மின்னம்பலம் - christopher : திருமணம் செய்யாமல் லிவ் இன் உறவில் ஈடுபட்டால் நீங்களும் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள் என கல்லூரி மாணவிகளிடையே உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆனந்திபென் படேல் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 7வது பட்டமளிப்பு விழாவில் நேற்று கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “லிவ்-இன் உறவுகளின் விளைவுகளைப் பார்க்க நீங்கள் விரும்பினால், அனாதை இல்லங்களுக்குச் சென்று பாருங்கள். அங்கு 15 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள், தங்கள் கைகளில் ஒரு வயது குழந்தைகளுடன் வரிசையில் நிற்கிறார்கள்.
சனி, 11 அக்டோபர், 2025
லிவிங் டுகெதர் : ”50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள்” - மாணவிகள் மத்தியில் ஆளுநர் ஆனந்தி பென் கொடூர பேச்சு!
டெல்லியில் தாலிபான் அமைச்சர் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை.! அமைச்சர் ஜெய்சங்கர் மௌனமாக வேடிக்கை பார்த்தார்
அங்கு பெண் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்க மறுத்தார்!
இதில் கலந்து கொண்ட எந்த ஒரு ஆண் பத்திரிகையாளரும் இதை கண்டித்து வெளிநடப்பு செய்யவில்லை என்பது வெட்க கேடு
tamil.oneindia.com - Nantha Kumar R : டெல்லி: அரசு முறை பயணமாக ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முட்டாகி இந்தியா வந்துள்ளார். இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
அதன்பிறகு அவர் நடத்திய பிரஸ்மீட்டில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்துள்ளனர்.
தவே காவுக்கு 40+ இடங்கள் + துணை முதல்வர் பதவி! எடைப்பாடி பழனிசாமி நடிகர் விஜய் கூட்டணி
tamil.oneindia.com - Shyamsundar : சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 40+ இடங்கள் மற்றும் துணை முதல்வர் பதவி கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விஜயிடம் எடப்பாடி பழனிச்சாமி ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடன் டெல்லி பாஜக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
TVK Vijay
கடந்த 48 மணி நேரமாக பாஜகவின் டாப் தலைகள் சிலர் விஜயுடன் நெருக்கமாக பேசி வருவதாக தகவல்கள் வருகின்றன. பாஜக கூட்டணியில் இருக்கும் நடிகர் ஒருவரும் விரைவில் விஜயுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
எத்தனை இடங்கள்?
ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்கா! உலகின் முதல் பெண் பிரதமர்- யாழ்ப்பாண பல்கலை கழகம் அமைத்தவர்
![]() |
![]() |
| Srimavo with Alfred duraiyappa |
ராதா மனோகர் : ஸ்ரீ மாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்க 17 April 1916 – 10 October 2000!
உலகின் முதல் பெண் பிரதமர் என்று மட்டும் கூறிவிட்டு சுலபமாக கடந்து போய்விட முடியாத அளவு அம்மையாரின் சாதனைகள் மிக பெரிது!
பொது வெளியில் ..குறிப்பாக தமிழ் பொதுவெளியில் ஸ்ரீமா அம்மையாரின் சாதனைகள் போதிய அளவு கூறப்படவில்லை!
அதற்கு உரிய காரணமும் எல்லோரும் அறிந்ததுதான்!
தமிழ் தேசிய போர்வையில் வெறுப்பு அரசியல் செய்து கொண்டிருந்த எஸ்ஜேவி செல்வநாயகத்தின் தரகு அரசியல் வியாபாரத்திற்கு 1970 இல் முடிவு கட்டியவர் ஸ்ரீ மாவோ அம்மையார்தான்!
அதன் பின்புதான் தமிழர்களை செல்வநாயகம் ஆயுத கும்பல்களிடம் தாரை வார்த்தார்!
தமிழர்களை தீராத படுகுழியில் தள்ளிவிட்டார்!
உண்மையில் ஸ்ரீமாவோ அம்மையாரும் செலவநாயகமும் நெருங்கிய குடும்ப நண்பர்கள்தான்!
சேனாநாயக்காவின் ஐக்கிய தேசிய கட்சிக்கும் அதன் நட்புறவு கட்சியான தமிழ் காங்கிரசுக்கும் எதிராகத்தான் செல்வா தமிழரசு கட்சியை நிறுவினார்.
ஸ்ரீமாவோ அம்மையாரின் கணவர் எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்காவோடு மனப்பூர்வமான ஒரு நட்புறவு அடிப்படையில்தான் பரஸ்பரம் சிங்கள தமிழ் இனவாத அரசியலை இருவரும் முன்னெடுத்திருந்தனர்.
1960 இல் திரு அல்பிரட் துரையப்பாவின் நாடாளுமனற நுழைவானது தமிழரசு கட்சியின் தரகு அரசியல் வியாபாரத்திற்கு ஒரு சவாலாக மாறியது.
வெள்ளி, 10 அக்டோபர், 2025
உதயநிதி காலில் விழுந்த 74 வயது காந்திராஜன்- வேட்பாளரை முடிவு செய்ததா திமுக? சுயமரியாதை கேலிப்பொருளாகிறதா?
![]() |
மின்னம்பலம் : வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியின் 2 நிகழ்வுகள் தற்போது பெரும் பேசுபொருளாகி இருக்கிறது.
1) வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன், துணை முதல்வ உதயநிதி ஸ்டாலினின் காலில் விழுந்து கும்பிட்டது
2) வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதன் இல்ல திருமண விழா
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி.. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டது.
G D நாயுடு அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?
Rajasekar Pandurangan · அப்படி என்னபடி சாதனை செய்துவிட்டார் ஜி. டி நாயுடு?
இந்தியாவின் முதல் உள்நாட்டு மின் மோட்டார்
ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகளில் முதன்மையான மற்றும் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது எதுவென்றால், இந்தியாவின் முதல் உள்நாட்டு மின் மோட்டார் ஆகும்.
ஆண்டு மற்றும் இடம்: 1937 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள பீளமேட்டில் அமைந்திருந்த அவரது தொழிற்சாலையான NEW (National Electric Works)-ல் இந்த மோட்டார் தயாரிக்கப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு!
hindutamil.in : சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருந்த முக்கிய ரவுடி நாகேந்திரன் நேற்று காலை உடல்நலக் குறைவால் உரிழந்தார். சென்னை வியாசர்பாடியை பூர் வீகமாகக் கொண்டவர் நாகேந்திரன் (52). இவருக்கு உஷா மற்றும் விசாலாட்சி என்ற இரு மனைவிகள். 3 பிள்ளைகள் உள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான மூத்த மகன் அஸ்வத்தாமன் காங்கிரஸ் கட்சியின் மாணவரணி முன்னாள் தலைவராகவும் இருந்தார். 2-வது மகன் அஜீத்ராஜ் பாஜக-வில் பொறுப்பில் உள்ளார். 3-வது மகள் ஷாலினி. நாகேந்திரன் ஆரம்ப காலத்தில் ரவுடி வெள்ளை ரவியுடன் இருந்தார்.
வியாழன், 9 அக்டோபர், 2025
மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்களுக்கு எதிராக உருவாகி வரும் ....
மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்களுக்கு எதிராக உருவாகி வரும் பல விடயங்களை பற்றி ஓரளவு நடுநிலைமையாக எடுத்து காட்டுகிறது இந்த காணொளி
இது பற்றி ஒன்றிய அரசுக்கோ சங்கிகளுக்கோ எந்த புரிதலும் இருப்பதாக தெரியவில்லை
சங்கிகளின் மதவாத அரசியல் மத்திய கிழக்கு நாடுகளில் மிக பாரதூரமான விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்த கூடும்
இதில் கூறப்படும் விடயங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமல்ல மேற்கு நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் பொருந்தும்.
இது இலங்கையர்களுக்கு விதி விலக்கல்ல
தலைமை நீதிபதி - மிகவும் அதிர்ச்சியடைந்தோம் - காலணி தாக்குதல் குறித்து மெளனம் கலைத்த.. Suprem Court Judge B.R.Gawai
நக்கீரன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி சனாதனத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பரப்பப்படும் கருத்துகளை தடுப்பது தொடர்பான வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நடந்து வந்தது.
அப்போது அமர்வு மேடையை நோக்கி வந்த ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் “சனாதனத்தை இழிவு செய்வதை இந்தியா(ஹிந்துஸ்தான்) சகித்துக்கொள்ளாது” என்று கூச்சலிட்டபடி காலணியை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வீச முயன்றார்.
இதை கண்டு நீதிமன்றத்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள், சரியான நேரத்தில் வழக்கறிஞரை தடுத்து நிறுத்தி அவரை வெளியே அழைத்துச் சென்றனர்.
அப்போதும் அதே கோஷத்தை தொடர்ந்து முழங்கியபடி சென்றுள்ளார்.
இயக்குனர் ஜெயதேவியை ஏமாற்றிய கே பாலச்சந்தர் - மௌலி- வேலு பிரபாகரன் ....
மீரா மஹதி : தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களோ பெண் தயாரிப்பாளர்களோ அதிகம் இல்லை என்று குறை சொல்லும் நாம்
. ஜெய தேவி என்ற ஒரு legendary Director / Producer ரை கவனிக்க மறந்து விட்டோம் என்று சொல்வதை விட கொண்டாட மறந்து விட்டோம் என்றே சொல்லலாம்
.இவரை எங்கேயோ பார்த்த ஞாபகம் உங்களுக்கு இருக்கும் சிவாஜி த பாஸ் படத்தில் செகண்ட் ஹாபில் ஹீரோயினை ஒரு போலீஸ் வந்து கூட்டிக் கொண்டு சென்று ரஜினியை பற்றி வாக்குமூலம் வாங்குவார் அந்த rugged போலீஸ் தான் இந்த ஜெயதேவி..
.legendary cinematographer PC Sreeram அவர்களுக்கு முதல் பட வாய்ப்பு இவர்தான் கொடுத்திருக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா
. அது மட்டுமல்ல போஸ்டர் ஓட்டுபவராக தன் வாழ்க்கையை தொடங்கிய தயாரிப்பாளர் கலை புலி தானு அவர்களுக்கு தயாரிப்பாளராகவும் வாய்ப்பை கொடுத்தவரே இவர்தான்
காவல்துறைக்கு கண்டிஷன் போடும் நடிகர் விஜய் போட்ட கண்டிஷன்கள்
கரூரில் .41 பேர் இறப்புக்கு காரணமாக இருந்த விஜய்
தனி ஒருவன் பாதுகாப்பு க்கு
காவல்துறையிடம் மனு செய்துள்ளார்
.. இந்தியா அரசு அவருக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கியிருக்கிறது
... ஆனாலும் கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டோரை காண விஜய்க்கு கீழே குறிப்பிட்ட பாதுகாப்பு தேவை என்று மனு செய்திருக்கிறார்..
....அடேங்கப்பா இவன் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா என்னக் கொடுமை சார் இது !
டிஜிபி அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட #தவெக_மனுவில்_உள்ள_கன்டிஷன்கள்.
1) சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் தான் வருவேன்.
2) திருச்சி விமான நிலையத்தில் யாருமே இருக்கக்கூடாது ரசிகர்கள் மற்றும் பயணிகள் உட்பட.
3) திருச்சியிலிருந்து கரூர் வரை கிரீன் காரிடார் அமைத்து தரவேண்டும்.
அதாவது எமர்ஜென்சிக்கு ஆஸ்பிட்டல் to ஆஸ்பிட்டல் ஒரு ஹார்ட் (இதயம்) எடுத்துட்டுப்போனால் ரோடு எப்படி இருக்குமோ அப்படி கிளியராக இருக்கவேண்டும்.ஸ்பீட் பிரேக் கூட இருக்கக்கூடாது.
4) கரூரில் இவர் சந்திக்கும் குடும்பத்தின் வீட்டைச் சுற்றி, ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு யாருமே இருக்கக்கூடாது.
(ஊரையே காலி பண்ணி வைக்கணுமாம்)
5. ஊடகங்கள் யாரையும் அனுமதிக்கக்கூடாது.
கரூர் செல்வதற்கு விஜய் போட்ட கண்டிஷன் காவல் துறை போட்ட பதில் கண்டிஷன்
மின்னம்பலம் - Kavi : : விஜய் கரூர் செல்வது எப்போது? போலீஸ் சொன்ன தேதி!
விஜய் கரூர் செல்வதற்கு காவல்துறை தரப்பில் இரண்டு தேதிகள் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
ஆனால் விஜய் நேரில் செல்லாமல் வீடியோ கால் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 8) தவெக வழக்கறிஞர் அறிவழகன், சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு சென்று விஜய் கரூர் செல்வதற்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.
புதன், 8 அக்டோபர், 2025
கரூரில் ஜனநாயகன் பட ஷூட்டிங் - விஜய் பயன்படுத்திய 63 ட்ரோன்கள், ArriAlexa 35 கேமராக்கள் அம்பலமான மோசடி
![]() |
நடிகர் விஜய் தனது புதிய படமான ஜனநாயகன் படத்திற்கான ஒரு காட்சியாகத்தான் கரூர் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்! இது பெரிய அதிர்ச்சி அளிக்கும் விடயம்!
தனது படப்பிடிப்புக்காக மக்களை ஆபத்தில் சிக்கவைத்து 41 பேரின் உயிருக்கு உலை வைத்துவிட்டார்.
எல்லா விடயமும் அம்பலமாகி விட்டது.
கீழே உள்ள விபரங்களை கவனமாக படியுங்கள்
Vasu Sumathi : ·
தமிழ்நாடு அரசின் SIT விசாரணையில் கரூரில் பயன்படுத்தப்பட்ட 63 ட்ரோன்கள், ArriAlexa 35 போன்ற சினிமா படப்பிடிப்பு கேமராக்கள், ஜனநாயகன் படத்தில் கதாநாயகனுக்கு கூடும் பெருங்கூட்ட காட்சிகளுக்காக விஜய்யின் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தியது தெரிந்துவிடும். (விபத்து நடக்காமலிருந்தால் இதை அந்த படத்தில் சேர்த்திருப்பார்கள்)
மேலும் கரூரில் நடந்தது ஒரு விபத்துதான். இதில் எந்த சதியும் இல்லை என்று நிரூபணம் ஆகிவிட்டால், தன் குற்றத்தை மூடி மறைக்க தவெக செய்த பொய் பிரச்சாரம் தவிடு பொடியாகிவிடும். அதனால்தான் விஜய் SIT க்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
“AeroDefCon 2025” - மூன்று நாள் சர்வதேச மாநாடு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (7.10.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற டிட்கோ, BCI ஏரோஸ்பேஸ் (பிரான்ஸ்), மற்றும் தமிழ்நாடு ஏரோஸ்பேஸ் தொழில் வளர்ச்சி கூட்டமைப்பு இணைந்து வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கான “AeroDefCon 2025” என்ற மூன்று நாள் சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்தார்.
கோவை அவிநாசி சாலை பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்: முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்
hindutamil.in : கோவை அவிநாசி சாலை பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்: முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்
கோவை அவிநாசி சாலையில் 10.10 கி.மீ. தூரத்துக்கு கட்டப்பட்டுள்ள புதிய உயர்மட்ட பாலம்.
கோவை: கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள, தென்னிந்தியாவிலேயே நீளமான உயர்மட்ட பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயரைச் சூட்டிய முதல்வர் ஸ்டாலின், மக்கள் பயன்பாட்டுக்கு நாளை (அக். 9) திறந்து வைக்கிறார். கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.1,791.23 கோடியில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், 7 அக்டோபர், 2025
கரூர் விபத்து ஜோசியர கணித்த நேரத்தால் நடந்தது? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
மின்னம்பலம் -vanangamudi : செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டபோது கூட்டம் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்த துயர சம்பவத்திற்கு யார் காரணம் எங்கே நடந்த தவறு என கண்டுபிடிக்க, சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து அதன் அதிகாரியாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கை நியமித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
அதன்படி சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கார் மோதி 3 பெண்கள் உயிரிழப்பு! கம்பளை kandy
இந்த விபத்து நேற்று திங்கள்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்று வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நான்கு பெண்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நான்கு பெண்களும் சமய வழிபாடு நிகழ்வு ஒன்றுக்கு செல்வதாக வீதியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின்போது மூன்று பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு பெண் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டுள்ளதாக பொலி ஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் கம்பளை பொலிஸார் விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நக்கீரன் கோபால் : பாஜக பாதுகாப்பில் விஜய்.. டெல்லியில் தலைமறைவான தலைவர்கள் -
tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை: "41 பேரை காவு கொடுத்தும், 10 நாட்களாக விஜய், 3 நிமிட வீடியோவில் பேசியதோடு வீட்டிலேயே இருக்கிறார்.
பாஜகவின் பாதுகாப்பில் இருக்கிறார் விஜய். தவெக நிர்வாகிகளை பாஜக பாதுகாப்பாக வைத்துள்ளது" என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக தெரிவித்துள்ளார் நக்கீரன் கோபால்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர்.
திங்கள், 6 அக்டோபர், 2025
Actor Vijay - பேபிக்கு Y பிரிவு பாதுகாப்பு வேற ! சொந்த முடிவும் எடுக்க முடியாது.
Balasubramania Adityan : : கொலு பொம்மை மாதிரி இவனை வேளா வேளைக்கு சோறு போட்டு மேக்அப் போட்டு ஒவ்வொரு மாடல் டோப்பா மாட்டி வளர்த்து வச்சுருக்காங்க...
பேசச் சொல்வதை பேசிட்டு போய் ஜாலியா இருக்க வேண்டியது மட்டும் தான் இவன் வேலை !
ஏதோ பெரிய பணக்ககாரன் மாதிரி இவனுக்கு பிம்பத்தை ஏற்படுத்தி மத்திய அரசு மூலம் இந்த அமுல் பேபிக்கு Y பிரிவு பாதுகாப்பு வேற !
சொந்த முடிவும் எடுக்க முடியாது.
சுயமா ஜட்டி கூட மாட்டத் தெரியாத சினிமா பொம்மைக்கு முடிவும் எடுக்க தெரியாது.
இவ்வளவு பணம் வச்சிருக்கேன்னு பீலா விடும் இந்த பொம்மை 41 பேர் வீட்டுக்கு போகவும் மாட்டான்.
நயா பைசா கொடுக்கவும் மாட்டான்.
சொல்வதை செய்யும் இந்த ரோபோவுக்கு இது மாதிரி நெரிசல் பலி நடத்த போறாங்க என்பதும் தெரியாது.
இன்னொரு கொலு பொம்மை 45 வயசு கனவுக்கன்னி திரிஷாவை காட்டி அவன் ரசிகர்களை ஏமாற்றி வச்சிருக்கான்.
அதுவும் அவன் இல்லை. அவனது சினிமா முதலாளி.
ஞாயிறு, 5 அக்டோபர், 2025
11ளின் உயிரை குடித்த இருமல் குழந்தைகமருந்து – மருத்துவர் கைது! மத்திய பிரதேசம்
மின்னம்பலம்ம் - Pandeeswari Gurusamy : மத்திய பிரதேசத்தின் சிந்துவாரா மாவட்டத்தில் இருமல் மருந்தை குடித்த 11 குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ராஜஸ்தானின் சிகாரிலும் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் உள்ளிட்ட சில மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
LIVE: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நேரலை!
ராதா மனோகர் : சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா விழா செங்கல்பட்டில் நடந்தேறியது!
தமிழர்களின் முன்னோக்கிய சிந்தனை புரட்சியின் வெற்றி விழாவாகத்தான் இந்த நிகழ்வை நான் பார்க்கிறேன்.
ஆயிரம் ஆண்டுகளாக உரத்து குரல் எழுப்பவே பலமற்று இருந்த தமிழர்களின் பிடரியை உசுப்பி உரிமை குரல் ஒலிக்க வைத்த இயக்கம் சுயமரியாதை இயக்கம்.
வெறும் அரசியல் மேடைகளில் மாநாட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நாட்டின் சட்டங்களாக அதிக அளவில் மாற்றிய பெருமை உலகிலேயே சுயமரியாதை இயக்கத்திற்குதான் உண்டு!




