சனி, 12 ஜூன், 2010

சத்யராஜ், ஷூட்டிங்கை ஆரம்பிப்பதற்கு முன்பு, நடிகர்-நடிகைகள் ஒத்திகை பார்க்க வேண்டும்

ஒரு படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிப்பதற்கு முன்பு, நடிகர்-நடிகைகள் ஒத்திகை பார்க்க வேண்டும் என்று கமல்ஹாசன் சொன்னது, மிக நல்ல விஷயம்.

படத்தில் நடித்து முடித்து, அந்த படத்தை தியேட்டரில் பார்க்கும்போது, அடடா, இந்த காட்சியில் இப்படி நடித்து இருக்கலாமே... இந்த வசனத்தை இப்படி பேசியிருக்கலாமே... என்று எனக்குள் நானே பல முறை ஆதங்கப்பட்டுள்ளேன்.

'அமைதிப்படை' படத்திலேயே அது நடந்து இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல. எல்லா நடிகர்-நடிகைகளுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வீட்டுக்குப்போய் வருத்தப்படுவதை விட, படப்பிடிப்புக்கு முன்பே ஒத்திகை பார்த்தால், பின்னால் வருத்தப்படுவதை தவிர்க்கலாம்...

நடிகர் - நடிகைகள் மட்டுமல்ல, ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள், ஸ்க்ரிப்ட் எழுதுபவர்கள் ஆகிய அனைவருமே ஒருமுறை ஒத்திகை பார்ப்பது நல்லது. ஒரு படத்துக்கு, குறைந்தபட்சம் ஒரு வாரம் ஒத்திகை பார்த்தால் போதும். படம் நன்றாக வரும். 4 வாரம் ஓடுகிற படம் 50 நாட்கள் ஓடும். 100 நாட்கள் ஓடுகிற படம், 25 வாரங்கள் ஓடும்...'', என்றார்.
பதிவு செய்தவர்: பாலன்கமல்
பதிவு செய்தது: 12 Jun 2010 6:51 pm
கமல் அற்புதமான நடிகர், அவருக்கு வந்த அறிவு இப்ப உள்ள பிசிணறி கமினடி நடிகருக்கு வரணும்,அப்பவாச்சும் தொடற்சியா தோல்வி படங்கள் குடுக்காமல் இருப்பானுங்க,இவங்க என்ன பண்ணினாலும் ரசிகரதுக்கு காதுல பூ வேச்சவனுங்க இருக்கலாம் ஆனால் முக்கால் வாசி ரசிகர்கள் குடுத்த காசுக்கு நல்ல பெர்போமன்சே தான் எதிர் பார்கிறார்கள்

பதிவு செய்தவர்: ஏழுமலை
பதிவு செய்தது: 12 Jun 2010 6:09 pm
மொதல்ல நல்ல கதை எழுதறதுக்கு ஒத்திகை பாருங்க.


நயன்தாரா நாம் பயன்படுத்தாத ஒரு பொருளை மற்றவர்களை வாங்கிப் பயன்படுத்த சொல்வது எந்த வகையிலும் நியாயமாக

இன்று பல நடிகைகளுக்கு சினிமாவில் நடிப்பதை விட, விளம்பரங்களில் நடிப்பதில்தான் செமத்தியான வருமானம்.

அசினும் த்ரிஷாவும் ஆளுக்கொரு கூல் டிரிங்க் பிராண்டைப் பிடித்து உலுக்க கோடி கோடியாகக் கொட்டுகிறது பணம்.

இந்தச் சூழ்நிலையில், அண்மையில் ஒரு பிரபல விளம்பர நிறுவனம் தங்களுடைய தயாரிப்புகளுக்கு விளம்பர மாடலாக இருக்க ரூ.1 கோடி சம்பளம் தருகிறோம் என நடிகை நயன்தாராவிடம் பேச்சு நடத்தியுள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை, கொஞ்சமும் தயக்கமின்றி நயன்தாரா மறுத்துவிட்டார் என்று செய்திகள் வந்தன.

இதுகுறித்து கேட்டதற்கு, "விளம்பரப் படங்களில் நடிப்பதில்லை என்பது அவருடைய கொள்கை. ஒரு முறை முடிவு செய்தால் அதிலிருந்து பின்வாங்குபவள் நான் அல்ல. வேண்டாம் என நான் முடிவு செய்த பிறகு, எத்தனை கோடி சம்பளம் ந்தால்தான் என்ன? நாம் பயன்படுத்தாத ஒரு பொருளை மற்றவர்களை வாங்கிப் பயன்படுத்த சொல்வது எந்த வகையிலும் நியாயமாக இருக்காது என்பதுதான் எனது கருத்து..." என்றார்.

வெரி குட்!

புலிகளுக்கு திருமணம் நாளை பொழுது விடிந்தால 53 முன்னை நாள் புலிப்போராளிகளுக்கு

நாளை பொழுது விடிந்தால் புலிகளுக்கு திருமணம். ஆம் ஐம்பத்து மூன்று முன்னை நாள் புலிப்போராளிகளுக்கு  வெலிகந்தையில் உள்ள  சேனபுர  முகாமில் பெரியோர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆசியுடன் கோலாகலமாக திருமணம் நடைபெறும்.
புலி இயக்கத்தின் கோரப்பிடியில் இருந்து இறைவன் கருணையாலும் எத்தனையோ நல்ல மனிதர்களின் தியாகத்தாலும் இன்று சுதந்திர மனிதர்களாக வாழ்க்கையை ஆரம்பிக்க இருக்கும் இப்புதுமண தம்பதிகளை நாமும் வாழ்த்துகிறோம்.
வெளிநாடுகளில் இனியும் சுகமாக இருந்து கொண்டு சுயநல அரசியல் பேசாமல் நல்லவைகளை ஆதரியுங்கள் அல்லது சும்மவாகவாவது இருங்கள்.
வவுனியாவில் 53 முன்னாள் புலிப் போராளி ஜோடிகளுக்கு நாளை திருமணம் : பிரி, ரணசிங்க
  முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளில் 53 ஜோடிகளுக்கு நாளை வவுனியாவில் திருமணம் செய்து வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக புனர்வாழ்வு, மறுசீரமைப்பு அமைச்சின் புனர்வாழ்வுக்கான ஆணையாளர் பிரிகேடியர் எஸ். ரணசிங்க தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த போராளிகளுக்கு புனர்வாழ்வு நிலையங்களில் சுயதொழில் பயிற்சிகளும் புனர்வாழ்வுப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களில் ஒரு தொகுதியினருக்கு நாளை திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது. திருமண பந்தத்தில் இணையும் அனைவருக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு பம்பைமடுவில் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி.குணசேகர இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.
Sri Lanka military has made arrangments for the wedding of 53 rehabilitated LTTE couples to be held in  northern Vavuniya from 7.00
am on Sunday the 13th.
Hundreds of young men and women of the North who were forced to
spreading terrorism have now been reintegrated into society under a
special program launched by the military. These ex-combatants were
rehabilitated for a period of nine months.

Members of the Defence Sectors made a vital contribution in imparting
them the vocational training and also raising awareness about society.
These youths have now realized the crimes they have committed by
getting involved in a terrorist outfit.
.

Defence Secretary Gotabhaya Rajapaksa met rehabilitated ex-combatants
who received vocational training in the eastern rehabilitation centres
where he gave away proficiency certificates to them at the Senapura
Rehabilitation Centre in Welikanda.

Expressing his view the Defence Secretary said all  these youths had
the capability of directing their lives on the right track. They had
been duped by the LTTE outfit and now they have been re-integrated
into society after rehabilitation that would pave the way for their
future

கடல் சீற்றம்.. குமரி அருகே ஊருக்குள் நீர் புகுந்தது

கன்னியாகுமரி: முள்ளூர்துறை கடற்கரையில் எழும்பிய ராட்சத அலைகளால் 9 வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கிய வாலிபரின் கால் ஓடிந்தது. அரையன்தோப்பு அருகே கடல்நீர் ரோட்டில் புகுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் தென்மேற்கு பகுதியில் தேங்காபட்டினம், முள்ளூர்துறை, ராமன்துறை, புத்தன்துறை உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மீனவர்களின் வீடுகள் கடல் ஓரத்தில் உள்ளன. வழக்கமாக கடலில் ஏப்ரல் மாத இறுதியில் ராட்சத அலை எழும். ஆனால் நேற்று காலையில் ராட்சத அலை எழும்பியது.

இந்த அலைகளின் சத்தம் 1 கி.மீ. தூரம் வரை கேட்டது. இந்த அலைகள் கடற்கரை ஓரத்தில் இருந்த தென்னை மரங்களை வேரோடி பிடிங்கி சென்றன.

அரையன்தோப்பு அருகே தடுப்பு சுவரை தாண்டி கடல்நீர் ரோட்டில் புகுந்தது. இந்த ரோடு மினி கால்வாய் போல் மாறியது.

நேரம் ஆக ஆக அந்தப் பகுதியில் அலைகளின் தாக்குதல் அதிகரித்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

10 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை:

இதற்கிடையே பெரியதாழையில் தொடர் சீற்றம் காரணமாக 10 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

சாத்தான்குளம் அருகே உள்ளது பெரியதாழை மீனவர் கிராமம். இது தூத்துக்குடி-நெல்லை மாவட்ட எல்லையில் உள்ளது. மீன்பிடி தொழில்தான் இங்கு பிரதானம்.

கடந்த 10 நாட்களாக இந்தப் பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றம் மிக அதிகமாக உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து பெரியதாழை பஞ்சாயத்து தலைவர் ஜோசப் கூறும்போது, 2004ம் ஆண்டு சுனாமிக்கு பிறகு பெரியதாழையி்ல் கடல் சீற்றம் அதிகமாகி விட்டது. இதையொட்டி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு துண்டில் வளைவு அமைக்கப்பட்டது. அது போதவில்லை. இன்னொன்று அமைத்தால்தான் கடல் சீற்றத்தில் இருந்து ஓரளவு தப்ப முடியும் என்றார்.

தண்டவாளம் வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது,விழுப்புரம் அருகே உள்ள பேரணியில்இன்று

விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள பேரணியில்இன்று அதிகாலையில் ரயில் தண்டவாளம் வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. முதற் கட்ட விசாரணையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இச்சம்பவத்தை நிகழ்த்தி இருக்கல்லாம் என்ற அடிப்படையில் போலீசார் தமிழ் அமைப்புகளிடம் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்

ரணில் விக்கரமசிங்ஹவைச் சந்தித்து தமது அதிருப்தியை தெரிவித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் நியமனம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கரமசிங்ஹவைச் சந்தித்து தமது அதிருப்தியை தெரிவித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இந்த நியமனம் தொடர்பில் ஐக்கியத் தேசியக் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கலந்துரையாடாது தன்னிச்சையாக தீர்மானம் எடுத்தமை தொடர்பில் கவலை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இது ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான புரிந்துணர்வை பாதிக்கும் விடயம். இது சம்பந்தமாக விரைவில் இரு கட்சிகளும் இணைந்து நல்லதொரு தீர்மானத்தை எடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான  கரு ஜெயசூரிய மற்றும் ஜோன் அமரதுங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்விடயம் சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் விரைவில் கூடி தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.(R.A)

மாணவன் உயிரிழந்துள்ளார்.,16 வயதுடைய மாணவனின் தலையை பிடித்து சக மாணவன் குழாய் கிணற்றில் தாக்கியதால்

ஆனமடுவ பகுதியை சேர்ந்த 16 வயதுடைய  மாணவனின் தலையை பிடித்து சக மாணவன்   குழாய் கிணற்றில் தாக்கியதால் காயத்திற்குள்ளானவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான மாணவன் குறித்த மாணவனின் கழுத்தை நெறித்தும் குழாய் கிணற்றில் பிடித்து  தாக்கியதாலும் காயத்திற்குள்ளா மாணவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனமடுவ வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக வேண்டி குறித்த சந்தேக நபரான மாணவன் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார்.

இவர்கள் இருவருக்குமிடையில் தண்ணீர் போத்தல் ஒன்றுக்காகவே சண்டை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் தினேஷ் குணவர்தன ,டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி அல்லவென்று

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி அல்லவென்று அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இந்திய அரசின் குற்றச்சாட்டுகளிலிருந்து அமைச்சர் தேவானந்தா விடுவிக்கப் பட்டுள்ளதால் அவரை தேடப்படும் குற்றவாளியெனக் கூற முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.
அனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருப்பதற்கு எதிரான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின்போதே அமைச்சர் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். இந்தப் பிரேரணையில் உரையாற்றிய ஐ. தே. க. எம்.பி. ஸ்ரீரங்கா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் ஒரு குற்றவாளியெனவும், அவ்வாறான சர்வதேச குற்றவாளியொருவருடன் ஜனாதிபதி இந்தியா சென்றுள்ளதாகவும் கூறினார்.
இந்தக் கூற்றை அமைச்சர் தினேஷ் குணவர்தன கடுமையாக எதிர்த்தார். அமைச்சர் டக்ளஸ் குற்றமற்ற நிரபராதி எனவும் அமைச்சர் கூறினார்.

அம்பானி குழுவினர் அடுத்த கிழமை இலங்கைக்கு வருகைதர உள்ளனர்.


இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர்களான அம்பானி குழுவினர் அடுத்த கிழமை இலங்கைக்கு வருகைதர உள்ளனர். இலங்கையின் தொலைத் தொடர்புத்துறையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்த பேச்சுக்களை நடத்தவே அவர்கள் இலங்கை வர உள்ளதாக இலங்கையின் பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கு போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டிருந்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

ஆசியப் பிராந்தியத்தில் தொலைத் தொடர்புத் துறையில் ஜாம்பாவான்களாகத் திகழும் அம்பானி குழுவினரின் வருகை இலங்கையின் தொலைத் தொடர்புத் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த அமுனுகம இது இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் ஏனைய முதலீட்டாளர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையில் ஒரு கோடியே நாற்பது லட்சம் பேர் தொலைபேசிகளைப் பாவிப்பதாகத் தெரிவித்த அமுனுகம இது தெற்காசியாவிலேயே மிகவும் அதிகமான விகிதாசாரம் எனவும் குறிப்பிட்டார்.

தோழர் டக்ளஸ் தேவானந்தா இன்று மாலை நாடு திரும்பினார்.

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று மாலை 04.00 மணியளவில் நாடு திரும்பினார்.

நாடு திரும்பிய செயலாளர் நாயகம் அவர்கள் தமது இந்திய விஜயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்றும்,இலங்கை தமிழ் மக்களுக்கான அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து மேலும் அதிகாரங்களை பெறுவதற்கு இந்திய அரசு முதற்கொண்டு தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகள் வரை ஆதரவு தெரிவித்திருப்பது தமது நீண்ட கால கனவுகளுக்கு கிடைத்திருக்கும் வெற்றி என்றும் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷ அவர்கள் அதை நடைமுறைப்படுத்தும் எண்ணத்தோடு இருப்பது மாபெரும் அங்கீகாரம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்திய விஜயத்தின் போது அரசியலுரிமை பிரச்சினை மட்டுமன்றி மேலும் பல பயனுள்ள விடயங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமாக்கப்பட்டுள்தாகவும் இது குறித்து அனைத்து மக்கள் சமூகத்திற்கும் தெளிவாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமது இந்திய விஐயத்தினை சர்வதேசமெங்கும் பரப்புரை செய்ய உதவியிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

சேறு வீசினால் அது தன் மீது விழும்போது சந்தணமாக மாறும் என்றும் கற்களை வீசினால் அது பூக்களாக விழுந்து மணம் வீசும் என்றும் தனது இந்திய விஐயத்தின் போது ஆற்றாக்கொடுமையில் கிளப்பி விடப்பட்ட புரளிகள் குறித்து கருத்து தெரிவித்திருந்ததோடு புயல் மழையை எதிர்கொண்ட தமக்கு இப்போது கிளப்பப்படும் புரளிகள் யாவும் புழுதி மழை என்றும் நாடு திரும்பிய அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவித்தார்.
பிரபாகரனது முக்கியமான நிறைவேறாத ஆசைகளில் ஒன்றையாவது நிறைவேற்றலாம் என்ற நப்பாசையில் புலிக்கும்பல்கள் அலைவது புரிகிறது.
திருந்தவே மாட்டீர்களா? நீங்கள் சோறுதான் சாப்பிடுகிறீர்களா? 
புலிக்கும்பல்களே வெளிநாட்டு வெங்காயங்களின் வீசி எறியும் எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு தப்பித் தவறியும் கூட தமிழர்களுக்கு நன்மை செய்ய மாட்டீர்களா ?
முதலில் உங்கள் நாட்டு அகதி முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு கல்லூரி அனுமதி தடையை எடுங்கள். 
முகாம்களில் உள்ள மக்களுக்கு நிரந்தர வதிவிட உரிமையை கொடுங்கள். 
ஈழத்தமிழ் மக்களை பிச்சைக்காரர்களாக நடத்தும் போக்கை மாற்றுங்கள்.
எல்லாவற்றிக்கும் மேலாக கொலைகார புலிக்கும்பல்களின் ஏவல் பேய்களாக நடக்காதீர்கள்.

ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் முறையாக நடக்கின்ற ் கால்பந்தாட்ட உலகக்கோப்பைப் போட்டி

சிறுவர் சிறுமியர் உட்பட நூற்றுக்கணக்கான வாத்தியக்காரர்கள், பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் அதில் கலந்துகொண்டனர்.இந்த சுற்றுப்போட்டிக்கு தெரிவாகியுள்ள 6 ஆப்பிரிக்க அணிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு ஆப்பிரிக்க மரத்தின் ஆறு கிளைகளாக அந்நாடுகளின் தேசியக் கொடிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் முறையாக நடக்கின்ற இந்தக் கால்பந்தாட்ட உலகக்கோப்பைப் போட்டி நிச்சயம் வெற்றிகரமாக அமையும் என்று தென்னாப்பிரிக்கர்கள் பெருமான்மையானோர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். தென்னாப்பிரிக்காவில் இந்தப் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக நூறு கோடி டாலர்கள் கணக்கில் செலவு செய்து, கண்ணைக் கவரும் பிரம்மாண்டமான விளையாட்டு அரங்கங்கள், விமான நிலையங்கள், பிற கட்டமைப்பு வசதிகள் கட்டப்பட்டுள்ளன.
தலைவர்கள் கருத்து
“தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சி ஒழிந்த அந்த நாளுக்குப் பின்னர் நாட்டின் சரித்திரத்தில் மிக முக்கியமான நாள் என்றால் அது இன்றைய தினம்தான்.” என்று தற்போதைய அதிபர் ஜேக்கப் ஸூமா கூறியுள்ளார்.
“இது வெறுமனே ஒரு விளையாட்டு போட்டி மட்டும் அல்ல. உலக மக்களை ஒருவரோடொருவர் தொடர்புபடுத்துவதற்கான ஓர் வழி இது.” என்று சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவர் செப் பிளேட்டர் கூறியுள்ளார்.
மண்டேலா வரவில்லை
இந்தக் கால்பந்துப் போட்டிகளின் துவக்க வைபவத்தில் தென்னாப்பிரிக்காவின் தேசியத் தலைவர் எல்சன் மண்டேலா கலந்துகொள்வார் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் வியாழனன்று நடந்த ஒரு கார் விபத்தில் நெல்சன் மண்டேலாவின் பதிமூன்று வயது கொள்ளுப் பேத்தி ஸெனானி மண்டேலா உயிரிழந்ததை அடுத்து, அவர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
முதல் ஆட்டம்
போட்டிகளின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மெக்ஸிகோவை எதிர்த்து விளையாடியது. இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி முடிந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

வெள்ளி, 11 ஜூன், 2010

வடிவேலுவுக்கு சிங்கமுத்து , உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டு எங்களை வடிவேலுவிடமிருந்து பிரித்தது சிங்கமுத்துதான் என்பதை

வடிவேலுவுக்கு சிங்கமுத்து துரோகம் செய்துவிட்டார்: ஜெயமணி 

சிங்கமுத்துவுக்கும், வடிவேலுவுக்கும் பிரச்சனை வந்து இருவரும் பிரிந்து நின்று கோர்ட் படிகள் ஏறிய போது முன்பு பிரிந்து சென்ற அத்துனைபேரும் வடிவேலு பக்கம் வந்துவிட்டனர்.
இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டு எங்களை வடிவேலுவிடமிருந்து பிரித்தது சிங்கமுத்துதான் என்பதை இப்போது புரிந்துகொண்டோம்.

அதனால்தான் நல்ல மனிதர் வடிவேலு பக்கம் வந்துவிட்டோம் என்று சொல்லிவருகிறார்கள்.

இந்த நிலையில் வடிவேலுவுடன் கடும் பிரச்சனை செய்து பிரிந்து சென்ற ஜெயமணி மீண்டும் அவருடன் பழையபடி நெருங்கிவிட்டார்.
இது குறித்து ஜெயமணி,   ‘’உலகின் தலை சிறந்த காமெடி நடிகர் வடிவேலு.   அவர் மலை. பிற காமெடியர்கள் மடு. ஆரம்ப காலத்தில் எனக்கும் வடிவேலுவுக்கும் ஆத்மார்ந்தமான நட்பு இருந்தது. எங்களை சிங்கமுத்து சதி செய்து பிரித்து விட்டார்.
என்னைப் பற்றி அவரிடமும் அவரைப்பற்றி என்னிடமும் தப்பு தப்பாக பேசி விரிசல் ஏற்படுத்தினார். பிறகு எங்களுக்குள் பிரிவை உண்டாக்கினார். இப்போது அவரின் உண்மையான முகத்தை இருவரும் புரிந்து கொண்டோம். மீண்டும் நட்பாகி விட்டோம்.

சிங்கமுத்துக்கு வடிவேலு எவ்வளவோ உதவிகள் செய்துள்ளார். அவருக்கு துரோகம் செய்து விட்டார். நல்ல மனிதரான வடிவேலுவை சிங்கமுத்து ஏமாற்றியது உண்மை’’என்று தெரிவித்துள்ளார்.

50 போலி மருத்துவர்கள் கைது,தமிழகம் முழுவதும் இன்று நடத்தப்பட்ட அதிரடி

நெல்லையில் 34 பேர் உள்பட தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இவர்கள் சிக்கினர். தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சந்தேகத்திற்கிடமான தனியார் மருத்துவமனைகளில் காவல்துறையினர் இன்று சோதனை நடத்தினர். சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை மார்க்கெட் அருகே சூர்யா கிளினிக் நடத்தி வந்த அற்புதராஜ் (45), நான்சி கிளினிக் நடத்தி வந்த எட்வின்தாஸ் (56),  பெரியார் நகரில் ராஜா கிளினிக் என்ற பெயரில் நடத்தி வந்த பி.கே.ராஜா, பட்டினப்பாக்கத்தில் சந்தோஷ் கிளினிக் நடத்தி வந்த முருகேவல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் மட்டும் 34 போலி மருத்துவர்கள் இன்று பிடிபட்டனர். கன்னியாக்குமரி மாவட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலர் காவல்துறையினர் சோதனைக்கு வருவது தெரிந்து தப்பிவிட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் பிரகாசம், கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசின் உத்தரவுப்படி, காவல்துறையினர் போலி மருத்துவர்கள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு, கிட்டதட்ட 100 பேருக்கு மேல் போலி மருத்துவர்கள் சிக்கியுள்ளனர். 40 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மருந்து மாத்திரிகைள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

நாளை ரிலீஸ் நித்யானந்தாவுக்கு நிபந்தனை ஜாமீன்-50 நாள் சிறை வாசத்துக்குப் பின் நாளை ரிலீஸ்

நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்து, அதைத் தொடர்ந்து பதிவான வழக்குகளில் கைதான நித்யானந்தாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இதன்படி அவர் பிடுதி ஆசிரமத்தை விட்டு வெளியே போகக் கூடாது, சொற்பொழிவு நிகழ்த்தக் கூடாது. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடாமல் இருக்க பாஸ்போர்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். 25 நாட்களுக்கு ஒரு முறை பிடுதி காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட நித்யானந்தா, ஏப்ரல் 23ம் தேதி பிடுதி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 50 நாட்களுக்குப் பின் இப்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிமன்ற-காவல்துறை சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து நித்யானந்தா நாளை விடுதலையாகிறார்.

ஜாமீன் வழங்கிய தீர்ப்பளித்த நீதிபதி கூறுகையில், நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ உண்மையானது தான் என்று நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தன்னை சாமியார் என்று நம்பிய மக்கள், பக்தர்களின் மனதை புண்படுத்திய நித்யானந்தாவின் செயல் கண்டனத்துக்குரியது என்றார்.

முன்னதாக இந்த ஜாமீன் மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் சதீஷ், வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணை முடிந்துவிட்டதால் நித்யானந்தாவை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய தேவையில்லை என்றார்.

நித்யானந்தா சாமியார் அல்ல-வழக்கறிஞர்

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சாமியார் என்று கூறிக் கொள்ளும் நித்யானந்தா தன்னுடன் பெண்ணை காரில் அழைத்து செல்வது அவருடைய பக்தர்கள் மனதை காயப்படுத்துவதாக ஆகாதா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த நித்யானந்தாவின் வழக்கறிஞர் ஆச்சார்யா,
  Read:  In English 
நித்யானந்தா, சாமியார் அல்ல. அவர் தன்னை ஒருபோதும் சாமியார் என்று சொல்லிக்கொண்டது இல்லை. சில ஆசிரமங்களில் குடும்ப வாழ்க்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே நித்யானந்தாவையும் சாதாரண மனிதராகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வழக்கையும் சாதாரண விஷயமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். நித்யானந்தா தொடர்பாக வெளியான சி.டி. போலியானதாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

மதுபோதையில் வாகனம் ஓடி ஒருவரின் மரணத்திற்கு காரணமானவர் கொலை பற்றி

ஸ்ரீரங்காவை அம்பலப்படுத்தினார் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்த்திரி அலென்ரின் உதயன் அவர்கள்!

இன்றைய தினம் (11) ஆயுதங்களை பதிவு செய்வது தொடர்பான தனி நபர் பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய சில்வெஸ்த்திரி அலென்ரின் உதயன் அவர்கள் மேற்படி விவாதம் தொடர்பாக எமது இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா ஆதாரமற்ற முறையில் அமைச்ர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீதும் ஈ.பி.டி.பி. மீதும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் மேற்படி விவாதத்தில் உரையாற்றினார். ஆகவே இந்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா யார் என்பதையும் கடந்த கால ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் எனது பாராளுமன்ற உரையில் இதை அம்பலப்படுத்தியிருந்தேன்.

அவரது பாராளுமன்ற உரையில் தெரிவித்துள்ளதாவது புலிகளின் ஆயுத அட்டூழியம் இருந்த  காலத்தில் புலிகளின் கொலைக்கார தளபதி பொட்டம்மானுடன் இரகசிய உறவு வைத்து பல ஜனநாயகவாதிகளின் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் எல்லாம் இன்று ஜனநாயகம் பற்றியும் இயல்பு வாழ்க்கை பற்றியும் பேசுகின்றார்கள். மதுபோதையில் வாகனம் ஓடி ஒருவரின் மரணத்திற்கு காரணமானவர் கொலை பற்றி இங்கு பேசுகிறார்.

எம்மைப் பொறுத்தவரையில் வடக்குக் கிழக்கில் ஜனநாயகம் மலர ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் பல தியாங்களைச் செய்திருக்கின்றோம்.  250க்கு மேற்பட்ட எமது கட்சி உறுப்பினர்களை நாம் இயல்பு வாழ்வு மீட்புக்காக புலிகளிடம் பலி கொடுத்திருகின்றோம.;  எமது இரத்தத்தால் உருவாக்கப்பட்ட இயல்பு நிலையை நாம் வடக்கில் பாதுகாப்போமே தவிர  அதற்கு இடையூறாக இருக்கமாட்டோம். வெறும் அரசியலுக்காக எம் மீது குற்றம்;சாட்டுவோர் மீது எமக்கு அக்கறையில்லை.

நேற்றைய எனது உரையில் இத் தீயசக்திகளின் பின்னணிபற்றி தெரிவுபடுத்தியுள்ளேன். வடக்கில் இயல்பு நிலை இல்லை என்றதொரு தோற்றப்பாட்டை சர்வதேசத்திற்கு காட்டவே இவ்வாறான  சக்திகள் வெளிநாட்டில் உள்ள புலிகளிடம் பணம் பெற்று இங்கு விஷமத்தனமான வதந்திகளைப் பரப்புகின்றனர்.  வடக்கு கிழக்கிலுள்ள பாதுகாப்பு தரப்பினருக்கு சகல அதிகாரங்களும் உண்டு அங்கு யாராவது சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்தால் அதைக் களைய வேண்டும் என நான் இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்துகின்றேன்.

வடக்கிலே மக்களை சுரண்டி வர்த்தகம் நடத்தியவர்கள் எல்லாம் இன்று தமிழ் மக்கள் பற்றி பேசுகின்றார்கள். அரசியல் என்று சொல்லிக்கொண்டு வியாபாரம் நடத்தியவர்கள் வெற்றிலை உருளைக்கிழங்குஇ மண்ணெண்ணை  என்று மக்களுக்கு அறாவிலையில் விற்று மக்களை ஏமாற்றியவர்கள் எல்லாம் இன்று தமிழ் மக்களை பற்றி பேசுகின்றார்கள் என்று சில்வெஸ்திரி அலென்ரின் உதயன் அவர்கள் தெரிவித்தார்.       

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 இடங்கள்?

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜய்காந்துக்கு 60 சீட்டுகள் ஒதுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருகிறது. தேர்தலை திமுக முன்கூட்டியே நடத்தக்கூடும் என்று அதிமுக கருதுகிறது.

இந் நிலையில் இப்போதே கூட்டணி பேரங்கள் ஆரம்பித்துவிட்டன. ஏற்கெனவே திமுக-பாமக கூட்டணிப் பேச்சுக்கள் பகிரங்கமாகவே நடந்து வருகின்றன.

இந் நிலையில், அதிமுக மற்றும் விஜய்காந்தின் தேமுதிக இடையே கூட்டணி குறித்து சில தினங்களாக ரகசிய பேச்சுக்கள் நடந்து வருகின்றன.

தேமுதிக தரப்பில் 90 சீட்டுகளும், தேர்தலில் வென்றால் துணை முதல்வர் பதவியும் தரப்பட வேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு அதிமுக தரப்பில் ஒப்புக் கொள்ளவில்லையாம்.

இதைத் தொடர்ந்து மேலும் இரு முறை சந்தித்துப் பேசிய பிறகு, தேமுதிக 60 தொகுதிகளுக்கு பேரத்தை முடித்துக் கொள்ள விரும்பியதாகக் கூறப்படுகிறது.

இதை அதிமுக தலைமையும் ஒப்புக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.

வைகோ கதி?:

தேமுதிகவுக்கு 60 சீட்டுகள் உறுதியானால் வைகோவி்ன் மதிமுக நிலைமைதான் பெரும் சிக்கலுக்கு உள்ளாகும். அவருக்கு மிகக் குறைவான இடங்களே கிடைக்கும், இதனால் வழக்கம் போல இந்த முறையும் தேர்தல் நேரத்தில் அவர் அல்லாட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார் வைகோ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

12 வருட கடூழிய சிறைத்தண்டனை இலங்கையர் மூவருக்கு ஜேர்மன் நாட்டு நீதிமன்றம் ஒன்று நேற்று சிறைத்தண்டனை

படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருக்கும் இலங்கையர் மூவருக்கு ஜேர்மன் நாட்டு நீதிமன்றம் ஒன்று நேற்று சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. பிரதான எதிரிக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஏனைய இருவருக்கும் 6 வருடங்களுக்கு குறையாத கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த இருவரும் சகோதரர்கள் ஆவர்.
படுகொலை செய்யப்பட்டவர் இந்த இருவரினதும் சகோதரி உடைய காதலன் ஆவார். இக்காதல் ஜோடிக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. காதலன் காதலியை அடித்து விட்டார். காதலி இதை இரு சகோதரர்களுக்கும் சொன்னார். இரு சகோதரர்களும் சகபாடியை அழைத்துக் கொண்டு சகோதரியின் காதலனைத் தேடிச் சென்றனர்.அவருடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.
சகோதரர்களின் சகபாடி சுட்டதில் அப்பெண்ணின் காதலர் தலையில் காயம் அடைந்து இறந்து விட்டார்.இச்சம்பவம் கடந்த வருடம் மே 17 ஆம் திகதி ரினெலாண்ட் நகரில் இடம்பெற்றிருந்தது. ஆனால் இவர்களுக்கு மிகக் குறைவான தண்டனையே வழங்கப்பட்டிருக்கிறது என்றும் இத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் என்றும் அநநாட்டு சட்டமா அதிபர் திணைக்கள்ம் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் பாதுகாப்புச் செயலாளரினால்


வெலிகந்த, சேருநுவர இடைத்தங்கல் மற்றும் புனர்வாழ்வு நிலையங்களுக்கு சென்ற பாதுகாப்பு செயலர், புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் குறித்து ஆராய்ந்துள்ளார். புனர்வாழ்வு முகாம்களில் பல்வேறு தொழில் பயிற்சிகளை பெற்று வரும் முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் பாதுகாப்புச் செயலாளரினால் வழங்கப்பட்டன.

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, கிழக்கு மாகாண பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும், கிழக்கின் உதயம் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காகவும் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எளிமையாகிறது விவாகரத்து : இந்து திருமண சட்டத்தில் திருத்தம்

விவாகரத்து நடவடிக்கையை எளிமையாக்கும் விதமாக இந்து திருமணச் சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தவிர ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் சமாதியை மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பொறுப்பில் விடப்படும். விவாகரத்து கோரும் போது இழுத்தடிக்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு புதிதாக சட்டம் கொண்டுவரும்.

நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றின் விவரம்: தற்போது நடைமுறையில் உள்ள இந்து திருமணச்சட்டம் 1955 மற்றும் திருமண சிறப்பு சட்டம் 1954 ஆகியவற்றின் அடிப்படையில் விவாகரத்து வழக்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்து திருமணச்சட்டம் 13ன் கீழ், தற்போதைய சூழ்நிலையில் ஏழு காரணங்களின் அடிப்படையில் விவாகரத்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு மனைவி இருக்கும்போதே மற்றொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்தல், பெண்ணை கொடுமைப்படுத்துவது, வேற்று மதத்திற்கு மாற்றம் செய்ய வற்புறுத்துவது, மனநலம் பாதிக்கப்பட்டு புத்தி சுவாதீனமாக இருத்தல், பால்வினை நோய்கள் தாக்கப்பட்டிருப்பது, தொழுநோய் பாதிப்பு, கணவனோ மனைவியோ இருவரில் ஒருவர் காணாமல்போய் ஏழு ஆண்டுகள் ஆகியிருப்பது உள்ளிட்ட ஏழு காரணங்களுக்காக விவாகரத்து வழங்கப்பட்டு வருகின்றன.

இதுமட்டுமல்லாது திருமணச்சட்டம் 13 (பி) பிரிவின் கீழ் இரு தரப்புக்கும் ஒத்துப் போகாமல், பரஸ்பரம் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து அதன் அடிப்படையில் 18 மாதங்கள் வரை தம்பதிகளுக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிபதி முன்பாக விண்ணப்பம் இருந்தால், அப்போது விவாகரத்து வழங்கப்படுகிறது. இழுத்தடிக்க முடியாது: இந்நிலையில் விவாகரத்து கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு, இருதரப்பும் இனி இணையவே முடியாது என்ற நிலை உருவாகும்பட்சத்திலும், விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தவர்களில் யாராவது கோர்ட்டுக்கு வராமலேயே இழுதடித்துக் கொண்டிருக்கும் பட்சத்திலும், சம்பந்தப்பட்ட நீதிபதியே முடிவு செய்து விவாகரத்தை வழங்கிட இந்த புதிய சட்டத்திருத்தம் வழிவகை செய்துள்ளது. இவ்வாறு சட்டத்திருத்தம் செய்வதற்கு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கியது. மேலும் இந்த சட்டத்திருத்தம் விரைவில் பார்லிமென்டில் வைத்து நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திக்க தயார் தமிழ் மக்களின் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற ஒரேயொரு தமிழ் தலைவர் டக்ளஸ் தேவானந்தா

கரும்புலிகளை கண்டு கூட அச்சப்படாத டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூட்டமைப்பினரால்  ஏவிவிடும் கறுப்புச்   சட்டைகளை கண்டு ஒரு போதும் அஞ்சப்போதில்லை என ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இந்திய விஐயத்தினை சகித்துக்கொள்ளாத கூட்டமைப்பினர் தமது     ஊதுகுழல் பத்திரிகையான உதயனில்    டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஐனாதிபதி அவர்கள் அதிக அதிகாரங்களை வழங்கி பலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக காழ்ப்புணர்ச்சியில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக இந்தியா சென்றிருக்கும் செயலாளர் நாயகம் அவர்களை கைது செய்யுமாறு கோரி கூட்டமைப்பினர்    தமிழக சட்டத்தரணிகள் சிலரோடு தொடர்பு கொண்டு பேசி வருவதாக அறியப்படுகின்றது.
இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சிலர் மின்னஞ்சல் மூலம் தொடர்ந்தும் தமிழ் நாட்டிற்கு தகவல்களை அனுப்பி வருவதாக தமக்கு தகவல் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டு சட்டத்தரணிகள் பலரும் நீதியுடன்தான் செயற்படுவார்கள் என்றும், இந்திய அரசியல் கட்சிகளும் இது குறித்து நீதியுடன் செயற்படுவார்கள் என்றும் தாம் நம்பவதாகவும் கருத்து தெரிவித்த ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் கூட்டமைப்பினர்  ஊடகங்களில் காட்டி வரும் சல சலப்புகளுக்கு நாம் அஞ்சப்போவதில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்ததோடு எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சட்ட ரீதியாக எதையம் சந்திக்க தயார் என்று பகிரங்கமாகவே இந்திய ஊடகங்களுக்க கருத்து தெரிவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த காலங்களில் பல தடவைகள் உத்தியோக பூர்வமாகவும்,      உத்தியோக பூர்வமற்ற ரீதியாகவும் தமிழ் நாடு ஈறாக புது டில்லிவரை சென்று அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து வந்திருந்த எமது செயலாளர் நாயகம் அவர்களுக்கு எந்தவித தடைகளும், ஆட்சேபனைகளும் இருந்ததில்லை.  அப்பொழுதுதெல்லாம் டக்ளஸ்      தேவானந்தாவை  கைதுசெய்யுமாறு கோரிக்கையை முன்வைக்காத கறுப்பு சட்டைகாரர்கள்   இப்பொழுது புதிதாக இந்த பிரச்சனையை திடீர் என்று  கையில் எடுத்ததன்  காரணம் என்ன என்றும்   ஐனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற ஒரேயொரு தமிழ் தலைவர் டக்ளஸ் தேவானந்தா என்பதால் அதை கண்டு தொடை நடுங்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் வெளிப்பாடே இன்று காட்டப்படும் சல சலப்பாகும் என்றும் மேலும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-சந்திக்கு வந்தசெய்தி.

போபால் விஷவாயு கசிவு சம்பவத்துக்கு அமெரிக்காவின் மனப்பான்மையே காரணம்

போபால், ஜூன் 9: மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற காரணத்தால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையை இந்தியாவில் அமெரிக்கா அமைத்தது என்று விஷவாயு கசிவு வழக்கில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி மோகன் பி. திவாரி தெரிவித்துள்ளார். போபாலில் நடந்த யூனியன் கார்பைடு நிறுவன விஷவாயு கசிவால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்த சம்பவம் நடந்து 26 வருடங்களுக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. ÷வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர், ஜாமீன் பெற்றுவிட்டனர். வழக்கை விசாரித்த தலைமைக் குற்றவியல் மாஜிஸ்திரேட் மோகன் பி. திவாரி தற்போது கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணி உயர்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு நகல் செய்தி நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. தீர்ப்பில் மோகன் பி. திவாரி கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு விஷயங்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகின்றன. எனவே விஷவாயு போன்ற ரசாயன தொழிற்சாலைகளை அமைப்பதை அந்த நாடு இந்தியா போன்ற 3-ம் உலக நாடுகள் பக்கம் தள்ளிவிட்டு விடுகின்றன. அதே நேரத்தில் பாதுகாப்பு விஷயங்களில் போதுமான விழிப்புணர்வு இல்லாத காலத்தில் யூனியன் கார்பைடு நிறுவனம் இந்தியாவில் அமைக்கப்பட்டது. போபால் விஷவாயு கசிவு சம்பவத்துக்கு அமெரிக்காவின் மனப்பான்மையே காரணம். மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்ற காரணத்தால் இதுபோன்ற தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்க முடிவு செய்தது அமெரிக்கா. யூனியன் கார்பைடு நிறுவனத்தில் பாதுகாப்பு விஷயங்கள் மிகவும் குறைவாக இருந்தன. இதுகுறித்து அமெரிக்க நிறுவனமோ அல்லது உள்ளூர் நிர்வாகமோ பொருட்படுத்தவில்லை. விஷவாயு கசிவானால் அதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை திட்டம் ஏதும் அந்த நிறுவனத்திடம் இல்லை. விஷவாயு கசிந்தபோது உள்ளூர் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் ஏராளமான மக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்றார் அவர்.

பகுத்தறிவு பாரீர் , கலைஞர் பேத்தி கட்டிய அன்னதான கூடம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

முண்டக கண்ணி அம்மன் கோவிலில் முதல்வர் கருணாநிதியின் பேத்தி குடும்பத்தார் கட்டிய அன்னதான கூடத்தின் கல்வெட்டை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மைலாப்பூர் முண்டககண்ணி அம்மன் கோவிலில் தினசரி அன்னதானம் நடைபெறுகிறது. கோவில் பிரகாரத்திலேயே அன்னதானம் நடைபெறுவதால் அந்த இடம் அசுத்தமானது.

இதையடுத்து பிரமாண்டமான அன்னதான கூடம் கட்ட முதல்வர் கருணாநிதியின் பேத்தி எழிலரசி (செல்வியின் மகள்) குடும்பத்தினர் முன் வந்தனர்.

கரந்தை கப்பல் முருகேசன் செட்டியார் ஜானகி அம்மாள் நினைவாக எழிலரசி  டாக்டர் ஜோதிமணி தம்பதியினர் ரூ.13 லட்சம் செலவில் பிரமாண்டமான அன்னதான கூடம் கட்டி உள்ளனர்.

அன்னதான கூடத்தின் திறப்பு விழா இன்று காலையில் நடந்தது. முதல்  அமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ரிப்பன் வெட்டி அன்னதான கூடத்தை திறந்தார். துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வெட்டை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், துர்கா ஸ்டாலின், செல்வி, கயல்விழி, காவேரி கலாநிதிமாறன், பிரியா தயாநிதிமாறன், அறநிலையத்துறை கமிஷனர் சம்பத், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன், அறங் காவலர் குழு தலைவர் உதயகுமார், இணை ஆணையர் காவேரி, கோவில் நிர்வாக அதிகாரி மோகன சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது,

தமிழ்நாடு முழுவதும் 360 கோவில்களில் தினசரி அன்னதானம் நடக்கிறது. முண்டக கண்ணி அம்மன் கோவிலில் அன்னதான கூடம் கட்டப்பட்டுள்ள இந்த இடம் சமீபத்தில் வழக்கில் இருந்து மீட்கப்பட்டது.
 

காதல் தகராறில் மின் கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர் கொலை

நெல்லை அருகே காதல் தகராறி்ல் ஆட்டோ டிரைவர் ஒருவர் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

தென்காசி அருகே உள்ள ஆலங்குளத்தையடுத்த பூலாங்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாடக்கண்ணு (35).

இவர் அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா என்பவரது மகள் உமா மகேஸ்வரியை காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்யவும் முறைப்படி பெண் கேட்டார்.

ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் உமா மகேஸ்வரியின் தந்தை திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து தனது மகளுக்கு உடனடியாக வேறு மாப்பிள்ளை பார்த்தார். முத்து என்பவருக்கு உமா மகேஸ்வரியை திருமணம் செய்து கொடுத்தார்.

ஆனாலும் உமா மகேஸ்வரியும், மாடக்கண்ணுவும் தொடர்ந்து செல்போனில் பேசியும், அவ்வப்போது சந்தித்தும் வந்துள்ளனர்.

இது உமா மகேஸ்வரியின் கணவர் முத்துக்கு தெரியவந்தவுடன் அவர் மனைவியை எச்சரித்தார். ஆனாலும் இந்தக் கள்ளக் காதல் தொடர்ந்தது.

இந் நிலையில் நேற்று முன்தினம் பூலாங்குளத்தில் அம்மன் கோவில் விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள மனைவி உமா மகேஸ்வரி மற்றும் 2 மகள்களுடன் முத்து பூலாங்குளம் சென்றார்.

அப்போது உமா மகேஸ்வரி மாடக்கண்ணுவிடம் பேசியதாகத் தெரிகிறது.

இதையடுத்து ஆத்திரமடைந்த முத்து, தனது மாமனார் சுப்பையாவுடன் இணைந்து மாடக்கண்ணுவை கொல்ல திட்டமிட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் மாடக்கண்ணுவின் வீட்டுக்குச் சென்ற சுப்பையா, தனது பேரக் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி ஆட்டோவை கொண்டு வருமாறு மாடக்கண்ணுவிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து மாடக்கண்ணு ஆட்டோவுடன் சுப்பையாவின் வீட்டுக்குச் சென்றார்.

அப்போது அங்கிருந்த முத்து மற்றும் சுப்பையாவின் உறவினர்கள் மாடக்கண்ணுவை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளன்.
கற்கள், கட்டைகளாலும் அடித்துள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரம் அந்தக் கும்பல் பயங்கரமாகத் தாக்கியதில் மாடக்கண்ணு அங்கேயே இறந்தார். இதையடுத்து முத்து உள்ளிட்ட அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது.

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் மாடக்கண்ணு பிணமாக கம்பத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து அவரது வீட்டுக்குத் தகவல் தந்தனர்.

போலீசார் இன்று காலை சுப்பையாவை கைது செய்தனர். அவரது மருமகன் முத்து உள்ளிட்ட அவர்களது உறவினர்களைத் தேடி வருகிறனர்.

இந் நிலையில் மாடக்கண்ணுவின உறவினர்கள் சுப்பையா குடும்பத்தினரை தாக்க திரண்டு வந்து அவரது வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்றனர்.

போலீசார் விரைந்து வந்து அவர்களைத் தடுத்துவிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் அங்கு இரு தரப்பையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வி்ஜய் தனது பட நஷ்ட ஈடு சம்பந்தமான ஒரு பஞ்சாயத்தில் நேரடியாகக் கலந்து கொண்டுள்ளார்

னது திரை வாழ்க்கையில் முதல் முறையாக, தனது பட நஷ்ட ஈடு சம்பந்தமான ஒரு பஞ்சாயத்தில் நேரடியாகக் கலந்து கொண்டுள்ளார் வி்ஜய்.

பஞ்சாயத்து நடந்த இடம் நடிகர் சங்க வளாகம். செவ்வாய்க்கிழமை இரவு திடீரென இந்த பஞ்சாயத்து கூட்டப்பட்டது.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஏற்பாட்டில் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார் விஜய். கூடவே அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும், சுறா பட தயாரிப்பாளர் சங்கிலி முருகனும் இருந்தார்கள்.

சுற்றி வளைக்காமல் நேரடியாகவே விஷயத்துக்கு வந்த விஜய், 'நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்?' என்று நேரடியாகக் கேட்க, நஷ்ட ஈட்டின் அளவை பன்னீர் செல்வம் விளக்கினார்.

ஆனால் அவர் கேட்ட தொகையைக் கொடுப்பது சாத்தியமில்லை என்பதுபோல விஜய் பேச, விருட்டென்று எழுந்து போய்விட்டார்களாம் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர்.

நிலைமையின் தீவிரம் உணர்ந்ததால், மேலும் இறங்கிவந்த விஜய், மீண்டும் அவர்களை அழைத்து பேசினாராம். இனியும் இந்தப் பிரச்சினையை வளர விடுவது சரியல்ல என்று சரத்தும் ராதாரவியும் விஜய்யிடம் கூறினார்களாம்.

இப்போது இருதரப்பும் ஒரு புதிய முடிவை எட்டியிருப்பதாகக் கூறுகிறார்கள்.

இன்னும் ஓரிரு தினங்களில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகக் கூடும் என்கிறது தியேட்டர்காரர்கள் தரப்பு

பதிவு செய்தவர்: சந்திரன்
பதிவு செய்தது: 10 Jun 2010 11:19 pm
விஜய் முதலில் ஒழுங்காக தனகென்ற பணியை வைத்துகொண்டு நடி. நடிப்பு வரவில்லைஎன்றால் நட்டுக்கிட்டு மடி. எங்களை வதைக்காதே. உன் முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துவிட்டு "உண்மையில் நான் நடிக்கத்தான் வேண்டுமா" என்று கேட்டு பார், கண்ணாடியே காரி துப்பும்.

பதிவு செய்தவர்: ராஜா
பதிவு செய்தது: 10 Jun 2010 11:17 pm
இங்கே புகைபடத்தில் ஏன் விஜய் ஜாக்கெட் போன்று ஒன்றை போட்டு கொண்டுள்ளார் என்று சொல்ல முடியுமா.!!

நடிகைகள் விபச்சாரிகள் இல்லை.் ஸ்னேகா!

நடிக்க வந்துவி்ட்டேன் என்பதற்காக என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா... எனக்கென்று ஒரு மரியாதை உள்ளது. நடிகைகள் விபச்சாரிகள் அல்ல.." என பொங்கித் தள்ளியுள்ளார் நடிகை ஸ்னேகா.

சமீபத்தில் ஒரு முன்னணி நாளிதழில், ஸ்னேகாவைப் பற்றி தவறான செய்தி இடம் பெற்றுவிட்டதாம். குறிப்பாக கோவா படத்தில் நடித்தபோது, அவர் கர்ப்பமாகிவிட்டதாக அந்த செய்தியில் இடம் பெற்றுள்ளதாம்.

இதனால் கோபம் கொண்ட ஸ்னேகா, தனக்கெதிராக செய்தி வெளியிடுவோர் யாராக இருந்தாலும் தண்டனை வாங்கித் தருவேன் என கொதித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நடிக்க வந்துவிட்டால் ஒரு நடிகையைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா... என்னைப் பற்றி நல்ல செய்தியை எழுதவோ, என் நடிப்பைப் பாராட்டி எழுதவோ ஒருவருக்கும் மனசு வருவதில்லை. ஆனால் மோசமாக எழுத பலரும் துடிக்கிறார்கள். இனி என்னைக் காயப்படுத்தி எழுதும் யாரையும் மன்னிக்க மாட்டேன். தண்டனை வாங்கித் தருவேன்.

நடிகைகளும் மற்றவர்களைப் போல அவர்கள் தொழிலைச் செய்கிறார்கள். ஒரு மருத்துவர், வக்கீலைப் போல. நடிகைகள் என்றாலே விபச்சாரிகள் என சிலர் புரிந்து கொள்வது தவறு...," என்றார்.

தமிழ், தெலுங்கில் கைவசம் 6 படங்களை வைத்துள்ளாராம் ஸ்னேகா.

காதலிக்க சுதந்திரம் இல்லை முத்தமிட்டு கொண்டிருந்த காதல் ஜோடிகளை கைது,் 200 ஜோடிகள்

கொழும்பில் தடையை மீறி பொது இடத்தில் முத்தம் கொடுத்துக் கொண்ட 200க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகளை போலீஸார் கைது செய்தனர்.

இலங்கையில் பொது இடங்களில் முத்தம் கொடுத்துக் கொள்ளக் கூடாது என்று தடை உள்ளது. இருப்பினும் இதை யாரும் மதிப்பதில்லை. இந்த நிலையில், அதிரடி நடவடிக்கையாக முத்தமிடுவோரைப் பிடிக்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.

மாத்தரை, குருநாகல் ஆகிய பகுதிகளில் போலீஸார் முத்தமிடுவோரைப் பிடிக்கும் வேட்டையில் இறங்கினர்.

பூங்கா மற்றும் பஸ் நிலையங்களில் முத்தமிட்டு கொண்டிருந்த காதல் ஜோடிகளை கைது செய்தனர். மொத்தம் 200 ஜோடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் பள்ளி மாணவ- மாணவிகள்.

இவர்களில் சிலருக்கு 15 வயதுக்கும் குறைவாகும். அவர்களை பெற்றோர்களை வரவழைத்து போலீஸார் ஒப்படைத்தனர். மற்றவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.

காதலிக்க சுதந்திரம் இல்லை ஆனால் அரசியல்வாதியாகி பொதுமக்களின் பணத்தை கொள்ளை அடிக்க தாராளமாக உரிமை உண்டு.
இந்த முட்டாள்கள் பொது இடத்தில் காதலிப்பது தவறு என்று ஏன் எண்ணுகிறார்கள்?

வியாழன், 10 ஜூன், 2010

விஸ்வமடு சம்பவம் நிரூபிக்கப்பட்டால் ஆறு இராணுவத்தினர் மீது கடும் நடவடிக்கை இராணுவப் பேச்சாளர்

விஸ்வமடு பகுதியில் இரு குடும்பப் பெண்கள் மீது பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் கைதான ஆறு இராணுவத்தினருக்குமெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. இச்சம்பவத்துடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.பி.பி.சமரசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆறு சந்தேக நபர்களும் கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவின்படி 14 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அன்று அடையாள அணிவகுப்புக்கும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெண்ணை அறையில் பூட்டி செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுமாறு போலீஸ்காரர் மிரட்டிய சம்பவம்

டெல்லியில், திருட்டு விசாரணைக்காக அழைத்து வந்த பெண்ணை அறையில் பூட்டி செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுமாறு போலீஸ்காரர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாயாபுரி குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர் மயூரி. 30 வயதுப் பெண்ணான இவருகுக்கு ராஜு, ரமேஷ் என இரு மகன்கள். இதில், 12 வயதான ராஜு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்த பொருட்களை திருடி விட்டதாக காருக்குரிய பெண் போலீஸில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து ராஜுவை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதையறிந்து மயூரி காவல் நிலையம் விரைந்து வந்தார். தனது மகன் நிரபராதி என்று கூறி அழுதார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத போலீஸ்காரர்கள், மயூரியையும் பிடித்து விசாரித்தனர். பின்னர் ஒரு அறையில் அவரைப் பூட்டினர்.

அப்போது அங்கு வந்த ஒரு போலீஸ்காரர் மயூரியின் அறைக்குள் நுழைந்து விசாரித்தார். பின்னர் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால் விட்டு விடுவதாக மிரட்டினார். ஆனால் அதற்கு மயூரி உடன்படவில்லை. இதையடுத்து அவரது உடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி அட்டகாசம் செய்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கதறி அழுதுள்ளார். இதைப் பார்த்த மற்ற போலீஸ்காரர்கள், காமவெறி பிடித்த அந்தப் போலீஸ்காரரை விலக்கி விட்டு, அந்தப் பெண்ணை விடுவித்தனர்.

விடுபட்ட மயூரி நடந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் தத்வாலிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து இதுதொடர்பாக விசாரணைக்கு ஆணையர் உத்தரவிட்டார். விசாரணையில் தவறு நடந்திருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து பெண் காவலர் அம்ரிதா சிங், காவலர்கள் பிரமோத் குமார், சந்தோஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கொழும்பில் 12 ஆடம்பர மாடிக் குடியிருப்புகள் சர்வதேசப் புலிகளின் நிதிகளைப் பயன்படுத்திக் கட்டப்பட்டிருப்பதாகத்

கொழும்பில் 12 ஆடம்பரத் தொடர்மாடி குடியிருப்புகளில் சர்வதேசப் புலிகளின் முதலீடு
சர்வதேசப் புலிகள் கொழும்பில் வாழும் தமது ஆதரவாளர்கள் அல்லது உறவினர்கள் மூலமோ அல்லது வேறு புலிகள் ஆதரவு நிறுவனங்கள் மூலமோ மேற்படி 12 மாடிக் குடியிருப்புகளையும் அமைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.
தலைநகர் கொழும்பில் சர்வதேசப் புலிகளின் நிதியைப் பயன்படுத்தி அதி ஆடம்பரக் குடியிருப்புகள் பல அமைக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ள தகவல்களைத் தொடர்ந்து இதுபற்றிப் புலனாய்வுப் பிரிவினர் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டுத் தரப்புகளிடையே மேற்கொண்டுவரும் தீவிர விசாரணைகளிலிருந்து அவ்வாறு கொழும்பில் 12 ஆடம்பர மாடிக் குடியிருப்புகள் சர்வதேசப் புலிகளின் நிதிகளைப் பயன்படுத்திக் கட்டப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சர்வதேசப் புலிகள் கொழும்பில் வாழும் தமது ஆதரவாளர்கள் அல்லது உறவினர்கள் மூலமோ அல்லது வேறு புலிகள் ஆதரவு நிறுவனங்கள் மூலமோ மேற்படி 12 மாடிக் குடியிருப்புகளையும் அமைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.

இதுபற்றி, பாதுகாப்புப் புலனாய்வுத்துறை மேலும் மேற்கொண்டுவரும் விசாரணைகளிலிருந்து இவ்வாறு கொழும்பில் அமைக்கப்பட்டிருக்கும் 12 ஆடம்பர மாடிக் குடியிருப்புகளும் கட்டப்பட்டதற்கான பெருந்தொகை நிதிகளும் புலிகள் இயக்கத்தினர் தீவிரமாகச் செயற்பட்டுவரும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலிருந்தே கிடைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளதாகவும் இதுபற்றிய குறிப்பான தகவல்களுக்கேற்ப கனடாவிலும் சுவிற்சர்லாந்திலும் செயற்படும் புலிகள் இயக்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடமிருந்தே இவ்வாறு மேற்படி 12 ஆடம்பர மாடிக் குடியிருப்புகளை அமைப்பதற்கான பெருந்தொகை நிதிகளும் கிடைத்திருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டிருப்பதாகவும் புலனாய்வுத்துறை தரப்பிலிருந்து மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி சர்வதேசப் புலிகள் இயக்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடமிருந்து குறித்த 12 ஆடம்பர மாடிக் குடியிருப்புகளையும் அமைப்பதற்காக சிறிலங்காவிலுள்ள அவர்களின் ஆதரவாளர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ கொடுக்கப்பட்ட அல்லது சிறிலங்காவிலுள்ள புலிகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் சர்வதேசப் புலிகள் முதலீடு செய்திருக்கும் நிதிகள் கணிப்பிட முடியாத அளவுக்குப் பெருந்தொகையானவை எனவும் எவ்வாறாயின், புலனாய்வுத்துறை இதுபற்றிய பரந்த விசாரணைகளை சந்தேகத்துக்குரிய தனியார் மற்றும் நிறுவனங்களின் மட்டத்தில் மேற்கொண்டு வருவதாகவும் புலனாய்வுத்துறை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இதுபற்றிப் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினரும் இரகசியப் பொலிஸ்பிரிவினரும் இணைந்து விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு கொழும்பில் அமைக்கப்பட்டிருக்கும் 12 ஆடம்பர மாடிக் குடியிருப்புகளில் சராசரியாக ஒவ்வொரு ஆடம்பர மாடிக் குடியிருப்பும் 10 மாடிகளைக் கொண்டவையாகவும் ஒவ்வொரு மாடியிலும் தனித்தனியாக 4 வீட்டுத் தொகுதிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஆடம்பர வீட்டுத் தொகுதியும் சராசரியாக ரூபா இரண்டு கோடிக்கு அதிகமான விலைக்கு விற்கப்பட்டிருப்பதாகவும் மேலும் புலனாய்வுத்துறைதரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் பெறப்பட்ட பாரிய பணத்தொகைகள் சர்வதேசப் புலிகள் இயக்கத்தின் நிதிக் கணக்குகளிலேயே வைப்புச் செய்யப்பட்டிருப்பதாகப் புலனாய்வுத்துறைக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் இவ்வாறு சுமார் 10 மாடிகளைக் கொண்ட ஆடம்பர தொடர்மாடிக் குடியிருப்புகளை விட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாடிகளைக் கொண்ட தொடர் குடியிருப்புகள் எண்ணிக்கையில் கொழும்பில் சர்வதேசப் புலிகளின் பணத்தில் கட்டப்பட்டு விற்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு 100 க்கும் மேற்பட்ட தொடர் வீட்டுக் குடியிருப்புகள் கொழும்பில் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் புலனாய்வுத்துறை தரப்பில் இரகசியப் பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவற்றில் குறிப்பிட்ட சில தொடர் வீட்டுக் குடியிருப்புகளில் வீடுகள் இன்னும் விற்கப்படாத நிலையில் உள்ளதாக மேலும் இரகசியப் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேசப் புலிகள் இயக்கத் தலைவரின் மற்றும் பிரதிநிதிகளிடமிருந்து இவ்வாறு பெருந்தொகைப் பணத்தைப் பெற்று ஆடம்பர தொடர்மாடிக் குடியிருப்புகள் மற்றும் தொடர் வீட்டுக் குடியிருப்புகளையும் அமைத்தவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட தனியார் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தற்போது நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளார்கள் எனவும் பெரும்பாலும் கடந்த வருடம் மே மாதம் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முதலாகப் புலிகள் இயக்கத் தலைவர்கள் கூட்டாகக் கொல்லப்பட்டதன் பின்னரே மேற்படி தொடர் மாடிக் குடியிருப்பை அமைத்தவர்களில் பெரும்பாலானோர் நாட்டைவிட்டு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு அதன் நிதிச் செயற்பாடுகள் செயலிழந்துள்ள நிலையில் குறித்த ஆடம்பர மாடித் தொடர் குடியிருப்புகள் மற்றும் தொடர் வீட்டுக் குடியிருப்புகளை அமைத்த புலிகள் இயக்க ஆதரவாளர்களிடையே தற்போது பணத்தைப் பங்கிட்டுக்கொள்வதில் மோதல்கள் தோன்றியுள்ளதாகவும் இரகசியப் பொலிஸ் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு தமக்குள் மோதிக்கொண்ட குறிப்பிட்ட தரப்பினர் அண்மையில் ஒருவருக்கு ஒருவர் எதிராக முறைப்பாடுகளை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் செய்துள்ளனர். இது சம்பந்தமாக இரகசியப் பொலிஸார் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போதே இவ்வாறு வெளிநாடுகளில் இயங்கும் புலிகள் இயக்கப் பிரதிநிதிகள் ஆடம்பர மாடிக் குடியிருப்புகளை அமைப்பதற்காக இங்கு குறித்த ஆதரவாளர்களுக்குப் பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு சர்வதேசப் புலிகள் இயக்கத்தின் நிதியில் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ள மேற்படி 12 ஆடம்பரத் தொடர்மாடிக் குடியிருப்புகள் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு வேறும் சில ஆடம்பரத் தொடர்மாடிக் குடியிருப்புகளும் தற்போது கட்டப்பட்டு வருவதாகவும் இவற்றைக் கட்டிக்கொண்டிருக்கும் உரிமையாளர்களிடம் இரகசியப் பொலிஸ் பிரிவினர் தற்போது விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் இதன்மூலம் இந்த தொடர் குடியிருப்புகள் அமைவதற்குக் குறித்த உரிமையாளர்களுக்கு இவ்வாறு பெருந்தொகை நிதி வெளிநாடுகளில் செயற்படும் புலிகள் இயக்கப் பிரதிநிதிகளிடமிருந்தே கிடைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் இரகசியப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் கொழும்பில் ஆடம்பர தொடர்மாடிக் குடியிருப்புகளை அமைப்பதற்காகப் பெருந்தொகை முதலீடுகளைச் செய்துள்ள புலிகள் இயக்கப் பிரதிநிதிகள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகவிருப்பதாக மேலும் பொலிஸ் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினரும் இரகசியப் பொலிஸ் பிரிவினரும் மேற்கொண்டுள்ள பூர்வாங்க விசாரணைகளிலிருந்து கிடைத்துள்ள தகவல்களில் இவ்வாறு கொழும்பில் ஆடம்பரத் தொடர் மாடிக் குடியிருப்புகள் அமைப்பதில் வெளிநாடுகளிலுள்ள புலிகள் இயக்கப் பிரதிநிதிகளும் இங்குள்ள புலிகள் இயக்க ஆதரவாளர்களும் தீவிரமாக முதலீடுகளை மேற்கொள்ள ஆரம்பித்தது கடந்த 2002 ஆண்டின் சமாதானப் பேச்சுகள் மற்றும் ஒப்பந்தத்தின் பின்னரே எனத் தெரியவந்துள்ளது.

இதுபற்றிய பாதுகாப்பு விமர்சனங்களுக்கு ஏற்ப இவ்வாறு பெரும் அதி ஆடம்பர தொடர்மாடிக் குடியிருப்புகளில் பாரிய முதலீடுகளை வெளிநாடுகளிலுள்ள புலிகள் இயக்கப் பிரதிநிதிகளும் இங்குள்ள புலிகள் இயக்கச் செயற்பாட்டாளர்களும் செய்வதும் அவற்றைக் கோடிக்கணக்கான பணத்துக்கு விற்று குறித்த முதலீடுகளின் பன்மடங்கான இலாபத்தைப் பெறுவதும் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் புலிகள் இயக்கத்தை நிதி அடிப்படையில் மேலும் பலப்படுத்துவதாகவே அமையும் எனவும் எனவே இந்த முதலீடுகளில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பரவலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

திவயின செய்தியும் விமர்சனமும்

TNA, தமிழ் மக்களை ஏமாற்றுவதாக ஆனந்த சங்கரி குற்றம் சாட்டுகின்றார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசின் நிகழ்சி நிரலுக்கு ஏற்றவாறு தாளம்போட்டு தமிழ் மக்களை ஏமாற்றுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி குற்றம் சாட்டுகின்றார். த. தே. கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடனான சந்திபின்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இழைஞர் யுவதிகளின் விடுதலை தொடர்பாக உறுதியாக பேசத்தவறியுள்ளதாகவும் மாறாக அறிக்கைகள் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான இறுதி சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தாம் தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவைகள் தொடர்பாகவே பேசியதாகவும் அதுவே தற்போதைய தேவை எனவும் தெரிவித்திருந்தனர். யுத்தம் முடிவடைந்த தறுவாயில் தமிழ் மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் நிறையவே இருந்தது. அத்தருணத்தில் மக்களின் தேவைகள் தொடர்பாக எதுவுமே வாய்திறக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் கஞ்சிக்காக கையேந்தி நிற்கவில்லை எமது மக்களின் அத்தியாவசிய தேவை அரசியல் தீர்வே எனத் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது மக்களின் தேவைகள் ஓரளவேனும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அரசியல் தீர்வு விடயமாக நியாமான கோரிக்கையை முன்வைத்து தீர்வொன்றை நோக்கி நகராமல் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றும் அரசியலையே முன்னெடுக்கின்றனர் என்பதை இலகுவாக உணரமுடிகின்றது.

அத்தையை கொன்று சூட்கேசில் அடைத்து, எரித்த மருத்துவ கல்லூரி மாணவர்

குடிப் பழக்கத்தை கண்டித்ததால் அத்தையை கொன்று, சூட்கேசில் பிணத்தை அடைத்து, குப்பை கிடங்கில் போட்டு எரித்த மருத்துவக் கல்லூரி மாணவர் கைதனார்.

சென்னை போரூரை அடுத்த குன்றத்தூரில் ஒரு மைதானத்தில் நேற்று முன்தினம் குப்பை கிடங்கில் கருகிய நிலையில் பெண்ணி பிணம் கிடந்தது.

போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் கொலை செய்யப்பட்டு பிணம் எரிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதற்கிடையே போரூர் ஆனந்தா குடியிருப்பில் வசிக்கும் அப்ரூப் தாசரி (20) என்ற முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், தனது அத்தையை காணவில்லை என்று கூறியிருந்தார். போலீசார் அத்தையின் படத்தை கேட்டதற்கு, வீட்டிற்கு சென்று எடுத்து வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வரவே இல்லை.

இதையடுத்து போலீசார் அவரது வீட்டிற்குச் சென்றனர். சந்தேகத்தின்பேரில் வீட்டின் கதவை உடைத்து சோதனை போட்டபோது வீடு முழுவதும் ரத்தக்கறையுடன் துர்நாற்றம் வீசியது.

இதைத் தொடர்ந்து போலீசார் அப்ரூப்பை தேடினர். போரூர் ரவுண்டானா அருகே அவர் சிக்கினார். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது அப்ரூப், தானே தனது அத்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பிணத்தை எரித்தாக கூறினான். அவர் அளித்துள்ள வாக்குமூலம்:

எனது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் வாரங்கல் அருகே உள்ள பாபுபள்ளி. அப்பா சீனிவாசராவ், தாய் ரோமா. இருவரும் டாக்டர்கள். அமெரிக்காவில் வசிக்கின்றனர்.

நான் சென்னையில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கிறேன். முதலில் போரூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்தேன்.
என்னை கவனித்து கொள்ள ஊரில் இருந்து அத்தை தனுஜாவை (40) அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஆனந்தா குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து நானும் அத்தையும் தங்கினோம்.

எனக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்து விட்டு வந்ததால் என் தந்தையிடம் அத்தை புகார் கூறினார். இதனால் அப்பா என்னை போனில் அடிக்கடி திட்டி வந்தார்.

இதனால் அத்தை மீது ஆத்திரம் ஏற்பட்டது. 5ம் தேதி இரவு வீட்டிற்கு வந்தேன். அப்போது அத்தை குடித்து விட்டு வீட்டுக்குள் வராதே என்று திட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த நான் காய்கறி வெட்டும் கத்தியால் அத்தையின் நெஞ்சில் குத்தினேன். அவர் கீழே விழுந்து அதே இடத்தில் இறந்தார்.

இதையடு்த்து அவரது உடலை சூட்கேசில் வைக்க முயன்றேன். அது முடியாமல் போகவே பெரிய சூட்கேசை வாங்கி வந்து அதில் பிணத்தை மடக்கி வைத்தேன். வரும் வழியிலேயே ஒரு பெட்ரோல் பங்கில் டீசல் வாங்கினேன்.

கால் டாக்சியை போனில் வரவழைத்து அதில் உடல் அடங்கிய சூட்கேஸ், டீசலுடன் குன்றத்தூர் சென்றேன். டாக்சியை அனுப்பி விட்டு அங்குள்ள குப்பைக் கிடங்கில் சூட்கேஸ் மீது டீசல் ஊற்றி தி வைத்தேன்.

பின்னர் வீட்டுக்கு வந்து வீட்டை சுத்தம் செய்தேன். மறுநாள் அத்தையை காணவில்லை என்று போலீசில் புகார் செய்தேன். ஆனால் மாட்டிக் கொண்டேன் என்று கூறியுள்ளான்.

இதையடுத்து அப்ரூப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மீண்டும் பன்றி காய்ச்சல்: மும்பையில் 3 பேர், பெங்களூரில் இருவர், கேரளாவில் ஒருவர் பலி


மும்பை, பெங்களூர், கொல்லத்தில் மீண்டும் பன்றி காய்ச்சல் (ஸ்வைன் ப்ளூ) பரவியுள்ளது. இந்த நோய்க்கு கடந்த இரு வாரங்களில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

கொல்லத்தில் சீரன், ராக்கி, கிரிதர் மற்றும் மருத்துக் கல்லூரி மாணவர் ஒருவர் உள்பட 7 பேர் பாதிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஷ்ணு, பிந்து, நசீம் ஆகிய 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இக்காய்ச்சல் தாக்கி குண்டரை பகுதியை சேர்ந்த ஒரு பெண் திருவனந்தபுரம் கிங்ஸ் மருத்துவமனையில் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ ராஜூ கூறும்போது இக்காய்ச்சல் தாக்குதல் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்ந்தால் மட்டும் குணப்படுத்த இயலும். பலர் தனியார் மருத்துவமனைக்கு போய் வி்ட்டு இங்கு வருகின்றனர் என்றார்.

கேரளாவில் பன்றி காய்ச்சலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏராளமானோர் பரிசேதனைக்காக அரசு மருத்துவனைகளில் குவிந்து வருகின்றனர்.

மும்பையில்....:

அதே போல மகாராஷ்டிரத்திலும் ஸ்வைன் ப்ளூ பரவி வருகிறது. கடந்த 16 நாட்களில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

மும்பையில் 27 வயதான கர்ப்பிணியும், ஒரு வயது குழந்தையும், 25 வயது பெண்ணும் பலியாகியுள்ளனர்.

பெங்களூரி்ல்...

பெங்களூரி்ல் 58 வயதான பெண்ணும், உடுப்பியில் 30 வயது வாலிபரும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இந்தப் பெண்ணுக்கு 1 மாதமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பின் மீண்டும் ஸ்வைன் ப்ளூ தாக்குதல் தொடங்கியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை குறைந்துள்ளதால் இந்த நோய் தாக்குதல் அதிகரிப்பதாகத் தெரிகிறது.

இலங்கை அமைச்சர்கள் குருவாயூரில் தரிசனம்

இலங்கை கிழக்கு மாகாண முதல்வர் உட்பட அமைச்சர்கள், குருவாயூரில் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களில் பெரும்பாலானோரது பெயர்களை தெரிவிக்க, தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இலங்கை கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்த், வேளாண்மை அமைச்சர் நவரத்தினராஜா, பிரதிநிதிகள் சபை தலைவர் காந்தரூப் ஆகியோருடன் பத்து பேர் கொண்ட பிரதிநிதிகள், குருவாயூர் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் அனைவரும் கடந்த 7ஆம் தேதி இரவு இராக்கால பூஜை (அத்தாழ பூஜை) நேரத்தில் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
அவர்களது பெயர்களை தெரிவிக்கவோ, அவர்கள் என்னென்ன வேண்டுதல்களை நிறைவேற்றினர் என்பது குறித்தான விவரங்களையோ தேவஸ்வம் போர்டு வெளியிட மறுத்து விட்டது.

கனிமொழி, ராஜபக்சே பதில் மிகப்பெரிய நம்பிக்கையை தருகிறது

மூன்று நாள் அரசுப் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவை, டெல்லியில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக, காங்கிரஸ்,. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி.க்கள் சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தியப்படி, முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்துவது, அதிகாரப் பகிர்வு, மறுசீரமைப்புக்கான உதவிகளை விரைவுப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய திமுக மாநிலங்கவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
போர் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. தமிழர்கள் மறுவாழ்வுக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை எடுத்துச் சொன்னோம். முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுப்பதாக ராஜபக்சே உறுதி அளித்துள்ளார். இது ஒரு சின்ன நம்பிக்கை தரக் கூடியதாக இருக்கிறது.
கலைஞர் முள்வேலி முகாம்களில் 80 ஆயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று கடிதம் எழுதியிருந்தார். அதற்கு 54 ஆயிரம் தமிழர்கள்தான் முகாம்களில் இருப்பதாக ராஜபக்சே கூறினார். அவர்களையும் விரைவில் அவரவர் வசிப்பிடங்களுக்கு அனுப்பி விடுவோம் என்று கூறியிருக்கிறார். தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகளை காணுமாறும் வலியுறுத்தினோம்.
பிரதமர் மன்மோகன் சிங், ராஜபக்சே இடையே நடைப்பெற்ற சந்திப்பின்போது தமிழர்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருத்திருக்கிறார். தேவைப்பட்டால் இலங்கைத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரவும், இலங்கை தமிழர்களின் எதிர்கால வாழ்வுக்கு பல உதவிகளை செய்ய இந்தியா தயாராக இருப்பதாக ராஜபக்சேவிடம் பிரதமர் உறுதி அளித்துள்ளார். இது மிகப்பெரிய நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறது என்றார்.

லண்டனுக்கு குடியேறுபவர்களுக்கு ஆங்கிலம் கட்டாய மொழியாகிறது.

பிரித்தானியாவிலுள்ளோரை திருமணமுடித்து அங்கு குடியயேறுபவர்களுக்கு ஆங்கில மொழியறிவு கட்டாயப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக ஐரோப்பிய வர்த்தக வலயத்திற்கு வெளியேயிருந்து பிரித்தானியர்களை திருமணம் முடிப்போர் நிலையான ஆங்கில பரீட்சை ஒன்றில் சித்தியடைந்திருக்வேணடும் என இன்று கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் அறிவித்துள்ளது.

ஆறுஇராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் கைது ,பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக

முல்லைத்தீவு, விசுவமடு மாணிக்கபுரத்தில் அண்மையில் மீளக்குடியேறிய இளம் தாயொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள ஆறு இராணுவத்தினரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட நீதிபதி, அவர்களை அடையாள அணிவகுப்புக்குட்படுத்துமாறும் பணித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவே இந்த இளம் தாய் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஆறு படையினரும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது, அனைவரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்ற இராணுவத்தினர் இவருடனும் இவரின் தாயாருடனும் உரையாடி விட்டுச் சென்றுள்ளனர்.
மீண்டும் அன்று நள்ளிரவு வேளை இவரது வீட்டிற்குச் சென்ற 6 இராணுவத்தினர் அங்கிருந்த இந்தப் பெண்ணின் தாயாரையும் தம்பியையும் கட்டிப் போட்டுவிட்டு இவரை அருகிலுள்ள ஆட்களற்ற வீட்டிற்கு இழுத்துச் சென்றுள்ளனர்.அங்கு வைத்து ஆறு இராணுவத்தினரும் இப்பெண்ணை மாறி மாறிப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். வேதனையால் அப்பெண் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து இராணுவத்தினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.மயக்கம் தெளிந்த அந்தப் பெண் எழுந்து தனது வீட்டிற்குச் சென்றபோது அங்கு தாயாரும் சகோதரனும் கட்டிப் போடப்பட்டுக் கிடப்பதை அவதானித்துள்ளார்.
பொழுது விடிந்ததும் அருகிலுள்ள இராணுவ முகாமுக்குச் சென்ற இவர்கள் நடந்த சம்பவங்களை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினர். அத்துடன், இது குறித்து இராணுவப் பொலிஸாருக்கும் முறையிடவே அவர்கள் அந்த இராணுவ முகாமுக்குச் சென்று பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஆறு இராணுவத்தினரையும் மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து நேற்று கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர். ஆறு படையினரையும் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி அந்த இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினரையும் கைதுசெய்யப்பட்ட ஆறு இராணுவத்தினருடன் எதிர்வரும் 14 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்குட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணை சட்ட வைத்திய அதிகாரியின் உதவியுடன் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.இதேநேரம், இந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கைதுசெய்யப்பட்ட இராணுவத்தினரில் நால்வருக்கு நேற்று வவுனியா பொது வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை இடம்பெற்றது.
கிளிநொச்சி பொலிஸாரினால் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட இவர்களிடம் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஸ்ரீதரன் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

1000 கோடி ரூபாயை வழங்குவதாக இந்தியப் பிரதமர் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ,டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இந்தியா 50,000 வீடுகளை கட்ட நிதியுதவி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.     இந்தத் திட்டம் வடகிழக்குப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்காக கட்டித் தரப்படும். இந்தத் திட்டம் இந்தியா மற்றும் இலங்கையால் கூட்டாக நிறைவேற்றப்படும்.
இந்தத் திட்டத்துக்காக இந்தியா உடனடியாக 1000 கோடி ரூபாயை வழங்குவதாக இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக இலங்கை குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.   மன்னார் மாவட்டத்திலுள்ள புனித திருக்கேதீஸ்வரம் ஆலைய புனரமைப்பு பணிகளுக்கு இந்தியா உதவும் எனவும் இந்திய இலங்கை தலைவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
இந்திய – இலங்கை உயர்மட்டக் கூட்டத்தின் போது ராமேஸ்வரம் தலைமன்னார் மற்றும் கொழும்பு தூத்துக்குடிக்கு இடையேயான படகு சேவை தொடங்குவது குறித்தும் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.     மடு தலைமன்னார் ரயில்வே பாதையை இந்திய உதவியுடன் அமைக்கவும் உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.    இந்தப் பணி இந்திய நிறுவனமான இர்கான் அமைப்பால் முன்னெடுக்கப்படும்.
அதே போன்று பலாலி காங்கேசன்துறை ரயில் பாதை புனரமைப்பு இலங்கை ரயில்வே துறையால் அமைக்கப்படும் எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
சம்பூர் பகுதியில் மின் ஆலை அமைக்க இந்தியா உதவவுள்ளது.   இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலைய நிர்மாணப் பணிகளுக்காக 200 மில்லியன் டாலர்கள் கடனுதவியை இந்தியா வழங்கும் என இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.
இந்த அனல் மின்நிலையம் இந்தியாவின் தேசிய அனல்மின் நிறுவனமும் இலங்கை மின்சார சபையும் இணைந்து கூட்டாக அமைக்கும்.  இருதரப்புக்கும் இடையேயான பொருளாதார உறவுகளை மேலும் முன்னெடுத்துச் செல்லவும் இந்திய இலங்கை உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பான்தோட்டாவில் இந்தியாவின் துணைத் தூதரகங்களை அமைக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

புதன், 9 ஜூன், 2010

மலையாள நடிகர் திலகன தற்கொலை செய்ய வேண்டியதிருக்கும். அதற்கு மலையாள நடிகர் சங்கம்தான் பொறுப்பு

நடிகர் திலகனுக்கும் மலையாள நடிகர் சங்கமான அம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து நடிகர் திலகன் மலையாள படங்கள், டி.வி. தொடர்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பல புதிய பட வாய்ப்புகளை இழந்தார். நடித்துக் கொண்டிருந்த புதிய படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந்நிலையியில் திருவனந்தப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நடித்துக் கொண்டிருக்கும்போது இறந்துவிட வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் எனது பட வாய்ப்புகளை பறித்து விட்டனர். கடந்த 7 மாதமாக எந்த ஒரு வாய்ப்பும் இல்லாததால் வருமானம் இன்றி வறுமையில் வாழ்கிறேன்
எனது நடிப்பு தொழிலை செய்ய விடாமல் தடுப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நான் கண்ணீருடன் கடைசி காலத்தை கழிக்க வேண்டியுள்ளது.

பெட்டிக்குள் இருக்கும் சினிமாக்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டும் அமைச்சர்கள் எனது விஷயத்தில் தலையிட மறுக்கிறார்கள்.

தொடர்ந்து எனக்கு வாய்ப்பு தராமல் மறுத்தால் ஸ்ரீநாத் போல நானும் தற்கொலை செய்ய வேண்டியதிருக்கும். அதற்கு மலையாள நடிகர் சங்கம்தான் பொறுப்பு என்று திலகன் கூறினார்.

திரையிட விடமாட்டோம, தமிழினத்தைக் இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள ராம ராவணன் படத்தை திரையிட


தமிழினத்தைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கும் இந்தப் படத்தை, சமய சகுனிப் படமாகவே கருதுகிறோம்.

தமிழினத்துக்கும் தமிழீழ விடுதலைக்கும் களங்கம் கற்பிக்கவே இப்படத்தை இங்கு வெளியிட முனைகிறார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் மறைந்துள்ள சதி எதுவாக இருந்தாலும் அதனை வெளிக் கொணர்வோம்.

இந்தப்படம் வெளியானால் அது மக்கள் மத்தியில் ஈழப் போராட்டம் பற்றிய தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தும். பல்லாயிரக்கணக்காக போராளிகளின் தியாகத்தையும் வீரத்தையும் கொச்சைப்படுத்தும் பதிவாகவும் அது அமையும். அதற்கு இடம் தர முடியாது.

கேரளாவிலிருந்து வந்து ஈழப் போராட்டத்தையும் தமிழர்களின் மனநிலையையும் வேறு கண்ணோட்டத்தோடு புரிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களின் வேதனை புரியாது.

தமிழ் ஈழ விடுதலைப்போரின் அடியோ முடியோ தெரியாமல் தற்குறித்தனமாக எடுத்திருக்கும் படம் இது.இந்தத் தவறான படத்துக்கு தமிழ் மண்ணில் இடம் கிடையாது.

மீறித் திரையிட முயன்றால், தமிழகத்திலும், உலகில் தமிழ் மக்கள் வாழும் எந்தப் பகுதியிலும் இந்தப் படத்தைத் திரையிட விடமாட்டோம் என்று எச்சரிக்கிறோம்.

இப்படி ஒரு தவறான படத்தை எடுத்ததற்காக சம்பந்தப்பட்ட படக்குழுவினருக்கு எமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் கருத்துக்களுக்கு யாரும் தடை விதிக்க முடியாது ஐகோர்ட் தீர்ப்பு

1925 முதல் 1938 வரை குடியரசு பத்திரிகையில் பெரியார் கட்டுரைகளை எழுதி வந்தார். பெரியாரின் கட்டுரைகளை வெளியிடுவதற்காக 4 பாகங்களாக தொகுத்து பெரியார் திராவிடர் கழகம் தயாரித்தது.
பெரியார் கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை வெளியிட திராவிடர் கழகத்துக்குதான் காப்புரிமை உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, பெரியார் திராவிடர் கழகம் வெளியிட இருந்து பெரியாரின் கட்டுரைகளுக்கு இடைக்கால தடை வாங்கியது.
இதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். இதில் இடைக்கால தடை நீக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு நடந்த இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சந்துரு கூறியதாவது, பெரியார் சமூக நீதி கருத்துக்களை பரப்பியவர். அவருடை ய அனைத்து கருத்துக்களும் மக்களுக்கு யார் வேண்டுமானாலும் தெரியப்படுத்தலாம். அவருடைய கருத்துக்களை நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தடுத்து நிறுத்த வேண்டாம் என்றும், பெரியார் திராவிடர் கழகத்துக்கு பெரியார் 

இதை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று (09.06.2010) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த இப்ராகிம் ஹபிபுல்லா, கிருபாகரன் ஆகியோர் 2009ஆம் ஆண்டு நீதிபதி சந்துரு வழங்கிய தீர்ப்பு செல்லும் என்றும், பெரியாரின் கருத்துக்களுக்கு யாரும் தடை விதிக்க முடியாது என்றும், பெரியார் திராவிடர் கழகம் தொகுத்துள்ள கட்டுரைகளை வெளியிடலாம் என்றும் தீர்ப்பளித்தனர்.