சனி, 18 மே, 2013

அன்டா செல்லில் சஞ்சய் தத் மூச்சுவிடக் கூட முடியாதபடி சிரமப்படுகிறார்.

மும்பை: அஜ்மல் கசாப் இருந்த அண்டா செல்லில் தன்னை அடைத்து வைத்திருப்பது சிரமமாக உள்ளதாகவும், காற்றோட்டமாக ஒரு அறை தரவேண்டும் என்றும் நடிகர் சஞ்சய் தத் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் சஞ்சய்தத் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் மும்பை தடா கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். தடா கோர்ட்டில் இருந்து ஆர்தர் ரோடு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஒரு மாதத்திற்கு வீட்டு சாப்பாடு, மெல்லிய படுக்கை விரிப்பு, தலையணை மற்றும் மருந்துகள் வழங்குவதற்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்பின்னர் அவருக்கு இந்த சலுகை தொடருமா என்பதை சிறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். இதேபோல் சிறையில் மின்னணு சிகரெட்டுகளை புகைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சஞ்சய் தத் மனு செய்திருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிறையில் சுதந்திரமாக நடமாடவும், தன் குடும்பத்தினர் தன்னை சந்திக்கவும் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கோரிக்கை தொடர்பாக கோர்ட் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்நிலையில் சஞ்சய் தத்தின் தனது சிறைவாசத்தின் முதல் நாள் இரவு அனுபவம் தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரவு 11 மணியளவில் சிறையில் அவருக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சஞ்சய் தத் அழைத்துச் செல்லப்பட்டார். வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட உணவை சாப்பிட்ட பின்னர், குடிப்பதற்கு அவர் தண்ணீர் கேட்டார். சிறை அதிகாரிகள் ஒரு பாட்டிலில் தண்ணீர் தந்தனர். அதன் பின்னர், தூங்கச் சென்ற சஞ்சய் தத், இரவு முழுவதும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்ததாகவும், சில முறை எழுந்து உட்கார்ந்தபடியே இருந்ததாகவும் சிறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

உதயநிதியின் Hummer காரை திருப்பி கொடுத்தது சி பி ஐ

சென்னை: வெளிநாட்டு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்ட ஹம்மர் கார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியிடம் திருப்பி கொடுக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்ததாக கடந்த மார்ச் மாதம் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னையில் மு.க. ஸ்டாலின், அவர் நண்பர் ராஜா சங்கர் உள்ளிட்டோர் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஸ்டாலின் வீட்டில் இருந்த ஹம்மர் ரக காரை ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் வைத்திருந்தது தெரியவந்தது. மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க., வெளியேறிய மறுநாளே நடைபெற்ற இந்த சோதனை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிபிஐ நடவடிக்கைக்கு மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

நாஞ்சில் சம்பத்தின் வாய் பாரீர் : காக்கை புட்டி பேர்வழி, அழுக்கு..இழுக்கு

சென்னை: தேமுதிக தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தை 'பேட்டை பிஸ்தா, புட்டி பேர்வழி, காக்கை, மாயாஜால பேர்வழி' என்ற அடைமொழிகளால் கடுமையாக விமர்சித்திருக்கிறார் அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத். ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழில் விஜயகாந்த்தை விமர்சித்து நாஞ்சில் சம்பத் அளித்திருக்கும் பேட்டியில் கூறியுள்ளதாவது: தண்ணியடிப்பவன் படம் இதுவரை விஜயகாந்த் மட்டும்தான் பிதற்றி வந்தார். இப்போது பிரேமலதாவும் தொடங்கிவிட்டார்.

பயணி i phone பயன்படுத்தியதால் திசைமாறி சென்ற விமானம்!

iPhones on Planes Blamed for Navigation Disruption ... moment where our heading problem was solved,” the unidentified co-pilot told
 விமானப் பயணி ஒருவர் விமானம் பறந்து கொண்டு இருக்கும்போது ஐ-போன் பயன்படுத்தியதால், அமெரிக்க விமானம் ஒன்று பல கி.மீ. திசைமாறி சென்றிருக்கிறது.
புளும்பர்க் வர்த்தக செய்தித்தளம் வெளியிட்டுள்ள இந்த தகவலின்படி, பயணி பயன்படுத்திய ஐ-போன் சிக்னல்கள் விமானத்தின் திசைகாட்டும் கருவியையின் செயல்பாட்டை குழப்பிய காரணத்தாலேயே இந்த நிலை ஏற்பட்டது. அதையடுத்து விமானம் செல்ல வேண்டிய திசையில் இருந்து விலகிச் சென்றிருக்கிறது.
அமெரிக்க விமானத்தின் 9-ம் வரிசை சீட்கள் ஒன்றில் இருந்த பயணி தனது ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை கவனித்த விமானப் பணியாளர், அதை நிறுத்துமாறு கூறியிருக்கிறார். ஆனால், அதற்குள் போன் சிக்னல்கள் ஏற்படுத்திய தாக்கம், விமானத்தை திசைமாறி செல்ல வைத்துவிட்டது.
விமானத்தில் அதிகளவு எரிபொருள் நிரப்பப்பட்டிருந்த காரணத்தால், மீண்டும் சரியான திசையில் திரும்பி செல்ல வேண்டிய விமான நிலையத்துக்கு செல்லக்கூடியதாக இருந்தது. அதே நேரத்தில், தற்போது அனேக ‘லோ-காஸ்ட்’ விமான நிறுவனங்கள், தமது விமானங்களுக்கு தேவைக்கு அதிகமாக உபரி எரிபொருள் நிரப்புவதில்லை.
viruvirupu.com

திருப்பூரில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் கண்டுபிடிப்பு

Excavations also came out with ancient iron objects such as Arrow heads and Swords. Also they have collected Roman artefacts, iron melting furnaces, beads, shell bangles and pottery with the Tamil Brahmi scripts from the habitation deposits and burials. The ancient The other collections from the excavation of this site includes Roulette Pottery, Roman Silver Coins, and Gold and Silver Spirals. And a Bronze Statue of a Lion and an Iron melting furnace were the important one's helpful in deciding the past histor
The city played a major role in Indo-Roman trade and relations, as the ancient city is located on the mid-way of a Roman Trade Route, linking Muziris Port i.e. Pattanam on the Malabar Coast with the Kaveripoompattinam (Puhar) Port in the Coromandel Coas  திருப்பூர்-ஈரோடு மாவட்ட எல்லையிலுள்ள கொடுமணல் கிராமம் 2,500 ஆண்டுகளுக்கு முன் வணிக பெருநகரமாக விளங்கியதற்கான ஆதாரங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்துள்ளன. திருப்பூர்-ஈரோடு மாவட்ட எல்லையில் நொய்யல் ஆற்றின் கரையில் உள்ளது கொடுமணல் கிராமம். சங்க காலத்தில் வணிக பெருநகரமாக, பதிற்றுப்பத்தில், "கொடுமணம்பட்ட... வினைமான் அருங்கலம்' என்ற பாட்டில் மிகச் சிறந்த தொழிற்கூடங்கள் அமைந்திருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இது, சேர மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், வணிக தொடர்புக்கு பயன்பட்ட மேலைக்கடற்கரை துறைமுகமான முசிறி பட்டணத்தையும் இணைக்கும் கொங்கப்பெருவழி'யில் அமைந்துள்ளது.

தனுஷுக்கு சோனம் கபூர் ஹிந்தியில் மொழிபெயர்ப்பு

அப்போது ஒரு ரசிகர் ‘நீங்கள் ரஞ்சனாவில் பிரபுதேவா போல் நடனமாடி இருக்கிறீர்கள்’ என்று கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய தனுஷ் “ நான் அப்படியெல்லாம் சூப்பராக நடித்துவிட்டதாக நினைக்கவில்லை.என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன். இயக்குனர் எதிர்பார்த்ததை கொடுக்கவே மிகவும் கஷ்டப்பட்டேன். பிரபுதேவாவிற்கு இணையாக நான் நடனமாடியதாக வெளியில் சொன்னால் சிரிப்பார்கள். நான் எவ்வளவு கற்றுக்கொண்டு எப்படி ஆடினாலும் அவருக்கு ஈடாகமுடியாது. உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் அவருக்கு இதைக்கேட்டதும் ஹார்ட் அட்டாக் கூட வந்துவிடும்.பிரபுதேவாவுடன் என்னை சமமாக வைப்பது அவரை அவமானப்படுத்துவதாகும்” என்றுகூறினார். இந்நிகழ்ச்சியின் போது ரசிகர்கள் இந்தியிலும் கேள்விகள் கேட்டதா இந்தி தெரியாமல் தினறிய தனுஷுக்கு சோனம் கபூர் அருகிலேயே இருந்து மொழிப்பெயர்த்து உதவிக்கொண்டிருந்தார்.

வெள்ளி, 17 மே, 2013

ஜால்ராக்களால் அழிந்தவர்களின் Flashback க்குகளை பாருங்கள் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களே !


தமிழக சட்டப்பேரவையில் புகழ் பாடுகிறவர்களைத் தவிர வேறு யாரும் பேச முடியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாற்றியுள்ளார்.சென்னை, கோபாலபுரத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, மதுரையில் தமிழ்த்தாய் சிலை வைக்க ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளனர். ஆனால், எல்லா நாடுகளிலும் தாய் மொழி பயிற்று மொழியாக ஆக்கப்படும் காலகட்டத்தில், தமிழகம் மட்டும் விதிவிலக்காக இருக்கிறது. தமிழக அரசின் சார்பில் ஆங்கிலக் கல்வியைப் புகுத்தப் போவதாக கூறியுள்ளனர்.தமிழ்த் தாய்க்குச் சிலை வைப்பதும், ஆங்கிலத்தைப் பாட மொழியாக ஆக்க முயற்சிப்பதும் எவ்வளவு முரண்பாடானவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.>எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பேரவைக்கே போக முடியாத நிலை இருக்கிறது. பேச வேண்டும் என்று சட்டப்பேரவைக்கு செல்வோருக்கு அங்கு வேலை இல்லை. 110வது விதியின்படி ஓர் அறிக்கை படித்தால் அதில் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபு.அந்த மரபைத் தங்களுக்குச் சாதகமான கருவியாக வைத்துக் கொண்டு, 110வது விதியின் கீழ் அறிக்கை படிக்கின்றனர். அரசியல் தெரிந்த நண்பர்கள் பேரவையில் இருக்கின்றனர். அவர்கள் கூட இது பற்றியெல்லாம் வாய் திறக்கவில்லை என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று கருணாநிதி கூறினார்.<

ஜாதிவெறியர்கள் கவனத்திற்கு! பேஸ்புக்கை அவமதிக்க வேண்டாம்! Facebook கிற்கு பரம்பரை ஒன்றும் இல்லை

ஜாதிவெறியில் திளைத்து, ஜாதி மறுப்புத் திருமணம் வேண்டாம்; காதல் திருமணம் கூடாது என்று முகநூலில் (Facebook) கருத்துக்களை வெளியிடும் அன்பர்களுக்கு சில செய்திகள் பகிர விரும்புகிறோம்.இன்று பேஸ்புக் உரிமையாளரும் அதை உருவாக்கியவருமான மார்க் எல்லேய்ட் ஜுக்கர்பெர்க் -இன் பிறந்த நாள். மார்க் எல்லேய்ட் மே 14 1984 ஆண்டு பிறந்தார்.அமெரிக்கரான இவர், வியட்னாம் நாட்டிலிருந்து தனது தாய் தந்தையை இழந்து சீனத்தம்பதிகளின் அரவணைப்பில் அகதியாக அமெரிக்கா வந்து குடியேறிய பிரிஸ்கில்லா சான் என்ற 18 வயது பெண்ணை காதலித்து மணந்தவர். சான் என்பது அவரை வளர்த்த சீன தம்பதியினரின் குடும்பப்பெயர், பிரிஸ்கில்லா என்பது அவர் படித்த பாடசாலையில் வைத்தபெயர்.திருமணத்திற்கு பிறகு மருத்துவம் படித்து அகதிகளுக்கு சேவை செய்யவிருக்கிறார் சான். மார்க், பிரிஸ்கில்லா இருவருமே மத நம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்.உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்து, ஒரு அகதியாக வளர்ந்து, நாடு விட்டு நாடு வந்த பெண்ணைத் திருமணம் செய்யும் மார்க், தற்போது நெம்பர் 1 இளம் பணக்காரர். மேலும் உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர்.அவர் உருவாக்கிய முகநூலில் ஜாதிவெறி, மதவெறியைப் பரப்பி இத்தம்பதிகளை இழிவுபடுத்த வேண்டாம் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த வேற்று நாடு, இனம், மதம், மொழியைச் சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்யும் 29 வயதே ஆன மார்க் எங்கே? நாங்கள் ஆண்ட பரம்பரை, அந்தப் பரம்பரை, ஆதிக்க ஜாதி, மேல் ஜாதி என்று கொலைவெறியில் திரியும் இவர்கள் எங்கே?

ஆயதுல்லாக்களின் சாம்ராச்சியக் கனவு !

muslims-prayingதேசீய முன்னணியின் அடைப்பக்காரர்கள் அதன் சகல திட்டங்களையும் ஆதரித்து ஆயிரம் விளக்கங்கள் கொடுக்கிறார்கள். இவர்கள் – ஆளும் வர்க்க ஊதுகுழல்களான பத்திரிக்கைகள், அறிவுஜீவிகள் – பாப்ரி மஸ்ஜித் பிரச்சனைக்கு முன் வைக்கப்படும் பேச்சு வார்த்தைகளையும் ‘ஆகா’ என்று கொண்டாடுகிறார்கள். பேச்சு வார்த்தைகளோ, கமிஷன்களோ பாப்ரி மஸ்ஜித் பிரச்சனையைத் தீர்த்துவிடுமா? தீர்க்குமென்றே வைத்துக் கொண்டாலும், அதுவே இந்து முஸ்லீம் பிரச்சனைகளைத் தீர்த்துவிடுமா? ஒற்றுமை வந்துவிடுமா?
பாப்ரி மஸ்ஜித் மட்டுமல்ல, எல்லா சமூகப் பிரச்சனைகளையுமே அவர்கள் இப்படித்தான் பார்க்கிறர்கள். 1857 சுதந்திர எழுச்சியையே மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்புப் பிரச்சனையாக, இந்து – முஸ்லீம் கலகமாகச் சித்தரிக்கிறார்கள். பள்ளிகளில் ‘சிப்பாய்க் கலகம்’ என்று நமக்குக் கற்றுத்தருகிறார்கள்.

மாணவன் தலையை சுவற்றில் முட்டி மாணவன் பலி!ஆசிரியர் கைது

கொல்கத்தாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவனின் தலையை பல முறை சுவற்றில் இடித்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொல்கத்தாவில் ஒரு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் பாப்பி ஜோர்தர் என்னும் 9 வயது சிறுவனை, அப்பள்ளியில் பணிப்புரியும் பெண் ஆசிரியர் ஒருவர் தண்டித்தது விபரீதத்தில் முடிந்துள்ளது.கடந்த புதன்கிழமை அன்று வகுப்பறையில் தனது நண்பனுடன் வாக்குவாதத்தில் ஜோர்தர் ஈடுப்பட்டதை கண்டிப்பதற்காக, அப்பள்ளியில் 4 வருடங்களாக பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், சிறுவனின் தலையை சுவற்றில் பலத்தடவை முட்டியுள்ளார்.இதனால் பலத்த காயமடைந்த அச்சிறுவன் மருத்துவர்களின் பரிந்துரையின்படி, கொல்கத்தாவில் உள்ள தேசிய மருத்துவ கல்லூரியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அச்சிறுவன் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சிறுவனின் மரணத்திற்கு காரணமாக இருந்த பள்ளி ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிரிக்கெட் சூதாட்டம்:கடிகாரத்தை திருப்புவது, சிறிய டவலை பேண்ட் பாக்கெட்டில் திணிப்பது என புக்கிகளுக்கு சிக்னல்


புதுடெல்லி: சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள்,  தங்களது கைக்கடிகாரத்தை திருப்பியும், டவலை பாக்கெட்டில் திணித்தும் புக்கிகளுக்கு சிக்னல் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா மற்றும் இடைத்தரகர்கள் 7 பேர், டெல்லி காவல்துறையினரால் மும்பையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டனர். < இந்நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும், புக்கிகளுக்கும் இடையே எவ்வாறு தகவல் சமிக்ஞைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்பது குறித்த தகவலை டெல்லி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீசாந்த், சாண்டிலாவுக்கு 3 முறை பெண்களை சப்ளை செய்த புக்கிகள்

டெல்லி: பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஐபிஎல் ஸ்பாட்
பிக்சிங் விவகாரத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு பெண்களையும் புக்கிகள் சப்ளை செய்ததாக டெல்லி போலீசார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர். நடப்பு ஐபிஎல் 6வது கிரிக்கெட் தொடரின் கரும்புள்ளியாக ஸ்பாட் பிக்சிங் விவகாரம் அமைந்திருக்கிறது. டெல்லி போலீஸ் அதிகாரி பத்ரீஷ் தத்தின் மர்ம மரணத்தின் மூலம் அம்பலத்துக்கு வந்த கிரிக்கெட் மோசடியில் அடுத்தடுத்து புது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சிக்கிய புக்கிகளான மனான் மற்றும் சந்த் ஆகிய இருவரும் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலா ஆகியோருக்கு 3 முறை பெண்களை "ஏற்பாடு" செய்து கொடுத்ததாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது சிக்கியுள்ள தொலைபேசி உரையாடல்களில் "சப்ளை" செய்யப்பட்ட பெண்கள் அனுப்பி வைக்கப்பட்ட மற்றும் சென்றடைந்த நேரங்கள் பதிவாகி இருக்கின்றன என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம்: Facebook கில் பதிவு இடுவோரை அனுமதி இல்லாமல் கைது செய்ய முடியாது

டெல்லி: சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கருத்துகளை பதிவிடுவோரை
இந்த வழக்குகள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் கருத்துக்களுக்காக கைது செய்யும் விவகாரத்தில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி உயர் போலீஸ் அதிகாரியின் அனுமதியைப் பெற்றுதான் கைது செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பாலியல் தொழிலாளியாக ஸ்ருதிஹாசன் D-Day திரைப்படத்தில்

இதற்கு முன்பு இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்காததால், தனது
முயற்சியை ரசிகர்கள் எந்த விதத்தில் எடுத்துக்கொள்வார்கள் என்றபயத்துடன் இருந்தார் ஸ்ருதிஹாசன். ஆனால் D-Day திரைப்படத்தில் வந்த படத்தை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசனை பாராட்டினார்களாம். இதுபற்றி தனது டுவிட்டர் வலைதளத்தில் ஸ்ருதிஹாசன் “ ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி. அந்தக் கதாபாத்திரத்தை கஷ்டபட்டு சவாலாக எடுத்து நடித்தேன். அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார். மும்பையில் நடக்கும் தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான தீவிரவாதியைக் கண்டுபிடிக்க ஒரு ரா அதிகாரி நியமிக்கப்படுகிறார்.அந்த ரா அதிகாரி மேலும் நடக்கவிருக்கும் குண்டுவெடிப்பை தடுப்பதுடன், தான் காதலிக்கும் பாலியல் தொழிலாளியையும் எப்படி கைபிடிக்கிறார் என்பதே இத்திரைப்படத்தின் கதையாம். இது ஒரு பழைய பிரஞ்சு படத்தின் தழுவலுங்கோ

தமிழ்த் தாய்க்கு சிலை:ஆங்கில பாடமொழியா?

சென்னை: தமிழ்த் தாய்க்கு சிலை வைப்பதாகக் கூறிவிட்டு, ஆங்கிலத்தைப் பாட மொழியாக்க முயற்சிப்பது ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது பேட்டி:தமிழ்த் தாய் சிலை அமைக்க, 100 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தாய்மொழி எல்லா நாடுகளிலும் பயிற்று மொழியாக ஆக்கப்படும் காலக்கட்டத்தில், தமிழகத்தில் அரசின் சார்பில், ஆங்கிலக் கல்வியைப் புகுத்தப் போவதாக விளக்கம் அளித்துள்ளனர். தமிழ்த் தாய்க்கு சிலை வைப்பதும், ஆங்கிலத்தைப் பாட மொழியாக ஆக்க முயற்சிப்பதும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது.சட்டசபையில் பேச விரும்புவோருக்கு வேலை இல்லை. ஒவ்வொரு நாளும், 110வது விதியின் கீழ் அறிக்கையைப் படித்து விட்டுப் போய் விடுகின்றனர். இதிலே விஷயம் அறிந்த, அரசியல் தெரிந்த, எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் இருக்கின்றனர். அவர்கள் கூட இதுப்பற்றி வாய் திறக்கவில்லை என்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

எழும்பூர் கோர்ட் வளாகத்தில் அரிவாளால் வெட்டினார்

சென்னை எழும்பூர் கோர்ட் வளாகத்தில், கொலை வழக்கில் தொடர்புடையவரை, சக குற்றவாளி அரிவாளால் வெட்டினார். சென்னை, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி, இ-பிளாக்கை சேர்ந்தவர், சலீம், 42; கடை நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் சங்கத் தலைவர், ரபீக் ராஜாவுக்கும், 40, தண்ணீர் பந்தல் திறப்பு விழா, பேனர் வைப்பது தொடர்பாக, தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, சலீம் உள்ளிட்டோர் சேர்ந்து கடந்த, 2010ல், ரபீக் ராஜாவை கொலை செய்தனர். இதில் சலீம், மூர்த்தி, அண்ணாதுரை, 39, அக்பர் பாஷா, உசேன், காதர் பீவி ஆகிய, ஆறு பேர் மீது, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு, எழும்பூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

திருமண அழைப்பிதழ் 15 ஆயிரம் ரூபா! தேவ கௌடாவின் ஜனதா தள ரெட்டி வீட்டு கல்யாணம்

This event is going to be one big-fat wedding and even by Bellary standards. If invitation is any indication of what is in store for guests, other marriages in the recent past may pale into insignificance.
Each invitation card printed for the wedding of Bellary JD (S) leader and mining baron N R Suryanarayana Reddy's son is said to be costing a whopping Rs 15,000
பெல்லாரி : பெல்லாரி சுரங்க அதிபரும், தேவகௌவுடாவின், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான சூரிய நாராயண ரெட்டி, தன் மகன் சரத் திருமண அழைப்பிதழை தயாரிக்க, அழைப்பிதழ் ஒன்றுக்கு, 15 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார். அழைப்பிதழ்களை தயாரிப்பதில் புகழ் பெற்ற, மும்பை ரவீஷ் கபூர் பிரின்டர்ஸ் நிறுவனத்தில், இந்த அழைப்பிதழ்களை தயாரித்துள்ளனர். இவர்கள், ஏற்கனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தொழிலதிபர் ராஜ்குந்த்ரா, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ஆகியோரின் திருமண அழைப்பிதழை தயாரிக்க, அழைப்பிதழ் ஒன்றுக்கு, 12 ஆயிரம் ரூபாய் கட்டணமாக பெற்றுள்ளனர்.

வியாழன், 16 மே, 2013

ஹெலிகொப்டர் மூலம் ஆப்பிள் தோட்டத்திற்கு உஷ்ணம் ஏற்றும் கனடா விவசாயி

 Canadian Apple Farmer Uses Helicopter to Save Crops from Frost

கனடா நாட்டு தலைநகர் ஒட்டாவா அருகே உள்ள ஆப்பிள் தோட்டம் ஒன்றில் இந்த வாரம் குளிர் அதிகமானதை அடுத்து, ஹெலிகாப்டரை தருவிக்க வேண்டிய நிலை, ஆப்பிள் தோட்டக்காரருக்கு ஏற்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பனிப்படலம் மூடிக்கொள்ளும் என்ற காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தோட்டக்காரர் ஃபில் லியாலுக்கு வேறு வழி இருக்கவில்லை. ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து, அவரது ஆப்பிள் தோட்டத்தில் தாழப் பறந்து, ஆப்பிள் மரங்கள் மீது வெப்பக் காற்றை அடிக்க வேண்டியதாயிற்று. தோட்டக்காரர் ஃபில் லியால், “ஒரு நாள் இரவு ஆப்பிள் மரங்களை பனிப்படலம் மூடிக்கொண்டால், 90 சதவீத ஆப்பிள்கள் அழிந்து விடும். எனவே செலவு அதிகமானாலும், இந்த நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை” என்கிறார்.

தற்காலிக திருமணம் செய்து கொள்ளும் சீன மக்கள்

பீஜிங்: சீனாவில் 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை
செய்கின்றனர். அவர்களில் 80 சதவீதம் பேர் 21 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தேசிய புள்ளியியல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. உள்நாட்டிலேயே ஒரு இடத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் வேறு இடத்தில் பணி செய்ய செல்வதும், வெளிநாட்டினர் பலர் வேலை செய்ய சீனாவுக்கு வருவதும் அதிகரித்துள்ளது. இதுபோல் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் சொந்த ஊரை விட்டு பல மாதங்கள், பல ஆண்டுகள் வேலை செய்வதால் மன அழுத்தம், தனிமை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

Badri Seshadri:ஆங்கில கல்வியே இந்த காலகட்டத்தின் ஆன்மாவாக இருக்கிறது

ஜெர்மன் மொழியில் ஸெய்ட்கீஸ்ட் (Zeitgeist) என்ற வார்த்தை ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் அதனை spirit of the time என்று மொழிபெயர்க்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் ஆன்மா என்று இதனை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஆன்மாதான் அந்தக் காலகட்ட்த்தின் பல நிகழ்வுகளை வழிநடத்தும். ஒரு சமூகமே ஒரு குறிப்பிட்ட திசை நோக்கிச் செல்லும். சமூகத்தின் அனைத்துவிதமான விசைகளும் இந்தக் கருத்தியக்கத்துக்குக் கடுமையான வலு சேர்க்கும்விதமாக நடந்துகொள்ளும். அதற்கு எதிரான கருத்து கொண்ட தனி நபர்கள் இந்த அலையில் அடித்துச் செல்லப்படுவார்கள். அவர்களது மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்கான களம்கூட இருக்காது.
இன்று இந்தியாவில் ஆங்கில மொழி அப்படிப்பட்ட ஒரு கருத்தாக்கமாக உள்ளது. ஆங்கில மொழியைப் படித்துப் புரிந்துகொண்டு அதிலேயே பேசவேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆங்கிலத்தை ஒரு பாடமாக மட்டுமல்ல, அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலம் வழியாக மட்டுமே கற்றாகவேண்டும் என்று இன்று மக்கள் அனைவரும் நினைக்கிறார்கள். அதன் காரணமாகவே தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வி நிலையங்களில் சேர்க்கவேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். எத்தனை பணம் செலவானாலும் பரவாயில்லை என்கிறார்கள் பெற்றோர்கள்.

ஸ்ரீசாந்த் உட்பட மூன்று கிரிக்கெட் வீரர்கள் கைது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில், சூதாடுவோரிடம் கையூட்டு பெற்று, அவர்கள் விருப்பத்திற்கேற்ப விக்கெட் வீழ்த்தும் அல்லது பந்து வீசும் ஸ்பாட் ஃபிக்சிங் எனப்படும் குற்றத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் குழுவைச் சேர்ந்த கேரள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கித் சவான் ஆகியோர் வியாழன் அதிகாலை மும்பாயில் டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சூதாட்ட இடைத்தரகர்கள் ஏழு பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
53 ஒரு நாள் போட்டிகளிலும் 27 டெஸ்ட் பந்தயங்களிலும் விளையாடியிருக்கும் ஸ்ரீசாந்த் இதற்கு முன்னரும் சர்ச்சைகளில் சிக்கியவர். ஆனால் சூதாட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்குள்ளாக்குவது இதுவே முதல் முறை.

ராஜ் டிவி சகோதரர்கள் சகோதரி ராகினியின் சொத்துக்களை அபேஸ் செய்ததாக புகார்

ராஜ் டிவி சகோதரர்கள் மீது அவர்களின் சகோதரியே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, தி.நகர் டாக்டர் நாயர் சாலை பகுதியில் ராஜ் டிவி நிர்வாகிகளின் சகோதரி ராகினி வசித்து வருகின்றார். அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, என் தந்தை கே.என்.மணிசாமி பிள்ளை - தாயார் விசாலாட்சி ஆகிய இருவரும் இறந்துவிட்டனர். ஆனால் அவர்கள் உயிருடன் இருந்தபோது எங்கள் குடும்பத்துக்கு இலங்கையில் சொத்துகள் இருந்தது. அந்த சொத்துகளை விற்று என் தந்தையும், தாயும் சென்னையில் சொத்துகள் வாங்கினர். என்னுடன் உடன் பிறந்தவர்கள் 4 சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். என் தந்தையின் பணத்தை கொண்டு ராஜ் வீடியோ விஷன் மற்றும் ராஜ் டிவி என்ற நிறுவனங்கள் துவங்கப்பட்டது. மேலும், எனது தாயார் பெயரில் சென்னை அண்ணா சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சிவகங்கை மாவட்டம் சிங்கமனேரி உள்ளிட்ட இடங்களிலும், தந்தை பெயரில் கருங்குளத்திலும் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளது. ராஜ் வீடியோ விஷன் மற்றும் ராஜ் டிவியின் வருமானங்களை கொண்டு சகோதரர்கள் அவர்கள் பெயரில் நிறைய சொத்துகளை வாங்கி உள்ளனர்.

சஞ்சய் தத் இன்று நீதிமன்றில் சரணடைகிறார்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை ஆனால், இந்தியில் ஒப்புகொண்ட பல திரைப்படங்களை முடித்து கொடுக்காவிட்டால் தயாரிப் பாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்பதால், சரண் அடைய கால அவகாசம் கோரினார் சஞ்சய் தத். இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், அவர் சரணடைய 4 வாரம் அவகாசம் தந்தது. இதன்பின், சஞ்சய் தத் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு தள்ளுபடியானது.இதைத் தொடர்ந்து, சஞ்சய் தத் நடிக்கும் படங்களின் படபிடிப்பு முடியவில்லை என்றும், அவர் சரண் அடைவதற்கு மேலும் அவகாசம் தர வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

சேதுசமுத்திர திட்டத்தை முடக்குவது ஏன் ? அது திமுகாவின் திட்டம் என்பதால்தானே ?

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த அதிமுக ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடிக்காது! கலைஞர் கண்டனம்!
சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றிட மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்று திமுக சார்பில் தமிழகம் முழுவதும் 15.04.2013 புதன்கிழமை எழுச்சி நாள் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னையில் தங்கசாலை மணிக்கூண்டு அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் கலந்து கொண்டு பேசுகையில்,
சேது சமுத்திர திட்டம் திமுகவின் முயற்சியால் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை நிறுத்தியது மத்திய அரசு அல்ல. திமுகவுக்கு பெயர் வந்துவிடும் என்ற நோக்கத்தில், இதனை அதிமுக அரசு முடக்க முயல்கிறது.
இருண்ட தமிழகம். இருள் நிறைந்த தமிழகம். இருள் நிறைந்த தமிழகத்திலே இன்றைக்கு நாம் இருக்கின்றோம்.

தஞ்சாவூரில் டி.ஆர்.பாலுவை தாக்க முயன்ற திமுகவினர்!

தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவை திமுகவினரே தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இம்மோதலில் டி.ஆர்.பாலுவின் கார் சேதமடைந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் டி.ஆர்.பாலுவுக்கும் பழனிமாணிக்கத்துக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்.. இந்த நலையில் தஞ்சாவூர் பாச்சூர் துரைராசு மகன் பாரதிராஜா திருமணம் இன்று நடைபெற்றது. இந்த துரைராசு பழனி மாணிக்கத்தின் முன்னாள் ஆதரவாளர். தற்போது டி.ஆர்.பாலு முகாமில் துரைராசு இருப்பதால் பாலு ஆதரவாளர்களான எல். கணேசன், ஒரத்தநாடு காந்தி என ஏராளாமானோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இதனால் டி.ஆர். பாலுவுக்கு புகழாரம் சூட்டுகிற நிகழ்ச்சியாக கல்யாண மேடை அமைந்தது. டி.ஆர். பாலுவும் பழனி மாணிக்கத்துக்கு பதில் கொடுக்கும் வகையில் தமிழகத்துக்கு தான் வாங்கிக் கொடுத்த திட்டங்களைப் பட்டியல் போட்டு அடுக்கினார்.

அமெரிக்க விஞ்ஞானிகள் மனிதகருவை வெற்றிகரமாக பிரதியாக்கம் செய்து சாதனை

Human cloning has been used to produce early embryos, marking a "significant step" for medicine, say US scientists.
The cloned embryos were used as a source of stem cells, which can make new heart muscle, bone, brain tissue or any other type of cell in the body.

மனிதக் கரு முட்டை ஒன்றை உயிர்ப் பிரதியாக்கம் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். இதுவரை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்தான் டோலி என்ற செம்மறி ஆட்டுக்குட்டியை 1996ஆம் ஆண்டில் உருவாக்கியிருந்தனர். அன்று முதல் அதே இனப்பெருக்க உயிர்ப் பிரதியாக்க வழிமுறைகளை பயன்படுத்தி மனித கலங்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர்.
மரபணுக்கூறுகள் (டி என் ஏ) அகற்றப்பட்ட ஒரு முட்டையினுள் வயதுக்கு வந்த ஒருவரின் கலத்தில் உள்ள பதார்த்தங்களை மாற்றீடு செய்ததாக ''ஒரேகொன்னை'' சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதன் பின்னர் கருக்கட்டாத முட்டையை கருக்கட்டும் குருத்துக் கலங்களாக உருவாவதற்காக மின்சாரத்தின் உதவியுடன் தூண்டியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

திருவள்ளுவரை மட்டம் தட்ட போய் மீனாட்சியின் கோபத்திற்கு ஆளாவாரா தமிழ்த்தாய்?

மீனாட்சி கோபுரத்தை விட மதுரை நகரில் ஒரு விதிமுறை பல காலமாக அமலில் உள்ளது. அதாவது குறிப்பிட்ட உயரம் வரைதான் ஒரு கட்டடத்தை எழுப்ப முடியும். மதுரை: மதுரையில் அமைக்கப்படவுள்ள தமிழ்த் தாயின் சிலையின் உயரம் எவ்வளவாக இருக்கும் என்பது மதுரை மக்களின் கியூரியாசிட்டியை தூண்டி விட்டுள்ளது.ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை. மதுரைக்கு கோவில் பெருமை... மதுரையை ஆண்டு வருவது மீனாட்சி என்பது மதுரை மக்களின் ஐதீகம். அத்தகைய உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களும் உலகப் புகழ் பெற்றவையும் கூட.நகரின் எங்கிருந்து பார்த்தாலும் கோபுரங்கள் தெரியும் வகையிலான உயரம் கொண்டவை அவை. அதிலும் தெற்கு கோபுரம்தான் மிக உயரமானது. இந்த நிலையில்தான் தமிழ்த் தாயின் சிலை உயரம் குறித்த ஆர்வம் எழுந்துள்ளது ஏன் அப்படி? மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் மக்கள் பார்வையிலிருந்து மறைந்து விடக் கூடாது. அதை விட உயரமாக எதுவும் இருக்கக் கூடாது என்ற எணணத்தில்தான் இந்த விதிமுறை பல காலமாக அமலில் உள்ளது

புதன், 15 மே, 2013

தீம் திருமணங்கள் ! வழக்கமான கல்யாணங்களை Glamour ஆக்கியிருக்கிறது

ஹைதராபாத் திருமண நுழைவாயில்

ண்மையாகவே அது வித்தியாசமான திருமணம் தான். அந்தத் திருமண வரவேற்பிற்காக மண்டப அலங்காரங்களுக்கு மாத்திரம் 10 லட்ச ரூபாய் வரை செலவு செய்திருப்பார்கள். தமிழகத்தில் வாழும் பரம்பரை தமிழர்களில் ஒருவரான என் நண்பனின் திருமணம் தான் அது. ஆனால் திருமணத்தில் தமிழின் அடையாளம் எதுவும் இல்லை. திருமண வரவேற்பு முழுக்கவும் வடநாட்டு பாணியில் இருந்தது. உண்மையில் அது திருமணம் மாதிரியே இல்லை. ஏதோ சினிமா செட்டுக்குள் நுழைந்தது போல இருந்தது. இதன் பெயர் தான் “தீம் மேரேஜ்” அதாவது ஒரு கரு அல்லது குறிப்பிட்ட வகை அழகியல் கண்ணோட்டத்தின் அடிப்படையிலான திருமணம் என்று பொருள் கொள்ளலாம்.
திருமணம் என்றால் வசதி படைத்தவர்கள் ஆடம்பரமாகவும், ஏழைகள் எளிமையாகவும் செய்வார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் பணக்காரர்களின் காசு வெறுமனே ஆடம்பரம் என்று இல்லாமல் இப்படி தீம் அடிப்படையில் ’அழகுணர்ச்சியுடன்’ அவதாரமெடுத்திருக்கிறது என்பதை இந்தத் திருமணத்தை பார்த்த பிறகுதான் தெரிகிறது. பிறகென்ன, இந்த தீம் திருமணங்கள் குறித்து தொழில்முறை விற்பன்னர்களிடம் விசாரித்த போதுதான் இந்த தனி உலகு குறித்து தெரிய வந்தது.

கனிமொழி :விவாதம் கிடையாது தினசரி அறிக்கைவிடுவதே சாதனை என்ற எண்ணத்தில் அதிமுக அரசு

சட்டமன்றத்தில் விவாதம் நடத்தாமல், திட்டங்களை அறிவிக்கும் தமிழக
அரசுக்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். 110வது விதியின் கீழ் அறிக்கை விடுவது மட்டுமே தமிழக அரசின் சாதனை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.விபத்து ஒன்றில் சிக்கி கண்பார்வையை இழந்த வேலூர் மாவட்ட திமுக கலை இலக்கிய அணியின் துணை அமைப்பாளர் செந்தில்குமார் என்பவரை திமுக எம்பி கனிமொழி, மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்திற்கு தேர்தல் எப்போது வந்தாலும், அதனை சந்திக்க திமுக தயாராக உள்ளது. சட்டமன்றத்தில் விவாதம் நடத்தக் கூடாது என்பதற்காகத்தான், அதிமுக அரசு 110வது விதியின் கீழ் அறிக்கை வெளியிடுகிறது. விவாதம் நடத்தாமல் திட்டங்களை அறிவிப்பது ஜனநாயக விரோதம். தமிழகத்தில் மின்பற்றாக்குறையால் பல தொழில்கள் நசிந்துள்ளன என்றார்.

திவ்விய ஸ்பந்தனா காணும் அரசியல் கனவு பலிக்குமா ?

நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் நடிகை திவ்விய ஸ்பந்தன ஓடி ஓடி காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்தார் . காங்கிரசும் வெற்றி பெற்றது .திவ்யாவும் அரசியல்
பாரம்பரியம் உள்ளவர்தான் .ex cm  கிருஷ்ணாவின் பேத்திதான் .
என்ன இருந்தும் இன்னும் உறுதி மொழி ஒன்றும் வரவில்லையாம் ரொம்ப டென்ஷன் பண்றாங்கப்பா

YARSAGUMBA Viagra காளானை பறிக்க மாணவர்களால் போய்விட்டார்கள் பள்ளிகள் மூடல்

YARSAGUMBA - himalayan viagra - Caterpillar fungus (Cordyceps sinensis). One of the best energie booster in traditional Chinese medicine.
காத்மாண்டு : நானூற்றி ஐம்பது கிராம் வயாக்ர காளானை பறித்து கொண்டு வந்தால், ரூ.6.21 லட்சம் கிடைக்கும் என்றால், யார்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள்? பெற்றோர்கள், குழந்தைகளுடன் காளானை பறிப்பதற்காக காட்டுக்கு சென்றுவிட்டதால், நேபாள மலைப்பகுதி கிராமங்களில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.நேபாளத்தில் மலைப்பகுதியில் விளையும் ஒரு வகை காளான், யார்சாகும்பா. இதற்கு இன்னொரு பெயர் இமயமலை வயாக்ரா. அதாவது இந்த காளானை சூப் ஆகவோ, உணவிலோ எதில் சேர்த்து சாப்பிட்டாலும், வயாக்ராவை விட அதிக சக்தி பாலியல் உறவில் கிடைக்குமாம். மேலும், பல கொடிய நோய்களையும் இந்த காளான் சர்வசாதாரணமாக நீக்குகிறதாம். இதனால் சீனா மற்றும் ஆசிய சந்தைகளில் கடும் வரவேற்பு உள்ளது. தங்கத்துக்கு நிகராக இதற்கு விலை கிடைப்பதில் இருந்தே இதன் மதிப்பை தெரிந்து கொள்ளலாம். அதாவது 450 கிராம் யார்சாகும்பா காளானுக்கு ரூ.6.21 லட்சம் வரை விலை கிடைக்கிறது.

பண்ருட்டி' - பிரேமலதா தேமுதிகாவில் ஈகோ பிரச்னை innova ஆடர் பண்ணியிருக்காகளா?

 அதிமுகவுடன் தான் கூட்டணி என்று உறுதி கூறினால் பண்ருட்டியின் ஈகோ எல்லாம் பறந்து விடும். எம் ஜி ஆருக்கே சுவிஸ் அல்வா கொடுத்தவராயிற்றே.......
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே, கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், திருப்பூர் பொதுக் கூட்டத்தை புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் அக்கட்சி அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை விட, கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத பிரேமலதாவிற்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணம் என, கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
"ஈகோ' பிரச்னை
குறிப்பாக, கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக் கூட்டங்களில், யார் முதலில் பேசுவது என்பதில், இவர்கள், இருவர் இடையே," ஈகோ' பிரச்னை உள்ளது.

செவ்வாய், 14 மே, 2013

கன்னடத்தில் தண்டுபால்யா தமிழில் கரிமேடு

இந்த மாதம் கரிமேடு என்ற படம் தமிழில் வெளியாகிறது. ராம.நாராயணனின்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறது.ஸ்ரீ தேனாண்டாள் ஒரு படத்தை வெளியிடுகிறது என்றால் அது நிச்சயம் வசூல் செய்யும் என்பது சினிமா வரலாறு. படம் எடுப்பதைவிட எந்தப் படம் வசூ லிக்கும் என்பதை கணிப்பதில் ராம.நாராயணன் கில்லாடி. கரிமேடு படம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும்.கன்னடத்தில் தண்டுபால்யா
என்ற பெயரில் 2012ல் ஒரு படம் வெளியானது. கர்நாடகாவில் தண்டுபால்யா என்ற ஒரு கொள்ளைக் கும்பல் மாநிலத்தையே கதிகலக்கிக் கொண்டிருந்தது. ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி வீட்டிற்குள் நுழைந்து மொத்தத்தையும் சுருட்டுவதுதான் இந்த கொள்ளை கும்பலின் மெயின் க்ரைம். கொலை, கற்பழிப்புகள் அடிஷனல். ஒருகட்டத்தில் கொள்ளைக்கு இணையாக மாறியது இந்த அடிஷனல் குற்றங்கள்  tamil.webdunia.com

வீட்டை நகர்த்தி வைத்து சாதனை! நவீன தொழில்நுட்ப சாகசம்


கோவை : புதிய வீடு கட்டுவதற்காக, பாரம்பரிய வீட்டை இடிக்காமல், நவீன தொழில்நுட்ப உதவியுடன் அலேக்காக 35 அடி தூரம் காலி இடத்துக்கு நகர்த்தப்பட்டது.
கோவை சாயிபாபாகாலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் ரியல்எஸ்டேட் உரிமையாளர் தங்கவேல் என்பவரின் வீடு உள்ளது. இவரது தந்தை வக்கீல் ஆறுச்சாமி 30 ஆண்டுகளுக்கு முன்பு 2,400 சதுர அடியில் முதல் தளத்துடன் வீடு கட்டினார்.தங்கவேலு தற்போது அந்த இடத்தில் புதிய வீடு கட்ட முடிவுசெய்தார். ஆனால், பழைய வீட்டை இடிக்க மனமில்லை. அதனால், வீட்டை அப்படியே நகர்த்தும் தொழில்நுட்பம் பற்றி அறிந்து அரியானாவை சேர்ந்த டி.டி.பி.டி. இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்னும் நிறுவனத்தை தொடர்புகொண்டார்.அந்நிறுவன நிர்வாக இயக்குனர் சுஷில் சிஷோடியா தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். வீட்டை 50 அடிக்கு பக்கவாட்டில் நகர்த்த 2 மாதங்களுக்கு முன்பு பணியை துவக்கினர். வீட்டை சுற்றி நான்குபுறமும் பூமிக்குள் துளை போட்டு, அஸ்திவாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர், ஜாக்கிகள் உதவியுடன் வீடு ஒன்றரை அடி உயரத்துக்கு தூக்கப்பட்டது. பின்னர், அதன்கீழ் இரும்பு ரோலர்கள் பொருத்தப்பட்டு, வீட்டை அணு அணுவாக நகர்த்தும் பணி துவங்கியது. இதற்காக, மொத்தம் 300 ஜாக்கிகள், 300 ரோலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தர்மபுரியில் அதிமுகவினர் மாணவிகளோடு கொழுத்தியதற்கு நஷ்ட ஈடு தந்தார்களா? பாமகா கேள்வி?

வன்முறை செய்யும்
கட்சிகளிடம் இருந்து அதற்கான இழப்பீடு தராசு அலுவலகம் தாக்கப்பட்டு இரண்டு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டார்கள். நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டு கணேசன் என்கிற ஊழியர் கொல்லப்பட்டார். சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு ஊர்வலம் வந்தபோது, பத்திரிகையாளர்கள் டிஜிபி அலுவலத்திற்குள்ளேயே அடித்து விரட்டப்பட்டார்கள். இத்தனையும் செய்தது அதிமுக. இதுபோன்ற தொடர் வன்முறைகளை செய்யக்கூடியதுதான் அதிமுக. ஆனால் அந்தக் கட்சியினர் இன்றைக்கு சொல்லுகிறார்கள் நாங்கள் வன்முறையை ஆதரிக்க மாட்டோம் என்று. இவ்வாறு கூறினார்.

பாமாக வன்முறை இழப்பு பட்டியல் தயாரிப்பில் போலீசார்

தர்மபுரி: பா.ம.க.,வினரிடம் இழப்பீடு பெற, வன்முறை சேதமதிப்பீடு குறித்து,
போலீஸார் பட்டியில் தயார் செய்து வருகின்றனர்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கைது சம்பவத்தை தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 30 தேதி முதல் பா.ம.க.,வினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இண்டூர், கடத்தூர், பாப்பாரப்பட்டி, உள்ளிட்ட இடங்களில் உள்ள, நான்கு டாஸ்மாக் கடைகளையும், தர்மபுரி அன்னசாகரத்தில், ஒரு ரேசன் கடைக்கும், கொல்லஹள்ளியில் வி.ஏ.ஓ., அலுவலத்துக்கும் தீவைத்து கொளுத்தியுள்ளனர். கிராமங்களுக்கு, இரவு நேரங்களில் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, சேலம் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் பஸ்கள், இரவு நேரத்தில் போலீஸ் பாதுக்கப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.ராமதாஸ் நேற்று முன்தினம் (மே 11) ஜாமீனில் வெளிவந்த நிலையிலும், தர்மபுரியை அடுத்த பச்சினம்பட்டி, கிட்டம்பட்டி, கடமடைரயில்கேட், புலிகரை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை வன்முறை கும்பல், அரசு பஸ்களின் கண்ணாடியை கல்வீசி தாக்கியது. இதில், 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.

திங்கள், 13 மே, 2013

புது நடிகர்களின் சம்பளம் ஏறுது ! இது வெறும் விளம்பர ஸ்டன்ட் என்கிறது சிக்ஸ் சென்ஸ்


ஒரு படம் ஹிட்டாகி விட்டால் தங்கள் சம்பளத்தை ஹீரோக்கள் உயர்த்துவது
வாடிக்கைதான். இப்போதெல்லாம், பெரிய நடிகர்களை விட இளம் ஹீரோக்களின் படங்கள்தான் நன்றாக போவதால், இவர்களது கிராஃப்களும் ஜிவ்!
தமிழ் ஹீரோக்களின் இன்றைய மார்க்கெட் ட்ரென்ட் எப்படி?
விஜய் சேதுபதி ‘பீட்ஸா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’ ஆகிய தொடர் ஹிட்களை கொடுத்தார். முதல் இரண்டு ஹிட்டுக்கு சம்பளத்தை அதிகம் கேட்காமல் இருந்த அவர், இப்போது இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படத்தில் நடிக்க அவர் இந்த சம்பளத்தை கேட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களும் கொடுத்துதான், வளைத்து போட்டிருக்கிறார்கள்.
சிவகார்த்திக்கேயனும், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு சம்பளத்தை இரண்டு கோடியாக உயர்த்திவிட்டார். சரி. மற்றைய கோடம்பாக்கம் folks எவ்வளவு கேட்கிறார்கள்? 
விமல், 70 லட்சத்தில் இருந்து 90 லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார் என்கிறார்கள். இன்னும் ஒரு ஹிட் கொடுத்தால் சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தும் நோக்கில் இருக்கிறாராம்.
‘பரதேசி’ படத்தில் சிறப்பாக நடித்து பாராட்டு பெற்ற அதர்வா, சம்பளமாக ஒன்றரை கோடி ரூபாய் கேட்கிறாராம்.
‘கும்கி’ படத்தில் அறிமுகமான விக்ரம் பிரபு, அந்தப் படத்தின் ஹிட்டுக்குப் பிறகு, ‘இவன் வேற மாதிரி’ படத்தில் நடிக்கிறார். அடுத்த படத்துக்கு சம்பளமாக ஒன்றரை கோடி கேட்டிருக்கிறார்.
‘கடல்’ படத்தில் நடித்துள்ள கவுதம் கார்த்திக், அந்தப் படம் ஊத்திக் கொண்டாலும், அடுத்த படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம்.
‘தமிழ் படம்’ சிவா, விதார்த் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் சம்பளமாக 60லிருந்து 80 லட்சம் ரூபாய் வரை கேட்கிறார்கள் என்கிறது கோடம்பாக்கம்.
நடிகர்கள் கோடிகளில் மிதப்பதால், டைரக்டர்கள் தாமே நடிக்க தொடங்கினார்கள். அடுத்து என்ன? தயாரிப்பாளர்கள் மேக்கப் போடவேண்டியதுதான்!ohocinema.com

நவாஸ் ஷெரிப்: பதவிஏற்பு விழாவில் மன்மோகன் பங்கேற்றால் மகிழ்ச்சி அடைவேன் !

இவருக்கு யாராவது நல்ல புத்தி சொல்லுங்களேன் ஆரம்பத்திலேயே அதிக இந்திய ஆதரவாளனாக காட்டினால் ஆபத்தல்லவா? வரலாற்றை கொஞ்சம் ஆராய்ந்தால் நல்லது 
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவேன் என்ற உங்களது கருத்துக்கு, இந்திய மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உங்களுடனும், உங்களது அரசுடனும் இணைந்து பணியாற்ற தாம் ஆர்வமாக உள்ளதாக கூறியிருந்தார். மேலும் நவாஸ்ஷெரீப் இந்தியா வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் இதனிடையே தனது பதவியேற்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கார்கில், மும்பை தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த முயற்சி எடுக்கப்படும். பிரதமர் மன்மோகன் சிங், என்னுடைய பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என கூறினார்.

ஆதிக்க மேட்டுக்குடியின் விளையாட்டாகிவிட்ட இந்திய கிரிகேட்டின் வண்டவாளம்

கல்மாடி கார்ட்டூன்நூற்று முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா கடந்த வருட இறுதியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு ஆறு பதக்கங்களுடன் திரும்பியது. ஒவ்வொரு நான்காண்டுகளுக்கும் இந்திய அளவிலான ஊடகங்களில் இதற்காக வைக்கப்படும் ‘ஒப்பாரி’ இந்த முறை சிறு முனகல்களோடும் வழக்கமான சடங்குகளோடும் முடிந்து விட்டது. பெண்கள் குத்துச் சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற மேரி கோமின் உருக்கமான வாழ்க்கைப் பின்னணி பற்றிய நெகிழ்வூட்டும் விவரிப்புகளோடு ஆங்கில ஊடகங்களின் சம்பிரதாயமான கடமைகள் ஓய்ந்தன.
இருப்பினும் இந்தியாவுக்கு ஆறு பதக்கம் என்பது நிச்சயம் அதிகம்தான். சமீபத்திய ஒலிம்பிக் எதிலும் இத்தகைய ’சாதனை’ இல்லை. எனினும் இந்த சாதனைச் செய்திகள் பேசப்படும் போதே இந்திய விளையாட்டுத் துறையின் அசிங்கமான முகத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அம்பலப்படுத்திக் காட்டியது. இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தை, அதன் தேர்தல்களில் நடந்துள்ள முறைகேடுகளுக்காக தடைசெய்திருக்கிறது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி. இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தேர்தல்களில் அரசியல் தலையீடு இருப்பதும் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது.

நிலக்கரி சுரங்கத்திற்கான விதிகளை தளர்த்த நெருக்கடி கொடுத்த பிரதமர் அலுவலகம்

நிலக்கரி ஊழல் தொடர்பான அறிக்கையை திருத்தியது தொடர்பான
விவகாரத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வனி குமார் பதவியிழந்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும் பதவி விலக வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், நிலக்கரி சுரங்க திட்டங்களை விரிவுபடுத்த அனுமதிப்பதற்காக, நிலக்கரி சுரங்கம் தொடர்பான சுற்றுச்சூழல் விதிகளை தளர்த்துமாறு சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இது, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியாகியுள்ளது.

பாமகவின் நடவடிக்கைளை அரசு சகிக்காது- தடை விதிக்க தயங்காது

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டவிரோத நடவடிக்கைகளை தமிழக அரசு சகிக்காது என்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் கட்சிகளைத் தடை செய்யவும் அரசு தயங்காது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எச்சரித்திருக்கிறார். தமிழக சட்டசபையில் காங்கிரஸ், இடதுசாரி கட்சி எம்.எல்.ஏக்கள் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய கட்சிகளைத் தடை செய்யவும் அரசு தயங்காது. பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டவிரோத நடவடிக்கைகளை அரசு சகித்துக் கொண்டிருக்காது. பாமகவினரால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்கான நட்ட ஈட்டை அக்கட்சியினரிடம் இருந்து கோருவோம். டாக்டர் ராமதாஸ் மீது தமிழக அரசு சார்பாக அவதூறு வழக்கு தொடரப்படும். வன்முறையில் யார் ஈடுபட்டாலும் தேசிய பாதுகாப்புச் சட்டமும் குண்டர் பாதுகாப்பு சட்டமும் நிச்சயம் பாயும் என்றார் அவர்
tamil.oneindia.in

ஞாயிறு, 12 மே, 2013

உ பியில் 3 சிறுமிகள் மீது பாலியல் வன்முறை ஒரு சிறுமி கொல்லப்பட்டுள்ளார் ! தூக்கில் போடுங்கள்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 3 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் கோராவல் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது சிலர் சிறுமியை கடத்திச் சென்று கற்பழித்து, கழுத்தை நெறித்துக் கொன்றனர். இதற்கிடையே சிறுமியின் குடும்பத்தார் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை திருமணம் நடந்த இடத்திற்கு அருகே சிறுமியின் உடல் கிடந்தது. பிரதே பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் பிஜ்னர் மாவட்டம் ஷிவாலா கலன் பகுதியில் 12 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து ரிதேஷ், ரீனு, அர்ஜுன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் ரிதேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று பினாவர் பகுதியில் 6 வயது சிறுமியை 21 வயது வாலிபர் கற்பழித்துள்ளார். இதையடுத்து சிறுமியை கற்பழித்த அன்னு என்பவரை போலீசார் கைது செய்தனர்.
tamil.oneindia.in

சென்னையை அதிர வைத்த பிரேமா !

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள இந்தியன் பாங்க் அரங்கம்.
அரங்கத்தில் குழுமியிருந்த மொத்த பார்வையாளர்களும் மேடையேறப்போகும் அன்றைய விழாவின் கவுரவ இளம் விருந்தினரைக்காண ஆவலுடன் காத்திருந்தது.
நாட்டிலேயே கடினமான படிப்பான கணக்காயர் (ஆடிட்டர்) படிப்பில் தகுதி பெற்றாலே போதும் என்று அந்த தேர்வை எழுதும் கணக்கிலடங்காத பலர் நினைத்திருக்க, அதில் முதன்மை பெற்றவர் இவர். முதல் கட்டத்தில் தேர்வாவதே கடினம் என்ற நிலையில் உள்ள சி.ஏ.,தேர்வில், அகில இந்திய அளவில் முதல் மாணவியாக தேர்வான, மும்பை வாழ் ஆட்டோ டிரைவரின் மகளும், தமிழ்ப் பொண்ணுமான பிரேமாதான் அந்த இளம் விருந்தினர்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பெரிய கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், ஊரில் விவசாயம் பார்க்க வழியில்லாமல் வறுமை விரட்ட, மும்பைக்கு பிழைப்பு தேடி மனைவி லிங்கம்மாள் மற்றும் மகள் பிரேமா, மகன் தன்ராஜ் ஆகியோருடன் சென்றார். அப்பாவுடன் சென்ற பிரேமாவுக்கு அப்போது வயது இரண்டு. இப்போது வயது 24.
மும்பை மாலாட் பகுதியில் ஆட்டோ ஒட்டி பிள்ளைகள் இரண்டையும் படிக்கவைத்தார்.

சுதந்திரமாக இயங்குகிறதா சி.பி.ஐ.,? வேண்டப்படாதவர்களுக்கு பாடம் படிப்பிக்க ஒரு அமைப்பா ?

கடந்த ஐந்தாண்டுகளில், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி, மத்திய
அரசு ஆட்டம் கண்டு வருகிறது. ஊழல் செய்தோரை தண்டிக்கும் பேர் வழி என, சி.பி.ஐ., மூலம் வழக்குகளை விசாரிக்க மத்திய அரசு உத்தரவிடுகிறது. ஆனால், குற்றவாளிகளை காப்பாற்றுவது போல், சி.பி.ஐ., விசாரணை உள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு விசாரணை நிலையை, தாக்கல் செய்யுமாறு, சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது. இந்த அறிக்கையை, மத்திய சட்ட அமைச்சர் திருத்தினார். குறிப்பாக, குற்றவாளிகள் பற்றிய விவரங்களை, அறிக்கையிலிருந்து நீக்கி, விசாரணையை நீர்த்துப்போக செய்துவிட்டார் என, சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ., இயக்குனர் கூறியுள்ளார். நாட்டின் மிக உயர்ந்த விசாரணை அமைப்பான, சி.பி.ஐ.., சுதந்திரத் தன்மையை இழந்துவிட்டது. அரசியல்வாதிகளின் கைப்பாவை ஆகிவிட்டது என, புகார்கள் எழுந்துள்ளன. சி.பி.ஐ.,யின் இந்த நிலைக்கான காரணம் மற்றும் மாற்றங்கள் குறித்து, முன்னாள் அதிகாரிகளின் கருத்துகள் இதோ:  கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தேர்தல் கமிஷனின் செயல்பாடே ஒருதலை பட்சமாகத்தானே இருந்தது என்று பேச்சு. சிபிஐயை விட பொறுப்புள்ள அரசியல்வாதிகளை பதவிக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டியவர்களே அப்படி என்றால் யாரை குற்றம் சொல்லி என்ன பயன்.

10,000 விதிமீறல் கட்டடங்களுக்கு விரைவில்...சீல்!'

தமிழகம் முழுவதும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு, ஏற்கனவே
நோட்டீஸ் அளிக்கப்பட்ட, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட அடுக்குமாடி கட்டடங்களுக்கு, "சீல்'
வைக்கும் நடவடிக்கையை நகரமைப்புத் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.கோவையில் கடந்த மாதம், 25ம் தேதி, தனியார் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில், நான்கு @பர் இறந்தனர். இதையடுத்து, விதி மீறியும், அனுமதியின்றியும் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.கோவை மாநகராட்சியும், டி.டி.சி.பி., எனப்படும் நகரமைப்புத் துறையின் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகளும், விதிமீறல் கட்டடங்களுக்கு "சீல்' வைக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதில், இதுவரை, 200க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு "சீல்' வைக்கப் பட்டுள்ளது.

லஞ்சம், மோசடி: மத்திய அமைச்சர்கள் அஸ்வனி குமார், பவன்குமார் பன்சால் நீககம்!

டெல்லி: மத்திய அமைச்சர்கள் பவன்குமார் பன்சால் மற்றும் அஸ்வனி குமார் ஆகியோர் நேற்று இரவு நீக்கப்பட்டனர். ஊழல் முறைகேடு புகாரில் சிக்கியதால் ரயில்வே அமைச்சர் பதவியை பவன் குமார் பன்சாலும், சிபிஐக்கு நெருக்குதல் கொடுத்த சர்ச்சையில் சிக்கியதால் மத்திய சட்ட அமைச்சர் பதவியை அஸ்வனி குமாரும் ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். இருவரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் வழங்கினர். பிரதமரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்த சில மணி நேரங்களுக்குள் இந்த விலகல் அறிவிப்பு வெளியானது. முன்னதாக, அஸ்வனி குமாரும், பவன் குமார் பன்சாலும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடந்த மூன்று வாரங்களாகக் குரல் கொடுத்து வந்தன.

பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ் ஷெரிப் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி அமோக வெற்றி

Nawaz Sharif claims victory in landmark Pakistan election
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் நடந்து முடிந்த பார்லி மென்‌ட் தேர்தலில் நவாஸ் ஷெரிப்பின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி மொத்தம் உள்ள 272 தொகுதிகளில் 125க்கும் ‌மேல் தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. பெரும்பாண்மைக்கு இன்னும் சில ‌தொகுதிகளே தேவைப்படுகிறது.இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெரிக் இ-இன்சாப் கட்சி 35 இடங்களில் முன்னணி பெற்று 2வது இடத்திலும் முன்னாள் அதிபர் ஷர்தாரியின்பாகிஸ்தான் மக்கள் கட்சி 32 இடங்களிலும் முன்னணி பெற்று 3வது இடத்திலும் உள்ளன.மற்றவை 70 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.பாகிஸ்தானில் ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றதால் ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகிறது.இந்நிலையில் இறுதி முடிவு இன்று இரவு அல்லது நாளை தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.