சனி, 9 ஆகஸ்ட், 2014

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்? தேர்தல் கமிஷனர் சம்பத் வியாக்கியானம் !!

அது சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கப்பட்ட முடிவு. உரிய அனுமதி பெற்றுத் தான் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டது.
 சம்பத் விளக்கம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம்   மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக நயினார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தேர்தல் ஆணையர் சம்பத் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும்  அவர் அளித்த பதில்களும்:  அது என்ன வழவழ சூழ்நிலை ? அது என்ன உரிய அனுமதி ?  சம்பத்தும்  பிரவீன் குமாரும்   உலக மகா வல்லவர்கள் . நோபல் ஆஸ்கார் போன்ற  பரிசுகளுக்கு யாராவது  ரெக்கமன்ட் பண்ணுங்க !

ராமதாஸ் : இலவசங்கள் வேண்டாம் பதிலாக பள்ளிகளில் கழிப்பறை கட்டுங்கள் ! அம்மா கழிப்பறைகள் ?

மக்களுக்கு இலவசங்கள் அளிக்க வேண்டாம், பதிலாக பள்ளிகளில் அடிப்படை வசதியான கழிப்பறைகளை கட்டிக் கொடுங்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் கழிப்பறை வசதி எந்த அளவுக்கு செய்து தரப்பட்டுள்ளது என்பது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் 7837 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் முழுமையாக  இல்லை என்று மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது தான் அதிர்ச்சிக்கு காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 37,002 அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1442 பள்ளிகளில் பெண்கள் கழிப்பறைகள் இல்லை. 4278 பள்ளிகளில் ஆண்களுக்கான கழிப்பறைகள் இல்லை. 958 பள்ளிகளில் பெண்களுக்கான கழிப்பறைகளும், 1159 பள்ளிகளில் ஆண்களுக்கான கழிப்பறைகளும் இருக்கும் போதிலும் அவை பயன்படுத்தும் நிலையில் இல்லை என்பதால் அவற்றால் எந்த பயனும் இல்லை.

எல்லோருக்கும் தெரிந்த சென்னை பெரிய மனிதனின் காமவெறியாட்டம் ! வேலைக்காரியிடம் ......!

நான் விபச்சாரியா இல்லேங்கிறதுதான் அவன் கவலை ! 
தேவுடியாள இருந்தேன்னா உன் வீட்டு கக்கூசு வரைக்கும் கழுவிட்டு இருந்துருக்க  மாட்டேய்யா. இருந்த எடத்துல சம்பாரிச்சுட்டு போயிருப்பேன்.”
 நான் திருச்சிக்கி பக்கத்துல ஒரு கிராமமுங்க. நிலமில்லா ஒரு கிராமத்து ஏழை குடும்பத்துல குடிகார அப்பனுக்கு மகளாப் பொறந்தவ. ஊரு நெலமைக்கி தவுந்தபடி சீருவருச சீதனம் குடுத்து கல்யாணம் பண்ண முடியாததால வெள்ளேந்தியான வயசு மூத்த ஆம்பளைக்கி வாக்கப்பட்டேன்.
ஏழ்மை நெலமையில இருந்த எங்க குடும்பத்துல அடுத்தடுத்து நடந்த துயர சம்பவங்களும் அது தந்த மன சங்கடமும் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் சொந்த பந்தங்க பாக்குற நேரமெல்லாம் ஆறுதலா பேசுறதா நெனச்சு நடந்த தொயரத்த நெதமும் கண்ணு முன்னால கொண்டு வருவாங்க.
அடுத்தவங்க பரிதாபமும் பச்சாதாபமும் எனக்கு ஆறுதலா இல்லேங்கிறது மட்டும் நெசம். அதுல மன சமாதானம் அடையுற மாறி வாழ்க்கை அமையலேன்னா யாரு என்ன செய்யறது சொல்லுங்க!< எங்கன இருந்தாலும் வயித்து பொழப்புக்கு நம்ம கைய ஊனிதான் கரணம் போடனும். கஷ்டத்துல இருந்து கை தூக்கிவிட நமக்கு நாதியுமில்ல. வறுமையும் தொயரமும் போட்டிப் போட்டு தொரத்தும் போது, பொழைக்க வழியில்லாத இந்த குண்டு சட்டி ஊருக்குள்ள குதுர ஓட்றதவிட பட்டணம் போகலான்னு புருசனும் பொஞ்சாதியுமா கைக்கொழந்தைய தூக்கிக்கிட்டு சென்னைக்கி வந்தோமுங்க.

பூலான் தேவி கொலை வழக்கில் தீர்ப்பு ! பலாத்காரம் செய்த 17 பேரை கொன்று பழி தீர்த்த நாயகி !


பிரபல கொள்ளைக்காரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பூலான்தேவி கொலை வழக்கில் ராணா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மற்ற 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
பூலான்தேவி கொலை உத்தரபிரதேச மாநிலத்தில் பிரபல கொள்ளைக்காரியாக விளங்கியவர் பூலான்தேவி. பின்னர் இவர் அரசிடம் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தார். பொது மன்னிப்பு வழங்கப்பட்ட அவர் பின்னர் அரசியல்வாதியாகி, மிர்சாபூர் தொகுதியின் சமாஜ்வாடி கட்சியின் எம்.பி.யானார்.
2001–ம் ஆண்டு ஜூலை 25–ந்தேதி பூலான்தேவி, டெல்லி அசோகா ரோட்டில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது ஒரு கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியான ஷேர்சிங் ராணாவும், அவரது கூட்டாளிகள் 11 பேரும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.  இந்த சின்னஞ்சிறுமியை  வயது வித்தியாசமே இல்லாமல் பாலியல்  பலாத்காரம் செய்த அந்த கொடியவர்களுக்கு பூலன்தேவி கொடுத்த தண்டனை  உண்மையில் இந்திய  வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதே ! பிறந்த தேதி 10 August 1963
பூலன்தேவியின் ஆத்மாவுக்கு அஞ்சலி

கலைஞர் : எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை ! முன்னாள் நீதிபதி அசோக்குமார் நியமனம் பற்றி கட்ஜு சொல்வது பொய் !

நீதிபதி நியமன விவகாரம்: கலைஞர் பேட்டி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் குமார் நியமன விவகாரத்தில் திமுக சார்பில் எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்று திமுக தலைவர் கலைஞர் மறுப்பு தெரிவித்துள்ளார்.சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கலைஞர்,ஆரியர் திராவிடர் விவகாரம் தொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்த கருத்துக்களை விவாத பொருளாக்க விரும்பவில்லை.நீதிபதி அசோக் குமார் நியமன விவகாரத்தில் திமுக சார்பில் எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. மார்க்கண்டேய கட்ஜூ தவறான தகவலை மீண்டும் தெரிவித்துள்ளார். இவ்வாறு கலைஞர் பேட்டி அளித்தா nakkheeran.in

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

தற்போது 3 நாள் படம் ஓடினால் ஓகே ! 2 வாரம் ஓடினால் அந்த படம் சூப்பர் ஹிட்

ஹரிஸ் கல்யாண்-ஆனந்தி நடிக்கும் படம் ‘பொறியாளன். டைரக்ஷன் தாணுகுமார். தயாரிப்பு வெற்றிமாறன், வெற்றிவேலவன், எம்.தேவராஜுலு. மணிமாறன் கதை. ஜோன்ஸ் இசை. இப்படம் தயாரித்தது குறித்து டைரக்டர் வெற்றிமாறன் கூறியது:ஒரு பொறியாளனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை எளிமையாகவும், யதார்த்தமாகவும் சொல்லும் இக்கதையை கேட்டவுடன் பிடித்திருந்தது. எப்படியாவது இதில் எனது பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக அதை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றேன். இதில் சினிமாவுக்காக எப்படி வேண்டுமானாலும் காட்சிகளை அமைத்துக்கொள்ளும் சூழல் இருந்தது. ஆனால் அதுபோல் எதுவும் செய்யாமல் யதார்த்தமாகவே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. எளிமையாக இருப்பது சுலபமான விஷயம் அல்ல. ஒரு படம் பெரிய படம் என்பது அதிக பட்ஜெட்டில் எடுப்பது அல்ல. அப்படத்தின் கரு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே பெரியபடம், சிறிய படம் என்று முடிவு செய்யப்படுகிறது. இப்போதெல்லாம் 3 நாள் படம் ஓடினால் கலெக்ஷன் வந்துவிடும் என்கிறார்கள். 2 வாரம் ஓடினால் அந்த படம் சூப்பர் ஹிட் என்கிறார்கள். இப்படம் வெற்றி படமாக அமையும்.இவ்வாறு வெற்றிமாறன் கூறினார் - See more at: .tamilmurasu.org

வைகோவிற்கு ஹாட் புரோப்பிளம் ? மருத்துவ மனையில் அனுமதி !

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 வைகோ சென்னையில் இருந்து கடலூருக்கு இன்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார்.  மதியம் 12 மணியளவில்  கிழக்கு கடற்கரை சாலை வழியாக  கோவளம் அருகே சென்றபோது வைகோவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் லேசான மயக்கமும் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்தனர். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவர்கள் பிரதீப் நாயர், ராஜசேகர் ஆகியோர் கூறுகையில், ‘‘வைகோவின் உடலை பரிசோதித்ததில் குறைந்த ரத்த அழுத்தம் அவருக்கு இருந்தது. மேலும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது. அவர் 2 நாட்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற வேண்டும். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது’’ என்றனர்.

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல்:

ஈராக்கில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ராணுவத்திற்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். அங்கு எர்பில் நகர் உட்பட பல்வேறு நகரங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்டுள்ள தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்துமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்..
இது குறித்து அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமெரி்க்கா கண்ணை மூடிக்கொண்டு இருக்காது எனவும், சிறுபான்மையினரை காப்பாற்ற தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். .இதனையடுத்து ஈராக்கி்ன் எர்பில் நகரில் அமெரிக்காவின் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளன.dinamani.com

மதம் மாற மறுக்கும் கிறித்துவர்களின் தலைகளை வெட்டிக் குவிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்!

மொசூல்: உலகமே காஸாவை காப்பாற்றுங்கள் என்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஈராக்கில் மதம் மாற மறுத்த கிறிஸ்துவர்களை ஆயிரக்கணக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் படுகொலை செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈராக்கில் யாஜிதி இன மக்கள் மிகவும் சிறுபான்மையினர். இவர்கள் கிறித்துவர்கள். ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான நகரங்களை சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் கைப்பற்றியது. மதம் மாற மறுக்கும் கிறித்துவர்களின் தலைகளை வெட்டிக் குவிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்! அத்துடன் சிரியா, ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பிரதேசங்களை ஒன்றிணைத்து இஸ்லாமிய தேசம் என்று தனிநாடாக பிரகடனம் செய்தது. தங்களது இயக்கத்தின் பெயரையும் இஸ்லாமிய தேசம் என்றே மாற்றியது.

1,442 பெண்கள் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை ! வீரமணி !

தமிழ்நாட்டில் அரசுப் பெண்கள் பள்ளிகளில்கூட போதுமான எண்ணிக்கையில் கழிப்பறை வசதியில்லை என்றும், தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி கழிப்பறை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,>தமிழ்நாட்டில் 15 சதவிகித - அரசுப் பள்ளிகளில் அதாவது 5,720 அரசுப் பள்ளியில் - கழிப்பறை வசதிகள் இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (மத்திய கல்வி அமைச்சகம்) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது!இதில் - அதாவது 5,720இல் 1442 பள்ளிகள் - பெண்களுக்கான பள்ளிகள் என்பது அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரியதாக இருக்கிறது! தமிழ்நாட்டில் மொத்தம் 37,002 அரசு பள்ளிகள் உள்ளன.பெண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியில்லையா?

திமுகவை கையகப்படுத்த ஸ்டாலின் கோஷ்டி மும்மரம் ! கனிமொழியை , ராசாவை நீக்கவேண்டுமாம் (துர்க்கா) ஸ்டாலின் !

சென்னை: திமுகவில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள் போல.. அடுத்த கூட இருக்கும் கட்சி பொதுக்குழுவில் ஸ்டாலினுக்காக உரத்து குரல் கொடுப்பதற்கான வியூகங்களை இப்போதே தொடங்கிவிட்டார்களாம்..
திமுகவில் இருந்து அழகிரி டிஸ்மிஸ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இனி எல்லாமே 'தளபதி' ஸ்டாலின்தான் என்ற நிலை உருவானது. லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னர் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
 அழகிரி பேச்சுவார்த்தை அப்போதும்கூட ஸ்டாலினின் தலைமைக்கு எதிராக கலகக் குரல் எதுவும் வந்துவிடக் கூடாது என்றே கவனம் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மு.க. அழகிரி திமுகவில் சேருவதற்கான முனைப்புகளைக் காட்டி வருகிறார்.
கலியாணசுந்தரம் விவகாரம் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் மு.க. அழகிரி வெற்றிகரமாக நடத்தி விட்டார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஸ்டாலின் ஆதரவாளரான பெ.வீ. கலியாணசுந்தரம் புதிய கலகக் குரலை எழுப்பினார்.
தமது அமைப்புச் செயலர் பதவியை ராஜினாமா செய்த கலியாணசுந்தரம், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும்; கனிமொழி, தயாநிதி, ஆ.ராசாவை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் கட்சி தலைமையிடம் வலியுறுத்தி இருந்தார்
ஆனால் இதை ஏற்க மறுத்த கருணாநிதி, உடனே கலியாணசுந்தரத்தை சஸ்பென்ட் செய்து அந்த இடத்துக்கு தமது ஆதரவாளரான ஆர்.எஸ். பாரதியை நியமித்துவிட்டார்.

நான்கு கிலோவில் தங்க சட்டை மும்பை அரசியல் பிரமுகரின் ஆசை !

பங்கஜ் பராக் அவரது வெற்றியின் அடையாளமாக தூய தங்கத்தால் ஆன சட்டை ஒன்றை செய்திருக்கிறார். இந்த நான்கு கிலோ எடை கொண்ட தங்க சட்டையை தயாரிக்க 1.30 கோடி செலவு ஆனது. திரு பராக், பள்ளிப் படிப்பை 8ம் வகுப்பில் நிறுத்திய பிறகு, ஆடை தொழில் மூலமாக செல்வத்தை உருவாக்கியவர். இவர், மும்பையில் இருந்து சுமார் 260 கி.மீ தொலைவில் உள்ள யெலொ(Yeloa)வில் நகராட்சி உறுப்பினராக உள்ளார்.
பங்கஜ் பராக் அவர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) 45வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த விஷேச ஆடையை அணிந்திருக்கிறார். இவரது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா சுற்றுலாத்துறை அமைச்சர் சகன் புஜ்பல் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, என்று பராக் கூறியுள்ளார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உரிமையை கேலிகுள்ளாக்கும் பார்பனீயம் !

அர்ச்சகர் மாணவர்கள்அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
பதிவு எண் : 189/09
50, அர்மேனியன் தெரு, பாரிமுனை, சென்னை
வா. அரங்கநாதன்
மாநில தலைவர்
பத்திரிகை செய்தி
கோரிக்கைகள்
1. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கை விரைந்து நடத்தி முடித்து மாணவர்களுக்கு அர்ச்சகர் பணி வழங்க வேண்டி
2. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் பயிற்சி பெற்று 8 ஆண்டுகள் ஓடிவிட்டதால் வயது முதிர்ந்து வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே இடைக்காலமாக மாதம் குறைந்தபட்சம் ரூ.5000 ஊதியமாக வழங்க வேண்டியும் தமிழக அரசை வேண்டுகிறோம்.

சமஸ்கிருத வாரம் : ஒரு சதியின் ஆரம்பம் அல்லது ஒரு அழிவின் ஆரம்பம் ? இந்து – இந்தி – இந்தியாவை நோக்கி…

மூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தியையே முதன்மையாகப் பயன்படுத்த வேண்டும்” என்றொரு அரசாணையை முதலில் வெளியிட்டு ஆழம் பார்த்தது மோடி அரசு. பரவலாக எதிர்ப்பு வரவே, “அந்த ஆணை இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும்தான் பொருந்தும்” என்று சமாளித்தது. பிறகு தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்திப் பயிற்சிக்கு செல்லாத ஊழியர்களுக்கு அலுவலக ரீதியில் மெமோ கொடுக்கப்படுவதாக செய்தி வெளியானது. இப்போது நாடெங்கும் மைய அரசின் பாடத் திட்டத்தைக் கொண்டுள்ள பள்ளிகளில் (சி.பி.எஸ்.சி.) ஆகஸ்டு 7 முதல் 13 வரை சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி, சி.பி.எஸ்.சி. இயக்குனர் வழியாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அழிந்தொழிந்ததற்கு உயிர் கொடுக்க முயலும் மோடி அரசு
அழிந்தொழிந்தத சமஸ்கிருதத்திற்கு உயிர் கொடுக்க முயலும் மோடி அரசு
பச்சைப் பொய்களாலும், பார்ப்பனப் புரட்டுகளாலும் நிரம்பியிருக்கும் அந்தச் சுற்றறிக்கை, சமஸ்கிருதத்தை எல்லா (உலக) மொழிகளுக்கும் தாய் என்று குறிப்பிடுவதுடன், அது இந்தியப் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்த மொழி என்றும், இந்தியாவின் ஆகப்பெரும்பான்மையான அறிவுச்செல்வங்கள் சமஸ்கிருதத்தில்தான் இருப்பதாகவும் கூறுகிறது. இந்தியப் பண்பாட்டுப் பாரம்பரியத்துக்கு மட்டுமின்றி, எல்லா இந்திய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்துடன் உள்ள உறவு குறித்து பிரபலப்படுத்த வேண்டுமென்றுமென்றும் இச்சுற்றறிக்கை கோருகிறது. ரொம்ப முக்கியம் பாருங்க . இனி பாருங்க  போக போக சொல்லுவாய்ங்க  சமஸ்க்ருதத்தில்தான் அமெரிக்கன் பிரெஞ்சுக்காரன் எல்லாம் கக்கூசுக்கு கூட போயிடுராய்ன் ,

தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ! மக்களவையில் முதல் நிகழ்வு

மக்களவையில் முதல் முறையாக தமிழில் கேட்கப்பட்ட கேள்விக்கும், மத்திய அமைச்சர் ஒருவர் தமிழிலேயே பதிலளித்துள்ளார்.
மக்களவையில் அதிமுக உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தமிழில் எழுப்பிய துணைக் கேள்விக்கு மத்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழில் பதிலளிக்க சபாநாயகர் அனுமதியை கோரினார். அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தமிழிலேயே பதிலளித்தார்.
அதிமுக எம்.பி. ராதாகிருஷ்ணன், சீன பட்டாசுகள் ஊடுருவலால் தமிழகத்தில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கூறினார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி, அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் வினவினார்.
இதற்கு தமிழில் பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், "புரட்சித் தலைவி அம்மா அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றது. இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். அதற்கு அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். இதைபற்றி முன்பே அழகிரி கோரிக்கை எழுப்பி இருந்தார் ஆனால் அது அப்போது  கவனிக்க படவில்லை  அப்போதைய சபானாயகர் மீரா குமார் அதை அனுமதிக்கவில்லை .

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் மரணம் ! கர்நாடகாவில் !

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா சூழிக்கெரே கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தா கட்டி. இவரது 6 வயது மகன் திம்மண்ணா 1–ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 3–ந் தேதி மதியம் 2 மணியளவில் தனது பெரியப்பா மகனுடன் கரும்பு தோட்டத்திற்கு சென்ற சிறுவன் திம்மண்ணா, அங்கிருந்த 300 அடி ஆழ ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தான்.
கிணற்றின் 160 அடி ஆழத்தில் திம்மண்ணா சிக்கி கிடந்தான். திம்மண்ணாவை உயிருடன் மீட்க ஆழ்குழாய் கிணற்றின் அருகே ஜே.சி.பி. வாகனங்கள் மூலம் குழி தோண்டும் பணி இரவு பகல் பராமல் நடைபெற்று வந்தது. மேலும் மண்டியாவை சேர்ந்த விவசாயி மஞ்சேகவுடா மற்றும் மதுரை சேர்ந்த மணிகண்டனின் ரோபாட் மூலம் திம்மண்ணாவை மீட்கும் முயற்சி நடந்தது.

கட்டை பஞ்சாயத்துக்கு பணிந்த விஜய் முருகதாஸ் கூட்டணி ! லைக்காவின் அடுத்த படம் சீமான் இயக்குகிறார் !

விஜய் - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள கத்தி படத்துக்கு தன் அமோக ஆதரவைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சீமான். மேலும் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமா உலகில் இது பெரிய ஆச்சர்யமான விஷயமாகப் பார்க்கப்பட வில்லை.  கத்தி படத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள சீமான்,  இதற்கிடையில், லைகா நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார். இந்தப் படத்தில் சிம்பு நடிக்கிறாராம். இது ஏற்கெனவே விஜய், ஜெயம் ரவி போன்றவர்கள் நடிப்பதாக இருந்த பகலவன் படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. லைகாவுக்காக படம் இயக்கும் வாய்ப்பை சீமானுக்குப் பெற்றுத் தந்தவர் ஏ ஆர் முருகதாஸ்தான் என்பது கூடுதல் தகவல்! இப்ப புரியறதா ஏன் சீமான் கட்சி ஆரம்பிச்சார்னு ? அது ஒரு கட்சியே இல்லீங்க அது ஒரு கட்டை பஞ்சாத்து !எல்லாம் வசூலுக்கு தாய்ங்க !
tamil.oneindia.in

ஸ்டாலின் அதிரடி ! தொண்டர்களை சந்தித்து தனது பலத்தை திரட்டுகிறார் ?

தி.மு.க.,வில், அழகிரி - ஸ்டாலின் இடையேயான பனிப்போர் முற்றி வருகிறது. கட்சியில் மீண்டும் சேர்வதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, சென்னையில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகிறார். அதை முறியடிக்கும் திட்டத்துடன், தமிழகம் முழுவதும் தொண்டர்களை திரட்ட, பொருளாளர் ஸ்டாலின், நேற்று, தன் சுற்றுப்பயணத்தை துவங்கி உள்ளார்.தி.மு.க.,விலிருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், கட்சியில் அழகிரிக்கு ஆதரவாக உள்ளவர்களை, தன் பக்கம் இழுப்பதில், ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
அதிருப்தி:சமீபத்தில், மதுரையில் நடந்த தி.மு.க., கண்டன பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த ஸ்டாலின், அழகிரியின் ஆதரவாளர், 'மிசா' பாண்டியனை அரவணைத்துக் கொண்டார்.இதனால், கடும் அதிருப்தி அடைந்த அழகிரி, மீண்டும் கட்சியில் சேரும் முயற்சியை தீவிரப்படுத்தியதுடன், ஸ்டாலினுக்கு பாடம் புகட்ட வேண்டும் என, கருதி, சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளார்.  திமுக பலமிழந்து   போனாலும்  பரவாயில்லை  தான் மட்டும்  பலமாக  இருக்க வேண்டும்  என்று ஸ்டாலின்  வளர்க்க பட்டு இருப்பது போல் தெரிகிறது . கழகம் இவ்வளவு பெரும் தோல்வியை  ஸ்டாலின் ஒருவரால் மட்டுமே பெற்ற குற்ற உணர்வு  கொஞ்சம் கூட இல்லாமல் மீண்டும் மீண்டும் தன்னை முன்னிலை  படுத்தியே தளர்பதியின் அரசியல்  பாதை  திமுகவின்  அழிவை நோக்கி செல்கிறது ?

கழக நிர்வாகத்தை மீண்டும் கையில் எடுக்கும் கலைஞர் ?

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு நெருக்கமாகச் செயல்பட்ட அமைப்பு செயலர் பெ.கல்யாணசுந்தரம் மீது, 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அக்கட்சியில், தி.மு.க., தலைவர் கருணாநிதி 'கை' மீண்டும் ஓங்கியுள்ளது.
இனி, கட்சியை, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக, கருணாநிதி, தனக்கு நெருக்கமாகச் செயல்படக் கூடிய ஆலந்துார் பாரதியை, அமைப்பு செயலர் பதவிக்கு நியமித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அறிவாலயத்தில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் துணை மேலாளர் ஜெயக்குமாருக்கும், அமைப்பு செயலர் கல்யாணசுந்தரத்திற்கும் இடையே, கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அமைப்பு செயலர் பதவியிலிருந்து தான் விலகுவதாக, கல்யாணசுந்தரம், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  கலைஞரே  கொஞ்சம் உசாரா இருங்க. போகிற போக்கை பார்த்தால் உங்களுக்கு ஔரங்கசீப் பின் நிலைமை வந்து விடும் போல அறிகுறிகள் தெரிகிறது.

ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளார்கள் ! மற்றுமொரு உலக சாதனை ?

நாடு முழுவதும் காணாமல் போகும் குழந்தைகள் பற்றிய புள்ளிவிவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன்படி கடந்த 2011ம் ஆண்டு முதல் 2014 ஜூன் வரை மொத்தம் 3.25 லட்சம் குழந்தைகள் காணாமல் போய் உள்ளன.அதாவது ஆண்டுக்கு சராசரியாக 1 லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றன. இவற்றில் 45 சதவீத குழந்தைகள் மட்டுமே திரும்ப கிûPத்துள்ளன. மற்றவர்களின் கதி என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. அண்டை நாடான  பாகிஸ்தானில் ஆண்டுக்கு 3 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே காணாமல் போகின்றன. இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்றால் இதைக் காட்டிலும் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் ஆண்டுக்கு 10 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே காணாமல் போகின்றன.

மார்கண்டேய கட்ஜு : திராவிடர்களும் வெளியில் இருந்து வந்தவர்கள்தான் !

திராவிடர்களும், ஆரியர்களும் இந்தியாவின் மூத்த குடிமக்கள் அல்ல: மார்க்கண்டேய கட்ஜூ பேச்சு ஆரியர்கள் மட்டுமல்ல, திராவிடர்களும் வெளியில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் என்று, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.சென்னை நந்தம்பாக்கத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர்,திராவிடர்களும், ஆரியர்களும் இந்தியாவின் மூத்த குடிமக்கள் அல்ல. ஊட்டி, நீலகிரி பகுதிகளில் வசிக்கும் தோடா இனமக்கள், சத்தீஷ்கர் பகுதிகளில் வாழும் மக்கள், ராஜஸ்தானில் வாழும் மக்கள் தான் இந்தியாவின் மூத்த குடிமக்கள். ஆரியர்கள், திராவிடர்கள் வருகைக்கு முன்பே பழங்குடியின மக்கள் இந்தியாவில் இருப்பதாக கூறினார்  துக்ளக் சோ சூ சாமி கோஷ்டிக்கு இந்த புது வரவுப் பிறவிதான்  தான் சரியான தல ?

கோவையில் எச்.எம்.எஸ் தொழிற்சங்க 100 கோடி சொத்துக்களை கைப்பற்ற பேரம்?ரூ. ஒரு கோடி சிக்கிய விவகாரத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு

கோவை:கோவையில், காங்., நிர்வாகியிடம் பிடிபட்ட ஒரு கோடி ரூபாய், யாருக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கைப்பற்றும் திட்டத்துடன், தொழிற்சங்க நிர்வாகிகளை விலைக்கு வாங்கவே, இந்த தொகை எடுத்துச் செல்லப்பட்டதாக, தொழிற்சங்க பிரமுகர் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை நகரில் மேட்டுப்பாளையம் சாலை, கண்ணப்ப நகர் சோதனைச்சாவடியில் நேற்றுமுன்தினம் இரவு வாகன தணிக்கை நடத்திய, சாயிபாபாகாலனி போலீசார், தமிழக காங்., மாநில துணைத்தலைவர் இன்ஜினியர் ராதாகிருஷ்ணன் காரில் இருந்த, ஒரு கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். ஆனால், காரில் மூன்று கோடி ரூபாய் இருந்ததாக, வக்கீல் விஜயராகவன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்;

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

சிண்டிகேட் வங்கி ஜெயின் கைது ! பொதுத்துறை வங்கிகள் பெருமுதலாளிகளின் காமதேனு !

எஸ்.கே.ஜெயின்ரூ 50 லட்சம் லஞ்சம் தொடர்பாக மணிப்பால் நகரத்தை மையமாக கொண்டு செயல்படும் பொதுத் துறை சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கே.ஜெயின் உள்ளிட்ட ஒன்பது பேர் கடந்த சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 2, 2014) மத்திய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்.கே.ஜெயின்
மத்திய புலனாய்வுத் துறை பெங்களூரு, போபால், மும்பை, டெல்லி உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை நடத்தி லஞ்சப் பணமாக கொடுக்கப்பட்ட ரூ 50 லட்சத்தை கைப்பற்றியது. மேலும், பல நிதி ஆவணங்களையும், ரூ 21 லட்சம் ரொக்கம், ரூ 1.68 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ 63 லட்சத்துக்கான வைப்புத் தொகை ரசீதுகளையும் கைப்பற்றியிருக்கிறது.
எஸ்.கே.ஜெயினுடன் பூஷன் ஸ்டீல் நிறுவன துணைத் தலைவர் நீரஜ் சிங்கால், பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் வேத பிரகாஷ் அகர்வால், ஆடிட்டர் பவன் பன்சால், ஜெயினின் உறவினர்கள் வினீத் கோதா, மற்றும் புனீத் கோதா, விஜய் பஹூஜா, புருஷோத்தம் தோட்லானி, மற்றும் பங்கஜ் பன்சால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்களுக்கான கடன் உச்சவரம்பை சட்டவிரோதமாக உயர்த்தவும், திருப்பிச் செலுத்தத் தவறிய கடன் தொடர்பாக போலி கணக்கு காட்டவும் லஞ்சம் கொடுத்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்திக்கு ஐந்து படங்கள் ரிலீஸ் ! பிள்ளையார் அப்பா போட்ட காசை கடலுக்க போட்டிடாதை அப்பா !

விநாயகர் சதுர்த்திக்கு 5 படங்கள் ரிலீஸ் ஆகிறது.தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு விழா நாட்களை குறிவைத்து தமிழ் படங்கள் அதிக எண்ணிக்கையில் ரிலீஸ் ஆகும். அந்த பட்டியலில் தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகையும் இணைந்திருக்கிறது. வரும் 29ம் தேதி இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழில் 5 படங்கள் வெளியிட தயாராகி வருகின்றன. கடந்த ஆண்டு இதேநாளில் சிவ கார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளியாகி வெற்றி பெற்றது. அந்த சென்டிமென்ட் கோலிவுட்காரர்களை ஈர்த்திருக்கிறது. ஜெயம் ரவி நடித்துள்ள ‘பூலோகம், கார்த்தி நடித்துள்ள ‘மெட்ராஸ், விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ‘சலீம், அதர்வா நடிக்கும் ‘இரும்பு குதிரை, பார்த்திபன் இயக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘ ஆகிய படங்கள் இந்த பட்டியலில் உள்ளது. இவற்றில் 2 படங்கள் ஏற்கனவே சென்சார் ஆகிவிட்டது. இதற்கிடையில் ஆகஸ்ட் 15ம் தேதி சூர்யா நடித்துள்ள ‘அஞ்சான் படம் திரைக்கு வருகிறது. - .tamilmurasu.org/I

புதிய அம்மா திட்டங்கள் அறிவிப்பு ! விவசாய மேம்பாட்டுக்காம் !

வேளாண் தொழிலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.
மேலும், வேளாண் கல்விக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பயன் பெறும் வகையிலும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவண்ணாமலையில் வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றினை வாசித்த முதல்வர்:
தஞ்சை, புதுக்கோட்டை, திருவண்ணாமலையில் வேளாண் கல்லூரி:
வேளாண்மைக்கான ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், அதிகரித்து வரும் வேளாண் கல்விக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பயன் பெறும் வகையிலும், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை, தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் ஆகிய இடங்களில் தலா ஒன்று வீதம் மூன்று வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் 150 கோடி ரூபாய் செலவில் ஆயிரம்  அம்மா திட்டங்கள் இருந்தும் ஆயிரம் தடவை அம்மா பெயரை ஜெபம் பண்ணி  பஜனை பாடி என்ன பயன்?
அம்மா டாஸ்மாக்  இல்லையே ? அம்மா டாஸ்மாக்  இல்லையே ?

திமுக அமைப்பு செயலாளர் கல்யாணசுந்தரம் பதவிநீக்கம் !

சென்னை: தி.மு.க.வின் அமைப்பு செயலாளராக இருந்த கல்யாணசுந்தரம் திடீர் என தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், கட்சி தலைமைக்கு கல்யாணசுந்தரம் ஒரு கடிதமும் அனுப்பி உள்ளார். இந்த கடிதத்தில் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ள கல்யாணசுந்தரம், கனிமொழி, ராசா மற்றும் தயாநிதி ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கல்யாணசுந்தரம் தீவிர ஸ்டாலின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மு.க., அழகிரியை கட்சிக்குள் கொண்டு வர மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக கட்சிக்குள் காய் நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. dinamalar.com அப்பாடா ஒரு மாதிரி திமுக சரியானபாதையில் பயணிக்க தொடங்கி இருக்கிறது , 

கண்ணாடி பொம்மைகள் ! லைட் மேன்களின் கதையை சொல்லும் ஆவணப்படம் !

மனிதர்கள் சமூகத்தில் எங்கெல்லாம் நசுக்கப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்களைப் பற்றிய ஒரு திரைப்படம் எங்காவது வெளிவரும். ஆனால் சினிமா தோன்றிய நாள் முதலிலிருந்து இன்றுவரை அற்ப சம்பளத்திற்கு அதிக உழைப்பை கொடுத்து வேலை செய்யும் திரையுலக லைட்மேன்களின் வாழ்க்கை சொல்லப்படாததாகவே இருந்துவருகிறது.கோடிகளில் பணம் புழங்கும் துறைகளில் சினிமா துறையும் ஒன்று. ஆனால் சினிமாவின் முக்கியமான் தூண்களில் ஒன்றாக இருக்கும் லைட்மேன்களோ ஆயிரங்களில் வாங்கும் தங்கள் சம்பளத்திற்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களது வாழ்க்கை முறை இன்றும் வெளிச்சமின்றியே காணப்படுகிறது.

விமானத்தை கடத்தினால் சுட்டு வீழ்த்த சட்டத்தில் திருத்தம்!! பேச்சே கிடையாது!

டெல்லி: விமான கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை அளிக்க வகைசெய்யும் புதிய மசோதா தயார்நிலையில் உள்ளது. கடத்தப்படும் விமானத்தை சுட்டு வீழ்த்த பாதுகாப்பு படையினருக்கு இம்மசோதா அதிகாரம் அளிக்கிறது. விமான கடத்தல் தடுப்பு சட்டம், 1982ம் ஆண்டு இயற்றப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்யப்பட்டு, புதிய மசோதா, கடந்த 2010ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகு, ராஜ்யசபாவில் அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் மாதம், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அப்போதிருந்து மசோதா நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தற்போதைய நரேந்திர மோடி அரசு, அந்த மசோதாவில் பல்வேறு நாடுகளின் விமான கடத்தல் தடுப்பு சட்டங்களில் உள்ள முக்கிய அம்சங்களை சேர்த்து, அம்மசோதாவை வலிமையானதாக மாற்றி உள்ளது. இந்த மசோதா, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக தயார்நிலையில் உள்ளது.

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவர் உட்பட 29 பேரின் கருணை மனுக்களை நிராகரிப்பு. !

மகாராஷ்டிரத்தில் 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பிரஹலாத்ராவ் வாஸ்னிக் என்ற நபரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.
மத்திய உள்துறையின் ஆலோசனையை ஏற்று, வாஸ்னிக்கின் கருணை மனுவை கடந்த மாதம் 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.

ரயில்வேயில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி !

டெல்லி: பாதுகாப்புத் துறையில் 49 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும், ரயில்வே கட்டமைப்புத் துறையில் 100 சதவீத அளவுக்கு அன்னிய நிறுவனங்கள் நேரடி முதலீடு செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. காப்பீட்டுத் துறையில் 26 சதவீதமாக இருந்த அன்னிய முதலீட்டுக்கான உச்ச வரம்பை 49 சதவீதமாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை இரு வாரங்களுக்கு முன்பு ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில் தற்போது பாதுகாப்பு, ரயில்வே ஆகிய துறைகளிலும் அன்னிய முதலீட்டு உச்ச வரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ரயில்வே துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மாணவிகளை பாலியல் தொழிலில் இடுபடுத்திய பாதிரியார் அருள்தாஸ் உட்பட ஐவர் கைது ! கடலூரில் அதிர்ச்சி !

மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் தள்ளிய பாதிரியார் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கைது கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த விவசாயி மகள், அதே பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். கூத்தப்பன்குடிக்காடு பகுதியை சேர்ந்தவரின் மகள் அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 16ம் தேதி காலை பள்ளிக்கு சென்ற இருவரும் மாலை வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவிகளின் பெற்றோர் திட்டக்குடி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவிகளை தேடி வந்தனர்.மாணவிகள் வைத்திருந்த செல்போனில் தொடர்பு கொண்டபோது திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலையில் இருப்பதாகவும் கம்பெனியை விட்டு வெளியே அனுப்பாததால் கம்பெனி பெயர் தெரியவில்லை. திருப்பூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரிய கம்பெனி என போலீசாரிடம் கூறியுள்ளனர்.

ஆன்மீக வியாபாரிகளின் அடிதடி ! Gangs of ஆன்மீக கிரிமினல்களின் கொள்ளை கொலை பட்டியல் காட்சிக்கு ?

சங்கராச்சாரி
இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் – ந்து ஆன்மீக கண்காட்சி என்றால் ஆன்மீகம்தானே முக்கியமான விற்பனை சரக்கு? ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக் கழக மைதானத்தில் நடந்த இந்த கண்காட்சியை ஜூலை 8-ம் தேதி தொடங்கி வைத்தவரோ காஞ்சி சங்கரராமன் கொலை புகழ் காஞ்சி காமகோடி சங்கராச்சாரி ஜெயேந்திரன். ஆன்மீகம் ஒரு ரியல் எஸ்டேட் தொழில் என்றால் அதில் இன்டர்நேஷனல் கட்டப்பஞ்சாயத்து தாதா ஜெயேந்திரன்தான். இந்த கண்காட்சியை ஜூலை 8-ம் தேதி தொடங்கி வைத்தவரோ காஞ்சி காமகோடி சங்கராச்சாரி, சங்கரராமன் கொலை புகழ் ஜெயேந்திரன்தான்.

கொலை கொள்ளைகளில் தமிழகம் 2 வது இடம் ! உத்தர பிரதேசம் முதாவது இடம் !

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஜெயலலிதா ஏன் பதில் அளிக்கவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் மீதான ஜெயலலிதாவின் பதில் ஏமாற்றம் அளிப்பதாகவும், கொலை, கொள்ளை குற்றங்களில் தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீல்குலைந்தது குறித்து நான் எழுப்பி வரும் கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் காவல்துறை மானிய கோரிக்கை மீதான அவரது பதில் உரை ஏமாற்றம் அளிக்கிறது. அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் அமர்ந்து பிரச்சனைகளை விவாதிப்பது தான் மரபு. இந்த ஆட்சியில் அந்த ஜனநாயக மாண்பு இல்லை. எதிர்க்கட்சிகளை புறக்கணிக்கும் போக்குடன் செயல்படும், சபாநாயகர் தனபால் அந்த பதவிக்கே கரும்புள்ளியாக விளங்குகிறார்.

புதன், 6 ஆகஸ்ட், 2014

சவூதி அரேபியா ஆண்கள் பாகிஸ்தான் வங்கதேச பெண்களை திருமணம் செய்ய தடை !

சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஆண்கள், பாகிஸ்தான், வங்கதேசம், சாட் மற்றும் மியான்மர் உள்ளிட்ட நான்கு நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்த கொள்ளவதற்கு தடை விதித்து அந்நாட்டில் இருந்து உத்தரவு வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் இந்த நான்கு நாடுகளைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் பெண்கள் வசித்து வருகிறார்கள்
இந்தத் தடை குறித்து மெக்கா காவல்துறை உயர் அதிகாரி அஸ்ஸாப் அல் குரேஷி கூறுகையில், வெளிநாட்டு பெண்களை மணப்பது தொடர்பாக கூடுதல் கட்டுப்பாடுகள்  வரப்பட்டுள்ளன.  திருமணத்திற்கு முன்பு தாங்கள் மணக்கப் போகும் பெண்கள் குறித்த விவரத்தை சமர்ப்பிப்பதோடு, ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை சமர்பிக்க வேண்டும் .

தலையில் தேங்காய் உடைத்து முட்டாள்கள் வழிபாடு ! பலருக்கு மண்டையில் தையல் !


தலையில் தேங்காய் உடைப்பதா? கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிவிப்பு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டு மகாதானபுரத்தில் உள்ள மகாலட்சுமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழா என்ற பெயரில் இருபால் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் கொடுமை நடந்து கொண்டு வருகிறது.நூற்றுக்கணக்கானவர்களின் தலைகளில் அக்கோவில் பூசாரி தேங்காய் உடைக்கிறார். குழந்தைகள், முதியவர்கள் என்று பாராமல் தேங்காய் உடைக்கப்படுகிறது. இவ்வாண்டும் இது நடைபெற்றுள்ளது.நூற்றுக்கணக்கான பக்தர்களின் மண்டைகள் பிளந்து ரத்தம் பீறிட்டுக் கிளம்பியுள்ளது. பலருக்கு மண்டையில் தையல் போடும் அளவுக்கு விபரீதமாகியிருக்கிறது.

30 வருஷங்களாக சத்துணவு காய்கறிக்கு ஒதுக்கப்படுவது 81 பைசா மட்டுமே ?

தமிழகத்தில், கடந்த 1984-ம் ஆண்டு முதல் சத்துணவு சாப்பிடும் ஒவ்வொரு குழந்தைக்கான காய்கறிசெலவுக்கு 81 பைசா மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த 30 ஆண்டு களாக காய்கறி செலவுக்காக அரசு ஒதுக்கும் குறைந்த தொகையைக் கொண்டு கழிவு காய்கறிகளை சாப்பிடும் நிலைக்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளதாக ‘தி இந்து’ தமிழ் அறிமுகப்படுத்தியுள்ள ‘உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணில் வாசகர் ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் மதிய உணவு திட்டத்தை செயல் படுத்தினார். கடந்த 1984-ம் ஆண்டு இத்திட்டத்தை மேம்படுத்தி சத்துணவுத் திட்டமாகக் கொண்டு வந்தார் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் சத்துணவுத் திட்டம் பல்வேறு பரிமாணங்களாக மாற்றம் செய்யப்பட்டது. வாரத் துக்கு ஒரு முட்டை என்றும் பின்னர் வாரத்துக்கு ஐந்து நாள் என்றும் வழங்கப்பட்டது.

Chennai அரசு மருத்துவமனையில் ஆயிரம் சிறு நீரக அறுவை சிகிச்சை!சாதனை !

சென்னை அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆயிரம் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். மாற்று சிறுநீரகஅறுவை சிகிச்சை உலக உடல் உறுப்புகள் தானம் செய்யும் தினம் இன்று (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் விமலா, சிறுநீரக இயல் துறை தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- சிறுநீரகம் செயல் இழந்த நோயாளிகளுக்கு அவர்களுடைய நெருங்கிய உறவினரிடமிருந்து தானம் பெற்றும் மூளைச்சாவு ஏற்பட்ட நபரிடம் இருந்து தானம் பெற்றும் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் கடந்த 1987-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. பணம் புடிங்கி தனியார் மருத்துவ மனைகளுக்கு எல்லாம் இது ஒரு சாட்டை அடி! வாழ்க பணியாளர்கள் அனைவரும்

அடுத்த சிலுக்கு நம்ப அஞ்சலியாமே ?இயக்குனர் கருத்து !

நடிகை அஞ்சலிதான் அடுத்த சில்க் ஸ்மிதா என்று பேசி தெலுங்கு பட இயக்குனர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னனி நடிகையாக இருந்த நடிகை அஞ்சலி சமீபகாலங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்...சூர்யாவின் ‘சிங்கம்.2’ படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்ட அவர், தற்போது தெலுங்கு படமான ‘கீதாஞ்சலியில் மிகவும் கவர்ச்சியாக நடத்துள்ளார். ஜெயம் ரவியுடன் பெயரிடப்பட்டாத படம் ஒன்றிலும் நடித்துவரும் அஞ்சலி இதிலும் கவர்ச்சியாகவே நடிக்கிறாராம்.  இந்நிலையில் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கையை படமாக்க முயற்சிகள் நடந்து வரும் நிலையில் கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அஞ்சலி ஷகிலா வேடத்தில்  நடிக்கப் போவதாக இணையத்தில் செய்திகள் உலாவின. இந்நிலையில். அஞ்சலி தான் அடுத்த சில்க்ஸ்மிதா என தெலுங்கு பட இயக்குனர் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கோவிந்தாச்சாரியா : Facebook twitter சமூக தளங்களை மோடி அரசு பயன்படுத்துவது சட்டவிரோதம்!

சமூக வலைத்தளங்களை மோடி அரசு பயன்படுத்துவது சட்டவிரோதம்: பாஜக முன்னாள் மூத்த தலைவர் வழக்கு சமூக வலைதளங்களை மோடி அரசு பயன்படுத்துவது என்பது நாட்டின் பொது ஆவணங்கள் சட்டத்தை மீறிய செயல் என்று  பாஜக முன்னாள் மூத்த தலைவர் கே.என். கோவிந்தாச்சார்யா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு விசாரணையின்போது, கோவிந்தாச்சார்யாவை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கோவிந்தாச்சார்யாவின் வழக்குரைஞர் விராக் குப்தா, நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பிரமாணப் பத்திரம்தாக்கல் செய்தார்.
அதில், மோடி அரசில் 19 அமைச்சகங்கள் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளன. 5 அமைச்சகங்கள் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளன. பிரதமர் அலுவலகமும் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்கு வைத்துள்ளது. மத்திய அரசின் முறையான அனுமதி இல்லாமல் எந்த ஒரு ஆவணத்தையும் இந்தியாவை விட்டு வெளியே எடுத்துச் செல்ல முடியாது என்கிறது பொது ஆவண சட்டம். இதனால் அரசாங்கம் இ மெயில்களைப் பயன்படுத்துவது கூட சட்டப்படி தவறு. மேலும் இந்த  சமூக வலைதளங்கள், இ மெயில்களின் சர்வர்கள் அனைத்தும் வெளிநாட்டில்தான் இருக்கின்றன. அப்படியான நிலையில் நாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை எப்படி மற்ற நாடுகளுக்கு பரிமாறிக் கொள்ள முடியும்?

அழகிரி மகள் கயல்விழி கலைஞரை சந்தித்தார் ! சமரசம் வருமா ?

தி மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான, சமரச பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது. அதன் ஒரு கட்டமாக, சென்னையில் நேற்று முன்தினம், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அழகிரி யின் மகள் சந்தித்து பேசி உள்ளார்.
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பெங்களூருவுக்கு சென்றிருந்த நேரத்தில், இந்த சந்திப்பு சென்னையில் நடந்துள்ளது. இந்த சந்திப்பு நடந்தபோது, அழகிரியும் சென்னையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தாயார் தயாளுவை சந்திக்க, அழகிரி சென்னை வரும் தகவல், 2ம் தேதி வெளியாகியது. அதன்படி, 3ம் தேதி இரவு, 10:00 மணிக்கு அழகிரி சென்னை வந்தார். 4ம் தேதி காலையில் அவர், தயாளுவை சந்திக்க, கோபாலபுரம் வீட்டுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஸ்டாலினை தளபதி தலைவர் என்றெல்லாம் உசுப்பேத்தி விட்டவர்கள்தான்  திமுகவின் முதல் எதிரிகள்  . அவர்கள் தொகை  கழகத்தில் அதிகமானது கழகத்தின் வரலாற்று சோகம்  வாழ்ந்தாலும் ஏசும் வீழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா என்ற பாடல் சரியாக பொருந்துகிறது தி்முக விற்கு

மரண தண்டனையை நீக்கப்பட மாட்டாது ! மத்திய அரசு தீர்மானம் ?

மரண தண்டனையை ரத்து செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரென் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மரண தண்டனையை ரத்து செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. மரண தண்டனைக்கு வகை செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 1890யை திருத்தும் ஆலோசனைகள் ஏதும் அரசிடம் இல்லை.குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரித்து, கால தாமதங்களை தவிர்க்க, குற்றவியல் நடைமுறைச் சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் விசாரணை நடத்தி, விரைவில் நீதி வழங்கும் வகையில் 2008ம் ஆண்டே சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றார்.தற்கொலை முயற்சிகளுக்கு தண்டனைகளில் இருந்து விலக்கு அளிப்பது பற்றி குறிப்பிட்ட அவர், தற்கொலை முயற்சியை குற்றமாக அறிவிக்கும், இந்திய தண்டனை சட்டத்தின் 309வது பிரிவை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.ஏற்கனவே வேதனையில் உள்ள ஒருவரை மீண்டும் தண்டிப்பது மனிதாபமற்ற செயல் என்று சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது nakkheeran.in

தமிழர்களே தமிழர்களே இந்தி படியுங்கோ ! சொல்வது மார்கண்டேய கட்ஜு ! இனி படிசாப்போலதாய்ன் !

தமிழர்கள் அனைவரும் இந்தி கற்க வேண்டும்' என, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் இருந்தவர் மார்கண்டேய கட்ஜு. இவர், தற்போது, இந்திய பிரஸ் கவுன்சில் தலைராக உள்ளார்.
பரபரப்பு :தன், 'பேஸ்புக்' பக்கத்தில், திடீர் திடீரென பல கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருபவர்.இவர் நேற்று தன், 'பேஸ் புக்' பக்கத்தில், தமிழர்கள் இந்தி கற்பது குறித்து, ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்.அக்கட்டுரையில் கூறியிருப்பதாவது:அனைத்து தமிழர்களும் இந்தி மொழி கற்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன். நான் இந்தியை திணிக்கிறேன் என எடுத்துக் கொள்ளக் கூடாது.நான் எதையும் திணிப்பதை எதிர்ப்பவன். இது ஜனநாயகத்தின் காலம் என்பதால், எதையும் திணிக்க முடியாது. அதான் ரொம்ப வருத்தமோ ? ஹிந்தி பேசும் மக்கள் தமிழ் படிக்க தயாரா?......ஹிந்தி எல்லாம் பள்ளியில் படிக்க அவசியம் இல்லை.....மாலையில், விடுமுறையில் படித்தால் போதும்.....ஹிந்தி மொழியை பள்ளியில் படித்து எவனும் கவிதை, கட்டுரை எழுதப்போவதில்லை.......கொஞ்சம் பேசணும், கொஞ்சம் போர்ட் படிக்கணும்......இதுக்கெல்லாம் பள்ளியில் ஹிந்தி படிக்க தேவையே இல்லை.......தமிழை, ஆங்கிலத்தை நல்லா படித்தால் போதும்......ஹிந்தி படிக்கிறேன் என்று நேரத்தை வீணடிக்க வேண்டாம்.....

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

தாராபுரத்தில் 11 கொத்தடிமைகள் மீட்பு !

தாராபுரம், ஆக.4_ தாராபுரத்தில் தனியார் செங்கல் சூளையில் கொத் தடிமைகளாக வேலை செய்து வந்த 11 கூலி தொழி லாளர்கள் மீட்கப்பட்ட னர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம்_உடுமலை சாலை திருமலைபாளை யம் பிரிவு அருகே தனியார் செங்கல் சூளையில் பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100_க்கும் மேற் பட்ட கூலி தொழிலாளர் கள் வேலை பார்த்து வந்தனர். கடந்த 3 மாதம் முன்பு விழுப்புரம் மாவட் டம் வெள்ளயம்பட்டியைச் சேர்ந்த முனியன் உள்பட 11 பேர் அந்த செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

IAS IPS மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கு ஆங்கிலம் தேவையில்லை !

புதுடில்லி:நாடு முழுவதும், மாணவர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பை அடுத்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பொறுப்புகளுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., நடத்தும், முதல்நிலை தேர்வில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
'முதல்நிலை தேர்வின், திறனறித் தேர்வு - 2ம் தாளில் இடம்பெறும், ஆங்கில மொழிப்புலமை குறித்த கேள்விகளுக்கான மதிப்பெண், தகுதிப் பட்டியல் அல்லது கிரேடு தயாரிக்க சேர்க்கப்படாது. அதே நேரத்தில், 2011ம் ஆண்டில், யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதியவர்களுக்கு, 2015ல் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்' என, மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர், ஜிதேந்திர சிங் அறிவித்தார்.   இது  இந்தி வெறியர்களால் தூண்டப்பட்டது. சுருங்கி வரும் உலகில் ஆங்கிலம் தெரியாமல் உலக நடப்பு, அறிவியல், மேலாண்மை போன்றவற்றை இந்திகார அதிகாரிகள் எப்படி அறிவார்கள்? இந்தி பேசாத மாநிலங்களில் இவர்கள் எப்படி குப்பை கொட்டுவார்கள்? இது அப்பட்டமான இந்தி திணிப்பு. மேலும் இந்தி பேசுபவர்களுக்கு அதிகப்படியான சலுகை, இந்தி பேசாதவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. ஆங்கிலம், இந்தி இரண்டும் நல்லது. ஆங்கிலம் வேண்டாமெனில் இந்தி வெறியர்கள் தமிழ், தெலுங்கு போன்ற வேறு ஏதேனும் ஒரு பிராந்திய மொழியையும் கற்கட்டும். மத்திய அரசு பணிக்கு ஏதேனும் இரண்டு மொழிகள் கட்டாயம் என்று இருக்க வேண்டும். அதில் ஆங்கிலம் அவசியம். இந்தி அல்லாத மொழி பேசுபவர்கள் சும்மா விடக்கூடாது. முளையிலேயே இந்தியை விரட்டுங்கள் இல்லையேல் அலுவலக நடை முறையில் இல்லாத மற்ற மொழிகள் மெல்ல சாகும்.

தனிநாயகம் அடிகள் ! 1554 ஆம் ஆண்டில் போர்த்துகல்லில் அச்சிடப்பட்ட லூசோ-தமிழ் மறைக்கல்வி (Cartilha)நூல் கண்டுபிடிக்கப்பட்டது.


A page from Luso-Tamil Catechism (Cartilha or Primer) printed in Lisbon in 1554 CE. It is a bilingual work with Tamil and Portuguese phrases - both printed in Roman script. This is the earliest known printed work of Tamil (though in roman script). The books is 38 pages long with Tamil phrases in Red followed immediately by Portuguese translations printed in black (in smaller font). Authors of the book were Tamil Christians living in Lisbon - Vincente de Nazareth, Thome da Cruz and Jorge Carvalho(?). They were supervised by Father Joao Villa de Conde. The single surviving copy of the book is at the Ethnological Museum at Belem,ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர். தமிழ், ஆங்கிலம் தவிர எசுப்பானியம், உரோம மொழி, போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் கூடியவரும், பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்து வெளிக் கொணர்ந்தவர் தனிநாயகம் அடிகளார்.
தனிநாயகம் அடிகளாரின் பெயரைக் கேட்கின்றபோதெல்லாம் நமக்கு நினைவில் வருவது தமிழ்க்கலாசாரம் என்னும் முத்திங்கள் ஏடும் 1968ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடுமே என்பதில் ஐயமில்லை. தமிழ்க் கலாசாரம் என்னும் தீன் சுவையை அந்நிய மொழியாகிய ஆங்கில மொழிமூலம் தமிழர்களது கலை இலக்கியம் பண்பாடு என்பவற்றை உலகிற்கு பறைசாற்றியவர் பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்து ஒரு பன்மொழிப் புலவராகத் திகழ்ந்து வந்த அறிஞர் தனிநாயகம் அடிகளார்.

அமெரிக்காவில் சீக்கியர்கள் மீது இனவெறி தாக்குதல் ! தலைப்பாகையை கண்டால் பயங்கரவாதிகள் என சந்தேகமோ ?


அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கை சேர்ந்தவர் சந்தீப் சிங் (29). சீக்கியரான இவர் தனது நண்பர் பல்தே சிங்குடன் நியூயார்க்கில் ரோட்டோரம் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி இவர்கள் மீது இடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்தீப் சிங் லாரி டிரைவரிடம் தட்டி கேட்டார். உடனே அந்த நபர் சீக்கிய இளைஞர்களிடம் இனவெறியுடன் பேசினார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து லாரியை செல்ல விடாமல் சந்தீப் சிங் அதன் முன்னால் நின்று மறியல் செய்தார். போலீசாரை அழைத்தார். ஆனால் மனிதாபிமானம் இல்லாத அந்த டிரைவர் லாரியால் சந்திப் சிங் மீது மோதினார்.

சமந்தா : திரை உலகில் படு மோசமான ஆணாதிக்கம் ! இதில் யாரும் விதி விலக்கில்லை !

கமர்ஷியல் படங்களில் நடித்து சலித்துவிட்டதா என்பதற்கு பதில் அளித்தார் சமந்தா.கவர்ச்சிக்கு இடம் தராமல் ஆரம்ப கால படங்களில் நடித்து வந்த சமந்தா தற்போது படு கவர்ச்சிக்கு ஓகே சொல்கிறார். கமர்ஷியல் படங்களில் நடிப்பது போர் அடிக்கிறதா என்றபோது பதில் அளித்தார்.அவர் கூறியதாவது:       திரையுலகில் ஆணாதிக்கம்தான் அதிகம். இந்த சூழலில் ஹீரோயின்களுக்கு நல்ல வேடம் என்பது அரிதுதான். தனிப்பட்ட முறையில் ஹீரோயினை மையமாக வைத்து எழுதப்படும் கதைகளில் வேண்டுமானால் அதுபோன்ற கதாபாத்திரங்களை எதிர்ப்பார்க்கலாம். மற்றபடி கமர்ஷியல் படங்கள் என்பது தவிர்க்க முடியாதது. >வெளியான ‘குயின் ரீமேக்கில் நடிக்காதது ஏன் என்கிறார்கள். ஒரிஜினல் கதையில் கொண்டுவரப்பட்ட உணர்வுகள் ரீமேக்கில் வருமா என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது. அதனால் ஏற்கவில்லை. இதுபோல் ஹீரோயினை மையமாக வைத்து வலுவான கதை வந்தால் அதில் நடிப்பேன்.திருமணம் எப்போது, காதலை பற்றி கூறுங்கள் என சிலர் கேட்கும்போது வருத்தம் ஏற்படுகிறது. பெண் என்றாலே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட வேண்டும் என்றுதான் சமூகம் விரும்புகிறது. திருமணத்தை தாண்டி சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. அது ஆண்களுக்கு மட்டும்தான் என்ற நினைப்பு மாற வேண்டும். -.tamilmurasu.org

ஜெயலலிதா அரசுக்கு நீதிபதி சாட்டை அடி ! விசாரணைக்கு ரகுபதியை விட்டால் வேறு ஆளே இல்லையா ?

சென்னை: மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, அரசு வக்கீலை பார்த்து சரமாரி கேள்வி எழுப்பினார். சென்னை உயர்நீதிமன்றத்தில், தி.மு.க. பொருளாளரும், எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில், ஜூன் 28ந் தேதி 11 அடுக்கு மாடி கட்டிடம் சீட்டு கட்டுப்போல இடிந்து சரிந்து விழுந்ததில் பலர் பலியாகியுள்ளனர். சரிந்து விழுந்த இந்த கட்டிடத்தின் இடிபாடுகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் என்று 3 ஆயிரத்து 750 பேர் 8 நாட்கள் போராடி அகற்றியுள்ளனர். என்னதான் சாட்டை பம்பரம்னு சுழற்றினாலும் கடைசில ஊத்திதான் மூடப்போறீகளா?

பிரியங்கா காந்தி உத்தர பிரதேஷ் காங்கிரஸ் தலைவராக ! பராக் !

காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதற்காக, பிரியங்கா தீவிர அரசியலில் குதிக்கிறார். அவர் உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. ஆளுங்கட்சியாக இருந்த அக்கட்சி, வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
கட்சியின் படுதோல்விக்கு துணைத் தலைவர் ராகுல் காந்தியே காரணம் என்று மூத்த தலைவர்கள் பலர் முணுமுணுத்து வருகிறார்கள்.
மாநிலங்களில் கட்சி நிர்வாகிகளை மாற்றும் பணியும் நடந்து வருகிறது.
பிரியங்கா இருப்பினும், கட்சிக்கு புத்துயிர் ஊட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா தீவிர அரசியலில் குதிக்க வேண்டும் என்று கட்சியில் ஒரு தரப்பினர் விரும்புகிறார்கள்.  வாழ்த்துக்கள் ஆனால் ஒரேஒரு  ஆலோசனை  அம்மணீ உங்க  கணவன்  பக்கா  பிராடாக இருக்கிறார் ! அவரை எங்க தேடி பிடிச்சீங்களோ  பெனாசிருக்கு  வாய்ச்ச  சர்தாரி  மாதிரி தெரியராருங்கோ ! ஜாக்கிரதையா இருங்கோ  ! உங்க  பெயரையும் கெடுத்து  ஊரை அடிச்சு  உலைல   போட்ட ஆசாமி !

மேனகா காந்தி : வருண் காந்தி உபியின் நல்ல முதலமைச்சராக இருப்பார் !


வருண் காந்தியை முதல்வர் வேட்பாளராக நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது: மேனகா காந்தி<;வருண் காந்தியை முதல்வர் வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது என மேனகா காந்தி தெரிவித்துள்ளார். இது குறி்த்து லக்னோவில் அவர் கூறியதாவது: தற்போது உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், மத்தியில் பா.ஜ.கவும் ஆட்சியில் உள்ளன. மக்களவை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி அரசு வளர்ச்சிப் பணிகளை நிறுத்தி விட்டது. பா.ஜ.க வளர்ச்சிப் பணிகளை செய்ய விரும்புகிறது.உத்தரப் பிரதேசத்தில் சாலை, மின்சாரம், பள்ளி, போன்றவற்றின் வளர்ச்சிப் பணிகள் எப்படி நடக்கிறது என்பதை காண நீங்கள் ஒரு வருடம் காத்திருங்கள். 2017ம் ஆண்டு தேர்தலில் வருண் காந்தியை முதல்வர் வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க அரசு அமைந்து வருண் முதல்வராகப் பதவியேற்றால் அவர் சிறந்த முதல்வராக இருப்பார் என தெரிவித்தார் nakkheeran in , இவரு அப்பன் சஞ்சே காந்தியின் அடாவடி அலங்கோலம் எல்லாம் பலருக்கும் மறந்திருக்கும் பழைய Flashback ஐ மாத்திரம் அல்லாமல் இந்த வருண் மட்டும் என்னவாம் ?ஒரு பேட்டை ரவுடிக்குரிய சகல தகுதியும் உள்ளவர்தான் . கொஞ்சம் பேச்சை கேட்டு பாருங்க ,

முதியோர் இலவச பஸ்பாஸ் ஞாபகம் இருக்கா ?

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து, மூன்றாண்டுகள் முடிந்து விட்ட நிலையில், முதியோருக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. சட்டசபையில், முதல்வர் இத்திட்டம் குறித்து அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பில், முதியோர் காத்திருக்கின்றனர்.
இலவசமாக...'ஆட்சிக்கு வந்தால், முதியோருக்கு, அரசு பஸ்களில் பயணிக்க, இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்' என, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இத்திட்டத்தின் படி, 58 வயதுக்கு மேற்பட்ட முதியோர், அரசு பஸ்களில், பிற நகரம் மற்றும் கிராமங்களுக்கு, இலவசமாக சென்று வர முடியும் என்பதால், முதியோர் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது.ஆதரவற்ற முதியோர், மருத்துவமனை, கோவில், நுாலகம், உறவினர்கள் வீடு உள்ளிட்ட இடங்களுக்கு, இலவசமாக சென்று வர முடியும் என்பதால், இந்த அறிவிப்பு, முக்கியத்துவம் பெற்றது.  வோட்டு போட கொடுத்த ரூ 200 னால் கவிழ்ந்த தமிழக மக்களுக்கு, முதியர், முடியாதவர்கள் மற்றும் விவசாயி பற்றி கவலை எதுக்கு இன்னும் இரண்டு வருடத்தில் எதனை முதிய்யோர் மேலோகம் செல்ல்வர்கள் என்று கணக்கு எடுத்து அடுத்த தேர்தலில் கள்ள வோட்டு போடலாம்

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

உயர்சாதிகளின் கூட்டணிதான் இந்து ஆன்மீக சேவா கண்றாவி ! வாங்கோ நீங்க அய்யரா அய்யங்காரா ?

tambras
இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் – 2
ஹிந்து ஆன்மீக கண்காட்சிக்கு சென்று  முதல் அரங்கை பார்த்ததுமே ‘ஆன்மீக’ பரவசம் மெய்சிலிர்க்க வைத்தது.
நத்தம் காலனியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை கொளுத்தி, சொத்துக்களை சூறையாடிய வன்னிய சாதி வெறியர்களின் அரங்கம் தான் முதல் அரங்கம். இந்துமதவெறி வேறா, வன்னிய சாதிவெறி வேறா என்று எண்ணிக்கொண்டே அரங்கில் நின்று கொண்டிருந்தவர் அந்த அரங்கிற்கு வந்திருந்தவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்ததை கவனித்தோம்.
vanniyar-varalatru-aivu-maiyamஅக்கினி குண்டத்திலிருந்து பிறந்த வன்னிய குல ஷத்திரியர்களின் ஆண்ட பரம்பரை கதையை பெருமை பொங்க கூறிக்கொண்டிருந்தார். அவர் கூறிய அக்கினி குண்டத்திலிருந்து பிறந்த ஆண்டபரம்பரையினர் நத்தம் காலனியில் எப்படி குக்கர் விசிலைக் கூட விட்டுவைக்காமல் கொள்ளையடித்தனர் என்பதை விளக்குவதற்கும் ஒரு தனி ஸ்டாலை போட்டிருந்தால் இந்து ஆன்மீக சேவை நடைமுறையில் செய்து வரும் சேவை குறித்த பிராடிகல் கிளாசாகா இருந்திருக்கும்.

நீதிபதியே பாலியல் சேஷ்டை , ரிசர்வ் வங்கி கேள்வியோ கோச்சடையன் ரஜினி, காமன்வெல்த் அதிகாரியோ குடித்துவிட்டு கார் ஒட்டி ஜெயில் !

ராஜீவ் மேத்தா
administrative judge had asked the additional judge to "perform dance on an item song" at a function at his home and influenced her transfer to a remote location despite her requests.நிதி, நீதி, விளையாட்டு ஆகிய முக்கிய துறைகளின் சிறப்பினை விளக்கி இன்றைய நாளிதழ்களில் மூன்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
கிளாஸ்கோவில் கைது செய்யப்பட்ட இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலர் ராஜீவ் மேத்தா.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் காமன்வெல்த் விளையாட்டு நடந்து வருகிறது. இதில் இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலர் ராஜீவ் மேத்தா, மல்யுத்த நடுவர் வீரேந்தர் மாலிக் ஆகிய இருவரை ஸ்காட்லாந்து போலீசார் நேற்று (02.08.2014) கைது செய்தனர். மது அருந்திவிட்டு மேத்தா வாகனம் ஓட்டியதாகவும், மாலிக் பாலியல் புகாரில் சிக்கியதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தின் காலனிய நாடுகளைக் கொண்ட அமைப்பான காமன்வெல்த்தில் இருப்பதே அவமானம்.கடந்த டில்லி காமன்வெல்த் (2010) போட்டியில் வெடித்த ஊழலில் அரசியல்வாதிகள், முதலாளிகள், அதிகாரவர்க்கத்தின் கொள்ளை தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக ஸ்காட்லாந்து அத்தியாயத்தை பார்க்க வேண்டும்.

பார்க்கவேண்டிய படம் சினேகாவின் காதலர்கள் ! "காதலிச்ச உடனே உன்னோட படுத்துடனுமா?"

சென்னை: பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் இயக்கியுள்ள சினேகாவின் காதலர்கள், சாதி வெறி பிடித்த ராமதாசுக்கு புத்தி புகட்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு கூறியுள்ளார். சினேகாவின் காதலர்கள் படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது. அதற்கு முன் முக்கியத் தலைவர்களுக்கு இந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டி வருகின்றனர் தயாரிப்பாளர் கலைக் கோட்டுதயமும் இயக்குநர் முத்துராமலிங்கனும். படம் பார்த்த நாம் தமிழர் கட்சித் தலைவர் இயக்குநர் சீமான், சிறப்பாக உள்ளதாக பாராட்டியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளரான வன்னியரசு, இந்தப் படம் குறித்து பெரிய அறிக்கையே வெளியிட்டுள்ளார். அதில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியினரின் சாதி வெறியை கடுமையாக விமர்சித்துள்ளார். ராமதாசுக்கு புத்தி புகட்டும் 'சினேகாவின் காதலர்கள்'! -

சீனாவில் இன்று 6.5 ரிக்டர் நிலநடுக்கம் ! சுமார் 400 பேர் பலி ?

சீனாவின் யுனான் மாகாணத்தில் நேற்று மாலை 4.30 மணியளிவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 என்ற அளவில் பதிவாகியுள்ளது. ; இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை சுமார் 400 இருக்கலாம் என அஞ்சப்படுகிறது . 2,000 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தொலை தொடர்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில், மீட்புப்பணைகளை ராணுவத்தினர்  மேற்கொண்டு வருகின்றனர். சீனாவின், இந்திய மற்றும் நேபாள எல்லையையொட்டிய அருணாசல பிரதேச மாநிலம் அருகே உள்ள, ஷிகேட்ஸ் பகுதியிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. dinamani.com

திருப்பூரில் ஆறு மாதத்தில் 135ர் தற்கொலை! டாஸ்மாக் வருமானம் ஓஹோ !

திருப்பூர்:திருப்பூரில், கடந்த ஆறு மாதத்தில், 90 ஆண்கள்,39 பெண்கள் உள்பட 135 பேர் தற்கொலை செய்துகொண்டனர். வந்தாரை வாழவைக்கும் திருப்பூர், தமிழக அளவில் தற்கொலை துயரில் முதல் நகரமாக மாறிவிட்டது.
வேலைவாய்ப்பின்றி திக்கற்று அலையும் எண்ணற்ற வெளிமாநிலத்தவருக்கும் தமிழகத்தின் பிற மாவட்டத்தினருக்கும், வாழ்வளித்து, வந்தாரை வாழ வைக்கும் நகரமாக விளங்குகிறது திருப்பூர்.இதனால், நாள்தோறும் பல ஆயிரம் பேர் புதிது புதிதாக இந்நகரை நோக்கி படையெடுக்கின்றனர். அதற்கேற்ப, குற்றம் மற்றும் பிரச்னைகளும் திருப்பூரில் அதிகரித்துள்ளன. குறிப்பாக, தற்கொலைச் சாவுகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன. இனி என்ன ஜாலியாக அம்மாவின் பெயரால் "அம்மா  தற்கொலை கடைகள்"  ஆரம்பிக்க வேண்டியதுதானே ?

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி ? மோடி முயற்சி !

பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசுக்கு, இன்சூரன்ஸ் மசோதா விஷயத்தில், முதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்சூரன்ஸ் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது.
விரைவில் மசோதா:இன்சூரன்ஸ் துறையில், தற்போது 26 சதவீதம் வரை மட்டுமே, வெளிநாட்டு முதலீடு களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை, 49 சதவீதமாக உயர்த்தும் மசோதா, பார்லிமென்டில் கொண்டு வரப்படவுள்ளது.ராஜ்யசபாவில், இன்று, இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.  இந்த மசோதாவை எல்லா கட்சிகளும் எதிர்த்து மண்ணாக்க வேண்டும். அது அவர்கள் இந்தியாவிற்கு செய்த பெரிய உதவியாக இருக்கும். இது நாள் வரை நீங்கள் அடித்த கொள்ளைக்கு இது பரிகாரமாக இருக்கலாம்.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

அருந்ததி ராய் : யார் மகாத்மா ? காந்தியை விட அய்யன்காளியே அதற்கு பொருத்தமானவர் !

கேரளப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சொற்பொழிவின்போது மகாத்மா காந்தி குறித்து அவதூறான கருத்தை வெளியிட்டதாக எழுத்தாளர் அருந்ததி ராய் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரின் பேச்சு அடங்கிய வீடியோவை அளிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தை போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக்கழகத்தில் 19-வது நூற்றாண்டில் தலித் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர் அய்யன்காளியின் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், மகாத்மா காந்தியை பற்றி விமர்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அருந்ததி ராய் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோட்டயத்தைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் மாநில டி.ஜி.பி.யிடம் புகார் மனு அளித்தார்.

நட்வர்சிங்கை விட பிரணாப் முகர்ஜியிடம் அதிக ரகசியம் உள்ளது ! சர்மிஷ்தா முகர்ஜி :ஆனால் அப்பா பண்பானவர் !

நட்வர் சிங்கிடம் உள்ளதை விட அதிக அளவிலான விவரங்கள், தகவல்கள், ரகசியங்கள் எனது அப்பாவின் டைரிகளில் உள்ளன. ஆனால் என் அப்பா அவரைப் போல நடந்து கொள்ள மாட்டார். நம்பிக்கைத் துரோகம் சரியல்ல என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா கூறியுள்ளார். மறைந்த ராஜீவ் காந்தி குறித்தும், அவரது மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி குறித்தும் பல்வேறு பரபரப்புத் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நட்வர்சிங். இது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இதற்குப் பதிலடியாக தானும் சுயசரிதை எழுதி உண்மைகளை வெளியிடப் போவதாக சோனியா காந்தி கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இன்னொரு முன்னாள் முக்கிய காங்கிரஸ் தலைவரும், குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது தந்தை, முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் மாதிரி நடந்து கொள்ள மாட்டார். அவர் காங்கிரஸில் இருந்தபோதும், அரசில் இருந்தபோதும் நடந்ததை வெளியில் சொல்ல மாட்டார்

காதல்கதைகளுக்கு தாவிய இயக்குனர் சேகரின் சரவணா பொய்கை !

குடும்ப கதை மட்டுமே தன் பாணி என்று படமெடுத்து அத்தனையிலும் வெற்றிவாகை சூடியவர் இயக்குனர் வி.சேகர்.>அவரது மகன் கார்ல் மார்க்ஸ் நடிப்பில் உருவாகிவரும்  சரவண பொய்கை பற்றி பேசிய வி.சேகர் “நாம் எல்லோரும் குடும்பதிற்காகத் தான் வாழ்கிறோம். குடும்பத்திற்காக தான் உழைக்கிறோம். எதிர்கால சிந்தனை கூட கும்பதிற்காக மட்டுமே. ஓவொரு குடும்பத்தில் நடக்கிற விஷயங்களை பதிவு செய்கிற போது அது தங்கள் வீட்டு நிகழ்வு போல் நினைத்து என் படங்களை வெற்றி பெற செய்தார்கள். இதுவரை குடும்ப படங்களை மட்டுமே இயக்கிய நான் என் மகனை வைத்து எடுத்திருக்கும் காதல் கதைதான் ’சரவண பொய்கை’.

தஸ்லீமா நஸ்ஸிரின் விசாவை நீடிக்க தாமதம் ஏன் ? ராஜ்நாத்சிங் தஸ்லிமா பேச்சுவார்த்தை !

இந்தியாவில் ஓராண்டு தங்குவதற்கு விசா மறுக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த, சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற அந்தச் சந்திப்புக்குப் பிறகு, தஸ்லிமா நஸ்ரீன் தனது டுவிட்டர் இணையதளப் பக்கத்தில், "உங்கள் துயர நாள்கள் முடிவுக்கு வரும் என ராஜ்நாத் சிங் கூறினார்' என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஓராண்டு காலம் தங்குவதற்கு அனுமதி கேட்டு உள்துறை அமைச்சகத்திடம் தஸ்லிமா நஸ்ரீன் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவர் இரண்டு மாதம் மட்டும் தங்குவதற்கு விசா வழங்கப்பட்டது.
இதுகுறித்து, உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "தஸ்லிமாவின் விசா மனுவை சரிபார்க்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. அதுபற்றி முடிவு எடுப்பதற்கு கால தாமதமாவதால், அவருக்கு இரண்டு மாத விசா வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலையடுத்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா ஆகிய நாடுகளில் வசித்து வருகிறார். dinamani.com

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி எப்போது?

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 14 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா? என்ற ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.

நடப்பு கல்வியாண்டில்: தமிழகத்தில், கடந்த, 2011ம் ஆண்டு முதல், ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா, ஐந்து தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்பு துவங்கப்பட்டது. இத்திட்டம் படிப்படியாக, கடந்த கல்வியாண்டு முதல், உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது.   அரசு உதவி பெரும் பள்ளிகள் அரசு பள்ளிகளுக்கு போட்டியாகிவிடும், என்றும் , பிறகு அரசு பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு வந்து விடும் என்றும் அரசு எண்ணுவதால் ஆங்கில வழி போதனைக்கு இன்னமும் அனுமதி கொடுக்காமல் தாமதிக்கிறது.. அதுமட்டுமல்லாமல் தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படுமே என்று என்னும் அரசு. ஒரே வழி அரசு பள்ளிகளில் அரசியல்வாதிகள் பணக்காரர்கள் பிள்ளைகள் படிக்கும் நிலை வர வெண்டும்?

திமுகவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கூட்டங்கள் ஏற்பாடு செய்ய அம்மா உத்தரவு !

சட்டசபையை பற்றி திமுக  மக்கள் மத்தியில் கூறும்  குற்றச்சாட்டுக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அம்மா நினைக்கிராகளாம் அதனால அவுக அடிமைகளும் கூட்டம் போடணும்னு உத்தரவு !
சென்னை: தி.மு.க., சார்பில் நடத்தப்படும் கண்டன பொதுக் கூட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த பகுதிகளில் பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைக் கூட்டம் நடத்த, அ.தி.மு.க.,வினர் முடிவு செய்துள்ளனர்.நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே, கடும் மோதல் ஏற்பட்டது. அமைச்சர்கள் பேசும்போது, கருணாநிதியை விமர்சிப்பதையே வாடிக்கையாக்கினர். ரத்தத்தி்ன் ரத்தங்களே அம்மாவின் அடிமைகளே சட்ட சபையில் நாங்கள் எல்லாம் மேசையை தட்டிக்கொண்டும் சீட் முனையில் அமர்ந்து அம்மாவிடமிருந்து சிகனல் வரும்போதெல்லாம் தடதடவென பெஞ்சை தட்டும் பணியை செவ்வனே செய்து வருகிறோம் அனைத்து அமைச்சர்களின் சார்பாக அம்மாவே பேசி சாதனை புரிகிறார் கருணாநிதி்யை கன்னாபின்னாவென தி்ட்டுவதற்கு மட்டும் போட்டி போட்டுக்கொண்டு அமைச்சர்கள் எழுந்து பேசி அம்மாவை மகிழ்விக்கிறார்கள் இதுபோன்ற சாதனையை காண சகிக்காமல் தி்முகவினர் வெளியே போய்விடுகிறார்கள் என பேசுவார்களா

ராஜினமா நாடகம் போட்ட ஸ்டாலின் வேட்பாளர்களிடம் வாங்கிய பணத்தில் ஒரு பகுதியாவது திருப்பி கொடுதாரா ?

திமுகவில் நடக்கும் இந்த பதவி சண்டை..ஓர் குடும்ப பிரச்சினையாக மாறிவிட்டது. அந்த காலத்து மொகலாய மன்னர் பதவி சண்டையை போல கிட்டத்தட்ட ஆகிவிட்டது. இந்த விஷயத்தில் எனது ஆதரவு கருணாவுக்கே. ஏன் என்றால்..ஸ்டாலினுக்கு எவ்வளவோ சந்தர்ப்பம் கொடுத்து பார்த்தார்..ஆனால் அவரால் மக்களின் மனதை வெல்ல இயலவில்லை. சென்னை மாநகராட்சி தேர்தலை தில்லுமுல்லு நடத்தி உலகே சிரித்தாலும் கவலையே படாமல்..ஜெயிக்க வைத்து புதிதாக ஓர் மேயர் என்கிற பதவியை உருவாக்கி கொடுத்தார்..என்ன ஆச்சு..அதற்கு பின்னர்தான் திமுக சென்னை முழுக்க தோல்வியை சந்தித்தது..மறுக்க முடியுமா? சரிதான் விடுங்கள்..தனது மூத்த மகனையே இவருக்காக எனது மகனே இல்லை என்று அறிவித்து..பாராளுமன்ற தேர்தல் பொறுப்பை ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்..என்ன ஆச்சு..? வேட்ப்பாளர்கள் தேர்வில் பணத்தை எண்ணினாரே தவிர..கட்சியின் வெற்றியை எண்ணிப்பார்த்தாரா? தேர்தல் தோல்வி முடிந்ததும்..வேட்ப்பாளர்கள் வீடு ஏறி வாங்கிய பணத்தில் ஒரே ஒரு பகுதிய திரும்ப தாருங்கள் என்று கேட்டதும்..ராஜினாமா நாடகத்தை கையில் எடுத்து நாடகம் ஆடினாரே அன்றி பணத்தில் ஒரு பகுதியை திரும்ப ஒப்படைத்தாரா? அவரது பேச்சை தொடர்ந்து கேட்டுப்பாருங்கள்..எழுதி வைத்து படிப்பார்..விஷய ஞானம் இல்லாத அதே பேச்சு..என்கிற காரணத்தால்..என்கிற வாரத்தையை மூச்சுக்கு முன்னூறு முறை ஒப்புவிப்பார்..கையை நீட்டி ஏதோ வித்தைக்காரன் பேச்சுபோல இருக்குமே அன்றி ரசிக்கும்படியோ..அல்லது புரியும்படியோ..ஹ்ம்ம் ஒரு எழவும் புரியாது. அம்மாஞ்சி என்பார்களே அந்த வாரத்தைக்கு உரியவர் ஸ்டாலின். தந்தை என்கிற பொறுப்பில் இருந்து கருணாவின் எண்ணம் ஸ்டாலினை பற்றியது சரிதான்..தளபதி என்றால் ஒருவித எழுச்சியோடு பணியாற்றுவார்கள்..இவருக்கு எனக்கு தெரிந்தே 40 வருட அனுபவம் இருக்கும்போல..இன்னமும் உருப்படாத பேச்சை வைத்து எப்படி இவரால் அரசியலில் பிரகாசிக்க முடியும். திணிக்கப்படுகின்ற வாரிசுகள் ஜொலிப்பதில்லை என்பதை இவரது அரசியலை வைத்தே கணித்து விடலாமே..பட்டங்கள் எல்லாம்..அவரது ஜால்ராக்கள் மூலம் இதனை விட பெற்றிட முடியும்..பிரயோஜனம்..? அப்பா 40சதம் கட்சியை அழித்தால் என்றால்..மிச்சத்தை ஸ்டாலின் அழித்துக்கொண்டு வருகின்றார்..  dinamalar.com
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

கலைஞர் திமுகவின் இதர தலைவர்களையும் தளபதிகள் என்று அழைத்தார் ! அப்ப ஸ்டாலின் ?

தி.மு.க., உட்கட்சி தேர்தல் முடிந்ததும், அடுத்த மாதம் தி.மு.க., பொதுக்குழு நடைபெற உள்ளது. அந்த பொதுக்குழுவில், கட்சியின் தலைவர் பதவியிலிருந்து, கருணாநிதி விலகிக் கொண்டு, பொருளாளர் ஸ்டாலினுக்கு, அப்பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள், வலியுறுத்தி வருகின்றனர்.
ரசிக்கவில்லை:இப்படியொரு கோரிக்கை ஸ்டாலின் ஆதரவாளர்களால் எழுப்பப்பட்டு வருவதை கருணாநிதி துளியும் ரசிக்கவில்லை. ஆரம்பத்தில் இந்த கோரிக்கை தொடர்பாக, கண்டும் காணாமல் இருந்தவர், சமீப நாட்களாக மறைமுகமாக இந்த கருத்தை எதிர்த்து வருகிறார்.'சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பில், கடந்த 31ம் தேதி, சென்னை தி.நகரில் தி.மு.க., சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடந்தது.அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், கருணாநிதி. அப்போது, தன் உள்ளக் கிடக்கையை அவர் மறைமுகமாக கோடிட்டு காட்டிப் பேசினார்.'என் வாழ் நாள் முழுவதும், நான்தான் கட்சியின் தலைவராக நீடிப்பேன்' என்பது போல அவர் பேசினார்.அதோடு, முன்னாள் அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.,க்களையும் மேடையில் ஏற்றி அமர வைத்துக் கொண்ட கருணாநிதி, ஸ்டாலின் முன்பாகவே அவர்கள் அனைவரையும் 'தளபதிகள்' என அழைத்துப் பேசி, ஸ்டாலின் தரப்பினரை கடும் அதிருப்திக்குஉள்ளாக்கினார்.'