ஜெயா, சசி கும்பல் ஜெயா சசி கும்பல் முழு தமிழகத்தை மொட்டை அடித்து பழனி படிக்கட்டு ஆண்டிகளோடு உட்காரவைத்தது.
மிழ்நாடு சட்டசபையில் “ ஆமாம் நான் பாப்பாத்தி”யென்று பகிரங்கமாக பெருமையுடன் அறிவித்தவர் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளியென்று பெங்களூருவில் உள்ள பாரப்பன அக்கிரஹாரா என்று அழைக்கப்படும் பார்ப்பன அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பின் போது அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிலையில் தனது பாதுகாப்பு பிரச்சினைகளை முன்வைத்து ஜெயா தரப்பில் சுட்டிக்காட்டியதன் பேரில் தான் பார்ப்பன அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள கருநாடக சிறை வளாகத்திற்குள் சிறப்பு நீதிமன்றம் இடம் மாற்றப்பட்டது. தமிழினவாதிகளால் “ஈழத்தாய்” என்று போற்றப்பட்ட ஜெயலலிதா தனது உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் பாப்பாத்தியின் பெருமையையும், பாதுகாப்பையும் பார்ப்பன அக்ரஹாரம் ‘பாதுகாக்க’வே செய்திருக்கிறது.
மூன்று நீதிமன்றங்களையும், 14 நீதிபதிகளையும், எண்ணற்ற அரசு வழக்கறிஞர்களையும், கணக்கற்ற வாய்தாக்களையும் தாண்டி வானத்து நட்சத்திரங்களையும் விஞ்சும் கோப்புகளையும், ஏழு கடல்களை நிறைக்கும் மசியையும் விழுங்கி சட்டத்தின் சகல சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்ட பின் – உலகம் உருண்டை என்கிற உண்மையை ‘புதிதாக’ உரைத்துள்ளது நீதிமன்றம்.