சனி, 9 ஆகஸ்ட், 2025

11- ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு அனுமதி ரத்து! தமிழக அரசு புதிய கல்விக்கொள்கை

 கலைஞர் லெனின் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.8.2025) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-பள்ளிக்கல்வி”யை வெளியிட்டார். 
மேலும், முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்தினார்.

டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் எங்கே? - தேர்தல் ஆணையத்திடம் ராகுல் எழுப்பிய 5 முக்கிய கேள்விகள்!

 minnambalam.com  -  christopher  :   நடந்து முடிந்த மக்களவை மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி வரும் ராகுல்காந்தி இன்று (ஆகஸ்ட் 8) தேர்தல் ஆணையத்திற்கு 5 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்.

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

 தினமணி : தேர்தல் ஆணையம், மத்திய அரசுடன் இணைந்துகொண்டு வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும், நாட்டின் நலனுக்கு எதிரான குற்றச்செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருக்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் செய்து, தேர்தல் ஆணையமே வாக்குகளில் மோசடி செய்து வருவதாக தொடர்ந்து ராகுல் காந்தி குற்றம்சாட்டி வந்த நிலையில், அது தொடர்பான ஆதாரங்களுடன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், பாஜகவினர் கூறி வந்ததுபோல, அணுகுண்டை வீசியிருக்கிறார்.

கரூர் - மனநலம் பாதிக்க பட்டு சாமியாராக்கப்பட்டவர் தற்போது குணமாகி விட்டார்

May be an image of 4 people, hospital and temple

 தமிழ்க்கவி  : இந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஐயா
சுப்பிரமணி  இப்போது நலமாக இருக்கிறார்..
இவரை வைத்து பொருளீட்டியவர்கள் அவர்களும் நலமாக இருக்கிறார்கள். 
இவருக்கு முன்பும் பின்பும் பல்வேறு வரலாற்றுச் செய்திகள் இருக்கின்றன. 
இது குறித்து ஒரு நூல் கொண்டு வர வேண்டும் என்பதாக நான் முடிவெடுத்தேன் வழக்கு முடியும் வரை காத்திருந்தேன். 
வழக்கும் முடிந்து விட்டது 
நானும் விடுதலை ஆகி விட்டேன் 
இனி நூல் தொகுக்கும் பணி எனக்கு இருக்கிறது. 
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் இந்த மனிதரை நான் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சி சிறிதளவு நான் வெற்றி பெற்று இருக்கிறேன் என்பதுதான் மனநிறைவு. 
ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மனிதரை வைத்து அவரை நிர்வாணமாக்கி சுயநலத்திற்காக பொருளயீட்டிய அந்த ஆதிக்க ஆண்டை சமூகம் இதுவரை அச்சப்படும் இல்லை, கூச்சப்படவும் இல்லை. 

அண்ணாமலைக்கு ‘பனிஷ்மென்ட்’ பதவி- மம்தாவுடன் மோதுகிறார்? ஓபிஎஸ் டீம் ‘டமால்’?

 மின்னம்பலம் : டெல்லியைப் பொறுத்தவரையில் பாஜக தலைவர் பதவி யாருக்கு? துணை ஜனாதிபதி பதவி யாருக்கு என்பதுதான் ஹாட் டாபிக்காக ஓடுகிறது.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஆகஸ்ட் 7-ந் தேதி தொடங்கிவிட்டது. இதுவரை யாரும் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், பீகார் சிஎம் நிதிஷ்குமார் ஆகியோரது பெயர்கள் அடிபட்டாலும் இருவரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள்; இதனால் இருவருக்கும் வாய்ப்பு இருக்காது. பாஜகவில் ஒருவரைத்தான் துணை ஜனாதிபதியாக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் விதைத்ததை அறுவடை செய்த துரையப்பா கொலையாளிகள்


 Ruban Mariarajan
  : யாழ் மேயர் அல்பிறட் துரையப்பா படுகொலை 50 வது ஆண்டு நினைவு தினம் ஜூலை 27.
அவரை (துரோகி )  என்ற தமிழ்த்தேசியவாதிகள் தமக்குள் இன்று ஒருவரை ஒருவர் (துரோகி) என்கின்றனர்.
அண்ணன் -தம்பி -அக்கா -தங்கை -குடும்பங்களுக்குள் சண்டை ஏற்பட்டால் ஒருவரை ஒருவர் (துரோகி!) என பலதை கூறி திட்டுவார்கள்.
துரையப்பா  தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைக்கு காரணமாம். 
அன்று சுதந்திரக்கட்சி யாழ்.அலுவலகத்தை சேதப்படுத்தினர்.
சுதந்திரக்கட்சிக்கு இங்கு என்ன வேலை! அமைப்பாளர்கள் துரோகிகள் என்றனர்.
சரித்திரத்தில் சுதந்திரக்கட்சி எம்.பி.அங்கஜன் இராமநாதனை யாழ்.மக்கள் தெரிவு செய்தனர்.
சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனாவை தமிழ்த்தேசிய கட்சிகள் ஆதரித்தனர்.
யாழில் அவருக்கு வரவேற்பு.தமிழரசு எம்.பி.வீட்டில் பிறந்த நாளுக்கு அழைத்தனர்.

தமிழர்களுக்கு பெரியார் அண்ணா கலைஞரை தவிர வேறு கலங்கரை விளக்கங்கள் கிடையாது!

May be an image of 5 people and text that says '62.5 தலைநிமிரும் தமிழ்நாடு! வரலாறு பேசும் வளர்ச்சி = திராவிட மாடல் ஆட்சி 11.19 9.26 7.89 13.12 Midili 7.6 8.24 8.59 7.15 7.01 5.37 4.92 3.25 0.07 2010- 11 201 201-2021 2021 6.17 0@00mkstalin mkstalin 2021 2021-2025 2025 Source: Union Ministry of Statistics and Programme Implementation, and the e Tamil Nadu Government'

 ராதா மனோகர் :கலைஞரின் ஏழாவது நினைவு ஆண்டு 
நான் கலைஞரை நேரில் பாத்ததில்லை 
அதனால்தானோ என்னவோ  கலைஞர் இன்றும் உயிரோடு இருப்பது போல்தான் உணர்கிறேன்
தமிழ்நாட்டின் இன்றைய பிரமிப்பு ஊட்டும் வளர்ச்சியில் கலைஞரின் முகத்தை நான் காண்கிறேன். . 
கலைஞரை அகற்றி விட்டால் திமுகவை ஒழித்து விடலாம் என்று கருதியவர்களின் கனவுகளை வெறும் கனவுகளாக்கிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும்,
திமுகவின் தன்னலம் கருதாத கோடிக்கணக்கான தொண்டர்களுக்கும் இந்த கலைஞர் நினைவு நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் 
நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியின் ஒவ்வொரு நிமிடமும் ஆதிக்க வாதிகளின் கனவுகளை நொறுக்கிய நிமிடங்களாகவே கடந்து கொண்டிருக்கிறது 
இதுதான் திராவிட கோட்பாட்டின் வெற்றி!
இதுதான் பெரியார் அண்ணா கலைஞர் போட்டுவிட்ட திராவிட தடங்களின் பெருமை!

4 உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் கலவரம் உண்டாக்கியது தமிழ் குண்டர்கள்தான்

 
திருமதி புனிதம் திருச்செல்வம் ( வரவேற்பு குழு தலைவி) போன்றவர்கள் அரங்கேற்றிய 4 உலக  தமிழாராய்ச்சி மாநாட்டில் கலவரம் எப்படி  நடந்தது?
யாழ் தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய  வரலாற்று சாட்சியங்களை பதிவு செய்யாமல் நாம் அப்படியே  கடந்து போக கூடாது.
இன்றுவரை எத்தனை பொய்கள் பொதுவெளியில் உலா வருகின்றது?
ஒரு அல்பிரட் துரையப்பாவை அரசியலில் இருந்து அகற்றுவதற்காக எவ்வளவு மோசமான அக்கிரமத்தை அரங்கேற்றி உள்ளார்கள் இவர்கள்?  
தமிழரசு கட்சியின் தேர்தல் பிரசாரதிற்காக பலி கொடுக்கப்பட்ட அந்த 9 அப்பாவிகளின் சாபம் நீலன் திருச்செல்வம் போன்ற அப்பாவிகளின் தலையில் வந்து விழுந்தது 
Navaratnam Giritharan :  போலீசாரை நோக்கி கற்கள் வீசப்பட, அது கலவரமாகியது  உண்மை. 
அப்பொழுது நான் கோட்டை அகழிச் சுவருக்கண்மையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

தமிழகத்தில் ஜாதி ஆணவ கொலை தடுப்புச் சட்டம் வருகிறது- திராவிட மாடல் அரசின் அதிரடி

மின்னம்பலம் - மதி :ஜாதி ஆணவ கொலை தடுப்புச் சட்டம் நிறைவேற்றும் திமுக அரசு- ஆகஸ்ட் 14 அமைச்சரவை கூட்டத்தில் முடிவு? 
தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் சிறப்பு சட்டத்தை (Law Against Caste Honour Killings) ஆளும் திமுக அரசு நிறைவேற்ற இருப்பதாகவும் ஆகஸ்ட் 14-ந் தேதி நடைபெறும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலைகள் காலந்தோறும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஜாதிய ஆணவப் படுகொலையும் தமிழ்நாட்டை உலுக்கும் போதெல்லாம், இதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இல்லையே என்கிற குமுறல் வெளிப்படுகிறது.

உத்தர காண்டில் ஒரு கிராமமே வெள்ளத்தில் மூழ்கியது - மேக வெடிப்பு

BBC tamil :  உத்தர காண்டில் பெரும் மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கிய சம்பவத்தில் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் மீட்கப்பட்டநிலையில், 60க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகி இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
திடீரென ஏற்பட்ட பெரும் மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கியதால், பலர் காணாமல் போயுள்ளனர் இந்த சம்பவம் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷி மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.

புதுச்சேரியின் இன்றைய நிலை - சங்கிகள் பின்னால் போன பின் சூரிய நமஸ்காரம் எதற்கு

 குட்டி தமிழ்நாடு என்று கருதப்பட்ட புதுச்சேரியின் இன்றைய நிலை அதிர்ச்சிக்கு உரியது! 
சங்கிகள் பின்னால் போனால் என்ன நடக்கும் என்பதை கண் முன்னே கொண்டடு வருகிறது  இக்கட்டுரை! 
Maha Laxmi :   நல்லா இருந்த புதுச்சேரி.பாஜக கூட்டணி ஆட்சியால். நாசமாய் போனதை பார்த்தாவது... 
தமிழ்நாட்டில் உள்ள நாம் அனைவரும் படிப்பினை பெற வேண்டும்..!
1 -  2023 ஆம் ஆண்டிலிருந்து  6 முதல் 11ஆம் வகுப்பு வரை அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஒன்றிய 
அரசின் CBSE பாடத்திட்டம், புதுச்சேரி ஒன்றிய பிரதேச அரசால் கட்டாயத் திணிப்பு.

2.- 2024 ஆம் ஆண்டிலிருந்து..1 முதல் 12 ஆம் வகுப்பு முடிய அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஒன்றிய அரசின் CBSE பாடத்திட்டம், புதுச்சேரி ஒன்றிய பிரதேச அரசால் கட்டாயத் திணிப்பு.

ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் அடாவடி கேள்வி! - நீங்கள் உண்மையாக இந்தியராக இருந்தால்..

 மின்னம்பலம் - Kavi : நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால் இவ்வாறு சொல்லியிருக்க மாட்டீர்கள் என்று ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீன ராணுவம் இந்திய எல்லையில் 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்துள்ளது என்று 2022ஆம் ஆண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இதை முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறியதாக தெரிவித்த ராகுல் காந்தி பிரதமர் மோடியையும், மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

தர்மஸ்தலா கொலைகள்: 11-வது இடத்தில் சேலை, மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

தினகரன் : கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றிய சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொன்று உடல்களை கோவில் நிலத்திலேயே புதைத்துவிட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
இதை விசாரிக்க சிறப்பு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. ர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அருகில் உள்ள நேத்ராவதி ஆற்றங்கரையோர வனப்பகுதியில் உடல்கள் புதைக்கப்பட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களை புகார்தாரர் அடையாளம் காட்டினார்.

எஸ்ஜேவி செல்வநாயகமும் தேர்தல்களில் முளைக்கும் துரோகி பட்டங்களும்

May be an image of ‎text that says '‎2 நாதசும்பலம் สาน 국 3. ததாக முன்த்துள்ள் STT வா து தமிழத் தமிழ்த்துரோ்க்கள்! !قد 19 வீ ญ 上 ஆனந்தசங்கம் LFS5 தி தியாகராசா T 4. ตแต่ง: 4.எஸ்யக 4- தம்பிராசா க5.கே.டபின்ற.தேவநாயகம் 5.கேடபிச்ய.. 5.6a.L தேவநாயகம்‎'‎

 சுதந்திரன் - 30 -5- 1970 ;   புதிதாக முளைத்துள்ள தமிழ்த்துரோகிகள் 
1.சி .அருளம்பழம் (நாகநாதனை-- எஸ்ஜேவி செல்வாவின் சம்பந்தி - தோற்கடித்தவர்)
2.வீ. ஆனந்தசங்கரி (ஆலாலசுந்தரத்தை தோற்கடித்தவர்)
3.க.தியாகராசா (தமிழரசு பொதுச்செயலாளர் அ.அமிர்தலிங்கத்தை தோற்கடித்தவர்)
4.எஸ் யூ .தம்பிராசா ( தமிழரசு கட்சி தலைவர் இராசமாணிக்கத்தை தோற்கடித்தவர்)
5. கே டபிள்யு தேவநாயகம் ( சம்பந்தமூர்த்தியை தோற்கடித்தவர்)
1970 தேர்தல் முடிவுகள் வெளியானதும் எஸ்ஜேவி செல்வநாயகத்தின் சொந்த பத்திரிகையும் தமிழரசு கட்சியின்  ஊதுகுழலுமான சுதந்திரன் பத்திரிகையின் துரோகிகள் பட்டியல் இது!
இந்த ஐந்து பேரும் செய்த குற்றம்தான் என்ன?
ஜனநாயக முறையில் நடந்த தேர்தலில் இந்த ஐந்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றதுதான் இவர்கள் செய்த ஒரே குற்றம்!
செல்வநாயகம் வகை தொகை இல்லாமல் வழங்கிய துரோகி பட்டங்கள் காலப்போக்கில் துப்பாக்கி குண்டுகளாக உருமாறியது ஒரு தற்செயலான நிகழ்வல்ல 

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

'எனது சுயநலத்திற்காக ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன்'-அஜித் திடீர் அறிக்கை

நக்கீரன் :திரைத்துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் அஜித்குமார் தன்னுடைய ரசிகர்களுக்கு அறிக்கை மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்திற்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.