அவரது அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் ஆங்காங்கு போராட்டம் நடத்துவதாக செய்திகள் வருகின்றன. "மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் அல்லது வேலையில்லா கால நிவாரணமாக மாதந்தோறும் 3,000 ரூபாய் வழங்க வேண்டும்' போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும், இன்று முதல் 10ம் தேதி வரை போராட்டம் நடத்தவிருப்பதாக அவர்களுக்கான சங்கம் ஒன்று அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் பற்றி எந்தவொரு தரப்பினரும் கவலைப்படாத நிலையில், நான் தான் மிகுந்த அக்கறை எடுத்து, 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஏழு பத்திகள் எழுதப்பட்டுள்ளன. இதற்கு கைமாறாகத் தான் அந்த மாற்றுத் திறனாளிகளில் ஒரு சிலர், அரசுக்கு எதிரான இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இன்னும் சொல்லப் போனால், ஊனமுற்றோரை மாற்றுத் திறனாளிகள் என அழைக்க வேண்டுமென்று அறிவித்ததே இந்த ஆட்சியில் தான். அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்பற்றோர் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு முன் இருந்த ஆட்சியில், ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை.
என்னை பொறுத்தவரை, யாருமே எந்த சிரமமும் இல்லாமல் நல வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகத் தான் இந்த வயதிலும், இரவு பகலாக உழைக்கிறேன்; சிந்திக்கிறேன். யாருக்கு என்ன செய்தால் நல வாழ்வு ஏற்படும் என்று தான் நினைத்துக் கொண்டே இருக்கிறேன். இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்தல் வரப் போகிறது என்றவுடன், அதற்குள் அனைத்து தரப்பினரும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள எண்ணுகின்றனர். உண்மையில் அவர்களுக்கு இந்த அரசை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும் என்பது நோக்கமல்ல. ஒரு சில அரசியல்வாதிகள், தங்கள் சங்கங்களை வளர்க்க வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, இந்த அப்பாவிகளை தூண்டிவிட்டு குளிர்காய எண்ணுகின்றனர். இந்த ஆட்சி மாறிவிடும்; பிறகு உங்கள் தேவைகள் எதுவும் நிறைவேறாது என்றெல்லாம் பயப்படத் தேவையில்லை. நிச்சயமாக ஆட்சி மாறாது.
ஏன் மாறப் போகிறது? இந்த ஆட்சியிலே எந்த தரப்பினராவது புறக்கணிக்கப்பட்டது உண்டா? ஊழல்கள் நடந்தது உண்டா? சலுகைகளை எல்லாம் பெறுகிறீர்களா இல்லையா? எனவே, ஆட்சி மாறி விடும்; உங்கள் கோரிக்கைகள் நிறைவேறாமலே போய் விடும் என்றெல்லாம் நினைக்க தேவையில்லை. இந்த அரசை எதிர்த்து போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்பதை எல்லாம் கைவிட்டு, இந்த அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வாரீர் என அழைக்கிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
sathish - cbe,இந்தியா
2010-09-03 05:23:56 IST
தனக்கு தானே புகழ்த்தி கொள்வதில் இவரை மிஞ்ச ஆள் இல்லை என மறுபடியும் நிருபித்து விட்டார்,,,இது என்ன மன்னர் ஆட்சியா??? தானே ஆள்வதற்கு,,,, என்னமோ மக்கள் பயத்தில் அப்படியே இவர் காலில் விழுந்து உங்க ஆட்சிதான் மறுபடியும் வேண்டும் என்ற மாதிரி அல்லவா இவர் பேசுகிறார்,, வயதான காலத்திலும் இந்த பதவி வெறி ஏன் போக மாட்டேன் என்கிறது,, அதுதான் இனி ஏழு ஏழு தலைமுறைக்கு சொத்தும் வாரிசுகளுக்கு பதவியும் வாங்கி கொடுத்து அசைக்கமுடியாத ஒரு அஸ்திவாரத்தை போட்டு விட்டார் அல்லவா,, இனியும் பதவி பதவி என்று கனவு எதற்கு ,, மற்றவருக்கும் வழி விடட்டுமே????...
குரு - சிங்கப்பூர்,இந்தியா
2010-09-03 05:21:31 IST
தன் குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்தித்து ஆட்சி செய்த மஞ்ச துண்டு மாப்பிளை , இப்போது ஏன் அலம்பல் செய்கிறார் ?...
சௌந்தர் - Singapore,இந்தியா
2010-09-03 05:14:08 IST
ஹலோ மஞ்சள் துண்டு, பகல் கனவு பலிக்காது ......
இராமச்சந்திரன் - வெர்ஜினியா,யூ.எஸ்.ஏ
2010-09-03 04:32:51 IST
1 ===="இந்த ஆட்சி மாறி விடும்; பிறகு, மக்களின் தேவைகள் எதுவும் நிறைவேறாது என்றெல்லாம் பயப்படத் தேவையில்லை"=== ஐயோ ...நீங்க இப்படி ஆட்சி மாறாதுன்னு சொல்றதுதான் ரொம்ப பயமா இருக்கு.... 2 ==="ஊனமுற்றோரை மாற்றுத் திறனாளிகள் என அழைக்க வேண்டுமென்று அறிவித்ததே இந்த ஆட்சியில் தான்=== என்ன ஒரு அண்டப்புளுகு ..உங்களுக்கு முன்னரே அது ஐ.நா வில் போட்ட தீர்மானம்... 3 ==="யாருக்கு என்ன செய்தால் நல வாழ்வு ஏற்படும் என்று"=== உங்க குடும்பத்து ஆட்களைப்பத்தி தான் சொல்றீங்க... 4 ==="ஏன் மாறப் போகிறது? இந்த ஆட்சியிலே எந்த தரப்பினராவது புறக்கணிக்கப்பட்டது உண்டா? ஊழல்கள் நடந்தது உண்டா?"=== ஊழல் நடக்கவில்லை....வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது... ஏன் மாறப்போகிறது..? உங்களுக்கு ஒன்னு நியாபகம் இருக்கா... 1996 - 2001 ல் நடந்த உங்கள் ஆட்சி பெரிய அளவில் ஊழல் வெளியில் இல்லாமல் இருந்தது...ஆனால் 2001 ல் தி.மு.க தோற்றது...காரணம் மக்களுக்கு தேவை மாற்றம்... அதே போல இருமடங்கு இப்போது ஊழல் மக்கள் மன மாற்றம் உள்ளது... அதனால் கண்டிப்பாக மாறும்.....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-09-03 04:30:30 IST
மக்களின் தேவையே இந்த ஆட்சி ஒழியவேண்டும் என்பது தானே?...
மொக்க பய - சென்னை,இந்தியா
2010-09-03 04:30:07 IST
எப்டி மாறும்....அது தான் பெட்டி பெட்டி ஆ பணம் ரெடி பண்ணி வெச்சசுருக்கீங்களே !! இளைஞர்களுக்கு வழி விடு யா...
சுப்பிரமணியம் - raleigh,இந்தியா
2010-09-03 04:06:08 IST
மாட்டினாரு யா மஞ்ச துண்டு !! வாசகர்கள் கைல இடியாப்பம் ஆக போறார் !!...
veeyesvee - chennai,இந்தியா
2010-09-03 03:30:22 IST
கட்டாயம் இந்த ஆட்சி மாறுது, ஏன்னா செத்து போன 2 அல்லது 3 லட்சம் ஈழ தமிழனின் ஆவி சும்மா விடாது...
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-09-03 02:45:00 IST
அய்யா குறுக்கு வழியில் தேர்தலை சந்திப்பதை விட ஜனநாயகத்தை நம்பி தேர்தலை சந்திக்கின்ற வழியை பாருங்கள், எப்பவுமே, பணம், குண்டர்கள், மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் பக்கபலமாக இருக்காது... மக்கள் எங்க அம்மா ஜெயலலிதா பக்கம் சாய்ந்து விட்டார்கள். கவர்ச்சி திட்டங்களை அறிவித்து மக்களை இனிமேலும் மாக்களாக மாற்ற முடியாது உத்தம தாத்தா அவர்களே... வரும் தேர்தலில் உங்களுக்கு வரும் படு தோல்வி இந்தியாவுக்கே ஒரு முதல்வர் என்றால் கருணாநிதியை போல இருக்க கூடாது என்று ஒரு பாடமாக அமையும்....
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-09-03 02:44:29 IST
என்னாது ஆட்சி மாறாதா? தமிழக மக்களுக்கு விடிவு காலமே வராதா? இன்றைக்கு நான் கொஞ்சம் வேலை டென்ஷனில் இருந்தேன், ஆனால் இந்த செய்தியை படித்தவுடன் நன்றாக சிரிப்பு வந்து டென்ஷன் குறைந்து விட்டது. சும்மா சொல்லகூடாது ராமதாஸ்கு ஒரு படி மேல மஞ்சள் துண்டு தீய சக்தி காமெடி செய்கிறார். கொஞ்ச நாளாகவே பயத்தில் அறிக்கை மேல அறிக்கை விட்டு அவரும் குழம்பி, மக்களையும் குழப்புகிறார். வயதாகிவிட்டது, என்ன அறிக்கை விடுகிறார் என்று அவருக்கும் புரியல, எங்களுக்கும் புரியல, மஞ்சள் துண்டு போர்த்திய பகுத்தறிவு வேடத்தில் இருக்கும் கோபாலபுரத்து கோமானே, நீங்கள் இன்னும் அந்த மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை நம்பி இது போன்ற அறிக்கை விடுகிறீர்கள், இந்த முறை, பூத் கமிட்டிக்கு ஆட்களை எங்க அம்மா நியமிக்க போகிறார்களே அதுவும், காகித வோட்டு முறையை அமல் படுத்தபோவது உங்களுக்கு தெரியாதா? இன்னும் வர பொது தேர்தலில் நிறைய மாற்றங்கள் நிகழ போகிறது, அதனால் ஒரு முப்பது தொகுதியில் ஜெயிக்கும் வாய்ப்பு இருக்கிறது உங்களுக்கு. ஒரு தப்பை தொடர்ந்து செய்யலாம் என்று கனவு காணாதீர்கள், ஒரு தப்பை ஒன்று அல்லது இரண்டு முறை தான் செய்யமுடியும், அதற்க்கு மேல் எதிர் அணியில் இருக்கும் மக்கள் உஷாராகிவிடுவார்கள். ஊர்ல மின்சாரம் இல்ல, குடிக்க தண்ணி இல்ல, சம்பாதிக்க வேலை இல்ல, சாப்பிட சாப்பாடு இல்ல, மழை இல்ல, மணல் கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீரழிவு, ஆறுகளில் தண்ணீர் இல்ல, இதெல்லாம் மீறி நீங்கள் வெற்றிபெறுவீர்கள் என்று நினைகிறீர்களா? நீங்கள் கொடுக்கும் இலவசங்கள் தான் வரும் தேர்தலில் உங்கள் படு தோல்விக்கு அச்சாரமாக மாறபோகிறது......
rajasji - klang,மலேஷியா
2010-09-03 02:02:06 IST
கலைஞரே வணக்கம் !...விவசாயி போராடினான் ...மீனவன் போராடினான் ...டாஸ் மார்க்...சத்துணவு மற்றும் அரசு ஊழியர்கள் போராடினார்கள் ...அரசியல் கட்சிகள் ஜாதீய சங்கங்கள் போராடினார்கள்...இப்படி சமூகத்தின் அனைத்து தரப்பினர்களும் எதிர்த்துக் கொண்டு நிற்கும் போது....இந்த மாற்றுத் திறனாளிகளும் சேர்ந்து கொண்டார்கள் ! புரட்சி வந்து விட்டது..இனி தப்பிக்க முடியாது ! கலாநிதி மாறனிடம் சொல்லி விமானத்தை மீனம் பாக்கத்தில் நிறுத்தி வைக்க சொல்லுங்க ! T R பாலு கிட்ட சொல்லி கப்பல கடலுல நங்கூரம் போட்டு நிறுத்தச் சொல்லுங்க ! நிலமைய சமாளிக்க முடியலனா ...குடும்பத்தோட இந்தோனேஷியாவுக்கு எஸ்கேப் ஆகி அங்கே சுரங்கத் தொழில் பண்ணி பிழைத்துக் கொள்ளலாம் ! முன்னெச்சரிக்கையா...உஷாரா இருங்க !!! நன்றி ! வணக்கம் !!! @ rajasji...
Raj - chennai,இந்தியா
2010-09-03 01:42:57 IST
ஏன் மாறது? நீயும் வர மாட்டே ஜெ வும் வராது. கண்டிப்பா புதுசா ஒண்ணுதான் வரும்....
இளமாறன் - சென்னை,இந்தியா
2010-09-03 01:29:24 IST
ஏய் அப்பா..!! நீ பேசுறத பார்த்தா தெய்வம் ஒன்னுடைய ரூபத்தில் ஆட்சி செய்யறமாதிரி தெரிகிறது. ஒன்னோட ஆட்சி போனால் ஒன்னுடைய குடும்பத்திற்கு பதில் மன்னார்குடி கூட்டம் நாட்ட கொள்ளை அடிக்க போகிறது. ராசா அடித்த அறுபதாயிரம் கோடி, உடன் பிறவா சகோதரி அடித்த கோடிகள்.. இவர்களுக்கெல்லாம் மனோ வியாதி..மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கவேண்டும் என்று. என் தாய் திருநாடே என்று வரும் உனக்கு விடிவு காலம்?...
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-09-03 01:28:00 IST
அய்யா சொல்றது ரொம்ப நிசமான வார்த்தைதான். மாற்றுத்திறனாளிகளே, அவரு சொன்னாமாறி இந்த ஆட்சிலதான் உங்களையும் ஒரு மனுசனா மதிச்சு, சம அந்தஸ்து கொடுத்து, கல்வி, வேலை வாய்ப்பு எல்லாத்திலையும் உரிமை வாங்கி கொடுத்து இருக்காரு. அத கொஞ்சம் நெனச்சு பாருங்க. தானமா கொடுத்த மாட்ட பல்ல புடிச்சு பாத்தாமாறி பண்ணாதீங்க. இவளோ நாலு ஊனமுற்றவன்ன்னு கேலி பண்ணினவங்க எல்லாம் உங்களையும் லைன்ல நிக்க விடுறாங்கன்னா யாரு காரணம்? இவளோ நாலு ஊனமுற்றவன்ன்னு கூப்பிட்டவங்க எல்லாம் கவ்ரவமா மாற்றுத்திறனாளின்னு மரியாதையா கூப்பிடுறாங்களே எப்படி? யாரால? ஊனமுற்றவங்க எல்லோருமே திறனாளி கிடையாது. ஒண்ணுமே திறனோ திறமையோ இல்லாட்டி கூட சாதாரண மனுசன விட பேர்லயே திரனாளின்கிற மரியாதை கொண்டு வந்தது யாரு? அவரு கொஞ்சம் வளைஞ்சு போறாரு என்பதற்காக எல்லோருமே போட்டு படுத்தாதீங்க. அய்யா, நான் சொல்லிக்கிட்டே இருந்தத அப்படியே பிட் அடிச்சு உங்க மொழில சொல்லி இருக்கீங்க. நான் சொன்னாமாறி தேர்தல் வரதுக்குள்ள எல்லாவனும் உங்கள மெரட்டி காரியத்த சாதிச்சுக்கனும்ன்னு பறக்கிராணுக. விடாதீங்க. போட்டு மென்னிலையே மிதிச்சிடுங்க. ரேஸ்க்கல்ஸ். இனிமேலு இந்த அரசாங்க ஊழியன், பணியாளன்னு சொல்லிக்கிட்டு எவனாச்சும் மெரட்டுனா போட்டு தாக்குங்க. அப்போத்தான் மூடிகிட்டு வேலைய பாப்பணுக.. வடுவா......
murugan - qatar,இந்தியா
2010-09-03 01:22:15 IST
ஹலோ ஆட்சி மற்றம அவசியம்...
கனகராஜ் - erode,இந்தியா
2010-09-03 01:18:55 IST
ஆட்சி மாறுலின தான் நாங்க பயபடுவம்.உங்களை யார் இந்த வயதில் கஸ்டபட சொன்னா ....
M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-03 00:52:35 IST
தொடர்ச்சி...ஆட்சி மாற்றம் உறுதி என்பதால்தான் மக்கள் பயம் இல்லாமல் போராட்டம் நடத்துகிறார்கள். உன் குடும்பம் போடும் ஆட்டங்கள் கொஞ்சமா நஞ்சமா. சொல்லி மாளாது. உங்களின் அட்டூழியங்களில் 10 % மட்டுமே பத்திரிகைகள் பட்டும் படாமல் கூறுகின்றனர். மீதமுள்ள 90 % அட்டூழியங்கள் உங்களுக்கு பயந்து இருட்டடிப்பு செய்யபட்டுள்ளது. Thodarum.........
M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-03 00:38:34 IST
ஒத்துகொண்டால் சரி ஆட்சி மாறபோகிறது என்று. அது எப்படி மக்களுக்கு கொடிய நஞ்சை சிறுக சிறுக கொடுத்து விட்டு இன்று அவர்கள் சாகக்கிடக்கும் நிலையில் உங்களின் எடுபிடிகளை அவர்களுக்கு பாலூற்ற அழைக்கிறாய். என்னது ஊழல்கள் நடந்தது உண்டா? ஊழலை தவிர வேறெதுவும் நடக்கவில்லை. மக்களின் வரிப்பணம், உலக வங்கிகடன், மணல் கொள்ளை, சினிமா தயாரிப்பு, தொழில் தொடங்க வருபவர்களிடம் கட்டிங், ரியல் எஸ்டேட், நில ஆக்கிரமிப்பு, இலவச டிவி, காப்பீடு திட்டம் இப்படி சுலபமாக செய்ய கூடிய ஊழல்கள் அனைத்தும் உன் குடும்பத்துக்கு. ரேஷன் அரிசி கடத்தல், பள்ளி, கல்லூரிகளை திறந்து மக்களிடம் கல்வி வியாபாரம், வீடு மனை பட்டா கொடுக்க கட்டிங், ஆசிரியர் நியமனம், இட மாற்றம் இப்படி மக்களிடம் நேரடியாக ஊழல் செய்ய கூடிய அனைத்தும் உன் குடும்ப எடுபிடிகளுக்கும், அல்லகைகளுக்கும். இவற்றையும் தாண்டி மக்களுக்கு மிஞ்சியது மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, கொலை கொள்ளை, அடிப்படை வசதிகளுக்கு போராட்டம், குடும்ப அராஜகம், மிரட்டல் உருட்டல் இவைதான். தெரியாமதான் கேட்கிறேன் இன்னும் தமிழ்நாட்டுல என்ன மிஞ்சி இருக்கு மேலும் சுரண்ட. மக்களின் உயிர் மட்டுமே உள்ளது. ஜெயா வந்து ஏதாவது புதிதாக சிந்தித்து அரசு வருமானத்தை பெருக்கி மக்களுக்கு நல்லது செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். தொடரும்..........
senthilkumar - டென்வர்,யூ.எஸ்.ஏ
2010-09-03 00:22:14 IST
என்ன இந்த முறை வோட்டை நீங்களே போட்டுடலாம்னு இருக்கீங்களா. பட், எனக்கு என்னனா உங்க ஆட்சி தொடரவேண்டும். அப்போது தான் தமிழகம் முனேற்ற பாதையில் பயணிக்கும். வெல்ல எனது வாழ்த்துக்கள்...
ஸ்ரீராம் - சிகாகோ,யூ.எஸ்.ஏ
2010-09-03 00:11:39 IST
"யாருமே எந்த சிரமமும் இல்லாமல் நல வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகத் தான் இந்த வயதிலும், இரவு பகலாக உழைக்கிறேன்; சிந்திக்கிறேன். யாருக்கு என்ன செய்தால் நல வாழ்வு ஏற்படும் என்று தான் நினைத்துக் கொண்டே இருக்கிறேன்" நாளை முரசொலியில் கீழ்க்கண்ட செய்தி வெளியடப்படும்... யாருமே, யாருக்கும் , யாருக்கு --> இதனை என் குடும்பம் என்று மாற்றி படிக்கவும்.. தினமலரில் தவறாக வெளியிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கலங்கபடுத்துகிறார்கள்.. இது குறுக்கே நூல் போடும் நுகதடிகளின் புத்தி... - மு க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக