சனி, 13 ஜனவரி, 2018

சுப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் ஜாதி இல்லையா? புரிஞ்சுண்டு நன்னா பாடுரேடி கொழந்த... என்பது என்ன மொழி?

Kavin Malar :பாடகர் ஸ்ரீனிவாஸின் பதிவு ஒன்றை வாசித்தேன். இசைக்கு சாதி கிடையாது. அதில் சாதியைப் புகுத்தாதீர்கள் என்கிறார்.
பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்திய CASTELESS COLLECTIVE குழுவினரின் இசை நிகழ்ச்சியின் பிரம்மாண்ட வெற்றி பலரை எரிச்சலூட்டி இருப்பதை உணர முடிகிறது.
இசைக்கு சாதி கிடையாது என்கிறார் ஸ்ரீனிவாஸ். பல பத்தாண்டுகளாக இங்கே நடக்கும் மார்கழி சபாக்களில் சாதி இல்லையா? கர்நாடக சங்கீதத்தில் சாதி இல்லையா? சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் வந்து பேசும்போதும் ’நன்னா பாடுறேடி கொழந்த’ என்று சொல்வதில் சாதி இல்லையா? அசுர வாத்தியங்கள் என்று சிலவற்றை ஒதுக்கிவைத்து குறிப்பிட்ட சாதியினர் மட்டும் வாசிக்க, ஆதிக்க சாதிகள் வாசிக்காமலேயே இருக்கிறார்களே…அதில் சாதி இல்லையா?
பறை எனும் ஆதி இசைக்கருவியை ஒதுக்கி ஒரு சாதியினருக்கு என்று வைத்ததில் சாதி இல்லையா?

இன்றைக்கு தலித் மக்களின் கானாவுக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் ஏன் உங்களுக்கு உறுத்துகிறது. அவர்கள் ஏற்படுத்திக்கொண்ட மேடையில் அவர்கள் பாடுகிறார்கள். மியூஸிக் அகாடமிக்கெல்லாம் கூட இன்னும் வந்துவிடவில்லை கானா. டி.எம்.கிருஷ்ணா ஆல்காட் குப்பத்திற்கு கர்நாடக சங்கீதத்தைக் கொண்டு வந்து தருகிறார் என்றாலும் உழைக்கும் மக்களின் கானம் இதுவரை சபாக்களில் ஒலிக்காமல் இருப்பதில் சாதி இல்லையா? இந்த மார்கழி சபாக்களில் இடமில்லாததால் இங்கே பொங்கு தமிழ் பண்ணிசை என்று தமிழிசை கச்சேரிகள் நடத்தப்பட்டதை நீங்கள் அறிவீர்களா?

சாலையோரக் கடைகளுக்கும் ஆதார் கட்டாயம்!

சாலையோரக் கடைகளுக்கும் ஆதார் கட்டாயம்!
மின்னம்பலம் :சென்னையில் சாலையோரங்களில் பெட்டிக் கடைகளை வைக்க ஆதார் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 13) உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் சாலையோரங்களில் பெட்டிக் கடைகள் வைக்க அனுமதி வழங்கச் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று (ஜனவரி 13) உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்பு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில் ஆஜராகி விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் பெட்டிக்கடை உரிமம் பெறுபவர்கள், சில நாட்களில் அவற்றை வேறு நபர்களுக்கு விற்று விடுகின்றனர் எனக் குற்றம் சாட்டப்பட்டது.

பென்னி குயிக்கின் கல்லறை அகற்றப்படக்கூடாது: இங்கிலாந்து தேவாலய அமைப்பிடம் வைகோ வலியுறுத்தல்

tamilthehindu :பென்னி குயிக், இங்கிலாந்து தேவாலாய குழுவினருடன் வைகோ;படம்: சிறப்பு ஏற்பாடு தென் மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆங்கில பொறியாளர் ஜான் பென்னி குயிக். கடவுள் படத்தினூடே பென்னி குயிக் படத்தையும் வைத்து கும்பிடும் வழக்கம் இன்றும் தென்மாவட்ட மக்களிடம் உண்டு.
காரணம் பென்னி குயிக் அரும்பாடு பட்டு கட்டிய முல்லை பெரியாறு அணை தென்மாவட்ட விவசாய மக்களின் துயர் தீர்த்து வரும் அணையாகும். அணைக்கட்ட அதிக செலவு பிடித்த நேரத்தில் ஆங்கில் அரசு பின் வாங்கிய நேரத்தில் விடாபிடியாக தன் சொத்துக்களை விற்று, மக்களை திரட்டி அணையை கட்டி முடித்தவர் பென்னி குயிக்.

சிதம்பரம் வீட்டில் ரெய்ட் ... நீதிபதிகள் விவகாரத்தை திசை திருப்ப அமித் ஷா கும்பல் அடாவடி?

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு Veera Kumar - Oneindia Tamil : எனது வீட்டின் படுக்கையறையில் சோதனை நடத்தினர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு- வீடியோ சென்னை: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் இன்று நடைபெற்ற அமலாக்கத்துறை ரெய்டின் பின்னணி குறித்து சில சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விவகாரம் தொடர்பாக சென்னையிலுள்ள, ப.சிதம்பரம் இல்லத்திலும், காரைக்குடியிலுள்ள இல்லத்திலும், டெல்லியிலுள்ள இடங்களிலும் இன்று ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.
சில மணி நேர ரெய்டுக்கு பிறகு எந்த ஆவணத்தையும் கைப்பற்றவில்லை என அமலாக்கத்துறை கூறியுள்ளது.

 சிதம்பரம் கருத்து---
இதனிடையே நிருபர்களிடம் பேசிய ப.சிதம்பரம், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், அமலாக்கத்துறை தங்களிடம் ரெய்டு நடத்தும் அதிகாரமே கிடையாது, இதில் எனது பெயரோ, எனது மகன் பெயரோ முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார். இது நகைப்புக்குரிய தவறு என்றும் அவர் சொன்னார். சட்டம் படித்த ப.சிதம்பரத்தின் இந்த கருத்தை உதாசீனப்படுத்திவிட முடியாது. ஒரு வழக்கில், அதிகாரம் இல்லாத விசாரணை அமைப்பு ஏன் ரெய்டு நடத்த வேண்டும்?

கர்நாடக முதல்வர் : காவிரி நீரை திறந்து விடமுடியாது

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்
மாலைமலர் :தமிழக முதல்வரின் கடிதத்துக்கு பதிலளித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பெங்களூரு: காவிரியில் இருந்து 7 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிடுமாறு கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேட்டூர் அணையில் தற்போது 21.27 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. வரப்போகும் வெயில்காலத்தில் குடிநீர் மற்றும்  விவசாய தேவைகளுக்கு இது போதுமானதாக இருக்காது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

எச்.ராஜா .. பார்பனீயம் ... வைரமுத்துவை அவரின் மக்களை கொண்டே.... காலம் காலமாக இந்த சதிதானே? ..

Ganesh Babu :  பார்ப்பனீயத்திற்கு எப்போதும் ஒரு இயல்பு உண்டு. தனக்கு ஒருவர் பகை இலக்கு என்றால், அவரை பெரும்பான்மை மக்களுக்கும் பகை இலக்காக முன்னிறுத்துவது.
அண்ணல் அம்பேத்கர் முதல் தற்போது கவிஞர் வைரமுத்து வரை அதுதான் நிலை.
பலநூற்றாண்டுகளாக 'இறைத் தொண்டு' என்றப் பெயரில் நம் வீட்டுப் பெண்களை எல்லாம் தேவதாசிகளாக ஆக்கிவைத்திருந்த பார்ப்பனர்களுக்கு இன்று கவிஞர் வைரமுத்து மீது தாளமுடியாதக் கோபமாம். தங்கள் சமூகத்தில் பிறந்ததாக நம்பப்படும் ஆண்டாள் 'தேவதாசியாக இருக்கலாம்' என்று ஒரு ஆய்வின் கருத்தை வைரமுத்து மேற்கோள் காட்டியதுதான் பார்ப்பனர்களின் கோபத்திற்குக் காரணமாம். எங்கே போய் முட்டிக்கொள்வது!
அதுவும் எச்.ராஜாவைப் போன்ற hardcore பார்ப்பனர், 'அவன் தலையை வெட்டியிருக்கவேண்டாமா? கைக்கால்களை உடைத்திருக்கவேண்டாமா?' என்று பார்ப்பனரல்லாத மக்களைத் தூண்டிவிடுகிறார்.

சென்னையில் உள்ள ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை .

Kalai Mathi - Oneindia Tamil சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7.30 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் 6 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் வீட்டில் ப.சிதம்பரம் இல்லை என கூறப்படுகிறது, அவரது மனைவி நளினி சிதம்பரம் மற்றும் அவரது மருமகள் உள்ளதாக கூறப்படுகிறது.  இதேபோல் சென்னை மற்றும் டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காரைக்குடியிலுள்ள ப.சிதம்பரம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது

இலங்கையில் பெண்கள் மது வாங்குவதற்கு இனி தடை இல்லை

tamilthehindu :கொழும்பு: இலங்கையில் பெண்கள் மதுபானங்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் விதிக்கப்பட்டு இருந்த தடையை அரசு திரும்ப பெற்றது. இலங்கையில் கடந்த 1979ம் ஆண்டு முதல் பெண்கள் மதுபானங்கள் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும், மதுபானங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் பெண்கள் பணியாற்றவும்  அரசு தடை விதித்திருந்தது. எனினும், பல இடங்களில் பெண்கள் மதுபானங்களை விற்பதிலும், மதுபானங்களை பரிமாறும் சேவையிலும் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.

கலைஞர் தொண்டர்களை சந்திக்கிறார் .. பொங்கலை முன்னிட்டு ..

tamilthehindu :திமுக தலைவர் கலைஞர்  நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொண்டர்களை சந்திக்கவிருக்கிறார்.
15 மாதங்களுக்குப் பிறகு அவர் தொண்டர்களை சந்திக்கவிருப்பதால் திமுகவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
உடல்நலம் குன்றியபின் கலைஞர்  முழு ஓய்வில் இருந்து வருகிறார். அண்மையில் அவர் முரசொலி அலுவலகத்துக்கு வருகை தந்தார். அதன்பின்னர் அண்ணா அறிவாலயத்துக்கு ஒருமுறை வந்தார். சமீப காலமாக பிரதமர் மோடி தொடங்கி அரசியல் தலைவர்கள் பலரும் கலைஞரை  நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

5,௦௦௦ கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு ! சசிகலா மன்னார்குடி மாபியாவின் கதை .

தினமலர் :சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்கள், 5,000 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. சசி உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களது போலி நிறுவனங்கள் என, 200க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அவர்கள் வாங்கிக் குவித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும், கணக்கில் வராத சொத்து, பணம், நகை மற்றும் முதலீடுகள் என, தோண்ட தோண்ட பூதம் கிளம்புவதால், வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மறைவுக்குப் பின், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி ஆகியோர், வரித்துறை சோதனையில் சிக்கியதை பார்த்து பீதியடைந்த சசிகலா குடும்பத்தினர், 25 ஆண்டுகளாக, தாங்கள் குவித்த பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை, நம்பிக்கையான இடங்களில் பதுக்கினர்.

முகவரி இல்லா பாஸ்போர்ட்; மத்திய அரசு திட்டம்

தினமலர் :புதுடில்லி : பாஸ்போர்ட்டில், இருப்பிட விபரங்களை அச்சிடுவதை நிறுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
 அதனால், இனி பாஸ்போர்ட்டை இருப்பிட அடையாளத்துக்காக பயன்படுத்த முடியாது. பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில், புகைப்படம் மற்றும் தனிநபர் விபரங்கள் இடம் பெறுகின்றன. கடைசி பக்கத்தில், பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் இருப்பிட முகவரி உள்ளிட்ட விபரங்கள் இடம் பெறுகின்றன. மாற்றம்: கடந்த, 2012 முதல், அனைத்து பாஸ்போர்ட்களிலும், 'பார் கோடு' இடம் பெறுகிறது. அதில், அனைத்து விபரங்களும் பதிவாகின்றன. அதனால், பாஸ்போர்ட்டில் கடைசி பக்கத்தில் இருக்கும் இருப்பிட விலாசம் போன்றவற்றை அச்சிடுவதை நிறுத்துவதற்கு, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இனி வழங்கப்பட உள்ள பாஸ்போர்ட்களில் இருந்து, இந்த மாற்றம் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் இதயம் நின்ற போது சிகிச்சை தர அனுமதியளிக்கவில்லை – டாக்டர் சுவாமிநாதன்

ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழந்த போது மருத்துவமனையில் இருந்தேன், ஆனால் சிகிச்சை அளிக்க என்னை அனுமதிக்கவில்லை என்று அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் சுவாமிநாதன் புகார் கூறியுள்ளார். தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து, அவரின் மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழந்ததாக கூறப்பட்ட போது சிகிச்சை அளித்த டாக்டர் சுவாமிநாதன், விசாரணை கமிஷன் உத்தரவுப்படி, நீதிபதி ஆறுமுகசாமி முன் ஆஜராகி இன்று விளக்கமளித்தார். சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனும் விசாரணை ஆணையத்திற்கு வந்தார்.
இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சைகள் குறித்த அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து இன்று சிகிச்சை தொடர்பான ஆவணங்களை இரண்டு சூட்கேஸ்களில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் தாக்கல் செய்துள்ளது.

ஆ ராசாவின் 2 G புத்தகத்தால் அலறும் காங்கிரஸ்... பாஜக.. 10 முக்கிய குற்ற சாட்டுகள்



Veera Kumar POneindia Tamil அரசை காப்பாற்ற என்னை சிறையில் தள்ளினார்கள்.. ஆ.ராசா. புத்தகத்தில் பகீர் குற்றச்சாட்டு- வீடியோ சென்னை: 2ஜி வழக்கில் என்ன நடந்தது என்பதை 15 மாதங்கள் சிறையில் இருந்த போது ஆ. ராசா புத்தகமாக எழுதினார்.
"2G Saga Unfolds" என்கிற தலைப்பிலான இப்புத்தகம் வரும் 20ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த புத்தகத்தில் பல்வேறு வெளிவராத தகவல்களை ராசா எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆங்கில ஊடகங்கள் சிலவற்றில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புத்தகத்தில் உள்ள 10 முக்கிய அம்சங்கள் இவைதான்:
உங்கள் முயற்சியில் எந்த தவறும் இல்லை என்று மன்மோகன்சிங் தெரிவித்தார்.
உங்கள் அனைத்து நடவடிக்கையும் சட்டப்படி நியாயப்படுத்தத்தக்கது என்று மன்மோகன்சிங் கூறியிருந்தார்.
மன்மோகன்சிங் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது, தடுக்காதது மட்டுமல்ல, ஆதரவாகவும் இருந்தார்.
தேசத்தின் கூட்டு மனசாட்சிக்காக, மன்மோகன்சிங்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் அமைதி காத்தது.
தலைமை கணக்கு தணிக்கை துறையின் தலைவராக இருந்த வினோத் ராயால், அந்த அமைப்பின் நம்பகத்தன்மை சமரசம் செய்யப்பட்டது.
 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சாய்க்க வினோத் ராய் சிப்பாயாக செயல்பட்டார்.

டி .என் சேஷன்...உறவினர்கள் ஒதுக்கிய நிலையில் தனிமையில் வேதனை

Special Correspondent FB Wing :இந்திய தேர்தல் தலைமை ஆணையராகப் பணியாற்றி முக்கிய சீர்திருத்தங்களை தேர்தல் முறையில் கொண்டு வந்த டி.என்.சேஷன். சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் தமது மனைவியுடன் வசித்து வருகிறார்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலையில் பிரமாண்டமாக நடந்தது முதல் முதலில் கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் தான் இதனை செய்ய தடையாக இருந்து அதிமுகவினருக்கு சிம்ம சொப்பனமாக மாறினார் சேஷன் .இவரது காலத்திலே (1996) அதிமுக வரலாறு காணாத விதமாக வெறும் 7% வாக்குகளை மட்டுமே பெற்று பாராளுமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்தது .
பாலக்காட்டை சேர்ந்தவரான சேஷனுக்கு சொந்த ஊரில் வீடு இருந்தாலும், வயோதிக காலத்தில் கவனித்துக் கொள்ள பிள்ளைகள் இல்லாததாலும், தன் வயதையொத்தவர்களுடன் சேர்ந்து வாழ் விரும்பியே முதியோர் இல்லத்தை நாடிச் சென்றதாக கூறப்படுகிறது.

சசிகலா வீட்டில் குட்கா ஆதாரம்...அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே. ராஜேந்திரன் வசமாக சிக்கினார்கள்


சசிகலா அறையில் குட்கா ஆதாரம்!மின்னம்பலம் : போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் இருக்கும் சசிகலா அறையில் இருந்து குட்கா ஊழல் தொடர்பான கடிதம் கைப்பற்றப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
குட்கா முறைகேடு புகார் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று (ஜனவரி 12) உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அதில், குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ் ராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பெறப்பட்ட வாக்குமூலத்தில் எந்தெந்த அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்பதை குறிக்கும் வகையில் சில குறிப்புகள் இடம்பெற்றிருந்தது. அந்த குறிப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல், அதே ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி வரையில் 56 லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக, மாதவ ராவ் குறித்து வைத்திருந்ததாக, வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் ! கருணை காட்டுங்க தெய்வமே !... "தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி"

இதயம் இருக்கிறதா தமிழ் ராக்கர்ஸ்?
மின்னம்பலம் :பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதியான இன்று தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி ஆகிய மூன்று திரைப்படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. இந்த மூன்று திரைப்படங்களுமே அதனதன் வகையில் நல்ல வரவேற்பை முதல் நாளில் பெற்றிருக்கின்றன. சுமாரான படம் என்பதற்கும் மேலாக பெயர் பெற்றுவிட்டதால் இரண்டாம், மூன்றாம் நாட்களில் பெறும் வரவேற்பு இப்படங்களின் வசூலில் முக்கிய பங்கு வகிக்கும்.
இதனால், தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன், தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்துக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.தமிழ்ராக்கர்ஸ் குழுவுக்கு, தயவுசெய்து உங்களுக்கு இதயம் இருந்தால் பயன்படுத்துங்கள். நாங்கள் இந்த நாளுக்காக மிகவும் கடினமாக உழைத்திருக்கிறோம். வரி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சினிமாத் துறை பிரச்சினைகளைத் தாண்டி இந்தப் படங்களை ரிலீஸ் செய்ய அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறோம். எங்கள் மூன்று படங்களுக்கும் எதுவும் செய்யாதீர்கள்

உச்சநீதிமன்றம்_RSS_பார்ப்பனீயத்திடம்_சிக்கி.... தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா... Flashbacks


சந்திர மோகன் :உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக்
மிஸ்ராவை நீக்க வேண்டும் என்று மூத்த நீதிபதிகள் ஜஸ்டி செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பீமராவ் லோகுர்,ரஞ்சன் கோ கய் ஆகியோர் திடீரென வெளிப்படையாக ஊடகத்துறையினரை அழைத்து விளக்கியிருப்பது பாஜக-மோடி_அமித் சா கம்பெனிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.*
*-CBI சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா'வின் சந்தேக மரணம் பற்றிய வழக்கு விசாரணை மற்றும்*
*-நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் ஆகியவை மையமான பிரச்சினைகள்*
*-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையும் அவர்கள் வெளியிட்டனர்*
*-நீதி நிர்வாகத்தை சரி செய்யாவிட்டால் ஜனநாயகத்துக்கு ஆபத்து - என்றனர்,நீதிபதிகள்*
*-கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது என நீதிபதிகள் கூட்டாக பேட்டியில் தெரிவித்தனர்*
*-முக்கிய விஷயங்களை நாட்டுக்கு தெரியபடுத்த விரும்புகிறோம்*
*-2 மாதத்துக்கு முன்பு 4 நீதிபதிகள் கடிதம் அனுப்பியிருந்தோம்*
*-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தோம்*
*-நீதி நிர்வாகத்தை சரி செய்யாவிட்டால் ஜனநாயகத்துக்கு ஆபத்து-என்கின்றனர், நீதிபதிகள்*
யார் இந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா?

வெள்ளி, 12 ஜனவரி, 2018

55 எம் எல் ஏக்கள் ஆயத்தம் ? விடியோ வெளியிட்டதால் சசிகலா தினகரன் தகராறு ..

மின்னம்பலம் :சசிகலா - தினகரன் சந்திப்பு ரகசியம்

“நேற்று சொன்னபடியே பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று சசிகலாவைச் சந்தித்துவிட்டார் டிடிவி தினகரன். தினகரனுடன் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோரும் உடன் சென்றிருக்கிறார்கள். சிறைக்குள் சென்று திரும்பிய் தினகரன், ‘சசிகலா மௌன விரதத்தைத் தொடர்கிறார்... நான் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டார். பேப்பரில் அதற்கு சரி.. இல்லை என்று எழுதிக் காட்டினார்’ என்று சொன்னார். உண்மையில் சிறைக்குள் என்ன நடந்தது என்பதை விசாரித்தோம்.
‘ஆர்.கே.நகரில் ஜெயித்த பிறகு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தினகரன் சென்றபோது அவரிடம் சசிகலா பேசவே இல்லை. சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன், சசிகலா மௌன விரதத்தில் இருப்பதாக சொன்னார்.

அமித் ஷா வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்ம மரணம்,,, மிக முக்கியப் பிரச்சினை என உச்ச நீதிமன்றம் கருத்து

tamilthehindu :சர்ச்சைக்குரிய சொராபுதீன் என்கவுன்டர் வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயாவின் மர்ம மரணம் பற்றிய வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இது மிகவும் முக்கியமான பிரச்னை எனக் கூறினர்.
குஜராத்தில் கடந்த 2005ம் ஆண்டு சொராபுதீன், அவருடைய மனைவி கவுசர் உள்ளிட்டோர் தீவிரவாதிகள் எனக்கூறி சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், இவர்கள் அப்பாவிகள் எனவும், இது போலி என்கவுன்டர் என்ற குற்றம்சாட்டு எழுந்தது. இந்த போலி என்கவுன்டர் வழக்கில், அப்போதய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட 23 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு, மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, நீதிபதி பி.எச்.லோயா விசாரித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு டிசம்பரில் நீதிபதி லோயா திருமண நிகழ்ச்சி ஒன்றில் மாரடைப்பால் இறந்தார். ஆனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, மும்பை உயர் நீதிமன்றத்தில், மும்பை வக்கீல்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

நீதி துறையில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய 4 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள்

மாலைமலர் :உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக நான்கு நீதிபதிகள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், ஜனநாயகத்திற்கு ஆபத்து என்ற நீதிபதிகளின் கருத்து முக்கியமானது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். "தலைமை நீதிபதி மீதான மற்ற நீதிபதிகளின் கருத்து மிக முக்கியமானது: ராகுல் காந்தி" "தலைமை நீதிபதி மீதான மற்ற நீதிபதிகளின் கருத்து மிக முக்கியமானது:
இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், லோகுர் ஆகிய நால்வரும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, உச்சநீதிமன்ற வளாகத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவித்தும், சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேட்டி; முன்னுதாரணம் இல்லாதது, அதிர்ச்சிகரமானது: சட்டத்துறை நிபுணர்கள்

tamilthehihndu :உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது, நான்கு மூத்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். முக்கிய வழக்குகளை குறிப்பிட்ட சில வழக்குகளை மூத்த நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டிய சில நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு ஒதுக்கீடு செய்வதாக புகார் தெரிவித்தனர், இது இந்திய வரலாற்றில் முன்னுதாரணம் அற்றது, அதிர்ச்சிகரமானது என்று வழக்கறிஞர்கள் உட்பட சட்டத்துறை நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலர் இத்தகைய திடீர் பேட்டிக்குப் பின்னால் வலுவான காரணங்கள் இருக்க வேண்டும் என்று ஒருசிலர் கருதுகின்றனர். மேலும் சிலரோ நீதி அமைப்பின் நம்பகத்தன்மையின் மீது கேள்விகளை எழுப்பும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்படியே போனால் இந்திய ஜனநாயகம் நிலைக்காது.... 4 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ...

Swathi K : சற்றுமுன்.. "இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகம் மற்றும் நீதித்துறை மிக மோசமான சூழலை நோக்கி நகர்ந்து வருகிறது. உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இப்படியே போனால் இந்திய ஜனநாயகம் நிலைக்காது"😢😢. - சுப்ரீம் கோர்ட்டின் 4 நீதிபதிகள் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது!! இந்த சந்திப்பு முடிந்ததும் மோடி அவசர ஆலோசனை சட்டத்துறை அமைச்சருடன்!!!
குறிப்பு: இந்தியாவில் இது மாதிரி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இணைந்து அரசாங்கத்தை பற்றி புகார் கொடுப்பது முதல்முறை.
ஒண்ணு மட்டும் தெளிவா தெரியுது.. இந்த நாடு ஒரு மோசமான சூழலை நோக்கி நகர்ந்துவருகிறது.👿
New Delhi : Democracy in India is at stake, said four senior Supreme Court judges today as they went public with complaints against the Chief Justice of India, Dipak Misra.
In an unprecedented press conference - the four judges, who are the senior most after the Chief Justice - said that "things are not in order" with what they described as "the administration of the Supreme Court". They said that repeated attempts to alert the Chief Justice to their concerns - including a meeting with him this morning - failed to make any progress which is why they decided to voice their complaints publicly. An independent judiciary is essential for a functioning democracy, they said. When asked if they believe the Chief Justice should be impeached, they said, "Let the nation decide."

மியான்மரில் நிலநடுக்கம்: 6.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:

யாங்கூன், தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர் நாட்டில் நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரங்கூனில் இருந்து சுமார் 186 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகுகளாக பதிவானது என அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால்,தூங்கி கொண்டு இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து தெருக்களில் குவிந்தனர். கடும் குளிரிலும் மக்கள் அதிக அளவில் வீதிகளில் நின்றதை கவனிக்க முடிந்தது. நிலநடுக்கத்தால் சில கட்டிடங்களில் லேசான விரிசல் ஏற்பட்டது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

சென்னை சங்கமம் .... அது நிறுத்தப்பட்டபோது உண்மையிலேயே மனது வலித்தது


Shalin Maria Lawrence : தைபுரட்சி சமூகவியல் படி "புரட்சி" என்கிற வார்த்தைக்கு அர்த்தம் "ஒரு சமூக அமைப்பை வேரோடு மாற்றி அமைத்தல்" ஆகும். A radical and pervasive change in society and the social structure.
கூட்டம் கூடுவதெல்லாம் புரட்சி என்று நான் என்றுமே எண்ணியதில்லை. கூடிய கூட்டத்தால் எந்த வகையிலாவது பல வருடம் இருந்த சமூதாய அமைப்பு மாறியதா என்பதுதான் என்னை பொறுத்தவரை, சமூகவியல் படித்தவர்களை பொறுத்தவரை "புரட்சி" என்பதாகும்.
கடந்த வருடம் நடந்த விஷயம் ஏதாவது ஒரு வகையில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதா? என்றால், "இல்லை" என்கிற பதில் மனசாட்சியின் படி வரும். பல சமூகம் சேர்ந்து காலம் காலமாக நடத்திவரும் இன்னொரு ஆதிக்க சமூகத்தின் ஒரு கலாசாரத்தை தக்க வைக்க செய்த விஷயம் அது. அதில் சமூக மாற்றம் எல்லாம் ஒன்றும் நடந்துவிடவில்லை.
ஆனால் 2007ம் ஆண்டு இந்த மாநிலத்தில் உண்மையில் ஒரு தை புரட்சி நடந்தது. அது ஒரு கலைபுரட்சி. கலையினூடே கூடிய ஒரு சமூக புரட்சி.
இன்று வரை அந்த நிகழ்வு பலரின் கண்ணுக்கு ஒரு புரட்சியாய் தெரியாமல் செய்தது, அரசியல். அதை வைத்து செய்ய தெரியாத அரசியல். அதை மறைக்க செய்த அரசியல்.
பெரிய ஆர்பாட்டமில்லாத புரட்சிகள் சமூக மாற்றத்தை அனாயசமாக செய்துவிட்டு போகும். அதில் பெரிய கூச்சல் குழப்பங்கள் இருக்காது. நான் சொல்லும் சங்கதியும் இந்த வகையராதான்.

“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்றால் அர்த்தம் என்னவோ?: பேராசிரியர். அருணன்

thetimestamil  : கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான எச் ராஜாவின் கொலைவெறிப் பேச்சை கேட்டேன். அவர் ஒரு ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி என்பது மேலும் நிச்சயமாகிறது. “ஆண்டாள் ஒரு தேவதாசி” என்று ஓர் ஆய்வாளர் கூறியதை கவிஞர் மேற்கோள் காட்டியதற்குத்தான் “அவரது தலை உருள வேண்டும்” என்று தன் சகாக்களை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார். இது ஆய்வுரிமை மீது, கருத்துரிமை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்.
ஆண்டாளைப் பற்றிய செய்திகளுக்கு ஆதாரம் அவரின் பாடல்கள் மற்றும் அவரைப் பற்றிய வைணவ நூல்களின் கூற்றுக்கள். அவற்றைப் படிக்கிற எவருக்கும் ஆண்டாள் ஒரு தேவதாசியாக இருக்கலாம் எனும் சந்தேகம் வராமல் போகாது. எச் ராஜாவே “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்று பெருமையோடு பேசியிருக்கிறார். அதன் அர்த்தம் என்னவோ? தான் சூடிய மாலையை விஷ்ணுவிற்கு அனுப்பினால் அதன் பொருள் அந்தக் கடவுளை மணந்தார் என்பது. பொட்டுக்கட்டும் சடங்கில்தான் ஒரு கடவுளை மணப்பது வரும்.

பன்னாட்டு நேரடி மூலதனங்கள் இனி அனுமதி இல்லாமலே வரலாம் .. மத்திய அரசு புதிய சட்டம்

Annamalai Arulmozhi : இது நேற்றைய செய்தி. நாம் வெறிநாய்க்கடிக்கு மருந்து தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில்..
நாட்டை சத்தமில்லாமல் விற்றுக் கொண்டிருக்கிறது மதவெறி தேசபக்தி ஆட்சி..
ஏற்கனவே ரிலையன்ஸ் கடைகளால்
நசிந்து போன நம் காய்கறி வியாபாரிகள்< விழி பிதுங்கி திண்டாடுகிறார்கள்... இனி அண்ணாச்சி கடைகளும் அவ்வளவு தான்... மோடி வேலையை கச்சிதமாக முடிக்கிறார்.

பொங்கல் .. சென்னை சிறப்பு பஸ்கள் வெளியூர்களுக்கு இயங்க தொடங்கின

தினத்தந்தி :பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு அறிவித்தபடி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயங்க தொடங்கின. நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன. சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு அறிவித்தபடி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயங்க தொடங்கின. நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன.
 தமிழகம் முழுவதும் கடந்த 4-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தியதால் மாநிலம் முழுவதும் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன
போராட்டம் காரணமாக கடந்த 2 நாட்களாக டிக்கெட் முன்பதிவு மையம் வெறிச்சோடி இருந்ததால் சிறப்பு பஸ் இயக்கப்படாமல் போய்விடுமோ? என்று பயணிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, பயணிகளின் தேவைக்கேற்ப சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

குட்கா ஜெயக்கொடி இடமாற்றம் .. ..உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு

குட்கா விவகாரம்: திமுக வழக்கு!
மின்னம்பலம் :குட்கா ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்துவந்த தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத் தலைவராக இருந்த ஜெயக்கொடி அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக இருந்தவர் ஜெயக்கொடி. குட்கா ஊழல் தொடர்பான வழக்கையும் இவர்தான் விசாரித்து வந்தார். குட்கா ஊழல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நேர்மையான விசாரணை என நீதிபதியால் பாராட்டப்பட்டவர். இந்த நிலையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படுவதாகவும் அவருக்குப் பதிலாக மோகன் பியார் என்பவர் அப்பதவியில் நியமிக்கப்படுவதாகவும் தமிழக அரசு கடந்த புதனன்று அறிவிப்பு வெளியிட்டது.

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசெஞ்சே க்கு ஈகுவடார் குடியுரிமை ... லண்டன் ஐ விட்டு வெளியேறுகிறார்

லண்டன் தூதரகத்தை விட்டு வெளியேறுகிறார் அசேஞ்ச்: ஈக்வடார் குடியுரிமை வழங்கியதுதினமலர்.:குயிட்டோ: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச்க்கு ஈக்வடார் நாட்டு குடியுரிமை அளித்து உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ஜூலியன் அசேஞ்ச்,49, விக்கிலீக்ஸ் இணைய தள பத்திரிகை வாயிலாக பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 2012 -ம் ஆண்டு சுவீடனில் இரண்டு பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகும் நிலை ஏற்பட்டதால் லண்டன் தப்பியோடினார். நாடு கடத்தி செல்லப்படுவதிலிருந்து தப்பிக்க அங்குள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்து வருகிறார்.
இந்நிலையில் ஈக்வடார் நாட்டு அரசு அசேஞ்சிற்கு நிரந்தர குடியுரிமை வழங்கி அனுமதியளித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை ஈக்வடார் வெளியுறவு அமைச்சர் பிறப்பித்தார். மேலும் பிரிட்டன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய அசேஞ் பிரச்சனை தீர்த்து வைக்கபடுகிறது.இதன் மூலம் 5 ஆண்டுகள் தூதரகத்தில் இருந்த அசேஞ்ச் விரைவில் ஈக்வடார் செல்வார் என தெரிகிறது

ஆதாருக்கு பதில் புதிய அட்டை: ‘குதிரைகள் களவு போனபின் லாயத்தை பூட்டுவதை போன்றது’ ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

தினத்தந்தி :ஆதாருக்கு பதில் புதிய அட்டை வழங்குவதாக கூறப்பட்டு இருப்பது ‘குதிரைகள் களவு போனபின் லாயத்தை பூட்டுவதை போன்றது’ என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
 புதுடெல்லி, இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தங்கள் தனிப்பட்ட அடையாளங்கள் மற்றும் விவரங்கள் அடங்கிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு சேவைகளுக்கு இந்த அட்டை பயன்படுத்தப்படுவதால், அதில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. எனவே இதை தவிர்க்கும் நோக்கில் 16 இலக்க எண்ணுடன் கூடிய புதிய ‘மெய்நிகர் அடையாள அட்டை’ விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

உபி - அரசியல்வாதிகளின் 22000 வழக்குகள் போலி வழக்குகள் தள்ளுபடி செய்த யோகி அரசின் சாதனை ..

Swathi K : உத்தரபிரதேசம் - அரசியல்வாதிகள் மேல் நிலுவையில் உள்ள 22000 வழக்குகள் போலி வழக்குகள் என்று சொல்லி தள்ளுபடி செய்யப்பட்டது யோகி ஆதித்யநாத் அரசால்👿. இப்ப ஊழல், கிரிமினல் அரசியல்வாதிகள் இல்லாத மாநிலம் உத்திரப்பிரதேசம்.. இப்படி தான் இவர்கள் ஊழலை ஒழிப்பார்கள்..👎 வாழ்க ஜனநாயகம்!!.. வாழ்க புதிய இந்தியா!!.. வாழ்க யோகி!!.. வாழ்க மோடி!!
Rajeshwaran Natarajan முகம்மது பின் துக்ளக் படத்தில் லஞ்சத்தை இப்படி தான் ஒழிப்பார் சோ. லஞ்சத்தை சட்டமாக்குவதன் மூலம். லெனா ரவி சங்கர் தனக்குத்தானே மாலை வாங்கி போட்டுக் கொள்ளும் கூட்டம் இது. மாலையை எப்பொழுதுமே கையில் வைத்துக் கொண்டுக் சுற்றி திரியும் விளம்பர கம்பெனி தான் இந்த மோடி குரூப்.
 Ajithsivaraja Muthappa இந்தியா முழுவதும் எல்லா வழக்குகளையும் தள்ளுபடி செய்து, தேங்கியிருக்கும்  வழக்குகளில் இருந்து நீதித்துறையை காக்கலாம்
Aaru Mugam ஒரு குரூப், கிரிமினல் வழக்குகளை வாபஸ் வாங்கலனு கம்பு சுத்துச்சி, இப்போ பார்த்தா யோகிமேல இருந்த கிரிமினல் வழக்கையும் நைசா சேர்த்து இருக்கானுங்க. அந்த குரூப் இப்போ அப்ஸ்கான்ட் ஆகிடுச்சி.

வடிவேலு vs எம் ஆர் ராதா.. வடிவேலு மனப்பான்மை The vadivelu Syndrome என்கிற ஒன்று உருவாகிவிட்டது

Shalin Maria Lawrence : இங்கே அரசியல் நையாண்டி என்றால் அதிக புழக்கத்தில் இருப்பது நடிகர் வடிவேலுடைய மீம்கள்தான் .எந்த ஒரு அரசியல் நிகழ்வு நடந்தாலும் வடிவேலு டெம்ப்பிளேட்டுகள்தான் அதிக புழக்கத்தில் இருக்கின்றன.
இந்த வடிவேல் டெம்ப்பிளேட்டுகள் தீவிர நகைச்சுவையானவை ,அதிக சிரிப்பை வரவழைக்க கூடியவை ஆனால் இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இது Reactive (எதிர்வினை) நகைச்சுவையை சேர்ந்தது.
"அவன் குத்துறான் நான் கத்துறேன்" வகையறா இது. இதில் பகுத்தறிவிர்க்கோ ,கருத்தியலுக்கோ இடம் இல்லை.

பொதுவாக படங்களில் வடிவேலு என்ன கதாபாத்திரங்களில் வருவார் ? வேலை வெட்டி இல்லாமல் பொழுதை கழிப்பவர் ,எளிதாக முட்டாளாகப்படுபவர் போன்ற வேடங்கள்தான்.
இதை அடிப்படையாக கொண்ட நய்யாண்டிகளும் பெரிதாக ஒன்றும் அதிர்வலைகளை ஏற்படுத்த கூடியது இல்லை.இன்னும் சொல்ல போனால் ஒரு மோசமான நிகழ்வை கூட காமெடியாக்கி அதை நீர்த்து போக செய்து அதனோடு கருத்தியல் ரீதியாக மோதவிடாமல் வெறும் நேர விரயம் மட்டுமே செய்ய வல்லது.
வடிவேல் படங்கள் போட துவங்கிய இளைஞர்கள் தங்களை வடிவேலாகவே என்ன துவங்கினார்கள் ,வடிவேலாகவே மாறிபோனார்கள் . பாதிக்கப்பட்டவர்களாக மட்டுமே இருக்க துவங்கினார்கள்.அவர்க தீர்வுகளை பற்றி யோசிப்பதே இல்லை.
ஆனால் இது போன்ற நையாண்டி ஒரு நீண்ட ஓட்டத்தில் எந்த பயணம் தராது .இது வெறும் Information wastage. தகவல் குப்பை.

மோடி :நான் என்ன தவறு செய்து விட்டேன். ஏன் என்னை அவமதிக்கின்றனர்?" - ... இதோ பதில்கள் ..

பிரதமரே, இதோ உம் கேள்விக்கான பதில்:
1. பணமதிப்பு நீக்கம் மூலம் இந்திய பொருளாதாரம் அழிவுக்கு இட்டு சென்றதற்கும். அதற்கான பொறுப்பை ஏற்காததற்கும்.
2. பல தரப்பட்ட கலாச்சாரங்கள், மொழிகள், மதங்கள் வாழும் இத்தேசத்தின் பண்மை தன்மையை சாதி, மத குழுவாதம் மூலம் அழித்ததற்காக.
3. இந்து மதத்தின் சனாதன தர்ம கொள்கைகளை அழித்து, சாவர்கரின் இந்துத்துவ கொள்கைகளை திணித்ததற்காக.
4. ஒவ்வொரு நடவடிக்கைகளும் இந்த தேசத்திற்கு துயரையும் அழிவையும் தரும்போது போலி தேசியவாதம் பேசி ஏமாற்றியதற்காக.
5. பெயரளவில் மட்டும் இந்திய அரசாங்கமாகவும். இந்துத்துவ முதலாளிகளுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் கடை விரித்தற்காக.
6. ஊடகங்கள் மூலம் தினமும் பரப்பிய பொய் பிரசாரங்களுக்காக.
7. அரசியலமைப்புக்கு எதிராக சர்வாதிகார ஆட்சியையும், தனிமனித சுதந்திரந்துக்கு ஆபத்தான ஆதாரை கட்டாயம் ஆக்கியதற்கும்.
8. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களை பணிய வைத்து மக்களை உண்மைகள் அறிய விடாமல் செய்ததற்காக.
9. பன்முக தன்மைக்கு ஆதரவாக குரல் பேசியோரை அலட்சியம் செய்து அவர்களை உடல் மற்றும் மன அளவில் ஒடுக்க செய்ததற்காக.

பெரியார் விருது ..விஜய் சேதுபதி, கவிஞர் செவ்வியன், கோபி நயினார், பறையிசை வேலு ஆசான்....

பெரியார் விருதுகள்: களைகட்டும் திருவிழா!மின்னம்பலம்: தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் வழங்கும் 2018ஆம் ஆண்டுக்கான பெரியார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பொங்கல் திருநாளையொட்டி பெரியார் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு இயல், இசை, நாடகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குகின்ற தமிழர்களுக்குப் பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 24 ஆண்டுகளாக இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, சமூகத்தின் முற்போக்கு வளர்ச்சிக்குப் பாடுபட்டுவரும் தமிழர்களைத் தேர்ந்தெடுத்து தை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளையொட்டி ‘பெரியார்’ பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பலதுறைகளில் சிறந்து விளங்குகின்ற தமிழர்களுக்குப் ‘பெரியார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவானது ஜனவரி 15, 16 ஆகிய இரண்டு நாள்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெறும் திராவிடர் திருநாள் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன.”

உபியில் 10 மாதம், 921 என்கவுண்ட்டர்: கொலைகார யோகியின் கொடூர ஆட்சி

10 மாதம், 921 என்கவுண்ட்டர்:  யோகி சாதனை!
உத்திரப் பிரதேச மாநில பாஜக முதல்வராக யோகி ஆதித்யநாத் கடந்த மார்ச் 19 ஆம் தேதி பதவியேற்றார். அவர் முதல்வர் பதவியேற்றதில் இருந்து கடந்த பத்து மாதங்களில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் 921 என்கவுண்ட்டர் சம்பவங்கள் நடந்திருக்கின்றன, இதில் 33 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சாமியார் என்று கருதப்படும் யோகி ஆதித்யநாத் உ.பி. மாநில முதல்வராகப் பதவியேற்ற 12ஆவது நாள் அதாவது கடந்த வருடம் மார்ச் சஹரன்பூர் என்ற இடத்தில் முதல் என்கவுண்டர் சம்பவம் நடந்தது. இதில் குர்மித் என்பவர் போலீசின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகிக் கொல்லப்பட்டார். கடைசியாக ஜனவரி 9ஆம் ஆம் தேதி ஆசம்கார் பகுதியில் என்கவுண்ட்டர் நடந்துள்ளது. யோகி ஆட்சியில் நடந்த 921ஆவது என்கவுண்ட்டர் சம்பவம் இது என்று ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதி வருகின்றன.

700 கோடி வரி ஏய்ப்பு..ஜோயாலுக்காஸ் மற்றும் மஞ்சலி ஜூவல்லர்ஸ் வருமான வரி அதிகாரிகள் கண்டு பிடிப்பு

வருமான வரிச் சோதனையில் ஜோயாலுக்காஸ்!
மின்னம்பலம் :ஜோயாலுக்காஸ் மற்றும் மஞ்சலி ஜூவல்லர்ஸ் நிறுவனங்களுக்குச் சொந்தமான 130 கடைகளில் வருமான வரித் துறையினர் நேற்று (ஜனவரி 10) சோதனை மேற்கொண்டனர்.
கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜோயாலுக்காஸ் மற்றும் மஞ்சலி நகை விற்பனை நிறுவனங்களுக்குச் சொந்தமாக இந்தியா முழுவதும் உள்ள 130 நகைக் கடைகளில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகான வரி ஏய்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வை வருமான வரித் துறையினர் மேற்கொண்டுள்ளதாக பிடிஐ நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு 280000 ரூபாய் பம்பர் சம்பள உயர்வு ... விமர்சிக்க கூடாதோ? சமுகவலை மீது இந்திராவின் பழிவாங்கல் ?

தலைமை நீதிபதி குறித்து அவதூறு பரப்பியவர் மீது வழக்கு!
மின்னம்பலம் :சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு கோரி நடைபெற்றுவரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சம்பளம் போதாது என்றால்,வேறு வேலைக்குச் செல்ல வேண்டியதுதானே எனக் கூறியிருந்தார். மேலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களைப் பணியிலிருந்து நீக்கலாம் என கூறினார்.
இதையடுத்து வந்த விசாரணையின்போது, தான் சொன்னதை திரும்பப் பெறுவதாகக் கூறினார். போக்குவரத்து ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

வியாழன், 11 ஜனவரி, 2018

இன்னும் 3 மாதத்தில் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்துவிட வாய்ப்பு?

மின்னம்பலம் :“பொங்கல் வரப் போகிறது.. நாளை பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று சித்தியை (சசிகலா) பார்க்கப் போவதாக சொல்லியிருக்கிறார் டிடிவி தினகரன். நாளை சட்டமன்றக் கூட்டம் இருந்தும் திடீரென தினகரன் பரப்பன அக்ரஹாரா செல்ல வேண்டிய அவசரம் என்ன, அவசியம் என்ன என்ற கேள்வியைக் கேட்காதவர்கள் இல்லை. இதற்கு தினகரன் சொன்ன பதில், ‘பொங்கலுக்கு முன்பு சித்தியைப் பார்த்து வாழ்த்துச் சொல்லணும். நாளைக்கு விட்டுட்டா ஐந்து நாட்கள் லீவு வந்துடும். அதனால் நாளைக்கே பார்த்தாகணும்’ என்று சொல்லி இருக்கிறார். இதுதான் காரணமா என விசாரித்தோம்.
‘சில தினங்களுக்கு முன்பாக இளவரசியின் மகன் விவேக் சிறைக்குச் சென்றதையும் சசிகலாவை பார்த்துப் பேசியதையும் நாம் டிஜிட்டல் திண்ணையில் எழுதி இருந்தோம். கடந்த முறை தினகரன் சிறைக்கு சென்ற சமயத்தில் சசிகலா அவரிடம் பேசவில்லை. தினகரனோ அவர் மௌன விரதத்தில் இருப்பதாகச் சொன்னார். ஆனால், தினகரன் மீது இருந்த கோபத்தில்தான் அவர் பேசாமல் திருப்பி அனுப்பினார்.

ஸ்டாலின் : ஒவ்வொரு தமிழர் தலையிலும் 80000 ஆயிரம் ரூபாய் கடன் சுமை ,,,, கமிசன் அரசின் அசுர சாதனை ...

ஒவ்வொரு தமிழர் தலையிலும் ரூ.80 ஆயிரம் கடன்!
மின்னம்பலம்: சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக நிதிநிலையைச் சுட்டிக்காட்டி, ஒவ்வொரு தமிழர் தலையிலும் ரூ.80 ஆயிரம் கடன் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்துவருகிறது. இன்றைய ஜனவரி 11 விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
“தமிழக அரசு மத்திய அரசுக்கு நன்றிக் கடன் பட்டிருப்பதுபோல், ஆளுநர் உரையில் எங்கு பார்த்தாலும் மத்திய அரசுக்கு நன்றிகள் தான் உள்ளது” என தெரிவித்த அவர், தமிழகத்திற்குத் தேவையான நிதியைப் பெறவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதாக கூறும் தமிழக அரசு இதுவரை பெற்ற நிதி என்ன? என்றும் கேள்வியெழுப்பினார்.

நடிகை கஸ்தூரி :தேவதாசிகள் மிக உன்னத சமூக அந்தஸ்தையும் மரியாதையும் பெற்றவர்கள் ... So அவா பொண்ணுங்க இனி அதை வளர்ப்பாய்ங்க?

வெப்துனியா :கவிஞர் வைரமுத்து சமீபத்தில் ஆண்டாள் குறித்து தினமணியில் ஆற்றிய கட்டுரை ஒன்றின் போது ஆண்டாளை தவறாக விமர்சித்ததாக பாஜகவினர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த சிலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர மாலிக் என்ற ஆய்வாளர், ஆண்டாள் என்ற பாத்திரம், திருவரங்கத்திலேயே வாழ்ந்து மடிந்த ஒரு தேவதாசி என்று குறிப்பிட்டுள்ளதை தனது உரையில் கவிஞர் வைரமுத்து சுட்டிக் காட்டுகிறார்.
இந்த கருத்துக்கு தான் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வைரமுத்து மட்டுமல்லாமல் தினமணியும் சேர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆவேசமாக பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல இந்துமத ஆர்வலர்கள் வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வைர மலை கண்டுபிடிப்பு

தினகரன் :கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வைர மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுரங்கத்துறை உதவி இயக்குநர் நடராஜன் செய்தியாளர்களிடம் இதனை கூறியுள்ளார். கர்னூல் மாவட்டம் சென்னூர் கோட்டையில் புதையல் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து கடந்த ஒரு மாதமாக சென்னூர் கோட்டையைச் சுற்றி 3 இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டது. சுரங்கத்துறை சார்பில் ஸ்கேனர் மூலம் சென்னூர் கோட்டையச் சுற்றி சோதனை செய்யப்பட்டது.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் முடிவு!

tamilthehindu :போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க, ஓய்வுபெற்ற நீதிபதி மத்தியஸ்தராக பத்மநாபனை நியமித்ததை அடுத்து 8 நாட்கள் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்குவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன், நிலுவைத்தொகை போன்ற கோரிக்கைகளை வைத்து 11 முறை பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தோல்வி அடைந்ததை அடுத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுதும் போக்குவரத்து முடங்கியது. பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். இது சம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அமெரிக்கா: இரட்டை கொலை வழக்கு NRI இந்தியருக்கு மரணதண்டனை

மாலைமலர் :அமெரிக்காவில் 10 மாத குழந்தை மற்றும் அவரின் பாட்டியை கொலை செய்த ஆந்திராவைச் சேர்ந்த வாலிபருக்கு வருகிற பிப்ரவரி 23-ம் தேதி மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. #RaghunandanYandamuri #Execution  வாஷிங்டன்: ஆந்திராவைச் சேர்ந்தவர் ரகுநந்தன் யந்தமுரி(29). அவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். 2012-ம் ஆண்டு பெனிசில்வேனியா மாநிலத்திற்கு சென்ற அவர் அப்பர் மெரியன் டவுன்ஷிப் என்ற பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எடுத்து தங்கினார். அப்போது அதே குடியிருப்பில் தங்கியிருந்த ஒரு தெலுங்கு குடும்பத்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த குடும்பத்தில் இருந்த வெங்கட வென்னாவும் அவரது மனைவியும் வேலை பார்த்ததால் அவர்களின் 10 மாத குழந்தையான சான்வியை அவரது பாட்டி சத்யாவதி (61) கவனித்துக் கொண்டார். இந்நிலையில், பணத்திற்காக அந்த 10 மாத குழந்தையை கடத்த ரகு முடிவெடுத்தார். > அதன்படி வென்னாவின் வீட்டிற்கு சென்ற அவரை குழந்தையை கடத்தவிடாமல் பாட்டி சத்யாவதி தடுத்துள்ளார். இதையடுத்து ரகு அவரை கொலை செய்தார். பின்னர் குழந்தை அழுவது யாருக்கும் கேட்காமல் இருக்க அதன் வாயில் துணியை திணித்து ஒரு பெட்டிக்குள் வைத்தார். மேலும் வீட்டில் இருந்த நகைகளையும் அந்த பெட்டிக்குள் வைத்து எடுத்துச் சென்றார்.

மேயர் நகரசபை தலைவர்களை மீண்டும் மக்களே தெரிவு செய்யும் சட்டம்...

மாலைமலர் : மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்வதற்கான மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார்.
சென்னை: மேயர்கள், நகரசபை தலைவர்களை மக்களே நேரிடையாக வாக்களித்து தேர்வு செய்யும் முறையை தமிழக தேர்தல் ஆணையம் கடை பிடித்து வந்தது. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது இந்த நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டது.
 2016-ம் ஆண்டு இந்த உள்ளாட்சி தேர்தல் முறையில் சில மாற்றங்களை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அதன்படி மேயர்கள், நகரசபை தலைவர்களை மக்கள் நேரிடையாக ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டியது இல்லை என்ற திருத்தத்தை 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி கொண்டு வந்தார். இந்த திருத்தத்தின்படி மேயர்கள், நகரசபை தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்வார்கள் என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் இந்த மாற்றங்கள் கடந்த 1½ ஆண்டுகளால் நிலுவையில் உள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

அதிமுகவில் இருந்து பேராசிரயர் தீரன் நீக்கம் ... தவிர்க்க முடியாத உள்கட்சி மோதல்கள்

tamilthehindu :தினகரனிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும் என தொலைக்காட்சியில் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் பேரா.தீரன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் சமீபத்தில் 13  புதிய செய்தித் தொடர்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் பேராசிரியர் தீரனும் ஒருவர். ஆரம்பத்தில் பாமகவிலிருந்த தீரன் பின்னர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதுமுதல் அதிமுகவிலேயே இருக்கிறார்.
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அதிமுகவில் செய்தி தொடர்பாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். இதில் பேராசிரியர் தீரனும் ஒருவர். சமீபத்தில் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பேராசிரியர் தீரன் அதிமுகவில் தற்போதுள்ள பிரச்சனை தீர கட்சியை தினகரனிடமும், ஆட்சியை எடப்பாடியும் வைத்துக்கொண்டால் பிரச்சினை தீரும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தர் நியமனம்... முடிவுக்கு வருகிறது வேலை நிறுத்தம்?

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தர் நியமனம்: பஸ் ஸ்டிரைக் வாபஸ் ஆகிறதா?மாலைமலர் : ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நடுவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நலனை கருதி வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #TNBusStrike #BusStrike
சென்னை: அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அரசுத்தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், போராட்டம் நடத்திய காலத்திற்கு சம்பளம் வழங்கப்பட மாட்டது, வழக்குப்பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை உண்டு என தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு மட்டும்தான் வழக்கு தொடரப்பட்டது என நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து, போராட்ட காலத்திற்கு ஊதியம், வழக்குப்பதிவு உள்ளிட்ட விவகாரங்களில் பரிசீலனைக்கு பின்னர் முடிவெடுக்கப்படும் என அரசு வழக்கறிஞர் கூறினார்.

திராவிட மலையை தகர்க்கும் வேலையை ஏஜெண்டுகள் மூலம் ....RSS ஆரம்பித்து பல ஆண்டுகள்....

Deepika Suhil  : 1.இட ஒதுக்கீட்டை ஒழிப்பது.
2.தேசம் முழுவதும் ஒரே சிவில் சட்டத்தை கொண்டுவருவது.
3.ஒரே ஆட்சி மொழியாக இந்தியை கொண்டுவருவது.
4.மாநிலங்களை ஒடுக்கி சுயாட்சியை ஒழிப்பது.
5.எதிர் கட்சிகளை விழுங்கி ஒரே கட்சி ஆட்சியைக் கொண்டுவருவது.
6.இந்தியாவின் சமய சார்பற்ற தன்மையை மாற்றி இந்து நாடாக்குவது
போன்ற நீண்ட நாள் செயல் திட்டங்களை வகுத்து அதை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டுவருகிறது இந்துத்துவ அரசியல்.
இந்த திட்டத்தை பல மாநிலங்களில் செயல்படுத்தி வெற்றி பெற்று மக்கள் மனநிலையிலும் பெரிய மாற்றத்தை உருவாக்கி வரும் நிலையில் தமிழகமும் கேரளமும் இன்னும் இவர்களுக்கு இன்னும் சவாலாகவே இருந்து வருகின்றன.
காலங்காலமாக சோ ராமசாமி போன்ற நிரந்தர ஏஜென்ட்கள் தமிழகத்தில் பலனளிக்காததால் வேறு ஒரு திட்டத்தை வகுத்தது காவிகளின் தலைமை.
அதுதான் டாஸ்க் ஃபோர்ஸ் மேனேஜ்மென்ட்.
இந்த டாஸ்க் படி ஒரு பெரிய திட்டம் சின்ன சின்ன டாஸ்க்குகளாக பிரிக்கப்பட்டு செயல் படுத்தப்படும்.
சில முக்கிய கட்சிகள் அரசியல் புள்ளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களை அணுகி இதை மட்டும் செய்யுங்கள் 2 கோடி தருகிறோம். இதை மட்டும் பேசுங்கள் 5 கோடி தருகிறோம் என ஆசை காட்டி தங்கள் திட்டத்தை மெல்ல மெல்ல தமிழகத்தில் சாதித்து வருகின்றனர்.

இலங்கை பாராளுமன்றத்தில் கத்தல் கூச்சல் கைகலப்பு ,, அமைச்சர்களும் எம்பிக்களும் ....

சட்டை கிழிந்தது, முகங்கள் வீங்கின
ஓடியோடி, கன்னங்களில் பளார் பளாரென அறை
அரை வட்டத்துக்குள் இருந்து பிரதமர் உரை
கதிரைக்கு கதிரை மாறி, நழுவி தப்பியோடினார் ஐயா

குத்து குத்துனு குத்திவிட்டு ஓடினார் பிரசன்ன
அந்த இருவரின் வாசமே அவையில் இல்லை
துள்ளிக்குதித்த எம்.பி மயங்கியே விழுந்தார்
பின்னால் வந்து பதுங்கி தாக்கினார் மரிக்கார்
நடுவில் சிக்கி நசுங்குண்டார் பெண் எம்.பி
கோஷத்தையே மாற்றிவிட்டது கோரஸ் கோஷம்
அழகன் கனகராஜ்
ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள, மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரங்கள் தொடர்பிலான அறிக்கையை, நாடாளுமன்றத்தில் உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு, ஒன்றிணைந்த எதிரணி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியதை அடுத்து, சபையில் பெரும் களேபரம் ஏற்பட்டது.

எம்.எல்.ஏ.க்கள் சம்பள உயர்வு... ரொம்ப கஷ்டப்படுராய்ங்க

மின்னம்பலம் :தமிழகம் முழுதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களது ஊதிய உயர்வுக்காகவும், ஓய்வுபெற்ற பின் கிடைக்கும் பணப் பலன் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்தும் ஐந்து நாட்களாகப் போராடிவருகிறார்கள். போக்குவரத்து ஊழியர்களோடு அவர்களது குடும்பத்தினரும் போராட்டத்தில் குதிக்க, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையி ல் இன்று (ஜனவரி 10) எம்.எல்.ஏ.க்களின் ஊதிய உயர்வுக்கான மற்றும் படிகள் உயர்வுக்கான சட்டத் திருத்த மசோதாவை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பள உயர்வு பற்றி கடந்த ஜூலை மாதமே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி இதுவரை 55 ஆயிரமாக இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் மாதச் சம்பளம் இனி ஒரு லட்சத்து 5 ஆயிரமாக அதிகரிக்கும்.
இந்த அம்சங்களை முன்னிறுத்தி தற்போது சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறிய பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்படும். அந்த வகையில் ஆகஸ்டு முதல் டிசம்பர் வரையிலான சம்பள உயரவு மட்டும் மூன்று லட்ச ரூபாய் நிலுவைத் தொகையாக வழங்கப்படும்.

மதுசூதனன் : அமைச்சர் ஜெயகுமார்தான் எனது தோல்விக்கு காரணம்

வெப்துனியா :ஆர்.கே.நகரில் தான் தோல்வி அடைந்ததற்கு அமைச்சர் ஜெயக்குமாரே காரணம் என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனே காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதிய கடிதத்தில் மதுசூதனன் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக அவைத்தலைவரான மதுசூதனன் ஆர்கே நகர் இடைத்தேர்தல் தோல்வியையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பரபரப்பு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதம் சீக்ரெட் என மதுசூதனன் கூறினாலும் கடிதத்தில் அவர் கூறியுள்ளவை குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அந்த கடிதத்தில் மதுசூதனன் 14 கேள்விகளை எடப்பாடி பழனிச்சாமியிடம் எழுப்பியுள்ளார். அந்த கேள்விகளுக்கு முன்னதாக மிக நீளாமான கடிதம் ஒன்றையும் மதுசூதனன் எழுதியுள்ளார். அதில் “இரு அணிகளும் இணைய நான் முயற்சி எடுத்த போது அது நடக்கவிடாமல் தடுத்தவரும், ஆர்.கே.நகரில் நான் தோல்வி அடையவேண்டும் என வேலை பார்த்தவரும் உங்கள் நம்பிக்கைக்கு உரிய அமைச்சர்தானே” என அவர் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

செங்கோட்டையன் தான் எங்கள் முதல்வர்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள்!

webdunia :அதிமுகவை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் இன்றைய வாதத்தின் போது தகுதி நீக்கம் செய்ய 18 எம்எல்ஏக்கள் தரப்பை நோக்கி நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். ஆளுநரிடம் எதற்காக புகார் அளித்தார்கள் என்று கேட்டார் நீதிபதி. அதற்கு முதல்வர் மீதான எங்களின் அதிருப்தியை ஆளுநரிடம் தெரிவித்தோம் என பதிலளித்தார் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராமன். அடுத்து, முதல்வர் மீதான அதிருப்தியை தெரிவிப்பதற்கு ஆளுநர் எந்த வகையில் பொருத்தமானவர்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ, நாங்கள் எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவற்காக ஆளுநரை சந்தித்துக் கொடுத்தோம் என 18 எம்எல்ஏக்கள் தரப்பு கூறியது.
ஆனாலும் விடாத நீதிபதி, ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது அதிருப்தி என்றால் என்ன நோக்கம்? என மீண்டும் கேட்டார். அப்போது பதில் அளித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கறிஞர் ராமன், முதல்வரை மாற்ற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டுத்தான் கொடுத்தோம்.
எங்கள் கட்சியிலேயே மூத்த அமைச்சர் செங்கோட்டையன் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக செங்கோட்டையனை முதல்வராக ஆக்க வேண்டும் என்று திட்டமிட்டுதான் ஆளுநரிடம் எங்கள் அதிருப்தியை தெரிவித்தோம் என்றார் அதிரடியாக. சமீபத்தில் செங்கோட்டையனின் பதவிகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருவதும், அவருக்கு ஆதரவாக தினகரன் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

புதன், 10 ஜனவரி, 2018

ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமான வரி சோதனை ..!


தினகரன் :தியாகராய நகரில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையான ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.கேரளத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜாய் அலுக்காஸ் தமிழம், கேரளா உட்பட நாடு முழுவதும் உள்ள கிளை அலுவலகங்களிலும், உரிமையாளரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஊழியர்களை அனுமதிக்காமல் நகைக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சிலிப்பர் செல் ஆபத்துக்கள் ... மீண்டும் அமைச்சரவை மாற்றம் ?

Prabha - Oneindia Tamil சென்னை: அதிமுகவில் இன்னொரு யுத்தம் வெடிக்காமல் இருக்க சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைந்த உடனேயே அமைச்சரவை மாற்றம் நடைபெறலாம் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு முக்கியக் காரணமே கடைசி நேரத்தில் தினகரன் காட்டிய சித்து வேலைகள்தான். இருபது ரூபாய் நோட்டைக் காட்டியே பெரும் வாக்குகளை அறுவடை செய்துவிட்டார் என்கிறது அதிமுக வட்டாரங்கள்.. ஓபிஎஸ்ஸுடன் இணைப்பு நடத்தியபோது, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை நீக்க மாட்டோம் என உறுதியாகக் கூறிவிட்டனர். இதேநிலை தொடருவதால் அதிமுகவுக்குள் ஸ்லீப்பர் செல்கள் ஏராளமாக கெத்தாக வலம் வந்து கொண்டிருக்கின்றனராம். ஸ்லீப்பர் செல்கள் டிஸ்மிஸ் ஸ்லீப்பர் செல்கள் டிஸ்மிஸ் இவர்களையும் கட்சிப் பதவியில் இருந்து நீக்க தொடங்கிவிட்டனர்