழுதியதற்காகவே, 2008 ஆம் ஆண்டு கீற்று இணையதளத்தில் என்னை இந்திய உளவுத்துறையின் ஆள் என்று எழுதினார்கள்.)
என்னைய விடுங்க.. அருந்ததிராயே சொல்லிட்டாங்க, இப்பவாவது டாக்டர் அம்பேத்கரை இந்து எதிர்ப்பு போர்வாளாகத் தலித் மக்களிடம் தீவிரமாகக் கொண்டு சேர்ப்பதும், தலித்தல்லாதவர்களிடம் அண்ணல் அம்பேத்கரின் அரசியலை பேசவும் செய்யலாமே.

மக்களால் மக்களுக்காகவே நான்: ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா : அரசியல் சதியால் போடப்பட்ட வழக்கால்???

‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்ற அடிப்படையில் எப்போதும் செயலாற்றி வருகிறேன். எனக்கு எல்லாமே நீங்கள்தான் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்ளும் போது பேசினார். ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்ச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா பேசியதாவது: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே தனது லட்சியம்.கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வெற்றிவேலை, எனது வேண்டுகோளை ஏற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள். இந்த இடைத்தேர்தல், நீங்கள் விரும்பாத இடைத்தேர்தல். பொதுத்தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், அரசியல் சதியால் போடப்பட்ட வழக்கால், இடைப்பட்ட சிறிது காலத்துக்கு நான் முதல்வராக இல்லாத சூழல் ஏற்பட்டது. எனவே, இந்த இடைத்தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சந்திரலேகா ஐஏஎஸ் முகத்தில் ஆசிட் வீசிய ஒரே தகுதியில் ஜெயலலிதாவின் நத்தம் விஸ்வநாதன்

whiskey-bottles-photoநத்தம் இல்லாத தமிழகம் கேட்டேன்…. 1991-1996 ஆட்சி காலத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் மிக மிக சக்திவாய்ந்தவர்களாக இருந்தவர்கள் இருவர்.  ஒருவர் செங்கோட்டையன். இரண்டாவது நபர் கண்ணப்பன்.  அப்போது கண்ணப்பன் ஜெயலலிதாவுக்கு நிகராக பணம் பண்ணினார் என்ற கருத்தும் உண்டு. அதன் பின் தனிக் கட்சி தொடங்கி, மீண்டும் தற்போது அதிமுகவிலேயே ஐக்கியமாகி இருக்கிறார்.  ஜெயலலிதாவின் இரண்டாவது ஆட்சிக் காலம், ஏகப்பட்ட ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருந்ததால், தனிப்பட்ட முறையில் பெரிதாக பணம் பண்ணியவர் என்று யாரையும் குறிப்பிட்டு கூற முடியாது.

தற்பொழுதைய ஆட்சியில், ஜெயலலிதா மற்றும் மன்னார்குடி மாஃபியாவின் முழு நம்பிக்கையைப் பெற்று, அமோக வசூல் செய்து வருபவர், நத்தம் விஸ்வநாதன்.   தமிழக வரலாற்றிலேயே, மிக மிக அதிகமாக சம்பாதித்தவர் என்ற பெயரை பெறும் அளவுக்கு இன்று நத்தம் முன்னேறியிருக்கறார் என்றால் அது மிகையல்ல.   எத்தனையோ குற்ற்ச்சாட்டுகள் இருந்தாலும், மன்னார்குடி மாஃபியா மற்றும் ஜெயலலிதாவின் முழுமையான நம்பிக்கையை பெற்றவராக திகழ்கிறார் நத்தம்.
மதுபானக் கடையில் ஒவ்வொரு முறை ஒரு க்வார்ட்டர் வாங்கப்படுமேபோதும், ஒவ்வொரு முறை மின் வெட்டின் போதும், நத்ததித்தின் பாக்கெட்டுகள் நிரம்புகின்றன.

திங்கள், 22 ஜூன், 2015

டி டி திவ்யதர்ஷினி விஜய் டிவியில் இனி இல்லை?

காபி வித் டிடி, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டு விட்டதாக ஒரு சாரர் கிசுகிசுக்கும் நிலையில், டிடி கர்ப்பமாக இருப்பதாகவும் அதன் காரணமாகவே வேலையை ராஜினாமா செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 12 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வரும் டிடிக்கு எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும், காபி வித் டிடி' இவரது பிரத்யேக நிகழ்ச்சியாகும். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம். 
//tamil.oneindia.com

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்? குமாரசாமிக்கு கொடுக்கப்பட்ட தொகை 300 கோடி? savukkuonline

savukkuonline.com"
இந்த பணத்தை பெங்களுருக்கு சென்று குமாரசாமியிடம் சேர்த்தது, சென்னையைச் சேர்ந்த வைர வியாபாரி கீர்த்திலால் மற்றும் டாக்டர் சிவக்குமார். இந்த ஆபரேஷனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, தேவையான வசதிகளை செய்து கொடுத்தது, மக்கள் டிஜிபி ராமானுஜம்
“என் வாழ்க்கையில் இது போல வேதனை ஏற்படுத்திய ஒரு பொது நிகழ்வை நான் பார்த்தே கிடையாது. மிகவும் மோசமான ஒரு கையறு நிலையில் இருந்ததாக உணர்ந்தேன்” என்று கூறினார் ஒரு மூத்த பத்திரிக்கையாளர்.
அந்த மூத்த பத்திரிக்கையாளர் குறிப்பிட்ட நிகழ்வு, ஜெயலலிதாவின் பதவியேற்கும் நிகழ்வு. “அப்பட்டமாக லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி கூட்டலைக் கூட சரி பார்க்காமல் தீர்ப்பளிக்கிறார், அதைக் கண்டு ஊரே நகைக்கிறது. ஆனால், கொஞ்சமும் கூச்சமில்லாமல் அந்த தீர்ப்பின் அடிப்படையில், முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார் ஜெயலலிதா. அதை இந்த தேசத்தின் உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நீதிப் பிறழ்வு என்று உரக்க குரல் கொடுக்க வேண்டிய ஊடகங்கள், அவரின் இடைத்தேர்தல் வாக்கு வித்தியாசம் எவ்வளவு என்று கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றன” என்றார்.
அவர் வேதனையில் நியாயம் இல்லாமல் இல்லை.
1975ல், தேர்தல் ரத்து செய்யப்பட்ட பயத்தில், நெருக்கடி நிலையை பிறப்பித்து, இந்தியாவை இந்திரா காந்தி இருளில் தள்ளினார் இந்திரா காந்தி. அடிப்படை உரிமைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன என்று அறிவித்தார். இந்தியாவின் பல மாநில உயர்நீதிமன்றங்கள், அடிப்படை உரிமைகளை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தன. சில நீதிமன்றங்கள், கைது செய்யப்பட்டவர்களை விடுதலையும் செய்தன. இத்தீர்ப்புகளை தெளிவுபடுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. “ஏடிஎம் ஜபல்பூர்” என்று பிரபலமாக அன்று அழைக்கப்பட்ட வழக்கில், ஐந்து நபர் கொண்ட நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.
“27 ஜுன் 1975 நாளிட்ட குடியரசுத் தலைவரின் உத்தரவுப்படி, எந்த நபருக்கும், அரசியல் அமைப்புச் சட்ட ஷரத்து 226ன் கீழ் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தால், அந்த கைது தவறாக இருந்தாலோ, விதிகளை மீறி இருந்தாலோ, சட்டவிரோதமாக இருந்தாலோ, அல்லது உள்நோக்கத்தோடு பிறப்பிக்கப் பட்டிருந்தாலோ, உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் இருந்தாலோ, அதை எதிர்த்து ஆட்கொணர்வு மனுவோ, அல்லது ரிட் மனுவோ தாக்கல் செய்ய இயலாது” என்று தீர்ப்பளித்தனர்.
ஆனால், அந்த ஐந்து நபர் நீதிபதிகளில் ஒருவரான எச்.ஆர்.கண்ணா, இதை எதிர்த்து தீர்ப்பு எழுதினார். அவரின் தீர்ப்பு குறித்து, தலையங்கம் எழுதிய நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை, இந்தியா, மீண்டும் ஜனநாயகப் பாதைக்கு திரும்பி, ஒருவருக்கு நினைவுச் சின்னம் எழுப்புமேயானால், அது எச்.ஆர் கண்ணாவுக்காகத்தான் இருக்க வேண்டும் என்று தலையங்கம் எழுதியது. அன்று இந்திராவுக்கு எதிராக முதுகெலும்போடு இருந்த ஒரே நீதிபதியாக இருந்தார் நீதியரசர் எச்.ஆர்.கண்ணா.

ஞாயிறு, 21 ஜூன், 2015

எனது வலைத்தளம் தற்காலிகமாக பதிவுகள் மேற்கொள்ள முடியாமல் போயும் நம்பிக்கை இழக்காமல் அடிக்கடி விஜயம் செய்து என்னை ஊக்கிவித்த அனைத்து வருகையாளருக்கும் எனது அன்பு கலந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இனி எனது பதிவுகள் தொடரும் என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். ஒரு சாதாரண ப்ளாக் மூன்று இலக்கத்தை தொடுவது இலகு அல்ல.அதிலும் சில சமயங்களில் நான்கு இலக்கத்தையும் நமது ப்ளாக் தொட்டு உள்ளமை சமுக வலைதளங்களின் பயன்பாட்டு முக்கியத்துவத்தை காட்டுகிறது.