சனி, 25 பிப்ரவரி, 2017

ரீ ரிகார்டிங் இல்லாம பார்த்தால் ஜாக்கியின் யோகா வெறும் பினாத்தல்? ஜாக்கியின் பின்னணி இசை!

கன்னடன் :வீரப்பன் தமிழ்நாட்டின் வீர அப்பன்
Thozhi Malar< ஈஷா..: எளிய கேள்வி.. எதற்கு இந்த ஆடம்பரம்? இவ்வளவு
விளம்பரம்? உண்மை எப்போதும் இப்படியான விளம்பரம் ஆடம்பரம் சூடி வராது.. இவர்கள் அமைப்பே தவறானது என்று அப்பட்டமாக எனக்குத்தெரிகிறது.. இது வெறும் கேள்வி ஞானம் கிடையாது நானே ஈஷாவில் தங்கி பயிற்சி பெற்றிருக்கிறேன்.. அந்த சூழல் என்னை யோசிக்க விடாமல் அப்படிதான் ஈர்த்தது.. யோசித்தால்.. காட்டின் அமைதி ஈர்க்கத்தான் செய்யும் அதற்கு எந்த புறஊக்கமும் தேவையேஇல்லை என்பது தெரியும்.. ஜக்கி மிகச்சிறந்த உளவியல் நிபுணர்.. இது இத்தனை வருடங்களில் அவருக்கு கைகூடி இருக்கிறது.. அவரின் சத்சங்கங்களுக்கு சென்றவர்களுக்கு தெரியும்.. தியானத்தின் போது வினோத ஒலிகள் அவர் எழுப்புவதும் திடீரென்று கை சொடுக்கல் கை தட்டல்.. கைகளை தேய்க்கும் போது வரும் சப்தம் கழுத்தில் அணிந்திருக்கும் ருத்ராட்ச மாலைகளின் மோதல் சப்தம்.. எல்லாம் பெரிய பெரிய ஸ்பீக்கர்ல அந்த அமைதியான சூழலில் திடீர் திடீர் என்று கேட்கும்.. இது கவனத்தை சிதறவிடாமல் அந்த ஒலிகளின் மீது நம் கவனத்தை குவியவைக்கும்..

புலம்பெயர் புலிகளால் 14 இலட்சம் கூலி கொடுத்து சுமந்திரன் கொலை திட்டம் ? முறியடிப்பு!!

காவல்துறை பயங்கரவாத புலனாய்வு திணைக்களத்தினால்amp; ரி.ஐ.டி), தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (ரி.என்.ஏ) யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனைக் கொலை செய்ய மேற்கொண்ட சதித்திட்டம் பற்றி மேற்கொண்ட விசாரணைகளில்   உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே உள்ள புலிச்சார்பு சக்திகளினால் தீட்டப்பட்ட சதித்திட்டம் பற்றிய மேலதிக விபரங்கள் வெளிவந்துள்ளன.< இப்போது  காவலில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) ஐந்து முன்னாள் உறுப்பினர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் மூன்று நபர்கள் எவ்வாறு சதித்திட்டம் தீட்டி, தூண்டிவிட்டு சுமந்திரனுக்கு எதிரான படுகொலைத் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்று தங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்கள் என்பதைப் பற்றிய அதிக தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

கோவையில் போலீசு தடையை மீறி மோடி – ஜக்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !

தமிழகத்திற்கு தேவை தண்ணீர் தான்.! ஆதியோகி அல்ல..!! என்ற முழக்கத்தின் கீழ் நாட்டை விற்கும் மோடி கழனியை அழிக்கும் கேடி ஜக்கியின் ஆதி யோகி சிலை திறப்புக்கு வந்த போது கருப்புக்கொடி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
24-02-1017 கோவை நகரெங்கும் ஆதியோகி சுவரொட்டி ஒட்டப்பட்ட இடங்களுக்கு அருகே பதில் சொல்லும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. மதியம்  கோவை அவினாசி சாலையின் முக்கிய சந்திப்பான ஹோப் காலேஜ் என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவித்தது.

அமெரிக்காவில் இந்தியர்களின் உயிர் /வாழ்வு கேள்விகுறி! இங்கிட்டு மோடி அங்கிட்டு ட்ரம்ப்பு..


ஹூஸ்டன்:

எங்களுக்கு இங்கிருக்க தகுதியில்லையா? என்று அமெரிக்காவில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லாவின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார். ஒலாதேவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநிவாஸின் மனைவி சுனயானா டுமாலா, அமெரிக்காவில் தங்கியிருந்து பணியாற்றுவது குறித்து முதலில் நான் தயங்கினேன். ஆனால் எனது கணவர்தான், "அமெரிக்காவில் நாம் தங்குவதால் நல்லதே நடக்கும்" என்றார். இதுபோன்ற சம்பவங்கள், அமெரிக்காவில் தங்கியிருக்கும் சிறுபான்மையின மக்களுக்கு அச்சுறுத்தலையே ஏற்படுத்துகிறது. எங்களுக்கு இங்கிருக்க தகுதியில்லையா? என்றும் அவர் உருக்கத்தோடு கேட்டார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அமெரிக்க அரசு எந்த விதமான நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்றே வியப்பாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நெடுவாசல் : போராட்டம் தீவிரம் !


நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த ஒன்பது நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று நெடுவாசல் போராட்டக் களத்திற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று சோதனைக்காக தோண்டப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணறுகளை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜெ. மரணம் குறித்த,, டாக்டர் ராமசீதா கைது! ஏன் இந்த அவசரம்? எங்கேயோ இடிக்கிறது.


டாக்டர் ராமசீதா போலி மருத்துவர் என்று கூறும்  சசிகலாவின் காவல் துறை நேர்மையானதா? அந்த 75 நாட்கள் பயங்கரத்தையே ஊத்தி மூடிய காவல்துறை டாக்டர்  ராமசீதாவையும் ஊத்தி மூடிவிடுமோ?

நக்கீரன் : நான் அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் என்றும் ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போதே இறந்த நிலையில்தான் கொண்டுவந்தார்கள். விசாரணை கமிஷனின் உண்மையை சொல்வேன்” என்றும் சென்னை ஆர்.கே.நகரில் நடந்த ஜெ.தீபா பேரவைக்கூட்டத்தில் பகீர் குற்றச்சாட்டை கிளப்பிய ராமசீதா டாக்டரே அல்ல என்பதை முதன் முதலில் அம்பலப்படுத்தியது நக்கீரன் இணையதளம்; “ராமசீதாவின் வாக்குமூலமே ஒரு டாக்டர் பேசுவதுபோன்று இல்லை. மேலும், பரபரப்புக்காகவும் பப்ளிசிட்டிக்காகவும் பேசுவதுபோல்தான் தெரிகிறது” என்று மருத்துவ நண்பர்கள் நம் காதை கடிக்க, விசாரணையில் இறங்கினோம்.

எதிர்க்கட்சிகள் மொத்தமாக ராஜினாமா? ஆர்.நடராஜன் .. அமெரிக்க தூதரக முன்னாள் அதிகாரி!

ஸ்டாலின் சோனியா பேச்சுவார்த்தை ?  
எம்.எல்.ஏ.க்களை இனி மக்கள் பிரதிநிதிகள் என்று அழைப்பது தவறு, -குறிப்பாக இப்போதைய ஆளும் தரப்பு அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை. இவர்கள் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவில்லை. அடைத்து வைக்கப்பட்டதற்கு இசைந்ததன் மூலமும்  சட்ட மன்றத்தில் சுதந்திரமாக வாக் களிக்க முடியாமல் போனதன் மூலமும்  தாங்கள் சசிகலா வின் ஏஜெண்டுகள் என்பதை நிரூபித்துவிட்டார்கள். அதுமட்டுல்ல; இப்படிச்  சிறைப்பட்டவர்களில் ஒருவரிடம் "நீங்கள் மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை போலிருக் கிறதே' என்று கேட்டதற்கு அவர் ரொம்பவும் திமிராக "எம்.எல்.ஏ., என்பதனால்  நான்தான்  மக்கள்' என்றார்

சவுக்கு சங்கர் வழக்கில் விடுதலை ! "அரசியல்வாதிகளை விட, மிக மிக மோசமானவர்கள் அதிகாரிகள்"

6b11104c-2991-42d5-b4ad-93608c90ff47savukkuonline.com
/விடுதலை.   இந்த வார்த்தையை வெள்ளியன்று நீதிபதி உரைத்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.     எட்டு ஆண்டு போராட்டம்.  2008ம் ஆண்டு ஜுலை மாதம் நிகழ்ந்த அந்த கைது, எளிமையான அரசு ஊழியராக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த எனது வாழ்வை புரட்டிப் போட்டது.
1991ம் ஆண்டு முதல் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.    16 வயதில் வேலைக்கு சேர்ந்தேன்.  ஏறக்குறைய லஞ்ச ஒழிப்புத் துறையில்தான் வளர்ந்தேன். இளம்பருவத்திலேயே கிடைத்த அரசுப் பணி, கை நிறைய கிடைத்த சம்பளம் ஆகியவை என்னை வேறு ஒரு திசையில் செலுத்தியிருக்கலாம்.   ஆனால், அரசு ஊழியர் சங்கமும், இடது சாரி இயக்கமும் என்னை தன்பால் இழுத்தன.    பெற்ற ஊதியத்தில் பெரும் பகுதியை ஜெயகாந்தன் உள்ளிட்ட முக்கிய எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாங்கவே செலவிட்டேன்.    அந்த நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தின.
1996ம் ஆண்டு.   திமுக அரசு, ஜெயலலிதா என்ற ஊழல் பேயின் ஆட்சியை விரட்டி பதவியேற்றது.    அது வரை தூங்கி வழிந்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஒரே நாளில் பரபரப்பானது.    இன்று திமுகவில் இருக்கும் டிஎம்.செல்வகணபதிதான் லஞ்ச ஒழிப்புத் துறையால் முதல் முறையாக கைது செய்யப்பட்ட நபர்.    அதிகாலை 5 மணிக்கு, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த செல்வகணபதியை, கொடைக்கானல் ப்ளசென்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் கைது செய்ய காவல்துறை அதிகாரிகளோடு, ரயில் நிலையம் சென்றது இன்னும் மறக்க முடியாத அனுபவம்.    அதன் பிறகு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஓய்வே இல்லை எனலாம்.      ஜெயலலிதா மீது பல்வேறு வழக்குகள்.  அவர் அமைச்சரவை சகாக்கள் மீது பல்வேறு வழக்குகள்.   இவற்றை விரைவாக முடிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து அழுத்தம்.

அரசியல் விபசாரம் கொடிகட்டி பறக்கும் தமிழகம் ...

நான்கு டோங்கிரிகளும், நாசமாய்ப் போன நடுநிலையும். -- BY Arivazhagan Kaivalyam
"திராவிடத்தால் வீழ்ந்தோம்" "திராவிடக் கட்சிகள் தான் தமிழகத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்" "திராவிடத்தை வீழ்த்துவோம்" என்று நேரடியாகவோ, பட்டும் படாமல் அப்படி ஒரு தொனியிலோ பலர் பேசுவதை நீங்கள் தமிழகமெங்கும் கேட்கலாம், அவர்களை நான்கு வகைகளாகப் பிரித்து அறிந்து கொள்வோம்.
முதல் வகை - ஈழடுமீல்டோங்கிரி.
தமிழ்த்தேசியம் பேசுகிற ஈழப்போரின் போது அரசியலுக்குள் நுழைந்த இளம் பருவத்தினர் நிறைந்த இந்த வகை பெரும்பான்மை வகையாகும், தமிழ்த் தேசியத்தின் மொத்தக் குத்தகைதாரர் அண்ணன் சீமானின் ஸ்டாண்ட் அப் காமெடி ஷோக்களைத் தொடர்ந்து மேடைகளிலோ, "யூ டியூப்" பிலோ பார்த்துவிட்டு ஒருவிதமான மயக்க நிலையிலேயே இருக்கும் 16இல் இருந்து 25 வயது நிரம்பிய இளைஞர்கள் தான் இந்த அணியில் இருப்பார்கள்.
பொதுவாக இவர்கள், திராவிட இயக்கங்கள் இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதி சார்ந்த உரிமைகளைப் பெற்றுக் கொடுத்த வரலாறு, பரவலாகத் தமிழகமெங்கும் அரசுப் பள்ளி கல்லூரிகளை நிறுவிய தி.மு.கவின் அரசியல் பயணம், உயர் கல்வி வரையிலும் கல்வியை இலவசமாக்கிய விவரங்கள், தொழிற்பேட்டைகளையும், சிறுதொழிற்கூட வளாகங்களையும், தகவல் தொழில் நுட்பத் பூங்காக்களையும் உருவாக்கிய கலைஞரின் அளப்பரிய சாதனைகள் என்று எந்த அகர வரிசை அரசியலும் அறியாதவர்கள்.
இவர்களுக்குத் தெரிந்த அரசியல் எல்லாம், இலங்கைக்கு கலைஞர் ஆள் அனுப்பி எல்லோரையும் போட்டுத் தள்ளினார், தனது சட்டைப்பையில் ஒளித்து வைத்திருந்த தமிழ் ஈழ முட்டாயை கடைசி வரை கொடுக்கவேயில்லை, சர்க்காரியா கமிஷன் மண்டியில வேலை பார்த்தார், அங்கே வாழைப்பழம் திருடினார், அதிமுகவும், திமுகவும் ஒன்னு, அத அறியாதவன் வாயில மண்ணு.....போன்ற அதே வழக்கமான பார்ப்பனீயப் புராதனக் குற்றச்சாட்டுக்கள்.

குஷ்பூ :எடப்பாடி அரசை கவிழ்க்க திமுக மட்டுமல்ல முழு தமிழகமே விரும்புகிறது

சசிகலா கும்பலின் அடிமைகளாக அரசியல் வாதிகள் மாத்திரம் அல்லாமல  சில கட்சிகளும் இருப்பது வேதனை..
மாநில அரசை கவிழ்க்க திமுக மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகமே தயாராக உள்ளது.. சிறையில் உள்ள குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாபியா அரசு யாருக்கு வேண்டும்? என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க திமுக திட்டம் தீட்டுவதாக அதிகமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அரசை கவிழ்ப்பதில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தான் குறியாக உள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
திமுக மாநில அரசை கவிழ்க்க திமுக மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகமே தயாராக உள்ளது.. சிறையில் உள்ள குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாபியா அரசு யாருக்கு வேண்டும்?
அடிமைகளுக்கு தான் மாபியா அரசு தேவை... துரதிர்ஷ்டவசமாக சில அரசியல் கட்சிகளும் அடிமைகள் பட்டியலில் உள்ளது என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சோனியா, ராகுலுடன் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சந்திப்பு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் 24-02-2017 வெள்ளிக்கிழமை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை டெல்லியில் நேரில் சந்தித்தார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம், தமிழக சட்டப்பேரவையில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் உள்ளிட்டவை குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., திருச்சி சிவா எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. உள்ளிட்டோர் ஸ்டாலினுடன் சென்றனர். , முன்னதாக, வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்த மு.க.ஸ்டாலின், விதிமீறி நடந்த வாக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிடுமாறு அப்போது வலியுறுத்தினார்.நக்கீரன்

மோசடி ஜாக்கியும் மோசடி மோடியும் ... இருவரும் ஒருதடவை அணிந்த உடையை மறு தடவை அணிவதே இல்லை!


தன் மகளுக்கு கல்யாணம் குழந்தை குட்டி ... ஊரான் மகள்களுக்கு சன்யாசம் மோட்சம்
மைசூரில் பிறந்து, வளர்ந்து ; தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய, கோவையில் 1989-ம் ஆண்டு, தனது காலடியை  வைத்தார். பசி, பட்டினி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம், பொறாமை,  கோபம் போன்றவற்றை தனது யோகா என்ற ஒரே ஆயுதத்தால் முடிவுக்கு கொண்டு வர, தமிழ் மக்களை எல்லாம் “ஆனந்த அலையில்” சிக்கவைக்க,  “வாருங்கள் உங்களில் மலருங்கள்” என்று அன்போடு அழைக்கும் சத்குரு என்று தனக்கு தானே பெயர் சூட்டி கொண்ட ஜக்கி வாசுதேவ் அவர்களின் சுருக்கமான கிரிமினல் வரலாறு இதுவாகும். ரூ.14 கோடி மதிப்புள்ள R 22 ரக ஹெலிகாப்டர், ரூ.40 இலட்சம் விலையுள்ள ஹம்மர் கார், பல லட்ச ரூபாய்  மதிப்புள்ள BMW மற்றும் Honda மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில், ஜீன்ஸ் பேண்ட் + கருப்பு கண்ணாடியுடன் வலம்வரும் நவீன சாமியார் தான் ஜக்கி. பக்தர்களிடம் “எல்லாவற்றுக்கும் ஆசைப்படு” என்ற கார்ப்பரேட் உலகிற்கு இசைவான, இச்சையைத் தூண்டும் சாமியார்.< கடவுள் நம்பிக்கை இல்லாதவராக பேசிக்கொண்டே, இந்துத்துவா’விற்கு இசைவான சமயப் பணிகளை மேற்கொள்பவர். 1999ல், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில்  தியான’லிங்கம்’ அமைத்தவர்;சத்சங்கங்கள் என்ற பெயரில் கூட்டு வழிபாடு என்ற சமய வழிபாட்டு முறையை உருவாக்கி லட்சக்கணக்கான மக்களின் மூளையைச் சலவை செய்பவர்.

ஜெயலலிதாவை உயிருடன் அப்போலோவில் ஆளுநர் வித்தியா சாகர் பார்த்தாராம் ..

மாட்டிக்கிட்டாய்ன் ஆளுனன் மாட்டிகிட்டாய்ன்அமுக்குஅமுக்கு 
லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உயிருடன் இருக்கும்போது சந்தித்தேன் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார். சசிகலாவை தமிழக முதல்வராக பதவியேற்க அழைக்காதது குறித்து ஆங்கில பத்திரிக்கைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பேட்டியளித்துள்ளார். அதில், உச்சநீதிமன்றத்தில் ஒருவாரத்தில் சொத்துகுவிப்பு தீர்ப்பு வெளிவரும் என கூறப்பட்டது. இதனால் சசிகலா முதல்வராக பதவியேற்பது நிறுத்தி வைக்கப்பட்டது என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார். அதோடு சட்ட நிபுணர்களிடம் ஆலோசனையும் நடத்தினேன். தமிழக அரசியல் சூழல் குறித்து குடியரசுத்தலைவருக்கு அறிக்கை அனுப்பி கொண்டேதான் இருந்தேன் என்றும் கூறியுள்ளார். நீ பேசல  ஆளுனா நீ பேசல .. அந்த 600 பேசுதுல.. 

தினகரன் அலப்பறை : .. கோஷம் போட ரூ.3000ம், மலா் தூவ ரூ.2000, கொடிபிடிக்க 1000...

தமிழக அரசியில் நாளுக்கு நாள் மாறிவருகிறது. இதில் கட்சியின் காட்சிகள் அப்படியேதான் உள்ளது. தமிழக முதல்வராக ஓபிஎஸ் இருந்தார் அவரை வைத்துக் கொண்டே வருங்கால முதல்வர் சின்னம்மா வாழ்க என்று புகழ் பாடப்பட்டது. அதேபோல தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். அவர் இருக்கும்போதே வருங்கால முதல்வர் தினகரன் வாழ்க என்று கோஷம் போடப்படுகிறது. 23ம் தேதி காலை தினகரன் துணைப்பொதுச் செயலாளராக பதவி ஏற்க ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.அவ்வைசாலை வழியாக அவா் வந்தபோது அவரின் கார்மீது மலா் தூவப்பட்டது. மலர் தூவியவர்களுக்கு ரூ.2000ம் பணம் கொடுக்கப்பட்டது.

20 கிராமங்களில் நாளை உண்ணாவிரதம், நெடுவாசலின் உச்சகட்டம்!

நாடுமுழுவதும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை
செயல்படுத்த மத்திய அரசு பல இடங்களை தேர்வுசெய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் நெடுவாசல் உள்ளிட்ட சுமார் 15 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், புதுகை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தவுள்ள மத்திய அரசை கண்டித்து சுற்றுவட்டார மக்கள் கடந்த ஒரு சில நாட்களாகவே போராட்டக்குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களோடு சென்னை ஐ.டி. ஊழியர்களும் போராட்டம் செய்துவந்தனர். மேலும், தமிழ்நாடு இளைஞர் கட்சி நாளை மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டம் மேலும் சென்னை உள்ளிட்ட ஐ.டி., நிறுவனங்களைச் சேர்ந்த இளைஞர்களும் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், நெடுவாசல், புள்ளான் விடுதி கள்ளிக்கொல்லை, வாணக்கன்காடு, கருக்காக்குறிச்சி, கோட்டைக்காடு உள்ளிட்ட 20 கிராமத்திற்கு மேற்பட்ட மக்களும், இளைஞர்களும், மாணவர்களும் ஒன்றுதிரண்டு நாளைய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.டி. ஊழியர்களோடு கைகோர்க்கின்றனர்.

கமல் : (சுப்பிர)மணிப்பயல்களை தமிழ்ப்பயல்கள் தேடிச்சென்று தாக்கு..

தன்னை எதிர்ப்பவர்களை விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி, பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் நாகரீகமற்றதாக இருப்பதை கண்டுகொள்வதே இல்லை. பொறுக்கி, எலி, நக்சல், தேச விரோதி, முட்டாள், முதுகெலும்பில்லாதவன், படிப்பறிவு இல்லாதவன் என வெறுக்கத்தக்க வார்த்தைகளை உபயோகிக்கிறார். குறிப்பாக கமலை மிக அருவெறுக்க தக்க வகையில் வசைபாடுகிறார். நேற்றைய டுவிட்டர் பதிவில் சாக்கடையில் ஊறி கிடக்கும் விலங்குகள் சில சமயம் ஒப்பனையும் இட்டு வேஷம் கட்டும் என்று கூறவும் கமல் கொதித்துவிட்டார். உடனடியாக தனது டுவிட்டரில் மணிப்பயல்களை தமிழ்பயல்கள் தேடிச்சென்று தாக்கு. கேட்பதற்கு நாதியற்றோர் நாதியின்றி மரணிப்பர் என்றார். இது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. இனி நீ தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறோம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.லைவ்டே

எடப்பாடியை எதிர்த்தவர்களின் பதவி பறிபோகுமா?

இந்த டர்ட்டி டஜன் சசி டர்ட்டிங்களோட சீக்கிரம்  ஒண்ணாயிடுவாய்ங்க
டப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்குக் கோரியபோது, ஓ.பி.எஸ் உட்பட அவரது அணியினர் 11 பேர் எதிராக வாக்களித்தனர். கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் வாக்கெடுப்பைப் புறக்கணித்தார். ‘கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி இந்த 12 பேரின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படுமா?’ என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறியதால் இவர்கள் பதவியை சபாநாயகர் பறிக்கலாம் என்பது விதி. ஆனால், ‘‘கொறடா உத்தரவை மீறினாலும், இவர்கள் தங்கள் கட்சிக்கு எதிராகத்தான் வாக்களித்தார்கள். வேறு ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. அதனால், இந்தச் செயல் ‘கட்சி தாவல் தடைச் சட்ட’ வரம்புக்குள் வராது. எனவே, இவர்களின் எம்.எல்.ஏ பதவி பறிபோகாது’’ என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

விகடன் :செத்தது ஜனநாயகம்... இது பச்சைப் படுகொலை!

கழுகார் வந்ததும், இந்த இதழ் ஜூ.வி அட்டையை எடுத்துப் பார்த்தார். புருவத்தை உயர்த்தினார். ‘‘கடந்த 18-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்களை இதைவிட சரியாக எப்படிச் சொல்ல முடியும்? சமீப நாட்களில் மத்திய அரசும், பி.ஜே.பி தலைமையும், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவும், சபாநாயகரும், ஆளும் கட்சியான அ.தி.மு.க-வும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வும் இணைந்து நடத்தியவற்றை என்னவென்று சொல்வது?” என்ற கேள்வியுடன் நம்மை நோக்கி நிமிர்ந்தவர், ‘‘திரைமறைவுக் காட்சிகளை மட்டும் சொல்கிறேன்’’ என ஆரம்பித்தார். ‘‘ஓ.பன்னீர்செல்வம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டுக் கத்தினாலும் அவருக்கு 11 எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் செல்வாக்கு இல்லை. சசிகலா அணியில் 122 எம்.எல்.ஏ-க்கள் இருந்தார்கள். மெஜாரிட்டியை நிரூபிக்க 117 உறுப்பினர்கள் போதும் என்பதால் எடப்பாடி பழனிசாமி ஆட்சி பிழைத்துவிடும் என்பதுதான் யதார்த்தமான நிலைமை. ஆனால், பன்னீருக்கு காலஅவகாசம் வாங்கித்தர ஸ்டாலின் நினைத்தார். ‘கூவத்தூரில் இருந்து           எம்.எல்.ஏ-க்கள் வெளியேறினால், பன்னீர் பக்கம் வந்துவிடுவார்கள்’ என்பது ஸ்டாலினின் எதிர்பார்ப்பு. எனவே, ‘சட்டமன்றத்துக்குச் சென்று வாக்கெடுப்பைத் தள்ளிவைக்கக் கோருவது, அதற்கு சபாநாயகர் சம்மதிக்கவில்லை என்றால் அதைக் கடுமையாக எதிர்த்து கலவரச் சூழலை ஏற்படுத்துவது, அதன் மூலமாக வாக்கெடுப்பைத் தள்ளிவைப்பது’ என்பதே தி.மு.க-வின் திட்டம்...”

ஜெயிலில் சசிகலா இளவரசி சுதாகரனுக்கு வேண்டிய வசதிகள் குறைவில்லாமல் கிடைக்கிறது!

தமிழகத்தைத் தாண்டி பெங்களூருவிலும் ஆயிரம் வாட்ஸ் கேள்வியாக இருப்பது, ‘சிறைக்குள் சசிகலா என்ன செய்துகொண்டிருக்கிறார்’ என்பதுதான். ‘‘ஆடைகளும் இடமும் மட்டுமே சக கைதிகளுக்கு வழங்கப்பட்டிருப்பவை போல இருக்கின்றன. இவை தவிர, ‘சிறப்பு ஏற்பாட்டில்’ எல்லா வசதிகளும் இவர்களுக்குக் குறைவில்லாமல் கிடைக்கின்றன’’ என்கிறார்கள், இந்தச் சிறையை நன்றாக அறிந்தவர்கள். சசிகலா சிறைக்குள் சென்ற முதல் நாளில், கடுமையாக நடந்துகொள்வதைப் போல சிறைத்துறை காட்டிக்கொண்டது. ஒரே நாளில், சிறையின் நெளிவு சுளிவுகளை சசிகலா தரப்பு கண்டுகொண்டது. அதன்பின், அவர்களுக்கான பாத்திரங்கள், பொருட்கள் அனைத்தும் புதியதாக வெளியில் இருந்து வாங்கிக் கொடுக்கப்பட்டன. மருந்துகள், புரோட்டீன் பவுடர் ஆகியவை வெளியில் இருந்தே போகின்றன. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் தங்கி இருக்கும் அறைகள் கொஞ்சம் விசாலமானது. இங்கே படுத்துக்கொள்ள இரும்புக் கட்டில்களும் போடப்பட்டுள்ளன. குளிர் அதிகமாக இருப்பதாக சசிகலா தெரிவித்ததையடுத்து, அவர்கள் அறைக்கு இரண்டு போர்வைகள் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

பாவனா முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம்.. பல்சர் சுனில் தகவல்

பாவனா முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம்: முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் தகவல்பணம் பறிக்க திட்டமிட்டு பாவனாவை கடத்தினோம். அவர் முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம் என்று முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் கூறினார்.
பிரபல நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி காரில் கடத்தப்பட்டார். ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பு முடிந்து திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் சென்றபோது இச்சம்பவம் நடந்தது. அவரை காரில் கடத்திய கும்பல் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு அதனை செல்போனிலும் படம் பிடித்தனர். இதுபற்றி பாவனா கொடுத்த புகாரின் பேரில் கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில் கோவையில்இருந்து 2 பேரும் பாலக்காட்டில் இருந்து மணிகண்டன் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், விஜேஷ் இருவரும் தலைமறைவாக இருந்தனர். இவர்கள் கோர்ட்டில் சரண் அடையலாம் என்று போலீசாருக்கு ரகசியதகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் எர்ணாகுளம் கோர்ட்டு முன்பு மாறு வேடத்தில் சுற்றி வந்தனர்.

நெல்லையில் போலீஸ் ஜீப்பிலேயே கைதி வெட்டி கொலை

நெல்லை: நெல்லையில் போலீஸ் ஜீப்பை மறித்து கைதியை  காரில் வந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்றது. இதனை தடுக்க முயன்ற எஸ்ஐ உள்ளிட்ட 3 பேரும் காயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புல்லாவெளியைச் சேர்ந்தவர் சிங்காரம் என்ற பாலசுப்பிரமணியன் (47). அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியனின் நெருங்கிய கூட்டாளி. இவர் மீது கடந்த 11.1.2009ல் சுத்தமல்லியில் நடந்த பிரபல ரவுடி மதன் உள்ளிட்ட 3 பேர் கொலை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் நடந்த கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிங்காரத்தை, முறப்பநாடு சரகத்தில் நடந்த கொலை வழக்கில் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக ஆயுதப்படை எஸ்ஐ வீரபாகு மற்றும் 3 போலீசார் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை போலீஸ் ஜீப்பில் அழைத்து வந்தனர்.

ஈஷா மைய சிவன் சிலை திறப்பு விழாவில் மோடி ..

கோயம்புத்தூர் ஈஷா யோக மையத்தில் நிறுவப்பட்டுள்ள, 112 அடி சிவன் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், எதிர்ப்பையும் மீறி இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்றார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஜக்கி வாசுதேவ் என்ற ஆன்மிக குருவினால் நடத்தப்பட்டு வரும் ஈஷா யோக மையத்தால் 112 அடி உயரமுள்ள ஆதி யோகி சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி தினமான இன்று, இந்த சிலை பிரதமரால் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கென தனி விமானம் மூலம் பிரதமர் மோதி கோயம்புத்தூர் வந்தார். ஈஷா யோக மையத்திற்கு வந்த அவர், அந்த மையத்தில் உள்ள தியான மண்டபத்தில் ஜக்கி வாசுதேவுடன் இணைந்து தியான லிங்கத்திற்கு தீபாராதனை காட்டி தியானத்தில் ஈடுபட்டார்.

சாயி பாபா கலைஞரை தேடி வந்து பார்த்த காரணம் ... முற்பிறவியில் கலைஞர் ராஜ ராஜா சோழன் .. சத்திய சாயி பாபா ..

”உங்களுக்கெலாம் அவர் கருணாநிதி,,,எனக்கு அவர் ராஜராஜ சோழன்...” ஆம்..ராஜ ராஜ சோழனின் மறுபிறவி அவர் அதனால் தான் அந்த மாமன்னனை நான் போய்ப் பார்த்தேன் என்றாராம்.. இதே விஷயத்தை கணபதி ஸ்தபதியும் என்னிடம் கூறியுள்ளார்..தமிழகத்தின் அத்தனை கட்டட அதிசயங்களையும் கலைஞரே நிர்மாணித்தார்... ...
கலைஞர் இல்லம் தேடி சத்ய சாய் பாபா வந்தார்..உலகமே அசந்தது..
பாபாவை பார்க்க மைக்கேல் ஜாக்சன் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு கிடைக்காமலே இறந்து போனார்..
சச்சின் பல நாள் காத்திருந்து நேரில் சந்தித்தார்..எவர் வீட்டிற்கும் பாபா பிற்காலத்தில் போனது கிடையாது..
பிரதமரோ, ஜனாதிபதியோ, தேடி வந்துதான் பாபாவைப் பார்க்க வேண்டும்..அப்படிப்பட்ட பக்வான் சத்ய சாய் பாபா, கலைஞரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, அவரது இல்லத்திற்கே போய், மாடி ஏறி கலைஞரைச் சந்தித்தது கண்டு ஆத்திகர்கள் ஆடிப்போனார்கள்..
சில நாத்திகர்கள் ஆத்திரப்பட்டார்கள்...
பின்னாளில் பாபாவிடம் நெருக்கமாக இருந்த ஓர் ஆத்திகர் என்னிடம் இது குறித்த உண்மையைச் சொன்னார்...,


அவர்,ஒரு சத் சங்கத்தின் போது பாபாவைச் சந்தித்தாராம். நிறைய தமிழ் பக்தர்களும் அங்கு இருந்தனராம்.. அப்போது,அவர், கோபமாக, பாபாவிடம்.. ”அந்த நாத்திகரை (கலைஞரை) நீங்கள் வீடு தேடிப்போகலாமா எனக்கேட்டாராம்...
அதற்கு பாபா சொன்ன பதில் கேட்டு அனைவரும் வாயடைத்துப் போயினராம்..பாபா சொன்னாராம்..”

நீட் தேர்வு – ஒரு சொந்த அனுபவம்.. பொது நுழைவு தேர்வு ..

இணையம், அலைபேசி போன்ற மேல்மட்ட சேவைகளுடன் பெருமளவு பழக்கப்படாத, தினக்கூலி வேலைகளில் உள்ள ஒருவர் தனது மகனுக்கோ, மகளுக்கோ நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தைக் கண்டிப்பாக இந்தப் பிரச்சனைகளுக்கு இடையே முடிக்க இயலாது.
அடித்தட்டு மக்கள் பொதுமக்கள் இல்லையா?
இந்த வருடம் முதல் மருத்துவப் படிப்பிற்கு இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. அதனடிப்படையில் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 1-ம் தேதி முதல் மார்ச் 1 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம். ஆதார் இல்லாதவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.
இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்கள் புதிய அட்டைக்கு முதலில் விண்ணப்பிக்க வேண்டும், அதற்க்காகச் சிறப்பு மையங்கள் அரசாங்கத்தால் பல இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன என்று நீட் தேர்வுக்கான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஆதார் அட்டை வைத்து இருந்தாலும் அதில் உள்ள விவரங்கள் மற்ற சான்றிதழ்களில் உள்ள விவரங்களோடு ஒன்றிப் போக வேண்டும் இல்லையென்றால் ஆதார் அல்லது மற்ற சான்றிதழ்களில் உள்ள விவரங்களை மாற்றி அமைத்த பின்னரே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

பாவனா கடத்தல் .. பின்னணியில் நடிகர் திலீப் ?



நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனில் சரணடைந்ததைத் தொடர்ந்து மேலும் இருவர் கோவையில் கைது செய்யப்பட்டனர். பின், பாலக்காடில் பதுங்கியிருந்த மணிகண்டன் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மணிகண்டனை கொச்சிக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘கேரள திரையுலகில் நடிகர், நடிகைகளுக்கு கார் டிரைவர்கள் ஏற்பாடு செய்து கொடுக்கும் சுனில் குமாருடன் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. அவர் கூறும் செயல்களை நான் செய்துமுடிப்பேன். அதற்கு அவர் பணம் கொடுப்பார்.

1000 மதிமுகவினர் ஓ.பி.எஸ். அணியில் இணைந்தனர்! அம்புட்டு ஆளுங்களா?

ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளான இன்று, மதிமுக-வில் இருந்து 1000 பேர் விலகி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.
ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளான இன்று, அதிமுக பேச்சாளர் பாத்திமா பாபு உட்பட ஆயிரம் மதிமுக தொண்டர்கள், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர். தமிழக அரசியல் சூழல் குறித்து மதிமுக தலைவர் வைகோ எந்தக் கருத்தும் கூறாமல் அமைதி காத்துவந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை சட்டப்பேரவையில் திமுக நடந்துகொண்ட முறை சரியில்லை என்று விமர்சித்தார். அதிமுக-வை மற்றவர்கள் அழிக்க விடமாட்டேன் என்றும் கருத்து தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை (MADP)’துவக்கம் - கொடி அறிமுகம்! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் : தீபா பேட்டி

M A D   Peravai ?  So Sweet
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதிலும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை (MADP)என்ற புதிய அமைப்பை துவங்கினார். இதையடுத்து, பேரவையின் கொடியையும் அறிமுகம் செய்தார். கறுப்பு சிவப்பு கொடியின் நடுவில் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா செங்கோல் வழங்கும் படம் இடம்பெற்றுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதிலும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை (MADP)என்ற புதிய அமைப்பை துவங்கினார்.

பாஜக பின்னணியில் கமல் ரஜினி அரசியல் கட்சி உதயமாகிறது !

பூனைக் குட்டி வெளியே வந்தே விட்டது. ஆம் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதியாகி விட்டது.
ஆனால், தனது பெயரில் கட்சி இல்லை. விவரம் சொல்கிறது அந்த புலனாய்வு வர இதழ்.  ஆச்சரியம், ரஜினி அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பது ஜெ., கலைஞர் கருணாநிதி இருக்கும் வரை அரசியலுக்கு வரமாட்டேன் என்பதுதான்.
அதனாலேயே ரசிகர்களும் மக்களும் திட்டித் தீர்த்தாலும் கூட வாய் மூடி அமைதியாக  இருந்தார்.
கலைஞர் நினைவு தப்பி வீட்டில் படுக்கையில் இருக்கிறார். இனி அவர் அரசியலில் இல்லை என்பது போலத்தான்.
ஜெ.,வும் மரணம் அடைந்து விட்டார். ஆனால் ரஜினியின் உடல்நிலை தீவிர அரசியலுக்கு ஒத்து வராது.
அவரால் தமிழகம் முழுக்க அலைந்து திரியவும் முடியாது. இந்த சூழ்நிலையில் திரையுலகில் தனது நண்பரான கமலிடம் மனம் விட்டு பேசி இருக்கிறார்.

பன்னீர்செல்வம் தினகரன் நாடகம் அடுத்த காட்சி ... எல்லாரும் ஒண்ணா வழக்குகளில் இருந்து எஸ்கேப்?

அ.தி.மு.க.,வில், சசிகலா எதிர்ப் பாளர்களை அணி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ள, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திடம், திடீரென, 'சரண்டர்' அடைந்துள்ளார் தினகரன்.
ஆட்சியை அழிக்க, தி.மு.க., திட்ட மிடுவதாக, புகார் கூறிய அவர், 'கட்சியில் இருந்து பிரிந்து
சென்றவர்கள், மீண்டும் வர வேண்டும்' என்றும் அழைப்பு விடுத்தார். 'கட்சியிலும், ஆட்சியிலும் தங்கள் குடும்பத்தின் ஆதிக்கம் இருக்காது' என்றும், அவர்களுக்கு உறுதி அளித்தார்.

சிறை செல்லும் முன், கட்சியை வழிநடத்தும் பொறுப்பை, தன் அக்கா மகன் தினகரனிடம் ஒப்படைத்தார் சசிகலா. அவரால், துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தினகரன், நேற்று, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், பொறுப்பு ஏற்றார். சென்னை, ராயப்பேட்டை யில் உள்ள, தலைமை அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், அவை தலைவரும், அமைச்சருமானசெங்கோட்டையன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உட்பட, பலர் பங்கேற்றனர்.

எஸ்பிஐ ஏடிஎம்-ல் போலி 2,000 ரூபாய் ,,டெல்லி,,, மத்திய அரசு விசாரணை:

வங்கி ஏடிஎம் மையத்தில் போலி 2,000 ரூபாய் நோட்டு வந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தெரிவித்துள்ளார். டெல்லி சங்கம் விஹாரில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் கால் சென்டர் ஊழியர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் பணம் எடுத்தபோது போலி 2000 ரூபாய் நோட்டுகள் வந்தன. இதுதொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டேட் வங்கி நிர்வாகம் தனி விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய நிதித்துறை இணை யமைச்சர் சந்தோஷ் கங்க்வார் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியபோது, கள்ள நோட்டு புழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லி ஏடிஎம் சம்பவம் கவலையளிக்கிறது. இதுதொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். வங்கதேசத்தில் இருந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் போலவே போலி நோட்டுகளை இந்தியாவுக்குள் கடத்தியது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  tamithehindu

நெடுவாசல் ! வெடிக்கிறது போராட்டம் ! ஹைட்ரோ கார்பன் என்றால் மக்கள் ஏன் இத்தனை அச்சப்படுகிறார்கள்..?

மின்னம்பலம்
தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடியை அடுத்தும், புதுக்கோட்டை மாவட்டத்தின் தொடக்கப்புள்ளியிலும் இருக்கிறது நெடுவாசல் கிராமம். ஊருக்கு நடுவே சிறிய கடைத்தெரு. ஊரைச் சுற்றிலும் திரும்பிய பக்கமெல்லாம் தென்னை, வாழை, கரும்பு, சோளம், தானியங்கள் என்று பசுமை பூத்துக் குலுங்கும் கிராமம். அமைதியும் ஆனந்தமும் கைகோர்க்க எளிய மனிதர்களால் நிறைந்த இந்த விவசாய பூமி இன்று போராட்டக்களமாக மாறியிருக்கிறது. கடந்த எட்டு நாட்களாக ஒட்டு மொத்த தமிழகமும் நெடுவாசல் கிராமத்தைதான் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் இந்த கிராமத்தை இந்தியாவே திரும்பிப் பார்ப்பதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளும் தென்படத் தொடங்கிவிட்டன. காரணம் ஹைட்ரோ கார்பன் என்னும் எரிபொருள் வஸ்து.

இந்த ஹைட்ரோ கார்பன் மத்திய அரசிற்கு வரமாகவும் நெடுவாசல் கிராமத்திற்கு சாபமாகவும் அமைந்ததுதான் இதில் உள்ள முரண்பாடு.

பேரவை அலுவலகத்தை திறந்து வைத்தார் ஜெ.தீபா (படங்கள்)

;கடந்த மாதம் 17-ந்தேதி மறைந்த முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் பேசிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தீவிர அரசியல் பயணம் குறித்த தன்னுடைய அறிவிப்பை ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி (இன்று) அதிகாரபூர்வமாக அறிவிப்பதாக கூறி இருந்தார்.>முன்னதாக இன்று காலை 6 மணிக்கு தியாகராயநகர், சிவஞானம் சாலையில் உள்ள தனது வீட்டு முன்பு அமைக்கப்பட்டுள்ள தீபா பேரவை அலுவலகத்தை ஜெ.தீபா திறந்து வைத்தார்.

அமெரிக்காவில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இந்தியர் சுட்டுக்கொலை, குற்றவாளி கைது

கன்சாஸ், ஐதாராபாத்தைச்சேர்ந்த மென்பொறியாளரான ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இவர் கன்சாஸ் பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றிற்கு சென்றிருந்த போது அங்கே வந்த 51 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென ஸ்ரீனிவாசை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்று கத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், ஸ்ரீனிவாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அலோக் என்ற மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.துப்பாக்கியால் சுட்ட நபரின் பெயர் ஆடம் புரிண்டன் என்றும், அவர் கடற்படையில் பணிபுரிபவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்dளது. அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். dailythanthi.com

கைதிகள் புகார் ! சுதாகரன் : ஐம் க்ரீம் ஸௌம் ... சிறையில் சுதாகரன் மந்திர உச்சாடனம் ...

சுதாகரனை கண்டு அஞ்சும் சக கைதிகள்சிறையில் சுதாகரன் மந்திரவாதியைப் போல் இரவு நீண்ட நேரம் வரை மந்திரங்களை ஓதி பூஜை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. By: Kalai Mathi
பெங்களூரு:

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரன் இரவு நேரங்களில் உடல் முழுவதும் திருநீரை பூசிக்கொண்டு மந்திரங்களை ஓதுவதாக கூறப்படுகிறது. இதனால் பீதியடைந்துள்ள சக கைதிகள் தங்களை வேறு சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து இதையடுத்து கடந்த 16ஆம் 3 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவும் இளவரசியும் ஒன்றாக சரணடைந்த நிலையில் சுதாகரன் தனியாகவும் தாமதமாகவும் வந்து சரணடைந்தார். இரு மாநில வனத்துறையினர் மோதல்-வீடியோ 01:32 இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி-வீடியோ

தமிழக அரசை முழுசா விற்ற ஆளுநர் வித்தியா சாகர் ராவ் ...

அந்த வார இதழ் அதிகாரபூர்வமாக அந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதற்கு முன்பே வாட்ஸ் ஆப் குழுக்களில் கவர்னர் பற்றிய செய்திகள் வந்த போது  நம்ப இயலவில்லை. கவர்னர் அவர்களது அண்ணன்கள் மூலம் அமெரிக்க வங்கிகளில் ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டே எடப்பாடியை ஆட்சி அமைக்க அழைத்தார் என்றார்கள் சமூகப் போராளிகள்t; அது உண்மை என்கிறது அந்த வார இதழ். 1.ஜெ., இறந்த போதே அடுத்து என்னெல்லாம் நடக்கும் என்பதை கவர்னர் யூகித்துவிட்டார். சசிகலா தரப்பின் பிரமாண்டமான சொத்து மதிப்பும் கவர்னர் அறிந்து கொண்டார்.
2.சசிகலா தரப்பில் ஆட்சி அமைக்க போராடுவது, அதற்கு டெல்லி முட்டுக் கட்டை போடுவது, அதற்கான காரணங்களை அறிந்து கொள்கிறார். இங்கு தான் விளையாட வேண்டும் என்று கவர்னர் மூளை வேலை செய்யத் துவங்குகிறது. தான் மிகக் கறார் கவர்னர் என்பது போல  முறுக்கிக் கொள்கிறார். சசி தரப்பு பதறுவதை ரசிக்கிறார். மும்பை பறந்து விடுகிறார்.
3.டெல்லி பன்னீரை களம் இறக்குகிறது. பன்னீர் அம்மா சமாதியில் தனது நாடகத்தை துவங்குகிறார்.அதிமுக கடும் நெருக்கடிக்கு ஆளாகிறது.
4.சசி தரப்பு தனது ஆதரவு உறுப்பினர்களை கூவத்தூரில் சிறை வைக்கிறது. இதை மும்பையில் இருந்து கொண்டு ரசிக்கிறார். காய் நகர்த்தல் ஆரம்பமாகிறது.

சட்டசபை நம்பிக்கை தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்க பிரணாப் முகர்ஜியிடம் ஸ்டாலின் கோரிக்கை!

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்யுங்கள் என்று ஜனாதிபதியை சந்தித்து மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பிப்ரவரி 24, 05:30 AM புதுடெல்லி தமிழக சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்யுங்கள் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், புதிதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியிடம் மனு தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் டெல்லியில் நேற்று மாலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அப்போது, அவருடன் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் உடன் இருந்தனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மு.க.ஸ்டாலின் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:– ரத்துசெய்ய வேண்டும் தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானதும், அவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குவதாகவும் அமைந்துவிட்டது.

நாராயணமூர்த்தி vs விசால் சிக்கா ! இன்போசிஸ் நாய்ச்சண்டை

ன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இரண்டு பிரிவாக நின்று நாய்ச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் மென்சக்தியை (Soft power) உலகறியச் செய்த, நடுத்தர வர்க்கத்தினரின் கனவான இன்போசிஸ் நிறுவனத்தில் நடக்கும் குடுமிபிடிச் சண்டைகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையேப் பின்னுக்கு இழுத்துவிடும் எனப் பூச்சாண்டி காட்டுகின்றன முதலாளித்துவப் பத்திரிகைகள்.
”நாங்கள் போற்றி வளர்த்த அறமதிப்பீடுகள் என்னாவது?” எனக் கொந்தளிக்கிறார்கள் இன்போசிஸ் நாராயணமூர்த்தி தலைமையில் திரண்டுள்ள ’நாகப்பதனி’ ஆதரவாளர்கள்.
“ஏய்… நான் சத்ரியண்டா.. அசைக்க முடியாதுடா” என்று ’நாகபதனி’ அணியினரின் கரவொலிகளுக்கிடையே அறிவித்துள்ளார் இன்போசிஸ் தலைமைச்செயல் அலுவலர் விசால் சிக்கா. “சோக்கா சொன்னாண்டா” எனச் சிக்காவை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது ஆப்பன்ஹெய்மர் என்கிற முதலீட்டு நிறுவனம்.

பன்னீர்செல்வம் அணிக்கு வந்த தீபக் .. தம்பிக்கு ஒண்ணுமே கிடைக்கல்லியாம் ..


காத்திருப்பு
சென்னை: அதிமுக துணைப் பொதுச்செயலராகிவிட்ட டிடிவி தினகரனுக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் திடீரென பொங்கி போர்க்கொடி தூக்கியதன் பின்னணி தொடர்பாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலா முகாமில் இருந்த தீபக் இன்று திடீரென முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளராகிவிட்டார். ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் பங்களா தங்களுக்கே சொந்தம்; ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் தேவை; டிடிவி தினகரன் தலைமையை ஏற்க முடியாது என்றெல்லாம் தீபக் பொங்கிவிட்டார்.
இது தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் நாம் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதே சசிகலா கட்டுப்பாட்டுக்குப் போனவர் தீபக்.

2G .. நீதிமன்றத்தில் ஆ.ராசா பதிலடி .. சி பி ஐ வழக்கறிஞர் திணறல்!


ராஜா, ''ஆவணங் களையும், சட்டத்தையும் மட்டும்தான் நான் நம்புகிறேனே தவிர, அதிர்ஷ்டத்தை அல்ல  ;
இதை கேட்டதும் கடும் கோபமடைந்த நீதிபதி, சைனி கூறியதாவது: ; தொலைத் தொடர்பு துறையின் அரசு செயலர், கூடு தல் செயலர், சிறப்பு செயலர், உரிமங்கள் வழங்கும் இயக்குனர், துணை இயக்குனர் என அனைவருமே பதிவு செய்து ஆவணங்களில் கையெழுத்து போட்டுள்ளனர்; அதைதான், ராஜா ஏற்றுள்ளார். அப்படியானால், இந்த கோர்ட், ஆவணங்களை நம்ப வேண்டுமா அல்லது சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்த பின், கோர்ட்டிற்கு வந்து, 'நான் உடன்படவில்லை; வெறும் கையெழுத்துதான் போட்டேன்' என்ற வாய்மொழி சாட்சியை, நம்ப வேண்டுமா?   அரசு செயலர், அமைச்சரவை செயலருக்குத்தான் கட்டுப்பட்டவர்; அமைச்சருக்குஅடிமை அல்ல. மனப்பூர்வமான ஒப்புதல் இல்லை என்றால், அதையாவது, தன் குறிப்பில் பதிவு செய்திருக்க லாமே; அதை, யாரும் தடுக்க போவதில்லையே. நிர்வாக சட்டத்தை நன்கு படித்துவிட்டு இந்த கோர்ட்டிற்கு உரிய ஆலோசனைகளை வழங்கும் விதத்தில், வாதங்களை வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நீதிபதியின் கிடுக்கிப் பிடி கேள்விகளால் ஆடிப் போன, சி.பி.ஐ., வழக்கறிஞர், குரோவர் சிறிது நேரம் அமைதி காத்தார். இதன்பின் அவர் கூறியதாவது:

வியாழன், 23 பிப்ரவரி, 2017

நெடுவாசல் ஹைட்ரோ காபன் .. அனுமதி கொடுத்தது மோடி அரசுதான் . இரகசியம் அம்பலம்!


trolljaya2. நண்பர்களுக்கு வணக்கம்.. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எனப்படும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இதை மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் தான் அனுமதி தந்தது என்று இன்று காலை முதல் தொடர்ந்து கூறி வருகிறோம்.. ஆனால் செவி சாய்க்க யாருக்கும் மனமில்லை..
இது முற்றிலும் 56 இன்ச் மார்பு கொண்ட மோடி மஸ்தான் வேலை தான் என்பதற்கான ஆதாரம் இது..
மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம், அக்டோபர் 15,2015 அன்று வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு..
Resolution No. O - 190198/22-95-ONG.III
1. On 2nd September, 2015, the Cabinet has approved the Marginal Field Policy (MFP) with the objective to bring marginal fields to the production at the earliest so as to augment the domestic production of oil and gas.