சனி, 4 ஜனவரி, 2020

தொடர் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா.. ஈரானின் மிக முக்கிய தலைவர்கள் கொலை.


என்ன போர் tamil.oneindia.com - shyamsundar பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் மீண்டும் டிரோன் விமானம் மூலம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளது.
நேற்று ஈராக்கில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் முக்கியமான ஈரான் தலைவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஈரான், ஈராக் மற்றும் அமெரிக்கா இடையே தற்போது மிகப்பெரிய அளவில் பிரச்சனை நிகழ்ந்து வருகிறது. நேற்று அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதல் இரண்டு நாடுகளுக்கு இடையே போரை உருவாக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.
கடந்த சில மாதங்களாகவே டிரோன் விமானங்கள் மூலம் அமெரிக்க படைகள் தொடர்ந்து ஈரான் தலைவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று நடந்த தாக்குதல் அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது. நேற்று நடந்த தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக அரசு மனு!

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக அரசு மனு! மின்னம்பலம் : மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று (ஜனவரி 4) ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வினால் தமிழக கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அம்மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முதன்முறையாக 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியபோது தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. கல்வி, மாநில பட்டியலில் இருப்பதால் நீட் தேர்வினை அறிமுகப்படுத்தி, மாநில உரிமையில் மத்திய அரசு தலையிடுகிறது என மாநில அரசுகள் நீதிமன்றத்தில் வாதிட்டன. இதனால் நீட் தேர்வு அரசியலமைப்பிற்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
2016 ஆம் ஆண்டு மோடி அரசால் மீண்டும் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட போது, இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான இடங்களை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நிரப்பவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. 2016ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு எதிராகப் பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை அன்றைய தமிழக முதல்வரான ஜெ ஜெயலலிதா எழுதினார்.

பாஜகவின் கணக்கை ஆரம்பித்து வைத்த அதிமுக .... ஊராக உள்ளாட்சிகளில் பாஜக கணிசமான அளவில் ..

இதுவரை இல்லாத அளவிற்கு கூடுதல் இடங்களில் வெற்றி பெற்ற பாஜக!tamil.news18.com : ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக
இதுவரை இல்லாத அளவிற்கு கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பையே எதிர்நோக்கி வரும் பாஜகவுக்கு இந்த வெற்றி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு முறை போராட்டம் நடைபெறும்போது எழுப்பப்படும் முழக்கம் இங்கு தாமரை மலரவே மலராது என்பதுதான். அதை மெய்ப்பிக்கும் விதமாக கடந்த சட்டமன்ற இடைத் தேர்தலிலும் சரி, தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் சரி. பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதே கதைதான், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என கூறப்பட்ட நிலையில், அதை பொய்யாக்கியுள்ளது தேர்தல் முடிவு.
கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கைகோர்த்துவிட்ட நிலையில், பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி இல்லை என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஆணித்தரமாக கூறிவிட்டார்.

சேலம்: நள்ளிரவில் அதிமுகவின் கோட்டையானது எப்படி?

சேலம்: நள்ளிரவில் அதிமுகவின் கோட்டையானது எப்படி?மின்னம்பலம்: சேலம் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் மொத்தமுள்ள 29 மாவட்ட வார்டுகளில் 18 இல் அதிமுகவும், 6 இல் திமுக, 4 இடங்களில் பாமக, ஒரு வார்டில் தேமுதிக என்று வெற்றி பெற்றிருக்கின்றன. ஆக மொத்தமுள்ள 29 மாவட்ட வார்டுகளில் 23 இடங்களை அதிமுக வென்றிருக்கிறது. இதேபோல 288 ஒன்றிய வார்டுகளில் அதிமுக 131, திமுக 76 ஆகிய இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது.
இந்த தேர்தல் முடிவுகள் ஜனவரி 2 ஆம் தேதி இரவுக்குப் பின் மாற்றப்பட்டவை என்றும், இதுகுறித்து திமுக தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர் தலைமைக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
நாம் அவர்களிடம் இதுபற்றிப் பேசியபோது புகார் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால் பெயர், பதவி வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையோடு பேசினார்கள்.

குஷ்பு கிரண் பேடிக்கு : பாஜகவில் எல்லோரும் மூளையை கழற்றி வைத்து விட்டுத்தான் ....? சூரியனில் ஓம் ...

KhushbuSundar ❤️  Kiran Bedi   :  Mam with all due respect, I have a doubt. Do all BJP leaders take an oath to keep their brains and commonsense safely tucked away before joining the party??
சென்னை: ஒரு டிவீட் போட்டாலும் போட்டார்.. சரமாரியாக கேலி
கிண்டல்களை வாரிக் கொட்டிக் கொண்டுள்ளார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. சூரியனிலிருந்து வரும் சத்தம், ஓம் என்று ஒலிக்கிறது என்று யாரோ ஒருவர் கிளப்பி விட அதை உண்மை என்று நம்பி (நம்பிக்கை இல்லாதவர்கள் இதுபோன்ற பித்தலாட்டத்தை புரமோட் செய்ய மாட்டார்கள் என்பதால், கிரண் பேடி இதை நம்பி விட்டார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது)
அதை தனது டிவிட்டரில் போட்டுள்ளார் கிரண் பேடி.
இதுதான் இப்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. படித்த பெண், இந்தியாவில் லட்சக்கணக்கானோருக்கு ரோல் மாடலாக இருப்பவர், இப்படி மத சாயம் பூசிக் கொள்ளலாமா என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கேலி கிண்டல்களால் துளைத்தெடுத்து வருகின்றனர்....
 இந்த நிலையில் நடிகை குஷ்புவும் ஒரு டிவீட் போட்டு கேள்வி கேட்டுள்ளார். அதில், மேடம் ரொம்ப ரொம்ப மரியாதையுடன் உங்களிடம் ஒரு சந்தேகத்தை விளக்கிக் கொள்ள கேட்கிறேன். அனைத்து பாஜக தலைவர்களுமே கட்சியில் சேருவதற்கு முன்பு தங்களது மூளையை கழற்றி பாதுகாப்பாக வைத்து விடுவார்களா.. என்று கேட்டுள்ளார் குஷ்பு. என்னாது.. சூரியன் ஓம் ஓம்னு முழங்குதா.. கிரண் பேடி போட்ட டிவீட்.. நெட்டிசன்கள் கலாய்! இந்த டிவீட்டும் இப்போது வைரலாகி வருகிறது. போட்ட டிவீட்டை இன்னும் கிரண் பேடியும் எடுக்கவில்லை. கேலி கிண்டல்களுக்கும் ஓய்வில்லை!

ஜெயலலிதா இறப்பு குறித்து OPS இல்லத்தில் பி.எச் .பாண்டியன் கேட்ட அந்த முக்கிய ஐந்து கேள்விகள் ...

Venkat Ramanujam : முன்னாள் அதிமுக சபாநாயகர் பி எச் பாண்டியன் மறைவு செய்தி வந்துள்ளதே..
அன்றைய பாதுகாப்பு மந்திரி நிர்மலா துணையுடன் இந்திய ராணுவத்தின் விமானத்தையே தன் தம்பிக்கு மருத்துவமனை செல்ல வரவழைக்கும் துணை முதல்வர் மற்றும் அதிமுக கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் என்கிற சக்தி வாய்ந்த இடத்தில் இருக்கும் ஒ.பி.எஸ் இல்லத்தில் வைத்து பி எச் பாண்டியன் கேட்ட பல கேள்விகளில் கிழ் காணும் ஐந்து கேள்விகள் ஈரம் மட்டும்மல்ல உரமும் மிக்கவை ..
🦀 கேள்வி 1 : 22 செப்டம்பர் 2016 இல் போயஸ்கார்டனில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சேவையான 1066க்கு தொடர்பு கொண்டு பேசிய டி.எஸ்.பி யார் ..
🦀 கேள்வி 2 : அப்போலோவில் இருந்து ஆம்புலன்ஸ் எத்தனை மணிக்கு புறப்பட்டு போயஸ்கார்டனுக்கு வந்தது? அதில் இருந்தவர்கள் யார்? முதல்வர் ஜெயலலிதாவிற்கு முதலுதவி சிகிச்சைகள் மேற்கொண்டது யார்..
🦀 கேள்வி 3 : போயஸ்கார்டனில் இருந்து ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்ட போது போயஸ்கார்ட்டனில் இருந்த சிசிடிவி கேமராவில் ஏன் காட்சி பதிவாகவில்லை ..

பி எச் பாண்டியன் காலமானார் . முன்னாள் பேரவை தலைவரும் அதிமுக எம்பி

பி.எச்.பாண்டியன், தமிழகசபாநாயகர், அதிமுக, அ.தி.மு.க., நெல்லை, சேரன்மகாதேவி, எம்பி, எம்எல்ஏ, துணைசபாநாயகர், சபாநாயகர், p.h.pandian, dead, passesaway,தினமலர் : சென்னை: அதிமுக மூத்த நிர்வாகியும், தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் காலமானார்.கடந்த 1985 முதல் 89 வரை சபாநாயகராக பதவி வகித்தார். 1980 முதல் 85 வரை துணை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார்.நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்த பேரியில் பிறந்த இவர், சேரன்மகாதேவி தொகுதியிலிருந்து 1977, 80, 84 ம் ஆண்டுகளில் அதிமுக சார்பில், எம்.எல்.ஏ., ஆக தேர்வு செய்யப்பட்டார். சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற இவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். நெல்லை தொகுதி எம்.பி.,யாகவும், அமைப்பு செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

நெல்லை கண்ணன், பார்ப்பன / காவி வெறியர்களின் அதிகார திமிரால் கைது .. சவுக்கு சங்கர்

Shankar A : நெல்லை கண்ணன் போன்ற ஒரு மோசமான சாதி வெறியரை பார்க்கவே முடியாது. வீட்டுக்கு வருபவர்களிடம் கூசாமல் என்ன சாதி என்று கேட்பார். சைவ பிள்ளை சாதியை சேர்ந்த அவர், தன்னை பார்ப்பனர்களை விட உயர்வாக கருதுவார். பார்ப்பனர்கள் யார், அவர்கள் பலம் என்ன என்பதை இப்போது உணர்ந்திருப்பார் என்று கருதுகிறேன். இது தவிர பெண்களை பற்றி மிக மிக இழிவான எண்ணம் வைத்திருப்பவர் அவர். அவரோட் பழகிய அனைவரும் இதை அறிவார்கள்.
மேடையில் மைக்கை பிடித்தால், என்ன பேசுகிறோம் என்பதே தெரியாது. 1996 தேர்தலில், கலைஞரை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வராதபோது, அவரை எதிர்த்து போட்டியிட்டவர் நெல்லை கண்ணன். அப்போது கலைஞரை ஒருமையிலும், மோசமாகவும் விமர்சித்தவர். ஆனால், கலைஞர் அவர் மீது கோபம் கொள்ளவில்லை. பின்னாளில், அவர் தமிழறிவுக்காகவும், அவரை அங்கீகரித்தார்.
ப.சிதம்பரத்தை மிக மிக மோசமாக பேசியுள்ளார் கண்ணன். ஆனால் அவர் கைது தவறு என்று கருத்து தெரிவித்துள்ளார் சிதம்பரம்.

சிஏஏ போராட்டத்தில் 18 வயது இளைஞர் படுகொலை..... பீகாரில் இந்துத்துவா பயங்கரவாதிகள் 6 பேர் கைது

சிஏஏ போராட்டத்தில் பங்கேற்ற 18 வயது இளைஞர் படுகொலை..... பீகாரில்
இந்துத்துவா பயங்கரவாதிகள் 6 பேர் கைது!
தீக்கதிர் : பாட்னா: பீகாரில் தேசியக் கொடியை பிடித்தபடி குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அமீர்ஹன்ஸ்லா (18) என்ற இளைஞனை இந்துத்துவா கும்பல் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளது.குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக, பீகாரின் புல்வாரி ஷரீப் பகுதியில் டிசம்பர் 21ஆம் தேதி,ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் 18 வயது இளைஞரான அமீர் ஹன்ஸ்லாவும் பங்கேற்றார். கையில் தேசியக் கொடியை பிடித்தபடி அவர் முழக்கங்களை எழுப்பினார். ஆனால், போலீசார், இப்போராட்டத்தில் வன்முறை யைக் கையாண்டு கூட்டத்தை நாலாபுறமும் விரட்டியடித்தனர்.இதனிடையே, போராட்டத்திற்குச் சென்ற அமீர் ஹன்ஸ்லா மறுபடியும் வீட்டுக்குத் திரும்பவில்லை. அவரைப் பல இடங்களிலும் தேடிப்பார்த்த பெற்றோர், இறுதியில் போலீசில் புகார் செய்தனர்.இந்நிலையில், 10 நாட்களுக்குப் பின், அமீர் ஹன்ஸ்லாவின் உடல்தற்போது போலீசாரால் கண்டெடுக்கப் பட்டு உள்ளது.

குடியரசு தின அணிவகுப்பு... கேரளா, மேற்குவங்கம், மராட்டிய மாநிலங்களுக்கு அனுமதி மறுப்பு!

Chinniah Kasi : குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பு... கேரளா,
மேற்குவங்கம், மராட்டிய மாநிலங்களுக்கு அனுமதி மறுப்பு! தீக்கதிர் : > புதுதில்லி:
தில்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் சார்பில் 32 அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தன. அதுபோல மத்திய அரசுத் துறைகள் சார்பிலும் 24 வகையான அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கோரப் பட்டிருந்தன.
ஆனால், 16 மாநில அலங்கார ஊர்திகள், 6 மத்திய அரசுத்துறை ஊர்திகள் எனமொத்தம் 22 அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமேதற்போது வழங்கப் பட்டுள்ளது.இதில் எதிர்க்கட்சிகள் ஆளும் கேரளா, மேற்குவங்கம், மகாராஷ்டிரா மாநி லங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமன்றி, 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் நீடி க்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி வரும் ஐக்கிய ஜனதாதளத்தையும் சோதனைக்கு மோடி அரசு உள்ளாக்கியுள்ளது. ஐக்கிய ஜனதாதளம் ஆட்சியிலிருக்கும் பீகார் மாநிலத் திற்கும் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வங்கிப்பணத்தோடு நாட்டை விட்டு ஓடிய 28 பெரும் முதலாளிகள் .. பட்டியல்

இந்த பட்டியலில் ஒரு தமிழன்  இல்லை! ஒரு முஸ்லிம் இல்லை! ,ஒரு தாழ்த்தப் பட்ட,,,மற்றும் பிற்படுத்தப் பட்ட சமூகத்தை சேர்ந்தவர் இல்லை!
ஆனால் பத்து லட்சம் கோடி பேங்க் ஊழல்! ,,இந்த 28 பேருமே குஜராத்தையும்,,வட மாநிலத்தையும் சேர்ந்தவங்க தான்,,,,அப்ப இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு யார் பொறுப்பேற்பது,,
,,,These are names of 28 Nationalist Business men who looted money of Indian Tax Payers
1) Vijay Mallaya
2) Mehul Choksi
3) Nirav Modi
4) Nishan Modi
5) Pushpesh Baidya
6) Asish
7) Sunny Kalara
8) Arti Kalara
9) Sunjay Kalara
10) Varsha Kalara
11) Sudhir Kalara
12) Jatin Mehta
13) Umesh Parikh
14) Kamlesh Parikh

வெள்ளி, 3 ஜனவரி, 2020

உத்தர பிரதேசம் . காருக்குள் 3 பிணங்கள்.. நெடுஞ்சாலையில் சுட்டு கொலை ... வியாபார கூட்டாளிகள் கைது ..

https://timesofindia.indiatimes.com/city/agra/ex-associates-booked-for-murder-of-delhi-bullion-trader-his-family/articleshow/73082810.cmsThe deceased were identified as Neeraj Agarwal, Neha 

Agarwal, and Dhanya Agarwal. A boy, Shaurya Agarwal, who was critically injured, was also found at the spot. He was taken to a hospital for treatment.
By Hemavandhana - tamil.oneindia.com : மதுரா: உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நடந்த ஒரு பயங்கர சம்பவம் அந்த நகரையே உலுக்கி விட்டது.
மதுராவை உலுக்கிய இந்த சம்பவத்தில் மொத்தம் 3 பேர் உயிரிழ்துள்ளனர். ஒரு உயிர் ஊசலாடி வருகிறது. இந்த சம்பவம் குறித்து மதுரா எஸ்பி அசோக் குமார் மீனா விவரித்துள்ளார்.> சம்பவம் குறித்து அவர் கூறியது இதுதான்: யமுனா எக்ஸ்பிரஸ்வே அருகே விருந்தாவனுக்கு அருகே ஒரு கார் நிற்பதாகவும், அதில் சில உடல்கள் இருப்பதாகவும் எங்களுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் விரைந்தனர். கார் கண்ணாடியை உடைத்து உள்ளே பார்த்தபோது ஒரு ஆண், பெண், மற்றும் ஒரு குழந்தை பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
3 பேரின் உடலிலும் புல்லட்கள் பாய்ந்த நிலையில் இருந்தது. ஒரு பையன் உயிருக்குப் போராடியபடி இருந்தான். அவனை உடனே போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்ற 3 பேரும் ஏற்கனவே உயிரிழந்திருந்தனர்.

நெல்லை கண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி! (எச்ச ராஜா ஏற்கனவே கூறிவிட்டார் )..

nellai kannan bail district court disposed nakkheeran.in - பா. சந்தோஷ் : மேலப்பாளையத்தில்
நடந்த முஸ்லிம் அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இலக்கியச் பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் விமர்சித்த அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டார். நேற்று (02.01.2020) மதியம் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தக் கொண்டு வரப்பட்டபோது அதனைக் கண்டித்து பலமான ஆர்ப்பாட்டங்கள் கிளம்பின.
இதனால் பரபரப்பானது கோர்ட் பகுதி. ஜனவரி 13- ஆம் தேதி வரை ரிமாண்ட் செய்யப்பட்ட நெல்லை கண்ணனை பாளை மத்திய சிறையில் அடைப்பதற்குக் கொண்டு சென்றனர்.
அதே சமயம் மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் கோட்டூர் மஸ்தான் தலைமையில் திரளானோரின் கண்டன ஆர்ப்பாட்டம் என நகரம் சூடானது. இந்நிலையில் நெல்லை கண்ணனை பாளை ஜெயிலில் வைத்தால் அமைப்புகளின் போராட்டங்கள் தீவிரமடையலாம் என தகவல் மேலேபோக, அங்கிருந்து வந்த உத்தரவின் பேரில் நெல்லை கண்ணன் சேலம் ஜெயிலுக்கு மாற்றப்பட்டு மதுரை சென்றபோது, அங்கு நிறுத்த உத்தரவு வர, இரவு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

தேர்தல் அதிகாரியை தெறிக்க விட்ட திமுக எம்.பி செந்தில்குமார் ..BBC வீடியோ

மின்னம்பலம் : தபால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி தருமபுரியில் தேர்தல் அதிகாரியிடம் எம்.பி செந்தில்குமார் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2ஆவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், திமுக முன்னிலையில் இருந்த பல இடங்களில் தேர்தல் அதிகாரிகள் வெற்றியை அறிவிக்க மறுப்பதாகவும், திமுக வெற்றிபெற்ற இடங்களில் சான்றிதழ்களை வழங்காமல் அதிமுக வெற்றிபெற்றதாக அறிவிப்பதாகவும் திமுக குற்றம்சாட்டியது.
இந்த நிலையில் தருமபுரி ஒன்றியம் நியூ காலனி மற்றும் பழைய தருமபுரி ஒன்றிய 8 மற்றும் 18ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில், திமுக வெற்றிபெற்றதாக முதலில் அறிவித்துவிட்டு, சற்று நேரத்தில் அதனை மாற்றி அதிமுக வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர் என்று புகார் எழுந்தது.
இதனையடுத்து, அங்கு விரைந்த தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார், தேர்தல் அதிகாரியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். தபால் வாக்குகள் யார் முன்னிலையில் எண்ணப்பட்டன என்று கேள்வி எழுப்பிய செந்தில் குமார், “ நீங்கள்தான் ரிட்டனிங் ஆபிசர். நாங்கள் சொல்வதுதான் பைனல் என்று நீங்கதானே சொல்றீங்க. ரூல் புக்கையும் எடுத்து காண்பிக்கிறீங்கள்ல. ஏஜெண்டுகள் முன்னிலையில் எண்ணப்பட்டதா சொல்றீங்க? நான் எங்கள் தரப்பு ஏஜெண்டை கூப்பிடுறேன். அவங்க முன்னாடி நீங்க எண்ணுனத நிரூபிக்கிறீங்களா?” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

கோலம் போட்டால் குடும்பம் குளோஸ்: பொன்.ராதாகிருஷ்ணன் கொலை மிரட்டல் வீடியோ

மின்னம்பலம் : திமுக கூறுவதால் யாரும் கோலம் போட்டுவிடாதீர்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோலம் போட்டால் குடும்பம் குளோஸ்: பொன்.ராதாகிருஷ்ணன்குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த டிசம்பர் 29ஆம் தேதி சென்னை பெசன்ட் நகரில் பெண்கள் வீடுகளுக்கு முன்பாக நோ சிஏஏ, நோ என்ஆர்சி, நோ என்பிஆர் என்ற வாசகங்களுடன் கோலம் வரைந்தனர். இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல் துறையினர் சிறிது நேரத்துக்குப் பின்னர் விடுவித்தனர். அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால், கோலம் போட்டதற்காகவெல்லாம் கைது செய்யப்படுவார்களா என இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் தங்களின் இல்லங்களில் கோலம் வரைந்து எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இருப்பினும், கோலம் வரைந்தவர்களை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கோலம் வரைந்த பெண்களில் ஒருவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்கப்படும் எனவும் சென்னை மாநகர ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல்: திமுக வெற்றி முகம்!


 உள்ளாட்சித் தேர்தல்: திமுக வெற்றி முகம்!மின்னம்பலம் : தமிழகத்தில் இரு கட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜனவரி 2) காலை தொடங்கி இப்போது வரை நீடித்து வருகிறது. இன்று (ஜனவரி 3) பகலில்தான் முழு முடிவுகள் வெளியாகும் என்றாலும் ஒவ்வொரு கட்டமான தேர்தல் முடிவுகள் தமிழக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் போன்ற கட்சி சின்னமில்லா இடங்களுக்கான வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய கட்சிகளுக்கு இடையே நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பல இடங்களில் பல்வேறு வகையான தகராறுகளால் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதும், நடப்பதும், பின் நிறுத்தப்படுவதாகவுமே இருக்கிறது.

டெல்லி குடியரசு தின விழாவில் மராட்டியம், மே.வங்க மாநில அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பு மறுப்பு

தினத்தந்தி : டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் சார்பில் 32 அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தன.
அதுபோல மத்திய மந்திரிகளும் 24 வகையான அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இதில் 16 ஊர்திகள் மாநில அலங்கார ஊர்திகள், மத்திய மந்திரிகள் சார்பில் 6 ஊர்திகள் என மொத்தம் 22 அலங்கார ஊர்திகளுக்கு மத்திய அரசு சார்பில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மேற்குவங்காளம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், மத்திய அரசு திட்டமிட்டு மேற்கு வங்காள அலங்கார ஊர்தியை புறக்கணிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோல் மராட்டியத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா


தினத்தந்தி : பாக்தாத், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக ராணுவம் தரப்பில், “பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது 3 ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 8 பேர் கொல்லப்பட்டனர். விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் வெடித்து சிதறின.
ராக்கெட்டுகள் விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதியில் விழுந்து வெடித்தன” என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் யாரால் நிகழ்த்தப்பட்டது, யாரை குறிவைத்து நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து உடனடியாக எதுவும் தெரியவரவில்லை என்று ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம், ஹிஸ்புல்லா அமைப்பின் தளம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை கண்டித்து, அந்நாட்டு தூதரகம் முற்றுகையிடப்பட்டது.
இந்த போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். தூதரகம் சூறையாடப்பட்டதற்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இத்தகைய சூழலில், ஈரான் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநங்கை ரியா வெற்றி . இந்திய சாதனை நிகழ்த்திய திமுக வேட்பாளர்

transgender-candidate-wins-in-localbody-electionhindutamil.in  : உள்ளாட்சித் தேர்தல்: திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றி; இந்திய அளவில் இதுவே முதல் முறை நாமக்கல் மாவட்டத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இவரே, இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை ஆவார்.
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுவில் 14 வார்டுகள் உள்ளன. இதில் இரண்டாவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி எஸ்.சி. பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த வார்டில் 5,000 வாக்குகள் உள்ளன. கருவேப்பம்பட்டி ஊராட்சியை உள்ளடக்கிய இந்த வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக திருநங்கை ரியாவை (30) மாவட்ட திமுக தேர்வு செய்தது. அதே பகுதியைச் சேர்ந்த அன்பரசன் - சின்னபாப்பா தம்பதியினர், ரியாவின் பெற்றோர் ஆவர். இதையடுத்து திருநங்கை ரியா, திமுக சார்பில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் இரண்டாவது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார்.

சீமானுக்கு துக்ளக் சோவும் குருமூர்த்தியும் நாம் தமிழரை சிவந்தி ஆதித்தனிடம் இருந்து வாங்கி கொடுத்த வரலாறு

T.பாலசுப்ரமணிய ஆதித்தன். :
சீமான் , நெல்லைக் கண்ணன்...
2011 ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளக் கூடாது என்று கம்யூனிஸ்ட் நல்லக்கண்ணு தடை ஆணை பெற்ற நேரம் அவருக்கு ஒரு பாராட்டு விழா தாமிரபரணி அமைப்பின் சார்பில் திருநெல்வேலி மார்கெட் திடலில் நடத்தினேன்...
அதில் எனது ஆசான் V.சுந்தரம் IAS அவர்கள் தலைமை தாங்கினார்.
நம்மாழ்வார் ஐயா உள்பட பலர் வந்து இருந்தாலும் வேகமாக பேச ஒரு ஆள் தேவை என்று என் நண்பர்கள் இருவரை சொன்னார்கள்.
அது சீமானும், நெல்லை கண்ணனும். சீமானைப் பற்றி அன்று எனக்கு தெரியாது. அவர் நாடார் சமுதாயம் என்றும் அப்போது எனக்கு தெரியாது. குருமூர்த்தி, சோ பின்னணியில் தினத்தந்தியில் பேசி நாம் தமிழர் இயக்கத்தை இவர் மூலமாக நடத்துகிறார் என்றும்
தெரியாது.
அப்போது சீமான் வைத்து இருந்தது நாம் தமிழர் இயக்கம். கட்சி அல்ல.
நானும் எனது நண்பரும் வளசரவாக்கம் சீமான் வீட்டுக்கு திருநெல்வேலி நண்பர் மூலமாக நிகழ்ச்சிக்கு பேச காலை 11 மணி சென்றோம். என் பெயரை சொன்ன உடன் சீமான் வீட்டில் ஒவ்வொரு அறையாக திறந்து மாடி ஹாலில் அமர வைத்தார்கள்.
சீமான் குளிக்கிறார்.
அமருங்கள் என்றனர்.
நாங்கள் இருவர் மட்டுமே ஹாலில் இருந்தோம்.
நான் உட்கார்ந்து இருந்த சோபாவின் கீழ்,எதிரில் சுற்றிலும் புத்தம் புதிய 3 அடி வீச்சு அரிவாள் கட்டு கட்டாக, ஏராளமான துப்பாக்கிகள்,ரிவால்வர்கள் இருந்தன.

ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி 50 கோடி விலங்குகள் மரணம்!



.sbs.com.au : ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 50 கோடி விலங்குகள் கொல்லப்பட்டிருப்பதாக சிட்னி பல்கலைக்கழக சூழலியலாளர்களை மேற்கோள்காட்டி news.com.au செய்திவெளியிட்டுள்ளது.
இதுவரை காட்டுத்தீ காரணமாக சுமார் 5 மில்லியன் ஹெக்டயர் நிலப்பரப்பு எரிவடைந்துள்ள பின்னணியில் தமது கணிப்பின்படி சுமார் 480 மில்லியன் பறவைகள், பாலூட்டிகள் , ஊர்வன என பலதரப்பட்ட விலங்குகள்  பலியாகியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர பல அரியவகை தாவர இனங்களும்கூட இக்காட்டுத்தீயில் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் புறநகர் பகுதியான Coolagolite பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர் ஒருவர் காட்டுத்தீயினால் படுகாயமடைந்த தனது 20 மாடுகளை கருணைக்கொலை செய்த விவகாரம் இணையத்தில் வெளியாகி பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை பார்ப்பன, பனியா, மார்வாரிகளின் சொர்க்கபுரியாக மாற்றப்படுகிறது!

தமிழ் மறவன் : சென்னை அமைந்தகரை பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாய் இருந்த பூர்வகுடி மக்களின் வீடுகளை தரைமட்டமாக்கி பெரும்பாக்கத்திற்கு விரட்டியபோது, நான் ஒருவன் மட்டுமே பேசிக் கொண்டிருந்தேன்.
அந்த பகுதி மக்களே கூட வரவில்லை.
கதறினேன், இது ஆரம்பம்தான் என்று அன்றே சொன்னேன்.
இதோ, இன்று சத்தியவாணி முத்து நகர்!

இது மிக வேகமாய் இன்னும் தொடரும்....
பார்ப்பன, பனியா, மார்வாரிகளின் சொர்க்கபுரியாக சென்னை மாற்றப்படுகிறது!
தங்கள் பொருளியல் வாழ்வு, உறவு, கல்வி எல்லாவற்றையும் இழந்து தன் சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாய் மக்கள் போவதைக் கண்டு மனம் பதைக்கிறது.
இதற்காக என்ன செய்யப் போகிறோம்?
மீண்டும், மீண்டும் சொல்கிறேன் இதேநிலை நீடிக்குமானால் சென்னைக்குள் தமிழர்கள் நுழைய பார்ப்பன, பனியா, மார்வாடிகளுக்கு கூலிக்கு மாரடிப்போருக்கு மட்டுமே கடவுச்சீட்டு வழங்கும் நிலையும் நிச்சயமாக வரும்!
ஆம், மண்ணின் மைந்தர்களுக்கான உரிமை முழக்கம், விடுதலையை நோக்கியதாய் நகர வேண்டிய தருணம்.

வியாழன், 2 ஜனவரி, 2020

நான் பிறந்தபோது இந்தியாவும் இல்லை பாகிஸ்தானும் இல்லை பங்களாதேசும் இல்லை

Samsu Deen Heera : நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை.
பாகிஸ்தானுமில்லை, பங்களாதேசுமில்லை.
அப்போது நான் குழந்தையாக இருந்தேன். வாளும் வேளும் கேடயமும் சிலநூறு வீரர்களையும் கொண்டிருந்த ஒருவரைக் காட்டி, இவர்தான் உனக்கும் இந்த சமஸ்தானத்துக்கும் அரசர் என்றார்கள். சரி என்றேன்.
அப்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கிருந்தோ வாளும் வேலும் குதிரையும் கொண்டு படைதிரட்டி வந்த ஒருவன் என் அரசரின் தலையைக் கொய்து விடட்டு இனி நான்தான் உங்களுக்கும் உங்கள் சிற்றரசுக்கும் அரசன் என்றான். சரி என்றேன்.
அப்போது நான் இளைஞனாக இருந்தேன். துப்பாக்கிகளும் பீரங்கியும் கொண்டு கப்பலில் வந்த வியாபாரிகள் என் அரசனைக் கொன்றுவிட்டு சிலரை அடிமையாக்கி நாங்கள் தான் உங்களுடைய அரசாங்கம், நம்முடைய பேரரசின் அரசி பிரிட்டிசில் இருக்கிறார் என்றார்கள். சரி என்றேன்.
அப்போது நான் குடும்பத்தலைவனாக இருந்தேன். நாம் விடுதலை பெற்றுவிட்டோம். இனி நாங்கள் தான் உனக்கும் நம் இந்தியாவுக்கும் அரசாங்கம் என்றார்கள். சரி என்றேன்.
வெடிகுண்டுகள் விமானங்கள் ஏவுகணைகள் கொண்டு நிறைய சண்டைகள் நடந்தது, கொலைகள் நடந்தது, கொள்ளைகள் நடந்தது. இந்தியா என்றார்கள் பாகிஸ்தான் என்றார்கள் பங்களாதேஸ் என்றார்கள் தனித்தனி நாடுகள் தனித்தனி அரசாங்கம் என்றார்கள். சரி என்றேன்.

திமுக வேட்பாளர் திருநங்கை ரியா வெற்றி திருச்செங்கோடு ஒன்றிய குழு உறுப்பினர் ... வீடியோ


மின்னம்பலம் : திருச்செங்கோடு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றிபெற்றார்.
திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் தலைமையில், சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி நடந்த திமுக பொதுக்குழுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிலும் குறிப்பாக, திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, திருநங்கைகள் பலரும் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இதனிடையே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் 14 வார்டுகள் உள்ளன. அதில் இரண்டாவது வார்டு எஸ்.சி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. 2ஆவது வார்டில் திருநங்கை ரியா திமுக சார்பில் போட்டியிட்டார்.

நெல்லை கண்ணன்: நீதிமன்றத்தில்... சோலியை முடித்தல் என்றால் தோற்கடித்தல் என்றுதான் பொருள்.. வழக்கறிஞர் வாதம்

தாய் மாமன் நெல்லை கண்ணன்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?மின்னம்பலம் : ‘அமித் ஷாவின் சோலியை முடித்தால்  மோடியின் சோலி முடிந்து போகும்’ என்று பேசியதற்காக நேற்று (ஜனவரி 1) கைது செய்யப்பட்ட பேச்சாளர் நெல்லை கண்ணன், இன்று (ஜனவரி 2) மதியம் 1.30க்கு திருநெல்வேலி மாவட்ட  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நேற்று இரவு பெரம்பலூரில் இருந்து நெல்லைக்கு போலீஸ் வேனிலே அழைத்துவரப்பட்ட நெல்லை கண்ணனை இன்று காலை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் போலீஸார்.
அங்கே அவருக்கு சில சோதனைகள் நடத்தப்பட்டன. இதயம் தொடர்பான எக்கோ டெஸ்ட் எடுக்கப்பட்டதில் இதயம்  நார்மலாக இருப்பதாக தெரிவிக்கப்பட, அதன் பின்  பகல்  1.30க்கு  நெல்லை மாவட்ட  நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார் நெல்லை கண்ணன்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள். Results Live Sun News Live

காணமல் போன நாம் தமிழர் கட்சி! ...மீண்டு வருகிறது தினகரன் கட்சி? – உள்ளாட்சி தேர்தல் நிலவரம்!

ttvவெப்துனியா :உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில் அதிமுக, திமுகவிற்கு பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சி பின்னடைவை சந்துத்துள்ளது.
 ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதற்கான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது. தற்போதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 59 இடங்களில் முன்னிலையிலும், திமுக 41 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளன.
இதற்கு அடுத்து டிடிவி தினகரனின் அமமுக கட்சி இரண்டு இடங்களில் முன்னிலையில் உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி எந்த இடத்திலும் முன்னிலை வகிக்கவில்லை. மக்களவை தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு பிறகு அதிக வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்தது நாம் தமிழர் கட்சி. இதனால் உள்ளாட்சி தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சில இடங்களிலாவது வெற்றி அல்லது முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கலைஞர் டிவி ....நேரடி ஒளிபரப்பு.. லைவ் வீடியோ

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்- முன்னிலை நிலவரம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்- முன்னிலை நிலவரம்மாலைமலர் : தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மதிய நிலவரப்படி வேட்பாளர்களின் முன்னிலை நிலவரத்தை பார்ப்போம். சென்னை: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27, 30-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்த 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 91,975 பதவி இடங்கள் உள்ளன. இதில் 18,850 இடங்களுக்கு போட்டியின்றி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 73,405 பதவிகளை நிரப்ப ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.
இந்த இடங்களுக்கு 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 27-ந்தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 76.19 சதவீதமும் 30-ந்தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கிராம உள்ளாட்சி தலைவர், கிராம உள்ளாட்சி உறுப்பினர், ஒன்றிய உள்ளாட்சி வார்டு உறுப்பினர், மாவட்ட உள்ளாட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 விதமான பதவிகளுக்கு மக்கள் வாக்களித்தனர். வாக்களிப்பதற்கு வசதியாக இந்த 4 பதவிகளுக்கும் 4 வண்ணங்களில் ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

தி.மு.க.வின் வெற்றியை தடுக்க சதி- தேர்தல் ஆணையரை சந்தித்த மு.க.ஸ்டாலின் பேட்டி

தி.மு.க.வின் வெற்றியை தடுக்க சதி- தேர்தல் ஆணையரை சந்தித்த மு.க.ஸ்டாலின் பேட்டி
வாக்கு எண்ணிக்கைமாலைமலர்  : உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் மனு அளித்தார். திமுகவின் வெற்றியை தடுக்க சதி நடப்பதாக அவர் கூறினார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு சில இடங்களில் குளறுபடிகள் காரணமாக வாக்கு எண்ணும் பணி பாதிக்கப்பட்டது. முறைகேடுகள் நடப்பதாக திமுக முகவர்கள், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி திமுக கூட்டணி முந்திக்கொண்டிருக்கிறது. ஆனால், திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்துவதற்காக அதிமுக, போலீஸ் மற்றும் அதிகாரிகள் சதி செய்கிறார்கள். வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தாமதமாக அறிவிக்கிறார்கள். 

சீமானுக்கு ஒரு நீதி நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதியா? ராஜீவ் காந்தியை கொன்றோம் என்ற சீமான் இன்னும் கைதாகவில்லை ...

சீமான் கைது: காங்கிரஸ் - பாஜக கூட்டணி!மின்னம்பலம் : நெல்லை குடியுரிமை மாநாட்டில் பேசியதற்காக நெல்லை கண்ணன் தமிழக போலீஸாரால் நேற்று (ஜனவரி 1) பெரம்பலூரில் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தி வந்த நிலையில், நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கருத்து தெரிவித்தார். “நெல்லை கண்ணன் பேசிய பேச்சு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான அறச்சீற்றம்தான். அதை வேறு வகையில் பார்க்கக் கூடாது. நெல்லை கண்ணன் தனி நபரல்ல, அவர் தமிழர்களின் சொத்து” என்றும் கூறியிருந்தார். இதுகுறித்து ஹெச்.ராஜாவிடம் கருத்து கேட்கப்பட்டபோது, “நெல்லை கண்ணனோடு சேர்த்து சீமானையும் கைது செய்ய வேண்டும்” என்று காட்டமாகப் பேட்டியளித்தார். நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட நிலையிலும் அதற்கு சீமான் கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையில் கருத்து தெரிவிப்பதில் நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி, சீமானுக்கு ஒரு நீதியா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

2020இல் கேரளத் தமிழர்களின் குடியுரிமை?

மின்னம்பலம் - ச.அன்வர் : கிழக்கிலிருந்து மேற்கு வரை... வடக்கிலிருந்து தெற்கு வரை... எல்லாம் விவாதிக்கப்பட்டாயிற்று.
Add caption
மதம், சாதி, இனம், நிலம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் என்று தமிழன் விவாதிக்காத பொருளே இல்லை இன்று. பாலஸ்தீனத்திலிருந்து பர்மா வரை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆய்ந்து சமூக வலைதளங்களில் நம்முடைய ஆதங்கங்களைக் கொட்டித்தீர்க்கிறோம்.
ஆனால், கூப்பிடு தூரத்தில் கையறு நிலையில் செய்வதறியாது எதிர்காலம் குறித்து திகைத்து நிற்கும் கேரளத்தில் வாழும் நம் தொப்புள்கொடி உறவுகளைக் கவனமாக மறந்துவிட்டோம்.
12 ஆண்டுகள் வாழ்ந்தால் போதும் இங்கிலாந்தில் ஒருவனால் குடியுரிமை பெற்றுவிட முடியும். ஆனால் இந்திய துணைக்கண்டத்தில் இன்னொரு மாநிலத்தில் 139 ஆண்டுகளாக வாழும் ஒரு தமிழனால் அவனுடைய வாழ்க்கைக்குத் தேவையான எதையும் பெற முடியாத அவலநிலை இன்றளவும் நீடிக்கிறது.
சொந்த மண்ணில் அகதியாவதைவிட பெருஞ்சோகம் வேறெதுவும் இல்லை என்றே நினைக்கிறேன். 1874ஆம் ஆண்டு அன்றைய மதுரை மாவட்டத்துக்குள் தான் பணிக்குச் சென்றார்கள் எம் தமிழ் மக்கள். அன்றைக்கு திருவிதாங்கூர் சமஸ்தானமோ, கொச்சி சமஸ்தானமோ, சொந்தம் கொண்டாடாத பகுதியில்தான் தேயிலை சாகுபடிக்காகப் பயணித்தார்கள் எம் தமிழ் நிலத்து அப்பாவிகள்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் லைவ் ..சத்தியம் டிவி .... வீடியோ

-சுப. வீரபாண்டியன் : நெல்லை கண்ணன் என்னும் சூத்திரனாகிய நான்......


Suba.Veerapandian : தலைவர் கலைஞரைக் கடுமையாக விமர்சித்தவர், திமுகவிற்கு எதிராகப் பல மேடைகளில் பேசியவர், ஆன்மிகம், பக்தி, சாதிக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றவர் - இவர்தான் நெல்லை கண்ணன்.
ஆனாலும், நேற்று இரவு அவரைக் காவல் துறையினர், கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக வண்டியில் ஏற்றியபோது, என் ரத்தம் கொதித்தது.
ஏன்?
அவர் ஒரு தமிழர். பார்ப்பனர் அல்லாதவர். தமிழ் இலக்கியங்களில் மிகப் பெரும் புலமை வாய்ந்தவர். சிறந்த சிந்தனையாளர். மணிக்கணக்கில் சலிப்பின்றிப் பேசக்கூடிய சொற்பொழிவாளர்.
இத்தனை தகுதிகள் இருப்பதால், அவர் மோடி, அமித்ஷா பற்றிப் பேசியது நியாயம் என்று நான் கூற வரவில்லை. அது பொறுப்பற்ற பேச்சு! அதுவும் இஸ்லாமியர்கள் மேடையில் அவர் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று நண்பர்கள் சிலர் கூறுகின்றனர். நான் அப்படிக் கருதவில்லை. எந்த மேடையிலும் அப்படிப் பேசக்கூடாது என்பதே சரி.
அவரது உரைகள் பலவற்றை நான் நேரிலும், வலையொளி வழியாகவும் கேட்டுள்ளேன். நண்பர்கள் அறிவுமதி, பழனி பாரதி ஆகியோர் அவர் குறித்து வியந்து சொல்வதையும் கேட்டுள்ளேன்.

நெல்லை கண்ணன் மட்டுமல்ல .... ஆர் எஸ் எஸ் பற்களின் நடுவே அமர்ந்திருக்கும் சூத்திரர்கள் ..

Kandasamy Mariyappan : நெல்லை திரு. கண்ணன்:!!!
2011 தேர்தல் நேரம், Channelஐ மாற்றும் பொழுது, நெல்லை திரு.கண்ணன் பேசுவதை கேட்க நேர்ந்தது. கலைஞரை அப்படி வசைபாடி கொண்டிருந்தார்.
அவர் பயன்படுத்திய வார்த்தைகளில் மிகவும் கன்னியமான வார்த்தை, "இந்த கருணாநிதி இருக்கானே மகா அயோக்கிய பய, திருட்டு பய" இதுமட்டுமே. மற்றவைகள் எப்படி இருந்திருக்கும். எனது கோபத்தில் TVஐ உடைக்க வேண்டும் என்று தோன்றியது. TVஐ Switch off செய்து விட்டேன்.
இன்று நெல்லை திரு. கண்ணனின் நிலை!!!???. யார் காப்பாற்றுவார்!!!???
RSSன் பின்னால் செல்லும் சூத்திர சங்கிகளின் கவனத்திற்கு,
நீங்கள் RSS மனது நோகாமல் நடந்து கொள்ளும் வரையில்தான் உங்களுக்கு ஏதோ மரியாதை கிடைப்பது போன்று இருக்கும். சற்றே விலகினால் அது உங்களை காலிலேயே போட்டு மிதிக்கும்.
சூத்திர சங்கி நடிகர் திரு. சிவக்குமார் இராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் பற்றி சிலாகித்துக் கொண்டிருந்த வரையிலும், ஆகா ஓகோ பேஷ் பேஷ் என்று ஷொன்ன RSS கூட்டம்
ஒருமுறை, ஒரே முறை மாற்றிப் பேசியதும் சிவக்குமாரை வீதியிலேயே போட்டு மிதித்தது.
இன்னொரு சூத்திர ஷங்கி சஷுகி. சஷிவம், ஷெல்லுமிடமெல்லாம் RSS பஜனைதான். அதுவரையில் சுகி. சிவம் அவர்கள் RSSன் Chief Guest. ஒருமுறை, ஒரே ஒருமுறை மக்கள் பெரியாரை படிக்க வேண்டும் என்றார். பாவம், சுகி சிவம் அவர்களை RSS, மூத்திர சந்தில் வைத்து துவைத்து எடுத்தது.

சென்னை கோலப்போராட்ட பெண்ணுக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு.. சென்னை போலீஸ் கமிஷனர் விவஸ்தைநாதன் திடுக் தகவல்


Anti CAA Kolam protesters and Pakistan connection, Chennai Police commissioner reveals tamil.oneindia.com - veerakumaran : சென்னை: சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்தியவர்களுக்கு, பாகிஸ்தானை சேர்ந்த அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திடுக்கிடும் தகவலை, தெரிவித்தார்.
சென்னையில் இன்று மாலை நிருபர்களை சந்தித்தார் போலீஸ் கமிஷனர், விஸ்வநாதன். அப்போது 2018 ஆம் ஆண்டை விட 2019 ஆம் ஆண்டில் சென்னையில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன என்பது தொடர்பாக புள்ளி விவரங்களை வெளியிட்டு அவர் பேட்டியளித்தார். இதன்பிறகு நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் கொடுத்தார்.
இந்த பேட்டியின் போதுதான் கோல போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவலை விஸ்வநாதன் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் பட்டாசு வெடித்த தமிழருக்கு ரூ.15 லட்சம் அபராதம்


சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையின்போது தடையை மீறி பட்டாசுகளை வெடித்த தமிழருக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
 சிங்கப்பூரில் பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி தீபாவளி பண்டிகையின்போது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் சீனிவாசன் சுப்பையா முருகன் (வயது 43) என்ற தமிழர், தடையை மீறி பட்டாசுகளை வெடித்தார். இது தொடர்பாக முருகன் மீது வழக்கு தொடரப்பட்டு சிங்கப்பூர் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இதில் முருகன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, இந்த வழக்கில் முருகனுக்கு 3 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சத்து 89 ஆயிரம்) அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்

புதன், 1 ஜனவரி, 2020

தேவதாசிகளின் உண்மை வரலாறு!

devadasi true history temples mandapam devadasi true history temples mandapam nakkheeran.in - ஆதனூர் சோழன் : தேவதாசி என்ற வார்த்தை அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தேவதாசி என்று அழைக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவானார்கள்? அந்த வரலாற்றின் கரு எங்கு உற்பத்தியாகியது? இப்போது அந்த வார்த்தைக்கு கற்பிக்கப்படுகிற  அர்த்தம் நிஜம்தானா? என்பது பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்தோம். அதன் விளைவே இந்த வரலாற்று சுருக்கம்.
> தேவதாசி என்பது வடமொழிச் சொல் என்கிறார்கள். கி.பி.ஆறாம் நூற்றாண்டில்தான் இந்த தேவதாசி முறை புழக்கத்தில் இருந்தது என்று சிலர் கூறினாலும், சிந்து சமவெளி நாகரிக காலத்திலும், அதற்கு முந்தைய வேத காலத்திலும் இந்த பழக்கம் நடைமுறையில் இருந்தது என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆலயங்களில் இசை, நடனம் உள்ளிட்ட கலைகளின் வழியாக சேவையாற்றியவர்களே தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டனர். சமூகத்தில் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த பெண்கள் ஒரு பகுதி ஆண்களால் பாலியல் பொருளாக ஆக்கப்பட்டனர் என்கிறது வரலாறு. தேவதாசி என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே உயர்ந்தபட்ச கொதிநிலைக்கு சிலர் ஆளாவது ஏன் என்பதற்கு முடிந்த அளவுக்கு விளக்கம் சொல்வதே நமது நோக்கம்.

BBC : ஐ.நா. வளர்ச்சி இலக்குப் பட்டியல்: ஏழ்மை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்.. தொடர் சாதனை ..

முரளிதரன் காசிவிஸ்வநாதன - பிபிசி தமிழ் : சமீபத்தில் வெளியிடப்பட்ட
இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்கு தரவரிசைப் பட்டியலில் கேரளா முதலிடத்தைப் பிடிக்க, தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் ஆண் - பெண் விகிதாச்சாரம் உள்ளிட்ட பிரிவுகளில் கடந்த ஆண்டைவிட தமிழ்நாடு பின்தங்கியுள்ளது. உலகம் முழுவதும் நிலையான வளர்ச்சிக்கென சில பிரிவுகளைப் பட்டியலிட்டு, ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்கு மேம்படுகின்றன என்பதை கணக்கிட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை முடிவெடுத்தது. இதில் 193 நாடுகள் கையெழுத்திட்டிருக்கின்றன. இந்த இலக்குகளை 2030ஆம் ஆண்டில் எட்ட வேண்டுமெனத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை நிடி ஆயோக், நிலையான வளர்ச்சி இலக்கைக் கணக்கிட 16 பிரிவுகளை வரையறுத்தது. ஒவ்வொரு பிரிவிற்கும் 100 புள்ளிகள் வழங்கப்படும். அந்தப் புள்ளிகளின் அடிப்படையில், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் எந்த இடத்தில் இருக்கின்றன என்பது தரவரிசைப்படுத்தப்படும். இந்த தரவரிசைப் பட்டியல் 2018ல் முதன்முதலாக வெளியிடப்பட்டது.

தமிழ் சினிமா 2019 -அனைவருக்கும்-லாபம் தந்த 12 படங்கள் ... பட்டியல்

 தமிழ் சினிமா 2019: அனைவருக்கும்-லாபம்!மின்னம்பலம் : கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் 209 நேரடி தமிழ் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படங்களில் 60 திரைப்படங்கள் 5 கோடி ரூபாய் முதல் 200 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டவை.
ஒரு படம் வெளியாவதற்கு முன்பு அனைத்து உரிமைகளும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் விற்பனையாகி விட்டால் தயாரிப்பாளருக்கு லாபம் என்பது அப்போதே உறுதியாகிவிடும். அந்தப் படத்தை வாங்கி திரையிடுபவர்களுக்கு லாபமா, நஷ்டமா என்பதைப்பற்றி தயாரிப்பாளர்கள் கண்டுகொள்வதில்லை.
< இன்றைய சினிமாவைப் பொறுத்தவரை தயாரிப்பாளர்களிடமிருந்து அப்படம் வெளிவருவதற்கு முன்பு அதில் நடித்த, பணிபுரிந்த அனைவரும் தங்களது சம்பளத்தை வாங்கி விடுகின்றனர். அந்த படம் வெற்றி பெறுமா அல்லது நஷ்டம் வருமா என்பதைப்பற்றி படத்தில் நடித்த நட்சத்திரங்கள் கவலைப்படுவதில்லை.

நெல்லைக் கண்ணன் பெரம்பலூரில் கைது!

நெல்லைக் கண்ணன் பெரம்பலூரில் கைது!மின்னம்பலம் : மோடி மற்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவை அவதூறாக பேசிய விவகாரத்தில், பெரம்பலூரில் தங்கியிருந்த நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.
நெல்லையில் டிசம்பர் 29 ஆம் தேதி எஸ்டிபிஐ நடத்திய குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய நெல்லை கண்ணன், “மோடி பிரதமர். ஆனால் அமித் ஷாதான் அவருக்கு மூளை. சண்டியனே அமித் ஷாதான். அமித் ஷா சோலி முடிஞ்சிடுச்சுன்னா, இவர் சோலி முடிஞ்சுடுச்சு. அது ஒரு பக்கம். நீங்க ஒருத்தனும் முடிக்க மாட்டேங்கியலே” என்று பேசினார்.
இந்த காணொளி வேகமாக பரவிய நிலையில், அமித் ஷாவை கொலை செய்ய நெல்லை கண்ணன் தூண்டியதாக குற்றம்சாட்டிய ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக நெல்லைக் கண்ணன் மீது மூன்று பிரிவுகளில் கீழ் நெல்லை மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே நெல்லை தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக நெல்லை கண்ணன் நேற்று அனுமதிக்கப்பட அங்கும் பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் வேறு மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டார்.

ஜெ.வை குழந்தை போல் பார்த்து கொண்ட சசிகலா… விரைவில் வெளியாகும் வீடியோ… அதிர்ச்சியில் பாஜக, எடப்பாடி!

admksasikalanakkheeran.in- தாமோதரன் பிரகாஷ் : “யாரைத்தான் நம்புவதோ’ என்கிற பாட்டை சிறையிலிருந்து பாடிக் கொண்டிருக்கிறார் சசிகலா என்கிறது மன்னார்குடி வட்டாரம்.  எதையும் எந்த நேரத்திலும் செய்து முடிக்கும் படையாக இருந்தது மன்னார்குடி வகையறா. யார் சசிகலாவைப் போல பேசிக் கொன்றார்கள் என முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே. பாலன் வழக்கில் அ.தி.மு.க.வின் வடசென்னை மாவட்ட இணைச் செயலாளர் பூங்கா நகர் மாணிக்கம் மீது போலீசே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அப்படியிருந்த சசிகலாவின் டீம் இன்று சிதறிப் போயிருக்கிறது. சசிகலா சிறைக்குப் போவதற்கு முன்பு விசுவாசிகளாகவும் உறவுகளாகவும் நடித்த பலர் இன்று சசிகலாவுக்கு எதிராக திரும்புவதை பார்த்து சசிகலா திகைத்துப் போயிருக்கிறார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து நவம்பர் மாதம் 2017ஆம் ஆண்டு இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியபோது, இளவரசி மகள் கிருஷ்ணப்ரியாவின் செல்போனில் இருந்த படங்களை கைப்பற்றியது. அதில் இருந்த கம்பெனிகள் மற்றும் முதலீடு விவரங்கள் சுமார் 2,000 கோடி ரூபாய்க்கு இருந தது. அதைப் பற்றி கிருஷ்ண ப்ரியாவிடம் வருமான வரித் துறை கேட்டது. “சசிகலா அத்தைக்கு பல மனுக்கள் வரும். அதில் ஒரு மனுவில் கம்பெனிகளின் பெயர்களும் பண விவரங்களும் குறிப்பிட்டிருந்ததால் அதை நான் போட்டோ எடுத்து வைத்தேன் என சொல்லியிருக்கிறார். இது தான் கிருஷ்ணப்ரியா கொடுத்த வாக்குமூலம் என சசிகலாவின் வழக்கறிஞர்கள் சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார்கள். அதைத் தான் உண்மை என சசிகலா நம்பியிருந்தார். அந்த வாக்குமூலத்தை தாண்டி வருமான வரித்துறையிடம், கிருஷ்ண ப்ரியாவிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் இருந்தன.

நெல்லை கன்னணனை கைது செய்ய கோரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா

மாலைமலர் : நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 நெல்லை கண்ணனின் பேச்சுக்கு பா.ஜ.க சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து நெல்லை கண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
 பா.ஜ.க சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது நெல்லை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வு விண்ணப்பத்திற்கு காலகெடு நீட்டிப்பு .. 6 தேதிவரை ..

தேர்வு எழுதும் மாணவர்கள்மாலைமலர் :புதுடெல்லி: பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை, தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கியது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இணையதள முடக்கத்தால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் கடும் சிரமப்பட்டனர்.

தமிழ் பேச்சுக்கு வலிமை சேர்த்த கலைஞர் .... தோள்வலியும் தோளில் வலியும் ...

Muralidharan Pb ; ஒரு தலைவரின் பிறந்த நாள் விழாவில் வாழ்த்துரை வழங்க கலைஞர் மற்றும் பலர் வந்திருந்தனர்.
ஒரு பத்திரிகை ஆசிரியர் வாழ்த்துரை வழங்கிப் பேசும்போது, "இதோ,இங்கே விழா காணும் தலைவர் உண்மையிலேயே ஒரு தலைவனுக்குரிய திடகாத்திரமான உடல்வாகு கொண்டவர். சில தலைவர்களைப்போல தோள்வலி, கழுத்துவலி,கைவலி என்று மருத்துவமனை போய் படுத்துக் கொள்பவர் அல்ல" என்று பேசினார்.
அவ்வளவுதான்"! விழாமண்டபத்தில் கூடியிருந்தவர்கள், " பேச்சை நிறுத்து....
அண்ணாவை பழிக்காதே!" என்று கூச்சலிட ஆரம்பித்தனர்.

காரணம், அந்த சந்தர்ப்பத்தில் சிறைதண்டனைப் பட்டிருந்த அறிஞர்அண்ணா , தோளில் ஏற்பட்ட வலி காரணமாக. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். எனவே அவரை கேலி செய்வது போல அந்த பத்திரிகை ஆசிரியர் பேச்சு அமைந்ததாலேயே மண்டபத்தில் கலாட்டா ஏற்பட்டது.
அந்தச் சூழ்நிலையில் விழா அமைதியாக நடந்து முடியவும் அந்த பத்திரிகை ஆசிரியர் தவறாகப் பேசி விட்டதைச் சமாளித்து அனைவரையும் சமாதானம் அடையச் செய்யவும் கலைஞர் விரும்பினார்.

கமல்ஹாசனுக்கு எதிராக கவுதமியை களம் இறக்குகிறது பா.ஜனதா

மாலைமலர் :  மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் கமலுக்கு எதிராக அரசியலில் நடிகை கவுதமியை பா.ஜ.க. களம் இறக்கியுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
 கமல்ஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்தவர் கவுதமி. பத்து வருடங்களுக்கும் மேலாக துணைவியாகவும் இருந்தார். சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக கமலிடம் இருந்து கவுதமி பிரிந்தார். பிறகு சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்கினார். அதில் கவுதமிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் அரசியல் பக்கம் கவனத்தை திருப்பினார். பிரதமர் மோடியை கவுதமி சந்தித்து பேசினார். டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய கையோடு ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பேட்டியளித்து பரபரப்பு ஏற்படுத்தினார். பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

டி.டி.நாயுடு அறக்கட்டளையின் நிலத்தை ரூ.5.61 லட்சம் கோடிக்கு பதிவு செய்த சார்பதிவாளர்

T.D. Naidu

hindutamil.in : அரசால் முடக்கப்பட்ட டி.டி.நாயுடு அறக்கட்டளையின் நிலத்தை
ரூ.5.61 லட்சம் கோடிக்கு பதிவு செய்த திருத்தணி சார்பதிவாளர் இடைநீக்கம்: பதிவுத் துறை தலைவர் நடவடிக்கை
அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட டி.டி.நாயுடு அறக்கட்டளையின் 50 ஏக்கர் நிலம் ரூ.5.61 லட்சம் கோடிக்கு மேல் செட்டில்மென்ட் பதிவு செய்யப்பட்டிருப் பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட சொத்தைஆவணப் பதிவு செய்தது தொடர்பாக திருத்தணி சார்பதிவாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் குன்னவலம் கிராமத்தில் தீனதயாள் (டி.டி.) மருத்துவக் கல்லூரி இயங்கி வந்தது. இங்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் எம்பிபிஎஸ் வகுப்புகளில் மாணவர்களை சேர்த்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கல்லூரி நிர்வாகி தீனதயாள் கடந்த 2013-ல் கைது செய்யப்பட்டார்.
அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினரும் அவர் மீது வழக்கு பதிவு செய்து, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் உள்ள அவருக்கு சொந்தமான நிலங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட நிலம், முறைகேடான வகையில் செட்டில்மென்ட் மூலம் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பில் பதிவு செய்யப்பட்டிருப்பது பதிவுத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த நவ.29-ல் நடந்த 3 செட்டில்மென்ட் ஆவணங்கள் மூலம் இந்த முறைகேடு தெரிய வந்துள்ளது.

2019: அதிக வசூல் செய்த முதல் 10 படங்கள்!

2019ஆம் ஆண்டு அதிகம் வசூல் செய்த முதல் 10 படங்கள்
1. பிகில் - 75 கோடி
2019: அதிக வசூல் செய்த முதல் 10 படங்கள்!2. விஸ்வாசம் - 70 கோடி
3. பேட்ட - 48 கோடி
4. காஞ்சனா 3 - 40 கோடி
5. நேர் கொண்ட பார்வை - 38 கோடி
 6. நம்ம வீட்டு பிள்ளை - 30 கோடி
 7. அசுரன் - 24 கோடி
8. கோமாளி - 22 கோடி
 9. கைதி - 21 கோடி
10. காப்பான் - 18 கோடி
மின்னம்பலம் : 2019ஆம் வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை 209 நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் முதல் 10 படங்கள் குறித்துப் பார்க்கலாம்.
இந்த வரிசையில் கடந்த சில வருடங்களாக முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். அவர் நடித்த பிகில் படம் இந்த வருடம் முதல் இடத்தில் உள்ளது. அதிக வசூல் செய்துள்ள முதல் 10 திரைப்படங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை, அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்யாமல் அபிமான நடிகர் மீது ரசிகர்களுக்கு இருக்கும் அபரிமிதமான நேசத்தை ஆர்வமாகத் தூண்டிவிட்டு, முதல் நாளே படத்தைப் பார்க்க வேண்டுமென்ற கண்மூடித்தனமான வெறியை வியாபாரமாக்கி சட்டத்துக்கு விரோதமாக அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து கல்லா கட்டிய படங்கள். இந்த வரிசையில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, அஜித்குமார் நடித்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை , விஜய் நடித்த பிகில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.

புத்தாண்டு: மக்கள் அலையாகக் காட்சியளித்த மெரினா!

புத்தாண்டு: மக்கள் அலையாகக் காட்சியளித்த மெரினா!மின்னம்பலம : 2019ஆம் ஆண்டு விடைபெற்று, 2020 புத்தாண்டு கோலாகலமாகப் பிறந்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் 12 மணி அளவில் இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மெரினா கடற்கரையில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்று திரண்ட பல்லாயிரக்கணக்கானோர், சரியாக 12 மணியளவில் ஹேப்பி நியூ இயர் என ஒரே மாதிரியாக கோஷம் எழுப்பி புத்தாண்டை வரவேற்றனர். மேலும் நடன நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் என மெரினா கடற்கரை களைகட்டியது.
மக்கள் அலையாகக் காட்சியளித்த மெரினாவில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த சென்னை ஆணையர் விஸ்வநாதன், சிறுவர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டைக் கொண்டாடினார்.
கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஹோட்டல்களில் ஆட்டம்பாட்டம் களைகட்டியது. இளைஞர்கள் இளம்பெண்கள் ஏராளமானோர் திரண்டிருந்து புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு கடற்கரைச் சாலையில் இருசக்கர வாகனங்களும், கார்களும் அணிவகுத்துச் சென்றதையும் காண முடிந்தது.

2020 : நம்பிக்கையின் ஆண்டு...

.savukkuonline.com : 2019ம் ஆண்டு, பல வருத்தங்களையும், சில மகிழ்ச்சிகளையும் அளித்துள்ளது.   கடந்த ஆண்டு மிகுந்த பரபரப்போடு தொடங்கியது.  பாராளுமன்றத் தேர்தல் வரப்போகும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.  ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து சக்திகளும் எதிர்ப்பார்த்திருந்தன.   ஏனெனில் ஆட்சி முடியும் தருவாயில், வேலையின்மை 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் உச்சக் கட்டத்தை எட்டியிருந்தது.  பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது.   பண மதிப்பிழப்பு, மோசமான ஜி.எஸ்.டி ஆகியவற்றால் பல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நசிவடைந்திருந்தன.   விவசாயிகள் விளைபொருட்களின் விலை வீழ்ச்சியால் கடும் துன்பத்துக்கு ஆளாகியிருந்தனர். இந்தக் கோபங்கள் தேர்தலில் மோடிக்கு எதிராக பிரதிபலிக்கும் என்று ஏறக்குறைய பெரும்பாலானோர் எதிர்ப்பார்த்திருந்தனர்.
உத்திரப் பிரதேசத்திலும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இடையேயான கூட்டணி, பிஜேபிக்கு ஒரு வலுவான எதிர்ப்பை தரும் என்று நம்பப்பட்டது.  கடந்த தேர்தலைப் போல அல்லாமல் காங்கிரஸ் 2019 தேர்தலில் ஒரு வலுவான பிரச்சாரத்தை மேற்கொண்டது.  ரபேல் ஊழலை அந்த தேர்தலில் ஒரு முக்கிய விவகாரமாக ராகுல் காந்தி முன்னெடுத்தார்.
மோடி வெற்றி பெற்றாலும் கூட, முழுப் பெரும்பான்மை கிடைக்காமல் ஒரு கூட்டணி ஆட்சியே அமையும்.  கூட்டணி ஆட்சி என்பதால், பிஜேபி தனது இந்துத்துவா திட்டங்களை செயல்படுத்த முடியாது என்றும் நம்பப்பட்டது.
மோடி, அந்தத் தேர்தலை (நாடகம் போல் மாற்றினார்.) , செல்வந்தர் குடும்பத்தின் ஒரு வாரிசுக்கும், ஏழைத்தாயின் மகனான தனக்கும் இடையே நடக்கும் தர்மயுத்தம்) என்பதாக பாராளுமன்றத் தேர்தலின் வியூகத்தை மாற்றினார்.   மோடி தன்னை காவலாளி என்று அர்த்தம் தரும் சௌகிதார் என்று முன்மொழிந்தார். ராகுல் பதிலுக்கு ‘உங்கள் காவலாளி திருடன்’ என்று முழங்கினார். ராகுலின் இந்த முழக்கத்தை தனக்கு சாதகமாக மோடிக்கு மாற்றத் தெரிந்திருந்தது.  காங்கிரஸ் இஸ்லாமியர்களின் கட்சி என்ற பிம்பத்தை கட்டமைத்தார்.

பிபின் ராவத் தலைமையில் செயல்படும் ராணுவ விவகாரங்கள் துறை புதிதாக உருவாக்கம் - மத்திய அரசு அறிவிப்பு


தினத்தந்தி : புதிதாக ராணுவ விவகாரங்கள் துறை உருவாக்கப்பட்டுள்ளது. இது, பிபின் ராவத் தலைமையில் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி, நமது நாட்டில் முதல்முறையாக முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு, ராணுவ தளபதி பதவி வகித்த பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் புதிதாக ராணுவ விவகாரங்கள் துறை என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறை, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தலைமையில் செயல் படும் என மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய 3 படைகள் சார்ந்த பணிகளை ராணுவ விவகாரங்கள் துறை கவனிக்கும். முப்படைகளுக் கான ஆயுதங்கள், தளவாட கொள்முதல்களையும் சட்டவிதிகள், நடைமுறைகளின்படி கவனிக்கும்.

பாமக கூட்டணியால் தான் அதிமுக ஆட்சி - அன்புமணி ஆவேசம்!


news18.com :பாமக கூட்டணி வைக்கவில்லை என்றால் இன்று அதிமுக ஆட்சி இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு பா.ம.க கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 80 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வேண்டும், தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்தக்கூடாது,  ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் அவர்களுக்கு காலவரையற்ற பரோல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “மக்களவைத் தேர்தலின்போது 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வந்தது. நாம் கேட்டபோது ஆட்சிக்கு வரவேண்டும் என்றார்கள் அனைத்தையும் விட்டு கொடுத்து விட்டோம். ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் பார்த்தால் அரை சீட், கால் சீட் என கெஞ்ச வைப்பது வருத்தமளிக்கிறது. கூட்டணி வைத்ததற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை கூட்டணியே வேண்டாம் என்ற கொள்கையை மாற்றி கூட்டணிக்குச் சென்றோம். இப்போது நாம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். அதுவும் அந்தந்த மாவட்ட அதிமுக தலைவர்களிடம் சீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்துவது வருத்தமளிக்கிறது. அதிமுக தலைமை எங்களது கருத்துகளை ஏற்று இனி வரும் காலங்களில் அதை சரிசெய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்” என்றார்

நெல்லை கண்ணனுக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனை.. இரத்த அழுத்தம் ஆபத்தான அளவில் ..

நெல்லை கண்ணன் வீட்டில் போலீஸ் நெல்லை கண்ணன்`அடுத்தடுத்த வழக்குகள்; உடலில் குறைந்த பல்ஸ்!’- நெல்லை கண்ணனுக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனை அடுத்தடுத்த வழக்குகள்; உடலில் குறைந்த பல்ஸ்!’- நெல்லை கண்ணனுக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனை
 vikatan.com - எம்.குமரேசன் - பி.ஆண்டனிராஜ் - எல்.ராஜேந்திரன் : ஏற்கெனவே, நெல்லை கண்ணணுக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. `தன் பேச்சு காரணமாக தன்னை கைது செய்து விடுவார்களோ’ என்ற பயத்தால் அவருக்கு இன்று பல்ஸ் வெகுவாகக் குறைந்தது.
நெல்லை, மேலப்பாளையத்தில் ஜவ்ஹீத் ஜமாத் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட நெல்லை கண்ணன், உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் மோடி குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், நெல்லை கண்ணனுக்கு பா.ஜ.க, அ.தி.மு.க தரப்புகளில் இருந்து கண்டனம் வலுத்தது. போலீஸில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.