திங்கள், 30 ஜனவரி, 2023

“நாங்க எவ்வளவோ சொன்னோம்; முதலமைச்சர் கேட்கல” - அமைச்சர் எ.வ.வேலு

 நக்கீரன் : ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தனது கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலு இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் ஒன்றரை ஆண்டுகளாக மக்களுக்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தோம் என்பது பட்டவர்த்தனமாக தெரியும். அதுகுறித்து நோட்டீஸ் கொடுக்கிறோம்.
வீடு வீடாகச் சென்று தெளிவுபடுத்துகிறார்கள்.
அதன் மூலம் தான் வெற்றி இலக்கை அடையமுடியும். இதில் அதிமுகவிற்கு சவால் விடவேண்டிய அவசியம் எல்லாம் கிடையாது.
அவர்களே அந்த நிலையில் இல்லை.
சீமான் அரசியல் இயக்கம் நடத்துகிறார். ஜனநாயகத்தில் கட்சிகளை நடத்துகிறவர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள். அவரது கட்சி சார்பில் சீமான் வேட்பாளரை நிறுத்தியுள்ளார். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்” எனக் கூறினார்.

பொங்கல் பரிசு ரூ.1000 தொகையை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை

 மாலை மலர் :  தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவரும் அரசின் பொங்கல் பரிசு ரூ.1000 தொகையை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

19 வயதுக்கு உள்பட்டோருக்கான முதலாவது பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா வென்றிருக்கிறது

 மாலைமலர் : ஜூனியர் பெண்கள் உலக கோப்பை - சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு
மாலை மலர் :  பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த 14-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்சிக்ஸ் சுற்று முடிவில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் ஷபாலி வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து 17.1 ஓவரில் 68 ரன்னில் சுருண்டது. சுலப இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது.
இந்தியாவின் திதாஸ் சாது ஆட்ட நாயகி விருதையும், இங்கிலாந்து கேப்டன் கிரேஸ் ஸ்கிரிவென்ஸ் தொடர் நாயகி விருதையும் (மொத்தம் 293 ரன் மற்றும் 9 விக்கெட்) பெற்றனர்.

“என்னை இந்து என்றுதான் அழைக்க வேண்டும்” - கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் கோரிக்கை

 நக்கீரன் : “என்னை இந்து என்றுதான் அழைக்க வேண்டும்” - ஆளுநர் ஆரிப் முகமது கான் கோரிக்கை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், வட அமெரிக்காவில் வசிக்கும் கேரள மாநிலத்தினைச் சேர்ந்த இந்துக்கள் அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கலந்துகொண்டார்.
நிகழ்வினைத் தொடங்கி வைத்து பேசிய அவர், “இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் தான். இந்தியாவில் விளையும் உணவை நம்பி வாழ்பவர்கள்,
இந்திய நதிகளிலிருந்து நீரை குடிப்பவர்கள் எவரும் தன்னைத்தானே இந்து என அழைத்துக் கொள்ள வேண்டும்.

ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை எதிரொலி: கடும் பாதுகாப்பு- வாகனங்கள் சோதனை தீவிரம்

 மாலைமலர் : சென்னையில் ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை ஜி20 கல்வி பணிக்குழு முதல் கூட்டம் நடைபெறுகிறது.
அதில் 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
இவர்கள் அனைவரும் பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்சுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டைக்கல் பகுதிகளை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.
இவர்களின் பாதுகாப்பிற்காக கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர், புராதன சின்னம், சோதனை சாவடி, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் வெளி மாவட்ட போலீசார் 1000 க்கும் மேற்பட்டோர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

2024ல் சேது சமுத்திர திட்டம் நிறைவேறும்” : TR.பாலு! பாஜகவினருக்கு அறிவியல் பூர்வமாக சிந்திக்க தெரியாது..

தீக்கதிர் : சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் மதுரை யில் நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு (திமுக) பேசியதாவது: வரலாற்றுச் சிறப்பு மிக்க சேது சமுத்திரத் திட்டப் பணிகள் 2.7.2005 அன்று மதுரை பாண்டி கோவில் அருகே நடைபெற்ற விழாவில் அன் றைய பிரதமர் மன்மோகன் சிங்கால் தொடங்கி வைக்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பு அம்சங்களைக் கருத் தில் கொண்டு சேதுசமுத்திரத்திட்டம் மிகவும் அவசியமான திட்டம் எனக் கூறினார் அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
நான் (டி.பாலு) மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது சேது சமுத்திரத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு களைக் கண்டறியும் ஆய்வு மேற்கொள்ளக் கூறி கப்பல்துறை அமைச்சகத்தை அணுகிய போது அந்தக் கூட்டத்திலேயே சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வழங்கப்பட்டது. 

ஒடிசா அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது துப்பாக்கி சூடு .நிலைமை கவலைக்கு இடம்

 மாலை மலர் : புவனேஸ்வர் ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது மந்திரி சபையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாக இருப்பவர் நபா கிஷோர் தாஸ்.
பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு சென்றார்.
காரில் இருந்து இறங்கிய அவர் மீது மர்ம நபர்கள் 3 பேர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். 2 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது.
இதில் மந்திரி நபா கிஷோர் தாஸ் மீது குண்டுகள் பாய்ந்தன. அவரது மார்பை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார்.

சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.3 முதல் பிரசார இயக்கம்! ஆசிரியர் வீரமணி அறிவிப்பு

 tamil.oneindia.com  - Mathivanan Maran  :  சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த கோரி பிரசார இயக்கத்தை திராவிடர் கழகம் தொடங்கும் என்கிறார் கி.வீரமணி
சென்னை: சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி 3-ந் தேதி முதல் பிரசார இயக்கத்தை திராவிடர் கழகம் தொடங்க உள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்தி மதுரையில் நேற்று முன்தினம் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது: தென்பகுதியில், சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் அன்றைக்கு அறிவிக்கப்பட்ட திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால், அடிக்கல் நாட்டப் பட்ட திட்டம் முடிந்திருந்தால், மிகப்பெரிய அளவிற்கு மாறுதல்கள் வந்திருக்கும். அது சாதாரண மாறுதல் அல்ல; இன்றைக்கு ஒரு பெரிய வளமான தமிழ்நாட்டைப் பார்த்திருப்போம்; அதிலும் தென்பகுதி செல்வம் கொழிக்கக் கூடிய பகுதியாக இருந்திருக்கும்.

வீழும் அதானி குழும பங்கில் மேலும் முதலீடு: எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ.யில் உள்ள மக்கள் பணத்துக்கு ஆபத்தா?

வீழும் அதானியில் மேலும் முதலீடு

bbc.com  :  ஆய்வறிக்கை - BBC News தமிழ்
 எழுதியவர், சிவகுமார் இராஜகுலம் -   பிபிசி தமிழ்   ; வீழும் அதானியில் மேலும் முதலீடு
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக பங்குச்சந்தைகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ள அதானி குழும பங்குகளில், எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மேலும் முதலீடு செய்துள்ளன. இதனால், அந்நிறுவனங்களில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்நாள் சேமிப்புக்கு ஆபத்து எழுந்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலக பணக்காரர்கள் வரிசையில் சமீபத்திய ஆண்டுகளில் சரசரவென மேலேறி, ஃபோர்ப்ஸ் பட்டியலில் இரண்டாவது இடத்தை எட்டிப் பிடித்த இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானிக்கு இது சிக்கலான நேரம். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த புதன்கிழமையன்று வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தையே அசைத்துப் பார்த்துள்ளது.

சனி, 28 ஜனவரி, 2023

கிளிநொச்சியில் செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞர் சடலமாக மீட்பு! -

battinews.com :  கிளிநொச்சியில் செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் இன்று காலை இடம்பெற்றது.
24 வயதுடைய விவேகாந்தன் வேணிலவன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டார்.
வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய் கிணற்றில் விழுந்தது. குறித்த நாயை மீட்பதற்காக இளைஞர் பாதுகாப்பற்ற கிணற்றில் தும்புக் கயிறைப் பயன்படுத்தி இறங்கினார்.
அதன்போது கயிறு அறுந்ததால் அவர் கிணற்றுக்குள் விழுந்தார்.

திருப்பூரில் factcheck “வட மாநில இளைஞர்கள் துரத்தி தாக்கினார்களா ?” - உண்மை என்ன? : விவரிக்கும் திருப்பூர் காவல்துறை!

 Kalaignar Seithigal  -  Prem Kumar  : திருப்பூரில் தமிழ் இளைஞர்களை வடமாநில இளைஞர்கள் தாக்குவதாக வெளியான வீடியோ உண்மையில்லை என போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் தமிழ் தொழிலாளர்களை வட மாநில தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் துரத்திச் சென்று தாக்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் உண்மை நிலவரம் தெரியாமல் வடமாநில தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்பலரும் கோரிக்கை வைத்தனர். நகைச்சுவை நடிகர் மதுரை முத்து இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் வீடுகளில் 2 நாய்களுக்கு மேல் வளர்க்க தடை

 மாலைமலர் :  திருவனந்தபுரம்: நாய்களை கண்டால் சிலருக்கு பயம்.
ஆனால் சிலருக்கோ அது உற்சாகம்.
அவர்கள் தங்கள் வீடுகளில் எண்ணற்ற நாய்களை வளர்த்து வருவதும் உண்டு. சாதாரண வீடுகள் மட்டுமின்றி அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பலர் நாய்களை வளர்த்து வருகின்றனர்.
அவர்களுக்கு அது ஆனந்தமாக இருந்தாலும் பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் தொல்லையாக கருதுகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீடுகளில் வளர்க்கும் நாய்களால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பாதிப்பு ஏற்படுவதாக கூறி இருப்பது தான் பிரச்சினையாகி உள்ளது.
இதுதொடர்பாக திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு அவர்கள் புகார்களும் அனுப்பினர்.

Tyre Nicholas death கறுப்பின இளைஞரை பொலிஸார் தாக்கும் வீடியோ- பல அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டம்.

 வீரகேசரி : வெளியானது கறுப்பின இளைஞரை பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ- பல அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டம்.
அமெரிக்காவில் 29 வயது கறுப்பின இளைஞன் டயர் நிக்கொலஸ் உயிரிழந்தமை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
காரில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவரை கறுப்பின பொலிஸார் காலால் உதைப்பதையும் அடிப்பதையும் அவர் அலறுவதையும் காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அமெரிக்க பொலிஸ் திணைக்களம் நான்கு வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
முதலாவது வீடியோ பொலிஸார் நிக்கொலசை காரிலிருந்து இறங்குமாறு சத்தமிடுவதை காண்பித்துள்ளது.

கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?

Hindenburg Research கெட்டி
யாரு சாமி நீ..?!

  tamil.goodreturns.in  - Prasanna Venkatesh :  இந்தியாவையே புரட்டிப்போடும் அளவிற்கு அதானி குழுமத்தின் பங்கு வீழ்ச்சி காரணமாகப் பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் கோடிக்கணக்கான பேர் உள்ளனர்.
அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு புதன் மற்றும் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் 2.3 லட்சம் கோடி ரூபாய் அளவில் சரிந்துள்ளது.
இந்த வீழ்ச்சி காரணமாக அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி சொத்து மதிப்பு 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சரிந்தது மட்டும் அல்லாமல் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்புக் கொண்ட பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பல மாதங்களுக்குப் பின்பு கீழ் இறங்கியுள்ளார்.
யாரு சாமி நீ..?!

தமிழ்நாட்டு அரசியல் விவாதங்கள் எங்கே செல்கிறது?

 ராதா மனோகர்  : தமிழ்நாட்டு அரசியல் ஒரு கொதிநிலை

அரசியலாக மாறிக்கொண்டு வருவது போல தோன்றுகிறது.
படித்தவர்கள் அதிகமாக உள்ள தமிழ்நாட்டுக்கு இந்த கொதிநிலை அரசியல் ஏற்புடையதல்ல.
எந்த விடயத்தை பற்றி பேச தொடங்கினாலும் அது ஒரு அடிப்படை வாதத்திற்குள் போய் நிற்கிறது.
அதனால் நியாயமாக பேசவேண்டிய பல விடயங்களை பேசாமல் கடந்து போகவேண்டிய நிலை ஏற்படுகிறது
குறிப்பாக திமுக அரசு மீது விமர்சனங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பல நல்ல விடயங்களை பாராட்ட வேண்டித்த்தான் இருக்கிறது.
ஆனாலும் இங்கேயும் ஒரு சிக்கல் இருக்கிறது
தவறை தவறென்றும் கூறினால் உடனே அவரை ஒரு எதிரியாக்கும் மனோபாவம் வளர்ந்து வருகிறதோ என்ற அச்சம் உண்டாகிறது
மறுபுறத்தில் நல்ல விடயங்களை மனப்பூர்வமாக பாராட்டி விட்டாலும் உடனே இவர் சொம்பு தூக்குகிறார்.  ஏதோ ஒரு பயனை வேண்டி பாடுகிறார் என்றெல்லாம் கருதி விடக்கூடிய அளவுக்கு பஜனைகளும் உச்சஸ்தாயியில் ஒலிக்கிறது.
அதிமுக போன்ற கட்சிகளின் கெமிஸ்ட்ரியோடு திமுகவை ஒப்பிட்டு பார்க்க முடியாது

மீண்டும் இந்தி: வெறும் மொழித் திணிப்பல்ல! | வீடியோ

 vinavu.com  :  மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இந்திய உழைக்கும் மக்கள் மீது தொடுத்துவரும் பல்வேறு தாக்குதலில் ஒன்று, இன-மொழி அடிப்படையிலான தாக்குதலாகும். இவற்றில் முதன்மையானது இந்தி மொழித்திணிப்பாகும்.
இந்தித் திணிப்பின் அடிப்படை, அகண்ட பாரதம், பார்ப்பன வர்ணாசிரம ஆதிக்கம், சமஸ்கிருத மேலாதிக்கம் என்கிற அடிப்படையிலான ‘இந்து-இந்தி-இந்தியா’ என்ற கோட்பாடாகும்.
இந்த இந்தித் திணிப்பு என்பது தமிழகத்தின் மீது திணிக்கப்படுவதாகவும் அதனை எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டும் என்றும் நம்மவர்கள் பேசி வருகின்றனர்; இது முழு உண்மையல்ல. இந்தித் திணிப்பு என்பது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மேற்கு வங்கம், கேரளா, தமிழகம், பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இந்தித் திணிப்பை எதிர்த்தாலும், அதனை வீரத்துடன் எதிர்த்துப் போரிட்ட வரலாறு தமிழகத்திற்கு மட்டுமே உள்ளது.

உக்ரைனுக்கு படையெடுக்கும் ஜெர்மன் டாங்குகள்.. ரஷ்யா பகிரங்க மிரட்டல்.. அடுத்தகட்டத்துக்கு நகரும் போர்!

 கலைஞர் செய்திகள் - பிரவீன் : உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகளின் நேரடி பங்கேற்பு அதிகரித்துள்ளதாக ரஷ்யா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான 10 மாத போர் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

யாழ் மாவட்டத்தில் 4,111 பேர் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர்

 ஹிருநியூஸ் : யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நான்காயிரத்து 111 பேர் போட்டியிடவுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண தேர்தல் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.
இந்த முறை தேர்தலில் வாக்களிப்பதற்கென யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 423 வாக்காளர்கள் தகுதிப் பெற்றுள்ளனர்.
இதற்காக 514 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக போட்டியிடவுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

சிங்கள இடதுசாரி தலைவர்களின் இனவெறுப்பு அரசியல் வரலாறு

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே இடது சாரி இயக்கங்கள் இலங்கையில் வேகமாக காலூன்றின குறிப்பாக மலையகத்தில் . பல சிங்கள இடதுசாரி தலைவர்கள் மலையக மக்களின் வாக்குகளிலும் ஏனைய சிறுபான்மையின மக்களின் வாக்குகளிலுமே தங்கள் அரசியல் மேடையை அமைத்துக்கொண்டார்கள். இந்த பின்னணியில் சில விடயங்களை ஆய்வு செய்தல் அவசியம். 

ராதா மனோகர் : இலங்கை சிங்கள இடதுசாரிகள் சிங்கள

A.E.Gunasinga
மக்களிடையே தங்கள் கம்யூனிச கருத்துக்களை எடுத்து செல்வதில் வெற்றி பெறவில்லை . மறுபுறத்தில் அப்பாவி மலையக மக்களிடையே பெரு வெற்றி பெற்றனர்  
தமிழக இடதுசாரி கட்சிகள் இந்த விடயத்தில் இலங்கை சிங்கள இடதுசாரிகளோடு ஒன்றாக வேலை செய்து சிங்கள இடதுசாரிகளின்   ் வேலையை இலகுவாக்கினார்கள்
சுதந்திர இலங்கையின் முதல் நாடாளுமன்றத்தில் அன்றைய சுதந்திர இலங்கையின் தேசியக்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை பெறமுடியாமல் போனது
மறுபுறத்தில் பல இடதுசாரி கட்சிகள் மலையக மற்றும் இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்கள் முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையோரின் ஆதரவில் வெற்றி பெற்றிருந்தனர்.
பல சிங்கள இடதுசாரி தலைவர்கள் வெற்றி பெற்றது இந்த வாக்குகளால்தான்
அன்றே மலையக மக்கள் மீது  ஒரு கம்யூனிச லேபிளை ஓட்டினார்கள் அந்த இடதுசாரிகள்

வெள்ளி, 27 ஜனவரி, 2023

காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் இணைப்பு? - பரவும் செய்தி .. ஜன.30-ல் ?

 tamil.news18.com : மக்கள் நீதி மய்யம் கட்சியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் இணைக்கவுள்ளதாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியான செய்தி அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக வலைதளத்தில் வெளியான அந்த அறிக்கையில், “மகாத்மா காந்தி இந்துத்துவ வெறியரால் கொல்லப்பட்ட நாளான ஜனவரி 30-ம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் கட்சியானது காங்கிரஸுடன் இணைக்கப்படுவதாகவும்,
கமல்ஹாசன் மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் டெல்லியில் இந்த இணைப்பு விழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் கமல்ஹாசன் முன்னாள் காங்கிரஸ் தலைவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பியதிலிருந்து தனது அடுத்த நகர்வுகளை யோசித்து வந்ததாகவும்,

பரந்தூரில் விமான நிலையம்.. இடத்தை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசு தான்.. மத்திய இணையமைச்சர் விகே சிங்!

மத்திய அரசுக்கு தொடர்பில்லை tamil.oneindia.com  -  Yogeshwaran Moorthi  : திருநெல்வேலி: பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மாநில அரசு தான் தேர்வு செய்து கொடுத்தது என்றும்,
அதில் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் மத்திய இணையமைச்சர் விகே சிங் தெரிவித்துள்ளார்.
அதேபோல் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலையை பசுமை வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பரந்தூர் சுற்று வட்டார கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் பரந்தூர் உட்பட 13 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் உருவாக்கப்பட உள்ளது.
பரந்தூர் விமான நிலையம் கட்டமைப்புக்கான பணிகளை தொடங்குவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

 மாலைமலர் : சென்னை புதுயுக தொழில்முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை அடைவதற்காக தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம் என்ற புதிய திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சார்ந்த தொழில்முனைவோர்களால் தொடங்கி, நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடனாக நிதி வழங்கப்படும். இந்நிதியத்திற்கு முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற கடந்த மே 2022-லிருந்து தொழில்முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இதுவரை 330 நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வாழ்க' .. ஆளுநர் முன்பு அணி வகுத்துச் சென்ற அரசின் சாதனை விளக்க ஊர்திகள்!

 Kalaignar Seithigal  -  Lenin  : தமிழ்நாடு சென்னை மெரினாவில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்தியில் 'தமிழ்நாடு வாழ்க' வாசகம் இடம் பெற்று இருந்தது.
நாட்டின் 74வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர்.
தமிழ்நாட்டில் சென்னை மெரினாவில் தேசியக் கொடியைத் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா : நான் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன்-

 hirunews.lk :  யாழ்ப்பாணம் பலாலி காணி விடுவிக்கப்படும் திகதி குறித்து தான் பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு பணிக்குழாமின் பிரதானி மற்றும் முப்படை பிரதானிகளுடன் தான் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (26) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் போதே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துவெளியிடுகையில், “பாதுகாப்பு பிரதானிகளின் தீர்மானத்திற்கமையவே நாம் செயற்பட்டோம். காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் நாம் மறுக்கவில்லை.
நான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. அந்த வகையில் இருக்கும் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன்.
எமது அரசியலமைப்பில் கடந்த 37 ஆண்டுகளாக 13ஆவது அரசியல் திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது. நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மோடி - பிபிசி ஆவணப்படத்தை செல்போனில் பார்த்த சென்னை மாநகராட்சி சிபிஎம் கவுன்சிலர் கைது

hindutamil.in  :  மோடி - பிபிசி ஆவணப்படத்தை செல்போனில் பார்த்த சென்னை மாநகராட்சி சிபிஎம் கவுன்சிலர் கைது
கைது செய்யப்பட்ட கவுன்சிலர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்
சென்னை: பிபிசி வெளியிட்ட குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை செல்போனில் பார்த்த சிபிஎம் கவுன்சிலர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து ‘இந்தியா: மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது.