இன்ரர்போல் அதிகாரிகளாக பெண் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் 6 பேர் கைது 6 பேரும் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள்
இன்ரர்போல் அதிகாரிகளென்ற போர்வையில் வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த பெண் ஒருவரை திடீரெனப் பயமுறுத்தி மிரட்டிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் அதிகாரி ஒருவர் உட்பட இராணுவத்திலிருந்து தப்பியோடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் பொரளை, கடுவல, தெமட்டகொட, கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்தவர்களென்பது விசாரணைகள் மூலம் வெளிவந்திருக்கிறது. கொஸ்வத்த பொலிஸ் பிரிவிலுள்ள பொத்துரட்ட வனப் பகுதிக்கு 6பேர் வாகனத்தில் வந்துள்ளனர். சர்வதேச பொலிஸான இன்ரர் போலின் அதிகாரிகள் என்று தம்மைக் காட்டிக்கொண்ட இவர்கள் குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட விரும்புவதாக கூறியுள்ளனர். அந்த வீட்டு உரிமையாளர் டுபாயில் பணியாற்றும் பெண்ணாகும். சில நாட்களுக்கு முன்பே அவர் வீட்டுக்கு திரும்பிவந்திருந்தார். தங்க நகையை அப்பெண் திருடிக்கொண்டு வந்துள்ளதாக குற்றச்சாட்டு கிடைத்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளதுடன், அதனை எடுத்துச் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.வெளிநாட்டுக்காரர் போன்று தோற்றமளித்த ஒருவரும் அக்குழுவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் 1,020,000 ரூபா பெறுமதியான நகைகளுடன் அவர்கள் அங்கிருந்து சென்றதுடன் கொழும்பில் அப்பெண்ணை சந்திப்பதாக கூறியுள்ளனர்.அதன் பிரகாரம் அப்பெண் கொழும்புக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதுடன் கணிசமான அளவு தொகை கொடுக்காவிடின் விடயம் தொடர்ந்தும் இருக்கும் என்று அச்சுறுத்தப்பட்டுள்ளது.அதனால் தனது வங்கிக்கணக்கிலிருந்து 475,000 ரூபாவை அப்பெண் எடுத்திருக்கிறார்.பின்னர் அப்பெண் வழக்கறிஞர் ஒருவரின் ஆலோசனையை நாடியுள்ளார். அதன் பிரகாரம் சிலாபம் பொலிஸ் அத்தியட்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிலாபம் பிரிவிலுள்ள தீர்க்கப்படாத குற்றச்செயல்கள் விசாரணைப் பிரிவுக்கு இந்த விடயத்தை அவர் ஒப்படைத்திருப்பதாக டெய்லிமிரர் இணையத்தளம் தெரிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக