சனி, 4 ஜூலை, 2015

கர்நாடக இசை பிராமணர்களுக்கு மட்டும்தான் சொந்தமா?/எஸ்.சிவகுமார்


bl16_tm_krishna_bo_1687679gஎண்ணற்ற ஏன் இணையற்ற நாதஸ்வரக் கலைஞர்கள் இருக்கிறார்களே. தெரிந்த வரை அதில் ஒரு பிராமணரைக் கூடக் காணோமே? அடுத்து தவில் காரர்களைப் பற்றி இன்னும் சொல்லவே வேண்டாம். பிராமணர்கள் இல்லை என்று சத்தியமே செய்யலாம். இதைப் போலவே மற்றொரு கேள்வி : இதில் மதுரை சோமு எந்த வகை? அவருக்காக யார் புண்ணியம் செய்திருக்கிறார்கள், போன பிறவியில்? ஷேக் சின்னமெளலானா சாகிப்பிற்கு இங்கு என்ன வேலை? அவர் முஸ்லிம் வேறு அல்லவா? நாதசுவரத்தை அவ்வளவு மென்மையாக வாசிக்க அவருக்கு யார் வரமளித்தது?
கர்நாடக சங்கீதம் கடவுளைத் தவிர்த்து மற்ற ”தீம்களை” ஆராய்வதே இல்லைதான். ஹிந்துஸ்தானி இசையில் இயற்கையைப் பாடுவார்கள். காதலும் இருக்கும். கர்நாடக சங்கீதத்தின் கதையே வேறு. இதனால் இந்த சங்கீதமே சாமி வழிபாடோ என்று எண்ணி விடத் தோன்றுகிறது.

ஹேமமாலினிக்கு வி.ஐ.பி சிகிச்சை..குழந்தையை இழந்த குடும்பத்தினர் வேதனை

ஜெய்ப்பூர் : கார் விபத்தில் சிக்கிய பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினிக்கு வி.ஐ.பி. சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் தங்களுக்கு சிறியி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விபத்தில் காயமடைந்த குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். பிரபல இந்தி நடிகையும், பா.ஜனதா எம்.பி.யுமான ஹேமமாலினி நேற்று இரவு உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இருந்து ஜெய்ப்பூர் நகருக்கு பரத்பூர் வழியாக தனது உதவியாளருடன் காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரது ஓட்டுநர் ரமேஷ்சந்த் தாகூர் ஓட்டினார். இவர்களது கார் ஆக்ரா-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தவுசா நகர் அருகே வந்தபோது எதிரே வந்த ஆல்டோ கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 வயதான சோனம் (வயது4) என்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். 66 வயது ஹேமமாலினி, எதிரே வந்த காரில் இருந்த ஹனுமான் ஹந்தல்வால் சிங், அவருடைய மனைவி ஷிகா, 5 வயதான சோமில், சீமா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

வெள்ளி, 3 ஜூலை, 2015

இளையராஜா :நான் கேட்பவன் அல்ல? கொடுப்பவன் ? அடப்பார்ரா கொடுமையை ! ரொம்ப ரொம்ப நல்லவராமே? பணத்தாசை கொஞ்சம்கூட ....

மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தலைமைச் சங்கம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ’’நான் உங்களிடம் பணம் கேட்டு வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நான் எப்போதும் கொடுப்பவன் கேட்பவன் அல்ல. அது உங்களுக்கே தெரியும். எத்தனையோ ஆயிரம் பாடல்களை உங்களுக்காக வழங்கியவன். இப்போதைக்கு நான் சந்திக்க வந்திருக்கின்ற காரணம் என்னவென்றால், என்னுடைய பாடல்களையோ மற்றவர்கள் பாடல்களையோ நீங்கள் பாடும்போது சட்டப்படி அதற்கு அனுமதி பெற வேண்டும் என்பது நடைமுறை. இதை உங்களிடம் இருந்து பெறுவதற்காக இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள் இணைந்து உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஐ.பி.ஆர்.எஸ். இதைச் சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஐ.பி.ஆர்.எஸ் நிர்வாகம் தவறான கணக்குகளைக் காட்டி அந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள என் போன்றவர்களை ஏமாற்றி வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையை தகர்க்க பாக். தீவிரவாத இயக்கங்கள் 'சதி' - தமிழக அரசு மனு!

டெல்லி: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகம்மது, இந்தியன் முஜாஹிதீன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு இயக்கங்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு பேராபத்து இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது.

நாட்டில் என்ன நடக்கிறது என்ற உண்மையான நிலவரமே ராகுலுக்கு தெரிவது இல்லை! காங்கிரஸ் மூத்த தலைவர் பரத்துவாஜ்

புதுடில்லி:''நாட்டில் என்ன நடக்கிறது என்ற உண்மையான நிலவரமே, ராகுலுக்கு தெரிவது இல்லை; கட்சியின் மூத்த தலைவர்களை அவர் மதிப்பதும் இல்லை,'' என, காங்., மூத்த தலைவரும், முன்னாள் சட்ட அமைச்சருமான பரத்வாஜ் ஆவேசத்துடன் தெரிவித்து உள்ளார். காங்., மூத்த தலைவர்களில் ஒருவர் பரத்வாஜ். மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசில் சட்ட அமைச்சராக பதவி வகித்தவர். கர்நாடக மாநில கவர்னராகவும் பதவி வகித்தார். ஏற்கனவே அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், காங்., தலைவர் சோனியாவை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஆங்கிலப் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், காங்., துணைத் தலைவர் ராகுலையும் விமர்சித்துள்ளார். வாத்தியார்களை மதிக்காத மாணவன் வளரமாட்டான். மூத்தவர்களை மதிக்காத முந்திரிகொட்டை மந்திரிகோட்டையை பிடிக்கமாட்டான்.சின்னபசங்க வெள்ளாமை வீடுவந்து சேராது என்பதற்கு ராகுல் நல்ல உதாரணம்.

சேர சோழ பாண்டியருக்கும் முன்பிருந்த தாம்ரபரணி நாடு இலங்கையின் வடமேற்கு ... மௌரிய பேரரசு...

தமிழகத்திலிருந்து ஆதிகால இரும்புப் பண்பாடு இலங்கையின் வடமேற்குப் பகுதியில் பரவத்தொடங்கி, அங்கு தம்பப்பண்ணி என்கிற இரும்புக்காலப் பண்பாட்டு குடியிருப்பு உருவாகி நாளடைவில் அது ஒரு பெருநகரமாக வளர்ந்தது. அதன் ITAI இடத்தில் தான் இன்றைய பொம்பரிப்பு என்கிற அகழ்வாராய்ச்சி இடம் உள்ளது. பொம்பரிப்புப் பகுதியில் இருந்து தான் இந்த இரும்புக்காலப் பண்பாடு அநுராதபுரத்திற்கு பரவியது. தம்பப்பண்ணி கி.மு. 500 வாக்கில் ஒரு புகழ் பெற்ற நகராக இருந்தது எனவும் தமிழகத்துப் பாண்டியர்(பண்டு) வழி வந்தவர்கள் அதை ஆண்டனர் எனவும் பாலி நூல்கள் தெரிவிக்கின்றன. கி.மு. 500க்குப் பின் ஆதி இரும்புக்காலம் முடிவடைந்த கட்டத்தில் தம்பப்பண்ணியில் இருந்த அதிகார பீடம் உள்நாட்டில் உள்ள அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டது(பக்: 126, 127).
அசோகர் தனது இறுதிக்காலத்தில் மிகவும் மனம் நொந்து போயிருந்தார். இறுதிக்காலத்தில் அதிகாரங்களைக் கைப்பற்றிக்கொண்ட அவரது அமைச்சர்கள் அசோகர் விரும்பியதைச் செய்யவிடாமல் தடுத்துவிட்டார்கள். கடைசிக்காலத்தில் அவர் மணம் செய்துகொண்ட புதிய பட்டத்து இராணியும், புத்தமத எதிர்ப்பாளர்களும் ஒன்றிணைந்து பட்டத்து இளவரசன் குணாலனை தட்சசீலத்துக்கு அனுப்பிவிடுகின்றனர். அதன்பின் அரசபதவிக்கு முயன்ற குணாலனின் முயற்சிகள் தோல்வியடைந்தன. அப்போராட்டத்தில் அவர் தன் கண்பார்வையை இழந்தார். கண்பார்வையின் இழப்புக்குக் காரணமான, புதிய பட்டத்து இராணி கொல்லப்படுகிறார். அசோகருக்குப்பின் குணாலனின் மகன் இளவயது சாம்பிராட்டி அரசராக நியமிக்கப்பட்டு தசரதா என்பவர் அவரது பாதுகாவலனாக நியமிக்கப்படுகிறார்.

பெண்நீதிபதியிடம் தவறாக நடந்த ஆண் நீதிபதி சஸ்பென்ட்! ஹோட்டல் ரூமில் .....நீதிபதிகள் மாநாட்டிலாம்...

சிம்லா: நீதிபதிகள் மாநாட்டிற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கூறி, மாநாடு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன், பெண் நீதிபதியை ஓட்டலுக்கு அழைத்துச் சென்ற நீதிபதி, பெண் நீதிபதியிடம் தவறாக நடக்க முயன்றதை அடுத்து, நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இருவரும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மாதம், 11 - 13ம் தேதிகளில், குலு மணாலியில் நடைபெற்ற மாநாட்டிற்காக, 8 ஆம் தேதியே பெண் நீதிபதியை அந்த நீதிபதி வரவழைத்துள்ளார். இதையடுத்து ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்ற அந்த நீதிபதி, பெண் நீதிபதியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்க முயன்றதாக புகார் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதி மீதான புகார், உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து, தலைமை நீதிபதி மன்சூர் அகமது மிர், நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் 2 மாதத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்கவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார் Read more :tamil.oneindia.com/

BJP Mp நடிகை ஹேமா மாலினி கார் விபத்து - குழந்தை பலி

ராஜஸ்தான் மாநிலம் ஆக்ராவில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் வழியில் டாசுடா என்ற பகுதியில் நடிகை ஹேமா மாலினியின் கார் மற்றொரு காரின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 5 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே மரணமடைந்தது. உடன் பயணித்த நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். இவர்களை உடனடியாக ஜெய்பூர் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.nakkheran.in

வியாழன், 2 ஜூலை, 2015

Veeramani: யோகா என்பது ஒரு வகை உடற் பயிற்சியே. தியானம் - பிராணயாமம் என்பதும் ஆயுளை நீடிக்கசெய்ய தேவையான மூச்சுப் பயிற்சி

அதிவேகமான அன்றாட வாழ்க்கை இன்று மனித குலத்திற்கு அவனி முழு வதும் ஏற்பட்டு விட்டதால், மன அழுத்தம், மன உளைச்சல், இவை களினின்று விடுபட அமைதியாகச் சில மணித்துளிகள் அமர்ந்து, மூச்சுப் பயிற்சி செய்தால் மன அழுத்தமும், மன உளைச்சலும், களைப்பும், சோர்வும், ஆத்திரம், அவசரக் கோலத்தின் அவதி -_ இவைகளினால் ஏற்படும் எரிச்சல் எல்லாம் நீங்கி, ஒரு புத்துணர்வைப் பெற வாய்ப்பினை மனிதன் தனக்குத் தானே வழங்கிக் கொள்ள முடியும். கடுமையான பகல் நேர உழைப் புக்குப் பின் இரவில் தூக்கம் மனிதர் களை சோர்வு கழிந்து, மலர்ச்சியை விழிப்புக் கொடையாகத் தருகிறது. அது போலத்தான், உடற்பயிற்சிகளும், நடைப் பயிற்சியும், போன்றதுதான் யோகா என்பதும்.< இது ஏதோ ஆதியில் வேதத்திலி ருந்து வந்தது என்றும், ஓம் என்று உச்சரித்துக் கொண்டே பல ஆசனங்கள் போடலாம் என்றும் சமஸ்கிருதமயமாக (Sanskritisation) இந்தக் கலை, ஆரியர் களால் ஆக்கப்பட்டு உலகம் முழுவ திலும் இதை நம்பும்படி தங்களது பிரச் சார வன்மையால் ஆக்கி விட்டனர்! திராவிடர் நாகரிகத்தையே இன்று மறைத்து, வரலாற்றைத் தலைகீழாக்கி, காவிமயக் கொள்கையாக்கி, ஆரியர்கள் இந்நாட்டின் பூர்வீகக்குடிகள், திரா விடர்கள் வந்தேறியவர்கள் என்று தலைகீழாக ஆக்கும் துணிவு உள்ள நிலையில், 2000, 2500 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியெல்லாம் செய்திருப் பார்கள் என்பதை அறிஞர்கள், நடு நிலையாளர்கள் சிந்தத்தால் நன்கு புரியும்.

அகதிக்கான அங்கீகாரம் கொடுங்கள்: இலங்கையில் இருந்து வந்தவர்கள் கோரிக்கை

இலங்கையில் இருந்து குடும்பத்துடன் இந்தியா திரும்பிய தங்களுக்கு அகதிகளுக்கான அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது:
திருவண்ணாமலை அத்தியந்தல் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் விடுதலை செல்வன். செங்கல் சூளையில் வேலை செய்கிறார். இவரது தந்தை சத்தியசீலன், தாய் பரமேஸ்வரி, சகோதரிகள் ரோஸ் மேரி மற்றும் அஞ்சலி தேவி. இவர் கள் அனைவரும் அத்தியந்தல் முகாமில் ஒன்றாக தங்கியிருந்தனர்.
கடந்த 2010-ம் ஆண்டு இந்திய அரசின் அனுமதியுடன் சத்யசீலன், பரமேஸ்வரி, ரோஸ்மேரி, அஞ்சலி தேவி ஆகியோர் மட்டும் இலங்கை சென்றனர்.

BSLN முறைகேடு ! தயாநிதி மாறனிடம் 2 வது நாளாக விசாரணை

துடில்லி: பி.எஸ்.என்.எல். முறைகேடு தொடர்பாக மாஜி மத்திய அமைச்சர் தயாநிதியிடம் 2 வது நாளாக சி.பி.ஐ., விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. தயாநிதியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் 70க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு துருவினர். ஆனால் தயாநிதி முறையாக பதில் எதுவும் அளிக்கவில்லை என சி.பி.ஐ., வட்டாரம் தெரிவிக்கிறது.சென்னையில் உள்ள சன் டி.வி., நிறுவனத்தில் பி.எஸ்.என்.எல்.-ன் 620 லைன்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டன. இதனால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் தயாநிதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சி.பி.ஐ., சம்மன் அனுப்பியிருந்தது.

ரஜினியின் அசிங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டும் கலைஞானம் ! ரஜினியை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர்

முதல்நாள் ரஜினி என்னிடம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளமும், ஆயிரம் ரூபாய் அட்வான்ஸும் கேட்டார். எப்படியோ உருட்டிப் புரட்டி ஆயிரம் ரூபாய் ரெடி செய்துவிட்டு போனபோது, திடீர்னு பேச்சு மாறி ஐம்பதாயிரம் சம்பளமும், ஐயாயிரம் அட்வான் ஸும் அவரின் நண்பர் நட்ராஜ் மூலம் கேட்டு விட்டாரே... என்ன செய்வதுனு தெரியாமல், மனைவியின் தாலியின் இரு பக்கமும் இருந்த இரண்டு தங்கக் குண்டுமணிகளை... விற்கக் கூடாததை விற்று ஐந்தாயிரம் கொடுத்தவனைப் பார்த்து இப்படி ஒரு சொல் சொல்லலாமா?'’என வேதனைப்பட்டேன்
(151) ரசிகர்களுக்காக...!
சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிர்ப்புறத்தில் "சந்திரமுகி'’படப்பிடிப்பு ஸ்பாட்டுக் குப் போனேன். கேமரா முன் ஒத்திகையில் ஈடுபட்டிருந்த ரஜினி, என்னைப் பார்த்ததும் பெட்ரோல் தீப்பற்றி பறந்து வருவதுபோல என்னை நோக்கி விரைந்து வந்தார்.கண்களில் கனல் கக்க மிகுந்த கோபத் துடன் பார்த்தபடி... “""கலைஞானம் சார்... நீங்க என்னை ஹீரோவாப் போட்டு, என் வாழ்க்கை யைப் பாழாக்கிட்டீங்க''’என்றார்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் சமாளித்துக்கொண்டு... ""உங்களால் பலரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் நீங்கள் பங்கெடுத்துக்கொள்ளுங்கள்''’என்றேன்.மறுபக்கமாக திரும்பியவாறு சினத்தில் மூழ்கியிருந்தார் ரஜினி. நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்குள் "ஷாட் ரெடி'’என்கிற அறிகுறியுடன் உதவி இயக்குநர் வந்து நிற்க... ரஜினி விரைந்து சென்று நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

பிரவீன் குமார் + சக்சேனா +குமாரசாமி +தத்து ஜெயலலிதா! இனி இதுதான் நிரந்தர வெற்றி கூட்டணி!

c32-Recovered343ஐந்தாவது முறையாக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார் என்பதை ஏதோ வரலாற்றுச் சாதனையாக ஜெயா டிவி தொடர்ந்து தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தது.     பதவியேற்பு விழாவே அவசர கதியில் அள்ளித் தெளித்த கோலமாய் முடிந்தது.   அதையடுத்து ஆர்கே நகர் இடைத்தேர்தல்.

முந்தைய தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் மற்றும் தற்போதைய தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாஇந்த இடைத்தேர்தலை, முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும், ஜெயலலிதாவை அவமானப்படுத்த கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல், என்னமோ இந்தத் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெறப்போவது போல போட்டியிட்டது.     இந்தத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் இத்தேர்தலை புறக்கணித்த நிலையில், இடதுசாரிகளும் புறக்கணித்திருந்தால், ஜெயலலிதாவுக்கு அது பெருத்த அவமானமாக அமைந்திருக்கும்.  ட்ராபிக் ராமசாமியை எதிர்த்து போட்டியிட்டதாக ஆகியிருக்கும்.   ஆனால், என்ன காரணத்தாலோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு, ஜெயலலிதா நடத்திய இந்த போலி தேர்தலுக்கு அங்கீகாரம் அளித்தது.

புதன், 1 ஜூலை, 2015

வருண்காந்தி 60 மில்லியன் டாலர்களை கேட்டார்! லலித் மோடியின் டுவிட்டேர் அம்பலம்

டெல்லி: லண்டனில் தலைமறைவாக உள்ள தேடப்படும் குற்றவாளியான ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி தமக்கு உதவிசெய்வதவர்கள் என்று ஒவ்வொருவரது பெயரையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறது. தற்போது பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. வருண்காந்தி தம்மை சந்தித்ததாக கூறி இருக்கிறார் லலித் மோடி. ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடிக்கு உதவி செய்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவையும் பதவியில் இருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும் என்பது காங்கிரஸின் தொடர் கோரிக்கை

இராணுவ ஆக்கிரமிப்புக்கு இணையானது நுகர் பொருள் படையெடுப்பு




  • குப்பை உணவுகள் உலக மக்களின் ஆரோக்கியத்தை அழித்து வரும் அணுகுண்டுகள்.ஐந்து ரூபாய் விலையுள்ள லேஸ் சிப்சையும் பத்து ரூபாய் கோக்கையும் வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு தருகிறீர்கள் என்றால் அது அவர்களது வயிற்றையும்,  ஆளுமை வளர்ச்சியையும் அரித்துக் கரைத்து அவர்களை வெறும் தக்கைகளாகத் துப்பி விடும். துரித உணவு வகைகளின் இருண்ட பக்கத்தையும், அவற்றின் பின் உள்ள அரசியலையும் சித்தரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.
  • ராமதாஸ் :அடிமை கட்சி தோற்பது உறுதி அதைவிட உறுதி .....

    2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மண்ணை கவ்வும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் அல்ல. உண்மையில் அது பின்னோட்டமே. ஜெயலலிதா கட்சி அடிமை கட்சி. ஜெயலலிதா கட்சி மண்ணை கவ்வும் என்பது உறுதி. அதைவிட உறுதி ஜெயலலிதா ஜெயிலுக்கு செல்வது என்றாnakkheeran.in

    ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு: கையெழுத்திட அன்பழகன் மறுப்பு?

    முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு ஆவணங்களில், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் கையெழுத்திட மறுத்ததாக, அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.முதல்வர் ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில், 'அப்பீல்' செய்துள்ளது. இதன் மீதான விசாரணை, இம்மாதம் வருகிறது. 'ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து, தி.மு.க., தரப்பிலும், உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்படும்' என, மே மாதம் நடந்த தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 'அப்பீல்' மனுவை, தி.மு.க., வழக்கறிஞர்கள் தயாரித்தனர். தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் பெயரில், அந்த மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, முதல்வர் ஜெயலலிதா மீதான இந்த வழக்கில், அன்பழகனே, ஒரு, 'பார்ட்டி'யாக இருப்பதால், 'அப்பீல்' மனுவையும், அவர் தான் தாக்கல் செய்ய வேண்டும்.

    இந்தோனேஷிய விமான விபத்து: 140 பேர் பலி

    150630132852_medan_624x351_epa  இந்தோனேஷிய விமான விபத்து: 140 பேர் பலி 150630132852 medan  epaஇந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை இராணுவ போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து இதுவரை 140 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது.
    அந்த விமானத்தில் பயணம் செய்த யாருமே உயிர் பிழைக்கவில்லை. அவர்கள் தவிர விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்த 20 பேரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
    இந்த விமானம் பறக்கத்துவங்கிய சிறிது நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை.

    செவ்வாய், 30 ஜூன், 2015

    44 பேரின் மர்ம மரணங்கள் ! பாஜகவின் மத்திய பிரேதேச வியாப ஊழல் தொடர்புடையவர்கள் மாபியா பாணியில்.....


    போபால்: மத்திய பிரதேசத்தை உலுக்கும் வியாபம் ஊழல் முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட 44 பேர் மர்மமான முறையில் இறந்திருப்பது பெரும் பிரளயத்தை கிளப்பியுள்ளது. இதில் ஆளுநர் மகனும் இறந்துள்ள நிலையில் இவை அனைத்துமே இயற்கையானவை என்று அம்மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்தியப்பிரதேச தொழில்முறை தேர்வு வாரியமான வியாபம் என்கிற வாரியத்தின் மூலம் அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், பலரும் பணம் கொடுத்து எளிதில் அரசு வேலை வாய்ப்பு பெறுவதாகவும் குற்றச் சாட்டு எழுந்தது.  Probe into Vyapam scam uncovers yet another mysterious death, 44 dead so far இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் 'வியாபம்' ஊழல் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், இடைத்தரகர்கள் என செல்வாக்கு மிக்க ஒரு பெரும் கும்பலுக்கு இதில் தொடர்புள்ளது தெரியவந்தது.

    Jaya case : Judgment day for Supreme Court? YES! சுப்ரீம் கோர்ட் நிச்சயம் விலைபோகாது! போகவும் முடியாது ?

    ????????????????????????????????????A million dollar conundrum!!!  Jaya’s health may be breaking down both mentally and physically because of the strong challenge mounted by the Karnataka Government in the Supreme Court. Is something wrong with Jayalalilthaa and is something wrong with her health? These are two issues being debated actively in the political circles of Tamil Nadu and the corridors of power in Fort St. George in Chennai.
    The five time Chief Minister, who recently “won” a huge legal victory on her disproportionate assets case seems to have almost gone underground, at a time, when the world thought she would come out swinging.
    Observers point out that the strong and absolute resoluteness that is being shown by the Karnataka Government in going after Jayalalithaa and pleading for an interim Stay in the Supreme Court is giving her the jitters all over again and may be contributing to the breakdown in her health, with the thought of having to deal all over again with the Supreme Court now.

    ராஜஸ்தான் அரண்மனையை வசுந்தரா ராஜே ஆக்கிரமிப்பு !

    புதுடில்லி: ஐ.பி.எல்., முன்னாள் கமிஷனர் லலித் மோடி விவகாரத்தில் சிக்கி, பா.ஜ., மேலிடத் தலைவர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ள, ராஜஸ்தான் முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த வசுந்தரா ராஜே மீது, தோல்பூர் அரண்மனையை அபகரித்ததாக, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், பரபரப்பு புகார் கூறி, வசுந்தராவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளார்.
    இதுகுறித்து, டில்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:* ராஜஸ்தான் அரசுக்கு சொந்தமான, தோல்பூர் அரண்மனையை, அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆக்கிரமித்துள்ளார். லண்டனில் பதுங்கி வாழும் லலித் மோடியுடன் இணைந்து, அந்த அரண்மனையை தன் சொத்தாக அவர் மாற்றிக் கொண்டுள்ளார்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:டிராபிக் ராமசாமி 4,590 ! ஜெயலலிதா 1,51, 252 வாக்குகள்!

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 1,51, 252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் நோட்டாவிற்கு 2,376 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து எண்ணிக்கையில் 4,590 ஓட்டுகள் பெற்றதால் டிராபிக் ராமசாமி நோட்டாவுடனான போட்டியில் ஜெயித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பதிவான அனைத்து தபால் ஓட்டுகளும் ஜெயலலிதாவுக்கே கிடைத்திருந்தன.  கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த இடைத் தேர்தலை, தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, காங்கிரஸ் உட்பட முக்கிய கட்சிகள் அனைத்தும் புறக்கணித்தன.

    சாந்தி ரோசலினை கொலைசெய்த பாதிரியார் ஆரோக்கியசாமியின் குண்டர்கள் ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் அம்பலம்

    A woman, who alleged in a television show that a church priest had murdered her daughter, approached the Coimbatore City Police on Tuesday seeking protection and a fresh inquiry into her daughter’s death. She alleged that the followers of the priest had stoned her house on Monday night after the show was telecast at 8.30 p.m. In her complaint, S. Shanthi Rosalyn (40) of Kottai Medu here, said that her daughter spent most of her time at a place of worship at Walayar. She claimed that on July 23, 2013, the priest had come to her home and forcibly taken her daughter to Walayar where he allegedly tried to misbehave with her and later murdered her and made out as if her daughter committed suicide. Later, Ms. Rosalyn said that they came across a letter written by her daughter in which she had allegedly stated that she was being harassed. Following this, she had written petitions to the Director General of Kerala Police seeking a fresh probe into the incident.
    O

    திங்கள், 29 ஜூன், 2015

    ஊழல் டெக்னிக்கில் ஆண்களை பின்னே தள்ளி சுஷ்மா சுவராஜ் & வசுந்தரா ராஜி கும்பல் முன்னேறியது!

    பாரதிய ஜனதா கட்சி முதலாளிகளின் கட்சி என்பதை புதிதாக கண்டு பிடித்துச் சொல்லத் தேவையில்லை. இந்துத்துவ இயக்கங்களின் மூளை பார்ப்பனியம் என்றால் அவற்றின் இதயம் பரிவார இயக்கங்களின் புரவலர்களாகிய பனியாக்கள். பனியா முதலாளிகளுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் உள்ள நேரடி உறவு பழைய விசயமென்றாலும், அது இப்போது கள்ள உறவாக சந்தி சிரிப்பது கொஞ்சம் புதிய விசயம்.
    மன்மோகன் சிங் அரசின் நிலக்கரி ஊழலை “கோல்கேட்” என்று அழைத்த ஊடகங்களை தற்போதைக்குப் பிடித்தாட்டுவது ’லலித்கேட்’ எனப்படும் மோடி அரசின் ஊழல். லலித்கேட் ஊழலைப் புரிந்து கொள்ள அதன் வரலாற்றை கொஞ்சம் பார்த்து விடுவோம்.

    நடிகர் விஷாலை மிரட்டும் ராதிகா? சரத்துக்கும் ராதாரவிக்கும் வக்காலத்து?

    மல்லாக்க படுத்து கொண்டு எச்சில் துப்பினால் அது நம் மீதுதான் விழும் என்பதை இளைய தலைமுறை நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென நடிகை ராதிகா பங்கேற்ற சினிமா விழாவில் பேசினார். நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்து, ஹன்சிகா நடித்துள்ள ‘உயிரே உயிரே' படத்தின் பாடல் மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ராதிகா பேசுகையில், "இங்கு வந்துள்ள எல்லோரும் பல ஆண்டுகளாக பழகியிருக்கிறோம். எங்களுக்குள் எப்போதும் எந்த விதமான பிரச்னையும் வந்ததில்லை. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சந்தோஷமாக பங்கேற்கிறோம் ஆனால் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு மரியாதையோ, நட்பின் முக்கியத்துவமோ தெரிவதில்லை. மல்லாந்து படுத்துக் கொண்டு மேலே எச்சில் துப்பினால், அது நம் மீதுதான் விழும் என்பதை இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் புரிந்துகொண்டு நடக்க வேண்டும். ராதாரவி சரத் கும்பலிடம் நடிகர் சங்கம் மாட்டிக்கிட்டு மீள முடியாமல் ..வரலக்ஷிமியின் அம்மா சாயாவிடம் இருந்து சரத்தை லவட்டிய ராதிகா பெருசா பேசுறாங்கோ!

    ஜூன் 25, 1975. இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி !மன்னிப்பு கேட்டு வெளியே வந்த RSS பாஜக! மீண்டும் அந்த ஆபத்து? அத்வானி எச்சரிக்கை ஏன்?

    நெருக்கடி நிலைக் காலத்தில் அதை எதிர்த்து இறுதி வரை நின்றவர்கள் யார்? அதற்காக ஆட்சியை இழந்தவர்கள் யார்? அதை எதிர்க்காமல் கட்சியை நடத்தியவர்கள் யார்? கைது செய்யப் பட்டதும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியே வந்து இன்றைக்கு ஜனநாயகக் காவலர்களாக காட்டிக் கொள்பவர்கள் யார்? இதற்கான வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டியது நம் கடமை. இதை நாம் சரியாக செய்யாத தினால்தான், மன்னிப்பு கேட்டவர்கள்
    ஜூன் 25, 1975. இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை சட்டம் பிரகடனம் செய்யப்பட்டு. நாற்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. அய்ம்பது வயதுக் குட்பட்டவர்களுக்கு, இந்த இருண்ட காலத்தின் சமூக, அரசியல் நடப்புகள் இன்று தெரியாது. தமிழ் நாட்டில் திரா விடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், நெருக்கடி நிலை சட்டத்தால், கடுமையாக பாதிக்கப்பட்ட இயக் கங்கள். முன்னணித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, ஓராண்டு கடும் சிறை வாசம் மேற்கொண்டவர்கள் இந்த இயக்கத்தவர். சட்டமன்றத்தில் 183 உறுப்பினர்களைக் கொண்ட தனிப் பெரும்பான்மைப் பெற்ற கட்சியான திமுக, நெருக்கடி  நிலையை ஆதரிக் காமல், எதிர்க்கிறது என்பதற்காக, 356-ஆவது பிரிவின் கீழ் ஆட்சி கலைக்கப்பட்டது.

    மழைநீரை சேமித்து 300 ஏக்கரில் விவசாயம்: சிவகங்கை விவசாயி சாதனை

    வறண்ட பூமியான சிவகங்கை மாவட்டத்தில் சொந்தமாகக் குளம் வெட்டி 300 ஏக்கரில் மா, தென்னை விவசாயம் செய்து வருகிறார் ஆ. கருங்குளத்தை சேர்ந்த விவசாயி ஒருவர்.
    இதன்மூலம், மழைநீர் சேகரிப் பிலும் அவர் முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.
    சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே ஆ.கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (60). இவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இதன்மூலம் கிடைக்கும், வருவாயில் விவசா யத்தில் ஈடுபட முடிவு செய்து முழு மூச்சுடன் இறங்கினார்.

    சன்டிவி நிறுவனத்திற்கு பாதுகாப்பு சான்று வழங்க உள்துறை மறுப்பு! பங்குகள் 5 வீதம் சரிவு?

    புதுடில்லி : சன் டி.வி. நிறுவனத்திற்கு பாதுகாப்பு சான்று வழங்க முடியாது என என மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இத்தகவலை பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.இது தொடர்பாக இத்துறை உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: சன் குழுமம் 33 டி வி. சேனல்கள் மற்றும் எப். எம்., ரேடியோ நடத்தி வருகிறது. பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாலும், சன் குழும நிறுவன உரிமையாளர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும் , இந்நிறுவனத்திற்கு பாதுகாப்பு தொடர்பான சான்றளிக்க முடியாது. நாடு முழுவதும் சேனல்கள் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் நடத்துவதற்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பி்க்க வேண்டும். இவ்வாறு ஏற்கனவே பாதுகாப்பு சான்றுகள் பெற்று இது காலவதியாகும் போது, மீண்டும் , புதுப்பிக்க வேண்டும்.

    Rattan டாடாவிடம் நேரடியாகவே தயாநிதி மாறன் லஞ்சம் கேட்டார்?

    othisaivu.wordpress.com சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னால் வந்த என் பதிவுகளில் ஒன்றிலிருந்து இந்த குறிப்புகள்:
    ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்ற ‘அன்பளிப்பு’ நெடுநாள்முன் நான் தொலைத்தொடர்புத் துறையுடன் தொடர்புள்ளவனாக இருந்தேன். அப்போது தயாநிதி மத்திய அமைச்சர். ரிலையன்ஸ் நிறுவனம், இந்திய நாடெங்கும், குறுக்கிலும் நெடுக்கிலும் ஒளி இழை வடங்களை சாலைகளில், நிலத்தின் கீழ் பதித்துக் கொண்டிருந்தது. அதற்கு, ரிலையன்சிற்கு மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவையாக இருந்தது.
    இச்சமயம், நம் உதிரி, ரிலையன்சுடன் ஒரு ஊழல் (மகத்தானது! தகத்தகாயது!!) ‘ஒப்பந்தம்’ போட்டார் – அதன் படி,  ரிலையன்ஸ் ஒளி இழை வடங்களைப் போடும்போது (கிட்டத்தட்ட 20,000 கிலோமீட்டர் என நினைக்கிறேன்), SCV-க்காக ஒரு ஜோடி வடக் கற்றைகளை ‘இலவசமாகப்’ போட்டுத் தரவேண்டும். எப்படி இருக்கு கதை! (இதற்கான ‘செலவு’ அச்சமயம், குறைந்த பட்சம் 300 கோடி ரூபாய் இருந்திருக்கும்! எல்லாம் நம் பணம்!)
    இதன்மூலம், SCV-இன் வலிமையும், வீச்சும், அதிவிரைவு இணைய / தொலைபேசி இணைப்புகளும் பலமடங்கு அதிகரிக்கும். இதனை வைத்து இந்த கேடிகள் இன்னும் பல மடங்கு தங்கள் ‘தமிழ்’ வியாபாரத்தை நடத்த முடியும்.  இந்த ஒத்திசைவு பார்ப்பான் தனது ஜாதிக்கு நன்மை செய்வதாக எண்ணிக்கொண்டு தயாநிதியின் வந்தவாளங்களை எழுதுவது நல்லதே ஏனெனில் தயாநிதியும் ஒரு பார்ப்பான்தான்! தயாநிதியின்  அம்மா பிராமணர் மனைவி பிராமணர். வீட்டில் பேசுவதும் பிராமன தமிழ்தான்.  

    R.K. நகரில் 50 வாக்குசாவடிகளில் முறைகேடு! ஒரே ஒரு வாக்கு சாவடியில் மட்டும் மறுதேர்தல்! சக்சேனா விசுவாசம்!

    ஆர்.கே.நகரில் 50க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், கண்துடைப்பாக ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.மகேந்திரன் கூறியுள்ளார். கடந்த 27ஆம் தேதி ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலின்போது 181வது வாக்குச்சாவடியில் அதிமுகவினர் கள்ள ஓட்டுகள் போட்டதாக புகார்கள் எழுந்தது. அந்த வாக்குச்சாவடியின் அதிகாரி, வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத நபர்களை வாக்களிக்க அனுமதித்ததாக தேர்தல் பார்வையாளரும் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து 181வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று (திங்கள்கிழமை) மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

    கேரளா:ஜீன்ஸ், மிடி அணிய தடை மாணவியருக்கு தடை! காவி தாலிபான்கள் அடாவடி!

    திருவனந்தபுரம்:கேரளாவில் உள்ள தனியார் பெண்கள் கல்லுாரியில், மாணவியர், ஜீன்ஸ் பேன்ட், குட்டை பாவாடை ஆகியவற்றை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு மாணவியருக்கு சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே நடக்காவு என்ற இடத்தில், முஸ்லிம் கல்வி சமூகத்தின் சார்பில், பெண்கள் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்லுாரியில், மாணவியர் ஜீன்ஸ் பேன்ட், குட்டை பாவாடை, டிஷர்ட், இறுக்கமான உடைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
    மேலும், இந்த கல்வி ஆண்டு முதல், முதலாமாண்டு படிக்கும் மாணவிகளுக்கு சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சல்வார், சுடிதார் பேன்ட் மற்றும் மேல் அங்கி ஆகியவற்றை மாணவிகள் அணிந்து வர வேண்டும்.

    ஞாயிறு, 28 ஜூன், 2015

    விமான பயணிகளிடம் லக்கேஜ் செக்-இன் செய்ய கட்டணம் வசூலிக்க கூடாது

    புதுடெல்லி: உள்ளூர் விமான பயணிகளிடம் லக்கேஜ் செக்-இன் செய்வதற்கு கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்ற விமான நிறுவனங்களின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.  குறைந்த கட்டணத்தில் விமான சேவை அளிக்கும் சில நிறுவனங்கள், விமான கட்டணத்தில் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து குறைந்த கட்ணத்தில் இயக்குவதால், பயணிகளின் லக்கேஜ்களை செக்இன் செய்வதற்கு முதல் லக்கேஜூக்கு ரூ.250, 2வது லக்கேஜூக்கு ரூ.500, 3வது லக்கேஜூக்கு ரூ.1,500 என வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் கோரியிருந்தன.

    ஜெயலலிதா வழக்கில் திமுகவும் மேல்முறையீடு செய்ய ஆலோசனை?

    சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா உட்பட, நால்வரை, கர்நாடகா உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, அம்மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்துள்ளது.அதன் மீதான விசாரணை விவரம், அடுத்த வாரத்தில் தெரிய வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், இதில், தி.மு.க.,வின் நிலை குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.இதுகுறித்து, தி.மு.க., சட்டப்பிரிவு நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கர்நாடகா உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவை விடுதலை செய்ததும், அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் செல்வது என, முடிவு செய்து விட்டோம்; ஆனால், கர்நாடகா அரசின் நிலைப்பாட்டை அறிவதற்காக காத்திருந்தோம். தற்போது, கர்நாடகா அரசு, மேல்முறையீடு செய்துள்ளது. எனவே, வழக்கில் புகார்தாரர் என்ற முறையில், தி.மு.க., தரப்பிலும், மேல்முறையீடு மனு போடுவதா அல்லது கர்நாடகா தொடர்ந்துள்ள வழக்கில், இணைந்து கொள்வதா என, ஆலோசிக்கப்படுகிறது.

    பாலியல் வன்முறை வழக்குகளில் புதுப்புது திருப்பங்கள் 3 வழக்குகளில் சர்ச்சைக்கு உரிய தீர்ப்புகள்?

    சென்னை உயர் நீதிமன்றத்தில், பாலியல் வன்முறை வழக்குகளில், கடந்த வாரம், மூன்று விதமான தீர்ப்பு, ஒரே நீதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.முதல் வழக்கில் சமரசம்; அடுத்த வழக்கில், 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி; மூன்றாவது வழக்கில், தண்டனையை குறைத்து விடுதலை என, மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.* கடலுார் மாவட்டத்தை சேர்ந்த மோகன் என்பவருக்கு, 15 வயது சிறுமியை, பாலியல் வன்முறை செய்த வழக்கில், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் வழங்க கோரிய மோகனின் மனுவை விசாரித்த நீதிபதி தேவதாஸ், இந்த வழக்கை, சமரச மையத்தில், தீர்வு காண அனுப்பி வைத்தார். மேலும், மோகனுக்கு இடைக்கால ஜாமினும் வழங்கினார். இந்தத் தீர்ப்பை, சமூக ஆர்வலர்களும், பெண் வழக்கறிஞர்களும் கடுமையாக விமர்சித்தனர். அதே நேரத்தில், நீதிபதியின் உத்தரவுக்கு, சில தரப்பில் ஆதரவும் காணப்பட்டது. 

    டெல்லியிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் இலவச இண்டர்நெட் வசதி

    டெல்லியை சுற்றியுள்ள 300 கிராமங்கள் மற்றும் அங்குள்ள டெல்லி பல்கலைக்கழகம், கல்லூரிகளில் முதற்கட்டமாக இலவச வை-ஃபை இண்டர்நெட் வசதியை இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக, ஆம் ஆத்மி அரசு ரூ.50 கோடியை ஒதுக்கியுள்ளது. எனினும், இந்த இலவச இண்டர்நெட் வசதியின் மூலம் பொழுதுபோக்கு இணையதளங்களை காண வரையறை நிர்ணயிக்கப்பட உள்ளது. ஆனால், அரசு வெப்சைட்டுகளை காண்பதற்கு எவ்வித நிபந்தனைகளும் கிடையாது. இதற்காக ஆங்காங்கே ஹாட்ஸ்பாட்டுகளை அமைக்க டெல்லி அரசுடன், ஐ.டி. துறை இணைந்து செயல்பட்டு வருகிறது.