tamil.oneindia.com - Yogeshwaran Moorthi : சென்னை: அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் வரை ஒதுக்க எடப்பாடி பழனிசாமி முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
40 தொகுதிகளுக்கான பட்டியல் அதிமுக தரப்பில் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இருந்து 20 தொகுதிகளை பாஜக தேர்வு செய்ய அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், ஏப்ரல் மாதமே அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
சனி, 6 செப்டம்பர், 2025
50 தொகுதிகள் கேட்கும் பாஜக.. 20க்கு இறங்கி வந்த எடப்பாடி பழனிசாமி.
மலையக நியூட்ரல் (Neutral) மரணங்கள்? பிரேக் பிடிக்குது இல்லை? ஏன் ?
சுப்ரமணிய பிரபா : நியூட்ரல் (Neutral) மரணங்கள்...
மலையக பகுதிகளில் இடம்பெறும் அனேக வாகன விபத்துக்கள் வாகனங்களை சாரதிகள் நியூட்ரலில் செலுத்துவதால் இடம்பெறுகிறது. அதே போன்ற ஒரு நியூட்ரல் விபத்தாகவே எல்ல பஸ் விபத்தை பார்க்கவேண்டியிருக்கிறது.
தப்பியவர்களின் கூற்றுப்படி சாரதியின் இறுதி வார்த்தைகள் "பிரேக் பிடிக்குதில்லை" என்பதாக இருக்கிறது. குறித்த பஸ்சானது எல்ல எனும் உயர் நில பகுதியில் இருந்து அம்பாந்தோட்டையின் தங்காலை எனும் தாழ் நிலை பகுதிநோக்கி பயணித்துகொண்டிருந்தது. உயர்வான இடத்தில் இருந்து தாழ்வான பகுதிநோக்கி பள்ளத்தில் பயணிக்கும் ஒரு வாகனம் திடீரென பிரேக் பிடிக்கவில்லையெனில் அது ஏற்படுத்தும் விளைவு பாரதூரமானது. எனினும் முறையான சாரதியெனில் அதையும் தடுத்திருக்கலாம்.
குறிப்பாக மலையக பகுதிகளில் வாகனம் ஓடுபவர்கள் மலைப்பிரதேசங்களிலிருந்து கீழ் நோக்கி வரும்போது நியூட்ரலில் வாகனத்தை செலுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். எரிபொருளை மீதப்படுத்த இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுக்கின்றனர் இது ஒரு பாரதூரமான ஆபத்தான பயணமுறை என்பதை சாரதிகள் உணர்வதில்லை?
வியாழன், 4 செப்டம்பர், 2025
இலங்கைத் தமிழர் சட்டவிரோத குடியேறிகள் அல்ல! அரசு அறிவிப்பு
ஜேவிபி நியூஸ் Mathdusha : 2015ஆம் ஆண்டு 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் அமுல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் தொடர்பிலான சட்டத்தின் கீழுள்ள தண்டனை விதிகளிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றிய அரசு விலக்களித்துள்ளது.
எனவே இலங்கைத் தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகளாக காணப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விஜய் கூட்டணியில் ஓபிஎஸ் + டிடிவி தினகரன் + செங்கோட்டையன்?
![]() |
மின்னம்பலம் - Mathi : பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ் அணிகள் இடம் பெற்றிருந்தன. இந்த கூட்டணியில் 5 மாதங்களுக்கு முன்னர் அதிமுகவும் இணைந்தது.
டிடிவி தினகரன் வெளியேறியதன் பின்னணி என்ன?
புதன், 3 செப்டம்பர், 2025
கச்ச தீவு . போக்ரான் அணு குண்டு சோதனை! இந்திராவுக்கும் ஸ்ரீமாவோவுக்கும் இடையில் 20 நாட்களில் நடந்தது என்ன?
![]() |
![]() |
ராதா மனோகர் : தெற்காசியாவை அணு ஆயுத மற்றும் அணு சோதனைகள் அற்ற பகுதியாக அறிவிக்க இலங்கை மேற்கொண்ட முயற்சியும்,
கச்ச தீவு ஒப்பந்தமும்!
20 நாள் இடைவெளியில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகள் கூறுவதென்ன?
கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றிய புரிந்துணர்வுக்கு சில விடயங்களை ஆழமாக ஆய்ந்து பார்ப்பது அவசியம்.
குறிப்பாக தெற்கு ஆசியாவில் இலங்கையின் வகிபாகம் பற்றிய வரலாறு பற்றிய ஆய்வும் முக்கியமான தொன்றாகும்!
இலங்கை ஒரு சிறிய நாடக இருந்தாலும் அது பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது.
அதன் பழைய வரலாறும் சரி அண்மைக்கால வரலாறும் சரி நுட்பமாக கவனிக்க தக்கது
குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்தின் முக்கியமான ஒரு தளமாக காலனித்துவ காலங்களிலும் சரி இன்றும் சரி இலங்கை விளங்குகிறது.
இந்த கோணத்தில் சில விடயங்களை பாப்போம்!
இந்துமாக்கடல் பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை சுதந்திரம் அடைந்த காலங்களில் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளது.
May 1954 இல் தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடந்தது
செவ்வாய், 2 செப்டம்பர், 2025
ரஷிய எண்ணெயால் பிராமணர்களுக்கு இலாபம் . மக்களுக்கு நஷ்டம்! டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர் அதிரடி :
மாலைமலர் : கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அமெரிக்கா: இந்தியாவுக்கு மேலும் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன்வந்த ரஷியா!
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்தது. அதோடு மட்டுமல்லாமல் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25 சதவீத வரி விதித்தது. மொத்தமாக 50 சதவீத வரி விதித்துள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீஸ் மீது கல்வீச்சு: 50-க்கும் மேற்பட்டோர் கைது
hindutamil.in : பொன்னேரி: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் சமரசம் பேசவந்த போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
பதிலுக்கு போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடந்தது என்ன? -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அமர்பிரசாத் பணிபுரிந்து வந்தார்.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 600 பேர் உயிரிழந்து, 1,500 பேர் காயம்
ஜாப்னா முஸ்லிலும் : கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 600 பேர் உயிரிழந்தனர். 1,500 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகே கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரணிலிடம் சஜித் : இத்துடன் நிறுத்தப்போவதில்லை’!
![]() |
வீரகேசரி : இலங்கை மக்கள் மாத்திரம் அல்லாது சர்வதேச நாடுகள் பலவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது அவதானம் செலுத்தியிருந்தது.
இதனால் கடந்த வாரம் முழுவதும் நாட்டில் ஒரு பரபரப்பான நிலைமையே காணப்பட்டது. எனெனில் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுகிறார்.
மறுபுறம் குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்ய என அழைக்கப்பட்டவர் திடீரென கைதாகின்றார். இந்த கைது குறித்து சமூக ஊடக செயல்பாட்டளர் ஒருவர் முன்கூட்டியே தெரியப்படுத்தியிருந்தார்.
மலையக மக்களின் அடையாள சிக்கல் . மீண்டும் வில்லங்கமாக மாறும்?
ராதா மனோகர் : ஈழநாடு 11 பெப்ருவரி 1961
பதிவு பிரஜைகளின் குழந்தைகள் இந்திய தமிழரே!
ரிஜிஸ்டர் ஜெனெரல் உத்தரவு!
இந்தியா பாகிஸ்தான் பிரஜா உரிமை சட்டப்படி இலங்கை பிரஜைகளாகி உள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை இந்திய தமிழர் என்றே பிறப்பு பதிவு புத்தகத்தில் குறிப்பிட வேண்டும் என்று கேட்டு,
ரிஜிஸ்டர் ஜெனரல் பிறப்பு பதிவு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தெரிகிறது,இச்செய்தி மலைநாட்டு தமிழர் வட்டாரங்களில் புதிய கவலையை அளித்துள்ளது,
இது பற்றி விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடைபெறுவதாக தெரிகிறது
திங்கள், 1 செப்டம்பர், 2025
மலையகத்தில் (இலங்கை) விஷ்வ ஹிந்து பரிஷத் (RSS) - இலங்கை மாபெரும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள்
மலையோரம் செய்திகள் : விஷ்வ ஹிந்து பரிஷத் - இலங்கை மாபெரும் விநாயகர் சதுர்த்தி ஆன்மீக எழுச்சி ஊர்வலம்-2025
எழில் கொஞ்சும் மலையக மண்ணில், அருள்மிகு விநாயகப் பெருமானுக்கு ஆவணி மாத சதுர்த்தி பெருவிழா, இதுவரை கண்டிராத பிரமாண்டமான முறையில் கொட்டகலையில் கொண்டாடப்படுகிறது.
2025.08.31ம் திகதி கொட்டகளை கோமர்சளில் விநாயகர் சிலைகளை விஜர்ஜனம் அதாவது கரைத்தல் செய்தவற்காக 15 இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட உள்ளன
பெரிய மண்வெட்டி தோட்டம்
சின்ன மண்வெட்டி தோட்டம்
ரொசிட்டா தோட்டம்
ஸ்டோனி கிளிப் தோட்டம்
ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025
எம்.பி. சீட் விவகாரம்: - பிரேமலதா : தேமுதிக- அதிமுக கூட்டணி: எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார்
tamil.samayam.com - வித்ரன் தேவேந்திரன் : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவுக்கு ஒரு எம்.பி. சீட் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து இருந்தார்.
இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் , அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்.பி. சீட் தருவதாக கூறி முதுகில் குத்தி விட்டார் என கடுமையாக சாடி உள்ளார்.
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற தேமுதிக பூத் கமிட்டி கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
இந்து பத்திரிகையின் திராவிட ஒவ்வாமை எழுத்து பணி
![]() |
ராதா மனோகர் : அமெரிக்க வரி நெருக்கடி மீதான மத்திய அரசின் பதில் நடவடிக்கை போதுமானது..
இது ஒரு செய்தி தலைப்பு - இந்து பத்திரிகையின் ஊடக அறம்.
அதாவது போதுமானது அல்ல என்றுதான் சொல்ல வந்தார்களாம்
தலைப்பில் தங்களின் பச்சை பொய் பிரசாரத்தை செய்துள்ளார்கள்
முதல் ஒன்பது சொற்களை உள்நோக்கத்தோடு தெளிவாக போட்டுள்ளார்கள்
முதல்வர் ஸ்டாலினின் படமும் போட்டுள்ளார்கள்
முதலில் வரும் சொற்கள்தான் அந்த வரிசைப்படி அந்த செய்தியை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும். இது இன்றைய ஆன்லைன் காலத்தில் எல்லோருக்கும் நன்றாக தெரியும்!
முதல்வர் ஸ்டாலின் படத்தை போட்டதன் மூலம் இது அவர் கூறியது என்பது போல வாசகர்கள் கருதுவார்கள்
அதாவது மத்திய அரசின் நடவடிக்கை போதுமானது என்று ஸ்டாலின் கூறியதாகத்தான் கருதுவார்கள்






