சனி, 10 பிப்ரவரி, 2024

நடிகர் விஜயின் ரிமோட் கண்ட்ரோல் புஸ்ஸி ஆனந்த். ஒரு விறகு கடை முதலாளி அமித் ஷாவின் அடியாளாக வரலாறு

May be an image of 3 people
புஸ்ஸி ஆனந்த் -  முதல்வர் ரங்கசாமி  - நடிகர் விஜய்

தோழர் வினேஷ்பாபு  :  வில்லங்கமான விறகுக்கடை முதலாளி புஸ்ஸி ஆனந்த்!
யார் இந்த புஸ்ஸி ஆனந்த்??
புதுச்சேரியில், வெறும் 5,000 ஓட்டுகள் உள்ள சிறிய சட்டமன்றத் தொகுதி தான் 'புஸ்ஸி தெரு'.
இந்த தொகுதியில் புதுச்சேரி கண்ணன் தொடங்கிய புதுவை மாநில காங்கிரஸ் சார்பில், 2006-ம் ஆண்டு தேர்தலில் நின்று 2,500 ஓட்டுகள் வாங்கி ஜெயித்து, பின்பு அதே தொகுதியில்  2 முறை தோற்ற நபர்தான் இந்த புஸ்ஸி ஆனந்த்.
புதுச்சேரியில் சாதாரண விறகுக்கடை வியாபாரம் செய்து வந்த புஸ்ஸி ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தில் விஜய் ரசிகர் மன்றத்தின் சாதாரண கிளை தலைவராக இருந்து வந்த இவரை, தமிழக விஜய் ரசிகர் மன்றத் தலைவராக பதவி கொடுத்தவர் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்.

கணித் தமிழ் மாநாடு: ஏஐ தொழில்நுட்பத்தில் திருக்குறள்

மின்னம்பலம் - Selvam :  கணித் தமிழ் மாநாடு: ஏஐ தொழில்நுட்பத்தில் திருக்குறள்
சென்னை நந்தம்பாக்கத்தில் பன்னாட்டு கணித் தமிழ் மாநாட்டை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (பிப்ரவரி 8) துவக்கி வைத்தார்.
இந்த மாநாடானது வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட நோக்கங்களோடு நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற இரண்டாவது நாள் கருத்தரங்கில் கிஸ்புளோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுரேஷ் சம்பந்தம் தலைமையிலான குழுவினர் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் திறக்குறளை எளிமையாக அறிந்துகொள்ள உதவும் thirukural.ai என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தினர்.

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெற்றி

மாலை மலர் :   பாகிஸ்தானில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாதுகாப்பை நிலைமை கருத்தில் கொண்டு இணைய தள சேவைகள் முடக்கப்பட்டிருந்தன.
தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.
வாக்கி எண்ணிக்கை தொடங்கி நீண்ட நேரமாகியும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் இம்ரான் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையம் மீது குற்றஞ்சாட்டினர். மேலும், முடிவுகள் தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.

மேகாலயாவில் இந்தி திணிப்பு எதிர்ப்பு- ஆளுநர் உரையை மாநில மொழிகளான காசி காரோ மொழிகளில் நிகழ்த்த ஆர்ப்பாட்டம்

tamil.oneindia.com - Mathivanan Maran :ஷில்லாங்: மேகாலயா சட்டசபையில் ஆளுநர் பாகு சவுகான் இந்தியில் உரையாற்றியதற்கு அம்மாநில எதிர்க்கட்சியான வி.பி.பி. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆளுநர் பாகு சவுகான் இந்தியில் உரையாற்றினால் ஆங்கிலத்தில் கட்டாயம் மொழிபெயர்ப்புக்கான ஏற்பாடு செய்ய வேண்டும்;
அப்படி செய்யாவிட்டால் ஆளுநர் உரையை புறக்கணிப்போம் என விபிபி கட்சி அறிவித்துள்ளது.
மேகாலயாவில் என்பிபி தலைமையில் பாஜக, சுயேட்சைகள் மற்றும் மாநில கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

திமுக - காங்கிரஸ்! 12 தாங்க .. 9 தான் தரமுடியும்! தொகுதி உடன்பாடு இழுபறி?

 tamil.oneindia.com -  Jeyalakshmi C :  சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு போட்டியிடும் இடங்கள் குறித்து திமுக காங்கிரஸ் இடையே இன்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 10க்கும் மேற்பட்ட இடங்களை கேட்டு வரும் நிலையில் அதை தருவதற்கு திமுக தர தயாராக இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே அரசியல் களம் அனலடிக்கிறது. தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடு பிடித்துள்ளன. திமுக கூட்டணி வலிமையான கூட்டணி என்று சொன்னாலும் கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்களை தருவதற்கு திமுக தயாராக இல்லை.

உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம்! அத்தை/மாமன் மகளை திருமணம் செய்துகொள்ள முடியாது!

மாலை மலர் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல் சட்டங்கள் மற்றும் தண்டனை சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக உள்ளது. ஆனால், தனி நபர் சார்ந்த சிவில் சட்டங்கள் பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளது.
அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜ.க. பல வருடங்களாக கூறி வருகிறது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சியில் ஆளும் பா.ஜ.க. கருத்து கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் முதன்முறையாக உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத்தில் நேற்று பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் அத்தை/மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தடைவிதிக்கப்பட்ட உறவின்முறை வருமாறு:-

வெற்றி துரைசாமியின் CCTV வீடியோ.!' துப்பு துலக்கிய போலீசுக்கு Twist? விபத்துக்கு முன்

tamil.asianetnews.com  - vinoth kumar :   காரில் பயணம் செய்த சைதை துரைசாமியின் நிலை என்ன என்பது தெரியாமல் தீவிர தேடுதல் வேட்டையில் இந்திய விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உள்ளிட்டோர் கடந்த 5 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
இமாச்சல பிரதேசத்தில் சட்லஜ் நதியில் மாயமான சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும்  பணியில் கடற்கடை ஸ்கூபா டைவிங் வீரர்கள் ஈடுபட்டிருந்த போது 3 சூட்கேஸ்கள் கிடைத்துள்ளன.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது ஒரே மகன் வெற்றி துரைசாமி (45). சினிமா துறையிலும் ஆர்வம் கொண்டவர்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி தனது நண்பர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலாவை முடித்து விட்டு சென்னை திரும்புவதற்காக இன்னோவா காரில் விமான நிலையத்துக்கு புறப்பட்டார்.

வியாழன், 8 பிப்ரவரி, 2024

திமுக கூட்டணி 39/39, அதிமுக 0 - தேர்தல் கள ஆய்வு!

மின்னம்பலம் -Kavi : தமிழ்நாட்டில் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி தான் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே சர்வேயில் தெரியவந்துள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அனைத்துக்கட்சிகளும்  தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மோடி ஹாட்ரிக் சாதனை படைப்பாரா அல்லது மோடிக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள 27 கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் இந்தியா டுடே ஊடகம், ‘மூட் ஆப் தி நேஷன் 2024′ என்ற தலைப்பில் சர்வே எடுத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 2024 ஜனவரி மாதம் 28 ம் தேதி வரை மொத்தம் 35,801 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

விஜயகாந்தின் தேமுதிக ஆரம்ப புள்ளி பாஜக -- மக்கள் நலக்கூட்டணியும் பாஜக உபயம்தான்!

May be an image of 3 people and text
May be an image of 2 people and dais
விஜயகாந்தின் தேமுதிகவின் ஆரம்ப புள்ளி பாஜக -- மக்கள் நலக்கூட்டணியும் பாஜகவின் உபயம்தான் .. பாஜகவின் முன்னாள் ஆதரவாளர் பொன்ராஜ் .. வாக்குமூலம்  
Ponraj Vellaichamy  :  மனித நேயம் கொண்ட மாமனிதன் காலமானார்.
தேமுதிக தலைவர் கேப்டன் திரு விஜயகாந்த் அவர்களது மரணம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
நல்லவர்களை இறைவன் சீக்கிரமாக அழைத்துக்கொள்கிறான் என்பது வருத்தத்திற்குரியதாக இருக்கிறது.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திருமதி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள், மைத்துனர் திரு சுதீஸ்  அவர்களுக்கும், தேமுதிக நண்பர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
கேப்டன் அவர்களோடு எனது நினைவலைகள்
கேப்டன் திரு விஜயகாந்த் அவர்களோடு எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை பகிர்ந்து அவரை நினைவு கூற விரும்புகிறேன்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக நடிகர்கள் 11 வது இந்திய குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களை சந்திப்பதற்காக டெல்லி வந்திருந்தார்கள்.

அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி? அமித் ஷா பேச்சால் ரகசியம் அம்பலம்?

BBC  முரளிதரன் காசி விஸ்வநாதன் : : கூட்டணிக்கான கதவுகள் அ.தி.மு.கவுக்கு திறந்தே இருக்கின்றன என மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.கவின் மூத்த தலைவருமான அமித் ஷா கூறியிருக்கிறார். ஆனால், பா.ஜ.கவைப் பொறுத்தவரை கூட்டணிக் கதவுகள் மூடப்பட்டுவிட்டன என பதிலடி கொடுத்திருக்கிறார் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக - பா.ஜ.க. இடையே என்ன நடக்கிறது?
அமித் ஷா பேச்சும் அதிமுக பதிலடியும்
நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறியது குறித்துக் கேட்டபோது, "கூட்டணிக்கான எல்லா கதவுகளும் திறந்தே இருக்கின்றன. இது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்று பதிலளித்திருக்கிறார்.

மீண்டும் மோடிதான்.. இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளில் ஜெயிக்கும்..டைம்ஸ் நவ் EVM பரபர சர்வே

 tamil.oneindia.com  - Mani Singh S  :  டெல்லி: லோக்சபா தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி: 366 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.
தேர்தல் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என அரசியல் கட்சிகள் படு பிசியாக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.
மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக, வரும் தேர்தலிலும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.
NDA Register Hat Trick win India alliance Crosses 100 Times now Lok sabha prediction survey

புதன், 7 பிப்ரவரி, 2024

75 போலி ED அதிகாரிகள் மும்பையில் தொழில் அதிபரை மிரட்டி ரூ.164 கோடி பணம் பறித்துள்ளது.

May be an image of 7 people and text

குப்பன் சா :  திருந்தாத திருட்டு கூட்டம்.
தமிழ்நாட்டில் ,ஒன்றிய  அரசின் ED (அமலாக்கத்துறை ) அதிகாரி அங்கித் திவாரியின் லஞ்ச வேட்டை நாடறிந்து அதிர்ச்சியானது.
அங்கித் திவாரியின் வாக்கு மூலத்தில்
 மேலும் 75 ED அதிகாரிகள் இந்த மோசடி பெறும் ஊழலில் சிக்கியுள்ளனர். இருப்பினும் இவர்களின் பெயர்களை தமிழ்நாடு போலீஸ் எப்போது வெளியிடும் என்ற தெரியாது.
இப்போது இதைவிட மாபெறும் ED-யின் மோசடி மும்பையில் அம்பலமாகி உள்ளது.
போலியான ஒரு ED கும்பல் (Gang) பம்பாய் தொழில் அதிபர் ஒருவரை மிரட்டி ரூ.164 கோடி பணம் பறித்துள்ளது.
இவர்களை போலீஸ் சுற்றி வளைத்து பிடித்த போது, அவர்களிடமிருந்து 200 -க்கும் மேற்பட்ட ED மட்டும் இருக்கும் ஆவணங்கள் இருந்துள்ளதை கண்டு மும்பை போலீஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது.

தாமோதரம்பிள்ளை திருநாவுக்கரசு! புலிகளின் இரத்த வெறிக்கு பலியான கிழக்கு மாகாண ஆளுமை

Poornima Karunaharan
:   ஒரு தேசத்தின் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றியது மாபெரும் துரோகமாம்.
அதனால் துரோகி என்று நடு வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்  
பெற்றோலியக் கூட்டுத்தாபன கிழக்குப் பிராந்திய முகாமையாளர். அவர் பெயர் தாமோதரம்பிள்ளை திருநாவுக்கரசு. ஆமாம் அவர் தான் எனது தந்தை.
பாடசாலையில் கல்வி கற்கும் காலத்தில் ஒவ்வொரு பாடசாலையிலும் அதிபர் தேசியக் கொடியை ஏற்றுவதும் நாங்கள் தேசிய கீதம் பாடுவதும் காலங்காலமாக நடைபெறும் நிகழ்வாகும்.
அதேபோல அரச உத்தியோகத்தர்களுக்கும் அது ஒரு கடமையாகும். எனது தந்தை ஒரு உயர் அதிகாரி. அவர் அரசாங்கத்திடம் ஊதியம் பெறுபவர்.
அவர் தனது கடமையை மறுக்க முடியாது. அப்பாவும் தனது கடமையை செய்தார். அது மரணதண்டனை குற்றமாகக் தீர்ப்பளிக்கப்பட்டு நடு வீதியில் நிறைவேற்றப்பட்டது.

Tamil Nadu பாஜக கூட்டணியின் உத்தேச வேட்பாளர் பட்டியல் Part-1

 

பாராளுமன்றத் தேர்தலுக்கு கடும் போட்டி: தி.மு.க. வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்

மாலைமலர் : சென்னை பாராளுமன்றத் தேர்தலில் யார்-யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று தி.மு.க. ஒரு சர்வே எடுத்து வைத்துள்ளது.
இந்நிலையில் ஒவ் வொரு மாவட்ட நிர்வாகிகளையும் அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து கடந்த சில நாட்களாக கருத்து கேட்டு வந்தது.
தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றிருந்த முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தினமும் காலை, மாலை என இரு நேரமும் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

சைதை வெற்றி துரைசாமியை தேடும் பணி தொடர்கிறது! போலீஸ் ஆற்றில் கிடைத்த மனித உடல் பாகத்திற்கு டிஎன்ஏ டெஸ்ட்!

tamil.oneindia.com - Mani Singh S : சிம்லா: சிம்லா: வெற்றி துரைசாமியை தேடும் பணி தொடர்வதாகவும் ஆற்றங்கரையோரம் கிடைத்த மனித உடல் பகுதி டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது எனவும் இமாச்சல பிரதேச போலீஸ் தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் நிர்வாகியும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி. இவரது ஒரே மகன் வெற்றி துரைசாமி. 45 வயதான வெற்றி துரைசாமி தொழில் அதிபர் ஆவார்.
 சினிமா துறையிலும் ஆர்வம் கொண்ட வெற்றி துரைசாமி கடந்த 2021 ஆம் ஆண்டு விதார்த்-ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான 'என்றாவது ஒரு நாள்' என்ற படத்தையும் இயக்கினார்.
பிரபல இயக்குனர் வெற்றிமாறனிடம் பயிற்சி பெற்ற வெற்றி துரைசாமி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு இமாசல பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார்.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

ராமஜெயம் கொலை வழக்கில் பேரம் பேசப்படுகிறதா?

SP informs that 2 Bamakavins are connected in Ramajayam case

  நக்கீரன் : தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி தொழிலதிபர் கே.என். ராமஜெயம். இவர் 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி  திருச்சியில் நடைப்பயிற்சி சென்றபோது, கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.
அவரின் உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை வழக்கினை,
உள்ளூர் போலீசார் முதலில் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்தனர். இருப்பினும் எந்தத் துப்பும் துலங்கவில்லை.
அதைத் தொடர்ந்து ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன், 'இந்த வழக்கைத் தமிழக அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு மூலம் விசாரிக்க வேண்டும்' என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கனிமொழி : மத்தியில் ஆட்சி நிச்சயமாக மாறும்!

Maalaimalar  :  நாகர்கோவில் நாகர்கோவிலில் நடந்த தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் கருத்து கேட்பு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக்கூடிய பல துறைகளை சார்ந்த சங்கங்களை சார்ந்த அத்தனை பேருக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களை சந்தித்து மக்களுடைய கருத்துக்களை, கோரிக்கைகளை கேட்டு எழுதப்படக்கூடிய மக்களுடைய தேர்தல் அறிக்கையாகத்தான் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இருக்கும்.
இப்போது அந்த வழியில் தொழிலாளர்கள், நம்முடைய முதலமைச்சர் கழக தலைவர் தளபதி அவர்களுடைய கட்டளைக்கு இணங்க தேர்தல் சார்ந்து தொழிலாளர், விவசாயிகள், மீனவர்களை சந்தித்து அவர்களுக்கு இருக்கக்கூடிய கோரிக்கைகளை எல்லாம் தேர்தல் அறிக்கையாக உருவாக்கக்கூடிய வாய்ப்பை நாங்கள் பெற்று இருக்கிறோம்.

பாஜக கூட்டணியில் தேமுதிக, அமமுக, ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதிகள்

zeenews.india.com - S.Karthikeyan :  நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்புள்ளது என்பதால் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டன.
குறிப்பாக ஆளும் கட்சியான திமுக, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளையே தொடங்கிவிட்டது. ஆனால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்த அறிவிப்புகள் மட்டும் இன்னும் முடிவாகவில்லை.
அதிமுக பொறுத்தவரையில் பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறது.
பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது.

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கு அமைச்சரவை அனுமதி (மருத்துவ தேவைகளுக்காக)

hirunews.lk : கஞ்சா பயிரிடுவதற்கு அமைச்சரவை அனுமதி (மருத்துவ தேவைகளுக்காக)
ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா பயரிடுவதற்கு அமைச்சரவை  அனுமதி வழங்கியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவினால் அமைச்சரவையில் இந்த பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
அமைச்சரவையின் அனுமதி கிடைத்தமையால் தாம் மகிழ்ச்சியடைவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டியதுதானே?

May be an image of text

 கொஞ்சமாவது நேர்மை இருந்தால்,   தமிழ்நாட்டு தமிழர்களின் சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டியதுதானே?
உங்களால் முடியாததை இலங்கை தமிழர்களின் தலைமேல் சுமத்துவது கடைந்தெடுத்த கயமை.
இலங்கை எப்படியாவது பற்றி எரியவேண்டும் .
அதில் குளிர்காய துடிக்கும் பொறுக்கிகள் கூட்டம் இது.
மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் சசிகலா நடராஜனிடம் வாங்கிய கூலிக்காக தமிழ்நாட்டை படு பாதாளத்தில் தள்ளி வீழ்த்திய கூடடமல்லவா?
காசுக்கு எதுவும் செய்யும் அரசியல் விபசார கூடடம் இது
இவர்களின் கொட்டத்தை அடக்குவதற்காக எதிர்காலத்தில் இலங்கை அரசு சீனாவின் கடற்படையை கச்சத்தீவில் நிறுத்த கூடும்!
இலங்கை பற்றி எரிந்தபோதெல்லாம் இவர்கள் பணக்காரர்கள் ஆகியதுதான் வரலாறு.
கொள்ளை அடிட்த்த ஆசை மீண்டும் முளை விடுகிறது.

திங்கள், 5 பிப்ரவரி, 2024

மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் வெளியேற்றம் எப்போது? அதிபர் முய்சு புதிய அறிவிப்பு

BBC News தமிழ் :  மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை (பிப்ரவரி 5) முதல் முறையாக உரையாற்றினார்.
இந்த உரையில், முகமது முய்சு மாலத்தீவின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் எதையும் தனது அரசு செய்யாது என்றார்.
மாலத்தீவின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை அச்சுறுத்தும் எந்தவொரு வெளிப்புற அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் என்றும் முய்சு கூறினார்.
1932-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாலத்தீவு பாராளுமன்றத்தில் அப்போதைய அதிபர் சுல்தான் முகமது ஷம்சுதீன் ஆற்றிய உரையையும் முகமது முய்சு மேற்கோள் காட்டிப் பேசினார்.
இஸ்லாம் மதம் மாலத்தீவுக்குக் கிடைத்த ஆசிர்வாதம் என்று நம்பிய சுல்தான் முகமதுவின் நிலைப்பாட்டையே தாமும் பின்பற்றுவதாகக் கூறினார் முய்சு.

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்கு- உச்சநீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு

மாலை மலர் : தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து பதிவு செய்ததற்கு எதிராக அமைச்சர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவின் மேல்முறையீடு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, தலைமை நீதிபதி முன் அனுமதி இல்லாமல் தனி நீதிபதி வழக்கு பதிவு செய்து உத்தரவிட்டதாக, தலைமை பதிவாளர் ஜோதிராமன் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது"-எழுத்தாளர் சாரு நிவேதிதா..

May be an image of 1 person, temple and tree

சாரு நிவேதிதா..: பெரியார்மீது எனக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது.
மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய் விட்டனவே என்பதுதான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம்.
உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று.
வருணபேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் புராணங்களையும் இதிகாசங்களையும் எதிர்த்தார். அதனால் உலக இலக்கியங்களிலேயே தலைசிறந்த காவியம் என்று உலக எழுத்தாளர்களால் போற்றப்படும் மகாபாரதத்தைப் படிக்காமல் விட்டோம்.
 இப்படியெல்லாம் இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் சமஸ்கிருதத்தில் உள்ள முக்கிய நூல்களை நானே படிக்க ஆரம்பித்தேன்.

சிலியில் காட்டுத் தீ- 99 பேர் பலி...சாம்பல் மழை அவசரநிலை பிரகடனம் செய்த அதிபர் போரிக்

tamil.asianetnews.com - SG Balan : சிலி அதிபர் போரிக், நாட்டில் அவசரநிலையைப் பிரகடனம் செய்வதாகவும் இதன் மூலம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.
It Was Raining Ash: Chile Wildfires Kill 99, President Declares Emergency sgb
மத்திய சிலியில் எரியும் காட்டுத் தீயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார்.
சிலி நாட்டின் கடலோர சுற்றுலாப் பகுதியான வால்பரைசோவில், கடுமையான கோடை வெப்ப அலை வீசிவருகிறது. கடந்த வார இறுதியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை உயர்ந்தது. இந்நிலையில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

நடிகர் விஜயின் அரசியலை ஒரு பொருட்டாகக்கூட எடுக்க எந்த தர்க்க நியாயங்களும் தென்படவில்லை.

May be an image of 1 person and text
May be an image of 1 person and text that says 'தமிழக வெற்றி கழகம் Û அவென்யு. பனையூர்.சென்னை- பனையூர் விஜய் தலைவர் தமிழக வெற்றி கழகம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள். அன்புடன், விஜய் தமிழக வெற்றி கழகம் தலைவர் Xf @tvkvijayofficial'

LR Jagadheesan  :  தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல் கட்சியை துவங்குவதாக அறிவித்த எவராவது தன் கட்சித்தொண்டர்களையோ அல்லது ஊடகங்களையோ பொதுவெளியில் நேருக்கு நேர் சந்திக்காமல் வெறும் அறிக்கை மூலமே தம் அரசியல் கட்சியை துவக்கிய வரலாறு உண்டா?
தமிழ்நாட்டு அரசியலில் கடைசியாய் ஒரு கட்சியை கைப்பற்றி தமிழ்நாட்டில் ஆட்சியையும் கைப்பற்றுவதில் வெற்றிபெற்ற திரை நட்சத்திரம் ஜெயலலிதா.
எம்ஜிஆர் இறந்தபின் அதிமுகவை முழுமையாய் கைப்பற்றும் வரை தன் போயஸ்தோட்டத்தின் பால்கனியில் அவர் தினமும் தரிசனம் தந்தார்.
 தொண்டர்களை சந்தித்தார். பேசினார். ஊடகங்களை சந்தித்தார்.
அவ்வளவு ஏன் அவர் சொத்துக்கு இன்று வாரிசாக வந்திருக்கும் தீபாம்மா கூட கொஞ்சகாலம் செய்தியாளர்களை சந்தித்து “அரசியல்” அளவளாவினார்.

உதயசூரியனில் நிற்கமாட்டோம்... திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் விசிக, மதிமுக: பின்னணி இதுதான்!

 மின்னம்பலம் Aara : மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக தலைமையகமான அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரை சந்தித்து வருகின்றனர்.
இந்த வகையில் இன்று (பிப்ரவரி 4) இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக அவைத் தலைவர் அர்ஜூன்ராஜ், “பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது.
நாங்கள் இரண்டு லோக் சபா சீட்டுகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் கேட்டிருக்கிறோம்.
இந்த முறை எங்களுடைய கட்சி சின்னத்தில் தான் கண்டிப்பாக போட்டியிடுவோம்.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் முடித்து தமிழகம் திரும்பியதும் இறுதி முடிவு எட்டப்படும்”  என்று தெரிவித்தார்.
திமுகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெற்றது.

நடிகர் விஜய்க்கு அரசியலை தவிர வேறு ஆப்ஷன் இருப்பதாக தெரியவில்லை

May be an image of 2 people and beard

ராதா மனோகர் : நடிகர் விஜய்க்கு அரசியலை தவிர வேறு ஆப்ஷன் இருப்பதாக தெரியவில்லை
அடுத்தடுத்து ஊத்திக்கொண்ட படங்கள்
அவற்றை வெற்றி படமாக காட்டுவதற்கு செலவு செய்த பணம் ...
மார்க்கெட்டிங் உத்தியால் மட்டுமே இன்னும் எத்தனை நாளைக்குதான் மாஸ் ஹீரோ இமேஜை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற கவலை
எல்லாவற்றிலும் பார்க்க தலைக்கு மேல் இருக்கும் வருமான வரி அந்நிய செலாவணி சிக்கல் போன்ற பல கோப்புக்கள்
வர இருக்கும் சட்ட சிக்கல்களை சமாளிக்க கொஞ்சம் அரசியல் பலம் தேவைப்படுகிறது
ஒன்றிரண்டு வீத வாக்கு வாங்கி இருந்தாலும் பேரம் பேச வசதியாக இருக்கும்
அரை நூற்றாண்டை எட்டி இருக்கும் விஜய் இதுவரை மக்கள் நலன் சார்ந்த அரசியல் கோட்பாடு பற்றி எதாவது உருப்படியாக பேசி உள்ளாரா?