ராஜரட்னத்தின் வழக்கை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
வர்த்தக மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையரான, அமெரிக்க தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்தின் வழக்கினை விசாரணை செய்வதற்கு அமெரிக்க நியூஜேர்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற கெலொன் நிறுவனத்தின் உரிமையாளரும், உலக செல்வந்த வரிசையில் 559ஆம் இடத்தை வகிப்பவருமான ராஜ் ராஜரட்னம் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தை மற்றும் நிதிச் சந்தை கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடியான முறையில் இலாபமீட்டியுள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற இவ்வாறான சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நிதி உதவி வழங்குவதாக ராஜரட்னம் ஒப்புக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக