BBC News தமிழ் : வெனிசுவேலா மீது அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகவும், 'அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படையால் சிறைபிடிக்கப்பட்டதாக, பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் இருக்கும் இடம் மற்றும் தாக்குதல்களால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை.
சனி, 3 ஜனவரி, 2026
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் சிறைபிடிப்பு! அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு
வீட்டில் டயாலிஸ் செய்யும் முறை- peritoneal dialysis
ராதா மனோகர் : வீட்டில் டயாலிஸ் செய்யும் முறை.
சிறு நீரகம் செயல் இழந்து விட்டால் டயாலிஸ் செய்யப்பட வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்
அதில் உள்ள ஒரு இலகு வழியைத்தான் இங்கு கூறுகிறேன்.
மேற்கு நாடுகளில் இந்த இலகு முறை பயன்பாட்டில் உள்ளது.
ஆனால் என்னவோ நமது நாடுகளில் இன்னும் இது பெரிய அளவில் அறிமுகமாகவில்லை
peritoneal dialysis என்பது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் பெரிதாக வழக்கத்திற்கு வரவில்லை..
Hemodialysis என்று கூறப்படும் குருதி சுத்திகரிப்பு முறையே பயன்பாட்டில் இருக்கிறது.
ஹீமோ டயாலிசிஸ் முறை என்பது மிகவும் செலவான சிக்கலான முறையாகும் ,
வெள்ளி, 2 ஜனவரி, 2026
விடாது விஜய்’ . ஆட்டம் ஆடும் காங்கிரஸ்… மிரட்டும் ஸ்டாலினின் ‘லாஜிக்’ ரியாக்ஷன்! what going on
minnambalam.com - Mathi : வைஃபை ஆன் செய்ததும், “ஆடும் வரை ஆட்டம்” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. எந்த கட்சி ’ஆட்டம்’ பலமா இருக்குது?
திமுக கூட்டணியில காங்கிரஸ் கேம்தான் செம்ம சூடா இருக்குதுய்யா.. திருச்சியில இருந்து வைகோ இன்னைக்கு சமத்துவ நடைபயணத்தை தொடங்கி இருக்கிறாரு இல்லையா?
இந்த நடைபயணத்தை சிஎம் ஸ்டாலின் தொடங்கி வைச்சாரு.. இதுல செல்வப்பெருந்தகை கலந்துக்குவாருன்னு இன்விடேஷன்ல பேரு இருந்துச்சு.. ஆனா திடீர்னு அவரு புறக்கணிச்சுட்டாரு..
என்ன காரணம்னு கேட்டா, “இந்த நடைபயண இன்விடேஷன்ல பிரபாகரன் போட்டோ போட்டுட்டாங்க.. அதனால காங்கிரஸ் புறக்கணிக்குதுன்னு” சொல்லி இருக்காங்க..
இதுக்கு முன்னாடி சிஎம் ஸ்டாலினை, செல்வப்பெருந்தகை புத்தாண்டை முன்னிட்டு நேத்து சந்தித்து பேசுனாரு.. அப்ப 2 முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்காரு..
ரணில் - சஜித் ஒன்றிணைகிறார்கள் . ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைக்க தீர்மானம்
ஹிரு நியூஸ் :“சஜித்தின் தலைமையில் ரணிலின் ஆலோசனை!” – ஒன்றிணைகிறது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி; ஹரின் பெர்னாண்டோ அதிரடித் தகவல்.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆகியன ஒன்றிணைந்து பயணிப்பது தற்போது உறுதியாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டணியின் முக்கிய அம்சங்கள்:
தலைமைத்துவம்: இந்தப் புதிய அரசியல் பயணமானது சஜித் பிரேமதாசவின் தலைமையின் கீழும், ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் படியும் முன்னெடுக்கப்படவுள்ளது.
ரணிலின் நிலைப்பாடு: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வருவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்றும், ஒரு வலுவான கூட்டு எதிர்க்கட்சியை உருவாக்குவதே அவரது தற்போதைய நோக்கம் என்றும் ஹரின் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டுப் பயணம்: இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்தாலும், ஏனைய சிறு கட்சிகளையும் உள்ளடக்கி ஒரு விரிவான கூட்டணியாகவே இது அமையும்.
திமுக அரசை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்திக்கு 'கிளாஸ்' எடுத்த ப.சிதம்பரம்
![]() |
மின்னம்பலம் -Mathi : இந்தியாவிலேயே அதிக கடன்களை வாங்கிய மாநிலம் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசுதான் என்று விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்திக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகிகளில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி, இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அதிக கடன் வாங்குகிறது; உத்தரப்பிரதேசத்தைவிட தமிழ்நாடு அதிக கடன் வாங்குகிறது என பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையானது. பிரவீன் சக்கரவர்த்திக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
சிங்களரும் தமிழரும் ஒன்றே இலங்கை சிங்கள மக்களின் மரபணு வரலாறு
![]() |
Rajasekar Pandurangan : சிங்களரும் தமிழரும் ஒன்றே
இலங்கை சிங்கள மக்களின் மரபணு வரலாறு: புதிய ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் என்ன?
இலங்கைத் தீவானது பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் இனங்களின் சங்கமமாகத் திகழ்ந்து வருகிறது.
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இந்த அழகிய தீவு,
வரலாற்றின் பக்கங்களில் எப்போதும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கையின் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் சிங்கள மக்கள் ஆவர். இவர்களின் தோற்றம், வரலாறு மற்றும் இவர்களுக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து பல நூற்றாண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் சிங்களவர்களின் தோற்றத்தை வட இந்தியாவுடன் இணைக்கின்றன. அதேவேளையில், புவியியல் ரீதியாக அவர்கள் தென் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இந்த இரண்டு கருத்துக்களில் எது சரியானது?
அல்லது இரண்டுமே உண்மையானதா?
டயான் ஜயதிலக்க : காணாமல்போன சகல துப்பாக்கிகளையும் கண்டுபிடியுங்கள்!
Balasingam Balasooriyan : காணாமல்போன சகல துப்பாக்கிகளையும் கண்டுபிடியுங்கள்!
2001 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சித் (ஈ.பி.டி.பி) தலைவரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று பாதாள உலகக்குழுவின் கைகளுக்கு போய்ச்சேர்ந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து நடந்து வரும் விசாரணை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (Crime Investigation Department - CID) கடந்த வெள்ளிக்கிழமை (26.12.2025) அவரைக் கைது செய்தது.
பிரபல குற்றவாளியான மாகந்துரே மதூஷிடம் (Makandure Madush) இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், வெளிவேரிய (Weliweriya) பகுதியில் உள்ள புதர் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
தேவானந்தா, தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE) அமைப்பைத் துணிச்சலாக எதிர்த்து நின்று,
அதனைத் தோற்கடிக்க உதவிய முன்னாள் போராளிகளில் ஒருவர். களுத்துறை சிறைச்சாலைக்குள் நடந்த கொலை முயற்சி உட்பட பல கொலை முயற்சிகளில் இருந்து அவர் உயிர் தப்பியுள்ளார்.
வியாழன், 1 ஜனவரி, 2026
தோழர் ஓவியா : தமிழ்இளைஞர்கள் - வேலைவாய்ப்பு - சிறார்குற்றங்கள் - தமிழ்நாடுஅரசு
![]() |
Ovia Rajamoni : திருத்தணியில் இரயிலில் வடமாநில இளைஞர் ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கொடூரமாகத் தாக்கி வன்முறையில் ஈடுபட்ட நிகழ்வு குறித்து,
இன்று அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறோம்.
மிகக் கொடுமையான நிகழ்வு மனதை அதிரை வைக்கக்கூடிய துன்பம்.
இதில் தாக்கப்பட்டவர் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் என்பது,
ஒரு தனித்த தற்செயல் நிகழ்வு மட்டுமே என்பதனை முதலில் நாம் அழுத்தமாகப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் நமது இளைஞர்களின் இன்றைய இந்த நிலை நம்மை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்குகிற்து,
இருந்த போதிலும் இங்கு இளைஞர்கள் மிகக் கடுமையாக ஒரு சீரழிவுக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை நான் இதற்கு முன்பே கூட சில பதிவுகளில் சுட்டிக்காட்டி இருந்த நினைவு இருக்கிறது.
எனவே இந்த பிரச்சனை ஒரு தொடர் போக்கின் குறிப்பிட்ட உச்சநிலை வெளிப்பாடுதான் என்பதனை நாம் முதலில் உணர வேண்டும்,
புதன், 31 டிசம்பர், 2025
நடிகர் விஜய் நடித்த படங்களின் வெற்றி தோல்வி விபரம்
Kanchi Shiva Shiva : நடிகர் விஜய் நடித்த படங்களில் வெற்றி படம் எது தோல்வி படம் எது?
விஜய் இதுவரை நடித்த படங்களில் முழு பட்டியல் மற்றும் வெற்றி தோல்வி விபரம்
1. நாளைய தீர்ப்பு - தோல்வி
2.ரசிகன்- தோல்வி
3.தேவா - தோல்வி
4.ராஜாவின் பார்வையிலே - தோல்வி
5.விஷ்ணு - தோல்வி
6.சந்திரலேகா -தோல்வி
7.கோயமுத்துர் மாப்பிள்ளை - தோல்வி
8. பூவே உனக்காக - வெற்றி
9. வசந்த வாசல் - தோல்வி
சூரஜ்: திருத்தணியில் தாக்கப்பட்ட ஒடிசா இளைஞர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றாரா?
bbc.com -விஜயானந்த் ஆறுமுகம் : 'வட இந்திய நபர் என்ற காரணத்துக்காக அவரை அடித்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.
"அந்த நான்கு பேரும் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். யாரும் படிக்கச் செல்லவில்லை. வீட்டில் தாய் அல்லது தந்தை என யாரோ ஒருவர் இல்லாத சூழலில் வளர்கின்றனர். ஒருவரைத் தாக்கிவிட்டோம் என்ற உணர்வு கூட அவர்களிடம் இல்லை" என்கிறார், திருத்தணி காவல்நிலைய ஆய்வாளர் மதியரசன்.
திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா மாநில இளைஞர் ஒருவரை சில சிறுவர்கள், ஆயுதங்களால் தாக்கி ரீல்ஸ் பதிவிட்ட சம்பவம் குறித்து இவ்வாறு அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கைதான சிறுவர்களை செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் காவல்துறை அடைத்துள்ளது.
ஒரு சிறுவனுக்கு சிறார் நீதிக்குழுமம் பிணை வழங்கியுள்ளதாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடலூரில் குடிபோதையில் பள்ளி வேனை இயக்கிய ஓட்டுநரால் தந்தை, மகன் உயிரிழப்பு:
hindutamil.in - வெற்றி மயிலோன் : சென்னை: கடலூர் அருகே குடிபோதையில் ஓட்டுநர் இயக்கிய தனியார் பள்ளி வேன் மோதி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்துக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சியில் வசிக்கும் மதி என்பவரும், அவரது மகன் மனோஜ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் 22.12.2025 அன்று காலை கோணூர் - பெண்ணாடம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு தனியார் பள்ளி வேன் மோதி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துவிட்டனர்.
செவ்வாய், 30 டிசம்பர், 2025
வட இந்திய இளைஞரை வாளால் கொடூரமாக வெட்டிய தமிழக இளைஞர்கள்
tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை: "தமிழ்நாட்டில் இந்த புள்ளிங்கோ அச்சுறுத்தலை இரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும்" என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திருத்தணியில் வடமாநில இளைஞரை சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு காவல்துறைக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுராஜ். சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்த அவர் மின்சார ரயிலில் திருத்தணி நோக்கிச் சென்றுள்ளார்.
அப்போது 17 வயதிற்குட்பட்ட 4 சிறார்கள் சுராஜை கத்தியை காட்டி மிரட்டுவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர்.
இதை சுராஜ் தடுத்த நிலையில் அந்தச் சிறார்கள் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு ஆபத்து? முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன்
tamilmirror.lk : கைது செய்யப்பட்டு மஹர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆளுநரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமனா சுரேன் ராகவன் கவலை தெரிவித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் தனது அரசியல் எதிரிகளால், குறிப்பாக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 10க்கும் மேற்பட்ட முறை கொலை முயற்சியில் இருந்து தப்பியவர் என்றும் குறிப்பிட்டார்.
நெருக்கடியான சூழலில் அவரை வைத்திருப்பது அவரது உயிருக்கும் அரசியல் எதிர்காலத்திற்கும் அச்சுறுத்தலாக அமையலாம் எனவும் குறிப்பிட்டார்.
திங்கள், 29 டிசம்பர், 2025
எல்லை மீறும் காங்கிரஸ் தலைகள்? கோபப்பட்ட ஸ்டாலின்? அதே தவறை செய்யும் ராகுல்?
tamil.oneindia.com - Shyamsundar : சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பல மாநிலங்களில் உள்ளூர் தலைவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வி அடைந்து இருக்கிறார். உள்ளூர் தலைவர்கள் தனிக்காட்டு ராஜாக்கள் போல செயல்பட்டு பின்னர் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கே காரணமாக மாறி உள்ளனர்.
இப்போது தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தனி தனி தீவுகளாக செயல்பட தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக காங்கிரஸ் மீது ஸ்டாலின் கொஞ்சம் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை கடந்த சில வாரங்களுக்கு முன் சந்தித்தது காங்கிரஸ் குழு. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கேட்ட இடங்களின் எண்ணிக்கையையும் ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்திய தேசிய காங்கிரஸின் தொழிற்துறை பிரிவுத் தலைவராகவும், அக்கட்சியின் தரவு பகுப்பாய்வுப் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வரும் பிரவீன் சக்கரவர்த்தி மீது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தவறியதையும் ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
அநுர அரசுக்கு சஜித் அணி கடும் எச்சரிக்கை - ஊடக சுதந்திரம் முடக்கப்பட்டால் பொதுமக்கள் வீதிக்கு இறங்குவர்!
ceylonmirror.net :ஊடக சுதந்திரம் முடக்கப்பட்டால் பொதுமக்கள் வீதிக்கு இறங்குவர்! – அநுர அரசுக்கு சஜித் அணி கடும் எச்சரிக்கை.
“ஊடக சுதந்திரத்தை முடக்கும் வகையில் அநுர அரசு செயற்பட்டால் இந்த அரசுக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்குவோம். பொலிஸார் ஒருதலைபட்சமாகவே செயற்படுகின்றனர்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டில் ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசு தற்போது ஊடகங்களுக்கு எதிராகச் செயற்படுகின்றது.
திமுக அரசை விமர்சிப்பதா? காங். பிரவீன் சக்கரவர்த்திக்கு ஜோதிமணி எம்.பி. எதிர்ப்பு
மின்னம்பலம் - Mathi : தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு, இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் என திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் அகில இந்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி முன்வைத்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவுகள் ஆய்வு பிரிவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியிருந்தார். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.
ஞாயிறு, 28 டிசம்பர், 2025
20 இலட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்! ஜனவரி 5-ஆம் தேதி தொடக்கம்!
நக்கீரன் : கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்த புள்ளி கோரியது.
அதாவது 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டரை அரசின் எல்காட் நிறுவனம் கோரியிருந்தது.
அதில், ‘கொள்முதல் செய்யப்படும் லேப்டாப்பானது 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. ஹார்ட் டிஸ்க், 14 அல்லது 15.6 இஞ்ச் அளவில் டிஸ்பிளே இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து டெல், ஏசர், லெனோவா, ஹச்பி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டின.
சவுதி அரேபியாவில் இருந்து இந்தியர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்படுகிறார்கள் .. அமெரிக்காவை விட அதிக அளவில்
tamil.goodreturns.in -Prasanna Venkatesh : அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட (Deportation) விஷயம் இந்த ஆண்டு உலகம் முழுவதும் பேசப்பட்டது,
குறிப்பாக விமானத்தில் இந்தியர்களை கொண்டு வந்த விதம் குறித்து கடும் விமர்சனம் எதிர்கொண்டது.
இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் முறையான ஆவணங்கள் இன்றி 'டான்கி ரூட்' (Donkey route) போன்ற ஆபத்தான வழிகளில் எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் தான்.
இன்னும் சிலர் விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பது (Visa overstay) மற்றும் மாணவர் விசா விதிகளுக்கு மாறாக பகுதிநேர வேலைகளில் ஈடுபடுவது போன்ற குற்றத்திற்காகவும் நாடு கடத்தப்பட்டனர்.
திமுக அதிமுக பாஜகவோடு ஒரே நேரத்தில் பேச்சு வார்த்தை நடத்தும் பிரேமலதா கட்சி
மின்னம்பலம் -Mathi : “2026 தேர்தல் சுவரு இன்னும் எத்தனை விசித்திரங்களைத் தருமோ” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
திமுக, அதிமுகன்னு ரெண்டு பக்கமும் தேமுதிக விடாம பேசிகிட்டுதான் இருக்கு..
இந்த களேபரத்துல விஜயகாந்தின் 2-வது வருஷ நினைவு நாளை குருபூஜையா நடத்துது தேமுதிக.. இதுக்கு சிஎம் ஸ்டாலின், இபிஎஸ்-ன்னு எல்லா கட்சித் தலைவர்களுக்கும் நேரில் போய் சுதீஷ் இன்விடேஷன் கொடுத்துகிட்டு இருக்காரு..
இதுக்கு நடுவுலதான், “தேசிய ஜனநாயக கூட்டணியில எங்களுக்கு 6 சீட் மட்டுமே ஒதுக்க முடியும்னு தகவலை வெளியிட்ட கட்சி அழிந்தே போகும்னு” பிரேமலதா சாபம் கொடுக்க பரபரப்பாகிடுச்சு.
பொறுய்யா… தேமுதிக யாரோடதான் கூட்டணி வைக்குமாம்? பிரேமலதா ஏன் சாபம் விட்டாங்களாம்?



