சனி, 12 ஜனவரி, 2019

கொடநாடு லீக்: தினகரனை குறிவைக்கும் எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை:  கொடநாடு லீக்: தினகரனை குறிவைக்கும் எடப்பாடி
“ மின்னம்பலம் : கொடநாடு எஸ்டேட் கொலை,
கொள்ளையின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்களால், எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார். ஜெயலலிதா இருந்தவரை அவர் ஓய்வெடுக்கச் செல்லும்போது மட்டுமே செய்திகளில் அடிபட்ட கொடநாடு எஸ்டேட், 2016 டிசம்பர் 5-ம் தேதிக்குப்பின் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி கொடநாடு பங்களாவுக்குள் நுழைந்த கும்பல், காவலாளி ஓம் பகதூர் என்பவரை கொன்றுவிட்டு, முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 24 மணிநேரமும் சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பு, ஒவ்வொரு கேட்டிலும் காவலாளி போன்ற கண்காணிப்புகளை மீறி நடந்த கொலை, கொள்ளை அங்கிருந்த எந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகவில்லை என்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது.
ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை உதவியுடன் கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளையில் ஈடுபட்டதை 3 நாட்களில் கண்டறிந்தனர். ஆனால், போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்ட ஓரிருநாளில் அதாவது 2017 ஏப்ரல் 28-ம் தேதி, கொலை, கொள்ளைக்கு மூளையாக கருதப்பட்ட கனகராஜ், சேலம் அருகே விபத்தில் உயிரிழந்தார். மறுநாள் அதிகாலையில், கனகராஜின் கூட்டாளியாக செயல்பட்ட கேரளாவைச் சேர்ந்த சயன், கோவையில் இருந்து கேரளா செல்லும் வழியில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் சயனின் மனைவி வினுப்பிரியா மற்றும் மகள் நீத்து ஆகியோர் உயிரிழந்தனர்.

மேத்யூ, மனோஜ், சயன் மீது வழக்குப் பதிவு!

மேத்யூ, மனோஜ், சயன் மீது வழக்குப் பதிவு!
கொலை செய்யப்பட்டகொடநாடு ஊழியர்கள் 
மின்னம்பலம்:  கொடநாடு விவகாரம் குறித்து ஆவணப் படம் வெளியிட்ட மேத்யூ, அதில் பேட்டியளித்த சயன், மனோஜ் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கொடநாடு கொள்ளை, அதுசம்பந்தமாக அடுத்தடுத்து நடந்த கொலைகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குற்றம்சாட்டி ஆவணப்படம் ஒன்றை தெகல்ஹா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டெல்லியில் நேற்று வெளியிட்டார். அதில் கொள்ளையில் சம்பந்தப்பட்ட சயன், மனோஜ் ஆகியோர் பேட்டியளித்திருந்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.\

முதல்வர் மீது வழக்குப் பதிவு: திமுக வலியுறுத்தல்.. “முதல்வர்தான் முதல் குற்றவாளி”.. ஆ.ராசா

மின்னம்பலம் :கொடநாடு விவகாரத்தில் பல்வேறு கேள்விகளை
எழுப்பியுள்ள ஆ.ராசா, “முதல்வர்தான் முதல் குற்றவாளி” என்றும் தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொள்ளை, அதுசம்பந்தமாக அடுத்தடுத்து நடந்த கொலைகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குற்றம்சாட்டி ஆவணப்படம் ஒன்றை தெகல்ஹா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டெல்லியில் நேற்று வெளியிட்டார். இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி இன்று (ஜனவரி 12) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், கொடநாடு அடங்கும் நீலகிரி தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான ஆ.ராசா.
“எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில்தான் தாங்கள் ஆவணங்களை கொள்ளையடிக்கச் சென்றோம் என்று சயன் கூறுகிறார். இவையெல்லாம் ஏன் நடக்க வேண்டும். ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் அங்குள்ள கொடநாட்டிலுள்ள எல்லா அறைகளுக்கும் சென்றுவரக் கூடியவர், அவர் இரவு நேரத்தில் 4 வாட்சையும் ஒரு பேப்பர் வெயிட்டையும் எடுப்பதற்காக போக வேண்டிய அவசியம் என்ன? என்ற சந்தேகத்தினை ஆ.ராசா முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் மாயாவதி, அகிலேஷ் ள் கூட்டணி- தலா 38 தொகுதிகளில் போட்டி

பாராளுமன்றத் தேர்தலில் மாயாவதி, அகிலேஷ் கட்சிகள் கூட்டணி- தலா 38 தொகுதிகளில் போட்டிமாலைமலர் : பாராளுமன்றத் தேர்தலில் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவின் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இப்போது பாஜகவை வீழ்த்துவதற்காக பாராளுமன்றத் தேர்தலில் கைகோர்த்துள்ளன.
இது தொடர்பான சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்தனர். இந்நிலையில் மாயாவதியும் அகிலேஷ் யாதவும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்
மாலைமலர் : பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்
சாதியினருக்கும் பொதுப்பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்தார். புதுடெல்லி: பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் (இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-வது திருத்தத்தின் மூலம்) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா நிறைவேறியது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாலை கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் இன்று முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. < இதைதொடர்ந்து, அவரது ஓப்புதலுடன் இதற்கான இந்திய அரசின் அரசிதழ் அறிவிக்கையும் (Gazette Notification) வெளியானது. #president #presidentapproves #RamnathKovind #10pcreservation

கொலைப்பழிக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்: ஸ்டாலின்

மின்னம்பலம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொலைப் பழி  
விழுந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இதுகுறித்து நாட்டு மக்களுக்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017 ஏப்ரல் மாதம் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொல்லப்பட்டு, முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையில் சம்பந்தப்பட்ட டிரைவர் கனகராஜ் உள்ளிட்டோர் விபத்து, தற்கொலை என அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த நிலையில் கொடநாடு கொள்ளை மற்றும் அதுசம்பந்தப்பட்ட மரணங்களின் மர்மம் தொடர்பான விவகாரத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குற்றம் சாட்டியுள்ளார் தெகல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல். கொடநாட்டில் நடந்த கொலைக்கான பின்னணி தகவல்களை சேகரித்துள்ளதாகவும், இதன் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ஆவணப் படம் ஒன்றையும் டெல்லியில் நேற்று அவர் வெளியிட்டுள்ளார்.

சபரிமலையில் 100 க்கும் அதிகமான பெண்கள் தரிசனம் செய்துவிட்டனர் .. அமைச்சர் மணி அதிரடி

சபரிமலை, பெண் பக்தர்கள், தரிசனம் தினமலர் :திருவனந்தபுரம்: ''சபரிமலையில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் தரிசனம் முடித்து விட்டனர். பெண்கள் சென்றால், அய்யப்பனின் பிரம்மச்சரியம் கலைந்து விடும் என்பது மூடநம்பிக்கை,'' என, கேரளா அமைச்சர், மணி கூறியுள்ளார்.
;கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில மின்துறை அமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகருமான, மணி சபரிமலை பற்றி பல முறை கடுமையான கருத்துகளை கூறியுள்ளார்.கொட்டாரக்கரையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சபரிமலை அய்யப்பன் கோவிலில், நுாற்றுக்கணக்கான பெண்கள் தரிசனம் செய்துவிட்டனர்.
இன்னும் தரிசனம் நடத்துவர். அவர்களுக்கு, போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். பெண்களின் வயதை அளவீடு செய்யும் கருவி ஒன்றும் சபரிமலையில் இல்லை;வேண்டுமானால், 50 ஆயிரம் பெண்களை, இருமுடி கட்டி சபரிமலைக்கு அழைத்துச் செல்ல, மார்க்சிஸ்ட் கட்சியால் முடியும். தடுக்க யாரும் வரமாட்டார்கள்; ஆனால், அது கட்சியின் வேலை அல்ல. கோவிலுக்கு போக வேண்டும் என நினைப்பவர்கள் போகட்டும்; அதுதான் எங்கள் நிலை.

பேட்ட – விஸ்வாசம் வசூல் விபரம் ... இரண்டுமே எதிர்பார்த்த அளவில் இல்லை ...

tamil.indianexpress.com : ரஜினி படங்களைத் தவிர்த்து தமிழக அளவில் பெரிய
கலெக்‌ஷனை நோக்கி விஸ்வாசம் பயணிக்கிறது
பொங்கல் ரிலீஸ் படங்களான பேட்ட, விஸ்வாசம் இடையிலான பாக்ஸ் ஆபீஸ் போட்டியில் வென்றது யார்? என்பது குறித்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி பேட்ட, விஸ்வாசம் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜீத் படங்கள் வெளியானதால் இரு தரப்பு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளானார்கள்.
முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, விஸ்வாசம் அதிக படங்களில் திரையிடப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இந்தத் தரப்பினர் வெளியிடும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் தமிழ்நாட்டில் முதல் நாளில் விஸ்வாசம் 26 கோடி ரூபாயையும், பேட்ட 22 கோடி ரூபாயையும் வசூலித்திருப்பதாக கூறுகிறார்கள்.
ஆக, பாக்ஸ் ஆபீஸ் போட்டியில் தலைவரை தல ஜெயித்து விட்டதாக இவர்கள் மார் தட்டுகிறார்கள். ஆனால் இந்தத் தரப்பே வெளிநாடுகளிலும், அண்டை மாநிலங்களிலும் விஸ்வாசத்தை விட பேட்ட அதிக வசூல் செய்திருப்பதாக ஒப்புக் கொள்கிறார்கள்.

மாதவிடாய் காலத்தில் 2 குழந்தைகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட தாய்! - 3 பேரும் உயிரிழந்த சோகம்

மாதவிடாய்விகடன் : மாதவிடாய் காரணமாக ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களைத் தனிமைப்படுத்தும் நிகழ்வுகள் இன்றளவும் தொடர்ந்து கொண்டேதானிருக்கின்றன. இது தொடர்பாக விழிப்பு உணர்வுகள் ஏற்படுத்தியும், தனிமைப்படுத்தும் நடைமுறை நீங்கியபாடில்லை. குறிப்பாக கிராமங்களில் புற்றீசல்கள் போல பெருகிக்கொண்டேயிருக்கிறது. இதனால், உடல்சார்ந்த பிரச்னைகளுடன், மனதளவிலும் பெருமளவில் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். தீண்டாமையின் மற்றொரு வடிவமாகத்தான், மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தும்  நிகழ்வு உருவெடுத்து நிற்கிறது. பரம்பரை பரம்பரையாக தொடர்வதற்கு வீட்டிலிருக்கும் மூதாதையர்கள் முக்கிய காரணம். வழிவழியாக கடைப்பிடிக்கும் இந்த நடைமுறையால்தான் நேபாளத்தில் மூன்று உயிர்கள் பறிபோயிருக்கின்றன. பொதுவாக நேபாளத்தில் பெண் மாதவிடாய் அடையும் காலங்களில்,  சுத்தமற்றவர் என்று கூறி அவர்களை தனிமைப்படுத்தியும், வீட்டை விட்டு ஒதுக்கி வேறொரு இடத்தில் தங்க வைக்கும் வழக்கமும் இருந்துவருகிறது. இந்த வழக்கம் `சஹௌபாடி' என்று அழைக்கப்படுகிறது.

`நாங்க ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம் கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலின்

ஸ்டாலின் கிராம சபைக் கூட்டல் இள்ளலூர்
கிராம சபைக் கூட்டம் திமுக.vikatan.com/author/456-jayavel-அபினேஷ் தா : சட்டமன்றத் தேர்தலுக்கு ‘நமக்கு நாமே’ திட்டத்தைச் செயல்படுத்தியது போல வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தச் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். கடந்த 9-ம் தேதி திருவாரூரில் தனது பயணத்தைத் தொடங்கியவர் ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார்.
திருப்போரூர் அடுத்துள்ள இள்ளலூர் கிராமத்தில் ஸ்டாலின் கலந்து கொள்ளும் கிராம சபைக் கூட்டத்தை தி.மு.க-வினர் ஏற்பாடு செய்திருந்தார்கள். முன்வரிசையில் பெண்களை உட்கார வைத்திருந்தார்கள். இன்று மாலையில் தொடங்கிய கிராம சபைக் கூட்டத்துக்கு வந்த ஸ்டாலின், ``தற்போதுள்ள சூழலில் எம்.பி தேர்தல் நடைபெற்றால் மட்டும் போதாது. தமிழகத்தில் ஆட்சியை மாற்ற, சட்டமன்றத் தேர்தலும் விரைவில் வர வேண்டும். விரைவில் அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள் தமிழகத்தைக் குட்டிச் சுவராக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

வெறிச்சோடி கிடக்கும் ‘பேட்ட’ திரையரங்கங்கள்!

petta movie no crowd in rasipuram theaters
tamil .samayam .com : அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்துடன் ரஜினியின் ‘பேட்ட’ படமும் நேற்று வெளியானது. இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் சம அளவில் உள்ளனர். இந்தப் படம் வரும் பொங்கல் பண்டிகையின் விருந்தாக வெளியாகியுள்ளது. இந்த பொங்கல் போட்டியில் யார் வசூலை குவிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான விடை இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

பேரினவாதத்தைத் தூண்டாதீர்; மஹிந்தவுக்கு சம்பந்தன்


Ariyakumar Jaseeharan : புதிய அரசமைப்பு மிகவும்
அவசியம்! - பேரினவாதத்தைத் தூண்டாதீர்; மஹிந்தவுக்கு சம்பந்தன் .
"புதிய அரசமைப்பு நாட்டுக்கு ஆபத்தானது அல்ல. தற்போதைய சூழ்நிலையில் இது மிகவும் அவசியம். இந்த விவகாரத்தை தவறான வகையில் தூக்கிப் பிடித்து சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஈடுபடுவதை உடன் கைவிட வேண்டும்."
- இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
அரசமைப்புப் பேரவை பிரதி சபாநாயகர் ஆ னந்த குமாரசிறி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடியது.

வெள்ளி, 11 ஜனவரி, 2019

டி டி வி தினகரனின் ஊழல் வழக்குகள்.. விரிவான பட்டியல்....

B.Shankar. :  தினகரனின் மீதான
ஊழல் வழக்குகளின் பட்டியல்..
1991-95 ஒரு கோடியே லட்சம் டாலர் ($10,493,313) மற்றும் நாற்பத்தி நான்கு லட்சம் பவுண்ட் (€44,37,242.90) அளவிலான அந்நியச் செலவாணி முறைகேடு (E.O.C.C 27/1996) வழக்கு,
● 1994-95ல் நான்கு லட்சம் டாலர் ($477,760) மதிப்பிலான அந்நியச் செலவாணி முறைகேடு (E.O.C.C 81/2001) வழக்கு
● அதே காலகட்டத்தில் $90,000 டாலர் மதிப்பிலான அந்நியச் செலவாணி (E.O.C.C 82/2001) வழக்கு
● பத்து லட்சம் டாலர் ($1,000,000) மதிப்பிலான அந்நியச் செலவாணி (E.O.C.C 83/2001) வழக்கு
● மேலும் 36 லட்சம் டாலர் ($3,636,000) மற்றும் ஒரு லட்சம் பவுண்ட் (€1,00,000) மதிப்பிலான மற்றுமொரு வழக்கு
● இவையெல்லாம் போக, லண்டன் ஹோட்டல் வழக்கு மூலம் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஐந்தாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்
இதில் மேற்குறிப்பிட்ட முதல் வழக்கை எடுத்துக்கொண்டால், அமெரிக்கா அருகிலுள்ள பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் என்ற கண்காணாத தேசத்தில் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (Dipper Investments) என்ற பெயரில் 90-களில் ஒரு நிறுவனம் நடத்திவந்த தினகரன், அதற்கு இங்கிலாந்தில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் (Barclays Bank) இருந்து, ஒரு கோடியே நான்கு லட்சம் டாலர் மதிப்பிலான பண பரிவர்த்தனை செய்கிறார்.

பிரமிக்க வைக்கும் புத்தக கண்காட்சி .. நம்பமுடியாத அளவு பிரமாண்டம் .. கண்டிப்பாக காணவேண்டிய கருவூலம்


சாவித்திரி கண்ணன் : அடேங்கப்பா...! சென்னை புத்தக கண்காட்சியை பிரமாண்டம் என்பதை விட பூதாகரமாக இருந்தது என்று சொல்வதே பொருந்தும்!
பாதி அரங்கத்தை பார்த்து தேடி நாம் விரும்பிய புத்தகங்களை கண்டடைவதற்குள் கால் கடுத்து,சோர்வு மேலோங்கி இன்னொரு நாள் வரலாமே..என தோன்றிவிடுகிறது...!
எனக்கு நினைவு தெரிந்து 1975 அல்லது1976 ஆக இருக்கலாம்.. ராஜாஜி ஹாலில் அப்போது புத்தக கண்காட்சி நடந்தது.அன்று பாபாசி தோற்றம் பெறவில்லை.என் தந்தை மீனாட்சி புத்தக நிலையத்தில் பணியாற்றினார்.அதனால் சனி,ஞாயிறு கிழமைகளில் என் அம்மாவையும் ஸ்டாலில் தனக்கு துணைகழைத்துச் சென்றார். குட்டிப் பையனான நானும் கூடமாட ஒத்தாசைக்கு இருக்கட்டுமே என அழைத்துச் செல்லப்பட்டேன்.இதனால் ஒவ்வொரு ஸ்டாலாக சென்று குழந்தைகளுக்கான புத்தகங்களை கையில் எடுத்துப் பார்த்து புரட்டி சந்தோஷமடைந்தேன்.பிடிவாதம் பிடித்து ஒரிரு புத்தகங்களை வாங்கினேன்.அப்போது கிடைத்த பேரானந்தத்தை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது...!

சிதம்பரம் கோயிலில் கோடிகளை சுருட்டும் தீட்சிதர்கள்! .. மக்களிடம் இருந்து பறிபோன தில்லை கோயில்

தமிழ் மறவன் : இந்தியத் துணைக்கண்டத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்க
வெறிக்கு தில்லை கோயிலே ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.
இதோ, தில்லைக் கோயிலின் உள்ளே அறநிலையத்துறை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் தயாராகி விட்டது. அடையாளமாக பக்தர்களிடமிருந்து காணிக்கைகளை வாங்கத் தொடங்கினார் அறநிலையத் துறையின் நிர்வாக அதிகாரி. சிறிது டின் மொத்த காணிக்கை வரவு ரூ. 37,199. செலவு 37,000. கையிருப்பு 199 ரூபாய்!
நேரத்தில் சேர்ந்த தொகை சில ஆயிரங்கள். 2007 ம் ஆண்டு மூழுவதும் தில்லை நடராசர் கோயிலுக்கு பக்தர்கள் மூலம் வந்த காணிக்கை என்று தீட்சிதர்கள் கொடுத்திருக்கும் கணக்கு என்ன தெரியுமா? 2007 ம் ஆண்
அச்சமயம் அறநிலையத்துறையின் போர்டுகளை அடித்து உடைத்து உண்டியல்களை வைக்க விடாமல் தீட்சிதப் பார்ப்பனர்கள் அடித்த கொட்டம் கொஞ்சமல்லவே!

திமுக தொடர்ந்த வழக்கு : தாமிரபரணி அணையிலிருந்து தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்கத் தடை! - உச்ச நீதிமன்றம் உத்தரவு

தாமிரபரணிஜோயல்கலிலுல்லா.ச - விகடன் : தூத்துக்குடி அனல்மின் நிலையம் தவிர தாமிரபரணி தண்ணீரை மற்ற  தொழிற்சாலைகள் எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.  தி.மு.க-வைச் சேர்ந்த எஸ்.ஜோயல் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள தூத்துக்குடி மாவட்டம் 46,107 ஏக்கர் விவசாய நிலங்கள் தாமிரபரணி ஆற்றின் மூலமாகப் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த விவசாய நிலங்களை நம்பி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். தாமிரபரணி ஆற்றின் குடிதண்ணீரை நம்பி பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் அப்போது இருந்த தி.மு.க அரசு, இந்த அணைக்கட்டில் இருந்து குடிநீருக்காக மட்டும் தண்ணீர் எடுப்பதற்குத் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்துக்கு, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரசவத்தின்போது குழந்தையின் காலை பிடித்து மிக அழுத்தமாக இழுத்ததால் தலை துண்டிப்பு

Baby split into two during delivery after nurse uses 'brute force' at Jaisalmer government hospital
maalaimalar :ராஜஸ்தான் மாநிலம் ராம்காரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது குழந்தையின் காலை பிடித்து மிக அழுத்தமாக இழுத்ததால் தலை துண்டான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Jaisalmer ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டம் ராம்காரை சேர்ந்தவர் திலோக்பதி. இவரது மனைவி தீக்ஷா கன்வர். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து ராம்காரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர். அந்த ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர் நிகில்சர்மா அப்போது வெளியே சென்றிருந்தார். பெண் நர்சுகளும் இல்லை.
எனவே ஆண் நர்சுகள் அமிர்த்லால், ஜுன்ஜ்கார்சிங் ஆகியோர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் இருந்து முதலில் குழந்தையின் தலைதான் வருவது வழக்கம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு ..தொடர் கொலைகளும் தொடர் விபத்துக்களும் தொடர்....

Sivasankaran Saravanan. : 2016 டிசம்பர் மாதம் ஜெயலலிதா அம்மையார் இறக்கிறார்.
2017 ஏப்ரல் மாதம் அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்டார்.
காவலாளியை கொலை செய்துவிட்டு உள்ளே புகுந்து திருடியுள்ளனர்.
யார் திருடினார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் சிசிடிவி காமிரா வேலை செய்யவில்லை.
கொடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்து அங்கிருந்த விலையுயர்ந்த கடிகாரங்களை திருடினார்கள் என எப்ஐஆர் போடப்பட்டது.
ஓரிரு மாதங்கள் கழித்து ஜெயலலிதா வின் கார் ஓட்டுநர் கனகராஜ் அவரது குடும்பத்தோடு கார் விபத்தில் மரணமடைகிறார்.
பிறகு சில நாட்கள் கழித்து கொடநாடு எஸ்டேட் சிசிடிவி ஆபரேட்டர் இறந்துவிடுகிறார்.
திருடியவர்களில் ஒருவர் என சந்தேகிக்கப்படும் நபர் சயன் என்பவர் அவரது குடும்பத்தோடு ஓரிரு மாதங்கள் கழித்து காரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் அவரைத்தவிர அவரது குடும்பம் செத்துபோனது.
அந்த உயிர்பிழைத்த நபர் சயன் மற்றும் திருட்டில் இன்னொரு கூட்டாளியான கேரளாவை சேர்ந்த வலையார் மனோஜ் இருவரது பேட்டியைத்தான் இன்று டெல்லியில் பத்திரிகையாளர் வெளியிட்டுள்ளார்.

கொடநாடு கொள்ளை, கொலைகள் பின்னணியில் விஐபி: தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் வீடியோ


அப்பல்லோவில் இருந்தபோதே ஸ்கெட்ச் tamil.oneindia.com - veerakumaran.: கொடநாடு எஸ்டேட் கொள்ளை, கொலை குறித்த திடுக்கிடும் தகவல் வெளியீடு- வீடியோ
கொள்ளை ஆவணப் படம் : 2018-ல் என்ன நடந்தது? டெல்லி: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்மக் கொலைகளின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த திடுக்கிடும் ஆவணத்தை, தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் இன்று வெளியிட்டுள்ளார்.
 ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கொடநாடு எஸ்டேட்டில், காவலாளிகளை கட்டிப்போட்டு, கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதில் காவலாளி பகதூர் பலியானார். இந்த கொள்ளையில் ஈடுபட்ட ஷயான் என்பவரின் மனைவி, குழந்தை, உட்பட 5 பேர் மர்மமாக உயிரிழந்தனர். இதன்பிறகு ஜெயலலிதாவின் கார் டிரைவர், கனகராஜும் விபத்தில் கொல்லப்பட்டார். 5 பேர் சாவு என்பது திட்டமிட்ட கொலை என்பதும், கனகராஜ் கொலையும் சந்தேகத்திற்கிடமானது என்றும், இந்த ஆவணப்படம் கூறுகிறது. அப்பல்லோவில் இருந்தபோதே ஸ்கெட்ச் அப்பல்லோவில் இருந்தபோதே ஸ்கெட்ச்
 இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஷயான் இந்த பேட்டியின்போது உடனிருந்தார். அவர் கூறியதாவது: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது, ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ், என்னை அணுகினார். கோடநாடு எஸ்டேட்டில், 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் இருப்பதாகவும், முக்கியமான ஆவணங்கள் இருப்பதாகவும், அவற்றை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்திலிருந்து இதற்காக ஆள் கூட்டி வரக்கூடாது எனவும், கேரளாவில் இருந்து கொள்ளையர்களை அழைத்து வருமாறும், கனகராஜ் என்னிடம் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றம் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்க அனுமதி வழங்கியது

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்க அனுமதி அளித்தது ஐகோர்ட்மாலைமலர் :சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு 1,000 ரூபாய் வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000த்துடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு தொகுப்பை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவையை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்க தடை விதித்தது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரொக்கப்பரிசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மாற்றி அமைக்க கோரி தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஐகோர்ட்டு விதித்த தடை உத்தரவினால், சர்க்கரை மட்டும் வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்களுக்கும், எந்த பொருளும் வாங்காத ரே‌சன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் பரிசு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சர்க்கரை மட்டும் வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்கள் மொத்தம் 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 உள்ளனர்.

காங்கிரஸை எதிர்க்கும் ஜோதிமணி.. 10% இட ஒதுக்கீடு

10% இட ஒதுக்கீடு: காங்கிரஸை எதிர்க்கும் ஜோதிமணிமின்னம்பலம் : 10 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதற்கு, தமிழக காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 8ஆம் தேதி மக்களவையிலும் 9ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் மசோதாவை ஆதரித்து வாக்களித்தன. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இட ஒதுக்கீட்டு மசோதாவை ஆதரிக்கும் காங்கிரஸின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் காங்கிரஸின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி.

கந்துவட்டி.. ஒரு லட்சத்துக்கு 10 லட்சம் கண்டுகொள்ளாத போலீசார்... சாவின் விளிம்பில் பெண்....!!

தினகரன்:  திருப்புவனம்: வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஒரு பெண் கதறி அழுதபடி கூறும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ‘‘கந்துவட்டிக்காரர்களின் கொடுமை, மிரட்டலுக்கு பயந்து நான்  தற்கொலை செய்துகொள்கிறேன். எனது சாவுக்குப்பின் கணவரையும், மகன்,  மகள்களை கந்துவட்டிக்காரர்களிடமிருந்து காப்பாற்றவேண்டும்’’ என அப்பெண் பேசுகிறார். இதுகுறித்த விசாரித்த போது, வீடியோவில் பேசிய பெண் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலைச் சேர்ந்த மாரீஸ்வரி (48) எனத் ெதரிய வந்தது.

இவரது கணவர் செந்தில்குமார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை ெசய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.  இதில் ஒரு மகளுக்கு திருமணம் முடிந்து திருப்புவனத்தில் வசிக்கிறார். மற்ெறாரு மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். கந்துவட்டிக்காரர்களின்  மிரட்டலுக்கு பயந்து ஜன. 6ம் தேதி மாரீஸ்வரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் சென்றுள்ளனர். 5 நாளாக தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கந்துவட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தாயை கட்டிலோடு எரித்த மகள்; தாம்பரத்தில் பரபரப்பு!! தவறான உறவை தட்டிகேட்டதால்

 Daughter who burned her mother with a false relationship
 Daughter who burned her mother with a false relationship Daughter who burned her mother with a false relationshipnakkheeran.in kalaimohan : சென்னை தாம்பரம் அருகே பெற்ற தாயை காதலனுடன் சேர்ந்து மகளே தீவைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் சானிடோரியத்தை சேர்ந்த பூபதி என்ற 60 வயது பெண்மணி கடந்த ஏழாம் தேதி பகலில் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது தானாக தீப்பற்றி எரிந்ததாக அவரது இளைய மகள் நந்தினி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் பூபதி உடலில் தானாக தீப்பற்ற என்ன காரணம் என்ற சந்தேகம் அடைந்த போலீசார் நந்தினி மீதும் குற்றச்சாட்டுகள் இருந்ததால் அவரையும் போலீசார் விசாரித்தனர்.

2 கோடி கழிப்பறை திட்டத்துக்கு 10 கோடி டன் பிளாஸ்டிக் தேவைப்படுகிறது: ‘பிளாஸ்டிக் மனிதர்’ பேராசிரியர் ஆர்.வாசுதேவன்

பிளாஸ்டோன் கழிப்பறையுடன் ஆர்.வாசுதேவன்.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி tamil.thehindu.com இந்தியாவில் 46 லட்சம் கிமீ நீளத்துக்கு உள்ள சாலைகளை பிளாஸ்டிக் சாலைகளாக மாற்ற லாம், மத்திய அரசு திட்டத்தில் 2 கோடி கழிப்பறைகள் கட்ட பிளாஸ் டோன் கற்களை பயன்படுத்தலாம் என்று பிளாஸ்டிக் மனிதர் என்ற ழைக்கப்படும் பேராசிரியர் ஆர்.வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஜன.1-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத் தப்படும் 14 வகையான பிளாஸ் டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து பல ஆயிரம் கிலோ பிளாஸ்டிக்குகள் தினசரி பறிமுதல் செய்யப்படுகிறது. இவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

அம்பேட்கரின் கோட்பாடுகளை அடகு வைக்கும் பகுஜன் சமாஜ்.. ?

Kathiravan Mumbai : பகுஜன் சமாஜ் கட்சியின் பிரச்சகர்கள் நமது அமைப்பு
SC/ST/OBC/Minority ஆகியோரை உள்ளடக்கிய மண்ணின் மைந்தர்களின் அமைப்பு தான் நமது பகுஜன் அமைப்பு என்று சொல்லுவதுண்டு. அதனை அவர்கள் 'நாம் மூல்நிவாசிகள்' (mulnivasi) என்றும் குறிப்பிடுகின்றார்கள்.
அதாவது பார்ப்பனர்கள் இந்தியாவின் பெரும்பான்மையான மக்களை சுரண்டுவதால் அதற்கு எதிரான பூர்வகுடிகளின் அணிதிரட்டல் தான் நமது பகுஜன் சமாஜ் கட்சி என்று அவர்கள் அதற்கு விளக்கம் தருவதுண்டு.
ஆனால் காலம் மாறிவிட்டது. கட்சியில் பார்ப்பனர்கள் இப்போது நிரம்ப உள்ளனர். கட்சியின் முக்கிய பொறுப்புகளில் அவர்களின் ஊடுறுவல் அனுமதிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் கணிசமானோர் பார்ப்பனர்களாக இப்போதெல்லாம் உள்ளனர். இதெல்லாம் கூட பரவாயில்லை. ஓட்டுகள் பெற இந்த தந்திரம் தேவைதான் என்று கூட கொள்ளலாம்.

இணையத்தில் பேட்ட, விஸ்வாசம் வெளியானது - ஒருவர் உயிரிழப்பு கட்டவுட் விழுந்தது .. Petta - Viswasam


மாலைமலர : இணையதளத்தில் ரஜினியின் பேட்ட திரைப்படமும், அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ரஜினியின் பேட்ட, அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படங்கள் இன்று வெளியானது. இவர்களது ரசிகர்கள் தியேட்டரில் திருவிழா போல் கொண்டாடியுள்ளனர். இரண்டு படங்களுக்கும் சிறப்பான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இவ்விரு படங்களும் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக பேட்ட, விஸ்வாசம் படங்களை இணையத்தில் வெளியிட தடை விதித்த நிலையில், தற்போது திருட்டு தனமாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

புலிகளால் கொல்லப்பட்ட ஈழத்து பெண் ஆளுமைகள் .. no more tears sister


பெண் மேயர் .. பெண் மருத்துவ பேராசிரியர் . பெண் வழக்கறிஞர் . பெண் ஒலிபரப்பாளர் . பெண் கவிஞர். பெண் மனித உரிமை செயல்பாட்டாளர் ...என்று ஏராளம் ...
தீவிரவாதி பிரபாகரனால் கொன்று வீசப்பட்ட ஈழத்து பெண் ஆளுமைகள்!!!
இன்றைய தினத்தில் பிரபாகரனால் கொல்லப்பட்டு ஈழம் இழந்துபோன பெண் ஆளுமைகள் பற்றிய சில நினைவுகள் வந்து செல்கின்றன.அவர்களில் ராஜனி திரணகம,  செல்வி, சரோஜினி யோகேஸ்வரன், மகேஸ்வரி வேலாயுதம் ரேலங்கி செல்வராஜா..... ...... என்று நீண்டதொரு பட்டியலுக்கு நாம் சொந்தகாரர்களாயுள்ளோம்.
ராஜினி திரணகம
இலங்கையில் எழுத்துக்காக விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட முதல் பெண்.யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் உடல்கூற்றியல் விரிவுரையாளராக கடமை´யாற்றியவர். சமூகம் சார் சிந்தனையை மாணவர்களிடையே உருவாக்க வேண்டுமென்பதில் தீராது அக்கறையுடன் செயல்பட்டவர். அவர் பற்றி அவரது மாணவனொருவர் பின்வருமாறு எழுதுகிறார்.
"அவர் வெறும் உடற்கூற்றியல் விரிவுரையாளராக மட்டும் இருக்கவில்லை. அவரின் வகுப்புகள் எப்போதும் மிக உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். தனது அன்றாட விரிவுரைகளுக்கு அப்பால் எமது சமூகப் பிரைச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் திசையிலும் மாணவர்களை மிகத் திறமையாக அவர் எடுத்து செல்வார். அப்போது அவரின் பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாம் கண்டோம். எமக்கு அவற்றை புரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்கள் நாவல்கள் அவர் படித்து ரசித்த கவிதைகள் பலரின் உலக அனுபவங்கள் என சகலவற்றையும் எந்தவித தடங்கலும் இன்றி மள மளவென எம்முன் எடுத்துச் சொல்வார்".

8ம் வகுப்பு வரை கட்டாயமாகிறதா இந்தி வழிக் கல்வி? ..ஆழம் பார்க்கும் பாஜக ..


tamil.indianexpress.com : Hindi must be made mandatory : மும்மொழி பாடத்திற்கு
முக்கியத்துவம்  கொடுக்கும் வகையில் ஒரு கல்வி பாலிசியை உருவாக்கியுள்ளது. அதில் எட்டாம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய அளவில் அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களுக்கு ஒரே பாடத்திட்டம், தேவநாகிரி மொழிக்கு வடிவமைப்பு தருதல் தொடர்பான கொள்கைகள் அடங்கிய புதிய திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொடுத்துள்ளது 9 பேர் அடங்கிய கஸ்தூரி ரங்கன் கமிட்டி.
நியூ எஜூகேசன் பாலிசி (New Education Policy (NEP)) என்று சொல்லப்பட்டிருக்கும் இந்த திட்டம் இந்தியாவை மையப்படுத்தி, அறிவியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திட்டம் என்று கூறப்பட்டுள்ளது.
Hindi must be made mandatory – மறுப்பு தெரிவிக்கும் மத்திய அமைச்சர் இந்த 9 பேர் அடங்கிய குழுவானது, தங்களின் அறிக்கையினை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ம் தேதி மனிதவளத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது.
இது குறித்து பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிடும் போது இது தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உள்ளதாக கூறியிருந்தார் என இன்று காலையில் இருந்து செய்திகள் ஊடங்களில் வெளியாகி வந்தன.

யானையிடம் சிக்கி பிணமான ஐயப்ப பக்தர்..இறப்பதற்கு முன் 2 குழந்தைகளை புதரில் வீசி காப்பாற்றினார்!

நள்ளிரவு நேரம் காட்டுப்பகுதி tamil.oneindia.com- hemavandhana.: சேலம்: நள்ளிரவு... நடுக்காடு.. உயிர் போகும் நேரத்திலும் குழந்தைகளை தூக்கி புதரில் வீசி யானையிடமிருந்து காப்பாற்றிய ஐயப்ப பக்தரின் செயல் அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சபரிமலைக்கு இது மாலை போடும் சீசன் என்பதால் பலரும் விரதமிருந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். அதுபோல கடந்த 7ம் தேதி சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த 40 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர், சபரிமலைக்கு 2 வேனில் கிளம்பினார்கள்.
இதில் 30பேர், பம்பை சென்று அங்கிருந்து சபரிமலை சென்றனர். மீதியுள்ள 10 பேர் எரிமேலி காட்டுப்பகுதி வழியாக, சபரிமலைக்கு நடந்து செல்ல முடிவெடுத்தனர்.

வியாழன், 10 ஜனவரி, 2019

நான் இந்தியன் எனக்கும் இந்தி பேச தெரியாது" தமிழக மாணவருக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி. டுவிட்

I am an Indian and I do NOT speak Hindi #StopHindiImpositionhttps://t.co/M35kqOt2tz — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 10, 2019
தினத்தந்தி  : சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஆபிரஹாம் சாமுவேலுக்கு இந்தி மொழி தெரியவில்லை என்ற காரணத்தினால் மும்பை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரியால் அவமதிக்கப்பட்டார். பின்னர் ஆபிரஹாம் சாமுவேல் அந்த இடத்திலேயே 'தாம் அவமானப்படுத்தப்பட்டதாக டுவிட் செய்து பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை டேக் செய்திருந்தார்.<>இச்சம்பவம் தொடர்பாக மும்பை சிறப்பு பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே ஆப்ரகாம் சாமுவேல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது, சம்பந்தப்பட்ட அதிகாரி தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சி பி ஐ .. அலோக் வர்மா நீக்கப்பட்டு பின்பு சேர்க்கப்பட்டு தற்போது ஒரே அடியாக நீக்கம் ... பாஜகவின் ரபேல் பயம்?

தினத்தந்தி :சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்க நியமனக்குழு முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டனர். இந்த நிலையில் அலோக் வர்மாவை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கட்டாய விடுப்பில் அனுப்பியதுடன் அவருடைய அதிகாரங்களையும் பறித்தது.
இதேபோல் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அலோக் வர்மா சார்பில் மூத்த வக்கீல் பாலி எஸ்.நாரிமன் வழக்கு தொடர்ந்தார். மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் அவர் கூறி இருந்தார். 

அனிதாவைவிடவா ஏழை மாணவிகள் அக்ரஹாரத்திலும் உள்ளார்கள்? மனசாட்சி இல்லாத மனுவின் வாரிசுகளே!

LR Jagadheesan :அனிதாவைவிடவா ஏழை மாணவிகள் அக்ரஹாரத்திலும் அடுக்குமாடிகளிலும் வாழ்கிறார்கள்?
சொல்லாமல் கொல்லும் வறுமைக்கிடையில் மொத்தமுள்ள 1200 மதிப்பெண்ணில் 1176 மதிப்பெண்களை வாங்கிக்காட்டிய அனிதாவை விடவா இன்னொரு அறிவுக்கொழுந்தை இதுகள் உருவாக்கிவிடப்போகிறார்கள்?
;தன் சொந்த அறிவாலும் உழைப்பாலும் படிப்பாலும் மட்டுமே அதிகபட்ச மதிப்பெண் பெற்றுக்காட்டிய அந்த ஏழைச்சிறுமியின் மருத்துவர் கனவை கொன்று அதன் மூலம் அவரையே காவு வாங்கிய காவிக்கும்பல் ஏழைகளின் எதிர்காலத்துக்காகவே பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்காக 10% இடஒதுக்கீட்டை கொண்டுவருவதாக சொல்வதற்கு எந்த அளவு நெஞ்சுரம் இருக்கவேண்டும்?
ஆண்டுக்கு எட்டுலட்சம் சம்பாதிக்கும் பெற்றோரின் பிள்ளைகளுக்காக கவலைப்படும் கூவைகளில் யாருக்கேனும் அனிதா அப்பாவின் ஆண்டு வருவாய் என்னவென்று தெரியு"
உங்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட கூச்சமே இருக்காதா? மனசாட்சி உறுத்தாதா மனுவின் வாரிசுகளே?

ராமநாதபுரம் குடிநீர் தொட்டியில் சடலம்: மறைக்கும் அமைச்சர்!

minnambalam : ராமநாதபுரம் குடிநீர் தொட்டியில் சடலம்: மறைக்கும் அமைச்சர்!ராமநாதபுரம் நகராட்சி குடிநீர்த் தொட்டியில் மூன்று நாட்களாகக் கிடந்த ஆண் சடலத்தால் நகர மக்களிடையே இன்னும் அச்சம் தீரவில்லை. சடலம் மூழ்கிக் கிடந்த தண்ணீரையே மூன்று நாட்களாகக் குடித்து வந்ததால் பதற்றத்திலும், பயத்திலும் இருக்கிறார்கள் மக்கள்.
இதுபற்றி நேற்று மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் குடிநீர்த் தொட்டியில் மனித உடல்: பீதியில் ராமநாதபுரம்! என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இன்று ஜனவரி 10ஆம் தேதி காலை அந்த உடல் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கை மற்றும் சில உடல் பகுதிகளில் பிளேடால் அறுத்துக்கொண்டு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என்று பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்களை மேற்கோள் காட்டி கூறுகிறார்கள் இறந்தவருடைய நண்பர்கள்.

பொங்கல் ரொக்க பரிசுக்கு விதித்த தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

மாலைமலர் :பொங்கல் பரிசான ஆயிரம் ரூபாயை வழங்க கட்டுப்பாடு விதித்ததற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இன்று முறையீடு செய்யப்பட்டது. vt பொங்கல் ரொக்க பரிசுக்கு விதித்த தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

"விஸ்வாசம்" பணம் தராத அப்பா.. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன்.. காட்பாடியில்

முதல் நாள் tamil.oneindia.com - hemavandhana : காட்பாடி: விஸ்வாசம் படம் பார்க்க காசு தராத அப்பாவை பெட்ரோல் ஊற்றி மகன் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று பேட்ட மற்றும் விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது.
இதனால் நடிகர் அஜித்குமார் தரப்பு ரசிகர்கள் அனைத்து திரையரங்குகள் முன்பும் பட்டாசுகளை வெடித்து, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தின் சிறப்பு காட்சிகளை காண நள்ளிரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன் கூடிவிட்டனர். இந்நிலையில் வேலூர் மாவட்ட கட்டப்பாடி அருகே கிழஞ்சூரில் ஒரு தியேட்டரில் விஸ்வாசம் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்க பாண்டியன் என்பவரின் மகன் ஆசைப்பட்டிருக்கிறார். இவர் தீவிர அஜித்குமார் ரசிகர். இவரது பெயரே அஜித்குமார்தான். முதல் நாள், முதல் ஷோ பார்க்கும் பல ரசிகர்களில் இவரும் ஒருவர்.

மெரினா புரட்சி திரைப்படம்: சென்ஸார் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

THE HINDU TAMIL : மெரினா புரட்சி படத்தை வெளியிட  அனுமதிப்பது
தொடர்பாக   மத்திய சினிமா தணிக்கை வாரியம் ஒரு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெரினா புரட்சி படம்   தயாரிக்கப்பட்டு 90 நாட்களாகியும் தணிக்கைக்கு முறையாக  உட்படுத்தபடாமல் உள்ளதாகவும், இரண்டு முறை நிராகரிக்கப்பட்டமைக்கு  இதுவரை எந்த காரணமும் சொல்லப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற பொங்கல் திருநாள் அன்று திரைப்படத்தினை தணிக்கை செய்து  வெளியிட  உத்தரவிடவேண்டும் என திரைப்படத்தின் இயக்குநர்  மற்றும் தயாரிப்பாளர் ராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.