சனி, 4 செப்டம்பர், 2010

மாவோயிஸ்டுகளுக்கும்,கம்யூனிஸ்டுகளுக்கும் எந்த உறவும் இல்லையா?

இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் நேற்று கோவையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது,
’’முதல்வர் கருணாநிதி கம்யூனிஸ்டு கட்சியை விமர்சனம் செய்வது அதிர்ச்சி அளிக்கிறது. கம்யூனிஸ்டுகளும், மாவோயிஸ்டுகளும் ஒன்று என்று அவர் கூறி உள்ளார். சாத்வீகமான போராட்டங்களை தடுக்கும் போது மாவோயிஸ்டுகள் உருவாக வாய்ப்பு உள்ளது’’ என்று தெரிவித்தார்.
இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’மாவோயிஸ்டுகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே எந்த உறவும் இல்லையென்றால் மாவோயிஸ்டுகளுத் தடை விதிக்கும் மத்திய அரசின் முடிவைக் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்த்தது ஏன்?
தடையால் பயன் ஏற்படாது என்று பிரகாஷ்காரத் கூறவில்லையா?
அரசியல் ரீதியாக மாவோயிஸ்டுகளை எதிர்த்து வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று குருதாஸ் தாஸ் குப்தா சொல்லைவில்லையா?
நேபாள மாவோயிஸ்டுகளின் வெற்றி தெற்காசியாவில் மாற்றத்தை எற்படுத்தும் என்று ஏ.பி. பரதனே கோவையில் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளாரே?
எதிலும் ஆழமாகவும், தீவிரமாகவும் சிந்தித்து பேசக்கூடிய ஏ.பி.பரதன், இங்குள்ள கம்யூனிஸ்டுகளின் வன்முறை போராட்ட அறைகூவல்களுக்கு துணை போகலாமா?’’என்று கேள்விகள் எழுப்பியுள்ளார்.
நக்சலைட் என்பது 1967 தேர்தலுக்குப் பின், மேற்கு வங்கத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. நக்சலைட்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்தே, குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து புதிய இயக்கம் கண்டனர்
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மற்றவர்கள் இறப்பைப் பற்றி கவலைப்படாமல், தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என கருதுகின்ற நிலை வளர்வது நல்லதல்ல. அந்த இயக்கங்களின் அடிப்படையான பொதுவுடைமைக் கொள்கைகளில் இந்த முறை சரிதானா என்பதை அந்த இயக்கங்களின் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்' எனக் கூறியிருந்தேன்.
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-09-04 03:33:29 IST
குஷ்பூ கருணாநிதியை பார்த்து கேட்கிறார், மஞ்ச துண்டாரே நான் உங்கள் கட்சியில் சேர்ந்ததை வைத்து அடுக்கு மொழியில் ஒரு பஞ்ச் டயலாக் சொல்ல முடியுமா? மஞ்சள் துண்டு: ஹே குஷ்பூ, என் காலில் கிடப்பது செருப்பு என் கிட்ட வேகாது உன் பருப்பு, எனக்கு போடாத சோப்பு, உன்ன எங்க கட்சியில சேர்த்தது மஹா தப்பு, அதற்காக வர தேர்தலில் திமுகவுக்கு வைக்க போறாங்க பாரு ஆப்பு, அந்த செய்தி தான் இந்தியாவுல டாப்பு, நான் சோத்துல போட்டு சாப்பிடுவது உப்பு, ரோஷத்துல வெளிநாட்டிற்கு தப்பித்து போய்டுவோம் டா மாப்பு. டன் டனக்கா இன்னொரு அடுக்கு மொழி கருணாநிதி: டே கள்ள வோட்டு போட்டா இரண்டு வருடம் தண்டனை, திமுகவுக்கு நல்ல வோட்டு போட்டா ஐந்து வருடம் தண்டனை, வரட்டுமா....
தினகரன் ஆசிரியர் - chennai,இந்தியா
2010-09-04 02:21:42 IST
"""மற்றவர்கள் இறப்பைப் பற்றி கவலைப்படாமல், தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என கருதுகின்ற நிலை வளர்வது நல்லதல்ல. அந்த இயக்கங்களின் அடிப்படையான பொதுவுடைமைக் கொள்கைகளில் இந்த முறை சரிதானா என்பதை அந்த இயக்கங்களின் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்' எனக் கூறியிருந்தேன்."" ஆகா என்ன ஒரு அக்கறை.......
மகாதேவன் - chennai,இந்தியா
2010-09-04 02:14:45 IST
"மாவோயிஸ்டுகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் எந்த உறவும் இல்லை என்றால், மாவோயிஸ்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து, அவர்களை தீவிரவாதிகள் என அறிவித்தபோது, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?"....சரி இவர் கூறுவது போல் வைத்து கொண்டால், விடுதலை புலிகளுக்காக இரங்கற்பா எழுதியதை வைத்து இவருக்கும் விடுதலை புலிகளுக்கும் உறவு இருந்து என்று கூறினால் ஏற்று கொள்வாரா??? பலமான உறவு இருந்தது என்பதே உண்மை..அதை இன்று ஒத்து கொண்டால் ராகுல் காந்தியின் கோபதுக்கு ஆளாக வேண்டுமே....பச்சை சுயநலம்......
மைனர் குஞ்சுமணி - குஞ்சுபட்டி,இந்தியா
2010-09-04 01:54:29 IST
தலைவரே..அங்கே உங்களை ஜெயலலிதா கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டிருக்கு..நீங்க என்னடான்னா இங்கே வந்து கம்யூனிஸ்டுகளை கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க..இங்கே என்ன குயிஸ் ப்ரோக்ராமா நடத்துறாங்க..ஆளாளுக்கு கேள்விகளை பாஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க..யாராச்சும் பதில் சொல்லுங்க.....
RG - UAE,இந்தியா
2010-09-04 01:16:13 IST
எனக்கு நக்சலைடுகுள் பற்றி அவர்களுடைய தொடர்புகள் பற்றி அல்லது யாரால் உருவாக்கப்பட்டார்கள் பற்றி தினமலர் செய்தியை படிக்கும்போது தெரிகிறது. இப்போழ்து நம்ம நக்ஸலைட்டுகள் பற்றி சொல்வதை மத்ய அரசாங்கம் தயவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சம்பத்த பட்ட மாநிலமும் உரிய நடவடிக்கை எடுத்து போலீஸ் மற்றும் பொது மனிதர்களை காப்பாற்ற வேண்டும்....
M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-04 01:03:37 IST
இன்று திமுகவுக்கு 99 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு கம்யூனிஸ்டுகளும் ஒரு காரணம். போன சட்டமன்ற தேர்தலில் அவர்கள் உங்கள் கூட்டணியில் தான் இருந்தார்கள். அப்போ இனித்தது. நீங்கள் கூறும் மாவோயிஸ்டுகள் உங்கள் பங்காளிகள்,நண்பர்களா இருந்தார்களா! இப்போ கூட்டணிக்கு வராமல் உங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் கசக்குதா. தோல்வி பயத்தில் என்ன உளறுகிறோம் என்று தெரியாமல் உளறகூடாது. அதிமுகவில் இருந்து ஆட்களை விலை கொடுத்து வாங்கினீர்கள். கம்யூனிஸ்டில் இருந்து ஆட்களை விலை கொடுத்து வாங்கினீர்கள். மதிமுகவில் இருந்து ஆட்களை விலை கொடுத்து வாங்கினீர்கள். இதை எல்லாம் வைத்து வெற்றி பெற வேண்டியதுதானே. முடியாது. வந்தது எல்லாம் அல்லகைகள். அவர்களை நம்பி ஒரு தொண்டன் கூட வரமாட்டான். சும்மா எதுக்கு புலம்பி கொண்டு. கடைசியா ஒரு வாய்ப்பு. இன்னும் சில மாதங்களில் சுரண்டியதை எடுத்து கொண்டு குடும்பத்தோட தமிழ்நாட்டை வீடு ஓடி விடுங்கள். அதையும் தாண்டி இருந்தீர்கள் குடும்பமே ஜெயிலில் தான் களி திங்கணும்....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-09-04 00:26:57 IST
விடுதலை புலிகள் விஷயத்தில் கருணாநிதி அடித்த அந்தர் பல்டிகளுக்கு முன்னால் பரதன் எம்மாத்திரம்?...

கருத்துகள் இல்லை: